என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 30 மே, 2019

மீண்டும் ‘மோடி’யே பிரதமர் !


இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார்கள்.

அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்யத்துடனும் திகழ்ந்து, மிகவும் நல்லதொரு ஆட்சி தருவார் என்ற பரிபூரண நம்பிக்கையுடன், அவரை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம்.   


  







26.05.2014 அன்று மோடி 
முதன்முறை பிரதமராக பதவி ஏற்ற போது
அது பற்றிய செய்தியினை அடியேன், சற்றே
வித்யாசமாக என் பதிவினில் எழுதியிருந்தேன்.
இதோ அதற்கான இணைப்பு:

செந்தாமரையே ... 
செந்தேன் நிலவே ... !


நம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக தாமரை’ச்சின்னம் முழு மெஜாரிடி பலம் பொருந்திய தனிக்கட்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று 26.05.2014 திங்கட்கிழமை ஆட்சியைக் கைப்பற்றி, கோலாகலமான பதவி ஏற்பு விழா நடத்தி உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே நல்ல நாளில் இங்கு அதே ‘தாமரை’ச்சின்னம் வலையுலக வரலாற்றிலும் ஓர் மிகப்பெரிய சாதனை செய்து, இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டியில் ’ஹாட்-ட்ரிக்’ பரிசின் உச்சக்கட்ட அளவினைப் பிடித்து வலையுலக பதிவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.

இவ்விரு நிகழ்ச்சிகளின் அபூர்வமானதொரு ஒற்றுமையை நினைத்தாலே இனிக்கிறது அல்லவா !

WHAT A VERY GREAT CO-INCIDENT !!!!!! ;))))))

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த ஸ்பெஷல் பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். 




என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]





31 கருத்துகள்:

  1. பிரதமரை வாழ்த்தி வரவேற்றிருக்கீங்க. பாராட்டுகள். ஆனா இந்த இடுகை என்னவோ மறைமுகமா எனக்கு ஒரு சேதி சொல்லுது.

    1. 2014ல் இடுகை போட்டேன். இப்போ மோடி பிரதமர் பதவி ஏற்கும்போது போட்டிருக்கேன். அடுத்த இடுகைக்கு 2024வரை காத்திருக்கவும்.

    அப்படியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆ எப்பூடி நெல்லைத்தமிழன் முந்திக்கொண்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    2. நெல்லைத்தமிழன் May 30, 2019 at 5:03 PM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //பிரதமரை வாழ்த்தி வரவேற்றிருக்கீங்க. பாராட்டுகள்.//

      தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி, ஸ்வாமீ

      //ஆனா இந்த இடுகை என்னவோ மறைமுகமா எனக்கு ஒரு சேதி சொல்லுது. 2014ல் இடுகை போட்டேன். இப்போ மோடி பிரதமர் பதவி ஏற்கும்போது போட்டிருக்கேன். அடுத்த இடுகைக்கு 2024வரை காத்திருக்கவும். அப்படியா?//

      அப்படியும்கூட வைத்துக்கொள்ளலாம். 2024-இல் அவரே மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்தான். அதில் எனக்கு ஒன்றும் சந்தேகமே இல்லைதான். ஆனால் அதுவரை நான் ஆயுளுடன் இருந்து, மீண்டும் ஒரு பதிவு போடுவேனா என்பதுதான் எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது.

      ’இன்று இருப்பார் ... நாளை இல்லை’ என்ற எதுவும் சாஸ்வதம் இல்லாத வாழ்க்கையாக அல்லவா உள்ளது. எதுவும் நம் கையில் இல்லையே. நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், புண்ணிய பூமியான நம் நாடு நல்லா இருக்கணும் என்பதே என் விருப்பமாகும்.

      நீக்கு
    3. /ஆனால் அதுவரை நான் ஆயுளுடன் இருந்து, மீண்டும் ஒரு பதிவு போடுவேனா என்பதுதான்// - நித்திய கண்டம் பூர்ண ஆயுசுன்னு கேள்விப்பட்டதில்லையா கோபு சார்? அதுனால நீங்க எங்க எல்லாரையும் தாண்டியும் ஜீவித்திருப்பீங்க. என்ன.. அந்த படுக்கையைச் சுற்றி இருக்கிற மசாலக்கடலை மிக்சர், ஓமப்பொடி, சிப்ஸ், அப்புறம் தெருவோரத்து பஜ்ஜிக்கடை - இதையெல்லாம் வீட்டுல ஸ்டிராங்கா உங்களுக்கு தடா போட்டாங்கன்னா... நல்லா சுகமா இருக்கும் உங்க வாழ்க்கைப் பயணம். வாழ்த்துகள்.

      நீக்கு
    4. //அந்த படுக்கையைச் சுற்றி இருக்கிற மசாலக்கடலை மிக்சர், ஓமப்பொடி, சிப்ஸ், அப்புறம் தெருவோரத்து பஜ்ஜிக்கடை - இதையெல்லாம் வீட்டுல ஸ்டிராங்கா உங்களுக்கு தடா போட்டாங்கன்னா... நல்லா சுகமா இருக்கும் உங்க வாழ்க்கைப் பயணம். வாழ்த்துகள். //

      அவரவர்கள் தங்கள் வாய்க்குப் பிடித்ததை, வயிற்றுக்கு வஞ்சகம் செய்யாமல் வாங்கி சாப்பிட வேண்டும். அவைகளுக்கெல்லாம் தடா போட்டபின் வாழ்ந்துதான் என்ன இலாபம்? மேலும் இவ்வுலகில் பிறந்தவர் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும்.

      அதனால் அந்தக் 'KUNDA' திரட்டுப்பால் டப்பாக்கள் + 'DHARWAD SWEET PEDA' நிறைய வாங்கி கொரியரில் அனுப்பி வைக்கவும்.

      Ref: http://gopu1949.blogspot.com/2018/11/blog-post.html

      நீக்கு
  2. 130 கோடிப்பேர் ஆசீர்வாதத்தில் பதவி ஏற்கிறார்னு எழுதியிருக்கீங்க.

    இந்த ஐந்து வருடங்களில் சிறப்பாக, மக்களுக்கான ஆட்சியைக் கொடுத்தால், ஐந்து வருட முடிவில் 100 கோடிப் பேராவது மோடி அவர்களை ஆசீர்வதிப்பார்கள். அது போகப் போகத்தான் தெரியும்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. கடைசிப் படம், 'போன இடுகைக்கே பதில் மறுமொழி கொடுக்காம எல்லோரையும் ஏமாத்திட்டேன்... இந்த இடுகைக்கும் அல்வாதான்' என்று சொல்கிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு அண்ணன் வரலாற்றில் மறுமொழி குடுக்காமல் விட்டாரோ.. ஓ அதுவா நெல்லைத்தம்ழிஅன்.. கோபு அண்ணனின் போன போஸ்ட்டுக்கு அதிரா வரவில்லை:) அந்தக் கவலையாகக்கூட இருக்கும்:)) ஹா ஹா ஹா:)

      நீக்கு
  4. கொஞ்சம் சுறுசுறுப்பா புது இடுகைகள் போடறது...இல்லைனா அங்க அங்க ரெகுலரா தலையைக் காட்டறது. இரண்டும் செய்யாமல் இருக்கீங்களே.. என்னவோ எலெக்‌ஷன் பிரச்சாரத்தில் பிஸி என்பதுபோல...

    பதிலளிநீக்கு
  5. என்ன கோபு அண்ணன் வழமையாக வலைப்பதிவர்களைத்தான் கூட்டி வந்து போஸ்ட் போடுவீங்க:).. இம்முறை மோடி அங்கிளோடு வந்திருக்கிறீங்க:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவி அதிரா:) May 31, 2019 at 1:28 AM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //என்ன கோபு அண்ணன் வழமையாக வலைப்பதிவர்களைத்தான் கூட்டி வந்து போஸ்ட் போடுவீங்க:).. இம்முறை மோடி அங்கிளோடு வந்திருக்கிறீங்க:))//

      மோடி அவர்கள் மிகவும் நல்லவர். எளிமையானவர். சுயநலமற்றவர். துணிச்சல் மிக்கவர். அறிவாளி. தேசபக்தி கொண்டவர். தன் மீது இதுவரை ஊழல் கரை ஏதும் படியாத + படியவிடாத ஒரே அரசியல்வாதி. ஏழை எளிய மக்களின் முன்னேற்றம் + ஒட்டுமொத்த இந்திய நாட்டின் முன்னேற்றம் போன்றவற்றிற்காக மட்டுமே திட்டமிட்டு எந்நேரமும் சிந்தித்து செயல் படுபவர். அவர் தலைமையினால் மட்டுமே இந்தியா, இன்று உலகளவில் பெரும்பாலான நாடுகளால் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது.

      தாங்கள் வசிக்கும் UK நாட்டின் பிரபல இதழான ‘BRITISH HERALD' வாங்கிப் படித்துப் பாருங்கள் ... தெரியும்.

      -=-=-=-=-

      UK BASED MAGAZINE 'BRITISH HERALD', NAMES NARENDRA MODI AS:

      'WORLD'S MOST POWERFUL PERSON'

      A MATTER OF PRIDE INDEED!

      -=-=-=-=-

      நீக்கு
    2. அதெல்லாம் சரி கோபு சார்... ஆனால் இந்த மாதிரி மேகசின்கள், உலகத்தில் டாப் 100 அழகிகள் என்றெல்லாம் கட்டுரை போடும்போது, அந்த அழகிகள்லாம் எனக்கு 'கிழவிகள்' மாதிரின்னா தெரியுது. அதுனால மேகசின் சொல்றதை வச்சு எதையும் அனுமானிக்க முடியாதில்லையா?

      நீக்கு
    3. நெல்லைத்தமிழன் June 2, 2019 at 10:31 AM

      //அதெல்லாம் சரி கோபு சார்... ஆனால் இந்த மாதிரி மேகசின்கள், உலகத்தில் டாப் 100 அழகிகள் என்றெல்லாம் கட்டுரை போடும்போது, அந்த அழகிகள்லாம் எனக்கு 'கிழவிகள்' மாதிரின்னா தெரியுது. அதுனால மேகசின் சொல்றதை வச்சு எதையும் அனுமானிக்க முடியாதில்லையா?//

      இது ஏதோ உள்நோக்கம் கொண்ட கேள்வியாக என்னிடம் உம்மால் கேட்கப்பட்டுள்ளது.

      பதிவுலக டாப் 10 அழகிகளுள் ஒருத்தி என தன்னைத்தானே கடந்த 61 வருடங்களாக சொல்லித்திரியும் ஸ்வீட் 16 அவர்கள் அதி வேகமாக, இங்கு வருகை தந்து தங்களுக்கு மிகச்சரியான பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கிறேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      நீக்கு
  6. அதுசரி கடசியில் ஆருக்கு அல்வாக் குடுக்கிறார் கோபு அண்ணன்:))

    பதிலளிநீக்கு
  7. ஆஆஆஆ உங்களுக்கு ஒரு நியூஸ் சொல்லோணும்.. அதை இங்கு சொல்ல மாட்டேன் என் போஸ்ட்டில் சொல்கிறேன்ன்.. வராவிட்டாலும்.., வழமைபோல, ஒட்டியிருந்து படிச்சுச் சிரியுங்கோ:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  8. நம் நாட்டின் 16 வது பிரதமராக பொறுப்பேற்ற திரு .மோடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவதை அவர்களின், அசரீரி போன்ற வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  9. உங்கள் வாழ்த்துகளுடன் எங்கள் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். May 31, 2019 at 6:40 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //உங்கள் வாழ்த்துகளுடன் எங்கள் வாழ்த்துகளும்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
    2. // ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் // தப்பித்தவறிக் கூட கொல்கத்தா பக்கம் போயிடாதீங்க! மம்தா ரொம்பக் கோபக்காரர்!

      நீக்கு
    3. அடியேன் கொல்கத்தா பக்கம் இதுவரை போக வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இனியும் நான் அங்கெல்லாம் போவதாகவும் இல்லை. எச்சரிக்கைக்கு நன்றி. இதுபற்றி எதற்கும் நம் ஸ்ரீராம் அவர்களிடமும் சொல்லி வையுங்கள். :)

      நீக்கு
    4. கேஜிஜி சார்... எனக்கு நேற்றுதான் மம்தாவிடமிருந்து கடிதம் வந்தது. இந்த கோபு சார் என்பவர் யார், அவர் அட்ரஸ் என்ன என்று தெரிவிக்கும்படி.

      நானும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ..சொல்லிடலாமா இல்லை பாவம் பார்த்து விட்டுடலாமா என்று..(ஆனா கோபு சார் என்னிடம், அவர் நிர்மலா சீதாராமனுக்கு மிக வேண்டப்பட்டவர் என்று சொல்லியிருக்கிறார்--என்ன இருந்தாலும் நிதிக்கும் நிதிக்கும்தானே பொருத்தம்-புரியுதா கோபு சார்?)

      நீக்கு
    5. நெல்லைத்தமிழன் June 2, 2019 at 7:11 PM

      //(ஆனா கோபு சார் என்னிடம், அவர் நிர்மலா சீதாராமனுக்கு மிக வேண்டப்பட்டவர் என்று சொல்லியிருக்கிறார்--//

      ஸ்வாமீ, வாட்ஸ்-அப்பில் நான் சொல்லியிருந்த செய்தியே வேறு. தாங்கள் இங்கு சொல்லியிருக்கும் செய்தி முற்றிலும் வேறு.

      இது பலரையும் குழப்பிவிடக்கூடும் என்பதால் ஒரு சில விளக்கங்கள் கொடுக்க வேண்டியது எனது கடமையாகிறது.

      இன்றைய மத்திய அரசின் நிதித்துறை அமைச்சரான, மிகவும் மரியாதைக்குரிய திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது (அதாவது சுமார் ஓராண்டுக்கு முன்பு), திருச்சி பற்றிய தனது மலரும் நினைவுகளாகச் சொல்லியிருந்த ஆடியோ பதிவினைத் தங்களுக்கு நான் வாட்ஸ்-அப் மூலம், சமீபத்தில் (02.06.2019 அன்று) அனுப்பியிருந்தேன்.

      இன்றைய மத்திய நிதி அமைச்சர் அவர்கள், திருச்சி சங்கரன்பிள்ளைத் தெருவில் (தற்சமயம் நாங்கள் குடியிருக்கும் வடக்கு ஆண்டார் தெருவுக்கு அடுத்த தெருவுக்கு அடுத்த தெருதான் சங்கரன்பிள்ளைத் தெரு), அமைந்திருக்கும் [SVS] ’சாவித்ரி வித்யாசாலா பெண்கள் பள்ளி’ என்ற பள்ளிக்கூடத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்கள். தினமும் திருச்சி ஜங்ஷன் to ஸ்ரீரங்கம் செல்லும் Route No. 1 Town Bus இல் பயணித்து, மெயின்கார்ட் கேட் என்ற இடத்தில் இறங்கி, எங்கள் தெருக்களின் வழியாக (சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்) நடந்தே பள்ளிக்குச் சென்றுள்ளார்கள்.

      அவர்கள் இவ்வாறு பள்ளியில் படிக்கும் நாட்களில் (May be in the years : 1970 to 1974) தன் கூடவே படித்துள்ள, தனக்கு மிகவும் நெருக்கமான, அன்புத் தோழி ஒருவரைப் பற்றி வெகுவாக புகழ்ந்து இருமுறை சொல்லியிருந்தார்கள். அந்தத் தோழி ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்ந்தவர் என்றும், அழகாகவும் மிகச் சரளமாகவும் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் பிரமிக்கச் செய்வார் என்றும், தன் பேச்சுக்களின் மூலம் அனைத்துப் பெண்களுக்கும், தைர்யமும் தன்னம்பிக்கையும் ஊட்டியவர் என்றும், அவர்களிடம் யாரும் விவாதத்தில் கலந்துகொண்டு ஜெயிக்கவே முடியாது என்றும் மிகவும் பெருமையாகச் சொல்லியிருந்தார்கள்.

      அந்தத் தோழி அதே பள்ளியின் கல்லூரியான SRC [SEETHALAKSHMI RAMASAMY COLLEGE) யில் தன் மேற்படிப்புகளைத் தொடர்ந்ததுடன், Doctorate வாங்கி, அதே கல்லூரியில் ENGLISH PROFESSOR ஆக பணியாற்றி, பின்பு அதே கல்லூரியின் ENGLISH DEPARTMENT'S 'HOD' ஆகி சமீபத்தில் (2017) பணி ஓய்வு பெற்றுள்ளார்கள்.

      மந்திரி அவர்கள், தன் பள்ளிப்படிப்பு முடிந்ததும், திருச்சியிலிருந்து புதுடெல்லிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகளால், அங்குள்ள ஜவஹர்லால் நேரு யுனிவெர்சிடியில் தன் மேற்படிப்பினை தொடர்ந்துள்ளார்கள்.

      மந்திரி அவர்களின் அந்த நெருங்கிய பள்ளித்தோழி அவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக, எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், நாங்கள் வசித்து வரும் இரண்டாம் தளத்திலேயே, எங்களின் அண்டை வீட்டுக்காரராக இருந்து வருகிறார் என்பது மட்டுமே, நான் வாட்ஸ்-அப்பில் தங்களிடம் சொல்லியிருந்த முக்கியமானதொரு செய்தியாகும்.

      இதைத்தான் தாங்கள், ”கோபு, மத்திய நிதி மந்திரிக்கு மிகவும் வேண்டியப்பட்டவர்” என திரித்துக்கூறி குழப்பி விட்டுள்ளீர்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

      >>>>>

      நீக்கு
    6. கோபு To நெல்லைத்தமிழன்

      //என்ன இருந்தாலும் நிதிக்கும் நிதிக்கும்தானே பொருத்தம்-புரியுதா கோபு சார்? :)//

      நான் முன்பு எப்போதோ ஒருகாலக்கட்டத்தில், ஒரு மிகப்பெரிய பொதுத்துறை மஹாரத்னா நிறுவனத்தின், நிதித்துறையில், மிக மிகக் குட்டியூண்டு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். உண்மைதான்.

      அதைப்போய் ஒப்பிட்டு எப்படி இங்கு நிதிக்கும் நிதிக்கும் பொருத்தம் என்று சொல்லுகிறீர்களோ ... புரியவில்லை.

      மத்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான கேபினட் அமைச்சர் (நிதி மந்திரி) என்பவர் இமயமலையின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் போன்றவர். நானோ திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் எங்கோ ஒரு மூலையில் சுற்றித்திரியும் பிள்ளையார் எறும்பு போன்றவன். மிக மிகச் சாதாரணமானவன். அடியேன் பிரபலம் ஏதும் இல்லாத, மோஸ்ட் வழுவட்டையும்கூட. நான் இங்கு சொல்லியுள்ளது உங்களுக்குப் புரிகிறதா? ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      அன்புடன் கோபு

      நீக்கு
    7. பார்த்தீர்களா கோபு சார்..உங்களிடமிருந்து நெடிய பதிலை வாங்கிவிட்டேன்.

      நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு லக்..பெரிய இடத்தில் இருக்கிறார். அவ்வளவுதான்.

      நீங்கள் 'நிதி'யைத்தானே பெல்லில் ஹேண்டில் பண்ணிக்கொண்டிருந்தீர்கள்.

      நீக்கு
    8. நெல்லைத்தமிழன் June 4, 2019 at 11:00 AM

      //பார்த்தீர்களா கோபு சார்.. உங்களிடமிருந்து நெடிய பதிலை வாங்கிவிட்டேன்.//

      நீர்தான் இதிலெல்லாம் மிகப்பெரிய கில்லாடி ஆச்சே !

      நீர் பேசாமல் அரசியல் வாதியாக ஆகி, வாழ்க்கையில் இன்னும் ஜொலித்திருக்கலாம்.

      >>>>>

      நீக்கு
    9. கோபு >>>>> நெல்லைத்தமிழன்

      //நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு லக்.. பெரிய இடத்தில் இருக்கிறார். அவ்வளவுதான்.//

      அதனால் என்ன? நமக்கும் இதில் மிகவும் சந்தோஷம் மட்டுமே. ’லக்’ மட்டுமல்ல. திறமைசாலியும் கூட.

      அதுபோன்ற மிகப்பெரிய பொறுப்புக்களில் எல்லாம் மாட்டாமல், எளிமையான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, மிகச் சாதாரண பிரஜையாக இருந்துகொண்டு, வாய்க்குப்பிடித்ததை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு, ’இதுவே நமக்குப் போதும்’ என்ற மனதுடனும், மன நிம்மதியுடனும், நினைத்த போதெல்லாம் ஹாப்பியாகத் தூங்கிக்கொண்டு இருப்பதே, எனக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய ’லக்’ அல்லவா!

      இன்று பொறுப்பு ஏதும் இல்லாத எனக்கு இருக்கும் ’மன நிம்மதி’ வேறு யாருக்கு இருக்க முடியும்?????

      >>>>>

      நீக்கு
    10. கோபு >>>>> நெல்லைத்தமிழன்

      //நீங்கள் 'நிதி'யைத்தானே பெல்லில் ஹேண்டில் பண்ணிக்கொண்டிருந்தீர்கள்.//

      அடியேன் பணியாற்றிடும் போது ஒரே நாளில் ரொக்கமாக சுமார் ரூபாய் 15 கோடிகள் வரை மட்டுமே ஹேண்டில் செய்யும்படியான சந்தர்ப்பங்கள் நேர்ந்துள்ளன. அதுதான் அடியேன் ரொக்கமாக ஹேண்டில் செய்துள்ள மிக அதிக பக்ஷ தொகையாகும்.

      இந்திய நிதி அமைச்சர் என்பவர், ஒவ்வொரு ஆண்டும் பல லக்ஷக்கணக்கான கோடிகளில் வரவு செலவு பட்ஜெட் போடக்கூடிய மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர் என்பது உங்களுக்கே தெரியுமே!!!!!

      அதனால் அவர்களையும் என்னையும் ஒப்பிடுவது கொஞ்சம்கூட நியாயமே இல்லை என்பதை, தங்களுக்கு அடியேன் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  10. மோடி வாழ்க, நீங்களும் வாழ்க!

    பதிலளிநீக்கு
  11. கௌதமன் June 1, 2019 at 5:28 PM

    //மோடி வாழ்க, நீங்களும் வாழ்க!//

    மிக்க நன்றி. K G கெளதமன் ஜீ யும் வாழ்க வாழ்க !!

    பதிலளிநீக்கு
  12. உங்கள் வாழ்த்துகளுடன் எங்கள் வாழ்த்துகளும்! ... நம் நாட்டின் பெருமையை உலகுக்கு ஓங்கி உரைத்த உத்தமர் மொடிஜி !!!
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு