என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் !

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.


அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார  சிறுகதை விமர்சனப்போட்டிகளில் பேரெழுச்சியுடன் கலந்துகொண்டு, 24 முறைகள் முதல் பரிசுகளையும், 7 முறைகள் இரண்டாம் பரிசுகளையும்,  ஒரேயொரு முறை மட்டும் மூன்றாம் பரிசினையும் வென்று, ஆக மொத்தம் 32 வெற்றிகளுடன், இறுதிச்சுற்று வரை முதலிடத்தினைத் தக்க வைத்துக்கொண்டு, சாதனைகள் பல புரிந்து ’ஆட்ட நாயகி’ , ‘விமர்சன வித்தகி’ என்றெல்லாம் அனைவராலும் புகழப்பட்டவரும், தற்சமயம் ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான, ‘கீத மஞ்சரி’ வலைப்பதிவர்  திருமதி. கீதா மதிவாணன் அவர்களை, எங்கள் இருவரின் சொந்த ஊரான திருச்சியில் இன்று சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.  

வலைத்தளம்: கீத மஞ்சரி


VGK's சிறுகதை விமர்சனப்போட்டிகள் - 2014 இல்
இவர்களுடைய சாதனைகளைப் பற்றி அறிய 
ஒருசில இணைப்புகள் இதோ:

பரிசு மழை பற்றியதோர் ஒட்டு மொத்த அலசல்

‘கீதா விருது’ - புதிய விருதுகள் (பரிசுகள்) அறிமுகம்

திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் எழுதியுள்ள ’நேயர் கடிதம்’

போட்டியின் இறுதிக்கதையான ‘மனசுக்குள் மத்தாப்பூ’ வுக்கு 
இவர்கள் எழுதி ’முதல் பரிசு’ பெற்றுள்ள விமர்சனம். 

போட்டி பற்றிய பல்வேறு அலசல்களும் புள்ளி விபரங்களும்.

என்னை மிகவும் மகிழ்வித்துச் சிரிக்கவும், சிந்திக்கவும்,  
சொக்கவும் வைத்த இவர்களின் சில விமர்சனங்கள்:

’ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்’


வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., புதிய கட்சி ’மூ.பொ.போ.மு.க’ உதயம்

மாமியார்


’கீத மஞ்சரி’அவர்கள் தமிழில் எழுதியுள்ள 
‘என்றாவது ஒரு நாள்’ 
என்ற மொழி பெயர்ப்பு நூலுக்கு, அடியேன் கொடுத்துள்ள புகழுரைப் 
பதிவுகளுக்கான இணைப்புகள் (படங்களுடன்)கோபு சாரின் பார்வையில் என்றாவது ஒரு நாள்... By Mrs. Geetha


இன்றைய எங்கள் சந்திப்பு, உலகப்புகழ் பெற்ற ’திருச்சி சாரதாஸ்’ ஜவுளிக்கடல் அமைந்துள்ள, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரோட்டின் [NSB Road] வட மேற்கு மூலையில், தெற்கு நோக்கியுள்ள ‘ஹோட்டல் ரகுநாத்’ தில் பகல் 10.50 மணி முதல் 11.20 மணி வரை நடைபெற்றது. இந்த இனிய சந்திப்பினில் எடுக்கப்பட்டுள்ள ஒரு சில புகைப்படங்கள் .... இதோ தங்களின் பார்வைக்காக: 
^உலகப் புகழ்பெற்ற பிரபல எழுத்தாளருக்கு 
பொன்னாடை அணிவித்து வரவேற்பு^


^14.04.2015 முதல் இவர்களுக்காகவே ஒதிக்கீடு செய்து, என்னிடம்
பாதுகாத்து வந்த, மூன்று நூல்களை நினைவுப்பரிசாகக் கொடுத்தல்^ 

 ^ஸ்வீட், காரம், காஃபி, பழங்களுடன் வேறு சில நினைவுப்பரிசுகள்^
  
^அவர்கள் எழுதி வெளியிட்டிருந்த நூலில் 
இன்று மீண்டும் அன்புடன் கையொப்பமிட்டு
23.02.2018 என்ற தேதியும் போட்டுக்கொடுத்தார்கள்^அடியேன் அவர்களுக்குக் கொடுத்திருந்த நினைவுப் பரிசுகளில்
ஒரு புறம் விநாயகரும், மறுபுறம் பெருமாளுமாக பொறிக்கப்பட்டிருந்த 
தங்கக்கலர் சாவி வளையம் ஒன்றே ஒன்று மட்டுமே !

 

காமதேனுபோல அவர்கள் ஒன்றுக்குப் பத்தாக 
எனக்களித்துள்ள பத்து சாவி வளையங்கள் இதோ:

ஆறு பூனைக்குட்டிகள்
இரண்டு கங்காருகள்
100% Metal Key Rings - 2 Numbers 
Designed in Australia beautifully Etched
with 'Sydney Bridge' and 'Kangaroo'

^நிகழ்வுக்குப் பொருத்தமாக இன்றைய (23.02.2018) 
தினமலர்-சிறுவர் மலர் அட்டைப்படம்^இந்த மேற்படி படத்திற்கான இதிகாச-புராணக்கதையினை, 
தினமலர் - சிறுவர் மலரில் எழுதியுள்ளவர் 
நம் ஹனி மேடம் (தேனம்மை லெக்ஷ்மணன்) அவர்கள். 
அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
http://honeylaksh.blogspot.com/2018/02/7.html கேட்டதும் கொடுப்பவனே .. கிருஷ்ணா - கிருஷ்ணா !
கேட்பதெல்லாம் கொடுப்பவளே .. காமதேனு !!


திருமதி. கீதா அவர்களை பத்திரமாக தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்து, குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், இந்த இனிய எங்கள் சந்திப்பு நிகழவும், புகைப்படங்கள் எடுக்கவும் பெரிதும் உதவிசெய்த Er. J.SENTHIL KUMAR, Consulting Civil Engineer, SATHYAM Builders and Contractors, Trichy-11 [Brother of Mrs. Geetha Mathivanan] அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னையும் என் மனைவியையும் ஒரு முறை ஆஸ்திரேலியாவுக்கு வருகை தருமாறு அன்புடன் அழைப்பு விடுத்துவிட்டு அவசரமாகப் புறப்பட்டு விட்டார்கள், திருமதி. கீதா அவர்கள். என்னுடைய அடுத்த பதிவு, ஒருவேளை ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரையாக இருக்குமோ என்னவோ ! :)     

 

 

 

   

திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
இதுவரை நான் நேரில் சந்தித்துள்ள 
43-வது பதிவராகும்.

என்னுடைய மற்ற சந்திப்புகள் பற்றிய 
முழு விபரங்களை, அரிய படங்களுடன் அறிய
இதோ சில இணைப்புகள்:

சந்தித்த வேளையில் .....


பகுதி-1 க்கான இணைப்பு:
பகுதி-2 க்கான இணைப்பு:
பகுதி-3 க்கான இணைப்பு:
பகுதி-4 க்கான இணைப்பு:
பகுதி-5 க்கான இணைப்பு:

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் .....

பகுதி-1 க்கான இணைப்பு: 
http://gopu1949.blogspot.in/2015/02/1.html

பகுதி-2 க்கான இணைப்பு:

பகுதி-3 க்கான இணைப்பு:


^பகுதி-3 க்கான இணைப்பு:^

பகுதி-4 க்கான இணைப்பு:
பகுதி-5 க்கான இணைப்பு:
பகுதி-6 க்கான இணைப்பு:
பகுதி-7 க்கான இணைப்பு:

புதுக்கோட்டை via மலைக்கோட்டை

மீண்டும் ஓர் இனிய சந்திப்பு

யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே .... !

முனைவர் ஐயாவுடன் ‘ஹாட்-ட்ரிக்’ சந்திப்பு

சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன் 81+ வயது இளைஞர்

2017 ......... 2018 வாழ்த்துகள்

40 மற்றும் 41 ஆவது பதிவர்களை நான் சந்தித்தது
ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி-6

42-ஆவது பதிவர் சந்திப்பு
ஹனிமூன் வந்துள்ள பதிவர்!

என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


94 கருத்துகள்:

 1. மிக அருமையான சந்திப்பு, ஆனா ஏன் இவ்ளோ குறுகிய நேரத்தில் முடிவடைந்தது?:)...

  நேத்திரம் சிப்ஸ் ஆருக்கு?..:)

  //என்னுடைய அடுத்த பதிவு, ஒருவேளை ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரையாக இருக்குமோ என்னவோ ! :) //
  .. நிட்சயம் முயற்சி செய்யுங்கள்.. போய்வர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athiraமியாவ் February 24, 2018 at 2:53 AM

   வாங்கோ அதிரா, வணக்கம்.

   நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.

   எத்தனையோ முறை நீங்கதான் முதல் வருகை தந்திருக்கீங்கோ.

   அதற்காக இதோ http://gopu1949.blogspot.in/2017/06/8-of-8.html இந்தப்பதிவிலே, பம்பர் பரிசுகளாக வாங்கிக் குவித்துள்ளீர்கள்.

   அதிலுள்ள 153 பின்னூட்டங்களில் மேலிருந்து கீழே மூன்றாவதில் ஓர் அருமையான, அழகான CERTIFICATE கூட என்னிடமிருந்து வாங்கியிருக்கீங்கோ. அடிக்கடி அதனைப் படித்துப்பார்த்து நான் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். :)

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> அதிரா (2)

   //மிக அருமையான சந்திப்பு,//

   மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். மிகவும் சந்தோஷம், அதிரா.

   >>>>>

   நீக்கு
  3. கோபு >>>>> அதிரா (3)

   //ஆனா ஏன் இவ்ளோ குறுகிய நேரத்தில் முடிவடைந்தது?:)...//

   மூன்றாண்டுகளுக்கு முன்பே நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் திருச்சியில் சந்திக்க முயற்சித்தோம். அப்போதும் அவர்கள் இங்கு திருச்சிக்கு வந்திருந்தும்கூட, இருவருக்குமே, சந்திப்பதற்கான குடும்ப சூழ்நிலைகள் சரிவர அமையாமல் போய்விட்டன.

   இப்போது ஒரு மூன்று மாதங்கள் முன்பு, வரும் பிப்ரவரி 2018 இல், 1-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள், ஏதேனும் ஒருநாள் திருச்சியில் தங்களை எப்படியும் சந்திக்க முயற்சிப்பேன் என எச்சரிக்கை கொடுத்து, என்னைக் கொஞ்சம் பயமுறுத்தியிருந்தார்கள். :) அதிலிருந்தே எனக்கு மிகவும் பதட்டமாகி விட்டது. :))

   நான் வாட்ஸ்-அப் மூலம் 03.02.2018 அன்று, இதைப்பற்றி அவர்களுக்கு நினைவூட்டியும் கூட, பிறகு 21.02.2018 வரை எனக்கு அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாததாலும், அவர்கள் சொல்லியிருந்த கெடுத்தேதிக்கு, இன்னும் இருப்பதோ நான்கே நான்கு நாட்கள் மட்டுமே என்பதாலும், ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தபடி வருவார்களோ அல்லது ஒருவேளை வரவே மாட்டார்களோ என நானும் நினைத்திருந்தேன்.

   வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாலும், இங்கு இந்தியாவில் தமிழ்நாடு + பாண்டிச்சேரியில், நிறைய உறவினர்கள் + நண்பர்களை சந்திக்க வேண்டியிருந்ததாலும், அவர்கள் PROGRAMME இல் TIGHT SCHEDULE ஆகியுள்ளது. இது நாடுவிட்டு நாடு வரும் எல்லோருக்குமே மிகவும் சகஜமாக ஏற்படக்கூடிய அனுபவங்கள் மட்டுமே.

   வாட்ஸ்-அப் கனெக்‌ஷன் இல்லாத வேறு ஒரு புதிய கைபேசி மூலம் எனக்கு 22.02.2018 வியாழக்கிழமை மாலை 5.40 மணிக்கு ஓர் SMS செய்தி அனுப்பியிருந்தார்கள்.

   அதாவது ”மறுநாள் 23.02.2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணி சுமாருக்கு நாம் ஒருவரையொருவர், திருச்சி மலைக்கோட்டைக் கீழ் பிள்ளையாரான ‘மாணிக்க விநாயகர்’ சந்நதியில் சந்திக்க, தங்களுக்கு செளகர்யப்படுமா .. கோபு சார்?” எனக் கேட்டிருந்தார்கள்.

   பிறகு ஒருவருக்கொருவர் பலமுறை போனில் பேசி, கோயிலாக இல்லாத இந்தப் பொதுவானதொரு இடத்தினை எங்களுக்குள், என் ஆலோசனைப்படி தேர்வு செய்துகொண்டோம்.

   கோயிலில் சந்தித்திருந்தால் அங்குள்ள கும்பலில் எதுவும் எங்களுக்குள் பேசவும் முடியாது. அப்படியே பேசினாலும் காதில் சரியாக விழாதபடிக்கு ஒரே சப்தமாக இருந்திருக்கும். மேலும் அங்கு கோயிலில் இதுபோலெல்லாம் புகைப்படங்களும் எடுக்க முடியாமல் போய் இருந்திருக்கும்.

   நான் சொல்லியிருந்த அந்த ‘ஹோட்டல் ரகுநாத்’ வாசலுக்கு அவர்கள் வந்து சேர்ந்ததும் எனக்கு போன் செய்தார்கள். இந்த சந்திப்புக்கு காலை 10 மணிக்கே ரெடியாக இருந்த நானும் என் மனைவியும் உடனே ஒரு ஆட்டோவில் ஏறி அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கு போய்ச் சேர்ந்துவிட்டோம்.

   காலை வேளை தாண்டி மதிய வேளையின் ஆரம்பமாக இருந்ததால் அந்த ஹோட்டலில், அப்போது அதிகமாகக் கும்பல் இல்லாமல் FREE ஆக இருந்ததில் எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருந்தது. :)

   எப்படியோ ஒரு அரை மணி நேரமாவது ஒருவரையொருவர் நிம்மதியாகச் சந்தித்துப் பார்க்கவும், பேசவும் ஓர் வாய்ப்புக் கிடைத்ததில், இரு தரப்பினருக்குமே மகிழ்ச்சியோ மகிழ்ச்சி மட்டுமே.

   >>>>>

   நீக்கு
  4. கோபு >>>>> அதிரா (4)

   //நேத்திரம் சிப்ஸ் ஆருக்கு?..:) //

   இது உங்களின் உயிர்தோழிக்கு மிகவும் பிடித்ததொரு தீனி அல்லவா ! :)

   http://gopu1949.blogspot.in/2017/06/2-of-8.html இந்தப் பதிவின் இறுதியில் காட்டியுள்ள படங்களை மீண்டும் ஒருமுறை இப்போது பார்த்து சிரியுங்கோ, அதிரா. :))

   >>>>>

   நீக்கு
  5. கோபு >>>>> அதிரா (5)

   **என்னுடைய அடுத்த பதிவு, ஒருவேளை ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரையாக இருக்குமோ என்னவோ ! :)** //நிட்சயம் முயற்சி செய்யுங்கள்.. போய்வர வாழ்த்துக்கள்.//

   லண்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, குவைத், மஸ்கட், பஹ்ரைன் போன்ற வெளிநாடுகளிலும், உள் நாட்டிலேயே மிக முக்கியமாக மும்பை, ஹைதராபாத், சென்னை, கோவை, திருநெல்வேலி போன்ற ஊர்களில் தற்சமயம் உள்ள என் பதிவுலகச் சொந்தங்களையும் நேரில் சென்று பார்த்துவிட்டு வர ஆசையாகத்தான் உள்ளது. :)))))

   நான் முதலில் ’லண்டன்’ என்று எழுதியுள்ளதும் உடனே பயந்துடாதீங்கோ, அதிரா. அங்கு லண்டனில் அதிரா + அஞ்சுவைத் தவிர எனக்கு மிகவும் முக்கியமானதொரு தமிழ்ப் பதிவுலகத் தோழி ஒருத்தி இருக்கிறாள்.

   என் செல்ல மகளான அவள் மிகப்பெரிய செல்வ மகளும் கூட. அவள் மனஸோ தங்கமோ தங்கம். அவளுக்கு எங்கள் இருவர் மீதும் கொள்ளைப் பிரியம் உண்டு.

   நான் அவளிடம் வாயசைத்தால் போதும் .... அடுத்த நாளே ஏர் டிக்கெட் + விஸா என் கைகளுக்கு வந்து சேர்ந்துவிடும். :) ப்ளேனிலிருந்து இறங்கியதும் எங்களை அன்புடன் அழைத்துச்செல்ல கப்பல் போன்ற காரில் வந்து, தவம் செய்து காத்துக்கொண்டு நிற்பாளாக்கும். :))

   நான் தான் என் வீட்டை விட்டு எங்கும் புறப்பட்டுப் பயணம் செய்ய ஆர்வமே இல்லாத உலக மஹா சோம்பேறியாக உள்ளேன்.

   சொர்க்கமே ஆனாலும் சொந்த ஊர் + சொந்த வீடு போல வருமா?

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, அதிரா.

   அன்புடன் கோபு அண்ணன்

   நீக்கு
 2. மிக்க மகிழ்ச்சி. நீங்கள் தம்பதி சமேதராக ஆஸ்த்ரேலியா சென்று வர என் பிரார்த்தனைகளை ஆண்டவனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப.கந்தசாமி February 24, 2018 at 4:14 AM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //மிக்க மகிழ்ச்சி.//

   தங்களின் வருகையில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

   //நீங்கள் தம்பதி சமேதராக ஆஸ்த்ரேலியா சென்று வர என் பிரார்த்தனைகளை ஆண்டவனுக்கு சமர்ப்பிக்கிறேன்.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   நான் பைசா செலவு இல்லாமல், என் கற்பனைகளிலும், கனவுகளிலும், அடிக்கடி எல்லா நாடுகளுக்கும், எல்லா ஊர்களுக்கும், எல்லா வீடுகளுக்கும் சென்று வந்து மகிழ்ந்து கொண்டிருப்பவன் என்பது உங்களுக்கே தெரியுமே ஸார்.

   நேரில் அங்கு சென்றால், எங்களை அந்த நாட்டு கங்காருகள் கடித்துக் குதறி விடும் ஸார். பழகிப்போன நம்மூர் நாய்களே மேல். :)

   அதனால் ஆண்டவனிடம் தாங்கள் சமர்ப்பித்துள்ள பிரார்த்தனைகளை உடனடியாக வாபஸ் வாங்கிடுங்கோ, ஸார்.

   அன்புடன் கோபு

   நீக்கு
  2. ப.கந்தசாமி February 24, 2018 at 4:14 AM

   //நீங்கள் தம்பதி சமேதராக ஆஸ்த்ரேலியா சென்று வர என் பிரார்த்தனைகளை ஆண்டவனுக்கு சமர்ப்பிக்கிறேன்.//

   இப்படித்தான் ’நம்மாளு’ ஒருத்தன் போஸ்ட் கார்டு வாங்கி ஆண்டவனுக்கே லெட்டர் எழுதினான்.

   அவனுக்கு ஒரு நூறு ரூபாய் கிடைத்தால், அதை வைத்துத் தான் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என நினைத்தான்.

   நண்பர்கள் பலரிடமும் கேட்டுப்பார்த்தான். யாரும் இவனுக்குப் பணம் தந்து உதவ முன்வரவில்லை.

   யோசித்தான். ஆண்டவன் தானே நம்மைப் படைத்தார். அவரிடமே கேட்டுப்பார்த்து விடுவோம் என ஒரு முடிவுக்கு வந்தான். ஒரு போஸ்ட் கார்டு வாங்கினான். அதில் கீழேயுள்ளபடி எழுதினான்:

   அன்புள்ள கடவுள் அவர்களுக்கு, வணக்கம். என்னிடம் ஒரு நூறு ரூபாய் இருந்தால் ஏதேனும் சிறு தொழில் செய்து நான் பிழைத்துக்கொள்வேன். அதை இங்குள்ள மனிதர்கள் யாரும் எனக்குக் கொடுத்து உதவ தயாராக இல்லை. அதனால் உங்களுக்கு இந்தக்கடிதம் எழுதியுள்ளேன். எனக்கு உடனடியாக ரூபாய் நூறு அனுப்பி வைக்கவும். இப்படிக்கு xxxxx என எழுதி தன் விலாசத்தையும் எழுதி விட்டான்.

   போஸ்ட் கார்டைத் திருப்பினான். அதில் பெறுபவர் விலாசம் [To Address] எழுத வேண்டுமே. இவனுக்குக் கடவுளின் விலாசம் தெரியவில்லை. யோசித்தான். எப்படியும் போஸ்ட் மாஸ்டர் அவர்களுக்கு எல்லோருடைய விலாசமும் தெரிந்து இருக்கும் என்று நம்பினான். அதனால் ‘உயர்திரு. கடவுள் அவர்கள், Care of Postmaster, Teppakulam Post Office, Main Guard Gate, Tiruchirapalli-620 002 என்று எழுதி தபால் பெட்டியில் சேர்த்து விட்டான்.

   அந்த போஸ்ட் மாஸ்டர் அவர்கள், நம் கோயம்பத்தூர் முனைவர் பழனி கந்தசாமி போலவே மிகவும் நல்ல மனசு படைத்தவர். அவர் யோசித்தார். யாரோ ஒரு அப்பாவி பாவம் ..... நூறு ரூபாய் பணம் வேண்டியதால், கடவுளுக்கே லெட்டர் எழுதியுள்ளான். அவனுக்கு நாமே, கடவுள் சார்பில் ஏதேனும் பணம் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்து உதவி செய்வோம் என ஒரு முடிவுக்கு வந்தார்.

   தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் சொல்லி இவனுக்காகவே பணம் வசூல் செய்தார். அவரிடம் வேலை பார்த்த ஊழியர்கள் எல்லோரும் உடனடியாக ஐந்து, பத்து எனப் பணம் கொடுத்தனர்.

   மொத்த வசூல் ரூபாய் 90 ஆனது. சரி வசூல் ஆன வரை அனுப்பி வைத்து விடுவோம் என்ற நல்ல எண்ணத்தில், மணியார்டர் கமிஷனையும் தானே ஏற்றுக்கொண்டு ரூ. 90 பணத்தை அவன் எழுதியிருந்த விலாசத்திற்கு மணியார்டரில் அனுப்பி வைத்தார். ’நம்மாளு’ம் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டான்.

   மீண்டும் ஒரு போஸ்ட் கார்டு வாங்கினான். அதில் கீழ்க்கண்டவாறு எழுதினான்:

   அன்புள்ள கடவுள் அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் அனுப்பி வைத்த தொகை எனக்கு வந்து சேர்ந்தது. மிக்க நன்றி. இருப்பினும் தங்களுக்கு, அடியேன் ஓர் ஆலோசனை சொல்ல விரும்புகிறேன். இனிமேல் தாங்கள், எனக்குப் பணம் அனுப்புவதாக இருந்தால், இந்தப் போஸ்ட் மாஸ்டர் மூலம் அனுப்ப வேண்டாம். அவர் நடுவில் ஒரு பத்து ரூபாயைப் போட்டுத் தள்ளி விடுகிறார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிக்கு xxxxx

   [’என் கட்சி’ நண்பரான ’தென்கச்சி’ கோ. சாமிநாதன் அவர்கள் சொல்லி நான் கேட்டது இது.]

   அன்புடன் கோபு :)

   நீக்கு
 3. அருமையான சந்திப்பு.
  வழக்கம் போல் கலக்கல் போட்டோஸ்..
  சுட்டிகளுடன்.

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரிஷபன் February 24, 2018 at 4:36 AM

   வாங்கோ என் எழுத்துலக குருநாதர் அவர்களே,
   வணக்கம்.

   //அருமையான சந்திப்பு. வழக்கம் போல் கலக்கல் போட்டோஸ்..சுட்டிகளுடன். வாழ்த்துகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், சுட்டித்தனமான அருமையான கலக்கலான கருத்துக்களும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   அன்புடன் தங்கள்
   வீ.............ஜீ

   நீக்கு
 4. விமர்சன வித்தகி... ஹா... ஹா... ஹா.. நல்ல அடைமொழி. இவரின் என்றாவது ஒருநாள் தொகுப்பு சுவாரஸ்யமான தொகுப்பாகும். இனிய சந்திப்பு என்று தெரிகிறது. பொன்னாடை போர்த்தி மகிழ்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். February 24, 2018 at 6:00 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //விமர்சன வித்தகி... ஹா... ஹா... ஹா.. நல்ல ’அடை’மொழி.//

   காரசாரமான புளிச்சமாவு ’அடை’ + ’குணுக்கு’ போலவேவா? ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

   http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html அடடா என்ன அழகு ! ........ ’அடை’யைத் தின்னு பழகு !! நினைவுக்கு வந்து விட்டது எனக்கு.

   //இவரின் என்றாவது ஒருநாள் தொகுப்பு சுவாரஸ்யமான தொகுப்பாகும்.//

   ’என்றாவது ஒரு நாள்’ அதனை முழுவதுமாகப் படித்து முடித்துட்டீங்க போலிருக்குது! இதைக் கேட்கவே எனக்கும் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது. :)

   //இனிய சந்திப்பு என்று தெரிகிறது.//

   உண்மையிலேயே மிகவும் இனிமையான சந்திப்பு தான். அடியேன் என் வாழ்நாட்களுக்குள் நேரில் ஒருமுறையாவது பார்க்கணும் என்று என் மனதில் நினைத்திருந்த ஒருசில பிரபல பதிவர்களில் ’விமர்சன வித்தகி’யான இவர்களுக்கு என்று ஓர் முக்கிய இடம் உண்டு. அது இப்போதாவது நிறைவேறியுள்ளதில் எனக்கும் அளவில்லா மகிழ்ச்சிகள் மட்டுமே.

   //பொன்னாடை போர்த்தி மகிழ்ந்திருக்கிறீர்கள்.//

   ஏற்கனவே என்னை சந்தித்துள்ள சுமார் பத்து பதிவர்களுக்கும் மேல் பொன் கலர் ஆடைகள் அல்லது ஷால்கள் அல்லது துண்டுகள் அல்லது ஜரிகை அங்கவஸ்திரம் அல்லது சந்தனமாலை போன்ற ஏதேனும் ஒன்று அணிவித்து மகிழப்பட்டுள்ளனவே!

   என் மனைவி கையால் போர்த்தப்பட்ட பெண் பதிவர்களில் இவர் நாலாவது நபராவார். மீதி மூவர் மேலே ’சந்தித்த வேளையில்.....’ என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பகுதி-1, பகுதி-3 மற்றும் பகுதி-6 இல் உள்ளனர்.

   அவ்வப்போது என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை நான் செய்துவிடுவது உண்டு. நாம் எப்போதுமே வெயில் அடிக்கும் தமிழ் நாட்டில் இருக்கிறோம். குளிர் பிரதேசங்களில் இருப்போருக்கும், அடிக்கடி குளிர் நாட்களில், இங்குமங்கும் பயணம் மேற்கொள்வோருக்கும் இதுபோன்ற ’100% உல்லன் ஷால்’ மிகவும் பயன்படக்கூடும்.

   // வாழ்த்துகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   நீக்கு
  2. // ’என்றாவது ஒரு நாள்’ அதனை முழுவதுமாகப் படித்து முடித்துட்டீங்க போலிருக்குது! //

   இல்லை, புத்தகம் இன்னும் வாங்கவில்லை.

   நீக்கு
  3. இவரின் என்றாவது ஒருநாள் தொகுப்பு சுவாரஸ்யமான தொகுப்பாகும். - ஸ்ரீராம்

   ’என்றாவது ஒரு நாள்’ அதனை முழுவதுமாகப் படித்து முடித்துட்டீங்க போலிருக்குது! இதைக் கேட்கவே எனக்கும் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது. :) - கோபு

   //இல்லை, புத்தகம் இன்னும் வாங்கவில்லை.// - - ஸ்ரீராம்.

   அப்போ தாங்கள் மேலே ‘சுவாரஸ்யமான தொகுப்பு’ எனச் சொல்லியுள்ளது, அந்த நூலைப்பற்றி நான் எழுதியிருந்த என் புகழுரையைப் படித்ததினால் மட்டும் தானா?

   வெரி குட். கீப் இட் அப் ! :)))))

   நீக்கு
  4. // அப்போ தாங்கள் மேலே சொல்லியுள்ளது, அந்த நூலைப்பற்றி நான் எழுதியிருந்த என் புகழுரையைப் படித்ததினால் மட்டும் தானா?

   வெரி குட். கீப் இட் அப் ! :))))) //

   அது மட்டும் இல்லை, அவர் தளத்தில் அவற்றை வாசித்திருக்கிறேன்.

   நீக்கு
  5. ஸ்ரீராம். February 24, 2018 at 8:58 PM

   //அது மட்டும் இல்லை, அவர் தளத்தில் அவற்றை வாசித்திருக்கிறேன்.//

   OK ...... Very Good ...... Sriram !

   [அந்த நூலில் உள்ள எல்லாக் கதைகளையும் அவர்கள் தன் வலைத்தளத்தில் வெளியிடவில்லை என நான் நினைக்கிறேன்.]

   நீக்கு
  6. // [அந்த நூலில் உள்ள எல்லாக் கதைகளையும் அவர்கள் தன் வலைத்தளத்தில் வெளியிடவில்லை என நான் நினைக்கிறேன்.] //

   ஆமாம்.

   நீக்கு
  7. http://gopu1949.blogspot.in/2015/09/part-3-of-5.html

   கீத மஞ்சரி September 10, 2015 at 6:45 PM
   புத்தகத்தில் உள்ள 22 கதைகளில் ஆறு கதைகள் வலைத்தளத்தில் முன்பே வெளியானவைதாம். நீங்களும் தவறாமல் வாசித்துக் கருத்திட்டிருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. வாழ்த்துகள். நட்பு தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam February 24, 2018 at 6:23 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //வாழ்த்துகள். நட்பு தொடரட்டும்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 6. என்னே ஒரு வாத்சல்யம்!...

  இதற்கும் ஒரு ஈடு உண்டோ..

  காமதேனு அருகிருக்க கவலைக்கு இடமேது!...

  ஆஸ்திரேலிய பயணம் சித்திக்க
  அம்பாள் அருள் புரிவாளாக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை செல்வராஜூ February 24, 2018 at 9:23 AM

   வாங்கோ பிரதர், வணக்கம்.

   //என்னே ஒரு வாத்சல்யம்!... இதற்கும் ஒரு ஈடு உண்டோ..//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. வாத்சல்யத்துடன் கூடிய தங்களின் இந்தக் கருத்துக்களுக்கும் ஈடு இணை ஏதும் உண்டோ ! :)

   //காமதேனு அருகிருக்க கவலைக்கு இடமேது!...//

   ’காமதேனு’வே சொல்வது போல மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது.

   //ஆஸ்திரேலிய பயணம் சித்திக்க அம்பாள் அருள் புரிவாளாக...//

   எப்போதும் அம்பாள் நம் மனதில் வீற்றிருந்து அருள் புரிந்து வந்தாலே போதும் நமக்கு. ஆஸ்திரேலியா பயணமெல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம் பிரதர்.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 7. கீதமஞ்சரியின் சந்திப்பு படங்கள் அவரை நேரில் பார்த்த மகிழ்ச்சியை கொடுத்தது.

  /என்னுடைய அடுத்த பதிவு, ஒருவேளை ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரையாக இருக்குமோ என்னவோ ! :) //

  போய் வாருங்கள் மகிழ்ச்சியாய், வந்து அருமையான பயண அனுபவங்களை பதிவுகளாய் தாருங்கள்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு February 24, 2018 at 10:05 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //கீதமஞ்சரியின் சந்திப்பு படங்கள் அவரை நேரில் பார்த்த மகிழ்ச்சியை கொடுத்தது.//

   அப்படியா! மிகவும் சந்தோஷம், மேடம்.

   **என்னுடைய அடுத்த பதிவு, ஒருவேளை ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரையாக இருக்குமோ என்னவோ ! :)** - கோபு

   //போய் வாருங்கள் மகிழ்ச்சியாய், வந்து அருமையான பயண அனுபவங்களை பதிவுகளாய் தாருங்கள்.//

   இது சும்மா ஒரு வேடிக்கைக்காக நான் எழுதிய வரிகள் மேடம். அதுபோன்ற ஆசை ஏதும் எனக்கு சுத்தமாக இல்லை.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு
 8. அருமையான சந்திப்புப் பகிர்வுக்கு நன்றி. அவருடைய எழுத்துகளை வாசிப்பவர்களில் நானும் ஒருவன். இப்போது, உங்களுடைய ஆஸ்திரேலியப் பயண அனுபவத்தை எதிர்நோக்குகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University February 24, 2018 at 10:11 AM

   வாருங்கள் முனைவர் ஐயா, வணக்கம்.

   //அருமையான சந்திப்புப் பகிர்வுக்கு நன்றி.//

   மிக்க மகிழ்ச்சி, ஐயா.

   //அவருடைய எழுத்துகளை வாசிப்பவர்களில் நானும் ஒருவன்.//

   அவர்களுடைய எழுத்துக்கள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கும். தாங்கள் அவற்றை விரும்பி வாசிப்பது கேட்க மிக்க மகிழ்ச்சி, ஐயா.

   //இப்போது, உங்களுடைய ஆஸ்திரேலியப் பயண அனுபவத்தை எதிர்நோக்குகிறேன்.//

   நான் ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். இருப்பினும் எதுவும் நம் செயலில் இல்லை. பார்ப்போம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   நீக்கு
 9. அருமை அருமை...தங்களது சந்திப்பில் நானும் மகிழ்ந்தேன்.விமர்சன இணைப்புகளை வரிசைப்படுத்தியுள்ளதில் வியக்கிறேன்.இத்தகைய பண்பே உங்களை சந்திக்க பலருக்கும் ஆவலைத் தூண்டுகிறது.அமர்ந்த இடத்திலிருந்தே உலக தமிழ் நட்புகளை உங்கள் இடம் தேடி வர வைத்தவராச்சே வாழ்க வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆச்சி ஸ்ரீதர் February 24, 2018 at 11:32 AM

   வாங்கோ ஆச்சி, வணக்கம்.

   //அருமை அருமை... தங்களது சந்திப்பில் நானும் மகிழ்ந்தேன்.//

   அருமை அருமையாக இதனைச் சொல்லியுள்ளீர்கள்.
   இதனைக் கேட்ட நானும் மகிழ்ந்தேன்.

   தங்களைத் தங்கள் கணவர் + இரு குழந்தைகளுடன் என் இல்லத்தில் சந்தித்தது எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.

   //விமர்சன இணைப்புகளை வரிசைப்படுத்தியுள்ளதில் வியக்கிறேன்.//

   தாங்கள் வியப்பதில் ஆச்சர்யமே ஒன்றும் இல்லை. ஏனெனில் அதில் நம் சந்திப்பும் இடம் பெற்றுள்ளதே :) http://gopu1949.blogspot.in/2015/02/5-of-6.html

   //இத்தகைய பண்பே உங்களை சந்திக்க பலருக்கும் ஆவலைத் தூண்டுகிறது. அமர்ந்த இடத்திலிருந்தே உலக தமிழ் நட்புகளை உங்கள் இடம் தேடி வர வைத்தவராச்சே வாழ்க வாழ்க...//

   ஆஹா ! இப்படியெல்லாம் ஏதேதோ, உண்டு பண்ணிச் சொல்லி என் மனதைக் குளிர்வித்து விட்டீர்கள் !

   இந்த மாதம், ஹரியானாவிலிருந்து புறப்பட்டு, திருச்சியைத் தாண்டி மதுரை வரை வந்துவிட்டுப் போயுள்ள ஆச்சியை நான் மீண்டும் சந்திக்க முடியாத ஒரு சின்ன மனக் குறைக்கு மருந்தாக, திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் சந்திப்பு எனக்கு மிகவும் ஆறுதல் அளித்து விட்டது.

   திருமதி கீதா அவர்கள் என் வீட்டுக்கு வருகை தந்திருந்தால், ஜெயஸ்ரீ அவர்கள், சமீபத்தில் அனுப்பி வைத்திருந்த காமதேனுவையும், அன்புடன் ஆச்சி அனுப்பி வைத்திருந்த நினைவுப் பரிசினையும் http://gopu1949.blogspot.in/2015/01/20.html அவர்களிடம் காட்டி மகிழலாம் என எனக்குள் நினைத்திருந்தேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், இனிமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஆச்சி.

   அன்புடன் கோபு

   நீக்கு
 10. காலையிலேயே படித்துவிட்டாலும் இப்போதுதான் பின்னூட்டம் எழுதுகிறேன். இவர்கள்தான் நீங்கள் முன்னமே குறிப்பிட்டிருந்த பிரபல பதிவர் என்று நினைக்கிறேன்.

  பதிவர் கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்களை நீங்கள் இருவரும் சந்தித்தது கண்டு மகிழ்ச்சி. அவரது பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை. பறவைகள் சம்பந்தமாக அவர் எழுதிய பதிவுகளை ஆர்வத்தோடு வாசித்திருக்கிறேன். அவர் எடுக்கும் புகைப்படங்களும் அபாரமாக இருக்கும்.

  அவரது நாட்டை நினைவுகூறும் வகையில் அவர், கங்காரு சம்பந்தமான கீ செயினோ அல்லது புகைப்படமோ கொடுத்திருக்கிறாரா என்று பார்த்தேன்.

  இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எழுதியதைப் போன்று, உங்களிடமிருந்து பதிவுகள், உங்களுக்கு 'வரவு' வரும்போதுதான் வெளிவருகிறதோ.. ஹா ஹா ஹா.

  தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் உங்களை வந்தடையக்கூடாது என்பதற்காகத்தான் 'கண்காணிப்பாளரும்' உங்கள் உடன் வந்தாரா? ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் இருவரின் சேர்ந்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெ.த. February 24, 2018 at 1:18 PM

   வாங்கோ ஸ்வாமி, வணக்கம்.

   //காலையிலேயே படித்துவிட்டாலும் இப்போதுதான் பின்னூட்டம் எழுதுகிறேன். //

   அதனால் என்ன? காலையிலே உங்களுக்குப் பலவேலைகள் இருந்திருக்கும். அத்துடன் பதிவினைப் படித்துள்ளீர்கள். அதுவே மிகப் பெரிய விஷயமாகும். மாலையில் மட்டுமே, தங்களுக்கு பின்னூட்டமிட ஹாப்பி மூட் + எழுச்சி ஏற்பட்டிருக்கும். :)

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

   //இவர்கள்தான் நீங்கள் முன்னமே குறிப்பிட்டிருந்த பிரபல பதிவர் என்று நினைக்கிறேன்.//

   சாக்ஷாத் இவர்களே தான். உங்களுக்கு நினைவாற்றல் மிகவும் அதிகம். மெச்சுகிறேன். இதோ நான் குறிப்பிட்டிருந்த பிரபலம் பற்றிய அந்தச் செய்தி இந்த இணைப்பில் என் பின்னூட்ட பதில்களில் உள்ளது. http://gopu1949.blogspot.in/2018/01/blog-post_8.html.

   Reproduced Below:

   -=-=-=-=-=-
   வை.கோபாலகிருஷ்ணன் January 9, 2018 at 3:28 PM

   நெல்லைத் தமிழன் January 9, 2018 at 11:50 AM

   வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

   //கோபு சார்... அப்போ சுடச் சுட பொங்கல் பதிவு வருது என்று சொல்லுங்க.//

   அது எப்படி நான் உறுதியாகச் சொல்ல முடியும்? ஒருவேளை, பொங்கல் நேரம், நீங்க இங்கே திருச்சிக்கு எங்காத்துக்கு வந்து, எங்காத்து சமையல் அறையிலேயே, எங்களுக்கெல்லாம் அக்கார அடிசல் செய்து கொடுத்து அசத்த நினைத்துள்ளீர்களா? :)

   வரும் பிப்ரவரி மாதத்தில், உலகப்புகழ் பெற்றதொரு V.V.I.P. எழுத்தாளர் cum பதிவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டலாம் என எனக்குத் தோன்றுகிறது.

   அந்தப் பதிவர் சந்திப்பினை நான் வெளியிடும் வரை ‘அவர் யார்?’ என்பதை சொல்லாமல் சஸ்பென்ஸில் வைத்துக்கொள்ள நினைக்கிறேன்.
   -=-=-=-=-=-

   >>>>>

   நீக்கு
  3. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)

   //பதிவர் கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்களை நீங்கள் இருவரும் சந்தித்தது கண்டு மகிழ்ச்சி.//

   எங்களுக்கும் அதே போல மனதுக்குள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடத்தான் செய்தது.

   அபாரமான தமிழ் அறிவு + அன்பு + தன்னடக்கம் + கர்வம் இல்லாமல் இயல்பாகப் பழகுதல் + சிம்ப்ளிஸிடி + சிரித்த முகம் எல்லாம் சேர்ந்தக் கலவை தான் ... கீத மஞ்சரி வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள். அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் என் மனைவிக்கும் மிகவும் பிடித்து போய் விட்டது.

   >>>>>

   நீக்கு
  4. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)

   //அவரது பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை. பறவைகள் சம்பந்தமாக அவர் எழுதிய பதிவுகளை ஆர்வத்தோடு வாசித்திருக்கிறேன். அவர் எடுக்கும் புகைப்படங்களும் அபாரமாக இருக்கும்.//

   பதிவர்களில் அவர்கள் ஒரு சகலகலா வாணி. தனித் தன்மையும் தனித் திறமையும் வாய்ந்தவர்கள்.

   அவர்கள் எனக்கு முன்பெல்லாம் (குறிப்பாக 2014 முழுவதும்) எழுதிய ஏராளமான மெயில்களில் ஓர் தனி வாத்சல்யம் இருக்கும். அவர்களின் தமிழ் எழுத்துக்களில் எழுத்துப்பிழை என்பதையே பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும், நம்மால் கண்டுபிடிக்கவே இயலாது. 99.99% PERFECTION இருக்கும் என்பதே அவர்களின் தனிச்சிறப்பாகும்.

   எது எழுதினாலும் அதனை மிக அழகாகச் சிந்தித்து, கோர்வையாக, சீறிப் பாய்ந்து வரும் அருவி நீர் போல, மிகத் தெளிவாக, எழுத்துப்பிழை ஏதும் இல்லாமல் எழுதுவார்கள். அவர்கள் எழுதி அனுப்பும் மெயில் செய்திகளோ, விமர்சனங்களோ, பின்னூட்டங்களோ எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறைக்குப் பலமுறை படித்து மகிழ்வதுண்டு. எதையும் டிலீட் செய்யாமல் நான் என்னிடம் சேமித்து வைத்துக்கொள்வதும் உண்டு.

   >>>>>

   நீக்கு
  5. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (5)

   //அவரது நாட்டை நினைவுகூறும் வகையில் அவர், கங்காரு சம்பந்தமான கீ செயினோ அல்லது புகைப்படமோ கொடுத்திருக்கிறாரா என்று பார்த்தேன்.//

   நீங்கள் இதுபோலெல்லாம் ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்வீர்கள் என்பது எனக்கும் தெரியும்.

   //இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எழுதியதைப் போன்று, உங்களிடமிருந்து பதிவுகள், உங்களுக்கு 'வரவு' வரும்போதுதான் வெளிவருகிறதோ.. ஹா ஹா ஹா.//

   உலகின் ஏதோவொரு மூலையில், எட்டாக்கையில் இருப்பவர்கள், திருச்சி வரை ஏதோவொரு நிமித்தமாக வந்து, நம்மை சந்திப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்வது என்பது எவ்வளவு பெரிய ஒரு விஷயம்! இந்த ஆத்மார்த்தமான நட்பே என்னைப் பொறுத்தவரை மிகப்பெரியதொரு ‘வரவு’ அல்லவா!

   அதனால் நானும் இந்த எங்கள் சந்திப்பினைப்பற்றி ஒரு தனிப்பதிவு வெளியிட்டுள்ளேன். மேலும் எப்போதுமே ‘பதிவர் சந்திப்பு’ என்ற மாபெரும் வரவினை நான் பதிவிட்டு வருவது என் வழக்கம்தானே! :)

   >>>>>

   நீக்கு
  6. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (6)

   //தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் உங்களை வந்தடையக்கூடாது என்பதற்காகத்தான் 'கண்காணிப்பாளரும்' உங்கள் உடன் வந்தாரா?//

   அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஸ்வாமீ.

   என்னை சந்திக்க வரும் பதிவர் நான் இதுவரை நேரில் சந்திக்காததோர் + சந்திக்க விரும்பியதோர் பெண்மணி. அவர்களைப் பற்றி என் துணைவியாரிடம் ஏற்கனவே [சிறுகதை விமர்சனப்போட்டிகள் நடைபெற்ற போதே] வானளாவப் புகழ்ந்து சொல்லியுள்ளேன். அதனால் என் மனைவிக்கும் அவர்களைப் பார்க்கணும் என்ற ஆசை உள் மனதில் இருந்துள்ளது.

   ”நீயும் என்னுடன் கொஞ்சம் வர முடியுமா?” என என் மனைவியிடம் கேட்டுக்கொண்டேன். நடந்தே போய்வரக்கூடிய தூரம்தான் என்றாலும், போகவர ஆட்டோ வைப்பதாகவும், அங்கேயே நாம், காலை டிஃபன் + காஃபி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டேன். ஏதோ எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உடனே “சரி” என்று சொல்லி புறப்பட ரெடியாகி விட்டாள்.

   ஷுகர் மாத்திரைகள் + ஊசி மருந்துகளுடன், 10.40 மணிக்கு ஆட்டோவில் ஏறிவிட்டோம். 10.45 க்கு ‘ஹோட்டல் ரகுநாத்’ வாசலில் திருமதி. கீதா மேடத்தையும் சந்தித்து விட்டோம். உள்ளே போனதும் 10.50 க்கு, என் மனைவி கையால், திருமதி. கீதாவுக்கு ஷால் போர்த்தச் சொல்லி போட்டோவும் எடுத்தாச்சு.

   நான் என் மனைவியுடன் சேர்ந்து போனதால், முன்பின் நேரிடையாக பார்த்துக்கொள்ளாத நாங்கள் ஒருவருக்கொருவர் சங்கோஜம் ஏதும் இல்லாமல் சரளமாகப் பேசிக்கொள்ள முடிந்தது.

   நான் தனியாகச் செல்லாமல் ஜோடியாகச் சென்றதால், அங்கு சந்திப்பில் நடைபெற்ற விஷயங்கள் ஒவ்வொன்றையும் நான் தனியாக என் வீட்டுக்கு வந்து, என் மனைவியிடம் கதையாகச் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லாமல் போய் விட்டது. மொத்தத்தில் இதனால் எத்தனை இலாபங்கள் பாருங்கோ. :)))))

   >>>>>

   நீக்கு
  7. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (7)

   //ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் இருவரின் சேர்ந்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்.//

   அப்படியா? மிக்க மகிழ்ச்சி ஸ்வாமி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான + விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 11. மகிழ்ச்சியான சந்திப்பு.நான் சந்திக்க விரும்பிய வலைப்பதிவர்களில், சகோதரி கீதமஞ்சரி அவர்களும் ஒருவர். சந்தர்ப்பம் அமையாமல் போய் விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ February 24, 2018 at 10:30 PM

   வாங்கோ ஸார், வணக்கம்.

   //மகிழ்ச்சியான சந்திப்பு.//

   ஆமாம் ஸார். மிகவும் மகிழ்ச்சியான சந்திப்பாகத் தான் இருந்தது. நான் உங்களை என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

   //நான் சந்திக்க விரும்பிய வலைப்பதிவர்களில், சகோதரி கீதமஞ்சரி அவர்களும் ஒருவர். சந்தர்ப்பம் அமையாமல் போய் விட்டது.//

   தங்களுக்குத் தற்சமயம் உடல்நிலை சரியில்லை என்பதால் உங்களை நான் தொந்தரவு செய்யவில்லை.

   இல்லாவிட்டால், எனக்குப் பேச்சுத் துணையாக, என்னுடன் உங்களைத் தான், நான் அழைத்துக்கொண்டு சென்றிருப்பேன்.

   பரவாயில்லை. தங்கள் உடல்நிலைதான் இப்போது மிகவும் முக்கியமாகும்.

   அடுத்த முறை அவர்கள் திருச்சிக்கு வரும் போது அவர்களை நாம் இருவரும் சேர்ந்தே போய் சந்தித்து ஆர அமரப் பேசிவிட்டு, பேட்டி கண்டுவிட்டு வரலாம்.

   இப்போது அவர்களும் என்னைச் சந்தித்து விட்டு மிகவும் அவசர அவசரமாக வேறு சில வேலைகளை கவனிக்கச் செல்லும்படியாகி விட்டது.

   நானும் எத்தனையோ விஷயங்களைப் பற்றி அவர்களுடன் பேசணும் என, என் மனதில் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

   நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் என்னால் ஒன்றுமே பேசத் தோன்றவில்லை. :)

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஸார்.

   அன்புடன் VGK

   நீக்கு


 12. ‘விமர்சன வித்தகி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களை சந்தித்தது பற்றிய பதிவில் சுருங்கச்சொல்லி விளக்கிவிட்டீர்கள். அவரது ‘என்றாவது ஒரு நாள்’ நூல் பற்றிய தங்களது திறனாய்வுக்கட்டுரை முழுதும் படித்து இரசித்தவன் நான். அதற்குப்பிறகு வலைப்பக்கத்தில் அவரது பதிவுகள் பலவற்றை படித்து கருத்து இட்டும் இடாமலும் இருந்திருக்கிறேன்.

  குறைந்த நேரமானாலும் அவரது மற்ற பணிகளுக்கிடையே தங்களை வந்து சந்தித்தது அவருக்கு தங்கள் மேல் உள்ள அன்பையும் மரியாதையையும் காட்டுகிறது. அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்!

  மிக விரைவில் வர இருக்கும் தங்களது ஆஸ்திரேலிய பயணக்கட்டுரையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வே.நடனசபாபதி February 25, 2018 at 11:33 AM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //‘விமர்சன வித்தகி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களை சந்தித்தது பற்றிய பதிவில் சுருங்கச்சொல்லி விளக்கிவிட்டீர்கள்.//

   மிக்க மகிழ்ச்சி ஸார்.

   நான் இங்கு சுருங்கச்சொல்லி விளக்கி விட்டதாகச் சொல்லியுள்ளீர்கள். இதைப்படித்ததும் ‘பேராசியர் கல்கி’ அவர்கள் சொன்னதாக நான் கேள்விப்பட்டுள்ளதோர் ஓர் நகைச்சுவை நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்து விட்டது. அதனைப்பற்றியும், இங்கு கீழே நான், விளக்கிச் சொல்லி விடுகிறேன். :)

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> வே.நடனசபாபதி (2)

   //அவரது ‘என்றாவது ஒரு நாள்’ நூல் பற்றிய தங்களது திறனாய்வுக்கட்டுரை முழுதும் படித்து இரசித்தவன் நான்.//

   ஆமாம். அந்த என் தொடரின் ஒவ்வொரு பகுதிக்கும் தாங்கள் வருகை தந்து, மிக விரிவாகவும், மிக அழகாகவும், மிகப் பொறுமையாகவும், ரஸித்து பின்னூட்டங்கள் கொடுத்திருந்தீர்கள்.

   அவை இன்றும் பசுமையாக என் நினைவில் உள்ளன.

   உதாரணமாக ஒரு துளி இதோ:

   -=-=-=-=-

   http://gopu1949.blogspot.in/2015/09/part-5-of-5.html

   VGK >>>>> திரு. வே.நடனசபாபதி சார் (2)

   //திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் திரு ஹென்றி லாஸன் அவர்களின் கதைகளை தமிழாக்கம் செய்து பழச்சாறு போல் கொடுத்திருக்கிறார் என்றால் நீங்கள் அந்த சாறை வில்லைகளாக (Tablet) மாற்றி விரைவாக நுகர (Consume) உதவியிருக்கிறீர்கள். //

   ஆஹா, இன்றைய இந்த நம் அவசர உலகில் பழத்தை உரித்துச் சாப்பிட நேரமில்லாமல் ஜூஸாக சிலரும் அதுவும் முடியாமல் வில்லைகளாக முழுங்கிப் பலரும் வாழ்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை இனிப்பாக தேன் தடவிய டாப்லெட் ஆக அளித்துள்ளீர்கள். மிகவும் ரஸித்தேன். மிக்க நன்றி, சார்.

   -=-=-=-=-

   >>>>>

   நீக்கு
  3. கோபு >>>>> வே.நடனசபாபதி (3)

   //அதற்குப்பிறகு வலைப்பக்கத்தில் அவரது பதிவுகள் பலவற்றை படித்து கருத்து இட்டும் இடாமலும் இருந்திருக்கிறேன்.//

   ஆஹா! மிகவும் சந்தோஷம், ஸார்.

   பலவற்றைப் படித்து, கருத்து இட்டும்/இடாமலும் என்ற உண்மையை உண்மையாகத் தாங்கள் இங்கு சொல்லியுள்ளதை மிகவும் ரஸித்தேன். :)

   >>>>>

   நீக்கு
  4. கோபு >>>>> வே.நடனசபாபதி (4)

   //குறைந்த நேரமானாலும் அவரது மற்ற பணிகளுக்கிடையே தங்களை வந்து சந்தித்தது அவருக்கு தங்கள் மேல் உள்ள அன்பையும் மரியாதையையும் காட்டுகிறது.//

   ஆமாம் ஸார். அவர்களின் இந்தச் செயல் எனக்கும் மிகவும் வியப்பளிப்பதாகவே இருந்தது.

   இந்தப் பதிவுலகின் மூலம் நாம் சம்பாதித்துள்ளது இதுபோன்ற ஆத்மார்த்தமான அன்புடையோர் சிலரை அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது மட்டுமே.

   //அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்! //

   எங்கள் இருவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள், ஸார்.

   >>>>>

   நீக்கு
  5. கோபு >>>>> வே.நடனசபாபதி (5)

   //மிக விரைவில் வர இருக்கும் தங்களது ஆஸ்திரேலிய பயணக்கட்டுரையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! திருமதி. கீதா மதிவாணன் அவர்களை நேற்று நான் அகஸ்மாத்தாக, திருச்சியில் சந்திக்க திடீர் அதிர்ஷ்டம் அடித்தது போல, எனது ஆஸ்திரேலியப் பயணம் என்பதும், ஒருவேளை அதிர்ஷ்டவசமாக அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

   ஆனால் விரைவில் இது நடக்கக்கூடும் என்ற நம்பிக்கையோ, ஆர்வமோ, அவசரமோ, அவசியமோ எனக்குத் துளியும் இல்லை.

   2004-இல் ஒரு முறையும், 2014-இல் மீண்டும் ஒருமுறையும், (U.A.E.,) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸுக்கு நான் சென்று வருவேன் என்பதை என் வாழ்க்கையில் நான் கொஞ்சமும் நினைத்துக்கூடப் பார்க்காமலேயே, அவைகளாகவே நிகழ்ந்துள்ளன.

   அதனால் நாளை என்ன நடக்கும் என்பதை நம்மால் இன்றைக்கே கணித்து உறுதியாகவும் இறுதியாகவும் சொல்லவே இயலாது.

   மேலும் இது போன்ற ப்ராப்தங்கள் எல்லாம் நம் கையில் எதுவுமே இல்லை. நடக்கணும் என்று இருந்தால் அது எப்படியேனும் நடந்தே விடும்.

   எதையும் நாம் எதிர்பார்த்தோமானால் ஏமாற்றத்தில் மட்டுமே முடிந்து விடும். இது என் சொந்த அனுபவமாகும்.

   >>>>>

   நீக்கு
  6. கோபு >>>>> வே.நடனசபாபதி (6)

   ஒரு பேச்சாளரோ, எழுத்தாளரோ எதையும் சுருக்கமாகவும், சுவையாகவும் சொல்லி, அடுத்தவருக்கு மிகச்சுலபமாக விளங்க வைக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும்.

   ஆனால் இந்த அரிய கலை அனைவரின் எழுத்துக்களிலோ, பேச்சுக்களிலோ, அவ்வளவு சுலபமாக அமைந்து விடுவது இல்லை.

   பேராசியர் கல்கி அவர்கள் இதனைப்பற்றி ஒரு சின்ன நிகழ்வின் மூலம் சொல்லியிருப்பதாக, தென்கச்சி கோ. சாமிநாதன் அவர்கள் சொன்னதை நான் சமீபத்தில் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

   அது கீழே தொடர்கிறது:

   >>>>>

   நீக்கு
  7. கோபு >>>>> வே.நடனசபாபதி (7)

   ஒரு நாள் காஞ்சீபுரம் உபய வேதாந்த தேசிக ஸ்வாமிகள், தன் வீட்டு வேலைக்காரக் குப்பனைக் கூப்பிட்டு ......

   ”அடேய் குப்பா, நீ உடனே ஸ்ரீபெரும்புதூருக்கு ஓடிப்போய், திருவேங்கடாச் சாரியை சந்தித்து, திருக்குடந்தையிலிருந்து இங்கு வந்திருக்கிற, திருநாராயண ஐயங்கார் ஸ்வாமிகள், திருக்கோயில் ஆராதனைக்கு, திருக்குழாய் எடுத்துத் திரும்புகையில், திருக்குளத்தில், திருப்பாட்டு வழுக்கவே, திருவடி தவறி விழுந்தார் எனச் சொல்லி விட்டு வா” என்கிறார்.

   ”சரி சாமி .... சொல்லிவிட்டு வருகிறேன்” என்று புறப்படும் குப்பனை மீண்டும் அழைக்கிறார்.

   “நீ போய் அவரிடம் என்ன விஷயம் என்பதை எப்படிச் சொல்லிவிட்டு வருவாய்? என்று என்னிடம் ஒருமுறை சொல்லிக்காட்டு” என்கிறார் அந்த காஞ்சீபுரம் உபய வேதாந்த தேசிக ஸ்வாமிகள்.

   இது என்ன ஸ்வாமி, ஒரு மிகப் பெரிய விஷயமா என்ன?

   ’கும்பகோணத்து ஆசாமி குட்டையிலே விழுந்தான்’

   எனச் சொல்லணும் அவ்வளவு தானே என்றானாம் ..... அந்தக் குப்பன்.

   அப்போது கல்கி, “ சிறுகதையின் இலக்கணம் குப்பனுக்குப் புரிந்திருக்கிறது. ஆனால் அந்த காஞ்சீபுரம் உபய வேதாந்த தேசிக ஸ்வாமிகள் அவர்களுக்குப் புரியாமல் இருந்துள்ளது” என்கிறார். :)))))

   oooooOooooo

   அன்புடன் VGK

   நீக்கு
 13. வணக்கம் கோபு சார்! கீதா தங்களைச் சந்திக்கப் பெரு விருப்பம் கொண்டிருந்தார். அது இப்போது நிறைவேறியிருப்பதறிந்து மகிழ்கின்றேன். தங்கள் துணைவியாரும் வந்திருந்து பொன்னாடை போர்த்திக் கெளரவித்திருப்பதறிந்து மிக்க மகிழ்ச்சி. இந்தச் சந்திப்பு உங்களை ஒரு பதிவு எழுதத் தூண்டியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தங்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி February 25, 2018 at 12:38 PM

   // வணக்கம் கோபு சார்! //

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //கீதா தங்களைச் சந்திக்கப் பெரு விருப்பம் கொண்டிருந்தார்.//

   ஆஹா ... அப்படியா!!!!! அது நான் செய்துள்ளதோர் பாக்யம் என நினைத்து மகிழ்கிறேன்.

   //அது இப்போது நிறைவேறியிருப்பதறிந்து மகிழ்கின்றேன்.//

   சென்ற முறை (29.08.2014 புதுச்சேரி சுப நிகழ்வினையொட்டி) 2014 ஆகஸ்ட் மாதம் அவர்கள் திருச்சி வந்திருந்தபோது நிறைவேறாத இந்த சந்திப்பு நிகழ்ச்சி இப்போதாவது நிறைவேறியிருப்பதில் நானும் மகிழ்கின்றேன்.

   //தங்கள் துணைவியாரும் வந்திருந்து பொன்னாடை போர்த்திக் கெளரவித்திருப்பதறிந்து மிக்க மகிழ்ச்சி.//

   என் துணைவியார் இதற்கு துளியும் மறுப்பேதும் சொல்லாமல், என்னுடன் உடனடியாகப் புறப்பட்டு வந்து, இனிய இந்த சந்திப்பு நிகழ்வினை கெளரவித்துக்கொடுத்ததை, உலக அதிசயங்களில் ஒன்றாக நினைத்து நானும் மிக்க மகிழ்ச்சி கொண்டேன். :)

   //இந்தச் சந்திப்பு உங்களை ஒரு பதிவு எழுதத் தூண்டியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தங்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.//

   இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மும்மடங்கு மகிழ்ச்சியை அளித்து விட்டன.

   தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய ’நன்றியோ நன்றிகள்’, மேடம்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
  2. திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு ’விமர்சன வித்தகி’ என்ற இந்தப் பட்டத்தினை முன்மொழிந்து, வழி மொழிந்தவர் தாங்கள் மட்டுமே என்பதை இங்கு நான் நினைவூட்டி மகிழ்கிறேன்.

   அதற்கான ஆதாரங்கள்

   (1) இதோ http://gopu1949.blogspot.in/2014/04/vgk-11-01-03-first-prize-winners.html இந்தப் பதிவின் பின்னூட்டப்பகுதியில் இவ்வாறு உள்ளது:

   -=-=-=-=-

   வை.கோபாலகிருஷ்ணன் April 15, 2014 at 11:20 PM

   Kalayarassy G April 15, 2014 at 7:06 PM

   வாங்கோ .... வணக்கம்.

   //விமர்சனப் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து முறை பரிசு பெற்று சாதனை படைத்து வரும் கீதா மதிவாணனுக்கு ’விமர்சன வித்தகி’ என்ற பட்டத்தை அளிக்கிறேன். //

   ’விமர்சன வித்தகி’

   அழகான அருமையான பொருத்தமான பட்டம் தான். சந்தோஷம்.

   ஒருவேளை அவர்கள் ஆறாம் முறையும் தொடர் வெற்றியினை எட்டிவிட்டால் :)))))) இதே பட்டத்தினை நான் அங்கீகரித்து கெளரவித்து வெளியிட்டு விடுகிறேன்.

   நாம் நல்லதே நினைப்போம் .... நல்லதே நடக்கட்டும் !

   அன்புடன் கோபு [ VGK ]

   -=-=-=-=-

   (2) இதோ http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-01-03-first-prize-winners.html இந்தப் பதிவில் அப்படியே அது நிறைவேறியும் உள்ளது:

   ’விமர்சன வித்தகி’ என்ற இந்தப்பொருத்தமான பட்டத்தினை முன்மொழிந்து, வழிமொழிந்த திருமதி ஞா. கலையரசி அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   -=-=-=-=-

   நீக்கு
 14. ஆஹா ! தங்கள் சந்தோஷம் பதிவில் பிரதிபலிக்கிறது .

  //ஆறு பூனைக்குட்டிகள்//

  அவை australian koala bears

  விரைவில் ஆஸ்திரேலியா பயணக்கட்டுரை கோலா bear மற்றும் கங்காரு உடன் எடுத்த செல்பிக்களுடன் எதிர்பார்க்கிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Angel February 26, 2018 at 5:31 AM

   வாங்கோ, வணக்கம். தேவதையின் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.

   //ஆஹா ! தங்கள் சந்தோஷம் பதிவில் பிரதிபலிக்கிறது.//

   அப்படியா!!!! மிகவும் சந்தோஷம்.

   **ஆறு பூனைக்குட்டிகள்** //அவை australian koala bears //

   ஆஹா, அப்படியா? ஆஸ்திரேலியாவில் மரங்களில் வாழும் ஒருவித விலங்கினங்கள் எனத் தங்கள் மூலம் இந்தத் தகவல்களை இப்போது புதிதாக நானும் தெரிந்துகொண்டேன்.

   //விரைவில் ஆஸ்திரேலியா பயணக்கட்டுரை கோலா bear மற்றும் கங்காரு உடன் எடுத்த செல்பிக்களுடன் எதிர்பார்க்கிறேன் :) //

   என்னுடைய அடுத்த வெளிநாட்டுப்பயணம் முதலில் ‘லண்டன்’ னுக்கு மட்டுமேவாக்கும். :) பயப்படாதீங்கோ.

   மேலே முதன் முதலாக நம் அதிராவின் பின்னூட்டத்திற்கு நான் கொடுத்துள்ள பதில்களைப் படித்துப்பாருங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ். :)

   [தங்களின் சமீபத்திய பதிவுகளையும், அதிராவின் சமீபத்திய பதிவுகளையும் [குறிப்பாக மிக நீண்ட செளரீயுடன் (ATTACHMENT) காட்சியளிக்கும் படத்துடன் கூடிய பதிவு] + அவற்றிற்கான பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்து, ரஸித்துக்கொண்டுதான் இருக்கிறேன். :)))))

   அன்புடன் கோபு அண்ணா

   நீக்கு
 15. இனிமையான சந்திப்பு! கொண்டாடித் தீராத நேயம் தங்களுடையது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிலாமகள் February 28, 2018 at 4:46 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இனிமையான சந்திப்பு!//

   மிக்க மகிழ்ச்சி ! :)

   //கொண்டாடித் தீராத நேயம் தங்களுடையது!//

   ஆஹா! எத்தனை அழகாகச் சொல்லியுள்ளீர்கள் :))

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு
 16. கோபூஜி வெளிநாட்லேந்தெல்லாம் உங்கள வந்து சந்திக்கறாங்க உங்க பதிவுலக நண்பர்கள்.. இதுபோல சந்திக்காத நண்பர்கள் லிஸ்டும் ரொம்ப பெரிசாதான் இருக்கும் போல..

  ஒங்கட லண்டன் தோழிய எனக்கும் தெரியுமே..)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிப்பிக்குள் முத்து. March 1, 2018 at 10:35 AM

   வாங்கோ மீனா-முன்னா-மெஹர்-மாமி, வணக்கம்.

   //கோபூஜி வெளிநாட்லேந்தெல்லாம் உங்கள வந்து சந்திக்கறாங்க.//

   அதுதான் எனக்கும் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அவங்க இப்போ வெளிநாட்டிலே வாழ்ந்துகொண்டு இருப்பினும், அவங்க பிறந்து வளர்ந்த வீடு + படித்த இடம் எல்லாம், இங்கு எங்கள் ஊர் திருச்சி மட்டுமே. அதனாலும் இந்த சந்திப்பு ஒருவேளை, எங்களுக்குள் சுலபமாக நிகழ்ந்திருக்கலாம்.

   //உங்க பதிவுலக நண்பர்கள்.. இதுபோல சந்திக்காத நண்பர்கள் லிஸ்டும் ரொம்ப பெரிசாதான் இருக்கும் போல..//

   ஆமாம். அது இருக்குது ..... இன்னும் பெரிதாக ..... ஹனுமார் வால் போல மிக நீண்ண்ண்ண்டதாக. அந்த ஹனுமார் வாலில் நீயும் தான் ஒட்டிக்கொண்டு இருக்கிறாய். :)

   //ஒங்கட லண்டன் தோழிய எனக்கும் தெரியுமே..)))//

   ஓஹோ அப்படியா? உனக்குத் தெரியாத விஷயங்களே எதுவும் கிடையாது என்பது எனக்கும் தெரியுமே, மீனா. அவளை இங்கு வெளிப்படையாகக் காட்டிக்கொடுக்காமல் கமுக்கமாக இருந்துள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   அன்புடன் கோபூஜி

   நீக்கு
 17. டெய்லி வாட்ஸப்ல மீட் பண்ணுறோமில்ல..... அதான் இங்க வரல..ஸாரி.. யாராவது உங்கள சந்திக்க வந்தாலே எங்களுக்கெல்லாம் செமையா " தீனி"....கெடைக்குது..ரொம்ப சந்தோஷம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shamaine bosco March 1, 2018 at 10:38 AM

   வாங்கோ மை டியர் ஷம்மு, வணக்கம்.

   //டெய்லி வாட்ஸப்ல மீட் பண்ணுறோமில்ல..... அதான் இங்க வரல..ஸாரி..//

   ஆமாம். டெய்லி நாம் பலமுறை வாட்ஸ்-அப் பிலே மீட் செய்து விடுவதால், நான் எப்போதும் உங்களுடன் சேர்ந்தே இருப்பதுபோல், எனக்கும் ஒரு ஃபீலிங் உள்ளது. :)))))

   அதனால் தான் ‘லண்டன் முதல் திருநெல்வேலி' வரை ஒருசில ஊர்களை எழுதியுள்ள நான் குறிப்பாக ‘கோவா’வை எழுத விட்டு விட்டேன். கோச்சுக்காதீங்கோ.

   அதற்காக என் ஸ்பெஷல் ’ஸாரி’யை உங்களுக்கும் இங்கு சொல்லிக்கொள்கிறேன். அதனை நான் அளிக்கும் ’பட்டு ஸாரி’யாக நினைத்து ஏற்றுக்கொள்ளவும். :)))))

   //யாராவது உங்கள சந்திக்க வந்தாலே எங்களுக்கெல்லாம் செமையா " தீனி".... கெடைக்குது.. ரொம்ப சந்தோஷம்.//

   செமையா 'தீனி' என்றால் அந்த உங்களின் ’போளி + வடை’ போலவா? :)))))

   http://htppeace.blogspot.in/2017/03/blog-post_7.html
   http://htppeace.blogspot.in/2017/03/masal-vadai.html
   http://htppeace.blogspot.in/2017/03/medhu-vadai.html

   சென்ற ஆண்டு (2017) ஹோலிப் பண்டிகை சமயம் தங்களின் ’போளி’-’வடை’ப் பதிவுகள் வெளியாகி இருந்தன.

   இன்றும் (01.03.2018) ஹோலிப் பண்டிகையாக அமைந்துள்ளதால் ‘போளி-வடை’ ஞாபகமும், உங்கள் ஞாபகமும் எனக்கு உடனே வந்து விட்டன.

   தங்களுக்கு என் ஹோலி நல்வாழ்த்துகள், ஷம்மு.

   தங்களின் அன்பான இன்றைய வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   அன்புடன் கிஷ்ணா(ஜா)ஜி :)

   நீக்கு
 18. நானும்ரொம்ப. சீ...க்..கி..ர...மா..... வந்துட்டேன்.. பதிவு..படங்கள்..கமெண்ட்கள்.. எல்லாமே உங்களை உடனே சந்திக்க. ஆசய. கெளப்புது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ராப்தம் March 2, 2018 at 10:49 AM

   வாம்மா சாரூ, வணக்கம்மா. செளக்யமா இருக்கிறாயா? மனம் நிறைந்த ஆசிகள், சாரூ.

   //நானும் ரொம்ப. சீ...க்..கி..ர...மா..... வந்துட்டேன்..//

   அதனால் என்ன, பரவாயில்லை சாரூ. ஏதோ ஒரு சிரத்தையுடன் இங்கு வந்து எட்டிப் பார்த்துள்ளாயே .... அதுவே மிகப்பெரிய விஷயமாக நினைத்து, மகிழ்ந்து கொண்டேன். :)

   எத்தனையோ பேர்கள் இரயில் சிநேகம் போல, என்னிடம் நெருங்கிப் பழகிவிட்டு, நாளடைவில் இப்போது காணாமல் போய் இருக்கும் போது, நீ உனக்கு இருக்கும் மாபெரும் பொறுப்புக்களுடன், என்னை இன்னும் மறக்காமல், இங்கு வந்துள்ளதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

   //பதிவு.. படங்கள்.. கமெண்ட்கள்.. எல்லாமே உங்களை உடனே சந்திக்க. ஆசய. கெளப்புது..//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   1958-இல் வெளியான ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஓர் பாடல் வருகிறது. பாடியவர்: திருச்சி லோகநாதன். இயற்றியவர்: கண்ணதாசன். இசை அமைப்பு: கே.வி. மஹாதேவன்.

   அந்தப் பாடலைக் கேட்க இதோ இணைப்பு:

   http://tamilkavinganlyrics.blogspot.in/2010/02/blog-post_3414.html

   பாடலின் ஆரம்ப வரிகள்:

   ஆசையே .... அலைபோலே .... நாமெலாம் .... அதன்மேலே

   ஓடம்போலே ஆடிடுவோமே .... வாழ்நாளிலே!

   என்னை சந்திக்க வேண்டும் என்ற உன்னுடைய இந்த ஆசையைக் கேட்டதும், எனக்கு உடனே அந்தப் பாடல் ஞாபகம் இப்போது வந்தது.

   ப்ராப்தம் இருந்தால் நிச்சயம் சந்திப்போம்மா, ப்ராப்தம்-சாரூ. :)))))

   அன்புடன் உன் கோபுப்பா

   நீக்கு
 19. படித்து மகிழ்ந்தேன். அருமையான சந்திப்பு. நல்ல விவரங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கே. பி. ஜனா... March 5, 2018 at 9:48 PM

   வாங்கோ, வணக்கம்.

   //படித்து மகிழ்ந்தேன். அருமையான சந்திப்பு. நல்ல விவரங்கள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   நீக்கு
 20. தன் அன்பு மகளுடன் மட்டுமே ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டு, இந்தியாவில், தமிழ்நாட்டில், திருச்சியில் உள்ள தன் பிறந்தகத்திற்கு, சென்ற மாதம் (FEBRUARY 2018) வருகை புரிந்திருந்த கீதமஞ்சரி வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள், நல்லபடியாக, செளகர்யமாக ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிச் சென்றடைந்து விட்டார்கள் என்பதை அனைவருக்கும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

  அன்று [23.02.2018] நாங்கள் ஒருவரையொருவர் மிகக் குறுகிய நேரம் மட்டுமே நேரில் சந்திக்க நேர்ந்ததால், எங்களுக்குள் அன்று பேச விட்டுப்போன பலவிஷயங்களை, இன்று தொலைபேசியில் (நானும் என் மனைவியும் சேர்ந்து), திருமதி. கீதா அவர்களுடன் மிகவும் விரிவாக மனம் விட்டுப் பேச முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

  மகிழ்ச்சியுடன் கோபு
  12.03.2018 ... பகல் 12.07 to 12.37

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் தங்கள் இருவருடனும் பேசியதில் மிகுந்த மகிழ்ச்சி கோபு சார். இங்கு வந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் காரணமாகவும், இணையப் பிரச்சனை மற்றும் வலைப்பூ திறவாமை காரணமாகவும் என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. நம் சந்திப்பு குறித்த தங்கள் பதிவுக்கு கருத்திட இயலாமை குறித்த வருத்தமும் குற்றவுணர்வும் இருந்துகொண்டே இருந்தது. தங்களுடன் பேசியதில் அக்குறை மறைந்தது. மிக்க நன்றி கோபு சார்.

   நீக்கு
  2. கீத மஞ்சரி March 27, 2018 at 2:38 PM

   //எனக்கும் தங்கள் இருவருடனும் பேசியதில் மிகுந்த மகிழ்ச்சி கோபு சார்.//

   மிகவும் சந்தோஷம், மேடம். :)

   நீக்கு
 21. http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  2014-ஆம் ஆண்டு என் வலைத்தளத்தினில் நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் + அதன் தொடர்புடைய ஒருசில உபரிப்போட்டிகளில், கலந்துகொண்டு, மொத்தம் அளிக்கப்பட்ட 255 ரொக்கப்பரிசுகளில், ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பரிசுகளை வென்ற 25 நபர்களில் நான் இதுவரை நேரில் சந்தித்துள்ள பதிவர்கள்:

  01) கீத மஞ்சரி - திருமதி. கீதா மதிவாணன் அவர்கள், ஆஸ்திரேலியா
  [23.02.2018]

  02) திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள், ஸ்ரீரங்கம்
  [06.10.2013, 22.02.2015 & 07.02.2016]

  03) திருமதி. ராதாபாலு அவர்கள், திருச்சி
  [30.09.2014, 16.01.2015, 29.01.2015 & 22.02.2015]

  04) திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள், திருச்சி+சென்னை
  [15.05.2011 & 22.02.2015]

  05) திருமதி. லக்ஷ்மி கங்காதரன் அவர்கள், திருச்சி [அடிக்கடி]

  06) திரு. அப்பாதுரை அவர்கள், USA
  [04.01.2013]

  07) திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள், கோவை
  [02.04.2014, 10.10.2015 & 15.03.2017]

  08) திரு. சீனா ஐயா அவர்கள், மதுரை
  [06.10.2013]

  09) திரு. G. ராமபிரஸாத் அவர்கள், திருச்சி+துபாய்
  [அடிக்கடி]

  10) திரு. G. சுந்தரேசன் அவர்கள், திருச்சி
  [அடிக்கடி]

  இது ஓர் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 22. Glad to know about this meet sir. Seems you all had a short but a sweet meet time. 43rd Blogger you are meeting! that's great!

  Hearty Congrats to Mrs. Geetha.

  Loved the koalas, kangroo embedded momentos. Wish you many more such sweet cherishable memories.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mira March 16, 2018 at 2:01 PM

   வாங்கோ மீரா, வணக்கம். உங்களை என் பதிவுகளில் பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டன. நல்லா இருக்கீங்களா?

   //Glad to know about this meet sir. Seems you all had a short but a sweet meet time. 43rd Blogger you are meeting! that's great!

   Hearty Congrats to Mrs. Geetha.

   Loved the koalas, kangroo embedded momentos. Wish you many more such sweet cherishable memories.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 23. "பிறர்க்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - ரமண மகரிஷி"...நீங்கள் வாரி வழங்கும் அன்பு உங்களுக்கு திரும்பி வந்துகொண்டேதான் இருக்கும் வாத்யாரே...!!! வழக்கம்போலவே ஒரு அருமையான பதிவு. 'என்றாவது ஒரு நாள்' ச்ந்திக்க எண்ணம் கொண்டிருந்தது இப்போது நிறைவேறியுள்ளது. உங்களனைவரையும் ஒருசேர பார்க்கமுடிவது மகிழ்ச்சி அளிக்கிறது...வலைஞர்களை 'கீ' - கொடுத்து ஊக்குவிக்கும் வாத்தியாருக்கு 10 என்ன 100 கீ செயின் கொடுத்தாலும் பொருத்தமே...காமதேனுவுடன் - நந்தினி வரவில்லையா...??!!! சந்திப்பு பட்டியல் ஆஞ்சனேயர் வாலென நீளட்டும். மகிழ்ச்சி வாத்யாரே...!!! என்றும் அன்புடன், உங்கள் எம்.ஜி.ஆர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI March 26, 2018 at 2:23 PM

   வாங்கோ வாத்யாரே ! வணக்கம்.

   //"பிறர்க்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - ரமண மகரிஷி"... நீங்கள் வாரி வழங்கும் அன்பு உங்களுக்கு திரும்பி வந்துகொண்டேதான் இருக்கும் வாத்யாரே...!!! வழக்கம்போலவே ஒரு அருமையான பதிவு.//

   பின்னூட்டத்தை பின்னிப் பெடலெடுத்து, பொன்மனச் செம்மலாக, வாரி வழங்கியுள்ளீர்கள், நீங்கள். மிகவும் சந்தோஷம், வாத்யாரே :)

   // 'என்றாவது ஒரு நாள்' சந்திக்க எண்ணம் கொண்டிருந்தது இப்போது நிறைவேறியுள்ளது.//

   ஆமாம், வாத்யாரே ! எதுவுமே நாம் எத்தனைதான் முயற்சித்தாலும் ‘என்றாவது ஒரு நாள்’ மட்டுமே, ப்ராப்தம் இருப்பின் நிறைவடையக்கூடும்.

   //உங்களனைவரையும் ஒருசேர பார்க்கமுடிவது மகிழ்ச்சி அளிக்கிறது...//

   இந்தத் தங்களின் வருகை எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

   //வலைஞர்களை 'கீ' - கொடுத்து ஊக்குவிக்கும் வாத்தியாருக்கு//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எப்படியோ சுற்றி வளைத்து, எழுத்துக்களில் உங்களின் முத்திரையைப் பதித்து விடுகிறீர்கள். :)

   //10 என்ன 100 கீ செயின் கொடுத்தாலும் பொருத்தமே...//

   கிடைத்துள்ள இந்தப் பத்தையே என்ன செய்வது என எனக்குப் புரியவில்லை. என் உள்ளத்தில் பிறர் மீது பூட்டி வைக்கும் என் அன்பைத்தவிர வேறு எதையும், நான் பூட்டிப்பூட்டி வைப்பவனும் கிடையாது. பூட்டி வைக்கும் அளவுக்கு VALUABLES எதுவும் கைவசம் சேகரித்து வைத்துக்கொண்டு கவலைப்படுபவனும் கிடையாது. அதனால் இந்த பத்தில் ஓரிரு கீ செயின்களை மட்டும் என்னிடம் ஓர் நினைவுப் பரிசாக வைத்துக்கொண்டுவிட்டு, மீதியை என் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகள் வரும் போது அவர்களுக்குக் கொடுத்துவிடலாம் என்று உத்தேசித்துள்ளேன்.

   தாங்கள் சொல்லியுள்ளதுபோல 100 கீ செயின்கள் கொடுத்தால், தேவையற்ற அவற்றை நான் எங்கே வைத்து எப்படிப் பத்திரப்படுத்த முடியும்?

   //காமதேனுவுடன் - நந்தினி வரவில்லையா...??!!!//

   இதிலும் தங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தி எழுதியுள்ளீர்கள். சூப்பர் ! ஏனோ அந்த நந்தினியை காமதேனு தன்னுடன் அன்று அங்கு அழைத்து வரவில்லை.

   //சந்திப்பு பட்டியல் ஆஞ்சனேயர் வாலென நீளட்டும். மகிழ்ச்சி வாத்யாரே...!!!//

   மிக நீண்ட அந்த ஆஞ்சநேயர் வாலில் தாங்களும் நறுமணம் கமழும் ஓர் சந்தனப்பொட்டாக திகழ்ந்து வருகிறீர்கள். :)

   //என்றும் அன்புடன், உங்கள் எம்.ஜி.ஆர்.//

   என்றும் அன்புடன் VGK

   நீக்கு
 24. தாமத வருகைக்காக முதலில் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் கோபு சார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் என் வலைப்பூவைத் திறந்திருக்கிறேன். ஊருக்கு வந்திருந்தபோது ஒருமுறை திறக்க முயற்சி செய்த காரணத்தாலோ, இணைய வேகம் குறைவு என்பதாலோ என் வலைப்பூவைத் திறப்பதில் பெரும் சிக்கலாகிவிட்டது. பதிவுகளை வெளியிலிருந்து வாசிக்க முடிந்தாலும் கருத்திட முடியவில்லை. என்னென்னவோ செய்து இப்போதுதான் ஒருவழியாக உள்ளே நுழையமுடிந்தது. பதிவை முன்னரே வாசித்துவிட்டேன் என்றாலும் இப்போதுதான் கருத்திடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி March 27, 2018 at 2:34 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //தாமத வருகைக்காக முதலில் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் கோபு சார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் என் வலைப்பூவைத் திறந்திருக்கிறேன். ஊருக்கு வந்திருந்தபோது ஒருமுறை திறக்க முயற்சி செய்த காரணத்தாலோ, இணைய வேகம் குறைவு என்பதாலோ என் வலைப்பூவைத் திறப்பதில் பெரும் சிக்கலாகிவிட்டது. பதிவுகளை வெளியிலிருந்து வாசிக்க முடிந்தாலும் கருத்திட முடியவில்லை. என்னென்னவோ செய்து இப்போதுதான் ஒருவழியாக உள்ளே நுழையமுடிந்தது. பதிவை முன்னரே வாசித்துவிட்டேன் என்றாலும் இப்போதுதான் கருத்திடுகிறேன்.//

   நெட் கிடைக்காமல் படுத்துதல், மின் தடைகள், இணைய வேகக்குறைவு, ஒருவேளை இவை எல்லாமே சரியாக இருந்தும்கூட நமக்கு இருக்கும் இதர அவசர அவசிய வேலை பளு + குடும்பத்தை கவனித்தல் என எவ்வளவோ விஷயங்கள் உள்ளனவே. இவை அனைத்துப் பதிவர்களுக்கும் இன்றுள்ள சர்வதேச பிரச்சனைகளாக உள்ள போது, இங்கு கருத்தளிக்க தாமதமான வருகை தந்துள்ளதற்கு நமக்குள் மன்னிப்பெல்லாம் எதற்கு மேடம்?

   அனைத்தையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது, மேடம்.

   நீக்கு
 25. சென்ற முறை இந்தியா வந்தபோது தங்களை சந்திக்க விருப்பம் கொண்டிருந்தும் சூழ்நிலை சாதகமாக அமையவில்லை. இம்முறையும் அப்படி ஆகிவிடுமோ என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். அதனாலேயே முன்கூட்டி தங்களிடம் சந்திப்பு குறித்து எதுவும் ஏற்பாடு செய்யமுடியவில்லை. தங்களோடு திருச்சி பதிவர்கள் அனைவரையும் கூட சந்திக்க ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் அது சாத்தியப்படவில்லை. தங்களையும் தோழி ஆதியையும் மட்டுமாவது சந்திக்கமுடிந்ததே என்று மகிழ்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி March 27, 2018 at 2:35 PM

   //தங்களையும் தோழி ஆதியையும் மட்டுமாவது சந்திக்கமுடிந்ததே என்று மகிழ்கிறேன். //

   தோழி ’ஆதி’யைத் தாங்கள் சந்தித்ததே ’ஆதி’யோடு அந்தமாக திருச்சியில் உள்ள அனைத்துப் பதிவர்களையும் சந்தித்ததற்கு சமமாகும். :)))))

   நீக்கு
 26. தங்களுடைய சிறுகதை விமர்சனப் போட்டிகளின் வாயிலாக தங்கள் இல்லத்திலேயே எனக்கொரு ரசிகை உருவானதறிந்து அளவிலாத மகிழ்ச்சி.. அம்மாவின் கையால் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தது நான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. தாங்கள் எழுதிய நூல்களைத் தருவதாகத்தான் பேச்சு. ஆனால் தாங்களோ தம்பதி சமேதரராய் வருகை தந்து, இனிப்பு, காரம், காஃபியோடு என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய நினைவுப்பரிசுகளையும் தந்து அசத்திவிட்டீர்கள். பெரியவர்களை அவர்களுடைய இருப்பிடம் சென்று பார்ப்பதுதான் முறை. ஆனால் நேரம் மற்றும் சூழ்நிலையால் என்னால் தங்கள் இல்லத்துக்கு வருகை தர இயலாமல் போய்விட்டது. ஆனாலும் சிரமம் பாராமல் இருவரும் வந்து சந்தித்தது தங்கள் பெருந்தன்மையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி March 27, 2018 at 2:35 PM

   //தங்களுடைய சிறுகதை விமர்சனப் போட்டிகளின் வாயிலாக தங்கள் இல்லத்திலேயே எனக்கொரு ரசிகை உருவானதறிந்து அளவிலாத மகிழ்ச்சி..//

   ஆம். இதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. :)

   //அம்மாவின் கையால் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தது நான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. தாங்கள் எழுதிய நூல்களைத் தருவதாகத்தான் பேச்சு. ஆனால் தாங்களோ தம்பதி சமேதரராய் வருகை தந்து, இனிப்பு, காரம், காஃபியோடு என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய நினைவுப்பரிசுகளையும் தந்து அசத்திவிட்டீர்கள்.//

   மாதத்தில் இருமுறை நாங்கள் மேற்கொள்ளும் *ஹனிமூன்* தவிர, வேறு எங்குமே அவ்வளவு எளிதில் என்னுடன் புறப்பட்டுவர தயாராக இல்லாத என் ஆத்துக்காரி, என்னுடன் எப்படி அன்று உங்களை சந்திக்க உடனே புறப்பட்டு வந்தாள் என்பதுதான் எனக்கு இன்னும் ஆச்சர்யமானதொரு விஷயமாக உள்ளது !!!!! எனக்கும் அவர்களின் அன்றைய இந்தச் செயலால் கிடைத்தது ஒரு இன்ப அதிர்ச்சி மட்டுமே.

   [எங்களது *ஹனிமூன்* பற்றிய விபரங்கள் இதோ இந்தப்பதிவின் பின்னூட்டப்பகுதியில் விலாவரியாக என்னால் எழுதப்பட்டுள்ளது. http://unjal.blogspot.com/2017/02/1.html ]


   //பெரியவர்களை அவர்களுடைய இருப்பிடம் சென்று பார்ப்பதுதான் முறை. ஆனால் நேரம் மற்றும் சூழ்நிலையால் என்னால் தங்கள் இல்லத்துக்கு வருகை தர இயலாமல் போய்விட்டது. ஆனாலும் சிரமம் பாராமல் இருவரும் வந்து சந்தித்தது தங்கள் பெருந்தன்மையே.//

   ’முறை’ என்று அதெல்லாம் ஒன்றும் நினைத்துக்கொள்ளாதீர்கள், மேடம். இதில் ஒன்றும் எங்களுக்கு சிரமமே இல்லை, மேடம். அந்த இடம் எங்கள் வீட்டுக்கு மிகவும் பக்கமாகவும் உள்ளது. மேலும் எங்கள் வீட்டை விட அந்த இடம் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், ரம்யமாகவும், அழகாகவும், தாராளமாகவும், கூட்டம் + இரைச்சல் இல்லாத நேரமாகவும் இருந்ததாக நான் உணர்ந்துகொண்டேன். இனி தங்களைப் போன்ற வேறு V.I.P. க்களை இதுபோல நான் சந்திக்க நேர்ந்தாலும்கூட அந்த இடத்தையே தேர்வு செய்துகொள்ளலாம் என, என் மனதில் நினைத்துக் கொண்டுள்ளேன். :)))))

   நீக்கு
 27. இது ஒரு அவசர சந்திப்புதான் என்றாலும் நிறைவான சந்திப்பு. கீதா மேடம், தமிழ் இளங்கோ ஐயா, ரிஷபன் சார் என திருச்சியில் நான் பார்க்கவிரும்பிய பதிவர்கள் அநேகம். நிச்சயம் அடுத்தமுறை முன்கூட்டியே திட்டமிட்டு சந்திப்பு நிகழ்த்துவோம். தங்கள் அன்பான உபசரிப்பை என்றும் நினைந்திருப்பேன். அன்பும் நன்றியும் கோபு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி March 27, 2018 at 2:35 PM

   //இது ஒரு அவசர சந்திப்புதான் என்றாலும் நிறைவான சந்திப்பு.//

   ஆமாம் மேடம். நிறைவான சந்திப்பு தான். ஒருவேளை அவசர சந்திப்புகள் மட்டுமே நிறைவினைத் தரக்கூடுமோ என்னவோ? :)))))

   //கீதா மேடம், தமிழ் இளங்கோ ஐயா, ரிஷபன் சார் என திருச்சியில் நான் பார்க்கவிரும்பிய பதிவர்கள் அநேகம்.//

   இது விஷயம் எனக்கு அன்று தெரியாமல் போய் விட்டது. என்னிடம் குறிப்பாக ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் திருமதி. கீதா சாம்பசிவம் மேடம் அவர்களை மட்டுமாவது சந்திக்க நானே உங்களுக்கு, ஏற்பாடுகள் செய்து, தொலைபேசியில் பேசவைத்து, அவர்கள் வீட்டுக்குச் செல்ல வழிகாட்டி உதவியிருந்திருப்பேன்.

   மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆகியிருந்த திரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள், நாம் சந்தித்த தினத்தன்று மாலையில்தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள். இப்போது அவரின் உடல்நிலை தேவலாம். நீண்ட நாட்களுக்குப் பின், நேற்று முன்தினம், நம் ’சிறுகதை விமர்சனப்போட்டி’ பற்றி ஓர் பதிவு கொடுத்து அசத்தியுள்ளார். அதற்கான இணைப்பு: http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk-03.html

   திரு. ரிஷபன் அவர்கள் தற்சமயம், கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இருந்து வருவதால் நாம் நினைத்திருந்தாலும் அன்று அவரை நம்மால் சந்தித்திருக்க இயலாது.

   //நிச்சயம் அடுத்தமுறை முன்கூட்டியே திட்டமிட்டு சந்திப்பு நிகழ்த்துவோம்.//

   முன்கூட்டியே திட்டமிட்டுச் சொல்லுங்கோ. திருச்சியில் இன்றைய தேதியில் என்னுடன் ஓரளவுக்கு நன்கு பழகிவரும் ஒரு சில பதிவர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களைத் தங்களுக்குத் தருகிறேன். ஒருவேளை தங்களுக்கும் அவர்களில் சிலரை சந்திக்க விருப்பம் இருந்தால் நீங்களே அவர்களுடன் நேரில் பேசிக்கொள்ளலாம்.

   சந்திப்பு நடக்கும் இடம், நாள், நேரம் போன்றவற்றை முன்கூட்டியே நாம் அறிவித்து விட்டால் அவரவர்கள் செளகர்யப்படி திட்டமிட்டுக்கொள்ள வசதியாக இருக்கும்.

   ப்ராப்தம் இருந்தால் நாமும் ஒருவரையொருவர் மீண்டும் சந்தித்து மகிழலாம்.

   //தங்கள் அன்பான உபசரிப்பை என்றும் நினைந்திருப்பேன். அன்பும் நன்றியும் கோபு சார்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், நம் இனிய சந்திப்புக்கும், அதன்பின் நமக்குள் ஒருநாள் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலுக்கும், இங்கு அளித்துள்ள ஆத்மார்த்தமான, பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடனும் ... நன்றியுடனும் ... கோபு

   நீக்கு
 28. எத்தனை பதிவர்களைச் சந்தித்திருக்கிறீர்கள் ! பாராட்டு ! உங்களின் அன்புள்ளம் உங்கள் எழுத்தில் என்னமாய் வெளிப்படுகிறது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொ.ஞானசம்பந்தன் March 29, 2018 at 1:28 PM

   வாருங்கள் ஐயா, நமஸ்காரங்கள்.

   //எத்தனை பதிவர்களைச் சந்தித்திருக்கிறீர்கள்!//

   இதில் பலரும் அவர்களாகவே திருச்சி பக்கம் வருகை தந்தபோது, என்னைத் தொடர்பு கொண்டு, சந்தித்துச் சென்றுள்ளவர்கள் மட்டுமே. அதிலும் இந்த 43 நபர்களில் 28 நபர்கள் என்னை என் இல்லத்திற்கே வருகை தந்து சந்தித்துச் சென்றுள்ளவர்கள். மீதி 15 நபர்களை என் இல்லத்துக்கு வெளியே, திருச்சியில் பல்வேறு பொது இடங்களில் சந்திக்க நேர்ந்துள்ளது.

   அதிலும் சிலர், என் மீது உள்ள ஓர் தனிப்பட்ட பிரியத்தினால் பலமுறைகள்கூட மீண்டும், மீண்டும் என்னை சந்திக்க வந்துள்ளனர் என்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

   //பாராட்டு ! உங்களின் அன்புள்ளம் உங்கள் எழுத்தில் என்னமாய் வெளிப்படுகிறது !//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

   மிக மிக முக்கிய நபரான தங்களின் வருகையால் இந்த என் குறிப்பிட்ட பதிவு மேலும் ஜொலிக்கத் தொடங்கியுள்ளது என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறேன். :)))))

   நீக்கு
 29. சந்திப்பு அறிந்து மகிழ்ச்சி...

  வாழ்க வளமுடன்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்
   March 31, 2018 at 10:57 PM

   வாங்கோ என் இனிய நண்பரே ! வணக்கம்.

   //சந்திப்பு அறிந்து மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்!!!//

   சிறுகதை விமர்சனப்போட்டிகள் சிலவற்றில் கலந்து கொண்டு சிறப்பித்து, இரு முறை விமர்சனத்திற்கான பரிசுகளும் பெற்றுள்ள தாங்கள், இங்கு வருகை தந்து சிறப்பித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 30. Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.

  வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  Tamil Us

  பதிலளிநீக்கு
 31. பதில்கள்
  1. பவித்ரா நந்தகுமார் May 22, 2018 at 6:42 PM

   ஆஹா .... வாங்கோ, வாங்கோ, வணக்கம். :)

   //மகிழ்ச்சி ஐயா//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 32. ஓர் மகிழ்ச்சியான தகவல்
  =========================

  அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில், பேரெழுச்சியுடன் கலந்துகொண்டு, 11 முறைகள் முதல் பரிசினையும், 10 முறைகள் இரண்டாம் பரிசினையும், 4 முறைகள் மூன்றாம் பரிசினையும், ஒருமுறை சமமான பரிசினையும் வென்று, ஆக மொத்தம் 26 வெற்றிகளுடன், இறுதிச்சுற்றினில் ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தினைத் தக்க வைத்துக்கொண்டு, சாதனைகள் பல புரிந்துள்ளவர் நமது ‘காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர் [http://esseshadri.blogspot.com] திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்.

  மேற்படி சிறுகதை விமர்சனப் போட்டியின் நிறைவு விழாவினில், இவரின் சாதனைகளைப் பாராட்டி அடியேன் அறிவித்திருந்த விசேஷப் பரிசுகளில் ஒன்றுக்கு ‘சேஷ் விருது’ என்றே பெயர் கொடுத்து என்னால் இவரை கெளரவிக்க முடிந்தது. அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.com/2014/11/part-2-of-4.html

  புதுச்சேரியில் Assistant General Manager - B.S.N.L., Planning ஆகப் பணியாற்றி வரும் இவர் சமீபத்தில் ஓர் மகத்தான சாதனை செய்துள்ளார். அதாவது B.S.N.L சார்பில் ’டிஜிடல் இந்தியா திட்டத்தில் தொலை தொடர்பு துறையின் சாதனைகள்’ என்ற தலைப்பில், உலக தொலை தொடர்பு தினமான 17.05.2018 அன்று, ஓர் அருமையான நிகழ்ச்சி You-Tube இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுவையான நிகழ்ச்சியில் இடம்பெறும் திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் போன்ற முழுப் பொறுப்பினை இவரே ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தானே சில காட்சிகளில் தோன்றியும் பேசியும் நம்மை மகிழ்வித்துள்ளார்.

  மிகவும் சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்கள் அடங்கியுள்ள மேற்படி நிகழ்ச்சியைக் காண இதோ இணைப்பு:

  https://www.youtube.com/watch?v=Nt_B8T5YfMA&feature=youtu.be

  நம் பதிவுலக நண்பர் திரு. E.S. சேஷாத்ரி [ASST. GENERAL MANAGER - PLANNING - BSNL - PONDICHERRY] அவர்களுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள்.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 33. இடுகையாகப் போடாமல், பின்னூட்டமாகப் போட்டால் எப்படி எல்லோருக்கும் தெரியும் கோபு சார்?

  நீங்களும் எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும், ஒரு இடுகையும் போடலை. கொஞ்சம் சுறுசுறுப்பா எழுதவேண்டாமா?

  பதிலளிநீக்கு
 34. அஹா கீதாவின் வருகையில் எனக்கும் வாழ்த்தா. விஜிகே சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க.

  இன்னிக்கு உங்க ப்லாக் வந்தா ஒரே சர்ப்ரைஸ். கீதா எப்ப வந்தாங்க.

  படமும் பதிவுகளும் அருமை. புக் கிடைச்சுதா.. உங்க மனைவியும் உங்க கூட வந்து பொன்னாடை எல்லாம் போர்த்தி சிறப்பிச்சுட்டாங்க. அவங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள். :)

  தினமலர் சிறுகதையை பகிர்ந்தமைக்கு மீண்டும் அன்பும் மகிழ்ச்சியும் நன்றியும் சார். வாழ்க வளமுடன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan September 3, 2018 at 4:51 PM

   ஆஹா, வாங்கோ .... ஹனி மேடம். வணக்கம். நல்லா இருக்கீங்களா?

   //அஹா கீதாவின் வருகையில் எனக்கும் வாழ்த்தா.//

   ஆமாம்.

   //விஜிகே சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க.//

   அடியேன் எங்கேயும் போகவில்லை. அனந்த சயனப்பெருமாள் போல, சாய்வாக என் கட்டிலில் படுத்துக்கொண்டு, என் கட்டிலிலேயே, தலைமாட்டில் ஓர் ஓரமாக, மிகப்பெரிய ஸ்க்ரீன் + கீ போர்டு உள்ள டெஸ்க்-டாப் கம்ப்யூட்டரில் தங்களுக்கு பதில் அளித்துக் கொண்டுள்ளேன்.

   //இன்னிக்கு உங்க ப்லாக் வந்தா ஒரே சர்ப்ரைஸ்.//

   உங்களைப்பற்றியும் இந்தப்பதிவினில் விஷயங்கள் நிறைந்திருப்பதால் உங்களுக்கு நான் நிச்சயமாக மெயில் மூலம், தகவல் கொடுத்து, லிங்க் அனுப்பியிருந்த ஞாபகம் உள்ளது. தாங்கள் எப்போதுமே பிஸியோ பிஸியாக இருப்பதால், அந்த மெயிலை வழக்கம்போல கவனித்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். :)

   //கீதா எப்ப வந்தாங்க. //

   அவர்கள் வந்து ஆறுமாதங்களுக்கு மேல் ஆச்சு. அவர்களை நான் சந்திக்க நேர்ந்த 23.02.2018 அன்றே சுடச்சுட இந்தப்பதிவினையும் கொடுத்துள்ளேன்.

   அன்றைய (23.02.2018) தினமலர் - சிறுவர் மலரில்தான் தங்களின் படைப்பான ‘கேட்டதும் கொடுப்பவனே .... கேட்டதெல்லாம் கொடுப்பவளே’ என்ற தலைப்பினில் அட்டைப்படத்திலும், உள்ளேயும் ‘காமதேனு’ பற்றிய இதிகாச-புராணக் கதையும் வெளியிடப்பட்டுள்ளது.

   //படமும் பதிவுகளும் அருமை.//

   மிக்க மகிழ்ச்சி.

   //புக் கிடைச்சுதா..//

   அவர்கள் வெளியிட்ட புக் முன்பே எனக்குக் கிடைத்து, நான் விமர்சனத் தொடரும் எழுதி விட்டேனே.

   http://gopu1949.blogspot.com/2015/09/part-1-of-5.html

   http://gopu1949.blogspot.com/2015/09/part-2-of-5.html

   http://gopu1949.blogspot.com/2015/09/part-3-of-5.html

   http://gopu1949.blogspot.com/2015/09/part-4-of-5.html

   http://gopu1949.blogspot.com/2015/09/part-5-of-5.html

   சந்தித்த அன்று, அதே புக்கில் அவர்களிடம் மீண்டும் ஓர் கையெழுத்தும், தேதியும் போடச் சொல்லி வாங்கிக்கொண்டேன்.

   //உங்க மனைவியும் உங்க கூட வந்து பொன்னாடை எல்லாம் போர்த்தி சிறப்பிச்சுட்டாங்க. அவங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள். :) //

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஹனி மேடம்.

   //தினமலர் சிறுகதையை பகிர்ந்தமைக்கு மீண்டும் அன்பும் மகிழ்ச்சியும் நன்றியும் சார். வாழ்க வளமுடன் :) //

   பதிவு வெளியிட்டு ஆறு மாதங்கள் முடிந்திருப்பினும், அகஸ்மாத்தாக, இன்று இங்கு வருகை தந்து, அசத்தலாகத் தேன் மழை பொழுந்துள்ள ஹனி மேடத்திற்கு என் அன்பான நன்றிகள். வாழ்க !

   அன்புடன் கோபு

   நீக்கு
 35. அன்புடையீர்,

  அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

  ‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

  https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

  மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

  http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

  http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

  http://gopu1949.blogspot.com/2014/10/4.html

  http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 36. திருச்சியில் இருந்துகொண்டே அனாயாசமாக என்னென்னவோ செய்துவருகிறீர்கள்! பொறாமையாக இருக்கிறது! விரைவில் உங்கள் ஆஸ்திரேலியப் பயணக் கட்டுரையை எதிர்பார்க்கிறோம்!
  -இராய செல்லப்பா சென்னை

  பதிலளிநீக்கு
 37. Chellappa Yagyaswamy October 1, 2018 at 6:08 AM

  அடேடே .... வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

  //திருச்சியில் இருந்துகொண்டே அனாயாசமாக என்னென்னவோ செய்துவருகிறீர்கள்!//

  இருக்கும் இடமே (திருச்சியே) எனக்கு சுகமாக உள்ளது. அடியேன் எதுவும் (கிஞ்சித்தும்) செய்வதோ செய்ய முயற்சிப்பதோ இல்லை. அதுஅது தானாகவே, அவ்வப்போது நடந்து வருகின்றது. எதையும் அந்த பகவான் நடத்தி வைக்கிறான். அவனுக்கு முன்னால் நாமெல்லாம் ஒரு மிகச் சாமான்யமான கருவிகள் (Instruments) மட்டுமே.

  ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்(து) !

  //பொறாமையாக இருக்கிறது!//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மிகவும் சாதாரணமானவனான என் மீதும் பொறாமை கொள்ள இந்த பூவுலகில் ஒருத்தரா?

  அடடா, சிவ சிவா ! நாராயணா !! நாராயணா !!

  //விரைவில் உங்கள் ஆஸ்திரேலியப் பயணக் கட்டுரையை எதிர்பார்க்கிறோம்! -இராய செல்லப்பா சென்னை //

  எல்லா நாடுகளையும், எல்லா ஊர்களையும், எல்லா மனிதர்களையும், எல்லா ஜீவராசிகளையும் பரப்பிரும்ம ஸ்வரூபமாகவே பார்க்கும் பக்குவம் பெற முயற்சிக்கும் அடியேனுக்கு, அந்த ஆஸ்திரேலியாவும், எங்கள் ஆண்டார் தெருவும் ஒன்றே ஸ்வாமீ !

  தங்களின் அன்பு வருகைக்கும், அழகுக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 38. கோபு சார்.. அட டா.. இது நல்ல பதிலா இருக்கே. பரப்ரும்ஹஸ்வரூபமா பார்க்கிறேன் என்று சொல்லி, எனக்கு இலைபோட்டு சம்பிரதாயமா போடும் சாப்பாடும் ஒண்ணுதான், துளஸீ தீர்த்தமும் ஒண்ணுதான், அந்த நிலைக்கு நான் என்னைக் கொண்டுபோயிட்டேன் என்று சொல்லி, உங்களைப் பார்க்க வருபவர்களுக்கு வெறும் தண்ணீரைக் கொடுத்து அனுப்பிடலாம் என்ற திட்டமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழன் October 4, 2018 at 4:19 PM

   வாங்கோ ஸ்வாமீ .... வணக்கம்.

   //கோபு சார்.. அட டா.. இது நல்ல பதிலா இருக்கே. பரப்ரும்ஹஸ்வரூபமா பார்க்கிறேன் என்று சொல்லி, எனக்கு இலைபோட்டு சம்பிரதாயமா போடும் சாப்பாடும் ஒண்ணுதான், துளஸீ தீர்த்தமும் ஒண்ணுதான், அந்த நிலைக்கு நான் என்னைக் கொண்டுபோயிட்டேன் என்று சொல்லி, உங்களைப் பார்க்க வருபவர்களுக்கு வெறும் தண்ணீரைக் கொடுத்து அனுப்பிடலாம் என்ற திட்டமா? //

   அட ... டா ! சிவ சிவா !! நாராயண நாராயணா !!!

   என்னுள் உள்ள பரப்பிரும்மம் ஒரு நோக்கத்தில் தன் கருத்தை மிகவும் யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளது.

   தங்களுக்குள் உள்ள பரப்பிரும்மம் அதே கருத்தை வேறு விதமாக எடுத்துக்கொண்டு வியாக்யானம் அளித்துள்ளது.

   //உங்களைப் பார்க்க வருபவர்களுக்கு வெறும் தண்ணீரைக் கொடுத்து அனுப்பிடலாம் என்ற திட்டமா? //

   திட்டமாவது வெங்காயமாவது !

   MAN PROPOSES & GOD DISPOSES என்று பெரியவர்கள் எல்லோரும் சொல்லுவார்கள்.

   ஒருவரையொருவர் நேரில் சந்திக்க நேர்வதோ, வந்த அவரை இன்முகத்தோடு வரவேற்று பேசுவதோ, தன்னால் இயன்ற அளவுக்கு அதிதி சத்காரம் (விருந்துபசாரங்கள்) செய்வதோ, துளஸீ தீர்த்தமேயானாலும் அதனை அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும் அந்த அதிதிக்கு அளிப்பதோ, பெறுபவரான அந்த அதிதியும் ’கிடைத்தது பிரஸாதம்’ என்று ஆத்ம திருப்தியுடன் ஸ்வீகரித்துக்கொள்வதோ எல்லாமே, அவரவர்களின் பிராப்தப்படியும், கடவுளின் திட்டப்படி மட்டுமே நடக்கக்கூடியவைகளாகும். நம் கையில் என்ன இருக்கிறது?

   We are after all an Instrument only, ஸ்வாமீ.

   தங்களுக்குத் தெரியாத சமாச்சாரம் எதுவும் இல்லை. சும்மா இவனை சீண்டிப்பார்க்கிறீர்கள். இதுவும் அவன் செயல் மட்டுமே என நினைத்து மகிழ்ந்து கொண்டேன்.

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   அன்புடன் கோபு

   நீக்கு