About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, March 4, 2011

”ஐ ம் ப தா வ து பிரஸவம்”

மை டியர் ப்ளாக்கி

எனக்கும் ப்ளாக்கிக்கும் திருமணம் நடந்தது இதே மார்ச் மாதம் இதே ஐந்தாம் தேதி {05.03.2009} தான். 

இன்றுடன் எங்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன.

சரி, யார் அந்த ’ப்ளாக்கி’ என்கிறீர்களா!

பெண் எழுத்தாளர்களுக்கு BLOGGER தான் இஷ்டம் என்றால், ஆண் எழுத்தாளராகிய நான், என் இஷ்டமானவளைப் “ப்ளாக்கி” என்று செல்லமாக அழைக்கலாம் தானே!

இந்த ப்ளாக்கிக்கும் எனக்கும் கஷ்டப்பட்டு, என் அருமை நண்பரும், பிரபல எழுத்தாளரும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் அவர்கள் தான், முன்னின்று 'புதிய இணைப்பு' என்ற பந்தத்தை ஏற்படுத்தி கொடுத்து, பதிவுத் திருமணம் நடத்தி வைத்தார், இதே மார்ச் ஐந்தாம் தேதி 2009 ஆண்டு.

அவர் பெரிய மனதுபண்ணி, தானே வலியவந்து முன்னின்று, என் வீட்டிலேயே, எனக்கும் ப்ளாக்கிக்கும் எளிய முறையில் பதிவுத் திருமணம் நடத்தி விட்டு, வேறு ஏதோ அவசர வேலைகள் இருப்பதாகச் சொல்லிப் போய் விட்டாரே தவிர, எங்கள் திருமணத்திற்குப் பின் எனக்கும் இந்த ப்ளாக்கிக்கும் ஒரு நல்லதொரு புரிதல் ஏற்பட்டபாடில்லை.

எங்கள் இருவருக்குமே, எங்கள் கல்யாணத்திற்கு முன்பு,  இதில் ஒரு முன் அனுபவம் இல்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் காதலித்தது கூட இல்லை. அவ்வளவு ஏன் ஒரே வீட்டுக்குள் நாங்கள் இருவரும் இருந்தும் ஒருவரை ஒருவர் ஒரு பாசத்துடன் என்றேனும் ஒரு நாளாவது பார்த்துக் கொண்டதோ பழகிக் கொண்டதோ கூட இல்லை. எல்லாமே ஒரு புது அனுபவம் தான், எங்களுக்கு..

இப்போது எங்களுக்குள் கல்யாணம் என்ற இணைப்பு ஏற்படுத்திக் கொண்ட  பிறகும் கூட “பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா...  அவர் பழக்கத்திலே... குழந்தையைப்போல்  ஒரு அம்மாஞ்சி ராஜா.....” என்ற பாட்டுப் போலத்தான் ஆகிவிட்டது எங்கள் இல்வாழ்க்கையும்.  

ஜாலியாகப் பேசவோ, பழகவோ, அடிக்கவோ, அணைக்கவோ முடியவில்லை.     பதிவுத் திருமணம் செய்து கொள்வது என்பது வேறு, தாம்பத்திய சுகத்தை அனுபவிப்பது என்பது வேறு அல்லவா! தாம்பத்யம் என்பது ஒழுங்காக, சுகமாக, திருப்தியாக அமைந்தால் தானே, திருமண பந்தம் என்று ஏற்படுத்தி கொடுத்த இணைப்பு ஒரு முழுமையை அடைந்ததாக ஆகும்?

நானும் ஒரு நாள் அல்ல இரண்டு நாட்கள் அல்ல சுமார் 20 மாதங்கள், ப்ளாக்கியை கண்ணால் பார்த்துப் பார்த்து அவள் அழகை ரஸித்து ரஸித்து மகிழ்ந்தேனே தவிர, விரல்களால் தொட்டு அவளை அனுபவிக்க முடியவில்லை. என்ன ஒரு கொடுமை இது என்று நினைத்து நினைத்து மனதுக்குள் மறுகினேன்.     

கல்யாணம் ஆகியும் பிரும்மச்சாரி போல ஆகிவிட்டது என் நிலைமை.

என்னை, எங்காவது தற்செயலாகப் பார்க்கும் போதெல்லாம், நண்பர் ரிஷபன் அவர்கள் ”என்னாச்சு ... ஏதாவது விசேஷமுண்டா, எப்போ உங்களின் புது ரிலீஸ்”  என்று கேட்பார்கள்.

புதிதாகக் கல்யாணம் ஆனவர்களைப் பார்த்து, எல்லோருமே அப்படித் தானே கேட்பார்கள் ?

இவர் தான் ப்ளாக்கியுடன் எனக்கு பதிவுத் திருமணம் செய்து வைத்தவர் ஆயிற்றே! அந்த உரிமையில் அவர் அடிக்கடி இப்படிக் கேட்பதும் நியாயம் தானே !

அவர் இவ்வாறு என்னை நேருக்குநேர் பார்த்துக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வெட்கம் பிடுங்கித் திங்கும்.   ஒரு விதக் கூச்சம் வந்து விடும்.   எனக்கும் ப்ளாக்கிக்கும் உள்ள அந்தரங்கப் பிரச்சனைகளைப் போய் இவரிடம் நான் எப்படி விலாவரியாக எடுத்துச் சொல்ல முடியும்?.   இதுபோன்ற இக்கட்டான நிலைமைகளில், அவரிடம் அதுபற்றி எதுவுமே சொல்லாமல், சிரித்து மழுப்பி வரலானேன்.

பிறகு ஒரு நாள் (19.10.2010 அன்று)  துணிந்து ப்ளாக்கியிடம் போய்  “கத்தி(ப்)பேசினால்”, என் கத்திக்கு பயந்தாவது அவள், என் வழிக்கு இணங்கி வந்து விட மாட்டாளா  என்று நினைத்து,  நான் முதன் முதலாக முயற்சித்தது சற்றும் வீண் போகவில்லை.    அப்போது கூட டி.வி. யில் ஒரு எம்.ஜி.ஆர் படப் பாடல் ஒலித்தது எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது.

என் வாளும் ...... உன் விழியும் .......  சந்தித்தால்.........
  உ(ன்)னை வெல்லும் .... எ(ன்)னைக் கொல்லும்.......இன்பத்தால்”

இதைப் படிக்கும் நீங்கள் தவறாக ஏதேதோ வீண் கற்பனை செய்து வித்யாசமாக நினைக்காதீர்கள். முதல் முதலாக 19.10.2010 அன்று என் கத்தியை, என் ப்ளாக்கி மேல் பதித்ததை [http://gopu1949.blogspot.com/2010/10/blog-post.html] நீங்களே வேண்டுமானால் போய்ப் பாருங்கள். 

05/03/2009 அன்றே எனக்கு ப்ளாக்கியுடன் பதிவுத் திருமணம் ஆகியும் 19/10/2010 அன்று அதாவது சுமார்  ஒரு 20 மாதங்கள் கழித்துதான் அந்த இன்பத்தை,  அந்த பேரின்பத்தை என்னால் ஒரு வழியாக எட்ட முடிந்தது.

என் ‘கத்தி’யை முதன் முதலாகப் பதிவு செய்த 19.10.2010 முதல் இன்று 05.03.2011 வரை இந்த 4 or 5 மாதங்களுக்குள் பல முறை இந்தப் பேரின்பத்தில் மூழ்கியதன் பலனாக (காய்ஞ்ச மாடு கம்புலே பாய்ந்தால் போல என்பார்களே - அதே ... அதே, அது போலத் தான், இதுவும்)  நேற்றுடன் 49 குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்ததுடன், இன்று வெற்றிகரமாக எனது ஐம்பதாவது குழந்தையையும் பெற்றுத் தந்து விட்டாள் என் அருமை ப்ளாக்கி.  

மிகக்குறுகிய காலத்தில் நான் இப்போது அபார சம்சாரியாகி விட்டேன்.

இந்த ஐம்பதாவது பிரஸவத்தை மட்டும் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று, இதுவரை என்னிடமும் என் பிளாக்கியிடமும், ஒரே கோபமாக இருந்த என் மாமியார் மாமனாராகிய இன்ட்லியும், தமிழ்மணமும்,   எங்கள் வீட்டுக்கு முதன் முதலாக, ஒரு வாரம் முன்பு வந்து இறங்கியதில், எங்கள் இருவருக்குமே ஒரு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது.  

இந்த எங்களின் வெற்றி எல்லாவற்றிற்குமே உங்கள் அன்பான (பின்னூட்டம் என்கிற) ஆசீர்வாத அக்ஷதைகளே காரணம் என்பதை நானும் என் ப்ளாக்கியும் நன்கு அறிவோம்.  அதற்காக எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள் ..... அதுவும் இதை வாசிக்கும் உங்களுக்கு மட்டுமே!.

நான் என் ப்ளாக்கியைத் தொட்டுத் தாலி கட்டாமல் பதிவுத் திருமணமல்லவா செய்து கொண்டுள்ளேன்.  அதில் என்னைவிட என் மை டியர் ப்ளாக்கிக்கு ரொம்பவுமே வருத்தம் உண்டு. 

அதனால் என்ன! இப்போது நமக்குப் பிறந்துள்ள இந்த நம் ஐம்பதாவது குட்டிக் குழந்தைக்குத் ”தாலி” என்றே பெயர் வைத்து விடுவோம் என்றேன்.   

”அப்போ நம்ம நூறாவது குழந்தைக்கு என்ன பெயர் வைப்பீங்க? ” என்று என்னை ஒரு அர்த்த புஷ்டியுடன் பார்த்துச் சிரித்தாள். என் ஸ்வீட்டியான ப்ளாக்கி.   

அவள் சிரிப்பில் மயங்கிப் போன நான் உடனே mood out ஆகிப் போனேன். பிறகு கதவைச் சாத்திவிட்டு, ஏ.ஸி யை ஆன் செய்து விட்டு, லைட்டை அணைத்துப் படுத்து விட்டேன். (அவளையும் சேர்த்து அணைத்துக் கொண்டு தான் - அதாவது ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டுத்தான்)


என்னையும், என் ப்ளாக்கியையும், எங்களுக்குப் பிறந்துள்ள நாலு டஜன் குழந்தைகளையும், கடந்த இரண்டே மாதங்களுக்குள் மூன்று முறை “வலைச்சரத்தில்” அறிமுகம் செய்து அசத்தி விட்டார்கள் தெரியுமோ!  


”அது தான் உலகம் பூராவும் தெரியுமே, எங்களுக்குத் தெரியாதா என்ன” என்கிறீர்களா?  OK .... OK.


இப்போதே என் ஐம்பதாவது குட்டிக் குழந்தையான “தாலி” யைக் கையோடு பார்த்து விட்டு,  வழக்கம் போல வாழ்த்துங்கள்.

அன்புடன்,
வை. கோபாலகிருஷ்ணன் 
05.03.2011 
-o-o-o-o-o-o-o-o-

”தாலி”

”ஏண்டீ, நம்ம பரத்தும், ஷீலாவும் எங்கே?”

“இரண்டு பேரும் காத்தாடா வெளியே வாக்கிங் போயிருக்காங்க!”

”அவங்களுக்கு வர வர துளிர் விட்டுப்போச்சு, வரட்டும் பேசிக் கொள்கிறேன்”

”ஏதோ சின்னஞ்சிறுசுகள், நம்மைப் போல வீட்டிலேயே அடைஞ்சு கிடக்காம, ஜாலியா போயிட்டு வரட்டுமேன்னு நான் தாங்க அனுப்பி வைச்சேன், அதுக்குப் போய் ஏன் இப்படிக் கோபப்படுறீங்க?”

ஏதாவது ஏடாகூடமாக ஆச்சுன்னா, நமக்குத் தானே சங்கடம்.  உஷாராக இருக்க வேண்டிய நீயே இப்படி அவங்களுக்கு சுதந்திரம் கொடுத்து வெளியே அனுப்பலாமா?”

”உப்புப்பெறாத விஷயத்துக்கு  ஏங்க நீங்க இப்படி டென்ஷன் ஆறீங்க?”

"உப்புப் பெறாத விஷயமா?  நாட்டு நடப்பைப் பற்றி உனக்கென்ன தெரியும்?   காலம் கெட்டுக்கெடக்குத் தெரியுமா உனக்கு!”

“அப்படியென்னங்க காலம் கெட்டுப் போச்சு; நீங்க எடுத்துச் சொன்னீங்கன்னா நானும் தெரிஞ்சுட்டுப் போறேன்”

”நீ பெரிசா தெரிஞ்சுக்கிட்டும், புரிஞ்சுக்கிட்டும் கிழிச்சே;  உனக்கெப்படி இதில் உள்ள சிக்கல்களைப் பற்றியெல்லாம்  நான் புரிய வைக்கப் போறேனோ, எனக்கே ஒரே விசாரமாயிருக்கு;  

”என்னங்க பெரிய விசாரம்” ?

”உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ !   போன வாரம் இவங்க  இரண்டு பேரும் ஜோடியா அந்த லாட்ஜுக்கு போக முயற்சி பண்ணியிருக்காங்க”

”அய்யய்யோ  அப்படியா!  இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

”அந்த லாட்ஜ் மேனேஜர் என் க்ளாஸ்மேட் தானே, அவர் தான் எனக்குப் போன் பண்ணி சொன்னாரு”

”என்னன்னு சொன்னாரு?”

“கழுத்துல தாலி ஏறாம இப்படி அலய விடாதீங்க; அப்புறம் அது ஆபத்துல போய் முடியும்ன்னு எச்சரிக்கை செய்தாரு”

....
..........
..............
...................
......................

”இவங்க ரெண்டு பேருக்கும் தாலியா?  நீங்க என்னங்க சொல்றீங்க?  எனக்கு ஒரு எழவும் புரியலையே ! “

..............
              .............
                            ..............
                                           ..............
                                                          ..............                                                 
..............
                                                                                                       ..............
                                                                                        ...............
                                                                           .............
                                                               ............

...........
...........
...........
...........
...........


முனிசிபாலிடியில் பணம் கட்டி நாய் வளர்க்க லைசன்ஸ் வாங்கி அதுங்க கழுத்திலே பெல்ட் கட்டணுமாம்.   அதைத்தான் ’தாலி’ன்னு அவரு சொல்றாரு.  தாலி இல்லாம இப்படி அலய விட்டா, அதுங்களை நாய் வண்டியிலே ஏத்திக்கிட்டுப் போய் விடுவாங்களாம்”


-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-இறுதியாக ஓர் எச்சரிக்கை:  

நாளையே கூட மீண்டும் நம் எலி வேட்டைத் தொடரலாம் !
ஜாக்கிரதை!  
இப்போதே சிரிக்கத் தயாராகி விடுங்கள் ! 

அன்புடன்,
VGK  
  

78 comments:

 1. ஐம்பதாவது டெலிவரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா!

  "தாலி" படிக்கிறபோது புரிஞ்சுக்கிட்டேன்; நீங்க படுஜாலியா எழுதுறவர்னு..! தூள் கிளப்புங்க! நாங்களும் பின்னாலே வந்திட்டிருக்கோமில்லே? :-))

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்...
  தொடர்ந்து கலக்குங்க....

  http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_9535.html

  ReplyDelete
 3. ஐம்பதாவது பதிவும் அதற்கான முன்னுரையும்
  மிக அருமை.உண்மையில் தங்கள் பதிவுக்குள்
  வரும்போதும் சரி படித்து முடித்து வெளியேரும் போதும் சரி
  மனதிற்குள் ஒரு இனம் புரியாத மகிழ்வும்
  சந்தோஷமும் பெருகி வழிகிறது
  அதற்கு தங்கள் எழுத்துத் திறமை மட்டும்
  காரணமாய் இருக்கமுடியாது
  தங்களிடம் இயல்பாக அனைவரையும்
  மகிழ்வித்துப் பார்கவேண்டும் என்கிற அவாவும்
  அடி நாதமாய் இல்லையெனில் இவ்வளவு
  சிறப்பாக எழுத்து அமையாது
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ஐம்பதிற்கு வாழ்த்துக்கள் . விரைவில் சதம் அடிக்க வாழ்த்துக்கள்.

  தாலி அருமை

  ReplyDelete
 5. உங்கள் ஐம்பது படிக்க ஆசையாக இருந்தது சார்...... ;-))

  ReplyDelete
 6. ப்ரமாதம் ஸார்..கொன்னுட்டேள் போங்கோ!

  ReplyDelete
 7. பதிவில் உள்ள உருவகம் கண்டு, சிரித்துக் கொண்டே இருந்தேன். நல்லா இருந்துச்சு...
  ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
  இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. உங்கள் குறும்புதான் உங்கள் பிளஸ் பாய்ண்ட்.. 50லும் ஆசை வரும் என்று நிரூபித்து விட்டீர்கள்.. 100 ஆண்டு காலம் வாழ்க.. என்று பின்னூட்டி வளர்க்க நாங்க ரெடி.. ஜமாய்ங்க.

  ReplyDelete
 9. ஐம்பதிற்கு வாழ்த்துக்கள். ஆயிரத்திற்கு அட்வான்ஸ்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. சீக்கிரம் சதம் அடியுங்கள்!

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் சார்!

  ஐம்பதாவது பிரசவம் சுகப் பிரசவம் ஆனதில் எனக்கு மகிழ்ச்சி

  ஆனால் ப்ளாக்கி யாரென்பதை முதலிலேயே சொல்லாமல்
  சஸ்பென்ஸ் வைத்து ட்விஸ்ட் கொடுத்து இறுதியில் சொல்லியிருக்கலாமோ
  என்று எனக்கு தோன்றியது.இது என் கருத்துதான்

  ஆனால் கற்பனையும் உருவகமும் பிரமாதமாக இருந்தது,
  எழுத்தும் கற்பனையும் உங்களுடன் பிறந்தது.அதை பிறர்
  மகிழ்வுற பதிவாக்கியிருக்கிறீர்கள்.மிக்க நன்றி

  தாலி முடிவு யூகித்து விட்டேன்

  ReplyDelete
 12. நல்ல தரமான நகைச்சுவை உங்கள் எழுத்தில் வயதில் வேண்டுமானால் நீங்கள் பெரியவாராக இருக்கலாம் ஆனால் உள்ளத்தில் இன்னும் இளமையாக இருக்கிறீரகள் அது என்றென்றும் தொடர இந்த Madurai Tamil Guy- யின் வாழ்த்துகள்.

  உங்கள் ப்ளாக்கின் தலைப்பை வை.கோபலகிருஷணன் எனபதிற்கு பதிலாக " குறும்புகார இளைஞன் " என்று மாற்றி கொள்ளூங்கள்

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. யார் வேண்டுமானாலும் 50 பிரசவங்கள் பார்த்து விடலாம் . ஆனால் நீங்கள் வளர்த்த ஒவ்வொன்றும் அற்புதமாக வளர்கின்ற கண்மணிகள். இவர்களின் உறவினராக இருப்பதில் பெரு மகிழ்ச்சி .குடும்பம் மேலும் வளரட்டும். வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 15. வித்தியாசமான முறையில் , பிளாக்கி

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. ஐம்பதாவது பதிவை அனுபவித்து எழுதியிருக்கிங்க.. வாழ்த்துக்கள்

  சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

  ReplyDelete
 17. ஐம்பதாவது டெலிவரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா!

  ReplyDelete
 18. வை.கோ சார்! உங்க ஐம்பதுக்கு நல்வாழ்த்துக்கள்.. உங்கள் பலமே உங்கள் நகைச்சுவை உணர்வுதான். கலக்குங்க.. உங்கள் 'ப்ளாக்கி'யை மிக ரசித்தேன்..

  ReplyDelete
 19. ஐம்பதுக்கும் வாழ்த்துகள் :-)))

  ReplyDelete
 20. சேட்டைக்காரன் said...
  //ஐம்பதாவது டெலிவரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா!

  "தாலி" படிக்கிறபோது புரிஞ்சுக்கிட்டேன்; நீங்க படுஜாலியா எழுதுறவர்னு..! தூள் கிளப்புங்க! நாங்களும் பின்னாலே வந்திட்டிருக்கோமில்லே? :-))//

  இன்றைய வலைப்பூவின் ஒட்டு மொத்த நகைச்சுவை வேந்தராகிய தாங்கள், சிரிப்பு நடிகரும், அந்தக்காலப் திரைப்படங்களில் என்னை வயிறு குலுங்க சிரித்த வைத்தவருமான “நாகேஷ்” அவர்களின் உருவத்துடன், இன்று முதன் முதலாக என் வலைப்பூவினுள் நுழைந்து, அதுவும் முதன் முதலாக வாழ்த்துத் தெரிவித்துள்ளது நான் செய்த பெரும் பாக்யமாகவும், என் 50 பதிவுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகவும், நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

  பெரும்பாலும் நள்ளிரவு வரை தூக்கமின்றித் தவிக்கும் என் துக்கத்தைப் போக்குவது தங்களின் நகைச்சுவை மிகுந்த மிக மிக அருமையான அட்டகாஸமான பதிவுகள் தான்.

  தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  தங்களைப் பற்றிய விபரங்கள் மர்மமாகவே உள்ளன.

  தங்களின் படைப்புகளின் தீவிர ரசிகரான என் valambal@gmail.com என்ற ஈ.மெயில் முகவரிக்கு தயவுசெய்து வந்தீர்களானால், தங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

  தகவல்களை மிகவும் ரகசியமாகவே வைத்துக் கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

  நன்றி, நன்றி, நன்றி.

  ReplyDelete
 21. Ramani said...
  //ஐம்பதாவது பதிவும் அதற்கான முன்னுரையும் மிக அருமை.உண்மையில் தங்கள் பதிவுக்குள் வரும்போதும் சரி, படித்து முடித்து வெளியேரும் போதும் சரி, மனதிற்குள் ஒரு இனம் புரியாத மகிழ்வும் சந்தோஷமும் பெருகி வழிகிறது அதற்கு தங்கள் எழுத்துத் திறமை மட்டும் காரணமாய் இருக்கமுடியாது. தங்களிடம் இயல்பாக அனைவரையும் மகிழ்வித்துப் பார்கவேண்டும் என்கிற அவாவும் அடி நாதமாய் இல்லையெனில் இவ்வளவு
  சிறப்பாக எழுத்து அமையாது. நல்ல பதிவு.
  தொடர வாழ்த்துக்கள்//

  ஐயா, தங்களின் இத்தைகைய விரிவானதொரு வாழ்த்து, என் மனதில் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

  இன்றைய மிகவும் டென்ஷன் நிறைந்த வாழ்வு + சமூகப் பொருளாதார பிரச்சனைகளுக்கு இடையே, ஒவ்வொருவரும் கவலை மறந்து, தினமும் சற்று நேரமாவது சிரித்து மகிழ வேண்டும் என்பதே என் படைப்புகள் மூலம் நான் எதிர்பார்ப்பதும்.

  நன்றி, நன்றி, நன்றி ஐயா !

  ReplyDelete
 22. ரிஷபன் said...
  //உங்கள் குறும்புதான் உங்கள் பிளஸ் பாய்ண்ட்.. 50லும் ஆசை வரும் என்று நிரூபித்து விட்டீர்கள்.. 100 ஆண்டு காலம் வாழ்க.. என்று பின்னூட்டி வளர்க்க நாங்க ரெடி.. ஜமாய்ங்க.//

  குடத்திலிட்ட விளக்காக இருந்த என்னை குன்றில் ஏற்றிய குருநாதரல்லவா நீங்கள்!

  உங்களிடம் நான் ஏதும் இதுவரை குறும்புகள் செய்யாமல் நல்ல பிள்ளை என்றே பெயரெடுத்துள்ளேன்.

  இந்தக் என் குறும்புகளெல்லாம் மற்றவர்களுக்கு மட்டுமே.

  தங்கள் வாழ்த்துக்கள் என்னை மேலும் மேலும் சிறப்பாகச் செய்திட உதவும் என்று நம்புகிறேன்.

  எல்லாப் புகழும் உங்களுக்கே. நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 23. என்னை வந்து வாழ்த்தியுள்ள அன்புச் சகோதரர்களான திருவாளர்கள்:
  வேடந்தாங்கல்-கருன்;
  எல்.கே.,;
  ஆர்.வி.எஸ்.,;
  ஆரண்யநிவாஸ் ஆர்.இராமமூர்த்தி;
  கோபி இராமமூர்த்தி;
  அவர்கள் உண்மைகள்;
  கணேஷ்;
  தமிழ்வாசி-பிரகாஷ்;
  சே.குமார் &
  மோஹன்ஜி
  ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 24. என்னை வந்து வாழ்த்தியுள்ள அன்புச் சகோதரிகளான திருமதி சித்ரா அவர்கள்
  திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
  திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்
  திருமதி ஜலீலா கமல் அவர்கள்
  திருமதி அமைதிச்சாரல் அவர்கள்
  ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 25. raji said...
  //வாழ்த்துக்கள் சார்! ஐம்பதாவது பிரசவம் சுகப் பிரசவம் ஆனதில் எனக்கு மகிழ்ச்சி.//

  அருமை மகளே,
  சுகப்பிரசவத்தில் எனக்கும் மகிழ்ச்சியே!

  //ஆனால் ப்ளாக்கி யாரென்பதை முதலிலேயே சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்து ட்விஸ்ட் கொடுத்து இறுதியில் சொல்லியிருக்கலாமோ
  என்று எனக்கு தோன்றியது.இது என் கருத்துதான்//

  அன்பு மகளே!
  அது போல கூட செய்திருக்கலாம். You are Correct.
  I would have consulted you before its release. In future we will discuss & then finalise. OK ?


  //ஆனால் கற்பனையும் உருவகமும் பிரமாதமாக இருந்தது. எழுத்தும் கற்பனையும் உங்களுடன் பிறந்தது. அதை பிறர் மகிழ்வுற பதிவாக்கி யிருக்கிறீர்கள். மிக்க நன்றி.//

  நமக்குள் இப்படி ஓவராக புகழ்ந்து கொள்ளலாமா?
  மிக்க நன்றி வேறா - இலவச இணைப்பு போல !

  //தாலி முடிவு யூகித்து விட்டேன்//

  ராஜின்னா ராஜிதான். மிகவும் யூகமான பெண்.
  சமத்துக்குட்டி.

  ReplyDelete
 26. நான் லேட்டாக வந்துருக்கேன்.வாழ்க்கையில் இத்தனை ஆண்டுகள் அனுபவம் உங்களை இவ்வளவு இளமையாக வைத்திருக்கிறதா?அல்லது இப்பவே இப்படின்னா தங்கள் இளமைக்காலத்திலே பிளாக்கியை திருமணித்திருந்தால் இன்னும் பல நூறு பிரசவமும் பல நூறு நற்குழந்தைகளும் பூமிக்கு வந்திருக்குமேனு யோசிக்கிறேன்.மிக ரசித்தேன் சார்

  ReplyDelete
 27. thirumathi bs sridhar said...
  //நான் லேட்டாக வந்துருக்கேன்.//

  என் அருமைச் சகோதரியே!
  லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்திருக்கீங்க!

  //வாழ்க்கையில் இத்தனை ஆண்டுகள் அனுபவம் உங்களை இவ்வளவு இளமையாக வைத்திருக்கிறதா?/

  ஆமாம் என் உண்மை வயது 61
  உடலளவில் வயது 81
  உள்ளத்திலும் எண்ணத்திலும் என்றுமே 16 தான்.

  //அல்லது இப்பவே இப்படின்னா தங்கள் இளமைக் காலத்திலே பிளாக்கியை திருமணித்திருந்தால் இன்னும் பல நூறு பிரசவமும் பல நூறு நற்குழந்தைகளும் பூமிக்கு வந்திருக்குமேனு யோசிக்கிறேன்.//

  மிகவும் நன்றாகவே யோசிக்கிறீர்கள். சரியாகவே சொல்லி விட்டீர்கள். ஆனால் என் இளமைக் காலத்தில் அவளைத் திருமணிக்க இந்த ப்ளாக்கி பிறக்கவே இல்லையே. ஒரு வேளை அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் கிட்டியிருந்தால் நூற்றுக்கணக்காக என்ன ஆயிரக்கணக்காகவே பிரசவ்மும், நற்குழந்தைகளும் எனக்கு வாரிசாக இருந்திருக்கும். ஆனால் இந்த நம் பூபாரம் தாங்க வேண்டாமா? அதனால் தானோ என்னவோ அதுபோல நடக்கவில்லை. எல்லாம் நன்மைக்கே, சகோதரி.

  //மிக ரசித்தேன் சார்//

  உங்களின் அழகிய பின்னூட்டத்தை நானும் மிகவும் ரசித்தேன். உங்கள் குழந்தை “அம்ருதாக் குட்டியின்” மழலைப் பேச்சு போலவே மிகச் சிறப்பாக உள்ளது.

  உங்களுக்கு என் அன்பு கலந்த வணக்கங்களும், நன்றிகளும்.

  ReplyDelete
 28. ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் சார். குட்டியூண்டு கதையான தாலி நன்றாக இருந்தது. மேலும் பல கதைகளை எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டும்.

  தாமதமாக பின்னூட்டமிடுகிறேன். நான்கைந்து நாட்களாக வலை பக்கம் வர முடியவில்லை.

  ReplyDelete
 29. கோவை2தில்லி said...
  //ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் சார். குட்டியூண்டு கதையான தாலி நன்றாக இருந்தது. மேலும் பல கதைகளை எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டும்.
  தாமதமாக பின்னூட்டமிடுகிறேன். நான்கைந்து நாட்களாக வலை பக்கம் வர முடியவில்லை.//

  வாடிக்கையாளர்கள் இருவரையும் காணவில்லையே என நானும் சற்று கலக்க மடைந்தேன். பிறகு ஏதாவது தவிர்க்க முடியாத காரணமாகத் தான் இருக்கணும் என்றும் நினைத்துக் கொண்டேன்.

  தாமதமானாலும் தங்கள் வருகைக்கும் கருத்துக்களும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள், மேடம்.

  குட்டியூண்டு கதை ‘தாலி’ படு ‘ஜாலி’யாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் கூறுகிறீர்கள். எனக்கும் அதைக் கேட்டதும் மகிழ்ச்சியே. vgk

  ReplyDelete
 30. நாய் கதை நல்ல இருக்கு .முதலில் படித்து கமெண்ட்ஸ் குடுக்க வேண்டும் என்று நினைத்து படித்து முடித்துப் பார்த்தல் கோபமாக வந்தது.கடைசியாக இப்படி comment கொடுக்கும்படி ஆகிவிட்டதே என்று .

  ReplyDelete
 31. ஐ ம் ப தா வ து பிரஸவம்,
  When u had intimated about the title of the story,i thought it as usual that i could be a story. But finally came to know about the wed life between Blog and U.மிகவும் அழகாகவும்,தெளிவாகவும் தங்கள்(BLOG) இல் வாழ்க்கையைப் பற்றி கூறி உள்ளீர்கள்.ஆனாலும் 20 மாதங்கள் உங்களை இப்படி படுத்தி இருக்கக் கூடாது இவள் .

  சற்றும் எதிர்பார்கவில்லை இப்படி ஒரு கதையை.

  ReplyDelete
 32. pls read i could be a story as it could be a story in my previous comment

  ReplyDelete
 33. Girija said...
  //நாய் கதை நல்ல இருக்கு .முதலில் படித்து கமெண்ட்ஸ் குடுக்க வேண்டும் என்று நினைத்து படித்து முடித்துப் பார்த்தல் கோபமாக வந்தது.கடைசியாக இப்படி comment கொடுக்கும்படி ஆகிவிட்டதே என்று .
  March 14, 2011 2:22 AM //

  Thats alright, what is there? Comment is a comment, whether it is given first or last.
  No difference at all for me.

  But sometimes I may not look into it immediately, if it is given at the end, that too at a later stage from its release.

  Girija said...
  //ஐ ம் ப தா வ து பிரஸவம்,
  When u had intimated about the title of the story,i thought it as usual that i could be a story. But finally came to know about the wed life between Blog and U.மிகவும் அழகாகவும்,தெளிவாகவும் தங்கள்(BLOG) இல் வாழ்க்கையைப் பற்றி கூறி உள்ளீர்கள்.ஆனாலும் 20 மாதங்கள் உங்களை இப்படி படுத்தி இருக்கக் கூடாது இவள். சற்றும் எதிர்பார்கவில்லை இப்படி ஒரு கதையை.
  March 14, 2011 2:29 AM
  Girija said...
  pls read i could be a story as it could be a story in my previous comment //

  Thanks a lot for your deep involvement in reading it & comments given.
  அன்புடன், vgk

  ReplyDelete
 34. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா!
  நகைச்சுவையாக இருந்தது உங்களது பதிவு.

  ReplyDelete
 35. ஜிஜி said...
  //ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா!
  நகைச்சுவையாக இருந்தது உங்களது பதிவு.//

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. [தங்களின் பின்னூட்டத்தை இன்று 17.3.11 அன்று தான் பார்த்தேன். தொடர்ந்து வாருங்கள்]

  ReplyDelete
 36. அட! கதை இப்படிப்போகுதா!!!!!!

  அரைச்சதத்துக்கு இனிய பாராட்டுகள்.

  நான் பதிவுலகில் கொஞ்சம் பழைய புள்ளி. ஏழாம் வருசம் நடக்குது.

  நேரம் கிடைச்சால் இங்கே எட்டிப் பாருங்கள். வெறும் 1193 தான் இருக்கு.

  http://thulasidhalam.blogspot.com/

  நீங்க பின்னூட்டம் போடும் ஏழாம்படைவீடு சண்டிகர் முருகனுக்காக ஆரம்பிச்சுக் கொடுத்தது:-)

  ReplyDelete
 37. உங்களின் சொல்லும் திறன் மிக அற்புதம்
  பக்கத்திலிருந்து பேசுவது போலவே ஒரு உணர்வு ,
  மிரளவைக்கும் விஷயங்களும் உங்களின் சரள நடையில் சாத்தியமாகும்
  நன்றி ............ பகிர்ந்தமைக்கு இல்லை பெற்றமைக்கு.

  ReplyDelete
 38. துளசி கோபால் said...
  ///அட! கதை இப்படிப்போகுதா!!!!!!

  அரைச்சதத்துக்கு இனிய பாராட்டுகள்.

  நான் பதிவுலகில் கொஞ்சம் பழைய புள்ளி. ஏழாம் வருசம் நடக்குது.

  நேரம் கிடைச்சால் இங்கே எட்டிப் பாருங்கள். வெறும் 1193 தான் இருக்கு.

  http://thulasidhalam.blogspot.com/

  நான் இன்று 03.06.2011 அன்று தான் தங்களின் இந்தப்பின்னூட்டத்தைப் பார்த்தேன். அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள், மேடம்.

  தங்களின் துளசிதளத்திற்கு பின் தொடர்பவராக என்னை ஆக்கிக்கொள்ள முயன்றேன். அதற்கான Provision இல்லாமல் உள்ளது. நான் என்ன செய்யவேண்டும்? என்று தெரியவில்லை.

  //நீங்க பின்னூட்டம் போடும் ஏழாம்படைவீடு சண்டிகர் முருகனுக்காக ஆரம்பிச்சுக் கொடுத்தது:-)//

  அப்படியா, நான் தங்களுடையதே என்று நினைத்தேன்.
  ===============================
  A.R.RAJAGOPALAN said...
  //உங்களின் சொல்லும் திறன் மிக அற்புதம்
  பக்கத்திலிருந்து பேசுவது போலவே ஒரு உணர்வு ,
  மிரளவைக்கும் விஷயங்களும் உங்களின் சரள நடையில் சாத்தியமாகும்
  நன்றி ............ பகிர்ந்தமைக்கு இல்லை பெற்றமைக்கு.//

  நான் இன்று 03.06.2011 அன்று தான் தங்களின் இந்தப்பின்னூட்டத்தைப் பார்த்தேன். அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள், சார்.

  ReplyDelete
 39. அன்பின் வை.கோ = இந்த வயதிலும் நகைச்ச்சுவை தூக்கலாகவே இருக்கிறது - அருமையான் பதிவு - பிளாக்கி மற்றும் தாலி . பிளாக்கிக்கு ஐம்பதாவது குழந்தையா இது. வாழ்க வளமுடன் . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சீனா ஐயா அவர்களே, வாருங்கள், வணக்கம்.

   //இந்த வயதிலும் நகைச்ச்சுவை தூக்கலாகவே இருக்கிறது //

   அது... எப்போதுமே தூக்கலாகவே தான் இருந்து தொலைக்குது. அடங்கவே மாட்டேங்குதே ஐயா ! ;)))))

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

   Delete
 40. அன்பின் வை.கோ - இன்னிக்குத் தேதிக்கு 311 பிள்ளைகளா ? பலே பலே - குடுக்பக் கட்டுப்பாடுன்னா என்னன்னு தெரியுமா ? ( அது இங்கே தேவை இல்லை ). நடுவுல 2010ல வனவாசம் போயிட்டீங்களோ - ம்ம்ம் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சீனா ஐயா அவர்களே,

   வாருங்கள், வாருங்கள். மீண்டும் வணக்கம்.

   //இன்னிக்குத் தேதிக்கு 311 பிள்ளைகளா? //

   ஆமாம் ஐயா. மை டியர் பிளாக்கியுடன் இசைவாக நான் இல்லறம் நடத்தத் துவங்கிய நாள் 02 01 2011 மட்டுமே.
   இன்றுடன் [13.09.2012 உடன்] 621 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. நாளைய பொழுது விடிந்தால் 622 நாட்கள்.

   622 நாட்களில் [என்னாலும் மை டியர் ப்ளாக்கியாலும்] 311 குழந்தைகளை மட்டுமே பிரஸவித்துத் தர முடிந்துள்ளது.

   அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் ஒரு குழந்தையை பிரஸவிக்க முடிந்துள்ளது.

   எல்லாம் தங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதங்கள்.

   311 குழந்தைகள் 622 நாட்கள் [311x2=622] கணக்கு சரியா?

   தினமும் முடியவில்லை ஐயா! ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டும் தான். நமக்கும் வயசாச்சோல்யோ! ;)))))

   -oOo-


   தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

   என்றும் அன்புடன் தங்கள்
   VGK

   Delete
 41. /இதுவரை என்னிடமும் என் பிளாக்கியிடமும், ஒரே கோபமாக இருந்த என் மாமியார் மாமனாராகிய இன்ட்லியும், தமிழ்மணமும், எங்கள் வீட்டுக்கு முதன் முதலாக, ஒரு வாரம் முன்பு வந்து இறங்கியதில், எங்கள் இருவருக்குமே ஒரு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. //

  ஆஹா மாமனார் மாமியார் பிரச்சினை ..விழுந்து புரண்டு சிறக்க வைத்தது :))சீர் பட்சணம் எல்லாம் தந்தார்களா :)) விடாதீங்க மாப்பிள்ளை முறுக்கு முக்கியம் :))

  ReplyDelete
  Replies
  1. angelin October 3, 2012 3:03 AM

   ****இதுவரை என்னிடமும் என் பிளாக்கியிடமும், ஒரே கோபமாக இருந்த என் மாமியார் மாமனாராகிய இன்ட்லியும், தமிழ்மணமும், எங்கள் வீட்டுக்கு முதன் முதலாக, ஒரு வாரம் முன்பு வந்து இறங்கியதில், எங்கள் இருவருக்குமே ஒரு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது.****

   //ஆஹா மாமனார் மாமியார் பிரச்சினை ..விழுந்து புரண்டு சிரிக்க வைத்தது :))சீர் பட்சணம் எல்லாம் தந்தார்களா :)) விடாதீங்க மாப்பிள்ளை முறுக்கு முக்கியம் :))//

   சீர் பட்சணம்? ஆஹா, எல்லாம் உங்களைப்போன்றவர்களின் பின்னூட்டங்கள் மட்டுமே, சீர் பட்சணத்தையும் விட சிறப்பானவை. அதனால் அவர்களிடம் ஒன்றும் கேட்கவில்லை.

   பிளாக்கியை கஷ்டப்பட்டுப் பெற்று வளர்த்து, பதமாக இதமாக அனுபவிக்கத் தந்தவர்களிடம் மாப்பிள்ளை முறுக்கினைக் காட்டலாமா? டோட்டல் சரண்டர் தான்.
   விபீஷண சரணாகதி தான். ;)))))

   அன்பின் நிர்மலா, தங்களின் அன்பான வருகையும், அழகான நகைச்சுவைக்கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்வளித்தன. மனமார்ந்த நன்றிகள்.

   பிரியமுள்ள
   கோபு

   Delete
 42. தாலி //
  லைசன்சா :))
  இங்கே பூனை நாய் எல்லாவற்றுக்கும் இப்ப இருக்கு ..கானமல்போனாலும் கண்டுபிடிக்க ஏதுவாயிருக்கும்

  ReplyDelete
  Replies
  1. angelin October 3, 2012 3:05 AM
   தாலி //
   லைசன்சா :))

   ஆமாம். அதுவே இதில் சஸ்பென்ஸும் ;)))))

   //இங்கே பூனை நாய் எல்லாவற்றுக்கும் இப்ப இருக்கு .. காணாமல் போனாலும் கண்டுபிடிக்க ஏதுவாயிருக்கும்//

   சூப்பர் !

   மிக்க நன்றி, நிர்மலா.

   Delete
 43. // “ப்ளாக்கி”//

  அவ்வ்வ்வ்வ் Black girls(கறுப்பின மக்கள்)) அடிக்க வரப்போகினம்... கோபு அண்ணன் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளியுங்கோ:).

  ReplyDelete
  Replies
  1. athira October 22, 2012 3:06 PM
   // “ப்ளாக்கி”//

   அவ்வ்வ்வ்வ் Black girls(கறுப்பின மக்கள்)) அடிக்க வரப்போகினம்... கோபு அண்ணன் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளியுங்கோ:).//

   வாங்கோ அதிரா. காலை வணக்கங்கள்.

   நேற்று இரவு முழுவதும் தொடர்ச்சியாக பலத்த மழை - இடியுடன் கூடவே.

   [உங்களின் இடைவிடாத பின்னூட்ட மழையைத் தான் சொல்கிறேன். ”மூக்குத்தி” + ”கத்தி” ]

   இடி என்பது அதில் உள்ள நகைச்சுவை
   [அதாவது நமக்கு மட்டுமே தெரிந்த வைர நகைச்சுவை.]

   உங்களுக்கான பின்னூட்டத்திற்கான பதில்களை உங்களைப்போலவே கட்டிலுக்கு அடியே உள்ள பதுங்குக்குழியில் ஒளிந்து கொண்டு தான் எழுதி
   வருகிறேன். யாருக்கும் தெரியக்கூடாதோல்யோ! ;)))))

   பிரியமுள்ள
   கோபு அண்ணா


   Delete
 44. இப்போது எங்களுக்குள் கல்யாணம் என்ற இணைப்பு ஏற்படுத்திக் கொண்ட பிறகும் கூட “பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா... அவர் பழக்கத்திலே... குழந்தையைப்போல் ஒரு அம்மாஞ்சி ராஜா.....” என்ற பாட்டுப் போலத்தான் ஆகிவிட்டது எங்கள் இல்வாழ்க்கையும். ///

  ஹா..ஹா..ஹா.. 1973 இல ஒரு திருமணம்.. பின்பு 2009 இல் இரண்டாம் திருமணமோ?:)).. இது சரிவராது,,... பிரித்தானியக் ஹை கோர்ட்டில வழக்குப் போடப்போறேன்ன்ன்... முதல் மனைவி இருக்க... 2ம் தடவையாக... வாணாம் நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன் ஜாமீஈஈஈஈஈ.. ஏனெண்டால் மீ ரொம்ப நல்ல பொண்ணு:) சிக்ஸ் வயசிலிருந்தே:).

  ReplyDelete
  Replies
  1. athira October 22, 2012 3:11 PM
   *****இப்போது எங்களுக்குள் கல்யாணம் என்ற இணைப்பு ஏற்படுத்திக் கொண்ட பிறகும் கூட “பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா... அவர் பழக்கத்திலே... குழந்தையைப்போல் ஒரு அம்மாஞ்சி ராஜா.....” என்ற பாட்டுப் போலத்தான் ஆகிவிட்டது எங்கள் இல்வாழ்க்கையும்.*****

   //ஹா..ஹா..ஹா.. 1973 இல ஒரு திருமணம்.. பின்பு 2009 இல் இரண்டாம் திருமணமோ?:)).. இது சரிவராது,,...//

   1973 இல்லை. 03.07.1972 நேக்கு அப்போது 21. என்னவளுக்கு அப்போது ஸ்வீட் 17-18. ஜாலி டேய்ஸ் ;)

   //பிரித்தானியக் ஹை கோர்ட்டில வழக்குப் போடப்போறேன்ன்ன்... முதல் மனைவி இருக்க... 2ம் தடவையாக... //

   முதல் மனைவிதானே வழக்கு போடணும். நீங்க எப்படி போடமுடியும்? ஹஹ்ஹாஹ்ஹஹ்ஹா ............
   அவள் சார்பிலோ?????? போடுங்கோ போடுங்கோ.;)))

   //வாணாம் நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன் ஜாமீஈஈஈஈஈ.. ஏனெண்டால் மீ ரொம்ப நல்ல பொண்ணு:) சிக்ஸ் வயசிலிருந்தே:).//

   ஏற்கனவே இதுக்கு நான் பதில் கொடுத்துட்டேன். உங்களுக்குக்கூட என் மீது பொய்க்கோபம் வந்ததூஊஊஊ.
   கீழே [அடியில்] Reference கொடுத்திருக்கேன்.
   -=-=-=-=-=-
   http://gokisha.blogspot.in/2012/10/blog-post_5886.html
   ”சந்தோசம்” பின்னூட்ட எண்கள் 81, 87, 91, 194 + 202 முதலியன

   -=-=-=-=-=-
   ஏனெண்டால் மீ
   ரொம்ப நல்ல பொண்ணு
   6 வயசிலிருந்தே:).//

   அப்போ கடந்த 10
   வருஷமாவே
   ரொம்ப நல்ல
   பொண்ணுன்னு
   தெரியுதே.

   இப்போ மிஞ்சிமிஞ்சிப்போன
   ஒரு 15 அல்லது 16 தானே
   இருக்கும் உங்களுக்கு.

   வாழ்த்துகள்.

   கீப் இட் மேலே
   அதாங்க உங்க
   கொப்பி வலது+இடது
   KEEP IT UP.

   108 வயது ஆகும் வரை
   நல்ல பொண்ணாகவே
   இருக்கக்கடவது.

   ததாஸ்து.

   பிரியமுள்ள
   கோபு அண்ணா
   -=-=-=-=-=-=-

   மீ இப்போ “சுவீட் 16” எல்லே? உங்களுக்கு என்னைப் பற்றி ஒண்டுமே தெரியாதுபோல:)) போகப் போகத்தான் அறிவீங்கள்:).. BY ATHIRA

   -=-=-=-=-=-=-

   அட வயசுலே என்னங்க இருக்கு?
   உங்களுக்கு 16 ஓ 61 ஓ அல்லது இரண்டுக்கும் சராசரியாக 38 புள்ளி அஞ்சோ [அஞ்சு அல்ல அஞ்சோ ;)] அதை விடுங்கோ. BY GOPU

   -=-=-=-=-=-=-=-

   இது தேவையோ:)).. இது தேவையோ:)).. கோபு அண்ணனுக்கு உந்தக் கணக்குப் பார்க்கும் வேலையெல்லாம் தேவையோ?:)) ஹையோ கறிபன் கான்சல்ட்:))).
   BY ATHIRA

   -=-=-=-=-=-=-=-

   பிரியமுள்ள
   கோபு அண்ணா

   Delete
  2. ஹா..ஹா..ஹா..... மீண்டும் மீண்டும் படித்துச் சிரிக்கத் தூண்டுது.. பின்னூட்டங்கள்... ஆனா என்ன சொன்னாலும்.. நான் வழக்குப் போடுறது போடுறதுதான்.. ஆன்ரியின் மொபைல் நம்பரை தாங்கோ:)).. ஐ மீன் 1972 இல சுவீட் 17 இல் இருந்தவவின்:) நம்பரைக் கேட்டேன்:)... ஹையோ ஏன் எனக்கு இப்பூடிக் கை ரைப்படிக்குது:)).. சே..சே.. அது குளிரிலதான் வேறொன்றுமில்லை:).

   Delete
  3. //athira October 24, 2012 5:10 AM
   ஹா..ஹா..ஹா..... மீண்டும் மீண்டும் படித்துச் சிரிக்கத் தூண்டுது.. பின்னூட்டங்கள்...//

   எனக்கும் அப்படியே தான். இங்கும் உங்கள் பதிவுகளிலும்.
   பதிலுக்கு பதில் எழுதிக்கொண்டே போகணும்னு தான் எனக்கும் ஆசையாக இருக்கும்.

   இருப்பினும் எதற்கு வீண் வம்பு என என்னை நானே மிகவும் கட்டுப்படுத்திக்கொள்வேன்.

   //ஆனா என்ன சொன்னாலும்.. நான் வழக்குப் போடுறது போடுறதுதான்..//

   ஆஹா! நான் என்ன சொல்லித்தடுத்தாலும், அதை வைரத்தோடுபோல நினைத்து காதில் போட்டுக்கொள்ளாமல், நீங்களே ’போ டு ற து ன் னு’ முடிவு செய்துட்டீங்க. போச்சு, போச்சு, நான் மாட்டினேன் ..... ஜாமீஈஈஈஈ

   தொடரும்.....

   Delete
  4. //ஆன்ரியின் மொபைல் நம்பரை தாங்கோ:)).. ஐ மீன் 1972 இல சுவீட் 17 இல் இருந்தவவின்:) நம்பரைக் கேட்டேன்:)... //

   ஆஹா, அங்கு போய் இங்கு போய் கடைசியில் என் அடிமடியிலேயே கை வைக்கப்பார்க்கிறீங்களே!

   NO .. NO ;( அது மட்டும் நடக்கவே நடக்காது.

   அதை மட்டும் நான் தரவே மாட்டேன்.

   [ஐ மீன் .... அடிமடியை அல்ல,
   ஆன்ரியின் மொபைல் நம்பரைத்தான் சொல்றேன்]

   தொடரும்.....

   Delete
  5. //ஹையோ ஏன் எனக்கு இப்பூடிக் கை ரைப்படிக்குது:))..

   எனக்கும் அப்படியே தான் .... ஏன்னே தெரியலைங்கோ.

   //சே..சே.. அது குளிரிலதான் வேறொன்றுமில்லை:).//

   அதே அதே சபாபதே (அதிரபதே!) ;)))))) ததாஸ்து.

   பிரியமுள்ள
   கோபு அண்ணா

   Delete
 45. என்னை, எங்காவது தற்செயலாகப் பார்க்கும் போதெல்லாம், நண்பர் ரிஷபன் அவர்கள் ”என்னாச்சு ... ஏதாவது விசேஷமுண்டா, எப்போ உங்களின் புது ரிலீஸ்” என்று கேட்பார்கள்.

  புதிதாகக் கல்யாணம் ஆனவர்களைப் பார்த்து, எல்லோருமே அப்படித் தானே கேட்பார்கள் ?//

  ஹா..ஹா..ஹா.. என்ன கொடுமை முருகா?:)

  ReplyDelete
  Replies
  1. athira October 22, 2012 3:13 PM
   *****என்னை, எங்காவது தற்செயலாகப் பார்க்கும் போதெல்லாம், நண்பர் ரிஷபன் அவர்கள் ”என்னாச்சு ... ஏதாவது விசேஷமுண்டா, எப்போ உங்களின் புது ரிலீஸ்” என்று கேட்பார்கள்.

   புதிதாகக் கல்யாணம் ஆனவர்களைப் பார்த்து, எல்லோருமே அப்படித் தானே கேட்பார்கள்?*****

   //ஹா..ஹா..ஹா.. என்ன கொடுமை முருகா?:)//

   ரொம்பக்கொடுமைதான் அதிரா ?
   [வள்ளி+தெய்வானையுடன் முருகன் இங்கு எதற்கூஊஊ ]

   பிரியமுள்ள
   கோபு அண்ணா

   Delete
 46. நான் என் ப்ளாக்கியைத் தொட்டுத் தாலி கட்டாமல் பதிவுத் திருமணமல்லவா செய்து கொண்டுள்ளேன். அதில் என்னைவிட என் மை டியர் ப்ளாக்கிக்கு ரொம்பவுமே வருத்தம் உண்டு.
  ////

  அப்போ 12 பவுனில ஒரு தாலியைக் கட்டலாமே:)).. பூஸ் எஸ்ஸ்:))

  ReplyDelete
  Replies
  1. athira October 22, 2012 3:22 PM
   *****நான் என் ப்ளாக்கியைத் தொட்டுத் தாலி கட்டாமல் பதிவுத் திருமணமல்லவா செய்து கொண்டுள்ளேன். அதில் என்னைவிட என் மை டியர் ப்ளாக்கிக்கு ரொம்பவுமே வருத்தம் உண்டு.*****

   //அப்போ 12 பவுனில ஒரு தாலியைக் கட்டலாமே:))..
   பூஸ் எஸ்ஸ்:))//

   12 பவுனிலா? கழுத்து வலிக்குமே!

   [மேலும் அது ஒரெயடியாகத் தொங்கி கீழே பள்ளத்தாக்கில் புண்ணாக்கி தொல்லை கொடுக்காதா ? வேண்டாம். இந்த ஆலோசனைகள் இப்போது கொடுக்காதீங்கோ! ப்ளீஸ் ]

   Delete
 47. மொத்தத்தில பிளாக்கியும் சூப்பர்.... தாலியும்.. சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. athira October 22, 2012 3:24 PM
   //மொத்தத்தில பிளாக்கியும் சூப்பர்.... தாலியும்.. சூப்பர்.//

   அன்பின் அதிரா,

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நகைச்சுவையான கருத்துக்களுக்கும், இந்த என் பதிவினை மேலும் கலக்லப்பாக்கி சிறப்பித்துள்ளதற்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

   பிரியமுள்ள
   கோபு அண்ணா

   Delete
 48. உங்க பதிவு மனைவி ப்ளாக்கி உங்களை எப்படி சமாளிச்சுக்கராங்க. அவங்களுக்கு சிரிச்சு சிரிச்சு பல்லெல்லாம் சுளிக்கிக்க போகுது. தாலி வேற சிரிச்சு சிரிச்சு முடியல்லே. மாமியார் மாமனார் சூப்பர் செலக்‌ஷன். வரிக்கு வரி இப்படியா சிரிக்க வைப்பீங்க. வயித்துவலி மாத்திரை பார்சல் ப்ளீஸ்?

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் January 15, 2013 at 9:18 PM

   //உங்க பதிவு மனைவி ப்ளாக்கி உங்களை எப்படி சமாளிச்சுக்கராங்க.//

   ’பழகப்பழக பாலும் புளிக்கும்’ன்னு சொல்லுவாங்களே! அதுபோல இப்போதெல்லாம், ஏதோ நான் தான் அவளை, தட்டிக்கொடுத்து ஒரு வழிய சமாளிச்சிட்டு வருகிறேன்.

   //அவங்களுக்கு சிரிச்சு சிரிச்சு பல்லெல்லாம் சுளிக்கிக்க போகுது.//

   சிரிப்பா? அப்படின்னா கிலோ என்ன விலை? என்று கேட்கும் சுபாவம் அவளுக்கு.

   //தாலி வேற சிரிச்சு சிரிச்சு முடியல்லே.//

   நன்றி, ”நீ சிரிச்சா தீபாவளி”ன்னு ஒரு பாட்டு உண்டு. அது மாதிரி நீங்க சிரிச்சதும் தீபாவளி தான். மகிழ்ச்சி. ;)

   //மாமியார் மாமனார் சூப்பர் செலக்‌ஷன்.//

   இப்போ அவங்க ரெண்டு பேரும் போய்ச்சேர்ந்துட்டாங்கோ.
   மண்டையப்போட்டுட்டாங்கோ.

   அதைப்பற்றி விரிவாக 13 பின்னூட்டங்கள் இன்று காலை ஒருவருக்கு கொடுத்துள்ளேன்.

   இணைப்பு:

   http://tthamizhelango.blogspot.com/2013/01/1-100-traffic-rank-2012.html

   அவசியமா நீங்க அதைப்போய் படிச்சுப்பாருங்கோ. வலையுலகுக்குப் புதியவராகிய உங்களுக்கும் அப்போதுதான் சில விஷயங்கள்/மர்மங்கள் நன்றாகப்புரியவரும்.

   //வரிக்கு வரி இப்படியா சிரிக்க வைப்பீங்க.//

   நான் உங்களை சிரிக்க வைத்தேனா? நான் உங்களை இன்னும் பார்த்ததே இல்லைங்கோ. அநியாயமாக என் மீது அபாண்டமாகப் பழி போடுவதே உங்கள் வேலையாப்போச்சு.;)

   //வயித்துவலி மாத்திரை பார்சல் ப்ளீஸ்?//

   http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html

   இந்த என் மேற்படி பதிவிலே ஒரு ஆஸ்பத்தரி உள்ளது; அங்கே போங்கோ! உடனே மாத்திரை தருவாங்கோ.

   பிரியமுள்ள
   VGK

   Delete
 49. ஐம்பதாவது பிரசவத்தைப் படித்தேன், ரசித்தேன்.

  ReplyDelete
 50. //ஸ்ரீராம்.July 21, 2013 at 8:10 AM
  ஐம்பதாவது பிரசவத்தைப் படித்தேன், ரசித்தேன்.//

  வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

  தங்களின் அன்பான வருகைக்கும், ‘படித்தேன், ரசித்தேன்’ என்ற அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

  ReplyDelete
 51. தாலி கட்டாத மனைவி பேர்லயே இவ்வளவு பாசம்னா.........

  ReplyDelete
 52. //நாளையே கூட மீண்டும் நம் எலி வேட்டைத் தொடரலாம் !
  ஜாக்கிரதை!
  இப்போதே சிரிக்கத் தயாராகி விடுங்கள் ! //

  இப்ப இதுக்கு சிரிக்கறதா, இல்ல அதுக்கு சிரிக்கறதா?

  ஐம்பதாவது (இல்லை, இல்லை) ஐம்பது பிரசவங்களும் சுகப்பிரசவமானதுக்கு வாழ்த்துக்கள்.

  வாலாம்பா மன்னிக்கு போட்டியா? இதை அனுமதிக்கவே முடியாது. சின்ன வீடே கதின்னு இருக்காம சமத்தா இருங்கோ

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya April 23, 2015 at 7:16 PM

   //மன்னிக்கு போட்டியா? இதை அனுமதிக்கவே முடியாது. சின்ன வீடே கதின்னு இருக்காம சமத்தா இருங்கோ//

   OK .... JAYA ! :)

   Delete
 53. ஏற்கனவே என் பின்னூட்டம் இருக்கு. அப்படியும் மறுபடியும் வந்துட்டேன் உங்க நகைச்சுவை உணர்வை பின்னூட்டம் போடுர எல்லாருக்குமே கடத்திட்டீங்க. உங்க பதிவு கூடவே பின்னூட்டங்களையும் படிச்சுடுவேனாக்கும்

  ReplyDelete
 54. பெண்களுக்கு ப்ளாக்கர் இஷ்டம் என்றால் ஆணுக்கு ப்ளாக்கி இஷ்டம். ஆரம்பமே அசத்தல்.. ப்ளாக்கி – நாமகரணம் ரசனை. வரிக்கு வரி நகைச்சுவைத் தூவல். புதிதாய் திருமண பந்தத்தில் இணைந்த அப்பாவி கணவனுக்கும் அம்மாஞ்சி மனைவிக்குள்ளும் எழும் அத்தனை ரசாபாசங்களையும் மிக அழகாக ப்ளாக்கியோடு ஒப்பிட்டு எழுதியது தங்கள் கற்பனைத் திறத்துக்கும் நகைச்சுவைக்கும் நல்ல சான்று. ஐம்பதாவது பிரசவம் படு அபாரம். பாராட்டுகள் கோபு சார்.

  ReplyDelete
 55. சார் என் முதல் பின்னூட்டம் உங்க பதிவுக்குத்தான்.என்னமாஆஆஆஆஆஆ எழுதுறீங்க.ரொம்பவே ரசிச்சு படிச்சேன். வரிக்கு வரி பின்னூட்டம் போட ஆசைதான். ஏதாவது அதிகபிரசங்கிதனமா ஆயிடுமோன்னு ஒரு பயம்.

  ReplyDelete
  Replies
  1. mehrun niza June 30, 2015 at 11:13 AM

   வாங்கோ, வணக்கம்.

   //சார் என் முதல் பின்னூட்டம் உங்க பதிவுக்குத்தான். என்னமாஆஆஆஆஆஆ எழுதுறீங்க. ரொம்பவே ரசிச்சு படிச்சேன்.//

   என் வலைத்தளத்தினில் தங்களின் இன்றைய முதல் வருகைக்கும், ’மிகவும் ரசித்துப் படிச்சேன்’ என்று சொல்வதற்கும் மிக்க மகிழ்ச்சி மேடம். மிக்க நன்றி மேடம்.

   //வரிக்கு வரி பின்னூட்டம் போட ஆசைதான். ஏதாவது அதிகபிரசங்கிதனமா ஆயிடுமோன்னு ஒரு பயம்.//

   அதனால் பரவாயில்லை மேடம். புரிந்து கொண்டேன். இதுபோன்ற பொது இடங்களில், பலரின் பார்வைகளில், எப்போதும் நாம் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே, என்றைக்கும் நமக்கு நல்லது.

   மீண்டும் தங்களுக்கு என் நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 56. ஐய்யோடா 50--வதா. தாங்காதய்யா தாங்காது.

  ReplyDelete
  Replies
  1. mru October 10, 2015 at 1:04 PM
   //ஐய்யோடா 50--வதா. தாங்காதய்யா தாங்காது.//

   :)))))))))) :)))))))))) :)))))))))) :)))))))))) :)))))))))) 50 SMILY !

   Delete
 57. ப்ளாக்கருக்கு பெண்பால் ப்ளாக்கியா. சூப்பர். தாலிகட்டாம பின்ன லிவிங்க் டுகெதரா. அதுலயும்50---வது பிரசவமா. அப்போ தாலி கட்டினவங்களுக்கு எவ்வளவு பிரசவ வேதனை கொடுத்தீங்க? .

  ReplyDelete
 58. பிளாக்கியும் ஒரு குடும்ப உறுப்பினர்தானே...அதுக்கும் நம்ம வாத்யாரோட சிச்சுவேஷனல் சாங்கா...ஓக்கே

  ReplyDelete
 59. //

  மிகக்குறுகிய காலத்தில் நான் இப்போது அபார சம்சாரியாகி விட்டேன்.
  இந்த ஐம்பதாவது பிரஸவத்தை மட்டும் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று, இதுவரை என்னிடமும் என் பிளாக்கியிடமும், ஒரே கோபமாக இருந்த என் மாமியார் மாமனாராகிய இன்ட்லியும், தமிழ்மணமும், எங்கள் வீட்டுக்கு முதன் முதலாக, ஒரு வாரம் முன்பு வந்து இறங்கியதில், எங்கள் இருவருக்குமே ஒரு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது.

  இந்த எங்களின் வெற்றி எல்லாவற்றிற்குமே உங்கள் அன்பான (பின்னூட்டம் என்கிற) ஆசீர்வாத அக்ஷதைகளே காரணம் என்பதை நானும் என் ப்ளாக்கியும் நன்கு அறிவோம். அதற்காக எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள் ..... அதுவும் இதை வாசிக்கும் உங்களுக்கு மட்டுமே!.//
  நன்றி! நன்றி! நன்றி! ஐயா

  ReplyDelete
 60. ஐம்பது பிரசவங்களுமே....சுகப்பிரசவம்தானா.... ஸிஸேரியன்கேஸ் ஏதும் கிடையாதா.... 20..... மாதங்களுக்கு தொடக்கூடா...
  விடாதவங்களை சரியாகவே பழி வாங்கிட்டீங்களே.. உடம்பு தாங்கிச்சா.... அவங்களுக்கு.... மாமியார்...மாமனார்லாம் உங்கள் ஏதும் கண்டிக்காமல் விட்டாங்களா.......தாலிகட்டி... திருமணமோ... பதிவு திருமணமோ....மேற்கொண்டு நடக்கவேண்டியதெல்லாம்...... அமர்க்களமாக நடந்திருக்கே.... அதுதானே முக்கியம்..... தாலி கதையும் ஷார்ட்& ஸ்வீட்.... பின்னூட்டங்களில் எல்லாருமே...... குறிப்பாக அதிரா.....அவங்க செம கெத்து.....உங்க ரிப்ளை கமெண்டோ.... கேக்கவே வேண்டாம்... செம..... ஜாலியான பதிவு.....

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... April 22, 2016 at 7:04 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஐம்பது பிரசவங்களுமே....சுகப்பிரசவம்தானா.... ஸிஸேரியன்கேஸ் ஏதும் கிடையாதா....//

   எல்லாமே மிகச்சுலபமான சுகப்பிரஸவங்கள் மட்டுமே.

   //20..... மாதங்களுக்கு தொடக்கூடா...//

   20 நிமிடங்களுக்குக்கூட என்னால் தொடாமல் இருக்க முடியாதே :)

   //விடாதவங்களை சரியாகவே பழி வாங்கிட்டீங்களே.. உடம்பு தாங்கிச்சா.... அவங்களுக்கு....//

   சூப்பரான .... நாட்டுக்கட்டை .... நல்லா தாங்கிச்சு.
   இருவருக்கும் ஒரே ஜாலி மூட் அல்லவா ! அதனால் ஒரு பிரச்சனைகளுமே இல்லை எங்களுக்குள். எல்லாமே சுபமே

   //மாமியார்...மாமனார்லாம் உங்கள் ஏதும் கண்டிக்காமல் விட்டாங்களா.......தாலிகட்டி... திருமணமோ... பதிவு திருமணமோ....மேற்கொண்டு நடக்கவேண்டியதெல்லாம்...... அமர்க்களமாக நடந்திருக்கே.... அதுதானே முக்கியம்..... //

   அதெல்லாம் .... தாலி கட்டாமலேயே, பதிவுத் திருமணம் செய்யாமலேயேகூட அமர்க்களமாக நடத்திக்கொள்ளலாம். இது விஷயத்தில் இருவர் மனதும் இணங்கி வந்தால் போதுமே. :)

   மாமியார் + மாமனார் இருவரும் இதுபோலவே அவர்கள் ஜோலியைக் கவனிக்கப்போய் இருப்பார்களாக இருக்கும். :)

   //தாலி கதையும் ஷார்ட் & ஸ்வீட்.... பின்னூட்டங்களில் எல்லாருமே...... குறிப்பாக அதிரா.....அவங்க செம கெத்து.....உங்க ரிப்ளை கமெண்டோ.... கேக்கவே வேண்டாம்... செம..... ஜாலியான பதிவு.....//

   அதிரடி அதிரா நம் மின்னலு முருகுவுக்கு அக்கா மாதிரி. சும்மா புகுந்து விளாசிடுவாள். மிகவும் ஜாலி டைப் அவங்க. இப்போதெல்லாம் பதிவுப் பக்கமே காணும். ஃபேஸ்புக்கம் பக்கம் போயிட்டாங்க எனக் கேள்விப்படுகிறேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete