About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, February 2, 2020

நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?

கடந்த ஓராண்டுக்குள் (02.02.2019 to 01.02.2020) வலையுலக மும்மூர்த்திகளான, ஆளுமை மிக்க மூவர், நம்மைவிட்டு மறைந்து, நமக்கு மீளாத்துயரை ஏற்படுத்தியுள்ளனர். இன்று அவர்கள் நம்மிடையே இல்லாதுபோனாலும், அவர்கள் விட்டுச் சென்றுள்ள பதிவுகளும், பின்னூட்டங்களும், காலத்தினால் அழியாத காவியங்களாக இருந்து நம்மை சற்றே ஆறுதல் படுத்தி வருகின்றன. 


எனது இனிய நண்பரும், ‘எனது எண்ணங்கள்’ என்ற பிரபல வலைப்பதிவருமான, [http://tthamizhelango.blogspot.com]  திருச்சி, திருமழபாடி, திரு.  தி. தமிழ் இளங்கோ அவர்கள்.  


நம் அனைவர் மனதையும் உலுக்கிய இவரின் மறைவு நிகழ்ந்த நாள்: 02.02.2019. நேற்றுடன் ஓராண்டு ஓடிப்போய் விட்டது. எங்களின் மிகவும் ஆழமான நட்பினை எடுத்துக்கூறும் ஒருசில பதிவுகள்:

திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் ’எனது எண்ணங்கள்’ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்:-

திருச்சியும் பதிவர் வை.கோபாலகிருஷ்ணனும் [04.09.2012]

திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன் [27.02.2013]

திருச்சியில் மூத்த பதிவர் GMB ஐயா அவர்களோடு ஓர் இனிய சந்திப்பு [03.07.2013]

எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு... V.G.K.  (நூல் விமர்சனம் 10.09.2013)

அன்பின் சீனா - மெய்யம்மை ஆச்சி தம்பதியினருடன் ஓர் சந்திப்பு (07.10.2013)

ஆரண்ய நிவாஸ் - ஓரு இலக்கிய அனுபவம் (15.08.2014)

தமிழ் வலையுலகில் விருதுகள் (15.09.2014)

திருச்சி மாவட்ட வலைப்பதிவர்களே ! (17.09.2014)

வெளிநாடு செல்லும் V.G.K. - வாழ்த்துகள் (14.11.2014)

ஸ்ரீரங்கம் வலைப்பதிவர் சந்திப்பு (23.02.2015)

பயணங்கள் முடிவதில்லை by VGK (28.01.2016)

ஸ்ரீரங்கம் வலைப்பதிவர் சந்திப்பு (08.02.2016)

VGK அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் (13.02.2016)

இராய செல்லப்பா அவர்களுடன் ஒரு சந்திப்பு (09.01.2018)


சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK 03 - சுடிதார் வாங்கப் போறேன் (25.03.2018)


சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே! (28.03.2018)


எனது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள சில பதிவுகள்:-
ஓடி வந்த பரிசும் தேடி வந்த பதிவர்களும்

சந்தித்த வேளையில் ... பகுதி - 2 of 6

சந்தித்த வேளையில் ... பகுதி - 4 of 6  

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் - [பகுதி-3] 

 



சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் - [பகுதி-4] 



எங்கள் அடுக்குமாடிக் கட்டட உச்சியில் (மொட்டை மாடியில்) தமிழ் இளங்கோ 

  


யானை வரும் பின்னே ... மணி ஓசை வரும் முன்னே ! 
 


2018 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  


ஹனிமூன் வந்துள்ள பதிவர் தம்பதியினர் !  
 



2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள்   
 

  




’அன்பின் திரு. சீனா ஐயா ’
என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட

ஆத்தங்குடி 


திரு. பெ.க.சு.பெ.கரு.கா. 


சிதம்பரம் செட்டியார் அவர்கள்


[வலைத்தளம்: ‘அசைபோடுவது’] 


மறைவு: 16.03.2019


தொடர்புடைய சில பதிவுகள்

மீண்டும் பதிவர் சந்திப்பு - அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் திருச்சி விஜயம்.


அன்பின் சீனா ஐயா அவர்களின் 40-வது திருமண நாள் விழா

  

  

17.01.2020 
’முதல் தை வெள்ளிக்கிழமை’
இரவு சுமார் 11 மணிக்கு கோவையை சேர்ந்த  'மன அலைகள்’  http://swamysmusings.blogspot.com/ மூத்த வலைப்பதிவர், முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [வயது 84] மாரடைப்பால் காலமானார் என்ற அதிர்ச்சிதரும் செய்தியை பதிவு செய்துகொள்கிறேன். இதுவிஷயம் 28.01.2020 அன்று அவரின் துணைவியாரையும், சகோதரியையும் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, என்னிடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஓரிரு மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல், சிகிச்சைகள் மேற்கொண்டு வந்துள்ளார்.  22.12.2019 அடியேன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஓர் பதிவுக்கு கீழ்க்கண்ட பின்னூட்டம் இட்டுள்ளார்கள்.



  • Palaniappan Kandaswamy  எழுத்தாளர் சந்திப்பை ரசித்தேன்.

மூத்த வலைப்பதிவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் எனது இனிய நண்பர். பழுத்த அனுபவசாலி.  எனது இல்லத்திற்கு மும்முறை வருகை தந்து மகிழ்வித்தவர். அவரின் ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம்.  


அவருடன் தொடர்புடைய சில பதிவுகள்

02.04.2014 முதல் வருகைக்கான இணைப்பு
http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html


10.10.2015 இரண்டாவது வருகைக்கான இணைப்பு


15.03.2017 புதன்கிழமை மூன்றாவது முறையாக 
’ஹாட்-ட்ரிக்’ வருகை தந்து மகிழ்வித்த போது .....

   

சிலுக்கு ஜிப்பா ஜரிகை வேஷ்டியுடன் 81+ வயது இளைஞர்



2011 முதல் 2015 வரை நான் என் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அனைத்து 806 பதிவுகளுக்கும்,  அன்புடன் வருகை தந்து, அழகாகப் பின்னூட்டங்கள் அளித்துள்ள, தூய நட்பான, தெய்வீகப் பதிவரின் நான்காம் ஆண்டு நினைவு நாள்: 09.02.2020   

 
   
.02.2019 
 மூன்றாம் ஆண்டு நினைவஞ்ச 

"வாசிப்பது என்பது சுவாசிப்பது ! 
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”

 வலைத்தளம்: மணிராஜ்

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்

[ மறைவு: 09.02.2016 ]

தொடர்புடைய பழைய பதிவுகள்:
கண்ணீர் அஞ்சலி :(

அதற்குள் ஓராண்டு ஓடிப்போனதே ! :(

http://gopu1949.blogspot.com/2018/02/09022018.html
நினைவு நாள் : 09.02.2018

நினைவு நாள்: 09.02.2019

நினைத்துப் பார்க்கிறேன்

2014ம் ஆண்டு முழுவதும் என் வலைத்தளத்தினில் தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு நடைபெற்ற ’சிறுகதை விமர்சனப் போட்டி’களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்று, சிறப்பிடம் பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய பதிவுகளுக்கான இணைப்புகள்:

Highest Hat-Trick Winner 
[முதலிடம்]

ஜீவீ-வீஜீ விருது 

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருது 
[முதலிடம்]


போட்டி பற்றிய பல்வேறு அலசல்கள்





திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுடன்
’போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி’

                   



            ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியல் 
              (சிறப்பிடம்)            

                     
100% பின்னூட்டமிடும் போட்டி
சாதனையாளர் விருது - 2015



 



   



என்றும் தங்கள் நினைவுகளுடன்,



[வை. கோபாலகிருஷ்ணன்]



24 comments:

  1. எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை அறிவு அறிந்தாலும் நண்பர்கள் இவர்களது மறைவு மனதை வருந்தச் செய்கிறது.  என்றென்றும் இவர்கள் நம் நினைவில் நிற்பார்கள்.

    ReplyDelete
  2. பொருத்தமான காரணங்கள் சொல்லி தமிழ் இளங்கோ சாரின் வருட நினைவு இரங்கல்களைப் பதிவு செய்திருக்கீங்க.

    நான் ஒரு சில பதிவர்களை ஏன் இடுகைகள் வெளியிடலை, மறுமொழி காணோமே எனத் துரத்துவேன். இளங்கோ சார் இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பு அவரிடம் முதல் முறையாக நீண்ட பேச்சு அலைபேசியில் பேசினேன். அவருடைய மறைவை மிகுந்த அழுகையோடு திருச்சி வலைப்பதிவர் வை கோபாலகிருஷ்ணன் சார் என்னிடம் தெரிவித்தார்.

    நாம் அனேகமாகச் செல்லும் தளங்களின் பதிவர்கள் நம் மனதுக்கு நெருக்கமாகி விடுவார்கள். அதிலும் அவர்கள் நல்லவர்களாக இருந்துவிட்டால், நல்ல பழகும் தன்மையோடு இருந்தால் நம் மனதில் தங்கிவிடுவார்கள். வலையுலகின் அதிசயமாக நான் நினைப்பது இதனைத்தான்.

    வாழ்வில் சந்திக்கும் வாய்ப்பு குறைவான பலர் வலையுலகின் மூலம்தான் என் மனதுக்கு நெருக்கமாக அமைந்திருக்கின்றனர். வெறும் மறைவோ, இல்லை சந்திக்கவே முடியாத நிலைமையோ அவர்களை என் மனதிலிருந்து பிரிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் தமிழ் இளங்கோ சாரும் முனைவர் கந்தசாமி சாரும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

    தமிழ் இளங்கோ அவர்களை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். நம் எல்மலோர்ன தில் அவர் எப்போதும் இருப்பார்


    மேலே உள்ளது கில்லர்ஜி அவர்களின் இன்றைய இடுகைக்கான என் பின்னூட்டம். நீங்கள் இன்னும் முனைவர் கந்தசாமி அவர்களின் மறைவைப் பற்றி எழுதவில்லையே என நினைத்துக்கொண்டிருந்தேன். முனைவரின் குடும்பத்தாருக்கு என் வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பதிவு செய்கிறேன்.

    முனைவர் கந்தசாமி சாரிடம் பேசணும் என்று முன்பு நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் தளத்தில் வெளியான அலைபேசி எண்ணைக் குறித்துக்கொள்வதற்குள் கில்லர்ஜி அவர்கள் அதை கந்தசாமி சாரிடம் நீக்கச் சொன்னார்கள் என்று நினைவு (தவறுதலா நம்பர் வெளியாகிவிட்டமால்)

    ReplyDelete
  3. இவர்கள் அனைவருமே எழுத்தால் நம் மனத்துக்கு நெருக்கமானவர்கள்.இவர்களின் பிரிவு துயரைத் தருகிறது..எப்போதும் நினைவில் இருப்பார்கள்.

    ReplyDelete
  4. நம்மைவிட்டுச் சென்றவர்களைப் பற்றிய உங்களது பதிவுகள் மனதை கனக்கவைத்துவிட்டன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் நம் மனதில் கலந்தவர்கள்.

    ReplyDelete
  5. எனக்கும் இவர்கள் எல்லாம் மனத்தளவில் மிக நெருக்கமானவர்கள் என்பதால் இப்பதிவுகள் என்னை மிகவும் பாதித்தது...பதிவர்கள் சார்பாக அஞ்சலி செலுத்தும் விதமாக சிரமமெடுத்துத் தொகுத்துத் தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி...

    ReplyDelete
  6. திரு. தமிழ் இளங்கோ, திரு. சீனு அய்யா, திரு.கந்தசாமி, திருமதி.ராஜேஸ்வரி அனைவரும் மறைந்ததற்கு தாங்கள் அஞ்சலி செலுத்தியிருக்கும் விதம் மனதை நெகிழ்த்தியது. கலங்க வைத்தது. இவர்களுக்கு என் மன அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்!

    ReplyDelete
  7. மனதை நெகிழச் செய்யக் கூடிய சில ஆவணப் பதிவுகளை பார்த்தேன். தங்கள் நினைவாஞ்சலியில் நானும் கலந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  8. எப்போதும் நினைவில் இருப்பார்கள்.
    நம்மால் மறக்க முடியாதவர்கள்.
    சகோ தமிழ் இளங்கோ அவர்கள், கந்தசாமி ஐயா அவர்கள், திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்கள், சீனா ஐயா அவர்களையும் அவர்கள் நட்பையும், அவர்கள் பதிவுகளையும் மறக்கவே முடியாது.

    மனம் கனத்து போனது. அன்பு குடும்பத்தை பிரிந்த சோகம் தான்.
    அவர்கள் பதிவுகளில் என்றும் வாழ்வார்கள்.

    அனைவருக்கும் அஞ்சலிகள்.

    ReplyDelete
  9. நினைவஞ்சலி... என் சார்பிலும்.

    குறிப்பிட்டுள்ள பதிவர்களில் மூவருடன் நானும் நேரிலும் அலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். தமிழ் இளங்கோ அவர்களை மறக்க முடியாது.

    அனைவருக்கும் எனது அஞ்சலிகள்.... அவர்கள் நம்மை விட்டு நீங்கினாலும் அவர்களது நினைவுகள் என்றும் நம்மை விட்டு நீங்காது.

    ReplyDelete
  10. அனைவரையும் நினைவுகூர வைத்துவிட்டீங்கள்... அவர்களை யார் மறந்தாலும் வலைப்பதிவர்கள் மறக்கமாட்டோம்...

    அனைவருக்கும் அஞ்சலிகள்.

    ReplyDelete
  11. அனைவரிடமும் பேசினது பழகியது எல்லாம் ஞாபகம் வருகிறது... அனைவருக்கும் அஞ்சலிகள்...

    ReplyDelete
  12. தங்கள் பதிவுகள் கண்ணீரை வரவழைத்துவிட்டன.

    அன்பின் மிகுதியால் தாங்கள் அனைவரையும் மறக்காமல் அஞ்சலி செலுத்தியுள்ளது போற்றத்தக்கது விஜிபி சார்.

    இளங்கோ சார், சீனா சார் , இராஜேஸ்வரி பற்றித் தெரியும். பழனி கந்தசாமி ஐயா அவர்கள் மறைவு துணுக்குறச் செய்தது. பதிவர்கள் ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருப்பதும்., அஞ்சலியும் மனதை வாட்டுகிறது.

    ReplyDelete
  13. திரு தமிழ் இளங்கோ அவர்களை இரு முறைகளும், சீனா சாரை நீங்கள் எங்க வீட்டுக்கு அழைத்து வந்தப்போவும் பார்த்திருக்கேன். திரு பழனி கந்தசாமி அவர்கள் பதிவுகளை அதிகம் படித்ததில்லை எனினும் அவர் இடும் கருத்துக்களைப் பார்த்திருக்கேன். நமக்கு நெருங்கியவர்கள் மறைவு உள்ளத்தைப் பாதிக்கிறது. அதிலும் திரு தமிழ் இளங்கோ அவர்கள் சிகிச்சைக்குப் பயந்தார் என்னும் செய்தி கேட்டதில் இருந்து மனம் ஆறவே இல்லை. அனைவருக்கும் எங்கள் சார்பிலும் அஞ்சலிகள்.

    ReplyDelete
  14. MAIL MESSAGE FROM Mrs. CHITRA SOLOMON, FROM USA, TODAY 06.02.2020

    -=-=-=-=-=-

    My comment :

    Very sad to hear that those good souls are no more. May their souls rest in peace. Our condolences to the grieving family members and friends

    என்றும் அன்புடன்
    Chitra Solomon

    -=-=-=-=-=-

    ReplyDelete
  15. உங்களின் அன்பு மனதை நெகிழ வைத்துவிட்டது ..காலம் வேகமாக ஓடுகிறது . மறவாமல் நினைவஞ்சலி சேர்த்து தொகுத்திருக்கிங்க .எனது அஞ்சலியையும் பதிவு செய்கின்றேன் .

    ReplyDelete
  16. நான் சந்திக்க விரும்பியிருந்த பதிவர் திரு.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள். சந்திக்க இயலாமலேயே போய்விட்டது பெரும் துரதிர்ஷ்டம். முனைவர் பழனி கந்தசாமி ஐயாவின் மறைவு இப்போதுதான் அறிந்து அதிர்கிறேன். ஆழ்ந்த வருத்தங்கள். அன்பின் சீனா ஐயாவின் மறைவும் வலையுலகத்துக்குப் பெரும் இழப்பு. இராஜராஜேஸ்வரி மேடம் மறைந்து நான்காண்டுகள் ஆகிவிட்டனவா? தினமொரு பதிவும் எல்லாருடைய பதிவுகளிலும் பின்னூட்டங்களும் இடும் அவரது வேகமும் அர்ப்பணிப்பும் வியக்கவைக்கும். மறைந்த வலையுலக நட்புகளை நினைவுகூரும் இப்பதிவு மனம் கனக்கச் செய்கிறது.

    ReplyDelete
  17. நிச்சயமாக இது உங்களுக்கு மட்டுமல்லாமல் நம் அனைவருக்குமே பேரிழப்பு தான். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    ReplyDelete
  18. அனைவரும் எனக்கு தெரிந்த பதிவர்கள் என்றும் எம் நினைவில்.....

    நினைவு கூர்ந்து பதிவிட்டது சிறப்பு.

    ReplyDelete
  19. இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, மகத்தான பதிவர்கள் சிலரின் நினைவாஞ்சலியில் கலந்துகொண்டு, தங்களின் கருத்துக்களைக் கூறியுள்ள

    திருவாளர்கள்:
    01) ஸ்ரீராம் அவர்கள்
    02) நெல்லைத் தமிழன் அவர்கள்
    03) முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்
    04) யாதோ ரமணி அவர்கள்
    05) ஜீவி ஐயா அவர்கள்
    06) வெங்கட் நாகராஜ் அவர்கள்
    07) திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
    08) அசோக் அவர்கள்
    09) சிகரம் பாரதி அவர்கள் 

    திருமதிகள்:  

    10) ஆதிவெங்கட் அவர்கள்
    11) மனோ சாமிநாதன் அவர்கள்
    12) கோமதி அரசு அவர்கள்
    13) அதிரா அவர்கள்
    14) தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள்
    15) கீதா சாம்பசிவம் அவர்கள்
    16) சித்ரா சாலமன் அவர்கள்
    17) ஏஞ்சலின் அவர்கள்
    18) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்
    19) மாதேவி அவர்கள்.

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  

    ReplyDelete
  20. தன்னுடைய எழுத்துக்களால் தமிழ் தாய்க்கு சேவையாற்றியவர்கள் ... மண்ணுலகை விட்டு சென்றாலும் இவர்களுடைய அளப்பரிய பணியால் என்றும் மக்கள் எண்ணங்களில் நிலைத்து நிலைபெறுவார்கள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
  21. இன்று 09.02.2021 நம் தெய்வீகப் பதிவர் இராஜராஜேஸ்வரியின் நினைவு நாள். விளையாட்டுப்போல ஐந்து வருஷங்கள் ஓடிப்போய்விட்டன. :((((((

    ReplyDelete
  22. எல்லாமே நேற்று நிகழ்ந்ததைப்போல இருக்குது கோபு அண்ணன்:(...

    ReplyDelete