என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 17 மார்ச், 2011

*வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 4]மறு நாள் காலையில் நான் என் சீட்டுக்கு வந்து அலுவலக வேலைகளில் மூழ்கலானேன்.  வ.வ.ஸ்ரீ. அவர்கள் இன்னும் சீட்டுக்கே வரவில்லை.  வரும் வழியில் யார் யாரிடம் எழுச்சியாக என்னென்ன பேசிக்கொண்டு இருக்கிறாரோ? என்ற கவலை எனக்கு.   அவரிடம் மேற்கொண்டு என்னென்ன கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று, ஒரு பேப்பரில் குறித்து ஞாபகமாக என் சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.  

என் மேஜை மீதிருந்த தொலைபேசி சிணுங்கியது.  எடுத்தேன்.  வ.வ.ஸ்ரீ யே தான் பேசினார்.  அப்போது தான் கவனித்தேன் அவர் தன் சீட்டுக்கு வந்துவிட்டார் என்பதை.

“குட் மார்னிங் சார்,  என்ன சார், கொஞ்சம் லேட்டா?” என்றேன்.   

”நான் அப்போதே வந்து விட்டேன், நீ தான் கவனிக்கவில்லை.  ஏதோ குனிந்து எழுதிக்கொண்டிருந்தாய்.   If you are free,  please come to my seat.  Let us continue our discussions"  என்றார்.

ஆஹா, இன்றைக்கும் நம் ஆபீஸ் வேலை அம்போ தான் என்று நினைத்தேனே தவிர,  அவருடைய நகைச்சுவையான பேச்சுக்கள் என்னை வசீகரித்ததால், உடனே அவர் சீட்டுக்கு அருகில் இருந்த மற்றொரு காலி நாற்காலியில் போய் அமர்ந்து விட்டேன்.

”சொல்லுப்பா, நாம நேத்திக்கு எங்கே விட்டோம்”  என்றார் முகத்தில் ஒரு வித பேரெழுச்சியுடன்.

"தங்களில் 99 வயது தந்தைக்கு நீங்கள் எல்லோரும் வாக்கரிசி .... இல்லை இல்லை .... மூக்கரிசி .... அதுவும் இல்லை .... மூக்குப்பொடி போட்டும், அவர் வைராக்கியத்துடன், அதை ஏற்றுக்கொள்ளாமல் தன் இறுதி மூச்சை விட்டதில், விட்டோம், சார்" என்றேன்.

சிரித்துக்கொண்டவர்,“நான் சொல்வதையெல்லாம் அப்படியே கிரஹித்துக் கொண்டு, கரெக்ட்டாகச் சொல்லுகிறாய் நீ, அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றார். 

“நீங்கள் எப்படி சார், இந்தப்பொடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனீங்க?” என்றேன் ஒரு வித ஆச்சர்யமான முகபாவனையுடன்.

“பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்தில் பொடி வாங்கி வருவேன்.  அவருக்கு திருச்சி மலைவாசலில் தேரடி பஜாரில் மேற்குப்பார்த்த முதல் கடையில் தான் ’டி.ஏ.எஸ்.  ரத்தினம் பட்டணம் பொடி’  வாங்கி வரணும். அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும். 

சோம்பலில், வேறு கடைகளில் நான் பொடி வாங்கி வந்தால், அதன் காரசார மணம் குணம் முதலியவற்றை ஆராய்ச்சி செய்து விட்டு, என் மூஞ்சியிலேயே தூவி விடுவார். அவ்வளவு கோபம் வந்துவிடும் அவருக்கு. 

அந்த மலைவாசல் கடையில், பருமனான ஒருவர் முரட்டு மீசையுடன் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு கம்பீரமாக அமர்ந்திருப்பார்.  ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார். 

அதன் பிறகு அந்த ஜாடிகளிலிருந்து கரண்டியால் எடுத்து தராசில் தங்கம் போல நிறுத்து, பதம் செய்யப்பட்டு, கத்தரியால் வெட்டப்பட்ட, வாழைப்பட்டைகளில், பேரெழுச்சியுடன் பேக் செய்து, வெள்ளை நூலினால் ஸ்பீடாகக் கட்டிக்கட்டிப் போட்டுக்கொண்டே இருப்பார், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் என்று பல எடைகளில்.   

அவர் கட்டிப்போடப்போட, அவர் எதிரில் வெள்ளைவெளேரென்ற கதர் சட்டையுடன், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி, தங்க மோதிரங்கள், தங்கத்தில் புலி நகம் கட்டிய மைனர் செயின் முதலியன அணிந்த, மிகவும் குண்டான முதலாளி ஒருவர் அவற்றை உடனுக்குடன் விற்று, கைமேல் காசு வாங்கிப் போட்டுக்கொண்டே இருப்பார்.  கடை வாசலில் எப்போதுமே, (தற்கால ரேஷன் கடைகள் போல), கும்பலான கும்பல் இருந்து வரும். மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என பொடி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்து வந்தனர் அவர்கள்.  

அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு.   

ஒரு அடி நீளத்திற்கு மேல் நீண்ட ஒரு மெல்லிய இரும்புக்குச்சிபோல ஒரு கரண்டி வைத்திருப்பார்கள்.   அதன் கொண்டைப்பகுதியில் ஒரு 10 சிட்டிகை மட்டும் பொடி பிடிக்கும் அளவு குழிவான பகுதி இருக்கும்.  பொடி ஜாடிக்குள் அதை நுழைத்து, அடிக்கடி 5  நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம், வெளிப்பக்கம் நிற்கும் வாடிக்கையாளர்களை நோக்கி அந்த இரும்புக்குச்சி போன்ற கரண்டியை நீட்டுவார்கள்.   அதே நேரம் கோவிலில் சுண்டலுக்கு பாய்வது போல அங்கு நிற்கும் அனைவரும், தங்கள் விரலை ஒரு வித நேச பாசத்துடன், அந்த மிகச்சிறிய கரண்டிக்குள் விட்டு,  பொடியை எடுத்துக்கொண்டு நுகர்ந்து மகிழ்வார்கள்.  இழுக்க இழுக்க இன்பம் அடைவார்கள். அந்தக் காலத்தில் அதுபோல இலவசப்பொடியை நுகர ஆரம்பித்த நுகர்வோர்களில் 12 வயதே ஆன நானும் ஒருவன்.

தினமும் எதற்காக இப்படி என்னைப்போன்ற நூற்றுக்கணக்காண பொடியன்களுக்கு இலவசப்பொடி தர்மம் செய்கிறார்கள் என்று அந்த நாளில் வழுவட்டைத்தனமாக நானே ஆரம்பத்தில் ஆச்சர்யப்பட்டதுண்டு.   பிறகு நாளாக நாளாகத்தான் அது அவர்களின் வியாபார யுக்தி; அனைவரும் எழுச்சியுடன் பொடி போட வேண்டும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் எல்லோருமே ஒரு வித எழுச்சியுடன் விளங்க வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டமும், வியாபாரத் தந்திரமும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இன்றைய இலவச இணைப்புகள், ஆடித்தள்ளுபடி, அதிரடித்தள்ளுபடி என்பதெல்லாம் இந்த இலவசப் பொடியிலிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும்” என்ற சரித்திர உண்மைகளைச் சரமாரியாக எடுத்து விட்டார், நம் வ.வ.ஸ்ரீ. தொடரும்71 கருத்துகள்:

 1. முதன் முதலா உன்னைப்பார்த்தேன் நான் அசந்து போனேனே...

  பதிலளிநீக்கு
 2. >>பின்னூட்டங்கள் வர தாமதமானால் அது என்னையும் வழுவட்டையாக்கி

  அண்ணே .. வழுவட்டைன்னா என்ன?

  பதிலளிநீக்கு
 3. >>>இன்றைய இலவச இணைப்புகள், ஆடித்தள்ளுபடி, அதிரடித்தள்ளுபடி என்பதெல்லாம் இந்த இலவசப் பொடியிலிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும்”

  உண்மைதான்.. போதைக்கு அடிமையாக்கி பின் தனக்கு அடிமை ஆக்கும் தந்திரம் அது

  பதிலளிநீக்கு
 4. //ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார்.

  அதன் பிறகு அந்த ஜாடிகளிலிருந்து கரண்டியால் எடுத்து தராசில் தங்கம் போல நிறுத்து, பதம் செய்யப்பட்டு, கத்தரியால் வெட்டப்பட்ட, வாழைப்பட்டைகளில், பேரெழுச்சியுடன் பேக் செய்து, வெள்ளை நூலினால் ஸ்பீடாகக் கட்டிக்கட்டிப் போட்டுக்கொண்டே இருப்பார், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் என்று பல எடைகளில்.//

  ஆமாம்! :-)

  என் தாத்தாவுக்கு நான் பொடிவாங்கிக் கொடுத்த அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. வ.வ.ஸ்ரீக்கு திருச்சி; என் தாத்தாவுக்கு நெல்லை சாலைக்குமாரசாமி கோவில் அருகிலிருந்த பொடிக்கடை!

  டி.ஏ.எஸ்.இரத்தினம் பட்டணம் பொடியின் லேபிளில் இருக்கிற படமும் நன்றாக இருக்கும். ஒரு மீசைக்காரர் உட்கார்ந்து கொண்டு பொடி இடித்துக்கொண்டிருப்பது மாதிரி! :-))

  பதிலளிநீக்கு
 5. //அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு. //

  ஆஹா! எங்கூரு கடையில் அந்த சலுகையெல்லாம் கிடையாது.

  பதிலளிநீக்கு
 6. //அடுத்த தலைமுறை இளைஞர்கள் எல்லோருமே ஒரு வித எழுச்சியுடன் விளங்க வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டமும், வியாபாரத் தந்திரமும் என்பதைப் புரிந்து கொண்டேன்//

  இதைத்தான் என் பாட்டியும் சொல்லி, என்னை பொடிக்கடைக்கு அனுப்பக்கூடாது என்று தாத்தாவோடு சண்டை போடுவாள். :-)

  பதிலளிநீக்கு
 7. //பின்னூட்டங்கள் வர தாமதமானால் அது என்னையும் வழுவட்டையாக்கி விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை தயவுசெய்து உணர்வீர்களாக!//

  ஆஹா, வழுவட்டையாக இருந்துவிடாமல் உடனுக்குடன் பின்னூட்டம் போட வந்திருவோமில்லே..? :-)

  பதிலளிநீக்கு
 8. படைப்பாளி வழுவட்டையானால்
  வாசகனுக்குத்தானே நஷ்டம்
  எனவேதான் ஆவலுடனும்
  பின்னூட்டத்துடனும்
  தொடர்ந்து வருகிறோம்
  கதை சுவாரஸ்யமாகப் போகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. வழுவட்டையாகி விடும்போது எழுச்சியுடன் இருக்க உங்கள் இடுகையைப் படிக்கிறோம்!!

  இந்தத் தொடரில் 'வழுவட்டை', 'எழுச்சி/பேரெழுச்சி' எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஏதேனும் போட்டி வைக்கும் ஐடியா இருக்கிறதா?!!
  :-))

  பதிலளிநீக்கு
 10. பொடி வியாபாரம் தூள் பறக்கிறது.

  வியாபாரத் தந்திரத்தின் மூலமே இங்கிருந்துதான் வந்ததோ?

  நாங்கள் எழுச்சியாக வந்து விட்டோம் படிப்பதற்கு.
  அடுத்த பகுதியை எழுச்சியாகப் போட்டு விடுங்கள்

  பதிலளிநீக்கு
 11. //ஒரு அடி நீளத்திற்கு மேல் நீண்ட ஒரு மெல்லிய இரும்புக்குச்சிபோல ஒரு கரண்டி வைத்திருப்பார்கள். அதன் கொண்டைப்பகுதியில் ஒரு 10 சிட்டிகை மட்டும் பொடி பிடிக்கும் அளவு குழிவான பகுதி இருக்கும். பொடி ஜாடிக்குள் அதை நுழைத்து, அடிக்கடி 5 நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம், //

  எனக்கும் அந்த அனுபவம் உண்டு. ஒவ்வொரு முறையும் டனக் டனக் என்று ஜாடி சத்தம் வேறு . எப்படி சலிக்காமல் பேரெழுச்சியுடன் எடுத்து தருகிறார்கள் என்று வியப்பதுண்டு .

  அடுத்த பகுதிக்கு எழுச்சியோடு காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 12. எழுத எழுத கதை வளருமா, இல்லை கதை தீர்மானிக்கப்பட்டு எழுத்து வருகிறதா.? நீங்கள் குறிப்பிடும்படியான பேர்வழிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களை மனதில் கொண்டு கற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. அவருடைய நகைச்சுவையான பேச்சுக்கள் என்னை வசீகரித்ததால்,//
  பொடி தூவி பேரெழுச்சியுடன் வாசிக்க வந்துவிட்டோம்.

  பதிலளிநீக்கு
 14. என்னுடைய பெரியப்பாவுடன் செல்லும் சில சமயங்களில் நீங்கள் சொல்லும் அந்த சின்னக்கடை வீதி கடையில் பொடி போடும் வழக்கம் இல்லாத அவர் கையை நீட்டி வாங்கியதை பார்த்திருக்கிறேன். இப்போதும் அந்த ஓசிப் பொடி கொடுக்கிறார்கள்! இன்னொரு விஷயம் அந்தப் பொடிக்கடை பக்கத்திலேயே ஒரு பாக்குக் கடையும் இருக்கிறது என நினைக்கிறேன்! அங்கே கையை நீட்டினால் வாசனைப் பாக்கு ஓசியில் தருவார்கள்!!! தொடர் பேரெழுச்சியுடன் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 15. வாழ்க்கை வழுவட்டையாய்ப் போகாமல் எழுச்சியுடன் இருக்கிறது என்றால் அது உங்கள் நகைச்சுவை என்னும் காரம், குணம், மணம் நிறைந்த எழுத்தால்தான்!

  பதிலளிநீக்கு
 16. தொடர் என் சித்தப்பா கவிஞர் சுந்தர பாரதியின் நினைவுகளை கிளறிவிட்டது. பொடி ஒரு சிட்டிகை இழுத்துவிட்டு , பொதுவுடைமை பாடல்களை அவர் பாட ஆரம்பித்தால் , உண்மையில் எழுச்சி பிறக்கும்.பொடி போட்டால் ஒருவேளை கவி எழுத முடியுமோ என்று நான் சிறு வயதில் சிந்தித்து , முயற்சித்தது உண்டு.
  தொடரட்டும் உங்கள் பொடி உபயம்.

  பதிலளிநீக்கு
 17. சி.பி.செந்தில்குமார் said...
  //முதன் முதலா உன்னைப்பார்த்தேன் நான் அசந்து போனேனே...//

  எதுவுமே முதன்முதலா பார்க்கும்போது அசந்து போகத்தான் செய்யும்.

  //அண்ணே .. வழுவட்டைன்னா என்ன?//

  இதைப்பத்தியே 4 பகுதிகள் வெளியிட்டும் இப்படிக்கேட்டுவிட்டீர்களே, இந்தக்கேள்விதான் அண்ணே, அதற்கு பதிலும்.

  //உண்மைதான்.. போதைக்கு அடிமையாக்கி பின் தனக்கு அடிமை ஆக்கும் தந்திரம் அது//

  மிகச்சரியாக, போதை தெளிந்து, பாய்ண்ட்டுக்கே வந்துட்டீங்க!

  தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 18. வேடந்தாங்கல் - கருன் said...
  //பதிவு சுவாரஸ்யம்...//

  நன்றி; தொடர்ந்து வாருங்கள். இன்னும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.

  பதிலளிநீக்கு
 19. சேட்டைக்காரன் said...
  //ஆமாம்! :-)

  என் தாத்தாவுக்கு நான் பொடிவாங்கிக் கொடுத்த அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. வ.வ.ஸ்ரீக்கு திருச்சி; என் தாத்தாவுக்கு நெல்லை சாலைக்குமாரசாமி கோவில் அருகிலிருந்த பொடிக்கடை!

  டி.ஏ.எஸ்.இரத்தினம் பட்டணம் பொடியின் லேபிளில் இருக்கிற படமும் நன்றாக இருக்கும். ஒரு மீசைக்காரர் உட்கார்ந்து கொண்டு பொடி இடித்துக்கொண்டிருப்பது மாதிரி! :-))

  ஆமாம், அந்த லேபிளே பச்சைக்கலர் Background உடன், பளபளவென்று அழகாக இருக்கும். முரட்டு மீசையுடன் வில்லன் நம்பியார் போல ஒருவர் ஜம்முனு பொடி இடித்துக்கொண்டு இருப்பார். Agreed.

  பதிலளிநீக்கு
 20. சேட்டைக்காரன் said...
  //அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு. //

  / ஆஹா! எங்கூரு கடையில் அந்த சலுகையெல்லாம் கிடையாது./

  எங்க ஊரு எங்க ஊரு தான். இன்றும் அந்தக்கடை அங்கேயே அதே இடத்தில் உள்ளது. இன்றும் இலவச பொடி தர்மம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எழுச்சியுடன் வாங்க, நான் கூட்டிப்போகிறேன்.

  பதிலளிநீக்கு
 21. சேட்டைக்காரன் said...
  //அடுத்த தலைமுறை இளைஞர்கள் எல்லோருமே ஒரு வித எழுச்சியுடன் விளங்க வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டமும், வியாபாரத் தந்திரமும் என்பதைப் புரிந்து கொண்டேன்//

  /இதைத்தான் என் பாட்டியும் சொல்லி, என்னை பொடிக்கடைக்கு அனுப்பக்கூடாது என்று தாத்தாவோடு சண்டை போடுவாள். :-)/

  ஆஹா, அருமையான மலரும் நினைவுகள். பகிர்ந்தமைக்கு நன்றிகள், உங்கள் தாத்தா பாட்டிக்கும் சேர்த்தே!

  பதிலளிநீக்கு
 22. சேட்டைக்காரன் said...
  //பின்னூட்டங்கள் வர தாமதமானால் அது என்னையும் வழுவட்டையாக்கி விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை தயவுசெய்து உணர்வீர்களாக!//

  /ஆஹா, வழுவட்டையாக இருந்துவிடாமல் உடனுக்குடன் பின்னூட்டம் போட வந்திருவோமில்லே..? :-)/

  இன்றே ஒரு முறைக்கு ஐந்து முறையாக வந்து அதை நிரூபித்து விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது எனக்கு. Thanks a Lot, Sir.

  பதிலளிநீக்கு
 23. சேட்டைக்காரன் said...
  //வ.வ.ஸ்ரீ புகழ் வாழ்க! :-))//

  அவர் இன்று எங்கே இருக்கிறாரோ? அரசியலில் பெரும் புள்ளியாகி, உலகிலுள்ள எல்லோரையும் எழுச்சியாக்க, ஐ.நா. சபையில் உரையாற்றப் போயிருப்பாரோ என்னவோ, கதையின் கடைசிப்பகுதியில் தெரிந்து விடும்.

  அவர் சார்பாக உங்களுக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 24. Ramani said...
  //படைப்பாளி வழுவட்டையானால் வாசகனுக்குத்தானே நஷ்டம். எனவேதான் ஆவலுடனும் பின்னூட்டத்துடனும் தொடர்ந்து வருகிறோம். கதை சுவாரஸ்யமாகப் போகிறது. தொடர வாழ்த்துக்கள்//

  தங்களின் இந்த வரிகள் உண்மையிலேயே என்னை நன்கு உற்சாகப்படுத்துவதாகவே உள்ளன. உங்களுக்கு கதையைப்போலவே, எனக்கு பின்னூட்டமும் சுவாரஸ்யமாக உள்ளது.

  தொடர்கிறேன்.தொடர்ந்து வாருங்கள்.நன்றியுடன் VGK

  பதிலளிநீக்கு
 25. //அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும்.//

  மூக்குப்பொடி என்ன காப்பி பொடியா?கமகமவென்று மணக்க...

  //ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார்.//

  ஆஹா இதெல்லாம் நடக்குதா?

  சரி,சரி பொடி போடுறவங்களுக்குதான
  அதன் அருமை தெரியும்.

  பதிலளிநீக்கு
 26. middleclassmadhavi said...
  //வழுவட்டையாகி விடும்போது எழுச்சியுடன் இருக்க உங்கள் இடுகையைப் படிக்கிறோம்!!//

  ஆஹா, அப்படியா செய்தி. ஊக்கபானமோ உற்சாக பானமோ போல இருப்பதால், உங்கள் வீட்டில் காஃபி, டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ் க்கான செலவுகள் குறைந்திருக்குமே? ஹி..ஹி..ஹி..ஹி

  //இந்தத் தொடரில் 'வழுவட்டை','எழுச்சி/பேரெழுச்சி' எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஏதேனும் போட்டி வைக்கும் ஐடியா இருக்கிறதா?!! //

  ஆஹா, இதுவும் நல்ல ஐடியாவாகத்தான் உள்ளது. நீங்களே போட்டி நடத்துங்கள் என்சார்ப்பில். ஏனென்றால் எத்தனை முறை என்று எனக்கே சத்தியமாக சரியான விடை தெரியாது.

  இனி குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

  நன்றி, தொடர்ந்து வாருங்கள்.
  :-))

  பதிலளிநீக்கு
 27. raji said...
  //பொடி வியாபாரம் தூள் பறக்கிறது.//

  சற்றே கண்களை மூடிக்கொள்ளுங்கள். பறக்கும் தூள் கண்களில் விழுந்துவிடப்போகிறது. உங்கள் படைப்புக்களை நம்பியே இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பின்தொடர்வோர்கள்.

  //வியாபாரத் தந்திரத்தின் மூலமே இங்கிருந்துதான் வந்ததோ?//

  இருக்கலாம் என்பதே கதாசிரியரின் கணிப்பு.

  //நாங்கள் எழுச்சியாக வந்து விட்டோம் படிப்பதற்கு.
  அடுத்த பகுதியை எழுச்சியாகப் போட்டு விடுங்கள்//

  சொன்னது சொன்னபடி நடக்கும். நாளை வெளியிடப்படும். ஆனால் மின்தடை இன்றி என் “மை டியர் ப்ளாக்கி” யும் ஒத்துழைப்பு கொடுக்கணும்.

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 28. கே.ஆர்.பி.செந்தில் said...
  //ஆஹா...//

  ”பொடி” போல இரண்டே எழுத்துக்களில் தங்களின் “ஆஹா” அருமை. நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 29. G.M Balasubramaniam said...
  //எழுத எழுத கதை வளருமா, இல்லை கதை தீர்மானிக்கப்பட்டு எழுத்து வருகிறதா.?

  ஆரம்பகாலத்தில் பல காகிதங்களில் எழுதிஎழுதி கசக்கிப்போட்டு, அடித்து திருத்தி, பிறகு சோம்பல் இல்லாமல் திரும்ப எழுதி, முழுத்திருப்தி ஏற்படும்வரை என்னை நானே மிகவும் வருத்திக் கொண்டதுண்டு, சார். இன்று அப்படியில்லை சார்.

  மனதில் அவ்வப்போது தோன்றுவதை ஒரு சின்ன பஸ்டிக்கெட் போன்ற தாளில் மறக்காமல் இருக்க குறித்துக்கொள்வதுடன் சரி.

  ஏனென்றால் இன்று பேனாவுக்கும் பேப்பருக்குமே வேலை இல்லை.

  “மை டியர் ப்ளாக்கி” தான் இருக்கிறாளே, அவள் மட்டும் என்னோடு ஒத்துழைத்தால் போதும், எதைப்பற்றி வேண்டுமானாலும், எவ்வளவு பக்கம் வேண்டுமானாலும் மளமளவென்று எழுதும் திறமையை கடவுள் கொடுத்திருக்கிறார்.

  நல்ல ஒரு மூடு + சுற்றுப்புற (குடும்ப) சூழ்நிலை மட்டும் சரியாக இருந்தால் போதும். குற்றால அருவியாகக் கொட்டுகிறது அடுத்த அடுத்த வார்த்தைகளும், வரிகளும்.

  எல்லாம் உங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிதான் காரணம். வேறு ஒன்றும் எனக்குச் சொல்லத்தோன்றவில்லை.

  ஒருசில நல்ல படைப்புகளை முடித்திடும் போது நமக்கு ஏற்படும் திருப்திக்கும் சந்தோஷத்திற்கும் ஈடு இணை ஏதும் கிடையாதே, சார்.

  //நீங்கள் குறிப்பிடும்படியான பேர்வழிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களை மனதில் கொண்டு கற்பனை கொடிகட்டிப்பறக்கிறது. வாழ்த்துக்கள்//

  ஆமாம், ஆமாம். அநேகமாக நான் சந்தித்த ஒரு சில விசித்திர கேரக்டர்ஸ், அவர்களின் நடை உடை பாவனைகள், பேச்சுக்கள், அனுபவங்கள், பாதிப்புகள், காயங்கள், வலிகள், சந்தோஷங்கள், சாதனைகள், சோதனைகள், வேதனைகள் இவற்றுடன் கொஞ்சம் என் சொந்தக்கற்பனையும் முக்கியமாக நகைச்சுவையும் கலந்து தரப்படுவதே என் படைப்புகள்.

  தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

  பதிலளிநீக்கு
 30. இராஜராஜேஸ்வரி said...
  //அவருடைய நகைச்சுவையான பேச்சுக்கள் என்னை வசீகரித்ததால்,//
  /பொடிதூவி பேரெழுச்சியுடன் வாசிக்க வந்துவிட்டோம்/

  என்னுடன், பின்னூட்டம் என்ற பெயரில் பொடிவைத்து எழுதுவதே உங்களின் வாடிக்கை. அதிலும் எனக்கோர் வேடிக்கை.

  எப்படியோ ஏதோ வசீகரிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் கொஞ்சம் புரிகிறது.

  அதுவரை எனக்கும் சந்தோஷமே, நன்றி, மேடம்.
  தொடர்ந்து வருகை தாருங்கள்.

  பதிலளிநீக்கு
 31. வெங்கட் நாகராஜ் said...
  /என்னுடைய பெரியப்பாவுடன் செல்லும் சில சமயங்களில் நீங்கள் சொல்லும் அந்த சின்னக்கடை வீதி கடையில் பொடி போடும் வழக்கம் இல்லாத அவர் கையை நீட்டி வாங்கியதை பார்த்திருக்கிறேன். இப்போதும் அந்த ஓசிப் பொடி கொடுக்கிறார்கள்!/

  ஆமாம், ஆமாம். இன்று அந்த ஓஸிப்பொடிதர்மம் தொடர்ந்து நடைபெறுவதாக எனக்கும் தகவல் கிடைத்தது.

  //இன்னொரு விஷயம் அந்தப் பொடிக்கடை பக்கத்திலேயே ஒரு பாக்குக் கடையும் இருக்கிறது என நினைக்கிறேன்! அங்கே கையை நீட்டினால் வாசனைப் பாக்கு ஓசியில் தருவார்கள்!!!//

  ஆமாம், ஆமாம். அந்தக்கடையும் ஒரே மணம் கமழ்வதுதான்.

  மிகவும் ஒஸத்தியான பாக்குகள், ரஷிக்லால் பாக்கு, பன்னீர் புகையிலை, வருவல் சீவல் போன்ற A1 Quality தாம்பூல சாமான்கள் விற்கும் கடை அது.

  வருவல் சீவலை வெறும் வருவல் என்றே அங்கு வருபவர்கள் சொல்லுவார்கள். நானும் வாங்கி சாப்பிட்டுள்ளேன்.

  அது வாயில் போட்டால் மிகவும் மணமாகவும், அப்படியே கரைந்து விடுவதாகவும், சற்று திதிப்பாகவும், சேமியா போலத் தேங்காய்த்துருவல்கள் போட்டதாகவும் இருக்கும்.

  அதைக்கொடுத்தால் யாருக்குமே வாயில்போட பிடிக்காமல் போகாது. சுஹவாசிகளுக்கு (சுஹராஜி இல்லை) மட்டுமே இந்த விதரணைகள் புலப்படும்.

  அதை வாங்கி ஒருமுறையாவது வாயில் போட்டவர்கள் தான் வாழ்க்கையிலேயே சுஹவாசி என்பேன் நான். அவ்வளவு ஒரு ருசியாக இருக்கும். அடுத்தமுறை நீங்கள் திருச்சிக்கு வந்தால் கட்டாயம் அந்தத்தாம்பூலம் தரித்துவிட்டுப்போகவும். பிறகு வரும்போதெல்லாம் கிலோ கணக்கில் டெல்லிக்கு வாங்கிப்போக வேண்டியிருக்கும்.

  //தொடர் பேரெழுச்சியுடன் தொடரட்டும்.//

  நன்றி. நீங்களும் தொடர்ந்து வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 32. ரிஷபன் said...
  //வாழ்க்கை வழுவட்டையாய்ப் போகாமல் எழுச்சியுடன் இருக்கிறது என்றால் அது உங்கள் நகைச்சுவை என்னும் காரம், குணம், மணம் நிறைந்த எழுத்தால்தான்!//

  தாங்களே சிரமம் பாராமல் அவ்வப்போது வந்து ஏதாவது சொல்லிப்போவது எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது, சார்.

  இந்தத்தொடரின் பெரும் பகுதிகள் நீங்கள் ஏற்கனவே படித்த என்னுடைய “பொடி விஷயம்” என்ற தலைப்பிலான கதையில் வந்தவையே என்றாலும், அதை நான் இப்போது (பழைய வீட்டை இடித்து நவீனப்படுத்துவது போலவும்,வரப்போகும் பொதுத் தேர்தலை மனதில் கொண்டும்!, ஒரு ஜனநாயகக் கடமையாக நினைத்தும்!!, நம் மக்களுக்கு தேர்தலைப்பற்றியும் அரசியலைப்பற்றியும் எப்படியும் ஒரு விழிப்புணர்வை ஊட்டி விட்டே தீர்வது என்ற நல்லெண்ணத்திலும்!!!)நிறைய மாற்றங்கள் செய்து வலைப்பூவில் பதிவிட்டு வருகிறேன் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன், சார்.

  தொடர்ந்து வாருங்கள் Please. நன்றியுடன் vgk

  பதிலளிநீக்கு
 33. சிவகுமாரன் said...
  //தொடர் என் சித்தப்பா கவிஞர் சுந்தர பாரதியின் நினைவுகளை கிளறிவிட்டது. பொடி ஒரு சிட்டிகை இழுத்துவிட்டு , பொதுவுடைமை பாடல்களை அவர் பாட ஆரம்பித்தால், உண்மையில் எழுச்சி பிறக்கும்.//

  அப்போ இந்த வ.வ.ஸ்ரீ செய்வதும் சொல்லுவதும் சரியாகத்தான் இருக்கும் போலிருக்கு. எழுச்சி பிறந்தற்கான எவிடன்ஸ் உங்களிடம் உள்ளதே!

  //பொடி போட்டால் ஒருவேளை கவி எழுத முடியுமோ என்று நான் சிறு வயதில் சிந்தித்து, முயற்சித்தது உண்டு.//

  அப்போ நானும் முயற்சித்தால் உங்களைப்போன்ற சிறந்த கவியாகிவிட முடியுமோ என்று தோன்றுகிறது.
  (பக்கம் பக்கமாக கதை விடுவது கஷ்டமாகவே உள்ளது; நான் ஒரு வேளை கவியாகி விட்டால், கால் பக்கமோ அரைப்பக்கமோ அதிகம் போனால் ஒரு பக்கத்திலேயோ கவிதை எழுதி சுலபத்தில் புகழ்பெற்று விடுவேனோ என்ற சபலம் ஆட்டிப்படைக்கிறது,ஐயா)


  //தொடரட்டும் உங்கள் பொடி உபயம்.//

  உபயம் தொடரும், ஆனால் உங்களுக்கு உபயோகப்பட்னுமே ?

  நன்றி, அடிக்கடி வாங்கோ Please. அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 34. ஓசிப்பொடி வேறயா! வியாபார தந்திரம் தான்.
  தொடர் பேரெழுச்சியுடன் செல்கிறது. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 35. thirumathi bs sridhar said...
  //அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும்.//

  //மூக்குப்பொடி என்ன காப்பி பொடியா?
  கமகமவென்று மணக்க...//

  மூக்குப்பொடி, காப்பிப்பொடி, பல்பொடி, சாம்பார்பொடி, ரஸப்பொடி, மசாலாப்பொடி, மிளகுபொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, சுக்குபொடி, வெந்தயப்பொடி என்று ஒவ்வொன்றும் கமகமவென்று மணக்கும்தாங்க;

  மல்லிகை, முல்லை, ரோஜா, மனோரஞ்சிதம், மரிக்கொழுந்து என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு நறுமணம் தானே?

  அதுபோலத்தான் இந்த மூக்குப்பொடியும் போலிருக்கு. நமக்கென்னங்க தெரியும் ?

  //ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார்.//

  /ஆஹா இதெல்லாம் நடக்குதா?/

  சொல்கிறாரே வ.வ.ஸ்ரீ. பொய்யா சொல்லுவாறு ?

  //சரி,சரி பொடி போடுறவங்களுக்குதான
  அதன் அருமை தெரியும்.//

  ஆமாங்க, அதோட அருமை நமக்கென்னங்க தெரியும்?. அவங்க சொல்லுவதைப் பேசாம நாமக் கேட்டுட்டுப்போவோமுங்க. OK வா ?

  பதிலளிநீக்கு
 36. கோவை2தில்லி said...
  //ஓசிப்பொடி வேறயா! வியாபார தந்திரம் தான்.
  தொடர் பேரெழுச்சியுடன் செல்கிறது. தொடருங்கள்.//

  வாங்கோ, வாங்கோ, வாங்கோ.....
  [அம்மாடி,நல்ல வேளையா சீக்கிரமாவே வந்துட்டாங்க]

  தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 37. வை.கோபாலகிருஷ்ணன் said...
  கணேஷ் said...
  //ஒரு அடி நீளத்திற்கு மேல் நீண்ட ஒரு மெல்லிய இரும்புக்குச்சிபோல ஒரு கரண்டி வைத்திருப்பார்கள். அதன் கொண்டைப்பகுதியில் ஒரு 10 சிட்டிகை மட்டும் பொடி பிடிக்கும் அளவு குழிவான பகுதி இருக்கும். பொடி ஜாடிக்குள் அதை நுழைத்து, அடிக்கடி 5 நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம், //

  /எனக்கும் அந்த அனுபவம் உண்டு. ஒவ்வொரு முறையும் டனக் டனக் என்று ஜாடி சத்தம் வேறு . எப்படி சலிக்காமல் பேரெழுச்சியுடன் எடுத்து தருகிறார்கள் என்று வியப்பதுண்டு./

  ஆஹா, அருமையாகச் சொன்னாய். டனக் டனக் என்ற ஜாடியின் சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன. உன் நினைவாற்றலையும், கூரிய நோக்குதலையும் நினைத்து பூரிப்படைகிறேன். இன்றும் சலிக்காமல் இதுபோல பொடி தர்மம் அங்கு அதே டனக் டனக் ஜாடி ஒலியுடன் தொடர்கிறது என்பதே ஆச்சர்யமான விஷயம்.

  அடுத்த பகுதிக்கு எழுச்சியோடு காத்திருக்கிறோம்.

  நாளை 19/03/2011 பகுதி-5 வெளியாகும். சந்திப்போம். நன்றியுடன் vgk

  பதிலளிநீக்கு
 38. எழுச்சியும் வழுவட்டையும் சம அளவில் கலந்து பொடி தர்மம் காக்கும் பேரெழுச்சியுடன் வழுவட்டைகளைக் கண்டிக்கும் விதமாக எழுச்சியுடன் கொண்டு செல்லும் பாங்கிற்கு ஒரு ஓ போடுகிறேன்.

  அதே போல சுகந்த ஸ்நஃப் என்று வக்கீல்கள் எல்லாம் உபயோகிக்கும் செண்டட் பொடியும் புழக்கத்தில் இருந்தது. அதன் மணமும் அபாரமாக இருக்கும். இதனளவு காரமிருக்காது.

  அடுத்தது அங்குவிலாஸ் பொடிமன்னன் நினைவுதான் வருகிறது. கண்காட்சிகளிலெல்லாம் பொடியை ஒரு பெரிய உரலில் இடிக்கும் பாவனையுடன் ஒரு மனிதர் அமர்த்தப்பட்டு எல்லாத் திசைகளிலும் ஒரு லுக் விட்ட படி பொடி இடிப்பார் எழுச்சியுடன்.

  இவையெல்லாம் பொடிப் பொடியான பொடித்தகவல்களாலானாலும் பேரெழுச்சி தரத் தக்கவை என்பதை எந்த வழுவட்டையும் ஒப்புக்கொள்ளும்.

  வெல் டன் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 39. சுந்தர்ஜி said...
  //எழுச்சியும் வழுவட்டையும் சம அளவில் கலந்து பொடி தர்மம் காக்கும் பேரெழுச்சியுடன் வழுவட்டைகளைக் கண்டிக்கும் விதமாக எழுச்சியுடன் கொண்டு செல்லும் பாங்கிற்கு ஒரு ஓ போடுகிறேன்.//

  இந்தத்தொடருக்கு முதன் முதலாக வருகை தரும் தங்களை வருக வருக வருக என வரவேற்கிறேன், சார். ”ஓ” போட்டதற்கு முதலில் நன்றி.

  //அதே போல சுகந்த ஸ்நஃப் என்று வக்கீல்கள் எல்லாம் உபயோகிக்கும் செண்டட் பொடியும் புழக்கத்தில் இருந்தது. அதன் மணமும் அபாரமாக இருக்கும். இதனளவு காரமிருக்காது.//

  இது பற்றிய விபரம் பகுதி-6 அல்லது பகுதி-7 இல் வ.வ.ஸ்ரீ. அவர்களால் விளக்கப்பட உள்ளது.

  //அடுத்தது அங்குவிலாஸ் பொடிமன்னன் நினைவுதான் வருகிறது. கண்காட்சிகளிலெல்லாம் பொடியை ஒரு பெரிய உரலில் இடிக்கும் பாவனையுடன் ஒரு மனிதர் அமர்த்தப்பட்டு எல்லாத் திசைகளிலும் ஒரு லுக் விட்ட படி பொடி இடிப்பார் எழுச்சியுடன்.//

  ஆமாம். ஆமாம். அவர் முரட்டு மீசை + சிரித்த முகத்துடன் வில்லன் நம்பியார் போல கம்பீரமாக அமர்ந்து கையில் உலக்கையுடன் உரலில் இடித்தபடியே (பேரெழுச்சியுடன்) காட்சிதருவார்.

  // இவையெல்லாம் பொடிப் பொடியான பொடித்தகவல்களாலானாலும் பேரெழுச்சி தரத் தக்கவை என்பதை எந்த வழுவட்டையும் ஒப்புக்கொள்ளும். //

  நீங்கள் சொன்னால் சரிதான். ஒப்புக்கொள்ளாதவர்கள் V V என்று நீங்கள் சொல்லுவதால், நான் உடனடியாக பேரெழுச்சி தரத்தக்க பொடிப்பொடியான பொடித்தகவல் தான் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன்.

  //வெல் டன் கோபு சார்.//

  மிக்க நன்றி சார். தொடர்ந்து வாருங்கள். பகுதி-5 முதல் பகுதி-8 வரை [மிகவும் ஒரு மாதிரியாக] ஆனால் உங்களைப் போன்றவர்களுக்கு படு சுவாரஸ்யமாக இருக்கக்கூடும்.

  பதிலளிநீக்கு
 40. ஹி..ஹி...கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் போல் இருக்கே...பொடி விஷயம் தான்..ஆனா, ரொம்ப நல்லா கொண்டு போறீங்க, ஸார்!

  பதிலளிநீக்கு
 41. thirumathi bs sridhar said...
  //அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும்.//

  //மூக்குப்பொடி என்ன காப்பி பொடியா?
  கமகமவென்று மணக்க...//

  மூக்குப்பொடி, காப்பிப்பொடி, பல்பொடி, சாம்பார்பொடி, ரஸப்பொடி, மசாலாப்பொடி, மிளகுபொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, சுக்குபொடி, வெந்தயப்பொடி, என்று ஒவ்வொன்றும் கமகமவென்று மணக்கும்தாங்க;

  மல்லிகை, முல்லை, ரோஜா, மனோரஞ்சிதம், மரிக்கொழுந்து என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு நறுமணம் தானே?

  அதுபோலத்தான் இந்த மூக்குப்பொடியும் போலிருக்கு. நமக்கென்னங்க தெரியும் ?


  நேற்றய லிஸ்டில் விட்டுப்போன சிலபொடிகள்:

  கோலப்பொடி, மஞ்சள்பொடி, அரப்புப்பொடி, சீயக்காய்ப்பொடி, சாம்ப்ராணிப்பொடி, கேசரிப்பொடி, வரட்டு மிளகாய்ப்பொடி, பெருங்காயப்பொடி,
  பருப்புப்பொடி, பயத்தம்பொடி, பச்சமாவுப்பொடி

  பல்பொடி..கோலப்பொடியில் ஆரம்பித்து தினமும் பொடிமயமான வாழ்க்கையே வாழ்கிறோம் தானே!

  பதிலளிநீக்கு
 42. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //ஹி..ஹி...கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் போல் இருக்கே...பொடி விஷயம் தான்..ஆனா, ரொம்ப நல்லா கொண்டு போறீங்க, ஸார்!//

  மிக்க நன்றி, நண்பரே.
  நீங்கள் இனிமா (பின்னூட்டம்) தராமல் அசந்து தூங்கியதால் என் தூக்கம் கெட்டுப்போச்சு. இன்னுமே நானும் ஜாலியா தூங்குவேனே!

  பதிலளிநீக்கு
 43. பொடிக்கடையை ரொம்ப உன்னிப்பாக பார்த்து கதை எழுதி அசத்தி இருக்கீங்க.இதை படிக்கும் பொழுது பொடி போடும் என் பாட்டி நினைவுக்கு வந்து விட்டார்.இப்பொழுது பொடி போடும் தாத்தா பாட்டிகள் மிகவும் குறைவு.அதனால பொடி வியாபாரம் படுத்தே விட்டது.முனெல்லாம் நாளிதழில் முதல் பக்கத்திலேயே பட்டணம் பொடி என்று விளம்பரம் அடிக்கடி பார்க்கலாம்.இப்பொழுது அதெல்லாம் காணாமல் போய் விட்டன இல்லையா?

  பதிலளிநீக்கு
 44. ஸாதிகா said...
  //பொடிக்கடையை ரொம்ப உன்னிப்பாக பார்த்து கதை எழுதி அசத்தி இருக்கீங்க.இதை படிக்கும் பொழுது பொடி போடும் என் பாட்டி நினைவுக்கு வந்து விட்டார்.இப்பொழுது பொடி போடும் தாத்தா பாட்டிகள் மிகவும் குறைவு.அதனால பொடி வியாபாரம் படுத்தே விட்டது.முன்னெல்லாம் நாளிதழில் முதல் பக்கத்திலேயே பட்டணம் பொடி என்று விளம்பரம் அடிக்கடி பார்க்கலாம்.இப்பொழுது அதெல்லாம் காணாமல் போய் விட்டன இல்லையா?//

  ஆமாம் மேடம். விளம்பரங்கள் குறைந்து விட்டன. ஆனாலும் வியாபாரம் நடைபெற்கிறது. பொடி போடுபவர்கள் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 45. பாட்டிக்கு பல் வலியென்று ஒரு முறை பொடி தேடி அலைந்தேன் .
  நீங்க குறிப்பிட்டுள்ள அந்த நீள இரும்பு கரண்டி குச்சி மேல் எனக்கொரு ஆசை :)))) அப்ப சிறு வயதில் மண் இட்லி ஊத்தி விளையாட நல்லா இருக்கும்னுதான் :))))
  பொடி போடுபவர்கள் பெரும்பாலும் மூக்கால் முனங்கியபடி பேசுவார்களா ? என் கல்லூரி விரிவுரையாளர் இருவர் அப்படிதான் பேசுவார்கள்

  பதிலளிநீக்கு
 46. angelin said...
  பாட்டிக்கு பல் வலியென்று ஒரு முறை பொடி தேடி அலைந்தேன் .
  நீங்க குறிப்பிட்டுள்ள அந்த நீள இரும்பு கரண்டி குச்சி மேல் எனக்கொரு ஆசை :)))) அப்ப சிறு வயதில் மண் இட்லி ஊத்தி விளையாட நல்லா இருக்கும்னுதான் :))))
  பொடி போடுபவர்கள் பெரும்பாலும் மூக்கால் முனங்கியபடி பேசுவார்களா ? என் கல்லூரி விரிவுரையாளர் இருவர் அப்படிதான் பேசுவார்கள்//

  தங்களுக்கும் அந்த இரும்புக் குச்சி போன்ற கரண்டியுடன் அனுபவம் உணடா! ஆச்சர்யமாக உள்ளது.

  மிக்க நன்றி, நிர்மலா.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 47. இந்தப் பகுதியில் வழுவட்டையை மறக்காமல் கூறி அசத்திவிட்டார்! இலவச விளக்கமும் அருமை!

  பதிலளிநீக்கு
 48. Seshadri e.s. said...
  இந்தப் பகுதியில் வழுவட்டையை மறக்காமல் கூறி அசத்திவிட்டார்! இலவச விளக்கமும் அருமை!//

  மிக்க நன்றி, சார்.

  பதிலளிநீக்கு
 49. அன்பின் வை.கோ - காலை அலுவலகம் வந்த வுடன் வ.வ வினைக் காணாது கலங்கி விட்டீர்களா .... அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மறந்து விடாமல் இருக்க டைரிக் குறிப்பு தயார் செய்தது நன்று.

  தாஙகள் சும்மா இருந்தாலும் அவரால் இருக்க முடியவில்லை. காண வில்லையே எனத் தவித்து - தொலைபேசியில் அன்புடன் அழைத்து - கதையினைத் தொடர்கிறாரே ! பலே பலே ! நேத்து விட்ட இடத்தில் தொடரும் பேரெழுச்சி சூப்பர். நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 50. அன்பின் வை.கோ - நேர்காணல் தொடர்கிறது விட்ட இடத்தில் இருந்து.

  பொடி போடும் அப்பாவிற்கு பொடி வாங்கி வரும் கதை நீண்ட கதை. பருமன் - மீசை - பனியன் பொடி கட்டுபவரினை வ்விவரிக்கும் விதம் மிக மிக இரசித்தேன்.

  பத்து படி டின் - புதிய பொடி - பெரிய கரண்டி - ஜாடி. தராசு - தங்கம் போல நிறுத்தல் - வாழைப்பட்டை - வெள்ளை நூல் - பல் எடைகளில் கட்டுவது. அடடா - என்ன சிந்தனை - என்ன வர்ணனை - அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்தேன் மனதில். மகிழ்ந்தேன்.

  குண்டான் முதலாளி - உடனுக்குடன் விற்று கை மேல் காசு - வெள்ளை வெளேர் கதர்ச் சட்டை - கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி - தங்க மோதிரங்கள் - புலி நகத்துடன் மைனர் செயின் -வர்ணனை அற்புதம்.

  கடை இக்கால ரேஷன் கடை போல் கூட்டம் - பொடி விற்பனை கொடி கட்டிப் பறந்த காலம்.

  ஓசிப்பொடி - விரலை நீட்டினால் - இலவசப் பொடி - தாராள குணம்.

  இழுக்க இழுக்க இன்பம் - 12 வயதில் இழுத்த மலரும் நினைவுகள் - வாழ்க அந்த பொடிக்கடைக்காரர்.

  63 ல் நாங்கள் வைத்திருந்த மளிகைக் கடையில் பொடி வியாபார்ம் சிறிய அளவில் உண்டு. ஒரு மங்கு ஜாடி - அரை அடி நீள இரும்புக் கம்பி - முனையில் குழி - பொடி எடுத்து சிறிய டப்பாவில் போட்டு விற்ப்பொம். அப்படியே நினைவில் நிழலாடுகிறது.

  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 51. cheena (சீனா) said...
  //அன்பின் வை.கோ - காலை அலுவலகம் வந்த வுடன் வ.வ வினைக் காணாது கலங்கி விட்டீர்களா .... அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மறந்து விடாமல் இருக்க டைரிக் குறிப்பு தயார் செய்தது நன்று.

  தாஙகள் சும்மா இருந்தாலும் அவரால் இருக்க முடியவில்லை. காண வில்லையே எனத் தவித்து - தொலைபேசியில் அன்புடன் அழைத்து - கதையினைத் தொடர்கிறாரே ! பலே பலே ! நேத்து விட்ட இடத்தில் தொடரும் பேரெழுச்சி சூப்பர். நட்புடன் சீனா//

  அன்பின் ஐயா,

  வணக்கம்.

  தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தன.

  மனமார்ந்த நன்றிகள், ஐயா.

  பதிலளிநீக்கு
 52. cheena (சீனா) said...
  அன்பின் வை.கோ - நேர்காணல் தொடர்கிறது விட்ட இடத்தில் இருந்து.

  பொடி போடும் அப்பாவிற்கு பொடி வாங்கி வரும் கதை நீண்ட கதை. பருமன் - மீசை - பனியன் பொடி கட்டுபவரினை வ்விவரிக்கும் விதம் மிக மிக இரசித்தேன்.

  பத்து படி டின் - புதிய பொடி - பெரிய கரண்டி - ஜாடி. தராசு - தங்கம் போல நிறுத்தல் - வாழைப்பட்டை - வெள்ளை நூல் - பல் எடைகளில் கட்டுவது. அடடா - என்ன சிந்தனை - என்ன வர்ணனை - அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்தேன் மனதில். மகிழ்ந்தேன்.

  குண்டான் முதலாளி - உடனுக்குடன் விற்று கை மேல் காசு - வெள்ளை வெளேர் கதர்ச் சட்டை - கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி - தங்க மோதிரங்கள் - புலி நகத்துடன் மைனர் செயின் -வர்ணனை அற்புதம்.

  கடை இக்கால ரேஷன் கடை போல் கூட்டம் - பொடி விற்பனை கொடி கட்டிப் பறந்த காலம்.

  ஓசிப்பொடி - விரலை நீட்டினால் - இலவசப் பொடி - தாராள குணம்.

  இழுக்க இழுக்க இன்பம் - 12 வயதில் இழுத்த மலரும் நினைவுகள் - வாழ்க அந்த பொடிக்கடைக்காரர்.//


  அன்பின் ஐயா,

  வணக்கம். தாங்கள் அன்புடன் வருகை தந்து கூறியுள்ள அனைத்து நகச்சுவைக்காட்சிகளும் நான் மீண்டும் நினைத்துப்பார்த்து மகிழ ஓர் வாய்ப்பாக அமைந்தது.

  என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஐயா.

  //63 ல் நாங்கள் வைத்திருந்த மளிகைக் கடையில் பொடி வியாபார்ம் சிறிய அளவில் உண்டு. ஒரு மங்கு ஜாடி - அரை அடி நீள இரும்புக் கம்பி - முனையில் குழி - பொடி எடுத்து சிறிய டப்பாவில் போட்டு விற்ப்பொம். அப்படியே நினைவில் நிழலாடுகிறது.

  நட்புடன் சீனா//

  ஆஹா, தங்கள் கடையில் இதே வியாபாரம் நடந்துள்ளது என்றால் உங்களால் இந்தக்கதையை எவ்வளவு நுணுக்கமாக இரசித்திருக்க முடியும் என எண்ணிப்பார்த்து மகிழ்ந்தேன்.

  என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது ஐயா. மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 53. ///இன்றைய இலவச இணைப்புகள், ஆடித்தள்ளுபடி, அதிரடித்தள்ளுபடி என்பதெல்லாம் இந்த இலவசப் பொடியிலிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும்” என்ற சரித்திர உண்மைகளைச் சரமாரியாக எடுத்து விட்டார், நம் வ.வ.ஸ்ரீ///

  இலவசத்திற்கு அடிமையாகி போனவர்கள் இன்னும் தொடர்கிறார்கள் இப்பொது நிறைய வழுவட்டைகள் உள்ளன

  பதிலளிநீக்கு
 54. நன்றி, நண்பரே.

  ஆம் ஆங்காங்கே இலவசத்திற்கு அடிமையாகிப்போன வழுவட்டைகள் இருக்க்த்தான் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 55. “பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்தில் பொடி வாங்கி வருவேன். அவருக்கு திருச்சி மலைவாசலில் தேரடி பஜாரில் மேற்குப்பார்த்த முதல் கடையில் தான் ’டி.ஏ.எஸ். ரத்தினம் பட்டணம் பொடி’ வாங்கி வரணும். அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும்.


  இந்த பகுதியில் நீங்கள் கதையையும் T.A.S ரத்தினம் பட்டணம் பொடி கடையையும் விவரிக்கும்போது சொல்லவொன்னா மகிழ்ச்சி ஏற்படுகிறது. மலைவாசல், தேரடி பஜார் என்று மனம் அந்தநாள் நினவுகளை நோக்கி பறக்கிறது.


  சின்ன வயதில் அந்த T.A.S ரத்தினம் பட்டணம் பொடிக் கடைக்கு என்னை எங்கள் அப்பா அழைத்துச் சென்று இருக்கிறார். ஆசிரியர்கள், அரசாங்க அலுவலர்கள், மற்றவர்கள் என்று கடை வாசலில் எப்போதும் குறிப்பாக மாலை வேளையில் கும்பல் இருக்கும். அந்த பீங்கான் ஜாடிகளைப் பற்றியும், நீண்ட சிறிய கரண்டிகளைப் பற்றியும் சொன்ன விதம் என்னை அந்த கடைக்கு கொண்டு சென்று விட்டது. ஓசிப் பொடி பழக்கம் நல்லவேளை எனக்கு வரவில்லை. அதனால் மூக்குப்பொடி போடும் பழக்கம் எனக்கு வரவில்லை.

  பதிலளிநீக்கு
 56. அன்புள்ள தமிழ் இளங்கோ, ஐயா, வாங்க, வணக்கம்.

  தாங்கள் நம்ம ஊர் ஆசாமியாக இருப்பதாலும், அதே கடைக்குத் தங்கள் தந்தையுடன் பொடி வாங்கச் சென்றிருப்பதாலும், தங்களால் இந்த நிகழ்வை மற்றவர்களை விட மிகவும் அழகாக ரசிக்க முடிந்துள்ளது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  இன்றும் அதே கடை அதே இடத்தில் சற்றே நவீனப்படுத்தப்பட்டு உள்ள்து ஐயா. அன்று முதலாளி இருக்கையில் இருந்தவர் மிகப் பெரிய படமாக ஆக்கப்பட்டு, முரட்டு ஆணிகளில் தொங்கிக்கொண்டு இருக்கிறார். அவரின் மகன் அதே போன்று பந்தாவாக கோல்டு ஃப்ரேம் கண்ணாடி அணிந்து, கதரில் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையுடன், கழுத்தில் மைனர் செயின் அணிந்து காட்சியளிக்கிறார். கடையில் ஒரே ஒரு சிப்பந்தி வியாபரத்தை கவனித்து வருகிறார். சும்மா ஒரு மாலை வேளையில் அங்கு, பத்து நிமிடங்கள் நின்று கவனித்தேன். ஒரு பத்து வாடிக்கையாளர்கள் வந்து போனார்கள். ஓஸிப்பொடியை அந்த நீண்ட கரண்டியில் நீட்டும் வழக்கம் இன்றும் தொடருகிறது. 10 கிராம் பொடி ஐந்து ரூபாயாம். 50 கிராம் பொட்டலம் 22 ரூபாயாம். கணக்குப் போட்டால் ஒரு கிலோ ரூபாய் 440 ஆகிறது. ஒரு கிலோ ப்யூர் காப்பித்தூளை விட 150% கூடுதல் விலையாக உள்ளது.

  காப்பித்தூளை டிகாக்‌ஷன் ஆக்கி, பால் சேர்த்து, ஜீனி சேர்த்து, எரிபொருள் செலவழித்து காஃபியாக மாற்றி, அருந்த வேண்டியுள்ளது, நமக்கோர் எழுச்சி ஏற்பட.

  ஆனால் இந்த மூக்குப்பொடி ஒரே ஒரு சிட்டிகை எடுத்து அழகாக ஓர் இழுப்பு ... ஒரே இழுப்பு ... மூக்கினில் இழுத்து விட்டாலே போதும் .... சர்வாங்கத்துக்கும் பேரெழுச்சியை ஏற்படுத்தி விடுகிறது போலும். அதனால் தான் இவ்வளவு விலையோ?
  யார் கண்டது? வ.வ.ஸ்ரீ. போன்ற அனுபவசாலிகளுக்கு மட்டுமே தெரியும் விஷய்மல்லவா!

  //ஓசிப் பொடி பழக்கம் நல்லவேளை எனக்கு வரவில்லை. அதனால் மூக்குப்பொடி போடும் பழக்கம் எனக்கு வரவில்லை.//

  இதைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா!

  தங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி.

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 57. ஆஹா, இலவசம் வந்த கதை இப்போத் தான் தெரிஞ்சது. :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam July 23, 2013 at 12:22 AM

   வாங்கோ ... வணக்கம்.

   //ஆஹா, இலவசம் வந்த கதை இப்போத் தான் தெரிஞ்சது. :))))//

   ஆடி மாதத்தில் படித்துள்ளதால், உங்களுக்கு இது நன்றாகவே தெரிய வந்திருக்கும். மிக்க மகிழ்ச்சி. ;)

   நீக்கு
 58. பொடி போடும் டெக்னிக்குக்கு பொடி விற்கும் டெக்னிக் சற்றும் சோடை போனதல்ல போல இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 59. ஓஹோ, பொடிப்பசங்களுக்கும இப்படி ஓசி பொடியினால் தான் பொடி பழக்கம் வந்திச்சோ?

  பதிலளிநீக்கு
 60. இந்த பொடி விற்பனை மகிமையை சின்ன வயசில மைலாப்பூர் ‘ராஜாஜி சீவல் ஸ்டோர்ஸ்’ சில் பார்த்திருக்கிறேன். அது இப்ப அப்படியே மனக் கண்ணுல REWIND ஆயிண்டே இருக்கு. நீ ஏன் அங்க போனேன்னு கேக்கறேளா? எங்க அப்பாதான் வெத்தல பாக்கு போடுவாரே (போடுவாரே என்ன) வயசு 90 ஆகப் போறது அடுத்த வருஷம், இப்பவும் அந்த வெத்தல செல்லத்த விடறதில்ல. நல்ல வேளை எங்காத்துக்காரருக்கு இந்த மாதிரி பழக்கம் எதுவும் இல்ல. பிழைச்சேன் நான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya May 16, 2015 at 7:13 PM

   //நீ ஏன் அங்க போனேன்னு கேக்கறேளா?//

   கேட்கவே மாட்டேன். எனக்கு தங்கமான குணமுள்ள ஜெயா பற்றி நன்னாவேத் தெரியுமாக்கும்.

   //நல்ல வேளை எங்காத்துக்காரருக்கு இந்த மாதிரி பழக்கம் எதுவும் இல்ல.//

   பொடி நெடி மாதிரி சுறுசுறுன்னு, துறுதுறுன்னு, பச்சை மிளகா ... ஊசி மிளகாய் போல கீ பெர்சனா நீங்களே எப்போதும் அவருக்குக் கூட இருக்கும்போது ........ வேறு எந்தப்பழக்கமும் புதுசா அவருக்குத் தேவையே படாது. உங்களைப்பார்த்த மாத்திரத்திலேயே அவருக்கு சர்ரென்று பொடியை இழுத்த பேரெழுச்சி ஏற்பட்டு விடுமே. கொடுத்து வெச்ச மனுஷன், அவரு. :)

   // பிழைச்சேன் நான். //

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, அவரைக்கேட்டாலும் அவரும் ”ஜெயா எனக்குக் கிடைத்ததால் பிழைச்சேன் நான்” என்று தான் சொல்லுவாரு. :))))))

   வாழ்க இருவரும் இதேபோல என்றும் மகிழ்ச்சியுடன்!

   நீக்கு
 61. மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.

  அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.

  அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.

  'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .

  மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.

  முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.

  இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  பதிலளிநீக்கு
 62. அய்ய இதென்ன கோராம பொடி பசங்களுக்கு பளக்கம் காட்டகூடாதுல.

  பதிலளிநீக்கு
 63. பொடி கடைக்காரங்க அளந்து தருவதைக்கூட விளக்கமா சொல்லிட்டீங்களே. சின்ன வயசில ஏற்படும் இதுபோல வேண்டாத பழக்கங்களை வயதான பிறகு நாம விட்டுடணும்னு நெனச்சாலும் விடமுடியாதே.

  பதிலளிநீக்கு
 64. //
  அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு. // இதப்பாத்துதான் நம்ம ஹீரோ அரசியல்ல குதிக்கிற முடிவுக்கு வந்தாரோ...இலவசம்னாலே....குஷிதான்...

  பதிலளிநீக்கு
 65. பொடி காரசாரமான நெடியுடன் பின்னூட்டத்துல எல்லாருமே தூள் கெளப்புறாங்க... இந்த... வ..வ..ஸ்ரீ... மட்டும்... இந்த பதிவை பின்னூட்டங்களைப் படித்தால்.... அனைவருக்கும்.... என்ன செலவானாலும்... பொடி சப்ளை பண்ணி... வழுவட்டைகளை எல்லாம்.... எழுச்சிமிக்கவர்களாக ஆக்கிபோடுவாங்க.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... May 12, 2016 at 11:19 AM

   //பொடி காரசாரமான நெடியுடன் பின்னூட்டத்துல எல்லாருமே தூள் கெளப்புறாங்க... இந்த... வ..வ..ஸ்ரீ... மட்டும்... இந்த பதிவை பின்னூட்டங்களைப் படித்தால்.... அனைவருக்கும்.... என்ன செலவானாலும்... பொடி சப்ளை பண்ணி... வழுவட்டைகளை எல்லாம்.... எழுச்சிமிக்கவர்களாக ஆக்கிபோடுவாங்க.......//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

   நீக்கு