என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 9 நவம்பர், 2011

எல்லோருக்கும் பெய்யும் மழை








எல்லோருக்கும் பெய்யும் மழை

சிறுகதை [ பகுதி 1 +  2  ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



அந்த வங்கியின் காசாளரான வஸந்திக்கு பலவிதமான மன உளைச்சல்கள். பூவும் பொட்டுமாக புது மணப்பெண்ணாக துள்ளித்திரிந்து ஜொலிக்க வேண்டிய அவள், திருமணம் ஆன ஆறே மாதத்தில், சாலை விபத்தொன்றில் கணவனை பறிகொடுத்து விட்டு, அவன் பார்த்து வந்த வங்கி வேலையை, கருணை அடிப்படையில் பெற்றுக்கொண்டு, சின்னஞ்சிறு வயதில் பிழைப்புக்காக உழைக்க வந்து, ஓராண்டு தான் ஆகிறது.

கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு வயதில் ஆறாவது விரலுடன் கூடிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவள் காலடி எடுத்து வைத்த வேளை தான் இப்படி ஆகிவிட்டது என்று தங்களின் ஒரே பிள்ளையை பறிகொடுத்த வேதனையில், புலம்பி வந்த மாமனார் மாமியாருடன் கொஞ்சகாலம் படாதபாடு பட்டுவிட்டு, பிரஸவத்திற்கு பிறந்த வீடு வந்தவள் தான். பிறகு அவர்களும் குழந்தையையும் இவளையும் பார்க்க வரவே இல்லை.

புகுந்த வீட்டுக்கு குழந்தையுடன் வரச்சொல்லி அழைக்கவும் இல்லை. நல்லவேளையாக இவளின் அந்தக் குழந்தையைக் கூடமாட பார்த்துக்கொள்ள ஒண்டிக்கட்டையான இவளது தாயாராவது இருப்பதில் சற்றே ஒரு ஆறுதல்.

வீட்டில் இருந்தால் வேதனை தான் அதிகரிக்கும் என்று ஆபீஸுக்கு வந்தால் இங்கும் பிரச்சனை தான். காசாளர் [Cashier] வேலை என்ன லேசான வேலையா? கொடுக்கல் வாங்கலில் முழுக்கவனமும் இருக்க வேண்டும். அனுபவசாலிகளையே கூட சமயத்தில் காலை வாரி விட்டுவிடும். 


எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் வஸந்திக்கு சமயத்தில் பணம் கையை விட்டுப்போய் நஷ்டமாகி விடுகிறது. மாதக்கடைசி வேறு. இந்தக் காலம்போல் பணம் எண்ணும் மெஷின்கள் எல்லாம் கிடையாது. ஒவ்வொரு நோட்டாக தண்ணி தொட்டு விரல்களாலேயே எண்ண வேண்டும். அழுக்கு நோட்டு, கிழிந்த நோட்டு, செல்லாத நோட்டு, கள்ள நோட்டு என்று நடுநடுவே கூடுதல் தொல்லைகள் வேறு.  

நேற்று மாலை சுளையாக நானூறு ரூபாய் கணக்கில் உதைத்தது. கை நஷ்டப்படுவதுடன் சீஃப் கேஷியரிடமும் மேனேஜரிடம் பாட்டு வேறு வாங்க வேண்டியுள்ளது. உடனே பணம் கட்டமுடியாத சூழ்நிலைகளில், சம்பந்தப்பட்ட காசாளருக்கு சம்பள முன்பணம் (Salary Advance) கொடுத்தது போல கணக்கு எழுதி, அன்றைய அலுவலகக் கணக்கை சரிசெய்துவிட்டு, பிறகு சம்பளத்தில் அந்தத் தொகையைப் பிடித்துக்கொள்வார்கள். 


உண்மையிலேயே பணம் கொடுக்கல் வாங்கலில் தவற விடப்பட்டதா அல்லது மாதக்கடைசியில், குடும்பச் செலவு செய்ய பணப்பற்றாக்குறையை ஈடுகட்ட, நாடகம் ஏதாவது நடத்தப்படுகிறதா  என்று அவர்கள் சந்தேகப்படுவதும் இயற்கையே.

தன்னைச் சுற்றிச்சுற்றி வந்து 10, 20, 50 என்று அடிக்கடி கைமாத்து வாங்கிச்செல்லும், அந்த வங்கியின் அடிமட்ட தற்காலிக ஊழியரான பெண் அட்டெண்டர் அஞ்சலை நேற்று காலை தன்னிடம் வந்து அவசரமாக 200 ரூபாய் கேட்டதையும், தான் தர மறுத்து விட்டதையும் நினைத்துப்பார்த்தாள் வஸந்தி.

பழகிய வரை அஞ்சலையும் நல்லவள் தான். அவள் கணவன் தான், சதா சர்வகாலமும் குடித்துவிட்டு, மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தும் வேலை வெட்டி இல்லாதவன்.

பாவம் அஞ்சலை. முப்பது வயது முடிவதற்குள் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள். இவள் ஒருத்தியின் மிகக்குறைந்த சம்பளத்தில் ஆறு உயிர்கள் வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு. பண நெருக்கடியால் ஒரு வேளை அஞ்சலை நம் கவனத்தை திசைதிருப்பி, ஏமாற்றி பணம் ரூபாய் நானூறை தன் மேஜையிலிருந்து எடுத்துப்போய் இருப்பாளோ?

ஆனால் தானும் கூடமாட தொலைந்த பணத்தைத் தேடுவது போல நேற்று மாலை வெகு நேரம் என்னுடனேயே இருந்து, என்னருகே கேபினுக்குள் இருந்த குப்பைத்தொட்டியைக் கிளறி, ரூபாய் நோட்டுக்கள் ஏதாவது பறந்து அதில் போய் விழுந்துள்ளதா என குனிந்து நிமிர்ந்து ஆராய்ந்து, என் வருத்தத்தில் பங்கேற்றுக் கொண்டாளே, அஞ்சலை!

எதற்கும் இனி அவள் விஷயத்தில் சற்று உஷாராகவே இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள், வஸந்தி.


மறுநாள் விடியற்காலம் அஞ்சலை, வஸந்தி வீட்டுக்கே சென்று ரூபாய் நானூறு பணத்தை நீட்டி, “அம்மா, இதுவரை உங்களிடம் சிறுகச்சிறுக நான் வாங்கிய பணம் ரூபாய் நானூறு வரை இருக்கும். இந்தாங்க அம்மா அந்தப்பணம். உங்களைப்போன்ற ஒரு நல்லவங்களுக்கு ஒரு எதிர்பாராத சோதனையும், நஷ்டமும் ஏற்பட்டதில் எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது” என்றாள்

:முந்தாநாள் தான் என்னிடம் வந்து 200 ரூபாய் கடன் கேட்டாயே, அஞ்சலை! இந்தப்பணம் நானூறு ரூபாய் உனக்கு எப்படிக்கிடைத்தது?’ வஸந்தி தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தை மிகவும் இயல்பாக ஒரு கேள்வியாகக் கேட்டே விட்டாள்.    

”நானும் உங்களைப் போலவே பலபேர்களிடம் அன்று கைமாத்தாக தருமாறு பணம் கடன் கேட்டுப்பார்த்து விட்டேன். ஆனால் யாருமே தந்து உதவவே இல்லை அம்மா;

விற்கும் விலைவாசியில் ஒரு நாள் போவது ஒரு யுகமாக உள்ளதே அம்மா. கட்டினவனும் எதைப்பற்றியுமே கவலைப்படாமல் சாராயக்கடையே கதி என்று இருக்கிறான். நான் என்ன செய்ய? எனக்கு வேறு வழியே தெரியலையம்மா;

என் கழுத்தில் இருந்த அரைப்பவுன் தாலி மட்டுமே மிச்சம் இருந்தது. அதையும் என்றைக்காவது குடிபோதையில், மேலும் ஊற்றிக்குடிக்க கழட்டிக்கொண்டு போய் விடுவான் அந்தப்பாவி மனுஷன். அவனே சரியில்லாத போது அவன் கட்டிய அந்தத் தங்கத்தாலி எனக்கு முக்கியமாகப் படவில்லை. மேலும் எங்கம்மா கஷ்டப்பட்டு, தன் காசுபோட்டு கடையில் வாங்கிய தாலிதான் அது.

அவிழ்த்துப்போய் அடகு வைத்து ரூபாய் ரெண்டாயிரம் வாங்கியாந்துட்டேன். வெகு நாட்களுக்குப்பிறகு நேற்று தான் எங்கள் வீட்டில் வாய்க்கு ருசியாச் சமைத்து, வயிறு முட்டக் குழந்தைகளுக்குப் போட முடிந்தது” என்றாள் கண்ணில் நீர் மல்க.

அவள் பேச்சை நம்பவும் முடியாமல் நம்பாமலும் இருக்க முடியாமல் வஸந்திக்கு மனதில் தடுமாற்றம் ஏற்பட்டது.  எது எப்படியோ அஞ்சலைக்கு அவ்வப்போது சிறுகச்சிறுக சில்லறையாகக் கொடுத்த தொகை, திரும்ப வரவே வராது என்று முடிவு கட்டியிருந்த தொகை, மொத்தமாக இப்போது திரும்பி வந்ததில், வஸந்திக்கு மகிழ்ச்சியே.  

”தாலியை அடமானம் வைத்துவிட்டு, கழுத்தில் வெறும் மஞ்சள் கயிற்றுடன் உன்னைப் பார்த்தால், உன் புருஷன் திட்டி, அடிக்க வரமாட்டானா?” என்று கேட்டாள் வஸந்தி.

”இனிமேல் ஒரு அடி என்னை அந்த ஆளு அடித்தாலும் போதும்; நேராகப்போய் போலீஸில் புகார் கொடுத்து ஒரு வருஷம் உள்ளே தள்ளிப்புடுவேன். பெண்கள் மீதான வன்கொடுமை சட்டம் புதுசா போட்டிருக்காங்கன்னு, தினமும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து, போதை ஏறும் வரை ஓஸிப்பேப்பர் படிக்கும் அதுக்கும் தெரியுமில்லே! உள்ளே தள்ளிவிட்டா என்னிடம் காசும் பறிக்க முடியாது; தண்ணியும் அடிக்க முடியாது; அதனால் அது இனி என் வம்புக்கே வராதும்மா என்றாள் அஞ்சலை.  

இவள் தைர்யமாக அதுபோலச் செய்தாலும் செய்வாள் என்று நினைத்துக் கொண்டாள், வஸந்தி.

அஞ்சலை விடைபெற்றுச் சென்றதும், ஆபீஸுக்குப் புறப்பட தன்னை தயார் படுத்திக்கொண்டாள், வஸந்தி.








எல்லோருக்கும் பெய்யும் மழை

சிறுகதை [ பகுதி 2 of   2  ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


அன்று கடவுளை வேண்டிக்கொண்டு மீண்டும் கேஷ் கவுண்டரில் அமர்ந்தாள் வஸந்தி. சட்டை ஏதும் அணியாமல் தோளில் துண்டு மட்டும் போட்டவாறு, அக்குளில் மிகப்பெரிய குடை ஒன்றை மடக்கிய நிலையில் இடுக்கியவாறு, அந்தப்பக்கத்து கிராமப்பெரியவர் ஒருவர் வஸந்தியிடம் வந்தார்.

”அம்மாடி, நேற்று காலை உன்னிடம் இருபத்து ஐயாயிரம் ரூபாய் நான் வாங்கிப்போனதில் ரூபாய் நானூறு கூடுதலாய்க் கொடுத்து விட்டாய் போலிருக்கு! இனறு காலையில் தான் கறவை மாடுகள் வாங்கவும், உரம், பூச்சி மருந்து போன்றவைகள் வாங்கவும், அந்தப்பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தேன். 500 ரூபாய்த்தாளின் 41 இருந்தது. 100 ரூபாய்த்தாளில் 49 தான் இருந்தது. ஒரு நூறு ரூபாய்க்கு பதில் ஒரு ஐநூறு ரூபாயைக் கொடுத்து விட்டாய் போலிருக்கு. இந்தாம்மா அந்தப்பணம்” என்றார் அந்தப்பெரியவர்.

பெரியவரை அமரச்செய்து, தேநீர் வரவழைத்துக் கொடுத்து “மிகவும் நன்றி, ஐயா” என்றாள் வஸந்தி.

”இதற்குப்போய் என்னம்மா நன்றியெல்லாம் சொல்றீங்க! தப்பு என் மேலேயும் உள்ளதும்மா; நானும் பணத்தை இங்கேயே எண்ணி சரி பார்த்து விட்டுத்தான் போயிருக்கணும்; 


நம்ம பேங்கிலே நேற்றைக்கு கும்பல் ரொம்ப அதிகமாக இருந்திச்சு. நான் வங்கியிலிருந்து எடுத்த தொகையோ அதிகம். திருட்டுப் போய்விடுமோ என்ற பயம் வேறு. நீ கொடுத்தப்பணத்தை அப்படியே இடுப்பு வேட்டியிலே பத்திரமா இறுக்கி முடிந்து கொண்டு நகர்ந்து போய் விட்டேன். மேலும் நீ கொடுத்தால் அது வழக்கமா சரியாகத்தான் இருக்கும்னு ஒரு நம்பிக்கையும் தான் காரணம்” என்றார்.

அந்தப்பெரியவர் விடைபெறும் முன், “எங்க கிராமத்துப் பொண்ணு அஞ்சலை இங்கே தானே வேலை பார்க்குது! அது ரொம்ப ரொம்ப நல்ல தங்கமான பொண்ணும்மா. சின்னக்குழந்தையாய் இருந்த போது தன் பிறந்த வீட்டிலேயும் கஷ்டப்பட்டுச்சு; புருஷன் சரியில்லாம, இப்போதும், குழந்தை குட்டிகளோட கஷ்டப்படுவதாக அன்னிக்கு என்னை தெருவில் பார்த்தபோது சொல்லிச்சு;

நான் இங்கே வந்துட்டுப்போனதாகவும், அவளை நான் மிகவும் விசாரித்ததாகவும் சொல்லும்மா”  என்றார் பெரியவர்.

அஞ்சலையையா நீ சந்தேகப்பட்டாய் என்று அந்தப்பெரியவர் சாட்டையைச் சுழட்டி அடித்தது போல இருந்தது வஸந்திக்கு.

”வானம் இருட்டாகி விட்டது. பலத்த மழை வரும் போலத்தோன்றுகிறது” என்று வங்கியில் பணம் கட்ட வந்த இருவர் பேசிக்கொண்டது வஸந்தியில் காதில் விழுந்தது.

இந்தப்பெரியவர் போலவும், நம் அஞ்சலை போலவும் ஆங்காங்கே சில நல்லவர்கள் இருப்பதாலேயே, நாட்டில் அனைவருக்கும் மழை பெய்து வருகிறது என்று நினைத்துக்கொண்டாள் வஸந்தி.




-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-






இந்தச் சிறுகதை “வல்லமை” மின் இதழில் 
24,10,2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
Reference: http://www.vallamai.com/archives/9465/









9. ஆயில்யம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்: 
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் 
[அபூர்வ நாயகி + 
அருமருந்து நாயகி 
அம்மன்கள்] 

இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 
சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 
11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் 
சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 
கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். 
திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.




09/27

33 கருத்துகள்:

  1. இவள் தைர்யமாக அதுபோலச் செய்தாலும் செய்வாள் என்று நினைத்துக் கொண்டாள், வஸந்தி.//

    இந்தப்பெரியவர் போலவும், நம் அஞ்சலை போலவும் ஆங்காங்கே சில நல்லவர்கள் இருப்பதாலேயே, நாட்டில் அனைவருக்கும் மழை பெய்து வருகிறது என்று நினைத்துக்கொண்டாள் வஸந்தி.


    அருமையான க்தைக்குப் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. 9. ஆயில்யம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
    சென்று வழிபட வேண்டிய கோயில்:
    அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
    [அபூர்வ நாயகி +
    அருமருந்து நாயகி
    அம்மன்கள்]

    பயனுள்ள பகிர்வு நன்றி..

    பதிலளிநீக்கு
  3. முந்தாநாள் முனியம்மா, இன்று அஞ்சலை! இந்தக் காலத்தில் எல்லாரையும் சந்தேகப்படத்தான் வேண்டியுள்ளது!!

    பதிலளிநீக்கு
  4. The story could be real. I narrate a similar experience recently. A month back, I was going to the Transport Office for renewing my driving license. While nearing the place, I started assembling the papers required for the license. I checked my wallet for the money to be paid as fee. I couldn't find the money. Then, I searched in another small bag where I usually keep my credit card, insurance card, etc. I couldn't find the money there also. My mind, for a moment, thought that my maid could have taken the money from my brief case that morning. I cursed myself for being so careless. Then, I told my driver to go to the nearest ATM to withdraw money. Then, suddenly, I searched the small purse where I normally kept the small coins, and there, I found the money in tact. I felt very ashamed to have suspected my maid who has been working with us for the last four years.

    பதிலளிநீக்கு
  5. நல்லார் ஒருவர் இருந்தால்அவர் பொருட்டு
    எல்லோருக்கும் பெய்யும் மழை என்கிற
    அனுபவ வார்த்தை சரிதானே
    அருமையான கதை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    பதிலளிநீக்கு
  6. அது என்னவோ தெரியவில்லை. இம்மாதிரி நேரங்களில் ஏழைகள் மேலேயே சந்தேகம் வருகிறது. நல்ல வேளை அஞ்சலையின் மேல் பழி விழுமுன் , எல்லாம் சரியாகிவிட்டது. கதை ஜோர்.

    பதிலளிநீக்கு
  7. //இந்தப்பெரியவர் போலவும், நம் அஞ்சலை போலவும் ஆங்காங்கே சில நல்லவர்கள் இருப்பதாலேயே, நாட்டில் அனைவருக்கும் மழை பெய்து வருகிறது//
    உண்மைதான்
    அருமையாக இருந்தது .வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. நம்ம பேங்கிலே நேற்றைக்கு கும்பல் ரொம்ப அதிகமாக இருந்திச்சு. நான் வங்கியிலிருந்து எடுத்த தொகையோ அதிகம். திருட்டுப் போய்விடுமோ என்ற பயம் வேறு. நீ கொடுத்தப்பணத்தை அப்படியே இடுப்பு வேட்டியிலே பத்திரமா இறுக்கி முடிந்து கொண்டு நகர்ந்து போய் விட்டேன். மேலும் நீ கொடுத்தால் அது வழக்கமா சரியாகத்தான் இருக்கும்னு ஒரு நம்பிக்கையும் தான் காரணம்” என்றார்.

    இந்த மாதிரி நல்ல மனிதர்கள் இருப்பதுதான் மழைக்கு காரணம்..
    அருமையான கதைக்கும் காரணம்

    பதிலளிநீக்கு
  9. //இந்தப்பெரியவர் போலவும், நம் அஞ்சலை போலவும் ஆங்காங்கே சில நல்லவர்கள் இருப்பதாலேயே, நாட்டில் அனைவருக்கும் மழை பெய்து வருகிறது என்று நினைத்துக்கொண்டாள் வஸந்தி.//

    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை என்பதற்கு சரியான உதாரணம் கொண்ட கதை.சுவாரஸ்யத்துடன் நகர்ந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. நல்ல கருத்துள்ள கதை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. மிக நல்ல கதை படித்த திருப்தியுடன் என் நட்சத்திரத்திற்கான கோவில் விவரங்கள் படித்து சந்தோஷம் அடைந்தேன்....

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. கதையில் உள்ள நியாயப் பார்வை எனைக்கு பிடித்து இருக்கிறது. மிக நல்ல கதை. நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  13. பதில்கள்
    1. இந்த என் சிறுகதைப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்களைக் கூறி, பாராட்டி, சிறப்பித்துள்ள அனைவருக்கும் ”HAPPY இன்று முதல் HAPPY" என்ற பதிவினில் தனித்தனியே நன்றி கூறியுள்ளேன். அதற்கான இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

      என்றும் அன்புடன் தங்கள்,
      VGK

      நீக்கு
  14. பேங்கில் வேலை செய்தால் இந்த மாதிரி அநுபவங்கள் பல இருக்கும். அழகாக முடித்த விதம் என்னை கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள பட்டு, வாங்கோ, வணக்கம்.

      அழகாக முடித்த விதம் பட்டுவின் பட்டுப்போன்ற மனதைக் கவர்ந்தது என்பது கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      நன்றி, அன்புடன் VGK

      நீக்கு
  15. கதை முழுவதும் வந்த பாசிட்டிவ் அப்ரோச் ரொம்பவும் பிடித்திருந்தது.
    இரண்டாவது பகுதி வெகு அழகாக சென்றது. அஞ்சலை எல்லோர் மனதிலும் உயர்ந்து விட்டாள்.

    பதிலளிநீக்கு
  16. //Ranjani Narayanan November 20, 2012 12:42 AM
    //கதை முழுவதும் வந்த பாசிட்டிவ் அப்ரோச் ரொம்பவும் பிடித்திருந்தது.

    இரண்டாவது பகுதி வெகு அழகாக சென்றது. அஞ்சலை எல்லோர் மனதிலும் உயர்ந்து விட்டாள்.//

    வாங்கோ திருமதி. ரஞ்ஜூ மேடம். தங்களின் அன்பான வருகையும் அழகான ஆறுதலான கருத்துக்களும், என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    வேறொரு அஞ்சலையைப்பற்றி என் “அஞ்சலை” என்ற சிறப்புச் சிறுகதையில் எழுதியுள்ளேன். மிகச்சிறிய ஆறே ஆறு பகுதிகள் மட்டுமே.

    முதல் பகுதிக்கான இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/04/1-1-of-6.html

    ”அஞ்சலை” பகுதி 1 / 6


    நல்ல விறுவிறுப்பாகவே இருக்கும். அவசியமாகப்படித்து விட்டு ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே கருத்துக்கூறுங்கோ, ப்ளீஸ்.

    உலகளாவிய தமிழ்ச்சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  17. எதார்த்தமான கதை சார்! படிக்க படிக்க எங்கேயோ நடப்பதாய் ஒரு கற்பனை! வரவே வராது என்று நினைத்த பணத்தை அஞ்சலை திருப்பிக்கொடுத்தபோதும், நம்புவதா கூடாதா என்று வசந்தி சந்தேகப்படுவதும், அஞ்சலை காரணம் கூறிய பிறகு தெளிவடைவதும், குறிப்பிட்டதை விட அதிகம் பெற்ற பணத்தை திருப்பிக்கொடுத்து அஞ்சலையை பற்றியும் கூறும் வயதானவர், என அனைத்தும் கண்முன் நடந்தது போல் இவ்வளவு எளிமையாகவும், நிகழ்வுகளாகவும் கூறிப்போனது ரசிக்க வைக்கிறது சார்!
    //

    இந்தப்பெரியவர் போலவும், நம் அஞ்சலை போலவும் ஆங்காங்கே சில நல்லவர்கள் இருப்பதாலேயே, நாட்டில் அனைவருக்கும் மழை பெய்து வருகிறது என்று நினைத்துக்கொண்டாள் வஸந்தி.
    ///'
    வசந்தி நினைத்தது நிஜமாகக்கூட இருக்கலாம் எனத்தோன்றியது சார்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யுவராணி தமிழரசன் December 7, 2012 3:31 AM
      எதார்த்தமான கதை சார்! படிக்க படிக்க எங்கேயோ நடப்பதாய் ஒரு கற்பனை! வரவே வராது என்று நினைத்த பணத்தை அஞ்சலை திருப்பிக்கொடுத்தபோதும், நம்புவதா கூடாதா என்று வசந்தி சந்தேகப்படுவதும், அஞ்சலை காரணம் கூறிய பிறகு தெளிவடைவதும், குறிப்பிட்டதை விட அதிகம் பெற்ற பணத்தை திருப்பிக்கொடுத்து அஞ்சலையை பற்றியும் கூறும் வயதானவர், என அனைத்தும் கண்முன் நடந்தது போல் இவ்வளவு எளிமையாகவும், நிகழ்வுகளாகவும் கூறிப்போனது ரசிக்க வைக்கிறது சார்!//

      //வசந்தி நினைத்தது நிஜமாகக்கூட இருக்கலாம் எனத்தோன்றியது சார்!!//

      GOOD EVENING ... YUVARANI. WELCOME TO YOU! ;)

      THANKS FOR YOUR KIND ENTRY TO THIS POST &
      FOR YOUR VALUABLE COMMENTS TOO.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  18. வங்கியின் பணப்பரிமாற்ற வேலையில் இருக்கும் சிக்கலையும் அதில் செலுத்த வேண்டிய கவனம் பற்றியும் அறிவுறுத்துவதாக இருந்தது சார்!
    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யுவராணி தமிழரசன் December 7, 2012 3:33 AM
      //வங்கியின் பணப்பரிமாற்ற வேலையில் இருக்கும் சிக்கலையும் அதில் செலுத்த வேண்டிய கவனம் பற்றியும் அறிவுறுத்துவதாக இருந்தது சார்!

      பகிர்வுக்கு நன்றி!//

      வாங்கோ YUVARANI! தங்களின் அன்பான வருகையும் அழகான ஆறுதலான கருத்துக்களும், என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. THANKS A LOT.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  19. பெண்களாகப் பிறந்து விட்டலே சோதனைதானோ?

    பதிலளிநீக்கு
  20. பேஙுகில் வேலை பார்ப்பவர்களைப் பற்றி எல்லாருமே பெருமையாகவும் சிலர் பொறாமையாகவும் நினைப்பார்கள் அவர்களின் அவஸ்தை அஹர்களுக்குத்தானே தெரியும் பணம் டுறைந்தாலும் கூட இருநுதாலும் பிரச்சினைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 20, 2015 at 10:48 AM

      //பேங்கில் வேலை பார்ப்பவர்களைப் பற்றி எல்லாருமே பெருமையாகவும், சிலர் பொறாமையாகவும் நினைப்பார்கள். அவர்களின் அவஸ்தை அவர்களுக்குத்தானே தெரியும்! பணம் குறைந்தாலும் கூட இருந்தாலும் பிரச்சினைதான்//

      ஆமாங்க, நீங்க கரெக்டா யோசித்து சரியா சொல்லிட்டீங்கோ. மிக்க நன்றி.

      நீக்கு
  21. உண்மைதான் அய்யா, கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க, இருக்கறவ கவரிங் போட்டால் பவுன், இல்லாதவ பவுன் போட்டால் கூட கவரிங் என்று. அஞ்சலை ஏழைதானே ஒரு நிமிடம் அவளைப் பற்றிய தவறான நினைவு வந்தது , பெரியவர் சூப்பர். கதை என்றாலும் நிஜம் பாருங்கோ. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran May 23, 2015 at 7:29 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உண்மைதான் ஐயா, கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க, ’இருக்கறவ கவரிங் போட்டால் பவுன், இல்லாதவ பவுன் போட்டால் கூட கவரிங்’ என்று. //

      பொருத்தமானதோர் பழமொழியை இங்கு தாங்கள் பொருத்தமான இடத்தில் சுட்டிக்காட்டியுள்ளது சிறப்பு.

      //அஞ்சலை ஏழைதானே ஒரு நிமிடம் அவளைப் பற்றிய தவறான நினைவு வந்தது, பெரியவர் சூப்பர்.//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      //கதை என்றாலும் நிஜம் பாருங்கோ. நன்றி.//

      நிஜமோ, கதையோ .... நிஜமாவே நன்னா புரிஞ்சு படிச்சுட்டு அழகாகவே எழுதியுள்ளீர்கள். சந்தோஷம்.

      நீக்கு
  22. அஞ்சலை போன்ற பெண்களுக்கு இருக்கும் தைரியம் கூட படித்து, பட்டம் வாங்கி, நல்ல வேலையில் இருக்கும் பெண்களுக்கு இருப்பதில்லை.

    அவரவர் கவலை அவரவருக்கு.

    நல்ல கருத்து செறிவுள்ள அருமையான கதை.

    பதிலளிநீக்கு
  23. பேங்கு வேல சொள்ளபுடிச்சதா இருக்கும்போலலா இருக்குது. அவங்களுக்கும் பணம் கொறஞ்சதும் அஞ்சல மேலதானே சந்தேகம் வந்திச்சி.

    பதிலளிநீக்கு
  24. அந்தப் பெண்ணிற்கு சிறு வயதிலேயே கணவனை இழந்ததும் கருணை அடிப்படையில் பேங்கில் வேலை கொடுத்ததையும்அழகாக சொன்னீர்கள். அதுவும் கேஷியர் போஸ்டில் இருப்பவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்றும் புரிய வைத்தீர்கள் பணம் கூடவும் இருக்கக்கூடாது குறைவாகவும் இருக்கக்கூடாதுதான். எப்படியோ ளணம் கிடைத்த விதம் நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  25. உண்மைதான்...நல்லோர் சிலர் இருப்பதால்தான் எல்லோர்க்கும் பெய்கிறது மழை.

    பதிலளிநீக்கு
  26. //அஞ்சலையையா நீ சந்தேகப்பட்டாய் என்று அந்தப்பெரியவர் சாட்டையைச் சுழட்டி அடித்தது போல இருந்தது வஸந்திக்கு.




    ”வானம் இருட்டாகி விட்டது. பலத்த மழை வரும் போலத்தோன்றுகிறது” என்று வங்கியில் பணம் கட்ட வந்த இருவர் பேசிக்கொண்டது வஸந்தியில் காதில் விழுந்தது.




    இந்தப்பெரியவர் போலவும், நம் அஞ்சலை போலவும் ஆங்காங்கே சில நல்லவர்கள் இருப்பதாலேயே, நாட்டில் அனைவருக்கும் மழை பெய்து வருகிறது என்று நினைத்துக்கொண்டாள் வஸந்தி.

    // அருமை! மனதிற்குள் மழைச்சாரல்!

    பதிலளிநீக்கு