About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, September 21, 2013

53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்

2
ஸ்ரீராமஜயம்பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த மூன்று இலைகளை ஒரே அளவு சேர்த்து, தினந்தோறும் ஒரு பிடி தின்றுவிட்டால் போதும், எந்த வியாதியும் வராது என்று ஒரு நாட்டு வைத்தியர் எழுதியிருக்கிறார்.


    வேப்பங்காற்றே ரத்தசுத்தி  உண்டாக்குவதென்றும், அதோடு கர்ப்பக்கோளாறுகளைப் போக்குவதென்றும், அரசமரக்காற்றுக்கும் கர்ப்பப்பை நோய்களை நிவ்ருத்தி செய்கிற சக்தி இருக்கிறதென்றும், அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் பண்ணிவைத்து, புத்ர ஸந்தானமில்லாதவர்கள் அதைப் பிரதக்ஷணம் பண்ண வேண்டுமென்று வைத்திருப்பதில், இப்படி வைத்ய சாஸ்திரப் பிரகாரமே ஸந்ததி உண்டாவதற்குக் காரணம் தெரிகிறதென்றும் அவர் சொல்லியிருக்கிறார்.  
oooooOooooo

Kind Attn: 
Mr GMB Sir + 
Mrs. Ranjani Narayanan Madam 


{இனி வரும் பகுதியை சற்றே பெரிய எழுத்துக்களாக்கிப் படிக்க 
Key Board இல் உள்ள Ctrl [Control] பித்தானை அமுக்கிக்கொண்டு பிறகு 
+  [PLUS] என்ற பித்தானையும் அமுக்கவும்.  

+ [PLUS] ஐ ஒருமுறை அமுக்கினால் 
எழுத்துகள் சற்றே பெரிதாகும். 

இருமுறை அமுக்கினால் மேலும் பெரிதாகும். 

பழையபடி Normal Size க்கு கொண்டு வர 
CONTROL and MINUS அமுக்க வேண்டும்.

இந்தப் பாடத்தைக் கற்றுக்கொடுத்த
திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு 
என் அன்பான இனிய நன்றிகள்.


oooooOooooo


மணலில் போட்ட அக்ஷதை - 
அதன் தாத்பர்யம் என்ன?

வெங்கடாத்திரி அகரத்தில் மஹா பெரியவா மணலில் போட்ட அக்ஷதையை, அவரது ஆணைப்படி சேலம் வக்கீல் ராமசாமி ஐயரும், அவரது மனைவியும் கண்களில் ஒற்றிக் கொண்டு தங்களது மேல்வேஷ்டி மற்றும் புடவைத் தலைப்பில் சர்வ ஜாக்கிரதையாக முடிந்து வைத்துக் கொண்டனர். 

எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ, புடவைத் தலைப்பிலோ விழுமாறு அக்ஷதையைப் போட்ட மஹா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும், யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மஹான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?


சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மஹா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு,வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார். சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அக்ஷதையிலேயே இருந்தது. ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது.  
காரணம் – வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர். 
வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்… அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார். உள்ளே – ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர், பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார்.


பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு – உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மஹா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’ 

ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம். இருக்காதா பின்னே! எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து – அதுவும் நல்ல நன்செய் நிலம் – தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும். மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு. 

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார். 

இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மஹா பெரியவா, அக்ஷதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர். ஆனால், அப்படி அக்ஷதை போட்டு ஆசி புரிந்த மஹா பெரியவா இதை மறப்பாரா?


நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மஹா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர். ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது.
தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து, அரிசி அரைத்துக் கொண்டு, அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.


அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மஹா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார். 

“வாப்பா ராமசாமி… சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” – மஹா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை. 

மஹா பெரியவாளே தொடர்ந்தார்:  “இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே?” மஹா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர். 


சட்டென்று நிதானத்துக்கு வந்து, “ஆமா பெரியவா. வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே, என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.

முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைகளையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.” 

“எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அக்ஷதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி… இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது. 

மஹா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை. 

மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மஹா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார். 
“ஆமா பெரியவா… அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அக்ஷதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார். 


இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது. ‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மஹா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அக்ஷதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

[Thanks to Mr RISHABAN Srinivasan Sir 
for forwarding this incident by mail on 29.07.2013] 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியிடப்படும்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

55 comments:

 1. அன்பின் வை.கோ


  அருமை அருமை - பதிவு அருமை

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் செயல்கள் புரிந்து கொள்ள தனித் திறமை வேண்டும். அவரது ஒவ்வொரு செயலும் நமக்கு நன்மையை அறிவுறுத்தும் செயல் தான் .

  ரிஷபன் ஸ்ரீனிவாசனின் தகவல் பகிர்வினிற்கும்- அப் பகிர்வினை இங்கு பகிர்ந்த தங்களூக்கும் நன்றி - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. அன்பின் வைகோ

  வில்வம் துளசி வேம்பு மகிமைகள் - அருமை - நாட்டு வைத்தியத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் இவைகள் இன்றும் பலரால் பயன் படுத்தப் படுகின்றன.

  பதிவர்கள் GMB மற்றும் ரஞ்சனி நாராயணன் இருவருக்கும் - அவர்களுடைஅய் மறுமொழிகளீல் கேட்டிருந்த செயல்களூக்கு செய்முறை விளக்கம் அளித்க்தமை நன்று. DD க்கும் நன்றி. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
 3. வாழ்க்கையில் யாருக்கு எப்போது எது நடக்கும்? எது கிடைக்கும்? இறைவன் சில முன்னறிவிப்புகளை இயற்கையாகவும் பெரியவர்கள் வழியாகவும் காட்டுகிறான்.

  ReplyDelete
 4. நிலம் கிடைக்கப்போகிறது என்பதை சூசகமாக உணர்த்திய பெரியவாளின் மகிமையை என்னவென்று சொல்வது? எனக்காகவும், திரு GMB அவர்களுக்காகவும் எழுத்துக்களை பெரிதாக்கிப் படிக்க வழி செய்ததற்கு நன்றி. இதை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த DD அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. இந்த முறையை எல்லா தளங்களிலும் பயன்படுத்த முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. Ranjani Narayanan
   September 21, 2013 at 2:11 AM

   வாங்கோ, வணக்கம்.

   //எனக்காகவும், திரு GMB அவர்களுக்காகவும் எழுத்துக்களை பெரிதாக்கிப் படிக்க வழி செய்ததற்கு நன்றி. இதை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த DD அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.//

   நன்றிக்கு நன்றி.

   //இந்த முறையை எல்லா தளங்களிலும் பயன்படுத்த முடியுமா?//

   இதென்ன கேள்வி? கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?

   கையில் கணினியை வைத்துக்கொண்டு இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா?

   உடனடியாக இதை ஒவ்வொரு தளத்திலும் சோதனை செய்து பாருங்கோ. தெரியும்.

   அன்புடன் கோபு

   Delete
  2. Ranjani Narayanan : அனைத்து தளத்திலும் இதே போல் பார்க்கலாம் அம்மா... நன்றி...

   Delete
 5. வில்வம், துளசி, வேம்பு மற்றும் பெரியவாளின் உன்னதம் உணரத் தக்கது. நன்றி ஐயா.

  ReplyDelete
 6. துளசி எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்கள் வீட்டில் நிறைய இருக்கு.. காலையில் இரண்டு இலை பறித்து சாப்பிடுவதுண்டு. அலுவலகம் கொண்டு வரும் வாட்டர் பாட்டிலிலும் இரண்டு இலைகளை போட்டு விடுவேன். தண்ணீரில் துளசி நறுமணம் நல்லாருக்கும்!

  ReplyDelete
 7. வில்வம் துளசி வேம்பு மகிமையும் பெரியவாளின் கருணையும் படித்து மகிழ்ந்தேன்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 8. ஸாதாரணமாகவே, துளசியும்,வேம்பும் நாம் வைத்தியத்திற்காக மிகவும் உபயோகிக்கிறோம். வில்வப் பழத்தை நல்ல வேனிற்காலங்களில் ஜூஸாகச்செய்து பருகுவதை வங்காளத்தில் பார்த்திருக்கிறேன். சிவன்,விஶ்ணு,அம்பாளென அவர்களை வணங்க,
  பூஜிக்க உபயோகப்படும், உலகத்து மக்களுக்கு நல்ல முறையில் உபயோகப்படும்வில்வம்,துளசி,வேம்பின் மகிமைகள் அறிய மிக்க நன்றி. பெரியவாளின் ஒவ்வொரு அசைவும் மகத்தானது. அன்புடன்

  ReplyDelete
 9. அருமையான கருத்துக்கள்..வில்வம்,துளசி,வேம்பு மகிமை என் மாணவர்களுக்கும் சொல்லித்தரப்போகிறேன்..

  ReplyDelete
 10. அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் பண்ணிவைத்து, புத்ர ஸந்தானமில்லாதவர்கள் அதைப் பிரதக்ஷணம் பண்ண வேண்டுமென்று வைத்திருப்பதில், இப்படி வைத்ய சாஸ்திரப் பிரகாரமே ஸந்ததி உண்டாவதற்குக் காரணம் தெரிகிறதென்றும்

  அரசமர வேப்பமர பிரதட்சிணத்தின் விஞ்ஞானப்பூர்வ நலன்களையும் அருமையாய் தெரிவித்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 11. எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ, புடவைத் தலைப்பிலோ விழுமாறு அக்ஷதையைப் போட்ட மஹா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும், யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மஹான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?

  எத்தனை அனுக்ரஹ அமுதமான ஆசீர்வாதங்கள் பெற்றிருக்கிறார்கள்..!

  ReplyDelete
 12. அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அக்ஷதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.

  தீர்க்கதரிசனத்தின் தத்பர்யத்தை உணர்த்தும் அற்புதமான நிகழ்ச்சி..!

  ReplyDelete
 13. பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த மூன்று இலைகளை ஒரே அளவு சேர்த்து,//

  மூன்று கடவுள் சக்திகளும் இந்த மூன்று இலைகளில் இருப்பதால் நம்நோய் தீர்க்கும் மருந்தாகிறது. இப்போது மக்களின் கவனம் நாட்டு மருந்துகளில் வந்து இருக்கிறது.
  பெரியவாளின் அமுத மொழி நமக்கு அருமருந்து.
  //‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மஹா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அக்ஷதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?//
  ஆம்,அவரைத் தவிர யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
  தன்னை நம்பி குழந்தைகளுக்கு தேவையான சமயத்தில் தேவையானதை கொடுக்கும் கருணையில் தாய் போன்றவர் அல்லவா!
  உங்களுக்கு நன்றி சார்.


  ReplyDelete
 14. வில்வம், துளசி, வேம்பு மகிமைகள் அறிந்தேன் நன்றி

  ReplyDelete
 15. வில்வம் துளசி வேம்பு சிறப்புகள் மிகவும் அருமை ஐயா... பெரியவாளின் (மூத்தவர்கள் நீங்கள் உட்பட) ஒவ்வொரு பதிவும் சிறப்பானது... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. எனக்கு தெரிந்த ஒரு சின்ன வழிமுறையை முந்தைய பதிவில் குறிப்பிட்டேன்... அதை இன்று உங்கள் பதிவிலேயே கண்ட போது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு வார்த்தைகள் இல்லை... மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 17. சூசகமாய் அருளாசி வழங்கிய விதம் சிலிர்க்க வைத்தது

  ReplyDelete
 18. Periyavaa maadiri mandha deivaththai inimel paarkka mudiyaathu. Nandri. Vembu, vilvam, tulasi pattriya vilakkaththukku nandri.

  ReplyDelete
 19. வில்வம், துளஸி, வேம்பு மஹிமை அருமை!
  பெரியவாளின் தீர்க்கதரிஸன சம்பவம் பிரமிப்பு!

  ReplyDelete
 20. வில்வம், துளசி, வேம்பின் மகிமைகளையும், நிலம் கிடைக்கப் போகிறது என்பதை சூசகமாக உணர்த்திய பெரியவாளின் மகிமையையும் படித்து அறிந்து கொண்டேன்.

  வெங்கடாத்ரி அகரம் என்னவரின் பூர்வீக ஊர்.

  ReplyDelete
 21. பதிவைப் படிக்கும் நமக்கே மனம் சிலிர்த்துப் போகிறது
  ராமசாமி தம்பதியினருக்கு எப்படி இருந்திருக்கும் ?
  வில்வம் துளசி வேம்பு மகிமை அறிந்தோம்
  பகிர்வுக்கு மனமாஅர்ந்த நன்றி

  ReplyDelete
 22. வில்வம், துளசி, வேம்புக்கு தான் எத்தனை மகிமை.. சிவபெருமான், விஷ்ணு மாரியம்மா தெய்வங்களுக்கு சம்மந்தப்பட்டு இருப்பதாலேயே இத்தனை சக்தி என்றும்...

  அரசமரம் சுற்றினா பிள்ளை பிறக்கும்னு இனி பொத்தாம்பொதுவா சொன்னாலும் இது தான் சரியான காரணம் என்று காரணத்தை விளக்கியது சிறப்பு அண்ணா...

  மஹா பெரியவா வார்த்தைகள் எத்தனை அனுக்ரஹித்திருக்கு ராமசாமியை...மண்ணில் போட்டேனேன்னு நீ வருத்தப்பட்டியே. இப்ப பார்த்தியா என்று விசாரிக்கும் தாய்மை மனசும்... மனம் நிறைகிறது அண்ணா..

  தொடரட்டும் பதிவுகள்... அன்பு நன்றிகள் அண்ணா பகிர்வுக்கும். மெயிலில் தெரியவைத்தமைக்கும்...

  ReplyDelete
  Replies
  1. Manjubashini Sampathkumar
   September 22, 2013 at 4:00 AM

   //தொடரட்டும் பதிவுகள்... அன்பு நன்றிகள் அண்ணா பகிர்வுக்கும். மெயிலில் தெரியவைத்தமைக்கும்...//

   400 ஆவது பதிவு வெளியீடு பற்றி தெரிவிக்காவிட்டால் மஞ்சு என்னைக் கோபித்துக்கொள்ளக்கூடும் என்பதால் மட்டுமே மெயில் கொடுத்திருந்தேன் மஞ்சு. 400 + 401 இரண்டுக்கும் வருகை தந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே, மஞ்சு.

   மஞ்சுவின் பிஞ்சு விரல்களுக்கு சிரமம் கொடுக்க நான் எப்போதுமே விரும்பாததால், விசேஷப்பதிவுகளுக்கு மட்டுமே, மஞ்சுவுக்கு என்னிடமிருந்து தகவல் வரும்.

   இதுவும் மஞ்சுவின் தகவலுக்காக மட்டுமே.

   அன்புடன் கோபு

   Delete
 23. சென்னையிலே இருந்தவரைக்கும் மூணையும் அரைச்சு உருண்டைகளாக உருட்டிக் காய வைச்சுச் சாப்பிட்டுட்டு இருந்தோம்; இங்கே வந்ததில் இருந்து நெல்லிக்காய்+பாகற்காய்.:))) இந்த நிகழ்ச்சியும் படிச்சுட்டேன். மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள். எல்லாம் கணேச சர்மா சங்கரா தொலைக்காட்சியில் சொல்லி வருகிறார். அதோடு ரமணி அண்ணா என்பவர் தொகுத்து எழுதி சக்தி விகடனிலும் வந்து கொண்டிருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் சேவையை.

  ReplyDelete
 24. நீங்கள் மெயில் கொடுத்து அழைக்காவிட்டால் எனக்கு வர நினைவு இருக்காது. :)))) மெயில் கொடுத்து அழைப்பதற்கும் நன்றி. :))))

  ReplyDelete
 25. Geetha SambasivamSeptember
  22, 2013 at 4:27 AM

  //நீங்கள் மெயில் கொடுத்து அழைக்காவிட்டால் எனக்கு வர நினைவு இருக்காது. :)))) மெயில் கொடுத்து அழைப்பதற்கும் நன்றி. :))))//

  இந்தத்தொடருக்கு பொதுவாக நான் யாருக்குமே அழைப்பு அனுப்பாமல் தான் இருந்து வந்தேன், மேடம்.

  பிறகு அவ்வப்போது, என் கணக்குப்பிள்ளையான கிளியின் ஆராய்ச்சிக்காக, ஒருசிலருக்கு மட்டும் தகவல் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.

  அதாவது சிலர் பெரும்பாலான பதிவுகளுக்கு அவர்களாகவே வருகை தந்து கருத்தளித்திருப்பார்கள்.

  இருப்பினும் ஏதோவொரு ஞாபக மறதியாக நடுவில் ஒரே ஒரு பதிவுக்கு மட்டும் வருகை தர மறந்திருப்பார்கள்.

  என் கணக்குப்பிள்ளை கிளியின் வற்புருத்தலுக்காக, அவர்களுக்கு மட்டும் நான் தகவல் அளிக்க வேண்டிய சூழ்நிலை, பிறகு எனக்கு ஏற்பட்டது.

  இந்த என் தகவலைப்பார்த்த ஒருசிலர் நினைவூட்டலுக்கு நன்றி கூறியதுடன் நில்லாமல், பதிவு வெளியிட்டவுடன் தயவுசெய்து தகவல் கொடுங்கோ சார் எனக் கேட்டுக்கொண்டார்கள்.

  அதனால் கிளியால் அடையாளம் காட்டப்பட்டுவரும், தொடர் வருகையாளர்களில் சிலருக்கு மட்டும் நான் இப்போதெல்லாம் தகவல் அளிக்க வேண்டியுள்ளது.

  அத்தகைய ஞாபகமறதிப் பேராசிரியர்களில் நீங்களும் ஒருவர்.

  அதனால் மட்டுமே உங்களுக்கும் மெயில் தகவல் அளித்து வருகிறேன் என்பதை அறியவும்.

  அன்புடன் VGK

  ReplyDelete

 26. பெரியவர் சூசகமாய் வாழ்த்திய நிகழ்ச்சி பகிர்வுக்கு மிக்க நன்றி. எழுத்துருக்களைபெரிதாக்கிப் படிக்கக் கற்றுக் கொடுத்த உங்களுக்கும் டிடி க்கும் என் நன்றி.

  ReplyDelete
 27. அருமை...

  வில்வம் + துளசி + வேம்பு ஆகியவற்றின் மருத்துவக் குணத்தை சொன்னமைக்கும்... பெரியவரின் ஆசியால் நிலம் கிடைத்த ஐயரின் கதையையும் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

  வேப்பமரக் காற்று உடம்புக்கு நல்லது என்பார்கள்...

  ReplyDelete
 28. Great information about thulasi vembu and arasa maram Sir.Asusual one more divine read about Periyava

  ReplyDelete
 29. Its very nice to read about the herbal trees.

  Periyvas anugragham ellarukkum kitaipathilleye...
  Atharkkum athirstam venum ellaya?
  viji

  ReplyDelete
 30. அட்சதையின் மகிமை பற்றி ஒரு பதிவு வெளியிட்டுள்ளேன் காண வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. பெரியவாளின் அட்சதை மகாத்மியத்தை படித்தவுடன் அது பற்றி ஒரு பதிவு போட நினைத்தேன். என்னுடைய "ராமரசம்"பதிவில் ஒரு கட்டுரை போட்டுள்ளேன். வழக்கம் போல் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சக்கரை பொங்கலை சுவைத்து செல்லும் தெய்வீக கழுகுகள் போல் நீங்களும் DD யும் வந்து கருத்துகளை அளித்துள்ளீர்கள் நன்றி. (இப்போதெல்லாம் கழுகுகள் வருவதை நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டனவாம்
   )
   வழக்கம் போல் பெரியவாவின் அறிவுரைகளும், அவர் தன்னிடம் வருகின்ற பக்தர்களிடம் நிகழ்த்திய அதிசயங்களும் படிக்க மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. அதற்க்கு வாய்ப்பளிக்கும் உங்களுக்கு நன்றி.

   Delete
 31. மூலிகை மகிமையும் அனுக்ரஹ அமுதமும் அருமை..

  ReplyDelete
 32. இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது. ‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மஹா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அக்ஷதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?//
  உண்மைதான்!

  ReplyDelete
 33. vilvam,thulasi,vembu pattriya information is interesting, Nice story about the acchadhai, nice that he got the land with periyavars blessings...
  thank you very much for sharing sir...

  ReplyDelete
 34. இன்று குட்டிக் கதை அல்ல :) கொஞ்சம் பெரிய கதை :) நன்றாக இருக்கு. துளசி வில்வமிலை வேப்பங்காத்துக்கு நான் எங்கின போவேன் சாமீஈஈஈஈஈஈ.. ஆனாலும் வேப்ப மரத்தின் கீழ் இருப்பது ஒரு தனிப்பட்ட சுகமே... எனக்கு வேப்பம் பழம் சாப்பிடப் பிடிக்கும்.. சாப்பிட்டிருக்கிறேன்ன்..

  ReplyDelete
 35. நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம் உண்மை பொய் தெரியாது, ஆனா ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப் பட்டதாம்ம்.. துளசி இலை சாப்பிட்டால் மலட்டுத் தன்மை உருவாகும் என.

  ReplyDelete
 36. வில்வம், துளசி மற்றும் வேம்பின் மகிமையை அறிந்து கொண்டேன். வெங்கடாத்ரி அகரம் தான் எங்களது சொந்த ஊர். எங்களது குலதெய்வம் வெங்கடாத்ரி அகரத்தில் இருக்கும் அபிராமேஸ்வரர் தான் எங்களுடைய குலதெய்வம்.

  பதிவில் சொன்ன விஷயம் எனது அம்மாவிற்கு படித்துக் காட்டிய போது அம்மாவும் இது போல ஒரு நிகழ்வினைச் சொன்னார்.

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் September 23, 2013 at 8:29 AM

   //வெங்கடாத்ரி அகரம் தான் எங்களது சொந்த ஊர். எங்களது குலதெய்வம் வெங்கடாத்ரி அகரத்தில் இருக்கும் அபிராமேஸ்வரர் தான் எங்களுடைய குலதெய்வம். //

   அப்படியா வெங்கட்ஜி. கேட்கவே சந்தோஷமாக உள்ளது. தங்களின் பூர்வீக ஊர் என்று நேற்றே தங்கள் மனைவியும் தன் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்கள்.

   //பதிவில் சொன்ன விஷயம் எனது அம்மாவிற்கு படித்துக் காட்டிய போது அம்மாவும் இது போல ஒரு நிகழ்வினைச் சொன்னார். //

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி. ;) நன்றி.

   Delete
 37. வில்வம்வேம்பு துளசி மகத்துவம் தெரிந்துகொண்டோம்.

  அக்ஷதையை நிலத்தில்போட்டு குறிப்பால் உணர்த்தி இருக்கிறார் பெரியவாள்.

  ReplyDelete
  Replies
  1. //மாதேவிSeptember 24, 2013 at 5:14 AM ..................//

   வாங்கோ மேடம், வணக்கம்.

   நடுவில் பகுதி-51 மட்டும் தாங்கள் வருகை தராமல் விட்டுப்போய் உள்ளது. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே,

   Delete
 38. சில சமயங்களில் நமக்குள் ஏதாவது ஒரு கவலை அரித்துக் கொண்டேயிருக்கும். அந்த மாதிரி சமயங்களில் யாராவது வந்து தீர்வு சொல்ல மாட்டார்களா என்று மனம் ஏங்கும்.

  உங்கள் பதிவை நான் இன்று தான் நான் படிக்க வேண்டும் என்பது மகா பெரியவரின் சித்தம் போலிருக்கு.. இதைப் படித்தது என் மனக்கவலைக்கு ஒரு மாமருந்து.
  நீங்கள் என்றோ போட்ட பதிவை, இன்று தான் நான் படிக்க வேண்டுமென்பதும் அவர் கருணையாகும். அவரே என்னைக் கவலைப்படாமல் இருக்க ஆசீர்வதித்ததாய் எடுத்துக் கொள்கிறேன்.
  மிக்க நன்றி கோபு சார்.

  ReplyDelete
 39. வில்வம், துளசி, வேம்பு, அரசு இவற்றின் மகத்துவம் அறிந்து மகிழ்ந்தேன். தன் வாழ்த்தினை மறைமுகமாய் அறிவித்த மகாபெரியவரின் செய்கை வியப்பேற்படுத்துகிறது. சிறப்பான பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 40. வில்வம்,வேம்பு துளசி இலைகளின் மகிமையும்,பெரியவரின் கருணையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி....டி டி அவர்களுக்கு மிக்க நன்றி!!

  ReplyDelete
 41. மூலதோ ப்ரம்ஹ ரூபாய மத்யதே விஷ்ணுரூபிணே அக்ரத:ஸிவரூபாய வ்ருக்ஷராஜாயதே நம: சாதாரணமாகவே பழய மனுஷ்யாள் எல்லாம் குறிப்பாகத்தான் சிலவிஷயங்களை சொல்லுவார்கள் மஹாபெரியவாள் ஒருத்தருக்கு அக்ஷதை போட்டு ஆசீர்வாதம் பண்றார்னா அதில் எத்தனை அர்த்தம் இருக்கும் மிராசுதார் புண்ணியம் செய்தவர்

  ReplyDelete
 42. ஆஹா, என்ன ஒரு அனுக்ரஹம்?

  ReplyDelete
 43. வில்வம் வேம்பு துளசி மகிமை தெரிஞ்சுக்க முடிந்தது

  ReplyDelete

 44. வில்வம், துளசி, வேம்பு, அரசு இவற்றின் மகத்துவம் அறிந்து மகிழ்ந்தேன்.

  ராமசாமி ஐயருக்கு அருளியதைப் படிக்கப் படிக்க நெஞ்சு நெகிழ்ந்தது.

  ReplyDelete
 45. ஒவ்வொரு சாமிக்கும் வேர வேர பூவு போட்டுதா பூசிப்பாங்களா.

  ReplyDelete
 46. வில்வம் துளசி வேம்பு மகமை அறிய தந்ததற்கு நன்றி ஆச்சாரியாளின் அபார கருணைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  ReplyDelete
 47. மணலில் போட்ட அட்சதை..சிம்பாலிக்...அருமை.

  ReplyDelete
 48. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (28.06.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=427012224468144

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete