About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, July 2, 2012

அலைகள் ஓய்வதில்லை




அலைகள் ஓய்வதில்லை


அதுபோலவே 


விருதுகளும் ஓய்வதில்லை.

மீண்டும் ஓர் விருது வழங்கப்பட்டுள்ளது.

வழங்கியவர்: திருமதி விஜிபார்த்தி அவர்கள்


வழங்கிய நாள்: 02 07 2012




இது இந்த 2012 ஆம் ஆண்டு 
எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள 
எட்டாவது விருதாகும்.

AWESOME BLOGGER AWARD 
என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள 
இரண்டாவது விருதாகும். 



Mrs. VijiParthi, Madam!



எனக்குக் கிடைத்துள்ள இந்த விருதினை கீழ்க்கண்ட 
என் சகபதிவர்கள் சிலருக்குப் பகிர்ந்து அளிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.


1] திரு.  ரிஷபன் R. ஸ்ரீநிவாஸன் அவர்கள்



2] திருமதி ராஜி அவர்கள் [கற்றலும் கேட்டலும்]



3] திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள் [முத்துச்சிதறல்]



3] ஆரண்யநிவாஸ் திரு. R. ராமமூர்த்தி அவர்கள்



4] திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்


  

விருதுபெற்ற அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.






படித்ததில் பிடித்த சில கவிதைகள்





வீடுகள் தோறும் 

வீடுகள் தோறும் 

பரணில் கிடக்கும் 

நீதிக் கதைகளாய் 

திண்ணையில் 

 படுத்திருக்கும் 

 பாட்டி! 


வீதிகள் தோறும் 

முதியோர் 

இல்லங்க்ள்...


வீடுகள் தோறும் 

டிவியில் பந்தபாசம் 

பற்றிய சீரியல்கள்! 

 - கோ. இராஜராஜேஸ்வரி, 
கும்பகோணம் 09 06 2012



திருஷ்டி 

 யார் கண் பட்டதோ... 

நொடித்துப்போனார்

திருஷ்டி பூசணி வியாபாரி 

 - பி.சந்திரா, கும்பகோணம் 16.06.2012


நிவாரணம் 

அன்பே... உன் நினவுகளால் 

ஏற்பட்ட பூகம்பத்தில் 

சிதைந்து போயிருக்கிறேன்...

நிவாரணமாய் நீயே .... வா! 

- கெஜலட்சுமி சுப்ரமணியம், 
திருச்சி 16.06.2012





 கோலப்பார்வை 

 நீ 

கோலம்போடும்

அழகினை 

மார்கழி குளிரில் 

ரசிக்க வந்த 

என்னை 

கதகதப்பாக்கியது 

உன் அம்மாவின் 

அக்னி பார்வை! 

- பர்வீன் யூனுஸ், 
பெருந்துறை 16.06.2012




முதிர் கன்னி

தோழிகள் உடன் வர

துடிக்கும் உள்ளத்துடன்

மணமேடை ஏறுகிறாள்

முதிர்கன்னி .........

அறுபதாம் மண நாயகன்


அப்பாவிடம் ஆசிபெற!

- கிரிஜா நந்தகோபால், 
திருச்சி 30.06.2012




என்றும் அன்புடன் தங்கள்
vgk



100 comments:

  1. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வழக்கம் போல் பதிவுகள அடிக்கடி இடம் பெறாதது ஏனோ?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம்.

      //வழக்கம் போல் பதிவுகள அடிக்கடி
      இடம் பெறாதது ஏனோ?//

      இடம் பொருள் ஏவல்

      தற்சமயம் சரியில்லாததால்! vgk

      Delete
  2. VGK அவர்களுக்கு வணக்கம்! “ AWESOME BLOGGER AWARD “ பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி. எனது வாழ்த்துக்கள்! உங்களிடமிருந்து விருதினைப் பகிர்ந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது நல் வாழ்த்துக்கள்!

    சில பதிவர்களின் வலைப் பக்கம் மட்டும் உங்கள் கருத்துரைகளைக் காண முடிகிறது. உங்கள் சொந்த தளத்திற்கு வருவது எப்போது?

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      //சில பதிவர்களின் வலைப் பக்கம் மட்டும்
      உங்கள் கருத்துரைகளைக் காண முடிகிறது//

      அவர்கள் ஒருவேளை என்னுடைய நீண்டநாள் வாடிக்கையாளர்களாக இருக்கக்கூடும்.

      அதனால் என்னாலும் தவிர்க்க இயலாமல் இருக்கலாம்.

      //உங்கள் சொந்த தளத்திற்கு வருவது எப்போது?//

      கூடிய சீக்கரம் வர முயற்சிக்கிறேன், ஐயா.
      அதுவரை தயவுசெய்து பொருத்தருள வேண்டுகிறேன்.

      அன்புடன் vgk

      Delete
  3. Sir congrats..
    Can you please embed the translate option in your blog. As I don't know Tamil, I can't read your posts.

    ReplyDelete
    Replies
    1. Mrs. Ranjana Madam,

      Thanks for your kind visit to my blog & offer of comments.

      //Can you please embed the translate option in your blog?//

      I have no sufficient computer programme knowledge to fulfill your above request.

      However if you are very much interested, you may use the following link, to get the matter translated from Tamil to English, by copy & paste of my article in Tamil, in the left hand side space provided in that.

      Immediately within 1 or 2 minutes, you will find the article completely Translated in English. at the right hand side blank space provided.

      90% accuracy will be there. Some 5-10% you may not be able to understand properly. Just try & give me some feedback also.

      http://translate.google.com/?sl=ta&tl=en&js=n&prev=_t&hl=en&ie=UTF-8&layout=2&eotf=1&text=&file=#ta|en|

      With kind regards & Best Wishes
      vgk

      Delete
  4. மறுபடியும்க் வாழ்த்துகள்! விருதுகள் ப்ளாக் என்று பெயரை மாற்றிவிடுங்கள்!! :)) கிரிஜா நந்தா கோபால் கவிதை சுட்டது.மனதைத் தொட்டது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      கிரிஜா நந்தகோபாலும், கிரிஜாமணாளனும் ஒருவரே தான்.
      என் நெருங்கிய நண்பர். என்னுட்ன் ஒரு காலத்தில் BHEL இல் ஒரே துறையில் கொஞ்சநாட்கள் சேர்ந்து பணியாற்றியவர். பிறகு திருச்சி மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தில், மிகவும் நெருங்கிய நட்பானவர்.

      அவரின் அந்தக்கவிதை என் மனதையும் தொட்டது/சுட்டது.

      Delete
  5. Hi Sir ,

    CONGRATULATIONSSSSSSSSSSSS !!!!

    i don't know to type tamil version Sir,

    Very happy to see... You are 100% deserve Sir...

    Keep on :)

    ReplyDelete
    Replies
    1. Thank you very much Mrs. R.Punitha Madam.
      You may very well type your comments in English.
      No problem at all for me.

      Are you, atleast, able to read my article in Tamil?

      If not, please refer my reply above to
      Mrs. Ranjana Madam's comments.

      With kind regards & Best Wshes,
      vgk

      Delete
  6. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா . பகிர்ந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. த்ங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மேடம்.

      விருதினை அளித்தவரே வந்து வாழ்த்துவது, விருந்துபோல் மிகவும் சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.

      அன்புடன்
      vgk

      Delete
  7. எங்கள் அய்யாவிற்கு விருது பெற்றமை மனதிற்கு நிறைவைத் தருகின்றது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். மனம்கவர்ந்த அன்பர்களுக்கு அவ்விருதினை வழங்கி சிறப்பித்தமையும் பாராட்டுக்குரியது. இவ்விருதினை பெற்றவர்களில் வெங்கட் அய்யா மட்டுமே எமக்குத் தெரியும். அவருக்கும் மற்ற அன்பர்களுக்கும் உற்சாகமான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.!

    ReplyDelete
    Replies
    1. அக்ஷயாவின் அன்பான வருகைக்கும்,
      அழகான கருத்துக்களுக்கும்,
      வாழ்த்துகளுக்கும் அனைவர் சார்பிலும்
      மிக்க நன்றி.

      [அய்யா என்பது தவறான சொல்,
      ஐயா என்பதே சரியான தமிழ்ச்சொல்.
      ai [AI] small letters அடித்தால் ஐ கிடைக்கும்.
      இனிமேல் அடிக்கும்போது இந்த எழுத்துப்பிழையை
      சரிசெய்து கொள்ளவும். OK யா? ]

      அன்புடன் vgk

      Delete
  8. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, Mr. விச்சு Sir.

      அன்புடன் vgk

      Delete
  9. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, நண்பா!



      [”வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ.
      புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம்”
      என்ன ஆச்சு? ]

      Delete
    2. எல்லா பதிவுகளையும் படித்து என் மனதில் தோன்றிய எண்ணங்களை பின்னுட்டமாக போட்டுள்ளேன் பார்க்கவும். அதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்

      Delete
    3. நேற்றைய ஒரே இரவில் [எங்களுக்கான இரவில்] எழுச்சியுடன் அனைத்துப் பகுதிகளையும் படித்து ஒவ்வொரு பகுதிக்கும் கருத்தளித்து வந்த்தை நானும் உடனுக்குடன் படித்து, என் பதில்களையும் எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தேன். பார்த்தால் பொழுதே விடிந்து போய் விட்டது.

      மிக்க நன்றி, நண்பா.

      Delete
  10. Congratulations Sir.
    You deserve many more and all the very best to you.

    ReplyDelete
  11. sir i guess you have recieved one more awesome blogger award..am i right?if yes,my hearty congrats on your achievement..

    ReplyDelete
    Replies
    1. Yes Leela .... exactly.

      You have understood correctly.

      I am very Happy. Thanks for your Greetings.

      This is the 8th award for this year 2012

      THE VERSATILE BLOGGER AWARD
      3 TIMES ON 04/02/12, 15/02/12 & 06/06/12

      LIEBSTER BLOG AWARD [GERMAN]
      3 TIMES ON 06/02/12, 10/02/12 & 16/02/12

      AWESOME BLOGGER AWARD
      2 TIMES ON 20/06/12 & 02/07/12

      But I have temporarily stopped my usual routine writings in my blog from 03.05.2012 due to some personal reasons.

      The latest 3 releases are just to thank people who offered awards to me & for its distribution to others.

      With kind regards & Best Wishes,
      vgk

      Delete
  12. தங்களின் அன்பான வருகைக்கும்,
    அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, நண்பரே.

    கவிதைகள் என்னுடையது அல்ல. என் நண்பர்கள் சிலருடையது.
    அதில் எனக்குப் பிடித்த சிலவற்றை மட்டுமே பகிர்ந்து கொண்டேன்.
    தாங்களும் அவற்றை அருமையென பாராட்டியுள்ளது மகிழ்வளிக்கிறது. நன்றி.

    ReplyDelete
  13. வாழ்த்துகள் !! கோபு சார் .
    நீங்கள் ரசித்த அனைத்து கவிதைகளும் எனக்கும்பிடித்திருக்கு
    முதல் கவிதையும் இறுதி கவிதையும் TOP

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள நிர்மலா, வாங்க, வணக்கம்.

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      மெயிலும் பார்த்தேன். நன்றி. பிறகு பதில் அளிக்கிறேன்.

      எனக்கு மிகவும் பிடித்த முதல் கவிதையும் இறுதிக்கவிதையும் தங்களுக்கும் பிடித்துள்ளதாகச் சொல்வது கேட்க மிக்க மகிழ்ச்சி.

      அன்புடன்
      கோபு

      Delete
  14. விருது பெற்ற தங்களுக்கு என் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.

    என்னுடன் ப்ளஸ் மற்ற பதிவர்களுடன் பகிர்ந்த தங்கள் பேரன்பிற்கு மனப்பூர்வமான நன்றி.

    கவிதைகள் ரசனையாய் இருந்தன..

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ரிஷபன் சார், வாங்க, வணக்கம்.

      தங்கள் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அடியேன் அளித்த விருதினைத் தாங்கள் ஏற்றுக்கொண்டதால் அந்த விருதே மிகவும் பெருமை அடைகிறது. அதற்கும் என் நன்றிகள்.

      கவிதைகளை ரசித்தது கேட்க மகிழ்ச்சி. அந்த கடைசி கவிதை எழுதியது நம் கிரிஜாமணாளன் அவர்கள் தான், சார்.

      தங்களின் ”ஊர்மிளா” கதையை, லேடஸ்டு கல்கியில் படித்துவிட்டு அப்படியே சொக்கிப்போனேன்.

      நீங்க நீங்க தான்! [குருநாதர் என்றுமே குருநாதர் தான்].

      நாளை குரு பூர்ணிமா .... என்னப்பொருத்தம் பாருங்கோ!;)

      பிரியமுள்ள
      vgk
      [வீ.......ஜீ]

      Delete
  15. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார்! விருதை பகிர்ந்து அளித்த தங்களின் அந்த நல்ல இதயத்திற்கு நன்றிகள்!

    மேலும் பல விருதை வெல்ல வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. இந்த விருதினைப் பெற்ற / விருதினைப் பகிர்ந்து அளித்த
      விஷயங்கள் வரலாற்றுச் சுவடுகளிலேயே ஏறிவிட்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

      Delete
  16. தங்களின் எட்டாவது விருதிற்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. எட்டாவது விருது பெற்றதை
      தட்டாமல் வந்து வாழ்த்தியுள்ள

      Mrs. ராதா ராணி Madam
      அவர்களுக்கு என் ம்னமார்ந்த நன்றிகள்.

      Delete
  17. This speaks volumes on your popularity on the blogosphere sir...வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி Mr. ASHOK Sir.
      Sir,
      I never think that I am popular.
      I am only an ordinary man - very ordinary man.

      Thanks a Lot for your valuable comments Sir.

      Delete
    2. My Dear Ashok Sir,

      Thank you for your re-entry and for your kind appreciation of my special quality [humility].

      With kind regards &
      Best Wishes to you, Sir.

      vgk

      Delete
  18. தங்களுக்கு கிடைத்த விருது,
    எங்களுக்குக் கிடைத்தது போல்
    எனச் சொல்ல நினைத்தேன்..
    அதற்குள் எங்களுக்கு விருது
    கொடுத்து விட்டீர்கள்..
    மிக்க நன்றி சார்...
    அது சரி..அந்த விருதிற்கு
    நான் தகுதி உடையவன் தானா
    என என்னுள் எழுந்ததே
    ஒரு கேள்வி?
    தங்கள் எழுத்துகள் போல்
    அமையுமா ஒரு
    எழுத்துலக வேள்வி?

    ReplyDelete
    Replies
    1. அடியேன் அன்புடன் அளித்த விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ள என் அருமை நண்பரே! வருக! வ்ருக!! வணக்கம்.

      //அது சரி..அந்த விருதிற்கு நான் தகுதி உடையவன் தானா
      என என்னுள்

      எ ழு ந் த தே ஒ ரு கே ள் வி ?

      தங்கள் எழுத்துகள் போல் அமையுமா

      ஒ ரு எ ழு த் து ல க வே ள் வி ? //

      ஆஹா! பின்னூட்டத்திலேயே கேள்வி, வேள்வி என எதுகை மோனையோடு பின்னிப்பெடலெடுக்கும் சூப்பர் எழுத்தாளராகிய தங்களுக்கு தகுதி இல்லையென்றால் இந்தத் தரணியில் யாருக்குத்தான் தகுதியிருக்க முடியும்?

      என்னைப் படுத்தாமல், குசேலரின் அவல் போன்று அன்புடன் இந்த ஏழை எளிய அந்தணன் அளிக்கும் விருதினை சமத்தாகப் பெற்றுக்கொள்ளுங்கள் ஸ்வாமீ.

      அப்போது தான் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல அடுத்துவரும் விருதுகளையும் உங்களுக்கே அளித்திட ஒருவித உற்சாகமும் எழுச்சியும் எனக்கு ஏற்படும்.

      மே மூன்றாம் தேதியோடு பதிவேதும் கொடுக்காமல் ஒதுங்கி ஓய்வில் தான் உறங்கிக்கொண்டு இருந்தேன்.

      முப்பெரும் தேவியர் மூவர் என்னைத் தட்டி எழுப்பி விருது கொடுத்து, விருதுக்கு நன்றிகூறியாவது என்னைப்[பதிவு எழுத வைத்து விட்டனர்.

      நம் அலுவலகத்தில் சொல்லுவார்களே
      “வேலை செய்பவனுக்கு வேலையைக்கொடு;
      வேலை செய்யாதவனுக்குப் பிரமோஷனைக்கொடு” என்று.

      அதுபோல பதிவிடாத [அதாவது வேலை செய்யாத] எனக்கு [பிரமோஷன் போல] இந்த அடுத்தடுத்த விருதுகள், வந்துள்ளன.

      கொடுக்கப்பட்டுள்ள விருதுகளுக்காகவாவது இனி ஏதாவது எழுதத் தான் வேண்டும் என்று நினைக்கிறேன்.

      இந்த ஆசாமியைக் காணும் என்று இப்போது நிம்மதியாக இருப்பவர்களுக்கு, இனி தொல்லைகள் கொடுக்கும்படியாக ஆகிவிடுமே என்றும் நினைக்க வேண்டியுள்ளது.

      பகவத் சங்கல்ப்பம் எப்படியிருக்குமோ பார்ப்போம்.

      அன்புடன்
      vgk

      Delete
  19. விருது பெற்ற தங்களுக்கும்.. உங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றி, திரு. ரெவெரி அவர்களே.

      Delete
  20. விருது பெற்றதற்கும் வழங்கியதற்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க Mrs. லக்ஷ்மியம்மா, வணக்கம்.

      த்ங்களின் அன்பான வருகை+வாழ்த்து+பாராட்டு
      என்க்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி.

      Delete
  21. Replies
    1. Thank you Mrs. VIJI Madam.

      Seen your detailed mail of today &
      I have given a reply also.

      With kind regards & Best Wishes.
      GOPU

      Delete
  22. விருது இன்னும் படைக்க எருவாக உதவட்டும்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான் வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது,Mr. கே.பி.ஜனா Sir.

      மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  23. விருது பெற்ற தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    விருதினை சக பதிவர்களுடன் எனக்கும் சேர்த்துப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.பகிர்ந்து கொண்ட பிற சக பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.என்னை ஊக்குவித்தலுக்கு மீண்டும் நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. திருமதி ராஜி மேடம், வாங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      விருதினை தாங்கள் ஏற்றுக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு என் நன்றிகள்.

      இந்த மிகச்சிறிய ஊக்குவித்தலால் தங்களிடமிருந்து அடிக்கடி நல்ல பதிவுகள் தொடர்ந்து வெளியானால், எல்லோருக்குமே மகிழ்ச்சியாகவே இருக்கும். எனக்கு கூடுத்ல் சந்தோஷமாக இருக்கும்.

      பிரியமுள்ள
      vgk

      Delete
  24. வீடுகள் தோறும் கவிதை மனதைப் பிசைகிறது.எழுதியவருக்கு பாராட்டுக்கள்.பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அந்தக் கவிதை நன்றாகவே எழுதப்பட்டுள்ளது.

      கோ.இராஜராஜேஸ்வரி என்பவர் கும்பகோணத்திலிருந்து எழுதியுள்ளார். சமீபத்தில் ஓர் வார இதழில் நான் படித்தேன்.

      சில தரமான கவிதைகள், எளிமையான நடையில், நன்கு புரியும்படியாக எழுதப்பட்டு, நம்மை சற்றே சிந்திக்கத்தான் வைக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.

      Delete
  25. விருது பெற்றமைக்கும்
    சரியான பதிவர்களைத் தேர்ந்தெடுத்து விருதினைப்
    பகிர்ந்து மகிழ்ந்தமைக்கும் மனமார்ந்த நன்றி
    தேர்ந்தெடுத்துக் கொடுத்த கவிதைகள் அனைத்தும்
    மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் என்னை மகிழ்விக்கின்றன.

      மிகவும் நன்றி,திரு.ரமணி சார்.

      அன்புடன்
      vgk

      Delete
  26. அய்யா வலை உலகில் நீங்கள் தரும் உற்சாகதிர்காக தங்களுக்கு யார் தான் விருது வழங்காமல் இருப்பார்கள்... கேட்கவே மகிழ்வாய் உள்ளது. வாழ்த்துக்கள் அய்யா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் என்னை மகிழ்விக்கின்றன.

      மிகவும் நன்றி,திரு.சீனு சார்.

      அன்புடன்
      vgk

      [”அய்யா” என்பதற்கு பதிலாக ”ஐயா” என இனிமேல் குறிப்பிடுங்கள். அதுவே சரியான தமிழ்ச்சொல்.
      ai {AI} small letters தட்டினால் ”ஐ” கிடைக்கும்.
      OK யா? ]

      Delete
  27. தங்களுக்கும் தங்களிடமிருந்து விருதினைப் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வருகையும் அழகான வாழ்த்துகளும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.

      மிகவும் சந்தோஷம் திருமதி ராமலக்ஷ்மி Madam.

      அன்புடன்
      vgk

      Delete
  28. விருது பெற்ற உங்களுக்கும், நீங்கள் பகிர்ந்து அளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகையும் அழகான வாழ்த்துகளும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.

      மிகவும் சந்தோஷம் திருமதி கோமதி அரசு Madam.

      அன்புடன்
      vgk

      Delete
  29. விருதுகள் உங்களை அடைந்து பெருமைப்படக்கூடும். அத்தகைய தேர்ந்த படைப்பாளி தாங்கள். தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார். தங்களால் விருது வழங்கப்பெற்ற பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    பகிர்ந்துகொண்ட கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரசனையின் வெளிப்பாடாய் அமைந்து ரசிக்கவைத்தன. சில மனதின் ஆழம் சென்று நெகிழவைத்தன. பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள திரும்தி கீதமஞ்சரி Madam அவர்களே!,
      வாங்கோ! வாங்கோ!!

      தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் உற்சாகம் தருவதாக உள்ளன.

      // அத்தகைய தேர்ந்த படைப்பாளி //

      அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை மேடம்.
      நான் எப்போதுமே மிகச்சாதாரணமானவன் தான்.

      தங்கள் அன்பான வாழ்த்துகள் சந்தோஷம் அளிக்கின்றன.

      ஆம். அந்த ஒரு சில கவிதைகள் நான் சமீபத்தில் படித்ததும் என் மனதுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன. அதனால் just இந்தப்பதிவில் பகிர்ந்துகொண்டேன்.

      தங்களின் சமீபத்திய வெளியீடான “அது..” என்ற கவிதையும் அது எது என்று கடைசிவரை சொல்லப்படா விட்டாலும், என்னால் மிகவும் நன்றாக ரசித்து, புரிந்துகொண்டு, பின்னூட்டமிட முடிந்தது என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. ”அது..” அது தான். ;)))))

      மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன்
      vgk

      Delete
  30. விருதுகள் மழையில் நனையும் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும்,
      மனமார்ந்த பாராட்டுக்களுக்கும்
      என் இனிய நன்றிகள், மேடம்.

      அன்புடன் vgk

      Delete
  31. ம‌கிழ்வான‌ வாழ்த்துக‌ள்! வ‌ழ‌ங்கிய‌வ‌ருக்கும், பெற்ற‌வ‌ர்க‌ளுக்கும்...!!

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய திருமதி நிலாமகள் மேடம் அவர்களின் அன்பான வருகையும், மகிழ்வான வாழ்த்துகளும் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறது. மிக்க நன்றி, மேடம்.

      Delete
  32. விருது மழைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ஐயா, வணக்கம்.

      தங்களின் வாழ்த்து மழை,
      விருது மழையைவிட மிகவும்
      சக்தியும் மதிப்பும் வாய்ந்தது.

      மிக்க நன்றி, ஐயா.

      Delete
  33. விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள். விருதினை எனக்கும் அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி வை.கோ.ஜி!

    கவிதைகளும் அருமை.

    ReplyDelete
  34. வாங்க, வெங்கட்ஜி. தங்களின் அன்பான வருகையும், அழகான வாழ்த்துகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றன.

    விருதினை ஏற்றுக்கொண்டதற்கு நன்றிகள்.

    சுட்டதும் இட்டதும் ஆன கவிதைகளை சுவைத்ததற்கும் நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள்.விருதைப்போன்ற கவிதைகளும் நன்றாகவே இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. திரு. விமலன் அவர்களே.

      வணக்கம். வாங்க!

      தங்கள் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, Sir.

      Delete
  36. WoW.. congradulations sir.. you have soo many comments.. great gooo....

    http://acolorfulbutterfly-riya.blogspot.in/2012/07/best-encourager.html

    here is the surprise for you... all the best..

    ReplyDelete
  37. WELCOME Ms RIYA Madam!

    Thank you for your kind entry & Greetings to me.

    Thanks a Lot for "THE BEST ENCOURAGER AWARD"
    offered to me by you, today.

    It is really an encouragement to me also, to encourage others by continuously giving Comments of appreciation to their blog posts.

    I feel so happy today.

    With kind regards & Best Wishes,

    Affectionately yours,

    vgk

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் ஐயா!

    தாங்கள் இரசித்த கவிதைகளும் அருமை!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  39. தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துக்கும், கவிதை இரசிப்புக்கும் என் நன்றிகள். Mr. Seshadri e.s.

    ReplyDelete
  40. Replies
    1. ஆம்...

      நம் பரஸ்பர ’நலம்விரும்பி’ என்ற
      நல்லெண்ண அலைகளும்,

      மிகச்சிறப்பான எழுத்து அலைகளும்,

      ஒருவருக்கொருவர் தந்து மகிழும்
      பின்னூட்டங்கள் என்ற உற்சாக பான அலைகளும்

      என்றும் ஓயப்போவதில்லை.

      Delete
  41. Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும்,
      அழகான வாழ்த்துகளுக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
    2. எட்டாவது விருதுக்கு
      எண்ணம் நிறைந்த வாழ்த்துகள்..

      Delete
  42. Replies
    1. //எங்களுக்கு பயணங்கள் ஓய்வதில்லை.//

      தாங்கள் சொல்லாவிட்டாலும் என்னால்
      நன்கு இதை புரிந்து கொள்ள முடிந்தது.

      தங்களின் பயணங்கள் இனிமையாகவும், இன்பமாகவும், வெற்றிகரமாகவும், சுபமாகவும் முடிய பிரார்த்திக்கிறேன்.

      Delete
  43. Replies
    1. எங்கெங்கோ ஏதேதோ பயணங்களில் படு பிஸியாக இருப்பினும், 40 பேர்களுக்குப் பிறகாவது இந்த என் பதிவுக்கும் கடைசியிலாவது வருகை தந்து, சிறப்பித்து, ஹாரத்தி சுற்றி, மனக்குறை இல்லாமல் இந்தப் பதிவினையும் சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த ஆசிகள் / நன்றிகள்.

      பிரியமுள்ள
      vgk

      [இந்த முறையில் தாங்கள் தந்துவரும் தொடர் உற்சாகத்திற்காக உங்களுக்கு இன்று 06.07.2012 வெள்ளிக்கிழமை, என் பதிவினில் மேலும் ஒரு விருது வழங்கியுள்ளேன். தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.

      தலைப்பு: ”இன்றைய இனியவை நான்கு”

      இணைப்பு இதோ:
      http://gopu1949.blogspot.in/2012/07/blog-post_06.html ]

      Delete
  44. அன்புள்ள சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவ‌ர்க‌ளுக்கு,

    அழ‌கிய‌ விருதினை ப‌கிர்ந்த‌‌ளித்ததற்கு மனமார்ந்த நன்றி!!
    ரசித்த கவிதைகளை நானும் ரசித்துப் படித்தேன்! பகிர்ந்ததற்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  45. வாங்க, வணக்கம்; திருமதி மனோ சாமிநாதன் மேடம் அவர்களே!

    தங்களின் அன்பான வருகைக்கும், பகிர்ந்தளித்த விருதினை ஏற்றுக் கொண்டதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், பாராட்டுக்க்கள்.

    என்றும் அன்புடன் vgk

    ReplyDelete
  46. எட்டாவது விருது பெற்ற அனைவருக்கும்
    எழிலான வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 10:02 PM

      //எட்டாவது விருது பெற்ற அனைவருக்கும்
      எழிலான வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்...//

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி. !

      Delete
  47. விருதுகள் பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  48. கிடைத்த விருதை மற்றவர்களுக்கு அளிக்கும் நல்ல மனம் வாழ்க.

    விருது மழையில் நனைந்து சளி பிடித்ததா?

    விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. கிடைத்த விருதுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பெருந்தன்மை சூப்பர் படித்ததில பிடித்ததும் நல்லா இருக்கு

    ReplyDelete
  50. நீங்க தொடர்ச்சியா விருது பெருவதும் மத்தவங்களுக்கும் பகிர்ந்து கொள்வதற்கும் வாழ்த்து சொல்லி சொல்லியே சந்தோசமாகுது.

    ReplyDelete
    Replies
    1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :)

      Delete
  51. தொடர்ந்து விருதுகள் பெறுவதும் பகிர்ந்து கொள்வதும் மிகச்சிறப்பாக இருக்கிறது. யாம் பெற்ற இன்பம்......

    ReplyDelete
  52. மீண்டும் விருதுக்கு வாழ்த்துகள்...இம்முறை பிடித்தமான கவிதைகளா...அவை எனக்கும் பிடித்தவையாக அமைந்துள்ளன.

    ReplyDelete