[ SWEET : 1 ]
ONE MORE AWARD
GIVEN TO ME ON 04.07.2012
By Ms. RIYAA KATHIR,
[ A C O L O U R F U L B U T T E R F L Y ]
NAME OF THE AWARD
MESSAGE FROM Ms. RIYAA KATHIR
Vai. Gopalakrishnan Sir on Vai. Gopalakrishnan
He is a regular appreciator, viewer and comments not only for my blog, to all his blogging friends.. I am very lucky to have such a blogging friend, who is never been tired..
He is a regular appreciator, viewer and comments not only for my blog, to all his blogging friends.. I am very lucky to have such a blogging friend, who is never been tired..
- RIYAA KATHIR
RIYAA
[ This is the 9th Award for me in this year 2012 - vgk ]
I would like to Pass On this Very Valuable Award
To
Mrs. RAJARAJESWARI Madam of "MANIRAJ" BLOG
who is THE FITTEST PERSON to receive this Award from me.
Reason for Awarding to this Particular Person:-
NO ONE CAN FIND EVEN A SINGLE POST OF MINE,
WITHOUT THE ENCOURAGING COMMENTS OF THIS MADAM.
Mrs. RAJARAJESWARI Madam
vgk
-oOo-oOo-oOo-oOo-oOo-
[ SWEET : 2 ]
”முன்னெச்சரிக்கை முகுந்தன்”
என்ற தலைப்பில் நான் எழுதி, மூன்று ஆண்டுகளுக்கு முன் அனுப்பி வைத்த, நகைச்சுவைச் சிறுகதையொன்று [08.07.2012 தேதியிட்ட] இந்த வார “ராணி” தமிழ் வார இதழில் பக்கம் எண் 31+32 இல் பிரசுரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவே “ராணி” வார இதழில்,
முதன் முதலாக வெளியிடப்படும்
என் சிறுகதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முழுக்கதையையும் படிக்க விரும்புவோருக்கு இணைப்பு இதோ:
[ SWEET : 3 ]
மூன்று புதிர்க் கணக்குகள் கொடுத்து விடையளிக்க முடியுமா?
என ஓர் போட்டி அறிவிப்பு 28.06.2012 அன்று
ஒரு வ்லைத்தளத்தில் வெளியாகியிருந்தது:
அதில் நானும் கலந்து கொண்டதில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் மறுநாள் 29.06.2012 அன்று வெளியானது
இணைப்பு:: http://manathiluruthivendumm.blogspot.in/2012/06/blog-post_30.html
[திரு. மணிமாறன் அவர்களின் ”மனதில் உறுதி வேண்டும்” என்ற வலைத்தளம்]
[திரு. மணிமாறன் அவர்களின் ”மனதில் உறுதி வேண்டும்” என்ற வலைத்தளம்]
மூன்று கணக்குகளுக்குமே
சரியான பதிலைச் சொன்ன
கணிதப்புலிகள்:
1] வை. கோபாலகிருஷ்ணன் சார்
2] ஜோஸப் ஜார்ஜ்
3] நித்திலன்
4] சார்வாகன்
5] நண்பேண்டா...ராஜா
1] வை. கோபாலகிருஷ்ணன் சார்
2] ஜோஸப் ஜார்ஜ்
3] நித்திலன்
4] சார்வாகன்
5] நண்பேண்டா...ராஜா
என்று என் பெயர் முதலிடத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது
என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
[ SWEET : 4 ]
[ SWEET : 4 ]
தெனாலிராமன் கதைகள், முல்லாக்கதைகள் முதலியனவற்றில் நாம் சிரிக்கவும் சிந்திக்கவும் பலவிஷயங்கள் இருக்கும். சமீபத்தில் நான் படித்து ரஸித்த முல்லாக்கதை ஒன்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சாமர்த்தியமான பதில்
முல்லா பெரிய அறிவாளி. அவருக்கு எப்போது, எப்படி, எந்தவகை ஆபத்தோ துன்பங்களோ வந்தாலும் அதற்காகக் கவலைப்படாமல், பயப்படாமல், அவருக்கு இருக்கும் அறிவாற்றலைக்கொண்டு அந்த ஆபத்திலிருந்து தப்பிவிடுவார்.
இந்த விஷயம் பரவலாக எல்லோருக்கும் தெரிந்தது. ஊர் எல்லாம் முல்லாவின் ஞானத்தையே பெருமையாக பேசியது. இது அந்நாட்டு மன்னரின் காதுக்கும் எட்டியது.
அவருடைய அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒருநாள் முல்லாவை தமது அரசசபைக்கு வரவழைத்தார்.
முல்லா சபைக்கு வந்தார். மன்னரை வணங்கியபடி நின்றார்.
“முல்லா, உமது அறிவைப்பற்றி ஊரெல்லாம் ஒரே பேச்சாக உள்ள்து. நீ உண்மையிலேயே அறிவாளியா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். அதனால் உமக்கு ஒரு பரிசோதனை வைக்கப்போகிறேன்;
நீ ஏதேனும் ஒன்றை இப்போது இந்த சபையில் கூற வேண்டும். நீ சொன்னது உண்மையாக இருந்தால் உனது தலை வெட்டப்படும். நீ சொன்னது பொய்யாக இருந்தால் நீ தூக்கிலிடப்படுவாய்” என்றார் மன்னர்.
மன்னர் இப்படிச்சொன்னதும் முல்லா அதிர்ந்தார். மன்னர் எப்படியும் நம்மை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். நாம் உண்மையைச் சொன்னாலும், பொய்யைச் சொன்னாலும் நமக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. இதை மிகவும் சாமர்த்தியமாகவே சமாளிக்கணும் என்று முல்லா தீர்மானித்தார்.
முல்லா தீவிரமாக யோசித்தபடி இருந்தார். முல்லா இப்போது என்ன சொல்லப்போகிறார் என்பதை சபையினரும், மன்னரும் உன்னிப்பாக எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.
முல்லா மன்னரிடம், “ மன்னர் அவர்களே, தாங்கள் என்னை தூக்கில் தான் போடப் போகிறீர்கள்” என்றார்.
முல்லா அப்படிச்சொன்னதும், மன்னர் திகைப்படைந்தார்.
முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும். தலை வெட்டப்பட்டால் அவர் சொன்னது பொய்யாகிவிடும்.
முல்லா சொன்னது பொய் என்று வைத்துக்கொண்டால், முல்லாவைத் தூக்கில் போட வேண்டும்.
தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை என்று கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும்.
இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து, மன்னரை முல்லா திக்குமுக்காட வைத்து விட்டார்.
மன்னரால் எதுவும் தீர்ப்பு கூற முடியவில்லை.
சாதுர்யமாகப் பேசி, தனக்கு வந்த ஆபத்தை தன்னுடைய அறிவாற்றலால் சமாளித்த முல்லாவைப் பாராட்டி, பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து அனுப்பினார் மன்னர்.



































