About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, June 23, 2011

மறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 3 of 4]



முன்கதை முடிந்த இடம்:

ஓரிரு வருடங்கள் முன்பு திருச்சி மலைவாசல் கடைவீதியில், அந்த நாட்களில் ஓயாமல் என்னைச்சுற்றி வந்தவளை, நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. 

===========================
முதுமையால் தலையில் ஆங்காங்கே சற்றே வெள்ளி முடிகளுடன் காணப்பட்டாள். வறுமைத் தோற்றம் உடுத்தியிருந்த ஆடைகளில் பிரதிபலித்தது. சற்றே உடம்பு குண்டாகவும் ஆகியிருந்தாள்.

என்னைக்கண்டதும் முக மலர்ச்சியுடன் ஒரு சிரிப்பு. அதே சிரிப்பு. முத்துப்பற்களின் மேல் வரிசை வெளியே வந்து, "நான் தான், நானே தான், அன்று இளமையில் உன்னைச் சுற்றிச்சுற்றி வந்தவள்" என்று நினைவூட்டியது , அந்த அவளின் சிரிப்பு. 

என்னை உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை மிகவும் அதிசயமாக நோட்டமிட்டாள். ”பெரிய ஆபீஸர் ஆகி, கார், பங்களா எல்லாம் வாங்கியிருப்பாயே!” என்றாள்.

நடு ரோட்டில் நாங்கள் நின்று கொண்டிருந்ததாலும், போக்குவரத்து நெருக்கடிகள் அதிகம் உள்ள சாலை என்பதாலும் ”அருகில் இருந்த உணவு விடுதிக்குள் சென்று உட்கார்ந்து பேசலாமா” என்றேன் .

“ஆஹா...... நீயே அதிசயமாகவும், ஆசையாகவும், இவ்வளவு வருஷம் கழித்தாவது கூப்பிடுகிறாய்; வருவதற்கு என்ன, எனக்கு வலிக்குமா” என்று சொல்லி என்னுடன் உள்ளே வந்தாள். குளிரூட்டப்பட்ட தனிமைப்பிரிவுக்குச்சென்று, அமைதியான சூழலில் வசதியாக அமர்ந்து கொண்டோம்.

என்னிடமிருந்து உரிமையுடன் என் மணிபர்ஸ் மற்றும் பேனா இரண்டையும் என் சட்டைப்பையிலிருந்து அவளாகவே எடுத்து நோட்டமிட்டாள்.  அதில் கத்தை கத்தையாக இருந்த ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை ஆசையுடன் வெளியில் எடுத்து எண்ணிப்பார்க்க ஆரம்பித்தாள்.

 “இவற்றை எண்ணி முடிப்பதற்குள் என் விரல்களுக்கு வலி எடுத்துவிடும் போலிருக்கு” என்று சொல்லி என்னைப்பார்த்து சிரித்தபடியே, திரும்ப அவற்றை எண்ணி முடிக்காமலேயே என் பர்ஸுக்குள் திணித்தாள்.

அதிலிருந்த ஒரு புதுப்பத்து ரூபாய் சலவை நோட்டை மட்டும் எடுத்து பேனாவால் என் பெயரை அழகாக எழுதி, அன்றைய தேதியையும் குறிப்பிட்டு அதை முத்தமிட்டு தன் கண்களில் ஒத்திக்கொண்டு பர்ஸின் தனி அறையில் வைத்தாள். 

“இந்த ஒரே ஒரு நோட்டை மட்டும் செலவு செய்யாமல் என் ஞாபகார்த்தமாக பத்திரமாக வைத்துக்கொள்” என்றாள்.  

பர்ஸிலிருந்த என் விஸிட்டிங் கார்டுகளில், இரண்டே இரண்டு மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப்படித்துப்பார்த்து, வியப்பில் தன் புருவங்களை சற்றே உயர்த்தி, என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே, அவற்றை அவள் தன் முன்கழுத்துக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் பத்திரப்படுத்திக் கொண்டாள். 

“அந்த என் விஸிடிங் கார்டுகளை, பத்திரமாக வைத்துக்கொள்ள வேறு இடமே உனக்கு கிடைக்கவில்லையா? என்றேன்.

“எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் தான், நான் உன்னை பத்திரமாக வைத்திருக்கிறேன்; உனக்குத்தான் எப்போதுமே ஒரு எழவும் புரிய மாட்டேங்குது; சரி அதை விடு; இப்போ என்ன சாப்பிடலாம்? என்று சிரித்துக்கொண்டே பேச்சை மாற்றினாள்.

”நீ பார்த்து எது ஆர்டர் கொடுத்தாலும், எனக்கு ஓ.கே” என்றேன். 

ஸ்வீட் முதல் கூல்ட்ரிங்க்ஸ் ஐஸ்கிரீம் வரை அவளே அனைத்தையும் அழகாக ஆர்டர் செய்தாள். அந்த 40 நிமிடங்களுக்குள் கடந்த 40 வருட சமாசாரங்களையும் சரமாரியாக எடுத்துரைத்தாள்.   

ஏதேதோ தனது வருத்தங்களையும் பகிர்ந்து கொண்டாள். அவற்றை உன்னிப்பாகக் கேட்டு வந்த நான், அவ்வப்போது அவளுக்கு சற்றே ஆறுதல் வார்த்தைகளும் கூறி வந்தேன்.     

பல ஊர்கள் சுற்றி தற்சமயம் ஈரோட்டில் வசிப்பதாகவும், தனக்கு இரண்டே இரண்டு பெண்கள் மட்டுமே என்றும், இருவரும் காலேஜ் படிப்பதாகவும், தன்னைப்போல் இல்லாமல் நல்ல கலராகவும் அழகாகவும் இருப்பதாகவும் கூறியவாறே, மீண்டும் சிரித்தாள். 

இவளுடன் பேசிக்கொண்டே இருந்தால் நாமும் எல்லாக் கவலைகளையும் மறந்து எப்போதுமே சிரித்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளதே, என்று நினைத்துக்கொண்டேன்.

“நிறைய அடர்த்தியான தலைமுடியுடன், அழகாக கர்லிங் ஹேர் நெற்றியில் விழும்படி ஜோராக இருப்பாயே! ஏன் இப்படி உன் பின்மண்டையில் கொஞ்சூண்டு ரெளண்டாக வழுக்கை விழுந்துள்ளது?” என்று கேட்டுச் சிரித்தாள்.

“வயதுக்கேற்ற வழுக்கை; என்ன செய்வது” என்றேன். 

“விக் வைத்துக்கொண்டு எப்போது இளமைத்தோற்றத்துடன் இரு” என்றாள்.

என்னைப்பற்றி அடிக்கடி நினைத்துக் கொள்வாளாம். தனக்கு ஒரு பிள்ளை பிறந்தால் என் பெயரையே சூட்ட வேண்டும் என்று நினைத்திருந்தாளாம்.

நல்ல வேளையாக நான் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாததும் நல்லது தானாம். அவளின் துரதிஷ்டம் என்னையும் சுகப்பட வைக்காமல் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்குமாம். ஏதேதோ கற்பனைகள் செய்து பார்த்திருக்கிறாள்...பாவம்.

உருவத்தில் அவள் முழுப் பலாப்பழம் போலத்தோன்றினாலும், உள்ளத்தில் நல்ல இனிய பலாச்சுளை தான் என்று நினைத்துக் கொண்டேன். 

ஒருவருக்கொருவர் விடைபெறும் முன், என் பர்ஸிலிருந்து பணம் எடுத்து ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கித் தன் தலையில் சூடிக்கொண்டாள்.     எதிர்புற ரோட்டுக்கடையில் ஒரு ஜோடி லேடீஸ் செருப்பு வாங்கி அணிந்து பார்த்தாள். 

“நல்ல பெரிய செருப்புக்கடைக்குப்போய் நல்ல தரமானதாக, லேடீஸ் சப்பலாக வாங்கிக்கொள்ளலாமே” என்றேன்.

“இது போதும்; ஒரு ஆறு மாதம் உழைத்தால் போதும்; விலையும் மலிவு; அடிக்கடி அறுந்து போகும்; அல்லது தொலைந்து போகும்; பெரிய கடைக்கெல்லாம் போய் வாங்கினால் எனக்குக் கட்டுப்படியாகாது” என்று சொல்லி செருப்புக்கும் என் பர்ஸிலிருந்து பணம் எடுத்துக்கொடுத்தாள்.

என்னுடன் ஒரு மணி நேரம் இன்று மனம் விட்டுப்பேசி, உச்சி முதல் உள்ளங்கால் வரை [தலைக்கு மல்லிகைப்பூ, வயிற்றுக்கு ஆகாரம், கால்களுக்கு செருப்பு என ] திருப்தியாக அனைத்தையும் அனுபவத்ததில், தான் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாகச்சொல்லி சிரித்தாள். 

அன்று முதல் இன்று வரை அவள் என் மீது பிரேமபக்தி கொண்டிருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“உன் பர்ஸ் மிகவும் கனமாக உள்ளது. பத்திரமாக வைத்துக்கொள்” என்று சொல்லி, என்னிடம் திரும்ப ஒப்படைக்கப் பார்த்தாள். 

“நீயே அந்தப்பர்ஸில் உள்ள முழுப்பணத்தையும் எடுத்துக்கொள்;உன் அவசர அவசிய செலவுகளுக்கு வைத்துக்கொள்; கடவுள் புண்ணியத்தில் எனக்குப்பணத்துக்கு இப்போதெல்லாம் பஞ்சமே இருப்பதில்லை” என்று மிகவும் வற்புருத்திக்கூறினேன்.

ஒரே ஒரு நிமிடம் தயங்கினாள். ஏதோ பலமாக யோசித்தாள். ஆனாலும் பிறகு வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள். 

மீண்டும் தன் முத்துப்பற்களைக்காட்டி ஒரு சிரிப்பு சிரித்தபடியே என்னிடம் விடைபெற்றுச் சென்றாள்.  அவள் என் கண்பார்வையிலிருந்து மறையும் வரை அவள் நடந்து சென்ற பாதையையே நோக்கிக்கொண்டிருந்தேன்.

என்னை ஜன்ம ஜன்மமாக, ஆத்மார்த்த அன்புடன் தொடர்ந்து வந்துள்ள, ஏதோவொரு மிக நெருங்கிய உண்மையான உறவு, என்னை விட்டு இப்போது, எங்கோ, வெகுதூரம் விலகிச்செல்வதுபோல உணர்ந்தேன்.

அதன் பிறகு இன்று வரை நான் அவளை சந்திக்கவே இல்லை.

தொடரும்

59 comments:

  1. சார்.... கதை அருமை. நாயகிக்கு நாயகனை மீண்டும் பார்க்கையில் எவ்வளவு சந்தோஷம் பாருங்களேன்.

    ReplyDelete
  2. என்னை ஜன்ம ஜன்மமாக, ஆத்மார்த்த அன்புடன் தொடர்ந்து வந்துள்ள, ஏதோவொரு மிக நெருங்கிய உண்மையான உறவு, என்னை விட்டு இப்போது, எங்கோ, வெகுதூரம் விலகிச்செல்வதுபோல உணர்ந்தேன்.//

    பாத்திரப்படைப்புகள் மிகவும் வியக்கவைக்கின்றன. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. நீண்ட இடைவெளிக்குப் பின் பார்க்கும் ஒருதலையாய் தான் விரும்பிய ஒருவரிடம் இப்படி உரிமையாய் பேசியதைப் பற்றிய உங்கள் விவரணைகள் அப்படியே காட்சியை கண் முன் நிறுத்துவதாய் இருந்தது.

    தொடருங்கள்.....

    ReplyDelete
  4. ஒரு புதுப்பத்து ரூபாய் சலவை நோட்டை மட்டும் எடுத்து பேனாவால் என் பெயரை அழகாக எழுதி, அன்றைய தேதியையும் குறிப்பிட்டு அதை முத்தமிட்டு தன் கண்களில் ஒத்திக்கொண்டு பர்ஸின் தனி அறையில் வைத்தாள். //

    அன்பளிப்பு அர்த்தமுள்ளது.

    ReplyDelete
  5. அந்த 40 நிமிடங்களுக்குள் கடந்த 40 வருட சமாசாரங்களையும் சரமாரியாக எடுத்துரைத்தாள். //

    மடை திற்ந்த வெள்ளமென மனம் திறந்த உரையாடல் மனம் நிறைக்கிறது.

    ReplyDelete
  6. வயதுக்கேற்ற வழுக்கை; என்ன செய்வது” //

    சூர்யோதயமா? சந்திரோதயமா?

    பின் மண்டையில் என்றால் சந்திரோதயம் என்றும், முன் தலையில் என்றால் சூர்யோதயம் என்றும் கலாய்ப்பார்கள்.

    சரி. சந்திரோதயம் தான். பணச் சொட்டை.

    ReplyDelete
  7. //என்னை ஜன்ம ஜன்மமாக, ஆத்மார்த்த அன்புடன் தொடர்ந்து வந்துள்ள, ஏதோவொரு மிக நெருங்கிய உண்மையான உறவு, என்னை விட்டு இப்போது, எங்கோ, வெகுதூரம் விலகிச்செல்வதுபோல உணர்ந்தேன்.//
    படித்து முடித்த உடன் மனதில் ஒரு கனமான உணர்வு தோன்றுகிறது. தலைப்பு சரியாக இருக்கிறது மறக்க முடியாத காவியம்.

    ReplyDelete
  8. truth is stranger than fiction///
    என்று சொல்வார்கள் ...அந்த மாதிரி நிஜத்தை வாசகர்களின் எண்ணங்களுக்கு கடத்தி மிக பெரிய சாதனை செய்து விட்டீர்கள் ஐயா,கண்ணியமான வாழ்க்கை கண்ணியமான எழுத்து ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

    ReplyDelete
  9. ///மனம் விட்டுப்பேசி, உச்சி முதல் உள்ளங்கால் வரை [தலைக்கு மல்லிகைப்பூ, வயிற்றுக்கு ஆகாரம், கால்களுக்கு செருப்பு என ] திருப்தியாக அனைத்தையும் அனுபவத்ததில், தான் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாகச்சொல்லி சிரித்தாள். ////

    for me the most touching part in this post..அந்த பெண்ணின் கணவனும் பாக்கியசாலியே இந்த அன்பில் பத்து சதவிதம் கணவனிடம் பகிர்ந்தாலும் போதுமே ஐயா...அடுத்த முறை பார்த்தால் சொல்லுங்கள் நீ துரதிஷ்டசாலி இல்லை என்று

    ReplyDelete
  10. நல்லாப் போகுது சார்! முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆவலில்... ;-))

    ReplyDelete
  11. முடிவுப் பகுதியை எதிர்ப பாக்கிறேன்.. அவ்வளவு அருமையாக போகிறது கதை..

    ReplyDelete
  12. /பல ஊர்கள் சுற்றி தற்சமயம் ஈரோட்டில் வசிப்பதாகவும், தனக்கு இரண்டே இரண்டு பெண்கள் மட்டுமே என்றும், இருவரும் காலேஜ் படிப்பதாகவும், தன்னைப்போல் இல்லாமல் நல்ல கலராகவும் அழகாகவும் இருப்பதாகவும் கூறியவாறே, மீண்டும் சிரித்தாள்//

    பெண்ணின் தாழ்வு மனப்பான்மையையும் , ஒரு அம்மாவாய் தன் குழந்தைகளின் பெருமையையும் ஒருங்கே சொன்ன இடம் அமர்க்களம் ஐயா

    ReplyDelete
  13. பெரிய கடைக்கெல்லாம் போய் வாங்கினால் எனக்குக் கட்டுப்படியாகாது” என்று சொல்லி செருப்புக்கும் என் பர்ஸிலிருந்து பணம் எடுத்துக்கொடுத்தாள்.


    முன்னாள் ஒருதலைக்காதலி என்பதையும் தாண்டி ஒரு உரிமையுள்ள தோழியாகவே இருக்கிறது அவரின் செயல்கள் மனதுக்கு நிறைவாய்

    ReplyDelete
  14. மனதை அன்பால், உரிமையால், பரிவால், நட்பால் இன்னும் பிரிவால் நெகிழவைத்த பகுதி ஐயா , எல்லாருக்கும் தங்களின் முதல்,பழைய அல்லது நிறைவேறாத காதலை ஞாபகப்படுத்தும் பகுதி, அருமை

    தமிழ்மணம் 5 to 6
    indli 6 to 7

    ReplyDelete
  15. நினைவுகள் அழிவதில்லை. முதல் காதலை யாரும் மறப்பதுமில்லை. இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். மூன்றாம் நிலையில் சரியெனப் படும் இது தன் நிலையில் எந்த மாதிரி உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும் என்று அவ்வப்போது தோன்றும். ஆனாலும் அனுபவங்கள் பலவிதம். தோழைமை உணர்வு எப்போது காதலாய் மாறுகிறது, அது, அந்தக் காதல் உணர்வு மறுபடி தோழைமை மட்டும் என்ற கோட்டுக்குப் போக முடியுமா என்ற கேள்விகளும் எழுகின்றன. நல்லதொரு நினைவோடை. முடிவு என்ன ஆகிறது என்று பார்ப்போம். இந்த இருவரில் ஒருவரின் மகளைப் பார்த்து தானே நினைவுகள் பின்னோக்கிப் பயணித்திருக்கின்றன...!

    ReplyDelete
  16. நீ விரும்பும் அரச குமாரியைவிட உன்னை விரும்பும் சாதாரணப் பெண்ணே மேல். என்னவோ தோன்றியது. எழுதிவிட்டேன். கதை நன்றாகப் போகிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. இந்த பகுதி உணர்வுப்பூர்வமாய் அருமையாக இருந்தது சார். அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  18. இதுவரை நீங்கள் எழுதிப் படித்தவற்றில் இந்த நாயகிக்குத் தனி இடம் என் மனதில்.

    தன் மனதைச் சொல்வதில் வெளிப்படையான அணுகுமுறை-உரிமை கோரத் தயக்கம்-ஆனாலும் விடவும் மனமில்லாமல் அன்றைய நாளுக்கான சந்தோஷத்தை கேட்காமலேயே எடுத்துக்கொண்டது-இறுதியில் கொடுத்த உதவியை ஏற்க மறுத்த நாசூக்கு.

    அந்த நாயகிக்கும் அவளைச் செதுக்கிய உங்களுக்கும் சபாஷ்.

    ReplyDelete
  19. //ஆனாலும் பிறகு வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள். //
    மிகுந்த தன்மானம் உள்ளவர் .என் பார்வைக்கு அவர் ஒரு தேவதையாக தான் தெரிகின்றார்.

    ReplyDelete
  20. பெண்கள் என்றுமே பெண்கள் தான்.
    அவளின் ஆழமான மன உணர்வுகளை
    அருமையாக எழுத்தில் கொண்டு வந்தி
    ருக்கிரீர்கள்.

    ReplyDelete
  21. அவள் எடுத்துக்கொண்ட உரிமை
    கண் கலங்கச் செய்து போனது
    ஆர்வமுடன் தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. இறுதிப் பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  23. சம்பவங்களை ரெம்ப அழகா narrate பண்றீங்க சார்... அடுத்த எபிசோட் "ரவா லாடு" மேடம் பத்தியா...:))

    ReplyDelete
  24. ஒரே ஒரு நிமிடம் தயங்கினாள். ஏதோ பலமாக யோசித்தாள். ஆனாலும் பிறகு வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.


    /// நிஜமாகவே என் கண்களும்கலங்கி விட்டன சார். அந்தப் பணம் அவளுக்கு அத்யாவசியத் தேவை. ஆனால் கம்பீரமாக மறுத்து சென்றாளே அதுதான் சுயகௌரவம்.. ரொம்ப பிடிச்சுருக்கு அவளை..:)

    ReplyDelete
  25. இந்த பகுதி மிகவும் அருமையாக இருந்தது. என்னுடைய மனோதத்துவ சிந்தனைகள் நிறைய ஆச்சரியங்களை கிளப்பிவிட்டன. சில விசயங்களை நியாயப்படுத்திக் கொள்ள முடிகிறது. நன்றி சார்.

    ReplyDelete
  26. முதல் இரண்டு பகுதிகளையும் சேர்த்து இந்த பகுதியுடனே படித்து விட்டேன்.
    மூன்றாவது பகுதியில் மனம் சற்று கனக்கிறது.நான்காவதில் இன்னொரு நாயகி
    வருகை உண்டா?

    ReplyDelete
  27. A true love story
    நடத்துங்க நடத்துங்க

    ReplyDelete
  28. அடுத்து நீங்கள் சுற்றி வந்த . இன்னொரு ஹீரோயின் வருவாங்களா ?

    ஆவலாய் இருக்கிறேன்.
    ( பதிவுலகம் பக்கம் அடிக்கடி வர முடிவதில்ல்லை. கோபிக்க வேணாம். இப்போதெலாம் முழுத் தொடரையும் படிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை)

    ReplyDelete
  29. தங்களின் தளத்திற்கு இப்பொழுதான் முதல் வருகை. கதை அருமை. வாழ்த்துக்கள்.......பத்மாசூரி.

    ReplyDelete
  30. உணவுர்கள் வெளிப்பட்ட காட்சியை கண்முன்னே நிறுத்தியதுபோல் இருக்கு.
    அதீதப்ரியம் அது
    ஆன்மாவை நிறைக்கும்.
    ஆன்மாவின் தவிப்பு
    அதை உணர்பவருக்கே உணர்த்தும். மிக அருமையாக செல்கிறது. முடிவை எதிர்பார்த்தபடி எல்லாரைபோலவே நானும் என்றாலும் சற்று கூடுதலாகவே..

    ReplyDelete
  31. ஒரே ஒரு நிமிடம் தயங்கினாள். ஏதோ பலமாக யோசித்தாள். ஆனாலும் பிறகு வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.

    ஒரு கதையை உண்மை என்றே நம்ப வைக்கிற அழகான எழுத்து. சுந்தர்ஜி சொன்னது போல செதுக்கித்தான் வைத்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் இயல்பாகவே மனசு சொக்கிப் போகிறது.

    ReplyDelete
  32. ஐயா நல்ல கதை...
    அருமையான எழுத்து நகர்வு,,
    அற்புதம்...........


    எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..

    ReplyDelete
  33. பாத்திரப் படைப்பை செதுக்கி வைத்தாற்போல் உருவாக்குகிறீர்கள்...

    சரளமான நடை..சிறப்பபான கதையோட்டம் .. தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  34. அடுத்த வாரம் பெவிலியனுக்கு (சென்னைக்கு) திரும்பி விடுவேன் சார்! அப்புறம் தினமும் நண்பர்கள் இடுகைகளை வாசிப்பது மீண்டும் எனது தினசரிக் கடமைகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நம்புகிறேன். இப்போதைக்கு ஒரு "ஆஜர் சார்!" மட்டும் சொல்லிக்கொண்டு விடை பெறுகிறேன். :-)

    ReplyDelete
  35. உண்மையா அல்லது கற்பனையா
    தெரியவில்லை.
    உண்மையானால் ஆழ்ந்த
    அனுதாபங்கள்
    கற்பனையானால் மனம் கனிந்த
    பாராட்டுக்கள்
    ஏங்க வை கோ உங்களை
    எங்க வேணாலும் பாக்கிறேன் ஆனா எங்க வலைப்பக்கம் வரமாட்டீங்களா
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. ஐயா அருமை.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  37. நீ விரும்பும் அரசகுமாரியைவிட உன்னை விரும்பும் சாதாரணப்பெண்ணே, அதுவும் பெற்றோர் பார்த்து மணமுடிக்கும் பெண் என்றைக்கும் நன்றே.

    ReplyDelete
  38. எளிமையான நடையில் வலுவான ஒரு அற்புத கதை. ஒவ்வொருவர்க்கும் இது மாதிரியான ஒரு nostalgic நிகழ்வு இருக்கும். என் வரையில், ஒரு கிழிந்த/கிழிக்கப்பட்ட 2 ரூபாய் நோட்டு அவள் நினவைத் தாங்கியபடி இருபத்திரண்டு ஆண்டுகளாய் என்னோடு இருக்கிறது....பிரிய முடியாமல்.

    ReplyDelete
  39. இந்தக் கதையின் மூன்றாம் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடரைப்பெரிதும் உற்சாகத்துடன் வரவேற்று பாராட்டியுள்ள, அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தொடர்ந்து வாருங்கள்.

    உற்சாகம் தாருங்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  40. ஸ்டோர் வாழ்க்கையில் அப்போதிருந்த பயம் இப்போது தெளிந்து விட்டது போலிருக்கிறது. வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. பணமே வாழ்க்கை அல்ல என்பதை அந்த பெண்ணின் கதாபாத்திரம் மூலம் உணர்த்துகின்றார் எழுத்தாளர் VGK.

    ReplyDelete
  41. அன்புள்ள திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா, வாங்க, வணக்கம்.

    //பணமே வாழ்க்கை அல்ல என்பதை அந்த பெண்ணின் கதாபாத்திரம் மூலம் உணர்த்துகின்றார் எழுத்தாளர் VGK.//

    தங்களின் இந்த விமர்சனம் என்னை மிகவும் மகிழ்விக்கிறது, ஐயா.

    அந்தப்பெண்ணின் கதாபாத்திரம் எனக்கே மிகமிகப் பிடித்தது தான் ஐயா.

    அது வெறும் கதாபாத்திரம் மட்டுமல்ல.

    கதாநாயகன் மேல் அளவற்ற அன்பு வைத்துவிட்டு, உரிமை கொண்டாட முடியாத சூழ்நிலையில், சிக்கித்தவிக்கும் ஓர் பெண்ணின் உண்மையான மனநிலை ... மனப்போராட்டம்.

    பணமே வாழ்க்கை அல்ல. அவளின் தூய்மையான, தெளிவான, அன்புக்கும், பாசத்திற்கும், அவள் தன் மனதில் கோட்டைகட்டி எதிர்பார்த்துக் காத்திருந்த ஆவலுக்கும் முன்னால், பணமெல்லாம் ஓர் தூசு போலத்தான்.

    ஆனால் இன்றைய யதார்த்த வாழ்க்கைச் சூழ்நிலையில் பணமில்லாமல் என்னதான் நம்மால் பெரிதாகச் செய்துவிட முடிகிற்து?

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  42. போன பாகத்தில் உங்களின் கற்பனை நாயகி. இந்தப் பகுதியில் உங்களை கற்பனைக் நாயகனாக்கி மகிழ்ந்தவளின் மனதை நெகிழ வைக்கும் கடந்த காலக் கதை.

    இப்போது கடற்கரையில் நீங்கள் பார்க்கும் பெண்மணி யார்?

    எப்படி முடிக்கப் போகிறீர்கள் என்று ஆவலுடன் அடுத்த பாகத்தை படிக்க விரைகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Ranjani Narayanan December 15, 2012 1:08 AM
      //போன பாகத்தில் உங்களின் கற்பனை நாயகி. இந்தப் பகுதியில் உங்களை கற்பனைக் நாயகனாக்கி மகிழ்ந்தவளின் மனதை நெகிழ வைக்கும் கடந்த காலக் கதை.

      இப்போது கடற்கரையில் நீங்கள் பார்க்கும் பெண்மணி யார்?

      எப்படி முடிக்கப் போகிறீர்கள் என்று ஆவலுடன் அடுத்த பாகத்தை படிக்க விரைகிறேன்.//

      அடடா, ஏன் இந்த அவசரம்?

      மனதில் தோன்றும் எண்ணங்களைக் கருத்துக்களாக, முழுவதும் வடிக்க விடாமல், கதையின் விறுவிறுப்பு உங்களை அடுத்த பாகத்தைப் படிக்கத் துரத்துகிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

      அதையே என் இந்தப்படைப்பின் மாபெரும் வெற்றியாக நினைத்து மகிழ்கிறேன், மேடம்.

      அன்புடன்,
      VGK

      Delete
  43. அன்பின் வை.கோ - மலரும் நினைவுகள் - 40 ஆண்டுகள் கழித்து - ஒருமுகமாகக் காதலித்த பெண் - தங்களைக் கண்டு இயல்பாகப் பழகி - விருந்துண்டு மகிழ்ந்து - அடடா என்ன நிகழ்வுகள் - 1000 / 500 ரூபாய்க் கட்டுகள் - ம்ம்ம்ம் பலே பலே - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா)January 8, 2013 6:34 AM
      //அன்பின் வை.கோ - மலரும் நினைவுகள் - 40 ஆண்டுகள் கழித்து - ஒருமுகமாகக் காதலித்த பெண் - தங்களைக் கண்டு இயல்பாகப் பழகி - விருந்துண்டு மகிழ்ந்து - அடடா என்ன நிகழ்வுகள் - 1000 / 500 ரூபாய்க் கட்டுகள் - ம்ம்ம்ம் பலே பலே - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா//

      தங்களின் அன்பான வருகைக்கும் ’ம்ம்ம்ம் பலே பலே’ கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      Delete
  44. நல்ல வேளையாக நான் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாததும் நல்லது தானாம். அவளின் துரதிஷ்டம் என்னையும் சுகப்பட வைக்காமல் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்குமாம். ஏதேதோ கற்பனைகள் செய்து பார்த்திருக்கிறாள்...பாவம்.//

    அவள் உண்மையாகவே காதலித்திருக்கிறாள் என்பது தெரிகிறது.

    வரிக்கு வரி அருமை.
    ஒரு நாடகம் நடப்பது போலும், அந்த நாடகத்தைக் கண்ணெதிரே ரசித்துப் பார்ப்பது போலும் தோன்றுகிறது எனக்கு.

    ReplyDelete
  45. JAYANTHI RAMANIJanuary 9, 2013 2:25 AM

    *****நல்ல வேளையாக நான் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாததும் நல்லது தானாம். அவளின் துரதிஷ்டம் என்னையும் சுகப்பட வைக்காமல் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்குமாம். ஏதேதோ கற்பனைகள் செய்து பார்த்திருக்கிறாள்...பாவம்.*****

    //அவள் உண்மையாகவே காதலித்திருக்கிறாள் என்பது தெரிகிறது.

    வரிக்கு வரி அருமை. ஒரு நாடகம் நடப்பது போலும், அந்த நாடகத்தைக் கண்ணெதிரே ரசித்துப் பார்ப்பது போலும் தோன்றுகிறது எனக்கு.//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete
  46. உணர்ச்சிகள் எக்காலத்திலும் அழகானவைகளே.

    ReplyDelete
  47. நாம விரும்புகிறவர்களைவிட நம்மை விரும்பு கிறவர் வாழ்க்கைத்துணையாக அமைந்தால வாழ்க்கை சுவாரஸ்யமாக அமையுமாமே.. அப்படியா?

    ReplyDelete
  48. நெகில்ச்சியான மலரும் நினைவுகள். . மனசே கனத்து போவுது.

    ReplyDelete
  49. 40--- வருஷம் கழித்து சந்திப்பவர்களின் மன உணர்வுகளை ரொம் நன்றாக சொன்னீர்கள். உங்களின் பல கதைகளையும் படிக்கும்போது அந்தக்கதையின் நாயகனாக உங்களையே நினைக்கத்தோன்றும் சொந்த அனுபத்தைதான் இவ்வளவு ரசனையுடன் எழுத முடியும் என்றெல்லாம் நினைக்கத்தோன்றும. அவங்க வெறும் பத்து ரூவா நோட்டு மட்டும் எடுத்து பேர் எழுதி செலவு செய்யாம வச்சுக்க சொன்னது அபிரிமிதமான அன்பின் வெளிப்பாடு

    ReplyDelete
  50. கதாநாயகனை விரும்பிய நாயகி ஃப்ளாஷ் பேக் வந்தாச்சு...என்ன ஒரு மன நெருக்கம் குறையாத தன்மை...இப்படிக்கூட இருக்க முடியுமா? எப்படி இருக்கும்..ஆஹா...

    ReplyDelete
  51. ஃப்ளாஷ்பேக் மலர்ந்த விதம் அருமை!

    ReplyDelete
  52. அந்த பெண்மணியை நினைத்து பரிதாபமாகவும் இருக்கு.பெர்மையாகவும் இருக்கு.. இவ்வளவு வருஷங்களுக்கு பிறகு சந்திக்கும் மனதுக்கினியவரை கண்டதும் அழுது புலம்பி அவரை சங்கட படுத்தாமல் அவருடன் ஹோட்டல் சென்று டிபன் சாப்பிட்டு உரிமையுடன் பர்ஸிலிருந்து பணம் எடுத்து பூ...சப்பல்.. வாங்கி அணிந்து கொண்டு சந்தோஷமாக அன்பு அக்கறை யுடன் வழி அனுப்பி வைத்தது. ரொம்பவே நெகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... October 23, 2016 at 10:16 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அந்த பெண்மணியை நினைத்து பரிதாபமாகவும் இருக்கு. பெருமையாகவும் இருக்கு..//

      ஆம். பெருமைக்குரியவள். அன்புக்குரியவள். அவள் மனஸு அப்படித் தங்கமாக உள்ளது.

      //இவ்வளவு வருஷங்களுக்கு பிறகு சந்திக்கும் மனதுக்கினியவரை கண்டதும் அழுது புலம்பி அவரை சங்கட படுத்தாமல்//

      தான் சங்கடப்பட்டாலும், அவரை சங்கடப்படவே விட மாட்டாள். அவளுக்கு பிறரை சிரிக்க வைக்க மட்டுமே தெரியும். பிறர் அழுவதைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாது. அப்படியொரு மிக உயர்ந்த கதாபாத்திரமாக அவளை நான் செதுக்கியுள்ளேன், இந்தக் கதையில்.

      //அவருடன் ஹோட்டல் சென்று டிபன் சாப்பிட்டு உரிமையுடன் பர்ஸிலிருந்து பணம் எடுத்து பூ...சப்பல்.. வாங்கி அணிந்து கொண்டு சந்தோஷமாக அன்பு அக்கறையுடன் வழி அனுப்பி வைத்தது. ரொம்பவே நெகிழ்ச்சி..//

      அக்கறையுடனும் நெகிழ்ச்சியுடனும் இந்தக்கதையைத் தாங்கள் படித்து கருத்தளித்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      Delete
  53. Muthuswamy MN சிறு கதை அருமை. ஸ்டோரில் கிட்டத்தட்ட அநேக இளைஞர்களின் மனதை படம் எடுத்து காட்டுகிறது.👍👃✌

    - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour in that Store Life during 1965 to 1980)

    Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true

    ReplyDelete
  54. Mail message received today 31.03.2017 at 15.46 Hrs.
    =====================================================

    அன்பின் கோபு ஸார்,

    சில கதைகள் படிக்கும் போதே மறந்து போகும். சில கதைகள் படித்ததும் மறந்து போகும்.... சில கதைகள் மணிக்கணக்கில் மனத்துள் நிற்கும். சிலவை நாட்கள் ... வாரங்கள்.... மாதங்கள்... ஆண்டுகள்... என்று நீளும்.

    சில கதைகள் "மறக்க மனம் கூடுதில்லையே..."

    கூடவே பிரயாணம் செய்யும் மனத்துள் ஒரு ஓரத்தில்... ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே கற்றுத் தரும். இதோ..... மனம் மறக்காத பல கதைகளில் இதுவும் ஒன்றாகி..... என்ன சொல்வது.... எழுத்துக்கள் ஒன்றாகக் கூடி..... ஏதோ சத்திய பிரமாணம் செய்து கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிந்தனை.... சூடான கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி பிரமாதம்.....! அன்புடன்

    இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
    பரம ரஸிகை

    ReplyDelete
  55. இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காகத் தான் 26.03.2014 அன்று அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகளும் 48 மணி நேரங்களும் கழித்து இன்று (28.03.2018) தன் வலைத்தளத்தினில் ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.

    அவரின் விமர்சனத்தைப்படிக்க இதோ இணைப்பு:
    http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk10.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete