என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 13 மார்ச், 2011

*வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 2]




மறுநாள் காலை கேண்டீனில் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்த என் அருகில் சூடான காஃபியை ஆற்றியபடியே, பேரெழுச்சியுடன் வந்தமர்ந்த வ.வ.ஸ்ரீ. யை, வணக்கம் சொல்லி வரவேற்றேன்.   

“என்ன சார், நேற்று உங்களை பார்க்க முடியவில்லை.  திடீரென்று லீவு போட்டுட்டீங்களே!” என்றேன்.

இந்த தமிழ்நாடு எலெக்‌ஷன் முடியற வரைக்கும் எனக்கு ரெஸ்டே கிடையாது தம்பி.   அடிக்கடி லீவு போடுவேன்.  234 தொகுதிகளுக்கும் போய்ப் பலபேரை சந்திக்கணும்.  ஆற்றவேண்டிய கட்சிப்பணிகள் நிறையவே இருக்குப்பா” என்றார்.   

”நீங்க அப்போ எந்தக்கட்சி சார்” என்றேன் அப்பாவித்தனமாக.

இடது கை விரல் நுனியில் பொடிடப்பாவை வைத்துக்கொண்டு, வலதுகை ஆள்காட்டி விரலால் அதன் தலையில், மிருதங்க வித்வான் போல தட்டியவாறே, என்னை ஒரு விஷமப்பார்வை பார்த்து மீண்டும் பேசலானார். 

”ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று எல்லாப்பயல்களும் நான் எங்கே போறேன், யாரை சந்திக்கிறேன், அடுத்து என்ன செய்யப்போறேன்னு, ஒற்றர்படையை நியமித்து, என்னையே தொடர்ந்து நோட்டம் விடுகிறார்களப்பா. இந்தப்பத்திரிக்கைக்காரர்கள் தொல்லையும் தாங்கவே முடியாமல் இருக்குப்பா” என்றார்.

“நீங்களோ ஆளுங்கட்சியும் இல்லை, எதிர் கட்சியும் இல்லை என்று தெரிகிறது.  பிறகு எதற்கு சார் உங்களை அவர்கள் ஃபாலோ பண்ணனும்”  என்றேன்.

“நான் யார், என் பவர் என்ன என்பது எதுவும் தெரியாமல், வழுவட்டைத்தனமாக இப்போது என்னை எதுவும் கேட்காதே, போகப்போக உனக்கே எல்லாம் தெரியவரும். அது சரி,  நேற்று ஆபீஸில் ஏதும் விசேஷமுண்டா” என்று கேட்டு பேச்சை மாற்றினார் வ.வ.ஸ்ரீ.

”பொடிட்டின்னுக்காக பலபேர் உங்களைத்தேடி வந்தாங்க சார்;  மேனேஜர் சார் உங்கள் சீட்டுப்பக்கம் இரண்டு முறை வந்து, ஏதோ ஃபைல்கள் பேப்பர்களைத் தேடிட்டுப்போனார், சார்; வேறு எதுவும் விசேஷமில்லை சார்” என்றேன்.

”இந்தப்புதிய மேனேஜர் பயலிடம் நான் ஸ்ட்ரிக்ட்டாவே சொல்லிப்புட்டேன். இந்த எலெக்‌ஷன் முடியற வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று.அப்படியும் அவன் என் சீட்டுக்கு வந்து ஏதோ நோண்டிவிட்டுப்போனானா?   ஏற்கனவே இங்கிருந்து டிரான்ஸ்பரில் போன மேனேஜர்பயல் V V என்றால் புதிதாக வந்துள்ள இவன் S V V யாக இருப்பான் போலிருக்கு” என்றார், வ.வ.ஸ்ரீ.(V.V= வழுவட்டை;  S.V.V = சூப்பர் வழுவட்டை) 

”சார், என்ன இருந்தாலும் அவர் நம் மேனேஜர் இல்லையா, மேனேஜர் பயல்ன்னு மரியாதை குறைவா சொல்லுறீங்களே” என்றேன் நான்.   (அவர் வாயைக்கிளறி அவரை ஏதாவது பேச வைத்து, அந்தப்பேச்சில் அப்படியே சொக்கிப்போய் மயங்குவதில் தான் எனக்கு ஒரு தனி இன்பம் ஆயிற்றே!)

“புதிதாக டிரான்ஸ்ஃபர் ஆகி வந்துள்ள இந்த மேனேஜர்பயல் என் சின்னப்பையனை விட வயதில் ரொம்பவும் சின்னவன் தெரியுமோ; அவன் வயசைப்போல ஒண்ணரை மடங்கு இந்த நிறுவனத்தில் நான் சர்வீஸே போட்டாச்சு தெரியுமோ;இந்த ஆபீஸில் சீனியர் ஆபீஸ் சூப்பிரண்டெண்டான நான், என் 41  வருஷ சர்வீஸில் இவனைப்போல எவ்வளவு மேனேஜர்பயலுகளைப் பார்த்திருப்பேன் தெரியுமோ?” என்றார் வ.வ.ஸ்ரீ.

சரி சார், நாழியாச்சு, நாம கேண்டீனிலிருந்து புறப்பட்டு நம் சீட்டுக்குப் போவோமா என்று கேட்டபடியே எழுந்து கொண்டேன்.   அவரும் பொடியை ஒரு சிட்டிகை இழுத்து விட்டு, ஒருவழியாக என்னுடன் எழுச்சியுடன் கிளம்பினார். அவரை அப்படியே பேசவிட்டால் சாயங்காலம் ஆபீஸ் முடியும் வரை கேண்டீனிலேயே என்னுடன் பேசிக்கொண்டே இருந்திருப்பார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

இந்த மூக்குப்பொடி போடும் ஆசாமிகள் சற்று தள்ளி நின்று பொடி போட்டாலே நமக்குத்தும்மல் வந்துவிடும் போது, அவர்களால் எப்படிப் பொடியை கணிசமான அளவில் விரல்களால் எடுத்துக்கொண்டு, **வேட்டுக்குழாயில் கந்தகம் அடைப்பது போல**, மூக்கினுள் அடைத்து, சர்ரென்று ஒரே இழுப்பாக இழுத்து, தும்மாமல் இருக்க முடிகிறது என்று எனக்கு அடிக்கடி ஒரு சந்தேகம் வருவதுண்டு.  ஒரு நாள் நம் வ.வ.ஸ்ரீ. அவர்களிடமே துணிந்து இது பற்றிக் கேட்டு விட்டேன்.  

அதற்கு அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

“பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
  மற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார்”

என்று நீ கேள்விப்பட்டதில்லையா என்றார்.

(திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் பள்ளியில் பலமுறை பரிசுகள் வென்ற எனக்கு,  இந்தக்குறள் மட்டும் ஏனோ மறந்து விட்டது போலிருக்கு)

இந்த விசித்திரக் குறளைக்கேட்டு அவரை ஆச்சர்யத்துடன் நான் நோக்குகையில் அவரே தொடர்ந்து பேசலானார்.

“தம்பி, பொடிட்டின் நிறைய பொடியை அடைத்தாலும் அந்தப்பொடிட்டின் தும்மல் போட்டுப் பார்த்திருக்கிறாயா நீ...”  என்றார். 

“இல்லையே சார்,  அது எப்படித் தும்மல் போடும்”  என்றேன் நான்.

“அது போலத்தான், பொடி போடும் எங்களுக்கும் பொடி போடும் போது தும்மல் வராது.   ஆனால் நாங்கள் தும்மலை தேவைப்படும்போது சுலபமாக வரவழைத்துக்கொள்ள முடியும்” என்று சொன்னவர், சொன்னபடி செய்தும் காட்டிவிட்டார்.

“மூக்குப்பொடி போடும் இந்த மூளையுள்ள ஆண்களுக்கு முக்கியமாத் தேவை இந்தக்கைக்குட்டை” என்று ஜவுளி வியாபாரியாக வேஷமிட்டு சிவாஜி கணேசன் ’தூக்குத்தூக்கி’ என்ற படத்தில் ஒரு பாட்டுப் பாடுவார்.

அது போல கைவசம் எப்போதும் வைத்திருக்கும் பல கைக்குட்டைகளில் (கர்சீஃப்) ஒன்றைக் கையில் எடுத்தார் வ.வ.ஸ்ரீ.   அதன் ஒரு நுனியை விளக்குத்திரி போடுவது போலத் திரித்தார்.  அதை அப்படியே தன் மூக்குத் துவாரத்தில் நுழைத்தார்.   

முகத்தை அஷ்ட கோணலாக்கிக்கொண்டு அடுத்தடுத்து தொடர்ச்சியாக பதினைந்து தும்மல்கள் தும்மினார்.  அவரின் நெற்றி நரம்புகள் புடைத்துக்கொண்டன.  அவரைச்சுற்றி மழைச்சாரல்போல சளித்தூறல்கள்.  கைகுட்டை முழுவதும் பஞ்சாமிர்தம்போல ஏதேதோ ஒழுகியவண்ணம்.  அவர் முதல் தும்மல் போட்டதுமே, ஓடி விட்டேன் நான் என் சீட்டை நோக்கி.

இடி, மின்னல், மழை போன்ற அவரின் தும்மல்கள் ஒருவழியாக முடிந்து, புயல் கரையைக்கடக்க ஒரு கால் மணி நேரம் ஆனது. 

தன் பெண்ணின் நிச்சயதார்த்தம் பற்றி தன் வருங்கால சம்பந்தியிடம் டெலிபோனில் பேச முயற்சித்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்டு பரந்தாமனுக்கு, இவரின் தொடர் தும்மலால் மிகுந்த எரிச்சல் ஏற்பட்டது.  சனியன், சகுனத்தடை என்று அவரைத் திட்டிக்கொண்டிருந்தது, எனக்கு மட்டுமே கேட்டது.

பாத் ரூம் சென்று மூக்குத் துவாரங்களைக் கழுவிக்கொண்டு, கைக்குட்டையையும் சோப்புப்போட்டு அலசிப் பிழிந்தவாறு தன் இருக்கையில் ஒருவாறு வந்தமர்ந்தார் வ.வ.ஸ்ரீ.   மீண்டும் அவரைப் பேட்டி காணப்போனேன், நான்.













தொடரும்



66 கருத்துகள்:

  1. மூக்குப் பொடி மகிமை நல்லாவேத் தெரியும். ஓரிரண்டு முறை போட்ட அனுபவம் உண்டு :)))

    பதிலளிநீக்கு
  2. கட்சிகளையும் தேர்தல் அடவடித்தனங்களையும்
    ஒரு பிடிபிடிக்கலாம் என்கிற அபிப்பிராயம்
    இருப்பது போலவும் தெரிகிறது
    சரியாக அனுமானிக்க முடியவில்லை
    தொடர் சிறப்பாகப் போகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வேட்டுக் குழாய் புதிய தகவல். இந்தப்பகுதி கொஞ்சம் இல்லை இல்லை ரொம்பப் பொடியா இருக்கோ?

    பதிலளிநீக்கு
  4. தேர்தல் சமயத்தில் ஏதோ பொடி வைத்துப் பேசுவது போல இருக்கிறது. எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டன. வேட்டுக்குழாய் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன், பார்த்ததில்லை. எப்படி சிகரேட் ஸ்னேகம் நிறைய பேருக்கு இருக்குமோ, அது போலவே மூக்குப் பொடிக்காகவே ஸ்னேகம் பண்ணிக்கொள்பவர்கள் உண்டு :)

    பதிலளிநீக்கு
  5. “பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
    மற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார்”//
    கேட்டு ஓடி விட்டேன் நான்.

    பதிலளிநீக்கு
  6. மூக்குப்பொடி ஆசாமிகள் போடுகிற தும்மலைக் கேட்டால், எங்கேயோ பக்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடிச்சிருச்சோன்னு பயம் வந்திரும். நான் நிறயாவாட்டி கேட்டிருக்கேன். :-))

    பதிலளிநீக்கு
  7. கதையை பொடி வச்சுத்தான் கொண்டு போறீங்க.
    வேட்டுக்குழாய் புது தகவல் எனக்கு.

    ஆனா எனக்கு இந்த மூக்குப் பொடி போடறவங்களைக்
    கண்டாலும் மூக்குப்பொடியை பாத்தாலும் ஒரே அலர்ஜி

    பதிலளிநீக்கு
  8. 'வேட்டுக் குழாய்' தகவலுக்கு நன்றி.
    /பொடிட்டின் நிறைய பொடியை அடைத்தாலும் அந்தப்பொடிட்டின் தும்மல் போட்டுப் பார்த்திருக்கிறாயா நீ/ :-))

    பதிலளிநீக்கு
  9. ஆகா.. இது அலுவலக அரசியலா?

    பதிலளிநீக்கு
  10. சுவையாக கொண்டு செல்கிறீர்கள்... தொடரட்டும் இனிதாக..

    பதிலளிநீக்கு
  11. விறுவிறுப்பாய் செல்கிறது ..தொடரட்டும்..அடுத்த பகுதி எப்போது என எழுச்சியுடன் காத்திருக்கும்,

    உங்கள் நண்பன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  12. அடுத்தது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  13. நகைச்சுவையாக ஓர் பதிவு தந்ததுடன், "வேட்டுக் குழாய்" போன்ற எங்களுக்கு தெரியாத அரிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டது நல்லா இருந்துச்சு.

    பதிலளிநீக்கு
  14. பொடிக்கான குறளும்,வேட்டுக்குழாயும் புதுமைஅடுத்த பகுதிக்கு
    எதிர்பார்ப்புடன்

    பதிலளிநீக்கு
  15. கடைசி பாரா நாங்களும் தெரிஞ்சிக்கிட்டாச்சி வேட்டுகுழாயைபற்றி.

    எதிர்பார்ப்புடன் கொண்டுசெல்லும் பாணி அருமை..

    பதிலளிநீக்கு
  16. முதல் பகுதியையும் படித்து விட்டு சேர்த்து பின்னூட்டமிடுகிறேன்.
    மூக்கு பொடி போடுறதில என்ன இன்பம் என்று தெரியவில்லையே!
    வேட்டுக்குழாய் இப்போது தான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. எல் கே said...
    //மூக்குப் பொடி மகிமை நல்லாவேத் தெரியும். ஓரிரண்டு முறை போட்ட அனுபவம் உண்டு :)))//

    மகிமை தெரிந்து தான், தொடராமல், ஒதுங்கி நல்ல பிள்ளையாகி விட்டீர்களோ?

    வாழ்க்கையில் ஓரிரு முறை மட்டும் தான் எழுச்சியாக இருந்துள்ளீர்கள் என்றும் தோன்றுகிறது, நம் ஹீரோ வ.வ.ஸ்ரீ யின் ஆராய்ச்சிப்படி.

    Anyway தொடர்ந்து இரண்டு பகுதிகளுக்கும் நீங்களே முதல் ஆளாக (எழுச்சியுடன்) வந்துள்ளதற்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. Ramani said...
    //கட்சிகளையும் தேர்தல் அடவடித்தனங்களையும்
    ஒரு பிடிபிடிக்கலாம் என்கிற அபிப்பிராயம் இருப்பது போலவும் தெரிகிறது. சரியாக அனுமானிக்க முடியவில்லை. தொடர் சிறப்பாகப் போகிறது. தொடர வாழ்த்துக்கள்.//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும், மிக்க நன்றி ஐயா.
    தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  19. ஒரு கழியில் துவாரமுள்ள சாவியைக் கட்டி அந்தக் கழியின் இன்னொரு புறம் ஒரு ஆணியைக் கயிற்றில் கட்டி சாவி துவாரத்தில் கந்தகப்பொடி இட்டு, அதில் ஆணியைசெருகி கயிற்றை கழியுடன் பிடித்து அதை ஓங்கி கல்லிலோ தரையிலோ அறைந்தால் பட்டாசு சப்தம். இது சிறுவர்கள் கையாண்ட வழி. ஹூம் அது அந்தக் காலம்.!

    பதிலளிநீக்கு
  20. கலாநேசன் said...
    //வேட்டுக் குழாய் புதிய தகவல். இந்தப்பகுதி கொஞ்சம் இல்லை இல்லை ரொம்பப் பொடியா இருக்கோ?//

    தற்சமயம் ஒரு 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, இந்த வேட்டுக்குழாயைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. வரப்போகும் எல்லாப்பகுதிகளுமே பொடி மணம் கமழ்வதாகவே இருக்கும். தொடர்ந்து எழுச்சியுடன், வந்து பாருங்கள்

    பதிலளிநீக்கு
  21. வெங்கட் நாகராஜ் said...
    //தேர்தல் சமயத்தில் ஏதோ பொடி வைத்துப் பேசுவது போல இருக்கிறது. எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டன. வேட்டுக்குழாய் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன், பார்த்ததில்லை. எப்படி சிகரேட் ஸ்னேகம் நிறைய பேருக்கு இருக்குமோ, அது போலவே மூக்குப் பொடிக்காகவே ஸ்னேகம் பண்ணிக்கொள்பவர்கள் உண்டு :)//

    ஆமாம் வெங்கட். நீங்கள் சொல்வது எல்லாமே சரி தான். தொடர்ந்து வாருங்கள், பேரெழுச்சியுடன்.

    பதிலளிநீக்கு
  22. இராஜராஜேஸ்வரி said...
    //“பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
    மற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார்”//
    கேட்டு ஓடி விட்டேன் நான்.//

    ஏன் இப்படி ஒரு ஓட்டம், நான் சற்றும் எதிர்பாராத விதமாக. ஒருவேளை உங்களுக்கும் சளி பிடித்து விட்டதோ? வாழ்க !

    நாளை கட்டாயம் எழுச்சியுடன் வாங்க!

    பதிலளிநீக்கு
  23. சேட்டைக்காரன் said...
    //மூக்குப்பொடி ஆசாமிகள் போடுகிற தும்மலைக் கேட்டால், எங்கேயோ பக்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடிச்சிருச்சோன்னு பயம் வந்திரும். நான் நிறயாவாட்டி கேட்டிருக்கேன். :-))//

    நானும் நிறயாவாட்டிக் கேட்டிருந்தும், இந்த உதாரணத்தை எழுச்சியுடன் கொண்டுவரத் தெரியாமல் வழுவட்டையாக இருந்து விட்டேன் பாருங்க !

    என் அபிமான எழுத்தாளர் நகைச்சுவை வேந்தர் சேட்டைன்னா, சேட்டை தான். நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  24. raji said...
    //கதையை பொடி வச்சுத்தான் கொண்டு போறீங்க.//

    மிக்க நன்றி

    //வேட்டுக்குழாய் புது தகவல் எனக்கு.//

    அப்பாவையோ, மாமனாரையோ கேட்டுப்பாருங்க, மேலும் சுவையான பல தகவல்கள் தரக்கூடும். அதையே நீங்க ஒரு பதிவாகவும் போட்டு எங்களுக்கெல்லாம் வேட்டு வைக்கலாம்.

    //ஆனா எனக்கு இந்த மூக்குப் பொடி போடறவங்களைக் கண்டாலும் மூக்குப்பொடியை பாத்தாலும் ஒரே அலர்ஜி//

    இந்த மூக்குப்பொடிக் கதையைப்படிக்கவே அலர்ஜி இல்லாமல் இருந்தால் சரிதான், எனக்கு.

    உங்களுக்கே இவ்வளவு அலர்ஜி என்றால் பாவம் அந்த வ.வ.ஸ்ரீ. யின் சம்சாரம்.

    அநேகமாக பகுதி-5 இல் வருவார், பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  25. middleclassmadhavi said...
    //'வேட்டுக் குழாய்' தகவலுக்கு நன்றி.
    /பொடிட்டின் நிறைய பொடியை அடைத்தாலும் அந்தப்பொடிட்டின் தும்மல் போட்டுப் பார்த்திருக்கிறாயா நீ/ :-))//

    உங்களின் ரசனை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. கற்பனையில் உதித்து எழுதியபோது நான் சிரித்துக் கொண்டே எழுதிய வரிகள் தான். நன்றி.

    பதிலளிநீக்கு
  26. பாரத்... பாரதி... said...
    ஆகா.. இது அலுவலக அரசியலா?

    ஆமாம் ஐயா, இப்போதைக்கு அப்படித்தான்.

    பாரத்... பாரதி... said...
    //சுவையாக கொண்டு செல்கிறீர்கள்... தொடரட்டும் இனிதாக..//

    சுவைக்கு குறையே இருக்காது. தொடர்ந்து வாருங்கள். அடுத்த பகுதி நாளை 15th வெளியாகும்.
    March 13, 2011 7:55 AM

    பதிலளிநீக்கு
  27. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //விறுவிறுப்பாய் செல்கிறது ..தொடரட்டும்..அடுத்த பகுதி எப்போது என எழுச்சியுடன் காத்திருக்கும்,
    உங்கள் நண்பன், ஆர்.ஆர்.ஆர்.//

    நகைச்சுவை நண்பராகிய நீங்களே சொன்னது, என் எழுச்சியைப் பேரெழுச்சி ஆக்கிவிட்டது. பகுதி-3 நாளை 15th, பகுதி-4 17th, பகுதி-5 19th, பகுதி-6 21st & so on. அநேகமாக 8 பகுதிகள் வரலாம்.

    தொடர்ந்து வாருங்கள் நண்பரே!

    [எச்சரிக்கை:
    தங்கள் வருகை நின்றால், நான் நிச்சயம் வழுவட்டையாகி விடக்கூடும். ஜாக்கிரதை !]

    பதிலளிநீக்கு
  28. Gopi Ramamoorthy said...
    //அடுத்தது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் வருகிறது.//

    வரட்டும், வரட்டும். நாளை 15th வெளியாகும் பகுதி-3 ஐப் படிக்க மறக்காமல் வாருங்கள். அப்போது தான், தங்களுக்கு அடுத்தது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வருகிறது என்று சொன்னதை நான் நம்புவேன்.

    பதிலளிநீக்கு
  29. Chitra said...
    //நகைச்சுவையாக ஓர் பதிவு தந்ததுடன், "வேட்டுக் குழாய்" போன்ற எங்களுக்கு தெரியாத அரிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டது நல்லா
    இருந்துச்சு.//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். நாளை முதல் உங்களுக்கு Busy Schedule. இந்தக்கதை முடிவதற்குள்ளாவது வருவீர்களோ மாட்டீர்களோ ? OK OK Carry on.

    பதிலளிநீக்கு
  30. thirumathi bs sridhar said...
    //பொடிக்கான குறளும்,வேட்டுக்குழாயும் புதுமை. அடுத்த பகுதிக்கு எதிர்பார்ப்புடன் //

    மிக்க நன்றி சகோதரியே. அடுத்த பகுதி நாளை
    15.03.2011 அன்று வெளியிட உள்ளேன். தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெளியாகும். தொடர்ந்து வாருங்கள். கருத்துக்களை அள்ளித் தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  31. அன்புடன் மலிக்கா said...
    //கடைசி பாரா நாங்களும் தெரிஞ்சிக்கிட்டாச்சி வேட்டுகுழாயைபற்றி.

    எதிர்பார்ப்புடன் கொண்டுசெல்லும் பாணி அருமை..//

    மிக்க நன்றிகள் சகோதரியே, தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  32. கோவை2தில்லி said...
    //முதல் பகுதியையும் படித்து விட்டு சேர்த்து பின்னூட்டமிடுகிறேன்.//

    மிக்க நன்றிகள், மேடம். என் கடைக்கு (கதைக்கு)நிரந்தர வாடிக்கையாளர்களாக தம்பதி ஸமேதராக வருவார்களே காணோமே என்று கவலைப்பட்டேன். நல்லவேளையாக வந்து விட்டீர்கள். மகிழ்ச்சி.

    //மூக்கு பொடி போடுறதில என்ன இன்பம் என்று தெரியவில்லையே!//

    எனக்கும் தெரியவில்லை. இந்த மூக்குப்பொடி போடும் ஆசாமிகளிடம் தான் கேட்க வேண்டும். ஏதாவது கேட்கப்போய் நமக்கும் பழக்கப்படுத்தி விடுவார்களோ என்ற பயமும் உள்ளது.

    //வேட்டுக்குழாய் இப்போது தான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி.//

    எனக்கு 1965 முதல் 1972 வரை 7-8 தீபாவளிகளில் இதில் பரிச்சயமே உண்டு. அணுகுண்டு போல நல்ல சவுண்ட் வரும்.

    பதிலளிநீக்கு
  33. G.M Balasubramaniam said...
    //ஒரு கழியில் துவாரமுள்ள சாவியைக் கட்டி அந்தக் கழியின் இன்னொரு புறம் ஒரு ஆணியைக் கயிற்றில் கட்டி சாவி துவாரத்தில் கந்தகப்பொடி இட்டு, அதில் ஆணியைசெருகி கயிற்றை கழியுடன் பிடித்து அதை ஓங்கி கல்லிலோ தரையிலோ அறைந்தால் பட்டாசு சப்தம். இது சிறுவர்கள் கையாண்ட வழி. ஹூம் அது அந்தக் காலம்.!//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் ஐயா.

    நீங்கள் ஒருவராவது ‘வேட்டுக்குழாயைத் தெரியும் எனக்கும்’ என்று எனக்கு ஆதரவாக சொன்னது, மிகவும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது. My Special Thanks to you Sir.

    பதிலளிநீக்கு
  34. ஸார்..ஸார்..எனக்கும் தெரியும்..எங்கள் கிராமத்தில் ஒருவர், நாங்கள் எல்லாரும் வேட்டுக் குழாய் பிடித்துக் கொண்டு நிற்க, கந்தக தானம் செய்து கொண்டு வருவார்...

    பதிலளிநீக்கு
  35. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //ஸார்..ஸார்..எனக்கும் தெரியும்..எங்கள் கிராமத்தில் ஒருவர், நாங்கள் எல்லாரும் வேட்டுக் குழாய் பிடித்துக் கொண்டு நிற்க, கந்தக தானம் செய்து கொண்டு வருவார்...//

    அருமை, வெகு அருமை.

    கந்தக தானம் ... ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா...

    வாய்விட்டுச் சிரிக்கிறேன்.

    ஒரே அதிர்ச்சியான அறிக்கை இது வேட்டுக்குழாய் ஒன்றில் வெடித்தது போலவே.

    புதுமையான புரட்சிக்கருத்துக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  36. இடது கை விரல் நுனியில் பொடிடப்பாவை வைத்துக்கொண்டு, வலதுகை ஆள்காட்டி விரலால் அதன் தலையில், மிருதங்க வித்வான் போல தட்டியவாறே, என்னை ஒரு விஷமப்பார்வை பார்த்து/////என்னே ரசனை..!

    பதிலளிநீக்கு
  37. ஸாதிகா said...
    இடது கை விரல் நுனியில் பொடிடப்பாவை வைத்துக்கொண்டு, வலதுகை ஆள்காட்டி விரலால் அதன் தலையில், மிருதங்க வித்வான் போல தட்டியவாறே, என்னை ஒரு விஷமப்பார்வை பார்த்து/////

    //என்னே ரசனை..!//

    என் ரசனையை ரசித்த தங்களுக்கு மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  38. பொடி // சில சமயம் நாட்டு மருந்து கடைகளில் பார்த்திருக்கிறேன்
    சின்ன ஒரு கரண்டி நெய் குத்தும் கரண்டியை விட சிறிய அளவில் இருக்கும் அதில் பொடியை எடுத்து காகிதத்தில் சுற்றுவார்கள் .
    சூரணம் பொருட்கள் வாங்க சென்ற இடத்தில எட்டி பார்த்த அனுபவம் .
    கதை சுவாரஸ்யமாக செல்கிறது

    பதிலளிநீக்கு
  39. angelin said...
    பொடி // சில சமயம் நாட்டு மருந்து கடைகளில் பார்த்திருக்கிறேன்
    சின்ன ஒரு கரண்டி நெய் குத்தும் கரண்டியை விட சிறிய அளவில் இருக்கும் அதில் பொடியை எடுத்து காகிதத்தில் சுற்றுவார்கள் .
    சூரணம் பொருட்கள் வாங்க சென்ற இடத்தில எட்டி பார்த்த அனுபவம் .
    கதை சுவாரஸ்யமாக செல்கிறது//

    மிகவும் சந்தோஷம் நிர்மலா.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  40. பொடி போடுவது கண்முன் நிற்கிறது!
    சிரித்து மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  41. Seshadri e.s. said...
    பொடி போடுவது கண்முன் நிற்கிறது!
    சிரித்து மகிழ்ந்தேன்//

    மிக்க நன்றி, சார்.

    பதிலளிநீக்கு
  42. அன்பின் வை.கோ

    நகைச்சுவையின் உச்சம் இப்பதிவு.

    234 தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பணியாற்றும் வ.வ.ஸ்ரீ யின் பணி பாராட்டுக்குரியது. எக்கட்சியிலும் இல்லாமல் அததனை கட்சிகளையும் இவரை வேவு பார்க்க வைக்கும் துணிவே துணிவு.

    மேனேஜர் பயல் - v.v - S.V.V உண்மையில்யே சூப்பர். அனுபவம் - வௌஅது என்ற உடன் எனக்கு ஒரு நிகழவு நினைவிற்கு வருகிறது.

    1981ல் தலைமை அலுவலகத்தில் இருந்து திருவனந்த புரம் மண்டல அலுவலகத்திற்கு பணி மாறுதலில் சென்ற போது - அங்கிருந்த் என் மேலாளர் கூறியது பசுமரத்தாணி போல் பதிந்த சொற்கள் நினைவில் வருகின்றன. அப்போது எனக்கு 31 வயது - அவருக்கு 35 வருட பணி அனுபவம். அதனை கோபமாக - சிரித்துக் கொண்டே மலையாளத்தில் வாய் நிறைய வெற்றிலை பாக்குடன் கூறியது 62 வயதிலும் அசைபோட்டு ஆனந்திக்க வைக்கிறது.

    வேட்டுக்குழாய் எனக்குப் புதிய சொல்.
    புதுக்குறள் நன்று.

    பொடி டின் தூம்மல் போடுமா - சிரித்து சிரித்து மகிழ்ந்தேன்.

    சிவாஜி - தூக்குத் தூக்கி - கைக்குட்டை - தகுந்த இடத்தில் நல்ல எடுத்துக் காட்டு.

    அஷ்ட கோணல் - 15 தும்மல் - புடைத்த நரம்புகள் - சளித் தூறல் - கைகுட்டையில் பஞ்சாமிர்தம் - இடி மின்னல் மழை - புயல் கரை கடக்க 15 நிமிடம். சனியன் சகுனத் தடை.

    மூக்குத் துவாரஙகளை மட்டுமல்ல - கைக்குட்டையினையும் கசக்கிப் பிழிந்து சுத்தமாக சுகாதாரம் பேணூம் வ்.வ்.ஸ்ரீ யின் பழக்கம் பாராட்டுக்குரியது.

    அன்பின் வை.கோ - நகைச்சுவையின் உச்சம் - மிக மிக இரசித்தேன்.. மகிழ்ந்தேன்

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  43. அன்பின் வை.கோ

    நகைச்சுவையின் உச்சம் இப்பதிவு.

    234 தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பணியாற்றும் வ.வ.ஸ்ரீ யின் பணி பாராட்டுக்குரியது. எக்கட்சியிலும் இல்லாமல் அததனை கட்சிகளையும் இவரை வேவு பார்க்க வைக்கும் துணிவே துணிவு.

    மேனேஜர் பயல் - v.v - S.V.V உண்மையில்யே சூப்பர். அனுபவம் - வௌஅது என்ற உடன் எனக்கு ஒரு நிகழவு நினைவிற்கு வருகிறது.

    1981ல் தலைமை அலுவலகத்தில் இருந்து திருவனந்த புரம் மண்டல அலுவலகத்திற்கு பணி மாறுதலில் சென்ற போது - அங்கிருந்த் என் மேலாளர் கூறியது பசுமரத்தாணி போல் பதிந்த சொற்கள் நினைவில் வருகின்றன. அப்போது எனக்கு 31 வயது - அவருக்கு 35 வருட பணி அனுபவம். அதனை கோபமாக - சிரித்துக் கொண்டே மலையாளத்தில் வாய் நிறைய வெற்றிலை பாக்குடன் கூறியது 62 வயதிலும் அசைபோட்டு ஆனந்திக்க வைக்கிறது.

    வேட்டுக்குழாய் எனக்குப் புதிய சொல்.
    புதுக்குறள் நன்று.

    பொடி டின் தூம்மல் போடுமா - சிரித்து சிரித்து மகிழ்ந்தேன்.

    சிவாஜி - தூக்குத் தூக்கி - கைக்குட்டை - தகுந்த இடத்தில் நல்ல எடுத்துக் காட்டு.

    அஷ்ட கோணல் - 15 தும்மல் - புடைத்த நரம்புகள் - சளித் தூறல் - கைகுட்டையில் பஞ்சாமிர்தம் - இடி மின்னல் மழை - புயல் கரை கடக்க 15 நிமிடம். சனியன் சகுனத் தடை.

    மூக்குத் துவாரஙகளை மட்டுமல்ல - கைக்குட்டையினையும் கசக்கிப் பிழிந்து சுத்தமாக சுகாதாரம் பேணூம் வ்.வ்.ஸ்ரீ யின் பழக்கம் பாராட்டுக்குரியது.

    அன்பின் வை.கோ - நகைச்சுவையின் உச்சம் - மிக மிக இரசித்தேன்.. மகிழ்ந்தேன்

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  44. cheena (சீனா) said...
    அன்பின் வை.கோ

    நகைச்சுவையின் உச்சம் இப்பதிவு.

    234 தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பணியாற்றும் வ.வ.ஸ்ரீ யின் பணி பாராட்டுக்குரியது. எக்கட்சியிலும் இல்லாமல் அததனை கட்சிகளையும் இவரை வேவு பார்க்க வைக்கும் துணிவே துணிவு.

    மேனேஜர் பயல் - v.v - S.V.V உண்மையில்யே சூப்பர். அனுபவம் - வௌஅது என்ற உடன் எனக்கு ஒரு நிகழவு நினைவிற்கு வருகிறது.

    1981ல் தலைமை அலுவலகத்தில் இருந்து திருவனந்த புரம் மண்டல அலுவலகத்திற்கு பணி மாறுதலில் சென்ற போது - அங்கிருந்த் என் மேலாளர் கூறியது பசுமரத்தாணி போல் பதிந்த சொற்கள் நினைவில் வருகின்றன. அப்போது எனக்கு 31 வயது - அவருக்கு 35 வருட பணி அனுபவம். அதனை கோபமாக - சிரித்துக் கொண்டே மலையாளத்தில் வாய் நிறைய வெற்றிலை பாக்குடன் கூறியது 62 வயதிலும் அசைபோட்டு ஆனந்திக்க வைக்கிறது.

    வேட்டுக்குழாய் எனக்குப் புதிய சொல்.
    புதுக்குறள் நன்று.

    பொடி டின் தூம்மல் போடுமா - சிரித்து சிரித்து மகிழ்ந்தேன்.

    சிவாஜி - தூக்குத் தூக்கி - கைக்குட்டை - தகுந்த இடத்தில் நல்ல எடுத்துக் காட்டு.

    அஷ்ட கோணல் - 15 தும்மல் - புடைத்த நரம்புகள் - சளித் தூறல் - கைகுட்டையில் பஞ்சாமிர்தம் - இடி மின்னல் மழை - புயல் கரை கடக்க 15 நிமிடம். சனியன் சகுனத் தடை.

    மூக்குத் துவாரஙகளை மட்டுமல்ல - கைக்குட்டையினையும் கசக்கிப் பிழிந்து சுத்தமாக சுகாதாரம் பேணூம் வ்.வ்.ஸ்ரீ யின் பழக்கம் பாராட்டுக்குரியது.

    அன்பின் வை.கோ - நகைச்சுவையின் உச்சம் - மிக மிக இரசித்தேன்.. மகிழ்ந்தேன்

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//


    அன்பின் ஐயா,

    வணக்கம். நான் அனுபவித்து மிகவும் ரஸித்தி எழுதிய வார்த்தைகளை வரிகளை தாங்களும் சுட்டிக்காட்டிப் பாராட்டியுள்ளது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும், அடியேனின் நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  45. மூக்குப் பொடி போடறவங்களைக்
    கண்டாலும் மூக்குப்பொடியை பாத்தாலும் ஒரே அலர்ஜி

    அசிங்கம்.. எஸ்கேப் !

    பதிலளிநீக்கு
  46. இராஜராஜேஸ்வரி said...
    மூக்குப் பொடி போடறவங்களைக்
    கண்டாலும் மூக்குப்பொடியை பாத்தாலும் ஒரே அலர்ஜி

    அசிங்கம்.. எஸ்கேப் !//

    ஆமாம் மேடம். நீங்கள் சொல்வது தான் மிகவும் சரி.

    ஆனாலும் நீங்க இப்போ எஸ்கேப் ஆவதற்கு அதுவே உங்களுக்கு கைகொடுத்து உதவியுள்ளது பாருங்கள். ;)

    பதிலளிநீக்கு
  47. ஏதோ பொடி வைத்துப் எழுதுவது போல இருக்கிறது. பலதும்மல்களுக்கிடையே தொடந்து பயணிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, அடாது தும்மினாலும் விடாது படியுங்கள், நண்பரே.
      பேரெழுச்சியுடன் படியுங்கள்.

      நீக்கு
  48. வ.வ.ஸ்ரீ சொன்ன மூக்குப் பொடி மகாத்மியம் பலே சூப்பர்! இப்போது பொடி போடும் பழக்கம் மக்களிடையே மறைந்து வருகிறது. என் அப்பாவும் ஆரம்பத்தில் மூக்கும் பொடி போடும்
    பழக்கம் உள்ளவர். இப்போது நிறுத்தி விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், திரு.தி.தமிழ் இளங்கோ, சார்.

      அன்புடன் vgk

      நீக்கு
  49. மூக்குப் பொடி போட்டாலும் சுத்தத்தைக் கடைப்பிடிக்கிறாரே, அந்த வரை பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam July 23, 2013 at 12:17 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மூக்குப் பொடி போட்டாலும் சுத்தத்தைக் கடைப்பிடிக்கிறாரே, அந்த வரை பாராட்டுகள்.//

      தண்ணி அடிச்சாலும், தரையிலெல்லாம் உருண்டு புரண்டு, இடுப்புத்துணி போனது தெரியாமல், வாமிட் செய்வது இல்லை என்பது போல அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், மாறுபட்ட கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  50. பொடி போடுவதில் நல்ல அனுபவம் இருந்தால் ஒழிய இவ்வளவு நுணுக்கமாக எழுத யாராலும் முடியாது.

    பதிலளிநீக்கு
  51. பொடி பற்றி நன்றாகவே ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்கீங்க. அவங்க பொடியை மீக்குல உறிசிட்டு கையை உதருவாங்க பாருங்க பக்கத்துல இருக்கறவங்க எல்லாரமே அச்சு அச்சுன்னு தும்ம ஆரம்பிச்சுடுவாங்க. ஆனா அவங்களுக்கு மட்டும் தும்மலே வராதுதான்

    பதிலளிநீக்கு
  52. //“பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
    மற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார்”//

    திருக்கிறள் அருமை.

    //அவர் முதல் தும்மல் போட்டதுமே, ஓடி விட்டேன் நான் என் சீட்டை நோக்கி.//

    பின்ன என்ன. எனக்கே பக்கத்துல இல்லாத யாரோ தும்மி காத்துல அந்த கண்டறாவிப் பொடி வந்து என் மூக்கில நுழையப் பார்த்த மாதிரி இருக்கும் போது......

    பதிலளிநீக்கு
  53. Jayanthi JayaMay 16, 2015 at 6:55 PM

    **“பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
    மற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார்”**

    //திருக்குறள் அருமை.// :)))))

    **அவர் முதல் தும்மல் போட்டதுமே, ஓடி விட்டேன் நான் என் சீட்டை நோக்கி.**

    //பின்ன என்ன. எனக்கே பக்கத்துல இல்லாத யாரோ தும்மி காத்துல அந்த கண்டறாவிப் பொடி வந்து என் மூக்கில நுழையப் பார்த்த மாதிரி இருக்கும் போது......//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :))))))

    மிக்க நன்றி, ஜயா !

    பதிலளிநீக்கு
  54. மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.

    அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.

    அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.

    'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .

    மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.

    முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.

    இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  55. பொடி நெடி இங்கூட்டு வர வருதே.

    பதிலளிநீக்கு
  56. உங்களுக்குனு எழுத ஏதாவது விஷயம் கிடைக்கிறதே. பொடி போடரவா யாரானும் இந்தக்கதையைப்படிச்சா ஆஹா நம்ம பத்திலாம் கூட பாராட்டா ஒருத்தர் எழுதி இருக்காங்களேன்னு சந்தோஷப்பட்டுக்குவா. பொடி போடாத நாங்கல்லாமே இவ்வளவு சந்தோஷமா கதையை ரசிக்கும்போது அவாளைப்பத்தி சொல்லவும் வேணுமா.

    பதிலளிநீக்கு
  57. // இடது கை விரல் நுனியில் பொடிடப்பாவை வைத்துக்கொண்டு, வலதுகை ஆள்காட்டி விரலால் அதன் தலையில், மிருதங்க வித்வான் போல தட்டியவாறே, என்னை ஒரு விஷமப்பார்வை பார்த்து மீண்டும் பேசலானார். // சிவாஜி கணேசன் வ வ ஸ்ரீ ரோல் ப்ளே பண்றமாதிரி இருக்கே....

    பதிலளிநீக்கு
  58. பின்னூட்டம் போட்டவங்க எல்லாருமே வ. வ. ஸ்ரீ.. யோட... அடிப்பொடிகளோ... சும்ம காரசாரமா கருத்து சொல்லி இருக்காங்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... May 9, 2016 at 11:10 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பின்னூட்டம் போட்டவங்க எல்லாருமே வ. வ. ஸ்ரீ.. யோட... அடிப்பொடிகளோ... சும்ம காரசாரமா கருத்து சொல்லி இருக்காங்களே..//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நன்றி.

      நீக்கு
  59. நகைச்சுவையாக ஓர் பதிவு தந்ததுடன், "வேட்டுக் குழாய்" போன்ற எங்களுக்கு தெரியாத அரிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டது நல்லா இருந்துச்சு.//

    சித்ரா சொல்வதை படித்தேன்.

    வேட்டு குழாய் பெயர் நன்றாக இருக்கிறது.

    வேட்டுக்குழாய் எனக்குப் புதிய சொல்.
    புதுக்குறள் நன்று. //

    சீனா சாரே அது புது பெயர் தெரிந்து கொண்டேன் என்கிறார்.

    ஒரு கழியில் துவாரமுள்ள சாவியைக் கட்டி அந்தக் கழியின் இன்னொரு புறம் ஒரு ஆணியைக் கயிற்றில் கட்டி சாவி துவாரத்தில் கந்தகப்பொடி இட்டு, அதில் ஆணியைசெருகி கயிற்றை கழியுடன் பிடித்து அதை ஓங்கி கல்லிலோ தரையிலோ அறைந்தால் பட்டாசு சப்தம். இது சிறுவர்கள் கையாண்ட வழி. ஹூம் அது அந்தக் காலம்.!//

    பாலசுப்பிரமணியம் சார் சொல்வதும் உங்கள் ஆறுதல் மறுமொழியும் சூப்பர்.


    ஸார்..ஸார்..எனக்கும் தெரியும்..எங்கள் கிராமத்தில் ஒருவர், நாங்கள் எல்லாரும் வேட்டுக் குழாய் பிடித்துக் கொண்டு நிற்க, கந்தக தானம் செய்து கொண்டு வருவார்...//

    ஆரண்ய நிவாஸ் அவர்கள் சொன்னதை கேட்கும் போது அவருக்கு தெரிந்து இருக்கிறது.

    நான் உங்கள் இந்த பதிவை படிக்க வில்லை அதனால் எனக்கு தெரியும் என்று சொல்லவில்லை. இருந்தாலும் எனக்கு சுத்தியல் போன்ற அமைப்பு என்று மட்டும் தான் தெரிந்தது பெயர் நீங்கள் தான் சொன்னீர்கள்.
    அருமை சார். உங்கள் நினைவாற்றல் கண்டு வியக்கிறேன்.
    பதிவு அருமை
    படமும் நீங்கள் வரைந்த்து தானே?
    அருமை.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு October 27, 2016 at 11:04 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      வேட்டுக்குழாய் என்பது சுமார் 3 அல்லது 4 அடி நீளமுள்ள இரும்புக்கழியே. நாதஸ்வரம் போல அல்லது வாக்கிங் ஸ்டிக் போல இருக்கும். தாங்கள் சொல்லியுள்ளதுபோல அதன் ஒரு நுனியில் சுத்தியல் போன்ற ஒரு அமைப்பும், அதில் ஒரு சின்னக்குழியும், அதில் போல்ட் போட்டு முடுக்குவது போல கொஞ்சம் மறைகளும் இருக்கும்.

      அதில் போட்டு முடுக்கப்பட வேண்டிய போல்ட் தனியே ஒரு கயிற்றினால் மறுநுனியில் கட்டப்பட்டு தொங்கிக்கொண்டு இருக்கும். நாதஸ்வரத்தில் வாய் வைத்து பீப்பீ ஊதும் ஓலைப் பகுதி நிறைய ஆங்காங்கே தொங்கிக்கொண்டு இருக்குமே, அது போலத்தான் இதுவும்.

      அந்த சுத்தியல் போன்ற அமைப்பின் குழுயில் கந்தகப்பொடியை ஒரு ஸ்பூன் திணித்து விட்டு, இந்த போல்ட்டைப்போட்டு முடுக்கி மூடி விடுவார்கள்.

      இவ்வாறு வேட்டுக்குழாய்களில் கந்தகப்பவுடரை நிரப்பிவிட்டு, போல்ட் போட்டு நன்கு டைட்டாகத் திருகிவிட்டு, பிறகு அந்த சுத்தியல் போன்ற பகுதி பாறாங்கல்லில் ஓங்கிப் படுமாறு இழுத்து அடித்தால் போதும். பயங்கரமான சத்தத்துடன் அது வெடித்து, ஸ்பார்க்குடன் ஒருவித புகையும், கந்தக வாடையும் (நாற்றமும்) அதிலிருந்து வெளிவரும்.

      கந்தகப்பொடி என்பது மஞ்சள் நிறத்தில் பவுடராக தனியே பட்டாஸ் கடைகளிலேயே விற்பார்கள். அரைக்கால் படி, கால்படி, அரைப்படி என்ற கணக்கில் அந்தக்காலத்தில் இது கிடைக்கும். இப்போது உள்ள அளவுகளான 100 கிராம், கால் கிலோ, அரை கிலோ போன்று அந்தக் காலத்தில் படிக்கணக்கு, சேர் கணக்கு, வீசைக்கணக்கு என்றெல்லாம் உண்டு. எண்ணெய் போன்ற திரவங்களுக்கு இப்போது லிட்டர் கணக்கு .... அப்போது சொம்புக்கணக்கு.

      இந்த என் பதிவுக்கு அன்று பின்னூட்டம் இட்டுள்ளவர்களில் வேட்டுக்குழாய் என்றால் என்னவென்றே தெரியாதவர்களான சித்ரா, கற்றலும் கேட்டலும் ராஜி, ஆச்சி, ஆதி வெங்கட், மிடில் கிளாஸ் மாதவி, அன்புடன் மலிக்கா, வெங்கட் நாகராஜ், கலாநேசன் போன்றோர்கள் 30 to 45 வயது ரேஞ்ஜுக்கு உட்பட்டவர்களாக இருந்திருப்பார்கள்.

      அதுபற்றி தெரிந்ததாகக் காட்டிக்கொண்டுள்ள ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி + GMB Sir ஆகியோர் அப்போதே 55 வயதுக்கு மேற்பட்டவர்களாகும்.

      திரு. அன்பின் சீனா ஐயா அவர்கள் மட்டும் நம் சமவயதினர் ஆக இருப்பினும், ’வேட்டுக்குழாய் என்பது தனக்குப் புதிய சொல்’ என்று சொல்லியிருப்பது ஆச்சர்யமாகவே உள்ளது. ஒருவேளை அவர், அதுபற்றி அறிந்திருந்தும் அதன் பெயரை மட்டும் மறந்திருக்கலாம் ..... உங்களைப்போலவே.

      //நான் உங்கள் இந்த பதிவை படிக்க வில்லை அதனால் எனக்கு தெரியும் என்று சொல்லவில்லை. இருந்தாலும் எனக்கு சுத்தியல் போன்ற அமைப்பு என்று மட்டும் தான் தெரிந்தது பெயர் நீங்கள் தான் சொன்னீர்கள். அருமை சார். உங்கள் நினைவாற்றல் கண்டு வியக்கிறேன். பதிவு அருமை.//

      அதனால் பரவாயில்லை. இப்போது அனைவரின் பின்னூட்டங்களையும் பொறுமையாகப் படித்துவிட்டு அருமையாகக் கருத்துக் கூறியுள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      //படமும் நீங்கள் வரைந்த்து தானே? அருமை//

      ஆமாம். அது நான் வேறு எதற்கோ, என்றைக்கோ வரைந்து என் ஸ்டாக்கில் வைத்திருந்த படம். இங்கு இந்தப்பதிவுக்கு அதனை வ.வ.ஸ்ரீ. கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் பொருந்தி வந்ததால் உபயோகப் படுத்திக் கொண்டேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  60. வணக்கம் சார், அண்ணன் அதை வெடிக்கும் போது நான் மூன்றோ, நான்கோ படித்தேன் ஒரளவு நினைவு இருக்கிறது. வேட்டுக்குழாய் விவரத்திற்கு நன்றி. இனி பதிவு எழுதும் போது படங்களும் வரையுங்கள். நன்றாக வருகிறது படம் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு October 27, 2016 at 4:40 PM

      வாங்கோ மேடம். ஆஹா .. தங்களின் மீண்டும் வருகையில் .. மீண்டும் மகிழ்ச்சி !

      //வணக்கம் சார், அண்ணன் அதை வெடிக்கும் போது நான் மூன்றோ, நான்கோ படித்தேன் .. ஒரளவு நினைவு இருக்கிறது.//

      ஆம். நிச்சயம் நீங்கள் அதனை உங்கள் சிறுவயதில் பார்த்திருக்கலாம்.

      எங்கள் வீட்டிலும் இதெல்லாம் வாங்கித்தந்தது இல்லை. அக்கம் பக்க வீட்டுகளில் இதனை வெடிப்பார்கள். நான் வேடிக்கை பார்த்துள்ளேன். ஓரிரு முறை நானும், அவர்கள் என்னை வெடிக்கச்சொன்னதால் வெடித்துப் பார்த்துள்ளேன்.

      //வேட்டுக்குழாய் விவரத்திற்கு நன்றி.//

      சந்தோஷம்.

      //இனி பதிவு எழுதும் போது படங்களும் வரையுங்கள். நன்றாக வருகிறது படம் உங்களுக்கு.//

      மிக்க மகிழ்ச்சி. அவ்வப்போது கொஞ்சம் படங்கள் வரைந்து கொண்டுதான் இருக்கிறேன். புதிய பதிவுகள் தருவதைத்தான் மிகவும் குறைத்துக் கொண்டுள்ளேன்.

      -=-=-=-

      ஏற்கனவே கீழ்க்கண்ட என் சில பதிவுகளில் மட்டும் நான் வரைந்துள்ள படங்கள் + என் கைவேலைப் பாடுகள் உள்ளன.

      http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html
      VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]

      http://gopu1949.blogspot.in/2011/09/blog-post.html
      கொ ட் டா வி (சிறுகதை)

      http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18.html
      VGK 18 - ஏமாற்றாதே ! .... ஏமாறாதே .... !! (சிறுகதை)

      http://gopu1949.blogspot.in/2011/07/6.html
      மலரும் நினைவுகள் - பகுதி 6
      [ கலைகளிலே அவள் ஓவியம் ]

      http://gopu1949.blogspot.in/2015/02/2.html
      சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-2

      http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html
      சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு
      100% பின்னூட்டப் போட்டி 2015

      -=-=-=-

      தங்களின் மீண்டும் வருகைக்கும் என் நன்றிகள், மேடம்.

      நீக்கு