என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 17 மே, 2014

VGK 15 / 03 / 03 - THIRD PRIZE WINNER - 'அழைப்பு’

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 15 - ’ அ ழை ப் பு  ’


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html
 

 

  

 
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து


இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு:     

மூன்றாம் பரிசினை 

முத்தாக வென்றுள்ளவர் 
திருமதி இராஜராஜேஸ்வரி  


அவர்கள்


http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"
 


முத்தான மூன்றாம் பரிசினையும் வென்றுமூன்றாம் முறையாகக் கிடைத்த

 ஹாட்-ட்ரிக் பரிசினை மேலும் 

தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ள


திருமதி. இராஜராஜேஸ்வரி  
அவர்களின் விமர்சனம் இதோ:

 அமர்க்களாய் அசத்தாலாய் ஆரம்பிக்கிறது அ ழை ப் பு - ஆர்வத்துடன் திருமணை இல்லத்திற்குள் மங்களகரமாய்
அடி எடுத்துவைக்கிறோம் .. முதல் படமே  ஊர்வலமாக
அட்டகாசமாய் திருமண விழாவில் கால்பதிக்கும் உணர்வை ஆசிரியர் ஏற்படுத்திவிடுகிறார்..

சமீபத்தில் பணி ஓய்வுபெற்ற நண்பர் ஒருவரின் மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதில் ஏற்பட்ட அனுபவங்களை காட்சிக்குக்காட்சிக்கு விறுவிறுவிறுப்பாக நேர்முக வர்ண்ணைபோல்  உடனுக்குடன் சுவையாகவும் சூடாகவும் நவரசங்களுடன் பரிமாறும் கதை ஆசிரியரின் திறமை ஆச்சரியப்படுத்துகிறது..!

இன்னாருக்கு இந்த நாளில், இந் இடத்தில் இந்த நேரத்தில் திருமணம் என்று தகவல் சொல்லும் பணிதானே  திருமண அழைப்பிதழின்  தலையாய பணி..

திருமணம் நிறைவடைந்த பின் அது தூக்கி எறியப்பட்டுவிடுகிறது.

அதற்கான ஆடம்பர செவினம் ஆச்சரியப்படுத்துகிறது..

ஈரமஞ்சள் தவிய அழைப்பிதழின் உறையில் அட்சதையோடு மஞ்சள் குங்கும சிமிழ்களோடு, அலங்கார பூஷிதையான மனைவியை அத்திப்பூக்கள் தொலைக்காட்சித்தொடர் முடிந்த கையோடு தார்க்குச்சி போட்டு கிளப்பி ஊர்வலமாகப்போய் திட்டமிட்டபடி எட்டுத்திக்கிலும் அலைந்து அழைத்த அனுபவங்களை உள்ளது உள்ளபடி தினமும் கோவிலில் வந்து பகிந்துகொள்ளும்  நட்பு உன்னதமானது..

திருமண மண்டபத்திற்கு ஆவலாப் போய் பார்த்தால் அந்த நண்பரின் மனைவிக்குமே மனக்குறை -தன் பிறந்தாத்து மனுஷ்யாளை - தன் ஒரே கூடப்பிறந்த அண்ணாவை மும்பையில் நேரில் போய் அழைக்காமல் தபாலில் அழைத்ததை நொடிப்போடு சுட்டிக்காட்டி அலுத்துக்கொள்கிறார்.. திருமணச்சடங்குகளை பட்டியலிட்டு தான் ரொம்பத்தான் பிஸியாக இருப்பதாகவும் பெருமையோடு அங்கலாய்த்துக் கொள்கிறார்..!

நேரிலே போய் அழைத்தவர்கள் அலட்சியத்தை கண்கூடாக வாங்கிக்கட்டிக்கொண்டவர் - இங்கே தன் முதுமை, உடல் நலம் காரணமாக எட்டாக்கையாக மிகத்தொலைவில் இருக்கும் மும்பை சென்று அழைக்காததாலும் வாங்கிக்கட்டிக்கொள்கிறார் .. 

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் என  அழுகையோடு அலுத்துக்கொள்கிறோம் ..

நம் பரிதாபத்தை வகைதொகை இல்லாமல் வாங்கிக்கட்டிக்கொள்கிறார் மணமகனின் தந்தை..!

சமய சஞ்சீவியாக, உடுக்கை இழந்தைவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைய கைகொடுக்கும் நட்பில் ஆசிரியர் உயர்ந்து நிற்கிறார்..

டோட்டல் சரண்டர்தான் ..கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் தண்ணீர் ஊற்றியதுமாதிரி சாஷ்டாங்க நமஸ்காரத்தால் காலில் விழுந்தவர் நம் மனதில் உயர்ந்து  நிற்கிறார்..

வேறு உறவுகளாக இருந்தால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல்  சிறு மனஸ்தாபத்தை ஊதிப்பெரிதாக்கி எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று தங்கள் காரியத்தை சாதித்துக் கொண்டு சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்திருப்பார்களோ என்னவோ..!!?

சரணாகதித் தத்துவம் -பகவத் கீதையின் சாரமாயிற்றே..

அர்ஜுனன் அம்பு இலக்கில் சரியாக தைத்து வீழ்த்துவது போல்  அகங்காரத்தில் சரியாக குறிபார்த்து வீழ்த்திய சமயோசிதமாக பஞ்சாயத்து பேசிய ஆசிரியரின் வாய் ஜாலத்தில் வியந்து நிற்கிறோம் .. 

முசுடு மாமாவை வழிக்குக்கொண்டுவந்து போயும் போயும் இந்த என் தங்கை வீட்டுக்காரருக்கு நீங்கள் நண்பராக இருப்பினும், நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க! எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுருக்கு ஸார்; அவருக்காக இல்லாவிட்டாலும், உங்களுக்காக மட்டுமே, நான் என்னை நேரில் வந்து அழைக்காததை, இந்த நிமிஷத்திலிருந்து பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. நான் இப்போது என்ன செய்யணும்னு சொல்லுங்கோ?”  என்று அப்போதுதான் முதன் முறையாகப்பார்க்கும் கதாசியரை--
சரணாகதி அடைந்த விபீஷணனை ஸ்ரீராமர் கட்டித்தழுவிக்கொண்டதுபோல நொடியில் சட்டென்று சூழ்நிலையின் இறுக்கத்தை தென்றலாக குளிர்வித்து
மகிழ்ச்சி வெள்ளம் பாயவைத்த மாயவித்தை மனம் குளிர்விக்கிறது..

மைத்துனரும் மாப்பிள்ளையும் கலகலகலவென்று சிரித்தவாறு புது வெள்ளமாக துள்ளிக்குதித்து திருமணச்சடங்குகளில் பங்கெடுத்துக் கொள்ள விரையும் போது நீரடித்து நீர் விலகுமா என்ன .. என்று உறவின் மகிமையை உணரவைக்கிறார் ஆசிரியர்..

வீட்டைக்கட்டிப்பார் ..கல்யாணம் பண்ணிப்பார்  என்கிற அனுபவ  மொழியின் விளக்கத்தை கதையின் போக்கிலேயே குழைத்துத் தந்து அசரவைத்திருக்கும் நேர்த்தியான கதை அமைப்பு ..
ஆயிரங்காலத்துப்பயிரான திருமணபந்தத்தை 
மிகப்பிரபலமான சாவி அவர்கள் எழுதிய வாஷிங்டனில் திருமணம் என்ற கதையின் பொருத்தமான படங்களும் மற்ற திருமணப்படங்களும் கதைக்கு மகுடம் சூட்டுகின்றன..!

கதையின் தலைப்பிற்கேற்ப மீண்டும் ஆறுமாதம் கழித்து வளைகாப்பு அழைப்பிற்கு மும்பை செல்லவும் அடித்தளமிட்டு என்றும் தொடரும் அனுபவ அ ழை ப்  பு இது.. 

கலாட்டா கல்யாணம் கலகலகல மகிழ்ச்சி கல்யாணம் ..

 மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
       


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:VGK-18


 ஏமாற்றாதே ! ... ஏமாறாதே ! 
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 

22 . 05 . 2014இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.


என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

17 கருத்துகள்:

 1. எமது விமர்சனத்தை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் , ஆசிரியருக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 2. நல்ல விமர்சனம்... அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. நல்ல விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. ராஜராஜேஸ்வரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அருமையான விமரிசனம்.

  பதிலளிநீக்கு

 5. பரிசு பெற்ற திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு
  பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 6. திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு, எனது இனிய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 7. பரிசு பெற்ற திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நல்வாழ்த்து. மென்மேலும் பரிசுகள் பெற்றிட என்றும் வாழ்த்துகிறேன்...

  பதிலளிநீக்கு
 8. தொடர் ஹாட்-ட்ரிக் பரிசு வெற்றியாளர் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. மூன்றாம் பரிசினை வென்ற திருமதி இராஜராஜேஸ்வரிக்கு என் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. தொடர் ஹாட்-ட்ரிக் பரிசு வெற்றியாளர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 29, 2015 at 3:12 PM

   //தொடர் ஹாட்-ட்ரிக் பரிசு வெற்றியாளர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.//

   :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஜெ ! :)

   நீக்கு
 12. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவங்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 13. திருமதி இராஜராஜேஸ்வரிமேடம் வாழ்த்துகள். வரிக்கு வரி கதாசிரியரின் எழுத்து திறமையை பாராட்டாய் சொல்கிறார்.

  பதிலளிநீக்கு
 14. // கதையின் தலைப்பிற்கேற்ப மீண்டும் ஆறுமாதம் கழித்து வளைகாப்பு அழைப்பிற்கு மும்பை செல்லவும் அடித்தளமிட்டு என்றும் தொடரும் அனுபவ அ ழை ப் பு இது..

  கலாட்டா கல்யாணம் கலகலகல மகிழ்ச்சி கல்யாணம் ..
  // ரசித்தேன். பரிசுக்கு பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு