About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, May 25, 2014

VGK 16 - EQUAL PRIZE WINNERS - LIST 3 OF 3 - ’ஜாதிப்பூ’





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 16 - ’ ஜா தி ப் பூ ‘


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html



 


 எல்லாமே வயிற்றுப்பாட்டுக்குத் தான். 

 பூ விற்பவர்களில் வயதானவர்கள் என்றும் உண்டு;  

 இள வயசுக்காரர்களும் உண்டு. 

 இளவயதினரிடம் பூ வாங்கும் கூட்டம் குவிவதையும்--- 

 வயதானவர்கள் வியாபாரம் சுணங்கிப் பரிதவிப்பதையும்- 

 பார்த்த பரிதாபத்தில் கதாசிரியர்  

 மனத்தில் பூத்த கதையோ இது!.... 


 


 



  



  




மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  


 ஆறு 




நடுவர் அவர்களின் 


தீர்ப்பு + வழிகாட்டுதல்களின்படி


இந்தச்சிறுகதை விமர்சனத்திற்கான


மொத்தப்பரிசுத் தொகை


தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 


ஆறு விமர்சனங்களுக்கும்


சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.



இந்த ஆறு விமர்சனங்களும்



சமமான பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பினும்



பதிவின் நீளம் கருதி, அவ்வப்போது 


நீண்ட நேர இடைவெளி கொடுத்து, 


இரண்டு இரண்டாக விமர்சனங்கள் 



வெளியிடப்பட்டுள்ளன. 




இந்தப் பரிசுகளை சரிசமமாக வென்றுள்ள  


இந்த ஆறு விமர்சகர்களுக்கும்




நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 



  

          

  

 

                  

 


'இந்தக் கதை விமரிசனப் போட்டிக்கு அறிமுகமாகி 
முதல் தடவையாக பரிசு பெற்றோருக்கு 
அவர்கள் மென்மேலும் 
பல பரிசுகளைப் பெற என் வாழ்த்துக்கள்'





  


மற்றவர்களுக்கு: 







    


[ 5 ]




  முனைவர் திருமதி. R. எழிலி    

அவர்கள்.


 முன்பு, சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் 

தாவரவியல் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.



தற்சமயம் புதுச்சேரியில் இல்லத்தரசியாக உள்ளார்கள்.


இவருக்கென இதுவரை தனியாக 

ஏதும் வலைத்தளம் இல்லை.


மின்னஞ்சல் மூலம் இந்தப்போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள்.


முதன்முதலாக இந்தப்போட்டியில் கலந்துகொண்டு 

பரிசும் பெற்றுள்ள இவருக்கு நம் ஸ்பெஷல் வாழ்த்துகள்.



 



புதுமுகப் போட்டியாளர்


  முனைவர் திருமதி. R. எழிலி   


அவர்களின் விமர்சனம் இதோ ....



கோயில் வாசலில் கதை தொடங்குகிறது. பூ வியாபரம் செய்யும் பாட்டி, அவளுக்குப் போட்டியாக ஒரு பருவவயதுப் பெண் புதுவரவு என அருமையான காட்சி கண்முன் விரிகிறது. “பூக்களை விட அந்த பூக்காரி நல்ல அழகு” என்று  உரைப்பதிலேயே அவள் அழகைக் கண்முன் நிறுத்தி விடுகிறார். அதற்கேற்ப படங்களும் மிக அழகு!. கடைக்கண் பார்வைக்குக் காத்திருக்கும் இளைஞர்கள் பாழும் நெற்றியில் திருநீற்றுப் பட்டை அணிவதாகக் காட்டியது அருமை! யதார்த்தமும் கூட!


பருவமங்கையோ படு சுட்டி. வியாபாரத்தில் கெட்டி! அவளின் சாதுர்யத்தால் பூக்களை சீக்கிரம் விற்றுத் தீர்ப்பதும், பாட்டியின் வியாபாரம் படுத்துப் போவதாகக் காண்பித்ததும் போட்டியான புதுவரவு யார்? ஏன்? என்ற கேள்வியை நம்முள் எழுப்பிச் செல்கிறது. என் பிழைப்பைக் கெடுக்க வந்தது போல் இருக்கிறது என பாட்டி சொல்வது நம் எதிர்பார்ப்பை மேலும் தூண்டுகிறது.


பூக்களை விற்றுத்தீர்த்ததும், பாட்டியைப் பார்த்து கண்சிமிட்டி “வரட்டுமா பாட்டி?”எனக் கூறி அந்தப் பெண் செல்வதாய்ச் சித்தரிக்கும்போதும், பார்த்து ஜாக்கிரதையாய்ச் செல்லும்படி பாட்டி சொல்வதாகக் குறிப்பிடும்போதும் கதையில் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு உறவு இருக்குமோ என்ற எண்ண மாற்றம் ஏற்படுகிறது.


இனி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்தான் அவள் வருவாள் என பாட்டி கூறியதும், அவளை இனிமேல் செவ்வாய், வெள்ளிகளில் கூட வரவேண்டாம் எனக் கூறிவிடுமாறு ஒரு இளைஞன் (நம் கதையின் நாயகன் உரிமையுடன் குறிப்பிடுவதாக) அறிமுகமாகிறார். நாயகனுக்கு அவளைப் பலரும் மொய்ப்பது போல் சூழ்வது பிடிக்கவில்லை என்று காண்பித்து அந்தப் பெண்ணின் மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்த்திவிடுகிரார்.,


பாட்டிக்கும் அவனுக்கும் என்ன உறவு? எனும் கேள்வியை நம்முள் எழுப்பி, அதற்கான விடையைத் தந்தது இன்னும் சிறப்பு. பாட்டி அவனைப் “பேராண்டி” என உரிமையாக அழைப்பதும், அவ்விளைஞன் தன் சிறுவயது முதல், படிப்பை முடித்து வேலையில் சேர்ந்துள்ளவரை, அனைத்து நிகழ்வுகளையும் பாட்டியிடம் ஒளிவு மறைவின்றிப் பகிர்ந்து வருவதாகக் குறிப்பிட்டு, அவர்களுக்குள் ஒரு ஒட்டுறவு இருப்பதை வெளிப்படுத்தி விடுகிறார்.

  
சிறுவயதில் அவனுக்கு அனைத்துப் பூக்களையும் அறிமுகம் செய்து வைத்த பாட்டியிடம், “பூக்களிலுமா ஜாதிப்பூ என்று ஒரு ஜாதி தனியாக இருக்காப்பாட்டி?” என்று கேட்பதாக அமைத்து, அதன் மூலம், அவன் மிகவும் புத்திசாலி, விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ற பண்பாளன் எனப் பாத்திரத்தை மெருகேற்றிவிடுகிறார்.


மேலும் உடல்நலம் குன்றியிருந்த பாட்டியை ஒருநாள் மழையில் நனையாமல் காத்து, அவளது உறைவிடத்தில் கொண்டு சேர்த்ததாக அமைத்து அவன் இரக்ககுணமும், முதியோரிடத்தில் பற்றும், பொறுப்புணர்வும் கொண்டவன் என்பதை உணர்த்திவிடுகிறார்.


புத்தம்புது வரவான அந்த ஜாதிப்பூவை விரும்பி மாலையிட்டு மணமுடிக்க எண்ணி, பாட்டியிடம் அந்த எண்ணத்தைப் பக்குவமாய்ப் பகிர்ந்துகொண்டவிதம் அருமை. அவ்வேளையில் ஆலய மணி ஒலித்திட, அதை நல்ல சகுனமாய் பாட்டியும் அவனும் நினைத்து மகிழ்வதிலிருந்து, இறைநம்பிக்கை மிகுந்த அவர்கள் இருவரும் நிச்சயம் அவ்வெண்ணம் ஈடேறும் என நம்பிக்கை கொண்டதில் வியப்பில்லை.


பாட்டியிடம் ஆசிர்வாதம் கேட்கும்போது, கதையின் திருப்பம் விளைகிறது. வெளியூரிலிருந்து வந்த தன் பேத்தி ஒரு மாதத்திற்கு அவளுடனேயே பூ வியாபாரம் செய்யப் போவதாகவும், ஆனால் தான் யார் என்பதை யாருக்கும் சொல்லிவிடக்கூடாது என வாக்குறுதி பெற்றுக்கொண்டதால் தன் பேத்திதான் அவள் என்பதை அவனிடம் கூற இயலாமல் தவிக்கையில் அவள் கொடுக்கும் வாக்கை நிச்சயம் காப்பாற்றுவாள் என்பது உறுதிசெய்யப்படுகிறது.


“எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே!” என ஆசீர்வதிக்கையில் பாட்டியின் மனதில் பேராண்டியை மாப்பிள்ளையாக்கிக் கொள்ள முடிவு செய்தது வெளிப்படுகிறது. கோயிலில் மங்கல் இசை முழங்குவதாகக் காட்டி கதைக்கு சுபமான முடிவுதான் என்பதைக் குறிப்பால் உணர்த்தி, அதற்கேற்ப மணமாலை படங்களையும் இணைத்து அருமையாக முடித்துள்ளார்.


மொத்தத்தில் “ஜாதிப்பூ” நறுமணம் கமழும் பூ தான். ஜாதிப்பூவை கையோடு கைசேர்த்து சூடிப்பார்க்கும் நேரம் விரைவில் நெருங்கட்டும். பூமாலைகள் அவர்களின் தோள்சேரட்டும்!. நல்லுளங்கள் இணைந்து பாட்டிக்கு தம் நன்றிகளைச் செலுத்தட்டும்!


எளிய குடும்பத்தில் ஏற்படும் காதலை சித்தரிக்கும் விதம் அருமை! பருவப்பெண், பாட்டிக்குப் பழக்கமான இளைஞன், பூ விற்கும் பாட்டி  என எளிமையான, எதார்த்தமான பாத்திரங்களைத் தெரிவு செய்து, நல்லுளங்களாய் அவர்களைக் காட்டி, நல்ல முடிவைத் தந்த கதாசிரியருக்கு ஒரு சபாஷ் சொல்லத் தோன்றுகிறது. நன்றி!

-oooOooo-
 Dr. (Mrs.) R. EZHILI 
  .

 








மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








     



[ 6 ]


திரு


 E.S. சேஷாத்ரி   




அவர்கள்




காரஞ்சன் [சேஷ்]
esseshadri.blogspot.com


 




திரு.


 E.S. சேஷாத்ரி   



அவர்களின் விமர்சனம் இதோ:



ஆலய வாசலில் அறிமுகம் ஒரு பருவப்பூ!
பருவமங்கையின் தோற்றத்தில் வனப்பு!
அமர்க்களமாய் ஆசிரியரின்  வர்ணிப்பு!
அதற்கேற்ப அனைத்துப் படங்களும் சிறப்பு!

இளைஞர்க்கு அவளிடம் ஏதோ ஓர் ஈர்ப்பு!
பலாப்பழம் நாடும் ஈக்கள்போல் மொய்ப்பு!
கோயிலுக்கு வரும் கூட்டம் அதிகரிப்பு!
பூக்காரப் பாட்டியின் வியாபாரம் குறைப்பு!
பாழும் நெற்றிகளில் திருநீறும் அதன் பாதிப்பு!

 மங்கையின் திறனால், பூக்கள் விரைவில்விற்றுத்தீர்ப்பு!
பாட்டிக்குப் பொறாமை இல்லாதது கதையில் பிடிப்பு!
பலர் வந்து அப்பெண்பற்றி பாட்டியிடம் விசாரிப்பு!
யாரென்று அறியேனென பாட்டியின் பதிலிறுப்பு!
செவ்வாய் வெள்ளி இனி வருவாள் என உரைப்பு!

கேட்டதும் ஓர் இளைஞனின் பதைப்பு!
அவளைப் பலரும் சூழ்வதில்  வெறுப்பு!
அவளை  வாராதிருக்க பாட்டி மூலம் கண்டிப்பு!

 அறியாப் பருவம் முதல் அவனைஅறிந்ததால்
“பேராண்டி” என அன்புடன்அழைப்பு!
பக்தியில் அவனுக்கோ மிகவும் விருப்பு!
அன்றாடம் ஆலயம் வருவதில் லயிப்பு!
உழைத்துப் பிழைப்பதில் பாட்டியின் பிடிப்பு
உண்டாக்கியது நாயகனுக்கு அவள்மேல் விருப்பு!
பாட்டியின் நலனில் அவனுக்குப் பொறுப்பு!
மழையில் நனையாமல் காத்தது சிறப்பு!

பட்டியல் நீளும் பூக்களின் தொகுப்பு
சிறுவயதில் அவனுள்ளே பாட்டியின் விதைப்பு!
பூக்களிலும் ஜாதியுண்டோ? கேள்வியின் தொடுப்பு!
கேட்டதும் பாட்டி அடைந்தாள் மலைப்பு!
பாட்டிக்கு அவன் திறனில் மதிப்பு!

வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் உரைப்பு!
ஏதும்  அதிலில்லை ஒளிப்பு, மறைப்பு!
இருவருக்கும் இது அன்றாட நடப்பு!

ஜாதிப்பூவை மணந்திட விருப்பு!
பாட்டியிடம் அதை உரைப்பதும் சிறப்பு!
ஆலய மணியும் அவ்வேளையில் ஒலிப்பு!
அதனால் அவனுள் விளைந்தது களிப்பு!

சேதியை அறிந்ததும் பாட்டிக்கும் வியப்பு!
பேத்திக்கு ஏற்ற வரனென நினைப்பு!
அவளும் அடைந்தாள் அளவிலாப் பூரிப்பு!
பேத்திதான் அவளென உரைத்திடத் துடிப்பு!
கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவிப்பு!

அப்படியே நடக்கும் என ஆசீர்வதிப்பு!
அவ்வேளை மங்கல இசையும் ஒலிப்பு!
இருவரைச் சேர்ப்பது இனி பாட்டியின் பொறுப்பு!
அன்புளம் இணைவது அனைவரின் எதிர்பார்ப்பு!
யாருக்கும் இல்லையதில் எதிர்ப்பு!

விடுப்பரோ அனைவருக்கும் அழைப்பு!
இதுவன்றோ கதையின் உயிர்ப்பு!
ஜாதிப்பூ ஒரு அருமையான படைப்பு!

சிறுகதைகளின் அணிவகுப்பு!
சிந்திக்க வைக்கும் முனைப்பு!
சமுதாயச் சூழல்கள் சித்தரிப்பு!
சிறந்த நடையில் படைப்பு!
கோர்வையாய் எடுத்துரைப்பு!
அத்தனையும் தித்திப்பு!
இவையே கதாசிரியரின் சிறப்பு!
எல்லோர் மனங்களிலும் இடம்பிடிப்பு!
வைகோ அவர்களுக்கு வழங்கிடுவோம் இனிப்பு!
நல்ல தீர்ப்பு  இனி நடுவரின் பொறுப்பு!
---------------------------------------------------------------
-காரஞ்சன்(சேஷ்)
 











மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








     



  Dr. (Mrs.) R. Ezhili Seshadri Madam 
                        
 

                                           Mr. E.S. Seshadri Sir





இந்த ‘ஜாதிப்பூ’ சிறுகதை விமர்சனப்போட்டியில்

தம்பதி ஸமேதராய் இருவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன்

தங்கள் இருவரின் விமர்சனங்களும் பரிசுக்கும் தேர்வாகியுள்ளது 

’ஜாதிப்பூ’ போன்றே மணம் கமழ்ந்து மனதை மகிழ்விக்கிறது.


 தங்கள் இருவருக்கும்

என் மனம் நிறைந்த அன்பான ஆசிகள் + 

இனிய நல்வாழ்த்துகள்.


அன்புடன் கோபு [ VGK ]








    


   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.










இந்தப் போட்டியில் சரிசமமாகப் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள் எழுதியுள்ள விமர்சனங்கள்

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப் பட்டுள்ளன.


காணத்தவறாதீர்கள் !




 VGK-01 To VGK-16  


 HAT-TRICK PRIZE WINNERS 


 பற்றிய செய்திகள் தனிப்பதிவாகவே  


அடுத்த சில மணி நேரங்களில் 



வெளியிடப்பட உள்ளது 







oooooOooooo


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



VGK-19


 எட்டாக்க(ன்)னிகள் !  




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 

29 . 05 . 2014



இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.














என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

24 comments:

  1. தம்பதி ஸமேதராய் பங்கேற்று பரிசு பெற்ற
    இருவருக்கும் அன்பான இனிய நல்வாழ்த்துகள்..
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்..
    வாழ்க வளமுடன்...!

    ReplyDelete
  2. புதுமுகம் முனைவர் திருமதி. R. எழிலி அம்மா அவர்களுக்கும், வித்தியாசமான விமர்சனமாக அசத்திய திரு. E.S. சேஷாத்ரி ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பரிசு பெற்ற மற்ற அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்! தங்களின் ஆசிகளுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகள்! இருவரின் விமர்சனமும் பரிசுக்குத் தெரிவானதில் மகிழ்கிறோம்,வாய்ப்பளித்த தங்களுக்கும், தெரிவுசெய்த நடுவர்
    அவர்களுக்கும் மிக்க நன்றி!
    -சேஷாத்ரி, எழிலி சேஷாத்ரி

    ReplyDelete
  4. மூன்றாம் பரிசினை தம்பதி சமேதராகப் பெற்றுக் கொண்ட திருமதி மற்றும் திரு சேஷாத்ரி அவர்களுக்குப் பாராட்டுகள்.....

    ஒருவர் உரைநடையிலும் மற்றவர் கவிதையிலும் இங்கே விமர்சனம் எழுதி இருந்தாலும் இரண்டு பேரும் இரண்டு வகையிலும் நன்றாக எழுதுபவர்கள். திரு வை.கோ. அவர்கள் நடத்தும் போட்டியில் மேலும் பல பரிசுகள் பெறவும் மற்ற போட்டிகளிலும் பரிசு பெறவும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மூன்றாம் பரிசு என தவறாக குறிப்பிட்டு விட்டேன்..... மொத்தப் பரிசும் அனைவருக்கும் பகிர்ந்து தரப்பட்டுள்ளதை மறந்து விட்டேன்!

    ReplyDelete
  6. VGK-16 Equal Prize Winners [Mrs. & Mr E S Seshadri]

    http://www.esseshadri.blogspot.com/2014/05/blog-post_25.html

    Mr. E S Seshadri Sir

    இந்த வெற்றியாளர், தானும் தன் துணைவியாரும் சேர்ந்து பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  7. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  8. கவிதையாய் எழுதியது சிறப்பு!
    மேன்மேலும்... ... கலக்குங்கப்பு!

    ReplyDelete
  9. தம்பதி சமேதராகப் பெற்றுக் கொண்ட திருமதி மற்றும் திரு சேஷாத்ரி அவர்களுக்குப் பாராட்டுகள்.....
    கவிதை எழுதியது சிறப்பு!
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  10. சிறப்பான விமர்சனம் எழுதி பரிசு பெற்ற
    திருமதி. Dr. R . எழிலி சேஷாத்ரி அவர்களுக்கும்,
    திரு. E . S . சேஷாத்ரி அவர்களுக்கும்
    மனம் நிறைந்த பாராட்டுக்கள் !

    ReplyDelete
  11. முதன் முதலாக மின்னஞ்சல் மூலம் கலந்து கொண்டு முதல் போட்டியிலேயே பரிசு பெற்றுள்ளார் டாக்டர். திருமதி. பேரா. எழில் அவர்கள். அவருக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. //ஒருவாரத்திற்கு அவளுடனேயே//
    //செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்தான்//

    ஒரு வாரத்தில் ஒரேயொரு செவ்வாயும் ஒரேயொரு வெள்ளியும்தான் உண்டு. ஆகவே, 'வாரத்திற்கு' என்பதை 'மாதத்திற்கு' என்று மாற்றம் செய்திடுங்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் May 25, 2014 at 9:19 PM

      //ஆகவே, 'வாரத்திற்கு' என்பதை 'மாதத்திற்கு' என்று மாற்றம் செய்திடுங்கள் ஐயா.//

      தங்களின் அன்பான வருகைக்கும், பயனுள்ள கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      அந்த இடத்தில் இப்போது தகுந்த மாற்றம் செய்யப்பட்டு, மஞ்சளும் பூசப்பட்டு விட்டது. ;)))))

      அன்புடன் VGK

      Delete
  13. கவி விமர்சனம் தந்த காரஞ்சன் (சேஷ்) அவர்களுக்கு நல்வாழ்த்து.
    மனமொத்த தம்பதியாய் இணைந்து இருவரும் பரிசு பெற்றதில் மகிழ்கிறேன்.

    ReplyDelete
  14. தம்பதி சமேதராய்ப் பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து முன்னிலை வகிக்கவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. திருமதி. Dr. R . எழிலி சேஷாத்ரி அவர்களுக்கும்,
    திரு. E . S . சேஷாத்ரி அவர்களுக்கும்
    மனம் நிறைந்த பாராட்டுக்கள் !

    ReplyDelete
  16. தம்பதி சமேதராய் பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. ஜோடிப் புறாக்களுக்கு (திருமதி மற்றும் திரு சேஷாத்ரி) மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)

      ஜோடிப்புறாக்கள் சார்பாக
      கோபு அண்ணா

      Delete
  18. பரிசு வென்ற தம்பதிகளுக்கு வாழ்த்துகள் ஐயாவோட பு பு பு பு பு அல்லா பூவுகளும் படிக்கயிலே மனசிலயும் பூரிப்பூ

    ReplyDelete
  19. பரிசு வென்ற ஜோடிகளுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. பரிசு பெற்ற மற்ற அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்! தங்களின் ஆசிகளுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகள்! இருவரின் விமர்சனமும் பரிசுக்குத் தெரிவானதில் மகிழ்கிறோம்,வாய்ப்பளித்த தங்களுக்கும், தெரிவுசெய்த நடுவர்
    அவர்களுக்கும் மிக்க நன்றி!
    -சேஷாத்ரி, எழிலி சேஷாத்ரி

    ReplyDelete
    Replies
    1. :) தாங்கள் தம்பதி ஸமேதராய் பரிசு பெற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஜாதிப்பூ போன்றே மனம் கமழ்ந்து இல்லறம் நடத்தி என்றும் நல்லறம் பெற வாழ்த்துகள். ஆசிகள் :)

      Delete