என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 25 மார்ச், 2011

*வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 8 - இறுதிப்பகுதி]



அடுத்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து வ.வ.ஸ்ரீ. அவர்கள் ஆபீஸுக்கே வரவில்லை. எனக்கும் எந்த வேலைகளுமே ஓடவில்லை.  ஒரு வயதான மனிதருடன் மிகக் குறைந்த காலமே ஒரு அலுவலகத்தில் பழகியும், எனக்கு அவர் மீது இப்படி ஒரு அன்பும்,  ஆர்வமும் பிறந்துள்ளது எனக்கே மிகவும் ஆச்சர்யமாகப்போய் விட்டது. 

ஏதோ அவர் மீது ஒரு தனி பாசம்.  தனி பிரியம் எனக்கு. வயதானவர் மற்றும் மிகவும் அனுபவஸ்தர் என்பதாலா, மிகவும் சுவாரஸ்யமாகப் பேசுபவர் என்பதாலா, நகைச்சுவையாகப் பேசி மகிழ்விப்பவர் என்பதாலா என்று சரியாகப் புரியாவிட்டாலும், ஏதோ ஒரு ஈடுபாடு அவருடன் போன ஜன்மத்திலிருந்தே ஏற்பட்டு இப்போது தொடர்கிறதோ என்னவோ.

இன்று சாயங்காலமாக ஆபீஸ் விட்டதும் அவரை அவர் வீட்டில் போய் சந்தித்து வரலாமா என்று நினைத்தேன்.   என் கை என்னையறியாமல் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசச்செய்தது.   மாலை 6 மணிக்கு காந்தி பார்க் என்ற இடத்திற்கு வரச்சொல்லி சொல்லிவிட்டார்.

நான் அவர் சொன்ன பூங்காவிற்கு 5.55 க்கே ஆஜர் ஆகிவிட்டேன். மிகுந்த பதட்டத்துடன் சற்று நேரத்திற்கெல்லாம் வ.வ.ஸ்ரீ. அவர்களும் வந்து சேர்ந்து விட்டார்.

“என்ன சார்,  ஆபீஸ் பக்கமே காணோம் ?”  என்றேன்.

நான் இந்தத்தமிழ்நாட்டிலுள்ள பெரிய பெரிய கட்சிகளுக்காக எவ்வளவு பாடுபட்டு உழைத்திருக்கிறேன் தெரியுமா?  நம் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட யூனியன்களில் எவ்வளவு முறை நான் தலைவராக இருந்து கட்சிக்காக எவ்வளவு ஆதரவு திரட்டிக்கொடுத்திருக்கிறேன் தெரியுமா?  அந்த நன்றி விஸ்வாசத்தை மறந்துட்டாங்களே எல்லாப் பயல்களும்? 

இந்த எலெக்‌ஷனுக்கு முன்னாலேயே ஆபீஸிலிருந்து பணிஓய்வு பெறுவதும் நல்லது தான், இந்த தடவை வரும் எலெக்‌ஷனிலேயாவது நமக்கு எவனாவது ஒருத்தன் எம்.எல்.ஏ. சீட்டுக்கு டிக்கெட் தந்துடுவான்னு நினைச்சேன்;ஆனாக்க எல்லாப்பயல்களும் என்னிடமே பேரம் பேசறானுங்களே!  நான் கத்துக்கொடுத்த பாடத்தை என்னிடமே திருப்பறாங்களே! என்று ஏதேதோ காரசாரமாக ஆரம்பித்தார், வ.வ.ஸ்ரீ.

“அடடா இது தான் நீங்கள் 3 நாளா ஆபீஸுக்கு வராததற்கு காரணமா! விட்டுத்தள்ளுங்க, சார்.   இந்தப் பாழாய்ப்போன பாலிடிக்ஸே உங்களுக்கு வேண்டாமே சார்” என்று உசிப்பி விட்டேன் நான்.

“விடுவேனா இத்துடன் இந்தப்பயல்களை!  தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிக்ளிலும் நமக்கு ஆளுங்க இருக்கு.   தனிக்கட்சி ஆரம்பித்து கூட்டணிக்காவது கூப்பிடுறாங்களான்னு பார்ப்பேன். அதிலும் ஓரங்கட்டப்பட்டால், எல்லா இடங்களிலும் 234 தொகுதிகளிலும் தனித்தே என் கட்சி போட்டியிடும். அப்போது தான் என் கட்சியின் தனித்தன்மையையும், பலத்தையும் நிரூபித்து, அடுத்த எலெக்‌ஷனிலாவது என்னால் ஆட்சியைப்பிடிக்க முடியும். 

இன்று நள்ளிரவு பத்திரிக்கையாளர்களுக்கு இது சம்பந்தமாக சிறப்புப் பேட்டி கொடுக்க இருப்பதாகச் சொல்லி,  அழைப்புகள் அனுப்பியுள்ளேன். நாளை வரும் செய்திகளைப் பார், நான் யார் என்று உனக்கும் தெரியும்” என்று கர்ஜித்தார் வ.வ.ஸ்ரீ. 

”இந்த முற்போக்குக்கூட்டணி, பிற்போக்குக்கூட்டணி என்கிறார்களே, சார், அப்படின்னா என்ன சார், கொஞ்சம் எனக்குப்புரியும் படியா சொல்லுஙளேன்” என்றேன்.

“முற்போக்காவது, பிற்போக்காவது எல்லாமே ஒரே கொள்ளைக்கூட்டம் தானப்பா.   முற்போக்குன்னா: ’ வாந்தி’,   பிற்போக்குன்னா:  ’பேதி’ன்னு நினைச்சுக்கோ. வாந்தியோ பேதியோ எல்லாமே இன்றைய மண்ணாங்கட்டி அரசியலில், சாக்கடைக்கு அனுப்ப வேண்டியவை தான்” என்றார், வ.வ.ஸ்ரீ.,  மிகுந்த ஆத்திரத்துடன். 

”நீங்கள் ஆரம்பிக்கப் போகும் புதுக்கட்சியின் பெயர் என்ன சார்?” என்றேன், நான்.

“மூ.பொ.போ.மு.க”  

அதாவது,

மூக்குப் பொடி போடுவோர் முன்னேற்றக் கழகம்”  

என்றார்.

”தமிழ்நாட்டில் பெரிசா எவ்வளவு பேர்கள் மூக்குப்பொடி போடப்போகிறார்கள்! அவர்களுக்கு என்ன சார் இப்படி தனியே ஒரு முன்னேற்றக் கழகம்?” என்றேன்.

“இங்கு தான் நீ, நம் தமிழ்நாட்டு அரசியலை வழுவட்டைத்தனமாகப் புரிந்து கொள்கிறாய்.    சென்னை மாகாணமாக இருந்தது யாரால் எப்போது ’தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்டது என்ற சரித்திரம் உனக்குத் தெரியுமா?” என்றார் ஆத்திரத்துடன் வ.வ.ஸ்ரீ. 

“சுதந்திரத்திற்குப் பின் பல்லாண்டு ஆட்சி செய்த காங்கிரஸ் போய் கழக ஆட்சியைக் கொண்டு வந்தாரே,  நம் பேரறிஞர் அண்ணா! அவர்களால் கொண்டுவரப்பட்டது தான் இந்தத் ’தமிழ்நாடு’ என்ற புதுப்பெயர், அப்படின்னு கேள்விப்பட்டிருக்கிறேன், சார்”  என்றேன்.

“கரெக்ட்டா சொன்ன தம்பி.   இப்போது உள்ளவர்கள் யாருமே அறிஞர் அண்ணாவின் உண்மையான வாரிசு என்று சொல்லிக்கொள்ள முடியாது. அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சியுடன் மூக்குப்பொடி போடுவார்.   நானும் அதே அண்ணன் உபயோகித்த அதே பொடியைப் போடுகிறேன்.  எனவே அண்ணா அன்று ஆரம்பித்த முன்னேற்றக் கழகத்தின் அசல் வாரிசு, நான் ஒருவன் மட்டுமே.  இது ஒரு பாயிண்ட் போதும் எனக்கு, ஆட்சியைப்பிடிக்க என்று மிகவும் ஆவேசமானார், வ.வ.ஸ்ரீ. அவர்கள்.

”தங்கள் கட்சிக்கு தாய்க்குலத்தில் ஆதரவு இருக்காதே, சார்?”  என்றேன்.

”ஏன் இருக்காது?   மது அருந்தும் பெண்கள், புகைபிடிக்கும் பெண்கள், சுருட்டு பிடிக்கும் பெண்கள்,  வெற்றிலைபாக்குப் புகையிலை போடும் பெண்கள் போலவே பொடி போடும் பெண்கள் நிறைய பேர்கள் உண்டப்பா. 

ஆனால் அவர்களுக்கே இருக்க வேண்டிய அச்சம், நாணம், மடம், பெயர்ப்பு என்று அந்தக்காலத்தில் சொல்லுவார்களே, அந்த ஒரு வெட்கத்தினால், இந்தப்பொடி போடும் பெண்கள் பற்றி வெளியுலகுக்குத் தெரிய நியாயம் இல்லை.   ஆனால் தலைவராகிய எனக்குத் தெரிந்தால் போதாதா! அவர்களின் ஆதரவை அள்ளிப்பெற்றிட முடியுமே, என்னால்!”  என்றார்.

”இருந்தாலும் சார்.......”என்று சற்றே நான் இழுத்தேன்.

”பெண்களே!  தாய்க்குலமே!  உங்கள் ஜாக்கெட்டில் ஒரு பாக்கெட் வையுங்கள். அந்தப் பாக்கெட்டில் பொடியை வையுங்கள்.  ஈவ் டீஸிங்கா, கடத்தலா, கற்பழிப்பா கவலையே படாதீர்கள்.  ஜாக்கெட்டில் உள்ள பாக்கெட்டை அவிழ்த்து தூவுங்கள் பொடியை அந்த வில்லன்களில் கண்களை நோக்கி” என்று கூறி மகளிர் அணியை வலுப்படுத்துவோம். மகளிருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஊட்டுவோம்”  என்று வீர வசனங்கள் பேச ஆரம்பித்து விட்டார், வ.வ.ஸ்ரீ.

“தங்கள் கட்சியின் கொள்கை என்ன?  பிரச்சார யுக்திகள் என்ன?” விளக்குங்களேன் என்றேன்.

”அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் உபயோகித்த அதே மூக்குப்பொடியை நாங்களும் உபயோகிக்கிறோம்.  

எனவே நாங்கள் தான் அண்ணா அவர்களின் உண்மைத்தம்பிகள்.

எங்கள் ”மூ.பொ.போ.மு.க.” வே ஒரிஜினல் தாய்க்கழகம் ஆகும் என்று மக்கள் மன்றத்தில் வாதாடுவோம்.

தாலிக்குத் தங்கம் வேண்டாம் ! 
தாளிக்க வெங்காயமும் வேண்டாம் !! 
மூக்குக்குப் பொடி வேண்டும் !
   முன்னேற வழி வேண்டும் !!       

என்று முழங்கிடுவோம்.






எங்கள் கட்சியின் சின்னமே “பொடிட்டின்” தான்.

தற்சமயம் சத்துணவு என்ற பெயரில் ஏதேதோ உணவுகளும், முட்டைகளும் மட்டும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இவை கொஞ்சம் பசியாற்றி அவர்களைத் தூங்கச்செய்யுமே தவிர, பாடங்கள் மனதில் பதியவோ, மூளை வளர்ச்சியடையவோ எந்தவிதத்திலும் பயன் படாது. 

எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூளைக்கு எழுச்சி கொடுக்கவும், குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்கவும், ஆளுக்கு 5 கிராம் வீதம் தினமும் பொடி தந்து அதை எப்படிப்போடணும் என்று பயிற்சியும் தருவோம். பிறகு அதை படிப்படியாக தினமும் 10 கிராம் வீதம் தருவதற்கும் பாடுபடுவோம்.   

குழந்தைகளே வருங்கால இந்தியா என்பதால் அவர்களுக்கு ஆரம்பப்பள்ளிப் பருவத்திலேயே எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் ’மூ.பொ.போ.மு.க’ கட்சியின் அடிப்படைக்கொள்கைகளில் மிக முக்கியமானதொன்று.

கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்க ஒரு புகழ்பெற்ற சூப்பர் சினிமா நடிகையை தேடி வருகிறேன்.   படுகுஜாலாக ஒருத்தி மட்டும் கிடைத்து விட்டால் போதும், மற்ற எல்லா பிரச்சனைகளும் ஓவர்.

சூரியன் மறைந்தாலும், சுட்டெரிக்கும் அந்த சூரியனை “கை” யே காக்க முயன்றாலும்,  இலைகள் உதிர்ந்தாலும், பம்பரமே படுத்தாலும், கொட்டும் முரசில் கொப்பளமே ஏற்பட்டாலும், மாம்பழமே புளித்தாலும், எழுச்சியுடன் நின்று, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறப்போவது எங்கள் அறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான அரசியல் வாரிசாகிய எங்களின் பொடிட்டின் சின்னமே என எடுத்துரைப்போம்”  என்றார் பேரெழுச்சியுடன் வ.வ.ஸ்ரீ. அவர்கள்.

இருட்டி விட்டதாலும், வ.வ.ஸ்ரீ. அவர்கள் தன்னை மறந்து இவ்வாறு உரக்க வீராவேச உரை நிகழ்த்துவதாலும், பயந்து போன மக்கள், அந்தப் பூங்காவை விட்டு அவசர அவசரமாக வெளியேற, எனக்கும் அவருடன் அங்கு தனியே இருப்பது நல்லதாகப் படாமல், ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.  

“சார், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்.   நீங்கள் கொதித்துப்போய் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைக்கேட்கும் எனக்கு, நீங்களே அடுத்த முதலமைச்சர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது.   மீதி விஷயங்கள் நாளை ஆபீஸில் பேசிக்கொள்ளலாம்” என்றேன்.

இதைக்கேட்ட அவர் என்னைக் கட்டித்தழுவிக் கொண்டு, கை குலுக்கினார். அப்போது, அவர் முகத்தில், இதுவரை நான் என்றுமே பார்க்காத ஓர் பேரெழுச்சியுடன் கூடிய குதூகலத்தை, என்னால் காண முடிந்தது.

மீண்டும் ஒருமுறை என்னைக்கட்டி அணைத்துத் தழுவிக்கொண்டு விட்டு, இந்த நான் ஆரம்பிக்க இருக்கும் புதிய கட்சிக்கு நீயும் ஆதரவாக இருந்து எனக்கு பல உதவிகள் செய்யும்படியாக இருக்குமப்பா, நான் அதைப்பற்றி உனக்கு பிறகு விபரமாகச் சொல்கிறேன், என்று சொல்லி ஒருவழியாகப் புறப்பட்டு சென்று விட்டார்.  

நல்லவேளையாக இவர் என்னைக் கட்டிப்பிடித்ததை யாரும் அங்கே பார்த்ததாகத் தெரியவில்லை.   நானும் நடுங்கியவாறே வீடு போய்ச் சேர்ந்தேன்.

நான் வீடு போய்ச்சேர்ந்தும்,  வ.வ.ஸ்ரீ. அவர்கள் நல்லபடியாக வீடு போய்ச்சேர்ந்தாரா என்று எனக்கு ஏற்பட்ட விசாரத்தில், அவருக்கு மீண்டும் போன் செய்தேன்.      

நெடு நேரமாக ரிங் போயும், போன் எடுக்கப்படவில்லை.   பிறகு மீண்டும் போன் செய்தபோது ஒரு பெண் குரல் கேட்டது எனக்கு.

ஆஹா! ’கொள்கை பரப்புச் செயலாளர்’ ஆக பதவி ஏற்க அதற்குள் ’குஜாலான’எந்த நடிகை மாட்டினாள் என்று ஆச்சர்யப்பட்டேன்.

பிறகு தான் தெரிந்தது அது அவரின் மனைவியின் குரல் என்று.   நான் என்னை அறிமுகம் செய்துகொண்டுவிட்டு, ”மிஸ்டர் ஸ்ரீனிவாசன் சாருடன் பேச வேண்டும்”  என்றேன்.

வ.வ.ஸ்ரீ. அவர்களை ஏதோவொரு மனநோய் மருத்துவமனையில் அட்மிட் செய்திருப்பதாகச் சொன்னார்கள், அவரின் மனைவி.  

நான் பதறிப்போனேன்.  ”ஏன் என்னாச்சுங்க மேடம்? 2 மணி நேரங்கள் முன்புகூட என்னிடம் நல்லாத்தானே பேசிக்கொண்டிருந்தார்!” என்றேன்.   

பிறகு வ.வ.ஸ்ரீ யின் மனைவியே எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.  பயப்பட வேண்டாம் என்றும் மனதை தைர்யப்படுத்திக்கவும் சொன்னார்கள்.  

அதாவது இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் பற்றிய ஏதாவது செய்திகள் வந்தாலே வ.வ.ஸ்ரீ அவர்களுக்கு இதுபோல ஒரு அட்டாக் வருவதுண்டாம். இதுவரை பலமுறை வந்துள்ளதாம்.   பயப்பட ஒன்றும் இல்லையாம். முற்றிய நிலையில் ஒரு நாலு நாள் டிரீட்மெண்ட் கொடுத்து படுக்க வைத்தால் போதுமாம்.  பிறகு பழையபடி, அடுத்த எலெக்‌ஷன் வரை கவலைப்பட வேண்டியதில்லையாம்.   

இன்று தான் அந்த முற்றிய நிலையை அந்த அம்மாவால் கண்டு பிடிக்க முடிந்ததாம்.    இன்னும் நாலு நாட்களில் வழக்கம் போல ஆபீஸுக்கு வந்து விடுவாராம்.   தயவுசெய்து யாரும் அரசியல் பற்றி மட்டும் அவரிடம் பேசாமல் பார்த்துக்கொள்ளுங்கள், என்றாள் அந்த அம்மா, எந்தவித ஒரு டென்ஷனுமே இல்லாமல்.  

இத்தகைய ஒரு அட்டாக் வந்துள்ள ஆசாமியுடன், தனியாக அந்தப் பார்க்கில், இருட்டும் வரை இருந்துள்ளோமே என்பதை நினைத்துப்பார்த்த எனக்குத் தான் இப்போது டென்ஷனாகிப்போனது.

இந்தப்பாழாய்ப்போன அரசியல் தேர்தல்கள் அடிக்கடி வந்து தொலைப்பதனால், இதுபோல எவ்வளவு பேர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனரோ?; எவ்வளவு பேர்களுக்கு மூளை குழம்புகிறதோ?; எவ்வளவு மக்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுகின்றதோ? என நினைத்து, நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

பாவம் அந்த நல்ல மனிதர், வ.வ.ஸ்ரீ., அவர்கள் சீக்கரமாக குணமாகி நல்லபடியாகத் திரும்ப வரவேண்டும்; நல்லபல செய்திகள் அவர் வாயால் தொடர்ந்து நான் கேட்க வேண்டும், என கடவுளிடம் நான் மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டேன்.

[இடைவேளை]


நான் செய்த அந்தப்பிரார்த்தனை வீண் போகவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் வ.வ.ஸ்ரீ.  அவர்கள், வழக்கம்போல எழுச்சியுடன் ஆபீஸுக்கு வந்து விட்டார்.   

அவரிடம் இந்த எலெக்‌ஷன் பற்றிய செய்தியினால் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்டதாக அவர் மனைவி சொன்ன அட்டாக்கின் அறிகுறிகள் எதுவும் தென்படவே இல்லை.   

அந்தளவுக்கு நல்லதொரு ஷாக் ட்ரீட்மெண்ட், கொடுத்திருப்பார்கள் போலிருக்கு!. 

அந்த நல்லதொரு நகைச்சுவையாளரை காப்பாற்றிய, அந்த மனநோய் மருத்துவருக்கும், கடவுளுக்கும் நன்றி கூறினேன், நான்.

நாங்கள் எங்கள் அலுவலகத்தில் ஆவலுடன் எதிர்பார்த்த வ.வ.ஸ்ரீ. அவர்களின் பணிஓய்வு பெறும் நாளும் வந்து விட்டது.   இன்று தான் அவர் பணிஓய்வு பெறப்போகிறார். 

அந்தக் காலைப்பொழுதில் வ.வ.ஸ்ரீ. யின் டேபிளின் மேல், இரண்டு டஜன் எவர்சில்வர் பொடி டப்பாக்கள், புத்தம் புதியதாக பளபளவென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.   ஒவ்வொன்றும் ஒண்ணரை அங்குல உயரமும், முக்கால் அங்குல விட்டமும் கொண்டதாக, திருகு மூடி போட்டதாக இருந்தன.  ஒவ்வொன்றிலும் ரூ.28.40 என்று விலை போடப்பட்டிருந்தன.

அன்று பணிஓய்வு பெறும் அவரை சந்திக்க நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பல்வேறு துறைகளிலிருந்தும்,தொழிற்சங்கங்களிலிருந்தும் வந்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, பொற்கிழிகள், நினைவுப்பொருட்கள் என்று கொடுத்தபடி இருந்தனர். மாலைகள் மலை போலக்குவியத் தொடங்கின. 

பொடி போடும் பழக்கமுள்ள தன் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் ஒரு புதுப்பொடிட்டின் வீதம், தன் நினைவுப்பரிசாக அளித்து வந்தார் வ.வ.ஸ்ரீ.   அந்த டின்கள் உள்ளே முழுவதுமாக மூக்குப்பொடி அடைக்கப்பட்டிருந்தது கண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டு, ஆனந்தக்கண்ணீருடன் வ.வ.ஸ்ரீ. யுடன் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.

ஆபீஸ் விட்டதும் அவரை வீடு வரை கொண்டு சேர்க்க நண்பர்கள் பலரும் பல கார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.ஒரு 25 கார்களுக்கு மேல் வரிசையாக பவனி வந்து ஒன்றன்பின் ஒன்றாக நின்றன.  








இவற்றையெல்லாம் வாழ்க்கையில் முதன் முதலாகப்பார்த்த எனக்கும் உற்சாகம் ஏற்பட்டது.   அவர் பயணம் செய்யப்போகும் விசேஷமான காரில் அவருடைய மாலைகள், பரிசுப் பொருட்கள் முதலியவற்றுடன் நானும் தொத்திக்கொண்டேன்.

எங்களின் மிகப்பெரிய நிறுவனத்தின் ஷிப்ட் முடிந்ததற்கான சங்கு அப்போது ஒலிக்க ஆரம்பித்தது.   கழுத்தில் ஆளுயர மாலையுடன் வ.வ.ஸ்ரீ. அவர்கள் காரில் ஏறி அமர்ந்து விட்டார்.  கார் கதவு மட்டும் இன்னும் மூடப்படவில்லை. பத்தாயிரம் வாலா பட்டாஸுச்சரம் ஒன்று கொளுத்தப்பட்டது.   வெடிகள் வெடித்து ஒருவழியாக ஓய்ந்தன. வ.வ.ஸ்ரீ அமர்ந்திருந்த காரைச்சுற்றி ஒரே கூட்டம்.  பிரியாவிடை கொடுக்க அலுவலகத் தோழர்களும், தோழிகளுமாக கூடியிருந்தனர். 

வ.வ.ஸ்ரீ. தன் பொடிட்டின்னை எடுத்து இடதுகை விரல்நுனியில் வைத்து, வலது கை ஆட்காட்டிவிரலால் இரண்டு தட்டுதட்டிவிட்டு, பிறகு மெதுவாக அதைத் திறந்து, காரின் ஒரு ஓர இருக்கையில் அமர்ந்தவாறே வெளிப்பக்கமாக நீட்டினார்.

பொடி போட்டுப்பழக்கம் உள்ளவர்கள், பழக்கம் இல்லாதவர்கள்,  ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் அதில் தங்கள் விரல்களை இட்டு, ஆளுக்கு ஒரு சிட்டிகை வீதம் பொடியை எடுத்தனர். 

இதுவரை நமக்கு நம் அலுவலக வாழ்க்கையில் அலுப்புத்தட்டாமல் ஒருவித கலகலப்பை ஏற்படுத்தி வந்த வ.வ.ஸ்ரீ. என்ற பெரியவர் கொடுத்த பிரஸாதமாகவே அதை நினைத்து தங்கள் மூக்கினில் வைத்து, சர்ரென்ற ஒலியுடன், ஒரே நேரத்தில், ஒற்றுமையாகவும் ஒரே இழுப்பாகவும் இழுத்தனர்.  

அவர்களின் ஒட்டுமொத்த தும்மல் சப்தம் விண்ணை முட்ட, அதுவே நல்ல சகுனம் என்று நினைத்த வ.வ.ஸ்ரீ. கார் கதவையும், தன் கையிலிருந்த பொடிட்டின்னையும் மூடியவாறு எழுச்சியுடன் புறப்படச் சொன்னார்.






15 கார்களும் வ.வ.ஸ்ரீ. யின் வீடு நோக்கி, மெதுவாக பயணிக்க ஆரம்பித்தன.  அந்தக் காட்சியைக் காண மிகவும் அருமையாகவே இருந்தது, எனக்கு.   

வ.வ.ஸ்ரீ. அவர்கள், அவர் அருகிலேயே அமர்ந்திருந்த என்னை அன்புடன் ஒரு பார்வை பார்த்து புன்னகை புரிந்து விட்டு, ஏதோ ஒரு அன்புப்பரவசத்தால் என்னை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டார்.     எனக்கு உடனே அந்தப் பூங்கா ஞாபகம் வந்து விட்டது.    



வெற்றி, வெற்றி, வெற்றி ........ நானே முதலமைச்சர், நீயே நிதியமைச்சர்.   கோட்டையை நோக்கி நாம் ஆட்சியமைக்கச் சென்று கொண்டிருக்கிறோம்” என்று மூ.பொ.போ.மு.க, தலைவர் வ.வ.ஸ்ரீ. அவர்கள் என்னிடம் சொல்லுவது போன்ற பிரமை ஏற்பட்டது எனக்குள். 

 -o-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-o-







79 கருத்துகள்:

  1. // அந்தப் பாக்கெட்டில் பொடியை வையுங்கள். ஈவ் டீஸிங்கா, கடத்தலா, கற்பழிப்பா கவலையே படாதீர்கள். ஜாக்கெட்டில் உள்ள பாக்கெட்டை அவிழ்த்து தூவுங்கள் பொடியை அந்த வில்லன்களில் கண்களை நோக்கி”//

    அந்த பொடி கண்ணில் படாமல் சற்று தவறி ஆண்கள் மூக்கில் பட்டுவிட்டால்..??? அதுவும் திருடுபவன் மூக்குப்பொடி போடும் ஆளாக இருந்தால்...உங்கள் கட்சிக்கு மேலும் சில ஓட்டுகள் விழுவது உறுதி.

    பதிலளிநீக்கு
  2. தாலிக்குத் தங்கம் வேண்டாம் !
    தாளிக்க வெங்காயமும் வேண்டாம் !!
    மூக்குக்குப் பொடி வேண்டும் !
    முன்னேற வழி வேண்டும் !!


    .......கோபு மாமா, தேர்தல் நேரத்துல இப்படி எழுதி ரிலீஸ் செய்தால், copyright வாங்கி வச்சுக்கோங்க.... யாராவது இதையெல்லாம் copy அடிச்சு கோஷம் போடப் போறாங்க... ஹா,ஹா,ஹா,ஹா... அடுத்த நகைச்சுவை தொடர், எப்போ மாமா?

    பதிலளிநீக்கு
  3. எழுச்சியுடன் ஆரம்பித்து எழுச்சியுடனே முடிந்துள்ளது வ.வ.ஸ்ரீ தொடர். தேர்தல் சமயத்தில் நல்ல கோஷங்கள் எழுப்பிய உங்களிடம் கோஷங்களை எழுதி வாங்க போட்டி ஆரம்பித்து விடும் போல! தயாராக இருங்கள் பேனா, பேப்பருடன் :)))))) அடுத்த தொடர் எதைப்பற்றி?

    பதிலளிநீக்கு
  4. //தேர்தல் நேரத்துல இப்படி எழுதி ரிலீஸ் செய்தால், copyright வாங்கி வச்சுக்கோங்க.... யாராவது இதையெல்லாம் copy அடிச்சு கோஷம் போடப் போறாங்க...///


    hahahahah

    பதிலளிநீக்கு
  5. //தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிக்ளிலும் நமக்கு ஆளுங்க இருக்கு.//

    இந்த வசனத்தை வ.வ.ஸ்ரீ தான் கண்டுபுடிச்சாரோ? ஆளாளுக்கு இப்பல்லாம் இதைத் தான் சொல்றாங்க! :-)

    பதிலளிநீக்கு
  6. //முற்போக்குன்னா: ’ வாந்தி’, பிற்போக்குன்னா: ’பேதி’ன்னு நினைச்சுக்கோ.//

    ப்பூ, இவ்ளோ தானா மேட்டர்? நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சிட்டிருந்தேனே? :-))))))

    பதிலளிநீக்கு
  7. //மூக்குப் பொடி போடுவோர் முன்னேற்றக் கழகம்//

    கேட்டதுமே பல அரசியல்வாதிகளுக்கு மூக்குலே வியர்த்திருக்கணுமே?

    பதிலளிநீக்கு
  8. //அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சியுடன் மூக்குப்பொடி போடுவார். நானும் அதே அண்ணன் உபயோகித்த அதே பொடியைப் போடுகிறேன்.//

    ஆஹா, அதுனாலே தான் அறிஞர் அண்ணா சூப்பரா பொடி வச்சுப் பேசினாரோ? :-))

    பதிலளிநீக்கு
  9. //மகளிருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஊட்டுவோம்” என்று வீர வசனங்கள் பேச ஆரம்பித்து விட்டார், வ.வ.ஸ்ரீ.//

    க்ரேட்! அரசியலை அத்துப்படியா தெரிஞ்சு வச்சிருக்காரு வ.வ.ஸ்ரீ!

    பதிலளிநீக்கு
  10. //மூக்குக்குப் பொடி வேண்டும்!
    முன்னேற வழி வேண்டும் !! //

    சபாஷ்!! மூக்குப்பொடி கைவிடேல்!

    பதிலளிநீக்கு
  11. //படுகுஜாலாக ஒருத்தி மட்டும் கிடைத்து விட்டால் போதும், மற்ற எல்லா பிரச்சனைகளும் ஓவர்.//

    அப்படி மட்டும் பண்ணினா, பொடி போடுற ப்ழக்கமில்லாதவங்களும் கட்சியிலே சேருவாங்க!

    பதிலளிநீக்கு
  12. //அதாவது இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் பற்றிய ஏதாவது செய்திகள் வந்தாலே வ.வ.ஸ்ரீ அவர்களுக்கு இதுபோல ஒரு அட்டாக் வருவதுண்டாம். //

    அதுக்குப் பேரு அக்யூட் பொலிட்டிக்கோ எலெக்ஷனோப்ஸி!

    பதிலளிநீக்கு
  13. எட்டு பகுதியிலே புட்டுப் புட்டு வச்சிட்டீங்க! :-))
    வாழ்க வ.வ.ஸ்ரீ புகழ்! வளர்க மூக்குப்பொடி பெருமை!!

    பதிலளிநீக்கு
  14. //“முற்போக்காவது, பிற்போக்காவது எல்லாமே ஒரே கொள்ளைக்கூட்டம் தானப்பா. முற்போக்குன்னா: ’ வாந்தி’, பிற்போக்குன்னா: ’பேதி’ன்னு நினைச்சுக்கோ. வாந்தியோ பேதியோ எல்லாமே இன்றைய மண்ணாங்கட்டி அரசியலில், சாக்கடைக்கு அனுப்ப வேண்டியவை தான்//

    ரொம்ப சரியான வரிகள்.

    அடடா!அதுக்குள்ள இறுதிப் பகுதி வந்துடுத்தே!
    அடுத்த நகைச்சுவை தொடர் பத்தி அறிவிப்பு வரலையே?

    பதிலளிநீக்கு
  15. நல்ல வாரிசு,நல்ல சின்னம்,கதையின் அமைப்பும்,முடிவும்,பொடி டின்னோடு வழியனுப்பிய விதமும் சூப்பர் சார்.

    பதிலளிநீக்கு
  16. அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சியுடன் மூக்குப்பொடி போடுவார். .//
    ஆம் அறிஞர் அண்ணா தேர்வு அறையில் கூட கண்காணிப்பாளரின் அனுமதியுடன் பொடி போட்டுக் கொண்டுதான் பரீட்சை எழுதி அதிக மதிப்பெண் பெற்றாராம்.
    அவர் பயணம் செய்யப்போகும் விசேஷமான காரில்
    நாங்களும் சென்று பிரியாவிடை அளிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  17. தொடர்ந்து படிச்சிட்டு வர்றேன் ஐயா... காங்கிரஸ் எதிர்ப்பு வேலைகளில் இருப்பதால் பின்னூட்டங்கள் இட முடியவில்லை..

    பதிலளிநீக்கு
  18. "தாலிக்குத் தங்கம் வேண்டாம் !
    தாளிக்க வெங்காயமும் வேண்டாம் !!
    மூக்குக்குப் பொடி வேண்டும் !
    முன்னேற வழி வேண்டும் !!"

    இது சூப்பரா இருக்கே!

    நல்ல நகைச்சுவைத் தொடர் முடிந்ததில் வருத்தம் தான். அடுத்த தொடரை விரைவில் வெளியிடுங்க.

    பதிலளிநீக்கு
  19. //நீங்கள் கொதித்துப்போய் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைக்கேட்கும் எனக்கு, நீங்களே அடுத்த முதலமைச்சர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது. // நல்ல ட்ரெயினிங் தான்!
    Handing over-ல் பொடி டப்பாவை பலருக்கு விலைச் சீட்டோடு கொடுத்து, கதாநாயகனுக்கு மட்டும் இந்த 'நல்ல பழக்க'த்தை hand over செய்யாத வ.வ.ஸ்ரீ. வாழ்க!

    அடுத்த தொடருக்குக் காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  20. புள்ளி வைத்து போடப்படுகிற
    அழகான கோலம் போல
    தாங்கள் பொடிவைத்துப்போட்ட பதிவு
    உண்மையில் அருமையிலும் அருமை
    வல்லவன் கையில் புல் மட்டுமா ஆயுதம்
    ஒரு சிட்டிகை பொடி கூட பேராயுத்மே என
    இப்பதிவின் மூலம் நிரூபித்துள்ளீர்கள்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. நீங்களே அடுத்த முதலமைச்சர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது. இப்படி உசுப்பேத்தியே அவருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் வரை கொண்டு போயாச்சு.. நகைச்சுவை திலகம் என்று உங்களுக்கு பட்டம் கொடுக்க ஆசை..

    பதிலளிநீக்கு
  22. //"தாலிக்குத் தங்கம் வேண்டாம் !
    தாளிக்க வெங்காயமும் வேண்டாம் !!
    மூக்குக்குப் பொடி வேண்டும் !
    முன்னேற வழி வேண்டும் !!" //

    ஹா...ஹா...ஹா..அதென்ன தேர்தல் இலவசங்கள் அறிவிப்பு பட்டியல் மாதிரியே இருக்கே...

    //“மூ.பொ.போ.மு.க”

    அதாவது,

    “மூக்குப் பொடி போடுவோர் முன்னேற்றக் கழகம்”//

    உங்கள் கழகத்திற்கு போட்டியாக மற்றொரு கழகம் ரெடி... பாருங்களேன்...

    தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்”
    http://jokkiri.blogspot.com/2010/04/blog-post.html

    பதிலளிநீக்கு
  23. திரு. சேட்டைக்காரன் அவர்களே
    இந்த நகைச்சுவைத்தொடரின் பகுதி-1 ஆரம்பம் முதல் பகுதி-8 கடைசிவரை, தினமும் பலமுறை வந்து பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இந்தத்தொடருக்கு மட்டும் மொத்தம் 29 முறைகள் பின்னூட்டம் அளிக்க வந்து அனைத்து எதிர்கட்சியினரையும் விட முன்னனியில் இருக்கிறீர்கள். அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  24. அன்புள்ள மகள் திருமதி ராஜி & அன்புச் சகோதரி திருமதி thirumathi bs sridhar அவர்களே!

    நீங்கள் இருவரும் இந்த நகைச்சுவைத்தொடரின் பகுதி-1 ஆரம்பம் முதல் பகுதி-8 கடைசிவரை, தினமும் வந்து பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நீங்கள் இருவருமே இந்தத்தொடருக்கு மட்டும் மொத்தம், தலா 9 முறைகள் பின்னூட்டம் அளிக்க வந்து மகளிர் அணியில் முன்னனியில் முதலிடம் வகிக்கிறீர்கள்.

    அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  25. என் அன்பிற்குரிய
    திரு. வெங்கட் அவர்களே,
    திருமதி கோவை2தில்லி* அவர்களே,
    திருமதி மி.கி.மாதவி அவர்களே,
    திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!


    நீங்கள் நால்வரும் இந்த நகைச்சுவைத்தொடரின் பகுதி-1 ஆரம்பம் முதல் பகுதி-8 இறுதி வரை, தினமும் தவறாமல் வந்து, பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    தினமும் வந்தீர்கள் என்ற சிறப்பிடம் பெறுகிறீர்கள்.
    அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    [*தாங்கள் கொடுத்த தகுந்த விளக்கத்தினால் தங்களின் முதல் நாள் விடுப்பு (Absent treated as 'ON DUTY')மட்டும் வேலைக்கு வந்ததாக நிர்வாகத்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது]

    பதிலளிநீக்கு
  26. அன்புள்ள (என் அக்கா மகள்) சித்ராவுக்கு,

    பல்வேறு அவசர அவசியப்பணிகள் நிமித்தம் வலைப்பூவுக்கு வரமுடியாத சூழ்நிலைகளை வெகு அழகாக, வலைப்பு மூலமே ஒரு பதிவாக இட்டு, அன்புள்ளங்கள் அனைவரிடமும் அனுமதி பெற்று விடுப்பில் சென்றும், தொடர்ந்து தினமும் இந்த கோபு மாமாவுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு பாராட்டி, ஊக்குவித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். எப்படியோ இந்த கடைசி நிறைவுப்பகுதிக்கு நேரில் வந்து மங்களம்பாடி, ஆராத்தி சுற்ற வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  27. என் பெருமதிப்பிற்கும் உரிய திரு. ரமணி சார்,
    //புள்ளி வைத்து போடப்படுகிற
    அழகான கோலம் போல
    தாங்கள் பொடிவைத்துப்போட்ட பதிவு
    உண்மையில் அருமையிலும் அருமை
    வல்லவன் கையில் புல் மட்டுமா ஆயுதம்
    ஒரு சிட்டிகை பொடி கூட பேராயுதமே என
    இப்பதிவின் மூலம் நிரூபித்துள்ளீர்கள்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

    சுவையான கொழுக்கட்டையும், பளபளப்பான புதுச்சொம்பு நிறைய பாலும் பரிமாறப்பட்ட பகுதி-5 க்கு மட்டும் தாங்கள் வரவில்லையே என்ற குறை எனக்கு ஒருபுறம் இருந்துவந்தும், மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் தவறாமல் அன்புடன் வருகை தந்து
    சிறப்பாக வாழ்த்திய தங்களுக்கு, என் ஸ்பெஷல் நன்றிகள். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள
    திரு. கோபி அவர்களே,
    திரு. எல்.கே அவர்களே,
    திரு. கலாநேசன் அவர்களே,
    திரு. C.P.செந்தில்குமார் அவர்களே,
    திரு. !சிவக்குமார்! அவர்களே.

    அனைத்துப்பகுதிகளையும் படித்து மகிழ்ந்தும், பல்வேறு தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் மற்றும் பணி அழுத்தம் காரணமாக, அவ்வப்போது மட்டும் வந்து பின்னூட்டம் அளித்துள்ள உங்களுக்கும், தாங்கள் மேற்கொண்டுள்ள பணிகள் மேல் கொண்டுள்ள தங்களின் ஈடுபாட்டுடன் கூடிய மிகுந்த அக்கரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    [எல்லோருமே இந்தக்கதையினில் வரும் வ.வ.ஸ்ரீ. போலவே அலுவலகங்களில் செயல்பட்டு வந்தால் பிறகு நம் நாடு எப்படி முன்னேற முடியும், உற்பத்தி இலக்கினை எவ்வாறு எட்ட முடியும்? என்று நீங்கள் முணுமுணுப்பதும் புரிகிறது]

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
    இவைதான் அன்றே நம் அறிஞர் அண்ணா வலியுறுத்திக் கூறியது.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  29. ரிஷபன் said...
    //நீங்களே அடுத்த முதலமைச்சர் என்பது
    தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது.//

    இப்படி உசுப்பேத்தியே அவருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்
    வரை கொண்டு போயாச்சு..
    நகைச்சுவை திலகம் என்று உங்களுக்கு பட்டம்
    கொடுக்க ஆசை../

    தூங்கிக்கொண்டிருந்த என்னை உசுப்பேத்தி எழுத்துலகுக்கு இழுத்து வந்ததே தாங்கள் தானே!

    இவ்வாறு ஏதாவது எழுதி எழுதியே கடைசியில் நான் ஏதும் ஷாக் ட்ரீட்மெண்ட்க்கு போகாமல் இருந்தால் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.

    அவ்வாறெல்லாம் ஏற்படாமல் தாங்களே என்னைத் தொடர்ந்து உங்கள் கண்ட்ரோலிலே வைத்துக் கொள்ளவும்.

    எனவே “நகைச்சுவை திலகம்” என்று நீங்கள் எனக்கு அளிக்க ஆசைப்படும் பட்டமளிப்பு விழாவை இப்போதைக்கு ஒத்தி வைத்து விடவும். அதுவும் என்னை உசுப்பேத்தி விடுவதாக அமைந்துவிடும்.

    தங்களின் அன்பும் நட்பும் பிரியமும் ஆதரவும் வழிகாட்டுதலும் தான் என்றும் நான் எதிர்பார்ப்பது.

    அன்புடன் தங்கள் (ராகத்துடன் வீ....ஜீ...) vgk

    பதிலளிநீக்கு
  30. சார் தங்களின் இப்படியொரு பின்னூட்டத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்,(அக்கவுண்ட் ஆபிசர்னு நிருபிச்சுட்டீங்க போங்க)
    மு.பொ.போ.மு.க விற்கு இப்படிப்பட்ட ரிசல்ட்டை நான் எதிர்பார்க்கலை சார்.அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  31. அடுத்த நகைச்சுவை தொடர், எப்போ மாமா? [சித்ரா]
    அநேகமாக நாளைக்கே கூட இருக்கலாம் vgk

    அடுத்த தொடர் எதைப்பற்றி? [வெங்கட் நாகராஜ்]
    சமையல் சாப்பாட்டில் என் அனுபவம் பற்றி vgk

    அடுத்த நகைச்சுவை தொடர் பத்தி அறிவிப்பு வரலையே? [ராஜி]
    தொடர் அல்ல, ஆனால் தொடர்பதிவு. அதிலும் நகைச்சுவை வழக்கம் போல உண்டு. vgk

    அடுத்த தொடரை விரைவில் வெளியிடுங்க.
    [கோவை2தில்லி]
    OK Madam. நாளையே vgk

    அடுத்த தொடருக்குக்காத்திருக்கிறேன்![மி.கி.மாதவி]
    நன்றி மேடம். நாளை வரும் vgk

    தொடர வாழ்த்துக்கள் [ரமணி]
    வாழ்த்துக்கு நன்றி ஐயா. தொடர்கிறேன் vgk

    பதிலளிநீக்கு
  32. thirumathi bs sridhar said...
    //சார் தங்களின் இப்படியொரு பின்னூட்டத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்,(அக்கவுண்ட் ஆபிசர்னு நிருபிச்சுட்டீங்க போங்க)//

    தாங்கள் மட்டும் தான் எப்போதும் என்னைப் பாராட்டுறீங்க. மீதிபேரெல்லாம் இதைப்படிக்கிறாங்களான்னே எனக்குத் தெரிவதில்லை.
    தங்களின் புகழ்ச்சிக்கு என் நன்றிகள்.

    //மு.பொ.போ.மு.க விற்கு இப்படிப்பட்ட ரிசல்ட்டை நான் எதிர்பார்க்கலை சார்.//

    நானும் தானுங்க. ஏதோ கொண்டுபோய் எப்படியோ முடிக்க வேண்டியதாகிப்போனது. ஏதோ ஒரு அவசரத்தில் ஆரம்பித்து விட்டேனே தவிர, முடிப்பதற்குள், நேரமும் பொறுமையும் இல்லாததால் ஒரே டென்ஷன் ஆகிப்போனது. அதாவது முதலிலேயே முழுவதும் எழுதி விட்டு பிறகு வெளியிட்டிருக்கணும். நான் இதை அவ்வப்போது எழுதி வெளியிட்டதால், விறுவிறுப்பும் குறையக்கூடாது என்பதால், சற்றே டெனஷன் ஆகிவிட்டது. இது தான் என் முதல் அனுபவம் இதுபோல திட்டமிடாமல் செய்த விஷயத்தில்.

    //அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்.//

    நாளை 27.03.2011 வெளியிட உள்ளேன், மேடம்.

    மீண்டும் வருகை தந்து கருத்துக்கள் கூறியதற்கு மீண்டும் மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  33. நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்தால்...
    .. ரூபாய்க்கு மூன்று பிடி பொடி போடுவோம்...
    கோவில்ல விபூதி, குங்குமம் கொடுக்கிறாற்போல்,
    பொடியும் கொடுத்தால் தான் நாடு உருப்படும்..
    அருமை சார்... காயத்ரி மந்திரம் கொடுத்த அந்த விஸ்வாமித்ர மகரிஷியின் வழித் தோண்றலின் பொடி காயத்ரி இதோ:
    ”ஓம்... நாஸிஹாயத் தீமிஹி....சூர்ணாய வித்மஹே..தந்நோ ரத்னப் பொடி ப்ரஸோதயாத்!
    இதை 108 தடவை சொல்பவற்கு தடையின்றி பொடி கிடைக்க அந்த காயத்ரி அருள் புரிவாளாக!

    பதிலளிநீக்கு
  34. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    /நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்தால்...
    .. ரூபாய்க்கு மூன்று பிடி பொடி போடுவோம்...
    கோவில்ல விபூதி, குங்குமம் கொடுக்கிறாற்போல்,
    பொடியும் கொடுத்தால் தான் நாடு உருப்படும்../

    வாங்க சார், வாங்க. நீங்க வந்த பிறகு தான் தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு எழுச்சியே ஏற்படுகிறது. விட்டுப்போன சமாசாரங்களை சரமாரியாக எடுத்து விடுகிறீர்கள். நன்றி.

    /அருமை சார்... காயத்ரி மந்திரம் கொடுத்த அந்த விஸ்வாமித்ர மகரிஷியின் வழித் தோண்றலின் பொடி காயத்ரி இதோ:
    ”ஓம்... நாஸிஹாயத் தீமிஹி....சூர்ணாய வித்மஹே..தந்நோ ரத்னப் பொடி ப்ரஸோதயாத்!/

    ஆஹா, இது ரொம்ப டாப் ஜோக் சார். மிகவும் ரசிக்கிறேன். பிரும்மரிஷி போல தக்க நேரத்தில் வந்து உபதேசித்தமைக்கு எனது நன்றிகள்.

    /இதை 108 தடவை சொல்பவற்கு தடையின்றி பொடி கிடைக்க அந்த காயத்ரி அருள் புரிவாளாக!/

    அபாரம், அட்டகாசம் போங்க! காயத்ரி அருள் தான் வேண்டும், பொடி மட்டுமல்ல சுடச்சுட புதுக்கொழுக்கட்டை, பூர்ணம், பளபளவென்ற புதுச்சொம்பில் பால் ...... சார் நான் இப்போ மூட் அவுட் ..... மணி 10.30 PM ...அதனால் எஸ்கேப்.

    பதிலளிநீக்கு
  35. கிளைமாக்ஸ் சூப்பர். அறிஞர் அண்ணா அவர்களை கொண்டு வந்து இணைத்த விதம் நன்றாக இருந்தது. அருமையான காமெடித் தொடர்

    பதிலளிநீக்கு
  36. சிவகுமாரன் said...
    //கிளைமாக்ஸ் சூப்பர். அறிஞர் அண்ணா அவர்களை கொண்டு வந்து இணைத்த விதம் நன்றாக இருந்தது. அருமையான காமெடித் தொடர்//

    கடைசியில் ஒரு பெரிய கவிஞர் வாயால், ஒரு பேரறிஞர் அவர்கள் பற்றியும், இந்த சாமான்யன் பற்றியும், அருமையாக இணைத்துப் பாராட்டியதற்கு சாமான்யனின் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  37. சூரியன் மறைந்தாலும், சுட்டெரிக்கும் அந்த சூரியனை “கை” யே காக்க முயன்றாலும், இலைகள் உதிர்ந்தாலும், பம்பரமே படுத்தாலும், கொட்டும் முரசில் கொப்பளமே ஏற்பட்டாலும், மாம்பழமே புளித்தாலும், எழுச்சியுடன் நின்று, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறப்போவது எங்கள் அறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான அரசியல் வாரிசாகிய எங்களின் “பொடிட்டின்” சின்னமே என எடுத்துரைப்போம்”..Super punch.........Romba Nalla Irunduchi Sir...............................Part 1 la irundhea Pattaiya kilaputhu sir...

    பதிலளிநீக்கு
  38. Sir Unga Next Topic Title Enna Sir..............aathuvum Romba Comediya Irukkum Ninaikiren

    பதிலளிநீக்கு
  39. padma hari nandan said...
    சூரியன் மறைந்தாலும், சுட்டெரிக்கும் அந்த சூரியனை “கை” யே காக்க முயன்றாலும், இலைகள் உதிர்ந்தாலும், பம்பரமே படுத்தாலும், கொட்டும் முரசில் கொப்பளமே ஏற்பட்டாலும், மாம்பழமே புளித்தாலும், எழுச்சியுடன் நின்று, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறப்போவது எங்கள் அறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான அரசியல் வாரிசாகிய எங்களின் “பொடிட்டின்” சின்னமே என எடுத்துரைப்போம்”..Super punch.........Romba Nalla Irunduchi Sir...............................Part 1 la irundhea Pattaiya kilaputhu sir...

    தங்களின் புதிய வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும், மிக்க நன்றி.

    இதே போலவே நகைச்சுவையாக இருக்கும் ஒருசில
    என் கீழ்க்கண்ட பழைய வெளியீடுகளைப்படித்து விட்டு, பின்னூட்டம் அளியுங்கள்:

    1) ஜனவரி 2011 இல் நான் வெளியிட்டுள்ள
    “பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா” பகுதி 1 முதல் 8 வரை.

    2) மார்ச் 2011 இல் நான் வெளியிட்டுள்ள
    ”எலிஸபத் டவர்ஸ் பகுதி 1 to 8.

    3) “அமுதைப்பொழியும் நிலவே” பகுதி 1 & 2 படியுங்கள்.

    4) “வாய் விட்டுச் சிரித்தால்” தனி சிறுகதை

    5) “அவன் போட்ட கணக்கு” தனி சிறுகதை

    6) “சிரிக்கலாம் வாங்க (உலக்கை அடி)” தனி சிறுகதை

    படித்து விட்டு பின்னூட்டாம் அளிக்கும்போது எனக்கு மெயில் மூலம் தகவல் கொடுக்கவும்.

    Mail ID : valambal@gmail.com

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  40. padma hari nandan said...
    Sir Unga Next Topic Title Enna Sir..............aathuvum Romba Comediya Irukkum Ninaikiren//

    Sir,
    I appreciate your interest in my comedy stories. In general all my stories will have some comedy items.
    Please go through all my stories from 1.1.2011 one by one & offer your comments. A smallest story is there in ”ஐம்பதாவது பிரஸவம்”.

    “உடம்பெல்லாம் உப்புச்சீடை பகுதி 1 முதல் 8 வரை கூட 80% நகைச்சுவை + 20% சீரியஸ் மேட்டர் உடைய கதை தான்.

    I have not yet decided what is the title of my next release. However I will give 1 or 2 items, every week. Please do come often & offer your comments.

    With Best Wishes, vgk

    பதிலளிநீக்கு
  41. மூன்று நாளாய் உட்கார்ந்து இப்பத்தான் இதெல்லாம் படித்து முடிச்சேன். ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சார். கதைன்னே சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. கடைசி பாகத்துலதான் கதைன்னே உறைச்சது. இல்லைன்னா அனுபவம் போலவே இனித்தது. வாழ்த்துக்கள் சார். :)

    பதிலளிநீக்கு
  42. அன்னு said...
    //மூன்று நாளாய் உட்கார்ந்து இப்பத்தான் இதெல்லாம் படித்து முடிச்சேன். ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சார். கதைன்னே சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. கடைசி பாகத்துலதான் கதைன்னே உறைச்சது. இல்லைன்னா அனுபவம் போலவே இனித்தது. வாழ்த்துக்கள் சார். :)//

    மிக்க நன்றி. இதேபோல என் பழைய வெளியீடுகளான “பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா”; “உடம்பெல்லாம் உப்புச்சீடை”; ”எலிஸபத் டவர்ஸ்” ஆகிய தொடர்களும், “அமுதைப்பொழியும் நிலவே”; ”அவன் போட்ட கணக்கு”; “சிரிக்கலாம் வாங்க - உலக்கை அடி”; “ஆசை”; ”ஐம்பதாவது பிரஸவம்” போன்ற சிறுகதைகளும் மிகவும் சிரிப்பாக இருக்கும். தங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    ஒவ்வொன்றாகப்படித்து, பின்னூட்டம் அளிக்கவும். பின்னூட்டம் கொடுத்த பிறகு, எனக்கு ஈ.மெயில் மூலம் தகவல் கொடுக்கவும். அப்போதுதான் அவற்றை நானும் போய் படித்து பதில் கொடுக்க ஏதுவாகும். E-mail ID: valambal@gmail.com

    பதிலளிநீக்கு
  43. தங்களுடைய பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்
    தங்கள் விவரிக்கிற முறையைக் கொண்டு
    தாங்கள் எழுதவேண்டியவைகளும்
    நாங்கள் ரசித்துப் படிக்கவேண்டியவைகளும்
    இன்னும் ஏராளம் உள்ளது எனத் தெரிந்து கொண்டேன்
    தொடர்ந்து தாங்கள் நிறைவான வாழ்வு வாழவும்
    தொடர்ந்து விரிவான பதிவுகள் தரவும் வேண்டும் என எல்லாம் வல்ல
    ஆண்டவனை வேண்டுகிறேன்����

    பதிலளிநீக்கு
  44. பிரிய வைகோ சார்! ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.. பழக்கமில்லாமல் போட்ட பொடிபோல சர்ரென்று மண்டைக்குள் ஏறி ரொம்பவே எழுச்சியாகி விட்டது!
    அருமையான படைப்பு...

    ஆர்.ஆர்.ஆரின் பொடி காயத்ரி அருமை...

    பதிலளிநீக்கு
  45. Ramani said...
    //தங்களுடைய பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்
    தங்கள் விவரிக்கிற முறையைக் கொண்டு
    தாங்கள் எழுதவேண்டியவைகளும்
    நாங்கள் ரசித்துப் படிக்கவேண்டியவைகளும்
    இன்னும் ஏராளம் உள்ளது எனத் தெரிந்து கொண்டேன்
    தொடர்ந்து தாங்கள் நிறைவான வாழ்வு வாழவும்
    தொடர்ந்து விரிவான பதிவுகள் தரவும் வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்//

    தங்களின் மீண்டும் வருகைக்கு என் மீண்டும் நன்றிகள். பகுதி-5 இல் தரப்பட்ட ருசியான சூடான புதுக்கொழக்கட்டையுடன், பளபளக்கும் புதுச்சொம்பில் பால் அமுதும் பருகியிருப்பீர்கள் என புரிந்து கொண்டேன். தங்களின் வாழ்த்துகள் தான் எனக்கு உற்சாகம் தருபவை. நன்றி, நன்றி, நன்றி!!!

    பதிலளிநீக்கு
  46. மோகன்ஜி said...
    //பிரிய வைகோ சார்! ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.. பழக்கமில்லாமல் போட்ட பொடிபோல சர்ரென்று மண்டைக்குள் ஏறி ரொம்பவே எழுச்சியாகி விட்டது! அருமையான படைப்பு...

    ஆர்.ஆர்.ஆரின் பொடி காயத்ரி அருமை...//

    மிக்க நன்றிகள், சார். தங்களின் இந்தப்பின்னூட்டம் தான், மோஹன் ஜியைக்காணுமே என்று வழுவட்டையாக சோர்ந்து போயிருந்த என்னை மேலும் பேரெழுச்சியுடன் எழுத வைக்கப்போகிறது.

    ஆம், RRR ஆ கொக்கா என நிரூபித்து விட்டார்.
    அவருக்கு காயத்ரி முதலிய தேவிகளின் அருள் நிறையவே இருக்கு. பரி ’பூர்ணம்’ ஆக இருக்கு. பூர்ணம் என்றால் அவருக்கு ரொம்ப ரொம்ப இஷ்டம்.
    ரொம்பவும் கொடுத்து வைத்தவர்.

    பதிலளிநீக்கு
  47. /சூரியன் மறைந்தாலும், சுட்டெரிக்கும் அந்த சூரியனை “கை” யே காக்க முயன்றாலும், இலைகள் உதிர்ந்தாலும், பம்பரமே படுத்தாலும், கொட்டும் முரசில் கொப்பளமே ஏற்பட்டாலும், மாம்பழமே புளித்தாலும், எழுச்சியுடன் நின்று, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறப்போவது எங்கள் அறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான அரசியல் வாரிசாகிய எங்களின் “பொடிட்டின்” சின்னமே என எடுத்துரைப்போம்”/
    நிதி அமைச்ச‌ர் ப‌த‌விக்கு முன்பே, க‌ட்சியின் கொ.ப‌.செ க்கு 100% பொருத்த‌ம் சார் நீங்க.

    பதிலளிநீக்கு
  48. vasan said...
    /சூரியன் மறைந்தாலும், சுட்டெரிக்கும் அந்த சூரியனை “கை” யே காக்க முயன்றாலும், இலைகள் உதிர்ந்தாலும், பம்பரமே படுத்தாலும், கொட்டும் முரசில் கொப்பளமே ஏற்பட்டாலும், மாம்பழமே புளித்தாலும், எழுச்சியுடன் நின்று, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறப்போவது எங்கள் அறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான அரசியல் வாரிசாகிய எங்களின் “பொடிட்டின்” சின்னமே என எடுத்துரைப்போம்”/

    நிதி அமைச்ச‌ர் ப‌த‌விக்கு முன்பே, க‌ட்சியின் கொ.ப‌.செ க்கு 100% பொருத்த‌ம் சார் நீங்க.

    வருகைக்கும், கருத்துக்களுக்கும், நன்றி திரு வாசன் அவ்ர்களே!

    கொ.ப.செ பதவிக்கு, கவர்ச்சிகரமான நடிகைதான் வேண்டுமென்று, வ.வ.ஸ்ரீ அவர்களே மிகச்சரியாக கணித்துவிட்டார், சார்.

    இந்தக்கொளுத்தும் வெய்யிலில் நான் அந்தப்பதவியை ஏற்கவும், அதனால் எனக்கு ஏதாவது அட்டாக் வரவும் விரும்பவில்லை. அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  49. காமெடியாக ஆரம்பித்து நெகிழ்வாக முடித்துவிட்டீர்கள்.இப்ப வழுவெட்டி சார் எப்படி எங்கே இருப்பார்?ம்?

    பதிலளிநீக்கு
  50. நான் பதறிப்போனேன். ”ஏன் என்னாச்சுங்க மேடம்? 2 மணி நேரங்கள் முன்புகூட என்னிடம் நல்லாத்தானே பேசிக்கொண்டிருந்தார்!” என்றேன். //
    நல்லவேளை தப்பித்தீர்கள் .
    எலெக்ஷன் பஞ்ச் எல்லாம் சூப்பர் ,

    அறிஞர் அண்ணா பொடி போடும் பழக்கமுடையவர் .எங்கோ படித்தேன் .இங்கே டைமிங்காக இணைத்து இருந்தது அருமையான சென்ஸ் OF ஹியூமர்
    மக்கள் நல்வாழ்வு துறை உங்களுக்கு கிடைதிருக்ககூடும் .அவருடன் சேர்ந்து பணியாற்றி இருந்தால் அதாவது கட்சி பணி

    பதிலளிநீக்கு
  51. இதை கண்டிப்பாக கூறியாக வேண்டும்
    அந்த கார்டூன் நீங்க வரைந்தது என்று நினைக்கிறேன்
    வ.வ.ஸ்ரீ.கதா பாத்திரத்துடன் அழகாய் பொருந்துகிறது .

    பதிலளிநீக்கு
  52. ஸாதிகா said...
    //காமெடியாக ஆரம்பித்து நெகிழ்வாக முடித்துவிட்டீர்கள்.இப்ப வழுவெட்டி சார் எப்படி எங்கே இருப்பார்?ம்?//

    தங்களின் அன்பான வருகைக்கும் ஒரே மூச்சில் 8 பகுதிகளையும் படித்து ரசித்து பின்னூட்டம் கொடுத்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிக்ள்.

    நிஜமாகவே இதே போல பொடிபோடும் ஒருவர் என்னுடன் திருச்சி BHEL இல் 1975-1980 இல் பணியாற்றினார்.

    இப்போது அவர் எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை.

    அவருடைய Characters ஐ மனதில் வாங்கிக்கொண்டு, என் கற்பனை + நகைச்சுவை நிறையவே கலந்து இதை எழுதியுள்ளேன்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  53. angelin said...
    நான் பதறிப்போனேன். ”ஏன் என்னாச்சுங்க மேடம்? 2 மணி நேரங்கள் முன்புகூட என்னிடம் நல்லாத்தானே பேசிக்கொண்டிருந்தார்!” என்றேன். //
    நல்லவேளை தப்பித்தீர்கள் .
    எலெக்ஷன் பஞ்ச் எல்லாம் சூப்பர் ,

    அறிஞர் அண்ணா பொடி போடும் பழக்கமுடையவர் .எங்கோ படித்தேன் .இங்கே டைமிங்காக இணைத்து இருந்தது அருமையான சென்ஸ் OF ஹியூமர்
    மக்கள் நல்வாழ்வு துறை உங்களுக்கு கிடைதிருக்ககூடும் .அவருடன் சேர்ந்து பணியாற்றி இருந்தால் அதாவது கட்சி பணி//

    அன்புள்ள நிர்மலா,

    தங்களின் அன்பான வருகையும், அருமையான ரசிப்புத்தன்மையும் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ஒரே மூச்சில் இந்த 8 பகுதிகளையும் எழுச்சியுடன் படித்து மகிழ்ச்சியுடன் கருத்துக்கூறியுள்ளது வியப்பாக உள்ளது.

    என் மனமர்ர்ந்த நன்றிகள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  54. angelin said...
    இதை கண்டிப்பாக கூறியாக வேண்டும்
    அந்த கார்டூன் நீங்க வரைந்தது என்று நினைக்கிறேன்
    வ.வ.ஸ்ரீ.கதா பாத்திரத்துடன் அழகாய் பொருந்துகிறது .//

    ஆமாம், நிர்மலா; நான் வரைந்தது தான் அந்தப்படம். வேறு எதற்காகவோ வரைந்தேன். இதற்குப்பயன் படுத்திக்கொண்டேன்.

    படத்தையும் பொருத்தமாக ரசித்துக் கருத்துக்கூறியுள்ளதற்கு என் கூடுதல் நன்றிகள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  55. அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சியுடன் மூக்குப்பொடி போடுவார். நானும் அதே அண்ணன் உபயோகித்த அதே பொடியைப் போடுகிறேன். எனவே அண்ணா அன்று ஆரம்பித்த முன்னேற்றக் கழகத்தின் அசல் வாரிசு,
    தாலிக்குத் தங்கம் வேண்டாம் !
    தாளிக்க வெங்காயமும் வேண்டாம் !!
    மூக்குக்குப் பொடி வேண்டும் !
    முன்னேற வழி வேண்டும் !!
    இதுவரை நமக்கு நம் அலுவலக வாழ்க்கையில் அலுப்புத்தட்டாமல் ஒருவித கலகலப்பை ஏற்படுத்தி வந்த வ.வ.ஸ்ரீ. என்ற பெரியவர் கொடுத்த பிரஸாதமாகவே அதை நினைத்து தங்கள் மூக்கினில் வைத்து, சர்ரென்ற ஒலியுடன், ஒரே நேரத்தில், ஒற்றுமையாகவும் ஒரே இழுப்பாகவும் இழுத்தனர்.
    அவர்களின் ஒட்டுமொத்த தும்மல் சப்தம் விண்ணை முட்ட, அதுவே நல்ல சகுனம் என்று நினைத்த வ.வ.ஸ்ரீ. கார் கதவையும், தன் கையிலிருந்த பொடிட்டின்னையும் மூடியவாறு எழுச்சியுடன் புறப்படச் சொன்னார்.

    -அருமை! அருமை! மனம் கவர்ந்த பதிவு!

    பதிலளிநீக்கு
  56. அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சியுடன் மூக்குப்பொடி போடுவார். நானும் அதே அண்ணன் உபயோகித்த அதே பொடியைப் போடுகிறேன். எனவே அண்ணா அன்று ஆரம்பித்த முன்னேற்றக் கழகத்தின் அசல் வாரிசு,
    தாலிக்குத் தங்கம் வேண்டாம் !
    தாளிக்க வெங்காயமும் வேண்டாம் !!
    மூக்குக்குப் பொடி வேண்டும் !
    முன்னேற வழி வேண்டும் !!
    இதுவரை நமக்கு நம் அலுவலக வாழ்க்கையில் அலுப்புத்தட்டாமல் ஒருவித கலகலப்பை ஏற்படுத்தி வந்த வ.வ.ஸ்ரீ. என்ற பெரியவர் கொடுத்த பிரஸாதமாகவே அதை நினைத்து தங்கள் மூக்கினில் வைத்து, சர்ரென்ற ஒலியுடன், ஒரே நேரத்தில், ஒற்றுமையாகவும் ஒரே இழுப்பாகவும் இழுத்தனர்.
    அவர்களின் ஒட்டுமொத்த தும்மல் சப்தம் விண்ணை முட்ட, அதுவே நல்ல சகுனம் என்று நினைத்த வ.வ.ஸ்ரீ. கார் கதவையும், தன் கையிலிருந்த பொடிட்டின்னையும் மூடியவாறு எழுச்சியுடன் புறப்படச் சொன்னார்.
    -அருமை!! அருமை!
    மனம் கவர்ந்த பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  57. Seshadri e.s. said...
    அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சியுடன் மூக்குப்பொடி போடுவார்.

    நானும் அதே அண்ணன் உபயோகித்த அதே பொடியைப் போடுகிறேன்.

    எனவே அண்ணா அன்று ஆரம்பித்த முன்னேற்றக் கழகத்தின் அசல் வாரிசு,

    தாலிக்குத் தங்கம் வேண்டாம் !
    தாளிக்க வெங்காயமும் வேண்டாம் !!
    மூக்குக்குப் பொடி வேண்டும் !
    முன்னேற வழி வேண்டும் !!

    இதுவரை நமக்கு நம் அலுவலக வாழ்க்கையில் அலுப்புத்தட்டாமல் ஒருவித கலகலப்பை ஏற்படுத்தி வந்த வ.வ.ஸ்ரீ. என்ற பெரியவர் கொடுத்த பிரஸாதமாகவே அதை நினைத்து தங்கள் மூக்கினில் வைத்து, சர்ரென்ற ஒலியுடன், ஒரே நேரத்தில், ஒற்றுமையாகவும் ஒரே இழுப்பாகவும் இழுத்தனர்.

    அவர்களின் ஒட்டுமொத்த தும்மல் சப்தம் விண்ணை முட்ட, அதுவே நல்ல சகுனம் என்று நினைத்த வ.வ.ஸ்ரீ. கார் கதவையும், தன் கையிலிருந்த பொடிட்டின்னையும் மூடியவாறு எழுச்சியுடன் புறப்படச் சொன்னார்.

    -அருமை!! அருமை!
    மனம் கவர்ந்த பதிவுக்கு நன்றி//


    தங்களின் அன்பான வருகைக்கும், ரஸித்து சிரித்து மகிழ்ந்த பகுதிகளைச் சுட்டிக்காட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  58. ///எல்லாமே இன்றைய மண்ணாங்கட்டி அரசியலில், சாக்கடைக்கு அனுப்ப வேண்டியவை தான்//

    மிக மிக சரியான வரிகள்.

    பதிலளிநீக்கு
  59. ஆஹா, மிக மிகச் சரியான வரிகள் என மிகமிக்ச் சரியாகவே சொல்லிட்டீங்க, நண்பரே. இன்றைய அரசியலெல்லாம் விரல் நுனியில் வைத்துள்ளீர்கள். ;)

    பதிலளிநீக்கு
  60. நீங்கள் நன்றாகவும் எழுதுகிறிர்கள் தரமாகவும் எழுதுகிறிர்கள் நகைச்சுவையாகவும் எழுதுகிறிர்கள். அதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

    உங்களின் இந்த தொடர்பதிவின் முதல் பதிவில் நான் ஒரு கருத்து சொல்லி இருந்தேன் அதை இங்கே நினைவு கூறுகிறேன் மீண்டும். அது இதுதான் உங்கள் பதிவில் ஒரு குறை இருக்கின்றது என்று. அது என்னவென்று உங்களுக்கு தெரியவேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தால் இங்கே அதை சுட்டிக் காட்டுகிறேன்

    நீங்கள் பதிவிற்கு வைக்கும் தலைப்பில் சிறிது கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த குறை. இதை எனது வலைத்தள அனுபவத்தில் கூறுகிறேன். இப்போது என் மனதில் வேறு ஓன்றும் தோன்றுகிறது. உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக நீளமாக உள்ளது அதை இன்னும் சுருக்கி வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்.

    உதாரணமாக அந்த காலப் சினிமாவை போல இந்த காலத்தில் நீளமான நல்ல படத்தை எடுத்தால் எவ்வளவுதான் நல்ல படமாக இருந்தாலும் அதைப் பார்ப்பவர்கள் மிக குறைவு. சில படங்கள் அதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.காலம் மாறிப்போச்சு.
    அதனால்தான் இப்போது டிவிட்டர் செய்திகளுக்கு மிக அதிக வரவேற்பு.

    இதை நான் என் அனுபவத்தில் சொல்லி இருக்கிறேன். நான் எதோ அதிகபிரசங்கி தனமாக சொல்லி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அத்ற்கு இப்போதே மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

    இதையெல்லாம் நான் உங்களிடம் ஏன் சொல்லிகிறேன் என்றால் நீங்கள் மிக தரமாகவும் நிறைய நேரங்களை செலவழித்து பதிவு இடுகிறிர்கள். அது பலாரி போய் சென்று அடைவதில்லை என்ற ஆதங்கக்த்தில்தான் இதை சொல்லுகிறேன்.

    இதனால் எழுந்த சோர்வினால்தான் நீங்கள் பதிவு எழுதவில்லையோ என்று நான் நினைக்கிறேன் மீண்டும் எழுத வாருங்கள் என்று உங்களை அன்போடு அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  61. முதல் பத்தியில் எழுதியுள்ள பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

    பிறரை சுண்டியிழுத்து நம் வலைப்பக்கம் வந்து விழுமாறு கவர்ச்சிகரமான தலைப்பாகக் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்லியுள்ளீர்கள். நன்றி.

    எதையுமே மிகவும் சுருக்கமாக நச்சென்று மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்துத் தர வேண்டும், அப்போது தான் நிறைய பேர்கள் படிப்பார்கள், என்றும் சொல்லியுள்ளீர்கள். நன்றி.

    அந்தக்கால சினிமாபடம் போல நீ...ள...மா...க... இல்லாமல் இந்தக்கால சினிமா படம் போல சுருக்கமாக கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்கிறீர்கள். நன்றி.

    முயற்சிக்கிறேன் நண்பா. இருப்பினும் எனக்கென்று சில கொள்கைகள் வைத்துக் கொண்டுள்ளேன்.

    அதாவது சொல்லுவதை நன்றாக புரியும்படியாக விளக்கமாகச் சொல்ல வேண்டும். மிகவும் ஆபாசமான படங்களோ, வார்த்தைகளோ உபயோகிக்கக்கூடாது. அதே நேரம் ஓரளவு நகைச்சுவையாக படிப்பவர் சிரித்து ரசிக்கும் படியாக இருக்க வேண்டும். முடிந்தவரை சுபமான முடிவுகளை மட்டுமே தரவேண்டும். வோட் போடாவிட்டாலும் பரவாயில்லை என வோட் பட்டைகள் அனைத்தையும் நீக்கி விட்டேன். என்னைப் பொருத்தவரை ஒரு 15-25 பேர்கள் நிச்சயமாக வருகை தந்து, கருத்துக்கூறி வருகிறார்கள். அதுவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதனால் மட்டுமே சோர்வு இல்லாமல் எழுதி வருகிறேன்.

    இப்போது தற்காலிகமாக பதிவிடாமல் உள்ளதற்கு, வேறு பல சொந்தக்காரணங்கள் உள்ளன. நிச்சயமாக கூடிய சீக்கரம் எழுச்சியுடன் எழுத ஆரம்பிப்பேன் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆலோசனைகளுக்கும், ஆதரவுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

    தங்களின் தங்கமான விமர்சனம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
    அதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    என்றும் அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  62. // “முற்போக்காவது, பிற்போக்காவது எல்லாமே ஒரே கொள்ளைக்கூட்டம் தானப்பா. முற்போக்குன்னா: ’ வாந்தி’, பிற்போக்குன்னா: ’பேதி’ன்னு நினைச்சுக்கோ. வாந்தியோ பேதியோ எல்லாமே இன்றைய மண்ணாங்கட்டி அரசியலில், சாக்கடைக்கு அனுப்ப வேண்டியவை தான்” என்றார், வ.வ.ஸ்ரீ., மிகுந்த ஆத்திரத்துடன். //

    இந்த கதைக்கு அரசியல் தேவையில்லை என்றாலும், அது நமக்கு முன் வந்து உட்கார்ந்து கொள்கிறது. வ,வ.ஸ்ரீ பணி ஓய்வுநாளில் இந்த தொடர் முடியும் போது யாரோ ஒரு நெருங்கிய மனிதரைப் பிரிவது போல் இருந்தது.

    பதிலளிநீக்கு
  63. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ, ஐயா, வாங்க, வணக்கம்.

    //வ,வ.ஸ்ரீ பணி ஓய்வுநாளில் இந்த தொடர் முடியும் போது யாரோ ஒரு நெருங்கிய மனிதரைப் பிரிவது போல் இருந்தது.//

    நன்றாகக் கதையினை ஊன்றிப்படித்து, வ.வ.ஸ்ரீ. என்ற அனுபவம் வாய்ந்த பெரியவரின் கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போய்விட்டீர்கள், என்பதை இந்தத் தங்களின் கருத்துக்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

    அதுவே என் எழுத்துக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிப்பரிசாக, பொக்கிஷமாக நினைத்து மகிழ்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    vgk

    பதிலளிநீக்கு
  64. கடைசிப் பஞ்ச் பிரமாதம். கடைசியில் அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கேனு நினைக்கும்படி ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam July 23, 2013 at 12:41 AM

      வாங்கோ ... வணக்கம்.

      //கடைசிப் பஞ்ச் பிரமாதம். //

      பேரெழுச்சியுடன் ஒரேயடியாக அனைத்துப் பகுதிகளையும் இன்று ஒரே மூச்சில் படித்துவிட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் கருத்தளித்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      ஏதோ இந்தக்கதையை நகைச்சுவையாக எழுத ஆரம்பித்து விட்டேன். ஏதாவது ஒரு முடிவு கொடுத்து, கதைக்கு ’முற்றும்’ போட வேண்டும் அல்லவா ! அதிலும் நல்லதொரு பஞ்ச் ஆக கடைசியில் அமைந்து விட்டது.

      //கடைசியில் அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கேனு நினைக்கும்படி ஆகிவிட்டது.//

      ஆம் ... கதை எழுதிய எனக்கே அவரை நினைத்து கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

      நான் எழுதி இதுவரை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள கதைகள் எல்லாம் பெரும்பாலும் சுபமான முடிவகளாகவே கொடுப்பது வழக்கம். ஓரளவு நகைச்சுவையாகவும் இருக்கும்.

      நீங்கள் விரும்பினால் “நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்” என்ற என்னுடைய சிறிய தொடரைப் படிக்க ஆரம்பிக்கலாம்.

      http://gopu1949.blogspot.in/2011/10/15.html

      [மொத்தம் 5 பகுதிகள் மட்டுமே]

      அதுவும் ஆரம்பம் முதல் கடைசி வரை நல்ல விறுவிறுப்பாகவும், அடுத்தபகுதியை உடனடியாகப் படிக்கணும் என்ற ஒருவித எதிர்பார்ப்புடன் கூடிய ஆவலுடனும் இருக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மன்மார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  65. இன்றைய அரசியல் நிலவரங்களை அப்படியே உரித்து வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  66. பணி ஓய்வு பெறும் நிகழ்சியை தத்ரூபமா சொல்லி இருந்திங்க. நெகிழ்ச்சியான முடிவு

    பதிலளிநீக்கு
  67. அசல் அரசியல்வாதி ஆகிவிட்டாரே வ.வ.ஸ்ரீ.

    ஒரே மூச்சில் 8 பகுதிகளையும் படித்து விட்டேன். நிறுத்து மனசு இருந்தால் தானே.

    மனம் சற்றி கவலையாக இருந்தால் நேரே விடு ஜூட் உங்க நகைச்சுவை பதிவுகளுக்கு.

    நன்றியுடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya May 16, 2015 at 7:34 PM

      //அசல் அரசியல்வாதி ஆகிவிட்டாரே வ.வ.ஸ்ரீ.

      ஒரே மூச்சில் 8 பகுதிகளையும் படித்து விட்டேன். நிறுத்தி மனசு இருந்தால் தானே.

      மனம் சற்று கவலையாக இருந்தால் நேரே விடு ஜூட் உங்க நகைச்சுவை பதிவுகளுக்கு.

      நன்றியுடன்
      ஜெயந்தி ரமணி//

      இன்று அமாவாசை நிறைஞ்ச நாளில் ஒருசில பின்னூட்டங்களாவது கொடுத்துள்ளது, இறுதி வெற்றி என்ற சந்தோஷத்தின் அறிகுறியாக உள்ளது.

      அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் ஜயா.

      நீக்கு
  68. மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.

    அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.

    அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.

    'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .

    மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.

    முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.

    இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  69. ஓஹோ அரசியல்லயும் புகுந்து பட்டய கெளப்ப போராங்களோ. நடக்கட்டும் நடக்கட்டும்

    பதிலளிநீக்கு
  70. இன்றய அரசியலுக்கு திறமையான தகுதியான ஒரு ஆள் தேவைதான். கலகலப்பாக ஆரம்பித்து நெகிழவைக்கும் முடிவாகவும் இருந்தது.

    பதிலளிநீக்கு
  71. //
    “மூ.பொ.போ.மு.க”

    அதாவது,

    “மூக்குப் பொடி போடுவோர் முன்னேற்றக் கழகம்” // மறுபடியும் இன்னொரு முன்னெற்றக் கழகமா???எத்தன???

    பதிலளிநீக்கு
  72. அரசியலையும் விட்டு வைக்கலையா மனுஷர்.. எல்லாம் அந்த பொடியின் மகிமைதான்... பின்னூட்ட போட்டியில் கலந்துகிட்டவங்க பின்னாட்டங்கள் எனக்கு முன்னால இருக்கு.. அவங்களுக்கெல்லாம் எந்த விதமான ரிப்ளையும்போடலியே...நான் எந்த போட்டிலயும் கலந்துக்கல.. ஆனாகூட என் எல்லா பின்னூட்டங்களுக்கும் ரிப்ளை பண்றீங்களே.ஸார் எப்படி...

    பதிலளிநீக்கு
  73. ஸ்ரத்தா, ஸபுரி... June 1, 2016 at 1:34 PM

    //அரசியலையும் விட்டு வைக்கலையா மனுஷர்.. எல்லாம் அந்த பொடியின் மகிமைதான்... //

    ஆஹா ! யெஸ்... யெஸ்... மகிமையோ மகிமைதான்.

    //பின்னூட்ட போட்டியில் கலந்துகிட்டவங்க பின்னாட்டங்கள் எனக்கு முன்னால இருக்கு.. அவங்களுக்கெல்லாம் எந்த விதமான ரிப்ளையும்போடலியே...//

    அதில் கலந்துகொண்ட சிலர், போட்டி முடியும் இறுதி நாளுக்குக் கொஞ்சம் நாட்கள் முன்பே போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்து, ஏதோவொரு அவசர அடியில் மட்டுமே, பின்னூட்டமிட்டிருந்தனர் என்பது அவர்களின் பின்னூட்டங்களை வாசித்துப்பார்த்தாலே தங்களுக்குத் தெரியவரும்.

    அப்போது எனக்கிருந்த நேர நெருக்கடிகளால் அவர்கள் அனைவரின் பின்னூட்டங்களுக்கும் என்னால் உடனுக்குடன் பதில் அளிக்க இயலவில்லை. மேலும் அப்போதைய சூழ்நிலையில் என் பதில்களையெல்லாம் அவர்கள் ஓர் சிரத்தையாக எதிர்பார்ப்பவர்களாகவும் எனக்குத் தெரியவில்லை.

    //நான் எந்த போட்டிலயும் கலந்துக்கல.. ஆனாகூட என் எல்லா பின்னூட்டங்களுக்கும் ரிப்ளை பண்றீங்களே, ஸார் எப்படி... //

    தாங்கள் என் 2015 பின்னூட்டப் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் போனாலும், இப்போது என் பதிவுகள் ஒவ்வொன்றையும் சிரத்தையாகவும், ஆர்வமாகவும், ஊன்றிப் புரிந்துகொண்டும் படித்து விட்டு, உற்சாகமளிக்கும் விதமாகப் பின்னூட்டமிட்டு வருகின்றீர்கள், என்பதில் எனக்கு ஓர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் தங்களின் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் நானும், பொறுமையாக பதில் அளித்து வருகிறேன். அதை ஓர் கடமையாகவே கருதுகிறேன்.

    தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், நியாயமான கேள்விக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  74. விளக்கமான ரிப்ளை கமெண்டுக்கு நன்றி ஸார்....

    பதிலளிநீக்கு