என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 27 மே, 2014

VGK 17 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ’சூழ்நிலை’

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு ' VGK 17 -  சூழ்நிலை ! ’


  
எதையும் தாம் ஒருவரே தீர்மானிக்கலாம் என்று ஒரு குடும்பத்தில் சிலர் அமைந்து விடுவதில் நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு.  எல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை அவரவர் கையாள்வதைப் பொருத்திருக்கிறது.  உடனடி நன்மைகள் நீண்ட கால தீமையை தன்னுள் ஒளித்து வைத்திருப்பதும் உண்டு.  எது எப்படியாயினும், நம்மை அழுத்தும் சில சூழ்நிலைகளுக்கு கைதியாக வேண்டாம்; சுதந்திர புருஷராகவும் செயல்படலாம் என்பதற்கு இந்தக் கதையின் நாயகன் எடுத்துக் காட்டோ?.... மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 
நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  ஐந்துஇந்தியத் தொலைகாட்சி 
வரலாற்றிலேயே 
முதன் முறையாக .... 
என்று ஏதேதோ சொல்வார்களே !

அதேபோல இதையும் படிக்கலாம். ;)

-oOo-

இந்த சிறுகதை விமர்சனப்போட்டி
வரலாற்றிலேயே முதல் முறையாக
இந்த VGK-17 ’சூழ்நிலை’ சிறுகதை 
விமர்சனங்களுக்கான பரிசுகள் அனைத்தையும்
முற்றிலும் பெண்கள் அணி மட்டுமே
பெற்றுள்ள ’சூழ்நிலை’ ஏற்பட்டுள்ளது.

மகத்தான மங்கையர் அணிக்கு நம் 
ஸ்பெஷல் பாராட்டுக்கள் + 
இனிய நல்வாழ்த்துகள்.

-oOo-

அன்புள்ள ஆண் விமர்சனதாரர்களே ! 

இது உங்களுக்கு அவர்கள் விடுத்துள்ள ஓர் சவால் அல்லவா!!

இனியாவது உஷாராகச் செயல்படுங்கள் !!!

’விழுவது மீண்டும் எழுவதற்காகவே ’

எனத் தன்னம்பிக்கையோடு செயல்படும்

இந்தக்கிளியைப் பாருங்கோ! ;)))))

-oOo-இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு:     

முதல் பரிசினை 

முத்தாக வென்றுள்ளவர்கள் இருவர் அதில் ஒருவர்


திருமதி

 கீதா மதிவாணன் 


அவர்கள்


geethamanjari.blogspot.in


வலைத்தளம்: “ கீதமஞ்சரி “

 


முத்தான  முதல் பரிசினை வென்றுள்ள


திருமதி.


 கீதா மதிவாணன் 


அவர்களின் விமர்சனம் இதோ:
சூழ்நிலைக் கைதி என்றொரு வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்போம்அப்படிப்பட்ட ஒரு கைதியாய் இங்கே மஹாலிங்கம்அவர் செய்த குற்றமென்று பிரதானப்படும் விஷயத்தின் பின்னணியாக உள்ள சூழ்நிலையைப் பற்றி ஈஸ்வரி மட்டுமல்லஈஸ்வரி போன்று உணர்ச்சிவசப்பட்டு அவசரமாய் முடிவெடுக்கும் எவருமே கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லைபிரதானப் பாத்திரங்களான மஹாலிங்கம்ஈஸ்வரி இருவருக்கிடையில் சூழ்நிலை விளையாடியதன் பலனாய் உண்டான ஊடலும் கூடலும்தான் கதையின் மையம்.

மஹாலிங்கம் ஒரு ஓய்வு ஒழிச்சல் இல்லாத பிஸினஸ்மேன் என்பதை கதையினூடாகவே நம்மை அறியச்செய்துவிடுகிறார் கதாசிரியர்அப்படியிருந்தும் ஒரு பொறுப்பான தந்தையாக தக்க வயதில் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் பார்த்திருப்பதோடு அந்த வரன் ஒரு அசுப காரியத்தால் தட்டிப்போய்விடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தோடு பதற்றமானதொரு சூழ்நிலையைக் கையாண்ட சமயோசிதத்தை ... நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில்… அதுவும் திருமண விஷயம்… சம்பந்திகள் சென்டிமெண்டல்களுக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருந்துவிட்டால்… அந்த நேரத்தில் அவரால் மாமனாரின் மரண விஷயத்தை வெளியில் சொல்லவும் முடியாது. தொலைபேசியில் கேட்டபோதே அதிர்ச்சியாகி இருந்திருப்பார். ஏனெனில் அவருடைய மாமனார் படுக்கையில் கிடந்தோ, உடல்நலக்குறைவாலோ இறக்கவில்லை. சாலை விபத்து… எதிர்பாராத ஒரு துக்கச்செய்தி. அதைக் கேட்ட மாத்திரத்தில் நிச்சயமாய் அவர் உடல் நடுங்கியிருக்கும். உள்ளம் குலுங்கியிருக்கும்.

ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தற்போதிருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு போனவர் போய்விட்டார்இப்போது மகளின் எதிர்காலம்தான் முக்கியம்’ என்ற எண்ணத்தை மட்டும் மனத்திலிருத்தி ஒரு பொறுப்பான தந்தையாக செயல்படுகிறார். எவ்வளவு நிதானம்! எத்தனைப் பேருக்கு வரும் அந்த விவேகம்!

சரிபோகட்டும்அந்த நேரத்துச் சூழ்நிலையை சமாளிக்க அப்படிச் சொன்னது சரிதான் என்றாலும் அடுத்தப் பத்தாவது நிமிடம் வீட்டுக்குப் பேசிதான் ஏன் அப்படிப் பேசினேன் என்ற காரணத்தை மனைவியிடமோ, கோபத்தில் மனைவி பேசமறுத்துவிட்டால் மகளிடமோ தெரிவித்திருக்கலாமேஎன்று தோன்றலாம். இப்போதுதான் சூழ்நிலையின் பங்கு பிரதானமாகிறது. பிறகு பொறுமையாக மனைவியையும் மகளையும் சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்ற அவருடைய எண்ணம் உடனடியாக ஈடேற முடியாதபடி இன்னொரு சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறார்கள் இருவருமே.  

மாமனார் இறந்திருக்கும் துக்க நேரத்தில் மகளுக்கு வரன் பார்த்திருக்கும் சந்தோஷமான விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்துகொள்ள முடியுமா? அவளுடைய அந்த நேரத்து மனநிலை அதற்கு ஏற்றதாகுமாதன் மகிழ்ச்சியை மனைவியுடன் பகிர்ந்துகொள்ள இயலாமல் அவரும் எவ்வளவு தவித்திருப்பார்… சூழ்நிலை அவரைக் கட்டிப்போட மறுபடியும் சூழ்நிலைக் கைதியாகிவிடுகிறார்இத்தனை வருடங்கள் தன்னோடு வாழ்ந்த மனைவி தன்னைப் புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கை அவருக்கு சற்று ஆசுவாசத்தை அளித்திருக்கலாம்.

சிலர் சொல்வார்கள்செய்யமாட்டார்கள்சிலர் சொல்லமாட்டார்கள்செய்வார்கள்மஹாலிங்கம் இரண்டாவது வகைமகளுக்கு வரன் பார்த்திருப்பதையும் சொல்லவில்லை.மாமனாரின் ஈமச்சடங்குகளுக்கு பண உதவி செய்ததையும் சொல்லிக்கொள்ளவில்லைஆனால் மருமகனாய் மட்டுமல்லாமல் ஒரு மகனாகவும் இருந்து தன் கடமையை சிறப்பாக ஆற்றியிருக்கிறார்அதுவும் வலது கை செய்வது இடது கைக்குத் தெரியாவண்ணம்நல்ல தகப்பனாகவும்நல்ல கணவனாகவும் வாழும் மஹாலிங்கம் தானொரு நல்ல மருமகனும் என்பதை சமயத்தில் நிரூபித்துவிட்டார்

ஈஸ்வரி இன்பத்திலும் துன்பத்திலும் கணவனது தோள் தேடும் ஒரு சராசரிப் பெண்மாமனாரின் மரணச் செய்தி கேட்டு, “அப்படியாரொம்ப சந்தோஷம்” என்று கணவன் சொன்னால் எந்த மனைவிக்குதான் கோபம் வராதுபிறகு என்னதான் சமாதானம் சொன்னாலும் அந்த நேரத்து வலியையும் வேதனையையும் மன உளைச்சலையும் மாற்றமுடியுமாசரிஇவ்வளவு அருமை பெருமையான கணவனைப் பற்றி அவள் அப்படி தவறாக நினைக்க என்ன காரணம்அதையும் கதையினூடே அருமையாக கோடிட்டுக் காட்டிவிட்டார் கதாசிரியர்.

எந்தப் பெண்ணுக்குமே தன் தாய்வீட்டு விசேஷங்களிலும் வைபவங்களிலும் தன் கணவன் பங்கெடுத்துக்கொண்டு சிறப்பிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும்இங்கு மஹாலிங்கமோ பிஸியான பிஸினஸ்மேன்அவருக்கு எதற்கு அதற்கெல்லாம் நேரமிருக்கப் போகிறதுஅது ஈஸ்வரிக்கு வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தந்திருக்கிறதுஅவர் தன் பிறந்த வீட்டை உதாசீனப்படுத்துவதாக அவள் எண்ணத்தில் படிந்துபோயிருக்கிறது, அலட்சியப்படுத்துவதாக அவள் ஆழ்மனத்தில் அழுத்தமாய்ப் பதிந்துபோயிருக்கிறதுஅதனால்தான் அவள் வாயிலிருந்து கோடீஸ்வரரான இவருக்கு எப்போதுமே எங்க பிறந்த வீட்டு மனுஷ்யாளைக் கண்டாலே ஒருவித இளக்காரம்தான்.” என்ற வார்த்தைகள் கோபத்தில் கொப்பளித்துக்கொண்டு வெளிவருகின்றன.

ஈஸ்வரியின் இந்த தவறான புரிதலில் மஹாலிங்கத்திற்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லைஅதை சரியான முறையில் புரியவைக்க அவர் எந்த முயற்சியும் எடுத்தாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாதுஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகாவது ஈஸ்வரி தன் கணவரைஅவரது உயரிய குணத்தைப் புரிந்துகொண்டாளே… அது போதும்.

இனி எல்லாம் சுபமே… எப்படியாகடைசியில் ஜெயாவை மணப்பெண்ணாகச் சுட்டியுள்ளாரே கதாசிரியர்அப்படியானால் வரன் நல்லபடியாக முடிந்துவிட்டது என்றுதானே பொருள்!

எவரையும் குற்றஞ்சாட்டுமுன் சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதையும் அவசரப்பட்டு ஒருதலைப் பட்சமாக யோசித்து யூகத்தால் நாமாகவே ஒரு முடிவுக்கு வருவது மன அமைதியைக் கெடுக்கும் என்பதையும் இக்கதையின் மூலம் அறிந்துணர்ந்தால் அதுவே இக்கதையின் வெற்றியென நான் நினைக்கிறேன்.   


 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.

    


முத்தான  முதல் பரிசினை 

வென்றுள்ள மற்றொருவர்திருமதி.


 ராதாபாலு  


அவர்கள்வலைத்தளங்கள்: 

” எண்ணத்தின் வண்ணங்கள் ”
http://radhabaloo.blogspot.com/


“அறுசுவைக் களஞ்சியம் ”
http://arusuvaikkalanjiyam.blogspot.com/


“ என் மன ஊஞ்சலில் “
http://enmanaoonjalil.blogspot.com/
முத்தான  முதல் பரிசினை வென்றுள்ள


திருமதி.


 ராதாபாலு 


அவர்களின் விமர்சனம் இதோ:

மன வருத்தத்தில் ஆழ்ந்து இருந்த ஜெயாவை மொபைல் ஒலி கலைத்தது.

ஹாய் ஜெயா.. நான் மீரா பேசறேன்..
எப்படி இருக்க?

இருக்கேன்பா..நீ எப்போ வந்த? ஊர்ல உன் ஹஸ்பெண்ட், இன்லாஸ் எல்லாரும் சவுக்கியமா?

ஹ்ம்ம்...நான் நேத்திக்கு வந்தேன்.உனக்கு கல்யாணத்துக்கு உங்கம்மா, அப்பா பாக்கராளாமே? என் அம்மா இப்போதான் சொன்னா. எப்படிப்பட்ட மாப்பிள்ளைடி எதிர்பார்க்கற?

ப்ச்..எனக்கு கல்யாணமே பிடிக்க்கல மீரா. எங்கப்பா பண்ணின ஒரு காரியம் இன்னிக்கு எனக்கு கல்யாணமே வேண்டாம்னு தோண வெச்சுடுத்து.

அப்படி என்ன பண்ணினார்? உன் பேரன்ட்ஸ் ரொம்ப 'ஐடியல் கப்பிளா'ச்சே?

அப்பிடிதான் நானும் நெனைச்சேன். நேத்து எங்க தாத்தா ஒரு சாலை விபத்தில இறந்து போயிட்டதா ஃ போன் வந்தது. எப்பவும் போல அப்பா பிசினஸ் வேலையா சென்னை போயிருக்கார். அம்மாவா அழுது புலம்பறா. நான் அப்பாக்கு விஷயத்தை சொன்னா, அப்பா கொஞ்சமும் வருத்தமோ, அதிர்ச்சியோ இல்லாம சிரிச்சுண்டே 'சரி, நான் போய் பார்த்துட்டு சொல்றே'ங்கறார். இப்படி ஒரு மனுஷரான்னு எனக்கு வெறுத்துப் போச்சு. நாளைக்கு நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவனும் இப்படி இருந்தா  என்ன பண்ணறது? என் அம்மாவுக்காவது கூடப் பிறந்தவா இருக்கா. என் அம்மா, அப்பாக்கு என்னைத் தவிர யார் இருக்கா?

உங்கம்மா சென்னை போயாச்சா? உன் அப்பா அம்மா வீட்டுக்கு போனாரா? 

அம்மா 'தன்வீட்டு மனிதர்களை அப்பா எப்பவுமே மதிப்பதில்லை' என்று கோபப் பட்டுண்டே போனா. அப்பாவின் பணத்திமிர்தான் யாரையும் மதிப்பதில்லை என்று அம்மாவுக்கு கோபம். அப்பாவும் அன்னிக்கே என் தாத்தாவைப் போய் பார்த்தாராம். காரியம் எல்லாம் முடிந்ததும் வந்து விட்டார். அப்பாவிடம் என் அம்மா எதுவும் பேசவே இல்லையாம். பின்னே இருக்காதா? நானாக இருந்தால் டைவர்சே பண்ணிருப்பேன்.

உன் அப்பா என்ன சொன்னார்?அவரிடம் நீ கேட்க வேண்டியதுதான ?

எனக்கு என் அப்பாவிடம் பேசவே பிடிக்கல. நான் எதுவும் அவர்ட்ட கேக்கல.

வருத்தப் படாத ஜெயா. உன் அப்பா ஏன் அப்படி பேசினாரோ? நேர்ல பேசினா எல்லாம் சரியாயிடும். அம்மாவுக்கு என்னோட கண்டலன்சையும் சொல்லிடு. நான் இன்னும் இரண்டு நாள்ல பாம்பே கிளம்பறேன். அடுத்த தடவை வரப்போ நாம மீட் பண்ணலாம். பை ஜெயா!

தன்  அப்பா இறந்த விஷயத்தைக் கேட்டு வருத்தப் படாத கணவனிடம் எந்த  மனைவிக்கும் கட்டுக்கடங்காமல் கோபம் வருவதை மிக நியாயமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

அகால மரணம் நடந்த வீட்டில் தன மனைவியிடம் எதையும் விபரமாகச் சொல்ல முடியாத மகாலிங்கம், தன்  மனைவியை அவளது தாய்க்கு ஆதரவாக ஒரு மாதம் விட்டுச் சென்றது அவருக்கு தன்  மனைவி மற்றும் அவளது குடும்பத்தாரிடம் இருந்த அன்பைக் காட்டுவதாக ஆசிரியர் அருமையாக எடுத்துச் சொல்கிறார். அதன் பொருட்டே ஈஸ்வரியின் தாயார்  அவரைப் பற்றி மிக உயர்வாகப் பேசுவதையும், இறந்த வீட்டில் போகும்போது சொல்லிக் கொள்ளக் கூடாது என்பதையும் இயல்பாகக் காட்டியுள்ளார் ஆசிரியர்!

ஹலோ..ஜெயா....சௌக்கியமா? அம்மா வந்தாச்சா? 

எப்போ வந்த மீரா? என்ன திடீர் விசிட்?

எனக்கு இப்போ அஞ்சாம் மாசம் ஜெயா. அதான் அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன்.

கங்க்ராட்ஸ் மீரா. நான் கண்டிப்பா இந்த முறை உன்னை வந்து பாக்கறேன்.

அப்பறம்....உன் குரல்ல ரொம்ப சந்தோஷம் தெரியறதே? என்ன விஷயம்? கல்யாணமா? அம்மா, அப்பா சண்டை சரியாச்சா?

சரியாச்சு. அப்பா அன்னிக்கு சந்தோஷமா பேசினதா சொன்னேனி ல்லையா?அன்னிக்கு எனக்காக சம்பந்தம் பேச ஒரு இடத்துக்கு போயிருக்கார் அப்பா. அவங்க எதிரிலே இந்த விஷயத்தைப் பத்திப் பேசினா அபசகுனம் ஆகிடும்னுதான் அப்படி பேசினாராம். அதிலிருந்த நியாயத்தை நானும், அம்மாவும் புரிஞ்சுகிட்டோம். அதோட எங்க தாத்தாவோட பாடியை பணத்தை செலவழித்ததாலதான்  சீக்கிரம் வீட்டுக்கு கொண்டுவர முடிஞ்சுதாம். மேலும் தாத்தாவுக்கு இறுதிச் சடங்கு  செலவு முழுக்க அப்பாதான் செஞ்சாராம். இந்த விஷயத்தை அம்மாவிடம் கூட சொல்ல வேண்டாம்னு அப்பா பாட்டிகிட்ட சொன்னதாலதான் அம்மாவுக்கு எதுவும் புரியாம அப்பா மேல கோபமாக இருந்தாங்க. அம்மாவும் சமாதானமாகிட்டாங்க. அப்பாவோட உயர்ந்த குணம் இப்போதான் எங்களுக்கு புரிஞ்சது. தாத்தாவின் திடீர் மரணம் என் அம்மா, அப்பா ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் காரணமாக அமைந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இப்ப என்னோட ஆசை அப்பா மாதிரி ஒரு நல்ல, மனைவியைப் புரிஞ்சிகிட்ட ஒரு ஆண்தான் எனக்கு கணவரா வரணுங்கிறதுதான்.

நான் அப்பவே சொன்னேனில்லையா? ஏதோ ஒரு காரணத்தால்தான் உன் அப்பா அப்படி நடந்துகிட்டிருக்கார். உங்கப்பா உண்மையிலேயே ஒரு ஜெம்தான். இது போல ஒரு அப்பா கிடைக்க நீ ரொம்பவே கொடுத்து வெச்சிருக்க. உன் ஆசைப்படி கணவர் கிடைக்க வாழ்த்துக்கள்.

'நீங்கள் பணக்காரர் என்பதால்தானே என் அப்பா இறந்தபோது வருத்தப்படவில்லை. பணத்தால் என் அப்பாவை வாங்க முடியுமா?'என்று ஈஸ்வரி கேட்டது அவள் கோபம்.

பிள்ளை வீட்டாரிடம் திருமண விஷயம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது இந்த துக்க செய்தியைச் சொன்னால் அது அபசகுனமாகிவிடும் என்று சமாளித்தது அவருடைய சமயோசித புத்தி.


ஆனால் அந்தப் பணத்தால் மனிதஉயிரை வாங்க முடியாது; ஆனால்  உயிரற்ற அவர் உடலை பணம் இருந்ததால்தான் விரைவில் வாங்க முடிந்ததுடன், மற்ற செலவுகளையும் தன்னால் செய்ய முடிந்தது என்று மகாலிங்கம் சொன்னது அவரது உயர்ந்த குணம்.


அந்தப் பணத்தைக் கொடுத்து தான் உதவியது, யாருக்கும், ஏன் தன்  சொந்த மனைவிக்குக் கூடத் தெரியக்கூடாது என எண்ணியது அவரின் பெருந்தன்மை. 

மாமனார் ஆசியால் தன் மகளின் திருமணம் சுபமாக முடியும் என்று சொன்னது அவரது நம்பிக்கை.


முதலில் கதையைப் படித்தபோது 'இப்படியும் ஒரு மனிதரா' என்று மகாலிங்கம் மேல் ஏற்பட்ட வெறுப்பு பின்பு அவரது நற்குணத்தால் சிறப்பாக மாறியது கதாசிரியரின் அழகிய கதை நடையினால்!

இந்த நல்ல குணங்களைக் கொண்ட ஒரு உத்தமமான மகாலிங்கம் என்ற மாமனிதரை தம் அழகிய சிறுகதை மூலம் நமக்கு காட்டிய ஆசிரியருக்கு பாராட்டுகள் பல. 


பல நேரங்களில் நமக்கு எதிராளி மேல் பட்டென்று கோபம் வருவது, நாம் அவர்களின் சூழ்நிலைகளைப் பற்றி அறிந்து கொள்ளாததால்தான். இருவரும் மனம் விட்டுப் பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டால் பல பிரச்னைகள் மிக எளிதாகத் தீர்வடையும்.


வீடோ, அலுவலகமோ, மனைவியிடமோ, நண்பர்களிடமோ, எந்த சூழ்நிலையிலும் நாம் செய்தது சரியோ, தவறோ அதைப் பற்றி எடுத்துச் சொல்லி விளக்கம் கொடுக்கும்போது இருவருக்கும் இடையிலுள்ள விரோதம் மறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வழி ஏற்படும் என்பதையே இந்தக் கடுகளவு கதை
மூலம் மிக சிறப்பாக, எளிதாக, சொல்லியிருக்கும் ஆசிரியரை எவ்வளவு  பாராட்டினாலும் தகும். 

ஜெயாவின் திருமணம் அவள் அப்பா பார்த்த பையனுடன் அமோகமாக நடக்கப் போவதைக் குறிப்பாக அவளை 'மணமகளாகக் குறிப்பிட்டு சொல்லிவிட்டார் ஆசிரியர்! ஜெயாவுக்கு அவள் தந்தையைப் போன்றே அருமையான கணவர் கிடைக்க நாமும் வாழ்த்துவோம்!


ராதாபாலு 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.

 
   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.

நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி

முதல்பரிசுக்கான தொகை இவர்கள் இருவருக்கும்

சரிசமமாக பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. 

இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.


இணைப்புகள் இதோ:http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17-02-03-second-prize-winners_26.htmlகாணத்தவறாதீர்கள் !
 VGK-01 To VGK-17 


V  ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள்  


 பற்றிய அறிவிப்புகள்  


 தனிப்பதிவாகவே அடுத்த சில மணி நேரங்களில் 


 வெளியிடப்பட உள்ளது.  
 காணத்தவறாதீர்கள் oooooOooooo


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.oooooOooooo


இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 


இணைப்பு: 


கதையின் தலைப்பு:VGK-19' எட்டாக்க(ன்)னிகள் '

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


29.05.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.


என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

22 கருத்துகள்:

 1. முதல் பரிசு பெற்ற இருவருக்கும்
  மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்..!!

  பாராட்டுக்கள்... !

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா27 மே, 2014 அன்று AM 1:53

  முதல் பரிசு பெற்ற இருவருக்கும்
  மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்..!!
  Vetha.Elanagthilakam.

  பதிலளிநீக்கு
 3. எதிர்பார்த்தேன், இவங்க இரண்டு பேரும் அந்த சாதனை நாயகியர் என. இருவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. பரிசு பெற்ற திருமதி. கீதா மதிமாணன் அவர்களுக்கும்,

  திருமதி. ராதா பாலு அவர்களுக்கும்,

  மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா27 மே, 2014 அன்று AM 8:21

  வணக்கம்
  ஐயா.

  தங்களின் இந்த முயற்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியடையச்செய்கிறது வலையுலகம் இரு கடல் அந்த கடலில் பல கலக்கு கலக்கிமிகவும் முத்தான தங்கமீன்களை இனங்காட்டியுள்ளீர்கள்... அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா.

  தங்களின் இந்த பணி மூலம் எமது மொழி ஒரு வளர்ச்சிப்பாதையில் செல்லுகிறது. என்றுதான் சொல்லமுடியும்..தமிழர்கள் வாழட்டும் தமிழ் மொழி வளரட்டும்
  மேலும் பல போட்டிகள் தொடர எனது வாழ்த்துக்கள்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 2008rupan May 27, 2014 at 8:21 AM

   தங்களின் இந்த முயற்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியடையச்செய்கிறது வலையுலகம் இரு கடல் அந்த கடலில் பல கலக்கு கலக்கிமிகவும் முத்தான தங்கமீன்களை இனங்காட்டியுள்ளீர்கள்... அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா.

   தங்களின் இந்த பணி மூலம் எமது மொழி ஒரு வளர்ச்சிப்பாதையில் செல்லுகிறது. என்றுதான் சொல்லமுடியும்..தமிழர்கள் வாழட்டும் தமிழ் மொழி வளரட்டும்
   மேலும் பல போட்டிகள் தொடர எனது வாழ்த்துக்கள்//

   -oOo-

   //தமிழர்கள் வாழட்டும் தமிழ் மொழி வளரட்டும்//

   என்று வாயால் சொன்னால் மட்டும் போதுமா? அதை முதலில் தாங்களே தங்கள் எழுத்துக்களில் தவறேதும் இல்லாமல் எழுதி முறைப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.

   இங்கு தாங்கள் மூன்று வரிகள் மட்டுமே எழுதியுள்ள பின்னூட்டத்தில் நான்கு தவறுகள் உள்ளன.

   தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காக தங்களின் வலைத்தளத்தினில் ஏதோ ஒரு போட்டி நடத்தினீர்கள். நினைவு இருக்கும் என நினைக்கிறேன்.

   அதன் தலைப்பினிலேயே ‘பொங்கல்’ என்பதைப் ’பொங்கள்’ என எழுதி தமிழ்க் கொலையல்லவா செய்து சாதனை படைத்திருந்தீர்கள். போட்டி நடத்திடும் பொறுப்பினில் இருக்க வேண்டிய தாங்களே இவ்வாறு தவறான எழுத்துக்களை அதுவும் போட்டியின் தலைப்பு வரிகளிலேயே போட்டு ’பொங்கள்’ என எழுதினால் எப்படித் தமிழ் வாழும்? எப்படித்தமிழ் மொழி வளரும்?

   சற்றே யோசியுங்கள்.

   முதலில் பின்னூட்டங்களையாவது எழுத்துப்பிழை ஏதும் இல்லாமல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். அதில் நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு போட்டிகள் நடத்திக்கொள்ளலாம்.

   நீக்கு
  2. //தடைகளை தாண்டிய வெற்றிப்படிகள்
   Posted: 02 Jun 2014 08:46 AM PDT

   பாரிசுப் பொருட்கள் தபாலில் அனுப்பட்டுள்ளது. மிக விரைவில் வந்தையும் என்பதை மகிழ்ச்சியாக அறியத் தருகிறேன்

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-//

   -oOo-

   //பாரிசுப் பொருட்கள் தபாலில் அனுப்பட்டுள்ளது. மிக விரைவில் வந்தையும் என்பதை மகிழ்ச்சியாக அறியத் தருகிறேன்//

   பாரிசுப் பொருட்கள் ?????? = பரிசுப்பொருட்கள்

   அனுப்பட்டுள்ளது ???????? = அனுப்பப்பட்டுள்ளன

   வந்தையும் ?????????????? = வந்தடையும்

   மீண்டும் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை தமிழ் எழுத்துக்கொலைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

   நடுவர்கள் குழுவினரும், போட்டியில் கலந்துகொள்வோரும், போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறுவோரும் எப்படித்தான் இவற்றையெல்லாம் சகித்துக் கொள்கிறார்களோ ?

   இந்தப்பேத்தல்களைத்தான்

   ’தடைகள் தாண்டிய வெற்றிப்படிகள்’

   என நினைத்து ஒருவேளை மகிழ்கிறார்களோ ?

   நீக்கு
 6. ஆழமான அற்புதமான அருமையான
  விமர்சனங்கள்
  பரிசு பெற்ற கீதா மதிவாணன் மற்றும்
  ராதா பாலு அவர்களுக்கு மனமார்ந்த
  நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. எனது விமரிசனத்தை முதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும்,ஆசிரியர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

  என்னுடன் அதனைப் பகிர்ந்து கொண்ட திருமதி கீதா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. பாராட்டிய நண்பர்களுக்கு என் பணிவான நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 9. முதல் பரிசுக்குரியதாய் என் விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் எழுத்துத் திறமையை ஒவ்வொருவரிடமிருந்தும் வெளிக்கொணரும் வண்ணம் சிறப்பான போட்டியை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடத்திவரும் கோபு சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. என்னுடன் முதல் பரிசினைப் பகிர்ந்துகொள்ளும் திருமதி ராதாபாலு அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. முதல் பரிசினைப் பெற்ற கீதா மதிவாணன் மற்றும் ராதா பாலு இருவருக்கும் வாழ்த்துக்கள்! இருவருமே திருச்சிக்காரர்கள் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
 11. திருமதி ராதாபாலு அவர்கள்
  http://enmanaoonjalil.blogspot.com/2014/05/blog-post_28.html?spref=fb

  இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 12. இந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  இணைப்பு:
  http://geethamanjari.blogspot.in/2014/06/blog-post_16.html

  தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 13. திருமதிகள் கீதா மதிவாணன் மற்றும் ராதா பாலு இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. பரிசு வென்ற திருமதிகள் கீதாமதிவாணன் ராதாபாலு அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 15. பரிசு பெற்ற திருமதி. கீதா மதிமாணன் அவர்களுக்கும்,
  திருமதி. ராதா பாலு அவர்களுக்கும்,மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 16. பரிசு வென்ற திருமதி ராதாபாலு திருமதி கீதாமதிவாணனவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. திருமதா ராதாபாலு திருமதி கீதா மதிவாணன் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. பரிசு வென்ற சகோதரியருக்கு வாழ்த்துகள். ஆடவர் அணி நாக்(கு)அவுட் ஆகிடுச்சே.;-(((

  பதிலளிநீக்கு
 19. பரிசுபெற்ற இருவருக்கும் பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு