About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, November 7, 2011

டிஸ்மிஸ்                                  டிஸ்மிஸ்

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்


மிகவும் கறார் பேர்வழியான அந்த அலுவலக மேனேஜர், ஊழியர்கள் பகுதிக்கு திடீர் விஜயம் செய்தார். 

அவர் வருவதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள், அரட்டை அடித்துக்கொண்டும், வீண் வம்பு பேசிக்கொண்டும், வீணாகப் பொழுதைக் கழிப்பதைப் பார்த்ததும், கோபம் வந்து கத்தலானார். 

அனைவர் டேபிள் மீதும் பல்வேறு செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் எனக் குவிந்திருந்தன.

ஒவ்வொருவராகத் தன் அறைக்கு வரவழைத்து, இன்று காலை முதல் உறுப்படியாக என்ன வேலைகள் பார்த்தாய்? எவ்வளவு கதைகள் படித்தாய்? எவ்வளவு ஜோக்குகள் படித்தாய்? என்னென்ன செய்திகள் படித்தாய்? எதைஎதைப்பற்றி யாரிடம் என்னென்ன பேசினாய்? அதைப்பற்றிய உண்மை விபரங்களை மறைக்காமல் கூறவும் என மிரட்டலானார். 

பொய் சொன்னால் அவருக்கு சுத்தமாகப்பிடிக்காது. குறுக்கு விசாரணை செய்து உண்மையை எப்படியும் கண்டு பிடித்து விடுவார் என்பது அங்கு வேலை பார்க்கும் அனைவருமே அறிந்த விஷயம்.

அவரவர்கள் தாங்கள் செய்து முடித்த அலுவலகப்பணிகளை பயந்து கொண்டே விபரமாக எடுத்துக்கூறினர். 

எல்லாவற்றையும் உடனுக்குடன் மேனேஜர் குறிப்பெடுத்துக்கொண்டார்.

விசாரணை முடிவில், மிகவும் சாத்வீகமானவனும், பயந்த சுபாவம் உள்ளவனும், நல்ல பையனும்,  புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தவனுமான ரவிகுமார் மட்டும் எந்தக்கதையோ, கட்டுரையோ, ஜோக்குகளோ, செய்திகளோ படிக்கவில்லை என்றும், யாரிடமும் எந்த அரட்டைப்பேச்சுகளும் பேசவில்லை என்ற உண்மை மேனேஜருக்குப் புலப்பட்டது.

..........
..........
..........
..........
..........


”நீ நம் அலுவலகத்துக்குப் பொருத்தமான ஊழியர் அல்ல” என்று கூறி ரவிக்குமாருக்கு மட்டும் வேலையிலிருந்து டிஸ்மிஸ் ஆர்டர் கொடுத்து அனுப்பி வைத்தார் மேனேஜர்.  

.............
.............
.............
.............
.............
.............
.............

வேலையை இழந்த சோகத்தில் அந்த மிகப்பெரிய பத்திரிக்கை அலுவலகத்தை விட்டு வெளியேறினான், ரவிகுமார்.  


-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-4.ரோஹிணி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:-  
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்.

இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம்ரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.


04/27

38 comments:

 1. மூன்று மீள்பதிவுகள், ஒரு புதிய பகுதி என அசத்தலாகத் தொடங்கி விட்டது தமிழ்மணம் நட்சத்திர வாரம்...

  தொடர்ந்து அசத்துங்கள்....

  ReplyDelete
 2. தமிழ் மணம் அசத்தல் ஆரமபம்.

  ReplyDelete
 3. வேலையை இழந்த சோகத்தில் அந்த மிகப்பெரிய பத்திரிக்கை அலுவலகத்தை விட்டு வெளியேறினான், ரவிகுமார்.


  பத்திரிக்கை அலுவலக்த்திற்கு அரட்டையில் ஆயிரம் விஷ்யங்கள் கிடைக்கும் எழுத.

  படிப்பதில் நிரையா பயன்படும். இந்த இரண்டுன் இல்லாதவர் அந்த அலுவலுக்குத் தகுதி இல்லையே...

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. ரோஹிணி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
  சென்று வழிபட வேண்டிய கோயில்:-

  மிகப்பயனுள்ள தகவலுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. http://jaghamani.blogspot.com/2011/09/blog-post_08.html/

  காஞ்சிபுரத்தில் காட்சியளிக்கும் கருணைக்கடல்//

  இந்தப்பதிவும், பதிவுக்கு சிறப்பளிக்கும் வண்ணம் தாங்கள் அளித்த அருமையான பின்னூட்டங்களும்..

  ரோஹிணி நட்சத்திரம் கொண்டவர்களுக்குப் பயனளிக்கும்..

  ReplyDelete
 6. வித்தியாசமான வகையில் அமைந்த கதை.சுவாரஸ்யத்துடன் அமைந்துள்ளது

  ReplyDelete
 7. ட்விஸ்ட் என்பது ஒரே வார்த்தையில் வருகிறது. நல்ல கதை சார்.

  ReplyDelete
 8. மிகவும் அருமை

  ReplyDelete
 9. கதைமிகவும் நல்லா இருக்கு.

  ReplyDelete
 10. நட்சத்திர வாழ்த்துக்கள் வை.கோ சார்.

  ReplyDelete
 11. அருமையான கதை ...

  ReplyDelete
 12. நட்சத்திர வாழ்த்துகள்.
  நல்ல ட்விஸ்ட்தான்.

  ReplyDelete
 13. வித்தியாசமான, சுவாரஸ்யமான சிறுகதை!

  ReplyDelete
 14. அன்பின் வை.கோ

  கதை அருமை - இயல்பான நடை. நச்சென்ற முடிவு. ட்விஸ்ட் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 15. முன்னரே படித்த நினைவு இருக்கிறது.

  ReplyDelete
 16. த.ம 7
  சுவார்ஸ்யமான முடிவு கொண்ட கதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. எதிர்பாராத முடிவு
  நல்ல திருப்பம்
  அருமை!
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. கதை நல்லா இருக்கு சார்.

  ReplyDelete
 19. சரி நீங்க நட்ச்சத்திர பதிவர் தான்... ஒத்துக்குறேன்... அதுக்காக இப்படியா அங்கங்க நட்சத்திரத்தை கட்டி தொங்க விடுறது...

  ReplyDelete
 20. அருமையாத திருப்பத்துடன் கதை முடிகிறது!

  சிறு வேண்டுகோள், முடிந்த வரை இது போல் உங்களிடம் உள்ள பல நல்ல கதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கள் நிச்சயமாக பரசுரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது!

  ReplyDelete
 21. கதையில் திருப்பம் அருமை.

  ரோகிணி நட்சத்திர கோவில் தகவலுக்கு நன்றி,ஐயா.

  ReplyDelete
 22. மீள் பதிவோ.?முன்பே படித்த நினைவு.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 23. அசத்தல்சிறுகதை.

  ReplyDelete
 24. வேலையை இழந்த சோகத்தில் அந்த மிகப்பெரிய பத்திரிக்கை அலுவலகத்தை விட்டு வெளியேறினான், ரவிகுமார்.//

  பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து கொண்டு கதை, கட்டுரை படிக்க வில்லை என்றால் அப்புறம் டிஸ்மிஸ் தான்.

  அருமையான கதை.

  ReplyDelete
 25. கடைசியில் சொன்னீர்கள் பாருங்கள் பத்திரிக்கை அலுவலகம் என்று. பின்னே செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டிய இடத்தில் நேரத்தில் செய்ய வேண்டாமா? இல்லை என்றால் இப்படி தான்.

  ReplyDelete
  Replies
  1. mageswari balachandran May 11, 2015 at 8:52 PM

   வாங்கோ, வணக்கம்.

   //கடைசியில் சொன்னீர்கள் பாருங்கள் பத்திரிக்கை அலுவலகம் என்று. பின்னே செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டிய இடத்தில் நேரத்தில் செய்ய வேண்டாமா? இல்லை என்றால் இப்படி தான்.//

   சந்தோஷம். 2-3 நாட்களாகத் தங்களைக் காணோமே என்று பார்த்தேன்.

   அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றீங்க!

   Delete
 26. பத்தெரிகை அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கண்ணையுமு காதையும் சுறுசுறுப்பா வச்சுக்க வேண்டாமோ???

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் May 20, 2015 at 10:19 AM
   //பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கண்ணையும் காதையும் சுறுசுறுப்பா வச்சுக்க வேண்டாமோ???//

   அதானே! கரெக்டூ நீங்க சொன்னது. :)

   Delete
 27. BE ROMAN IN ROME

  இது தெரியலைன்னா எப்படி?

  அதான் ரவிகுமார் டிஸ்மிஸ் ஆயிட்டார்.

  ReplyDelete
 28. இந்த ஆளுக்கு டிஸ்மிஸ் கொடுத்தது சரியானதுதா. பத்திரிக ஆபீசு வேலன்னா சும்மாவா. நெறய புக் படிக்கோணும் அக்கம் பக்கம் இன்னா நடக்குதுன்னுபிட்டு கவனிச்சுக்கோணும்ல

  ReplyDelete
 29. இந்த ஆளுக்கு டிஸ்மிஸ் கொடுத்தது சரியானதுதா. பத்திரிக ஆபீசு வேலன்னா சும்மாவா. நெறய புக் படிக்கோணும் அக்கம் பக்கம் இன்னா நடக்குதுன்னுபிட்டு கவனிச்சுக்கோணும்ல

  ReplyDelete
 30. பத்திரிகை ஆபீசில் வேலைக்கு சேரணும்னா நிறய படிப்பறிவை வளர்த்துக்கணும். கண்டது கேட்டதுகளை( தகவல்களை) மனதில் பதிய வச்சுக்கணும். இது எதவுமே இல்லாம பத்ரிகை ஆபீசில் எப்படி வேலை பார்க்கமுடியும்.

  ReplyDelete
 31. புக்க எல்லாம் தலக்கு வச்சுகிட்டு தூங்குனா பத்திரிக்க ஆபீஸ்லேருந்து டிஸ்-மிஸ்ஸ்ஸ்...நியாயம்தானே?

  ReplyDelete
 32. மீள்பதிவு மீண்டும் இனித்தது!

  ReplyDelete