About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, May 18, 2014

VGK 15 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ’அழைப்பு’





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 15 - ’ அ ழை ப் பு  ’


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html




 















 


  





மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து


















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







    

முதல்  பரிசினை 

 வென்றுள்ளவர்கள்  இருவர் 


அதில் ஒருவர்



திருமதி



 ராஜலக்ஷ்மி பரமசிவம்  


அவர்கள்




வலைத்தளம்: “அரட்டை”

rajalakshmiparamasivam.blogspot.com




 



முதல் பரிசினை வென்றுள்ள



திருமதி



 ராஜலக்ஷ்மி பரமசிவம்  


அவர்களின் விமர்சனம் இதோ:







மங்களகரமான  திருமண அழைப்பிதழ் பற்றி எழுதியிருப்பதைப்   படிக்கும் போது, வாசகர்கள் பலரும்  அவரவர் வீட்டில் நடந்த திருமண சம்பவங்களின் தொகுப்பை நினைவடுக்குகளிலிருந்து  உருவி எடுத்திருப்பார்கள்  என்பதில் சந்தேகமேயில்லை. வாசகர்களை மகிழ்ச்சியான மன நிலைக்குக் கொண்டு போகும் ஆசிரியருக்கு முதலிலேயே ஒரு பெரிய ' சபாஷ் '.

அனுபவங்கள்  தான் கதையாய்  மலர்கின்றன போலும்.. " அழைப்பு " படிக்கும்போது இந்த என் எண்ணம் மேலும் வலுப்பெற்றது என்றே சொல்ல வேண்டும். அழைப்பிதழ் நாமே அச்சிட்டு  வினியோகிக்கும்  போது, அதற்குக் கொடுக்கும் மரியாதையும், அதுவே நாம் அந்த அழைப்பிதழை பிறரிடமிருந்து பெறும் போது அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவமும்  வேறு படும். அதை நாம் இல்லை என்று மறுக்க முடியாது. அதையே ஆசிரியரும் அழகியக் கதையாய் பின்னியிருக்கிறார்.

ஆசிரியர் சொல்வது போல், திருமணத்திற்கான வேலைகளை செய்வதற்கு, காண்ட்ராக்டர்கள் இருக்கலாம். ஆனால் அழைப்பிதழ் கொடுக்க வேண்டியது நாம்  தானே. நண்பர் சந்திக்கும் கஷ்டங்கள் மிக அழகாக,  யதார்த்தமாக எடுத்து சொல்லியிருக்கும் விதமே அலாதி தான். அவர் சொல்வது போல் வெளியூரில் இருப்பவர்களுக்கு தபாலில்  அனுப்பி விடலாம். அருகிலிருப்பவர்களுக்கு, நெருங்கிய உறவினர்களுக்கு என்று நேரில் அழைப்புக் கொடுக்க செல்லும்  போது ஏற்படும்  சங்கடங்களை, அழகாய் நேரே பார்ப்பது போல் எழுதியிருப்பதற்குப் பாராட்டியே ஆக வேண்டும்.

பட்டுப்புடைவை நகை நட்டுடன் மனைவியை  அழைத்துக் கொண்டு போய் எல்லோரையும்
அழைக்க மனம் விரும்பினாலும், வயது, டிவி நிகழ்ச்சிகள், என்று பல தடைகளைத்
தாண்டி, நண்பர் அழைப்பு கொடுக்கப் போகும்  நிகழ்ச்சி விவரிப்பு படு 
யதார்த்தம். மாடி, பிளாட், என்று லிப்ட் இல்லாத வீடுகளுக்கு  செல்லும் 
போது படும் அவதிகள், வீட்டில் இருப்பவர்கள், கதவைத் திறக்க 
தாமதாக்குவது, அப்படியே உடனேயே திறந்தாலும், டிவியில் ஒரு கண் வைத்துக் 
கொண்டே,  விளம்பர இடைவேளையில்  நம்மிடம் திருமணத்தைப் பற்றி  விசாரிப்பது 
, அப்படியே அவர்கள் வீட்டு பெண் அல்லது பிள்ளை கல்யாணத்திற்கு அஸ்திவாரம் 
போடுவது  என்று  உலக நடப்பை  அப்படியே கண் முன் நிறுத்தி விட்டார்  
ஆசிரியர். ஆனால்  சங்கடங்களுக்குப் பின்னாடி ஒரு சந்தோஷம் இழையோடுவதை 
வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதமாக எழுதியதற்குப்  பாராட்டுக்கள்!.

முன்னொரு சமயம் கடை நிலை ஊழியராயிருந்த ஒருவர் வீட்டிற்கு சென்ற போது தனக்குக் கிடைத்த வரவேற்பைப்  பற்றியும், அவர் கொடுத்த அழைப்பிதழை எப்படி உபயோகித்தார் என்பது பற்றியும் ஆசிரியர் உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பல வீடுகளில் அழைப்பிதழ்கள் படும்  அவதிகளை  வார்த்தைகளால் சொல்லி மாளாது. அதை உள்ளது உள்ளபடி காட்டியிருக்கிறார் ஆசிரியர். அழைப்பிதழ்களுக்கு வாய் இருந்தால் புலம்பித் தீர்த்திருக்கும். அழைப்பிதழ்களின் உள்ளக் கிடைக்கையை  வெளியிட்டதற்கு நன்றிகள் பல.

அழைப்பிதழுக்கு நடுவில் ஒரு சின்ன வம்பும் வைத்திருக்கிறார் ஆசிரியர். அழைப்பிதழ் கொடுக்கப் போன இடத்தில், போனோமோ, அழைத்தோமா என்றில்லாமல் அதுவும் வீட்டிற்கு உரியவர்கள் இல்லாத நேரத்தில், நண்பர் செய்கிற ஆராய்ச்சி நல்ல நகைச்சுவை. 

முதல் மனைவியா, இரண்டாவது மனைவியா......என்று 
ஆராய்வது............ ம்........ மனித மனத்தின் இயல்பை  பிட்டு பிட்டு 
வைத்து விட்டார் ஆசிரியர் என்றே சொல்ல வேண்டும்.

எத்தனை  சங்கடங்கள் வந்தாலும்,   அதை எல்லாம் சுகமான சுமைகளாக எண்ணி மகிழ்ச்சியுடன் அழைப்பு கொடுக்கிறார் நண்பர் என்று சொல்லும் போது ஆசிரியரின் மகிழ்ச்சியும் அங்கே வெளிப்படத் தவறவில்லை.

திருமண நாளன்று , நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு சென்ற அனுபவத்தை மிகச்
சுவையாக ஒரு ஓவியமாக, வண்ணமாய் தீட்டி விட்டார் என்றே சொல்ல வேண்டும், 
முகப்பில் செண்ட் அடிப்பதில் ஆரம்பித்து, வணக்கம் என்று தெரிந்தவர்கள் 
தெரியாதவர்கள் என்று எல்லோரும் சொல்வது, ..என்று நம்மையும் கல்யாண 
மண்டபத்திற்குள் அழைத்து சென்று விட்டார் ஆசிரியர்.

கல்யாண மண்டபத்திற்குப் போய்  விட்டோம். சரி. யாராவது நம்மை சாப்பிடக் கூப்பிடுவார்களா என்று பார்த்தால். ம்ஹூம்......யாரையுமே  யாரும் கூப்பிடக் காணோமே. அவரவர்களாகவே சென்று சாப்பிடுகிறார்கள். இந்த இடத்தில் 
நம் விருந்தோம்பல் கலாசாரம் மெது மெதுவாக  மறைந்து வருவதை, ஆசிரியர்  
சாடுவதாகவே தோன்றுகிறது  எனக்கு.


அதற்குப் பிறகு நடப்பது  ஒரு சின்ன, ஆனால் செல்லமான சண்டை என்றே சொல்ல வேண்டும். மைத்துனர்களிடையே  நடக்கும் சண்டையை, செல்லச் சண்டை என்று
சொல்ல வைத்தது ஆசிரியரின் சாமர்த்தியம். வீடு என்றால் சண்டை வம்பு  எல்லாமே உண்டு. 

அன்பு இருக்கும் இடத்தில்  தானே உரிமை எடுத்துக் 
கொள்ளலாம். அங்கே தான் கோபப்படவும் முடியும். அப்படித் தான் சண்டை 
சம்பவத்தைக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். சின்ன சின்ன உரசல்கள் சகஜமே 
என்பதைத்தான் ஆசிரியர் சொல்ல விழைகிறார். "குற்றம் பார்க்கின் சுற்றம் 
இல்லை" என்பதை   இந்த சம்பவத்தின் மூலமாக ஆசிரியர் வலியுறுத்துகிறார் 
என்றே நான்  நினைக்கிறேன்.   

இரு பக்கத்திற்கும் சேதாரம் இல்லாமல் 
தீர்ப்பும் சொல்கிறார் ஆசிரியர். ஆனால் தன் நண்பருக்காக காலில் விழுந்து 
மன்னிப்பு கேட்பது  தான் கொஞ்சம் இடிக்கிறது எனக்கு. இந்தக் காலத்தில் 
இப்படி நடக்குமா? சந்தேகமே..... ஆனால் ஔவையார்  தன் நண்பன் பாரி  
வள்ளலுக்காக, பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்ய உதவியது ஏனோ என் 
நினைவிற்கு  வருகிறது.

எப்படியோ திருமணம் பெரிய  சச்சரவில்லாமல்  முடிந்தது திருப்தியே. அதற்குப் பிறகு வருவது தான்  ஆசிரியர் கொடுத்திருக்கும் பன்ச். வளைக்காப்பிற்காக திருமபவும் அழைப்புக் கொடுக்க  வேண்டிய  சூழ்நிலைக்குத் தள்ளப்படப் போகிறார் என்பது நண்பர்களுக்கு மட்டுமல்லாமல், படிக்கும் வாசகர்களுக்கும் மகிழ்ச்சித் தருவதாய் அமைகிறது.

மேலும் பல  மங்கள  அழைப்புகள் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்லாமல், படிக்கும் வாசகர்களுக்கும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

பாராட்டுக்கள் கோபு சார்.
இப்படிக்கு,


Rajalakshmi Paramasivam.










 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








    



முதல் பரிசினையும் வென்று

ஹாட்-ட்ரிக்  பரிசினையும் பெற்றிட

தகுதி பெற்றுள்ள 

மற்றொருவர்


 திரு. ரவிஜி  









மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்

mayavarathanmgr.blogspot.com 






முதல் பரிசினை வென்றுள்ள


புதிய ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்



 திரு. ரவிஜி  


அவர்களின் விமர்சனம் இதோ:





அழைப்பு’ என்ற தலைப்பே எதற்கான அழைப்பு? யாருக்கான அழைப்பு என்ற கேள்விகளை நமக்குள் ஏழுப்பி கதைக்குள் முதலில் நம்மை ‘அழைக்கிறது.
அடுத்த வரியிலேயே கல்யாணத்திற்கான ‘அழைப்பு’தான் என்று நமக்குத்தெரியப்படுத்தி ஒரு சுவாரசியம் கூட்டுகிறது.
“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்ற பழமொழி பலவித வசதிகளும் வந்துவிட்ட இக்காலத்தில் ஏறக்குறைய பழைய மொழி ஆகி, திருமண கான்ட்ராக்டர்கள் பந்தல்போடுவது முதல் கட்டு சோறு கொடுத்து மணமக்களை வழியனுப்புவதுவரை எல்லாவற்றையும் முறையாக செய்துகொடுக்கும் நிலை இருந்தாலும் கூட அழைப்பிதழ் அடித்து அதனை வினியோகித்து திருமணத்திற்கு ‘அழைப்பு’  விடுப்பது எந்த அளவிற்கு சிரமம் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் என்ன இவையே கதையின் கரு.

       மகனுக்குத் திருமணம் செய்பவர்கள் பெரும்பாலும் அறுபதைக் கடந்தவர்கள் என்பதால் உடல் உபாதைகள் படுத்துவதும், மன அமைதிநாடி கோயிலுக்கு செல்வதனை வழக்கமாகக் கொண்டிருப்பதும் யதார்த்தமான ஒன்று. அவ்வாறு கோயிலில் அமர்ந்து தினசரி அனுபவங்களை நண்பருடன் பகிர்ந்துகொள்வது கதை நகரும் முக்கியக் களமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வெளியூரிலிருப்பவர்களுக்கு ரயில் டிக்கெட் பதிவு செய்திட ஏதுவாக முன்கூட்டியே அழைப்பிதழ்கள் அனுப்பி அவற்றை பட்டியலில் குறித்துக் கொள்ளும் அளவிற்கு முறையாகச்செய்தபோதிலும் உள்ளூரில் உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் நேரில் சென்று அழைப்பதில் உள்ள சிரமங்களே திரைக்கதைபோல சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் உள்ளவர்களுக்கு கொடுக்கவேண்டிய அழைப்பிதழ்களை எட்டுதிசைகள் வாரியாக அடுக்கிக்கொண்டு அதன் வினியோகிக்கத் தயாராகின்ற கட்டத்தில்தான் கதை சூடுபிடிக்கத்துவங்குகிறது.
முதலில் கிளம்பும் படலம். மணமகனின் அம்மா காபி, டிபன், டிவி சீரியல் முடித்து கிளம்ப நான்கு மணியாவதும், கிளம்பிய பின்னரும் டிராஃபிக் ஜாம், ஒன்வே, சிக்னலில் நிற்பது, ஏறக்குறைய ஒரேமாதிரியான பேரில் அடுக்குமாடிக்கட்டிடங்கள், அவற்றில் லிஃப்ட் இல்லாதது, இருந்தாலும் மின்வெட்டு மற்றும் இதர ரிப்பேர்களால் இயங்காதது, சுப்ரமணியன் போன்ற பொதுவான பெயர்களில் பலர் இருப்பதால் ஏற்படும் குழப்பங்கள், வாட்ச்மேன்களின் கெடுபிடிகள், நாய்த்தொல்லைகள், பூட்டியிருக்கும் வீடுகள்,… இத்யாதி…இத்யாதி…அப்பப்பா எத்தனை இடர்கள். நிச்சயம் வாசகர் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற சூழ்நிலையில் தாம் பட்ட சிரமங்களை இக்கதை கண்முன்னே நிறுத்தும். (ஆட்டோவில் செல்லும் நிலைமூலம் நடுத்தரவர்க்கக் குடும்பம் என்பது தெளிவாகிறது!)
அடுத்ததாக, பத்திரிக்கை கொடுத்தபின்னர் சிலர் அதனை பிரித்தும் பாராமல் அலட்சியமாக வாங்கி வைப்பது, கண்முன்னாலேயே பத்திரிக்கை மேலே போன் நம்பர்கள் எழுதுவது, பத்திரிக்கையை கையில் வாங்கி வைத்துக்கொண்டு கல்யாணத் தேதி, முகூர்த்த நேரம், மண்டபம் என்று கேள்வி மேல் கேள்விகள். சிலர் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ வரன் கிடைத்தால் சொல்லுமாறு ஜாதகப் பிரதி கொடுப்பது, டிவியில் தன் கவனத்தை வைத்துக் கொண்டு விளம்பர இடைவேளையில் வேண்டா வெறுப்பாகப் பேசி அனுப்பும் மனிதர்கள், தூக்கம் கெட்டது என எரிச்சலை முகத்தில் காண்பிப்பவர்கள், வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் தொ(ல்)லை பேசியில் அல்லது அலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பவர்கள், திருடர் பயத்தில் கதவையே திறக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பவர்கள்….உஸ்ஸ்ஸ்ஸ்…அப்பப்பா மனிதரில் எத்தனை நிறங்கள் என்று வாசகனையே அங்கலாய்க்கவைத்துவிடுகிறார் ஆசிரியர். வந்தவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீராவது தருபவர்கள் ஐந்து சதவிகிதமே என்று நொந்துகொள்ளச் செய்தும் விடுகிறார்.
இதற்கு இடையில் இரட்டைப் பெண்டாட்டிக்காரரின் வீட்டிற்கு அழைப்பு கொடுக்க சென்றபோது காணும் மூன்றாவது பெண்மணி யாரென்று கேள்விக்கு விடைகிடைக்காமல் திரும்புவது, ஆட்டோவுக்கு செய்யும் அதிகப்படியான செலவு, என்று அழைப்பு அனுபவங்கள் எல்லாவற்றையும் கோயிலில் நண்பரோடு பகிர்ந்துகொண்டு ஆறுதல் படுகிறார். அத்தோடு முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாகஅழைப்புகளை வினியோகிக்கும் வேலையைத் தொடர்கிறார்.
காலங்கள் மாறினாலும் சில விஷயங்கள் மாறுவதில்லை என்பதற்கு  நல்லுதாரணங்களாய், சந்தனம், கல்கண்டு கொடுத்து, பன்னீர் தெளித்து, பத்தாததற்கு ரோஜா மணத்தினை அளிக்கும் சென்ட் ஸ்ப்ரேயர் அமைத்து அருமையான வரவேற்பு அளிக்கப்படுகிறது.  திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஷோ ரூமே வரவேற்புதானே!

அடுத்ததாக விருந்து. திருமணத்திற்கு வருவோரில் பலரும் நேராக விருந்து நடைபெறும் இடத்திற்கே நேரடியாக சென்று விருந்தினை உண்டுவிட்டு அந்த வேலைமுடிந்ததும் நேரடியாக மணவறைக்குச் சென்று அன்பளிப்பினையோ அல்லது மொய்ப்பணத்தினையோ மணமகன்/மணமகள் கையில்கொடுக்கும்பொழுது, போட்டோ மற்றும் வீடியோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு நடையைக்கட்டும் நடைமுறையே இப்போதெல்லாம் காணப்படுகிறது.  மற்றசிலரோ, விருந்து முடிந்ததும், வேறு தெரிந்த நபர் எவர்கையிலாவது அன்பளிப்பினைக்கொடுத்து சேர்ப்பிக்கச்சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவதும் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சற்றே தூரத்து உறவினர்களில் ஆண்களென்றால், ஊர்வம்பிலோ அல்லது அரசியல் அரட்டையிலோ ஈடுபடுவதும், அதுவே பெண்களென்றால், நகைகள், மேட்சிங் ப்ளவுஸ், டிவி சீரியல், இதுகுறித்த பேச்சாக இருப்பதும் சுவைபடச் சித்தரிக்கப்பட்டுள்ளது.  இதனூடே மிகவும் தெரிந்ததுபோல் வணக்கம் சொல்லும் மனிதர்கள் குறித்த நகைச்சுவையான சித்தரிப்பும் உள்ளது!

       இதுவரை சரிதான், பத்திரிக்கை வைத்த பெரியவரிடம் விசாரித்துவிட்டு சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்றால் அவர் எங்கே? சினிமாவில் கேமரா ஒவ்வொரு அறையாக தேடுவது மனக்கண்ணில் எழுகிறது.  ஆமாம்… அவர்தான் எங்கே?

 திருமண நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடக்கும் நேரத்தில் மணமகனின் அப்பாவை எங்கே எங்கே தேடியும் கிடைக்காமல் அவரது மனைவியிடம் ‘சார் எங்கே’ என்று கேட்கும்பொழுது கதை உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருப்பதை நம்மால் உணரமுடிகிறது. அப்பொழுது அவரது மனைவி வெளிப்படுத்தும் ‘எங்காத்து’ மனுஷா என்றாலே சற்று கம்மிதான் இவருக்கு – என்ற எண்ணக்கிடக்கை, திருமணமாகி எத்தனை வருடமானாலும் இந்த விஷயங்கள் அடிமனதில் ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டிருப்பது கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது புன்னகையை வரவழைக்கிறது.

மணமேடைக்குப்பின் இருக்கும் மணமகன் அறையில்தான் அவர் இருக்கிறார் என்றறிந்து அங்கே சென்று பார்த்தால்….பெரிய்ய்ய்ய்ய பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது!     மணமகனின் மாமா முகத்தைத்திருப்பிக்கொண்டு, முதுகைக்காட்டியபடி அமர்ந்திருக்கிறார்.  தாய்மாமனின் உரிமை, அவருக்குத் தரப்படவேண்டிய முக்கியத்துவம் குறைந்ததான எண்ணம் அவருக்கு ஏற்பட்டதால், அவர் வெளிப்படுத்தும் கோபத்தின் உச்சகட்டம், இவை எல்லாமே அவர் உட்கார்ந்திருக்கும் நிலையினைக்கொண்டே புரியவைப்பதான அற்புதக்காட்சி அமைப்பு! அருமை! இந்த உச்சகட்ட நிலைமையில் அடுத்து யார் என்ன செய்வது? வாசகனின் தலைக்கு மேலே பல கேள்விக்குறிகள்!

அந்த நேரத்தில்தான் கதைசொல்லியான இரண்டாவது கதாநாயகனின் நுழைவு நுழைவு.  நேரே மணமகனின் அப்பாவிடம் சென்று, ”என்ன ஸ்வாமி உம்மை எங்கேயுமே காணுமேன்னு தேடிண்டு இருக்கேன். இங்க என்ன பண்றேள்? ஆமாம் இந்த ஸார் யாரு?” என்கிறார்.

அதற்கு பதிலாக.
     ”இந்த ஸார் தான், என் மச்சினர். மும்பையிலிருந்து என்னுடன் சண்டை போட மட்டுமே, ப்ளேன் பிடித்து வந்திருக்கிறார்; நீரே நியாயத்தைச் சொல்லும்;  நானும், இவர் தங்கையும் இப்போது இருக்கும் உடம்பு நிலையில், மும்பைக்கு நேரில் இவர் வீட்டுக்குப்போய் பத்திரிக்கை கொடுத்து அழைத்து வர முடியுமா?  சொன்னால் புரிந்து கொள்ளாமல் மிகவும் கோபமாக இருக்கிறார். சுபகார்யங்கள் நல்லபடியாக அடுத்தடுத்து நடக்கணுமேன்னு எனக்கு ஒரே கவலையா இருக்கு” என்கிறார் மணமகனின் அப்பா.”

     ஒருசில வரி வசனங்களிலேயே, நிலவும் சூழ்நிலைக்கு என்ன காரணம் என்ற செய்தி மிகவும் அருமையாக சொல்லப்பட்டுவிடுகிறது. உறவினர்கள் எவராவது தலையிட்டால் சம்பந்தப்பட்ட மணமகனின் தாய் மாமன் எவ்வாறு சமாதானமடைவார்? அது மேலும் மேலும் ப்ரச்சனையை பெரிதாக்குமே தவிர சரிசெய்யமுடியுமா? இங்கேதான் வருகிறது கதையின் அதிமுக்கியத்திருப்பம்.

    மணமகனின் அப்பாவைப் பார்த்துக் கண்ணடித்தவாறே, “என்ன இருந்தாலும் சொந்த மச்சினர். மனைவியோடு கூடப்பிறந்த ஒரே அண்ணா. உம்ம பையனுக்கு, ஊஞ்சலுக்கு மாலை எடுத்துத் தரவேண்டிய சொந்தத் தாய் மாமா; அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கு? இங்கே இருக்கிற மும்பைக்குப் போய் நேரில் அழைக்காமல் விட்டது நீர் செய்த மிகப்பெரிய தப்பு ஸ்வாமி ...... சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீரும் ...... நீர் செய்தது மிகவும் அயோக்யத்தனம்; மனசு இருந்தால் நீங்களும் மாமியும் ப்ளேன் பிடித்துப்போய் ஒரே நாளில் அழைத்து விட்டுத் திரும்பியிருக்கலாம். மும்பை என்ன, வெளிநாடா! பாஸ்போர்ட் விசா எல்லாம் வாங்கணுமேன்னு கவலைப்படுவதற்கு. ப்ளேன் ஏறினால் இங்கிருந்து ஒரு மணி நேரப்பயணம். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானே உங்களுடன் மும்பை வரை துணைக்கு கூட வந்திருப்பேன்; நான் மட்டும் உங்கள் மச்சினராக, இந்த ஸாரோட நிலைமையில் இருந்திருந்தால், நடக்கிறதே வேறு; நேரில் வந்து அழைக்காத இந்தக் கல்யாணத்திற்கு வந்திருக்கவே மாட்டேன்;   ஏதோ இருந்து இருந்து இருப்பதே ஒரே ஒரு மறுமான் (மறுமான்=சகோதரியின் பிள்ளை) அவனுக்குக் கல்யாணம்; நாம் போய் கலந்து கொள்ளாவிட்டால் நன்றாக இருக்காது, என்று பெரிய மனசு பண்ணி, ஸார் வந்திருக்கிறார், தெரியுமா?” என்று சற்றே உரத்த குரலில் கூறி தாய்மாமனை முதலில் தன் கட்சியில் சேர்த்துக்கொள்கிறார் இரண்டாம் கதாநாயகரான கதை சொல்லி.

     மணமகனின் ‘தாய்’மாமனாக இருந்தபோதும், இவரே முன்னின்று அனைத்து வேலைகளையும் செய்யவேண்டிய நிலையில் இருந்தபோதும் ‘ஈகோ’ காரணமாக, அவரே செய்யவேண்டிய கடமைகளைக்கூட செய்யாமல் அனைவரின் கவனத்தையும் கவரும் விதமாக ‘முறுக்கி’க்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். இப்படித் தன்னையே ‘பெரும்’ஆளாக நினைத்துக்கொண்டு இடைஞ்சலாக இருப்பவரை எப்படி சரி செய்யலாம்? இங்கேதான் வெளிப்படுகிறது உண்மை நட்பு!  தாய் மாமன் எனும்‘பெரும்’ஆளை அந்த காக்கும் கடவுளான ‘பெருமாளாகவே’ மனதில் வரித்து காலில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துமன்னித்தருளுமாறு நண்பருக்காக மன்னிப்புக் கேட்கிறார்.  (மணமகனின் தந்தை அல்ல, கதைசொல்லியே உண்மைக் கதாநாயகன் என்று இவ்விடத்தில் சொல்லாமல் சொல்கிறார்.) 

     அவ்வளவுதான்! சூழ்நிலையே தலைகீழாக மாறிவிடுகிறது.  கோபம் தணிந்த தாய் மாமன், ராமன் - விபீஷணனை கட்டி அணைப்பதுபோல கட்டியணைத்து நட்பாகி, திருமணத்தின் முக்கியச்சடங்குகளில் ஒன்றான காசியாத்திரைக்கு தேவையானவற்றில் மூழ்கிவிட, பின்னர் ஒன்றொன்றாக திருமணச்சடங்குகள் எல்லாம் சிறப்பாகவே நடந்து முடிகிறது. முடிந்த கையோடு, மருமகனையும் அவன் மனைவியையும், தேன் நிலவுக்கு தனது ஊரான மும்பைக்கு வருமாறு ‘அழைப்பு’விடுக்கிறார். உடன்வர விருப்பம் தெரிவிக்கும் மைத்துனரை சீமந்தத்திற்கு  ‘அழைப்பு’ கொடுக்க நேரில் (அப்பொழுதாவது) வருமாறும், அப்பொழுது நண்பரையும் (அங்கேயும் பஞ்சாயத்தா?!) உடன் அழைத்துவருமாறும்  அவருக்கும் சேர்த்து ‘அழைப்பு’ விடுக்கிறார்.

    அனைவரின் வாழ்க்கையிலும் ‘அழைப்பு’கள் தொடரும் – இறுதியாக ஒரு அழைப்பு வரும் வரையிலும். கதாசிரியரே தன்னைத்தானே பாத்திரப்படுத்திக்கொண்டு, நட்பிற்கு உதாரணமாக - சிக்கல் வரும் வேளையில் அதனை சரிப்படுத்தி, கூடவே அற்புதமான (ஓவியர் கோபுலுவின் படங்கள் மற்றும் புகைப்படங்கள் மூலமாக) கல்யாணக் காட்சிகளை கண்முன்னே நிறுத்தி (பாலகுமாரன் மற்றும் ஆர்தர் ஹெய்லி ஆகிய எழுத்தாளர்களை ஒத்த காட்சி அமைப்புகளின் மூலம்), ‘ஹம் ஆப் கே ஹைன் கோன்’ ஹிந்தி திரைப்படத்தைப்போல ஒரு முழுமையான திருமணத்திற்கே சென்றுவந்த உணர்வினையும் ஏற்படுத்தி கதையை சுபமாக முடித்துவைக்கிறார்.

வாசகனை ஈர்த்து, இந்தக்கதையை படிக்க விருப்பம் ஏற்படுத்தி, சுபமான முடிவுடன் இந்தக் கதையை முடித்துவிட்டு தன் மற்றகதைகளையும் வாசகர்கள் படிக்கவேண்டும் என்ற மறைகமான ஆர்வத்தைத்தூண்டி கதாசிரியர் விடுக்கிறார் ஒரு மவுன ‘அழைப்பு

 










மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.






    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.






நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது
.




இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

இணைப்புகள்:

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-15-02-03-second-prize-winners.html



காணத்தவறாதீர்கள் !






 ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள்  


 பற்றிய அறிவிப்புகள்  


 தனிப்பதிவாகவே நாளைய தினம் 


 வெளியிடப்பட உள்ளது.  






அத்துடன்



’விமர்சனங்களுக்கான 


விமர்சனம்’ 




 என்ற தலைப்பில் 


உயர்திரு நடுவர்  


 அவர்களின் குறிப்பு 


 இடம்பெற உள்ளது. 


 அந்தக்குறிப்பு விமர்சனதாரர்களுக்கு 


 மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  



 காணத்தவறாதீர்கள் ! 



oooooOooooo


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



VGK-18


 ஏமாற்றாதே !  ஏமாறாதே !! 



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 

22 . 05 . 2014



இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.










என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

20 comments:

  1. முதல் பரிசை வென்று பகிர்ந்து கொண்ட திருமதி ராஜலக்ஷ்மி, மற்றும் திரு ரவிஜிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. முதல் பரிசினை வென்றுள்ள திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. அழைப்பு என்கிற கதைக்கு அழைப்பையே பிரதானமாகக்கொண்டு வித்தியாசமான விமர்சனம் எழுதி முதல் பரிசினையும் வென்று ஹாட்-ட்ரிக் பரிசினையும் பெற்றிடதகுதி பெற்றுள்ள
    திரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. முதல் பரிசும் ஹாட்-ட்ரிக் சாதனையும் புரிந்த திரு. ராவிஜி ரவி
    அவர்களுக்கு பாரட்டுக்கள் ! !

    முதல் பரிசினை வென்று அதை திரு. ராவிஜி ரவியுடன்
    பகிர்ந்துகொண்ட திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம்
    அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் !

    ReplyDelete
  5. பரிசு வென்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எனக்கு வாழ்த்து தெரிவித்த தெரிவிக்க இருக்கின்ற அனைவருக்கும், வாய்ப்பளித்த வை.கோ. ஐயா அவர்களுக்கும், நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  6. http://mayavarathanmgr.blogspot.in/2014/05/vgk_18.html
    திரு. ரவிஜி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்] அவர்கள்

    இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  7. எனக்கு வாழ்த்து தெரிவிக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என்னுடன் முதற் பரிசை வென்றுள்ள திரு ரவிஜி அவர்களுக்கு எனது இனிய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..
    பரிசு பெற வாய்ப்பளித்த கோபு சார் அவர்களுக்கும் என் விமரிசனத்தை பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  8. பரிசு பெற்ற ராஜலக்ஷ்மி அவர்களுக்கும், ரவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து முதலாம் பரிசினை வென்றிடவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. முதல் பரிசு பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் திரு ரவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/05/blog-post_19.html
    திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்

    இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  11. வித்தியாசமான இரு விமர்சனங்கள் மூலம் முதல் பரிசுக்குரியவர்களான திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திரு. மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. முதல் பரிசை வென்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திரு. மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  13. பரிசு வென்ற திருமதி ராஜலஷ்மிபரமசிவம் திரு ரவிஜி க்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  14. முதல் பரிசை வென்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திரு. மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 29, 2015 at 3:15 PM

      //முதல் பரிசை வென்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திரு. மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ ! :)

      Delete
  15. பரிசு வென்ற திருமதி ராஜலட்சுமி பரமசிவம் திரு ரவிஜிஅவங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. திருமதி ராஜலட்சுமிபரமசிவம் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள். இருவரது விமரிசனமும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  17. // அன்பு இருக்கும் இடத்தில் தானே உரிமை எடுத்துக்
    கொள்ளலாம். அங்கே தான் கோபப்படவும் முடியும். அப்படித் தான் சண்டை
    சம்பவத்தைக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். சின்ன சின்ன உரசல்கள் சகஜமே
    என்பதைத்தான் ஆசிரியர் சொல்ல விழைகிறார். "குற்றம் பார்க்கின் சுற்றம்
    இல்லை" என்பதை இந்த சம்பவத்தின் மூலமாக ஆசிரியர் வலியுறுத்துகிறார்
    என்றே நான் நினைக்கிறேன். // விரும்ப வைத்த விமர்சன வரிகள்..

    ReplyDelete
  18. பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

    ReplyDelete
  19. அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

    ‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

    https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

    மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

    http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

    http://gopu1949.blogspot.com/2014/10/4.html

    http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete