என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 4 ஜூன், 2011

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! [ பகுதி 2 of 3]


அனுமன் கோயில் கட்டப்படும்போதும், தன்னால் ஆன திருப்பணிகள் செய்து உதவிய கண்ணாம்பாவை, ஒரு காவலாளிபோல, அந்தக்கோயில் வளாகத்தினுள்ளேயே தங்கிக்கொள்ள அவ்வூர்ப்பொதுமக்கள் அனுமதி வழங்கினர்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஒருசில வசதி படைத்த பக்தர்கள், கண்ணாம்பாவுக்கும் உடுத்திக்கொள்ள புது வஸ்திரங்கள் வாங்கித்தந்து, இனிப்புகள் பலகாரங்கள் முதலியன தந்து உதவுவதுண்டு.  கண்ணாம்பா தானாக யாரையும் எதுவும் கேட்பது கிடையாது. கோயிலுக்கு தன்னால் முடிந்த சேவைகள் செய்வதிலேயே ஆத்ம திருப்தி அடைந்து வந்தாள்.

வாழவழியின்றி அகதியாக, அனாதையாக வந்தவளுக்கு, அந்தப்பிள்ளையார் மற்றும் அனுமார்சாமியின் கருணையினால், அவளும் கோயிலிலேயே தங்கிக்கொள்ள ஒரு ஆதரவும், புகலிடமும் அளிக்கப்பட்டதில் அவளுக்கும் திருப்தியே.  

தங்க இடம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த அனுமாரும், பிள்ளையாரும் அவளைக் கைவிடாமல், பட்டினி போடாமல் காத்தும் வந்தனர். அங்கிருந்த குருக்கள் தயவால், ஒண்டிக்கட்டையான இவளின் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை உத்தேசித்து, அவ்வப்போது அவள் வயிற்றைக் கழுவிக்கொள்ள தேங்காய் மூடிகள், வாழைப்பழங்கள், வடைகள், சர்க்கரைப்பொங்கல், சுண்டல், தயிர்சாதம், கொழுக்கட்டை என எதாவது பிரஸாதமாக அவளுக்கும் கிடைத்து வந்தன.

தனக்குக்கிடைக்கும் இந்த தின்பண்டங்களைத் தான் மட்டுமே சாப்பிடாமல், தன் குழந்தைகள் போன்ற மாருதிக்கும், அனுமந்துவுக்கும் என ஒதுக்கித் திண்ணையின் ஒரு ஓரத்தில் மூடி வைத்திருப்பாள். 

இரவு நேரங்களில் எங்கேயோ போய்த்தங்கும் அந்த குறிப்பிட்ட இரு குரங்குகள் மட்டும், காலை சுமார் பத்து மணியளவில், கண்ணாம்பாக்கிழவியின் திண்ணைக்கு ஆஜராகி,உரிமையுடன் அந்தத்திண்பண்டங்களை எடுத்துச்சாப்பிட்டு விட்டு, திரும்பச்செல்லும் சமயம் கண்ணாம்பாவின் கைகளைத்தொட்டு (நன்றி தெரிவிப்பதுபோல) தடவிக் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

காலம் மாறமாற காட்சிகளும் மாறுவதுபோல, இப்போது அந்தக்கோயிலைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் மிகவும் நாகரீகமாகப்போய்விட்டன. 

ஒரே குப்பை மேடாகத் தெரு நாய்களும், பன்றிகளும் கூட்டம் கூட்டமாகப்படுத்திருந்த இடங்களும், திறந்தவெளிக்கழிப்பிடமாக இருந்த அசிங்கமான ஒதுக்குப் புறப்பகுதிகளும், அவற்றைத்தாண்டி இருந்த விளை நிலங்களும், இன்று ஃப்ளாட் போடப்பட்டு, பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிப்போய்விட்டன.    மனைகளின் மதிப்பும் விலைகளும் பலமடங்கு அதிகமாகி விட்டன. வாகனங்களின் வருகை மிகவும் அதிகரித்து, அமைதியாக இருந்த அந்தப்பகுதி இப்போது ஒரே இரைச்சலாகவும், பரபரப்பாகவும் மாறி விட்டது. 

புதுப்புது மனிதர்கள் நடமாடத்தொடங்கி விட்டனர். ரோட்டிலிருந்த கைவண்டிகள், ரிக்‌ஷாக்கள், குதிரை வண்டிகள், மாட்டு வண்டிகள் எல்லாம் காணாமல் போய், மோட்டர் பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள், சிற்றுந்துகள், பேருந்துகள் என கணக்கிலடங்காமல் ஓடத்துவங்கின. 

ரோட்டில் இப்போது காலாறக்கைவீசி காற்று வாங்கியபடி நடக்க முடியவில்லை. எங்கும் ஒரே கூட்டமாக இருந்தது. பெரிய பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள் என கடைகளாக இல்லாமல் கடல்களாகக் காட்சியளித்தன. பெரும்பாலன குடிசைகள் எல்லாம் அகற்றப்பட்டு விட்டன. ரோட்டோரக்கடைகளும், டீக்கடைகளும், சிறு வியாபாரிகளும் போன இடம் தெரியவில்லை.

மரத்திலிருந்து தவறி விழுந்த குரங்கொன்றுக்கு இறுதி மரியாதை செலுத்திக் கோயில் எழுப்பிய நல்ல மனிதர்கள் அன்று இருந்தார்கள்.  இன்று பைக், கார், லாரி, பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது. 

சாலை விபத்தில் இறப்பவரைச்சுற்றி கூட்டம் போட்டு போக்குவரத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது; போலீஸ்காரர்கள் வந்து போட்டோ படம் எடுத்து, உயிர் இருக்கிறதா இல்லையா என்று பார்க்க அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வரை, யாரும் விபத்தில் அடிபட்டுக்கிடப்பவரைத் தொடக்கூடாது என்று ரொம்பவும் சட்டம் படித்தவர்கள் போல சொல்லித்திரியும் படிப்பறிவு பெற்றவர்களைப் பார்க்கும் கண்ணாம்பாவுக்கு மிகவும் வேதனையாக இருக்கும். 

“யார் பெற்ற பிள்ளையோ” என்று துடிதுடித்துப்போவாள் அது போன்ற விபத்துக்களைப் பார்க்கும்போது.

அங்கு கோயிலுக்குப்பக்கத்திலேயே உள்ள ஆரம்பப்பளியில் படிக்கும் குழந்தைகள் தினமும் கோயிலுக்கு வந்து போவதுண்டு. குறிப்பாக தேர்வு எழுதப்போகும் போது இந்தக்கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுப்போவதுடன், இந்தக்கண்ணாம்பாக்கிழவியையும் வணங்கி ஆசிபெற்றுச் செல்வது வழக்கம். 

அவ்வாறு தன்னிடம் வரும் ஒவ்வொரு குழந்தைகளையும் தொட்டுத்தடவி, “நல்லாப்படியுங்க, நிறைய மார்க் வாங்குங்க” என ஆசி கூறி வாழ்த்தி அனுப்பி வைப்பாள்.

கண்ணாம்பாவுக்கு, இப்போது சுமார் எண்பது வயது இருக்கும். நாளுக்கு நாள் உடம்பில் தெம்பு குறைந்து வருகிறது. தான் இதுவரை சேர்த்து வைத்துள்ள சொற்பத்தொகையில், அந்தப்பிள்ளையாருக்கு ஒரு அர்ச்சனையும், அந்த அனுமார்சாமிக்கு ஒரு வடைமாலையும் போட வேண்டும் என்ற தன்னுடைய வெகுநாள் ஆசையை அந்தக்கோயில் குருக்கள் ஐயாவிடம் கூறினாள்.  

“பேஷா, நாளைக்கே செய்து விடலாம், கண்ணாம்பா; உன்னால் முடிந்ததைக்கொடு போதும். மீதியை நான் போட்டு ஜோராகச் செய்து கொடுத்து விடுகிறேன்” என்றார் அந்தக்குருக்கள்.

தொடரும் 

34 கருத்துகள்:

 1. தொடர் சுவாரஸ்யமாக போய்கொண்டிருக்கிறது.. தொடருங்கள் நண்பரே..

  பதிலளிநீக்கு
 2. “நல்லாப்படியுங்க, நிறைய மார்க் வாங்குங்க” என ஆசி கூறி வாழ்த்தி அனுப்பி வைப்பாள்./

  கண்ணாம்பா கிழவியின் நல்ல வாழ்த்தும் மனம் நெகிழச்செய்கிறது.

  பதிலளிநீக்கு
 3. ///பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது./// இயந்திரமய வாழ்வு என்கலாமா ...!!!

  தொடருகிறேன் இறுதி பாகத்துக்கு ....

  பதிலளிநீக்கு
 4. வித்தியாசமான படைப்பு .பல்வேறு தகவல்கள் . நல்ல விறு விறுப்பு.

  பதிலளிநீக்கு
 5. கதை நன்றாக விறுவிறுப்பாகப் போகிறது
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. கண்ணாம்பாக்கிழவியின் திண்ணைக்கு ஆஜராகி,உரிமையுடன் அந்தத்திண்பண்டங்களை எடுத்துச்சாப்பிட்டு விட்டு, திரும்பச்செல்லும் சமயம் கண்ணாம்பாவின் கைகளைத்தொட்டு (நன்றி தெரிவிப்பதுபோல) தடவிக் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

  அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் , யாருமற்றவர்களுக்கு அந்த ஆண்டவனே துணை என்பதி சொல்லி செல்லும் சந்தன வரிகள் ஐயா இவை

  மரத்திலிருந்து தவறி விழுந்த குரங்கொன்றுக்கு இறுதி மரியாதை செலுத்திக் கோயில் எழுப்பிய நல்ல மனிதர்கள் அன்று இருந்தார்கள். இன்று பைக், கார், லாரி, பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது

  உண்மை மிக உண்மை காலம் எல்லோரையும் மாற்றுகிறது , எல்லாவற்றையும் மாற்றுகிறது

  நல்ல மனம் கவர்ந்த தொடர் கதை ஐயா

  பதிலளிநீக்கு
 7. //இன்று பைக், கார், லாரி, பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது.//

  ஆமென் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 8. Etho pakkathiilirundhu nnankalum paarthk kondieuppadhu pol svaarasmagap pogirathu!,

  பதிலளிநீக்கு
 9. மறுபடியும் தொடர்கதை தொடருங்கோ தொடருங்கோ....

  பதிலளிநீக்கு
 10. அழகிய அனுபவங்கள் தொடரட்டும்! இனிமையான தொடர்! உண்மையில் யாதும் ஊரே யாவரும் கேளீர்தான்!!

  பதிலளிநீக்கு
 11. ரசித்து எழுதுகிறீர்கள்.. அதனால் தான் எங்களால் ரசனையுடன் படிக்க முடிகிறது..
  நல்ல ஆழமான எழுத்து.. விவரிப்பில் இம்மியும் பிசகாமல் சூழல், கதாபாத்திர வர்ணனை.. அற்புதம்

  பதிலளிநீக்கு
 12. நானென்ன சொல்ல கோபு சார். பேஷ்.!தொடருங்கள்.தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. ஜிஎம்பி ஸார் சொன்னதையே நானும் வழி மொழிகிறேன்!!

  பதிலளிநீக்கு
 14. இது போன்ற வாழ்வியல் கதைகள் சொல்லும் விசயம் ஒன்றுதான், ஒவ்வொரு உயிருக்கும் முடிந்தவரை வாழ உரிமை உண்டு. விருப்பமும் உண்டு. அதை நாம் கெடுக்காமல் இருந்தால் போதும். நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 15. இந்த இரண்டாவது பகுதிக்கும் அன்புடன் வருகை தந்து, அரிய பல கருத்துக்களை அழகாகக் கூறி, என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பான உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 16. தொடர் சுவாரஸ்யமாக போய்கொண்டிருக்கிறது.. தொடருங்கள் ..

  பதிலளிநீக்கு
 17. அடுத்த அத்தியாயத்தில் தான், கொடுத்த தலைப்புக்கு நியாயம் வழங்குகிற மாதிரி முடிக்கப் போகிறீர்கள், போலிருக்கு! அதை நம்பிக்கை தருகிற மாதிரி, உற்சாகத்தோடு முடிக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 18. தாமதமாய் வந்ததற்கு வருந்துகிறேன். தொடர் நன்றாக இருக்கிறது. அடுத்த பகுதியும் இப்போது படித்து கருத்திடுகிறேன்...

  பதிலளிநீக்கு
 19. குரங்குகளின் புரிந்துணர்வு அன்பு நெகிழ வைக்கிறது. விபத்துகள் பற்றி சொல்லப் பட்டுள்ள கருத்துகள் உண்மை.

  பதிலளிநீக்கு
 20. மாலதி said...
  //தொடர் சுவாரஸ்யமாக போய்கொண்டிருக்கிறது.தொடருங்கள்//

  மிக்க் நன்றி.
  ==========================

  ஜீவி said...
  //அடுத்த அத்தியாயத்தில் தான், கொடுத்த தலைப்புக்கு நியாயம் வழங்குகிற மாதிரி முடிக்கப் போகிறீர்கள், போலிருக்கு! அதை நம்பிக்கை தருகிற மாதிரி, உற்சாகத்தோடு முடிக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது!//

  தங்களின் அன்பான வருகைக்கும், அரிய கருத்துக்களுக்கும், நியாயமான எதிர்பார்ப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் பின்னூட்டம் எனக்கு உற்சாகம் தருவதாக உள்ளது.
  அடிக்கடி வருகை தாருங்கள். அன்புடன் vgk

  ==========================

  வெங்கட் நாகராஜ் said...
  //தாமதமாய் வந்ததற்கு வருந்துகிறேன். தொடர் நன்றாக இருக்கிறது. அடுத்த பகுதியும் இப்போது படித்து கருத்திடுகிறேன்...//

  மிகவும் சந்தோஷம் வெங்கட்

  ===========================


  ஸ்ரீராம். said...
  //குரங்குகளின் புரிந்துணர்வு அன்பு நெகிழ வைக்கிறது. விபத்துகள் பற்றி சொல்லப் பட்டுள்ள கருத்துகள் உண்மை.//

  மிகுந்த சந்தோஷமும், நன்றிகளும்
  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்!

  =======================
  June 6, 2011 10:54 PM

  பதிலளிநீக்கு
 21. //மரத்திலிருந்து தவறி விழுந்த குரங்கொன்றுக்கு இறுதி மரியாதை செலுத்திக் கோயில் எழுப்பிய நல்ல மனிதர்கள் அன்று இருந்தார்கள். இன்று பைக், கார், லாரி, பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது.
  //

  முற்றிலும் உண்மை .. இதுதான் இன்றைய நிலமை.. வாழ்த்துக்கள். வயதை சொல்லி அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளீர்கள்..

  பதிலளிநீக்கு
 22. மதுரை சரவணன் said...

  //முற்றிலும் உண்மை .. இதுதான் இன்றைய நிலமை.. வாழ்த்துக்கள். வயதை சொல்லி அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளீர்கள்..//

  தங்கள் அன்பான வருகைக்கும், இன்றைய உண்மை யதார்த்த நிலமையை ஏற்றுக்கொண்டு எழுதிய அரிய கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும், அடுத்த கட்ட எதிர்பார்ப்புக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 23. காலம் மனித வாழ்க்கையில் செய்யும் மாற்றங்களை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார் வைகோ.

  பதிலளிநீக்கு
 24. அவள் எவ்வளவு வறுமையிலும் கஷ்டத்திலும் இருந்த போதும் கூட பிராணிகள் மேல் எவ்வளவு வாத்ஸல்யத்துடன் இருக்கா..

  பதிலளிநீக்கு
 25. //வாழவழியின்றி அகதியாக, அனாதையாக வந்தவளுக்கு, அந்தப்பிள்ளையார் மற்றும் அனுமார்சாமியின் கருணையினால், அவளும் கோயிலிலேயே தங்கிக்கொள்ள ஒரு ஆதரவும், புகலிடமும் அளிக்கப்பட்டதில் அவளுக்கும் திருப்தியே. //

  கண்ணாம்பாவோட நல்ல மனசுக்கு இதெல்லாம் கிடைக்காமத்தான் இருக்குமா என்ன?

  சுவாரசியம் சிறிதும் குறையாமல் போகிறது கதை.

  பதிலளிநீக்கு
 26. இந்த அர்ச்ச்ன வட மாலைலாம் எதுக்காக பண்ணுராங்கோ.வெளன்கிலியே.

  பதிலளிநீக்கு
 27. ஆண்டவன் மேல பாரத்த போட்டு அவன் பார்த்துப்பான் என்ற நம்பிக்கை வீண் போகலை. தங்குவதற்கும் வயிற்று பாட்டுக்கும் வழி காட்டி விட்டான் ஆண்டவன்.

  பதிலளிநீக்கு

 28. “பேஷா, நாளைக்கே செய்து விடலாம், கண்ணாம்பா; உன்னால் முடிந்ததைக்கொடு போதும். மீதியை நான் போட்டு ஜோராகச் செய்து கொடுத்து விடுகிறேன்” என்றார் அந்தக்குருக்கள்.// இதுல ஏதொ சொல்ல வர்ற மாதிரி இருக்கே..?

  பதிலளிநீக்கு
 29. கால மாற்றத்தை கண்முன் நிறுத்துகின்றீர்! அருமை!

  பதிலளிநீக்கு
 30. இங்கு வருகிறவர்கள் எல்லாருமே கதையை ஆர்வமாக ரசித்து பின்னூட்டமும் ரசனையாக எழுதுகிறார்கள். கதையினை கொண்டுசெல்லும் பாங்கு நல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு