என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 12 ஜூன், 2011

வ டி கா ல் [ பகுதி 3 of 4 ]

முன்கதை முடிந்த இடம்:

ஒரு வடிகால் தேடித்தான், என்னிடம் இன்று வந்திருப்பாரோ! அவர்மேல் இரக்கம் கொண்டு, அவருடன் மிகவும் கனிவாகவே பேசினேன்.


--------------------------------------
தொடர்சி ....  பகுதி-3


”தனிமையை இனிமையாகக் கழிக்க புத்தகம் போன்ற ஒரு சிறந்த நண்பன் கிடையாது, சார்; மேலும் ஒருசில நல்ல புத்தகங்கள் தங்களுக்கு பொழுது போக்காக படிப்பதற்கு தரட்டுமா” என்றும் கேட்டேன்.

“நீங்கள் எழுதி சமீபத்தில் வெளியிட்டதாகச் சொல்லி என் மாப்பிள்ளை கொடுத்த இரண்டு புத்தகங்களிலேயே, இதுவரை நான் எந்தக்கதையையுமே படிக்கவில்லை” என்றார்.

இதைக்கேட்டதும் சற்றே அதிர்ச்சியடைந்த நான், ”என் கதைப் புத்தகங்களைப் படித்ததாகவும், அதனால் தான் என்னை நேரில் சந்திக்க வந்ததாகவும் சொன்னீர்களே” என்றேன்.  

தங்கள் புத்தகங்கள் இரண்டிலும், பின்புற அட்டையில் “ஆசிரியரைப்பற்றி” என்ற குறிப்புகள் இருந்தன. தங்கள் புகைப்படமும், முழு விலாசமும் இருந்தது. அவற்றை மட்டும் தான் படித்தேன்; உடனே உங்களை சந்திக்க ஓடோடி வந்தேன்” என்றார்.

இதைக்கேட்டதும், பொதுவாக ஒரு எழுத்தாளருக்கு ஏற்படும் எரிச்சலே எனக்கும் ஏற்பட்டது.

அவரைப் பொருத்தவரை அந்தப்புத்தகத்தின் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களே போதுமானதாகும். அவர் சந்திப்பதற்கும், அளவளாவுவதற்கும்.  மனம் திறந்து மனக்குமறல்களைக் கொட்டவும் ஒரு வடிகால் வேண்டும், அவருடைய தேவை அவ்வளவுதான். 

புத்தக அட்டையை மட்டும் படித்துவிட்டு இன்று என்னையே வடிகால் ஆக்கிக்கொண்டுள்ளார் என்பது, மெதுவாக எனக்கும் புரிய வந்தது.

“அப்புறம் என்ன சார், எதற்கும் கவலையே படாதீர்கள், ஆண்டவன் இருக்கிறார்” என்றேன் வாயில் வெளிப்பட்ட கொட்டாவியை கை விரல்களால் சொடுக்கியபடியே.

அவரும் புறப்படத் தயாரானார். 

“ஆண்டவனைத்தான் நம்பியுள்ளேன். தினமும் ஒரு ரவுண்ட் இங்கு அக்கம்பக்கத்தில் உள்ள எல்லாக்கோயில்களுக்கும் போய் வந்து விடுவேன்” என்றவர், “இன்று ராத்திரி ரொம்ப நேரம் ஆகிவிட்டது; நான் மேலும் ஒரு வாரமோ பத்து நாட்களோ தான் இந்த ஊரில் இருப்பேன்; நீங்க ஃப்ரீயாக இருக்கும்போது மறக்காமல் என்னைக்கூப்பிடுங்கோ; இன்று பேச விட்டுப்போன விஷயங்களையெல்லாம் பேசிக்கலாம்” என்றார், தன் காலில் செருப்பை அணிந்தவாறே.

“பார்த்து ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்” என்றேன்.

‘ஓ.கே., சார், குட் நைட், ஸீ... யூ” என்று சொல்லிவிட்டு பிரிந்து செல்லவே மனம் இல்லாதவராக, ஒருவழியாக, விடை பெற்றுச்சென்று விட்டார்.

நேராக மாடிப்படிகளில் ஏறி தன் [மூன்றாவது மாடி மூன்றாவது வீடு] வீட்டுக்குச் செல்லாமல், மாடிப்படிகளில் இறங்கி கீழே போவதை கவனித்தேன். விளக்கை அணைத்துவிட்டு, என் வீட்டு பால்கனி வழியாக, எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் பிரதான வாயில் பக்கம் நோக்கினேன். 

இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்த வாட்ச்மேனை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தார். பிறகு அவனையும் அழைத்துக்கொண்டு, அவர் தெருவில் எங்கோ நடந்து செல்வதையும் கவனித்தேன்.

மறுநாள் காலையில் வாட்ச்மேனிடம் இதுபற்றி விசாரித்தேன்.

“அந்த வயதானவருக்கு இரவெல்லாம் துக்கமே வருவதில்லை, சார்; தினமும் நள்ளிரவு 12 மணிக்கு என்னை வந்து எழுப்புவார். தெருக்கோடி டீக்கடைக்கு அழைத்துச்செல்வார். டீ வாங்கித்தருவார். தானும் டீ குடிப்பார். பிறகு என்னுடன் விடியவிடிய பேசிக்கொண்டே இருப்பார். கேட்டால் வாட்ச்மேன் வேலை பார்க்கும் நீ இரவில் இப்படித்தூங்கி வழியலாமா என்பார்” என்றான்.

“அந்தப்பெரியவர் சொல்லுவதும் நியாயம் தானே வாட்ச்மேன், இரவில் நம் வீடுகளைப் பாதுகாக்க வேண்டிய நீ தூங்கலாமா” என்றேன், நானும்.

”பெரும்பாலும் முழிச்சுகிட்டு தான் சார் இருப்பேன், நடு ராத்திரி லேசாக்கண்ணைச் சொக்க ஆரம்பிக்கும், அப்போது தான் சற்றே கீழே சாய்வேன்.  அப்போ பார்த்து தான் கரெக்டா இந்தப்பெரியவர் வந்து என்னைத் தட்டி எழுப்பிவிடுவார்; 

அவருக்கு ஏதேதோ மனவருத்தங்கள் என்று நான் நினைக்கிறேன், சார்; தன்னைப்பற்றியும், தன் குடும்பத்தைப்பற்றியும், தான் பேங்கில் வேலை பார்த்தது பற்றியும், தான் சென்று வந்துள்ள பல ஊர்களைப்பற்றியும், விலைவாசிகள் பற்றியும், அரசியல் கட்சிகள் பற்றியும், ஊழல், லஞ்சலாவண்யங்கள் பற்றியும், ஏதேதோ கதைகள் விடியவிடிய சொல்லிக்கொண்டு தானும் தூங்காமல் என்னையும் தூங்க விடாமல் செய்துவிடுவார், சார்” என்றான்.

“பிறகு எப்போது தான் வீட்டுக்குப்போவார்? வீட்டில் உள்ளவர்கள் இவரைத் தேட மாட்டார்களா?” என்றேன்.


தொடரும்

34 கருத்துகள்:

 1. பெரியவர் புரியாத புதிராய் இருக்கிறாரே… சஸ்பென்ஸ் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

  இரவில் தூக்கம் வராமல் இருந்தால் கஷ்டம் தான்…. அப்படித் தூங்கமுடியாதபோது பேசக் கூட முடியாதது அதை விட கஷ்டம்…

  பதிலளிநீக்கு
 2. கதை மிகவும் சுவாரஸ்யமாக போய்கொண்டிருக்கிறது..
  தொடருங்கள்..
  நன்றி...

  பதிலளிநீக்கு
 3. அவர் சந்திப்பதற்கும், அளவளாவுவதற்கும். மனம் திறந்து மனக்குமறல்களைக் கொட்டவும் ஒரு வடிகால் வேண்டும், அவருடைய தேவை அவ்வளவுதான். //

  கஷ்டம்… கஷ்டம்…!!

  பதிலளிநீக்கு
 4. புத்தக அட்டையை மட்டும் படித்துவிட்டு இன்று என்னையே வடிகால் ஆக்கிக்கொண்டுள்ளார் என்பது, மெதுவாக எனக்கும் புரிய வந்தது.//

  nice description.

  பதிலளிநீக்கு
 5. வாட்ச்மேன் வேலை பார்க்கும் நீ இரவில் இப்படித்தூங்கி வழியலாமா என்பார்” என்றான்.
  “அந்தப்பெரியவர் சொல்லுவதும் நியாயம் தானே வாட்ச்மேன், இரவில் நம் வீடுகளைப் பாதுகாக்க வேண்டிய நீ தூங்கலாமா” என்றேன்..//

  நியாயம் தானே??

  பதிலளிநீக்கு
 6. ஒரு வேளை பகலில் தூங்குவாரோ... மனம் விட்டு பேசினால் சரியாகும்.

  பதிலளிநீக்கு
 7. எங்களுக்கும் அந்த பெரியவரைப்பற்றி
  மிகச் சரியாக அறிந்து கொள்ளவேண்டும்
  என்ற சுவாரஸ்யம்
  கூடிக்கொண்டே போகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. பெரியவரின் தூக்கமின்மை நம்மையெல்லாம் எழுப்பிவிட்டது என்பதுதான் உண்மை கோபு சார்.

  பதிலளிநீக்கு
 9. Puthagathin pin attaiyai mattum padiththu, ivvalau pesiya avarai ninaithu ninaithu sirithuk kondirukkiren!

  பதிலளிநீக்கு
 10. பகுதிக்கு பகுதி தலைப்பு ஸ்ட்ராங் ஆவுது.. அப்புறம் என்ன ஆனார் பெரியவர்? ;-))

  பதிலளிநீக்கு
 11. மனநிலை சற்று பாதிக்கப் பட்டவரோ.?
  நான் அறிந்த ஒருவர் எல்லாவற்றிலும் சாதாரணமானவர், ஆனால் விமானம் பறப்பது காணும்போது மட்டும் என்னென்னவோ எண்ணங்கள் அவரை வாட்டும்.

  பதிலளிநீக்கு
 12. பாவம் அந்த பெரியவர்! தூக்கம் வராமல் ராத்திரி முழுவதும் இருப்பது மிகவும் கஷ்டமானது. பெரியவர் என்ன விஷயத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறார் என்ற ஆவல் கூடிக்கொண்டே வருகிறது சார்.

  பதிலளிநீக்கு
 13. வயதாகிறது என்பது ஒரு transformation . அந்த மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு ஒரு நதிபோல கடலில் கலக்கும்வரை ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். ஒப்புக்கொள்ளாத பலர் தேங்கிவிடுகிறார்கள். தங்களின் கைவண்ணத்தில் இந்த கதை முதியோர்களின் உளவியல் பிரச்சினையை சுட்டுகிறது சார்.

  பதிலளிநீக்கு
 14. எதையும் மனம்விட்டு பேசினால் எல்லாம் சரியாகும்! அந்தப் பெரியவரின் மனசில் இருப்பது என்னவோ?

  ( உங்களை கலாய்ச்சு ஒரு பதிவு போட்டிருக்கேன் சார் )

  பதிலளிநீக்கு
 15. இளமையில் வறுமையை போல்
  முதுமையில் தனிமை மிகக்
  கொடுமை என்பதை
  அழகாய் சொல்லியுள்ளீர்கள் ஐயா

  ""‘ஓ.கே., சார், குட் நைட், ஸீ... யூ” என்று சொல்லிவிட்டு பிரிந்து செல்லவே மனம் இல்லாதவராக, ஒருவழியாக, விடை பெற்றுச்சென்று விட்டார்.""

  ஏனோ இதைப் படிக்கும் போது என் மனம் என்னை அறியாமல் கணமானது ஐயா, உங்களின் வார்த்தைகளில் சோகம் இழைத்து எழுதி உள்ளீர்கள் ஐயா
  தொடருங்கள் தொடரக் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 16. தனிமை ஒரு கொடுமை அதிலும் முதுமையில் சொல்லவேவேண்டாம்

  சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கும் சஸ்பென்ஸ் அருமை.

  பதிலளிநீக்கு
 17. //"இதைக்கேட்டதும், பொதுவாக ஒரு எழுத்தாளருக்கு ஏற்படும் எரிச்சலே எனக்கும் ஏற்பட்டது"//

  நேர்மையான எழுத்துகள்..!
  புதிர் கூடுகிறது. பகலில் எல்லோரும் அவரவர் வேலைக்குச் சென்று விட பேச ஆள் இல்லாமல் கஷ்டப்படும் அவர் இரவு ராஜ்ஜியம் நடத்துகிறார் போலும்!

  பதிலளிநீக்கு
 18. பெரியவர் மனசுல என்ன இருக்கோ.. ரொம்ப பேருக்கு தூக்கம் போச்சு.. சஸ்பென்ஸ் தாங்க முடியாம..

  பதிலளிநீக்கு
 19. முதுமையில் தனிமை மிகவும் கொடியது .கதை சுவாரஸ்யமா நகர்கிறது ,
  அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் .

  பதிலளிநீக்கு
 20. தலைப்பு கச்சிதமா பொருந்துகிறது, முதுமையின் தனிமை ரெம்ப கொடியது என்று கேள்வி பட்டு இருக்கேன்.

  பதிலளிநீக்கு
 21. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 22. புரியா புதிராக உள்ளாரே பெரியவர். தொடருங்கள் அய்யா

  பதிலளிநீக்கு
 23. இந்தத் தொடரின் மூன்றாம் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடரைப்பெரிதும் உற்சாகத்துடன் வரவேற்று பாராட்டியுள்ள, அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  தொடர்ந்து வாருங்கள்.

  உற்சாகம் தாருங்கள்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 24. இன்ட்லி & தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்த அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 25. வயதானால் வரும் பிரச்சினைகளில் தலையாயது இதுதான். வடிகால் இல்லாதது. அந்த வகையில் பதிவுகள் ஓரளவிற்கு உதவுகின்றன.

  பதிலளிநீக்கு
 26. உங்க கதைகளைப் படிக்காமல் பின் குறிப்புகளை மட்டுமே படித்து விட்டு உங்களிடம் பேச வந்திருக்காரே. வேடிக்கையான மனுஷரா இருக்காரே..

  பதிலளிநீக்கு
 27. நல்ல மனுஷர் போங்கோ

  அருமையான கதைகளை படிக்கும் வாய்ப்பை இழந்துடப் போறார். அவரை முதல்ல அந்தக்கதைகள படிக்கச் சொல்லுங்கோ.

  //“பிறகு எப்போது தான் வீட்டுக்குப்போவார்? வீட்டில் உள்ளவர்கள் இவரைத் தேட மாட்டார்களா?” என்றேன்.//

  அதையேதான் நானும் கேக்கறேன்.

  பதிலளிநீக்கு
 28. வயசாயிட்டாலே மொதகா ஒரக்கம் வாராதுபோல. அதுக்குதா அவங்க மத்தவங்கள் ஒரங்க வுடாம பண்ண்ராங்க்ளோ. பாவம்தான்

  பதிலளிநீக்கு
 29. கதையை எதையுமே படிக்காமல் எழுத்தாளருடய விவரங்களைப்பற்றி மட்டுமே தெரிந்து கொண்டு பேச வந்திருப்பது அந்த எழுத்தாளர் போலவே படிக்கிறவங்களுக்கும் எரிச்சலாதான் இருக்கு.

  பதிலளிநீக்கு
 30. புத்தக அட்டையை மட்டும் படித்துவிட்டு இன்று என்னையே வடிகால் ஆக்கிக்கொண்டுள்ளார் என்பது, மெதுவாக எனக்கும் புரிய வந்தது.// ரைட்டு...வந்த வேலய பாத்துட்டு அவரு கிளம்பிட்டாரு அடுத்து என்ன மேட்டரு???

  பதிலளிநீக்கு
 31. உங்க கதைகளை படித்ததே இல்லைனு சொன்ன பெரியவரையும் மதித்து பேசிக்கொண்டிருந்தது எழுத்தாளரின் பெருந்தன்மையை காட்டுது. வாட்ச் மேனுக்கு வெறுமன அட்வைஸ் மட்டும் பண்ணாம டீயும் வாங்கி கொடுப்பது பெரியவரின் நல்ல மனதை காட்டுது. சுவாரசியமா போகுது கதை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... September 11, 2016 at 7:04 AM

   //உங்க கதைகளை படித்ததே இல்லைனு சொன்ன பெரியவரையும் மதித்து பேசிக்கொண்டிருந்தது எழுத்தாளரின் பெருந்தன்மையை காட்டுது. வாட்ச் மேனுக்கு வெறுமன அட்வைஸ் மட்டும் பண்ணாம டீயும் வாங்கி கொடுப்பது பெரியவரின் நல்ல மனதை காட்டுது. சுவாரசியமா போகுது கதை..//

   தங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான கோணத்தில் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு