என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 23 மார்ச், 2020

22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !


கொரனா வைரஸ் பீதி 
இந்தியா முழுவதும் ஊரடங்கு
22.03.2020 ஞாயிறு




^22.03.2020 AT TIRUCHIRAPPALLI TOWN^


^22.03.2020 AT MARINE DRIVE - MUMBAI^


வாட்ஸ்-அப்பில் வந்த செய்திகளில் 
படித்ததில் மிகவும் பிடித்தது:


*அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்*

*சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது. மழை அதன் போக்கில் பெய்கின்றது. வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை*

*மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன, முயல்கள் விளையாடுகின்றன, மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌*

*தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டுக் குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை*

*மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, வீட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது*

*முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான், அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து, அதுதான் உலகமென்றான்*

*மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான், சம்பாத்தியமென்றான், விஞ்ஞானமென்றான், என்னன்னெவோ உலக நியதி என்றான்*

*உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக, நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்*

*ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்*

*ஓடினான், பறந்தான், உயர்ந்தான், முடிந்த மட்டும் சுற்றினான், கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம், அவனால் உயிரை படைக்க முடியும், என்னால் முடியாது அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன், என மார்தட்டினான்*

*ஒரு கிருமி, கண்ணுக்கு தெரியாத ஒரே ஒரு கிருமி, சொல்லி கொடுத்தது பாடம்*

*முடங்கி கிடக்கின்றான் மனிதன் , கண்ணில் தெரிகின்றது பயம், நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்*

*பல்லிக்கும், பாம்புக்கும், நத்தைக்கும், ஆந்தைக்கும்கூட உள்ள பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என விம்முகின்றான்*

*மண்புழுவுக்கும் கூட நான் சமமானவனோ பலமானவனோ இல்லையா என்பதில் அழுகின்றான்*

*முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில், மரத்தை விட கீழானவனா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது*

*மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை துடைக்கின்றான்*

*காட்டுக்குள் விலங்குகளும், பறவைகளும், மரங்களும், நீர் வீழ்ச்சிகளும்கூட அவைகள் பாஷையில் பேசுகின்றன‌*

*ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம் செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது*

*தெய்வங்கள் கூட தனக்காக கதவடைத்துவிட்ட நிலையில், காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதை சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்*

*கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க, மனிதனை வெளியே தள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு*

*அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம். கொஞ்சி கேட்கின்றது சிட்டு, கடற்கரை வந்து சிரிக்கின்றது மீன்*

*தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கி கிடக்கின்றான் மனிதன். தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..*

*மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில். வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு*

*அவமானத்திலும், வேதனையிலும், கர்வம் உடைந்து, கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்*




ooooooOoooooo



01-07-1945 TO 22-03-2020

😭😭😭😭 
அசாத்யமான அறிவு, ஆற்றல், நகைச்சுவையுடன் கூடிய ஜனரஞ்ஜக உணர்வு, மனிதாபிமானம் ஆகியவற்றின் மொத்த உருவமாய்த் திகழ்ந்த 'விசு' என்ற  மிகவும் மகத்தானதோர் மனிதர் நம்மை விட்டு இன்று பிரிந்துள்ளது, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
😭😭😭😭





என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

30 கருத்துகள்:

  1. நேற்று இருந்த ஊரடங்கு ஒரு சாம்பிள் என்றுதான் தோன்றுகிறது.

    இன்னும் அது தொடரவே வாய்ப்பு அதிகம்.

    ஊரடங்கை மீறி சிலர் நடந்துகொண்டது மனித குலத்துக்கே உரிய அலட்சியத்தையும், சக மனிதர்களைப் பற்றிக் கவலை இல்லாத் தன்மையையும் காட்டியது. விரைவில் பிரச்சனை கட்டுக்குள் வரவேண்டும். எவ்வளவு காலம்தான் முடங்கிக் கிடக்க இயலும்?

    பதிலளிநீக்கு
  2. இயக்குநர் விசு, தன் படங்களைக் காட்டிலும் தான் நடத்திய அரட்டை அரங்கங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பிற்காலத்தில் கான்சரால் தாக்கப்பட்ட போதும் அதனைத் தைரியமாக எதிர்கொண்டு மீண்டவர்.

    அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக

    பதிலளிநீக்கு
  3. அந்த வாட்ஸாப் பார்வேர்டை நானும் படித்து ரசித்தேன்.  இந்தக் கடினமான சூழலிலிருந்து உலகம் சீக்கிரம் விடுபடவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.  இயக்குநர் விசுவின் மரணம் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி.  கொரோனா செய்திகளில் அவர் பற்றிய செய்தி அடங்கிப் போனதும் வருத்தம்.

    பதிலளிநீக்கு
  4. மனிதனின் ஆணவத்திற்கு இது ஒரு சவால். இனிமேலாவது புரிந்து கொள்வோமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    விசு - ஆழ்ந்த இரங்கல்கள். நல்ல க்லைஞர்.

    பதிலளிநீக்கு
  5. ஆம் கூடுதலாக உண்டதனால் உண்டான பிரச்சனைக்கு பட்டினி கிடத்தல் அவசியமாவதைப் போல் கொஞ்சம் கூடுதலாய் ஆடிவிட்டோம்..அதனால் இப்போது அடங்கிக் கிடக்க வேண்டியது அவசியமாகிவிட்டது...அனைவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கத்தை கவித்துவமாய் அற்புதமாகப் பதிவு செய்துள்ளீர்கள்..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  6. சினிமா எனும் புல்லாங்குழல் மூலம் எல்லோரும் அடுப்பூதிக் கொண்டிருக்கும்போது அனைவரும் மகிழும்படியாய் இன்னிசை வழங்கியவர் விசு அவர்கள்.நகைச்சுவையின் தரத்தை எப்போதும் உச்சத்தில் வைத்து நம்மை இரசிக்க. வைத்தவர்..மக்களுக்கு ஏதேனும் பாடம் சொல்லாத படத்தை இவர் எடுத்ததே இல்லை.அவரின் இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய இயலாததே....அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக..

    பதிலளிநீக்கு
  7. படித்ததில் மிகவும் பிடித்தது எங்களுக்கும் வந்தது...

    கூடவே 5 மணிக்கு மேல், ஞானம் பெற்று ஊர்வலம் சென்ற காணொளிகளும், அலட்சியப்படுத்தி திரியும் காணொளிகளும்...

    பதிலளிநீக்கு
  8. கொரோனா தொற்றாது - மக்கள்
    தம்மைப் பாதுகாக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. ஆஹா ஊரடங்குக்கும் போஸ்ட் போட்டுவிட்டாரே கோபு அண்ணன், இனி இப்போதைக்கு ஆரும் வீட்டுக்க்கு வந்து சந்திக்க மாட்டினம்:), அதனால போஸ்ட் போட முடியாது கோபு அண்ணனால:))..

    வீடியோக்களில்..ஊர் அடங்கிப் போயிருப்பதைப் பார்க்கவும் மனதுக்கு கஸ்டமாக இருக்கு. இங்கு ஊரடங்கு இல்லை எனினும் ஊர் அடங்கிப்போய் மயான அமைதிபோலத்தான் இருக்குது, இடையிடை ஓரிரு கார்கள் போகுது நம் ரோட்டால்.

    பதிலளிநீக்கு
  10. ஒரு குட்டி, கொம்பு வச்ச “கெட்ட கிருமி”:) திட்டவும் பயமாக்கிடக்கூ:)) என்னா பாடுபடுத்துகிறது மக்களை ஹா ஹா ஹா..
    என்னை ஆரும் எதுவும் பண்ண முடியாது என நெஞ்சை நிமித்தியோரை எல்லாம் நடுங்க வைக்கிறது..

    பதிலளிநீக்கு
  11. உண்மைதான் இப்போதுதான் இயற்கை சிரிக்கும், அதிலும், இவ்ளோ காலமும் குளிர், மழை, காத்து, இருட்டில் கஸ்டப்பட்டுக் காரோட்டி வேர்க் போய் வந்தோம், ஆனா இப்போ கடும் வெயிலாக இருக்குது.. வெளியே போகவும் முடியவில்லை, போர்த்துக் கொண்டு படுக்கவும் முடியவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  12. //தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..*//

    உப்பூடி எல்லாம் சந்தடி சாக்கில ஆரையும் திட்டக்கூடாது ஜொள்ளிட்டேன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  13. விசு அவர்கள் செய்தி நேற்றுப் பார்த்து அதிர்ச்சியானேன், ஏனெனில் இப்போ கொஞ்ச நாட்களாக என்னையும் அறியாமல் விசு அங்கிளின் பட சீன்களாகவே பார்த்துக் கொண்டிருந்தேன், இதற்காகத்தானோ என எண்ண வைக்கிறார்ர்.. இன்னும் வாழ்ந்திருக்கலாம் அவர்...

    அவரின் ஆத்மசாந்திக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... நயம்பட உரைத்தல் என்பதற்காக, நாம 'அதிர்ச்சி ஆகிவிட்டேன்.. இன்னும் வாழ்ந்திருக்கலாம்' என்றெல்லாம் எழுதுவோம். ஆனால் அவங்கள்ட கேட்டால், 'போதுமடா சாமி இந்த பூ உலகில் வாழ்ந்தது. நோயாளியாக ஐ.சி.யூவில் இருக்க முடியலை' என்றே சொல்லியிருப்பார்கள். துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் கூட, எதுக்கு நான் இன்னும் உயிரோட இருக்கணும்.. ஆஸ்பத்திரியில் உடல் கஷ்டம் தாங்கவில்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தாராம்.

      இந்த மாதிரி அவங்க கஷ்டப்படும்போது, நீங்க போய் 'நூறாண்டுகள் வாழணும் நீங்க ஐயா' என்று சொன்னால், அவங்க உங்க மேல தூக்கிப் போட, பக்கத்தில் என்ன இருக்கும் ஆஸ்பத்திரி படுக்கையில் என்று யோசிக்கிறேன்.

      நீக்கு
    2. அடேங்கப்பா... நெல்லையில் தூக்கிப் போட, வந்தேறி இல்லாத உண்மையான தமிழர்கள் உண்டே என்று நானும் யோசிக்கிறேன் நோ.த.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சே சே.. ஒரு ஸ்டைலாச் சொல்லி, ஆத்ம சாந்தி செய்வோம் என்றால்:)) அதுக்கும் விடமாட்டாராமே:))...

      மனமொடிஞ்சு போயிருக்கும் நேரம், நம் அன்பான, ஆசையான, பாசமான வார்த்தை சில நேரம் சிலரை உந்தி எழுப்பி வாழ வைக்கலாமில்லயோ:)) ஹா ஹா ஹா அப்பூடி ஒரு நல்ல எண்ணத்தில் ஜொல்வது டப்பா?:))

      நீக்கு
  14. காணொளிகள் பார்த்தேன் .

    வாட்ஸ்-அப்பில் வந்த செய்திகள் தான் எவ்வளவு !
    அவைகளில் நீங்கள் பகிர்ந்த இந்த செய்தி சொல்வது உண்மை.

    //மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான், சம்பாத்தியமென்றான், விஞ்ஞானமென்றான், என்னன்னெவோ உலக நியதி என்றான்*//

    எதுவும் கட்டுப்படுத்த முடியவில்லை கொரானாவை.

    பதிலளிநீக்கு
  15. விசு அவரகளின் மறைவைப் பற்றி நிறைய பேசபடவில்லை தொலைகாட்சி சேனல்களில். கொரானா தொற்று செய்திகளால் தொல்லைக்காட்சியினர் முக்கியத்துவம் கொடுக்காமல் போய் விட்டார்கள்.

    அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். அவருக்கு அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  16. அடங்க மறுப்பவர்கள் ஒரு நாள் அடங்கத்தான் வேண்டும் என்பதை நேற்றைய நிகழ்வு சொல்லாமல் சொல்லிவிட்டது. இனியாவது கர்வம் உடைந்து, கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறட்டும் மானிட இனம். பதிவுக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  17. ஹ ..ஹஹா ... "யாராவது இருக்கீங்களா"? என்கிற முதல் காணொளி பார்த்து சிரித்து விட்டேன் .... அதன்பின் கட்டுரை படித்தவுடன் "ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா" என்கிற திரைப்படப் பாடல் நினைவுக்கு வந்து போனது. என்றாலும் மானுட இனத்தை எள்ளிநகையாட மனம் வரவில்லை... கலரா, மலேரியா,போலியோ,சின்னம்மை,பெரியம்மை என்று எத்தனையோ நோய்களை ஒழித்துவிட்டோம்... இதையும் வெற்றிகொள்வோம்... இறுதியல் மானுடமே வெல்லும்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  18. அருமையான மனிதர். தெளிவான சிந்தனைக்கு சொந்தகாரர். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்.அனைவர் மனங்களையும் கொள்ளைகொண்டவர் விசு ஐயாவின் ஆன்மா சாந்தி அடையட்டும் ... அவரின் நினைவு மக்கள் மனதில் என்றும் மாறாமல் காலம் கடந்தும் நிலைத்து நிற்கட்டும் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  19. கொரோனாவைப் பற்றிய தொகுப்பு .நீங்கள் பதிவு செய்திருப்பது அருமை. விசுவின் மறைவு வருத்தம் தந்தது.

    பதிலளிநீக்கு
  20. நீங்கள் அவதானமாக இருங்கோ ஐயா

    பதிலளிநீக்கு
  21. சார் - நலமாக இருக்கின்றீர்களா? ஏன் ஏழு மாதங்களாக பதிவுகள் எதையும் காணோம்?

    பதிலளிநீக்கு