என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்

2
ஸ்ரீராமஜயம்



பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் போக்கிக் கொள்ள புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

உலகத்தில் ஒவ்வொன்றுக்கும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற வழிமுறை இருக்கிறது. அப்படி அவை வழிமுறைப்படி நடப்பதால் தான் உலக வாழ்க்கை நடக்க முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் தறிகெட்டுப் போய்விடும். 

உடம்பு போனபிறகு நற்கதி பெற வேண்டியதற்கான தர்ம காரியங்களை உடம்பு இருக்கும்போதே, செய்ய வேண்டும். 

ஆயுள் போன பிற்பாடு நமது நலனுக்கே நிரந்தர ‘இன்ஷ்யூரன்ஸ்’ ஆக இருப்பது தர்மமே.  

இது ஆயுள் போன பிற்பாடும் நன்மை பயக்கிற 'AFTER THE LIFE INSURANCE'.  

ஆயுள் உள்ள போதும் அதே தர்மம், சாந்தியும் செளக்யமும் தந்து நன்மை செய்கிறது.


oooooOooooo



ஐம்பதாவது வெற்றிப்பதிவினை சிறப்பித்து வாழ்த்தி இந்தப்படத்தினை ’ராமரஸமாக’ அனுப்பி வைத்துள்ளவர் 
திரு. பட்டாபிராம அண்ணா அவர்கள்.

http://tamilbloggersunit.blogspot.in/


அண்ணாவுக்கு அடியேனின் நன்றிகள்.


அன்புடன் கோபு

oooooOooooo



ஓர் சம்பவம்

தலைபாரமும் மனபாரமும் குறைந்தது 



ஒரு நாள் வெ(ய்)யில் கடுமையாக இருந்த சமயம்.

பூஜையை முடித்துவிட்டு முன்பக்கத்தில் மஹாபெரியவா அமர்ந்திருந்தார். 

அந்தசமயம் வெ(ய்)யிலின் கொடுமையைத்தாங்காமல் வயதான் ஒரு வளையல் வியாபாரி மடத்துக்குள் வந்து தன் வளையல் பெட்டியை ஓர் ஓரமாக இறக்கி வைத்துவிட்டு ஓய்ந்து போய் உட்கார்ந்தான்.

அவருடைய சோர்ந்த முகம் மஹானின் கண்களில் பட்டது.

மடத்து ஊழியர் ஒருவர் மூலம் வியாபாரியை தன் அருகே அழைத்து வரச்செய்தார். மெதுவாக வியாபாரியை விசாரித்தார்.

“உனக்கு எந்த ஊர்? வளையல் வியாபாரம் எப்படி நடக்கிறது? உனக்கு எத்தனைக் குழந்தைகள்?” போன்ற விபரங்களைக் கேட்டார்.

வளையல் வியாபாரியும் அதே ஊரைச்சேர்ந்தவர் தான். 


தன்னுடன் தன் வயதான தாயாரும், மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் தனக்கு இருக்கிறார்கள் என்றும், கடந்த ஆறு மாத காலமாக வியாபாரம் மிகவும் மந்தமாக இருப்பதால், ஜீவிப்பதே கஷ்டமாகத்தான் இருக்கிறது என்றும் யதார்த்தமாகத் தன் நிலைமையைச் சொன்னார். 

அப்போது மஹா பெரியவாள். “இந்த வளையல் வியாபாரியின் பாரத்தை இன்று நாம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொன்னவர், அதற்கேற்ற விளக்கமும் தந்தார்.

இன்று வெள்ளிக்கிழமை. இவரிடம் இருக்கும் எல்லா வளையல்களையும் மொத்தமாக வாங்கி, மடத்துக்கு வரும் எல்லா சுமங்கலிகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் கொடுத்தால் புண்ணியம். இந்த ஏழையிடமிருந்து வாங்கி அவர்களுக்குக் கொடுப்பது விசேஷமல்லவா? இந்தப்புண்ணிய கைங்கர்யத்துக்கு அளவுகோலே கிடையாது!” என்று சொன்னவர், ஒரு பக்தர் மூலம் வளையல் எல்லாவற்றையும் வாங்கச்சொன்னார்.

பிறகு அதில் ஒரு டஜன் வளையல்களை எடுத்து வளையல்காரரிடமே கொடுக்கச் சொல்லுகிறார். அதற்கு காரணமும் சொல்கிறார்.

”வெள்ளிக்கிழமையில் வளையல் பெட்டி காலியாகவே இருக்கக்கூடாது. அந்த வளையல்களை அவன் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகட்டும்” என்கிறார்.

அதன்பிறகு, வளையல்காரருக்கு, மடத்தின் மூலமாக வேஷ்டி, புடவைகளும் கொடுத்து, அவருக்கு வயிறு நிரம்ப சாப்பாடும் போட்டு அனுப்பும்படி மஹான் உத்தரவு போடுகிறார்.

மஹான் இன்னொன்றும் சொன்னார்கள்:

“இன்று அவனுக்கு தலைபாரமும், மனபாரமும் நிச்சயமாகக் குறைந்திருக்கும் இல்லையா?” 

தன்னை நாடி வருபவர்களுக்கு, அவர்கள் எதிர்பாராத விதமாக உதவிகளைச் செய்து விடுகிறார் மஹான் என்று அங்கிருந்த பக்தர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.




அன்று மடத்துக்கு தரிஸனம் செய்ய வந்த அத்தனை சுமங்கலிப் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் வளையல்கள் வழங்கப்பட்டன. 

அதுவும் மஹானின் திருக்கரங்களால் தொட்டு ஆசீர்வதித்துக் கொடுக்கப்பட்ட வளையல்கள்.  

அந்த பாக்யம் எல்லோருக்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே ! ;)

oooooOooooo

வளையல்கள் என்றாலே உடனே 
நம் நினைவுக்கு வருவது 
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின், 
வளையல் அணிந்த 
அம்பாள் பற்றிய பதிவுகள் தான். 





தயவுசெய்து அதில் உள்ள படங்களைக்காணத்தவறாதீர்கள். 

இணைப்புகள் இதோ:


ஆடி வெள்ளி வளையல் வைபவம்


குங்குமம் காப்பாள் குங்குமவல்லி


வளைகாப்பு வைபவம்


ஸ்ரீ வளைகாப்பு நாயகி


oooooOooooo





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

    
 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
அனுக்ரஹத்தால் இது
வெற்றிகரமான 
ஐம்பதாவது 
அமுத மழையாக 
அமைந்துள்ளதில் மகிழ்ச்சி.


 

    

இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

44 கருத்துகள்:

  1. அன்பின் வை.கோ

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் செயல்கள் புல்லரிக்க வைக்கிறது - தேவை யறிந்து உதவி செய்யும் மனம் படைத்தவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவர். வியாபாரத்தில் இருப்பது அனைத்தையும் வாங்கி வளையல் பெட்டியைக் காலையாக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் சில வளையல்களைத் திரும்பக் கொடுத்தது அரிய செயல். பெரியவாளுக்கே உரிய செயல்.

    இராஜைராஜேஸ்வரியின் பதிவுகளீல் சில அறிமுகத்திற்கு நன்றி

    50 வது அமுத மழை அருமை. மழை பொழியும் படங்கள் அருமை.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
    அனுக்ரஹத்தால் இது
    வெற்றிகரமான
    ஐம்பதாவது
    அமுத மழையாக
    அமைந்துள்ளதில் மகிழ்ச்சி.//

    எங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி.
    அமுத மழையில் நனைவது மிக மிக மகிழ்ச்சி.
    கொடுத்து வைத்து இருக்கிறோம்.
    நல்ல விஷயங்களை சொல்ல , கேட்க, பார்க்க எல்லாம் புண்ணியம் வேண்டும் என்பார்கள்.

    ஆயுள் உள்ள போதும் அதே தர்மம், சாந்தியும் செளக்யமும் தந்து நன்மை செய்கிறது.//

    அருமையான அமுத மொழி.
    வளையல் விற்கும் பெரியவர் துயர் தீர்த்த விஷயம் படிக்கும் போது தன்னை நாடி வந்து உதவி கேட்காதவர்களுக்கும் உதவும் கடவுள் போல் இருந்து உதவி இருக்கிறார் பெரியவர் அவர்கள் என தெரிகிறது.
    வாழ்த்துக்கள் சார்.
    நன்றி.




    பதிலளிநீக்கு
  3. பெரியவரின் வளையல் வியாபாரியுடனான பந்தம் போற்றுதலுக்குரியது....

    ராஜராஜேஸ்வரி அம்மாளின் தளம் தொடர்ந்து படித்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. Day after day I am feeling great and blessed to read about Kanji periyava :)

    பதிலளிநீக்கு
  5. ஆயுள் போன பிற்பாடு நமது நலனுக்கே நிரந்தர ‘இன்ஷ்யூரன்ஸ்’ ஆக இருப்பது தர்மமே.

    அருமையான அமுத மழை ..!

    பதிலளிநீக்கு
  6. வளையல் பதிவுகளை மீண்டும் தரிசிக்க
    வைத்ததற்கு மனம் நிறைந்த இனிய நன்றிக்ள்...

    பதிலளிநீக்கு
  7. தலைபாரமும் மனபாரமும் குறைந்தது

    மனம் மலர்ந்த அருமையான அனுக்ரஹம் ..!

    பதிலளிநீக்கு
  8. மஹானின் திருக்கரங்களால் தொட்டு ஆசீர்வதித்துக் கொடுக்கப்பட்ட வளையல்கள்.

    தன்னை நாடி வருபவர்களுக்கு, அவர்கள் எதிர்பாராத விதமாக உதவிகளைச் செய்து விடுகிறார் மஹான் ..

    அருமையான வளையல் வைபவம் ...!

    பதிலளிநீக்கு
  9. ஐம்பதாவது அமுதமழைக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  10. உடம்பு போனபிறகு நற்கதி பெற வேண்டியதற்கான தர்ம காரியங்களை உடம்பு இருக்கும்போதே, செய்ய வேண்டும்.
    அருமை ஐயா அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  11. // ஆயுள் போன பிற்பாடு நமது நலனுக்கே நிரந்தர ‘இன்ஷ்யூரன்ஸ்’ ஆக இருப்பது தர்மமே.//

    ஐம்பவதாவது அமுத மழை...... தொடர்ந்து படித்து இன்புற்றேன்.....

    தொடரட்டும் அமுத மழை.

    பதிலளிநீக்கு
  12. 'AFTER THE LIFE INSURANCE' - அருமை ஐயா...

    அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
    ஆனந்த பூந்தோப்பு...
    அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
    ஆனந்த பூந்தோப்பு...
    வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
    இது நான்குமறை தீர்ப்பு...
    வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
    இது நான்குமறை தீர்ப்பு...

    தர்மம் தலை காக்கும்...
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்...
    கூட இருந்தே குழி பறித்தாலும்...
    கூட இருந்தே குழி பறித்தாலும்...
    கொடுத்தது காத்து நிக்கும்...
    செய்த தர்மம் தலை காக்கும்...
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்...

    50 வது அமுத மழை அற்புதம்... வாழ்த்துக்கள் பல... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  13. தன்னை அண்டி வந்தவரின்
    குறைகளை கேட்டு அதை
    நிரந்தரமாக தீர்த்து வைத்தவர்
    பெரியவா

    தன் மனதின் உள்ளேயே
    வேதனைகளையும் கவலைகளையும்
    பூட்டிவைத்து மருகிக்கொண்டிருந்த
    எத்தனையோ மனிதர்களின் குமுறல்களை
    அவர்கள் கூறாமலே அறிந்துகொண்டு
    அதை தீர்த்து வைத்த
    கருணைதெய்வம் பெரியவா

    பாமரனின் அறிவிற்க்கேற்ப
    வாழும் வகையை அறிவித்தும்
    படித்தவரின் அகந்தையகற்றி
    அவர்களில் வித்யையை அனைவரும்
    பெறும் வண்ணம்பாட சாலைகளை
    நிறுவி வேத தர்மம் செழிக்க செய்த
    வேதாத்மா பெரியவா

    சிதிலமடைந்த ஆயிரக்கணக்கான
    கோயில்களை சீரமைத்து நின்றுபோன
    வழிபாடுகள் நடக்க செய்து ஆன்மீகத்தை
    ஓயாமல், தொய்வின்றி செயல்பட வைத்த
    கர்ம யோகி பெரியவா

    சீரடினாதன் போல் தன்னிடம் வந்த
    அனைத்தையும் தேவைபடுபவர்களுக்கு அளித்து
    ஆண்டிக் கோலத்தில் இருந்தாலும் அரசனாக
    வாழ்ந்த ஜனக மகாராஜன் அவர்.

    அவரை ஒரு சிறிய சமூகத்தின் ஆன்மீக
    தலைவராக கருதிய சமூகத்தில் அவர்
    ஜகத் குரு என்ற பட்டப் பெயருக்கேற்ப இந்த
    உலகத்தில் உள்ள அனைத்து உயிர்கள் மீதும்
    கருணை காட்டிய தெய்வ புருஷர் அவர் என்று
    உங்க பதிவை படித்தவர்களுக்கு விளங்கியிருக்கும்.

    அந்த நல்ல காரியத்தை செய்த உங்களுக்கும்,
    இந்த பதிவை படித்தவர்களுக்கும் உள்ளத்தில்
    நல்ல சம்காரங்கள் (பதிவுகள்) உண்டாகியிருக்கும்
    என்பதில் ஐயமில்லை

    தொய்வில்லாமல் தொடரட்டும்
    உள்ளப் பிணிகளை போக்கி
    உற்சாகத்தை தரும்
    உங்கள் புனிதப் பணி .

    பதிலளிநீக்கு
  14. Pattabi Raman September 15, 2013 at 8:59 PM

    வாங்கோ அண்ணா, நமஸ்காரங்கள்.

    //அந்த நல்ல காரியத்தை செய்த உங்களுக்கும், இந்த பதிவை படித்தவர்களுக்கும் உள்ளத்தில் நல்ல சம்காரங்கள் (பதிவுகள்) உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நீ..ண்..ட கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், அண்ணா.

    //தொய்வில்லாமல் தொடரட்டும்
    உள்ளப் பிணிகளை போக்கி
    உற்சாகத்தை தரும்
    உங்கள் புனிதப் பணி.//

    மேலும் மேலும் எழுத எனக்கு ஓர் உந்துதல் ஏற்படுத்தும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் கருணைக்கும், அவ்வப்போது பதிவினை வரவேற்று, பல்வேறு நல்ல கருத்துக்கள் கூறி, உத்ஸாகம் அளித்துவரும், உங்களைப்போன்ற சில பெரியோர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நமஸ்காரங்கள். மற்றவர்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள்.

    தங்கள் விருப்பப்படி [ஆக்ஞைப்படி] தாங்கள் அனுப்பியுள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா படத்தினை இந்த என் பகுதியில் இணைத்து விட்டேன்.

    50வது பதிவினை சிறப்பிப்பதாக அது அமைந்துள்ளதும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹமாக எண்ணி மகிழ்கிறேன்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  15. அருமையான வளையல் பதிவுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி. வளையல்காரனுக்கும் அருள் செய்த பெரியவரின் செயல் மெய் சிலிர்க்க வைக்கிறது.

    பெரியவரின் அமுதமொழிகளின் ஐம்பதாவது பதிவுக்கும், அதற்குப் படங்களை அனுப்பியவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. 50 வது அமுதமொழிக்கு வாழ்த்துக்கள் ஐயா!!

    வளையல் பதிவு மெய் சிலிக்கிறது...அருமையான பதிவு!!

    பதிலளிநீக்கு

  17. பெரியவர் பற்றிய செய்திகளை வெளியிட்டு ஒரு ஆன்மிக சேவையே செய்கிறீர் என்றால் மிகையாகாது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. First, i congragulate for the 50th post.
    இன்று அவனுக்கு தலைபாரமும், மனபாரமும் நிச்சயமாகக் குறைந்திருக்கும் இல்லையா
    Yes valayal merchants bharam reduced.
    I too prey for the same.
    viji

    பதிலளிநீக்கு
  19. இல்லாதவர்க்கு இரங்கும் மஹா பெரியவாளின் வாழ்வில் நடந்த சம்பவமும் அவரது அருமையான உபதேச மொழிகளும் படித்து மெய்சிலிர்த்தேன்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  20. ஐம்பதாவது கட்டுரை! வாழ்த்துக்கள்! இதுபோன்ற அற்புதமான ஆன்மிகத் தொடர்களை அளித்துவரும் தங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. ஏதோ சில வார்த்தைகளை சொல்கிறேன், மழையில் சில துளி போல...

    பதிலளிநீக்கு
  21. //ஆயுள் போன பிற்பாடு நமது நலனுக்கே நிரந்தர ‘இன்ஷ்யூரன்ஸ்’ ஆக இருப்பது தர்மமே//

    நம் வாழ்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு நன்மையும் ஒரு இன்ஷ்யூரன்ஸ் பிரீமியம் போலவே அது நம்மை காக்கும்.

    நன்றி ஐயா!

    தங்களின் சிறப்பான 50வது அமுத மழைக்கு வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  22. வளையல் வியாபாரியின் நல்ல நேரம், அவன் மடத்துக்கு வந்து சேர்ந்தான்.

    பதிலளிநீக்கு
  23. ஐம்பதாவது அருளமுத மழை மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. மனதையும், உடலையும் ஒருசேரக் குளிர்வித்தது.
    திருமதி இராஜராஜேஸ்வரியின் வளையல் பதிவுகளை மறுமுறை படிக்க ஒரு அரிய வாய்ப்பைக் கொடுத்ததற்கும் நன்றி!
    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் மஹா பெரியவாளின் மனம் எங்கள் மனதை நிறைத்தது.

    பதிலளிநீக்கு
  24. ஐம்பதாவது பதிவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் வை.கோ.சார்.

    வளையல் வியாபாரியின் மனபாரத்தையும் தலைபாரத்தையும் ஒருங்கே குறைத்து அருளியமை பெரியவரின் மகோன்னத மனத்தைக் காட்டியது. வாய்திறந்து சொல்லாமலேயே ஒருவரது மனத்துயரைக் கண்டுகொள்வதோடு அதற்குத் தீர்வும் வழங்கி ஆற்றுப்படுத்துவது அபூர்வஞானம்.

    பதிலளிநீக்கு
  25. ஐம்பதாவது அமுதமழைக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  26. இது ஆயுள் போன பிற்பாடும் நன்மை பயக்கிற 'AFTER THE LIFE INSURANCE'. /// ஹா..ஹா..ஹா.. இது நல்லா இருக்கே..

    பதிலளிநீக்கு
  27. //அதுவும் மஹானின் திருக்கரங்களால் தொட்டு ஆசீர்வதித்துக் கொடுக்கப்பட்ட வளையல்கள். // எனக்கும் வேணும்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  28. 50 வது அமுத மழை அற்புதம்! இந்த அமுதமழையில் நனையும் பாக்கியம் பெற்றதில் மகிழ்ச்சி!வளையல் வியாபாரியின் மீது மகானின் பார்வை பட்டதால் நிச்சயம் மனபாரம் குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை! மேலும் தொடர வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
  29. ஐம்பதாவது அமுதமொழியும், வளையல் வியாபாரியின் தலைபாரமும், மனபாரமும் குறைந்ததும் என அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  30. நல்ல காரியங்களைச் செய்து தர்மம் ஸம்பாதிக்கவே புண்ணிய புருஶார்த்தங்களைச் செய்கிறோம். என்ன செய்தோம், எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு தெரியாது. கணக்கு கடவுளிடம் இருக்கும்.
    ரொம்ப நல்லவன், உபகாரி என்ற பெயர் கிடைத்தாலே இன்ஶியூரன்ஸ்
    பிரிமீயம் கட்டின மாதிரிதான். வளையல்க்காரர் என்ன பாக்கியம் செய்திருந்தால், அவரின் வளையல்கள் பெரியவரின் கைபட்டு ஆசீர்வாதங்களுடன் மற்றவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது. மனபாரம் குறைந்து ஸந்தோஶமல்லவா ஏற்பட்டது. இன்ஶியூரன்ஸும், தர்மபலன்களும் எவ்வளவு பொருத்தம். அருள் வாக்குகளெல்லாம்
    என்றும் வியக்கத் தக்கவை. மஹான் என்றால் மஹான்தான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  31. வைகோ சார்,
    வளையல் காரர் செய்துள்ள புண்ணியம் தான் என்ன என்று சொல்வது. அதை விடவும் அன்று சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் வளையல்கள் வாங்கிக் கொண்ட சுமங்கலிகள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள்.
    உங்களுடைய ஐம்பதாவது அருள் மழைப் பதிவிற்கு. வாழ்த்துக்கள்.
    மகா பெரியவரின் அருள் மழைப் பொழிந்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
    நாங்களும் அதில் நனைந்து ஆசிகள் பெற வேண்டும்.
    நன்றி
    Sent from http://bit.ly/otv8Ik

    பதிலளிநீக்கு
  32. Superb!!
    //ஆயுள் போன பிற்பாடு நமது நலனுக்கே நிரந்தர ‘இன்ஷ்யூரன்ஸ்’ ஆக இருப்பது தர்மமே. // manathil pathintha varikal!!

    பதிலளிநீக்கு
  33. Superb!!
    //ஆயுள் போன பிற்பாடு நமது நலனுக்கே நிரந்தர ‘இன்ஷ்யூரன்ஸ்’ ஆக இருப்பது தர்மமே. // manathil pathintha varikal!!

    பதிலளிநீக்கு
  34. ஐம்பதாவது அமுதமழைக்கு வாழ்த்துகள்.

    வளையல்காரனுக்கு அருள்செய்த பெரியவாளின் செயல் சிலிர்க்க வைக்கின்றது.

    பதிலளிநீக்கு
  35. congrats sir on completing 50 wonderful posts, Bangle seller was really lucky he got the blessings of periyavar...

    பதிலளிநீக்கு
  36. நாம் செய்யும் தர்மத்தின் பலனே நமக்கு ஆயுள் காப்பீடு பெரியவாளின் அருமையான உவமை அவாளும் தொடாத விஷயம் ஏதும் உண்டா நமக்காக எவ்வளவு எளிமையாக உபதேசித்து இருக்கிறார்கள்
    வளையல் வியாபாரியின் மீது என்னஒரு கருணை மனித உருவில் வந்த தெய்வம் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  37. அமுத மழைகளுக்கு நன்றிகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  38. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
    அனுக்ரஹத்தால் இது
    வெற்றிகரமான
    ஐம்பதாவது
    அமுத மழையாக
    அமைந்துள்ளதில் மகிழ்ச்சி.//

    எங்களுக்கும் தான்.

    கேட்டதையும் கொடுப்பார், கேட்காததையும் கொடுப்பார் மகா பெரியவர். கேட்காமலேயே வளையல்காரரின் தலை பாரத்தையும், மன பாரத்தையும் இறக்கி விட்டார் மகாபெரியவர்.

    பதிலளிநீக்கு
  39. இதுவும் நல்லாருக்கு. வளவி படம்லா நல்லானுக்குது

    பதிலளிநீக்கு
  40. 50---வது அமுதமழையை படித்து ரசிக்க நாங்க கொடுத்து வச்சிருக்கோம். வளையல் வியாபாரியா பூக்காரியா மாடு மேய்ப்பவரா என்றேல்லாம் தராதரம் பாராமல் அனைவருக்கும் கருணை மழை பொழிந்து வருகிறார்கள்

    பதிலளிநீக்கு
  41. ஆயுள் போன பிற்பாடு நமது நலனுக்கே நிரந்தர ‘இன்ஷ்யூரன்ஸ்’ ஆக இருப்பது தர்மமே.

    இது ஆயுள் போன பிற்பாடும் நன்மை பயக்கிற 'AFTER THE LIFE INSURANCE'.

    ஆயுள் உள்ள போதும் அதே தர்மம், சாந்தியும் செளக்யமும் தந்து நன்மை செய்கிறது./// அமுதத் துளிகள் சிலிர்க்க வைக்கின்றன. படம் அழகு.

    பதிலளிநீக்கு
  42. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (25.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/423720881463945/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு