என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 19 மார்ச், 2011

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. ! புதிய கட்சி: மூ.பொ.போ.மு.க. உதயம் [பகுதி-5]

மதியம் கேண்டீனுக்குப்போய் லஞ்ச் முடித்து விட்டு, ஆபீஸ் வேலைகளைக் கொஞ்சம் பார்க்கலாம் என்று தான், நான் நினைத்தேன்.  ஏதோ கண்ணைச்சொக்குவது போல இருந்தது.   

வ.வ.ஸ்ரீ. சாப்பிட வீட்டுக்குப்போனவர் போனவர் தான். ஆளையே சீட்டில் காணும். எப்போதுமே சீட்டில் இருப்பவர் போல ஏதோ ஒரு ஃபைலை மேஜை மீது விரித்து வைத்து, அதன் மேல் ஒரு பேப்பர் வெயிட்டையும், மூக்குக்கண்ணாடியையும், மூக்குப்பொடி டப்பாவையும் வைத்து விட்டுச் சென்று விடுவார். பார்ப்பவர்களுக்கு அவர் இங்கு எங்கோ தான் பாத் ரூம் போய் இருப்பார் என்று நினைத்துக்கொள்ள, அது அவர் கையாளும் ஒரு டெக்னிக் என்பது, நான் மட்டுமே நாளடைவில் தெரிந்து கொண்டது.  

தன் கைவசம், அவர் எங்கு சென்றாலும், எப்போதும் வேறு ஒரு மூக்குக்கண்ணாடியும், வேறு ஒரு மூக்குப்பொடி டப்பாவும் உஷாராக கைவசம் வைத்துக்கொண்டு தான் செல்வார். 

தூக்கக்கலக்கம் போக, அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்பொடி டப்பாவில் முதன் முதலாகக் கைவைத்து, அதைத் திறந்து, லேசாக ஆள்காட்டி விரலை மட்டும் அதற்குள் பதித்து, மூக்கருகில் கொண்டு செல்ல எத்தனிக்கும் போது, வ.வ.ஸ்ரீ. அவர்களே வந்து விட்டார்.    

“என்னப்பா, இப்போதே Further ஆக நம்ம Discussions Continue பண்ணலாமா”, என்று சொல்லி ஒரு சிட்டிகை பொடியை வேகவேகமாக எடுத்து உறிஞ்சினார். கையில் உள்ள பொடியை அவர் உதற லேசாக என் கண்ணில் பட்டு, சற்றே எரிச்சல் ஏற்படுத்தியது என்றாலும், என் தூக்கம் சுத்தமாகக் கலைந்து போய் விட்டது. மேனேஜர் எங்கள் இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே, தன் ரூமுக்குள் நுழைந்ததை நான் மட்டுமே கவனித்து விட்டு, வ.வ.ஸ்ரீ. யிடம் மெதுவாகச் சொன்னேன்.     

”அவன் கிடக்கிறான், நீ எதற்குமே கவலையே படாதே; அவனால் உனக்கு ஏதாவது பிரச்சனையென்றால் என்னிடம் வந்து சொல்லு.    RETIRE ஆக இன்னும் மூணு மாதங்களே உள்ளன எனக்கு.  அதற்குள், I will teach him a Lesson”  [நான் அவனுக்கொரு பாடம் கற்பிக்கிறேன்]   என்றார்.  அவர் கொடுத்த தைர்யத்தில் என் பேட்டியைத் தொடர ஆரம்பித்தேன்.

”இந்தப்பொடிப் பழக்கத்தால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் எதுவும் பாதிப்பு உண்டா, சார்” என்றேன்.

“நல்லதொரு கேள்வி தானப்பா” என்று உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்குக் கல்யாணம் ஆன புதிதில், இந்தப்பொடி போடும் பழக்கமே எனக்கு அதிகமாகக் கிடையாது.  எப்போதாவது யாராவது போடும்போது லேசாக வாங்கி மோந்து (முகர்ந்து) பார்ப்பதோடு சரி.   அதுவும் என்னவளை நெருங்கும்போது பொடி நெடி ஏதும் இல்லாமல் சுத்தமாக மூக்கைக் கழுவிக்கொண்டு, பாதுகாப்பாகத்தான் இருந்து வந்தேன்.

அடுத்தடுத்து ஐந்தாறு பிள்ளைகுட்டிகள் பிறந்து, குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சனைகள்,  மனக்கசப்புக்கள், மனைவியின் விதண்டாவாதப்பேச்சுக்கள் முதலியன ஏற்பட்டதில் எல்லாவற்றிலுமே ஒரு வெறுப்பு ஏற்பட்டது எனக்கு, 

புதுப்பொண்டாட்டியாக இருந்தபோது அவளிடம் இருந்த பூ வாசனை, செண்ட் வாசனையெல்லாம் நாளடைவில் மறைந்து, ஏதோவொரு சாம்பார்பொடி வாடையோ, பூண்டு வாடையோ எனத்தெரியாததொரு காரல் வாடை மாறிமாறி அடிக்க ஆரம்பித்ததும் தான்,  எனக்கு இந்தப் பொடியின் மீது , ஒருவித புதுக்காதல் மலர ஆரம்பித்தது.  அதுவே இன்றுவரை அதனுடன் ஒரு தீராத காதலாகவும், மோகமாகவும் மாறிவிட்டது;

பொண்டாட்டி இல்லாமல் இருக்கவே முடியாது என்றிருந்த என்னை ‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஆக்கிவிட்டது. 

அவள் எனக்குக்கோபம் ஏற்படுத்தும் போதெல்லாம், எனக்கு என் பொண்டாட்டியை இரண்டு இழுப்பு இழுத்து விடணும் போல ஒரு வேகம் வருவதுண்டு.   அந்த நேரங்களிலெல்லாம் பொடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, அவளையே ஓங்கி இழுத்துவிட்டது போல ஒரு வித இன்பம் அடைவதுண்டு” என்றார், வ.வ.ஸ்ரீ.

கூடிய சீக்கரம் ரிடர்ய்ட் ஆகும் நிலையில் இருந்த அவரின் இந்த சோகமான சுய சரிதையைப் பொடிப்பொடியாகக் கேட்ட எனக்கு, அவர் மேல் ஒரு பச்சாதாபமே ஏற்பட்டது. 

சற்றும் ஒரு சங்கோஜமோ, சங்கடமோ, லட்ஜையோ இல்லாமல் தன் இல்வாழ்க்கையின் இரகசியங்களை அவர் எடுத்துரைத்த விதம் எனக்கு அவர் மேல் ஒரு உயர்ந்த அபிப்ராயத்தை ஏற்படுத்தி விட்டது.

அவர் காதருகில் போய் மெதுவாக, ”மனைவி என்பவள் எவ்வளவு நாள் ஆனாலும்,  கண்டு களிக்கும் விதமாக, ஆரம்பத்தில் இருக்கும் அதே அழகுடனும்,   சுண்டியிழுக்கும் கவர்ச்சியுடனும்,   சுவைத்திட நல்லதொரு கட்டிக்கரும்பாகவும், கடைசிவரை இருக்கவே முடியாதா, சார்”  என்றேன், நான்.

“புதுசா கல்யாணம் ஆகப்போகும் நீ,  இதை ஏன் இவ்வளவு ஒரு பரமரகசியமாக, அதுவும் பயந்து கொண்டே கேட்கிறாய்?  என்னிடம் பேச நீ இவ்வாறெல்லாம் கூச்சப்படலாமா?  ஒரு சில உதாரணங்களுடன் விளக்கினால் தான் உனக்கு எல்லா விஷயங்களுமே நல்லாப்புரிபடும்” என்று சொல்லி, எழுச்சியுடன் மேலும் ஒரு சிட்டிகைப் பொடியை எடுத்து உறிஞ்சி உதறலானார்.    நான் என் கண்களை முன் ஜாக்கிரதையாக மூடிக்கொண்டு, காதுகளை மட்டும் நன்றாகத் தீட்டித் திறந்து கொண்டேன்.

“முதன் முதலாக பால்சொம்புடன் படுக்க வரும்போது,  அவள் யாராயிருந்தாலும் அழகிய பால்குடம் போல பளபளப்பாத்தான், முன்னப்பின்ன அனுபவமில்லாத, உன் கண்களுக்குத் தெரியும்.   

நாளாகநாளாக அதே பளபளப்பான பால்குடம், பழையசோத்துப்பானையா மாறிடுமப்பா,  அதே உன் கண்களுக்கு!” என்றார் வ.வ.ஸ்ரீ. அவர்கள் .   

”அச்சச்சோ, அது தான் ஏன் சார்ன்னு உங்களிடம் கேட்கிறேன்.  காரணம் என்னன்னு சொல்லாமல், பால்குடம் பழையசோத்துப்பானையா ஆகிடும்னு மட்டும் சொன்னா எப்படி சார்?” என்றேன் நானும் விடாமல். 

அவருக்கு மேலும் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தி முக்கியமானத் தகவலை பெற்றுவிட வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

”அவ்வளவு ஏனப்பா, இந்தப்பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு கொழுக்கட்டை சாப்பிட்டிருக்கிறாயா நீ ?”  என்றார் வ.வ.ஸ்ரீ.

“எனக்கு அது ரொம்ப பிடிச்ச ஐட்டம், சார்; நிறைய சாப்பிட்டிருக்கிறேன்” என்றேன்.

“முற்றலான தேங்காய்த் துருவல், ஏலக்காய், வெல்லம் எல்லாம் போட்டு, **கம்பர்கட்** போல பதமாக பாகுகாய்ச்சி,  அரிசி மாவை தனியே வேக வைத்து, மெல்லிசா அழகாக துணி மாதிரி அதை உள்ளங்கையில் கொஞ்சமாகப் பரப்பி, பிறகு அதை சொப்பு போலச்செய்து, அதில் இந்த தேங்காய், வெல்லம், ஏலம் கலந்த பூர்ணத்தை கொஞ்சமாக உருட்டி வைத்து, பிறகு அதை அப்படியே மூடி, சின்னதா ஒரு மூக்கு வைத்து முடித்துக்கொண்டு, பிறகு மீண்டும் இட்லி சுடுவது போல வேக வைத்து சூடாகத் தருவார்களே, அதைத் தின்னும் போது எவ்வளவு ருசியாகவும் சுவையாகவும் இருக்கும்? என்று சொல்லி நிறுத்தினார், வ.வ.ஸ்ரீ.

“ஆஹாஹா, சார்! நீங்க இப்படியொரு அருமையான கொழுக்கட்டை செய்முறைப் பக்குவம் சொல்லும்போதே, கொழக்கட்டைகள் என் கண்முன் இருப்பது போல, நாக்கிலே ஜலம் ஊறுகிறது,  சார்” என்றேன்.

“இந்த சுடச்சுட சாப்பிடும் பிள்ளையார் கொழுக்கட்டை போலத்தானப்பா, புதுப்பொண்டாட்டியும்.     அதே கொழுக்கட்டையை அப்படியே மூடி வைத்து ஒரு நாலு நாள் கழித்து சாப்பிட முடியுமா உன்னால்?” என்றார், வ.வ.ஸ்ரீ.

“அது எப்படி சார், சாப்பிட முடியும், ஊசிப்போய் நல்லாவே இருக்காது, ஒரே நாத்தம் அடிக்கும் சார்” என்றேன் நான்.

“முதல் நாள் சூடாக சுவையாக சாப்பிட ருசியாக இருக்கும் புதுக்கொழுக்கட்டை போன்ற, இந்தப் புதுப்பொண்டாட்டி,  நாளடைவில் இந்த ‘ஊசிப்போன கொழுக்கட்டை’ போல ருசி ஏதும் இல்லாமல் ஆகிவிடுகிறாள் என்பதை உனக்கு உணர்த்தவே நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உதாரணம் சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது” என்றார், வ.வ.ஸ்ரீ.   

பிறகு அவரே, “நீ மட்டும் என்னப்பா, என்றும் மார்க்கண்டேயனாக 16 வயது இளமையோடும், மன்மதன் போல அழகோடும் எழுச்சியோடும் கடைசிவரை இருந்து விடப்போகிறாயா என்ன! 

இந்த எழுச்சி, புரட்சி, மகிழ்ச்சி, விரைப்பு, முறைப்பு, ஆர்வம், அட்டகாசம், அதிகாரம், ஆணவம், ஆட்டம், பாட்டம் எல்லாமே எல்லோருக்குமே ஆரம்பத்தில் கொஞ்ச நாட்களுக்குத் தானப்பா; பிறகு போகப்போக கடைசியில் ஒரு நாள் எல்லோருமே எழுச்சிகுன்றி, வழுவட்டையாகத்தான் போயாக வேண்டும், என்பது தான் இந்த உலக நியதியப்பா;

பெண்களுக்கு இயற்கையாகவே ஏற்படும் மாதாந்தர சுழற்சிகளாலும், அடுத்தடுத்து பிள்ளைப்பேறுகளால் ஏற்படும் ஒருசில பிரத்யேகத் தொல்லைகளாலும், குழந்தைகள், குடும்பம், சமையல் அறை வேலைகள் என்ற கூடுதல் பொறுப்புகளை அவர்கள் முன்வந்து ஏற்பதாலும்,  பழையபடி சீவிமுடிச்சு சிங்காரிக்கவும், பவுடர், ஸ்னோ, செண்ட் என அப்பிக்கொண்டு கவர்ச்சியாக நிற்கவும் முடியாமல் போய்விடுகிறதப்பா;  

பாவம் அவர்கள், நடுவில் இந்த டி.வி. சீரியல்களைப்பார்த்து அதில் வரும் பல சோகங்களுக்காக, கண்ணீர் வடிக்க வேண்டியதாகவும் உள்ளது.  அதனால் கொஞ்சம் நம்மை விட சீக்கிரமாகவே தளர்ந்து போய் விடுகிறார்களப்பா” என்று விளக்கினார், வ.வ.ஸ்ரீ.  

பிறகு அவரே,  ” ஆணோ பெண்ணோ, உடம்பில் தெம்பு குறைந்தாலும், உயிர் உள்ளவரை, உள்ளத்தில் எப்போதும் எழுச்சியும், உற்சாகமும், இளமையும் ஊஞ்சலாட வேண்டுமப்பா,  என்னைப்போல”, என்றார் வ.வ.ஸ்ரீ.

இவர் இப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் புட்டுப்புட்டு விலாவரியாக எடுத்துச் சொல்வதைக் கேட்டதும், நான் கல்யாணம் செய்து கொள்வதா வேண்டாமா, என்று ஒரேயடியாகக் குழம்பிப்போக வைத்தது என்னை. 

எது எப்படியிருந்தாலும், இந்த வ.வ.ஸ்ரீ. உன்னை என்னதான் குழப்பினாலும், சுடச்சுட,  நீ கொழுக்கட்டை சாப்பிட்டே ஆகணும் என்றது என் உள் மனது.   

எனக்கும் சுடச்சுட ருசியான ஒரு கொழுக்கட்டை விரைவிலேயே கிடைக்க வேண்டும் என்று நானும் மனமுருக வேண்டிக்கொண்டேன்.

இவரின் இந்தக்கொச்சையான பேச்சை வேறு பக்கம் திருப்பிவிட வேண்டும் என்று நினைத்த நான் ”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்று என் அடுத்த கேள்விக்குத் தாவிச்சென்றேன்.  

அன்றைய ஆபீஸ் நேரம் அதற்குள் முடிந்து விட்டதால், நாளைக்குப் பேசுவோம் என்ற படி இருவரும் பிரியா விடை பெற்றுச்செல்ல வேண்டியதாகிப் போனது.

  

தொடரும்


ஒரு சிறு விளக்கம்:

[  ** கம்பர்கட் ** அல்லது   கமர்கட்  என்பது அந்தக்காலத்தில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் ஒரு தின்பண்டம்.  கடலைமிட்டாய், தேங்காய் பர்பி, ஆரஞ்ச் மிட்டாய் என்பதுபோல பல சாதாரண பெட்டிக்கடைகளிலும், பள்ளிக்கூட வாசல்களிலும் சுலபமாக கிடைக்கக் கூடியது.

தேங்காய் + வெல்லம் + ஏலம் கலந்த ஒரு கலவை தான், கையில் ஒட்டாதபடியும்,ஆனால் அமுக்கினால் அமுங்கக்கூடியதாகவும் ஒரு வித ஜவ்வுமிட்டாய் போல பாகுபதத்தில் உருண்டையாக கோலிக்குண்டுபோல செய்யப்பட்டிருக்கும். மிகவும் சுவையானதாக இருக்கும். 

இப்போதெல்லாம் கடைகளில் கிடைக்குமோ கிடைக்காதோ தெரியவில்லை. 
என்றும் அன்புடன் உங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

58 கருத்துகள்:

 1. கொழுக்கட்டை உதாரணம் இரு பாலருக்கும் பொதுவானதே

  பதிலளிநீக்கு
 2. ராஜி சொன்னதை ஆமோதிக்கிறேன்.

  பிரச்சினை என்னவென்றால் இரு பாலாருக்கும் பொதுவான இந்தக் கொழக்கட்டை சமாச்சாரம் குறித்த ஞானம் அந்தந்தப் பாலினருக்கு தனித்தனியே இருக்கும்போது உண்டாவதில்லை.

  தன்னை இளமையாகக் காட்டிக் கொள்ளப் பண்ணும் சேஷ்டைகள் குறித்தும் எழுச்சியான ஒரு கதையை எதிர்பார்க்கிறேன் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 3. அழகு என்பது காண்பவர் கண்களில் என்பார்கள் BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER ஒரு காலத்துக்குப் பிறகு புற அழகைவிட அக அழகே புலப்படும்.கொழுக்கட்டை கதை கேட்டு இளைஞர்கள் பயந்து விடப் போகிறார்கள், பாவம்.

  பதிலளிநீக்கு
 4. //‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ // இது நல்ல கண்டுபிடிப்பா இருக்கே!

  //”மனைவி என்பவள் எவ்வளவு நாள் ஆனாலும், கண்டு களிக்கும் விதமாக, ஆரம்பத்தில் இருக்கும் அதே அழகுடனும், சுண்டியிழுக்கும் கவர்ச்சியுடனும், சுவைத்திட நல்லதொரு கட்டிக்கரும்பாகவும், கடைசிவரை இருக்கவே முடியாதா, சார்” என்றேன்//

  அவர் வயிற்றெரிச்சலை கிளறி,கொழுக்கட்டை செய்முறை குறிப்பும் கொடுத்தாகிவிட்டது.

  சில கணவன்மார்களுக்கு தமது மனைவி புளித்துவிட்டாலும்,பெரும்பாலான மனைவிமார்கள் தன் கணவன் மேல் அதே காதலுடன்தான் இருப்பார்கள்,இது காலத்தாலும்,சூழ்நிலையாலும் மனமாற்றம் அடையும் ஆண்களுக்கு புரிவதில்லை என்பது எனது கருத்து.

  பதிலளிநீக்கு
 5. //“நீ மட்டும் என்னப்பா, என்றும் மார்க்கண்டேயனாக 16 வயது இளமையோடும், மன்மதன் போல அழகோடும் எழுச்சியோடும் கடைசிவரை இருந்து விடப்போகிறாயா என்ன! //


  சமாளித்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. ஏதோ கண்ணைச்சொக்குவது போல இருந்தது. //
  சொக்குப் பொடி போட்டிருப்பார்.

  பதிலளிநீக்கு
 7. ராஜி சொல்வதை வழிமொழிகிறேன்.
  கமர்கட் நானும் சாப்பிட்டிருக்கிறேன். இப்போது கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. வ.வ.ஸ்ரீ. திடிரென பொடி விளக்கத்திலிருந்து வேறு எங்கோ சென்று விட்டாரே! கமர்கட் – காலையில வாயில் போட்டா மதியம் வரை இருக்குமே :) இப்போதெல்லாம் கிடைக்காது என நினைக்கிறேன். 5 பைசாவுக்கு விற்றுக்கொண்டு இருந்தது நான் படிக்கும் போது!

  பதிலளிநீக்கு
 9. அது சரி..சார்..கொழுக்கட்டை நாலு நாள் ஆனா, ஒரு மாதிரி ஆயிடும்..ஆனா, பூரணம் ரொம்ப நாள் வரை கெடாதே... நாம இப்ப கொழுக்கட்டை..பூரணம் பற்றித் தான் பேசறோம், சரியா?

  பதிலளிநீக்கு
 10. அதிகாலையிலேயே எழுந்தருளிய வ.வ.ஸ்ரீயை இரவில் வந்து வழுவட்டையாக தரிசக்க வந்தமைக்கு ஷமிக்க வேணுமாய்ப் பிரார்த்தித்துக்கொள்கிறேன். உடம்பில் அங்கங்கே சில உதிரிபாகங்கள் சேட்டை பண்ணியதால், இழுத்துப் போர்த்தி உறங்கி, மற்றவர் உறங்கும் நேரத்தில் விழித்து வந்திருக்கிறேன். :-)

  பதிலளிநீக்கு
 11. //பொண்டாட்டி இல்லாமல் இருக்கவே முடியாது என்றிருந்த என்னை ‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஆக்கிவிட்டது. //

  பொடிவைத்துப் பேசுபவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே பொடிவைத்து எழுதியிருக்கிறீர்களே...! சபாஷ்!!

  பதிலளிநீக்கு
 12. //அந்த நேரங்களிலெல்லாம் பொடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, அவளையே ஓங்கி இழுத்துவிட்டது போல ஒரு வித இன்பம் அடைவதுண்டு”//

  இருக்கும் இருக்கும்! இழுக்க இழுக்க இறுதிவரை இன்பமல்லவா? நான் பொடியை இழுப்பதைச் சொன்னேன்! :-)

  பதிலளிநீக்கு
 13. //நாளாகநாளாக அதே பளபளப்பான பால்குடம், பழையசோத்துப்பானையா மாறிடுமப்பா, அதே உன் கண்களுக்கு!” என்றார் வ.வ.ஸ்ரீ. அவர்கள்//

  வாய்விட்டு சிரித்துவிட்டேன்! இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். :-)

  பதிலளிநீக்கு
 14. //இந்த எழுச்சி, புரட்சி, மகிழ்ச்சி, விரைப்பு, முறைப்பு, ஆர்வம், அட்டகாசம், அதிகாரம், ஆணவம், ஆட்டம், பாட்டம் எல்லாமே எல்லோருக்குமே ஆரம்பத்தில் கொஞ்ச நாட்களுக்குத் தானப்பா; பிறகு போகப்போக கடைசியில் ஒரு நாள் எல்லோருமே எழுச்சிகுன்றி, வழுவட்டையாகத்தான் போயாக வேண்டும், என்பது தான் இந்த உலக நியதியப்பா;//

  நிரம்ப சரி! தத்துவம்போல தொனித்தாலும், இது வாழ்க்கையின் நியதி!

  பதிலளிநீக்கு
 15. ** கம்பர்கட் ** அல்லது கமர்கட் - தஞ்சை, திருச்சி, கும்பகோணம் பகுதிகளில் இன்னும் கிடைக்கிறதே! சென்ற முறை நான் குடந்தை சென்றபோது ஒரு கடையில் வாங்கிச்சாப்பிட்டேன்.

  பதிலளிநீக்கு
 16. raji said...
  //கொழுக்கட்டை உதாரணம் இரு பாலருக்கும் பொதுவானதே//

  ஒரேபோட்டில் மிகச்சரியாக உடைபட்ட நல்லதொரு தேங்காய் போல, பளிச்சென்று சொல்லிவிட்டீர்கள். அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய, தங்களின் அருமையானதொரு கருத்துக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 17. சுந்தர்ஜி said...
  //ராஜி சொன்னதை ஆமோதிக்கிறேன்.

  பிரச்சினை என்னவென்றால் இரு பாலாருக்கும் பொதுவான இந்தக் கொழக்கட்டை சமாச்சாரம் குறித்த ஞானம் அந்தந்தப் பாலினருக்கு தனித்தனியே இருக்கும்போது உண்டாவதில்லை.//

  தாங்கள் சொல்லும் இந்தக்கருத்தும் சரியாகவே உள்ளது. வ.வ.ஸ்ரீ. அவர்களும், அந்த இளைஞனும் ஒரே பாலினர் தான் என்பதிலிருந்தே புரிகிறது.

  //தன்னை இளமையாகக் காட்டிக் கொள்ளப் பண்ணும் சேஷ்டைகள் குறித்தும் எழுச்சியான ஒரு கதையை எதிர்பார்க்கிறேன் கோபு சார்.//

  அதில் எனக்கே எனக்கு கொஞ்சமும் சொந்த அனுபவம் இல்லையே சார். இருப்பினும் தாங்கள் சொல்லுவது போல சேஷ்டைகள் பண்ணும் மற்றவர்களை, இனிமேல்தான் உற்று நோக்கி, உள்வாங்கி எழுத வேண்டும். ஆண்/பெண் ப்யூட்டி பார்லர்களுக்கு நான் அலையாஅலைய வேண்டும். உள்ளே விடுவார்களோ மாட்டார்களோ; என்னை ஏதாவது சிக்கலில் மாட்டிவிடுவதிலேயே குறியாய் இருக்கிறீர்களே!, சுந்தர்ஜி சார். இது நியாயமா?

  பதிலளிநீக்கு
 18. Girija said...
  //ahha!! no comments!! hehehehehe//

  ஓஹோ, அப்போ NO COMMENTS from me also.
  ஹி ஹி ஹி ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 19. G.M Balasubramaniam said...
  //அழகு என்பது காண்பவர் கண்களில் என்பார்கள் BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER ஒரு காலத்துக்குப் பிறகு புற அழகைவிட அக அழகே புலப்படும்.//

  அழகு என்பது நம் பார்வையில் தான் உள்ளது என்பது தான் என்னுடைய கருத்தும் சார். தங்களின் இந்தக்கருத்துக்கள் அக அழகைப்போலவே மிகவும் அழகாக உள்ளது, சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, சார்.

  //கொழுக்கட்டை கதை கேட்டு இளைஞர்கள் பயந்து விடப் போகிறார்கள், பாவம்.//

  இந்தக்கால இளைஞர்கள் எதைக்கேட்டும் பயந்து விட மாட்டார்கள், சார். மிகவும் விவரமானவர்கள். முதலில் வயதானவர்களுடன் பேசுவதையே Avoid செய்துவிடக்கூடியவர்கள்.

  வ.வ.ஸ்ரீ. யின் பேச்சை, ஏதோ கதையில் வரும் அந்த இளைஞன், அதுவும் ஆபீஸ் வேலைநேரத்தில் OB அடிக்க வேண்டி, பொழுதைக்கழிக்க வேண்டி, வேறு வழியில்லாமல், சுவாரஸ்யமாகக் கேட்டு வருகிறான்.

  பதிலளிநீக்கு
 20. thirumathi bs sridhar said...
  //‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ //

  /இது நல்ல கண்டுபிடிப்பா இருக்கே!/

  ‘பொண்டாட்டி’ என்பதே ஒரு பேச்சு வழக்கு தான்.
  சரியான தமிழ் சொல் அல்ல. நகைச்சுவைக்காக் இங்கு அது கையாளப்பட்டது. அவ்வளவு தான்.


  கண்டுபிடிப்பு என்பது புதியதாகவும், பிறருக்குப் பயன் படுவதாகவும் இருக்க வேண்டும். இது நாம் கொஞ்சம் சிரிக்க மட்டுமே பயன்படும்.


  //”மனைவி என்பவள் எவ்வளவு நாள் ஆனாலும், கண்டு களிக்கும் விதமாக, ஆரம்பத்தில் இருக்கும் அதே அழகுடனும், சுண்டியிழுக்கும் கவர்ச்சியுடனும், சுவைத்திட நல்லதொரு கட்டிக்கரும்பாகவும், கடைசிவரை இருக்கவே முடியாதா, சார்” என்றேன்//

  /அவர் வயிற்றெரிச்சலை கிளறி,கொழுக்கட்டை செய்முறை குறிப்பும் கொடுத்தாகிவிட்டது./

  பழம்தின்று கொட்டைபோட்ட, வ.வ.ஸ்ரீ. க்கு இன்னும் திருப்தியாகாமல், அந்த இன்ப நினைவலைகள், வயிற்றெரிச்சலைக்கிளறி விட்டுள்ளது என்றா சொல்லுகிறீர்கள்! இருக்கலாம் இருக்கலாம் இல்லாவிட்டால் அவர் ஏன் இந்தக் கொழுக்கட்டைக்கதையை உதாரணமாகச் சொல்லணும்? மோசமான ஆசாமியாகத்தான் இருக்க வேண்டும், நீங்கள் நினைப்பது போலவே.

  /சில கணவன்மார்களுக்கு தமது மனைவி புளித்துவிட்டாலும்,பெரும்பாலான மனைவிமார்கள் தன் கணவன் மேல் அதே காதலுடன்தான் இருப்பார்கள்,இது காலத்தாலும்,சூழ்நிலையாலும் மனமாற்றம் அடையும் ஆண்களுக்கு புரிவதில்லை என்பது எனது கருத்து./

  உங்கள் கருத்தும் சரியாகத்தான் தோன்றுகிறது.
  பெரும்பாலான மனைவிமார்கள் தன் கணவன் மேல் அதே காதலுடன் இருப்பது தான், நம் பாரத நாட்டின் கலாச்சாரத்தின் சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது.

  அந்த ஒரு சில ஆண்களுக்கு எது தான் புரியும், மனைவியின் அன்பு புரிவதற்கு?

  வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க, மேடம்.

  பதிலளிநீக்கு
 21. கணேஷ் said...
  //“நீ மட்டும் என்னப்பா, என்றும் மார்க்கண்டேயனாக 16 வயது இளமையோடும், மன்மதன் போல அழகோடும் எழுச்சியோடும் கடைசிவரை இருந்து விடப்போகிறாயா என்ன! //

  /சமாளித்து விட்டீர்கள்./

  என்ன செய்வது கணேஷ். இன்றைய நிலவரப்படி, அம்மையார்(கள்)அணி தான் வலுவாக உள்ளது போலத்தெரிகிறது, தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமின்றி இந்த என் வலைப்பூவிலும். இப்படி ஏதாவது சமாளித்தால் தான் நாம் பிழைக்க முடியும்.

  நீ வித்யாசமாக அதை மட்டும் சுட்டிக்காட்டியது என்னை மிகவும் கவர்ந்தது. அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 22. இராஜராஜேஸ்வரி said...
  //ஏதோ கண்ணைச்சொக்குவது போல இருந்தது. //
  சொக்குப் பொடி போட்டிருப்பார்.//

  நீங்கள் ரசித்துச்சொல்லும் வரிகளும், சொல்லும் விதமும், எனக்கே சொக்குப்பொடி போட்டதுபோல என் கண்களையும் சொக்க வைக்கிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 23. கோவை2தில்லி said...
  ராஜி சொல்வதை வழிமொழிகிறேன்.
  கமர்கட் நானும் சாப்பிட்டிருக்கிறேன். இப்போது கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன்.

  கமர்கட் போன்ற ருசியான கருத்துக்களுக்கு, நன்றி.
  [இப்போதும் கிடைப்பதாக சேட்டை அவர்கள் கூறியுள்ளார்கள்.]

  பதிலளிநீக்கு
 24. வெங்கட் நாகராஜ் said...
  //வ.வ.ஸ்ரீ. திடிரென பொடி விளக்கத்திலிருந்து வேறு எங்கோ சென்று விட்டாரே!//

  ஆமாம் வெங்கட். அவர் ஒரு மாதிரியான ஆளு தான். அவரை இப்படியே பேச விட்டால் இன்னும் வேறு ஏதாவது புதிய புதிய பிரச்சனைகளில் நுழைந்து, நம்மையும் நுழைத்து பாடாய்ப்படுத்தி விடுவார். கடிவாளம் போட்டு பொடிப்பக்கமே கொண்டுவந்து விடுவோம், என்று தான் கதையில் வரும், பேட்டி காணும் இளைஞனும் நினைக்கிறான். அடுத்தடுத்த பகுதிகளில் கடிவாளம் போட்டுக் கொண்டு வந்து விடுகிறானா என்று பார்ப்போம்.

  //கமர்கட் – காலையில வாயில் போட்டா மதியம் வரை இருக்குமே :) இப்போதெல்லாம் கிடைக்காது என நினைக்கிறேன். 5 பைசாவுக்கு விற்றுக்கொண்டு இருந்தது நான் படிக்கும் போது!//

  நாமெல்லாம் மலிவாகவும் ருசியாகவும் சாப்பிட்டிருக்கிறோம். நினைத்தாலே இனிக்கிறது.

  பதிலளிநீக்கு
 25. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //அது சரி..சார்..கொழுக்கட்டை நாலு நாள் ஆனா, ஒரு மாதிரி ஆயிடும்..ஆனா, பூரணம் ரொம்ப நாள் வரை கெடாதே... நாம இப்ப கொழுக்கட்டை..பூரணம் பற்றித் தான் பேசறோம், சரியா?//

  வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. நீங்க ஏதாவது (கொழுக்கட்டையில் உள்ள பூரணத்தை மட்டும்) கிளறப்போய், நான் ஏதாவது இந்த வ.வ.ஸ்ரீ. போல உளறப்போய் பெரிய பிரச்சனையாகிவிடும். இதுபற்றியெல்லாம் வழக்கம்போல நாம் தனியாகப் பேசிக்கொள்வோமே, Please. அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 26. சேட்டைக்காரன் said...
  //அதிகாலையிலேயே எழுந்தருளிய வ.வ.ஸ்ரீயை இரவில் வந்து வழுவட்டையாக தரிசக்க வந்தமைக்கு ஷமிக்க வேணுமாய்ப் பிரார்த்தித்துக்கொள்கிறேன். உடம்பில் அங்கங்கே சில உதிரிபாகங்கள் சேட்டை பண்ணியதால், இழுத்துப் போர்த்தி உறங்கி, மற்றவர் உறங்கும் நேரத்தில் விழித்து வந்திருக்கிறேன். //

  லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க.
  சேட்டை உடம்பில் ஆங்காங்கே சில உதிரிபாகங்கள் [Spare parts?] சேட்டை பண்ணியதாக சேட்டை வாயால் சேட்டையாகச் சொல்லுவது மிகவும் சேட்டையாகவே [நகைச்சுவையாகவே]உள்ளது.

  மற்றவர் உறங்கும் நேரமாகப்பார்த்துதான் உங்களுக்கு எப்போதுமே சேட்டை செய்ய எழுச்சி ஏற்படுகிறது.இதை நான் பலமுறை தூங்காமல் விழித்திருந்து பார்த்துள்ளேன். பகலோ இரவோ சேட்டை எப்போ வந்தாலும் சிரிப்பு தான் எனக்கு.

  வருகைக்கு, மிக்க நன்றிகள், சார்.

  பதிலளிநீக்கு
 27. சேட்டைக்காரன் said...
  //பொண்டாட்டி இல்லாமல் இருக்கவே முடியாது என்றிருந்த என்னை ‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஆக்கிவிட்டது. //

  பொடிவைத்துப் பேசுபவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே பொடிவைத்து எழுதியிருக்கிறீர்களே...! சபாஷ்!!

  உங்கள் எழுத்துக்களுக்குமுன் நான் ஒரு ’பொடி’யன் சார். இருப்பினும் தங்கள் ‘சபாஷ்’ க்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 28. சேட்டைக்காரன் said...
  //அந்த நேரங்களிலெல்லாம் பொடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, அவளையே ஓங்கி இழுத்துவிட்டது போல ஒரு வித இன்பம் அடைவதுண்டு”//

  இருக்கும் இருக்கும்! இழுக்க இழுக்க இறுதிவரை இன்பமல்லவா? நான் பொடியை இழுப்பதைச் சொன்னேன்! :-)

  நீங்கள் பொடியை இழுப்பதைச் சொன்னதாகச் சொல்வதை நான் அப்படியே நம்புகிறேன். மற்றபடி இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் பற்றியெல்லாம் சத்தியமா எனக்குத்தெரியாது சார்.

  [எல்லாம் சுத்தமா மறந்தே போச்சு]

  பதிலளிநீக்கு
 29. சேட்டைக்காரன் said...
  //நாளாகநாளாக அதே பளபளப்பான பால்குடம், பழையசோத்துப்பானையா மாறிடுமப்பா, அதே உன் கண்களுக்கு!” என்றார் வ.வ.ஸ்ரீ. அவர்கள்//

  வாய்விட்டு சிரித்துவிட்டேன்! இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். :-)

  அந்தப்பழையசோத்துப்பானையிலே உள்ள பருக்கை கூட, இப்போதெல்லாம் கிடைக்காத கடுப்பில் உள்ள வ.வ.ஸ்ரீ. சொல்லும் அனுபவபூர்வ வார்த்தைகள் அல்லவா, அதனால் தான் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள். சந்தோஷம் (வ.வ.ஸ்ரீ க்கு அல்ல).

  பதிலளிநீக்கு
 30. சேட்டைக்காரன் said...
  //இந்த எழுச்சி, புரட்சி, மகிழ்ச்சி, விரைப்பு, முறைப்பு, ஆர்வம், அட்டகாசம், அதிகாரம், ஆணவம், ஆட்டம், பாட்டம் எல்லாமே எல்லோருக்குமே ஆரம்பத்தில் கொஞ்ச நாட்களுக்குத் தானப்பா; பிறகு போகப்போக கடைசியில் ஒரு நாள் எல்லோருமே எழுச்சிகுன்றி, வழுவட்டையாகத்தான் போயாக வேண்டும், என்பது தான் இந்த உலக நியதியப்பா;//

  /நிரம்ப சரி! தத்துவம்போல தொனித்தாலும், இது வாழ்க்கையின் நியதி!/

  வயதாகி, வழுவட்டையானபின், “சீ சீ இந்தப்பழம் புளிக்கும்’ என்று உண்மையான வெறுப்பு தோன்றும் காலக்கட்டத்தில் மட்டுமே, மனதில் உதிக்கும் ஒரு ஞானோதயமும் கூட.

  பதிலளிநீக்கு
 31. சேட்டைக்காரன் said...
  //** கம்பர்கட் ** அல்லது கமர்கட் - தஞ்சை, திருச்சி, கும்பகோணம் பகுதிகளில் இன்னும் கிடைக்கிறதே! சென்ற முறை நான் குடந்தை சென்றபோது ஒரு கடையில் வாங்கிச்சாப்பிட்டேன்.//

  அப்படியா, மிக்க மகிழ்ச்சி. நான் இந்த கமர்கட், கொழுக்கட்டை, பூர்ணம் முதலியன சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.

  நீங்க வயசு பிள்ளை, அங்கேயும் இங்கேயும் நாலு இடத்துக்கு போவீங்க.பிடிச்சதை பிடிச்சு சாப்பிடுவீங்க.

  என் நிலமை அப்படியா?

  நானும் சாப்பிடணும்ன்னு நினைச்சா சாப்பிடலாம் தான். ஆனாக்க ...... என்னவோ ஏதோன்னு நினைக்காதீங்க.  [சுகர் கம்ப்ளைண்ட் இருக்கு]

  பதிலளிநீக்கு
 32. சேட்டைக்காரன் said...
  //வ.வ.ஸ்ரீ புகழ் ஓங்குக! :-)//

  புகழ் மட்டும் தானே !
  ஓங்கட்டும், ஓங்கட்டும்.

  மற்றவை என்றால்
  தூங்கட்டும், தூங்கட்டும்.

  பதிலளிநீக்கு
 33. middleclassmadhavi said...
  //ராஜி சொன்னதே ரிப்பீட்டு!//

  நல்லவேளையாப்போச்சு.

  நீங்க ஏதாவது புதுசா யோசித்து சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன்.

  பதிலளிநீக்கு
 34. புதுப்பொண்டாட்டியாக இருந்தபோது அவளிடம் இருந்த பூ வாசனை, செண்ட் வாசனையெல்லாம் நாளடைவில் மறைந்து, ஏதோவொரு சாம்பார்பொடி வாடையோ, பூண்டு வாடையோ எனத்தெரியாததொரு காரல் வாடை மாறிமாறி அடிக்க ஆரம்பித்ததும் தான், எனக்கு இந்தப் பொடியின் மீது , ஒருவித புதுக்காதல் மலர ஆரம்பித்தது. அதுவே இன்றுவரை அதனுடன் ஒரு தீராத காதலாகவும், மோகமாகவும் மாறிவிட்டது;///

  ஓ இதுதானா பொடிபோடுபவர்களின் ரகசியம்...!

  //
  பொண்டாட்டி இல்லாமல் இருக்கவே முடியாது என்றிருந்த என்னை ‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஆக்கிவிட்டது.

  அவள் எனக்குக்கோபம் ஏற்படுத்தும் போதெல்லாம், எனக்கு என் பொண்டாட்டியை இரண்டு இழுப்பு இழுத்து விடணும் போல ஒரு வேகம் வருவதுண்டு. அந்த நேரங்களிலெல்லாம் பொடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, அவளையே ஓங்கி இழுத்துவிட்டது போல ஒரு வித இன்பம் அடைவதுண்டு” என்றார், வ.வ.ஸ்ரீ.
  // அடேங்கப்பா!!

  பதிலளிநீக்கு
 35. ஸாதிகா said...
  //புதுப்பொண்டாட்டியாக இருந்தபோது அவளிடம் இருந்த பூ வாசனை, செண்ட் வாசனையெல்லாம் நாளடைவில் மறைந்து, ஏதோவொரு சாம்பார்பொடி வாடையோ, பூண்டு வாடையோ எனத்தெரியாததொரு காரல் வாடை மாறிமாறி அடிக்க ஆரம்பித்ததும் தான், எனக்கு இந்தப் பொடியின் மீது , ஒருவித புதுக்காதல் மலர ஆரம்பித்தது. அதுவே இன்றுவரை அதனுடன் ஒரு தீராத காதலாகவும், மோகமாகவும் மாறிவிட்டது;///

  ஓ இதுதானா பொடிபோடுபவர்களின் ரகசியம்...!

  //
  பொண்டாட்டி இல்லாமல் இருக்கவே முடியாது என்றிருந்த என்னை ‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஆக்கிவிட்டது.

  அவள் எனக்குக்கோபம் ஏற்படுத்தும் போதெல்லாம், எனக்கு என் பொண்டாட்டியை இரண்டு இழுப்பு இழுத்து விடணும் போல ஒரு வேகம் வருவதுண்டு. அந்த நேரங்களிலெல்லாம் பொடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, அவளையே ஓங்கி இழுத்துவிட்டது போல ஒரு வித இன்பம் அடைவதுண்டு” என்றார், வ.வ.ஸ்ரீ.
  //

  அடேங்கப்பா!!

  வரிக்குவ்ரி மிகவும் ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  வருகைக்கும் ரசித்த வரிகளைச் சுட்டிக்காட்டி மகிழ்வித்ததற்கும் என் மனமார்ந்த் ந்ன்றிகள்.

  பதிலளிநீக்கு
 36. அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்பொடி டப்பாவில் முதன் முதலாகக் கைவைத்து, அதைத் திறந்து, லேசாக ஆள்காட்டி விரலை மட்டும் அதற்குள் பதித்து, மூக்கருகில் கொண்டு செல்ல எத்தனிக்கும் போது,//

  CURIOSITY :)))))))))
  பொண்டாட்டியின் சுருக்கம் பொ... டி .
  அருமையான பதம் :)))
  மனைவியின்றி அவரில்லை .

  நானும் சாப்பிட்டுருக்கேன் கம்மர்கட் .
  கொஞ்சம் பொட்டுகடலையும் சேர்ப்பாங்க அதை செய்யும்போது .
  சில கடைகளில் உள்ளே நாணயங்களை வைத்தும் விற்ப்பாங்க

  பதிலளிநீக்கு
 37. angelin said...
  அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்பொடி டப்பாவில் முதன் முதலாகக் கைவைத்து, அதைத் திறந்து, லேசாக ஆள்காட்டி விரலை மட்டும் அதற்குள் பதித்து, மூக்கருகில் கொண்டு செல்ல எத்தனிக்கும் போது,//

  CURIOSITY :)))))))))
  பொண்டாட்டியின் சுருக்கம் பொ... டி .
  அருமையான பதம் :)))
  மனைவியின்றி அவரில்லை .

  நானும் சாப்பிட்டுருக்கேன் கம்மர்கட்

  கொஞ்சம் பொட்டுகடலையும் சேர்ப்பாங்க அதை செய்யும்போது .
  சில கடைகளில் உள்ளே நாணயங்களை வைத்தும் விற்ப்பாங்க


  மிக்க நன்றி நிர்மலா. நல்லவே படித்து ரசித்து எழுதியிருக்கீங்க.
  சந்தோஷம்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 38. Seshadri e.s. said...
  அருமை! தொடர்கிறேன்!//

  மிக்க நன்றி, சார்.

  பதிலளிநீக்கு
 39. பல இடங்களில் சிரிக்க வைத்துவிட்டீர்கள். கொழுக்கட்டை உதாரணம் அந்த காலத்திற்குதான் பொருந்தும் சார். இந்த காலத்தில் எத்தனை நாளும் வைத்து சாப்பிடலாம் காரணம் ஃப்ரிட்ஜ் இருக்க்கே இந்த காலத்த்தில்.

  என்னை பொறுத்தவரை பெண்கள் எப்போது மற்றவர்கல் மீது காட்டும் அன்பை இழக்கிறார்களோ அப்போதே அவர்கள் அழகற்றவர்களாக ஆகுகிறார்கள்


  ///பெண்களுக்கு இயற்கையாகவே ஏற்படும் மாதாந்தர சுழற்சிகளாலும், அடுத்தடுத்து பிள்ளைப்பேறுகளால் ஏற்படும் ஒருசில பிரத்யேகத் தொல்லைகளாலும், குழந்தைகள், குடும்பம், சமையல் அறை வேலைகள் என்ற கூடுதல் பொறுப்புகளை அவர்கள் முன்வந்து ஏற்பதாலும், பழையபடி சீவிமுடிச்சு சிங்காரிக்கவும், பவுடர், ஸ்னோ, செண்ட் என அப்பிக்கொண்டு கவர்ச்சியாக நிற்கவும் முடியாமல் போய்விடுகிறதப்பா; ////

  நீங்கள் சொல்வது மிக பழையகாலத்தில் உள்ள பெண்களைப்பற்றி சார் இந்த காலப் பெண்கள் சீவிமுடிச்சு சிங்காரிக்கவும், பவுடர், ஸ்னோ, செண்ட் என அப்பிக்கொண்டு கவர்ச்சியாகவும் படுக்கபோகும் போதும் மேக்கப் போட்டு தூங்குகிறார்கள்

  அதுமட்டுமல்ல கணவருக்கு முன் அவர்கள் அழகாக மேக்கப் போடுகிறார்களோ இல்லையோ கம்பியூட்டர்ருக்கு முன்பு அழகாக மேக்கப் போட்டு உட்காருகிறார்கள் காரணம் விடியோ சாட்தான் சார்

  ///ஆணோ பெண்ணோ, உடம்பில் தெம்பு குறைந்தாலும், உயிர் உள்ளவரை, உள்ளத்தில் எப்போதும் எழுச்சியும், உற்சாகமும், இளமையும் ஊஞ்சலாட வேண்டுமப்பா,///

  எழுச்சியும், உற்சாகமும், இளமையும் ஊஞ்சலாட இந்த காலத்தில் எவ்வளவோ வழிகள் உள்ளன.


  உறவிர்கு இடையே எழும் பிரச்சனைக்கு காரணம் கல்யாணம் ஆன புதிதில் ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதும் காலப்போக்கில் இவர் நம் கணவர்தான்/மனைவிதான் நாம் சொல்வதை அவர்/அவள் கேட்க வேண்டும் என்று நினைத்து அதிகாரம் செலுந்தும் போதுதான் பிரச்சனைகள் தோன்றுகின்றன. அதன் விளைவாக ஈகோ தோன்றி எல்லாம் பிரச்சனையாகவே முடிகிற்து என்பதுதான் உண்மை. கொழக்கட்டை பிரச்சனை அல்ல

  பதிலளிநீக்கு
 40. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் நன்றி.
  சில கருத்துக்கள் இந்தக் காலத்திற்கு ஒத்துவராது தான். நானும் ஒத்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 41. // “முதல் நாள் சூடாக சுவையாக சாப்பிட ருசியாக இருக்கும் புதுக்கொழுக்கட்டை போன்ற, இந்தப் புதுப்பொண்டாட்டி, நாளடைவில் இந்த ‘ஊசிப்போன கொழுக்கட்டை’ போல ருசி ஏதும் இல்லாமல் ஆகிவிடுகிறாள் என்பதை உனக்கு உணர்த்தவே நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உதாரணம் சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது” என்றார், வ.வ.ஸ்ரீ. //

  // பிறகு அவரே, “நீ மட்டும் என்னப்பா, என்றும் மார்க்கண்டேயனாக 16 வயது இளமையோடும், மன்மதன் போல அழகோடும் எழுச்சியோடும் கடைசிவரை இருந்து விடப்போகிறாயா என்ன! //

  வ.வ.ஸ்ரீ ஒரு நகைச் சுவை பாத்திரம் போலத் தெரிந்தாலும், சில விஷயங்களில் நல்ல குருவாகத்தான் தெரிகிறார். அவர் புதுப் பெண்டாட்டி கொஞ்ச நாளில் பழைய பெண்டாட்டியாக மாறியதும் ஏன் கசந்து போகிறாள் என்று சொல்லும்போது, இப்படி சொல்லுவதற்கும் ஒரு ஆள் தேவைதான் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நகைச்சுவை கதாபாத்திரமான வ.வ.ஸ்ரீ. சில விஷயங்களில் நல்ல குருவாகத்தான் தெரிகிறார்.

   அவர் புதுப் பெண்டாட்டி கொஞ்ச நாளில் பழைய பெண்டாட்டியாக மாறியதும் ஏன் கசந்து போகிறாள் என்று சொல்லும்போது, இப்படி சொல்லுவதற்கும் ஒரு ஆள் தேவைதான் என்று தோன்றுகிறது.//

   அடடா! உண்மையை மனதில் பட்டதை பட்டென்று அப்படியே சொல்லி விட்டீர்களே, ஐயா.

   இதனால் பிரச்சனை ஏதும் வராதோ?

   OK OK அது உங்களுக்கான பிரச்சனை தானே,
   எனக்கென்ன? ;)))))

   நீக்கு
 42. கமர்கட்டெல்லாம் சாப்பிட்டதில்லை. ஆனால் கேள்விப் பட்டிருக்கேன். வழுவட்டையின் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டு சிஷ்யர் என்ன செய்தாரோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam July 23, 2013 at 12:27 AM

   வாங்கோ ... வணக்கம்.

   //கமர்கட்டெல்லாம் சாப்பிட்டதில்லை. ஆனால் கேள்விப் பட்டிருக்கேன்.//

   அடடா, கமர்கட் கூட சாப்பிட்டதில்லையா? ;(

   // வழுவட்டையின் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டு சிஷ்யர் என்ன செய்தாரோ!//

   இது விஷயத்தில் குருவின் உபதேசங்கள் சுத்த வழுவட்டையானவை எனத் தீர்மானித்து, எழுச்சியுடன் செயல்பட்டிருப்பார் ..... இளம் வயதல்லவா அந்த சிஷ்யருக்கு. ;)

   நீக்கு
 43. வாழ்க்கைத் தத்துவங்கள் எவ்வளவு அனாயாசமா எழுச்சியுடன் வருகின்றன? எல்லாம் பொடியின் மகிமை.

  பதிலளிநீக்கு
 44. பாவம் பொண்டாடிகள். கொழுக்கட்டைக்கு உதாரணமா சொல்லிட்டாரே. பினுட்டத்தில் ஒருவர் சொன்னது போல இப்ப தான் ஃப்ரிட்ஜ் வசதி லாம் இருக்கே?!!!

  பதிலளிநீக்கு
 45. புதுசா கல்யாணம் பண்ணிக்கப் போற ஆண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு.


  இண்டு இடுக்குல கொழுக்கட்டை ரெசிபி.

  //
  இப்போதெல்லாம் கடைகளில் கிடைக்குமோ கிடைக்காதோ தெரியவில்லை. //

  இன்னிக்குக் கூட கடையில பார்த்தேனே. நான் சீக்கிரம் திருச்சிக்கு வரணும், வந்து உங்கள பார்க்கணும்ன்னு ஆசீர்வாதம் பண்ணுங்கோ. கமர்கட்டையும் லிஸ்ட்ல சேத்துடறேம்/

  பதிலளிநீக்கு
 46. Jayanthi Jaya May 16, 2015 at 7:21 PM

  //புதுசா கல்யாணம் பண்ணிக்கப் போற ஆண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு. இண்டு இடுக்குல கொழுக்கட்டை ரெசிபி.//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எதையோ ஜயா பெரிசா சொல்ல வந்துட்டு நன்னா சுருக்கி கொஞ்சூண்டு மட்டும், சொன்னாப்போலத் தெரியுது.

  ஓக்கே. ஓக்கே. ஏதோ Something from Jaya is better than Nothing ! :)
  மிகவும் சந்தோஷம், ஜயா.

  கமர்கட் கடையில் கிடைக்காவிட்டால் ஆத்திலேயே, நெய்யில் அதிரஸம் செய்துகொண்டு வாங்கோ, அதுவே போதும் எனக்கு.

  பதிலளிநீக்கு
 47. மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.

  அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.

  அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.

  'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .

  மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.

  முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.

  இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  பதிலளிநீக்கு
 48. கொளுக்கட்டலாம் கண்ணால கூட கண்டுகிட்டதில்ல. இன்னாது அது

  பதிலளிநீக்கு
 49. புது பெண்டாட்டி பூ வாசனை செண்ட் வாசனை பழகிய பிறகு சாம்பாரபொடி பூண்டு வாசனையா. பொட போடற வழக்கத்துக்கு எப்படில்லாம் காரணம் சொல்றாங்க. கொழுக்கட்டை வேர மிடில்ல வந்துடுத்து

  பதிலளிநீக்கு
 50. //தன் கைவசம், அவர் எங்கு சென்றாலும், எப்போதும் வேறு ஒரு மூக்குக்கண்ணாடியும், வேறு ஒரு மூக்குப்பொடி டப்பாவும் உஷாராக கைவசம் வைத்துக்கொண்டு தான் செல்வார். // பின்ன எஸ்கேப் ஆகுறதுன்னா சும்மாவா,,,???

  பதிலளிநீக்கு
 51. பாவம் பொண்டாட்டிகளை கொழுக்கட்டையுடன் கம்பேர் பண்ணினதுக்கு யாரும் அப்ஜெக்ஷன் பண்ணலியா... புதுபொண்டாட்டி மல்லிபூ வாசமுடனும் ஸெண்டு வாசமுடனும் இருந்து நாளாக ஆக மசாலா வாசமுடன் இருப்பதெல்லாம் எல்லார் வீடுகளிலும் ஸகஜம் தானே... பழக பழக பாலும் புளிக்கும்தானே.. புளிக்குதோ தித்திக்குதோ பொண்டாட்டிய தேடாமலா ( தொடாமலா)....)))) இருக்காங்க.... பொண்டாட்டியின் ஷார்ட் நேமே பொடியா.... சூப்பர்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... May 20, 2016 at 11:34 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பாவம் பொண்டாட்டிகளை கொழுக்கட்டையுடன் கம்பேர் பண்ணினதுக்கு யாரும் அப்ஜெக்ஷன் பண்ணலியா...//

   அவர்கள் எல்லோருமே மிகவும் ரஸித்து சிரித்து மகிழ்ந்துள்ளார்கள். இங்கு ஓபனாகச் சொல்ல வெட்கப்பட்டு, என்னிடம் தனியாகச் சொல்லி இன்புற்றுள்ளார்கள். :)

   //புதுபொண்டாட்டி மல்லிகைப்பூ வாசமுடனும் ஸெண்டு வாசமுடனும் இருந்து நாளாக ஆக மசாலா வாசமுடன் இருப்பதெல்லாம் எல்லார் வீடுகளிலும் ஸகஜம் தானே... பழக பழக பாலும் புளிக்கும்தானே..//

   மிகவும் சகஜம் தான். பழகப் பழக புளிக்கும்தான். :)

   //புளிக்குதோ தித்திக்குதோ பொண்டாட்டிய தேடாமலா
   (தொடாமலா)....)))) இருக்காங்க....//

   புளிப்போ, தித்திப்போ, கசப்போ அவை எல்லாமே அறுஞ்சுவைகளில் ஒன்றல்லவா ! அதனால் ஏதோ ஆத்திர அவசரத்திற்குக் கிடைத்தவரை சரி என்றே அட்ஜஸ்ட் செய்துகொண்டு, தேடிக்கொண்டும், தொட்டுக்கொண்டு இருக்கத்தான் வேண்டியுள்ளது. :)

   //பொண்டாட்டியின் ஷார்ட் நேமே பொடியா.... சூப்பர்....//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, இது வ.வ.ஸ்ரீ. என்ற கதாபாத்திரத்தின் மூலம் நான் சொல்வது. :)

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

   நீக்கு