About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, May 24, 2014

VGK-16 - EQUAL PRIZE WINNERS - LIST 1 of 3 - ’ஜாதிப்பூ’





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 16 - ’ ஜா தி ப் பூ ‘


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html



 


 எல்லாமே வயிற்றுப்பாட்டுக்குத் தான். 

 பூ விற்பவர்களில் வயதானவர்கள் என்றும் உண்டு;  

இள வயசுக்காரர்களும் உண்டு. 

 இளவயதினரிடம் பூ வாங்கும் கூட்டம் குவிவதையும்--- 

 வயதானவர்கள் வியாபாரம் சுணங்கிப் பரிதவிப்பதையும்- 

 பார்த்த பரிதாபத்தில் கதாசிரியர் 

மனத்தில் பூத்த கதையோ இது!.... 



 


 



  



  




மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  





ஆறு 
[ SIX ] 






நடுவர் அவர்களின் 


தீர்ப்பு + வழிகாட்டுதல்களின்படி


இந்தச்சிறுகதை விமர்சனத்திற்கான


மொத்தப்பரிசுத் தொகை


தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 


ஆறு விமர்சனங்களுக்கும்


சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.



இந்த ஆறு விமர்சனங்களும்



சமமான பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பினும்



பதிவின் நீளம் கருதி தினமும் இருவரின் 


விமர்சனங்கள் வீதம் மட்டுமே



வெளியிடப்பட உள்ளன. 








இந்தப் பரிசுகளை சரிசமமாக வென்றுள்ள  


இந்த ஆறு விமர்சகர்களுக்கும்



நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 




  

          

  

 

                  

 
          

           


'இந்தக் கதை விமரிசனப் போட்டிக்கு அறிமுகமாகி 
முதல் தடவையாக பரிசு பெற்றோருக்கு 
அவர்கள் மென்மேலும் 
பல பரிசுகளைப் பெற என் வாழ்த்துக்கள்'






  


மற்றவர்களுக்கு: 







    


[ 1 ]






திருமதி


 ருக்மணி சேஷசாயீ  

அவர்கள்

‘ பாட்டி சொல்லும் கதைகள் ’

chuttikadhai.blogspot.in

’ மணிமணியாய் சிந்தனை ’

rukmaniseshasayee.blogspot.in


 






திருமதி


 ருக்மணி சேஷசாயீ  

அவர்களின் விமர்சனம் இதோ:






ஒரு  சிறுகதை எழுதுவது என்பது மிகவும் சிரமமான காரியம்.

கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டும் அருமையான காரியம்.


கடுகு என்னும் சிறுகதைக்குள் கடல்போலும் கருத்துக்களைத் 


தந்து சமூக விழிப்புணர்ச்சி ஊட்டுவதே சிறுகதையின் நோக்கம். 


அந்த நோக்கத்தை சீரோடு செய்துள்ளார் ஆசிரியர். இதன் 


தலைப்புக்கூட பொருத்தமாகக் கொடுத்திருப்பது மிகவும் 


சிறப்பு. பூவிலுமா ஜாதி என்பதிலிருந்து ஜாதிபேதத்தால் 


சமுதாயம் எவ்வளவு சீர்கெட்டுள்ளது என்பதைக் காட்டுகிறார். 

அதை உடைத்தெறியும் கதாநாயகன் நமது 


உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார்.



ஒரு கதைக்குண்டான கதைக் கரு சிறப்பாக அமைந்துள்ளது. 

ஜாதியையும் அந்தஸ்தையும் பாராமல் நல்ல உழைப்புக்கும் 

அழகுக்கும் கதைநாயகனாக வரும் வாலிபன் மதிப்புக் கொடுத்து 


அவளை மணக்க நினைத்தது நல்ல கதையமைப்பு. 


கதையைக் கொண்டு போயிருக்கும் விதமும் ரசிக்கும்படியாக உள்ளது.

ஒரு கதையைப் படிக்கும்போது எதிர்பார்ப்பு என்று 
ஒன்று இருக்கவேண்டும். அந்த உத்தி இந்தக் கதையில் நன்கு 
கொடுக்கப் பட்டுள்ளது. யாரேனும் அந்தப் பூக்காரப் 
பெண்ணை காதலிப்பார் என்று எதிர்பார்த்ததை 
இல்லாமலேயே கதையை நகர்த்தியிருக்கிறார் ஆசிரியர். 
காதலை வெளியே சொல்லாமல் கதாநாயகன் பூக்காரியை 
மணப்பதாக நாகரீகமாகப் பாட்டியிடம் சொல்லியிருப்பது   
இக்கால இளைஞர்களுக்கு அறிவு புகட்டும்  சிறப்பான இடம்.

மேலும் கதையை பெரும் முடிச்சு எதுவும் இல்லாமலேயே ஆற்றோழுக்காகக் கொண்டு போன விதம் சிறப்பு. அதுவும் பூக்காரப்பெண் அந்தப் பூக்காரப் பாட்டியின் பேத்தி என்பது கடைசியில் தெரியும்போது ஆச்சரியம் உண்டாகிறது. இதில் அந்தப் பெண்ணால் பாட்டிக்கும் அவளுக்கும் சண்டை மூளும் என்று நினைத்தால் கதையின் போக்கு நமது புருவத்தை உயர்த்தச் செய்கிறது. கடைசியில் இன்னும் கதை இருக்கிறது என்று படிக்கப் பார்த்தால் கதை முடிந்துவிட்டது என்பது நம்மை ஏப்ரல் முட்டாள்  ஆக்கிவிட்டது என்பதும்  தெரிகிறது.

கதையில் மேலும் ஒரு புதுமையாக யாருக்கும் பெயரே சூட்டாமல் கதையை நகர்த்தியிருக்கிறார். 

ஆனால் இந்தக் கதையை இன்னும் சற்று  விரிவாக எழுதியிருக்கலாம். சமுதாய விழிப்புணர்ச்சியூட்டும் கருவை மிகச் சிறிய கடுகுக்குள் அடக்கிவிட்டார். 

ஒரு சிறந்த சிறுகதையைப் படித்த திருப்தி கிடைத்தது. அழகிய படங்களும் மெருகூட்டுகின்றன.

 








மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








     



[ 2 ]


திருமதி



 இராஜராஜேஸ்வரி  


அவர்கள்






http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"




 






மூன்றாம் முறையாகக் கிடைத்த

 ஹாட்-ட்ரிக் பரிசினை மேலும் 

தொடர்ந்து ஐந்தாம் சுற்றிலும் 

தக்க வைத்துக்கொண்டு முன்னேறியுள்ள


திருமதி.



 இராஜராஜேஸ்வரி  




அவர்களின் விமர்சனம் இதோ:

 

பூக்களை விட அந்தப் பூக்காரி நல்ல அழகு. மறக்கமுடியாமல் மணம் பரப்பும் ஆரம்ப வரிகளே அமர்க்களமாய் பலவகை மலரின் இனிய நறுமணங்களை நுகர்ந்தவாறே ஒரு பூஞ்சோலையில் நுழையும் உணர்வை கொண்டுவரும் திறமை ஆசிரியருக்கே கைவந்த கலை போலும்...

கட்டிவைத்த அழகிய பூச்சரங்களும்,  பூச்சரங்களுக்கு சவால்விடும் அழகுப்பெண்ணின் படமும், சரியான நேரத்தில் ஒலிக்கும் ஆலயமணியும், இசைக்கும் மங்கல வாத்தியங்களும், கதையிலும் சூழ்நிலையிலும் ஒன்றிப்போக துணைபுரிகின்றன.. 

ஆசிரியரின் படத்தேர்வின் தனித்திறமையைப் பறைசாற்றுகின்றன..!

ஒரே வார்த்தை ஓஹோன்னு வாழ்க்கை என்பதுபோல அதுவரை பேராண்டி பேராண்டி என்று அன்போடு அழைத்துவந்த பாட்டி தான் பெண் வீட்டிற்கு எந்த செலவும் வைக்காமல் அந்தப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தயக்கத்துடன் தெரிவித்ததும் மாப்பிளே என்ற வார்த்தையில் அத்தனையையையும் உணர வைக்கும் நேர்த்தி வியக்கவைக்கிறது.. 

சிறுவயதிலிருந்து பாட்டியோடு பேசி பூக்களின் பெயர்களை தெரிந்து கொண்டதோடு மனிதர்களின் ஜாதியை ஒப்புக்கொள்ளாத புரட்சியாளனாக, பாட்டிக்கு மழை நேரத்து ஆபத்பாந்தவனாக, உடல்நலமில்லாத போது உபசரிப்பவனாக, தான் வாங்கிய மதிப்பெண்கள், பெற்ற உத்தியோகம் எல்லாம் பகிர்ந்துகொண்டு உறவாடுபவனாக உண்மையான பக்தியும் ஒழுக்கமும் உடையவனாகத்திகழ்பவனை - எல்லாவற்றிற்கும் மேலாக பேத்தி பூ விற்க வேண்டாம் என கேட்டுக்கொள்பவன்- பள்ளம் நோக்கிப் பாயும் வெள்ளம் போல் பாட்டியின் மனதில் நிறைவதில் ஆச்சரியமென்ன இருக்கிறது..!

எங்கும் வளையாமல் நெளியாமல் சஸ்பென்ஸ் வைக்காமல் திடுக்கிடாமல் நெர்க்கோட்டில் பயணிக்கும் கதை மனதை மகிழ்விக்கிறது..

பதினாறும் நிறைந்து பதினெட்டுவயதும் தாண்டாத பருவமங்கை காதல் பசியூட்டி .... வசமாக்கும் ரதியின் தங்கை.... ஜாதி மல்லி பூச்சரமாய் சங்கத்தமிழ் பாச்சரமாய் மனம் கவரும் மங்கை அவள்...

உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்த கையோடு ஒரு மாதம் மட்டும் சவாலாக அந்த பூக்காரப்பாட்டியின் பேத்தி என்பதை யாருக்கும் சொல்லக்கூடாது என்கிற நிபந்தனையோடு ஜொள்ளர்களின் தொல்லைகளைப் பொருட்படுத்தாமல் சாமார்த்தியமாக பூவியாபாரத்தில் காரியத்தில் கண்ணாக குறைந்த நேரத்தில் பூக்களை விற்று கைநிறைய காசுடன் நடைபோடும் விளையாட்டாக பூவிற்க வந்த பேத்தி மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறாள்.. 

கோவிலில் பூ விற்பதை தாழ்வாக எண்ணாமல் அழகான படித்த பெண் தன்னம்பிக்கையுடன் முன் வந்து நடைமுறை சிக்கல்களை தாண்டி வெற்றிகரமாக விரைவில் பூக்களை விற்றுவிட்டு காசு எண்ணும் பாங்கு ஆச்சரியம்தான்.. 

நிஜவாழ்விலோ வருடக்கணக்கில் தேடியும் பொருத்தமான வரன் கிடைக்காதவர்கள் துயரம் சொல்லி மாளாது.. - மாந்தர்கள் தலையில் புரியாத லிபியை எழுதி துயரப்படவைக்கும் அந்த பிரம்மனிடமிருந்து படைப்புத்தொழிலை பிடுங்கிவிடலாம் என எரிச்சல் படுவார்கள்...... இனிமையாக வாழ்க்கை அமைத்துக்கொடுக்கும் இந்த கதையைப்படைத்த பிரம்மாவிடம் கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என ஆதங்கம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை..

ஏற்கெனவே சுப்ரமண்யர் இப்படித்தானே பிரணவம் மறந்த பிரம்மனை தலையில் கொட்டி படைப்புத்தொழிலை பிடுங்கிக்கொண்டார் .. சிவனும் ஆணவம் கொண்ட பிரம்மனின் ஒரு தலையை கிள்ளிவிட்டாரே..

கதாசிரியாரானால் எவ்வளவு எளிமையாக வங்கி வேலை பார்க்கும்  செலவில்லாத அருமையான மாப்பிள்ளையை தேடிக்கொடுத்துவிட்டார்..!

அதுவும் மணி ஒலியும் மங்கலவாத்தியங்களும் சரியான நேரத்தில் ஒலிக்கவைத்து சுபஸ்ய சீக்கிரம் என உணர வைக்கிறார்.

எல்லாம் வல்ல அந்தக் கோவில் அம்பாளின் அனுக்கிரஹம் என்று வியந்து சந்தோஷத்தில் பூத்துக் குலுங்கியது பூக்காரக் கிழவி மட்டுமல்ல பூவே பூச்சூடவா என மங்களமாக பூங்கொத்து கொடுத்து நாமும்தானே வாழ்த்துகிறோம்..

அதுதானே கதையில் ஓங்கி ஒலிக்கும்  வெற்றி முரசு..
நாசியில் கமழும் நறுமணம்.. மனதில் முகிழ்க்கும் சந்தோஷம்..




 











மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.









இந்தப் போட்டியில் சரிசமமாகப் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள் எழுதியுள்ள விமர்சனங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



VGK-19


 எட்டாக்க(ன்)னிகள் !  




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 

29 . 05 . 2014



இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.














என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

22 comments:

  1. 'இந்தக் கதை விமரிசனப் போட்டிக்கு அறிமுகமாகி
    முதல் தடவையாக பரிசு பெற்றோருக்கு
    அவர்கள் மென்மேலும் பல பரிசுகளைப் பெற வாழ்த்துக்கள்'

    ReplyDelete
  2. புதிய பரிமாணத்தை எட்டி இருக்கும்
    பரிசளிப்பு முறை அருமை..பாராட்டுக்கள்..

    எமது விமர்சனம் பரிசுக்குத் தேர்வானதற்கு நன்றிகள்..

    பரிசு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்...



    ReplyDelete
  3. திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்களின் விமர்சனம், திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் விமர்சனம் இரண்டும் அழகான கதைக்கு மலர் கிரீடம் சூட்டியது போல் உள்ளது.
    இருவரும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    மற்றவர்களின் விமர்சனங்களும் ஜாதிப்பூ போல் நறுமணத்தை பரப்பும் என்பதில் சந்தேகமில்லை.
    அனைவரும் வாழ்த்துக்கள்.
    தேர்ந்து எடுத்த நடுவர் குழுவுக்கு வாழ்த்துக்கள்.
    அழகிய கதை எழுதிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்சார்.

    ReplyDelete
  4. பரிசு வென்ற அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகள்! தொடரட்டும் வெற்றிகள்! வாய்ப்பினை அளித்த திரு.வை.கோ. ஐயா அவர்களுக்கும், பரிசுக்கு எனது விமர்சனத்தையும் தெரிவு செய்த நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  5. மூன்று பரிசுகளையும் சமமாய்ப் பகிர்ந்துகொண்ட அறுவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பரிசு பெற்ற அறுவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பரிசுகளை சமமாய்ப் பகிர்ந்து கொண்டதில் போட்டி அதிகமா இருந்திருக்கும் எனப் புரிகிறது. எல்லோருமே திறமையாக எழுதுவதால் நடுவர் பாடும் கஷ்டம் தான். :)

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam May 24, 2014 at 2:55 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பரிசுகளை சமமாய்ப் பகிர்ந்து கொண்டதில் போட்டி அதிகமா இருந்திருக்கும் எனப் புரிகிறது. //

      ஒரே ஒரு போடு போட்டு முழுத்தேங்காயை மிகச்சரியாக இரண்டாக பளிச்சென்று பிளப்பது போல, ஒரே கருத்தினை இளநீர்போல இனிமையாக இங்கு இப்படிப் போட்டு உடைத்து .... ஒருசில உண்மைகளை உள்ளது உள்ளபடியே சொல்லிவிட்டீர்களே .... தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள். ;)))))

      //எல்லோருமே திறமையாக எழுதுவதால் நடுவர் பாடும் கஷ்டம் தான். :)//

      தங்களின் வாய்க்கு சர்க்கரை போடணும். என் சார்பில் தாங்களே சர்க்கரை டப்பாவை எடுத்து போட்டுக்கோங்கோ.

      நடுவர் பாடு மஹா மஹா மஹா மஹா மஹா கஷ்டம் தான் என்று நான் என் மனதில் அடிக்கடி நினைப்பதை தாங்களும் இங்கு அப்படியே சொல்லியுள்ளது, மேலும் என்னை வியக்க வைக்கிறது.

      தங்களின் அன்பான வருகைக்கும் மனம் திறந்த அழகான கருத்துக்களுக்கும், புரிதலுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு [VGK]

      Delete
  8. பரிசு பெற்ற திருமதி. ருக்மணி ஷேஷசாயீ அவர்களுக்கும்,
    திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் பாராட்டுக்கள் !

    ReplyDelete
  9. திருமதி. ருக்மணி சேஷ சாயி அவர்களுக்கும்
    திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கும்
    நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நடுவர் பாடு திண்டாட்டம் என்பது மட்டும் புரிகிறது ஐயா...

    பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்க்கள்...

    ReplyDelete
  11. ” நாட்டாமை தீர்ப்பை மாற்றி எழுது” என்பதற்கேற்ப வித்தியாசமான தீர்ப்பு! பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் ஆறு பேருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. திருமதி ருக்மணி சேஷசாயி மற்றும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் இருவருக்கும் பாராட்டுகள்.

    திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களின் ரத்தினச் சுருக்கமான விமர்சனம் மிகவும் பிடித்தது.....

    தொடரட்டும் பரிசு மழை.

    ReplyDelete
  13. Mail message received from Mrs. Rukmani Seshasayee Madam on 28.05.2014

    [Rukmani Seshasayee 10:01 (3 hours ago) to me ]

    முதல்முறை விமரிசனப் போட்டியில் பங்கு பெற்ற போதே என்னைக் கவுரவித்தமைக்கு மிக்க நன்றி.எனக்கும் பரிசளித்துப் பாராட்டி ஊக்கப் படுத்திய தங்களின் நல்ல உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்போன்ற பரிசு பெற்ற பிற நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -oOo-

    நமஸ்காரங்கள். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  14. திருமதி ருக்மணி சேஷசாயி மற்றும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  15. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  16. திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களுக்கும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete

  17. Jayanthi Jaya October 15, 2015 at 1:31 PM

    //திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களுக்கும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//

    வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

    தங்களின் சற்றே நீண்டகால புனித யாத்திரை நல்லபடியாக நிறைவடைந்து, வெற்றிகரமாகத் திரும்பிவந்து, இன்று இங்கு பின்னூட்டமிடத் துவங்கியுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

    பிரியமுள்ள கோபு அண்ணா

    ReplyDelete
  18. பரிசு பெற்றவங்களுக்கு வாழ்த்துகள் நடுவரவங்க எப்பூடிதா சிறந்த விமரிசனம் செலக்டு பண்ணுறாகளோ. ரொம்ப பொறுப்பான பதவிதா.

    ReplyDelete
  19. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

    என்னுடைய விமர்சனம் தெரிவானதில் மகிழ்ச்சி! பாராட்டிய நல்லிதயங்களுக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete