About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, September 11, 2013

48] மனிதன் என்பவன் தெய்வமாகலாம் !

2
ஸ்ரீராமஜயம்


உறுதியான சங்கற்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது. அநாவசிய வம்பிலும், நியூஸ் பேப்பர் விமர்சனத்திலும் செலவாகிற காலத்தை மட்டுப்படுத்தினால் நித்திய சிரேயஸைத் தருகிற தியானத்திற்கு வேண்டிய அவகாசம் நிச்சயம் கிடைக்கும்.

”உன் ஆசைப்படி நடந்துகொண்டு, உனக்கென்றே சொத்து சேர்த்துக்கொள்” என்று சொல்கிற மதம் எதுவுமே இல்லை.

முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனை தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிகோளுடன் தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன.

சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றிற்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்க விடக்கூடாது. இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன. 


oooooOoooooகஷ்டத்தைப் பெரிது படுத்தாதே

* தர்மத்திற்கு எப்போதும் அழிவு இல்லை. நிலையான தர்மத்தை மதித்து நடக்க வேண்டியது அவசியம். தர்மப்படி நடப்பவனை பஞ்சபூதங்களும், பிராணிகளும் மதித்து வணங்கும்.

* மனதிற்குள் கஷ்டங்களை வைத்துக் கொண்டு வருந்தாதீர்கள். இறைவனிடம் மனம் விட்டு வேண்டினால் நிம்மதி பிறக்கும்.

* குழந்தை அடம் பிடித்தால் தாய் கட்டிப் போடுவது போல், நம்மிடம் உள்ள ஆசை என்ற விஷமத்தை நீக்க, இறைவன் நம் விருப்பங்களை நிறைவேற்றாமல் கட்டிப் போடுகிறான்.

* நம்முடைய துன்பத்தையே பெரிதாக எண்ணிக் கொண்டு, பிறருக்கான பணியை செய்யாமல் விட்டுவிடக்கூடாது. 

* நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீரில் மூழ்கிய குடம் போல துன்பம் லேசாகிவிடும்.

* எந்தச் செயலையும் முறையுடன் செய்ய வேண்டும். முறை தவறும் போது, அதற்குரிய துன்பத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

oooooOooooo “என்னையே எனக்குக் கொடு”

Thanks to Sage of Kanchi 10 09 2013 


உண்மையான பக்தன் ஒருவன், பரமேஷ்வரனுக்குப் பூஜை செய்ய விரும்புகிறான். உடனேயே அவனுக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிடுகிறது. ஈஸ்வரனிடமே கேட்கிறான்: 

“ஈச்வரா! நான் உனக்கு உபசாரம் செய்வதாக நினைத்துப் பூஜை செய்தாலும் உண்மையில் அபசாரம் அல்லவா செய்வதாகத் தோன்றுகிறது? 

திரிலோகமும் வியாபித்த உன் திருவடியை நான் ஓர் உத்தரணி தீர்த்தத்தால் அலம்ப முடியுமா? 

விசுவாகாரமான உன் சரீரத்திற்கு இந்த சிறிய வஸ்திரத்தைக் கட்டி மூட முடியுமா! 

உனக்கு நமஸ்காரம் பண்ணினால், என் காலை எந்தப் பக்கம் நீட்டினாலும் அங்கேயும் தான் நீ இருக்கிறாய். ஆனபடியால் உனக்கு நேரே காலை நீட்டிய தோஷம் அல்லவா எனக்கு ஏற்படுகிறது? 

சரி, பூஜையே வேண்டாம் என்று பிரார்த்தனை செய்யப் பார்த்தால், எல்லாம் அறிந்த ஸர்வக்ஞனான உன்னிடம் பிரார்த்திபதும் அபசாரமாக அல்லவா ஆகிறது? பிரார்த்தனை என்றால் உனக்குத் தெரியாதவற்றை நான் கேட்பதாகத்தானே ஆகும். நீ ஸர்வக்ஞன் என்பதற்கு என் பிரார்த்தனையே குறைவு உண்டாக்குகிறது. 

இருந்தாலும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிற அளவுக்கு நான் குறை உள்ளவனாக இருக்கத்தானே செய்கிறேன்? அதனால் அந்தக் குறை நீங்குவதற்காக உன்னிடம் பிரார்த்திக்கிறேன். 

அது சரி, எல்லாமான உன்னிடம் எதைப் பிரார்த்திப்பது? எல்லாமான நீயேதான் நானாகவும் ஆகியிருக்கிறாய் என்று தெரியாமல் என்னைக் குறைவு படுத்திக் கொண்டிருக்கிறேனே. இந்தக் குறையை நீக்கு என்றே பிரார்த்திக்கிறேன். 

நீ அகண்ட ஆனந்த ஸ்வரூபம்; உன்னைத் தவிர வேறில்லை என்று வேதம் சொல்கிறது. 

இருந்தாலும் பூரண ஆனந்தமாக உனக்கு வேறாக இப்படிக் கோணலும் மாணலுமாகக் குறையோடு நான் ஒருத்தன் இருப்பதுபோல் தோன்றுகிறதே? இல்லாவிட்டால் அழுதுகொண்டு இப்படி நான் பிரார்த்தனை பண்ண வரவேண்டியதே இல்லையே! 

இப்படி நான் உனக்கு வேறாக இருப்பதாகத் தோன்றுவதைப் போக்கடி. 

போக்கினால் நீ தான் எல்லாமும், நீதான் நானும். அதாவது நான்தான் எல்லாமும் என்று ஆகும். 

அதாவது உன்னிடம் நான் இதைத்கொடு அதைக்கொடு என்று வெளி வஸ்துக்களைக் கேட்கவில்லை. என்னையே எனக்குக் கொடு என்றே பிரார்த்திக்கிறேன்!” – இப்படிச் சொல்கிறார் அந்த பக்தர். 

இந்த ரீதியிலேயே ‘சிவ மானஸிக பூஜா’ என்ற ஸ்தோத்திரத்தில் பிரார்த்தித்திருக்கிறார் ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள்.

மஹ்யம் தேஹி ச பகவன்
மதீயமேவ ஸ்வரூபம் ஆனந்தம்

‘என் ஆனந்த ஸ்வரூபத்தையே எனக்குக் கொடு’ 
என்கிறார்.

இப்போது நாம் எல்லோரும் நம் நிஜ ஸ்வரூபத்தை விட்டுவிட்டு வேஷத்தில் இருக்கிறோம். நமக்கு வேண்டியவர்களை விட்டுவிட்டால் தவிக்கிறோமே, 

நம்மையே நாம் விட்டுவிட்டதற்கு எவ்வளவு தவிக்க வேண்டும்? 

நம் ஆனந்த ஆத்ம ஸ்வரூபத்தோடு அதுவே நாமாக எப்போது கலக்கப்போகிறோம் என்ற தவிப்பும், அதைப்பற்றிய நினைப்பும் நமக்கு ஸதா இருக்கவேண்டும். 

பரமாத்மாவுடன் கலப்பதற்காக இப்படிச் சகிக்க முடியாமல் தவிப்பதுதான் உண்மையான பிரேமை. அந்தப் பிரேமைக்குத்தான் பக்தி என்று பெயர்.

இதற்கு முதல்படியாக வெளிப்பூஜை, கோவில் வழிபாடு எல்லாம் வேண்டியிருக்கிறது. உலக நினைப்பே ஓயாத காரியமாக இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் இவைதான் பரமாத்மாவை நினைக்கச் சாதனங்களாகும். 

இந்தக் கட்டத்தில் ஸ்வாமி கோவிலில் மட்டுமின்றி எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறார்; நாமும்கூட அவரேதான் என்று நாம் உணராவிட்டாலும் பரவாயில்லை. 

மூல விக்கிரகத்தில்தான் ஸ்வாமி இருக்கிறார் என்று நினைத்து, கோவில் தூணிலேயே நாம் பிரசாதக் கையை துடைத்துவிட்டு வந்தாலும் பாதகமில்லை. மூல விக்கிரகத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயப்பட்டு அங்கே கையைத் துடைக்காத அளவுக்கு வந்திருக்கிறோமல்லவா? 

ஸ்வாமி இல்லவே இல்லை என்று நினைக்காமல் எங்கேயோ ஓரிடத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயபக்தியுடன் ஆரம்பித்தாலே போதும் – சிரத்தை தளராமல், நம்பிக்கை மாறாமல், அப்பியாசம் செய்துகொண்தெயிருந்தால், நாளாவட்டத்தில் ஸ்வாமி எங்கும் இருக்கிறார், எல்லாமாக இருக்கிறார் என்பது புத்திக்குப் புரியும். 

புத்திக்குப் புரிவது அநுபவமாக ஆவதற்கு, “என்னையே எனக்குக் கொடு” என்று பிரார்த்தித்துக்கொண்டேயிருக்க வேண்டும். 

ஞானாம்பிகை கிருபை செய்வாள்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

51 comments:

 1. இன்னிக்கு அதிர்ஷவசமா முதல்ல வந்துட்டேன் போல.. இல்லாட்டி கமெண்ட் போட க்யூ எல்லாம் நகர்ந்து அதற்குள் டயர்டா ஆகிடும்..

  நம்மை மீறிய எதோ ஒரு சக்தி இருக்கிறது அதை உணர ப்ரார்த்தனை, தியானம் ஆகியவை சிறந்த வழிகள்.

  ReplyDelete
 2. மதம் என்ன சொல்கிறது...? :

  /// முதலில் மனிதனை மனிதனாக ஆக்கி தெய்வமாகவே உயர்த்த வேண்டும்... ///

  அதிக துன்பம் என்றால்...?

  /// முறை தவறிய செயல் நடக்கும் போது, அதற்குரிய துன்பத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும். ///

  ஏன் தவிக்க வேண்டும்...?

  /// என்னையே எனக்குக் கொடு... ///

  அனைத்தும் அருமை ஐயா...

  ReplyDelete
 3. அவசர உலகத்தில் மனிதன் எல்லாவறையும் மறந்து போகிறான் .
  தியானங்களும் இறைவன் மீது கொள்ளும் நம்பிக்கையும் வாழ்வை
  வளப்படுத்தும் என்ற உண்மையை உணராதவரைக்கும் வாழ்வில்
  நன்மைகள் நிகழ வாய்ப்பேயில்லை .தியானம் செய்வோம் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொள்வோம் என்று வலியுறுத்தும் அழகான படைப்பிற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் ஐயா .

  ReplyDelete
 4. மூல விக்கிரகத்தில்தான் ஸ்வாமி இருக்கிறார் என்று நினைத்து, கோவில் தூணிலேயே நாம் பிரசாதக் கையை துடைத்துவிட்டு வந்தாலும் பாதகமில்லை. மூல விக்கிரகத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயப்பட்டு அங்கே கையைத் துடைக்காத அளவுக்கு வந்திருக்கிறோமல்லவா?

  அருமை !

  ReplyDelete
 5. அன்பின் வை.கோ - அருமையான பதிவு

  //முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனை தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிகோளுடன் தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன.//

  // குழந்தை அடம் பிடித்தால் தாய் கட்டிப் போடுவது போல், நம்மிடம் உள்ள ஆசை என்ற விஷமத்தை நீக்க, இறைவன் நம் விருப்பங்களை நிறைவேற்றாமல் கட்டிப் போடுகிறான்.//

  // அதாவது உன்னிடம் நான் இதைத்கொடு அதைக்கொடு என்று வெளி வஸ்துக்களைக் கேட்கவில்லை. என்னையே எனக்குக் கொடு என்றே பிரார்த்திக்கிறேன்!” //

  சிந்தனை நன்று

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் புகைப்படங்கள் அருமை.

  மிக மிக இரசித்தேன் பதிவினைப் படித்து மகிழ்ந்தேன்.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 6. இரை தேடும்போது இறையையும் தேடு
  இல்லாவிடில் காலனுக்கு இரையாகும்போது
  நம் ஆன்மா இருக்க இடம் இல்லாமல் அலைய நேரிடும்.

  ReplyDelete
 7. இரை தேடும்போது இறையையும் தேடு
  இல்லாவிடில் காலனுக்கு இரையாகும்போது
  நம் ஆன்மா இருக்க இடம் இல்லாமல் அலைய நேரிடும்.

  ReplyDelete

 8. /எல்லாமான நீயேதான் நானாகவும் ஆகியிருக்கிறாய் என்று தெரியாமல் என்னைக் குறைவு படுத்திக் கொண்டிருக்கிறேனே. இந்தக் குறையை நீக்கு என்றே பிரார்த்திக்கிறேன்./மிகவும் ரசித்தது. இதையேதான் கிருத்துவத்திலும் THE KINGDOM OF GOD IS WITHIN YOU என்று சொல்கிறார்கள். என்னில் உன்னைக் காண என்னையே எனக்குக் கொடு. அருமை.

  ReplyDelete
 9. மனதிற்குள் கஷ்டங்களை வைத்துக் கொண்டு வருந்தாதீர்கள். இறைவனிடம் மனம் விட்டு வேண்டினால் நிம்மதி பிறக்கும்.//
  உண்மை. நான் என் கஷ்டங்களை அவரிடம் சொல்வேன் நல்லவைகள் நடக்கும் போது அவருக்கு நன்றி சொல்வேன்.
  அருமையான அமுத மொழி.

  //ஸ்வாமி இல்லவே இல்லை என்று நினைக்காமல் எங்கேயோ ஓரிடத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயபக்தியுடன் ஆரம்பித்தாலே போதும் – சிரத்தை தளராமல், நம்பிக்கை மாறாமல், அப்பியாசம் செய்துகொண்தெயிருந்தால், நாளாவட்டத்தில் ஸ்வாமி எங்கும் இருக்கிறார், எல்லாமாக இருக்கிறார் என்பது புத்திக்குப் புரியும்.

  புத்திக்குப் புரிவது அநுபவமாக ஆவதற்கு, “என்னையே எனக்குக் கொடு” என்று பிரார்த்தித்துக்கொண்டேயிருக்க வேண்டும். //

  அப்பியாசம் செய்து கொண்டு இருப்பது நல்லது. இறைவன் இருக்கிறான் நமமைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்ற நினைப்பு இருந்தாலே தவறுகள் குறையும்.
  எந்த செயலை செய்து கொண்டு இருந்தாலும் இறைவன் நினைப்பு இருந்து கொண்டே இருப்பது நமக்கு நல்லது. இதற்கு ஞானாம்பிகை கிருபை செய்ய வேண்டும் என்று நாளும் பிராத்திப்போம்.
  தேர்ந்து எடுத்து கொடுத்த அமுத மொழிகள் ,ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள் அவர்களின் பிரார்த்தனைகள் எல்லாம் தினம் படித்து மகிழ வேண்டியவை. உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள் சார்.


  ReplyDelete
 10. * மனதிற்குள் கஷ்டங்களை வைத்துக் கொண்டு வருந்தாதீர்கள். இறைவனிடம் மனம் விட்டு வேண்டினால் நிம்மதி பிறக்கும்.
  * குழந்தை அடம் பிடித்தால் தாய் கட்டிப் போடுவது போல், நம்மிடம் உள்ள ஆசை என்ற விஷமத்தை நீக்க, இறைவன் நம் விருப்பங்களை நிறைவேற்றாமல் கட்டிப் போடுகிறான்.//

  அற்புதம்! நல்ல பகிர்வு! மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 11. நன்று அருமையான பதிவு

  ReplyDelete
 12. நன்று அருமையான பதிவு

  ReplyDelete
 13. Dr. Sri Muralidhara Swamigal
  September 11, 2013 at 4:41 AM

  பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  ஸ்வாகதம் ... வருக! வருக!! வருக!!! என பூர்ண கும்ப மரியாதைகளுடன் மானஸீகமாக வரவேற்றுக்கொள்கிறேன்.

  என் வலைப்பக்கம் தங்களின் வருகையை நான் செய்த பாக்யமாகக் கருதி மகிழ்கிறேன்.

  //நன்று அருமையான பதிவு//

  மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த மகிழ்வான இனிய அன்பு நன்றிகள்.

  மிகத் தாழ்மையுடன்,

  ஸ்ரீகோபாலகிருஷ்ண ஸர்மா

  ReplyDelete
 14. "முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனை தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிகோளுடன் தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன." மனிதன்தான் அறிவு கெட்டு ஓடுகின்றான்.

  ReplyDelete
 15. “வேண்டத்தக்கது அறிவோய் நீ
  வேண்ட முழுதும் தருவோய் நீ” –

  என்று மாணிக்கவாசகர் வேண்டுகிறார்.

  ReplyDelete
 16. உறுதியான சங்கற்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.

  நித்திய சிரேயஸைத் தருகிற தியானத்திற்கு வேண்டிய அவகாசம் நிச்சயம் கிடைக்கும் என்கிற அருமையான தாத்பர்யத்தை உணர்த்திய சிறப்பான பகிர்வுகள்..!

  ReplyDelete
 17. இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன.

  எல்லாமதங்களும் போதிப்பது என்றாலும் யாரும் மனதில் கொள்வதில்லை..!

  ReplyDelete
 18. நம் ஆனந்த ஆத்ம ஸ்வரூபத்தோடு அதுவே நாமாக எப்போது கலக்கப்போகிறோம் என்ற தவிப்பும், அதைப்பற்றிய நினைப்பும் நமக்கு ஸதா இருக்கவேண்டும்.

  உண்மையான பக்தியை அருமையாக பதிவு செய்த சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 19. சிரத்தை தளராமல், நம்பிக்கை மாறாமல், அப்பியாசம் செய்துகொண்டேயிருந்தால், நாளாவட்டத்தில் ஸ்வாமி எங்கும் இருக்கிறார், எல்லாமாக இருக்கிறார் என்பது புத்திக்குப் புரியும்.

  ஆத்மார்த்தமான அமுத மழை ...!

  ReplyDelete
 20. அருமையான பகிர்வு...
  பதிவுக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 21. முதலில் மனிதன் மனிதனாக வேண்டும்.
  அருமை ஐயா.நன்றி

  ReplyDelete
 22. முதலில் மனிதன் மனிதனாக வேண்டும்.
  அருமை ஐயா.
  நன்றி

  ReplyDelete
 23. மகா பெரியவரின் உபதேசம் படிக்க படிக்க நம்முடைய பல சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கின்றது.
  அருமையான பதிவு.
  நன்றி வைகோ சார்.

  ReplyDelete
 24. Sir, one suggestion, why not take out comment moderation? I find that more comments are repeated (including mine) as we don't know whether the comment is saved.

  ReplyDelete
  Replies
  1. middleclassmadhaviSeptember 11,2013 at10:01PM

   அன்புள்ள MCM Madam, வாங்கோ, வணக்கம்.

   //Sir, one suggestion, why not take out comment moderation? I find that more comments are repeated (including mine) as we don't know whether the comment is saved.//

   தங்கள் ஆலோசனைக்கு நன்றி.

   comment moderation ஐ எனக்குப்பொருத்தவும் தெரியாது, அதை நீக்கவும் தெரியாதும்மா.

   இதை எனக்காக் செய்து கொடுத்துள்ளது வேறு ஒரு நண்பர்/பதிவர். அவர் இப்போது டெல்லியில், நான் திருச்சியில். ;)

   ஒருவிதத்தில் இது எனக்கு மிகவும் உபயோகமாகவே இருந்து வருகிறது. வரும் கமெண்ட்ஸ்களை மெயில் மூலம் கண்காணிக்க வசதியாக உள்ளது.

   தங்களுடைய கமெண்ட் ரிபீட் ஆனால் தான் என்ன? எனக்கு சந்தோஷமே!

   நான் எல்லாவற்றையும் முதலில் சகட்டுமேனிக்கு PUBLISH கொடுத்து விடுவேன்.

   பிறகு கிளி ஆராய்ச்சியின் போது Repeated comments களை மட்டும் Delete செய்வேன் அல்லது கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டேன்.

   அதனால் இப்போதைக்கு அது அப்படியே இருக்கட்டுமே, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

   இதனால் தங்களுக்கு ஏற்படும் சிறிய சிரமங்களுக்கு மன்னிக்கவும்.

   தங்களின் ரிபீடட் கமெண்ட்ஸ்களால், உங்களுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அனுக்ரஹமும் ரிபீட் ஆகிக் கிடைக்கக்கூடும், என எனக்குத் தோன்றுகிறது ;)))))

   அன்புடன் VGK

   Delete
 25. கடவுளை நினைத்து தியானம் பண்ணுகின்ற மனம் வேண்டும். அது நம்மிடம் இருப்பதையே மறந்து விடுகிறோம் போலும், அதனால்தான் என்னையே எனக்குக் கொடு என்ற பிரார்த்தனை அவசியமாகிறது. என்ன அழகான கோரிக்கையுடனான வார்த்தைகள்.
  ரொம்பரொம்ப ரஸித்துப் படித்தேன் களஞ்சியமாக அமுத மொழிகள் இருக்கிறது. நன்றி அன்புடன்

  ReplyDelete
 26. //மூல விக்கிரகத்தில்தான் ஸ்வாமி இருக்கிறார் என்று நினைத்து, கோவில் தூணிலேயே நாம் பிரசாதக் கையை துடைத்துவிட்டு வந்தாலும் பாதகமில்லை. மூல விக்கிரகத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயப்பட்டு அங்கே கையைத் துடைக்காத அளவுக்கு வந்திருக்கிறோமல்லவா? //

  சத்தியமான வரிகள்.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 27. பெரியவரை நினைக்கும்போது எல்லாம் மேனி சிலிர்க்கிறது சார்..... என்னுடைய பதிவில் கும்பகோணம் வெற்றிலை என்பதில் வெற்றிலையின் பெயர் காரணம் பெரியவர் சொல்லியதுதான் ! நன்றி !

  ReplyDelete
 28. //“ஈச்வரா! நான் உனக்கு உபசாரம் செய்வதாக நினைத்துப் பூஜை செய்தாலும் உண்மையில் அபசாரம் அல்லவா செய்வதாகத் தோன்றுகிறது?

  திரிலோகமும் வியாபித்த உன் திருவடியை நான் ஓர் உத்தரணி தீர்த்தத்தால் அலம்ப முடியுமா?

  விசுவாகாரமான உன் சரீரத்திற்கு இந்த சிறிய வஸ்திரத்தைக் கட்டி மூட முடியுமா!

  உனக்கு நமஸ்காரம் பண்ணினால், என் காலை எந்தப் பக்கம் நீட்டினாலும் அங்கேயும் தான் நீ இருக்கிறாய். ஆனபடியால் உனக்கு நேரே காலை நீட்டிய தோஷம் அல்லவா எனக்கு ஏற்படுகிறது?//

  பல சமயங்களில் நமக்குள் எழும் கேள்விகளுக்கு பெரியவாளின் விளக்கம் இனிமை.

  ReplyDelete
 29. சதாசிவ ப்ரமேந்திராளின் சிவ மானசீக பூஜாவின் விளக்க வரிகள் மிகவும் அருமை! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 30. //இப்போது நாம் எல்லோரும் நம் நிஜ ஸ்வரூபத்தை விட்டுவிட்டு வேஷத்தில் இருக்கிறோம்.//

  உண்மை. அருமையான பகிர்வு. அமுத மொழிகள் ஒவ்வொன்றும் யோசிக்க வைத்தன.

  ReplyDelete
 31. அய்யாவிற்கு வணக்கம், தங்களின் பதிவைப் படிக்கும் போதே ஆன்மீகக்கடலில் நீந்தி வந்த உணர்வு ஏற்படுகிறது. பெரியவாளின் விளக்கம் நம்மைத் தெளிவு படுத்துகிறது. பகிர்ந்தமைக்கு நன்றிகள் அய்யா.. //எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன// உண்மையான வரி. மனித மனம் தான் ஏற்க மறுக்கிறது. மனிதத்தை மனிதன் உணர்ந்து விட்டாலே இறைவனின் அன்பிற்கு ஆளாகி விடலாம். நன்றி அய்யா. அன்புடன் அ.பாண்டியன்.

  ReplyDelete
 32. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 33. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றிற்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்க விடக்கூடாது. இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன//முற்றிலும் உண்மை ஐயா இதை சரிவர புரிந்துகொள்ளாததால் தான் உலகில் இத்தனை பிரச்சனைகள்

  ReplyDelete
 34. ஞானாம்பிகை கிருபை செய்யணும். அதுக்குக் காத்திருப்போம்.

  //குழந்தை அடம் பிடித்தால் தாய் கட்டிப் போடுவது போல், நம்மிடம் உள்ள ஆசை என்ற விஷமத்தை நீக்க, இறைவன் நம் விருப்பங்களை நிறைவேற்றாமல் கட்டிப் போடுகிறான்.//

  அதான் நமக்குப் புரியறதே இல்லையே! விருப்பம் நிறைவேறணும்னு தான் திரும்பத் திரும்பப் பாடுபட்டுட்டு இருக்கோம். :(

  //* நம்முடைய துன்பத்தையே பெரிதாக எண்ணிக் கொண்டு, பிறருக்கான பணியை செய்யாமல் விட்டுவிடக்கூடாது. //

  பூதாகாரமாய்த் தெரியறது அது ஒண்ணு மட்டுமே. மத்தது எங்கே கண்ணிலே படறது!

  //* நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீரில் மூழ்கிய குடம் போல துன்பம் லேசாகிவிடும்.//

  ஞானம் கொஞ்சமானும் இருந்தால் தானே துக்கங்களை அமுக்க முடியும். எப்போ வருமோ!

  ReplyDelete
 35. மீ ரொம்ப தாமதா வந்திருக்கிறேன்ன்... இருப்பினும் எல்லாம் படிச்சிட்டேன்ன்.. அதனால ஆர் சொன்னாலும்:) சொல்லாவிட்டாலும்:)/தடுத்தாலும்:) பெரியவாளின் அனுக்கிரகம், மீக்கு நிட்சயம் உண்டு.....சொல்லிட்டேன்ன்:).

  ReplyDelete
 36. //* தர்மத்திற்கு எப்போதும் அழிவு இல்லை. நிலையான தர்மத்தை மதித்து நடக்க வேண்டியது அவசியம். தர்மப்படி நடப்பவனை பஞ்சபூதங்களும், பிராணிகளும் மதித்து வணங்கும்.//ஆம் தர்மம் நிச்சயம் வெல்லும்...

  //* எந்தச் செயலையும் முறையுடன் செய்ய வேண்டும். முறை தவறும் போது, அதற்குரிய துன்பத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.// உண்மைதான் ஐயா,நிறைய தடவை தவறை செய்து தண்டனை அடைந்திருக்கேன்...

  அனைத்தும் அருமை ஐயா!!

  ReplyDelete
 37. Amuthamalai is real amudam to read.
  மனதிற்குள் கஷ்டங்களை வைத்துக் கொண்டு வருந்தாதீர்கள். இறைவனிடம் மனம் விட்டு வேண்டினால் நிம்மதி பிறக்கும்

  Perfect words.
  viji

  ReplyDelete
 38. ஐம்பதாவது வெற்றிப்பதிவுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துகள்..!

  ReplyDelete
 39. அரவிந்தகுமார் September 16, 2013 at 3:58 AM

  வாங்கோ Mr. அரவிந்தகுமார், வாங்கோ, வணக்கம்.

  தங்களின் அன்பான வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது.

  //ஐம்பதாவது வெற்றிப்பதிவுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துகள்..!//

  ;))))) மிக்க நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி.

  பார்க்கப்போனால் இது தான் இந்தத் தொடரின் 50வது பகுதியாக இருந்திருக்க வேண்டும். அதனால் தாங்கள் இங்கு வாழ்த்தியுள்ளதும் ஒருவிதத்தில் நியாயம் தான். அன்பான ஆசிகள்.

  பிரியமுள்ள VGK

  ReplyDelete
 40. மனிதன் தெய்வமாவதற்குத் தேவையான சிந்தனோபதேசங்கள் யாவும் அருமை.

  \\புத்திக்குப் புரிவது அநுபவமாக ஆவதற்கு, “என்னையே எனக்குக் கொடு” என்று பிரார்த்தித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.\\

  தன்னைத்தானே முதலில் அறிந்துகொள்ள பிரார்த்தனை அவசியம். சிறப்பான பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 41. very very interesting post sir, thank you very much sir for making us think...

  ReplyDelete
 42. ஸ்வாமி தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்னிலும் எல்லோரிடத்திலும் இருக்கிறார் பக்தியின் உச்ச நிலையில்தான் இதை உணரமுடியும் ஸதாசிவப்ரம்மேந்த்ராள் போன்ற் ஞானிகளுக்குஞ்களுக்கு த்தான் இதுபோல் ஸித்திக்கும் நாமெல்லாம் அந்த நிலையைஅடைய சாத்தியமே இல்லை ஸ்வாமின்னு ஒன்னு இருக்கு எதாவதுகஷ்டம்ன்னா முறையிடுவோம் அவ்வளவுதான்

  ReplyDelete
 43. இறைத் தத்துவம் புரிந்தால் நாமே இறைவன்தான்.

  ReplyDelete
 44. நீ எனக்கு அதைக்கொடு, இதைக்கொடு என்று வெளி வஸ்துகளை கேட்க போவதில்லை என்னையே எனக்கு கொடு. என்ன ஒரு பரிசுத்தமான பக்தி.

  ReplyDelete
 45. மனிதனுக்குத்தான் எவ்வளவு சந்தேகங்கள்.

  என்னில் என்னைத் தேட அருள் புரிவாய் இறைவா!

  வயது ஆக ஆகத்தான் இதெல்லாம் ஏதோ கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கிறது.

  இதெல்லாம் புரியாவிட்டாலும் நல்லதொரு மனிதனாக வாழ்ந்தால் போதும்.

  ReplyDelete
 46. மனுச சகதிய விட ஒசந்ததா சுப்ரீம் பவரு ஒன்னு இருக்குதுதா.

  ReplyDelete
 47. என்னுள் என்னைத்தேட அருள் புரிவாய் இறைவா ஆத்மார்நமான பக்தியும் பிரார்த்தனைகளும் தியானமுமே இதற்கான வழி.

  ReplyDelete
 48. முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனை தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிகோளுடன் தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன.// மதம் பிடித்த மனிதர்களுக்கெனவே சொல்லப்பட்டதுபோல இருக்கிறது...

  ReplyDelete
 49. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (23.06.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/421824161653617/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete