About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, May 26, 2014

VGK 17 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - ’சூழ்நிலை’

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 17 -  சூழ்நிலை ! ’


  
எதையும் தாம் ஒருவரே தீர்மானிக்கலாம் என்று ஒரு குடும்பத்தில் சிலர் அமைந்து விடுவதில் நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு.  எல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை அவரவர் கையாள்வதைப் பொருத்திருக்கிறது.  உடனடி நன்மைகள் நீண்ட கால தீமையை தன்னுள் ஒளித்து வைத்திருப்பதும் உண்டு.  எது எப்படியாயினும், நம்மை அழுத்தும் சில சூழ்நிலைகளுக்கு கைதியாக வேண்டாம்; சுதந்திர புருஷராகவும் செயல்படலாம் என்பதற்கு இந்தக் கதையின் நாயகன் எடுத்துக் காட்டோ?.... 
 மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 
நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  ஐந்துஇந்தியத் தொலைகாட்சி 
வரலாற்றிலேயே 
முதன் முறையாக .... 
என்று ஏதேதோ சொல்வார்களே !

அதேபோல இதையும் படிக்கலாம். ;)

-oOo-

இந்த சிறுகதை விமர்சனப்போட்டி
வரலாற்றிலேயே முதல் முறையாக
இந்த VGK-17 ’சூழ்நிலை’ சிறுகதை 
விமர்சனங்களுக்கான பரிசுகள் அனைத்தையும்
முற்றிலும் பெண்கள் அணி மட்டுமே
பெற்றுள்ள ’சூழ்நிலை’ ஏற்பட்டுள்ளது.

மகத்தான மங்கையர் அணிக்கு நம் 
ஸ்பெஷல் பாராட்டுக்கள் + 
இனிய நல்வாழ்த்துகள்.

-oOo-

அன்புள்ள ஆண் விமர்சனதாரர்களே ! 

இது உங்களுக்கு அவர்கள் விடுத்துள்ள ஓர் சவால் அல்லவா!!

இனியாவது உஷாராகச் செயல்படுங்கள் !!!
’விழுவது மீண்டும் எழுவதற்காகவே ’

எனத் தன்னம்பிக்கையோடு செயல்படும் 

இந்தக்கிளியைப் பாருங்கோ! ;)))))

-oOo-


இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு:     


இனிப்பான இரண்டாம் பரிசினை 


 வென்றுள்ளவர்கள்மொத்தம் இருவர்.


அதில் ஒருவர் திருமதி


 உஷா ஸ்ரீகுமார்  


அவர்கள்usha-srikumar.blogspot.in

'உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்’


 


இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள


திருமதி.


 உஷா ஸ்ரீகுமார்  
அவர்களின் விமர்சனம் இதோ:


சூழ்நிலைக்கு தக்கவாறு வளைந்து நெளிந்து வாழ்கையை கொண்டு செலுத்தும் புத்திசாலி மனிதனே வெற்றி பெறுவான்  என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே...

"சூழ்நிலை" நாயகன் மகாலிங்கமோ  இந்தக்கலையை கரைத்துக் குடித்தவர்...

அதனால் தான் ஒரு  வெற்றிகரமான  பிசினஸ்மேனாக கோலோச்ச முடிகிறதோ?

எந்த சூழ்நிலையிலும் பதட்டத்தை , கவலையை...ஏன் ? மனதில் ஓடும் எண்ணங்களையும்  உணர்சசிகளையும்  சமுதாயம் முன் மறைக்கும் கலையில் வல்லவர்...

ஒரு மிகச் சிறந்த ராஜதந்திரிக்கு, நிர்வாகிக்கு தேவையான குணங்களை பெற்றவர்...

தொலை பேசியில் வந்த மாமனாரின்  துர்மரணத்தை பற்றிய 
செய்தியை கூட சுப செய்தி போல வெளிக்காட்டும் அளவுக்கு 
கைதேர்ந்த உணர் ச் சிகளின் கட்டுப்பாட்டாளர் (controller of emotions  )

ஆனாலும்...

எந்த பிரச்சனையும் மனம் விட்டு பேசி தீர்க்கலாம்  என்ற அடிப்படையான விஷயத்தை ஏனோ உதாசீனப்படுத்துபவராக தோன்றுகிறார்...

மனதை விட மூளையால் மட்டுமே எதையும் எதிர்கொள்ளுபவராக கதாசிரியரால் சித்தரிக்கப்படுகிறார் .

விபத்தில் தந்தையை இழந்த மனைவியை சமாதானப்படுத்துவது ஒரு கணவனின் தலையாய கடமைகளில் ஒன்று இல்லையா?

கோடீஸ்வரரான கணவர் தன் பிறந்த வீட்டைமதிப்பதில்லை என்ற எண்ணத்தை ஒரு கணவன் மனைவியின் மனதில் ஒரு சம்பவத்தால் ஏற்படுத்திவிட முடியாது... அவரின் நீண்ட கால நடத்தையில் இந்த  குணம் அடிக்கடி தலை காட்டுவதாலேயே தான்  ஈஸ்வரிக்கு, கணவர்  மாமனார் மறைவு செய்திக்கு காட்டிய reaction கோபத்தை ஏற்படுத்துகிறது...

சாவு வீட்டிலும் சூழ்நிலையை காரணமாக காட்டி மனைவியிடம் தனியே பேசியோ வேறு ஏதாவது வழியிலோ அவள் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் போக்க மகாலிங்கம் முயலாதது அவரை ஒரு ஆணாதிக்க பிரதிநிதியாகவே சித்தரிக்கிறது... மனைவி ஒரு மாதம் வரை சரியாக போனில் பேசாதது கூட அவரை பாதிக்கவில்லையோ? இல்லை பிசினெஸ்   மற்றும் பல லௌகீக விஷயங்களில் அதை பற்றி அக்கறை கொள்ளவில்லையோ அல்லது "என்ன பெரிசாக அவள் செய்து விடுவாள்... இன்னும் 10 நாட்கள் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டிருப்பா அவ்வளவு தானே,,," ...என்ற எண்ணமா ? 

புரியவில்லை...

கதையை  படிக்கும் போது - இக்கதை  லேன்ட் லைன் காலத்தில் நடந்தது ... அப்போது  கை பேசி வராத காலம் என்று புரிகிறது...

இருந்தாலும்...

இவ்வளவு பெரிய நிர்வாகி, ஏதோ ஒரு உபாயம் செய்து   மனைவி உடன் ஒரு சில நிமிடங்கள் மனம் விட்டுப்பேசியிருந்தால்  இந்த மன ஆதங்கம் ஈஸ்வரிக்கு  இருந்திருக்காது...

தன் செல்வாக்கை உபயோகித்து மாமனாரின் உடலை உடனே வீட்டுக்கு கொண்டு வருவதிலும் , காரியத்துக்கு அடுத்தவருக்கு தெரியாமல் பண உதவி செய்வதிலும் அவர்   காட்டிய அக்கறையில் 5 சதவிகிதம்  காட்டி "ஈஸ்வரி, அப்போ சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி ம்மா ... அதனால் தான் மகளிடம் அப்படி பேசினேன்... ஊருக்கு வந்த பின் விளக்கமா சொல்லறேன்..." என்று  ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் / அல்லது 
ஒரு துண்டு சீட்டில் எழுதி அனுப்பி இருந்தால் எந்த மன வருத்தமும் 
வந்து இருக்காதே...

அப்பா, மருமகன், தொழிலதிபர் ஆகிய role களை செய்வதில் காட்டும் அக்கறையை அவர் கணவர் role லில் காட்ட முயலாதது ஏனோ ?

சம்பந்தத்தை சாதுரியமாக பேசி முடித்த அவர் ஏன் மனைவி / மகள் ஆகியோருக்கு  இப்படி ஒரு துர்மரண  செய்தி வரும் நேரத்தில் வந்த சம்பந்தம் அபசகுனமாகப் படுமே என்று ஏன் யோசிக்கவில்லை? தன் முடிவுக்கு வீட்டில் மாற்று கருத்து கிடையாது என்பதாலா ?

சிறிய கதை...சம்பவங்களின் கோர்வைகள் விறு விறுப்புகுறையாமல் ஆசிரியர் நகர்த்திசென்று இருக்கிறார்...

கதாநாயகனை ஒரு முழுமையான நாயகனாக இன்றைய மகளிரின் பார்வையில் ஏற்றுக்கொள்ளவது கடினம்... ஆனால்,  இன்றும்  பல இல்லங்களில் மகாலிங்கங்களையும் ஈஸ்வரிகளையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்...

"என் மனநிலையில் நீங்கள் இருந்தால-  நான் சூழ்நிலை கருதி இப்படி பேசிவிட்டு உங்களுக்கு பல நாட்கள் விளக்கம் தராவி ட்டால் உங்கள் மனம் எப்படி பாடு படும்?" என்று கேட்கதெரியாத  / கேட்க தோன்றாத  /கேட்க முடியாத ஈஸ்வரிகளை நினைக்கும் போது மனம் ஏனோ கனக்கிறது...
 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.


    


இனிப்பான இரண்டாம் பரிசினை 

 வென்றுள்ள மற்றொருவர்இதுவரை மூன்று முறைகள் 

ஹாட்-ட்ரிக் பரிசினை வென்று 


அதுவும் மூன்றாம் முறை 

தான் பெற்ற 

ஹாட்-ட்ரிக் பரிசினை 


ஆறாம் சுற்று வரை

அழகாகத் தக்கவைத்துக்கொண்டு


ஹாட்-ட்ரிக் பரிசின் 

உச்சத்தினையே

எட்டிவிட்ட சாதனையாளர்


திருமதி. இராஜராஜேஸ்வரி  அவர்கள்

http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"

இனிப்பான இரண்டாம் 

பரிசினை வென்றுள்ள

ஹாட்-ட்ரிக் சிறப்புச் சாதனையாளர்


திருமதி. இராஜராஜேஸ்வரி  
அவர்களின் விமர்சனம் இதோ:

 
கோடீஸ்வரரான தகப்பனின் சித்திரம் மஹாலிங்கத்தின்  மூலமாக அதன் விசித்திரங்களோடும் விதிவிலக்குகளோடும் உணர்வுகளோடும் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

எந்த ஒரு கலைப்படைப்பிலும், அதன் உள் அடுக்குகளில் நிறைய சிறந்த விஷயங்களையும் புத்திசாலித்தனங்களையும் கொண்டிருந்தாலும், அதனுடைய முழுமையான வடிவத்தை சற்று தள்ளி நின்று பார்க்கும் போது, தன்னுடைய இலக்கை நோக்கின தெளிவையும் சீரான பயணத்தையும் கொண்டிருக்க வேண்டும். 

ஒரு சிறுகதையின் பார்வையாளரும், அதனுள் இருக்கும் பல சிறந்த விஷயங்களை அப்போதைக்கு உணர்ந்தாலும், கதை உரையாடும் ஒட்டுமொத்தமான தொனி்யைத்தான் ஒரு தொகுப்பாக தன் நினைவில் காலங்கடந்தும் நிறுத்திக் கொண்டிருப்பார்..

காலம் பொன் போன்றது ..கடமை கண் போன்றது..

ஓடும் நதியில் ஒரே  நீரை இருமுறை எடுக்கமுடியாது .. அடுத்த க்ஷணம் வேறு நீர் தான் கிடைக்கும் .. அணைகடந்த வெள்ளம் கடந்ததுதான் .. எந்த சக்தியாலும் திரும்பப் பெறமுடியாது..

ஓடிக்கடந்த க்ஷணமும் எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் திரும்ப வாழக்கிடைக்காது..

ஒரு வருடத்தை வீணாக்கிய மாணவனின் கண்ணீர் அவன் தேர்வின் மதிப்பெண்ணாகி சிரிக்கும் ..

சில மாதங்களை தவவிட கர்ப்பிணிப்பெண்ணின் கனவு
வாரிசுக்காக ஏங்கவைக்கும் ..!

ஒரு நொடியைத்தவறவிட்ட ஓட்டப்பந்தய வீரனின் கண்ணீர்
தங்கப்பதக்கமாக மற்றொருவீரனின் தோளில் சிரிக்கும்..

ஒரு நிமிடத்தைத்தவற விட்டவரின் உயிர் மன்னிக்கவும் இன்னும் கொஞ்சம் முன்னால் கொண்டுவந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்னும் மருத்துவரின் சொல்லாக காலமெல்லாம் கண்ணீர் சிந்தவைக்கும் .. ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ..!!  

மனிதர்களை உருவாக்குவதில் சூ ழ் நி லை மிக முக்கியப் பங்காற்றுகிறது என்பதை மறுப்பதற்கில்லை..

வாய்ப்புகளை சாமார்த்தியமாக சமயோசிதமாக பயன்படுத்திக்கொள்பவர்கள்  இந்தக் கதையின் கதாநாயகர் மஹாலிங்கம் போல கோடீஸ்வரர்களாகத்திகழ்கிறார்கள்..

அதைப்புரிந்துகொள்ளும் சாமார்த்தியம் அற்றவர்கள் ஈஸ்வரி போல அழுது புலம்பி வெற்றுக் கோபத்தால் மனதை ரணமாக்கிக் கொள்கிறார்கள்.. பேசமறுக்கிறார்கள் கணவனிடம்..

தன் மாமனாரின் ஆசீர்வாதமே தன் மகளுக்கு நல்ல இடம் கைகூடி வந்திருப்பதாக   ஈஸ்வரியை ஆறுதல் படுத்தவும், செல்வாக்கைப் பயன்படுத்தி ஜி ஹெச்சிலிருந்து விபத்துக்குள்ளான உடலை விரைவில் வீட்டுக்குக்கொண்டு வந்தும், எதிர்பாராத விபத்து.. எனவே மாமியாரிடம் முழுச்செலவையும் தானே ஏற்பதாக பெருந்தொகையை அளிக்கவும் , செய்த மனிதாபிமான செயல்கள் அவரது உயர்ந்த நல்ல உள்ளத்தைப் பறை சாற்றுகின்றன..

சோகத்தில் இருக்கும் மனைவி உண்மையை உணரும் பக்குவம் 
அற்ற சூ ழ் நி லைக் கைதி  என்பதால் மறைக்கவும் நேரும் அவசியம் உருவாகிறது

மஹாலிங்கத்தின் உதவியின் உன்னதம் மாமியாருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாய் போனதால் தன் மாப்பிள்ளையை கணவன்  இழந்த துக்கத்திலும், பயன் தெரிந்த நன்றியுடன் அடிக்கடி பேசிப் பூரித்துப்போகும் தன் தாயையும் கோபத்துடனே   நோக்கும் ஈஸ்வரியின் மனநிலை நமக்குப் புரிகிறது..

மனைவியின் நுணுக்கமான உணர்வுகளை உணர அவர் கவிஞரோ 
கதை ஆசிரியரோ அல்லவே.. மிகவும் பிஸியான பிஸினஸ் மேன் இதையெல்லாம் உணர்வாரா என்ன ?? 

கதாசிரியர் என்றால் பண்ணிப்பண்ணி பெண் மனதை ஆராய்ச்சி 
செய்து அழகாக கதை எழுதுவார்..!

கவிஞர் என்றால் சோக ரசம் சொட்டச்சொட்ட பிழியப்பிழிய அழுது கவிதை எழுதி வாசிப்பார்..!

ஒரு விபத்து நடந்து மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்லும் நோயாளியுடன் செல்லும் மனைவியும், தாயும், உடன் பிறந்தவர்களும் உற்றாரும் கதறி அழலாம்..

ஆபரேஷன் செய்யும் டாக்டரும் கூடச்சேர்ந்து அழுதால் விளங்குமா..?

எனக்கு நோயாளியிடம் மிகவும் பிரியம், ரத்தத்தைக்கண்டால் மயக்கம் வரும், நோயாளி வலியில் அழுதால் எனக்கும் இளகிய மனது கூடச்சேர்ந்து அழுவேன் .. என்றால் அவர் டாக்டரா..!!

நிதானமாக நோயாளியின் உடலை ஆராய்ந்து ரத்த இழப்பை  நிறுத்தி, ஆறுதல் கூறி தேவையான மருத்துவம் செய்து உயிர்காக்கப்போராடி மருத்துவம் செய்வதல்லவா கடமை..

மஹாலிங்கமும்  அந்த மஹத்தான கடமையைத்தானே செய்திருக்கிறார்..

அவரும் சோகப்பட்டு, மாப்பிள்ளை வீட்டாரும் நிராகரித்திருந்தால் மீண்டும் பொருத்தமான வரன் அமைய நேரிடும் காலதாமதம் வருத்தத்தைத்தானே சுமக்க வைத்திருக்கும்..!

அஹிம்சை சிறந்த ஆயுதம் - போர்க்களத்தில் அல்ல 
கொல்லாமை சிறந்த அறம் - போர்வீரனுக்கல்ல
சத்தியம் சிறந்த தத்துவம் - பகைவனுக்கு அல்ல  

குருஷேத்திரப்போர்க்களத்தில் துரோணர் ஆசிரியராயி ற் றே
பீஷ்மர் தாத்தாவாயிற்றே, துரியோதனாதியர் சகோதரர்கள் ஆயிற்றே - கொல்வது அஹி ம்சைக்கும் தர்மத்துக்கும் விரோதமாயிற்றே என்று திகைத்த அர்ஜுனனுக்கு பகவத்கீதை என்னும் பதினெட்டு அத்தியாயங்கள்  மூலம் திகைப்பை மாற்றினார் கண்ணபரமாத்மா..

தன் தந்தையின் இழப்பு என்னும் மரணக்களத்தில் தேம்பும் ஈஸ்வரியோ தன் பிறந்தகத்தை கிள்ளுக்கீரையாக இளக்காரமாக நடத்துவது, அவள் மனதை கிள்ளிக்கொண்டிருப்பதால் ஒருமாதமாக தொலைபேசிபேச்சையும் தவிர்த்து கோபத்தைக்காட்டுகிறாள் மனைவியாக....

தன் தந்தையின் மரணத்தை அபசகுனமாக, வெண்ணெய் 
திரளும் நேரத்தில் உடைந்த தாழியாக ஆக்காமல், சமயோசிதமாக சந்தோஷமாக பேசி சமாளித்ததை உணர்ந்து கொண்டு மகளை மணப்பென்ணாக காணும் நேரத்திலாவது புரிந்துகொண்டது ஜெயாவுக்கு மட்டுமல்ல படிக்கும் அனைவரையும் சந்தோஷத்தில் திளைக்கச்செய்கிறார் கதை ஆசிரியர்.. 

படங்கள் கதைக்குப் பொருத்தமான சூழ்நிலைகளை கொண்டுவருகின்றன......

கண்ணீர்வழியும் படம் கண்கலங்கச்செய்வதில் வெற்றி சேர்க்கிறது..

மகிழ்ச்சிசிரிப்புடன் மணப்பெண்ணின் படம் இனிமை சேர்க்கிறது..

 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.செந்தாமரையே ... 


செந்தேன் நிலவே ... !நம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக தாமரை’ச்சின்னம் முழு மெஜாரிடி பலம் பொருந்திய தனிக்கட்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று 26.05.2014 திங்கட்கிழமை ஆட்சியைக் கைப்பற்றி, கோலாகலமான பதவி ஏற்பு விழா நடத்தி உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.


அதே நல்ல நாளில் இங்கு அதே ‘தாமரை’ச்சின்னம் வலையுலக வரலாற்றிலும் ஓர் மிகப்பெரிய சாதனை செய்து, இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டியில் ’ஹாட்-ட்ரிக்’ பரிசின் உச்சக்கட்ட அளவினைப் பிடித்து வலையுலக பதிவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.

இவ்விரு நிகழ்ச்சிகளின் அபூர்வமானதொரு ஒற்றுமையை நினைத்தாலே இனிக்கிறது அல்லவா !

WHAT A VERY GREAT CO-INCIDENT !!!!!! ;))))))

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த ஸ்பெஷல் பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். 

இவர்களின் வெற்றிகள் மென்மேலும் தொடரட்டும் 
என நாம் அனைவரும் வாழ்த்துவோம். 


    


   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி

இரண்டாம் பரிசுக்கான தொகை இவர்கள் இருவருக்கும்

சரிசமமாக பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. 

இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 


இணைப்பு: 
கதையின் தலைப்பு:VGK-19' எட்டாக்க(ன்)னிகள் '

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


29.05.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.


என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

34 comments:

 1. இரண்டாம் பரிசினைப் பெற்ற உஷா ஶ்ரீகுமார் அவர்களுக்கும், திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள். தொடர்ந்து முன்னிலை வகிக்கவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நிறைந்த நன்றிகள்...

   Delete
  2. நன்றி கீதா மேடம்...

   Delete
 2. அழகாக விமர்சனம் எழுதி இரண்டாமிடத்தைப் பெற்றுள்ள திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இதுவரையிலான விமர்சனப் போட்டிகளில் அதிகபட்ச ஹாட்-ட்ரிக் வெற்றிகளைப் பெற்று சிறப்பான விமர்சகராகத் தேர்வாகியிருக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. சிறப்புப்பாராட்டுகளுக்கு இனிய நன்றிகள்...!

   Delete
 3. இரண்டாம் பரிசினைப் பெற்ற உஷா ஶ்ரீகுமார் அவர்களுக்கு
  இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. எமது விமர்சனம் இரண்டாம் பரிசுக்குத்தேர்வானதற்கு
  (ஹாட் ட்ரிக் பரிசு பெற்றது ஆச்சர்யம் தான்..)
  இனிய நன்றிகள்..!

  ReplyDelete
  Replies
  1. ஹாட் ட்ரிக் நாயகி ராஜராஜெஸ்வரிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...

   Delete
 5. அழகான விமர்சனம் எழுதி
  இரண்டாம் பரிசு பெற்ற திருமதி உஷா ஸ்ரீகுமாருக்கு
  பாராட்டுக்கள் !
  ஒரே ஒரு மன வருத்தம் .
  கதையின் முதல் வரியே " காலை 10 மணி. பிஸினஸ்
  விஷயமாக சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின்
  செல்போன் சிணுங்கியது ". என்பதுதான்.

  ஆனால். விமர்சனம் " கதையை படிக்கும் போது -
  இக்கதை லேன்ட் லைன் காலத்தில் நடந்தது ...
  அப்போது கை பேசி வராத காலம் என்று புரிகிறது... "
  என்று கதையின் காலத்தையே மாற்றிவிட்டீர்கள் !

  சிறந்த விமர்சனம் எழுதி ,
  தொடர்ந்து முறையாக வெற்றிக்கனியை
  எட்டியிருக்கும் , திருமதி. இராஜராஜேஸ்வரி
  அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தவறை எண்ணி வருந்துகிறேன்...
   தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
   தவறு இந்த விமரிசனத்தை பரிசுக்கு அருகதை உள்ளதாகக் கருதி தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றிகள்.வாய்புக்கொடுத்த V G K சாருக்கு நன்றிகள்...

   Delete
 6. சிறப்பான விமர்சனங்களுக்கு பாராட்டுகள்! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!விமர்சனங்களைப் படிக்கும்பொழுது என் மனதில் பட்டதை திரு. பெருமாள் செட்டியார் ஐயா அவர்கள் கோடிட்டுக் காட்டிவிட்டார். அதிகபட்ச வெற்றிகளுடன் உச்சத்தை எட்டிய சகோதரி திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு சிறப்பான பாராட்டுகள்! தொடருங்கள்! 'மகளிர் மட்டும்' என்பது போல ஆக்கிவிட்டீர்களே! கலக்குங்க!

  ReplyDelete
 7. பரிசு பெற்றவர்களின் விமரிசனத் திறமை பளிச்சிடுகிறது.
  இதே இவர்களின் இந்தப் பகுதிக்கான ஆரம்ப விமரிசங்களுக்கும் இப்பொழுதிய விமரிசன எழுத்துக்களுக்கும் வளர்ச்சி வித்தியாசம் இருப்பதும் தெரிகிறது.

  //எதையும் தாம் ஒருவரே தீர்மானிக்கலாம் என்று ஒரு குடும்பத்தில் சிலர் அமைந்து விடுவதில் நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. எல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை அவரவர் கையாள்வதைப் பொருத்திருக்கிறது. உடனடி நன்மைகள் நீண்ட கால தீமையை தன்னுள் ஒளித்து வைத்திருப்பதும் உண்டு. எது எப்படியாயினும், நம்மை அழுத்தும் சில சூழ்நிலைகளுக்கு கைதியாக வேண்டாம்; சுதந்திர புருஷராகவும் செயல்படலாம் என்பதற்கு இந்தக் கதையின் நாயகன் எடுத்துக் காட்டோ?.... //

  அட! இப்போத் தான் பார்த்தேன். சூழ்நிலைகள் ஒருவரை கைதி ஆக்குவதில்லை; சுதந்திர புருஷர்களாவும் ஆக்கும் என்று தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 8. //'மகளிர் மட்டும்' என்பது போல ஆக்கிவிட்டீர்களே! கலக்குங்க! //

  'மகளிர் மட்டும்' என்றாலும் மாறுபட்ட கருத்துக்கள் இழையோடுகிறதே! கருத்துக்கள் தானே முக்கியம்!

  ReplyDelete
 9. //ஒரே ஒரு மன வருத்தம் . //

  ஒரே ஒரு திருத்தம் என்றிருக்கலாமோ?

  ஒரு கற்பனை உரையாடல்: (நடுவர் பொறுப்பார் என்கிற நம்பிக்கையில்)

  ஒரு வாசகர்: என்ன, வை.கோ. சார்! பெருமாள் செட்டியார் இப்படி ஒரு தப்பை கண்டுபிடிச்சிருக்கார், பாருங்கோ.. என்ன சொல்றீங்க?..

  வை.கோ.சார்: (கையைப் பிசைந்து கொண்டே) நான் என்ன செய்யறது?.. அவர்கள் அனுப்பும் விமரிசனத்தை அட்சரம் பிசகாமல் அப்படியே பிரசுரிக்கிறேன். அதை மாற்றியமைக்கக் கூட என்னால் முடியாது! இதுக்கெல்லாம் நடுவரைத் தான் கேட்க வேண்டும்.

  நடுவர்: வை.கோ.சார் அடிக்கடி சொல்றது போல இந்த நடுவர் வேலை மஹா.. மஹா... வேண்டாம். வேறு மாதிரி விளக்கறேன். எழுதியவர் என்ன தப்பு செய்திருந்தாலும் என்னாலும் திருத்த முடியாது; திருத்துவதும் நான் செய்யக்கூடாத ஒன்று. நீண்ட ஒரு விமரிசனத்தில் ஒரு பகுதி நன்றாக இருக்கும்; ஒரு பகுதி 'அப்செட்' ஆக்கிவிடும். இதை தேர்ந்தெடுக்கிறதா, வேண்டாம்ன்னு நா படற அவஸ்தை இருக்கிறதே, பாருங்க.. எல்லாவற்றையும் கலந்து கட்டித் தான் பார்க்க வேண்டியிருக்கு.. பல நேரங்களில் சின்ன சின்ன தவறுகள் எழுத்துப்பிழைகள் இதையெல்லாம் தாண்டித் தான்... அதனாலே எழுதறவங்க தான் ஒருதடவைக்கு ரெண்டு தடவை எழுதறதைப் படிச்சுப் பார்த்து...

  ReplyDelete
  Replies
  1. //நீண்ட ஒரு விமரிசனத்தில் ஒரு பகுதி நன்றாக இருக்கும்; ஒரு பகுதி 'அப்செட்' ஆக்கிவிடும்//

   வணக்கம் ஐயா..
   தெளிவாக சொன்னால் திருத்திக்கொள்ள ஏதுவாக அமையுமே..!

   Delete
  2. என்னுடைய பின்னூட்டம் ,
   விமர்சனம் எழுதியவரையோ,
   நடுவரையோ அல்லது
   திரு, VGK அவர்களையோ குறை
   சொல்வதற்காக அல்ல.

   Mistakes are common .
   But, it does not mean that it should not be pointed out.
   I request every one to take it sportively.

   Delete
  3. G Perumal Chettiar May 26, 2014 at 9:54 PM

   //Mistakes are common. But, it does not mean that it should not be pointed out.//

   தவறுகள் இருப்பின் அதை சுட்டிக்காட்டுவதில் எந்தத்தவறுமே இல்லை.

   அதைத்தங்களைப் போன்றோர்களால் மட்டுமே இங்கு செய்ய இயலும்.

   IN FACT இந்த விமர்சனம் முதன் முதலாக எனக்குக் கிடைத்து நான் படித்தவுடனேயே இந்தத்தவறு என் கண்களை உறுத்தியது.

   இருப்பினும் போட்டி நடத்தும் நான் அதை திருத்துவது நியாயமாகுமா? சொல்லுங்கோ !

   அதனால் அதை அப்படியே உயர்திரு நடுவர் அவர்களின் பார்வைக்கும் பரிசீலனைக்கும் மற்றவற்றுடன் அனுப்பி வைத்தேன்.

   உயர்திரு நடுவர் அவர்களுக்கும் இந்த ஒரு இடத்தினில் தவறாக எழுதப்பட்டுள்ளது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. உயர்திரு நடுவர் அவர்களும் இதைத்திருத்தவோ சுழிக்கவோ முடியாது அல்லவா !

   இருப்பினும் விமர்சனத்தில் உள்ள மற்ற பெரும்பாலான பகுதிகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அவர் மனதுக்குத் திருப்தியாக இருந்திருக்கும். அதனால் மட்டுமே இந்த விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகியிருக்கும்.

   இந்த பரிசுபெற்ற விமர்சனத்தை நான் என் வலைத்தளத்தில் வெளியிடும்போதே, யாராவது ஒருசிலராவது அல்லது தங்களைப்போன்ற ஒரே ஒருவராவது இதை நிச்சயம் சுட்டிக்காட்டுவார்கள் என எதிர்பார்த்தே தான் நானும் இதனை வெளியிட்டேன் என்பதை மனம் திறந்து இங்கு கூறிக்கொள்கிறேன். எதையும் ஊன்றிப்படிப்பவரான தாங்கள் இதை சுட்டிக்காட்டியதில் எனக்கு மிகவும் சந்தோஷமே. சிலர் தவறு என்று தோன்றினாலும் சொல்லத் தயங்குவார்கள். தாங்கள் என்னைப்போலவே தயங்காமல் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

   பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களில் ஏதேனும் ஒருசில எழுத்துப்பிழைகள் இருந்து, அதுவும் என் கண்களில் அவை பட்டால், அதை மட்டும் நான் திருத்தி வெளியிடுவது வழக்கம். அதுபோன்ற எழுத்துக்களிலெல்லாம் மஞ்சள் வர்ணம் அடித்துக்காட்டியிருப்பேன். அதுவும் விமர்சனம் எழுதி பரிசு பெற்றவர்களுக்கு மட்டும் அது புரிந்தால் போதுமே என்பதற்காக மட்டுமே. இப்போது அதையும் இங்கு பகிரங்கமாகவே சொல்லிவிட்டேன்.

   //I request every one to take it sportively.//

   Good. Thank you very much, Sir.

   எனக்கு ஒரு BOSS இருந்தார். அடிக்கடி எங்களிடம் வந்து ”ANY PROBLEM ?” என்று கேட்பார். நாங்கள் ”NO PROBLEM Sir” என்போம். அதற்கு அவர் ”THEN YOU CREATE SOME PROBLEM ..... AND SOLVE IT" என்பார்.

   அதுபோல இங்கு இப்போது WE HAVE SOLVED THIS PROBLEM. ;)))))

   THANKS TO ONE and ALL.

   அன்புடன் கோபு [VGK]

   Delete
 10. இரண்டாம் பரிசு வென்றுள்ள திருமதி உஷாவிற்கும், திருமதி ராஜராஜேஸ்வரிக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. http://usha-srikumar.blogspot.in/2014/05/blog-post_26.html
  திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்

  இந்த வெற்றியாளர், தான் பரிசு பெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 12. //வணக்கம் ஐயா..
  தெளிவாக சொன்னால் திருத்திக்கொள்ள ஏதுவாக அமையுமே..!//

  வணக்கம்மா.

  இது ஒரு கற்பனை உரையாடல். இந்தப் போட்டி நடுவரிடம் கூட பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறேன், பாருங்கள்.

  நீங்கள் கேட்டதும் நல்லதுக்கு ஆச்சு. வை.கோ.சாரே இந்தப் போட்டியின் நடுவரிடம் கேட்டு இந்தப் போட்டிக்கு வந்த விமரிசனங்கள் பற்றி அவர் அனுபவங்களைச் சொல்கிற மாதிரி ஒரு குறிப்பு எழுதச் சொன்னால் அது கூட நன்றாக இருக்கும்.

  இந்தப் போட்டி வித்தியாசமாக நடத்தப்படுவதால் விமர்சனங்களைப் படிப்பதில் ஆர்வம் கூடி என் கருத்துக்களையும் பின்னூட்டங்களாக ஆங்காங்கே பதிந்திருக்கிறேன். அவ்வளவு தான்.

  ReplyDelete
  Replies
  1. ///இதே இவர்களின் இந்தப் பகுதிக்கான ஆரம்ப விமரிசங்களுக்கும் இப்பொழுதிய விமரிசன எழுத்துக்களுக்கும் வளர்ச்சி வித்தியாசம் இருப்பதும் தெரிகிறது. //

   //விமர்சனங்களைப் படிப்பதில் ஆர்வம் கூடி என் கருத்துக்களையும் பின்னூட்டங்களாக ஆங்காங்கே பதிந்திருக்கிறேன்//

   அந்தக் கருத்துரைகள் தான் அட்சயபாத்திரங்களாக மாறி உற்சாகமாக எழுத்துக்கள் மேலும் மெருகேற உதவுகின்றன ஐயா...

   Delete
 13. தங்கள் பதிலுக்கு மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 14. இரண்டாம் பரிசை வென்ற திருமதி உ ஷா திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  "பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களில் ஏதேனும் ஒருசில எழுத்துப்பிழைகள் இருந்து, அதுவும் என் கண்களில் அவை பட்டால், அதை மட்டும் நான் திருத்தி வெளியிடுவது வழக்கம். அதுபோன்ற எழுத்துக்களிலெல்லாம் மஞ்சள் வர்ணம் அடித்துக்காட்டியிருப்பேன்."

  இடையில் காணப்படும் அந்த 'மஞ்சள்' எழுத்துக்கு பொருள் இதுதானா? வெளிப்படையாகக் கூறிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. Radha Balu May 27, 2014 at 2:02 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இடையில் காணப்படும் அந்த 'மஞ்சள்' எழுத்துக்கு பொருள் இதுதானா? வெளிப்படையாகக் கூறிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.//

   மஞ்சளின் மஹிமையைப் புரிந்துகொண்ட புரிதலுக்கு நன்றிகள் ! ;)))))

   பிரியமுள்ள கோபு

   Delete
 15. இரண்டாம் பரிசினைப் பெற்ற சகோதரிகள் உஷா ஸ்ரீகுமார் மற்றும் ராஜராஜேஸ்வரி இருவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. சகோதரிகள் உஷா ஸ்ரீகுமார் மற்றும் ராஜராஜேஸ்வரி இருவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. பரெசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திருமதி உஷாஸ்ரீகுமார் மேடம் வாழ்த்துகள். போட்டிக்கு நடுவராக இருப்பது கூட அவ்வளவு ஈசியான விஷயம் இல்ல போல இருக்கு.

  ReplyDelete
 18. // இந்த சிறுகதை விமர்சனப்போட்டி
  வரலாற்றிலேயே முதல் முறையாக
  இந்த VGK-17 ’சூழ்நிலை’ சிறுகதை
  விமர்சனங்களுக்கான பரிசுகள் அனைத்தையும்
  முற்றிலும் பெண்கள் அணி மட்டுமே
  பெற்றுள்ள ’சூழ்நிலை’ ஏற்பட்டுள்ளது.//

  மகளிர் அணியா கொக்கா.

  இரண்டாம் பரிசினைப் பெற்ற உஷா ஶ்ரீகுமார் அவர்களுக்கும், திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி,

   கொக்கு ஒன்றுக்கு கொக்குகள் சார்பில். :)

   Delete
 19. பரிசு வென்றவங்களுக்கு வாம்த்துகள். ஆத்தாடியோ விமனிசனத்த எம்பூட்டுகவனமா படிக்க வேண்டி இருக்கு. போட்டி நடத்துறவங்களும் நடுவரவங்களும் இன்னா தெளிவி வெளக்கிட்டாங்க.

  ReplyDelete
 20. திருமதி உஷா திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. // கதையை படிக்கும் போது - இக்கதை லேன்ட் லைன் காலத்தில் நடந்தது ... அப்போது கை பேசி வராத காலம் என்று புரிகிறது...// கைபேசி வந்தது..கைவிட்டார்கள் மனித உறவுகளை.
  //மனிதர்களை உருவாக்குவதில் சூ ழ் நி லை மிக முக்கியப் பங்காற்றுகிறது என்பதை மறுப்பதற்கில்லை..// உண்மைதான். ரசித்தேன். வாழ்த்துகள் சகோதரியரே.


  ReplyDelete
 22. பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

  ReplyDelete