என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 2 மார்ச், 2011

’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 6 / 8 ]

சுண்டலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா? பதில் அளிக்க முடியாமல் மிகவும் குழம்பிப் போன ராமசுப்பு, 


என்னப்பா நீ வெய்யிலில் வந்துள்ள என்னிடம் போய் ”கல்வியா........ செல்வமா... ....... வீரமா.......” என்ற பாட்டுப் போல ஏதேதோ கேள்வி கேட்கிறாய்? ஏதாவது ஒரு எலிக்கூடு கொடுக்க வேண்டியது தானே! என்றார்.

“நான் ஏதாவது ஒரு கூடு கொடுத்து அதை நீங்கள் வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டு, உங்கள் வீட்டுக்கார அம்மா, உங்களை வெய்யிலில் திரும்பவும் அலைய விடக்கூடாது அல்லவா! அதனால் தான் கேட்டேன்” என்று சொல்லி, சுண்டலி பிடிக்கும் கூடு ஒன்றையும், நடுத்தர எலி பிடிக்கும் கூடு ஒன்றையும் கொண்டு வந்து காட்டினான்.

”இந்த மிகச்சிறிய கூட்டுக்குள் கையே நுழையாது போலிருக்கே” என்றார் ராமசுப்பு.

”சுண்டெலிகள் பிடிக்க இது தான் சரியான கூடு சாமி. சின்னக் கைகள் உள்ள யாராவது ஒரு குழந்தையை விட்டு உள்ளே தொங்கும் கம்பியில் ஒரு சின்ன வடையைச் சொருகிவிட்டால் போதும், ஒரே நேரத்தில் அரை டஜன் சுண்டெலிகள் க்ரூப் க்ரூப்பாக வந்து கப்புகப்புன்னு மாட்டிக்கும். பின் புறம் கம்பிகள் நெருக்கமாக உள்ளதால் வெளியே அவற்றால் தப்பிச் செல்லவும் முடியாது” என்றான்.

சற்றே பெரியதான மற்றொன்றை எடுத்து நோட்டம் விட்டார் ராமசுப்பு. அதில் தன் கை சுலபமாக உள்ளே நுழையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது அவருக்கு.  இருந்தாலும் கையை உள்ளே விட்டுப் பார்க்க பயம் அவருக்கு, உள்ளே ஏற்கனவே ஏதும் எலி இருந்தால்! என ஒரு வித அச்சம்.

”கொஞ்சம் பெரிய சைஸ் எலியென்றால் இதை எடுத்துக் கொள்ளுங்க சாமி. வடையைப் பொருத்தி வைக்க சுலபமாக இருக்கும். ஆனால் பின்புறக் கம்பிகள் நெருக்கமாக இல்லாமல் இருப்பதால், இதில் நுழையும் சுண்டெலிகள் இதிலிருந்து வடையை மட்டும் அழகாக சாப்பிட்டு விட்டு, சுலபமாக கொல்லைப்புறம் உள்ள கம்பி இடுக்குகள் வழியாகத் தப்பித்து விடும், சற்று பெரிய எலியாக இருந்தால் “விண்டோ” வழியாக வேடிக்கைமட்டும் பார்க்கும், ஆனால் தப்பித்துச் செல்லவே முடியாது” என்றான்.

“பெருச்சாளின்னு ஏதோ சொன்னாயே, அதற்கென்று ஏதாவது தனிக் கூடு உள்ளதா, அல்லது இதிலேயே அதுவும் மாட்டிக் கொண்டு விடுமா ? என மிகுந்த ஆவலுடன் கேட்டார்.

பெருச்சாளிக்கென்று இது போல தனியாக எதுவும் கூடு நம்மிடம் கிடையாது சாமி. அது பொதுவாக வீட்டுக்குள் வந்து தொந்தரவு கொடுப்பது கிடையாது. ரோட்டில் ஓடும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் போல சாக்கடையில் வேகமாக இங்குமங்கும் ஓடிக்கொண்டே இருக்கும்.

பெரிச்சாளிகளை பொதுவாக பெரிய கற்களாலும், கட்டையாலும் அடித்து காலி செய்து விடுவார்கள். அல்லது ஸ்ப்ரிங் ஆக்‌ஷனுடன் கூடிய எலிப்பொறி வைத்துப் பிடிப்பார்கள். அதனுடைய உடம்பு வெயிட் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா போன்ற ஸ்பீடுக்கு, இது போன்ற எலிக்கூடுகளை பெரிச்சாளி பிடிபடும் என்று நினைத்து வைத்தால் அந்தக் கூட்டையே வடையுடன் அலாக்காக தள்ளிக்கொண்டு (தூக்கிக்கொண்டு) போய்விடும்.

இந்தப் பெரிச்சாளிகள் என்பவை கிராமப்புற வீடுகள், கொல்லைப்புறம் போன்றவற்றிலும், நகர்புற சாக்கடைகளிலும் தான் அதிகமாக நடமாடும். ஆள் நடமாட்டமில்லாமல் உள்ள வீடுகளில் தரையில் மண்ணைத் தோண்டி பெரிய பெரிய குழிகள் (எலி வங்குகள்) பறித்து வீட்டையே நாசமாக்கி விடும்;

உங்க வீட்டு எலிகள் சுண்டலியா, நடுத்தர எலியா, பெருச்சாளியா என்று, இதுவரை எதுவும் சொல்லாமலேயே இருக்கிறீர்களே! என்று மீண்டும் கேட்கலானார் அந்தக் கடைக்காரர்.

தன் ஞானசூன்யத்தைக் காட்டிக் கொள்ள விரும்பாமல் ”சரிப்பா நடுத்தர சைஸ் எலி பிடிக்கும் கூடே கொடுப்பா” என்றார்.


“இது போன்ற சைவக்கூடு போதுமா? அல்லது அசைவக்கூடு கொடுக்கட்டுமா சாமி?” என்ற தன் அடுத்த கேள்வியைக் கேட்டு ராமசுப்புவை மேலும் ஸ்தம்பிக்க வைத்தான். இது என்னடா தொல்லை என்று நினைத்து, அவன் என்ன கேட்கிறான் எனப் புரியாமல் அவனிடமே விளக்கம் கேட்டார் ராமசுப்பு.

இப்போது நான் காட்டிய சை
வக்கூடு என்றால் எலிக்கும் எலிக் கூட்டுக்கும் சேதாரம் இல்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்சா முறையில் அழகாகப் பிடித்து அதன் பிறகு அவரவர் விருப்பப்படி, தண்ணீர் வாளியில் அமுக்கியோ, ஒரே சுழட்டாக சுழட்டி சதிர்க்காய் போல அடித்தோ, சாக்குப்பை ஒன்றுக்குள் ஓடுமாறு கூட்டைத் மெதுவாகத் திறந்து விட்டு, பிறகு சாக்குப்பையின் வாயை இறுக்கிக் கட்டி, சாக்குப்பையை தரையில் சாத்து சாத்து என்று சாத்தியோ கொன்று விடலாம்.

ஜீவகாருண்யம் மிகுந்தவராக இருந்தால் அதைக் கூட்டோடு எடுத்துச் சென்று வேறு ஏதாவது நமக்கு வேண்டப்படாதவர் குடியிருப்புப் பகுதியில் விட்டுவிட்டு வந்தால், அது அங்கு நல்ல வேலை வாய்ப்பைத் தேடிப் பிழைத்துக் கொள்ளும், நம்
நாட்டு இளைஞர்கள் வெளி நாட்டுக்கு வேலை வாய்ப்புத் தேடி செல்வது போல.

ஒரு சிலர் பூனை மீது மட்டும் ஜீவகாருண்யம் கொண்டு, அதன் பார்வை படும்படியாக இந்த எலிக்கூட்டை திறந்து விடுவார்கள். அந்தப் பூனை ஒரே பாய்ச்சலில்
எலியைப்பிடித்து கவ்விச் சென்று கபளீகரம் செய்துவிடும்; ஆனால் அசைவக்கூடு என்றால் அப்படி இல்லை” என்று சற்றே சஸ்பென்ஸ் கொடுத்தார், அந்தக் கடைக்காரர்.

தான் சைவமாக இருந்தாலும், வந்தது வந்தோம் அசைவக்கூடு எப்படியிருக்கும் என்பதைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அதையும் காட்டச் சொல்லி வேண்டினார்.

அவன் காட்டிய அந்த அசைவக்கூட்டைப் பார்த்த ராமசுப்புவுக்கு திருச்சி தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸுக்கு எதிர்புறம் பிரம்மாண்டமாக உள்ள மெயின்கார்ட்கேட் ஆர்ச் வளைவு தான் ஞாபகத்திற்கு  வந்தது.   மேலும் அந்தக்கூடு என்னவோ ஆடை ஆபரணங்கள் ஏதும் இல்லாமல் அம்மணமாக இருப்பது போலத் தோன்றியது. இந்த வெட்ட வெளியான அமைப்பில் எப்படி ஒரு எலி சிக்க முடியும்? என்று யோசித்து சிண்டைப் பிய்த்துக் கொண்டார். 


”இதை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும், சாமி. கொஞ்சம் அசந்தாலும் ஸ்பிரிங் ஆக்‌ஷன் நம் கை விரல்களைப் பதம் பார்த்து விடும். ஆனால் இதில் மாட்டிய எலி தப்பிக்கவே முடியாது. ஒரே ... அடி, எலியின் கழுத்தில் சரியாக அடிக்கும்; தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும். தலை தனி உடல் தனியாக தொங்க ஆரம்பித்து விடும். க்ளீன் பெளல்ட் ஆகி ரத்தம் கக்கி செத்துவிடும்” என எலிகள் மற்றும் எலிக்கூடுகள் பற்றி பி.எச்.டி. செய்து டாக்டர் பட்டம் வாங்கியவன் போல ஒரு பெரிய பிரசங்கம் செய்தான். அந்தக் கடைக்காரன்.

முடிவாக, நடுத்தர சைஸ் எலி விழக்கூடிய சைவக் கூட்டிலேயே இரண்டு கொடுப்பா” என்றார். பரந்தாமனிடம் இரவல் வாங்கிய எலிக்கூட்டுக் கடனை அடைத்து விட பரந்தாமன் வீட்டுக்குப் பயணமானார்.

புதிய கூட்டை ஒப்படைத்து விட்டு, பழையகூட்டுக்கு நேர்ந்த கதியை சுருக்கமாக எடுத்துரைத்தார்.  

“என்ன தான் இது புதிய கூடாக இருந்தாலும், நாங்கள் உங்களிடம் கொடுத்தது பல தலைமுறைகளாக எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய ராசியான ஆவி வந்த எலிக்கூடு. அதைப்போய் இப்படி அநியாயமாக உடைத்து விட்டதாகச் சொல்லுகிறீர்களே?” என மிகவும் வருத்தத்துடன் கூறினாள், பரந்தாமனின் மனைவி.

தொடரும்ஒரு முக்கிய அறிவிப்பு:

விறுவிறுப்பாகச் செல்லும் இந்தத் நகைச்சுவைத் தொடரின் அடுத்த இரண்டு பகுதிகள் வெளிவருவதற்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமை 4.3.11 இரவோ அல்லது சனிக்கிழமை 5.3.11 அதிகாலையிலோ தங்களை நிச்சயமாக மகிழ்விக்கப்போகும் வேறொரு ”குட்டியூண்டு கதை” வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் நான்.

கதையின் மெயின் தலைப்பு:  
”ஐம்பதாவது பிரஸவம்”
உப தலைப்புகள்: 
(1) ”மை டியர் ப்ளாக்கி”
   (2) குட்டிக் குழந்தை: ”தாலி”

காணத் தவறாதீர்கள் ! 58 கருத்துகள்:

 1. எலிப்பொறியில் இத்தனை விஷயங்கள் கவனிக்க வேண்டியது இருக்கிறது. வித்தியாசமான தொடர்தான். ஒத்துக்கிறோம். ஹா,ஹா,ஹா,ஹா...

  பதிலளிநீக்கு
 2. அம்மாடி!!!!!!

  எலி பத்தியும் எலிப்பொறி பத்தியும் இவ்வளவு
  மேட்டர் இருக்கா?

  சார்!நான் வேணும்னா நீங்க இருக்கற தைரியத்துல
  மெட்ராஸ் யுனிவர்சிட்டில இதுக்கான பி எச் டி
  படிப்பு இருக்கானு விசாரிச்சு ஜாயின் பண்ணிடவா?? :-))))

  பதிலளிநீக்கு
 3. குட்டியூண்டு கதைக்கு வெயிட்டிங்

  என் சின்ன வயசுல அக்கா எனக்கு குட்டி குட்டி
  கதைகள் சொல்லுவா.கேக்க சுவாரஸ்யமா இருக்கும்.

  உங்க கதைகளோட சுவாரஸ்யத்துக்கு சொல்லணுமா?

  எதிர்பார்ப்புடன்.....

  பதிலளிநீக்கு
 4. யாருமே சிந்திக்காத விஷயங்கள் ...படிப்பவர் அனைவருக்கும் நகைச்சுவை விருந்து.

  பதிலளிநீக்கு
 5. சுவாரஸ்யமா இருக்குது.. 'பொறி'யியல் ஆராய்ச்சி :-))

  பதிலளிநீக்கு
 6. 50 தாவது பிரசவத்திருக்கு waiting..

  பதிலளிநீக்கு
 7. எலிக்கூடில் இத்தனை ஆராய்ச்சியா! என் சிறு வயதில் எங்க வீட்டு பரணில் வெங்கல பானைக்குள் துடைப்ப குச்சியாலும், சணலாலும் கூடு போல் கட்டி நான்கு எலிக் குட்டிகள் குடியிருந்தது கண்டுபிடிக்கப் பட்டு அகற்றபட்டது நினைவில் வந்தது. இந்த எலி அகற்றும் படலம் நடக்கும் போது நான் எங்கள் எதிர் வீட்டிக்குள் ஓடி அலறிக் கொண்டு கிடந்தேன்.

  குட்டியூண்டு கதைக்காக வெயிட்டிங்!
  சிறு வயதில் ஊருக்கு போகும் போது என் அத்திம்பேர் அழகா குட்டி குட்டி கதைகளைச் சொல்லுவார். அதை கேட்க எனக்கு எப்பவுமே ஆசை தான்!

  பதிலளிநீக்கு
 8. எலிகள் மற்றும் எலிக்கூடுகள் பற்றி பி.எச்.டி. செய்து டாக்டர் பட்டம் வாங்குமளவு ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறீர்கள்...:))

  பதிலளிநீக்கு
 9. எலிப்பொறி பற்றிய உங்கள் பகிர்வுக்கு எலி டாக்டர் பட்டம் கொடுக்கலாமா என்று எலிகள் எல்லாம் மாநாடு நடத்திக்கொண்டு இருப்பதாக கேள்வி!

  எங்கள் வீட்டில் அசைவ எலிப் பொறிதான் இருந்தது! வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான் அதில்!

  சிறுகதைக்கும் அடுத்த பகுதிக்கும் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸா............ர்.....பாலச்சந்தர் படம் போல் கம்ப்யூட்டர் சேர் விளிம்பிற்கு ஆளைக் கொண்டு வந்து விட்டீர்களே!

  அன்பின்,

  ஆர்.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு
 11. ரொம்ப 'எலி'கண்டா இருக்கு பதிவு. நடுவுல போனசா குட்டிக் கதை.. ஜமாய்ங்க.. ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 12. Pari T Moorthy said...
  //தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்

  பாரி தாண்டவமூர்த்தி
  http://blogintamil.blogspot.com/2011/03/3.html
  //

  அன்பு நண்பர் பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி அவர்களே,

  வலைப்பூவில் கடந்த இரண்டு மாதங்களாக மட்டுமே நிறைய சிறுகதைகள் எழுதி வருகிறேன்.

  இந்த 2 மாதங்களுக்குள் ஏற்கனவே திரு எல்.கே அவர்கள் மூலம் முதன் முறையாகவும், திருமதி “அன்புடன் மலிக்கா அவர்கள் மூலம் இரண்டாவ்து முறையாகவும் இப்போது தங்கள் மூலம் மூன்றாவது முறையாகவும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

  தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  இந்த தங்களின் அறிமுகம், இனி மேலும் மேலும் நல்ல பல படைப்புகள் தரவேண்டும் என்று எனக்கு ஒரு புதிய உற்சாகம் ஏற்படுத்துவதாக உள்ளது.

  மீண்டும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 13. Chitra said...
  //எலிப்பொறியில் இத்தனை விஷயங்கள் கவனிக்க வேண்டியது இருக்கிறது. வித்தியாசமான தொடர்தான். ஒத்துக்கிறோம். ஹா,ஹா,ஹா,ஹா...//

  வாங்கப் போகும் எலிப்பொறியில் எலி சிக்கப் போகுதோ இல்லையோ, பின்னூட்டத்தில் இன்றும் கூட நீங்களே முதன் முதலாகச் சிக்கியுள்ளீர்கள். எனவே இரட்டை வடைகள் உங்களுக்கே. வருகைக்கும், ஒப்புதலுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. raji said...
  //அம்மாடி!!!!!! எலி பத்தியும் எலிப்பொறி பத்தியும் இவ்வளவு மேட்டர் இருக்கா?

  சார்!நான் வேணும்னா நீங்க இருக்கற தைரியத்துல மெட்ராஸ் யுனிவர்சிட்டில இதுக்கான பி எச் டி படிப்பு இருக்கானு விசாரிச்சு ஜாயின் பண்ணிடவா?? :-)))) //

  மேட்டருக்குப் பஞ்சமே இல்லை. நான் மிகவும் சுருக்கி எழுதியுள்ளேனாக்கும்.

  நான் இருக்கும் தைரியத்துல நீங்க எதிலே வேணுமாலும் ஜாயின் பண்ணுங்க. செலவைப் பத்தியும் கவலையே படாதீங்க.

  கூடிய சீக்கிரம் கெளரவ டாக்டர் பட்டங்களெல்லாம் உங்களைத் தேடி, அதுவாகவே வருவதற்கு, நான் எவ்வளவு செலவானாலும், செட்-அப் செய்து விடுகிறேன்.

  என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் “டாக்டர் திருமதி ராஜலக்ஷ்மி” க்கு.

  பதிலளிநீக்கு
 15. raji said...
  //குட்டியூண்டு கதைக்கு வெயிட்டிங். என் சின்ன வயசுல அக்கா எனக்கு குட்டி குட்டி கதைகள் சொல்லுவா.கேக்க சுவாரஸ்யமா இருக்கும்.
  உங்க கதைகளோட சுவாரஸ்யத்துக்கு சொல்லணுமா?
  எதிர்பார்ப்புடன்.....//

  எனக்கும் சிறு வயதிலிருந்து கதை கேட்கவும் சொல்லவும் பிடிக்கும்.

  இப்போதும் எங்கள் குடும்ப விழாக்கள் நடக்கும் போது என்னைச் சுற்றி ஒரு மழலைப் பட்டாளமே சூழ்ந்து, கதை சொல்லச் சொல்லி ஆர்வமாக அமர்வதுண்டு.

  குழந்தைகளுக் கென்றே, நான் பல நீதிக்கதைகளை மிகவும் வேடிக்கையாக தயார் செய்து வைத்துள்ளேன்.

  துபாயிலிருக்கும் என் ஆசைப் பேத்தி & அருமைப் பேரனுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நான் ஏதாவது சொல்லியே ஆக வேண்டும். .

  பதிலளிநீக்கு
 16. Ganesh said...
  //யாருமே சிந்திக்காத விஷயங்கள் ...படிப்பவர் அனைவருக்கும் நகைச்சுவை விருந்து.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, கணேஷ்.

  பதிலளிநீக்கு
 17. அமைதிச்சாரல் said...
  //சுவாரஸ்யமா இருக்குது.. 'பொறி'யியல் ஆராய்ச்சி :-))
  ஆஹா, (எலிப்)“பொறி” இயல் ஆராய்ச்சி, அருமையான அமைதி (யான)ச் சாரல் தான், உங்கள் இந்தப் பின்னூட்டமும்.

  பதிலளிநீக்கு
 18. Girija said...
  // 50 தாவது பிரசவத்திருக்கு waiting..//
  உனக்கு இது தாங்காதம்மா தாங்காது. Just படிப்பதோடு நிறுத்திக்கோ ! (ஹி ஹி ஹி....)

  பதிலளிநீக்கு
 19. கோவை2தில்லி said...
  //எலிக்கூடில் இத்தனை ஆராய்ச்சியா! என் சிறு வயதில் எங்க வீட்டு பரணில் வெங்கல பானைக்குள் துடைப்ப குச்சியாலும், சணலாலும் கூடு போல் கட்டி நான்கு எலிக் குட்டிகள் குடியிருந்தது கண்டுபிடிக்கப் பட்டு அகற்றபட்டது நினைவில் வந்தது. இந்த எலி அகற்றும் படலம் நடக்கும் போது நான் எங்கள் எதிர் வீட்டிக்குள் ஓடி அலறிக் கொண்டு கிடந்தேன்.//

  ஆஹா ....அருமை. இது குழந்தையாக இருக்கையில் எல்லோருக்குமே ஏற்படும் ஒரு வித பயத்துடன் கூடிய படபடப்புத் தான். எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு;

  அப்புறம் அந்த வெங்கலப் பானையைப் கடையில் போட்டு விட்டு பேரீச்சம்பழம் வாங்கியிருப்பார்களே!

  //குட்டியூண்டு கதைக்காக வெயிட்டிங்! சிறு வயதில் ஊருக்கு போகும் போது என் அத்திம்பேர் அழகா குட்டி குட்டி கதைகளைச் சொல்லுவார். அதைக் கேட்க எனக்கு எப்பவுமே ஆசை தான்!//

  உங்களுக்காகவே நாலைந்து குட்டியூண்டு கதைகள் வைத்திருக்கிறேன். அவ்வப்போது பதிவு செய்கிறேன்.

  (ஆனால் உங்கள் அத்திம்பேர் பெயர் ராமசுப்புவா இருக்காது!)

  பதிலளிநீக்கு
 20. middleclassmadhavi said...
  //எலிகள் மற்றும் எலிக்கூடுகள் பற்றி பி.எச்.டி. செய்து டாக்டர் பட்டம் வாங்குமளவு ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறீர்கள்...:)) //

  ஆராய்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை மேடம்.
  அனுபவம் + மாற்றி யோசிக்கும் கற்பனை வளம் + அலுப்புத்தட்டாமல் எழுதும் திறன் = கதை. That is all.

  பதிலளிநீக்கு
 21. வெங்கட் நாகராஜ் said...
  //எலிப்பொறி பற்றிய உங்கள் பகிர்வுக்கு எலி டாக்டர் பட்டம் கொடுக்கலாமா என்று எலிகள் எல்லாம் மாநாடு நடத்திக்கொண்டு இருப்பதாக கேள்வி!//

  எலித்தொல்லைகளும் வேண்டாம். அந்த டாகடர் பட்டமும் எனக்கு வேண்டாம். அவைகளின் மாநாட்டுப் பந்தலில் ‘பாம்’ வைத்து விடுங்கள்.

  //எங்கள் வீட்டில் அசைவ எலிப் பொறிதான் இருந்தது! வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான் அதில்! //

  இந்த அசைவ எலிப் பொறியில் மாட்டும் எலிகளுக்கு ஈமக் கிரியைகள் நடத்துவதற்குள் போதும்போதும் என்று ஆகிவிடும். அடுத்த ஒரு வாரத்திற்கு சோறு இறங்காது.

  நானும் இந்தக் கதையில் வரும் ராமசுப்பு போலவே ஒரு வித அருவருப்பால் இதிலெல்லாம் தலையிடாமல், கண்ணால் கூடப் பார்க்காமல் எஸ்கேப் ஆகி விடும் ஆசாமி தான். எவ்வளவு செலவானாலும் கவலையே படாமல் எல்லாவற்றிற்குமே, யாரோ ஒரு கோவிந்தனைத் தான் அழைத்து வேலை வாங்குவேன்.

  //சிறுகதைக்கும் அடுத்த பகுதிக்கும் காத்திருக்கிறேன். // நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 22. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸா............ர்.....பாலச்சந்தர் படம் போல் கம்ப்யூட்டர் சேர் விளிம்பிற்கு ஆளைக் கொண்டு வந்து விட்டீர்களே!
  அன்பின், ஆர்.ஆர்.ஆர். //

  பார்த்து ஸார், சேர் விளிம்பிலிருந்து விழுந்து விடப் போகிறீர்கள். கதையின் மீதிப் பகுதியை நீங்கள் படிக்க முடியாமல் போய்விடுமோ என்ற ஒரே கவலை எனக்கு. ஹி...ஹி...ஹி...

  பதிலளிநீக்கு
 23. Gopi Ramamoorthy said...
  // எலி மாட்டியதா இல்லையா:-) //
  தெரியலையே ஸார். அது மாட்டினால் அதுவும் அம்போ......கதையும் அம்போ........ன்னு முடிவுக்கு வந்திடுமே......நீங்கள் மேலும் கொஞ்சமாவது சிரிக்க வேண்டாமா? அது தானே என் எதிர்பார்ப்பு.

  பதிலளிநீக்கு
 24. மோகன்ஜி said...
  //ரொம்ப 'எலி'கண்டா இருக்கு பதிவு. நடுவுல போனசா குட்டிக் கதை. ஜமாய்ங்க.ஆவலுடன் காத்திருக்கிறோம்.//

  Thanks for your ELEGANT Comment Sir.

  அடுத்ததாக் வரப் போவது என்னுடைய 50 ஆவது பதிவு சார்.

  அதற்குத் தான் இவ்வளவு விளம்பரங்கள்.

  எல்லாம் உங்களைப் போன்ற முன்னோர்கள் சிலர் கற்றுக் கொடுத்தது தான்.

  ஏதோ வயசாச்சே தவிர எனக்கு அவ்வளவாக விவரம் பத்தாது சார். அந்தக் குட்டிக் கதையைப் படித்தால் நீங்களே தெரிஞ்சிப்பீங்க, பாருங்க.

  பதிலளிநீக்கு
 25. மதுரை சரவணன் said...
  // elivettai thotarattum... elivalaiyil arumaiyaana pathivu..
  vaalththukkal //

  தங்கள் வருகைக்கும், புதுமையான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. ”எலி”யைத் தொடர்ந்து வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 26. சே.குமார் said...
  // வித்தியாசமான தொடர்தான். //

  தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. வித்தியாசமாக நினைக்காமல் அடிக்கடி வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 27. உங்களின் சென்ஸ் ஆஃப் ஹ்யூமருக்கு சொல்லவா வேண்டும் கோபு சார்?

  நீங்க பாட்டுக்கு எலிப் பொறி வாங்க ஒரு இடுகை-பஸ்ஸிலிருந்து வீடு திரும்ப ஒரு இடுகை-மஸால் வடை மாட்ட ஒரு இடுகைன்னு எலியைக் கண்டுக்காம இப்படிப் பொறுப்பில்லாம ஊர் சுத்திண்டிருக்கீங்க.

  உங்க மச்சினரோட சேந்து எலியைப் பிடிச்சு பக்கத்து ப்ளாட்ல விட்டுட்டோம்.

  சீக்கிரம் வந்து சேருங்க வீட்டுக்கு.

  பதிலளிநீக்கு
 28. சுந்தர்ஜி said...
  //உங்களின் சென்ஸ் ஆஃப் ஹ்யூமருக்கு சொல்லவா வேண்டும் கோபு சார்? //

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சுந்தர்ஜி சார். நான் இந்த வெண்ணிற ஆடை மூர்த்தி+ வீ.கே.ராமசாமி + பாக்கிய ராஜ் மூவரையும் கலந்து செய்தது போல ஒரு சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் உள்ள ஆளு தான் சார். நிறைய பேர்கள் இதுவரை சொல்லியிருக்கிறார்கள். அது போலவே நீங்களும் இப்போது சரியாகச் சொல்லிவிட்டீர்கள். நன்றி.

  //நீங்க பாட்டுக்கு எலிப் பொறி வாங்க ஒரு இடுகை-பஸ்ஸிலிருந்து வீடு திரும்ப ஒரு இடுகை-மஸால் வடை மாட்ட ஒரு இடுகைன்னு எலியைக் கண்டுக்காம இப்படிப் பொறுப்பில்லாம ஊர் சுத்திண்டிருக்கீங்க.

  உங்க மச்சினரோட சேந்து எலியைப் பிடிச்சு பக்கத்து ப்ளாட்ல விட்டுட்டோம்.

  சீக்கிரம் வந்து சேருங்க வீட்டுக்கு.//


  ஆஹா .... என்னையே வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் மிகவும் அருமையான பின்னூட்ட வரிகள் இவை. இதை இப்படி நகைச்சுவை ததும்ப எழுதிய உங்களைக் கட்டிப் பிடித்துத் தழுவிட ஆசையாக உள்ளது எனக்கு.

  இந்த எலித்தொல்லையால் உங்களை நான் 2 நாட்களாக மறந்தே போய்விட்டேன். நல்ல வேளையாக இப்போதாவது, தாங்களாகவே வந்து ”அந்த எலியைப் பிடிச்சாச்சுன்னு” நல்ல தகவல் சொல்லியிருக்கிறீங்க. இனி நான் தைர்யமாக வீட்டுக்கு வரலாம். இதோ கிளம்பியாச்சு. உடனே ஒரு ஆட்டோ பிடித்தாவது வந்துடறேன்.

  நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 29. சார் தங்கள் “எலி “சபத் கதையை இடையில் படிக்கவில்லை,அடுத்தடுத்து தொடர் பகுதிகளை தற்போதுதான் படித்தேன்,பக்கங்களை உயர்த்தி உயர்த்தி படிக்காமல் முழுவதும் ஒரே கிளிக்கில் படிக்க டிஸ்ப்ளே ஆகுமாறு எதாவது ஆப்சன் இருந்தால் யாராவது சொல்லுங்கள், எப்படி சார் இத்தனை நேர்த்தியாக கதை அமைக்கிறீர்கள்.உண்மையில் நீங்கள் வரம் பெற்றவர்தான்.

  தங்கள் கதையில்
  வருவது எலி,
  கதை எழுதுவதில்
  தாங்கள் புலி.
  ஹி,ஹி, !!!


  கடந்த பதிவில் இன்டலியில் இணைத்தமையில் என் பங்களிப்பை அறிவித்திறிந்தீர்கள்,கே.அர்.பி செந்தில் அவர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்,நடந்தது என்ன?....என்பது அவருக்குதான் உண்மை தெரியும்.

  பதிலளிநீக்கு
 30. thirumathi bs sridhar said...
  // எப்படி சார் இத்தனை நேர்த்தியாக கதை அமைக்கிறீர்கள்.உண்மையில் நீங்கள் வரம் பெற்றவர்தான்.

  தங்கள் கதையில் வருவது எலி,
  கதை எழுதுவதில் தாங்கள் புலி. ஹி,ஹி, !!!//

  ஆமாம் மேடம். தாங்கள் சொல்வதும் சரியே. நேர்த்தியாக கதை அமைப்பதாக பலரும் சொல்லுகின்றனர்.

  உங்களைப் போன்றவர்களின் மனம் திறந்து சொல்லும் பாராட்டுக்கள் தான் உற்சாகம் கொடுத்து எழுதத் தூண்டுகோலாக அமைகிறது என்பதே இதிலுள்ள உண்மை.

  உண்மையில் நான் வரம் பெற்றவன் தான். காஞ்சி மஹா ஸ்வாமிகள் என்று ஒரு பெரியவர் இருந்தார். நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். அவர் இப்போதும் என்னுடனே, எங்கள் வீட்டில் இருக்கிறார். என்னை வழி நடத்திச் செல்லுகிறார். அவரை நான் பலமுறை (ஆண்டுக்கு ஒரு முறையாவது) நேரில் தரிஸித்து, அனுக்கிரஹம் பெற்றவன். என்னைப் பொருத்தவரை அவரைப் போன்ற ஒரு மிகச் சிறந்த, மிகவும் எளிமையான, முக்காலமும் உணர்ந்த ஒரு மிகப் பெரிய ஞானி, இந்த உலகிலேயே யாரும் கிடையாது. அவர் என் உணர்வுகளில், என் உடலில், என் உள்ளத்தில், இதை டைப் செய்யும் என் விரல்களில் எங்கும், என்றும், இன்றும், இப்போதும் நிறைந்திருக்கிறார். அதனால் எதையுமே நான் செய்வதாகவே தான் நினைப்பதில்லை. எல்லாம் அவர் செயலே என்று நம்புகிறேன். அந்தளவுக்கு அவரின் அருளும் வரமும் நிறையப் பெற்றவன் நான். எவ்வளவோ விஷயங்கள், எவ்வளவோ சம்பவங்கள் என் இந்த 60 வயதுக்குள் நடந்துள்ளன. இதற்கு மேல் அவற்றை நான் விரிவாகக் கூற விரும்பவில்லை. கூறவும் கூடாது. கூறினால் யாரும் நம்பவும் மாட்டார்கள். ஏதோ உங்களிடம் (அதுவும் நீங்கள் வரம் பெற்றவன் என்று கூறியிருந்ததால்) சற்றே பகிர்ந்து கொள்ள விரும்பியதால் கூறும்படி ஆனது.

  தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும்
  மிக்க நன்றி. தேவைப்பட்டால் இந்த முழுக்கதையையும், அடுத்த வாரம் (தொடர் முடிந்த பிறகு) உங்களுக்கு நான் pdf file ஆக e-mail மூலம் அனுப்பி வைக்கிறேன். அதை நீங்கள் சுலபமாக படிக்க ஏதுவாகும்.

  பதிலளிநீக்கு
 31. thirumathi bs sridhar said...

  //கடந்த பதிவில் இன்டலியில் இணைத்தமையில் என் பங்களிப்பை அறிவித்திறிந்தீர்கள்,கே.அர்.பி செந்தில் அவர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்,நடந்தது என்ன?....என்பது அவருக்குதான் உண்மை தெரியும்.//

  இது தங்களின் தன்னடக்கத்தையும், பெருந்தன்மையையுமே காட்டுவதாக உள்ளது.

  முதன் முதலாக என்னை இண்ட்லியிலும், தமிழ்மணத்திலும் இணைக்க வேண்டி அன்புக் கட்டளையிட்டது நம் மதிப்பிற்குரிய திருமதி ராஜி மேடம் அவர்கள் தான்.

  பிறகு அவருக்கு நான் அனுப்பிய பதிலைத் தாங்கள் படித்து விட்டு, எனக்கு உதவ, தானாகவே முன் வந்தது நீங்கள் தான்.

  உதவி செய்ய உண்மையில் மனமார நினைத்து முன்வந்த தங்களுக்கு அதில் ஏதோ சிஸ்டம் சிக்கல்கள் தொடர்ந்து ஏற்பட்டதனால், தாங்கள் திரு. KRP செந்தில் அவர்களை விட்டு சரிசெய்யச் சொன்னீர்கள். அவரும் தங்கள் வேண்டுகோளுக்குக் கட்டுபட்டு, மனமுவந்து, இதில் தலையிட்டு எனக்கு உதவி செய்து கொடுத்துள்ளார்.

  நான் அவரையும் e-mail மூலமாகத் தொடர்பு கொண்டு, நன்றி தெரிவித்து விட்டு, அதற்கு அவர் எழுதியுள்ள அருமையானதொரு பதிலையும் பெற்று, தங்களுக்கும் Forward செய்து விட்டு, திருமதி ராஜி பெயர் + உங்கள் பெயர் + செந்தில் பெயர் மூன்றையும் தான் என் சிறுகதைத் தொடரின் துவக்கத்தில் நன்றி அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறேன்.

  திரு. செந்தில் அவர்களைத் தாங்கள் மீண்டும் தொடர்பு கொள்ளும் போது, நான் Thanks சொன்னேனா என்று கேளுங்கள். Further ஆக எங்களுக்குள் ஏற்பட்ட உறவுகளை அவர் வாயால் அவரே உங்களுக்குச் சொல்லுவார்.

  இது விஷயத்தில் நீங்கள் மூவருமே தான் எனக்கு ஏதோ ஒரு வகையில் உதவினீர்கள் என்பது தானே உண்மை!

  மீண்டும் என் நன்றிகள் உங்கள் மூவருக்கும்.

  பதிலளிநீக்கு
 32. சார்! "பொன் விழா" அழைப்பைப் பார்த்தேன்! அட்வான்ஸ் வாழ்த்துகள்! என் புதிய பதிவு: "தாத்தா, பாட்டி...நிலை என்ன?" உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்! நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்!

  பதிலளிநீக்கு
 33. மனம் திறந்து... (மதி) said...
  // சார்! "பொன் விழா" அழைப்பைப் பார்த்தேன்! அட்வான்ஸ் வாழ்த்துகள்! என் புதிய பதிவு: "தாத்தா, பாட்டி...நிலை என்ன?" உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்! நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்!//

  முதன் முதலாக (?) என் வலைபூவுக்கு வருகை தந்து, என் “பொன் விழா” அழைப்புக்கு, அட்வான்ஸ் வாழ்த்தளித்த உங்களுக்கு என் நன்றிகள்.

  தங்களின் பதிவான "தாத்தா, பாட்டி...நிலை என்ன?"
  படித்தேன். மகிழ்ந்தேன். வோட்டளித்தேன். கீழ்க்கண்ட பின்னூட்டமும் அளித்து விட்டேன்.

  நீங்கள் சொல்லுவது யாவும் நூற்றுக்கு நூறு உண்மை, என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் நான்.

  துபாயிலிருக்கும் என் பேரனோ பேத்தியோ வாரம் ஒருமுறையாவது என்னுடன் பேசாமல் போனால் எனக்கு அழுகை வந்து விடும். அவர்களுக்கும் அப்படியே.

  வருஷம் ஒரு முறை வருவார்கள். பெரும்பாலும் என்னுடன் தான் பழகுவார்கள், பேசுவார்கள், கதை கேட்பார்கள், கட்டிப் பிடிப்பார்கள், என் தொந்தியில் தலை வைத்துப் படுப்பார்கள்.

  அந்த நம் பேரனையோ பேத்தியையோ பார்ப்பதோ, பழகுவதோ, பேசுவதோ, அவர்களின் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்வதோ ”யாழ் இனிது குழலினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார்” என்ற வள்ளுவரின் வாக்கு போல வெகு அழகானது தான்.

  அந்தக் குறளில் வரும் “தம்மக்கள்” என்ற சொல் மட்டும் எனக்கு மிகவும் பிடித்தது.

  பிறர் குழந்தையைக் கொஞ்சுவது இன்பம்!
  நம் குழந்தையைக் கொஞ்சுவது பேரின்பம்.
  தன் வாரிசின் குழந்தையைக் கொஞ்சுவது Abraham Maslow சொன்ன Hierarchy of Needs லே Self Actualization Needs பூர்த்தி ஆகிற நிலை.

  I fully agree with you.

  பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். .

  பதிலளிநீக்கு
 34. எலிப்பொறிகளைப் பற்றி நல்ல விளக்கம். சிறு வயதில் பார்த்த, கேட்ட கதைதான் இந்தத் தொடர். சுவாரஸ்யமாகப்போய்க்கொண்டிருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஷார்ஜாவிலும் இந்தத் தொல்லை அதிகம். ஒரு சமயம் எங்கள் உணவகத்திலும் இந்தத் தொல்லை ஸ்டோர் ரூமில் அதிகமானதால், இங்கிருந்து எலிப்பொறி வாங்கிச் செல்ல வேண்டியதாகி விட்டது.

  கதையிலிருந்து விலகி சில வார்த்தைகள்.
  ஒரு பின்னூட்டத்திற்கு நீங்கள் எழுதியிருந்த சில வரிகள் மிக அருமை!!
  " பிறர் குழந்தையைக் கொஞ்சுவது இன்பம்!
  நம் குழந்தையைக் கொஞ்சுவது பேரின்பம்.
  தன் வாரிசின் குழந்தையைக் கொஞ்சுவது Abraham Maslow சொன்ன Hierarchy of Needs லே Self Actualization Needs பூர்த்தி ஆகிற நிலை."

  பதிலளிநீக்கு
 35. மனோ சாமிநாதன் said...
  // எலிப்பொறிகளைப் பற்றி நல்ல விளக்கம். சிறு வயதில் பார்த்த, கேட்ட கதைதான் இந்தத் தொடர். சுவாரஸ்யமாகப்போய்க்கொண்டிருக்கிறது. //

  தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

  //சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஷார்ஜாவிலும் இந்தத் தொல்லை அதிகம். ஒரு சமயம் எங்கள் உணவகத்திலும் இந்தத் தொல்லை ஸ்டோர் ரூமில் அதிகமானதால், இங்கிருந்து எலிப்பொறி வாங்கிச் செல்ல வேண்டியதாகி விட்டது.//

  தாங்கள் சொல்லுவதைப் பார்த்தால் இது ஒரு உலகளாவிய பிரச்சனையாக இருக்கும் போல உள்ளது. அமெரிக்காவில் எப்படி என்று கூட திருமதி. சித்ரா மேடத்திடம் கேட்டிருந்தேன். அவர்கள் இன்னும் பதில் கூறவில்லை.

  //கதையிலிருந்து விலகி சில வார்த்தைகள்.

  ஒரு பின்னூட்டத்திற்கு நீங்கள் எழுதியிருந்த சில வரிகள் மிக அருமை!!

  "பிறர் குழந்தையைக் கொஞ்சுவது இன்பம்!
  நம் குழந்தையைக் கொஞ்சுவது பேரின்பம்.
  தன் வாரிசின் குழந்தையைக் கொஞ்சுவது Abraham Maslow சொன்ன Hierarchy of Needs லே Self Actualization Needs பூர்த்தி ஆகிற நிலை."//

  இந்த என் பின்னூட்டத்தைப் படித்து மகிழ்ந்து பாராட்டியதற்கும் நன்றி, மேடம்.

  WELCOME vgk

  பதிலளிநீக்கு
 36. பல தலைமுறைகளாக எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய ராசியான ஆவி வந்த எலிக்கூடு. அதைப்போய் இப்படி அநியாயமாக உடைத்து விட்டதாகச் சொல்லுகிறீர்களே?//
  என் எலிப்பொறி என்க்கு வேணும் என்று ரஜினி மாதிரி
  எடக்கு மடக்கா எடக்குப் பண்ணப் போகிறாரோ என்ன்வோ??

  பதிலளிநீக்கு
 37. இராஜராஜேஸ்வரி said...
  //பல தலைமுறைகளாக எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய ராசியான ஆவி வந்த எலிக்கூடு. அதைப்போய் இப்படி அநியாயமாக உடைத்து விட்டதாகச் சொல்லுகிறீர்களே?//
  என் எலிப்பொறி என்க்கு வேணும் என்று ரஜினி மாதிரி எடக்கு மடக்கா எடக்குப் பண்ணப் போகிறாரோ என்னவோ??//

  வாங்கோ, திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

  இந்த எலித்தொல்லையால், நீங்கள் கருத்துச் சொல்ல வரவில்லையே என்பதையே மறந்து போய் விட்டேன் பாருங்கள்.

  வருகைக்கும் பொன்னான உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

  தாமதமேயானாலும் தவறாமல் தொடர்ந்து வாருங்கள்.

  உங்கள் பின்னூட்டக் கருத்துகள் அதுவும், ஏதோ ஒருசில நீங்கள் மிகவும் ரஸித்த? வரிகளை Highlight செய்வதாக இருக்கும். அது தான் எனக்கும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 38. எளிப்போரிகளைப் பற்றி இவ்வளவு எழுதி இருக்கீங்களே?எனக்கு அசைவ எலிப்பொறி தான் தெரியும்.எங்க பாட்டி வீட்டுல பார்த்திருக்கேன்.
  ரொம்ப நகைச்சுவையாக போய்க்கொண்டிருக்கிறது தொடர்.குட்டியூண்டு கதை எழுதறதா சொல்லி இருக்கீங்க.தலைப்புகளும் வித்தியாசமாக இருக்கு.சீக்கிரம் எழுதுங்க ஐயா.படிப்பதற்கு காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறியுள்ள ஜிஜிக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

   நீக்கு
 39. பெருச்சாளிகளை பக்கத்துல பாத்துட்டா நான் ‘உவ்வேக்’ பண்ணிடுவேன் Uncle! சைவக் கூடு, அசைவக் கூடுங்கற வார்த்தை அமைப்பு அருமை. போகப் போக விறுவிறுப்பு கூடிக்கிட்டும், நகைச்சுவை அதிகரிச்சுக்கிட்டும்தான் இருக்கு. அடுத்த பகுதிக்கு உடனே ஓடறேன்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிரஞ்சனா April 21, 2012 6:43 PM
   பெருச்சாளிகளை பக்கத்துல பாத்துட்டா நான் ‘உவ்வேக்’ பண்ணிடுவேன் Uncle! சைவக் கூடு, அசைவக் கூடுங்கற வார்த்தை அமைப்பு அருமை. போகப் போக விறுவிறுப்பு கூடிக்கிட்டும், நகைச்சுவை அதிகரிச்சுக்கிட்டும்தான் இருக்கு.//

   அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   //அடுத்த பகுதிக்கு உடனே ஓடறேன்..!//

   மெதுவாக ஜாக்கிரதையாக நடந்தே போங்க! ;)

   நீக்கு
 40. //இதில் நுழையும் சுண்டெலிகள் இதிலிருந்து வடையை மட்டும் அழகாக சாப்பிட்டு விட்டு, சுலபமாக கொல்லைப்புறம் உள்ள கம்பி இடுக்குகள் வழியாகத் தப்பித்து விடும்//
  கில்லாடி எலிகள் ..
  நல்லவேளை ராமசுப்பு சைவ எலிக்கூடு வாங்கினார் ..:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. angelin October 3, 2012 2:58 AM
   ****இதில் நுழையும் சுண்டெலிகள் இதிலிருந்து வடையை மட்டும் அழகாக சாப்பிட்டு விட்டு, சுலபமாக கொல்லைப்புறம் உள்ள கம்பி இடுக்குகள் வழியாகத் தப்பித்து விடும்****

   //கில்லாடி எலிகள் ..
   நல்லவேளை ராமசுப்பு சைவ எலிக்கூடு வாங்கினார் ..:)//

   அன்பின் நிர்மலாவின் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   என்றும் அன்புடன்
   கோபு அண்ணா

   நீக்கு
 41. எலிக்கூடு பற்றி கடைகாரரும் ராமசுப்புவும் பேசும் உரையாடல் நல்ல நகைசுவை..சுவராஸ்யமா எதிர்பார்ப்போட கதை போகுது .

  பதிலளிநீக்கு
 42. //ராதா ராணி October 4, 2012 10:44 PM
  எலிக்கூடு பற்றி கடைகாரரும் ராமசுப்புவும் பேசும் உரையாடல் நல்ல நகைசுவை..சுவராஸ்யமா எதிர்பார்ப்போட கதை போகுது.//

  சுவாரஸ்யமாக நகைச்சுவைக் கதையைப் படித்துவருகிறீர்கள் எனத் தெரிகிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 43. நான் பிஎச்டி படிக்கு முன்பே இந்தக் கதையைப் படித்திருந்தால் என் பிஎச்டிக்கு இந்த சப்ஜெக்டையே எடுத்திருப்பேன்.

  பதிலளிநீக்கு
 44. பெருச்சாளிக்கு ஆட்டோ ரிக்‌ஷா உவமை யாரும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதது. உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி எல்லாம் தோணறதோ தெரியலை.

  சைவக்கூடு, அசைவக்கூடு - என்ன ஒரு கற்பனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya April 22, 2015 at 10:24 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //பெருச்சாளிக்கு ஆட்டோ ரிக்‌ஷா உவமை யாரும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதது. உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி எல்லாம் தோணறதோ தெரியலை. //

   :))))) சந்தோஷம்.

   //சைவக்கூடு, அசைவக்கூடு - என்ன ஒரு கற்பனை. //

   :)

   நீக்கு
 45. ஹா ஹா, சைவக்கூடா அசைவக் கூடா? உங்க கற்பனைக்கு அளவே கெடயாதா? சிரிச்சுகிட்டேதான் படிக்கறேன்

  பதிலளிநீக்கு
 46. எலிக்கூடு படிச்சாகாட்டியும் சிரிப்பாணி பொத்துகிச்.

  பதிலளிநீக்கு
 47. ஆஹா எப்படில்லாம் கற்பனைகள் செய்கிறீர்கள். சைவகூடா அசைவகூடா. எலிய விட எலிக்கூடு பத்தி தெரிஞ்சு வச்சுக்கணும்போல இருக்கே. இந்த பதிவ படிச்சவங்க எல்லாருமே எலிக்கூண்டு தெரிவு செய்வதில் கில்லாடி ஆகிடுவாங்க.

  பதிலளிநீக்கு
 48. //முடிவாக, நடுத்தர சைஸ் எலி விழக்கூடிய சைவக் கூட்டிலேயே இரண்டு கொடுப்பா” // ...சூடா ரெண்டு முறுகல் நெய் ஆனியன் ரவா பார்சல் குடுப்பா-ங்குற மாதிரில்ல இருக்கு...??

  பதிலளிநீக்கு
 49. கூடிலும் சைவம் அசைவமா? என குழம்(ப்)பியவிதம் அருமை!

  பதிலளிநீக்கு
 50. பதிவுதான் சூப்பருன்னா பின்னூட்டம் ரிப்ளை பின்னூட்டம் கதைக்கு போட்டி போட்டு சிரிக்க வைக்குதே.. இப்ப எனக்கு கூட எப்பவோ எங்கியோ படிச்சிருக்கேன் ஒரு எலி ஜோக் நெனப்புல வருதே... இப்ப வேண்டாம் எலி மாட்டின் பிறகு ( மாட்டிகிடுமா????)
  சொல்லறேன்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... April 17, 2016 at 7:30 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பதிவுதான் சூப்பருன்னா பின்னூட்டம் ரிப்ளை பின்னூட்டம் கதைக்கு போட்டி போட்டு சிரிக்க வைக்குதே.. இப்ப எனக்கு கூட எப்பவோ எங்கியோ படிச்சிருக்கேன் ஒரு எலி ஜோக் நெனப்புல வருதே... இப்ப வேண்டாம் எலி மாட்டின் பிறகு ( மாட்டிகிடுமா????) சொல்லறேன்......//

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :) - VGK

   நீக்கு