About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, February 10, 2015

சந்தித்த வேளையில் ....... பகுதி 2 of 6தொடரும் பதிவர் சந்திப்பு   

பகுதி-1 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html


  

என் இனிய நண்பரும், பதிவரும், 
மிகப்பிரபலமான எழுத்தாளரும்,
என் எழுத்துலக மானஸீக குருநாதருமான
 ரிஷபன் 
திரு. R. ஸ்ரீநிவாஸன் அவர்கள்

 
Profile Photo

BHEL அலுவலகம், 

BHEL CANTEEN, 


பவித்ராலயா, 

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கக்கூட்டங்கள், 

ஸ்ரீரங்கத்தில் திரு. ரிஷபன் அவர்களின் இல்லம், 

நண்பர்களின் வீட்டுத் திருமண நிகழ்ச்சிகள், 

திருச்சியில் நடைபெற்றுள்ள பல்வேறு 

எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழாக்கள், 

சென்னையில் நடைபெற்ற 
'நிலாச்சாரல்' 
மின் இதழின் ஆண்டுவிழா, 

என் பணி ஓய்வு பிரிவு உபசார விழாக்கள் 
[RETIREMENT ’SEND OFF’ PARTIES]  

i) A Get-together arranged by my 
Close Friends of BHEL 
on 18.02.2009 in a Hotel

ii) Official 'Send Off Party' Given by the Staff of 
Finance Department of BHEL on 23.02.2009


iii) A Special Dinner was Arranged by me 
to all my Colleagues, Friends and Relatives 
on 24.02.2009 Evening at
 'Sri Murugan Illam' Kalyana Mandapam 
Nearer to my house
        
எனது சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
அன்றைய விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும்
(சுமார் 200 பேர்கள்) இரவு விருந்து அளிக்கப்பட்டு 
என் முதல் இரண்டு சிறுகதைத்தொகுப்பு நூல்களும்
என் கையொப்பமிட்டு அன்பளிப்பாகவே வழங்கப்பட்டன.

[இந்த இனிய விழா மேடையில் ஒருங்கிணைப்பாளராக இருந்து
சிறப்பித்தவரும் நமது திரு. ரிஷபன் அவர்களே]

இதுபோன்ற பல இடங்களில் 
நாங்கள் அடிக்கடி சந்தித்துள்ளோம்.
பல  நிகழ்ச்சிகளில் நாங்கள் பலமுறை 
சேர்ந்தே கலந்துகொண்டுள்ளோம்.

-oOo-


அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணன் போல எனக்கு இந்த நம் ரிஷபன் சார் அமைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. 

2005ம் ஆண்டு இறுதியில் என் முதல் சிறுகதையான ‘தாயுமானவள்’ முதன்முதலாக அச்சில் ஏறி, தினமலர் நிறுவனர் அமரர் TVR நினைவுச் சிறுகதைப் போட்டியிலும் வெற்றிபெற்று பரிசுக்குத்தேர்வானது. அதில் எனக்குக்கிடைத்த பரிசு + பெருமை + பலரின் பாராட்டுக்கள் தவிர, மிகச்சிறந்த + மிகப்பிரபலமான எழுத்தாளரான திரு. ரிஷபன் அவர்களின் கடைக்கண் பார்வையும் என் மீதுவிழ அதுவே வழிவகுத்துக்கொடுத்தது என்பதே எனக்குக் கிடைத்த மாபெரும் பரிசாக நான் இன்றும் நினைத்து மகிழ்கிறேன். 

என் சிறுகதை பரிசுக்குத்தேர்வான செய்தி வெளியான அன்று அலுவலகத்தில் என் இருக்கையைத்தேடி, இவர் தன் இதர எழுத்தாள நண்பர்களுடன் கூட்டமாக வருகை தந்து, என்னைக் கைகுலுக்கிப் பாராட்டியதுடன் நிற்காமல், என்னை மேலும் மேலும் தொடர்ச்சியாக எழுத வைக்க மிகவும் தூண்டுகோலாக இருந்தார். 

இவருடனான என் நட்புக்கு அடையாளமாக மேலும் அதிக விபரங்கள் இந்த என் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன். http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html  அதில் திரு. ரிஷபன் சார் கொடுத்துள்ளதோர் பின்னூட்டத்திற்கு நான் வரிசையாக ஒன்பது பதில்கள் அளித்துள்ளேன். அவற்றையும் படிக்க தங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும். 

என்னை சிறுகதைத்தொகுப்பு நூல்கள் வெளியிடச்சொல்லி வற்புருத்தியவரும் இவரே. என் தொகுப்பு நூல்களுக்கு வாழ்த்துரைகள் வழங்கிச் சிறப்பித்தவரும் இவரே. அவரது மிகச்சிறப்பான வாழ்த்துரையில் ஒன்றும் இதோ http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html  இந்தப்பதிவின் இறுதியில் உள்ளது. 

நான் பணி ஓய்வு பெற்றபின், என் வீட்டுக்கே ஒருநாள் நேரில் வருகை தந்து எனக்கு தனியாக ஒரு வலைப்பூ [BLOG] துவக்கிக்கொடுத்து அதில் என்னை எழுதுமாறு செய்தவரும் இவரே. அதைப்பற்றிய மேலும் நகைச்சுவையான + சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ இந்த http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html என் ’50வது பிரஸவம்’ என்ற பதிவினில் உள்ளது.

திரு. ரிஷபன் அவர்கள் மிகச்சிறப்பான எழுத்தாளர். மிகச்சிறந்த வழிகாட்டி. தன்னடக்கமாகவும், மிகவும் எளிமையாகவும், இனிமையாகவும், கண்ணியமாகவும் பழகும் நல்ல நண்பர். பொதுவில் மிகவும் நல்ல மனம் படைத்த, மனிதாபிமானம் + சேவை மனப்பான்மையுள்ள [Service Minded] மிகவும் நல்ல மனிதர். தன் எழுத்துக்களை மட்டும் உருவாக்காமல் என்னைப்போன்ற எவ்வளவோ எழுத்தாளர்களையும் உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

இவர் இதுவரை எவ்வளவோ சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளியிட்டுள்ளார். அதில் எனக்கும் சிலவற்றை தன் கையொப்பமிட்டு அன்பளிப்பாக அளித்துள்ளார். அவைகளின் அட்டைப்படத்தினை இதோ இந்த http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html என் பதிவினில் காணலாம்.

சிறுகதை இலக்கியம் ஜீவித்திருக்க ஒரு எளிய முயற்சி என்று சொல்லி ‘பிரியத்தின் சிறகுகள்’ என்ற தலைப்பினில் டிஸம்பர் 2007ல் இவர் வெளியிட்டுள்ள தொகுப்பு நூல் குறிப்பிடத்தக்கது. சக எழுத்தாளர்களின் மேல் இவருக்குள்ள அன்பையும் அக்கறையையும் காட்டிடும் அத்தாட்சியாக விளங்குகிறது இந்த நூல். 

தமிழ்ச்சோலை பதிப்பகம், புதிய எண்: 12 (பழைய எண் 16) சத்யபுரி தெரு
மேற்கு மாம்பலம், சென்னை-33 கைபேசி: 98411 70750
நூலின் அன்றைய விலை ரூ. 90/-

மொத்தம் அதில் மிகச்சிறப்பான 22 கதைகள் உள்ளன. இவரையும் சேர்த்து மொத்தம் 22 வெவ்வேறு பிரபல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட மிகச்சிறப்பான கதைகளின் தொகுப்பு நூல் இது. பிரியத்தின் சிறகுகளில் ஒன்றாக எனது ‘உடம்பெல்லாம் உப்புச்சீடை’ http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html ன்ற நெடுங்கதையும் இவரின் இந்த புதுமையான வெளியீட்டில் இடம் பெற்றிருப்பது நான் செய்த மிகப்பெரிய பாக்யமாகும்.

இவருடைய சிறுகதைகள் வெளியாகாத தமிழ் பத்திரிகைகள் எதுவுமே கிடையாது என நாம் அடித்துச் சொல்லலாம். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட இவரின் படைப்புகள், அச்சில் ஏறி பிரசுரமாகியுள்ளன. 

இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். இதுவரை அவரை வாழ்த்தாதவர்கள் உடனடியாக http://rishaban57.blogspot.com/2014/10/blog-post.html  அவரின் இந்தப்பதிவுக்குச்சென்று வாழ்த்துங்கள். 

நான் இன்று ஒரு எழுத்தாளன் என்றும், பதிவர் என்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்ள, தூண்டுகோலாக இருந்து, ஊக்கமும் உற்சாகமும் அளித்து என்னை இயங்கச்செய்த பெருமைக்குரியவர் திரு. ரிஷபன் அவர்களே என்பதை மிகவும் நன்றியுடன் இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன்! 


’விழுவது எழுவதற்கே!’
எனச்சொல்கிறதோ இந்தக்கிளி !! 
04.01.2013

பவித்ராலயா
 


http://moonramsuzhi.blogspot.in/ மூன்றாம் சுழி வலைத்தளப் பதிவர்

திரு. அப்பாதுரை அவர்கள்
அன்புடன் வருகை தந்தார்கள்.


இவரை என் இல்லத்திற்கு அழைத்து வந்து 
சந்திப்பில் கலந்துகொண்டவர்  
திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்.


திரு. அப்பாதுரை அவர்கள் என் வலைத்தளத்தினில் நடைபெற்ற சிறுகதை விமர்சனப்போட்டிகளின் இறுதிக் கட்டத்தில் ஆறே ஆறு போட்டிகளில் மட்டும் கலந்துகொண்டார்கள். இவர்கள் கலந்துகொண்ட ஆறு விமர்சனங்களுமே  ஏதோவொரு பரிசுக்குத் தேர்வாகியவை என்பது குறிப்பிடத்தக்கது. http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

VGK-30 to VGK-32 தொடர் வெற்றிக்காக ஹாட்-ட்ரிக் பரிசும் இவருக்கு அளிக்கப்பட்டது. http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html


’நடுவர் யார் .... யூகியுங்கள்’ என்ற போட்டிக்குள் போட்டியிலும் இவர் வெற்றிபெற்று பரிசினைப்பகிர்ந்து கொண்டார்.  


’சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ பற்றிய ஒட்டுமொத்தமான 
பல்வேறு அலசல்களுக்கும் புள்ளிவிபரங்களுக்கும்  

 25.02.2013

பவித்ராலயா

திருச்சி திருமழபாடி 

திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் 

அன்புடன் வருகை தந்தார்கள்.

25.02.2013 - இது என்னுடனான இவரின் முதல் சந்திப்பு. 


அதன்பிறகு 25.12.2013, 09.06.2014, 14.11.2014, 25.12.2014 ஆகிய நாட்களிலும் என்மீது இவருக்குள்ள தனி பிரியத்தினால், என் இல்லத்திற்கு வருகை தந்து மகிழ்வித்துள்ளார்கள்.

நான் சமீபத்தில் துபாய் செல்லும் முன்பு என்னை நேரில் சந்தித்து நூல் ஒன்று பரிசளித்து என்னை வாழ்த்திச்சென்றார்கள். அதுபற்றி இந்த இணைப்பினில் அவர்களால் ஓர் தனிப்பதிவே  வெளியிடப்பட்டுள்ளது:

தலைப்பு: வெளிநாடு செல்லும் VGK - வாழ்த்துகள். 

14.11.2014

கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்மஸ் தினத்தன்று என்னை சந்தித்து எனக்கு புத்தாண்டு டயரி கொடுத்துச் செல்வதாலும், நான் அதில் அவ்வப்போது சில முக்கியக் குறிப்புகள் எழுதி வருவதாலும், அடிக்கடி இவரின் அன்பினை நினைத்து எனக்குள் மகிழ்ந்து வருகிறேன். 

தலைப்பு: எங்கள் பயணம் - துபாய்-9

Diary Supplied on 25th December, 2013 and 2014

என் மீது இவருக்கு உள்ள அன்பினால், இவரது வலைத்தளத்தினில் இதுவரை என்னைப்பற்றிய செய்திகள் நிறைய  தனிப்பதிவுகளாக வெளியிட்டுள்ளார்கள். அவைகளுக்கான இணைப்புகள் இதோ:

வெளிநாடு செல்லும் V.G.K - வாழ்த்துக்கள்!http://tthamizhelango.blogspot.com/2014/09/blog-post_30.html

திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களே!

ஆரண்ய நிவாஸ் – ஒரு இலக்கிய அனுபவம்அன்பின் சீனா – மெய்யம்மை ஆச்சி 

தம்பதியினருடன் ஒரு சந்திப்புஎங்கெங்கும் எப்போதும் என்னோடு

- வை. கோபாலகிருஷ்ணன் (நூல் விமர்சனம்)திருச்சியில், 

மூத்த பதிவர் திரு GMB அவர்களோடு 

ஒரு இனிய சந்திப்புதிருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன்.திருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும்எனக்குக் கிடைத்த 

“FABULOUS BLOG RIBBON AWARD “எனக்குக் கிடைத்த லிப்ஸ்டர் விருது 

(LIEBSTER AWARD)எனக்கு கிடைத்த  ’சன்சைன் ப்ளாக்கர்’ விருது 

(SUNSHINE BLOGGER AWARD) “


மிக்க நன்றி ! 
திரு. தி. தமிழ் இளங்கோ, சார்.   
அன்புடன் VGK


24.03.2013

பவித்ராலயா


http://roshnivenkat2.blogspot.in/ 
வெளிச்சக்கீற்றுகள்

குழந்தைப் பதிவர்

செல்வி. ரோஷ்ணி அவர்கள்
அன்புடன் வருகை தந்தார்கள்.


இவரை என் இல்லத்திற்கு முதன்முதலாக 
அழைத்து வந்தவர்கள்

 
திரு. வெங்கட் நாகராஜ் 
மற்றும்
 திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்

செல்வி: ரோஷ்ணி அவர்களின் 
இன்றைய இனிய தோற்றம்.
http://roshnivenkat2.blogspot.in/
ரோஷ்ணி வரைந்துள்ள ஓவியம் 

குழந்தை செல்வி: ரோஷ்ணிக்கு 
என் இனிய நல்வாழ்த்துகள்

 
 
தொடரும்


இதன் தொடர்ச்சி பகுதி-3
12.02.2015 வியாழக்கிழமை 
வெளியிடப்படும்

41 comments:

 1. மிக அருமை.
  மலரும் நிணைவுகளை பகிர்ந்து கொண்டது.
  நானும் ரசித்தேன்
  குழந்தை பதிர்வாளர்....
  அச்சிர்யம்மூட்டும் தகவல்.
  படங்கள்அருமை.
  பிற பதிவாளர்களை அறிந்துகொள்ள முடிந்தது.
  மொத்தத்தில்அழகானஅருமையான பதிவு.
  விஜி

  ReplyDelete
 2. அனைத்து பதிவர் சந்திப்புகளும், விழாக்களும் அருமை.

  பதிவர்கள் சந்திப்பை இனிமையாக கூறி அவர்கள் படங்களையும் பகிர்ந்தது அருமை.

  .குழந்தை ரோஷ்ணியின் ஓவியம் அவர்கள் குடும்ப படம், அழகிய ரோஜா, சேவல், கோழி , கோழி குஞ்சு படங்கள் அருமை.

  நட்பை மதிக்கும் உங்கள் குணத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. உங்கள் பணி ஓய்வுப் புகைப்படங்கள் அருமை. முன்னர் பதிவிட்டபோதே சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். ரிஷபன்ஜி அவர்களை அன்று சந்திக்க முடியாமல் போனது எங்களது அதிருஷ்டம் இல்லாத தனமையைக் காட்டுகிறது!

  பிரியத்தின் சிறகுகள் புத்தகத்தில் உங்கள் இருவர் படைப்பும் மற்றும் போரபல எழுத்தாளர்கள் படைப்பும் வெளி வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

  கிளி 'குட்டி வீடியோ' ரசித்தேன்.

  வெங்கட் தம்பதியரின் அருமைச் செல்லம் ரோஷ்நியைச் சந்தித்த விவரம் மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களைப் போலவே ரோஷ்னியும் பன்முகத் திறமை கொண்டவர். அவர் வரைந்த ஓவியங்களை நான் ரசித்திருக்கிறேன்.


  ReplyDelete
  Replies
  1. அதிகாலை மொபைலிலிருந்து தட்டச்சியதில் ஏற்பட்டுள்ள எழுத்துப்பிழைகளுக்கு வருந்துகிறேன்.

   Delete
  2. எனக்கும் நினைவிருக்கிறது வைகோ ஸார்...

   Delete
  3. //ஸ்ரீராம்.September 25, 2018 at 2:51 PM
   எனக்கும் நினைவிருக்கிறது வைகோ ஸார்...//

   நம் சந்திப்பு பற்றி தானே !

   இதோ இந்தப்பதிவுகளில் உள்ளன:-

   http://gopu1949.blogspot.com/2015/01/blog-post_30.html

   http://gopu1949.blogspot.com/2015/02/6-of-6_18.html

   Delete
 4. ரிஷபன் அவர்கள் ஒரு GEM. என் நண்பர் என்பதில் தாங்கொணா பெருமை எனக்கு.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அதே பெருமைதான் ஸார்.. உங்க நண்பர் என்று சொல்லிக் கொள்வதில்..!

   Delete
 5. மலரும் நினைவுகள் இனிமை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. அடக்கத்தை அடக்கம் செய்து பலரும் பவனி வரும் இன்னாளில் ரிஷபன் போன்ற எளிமையை விரும்பும் மனிதர்களை நண்பர்களாக அடைந்தது நாம் அடைந்த பாக்கியம்!

  ReplyDelete
 7. அன்பு வைகோ ஸார்.. ஒவ்வொரு முறையும் என் பெயரை நீங்கள் சொல்லும்போது எனக்குக் கூச்சம் பிடுங்கித் தின்னும் ! இது உங்கள் திறமை.. உங்கள் உழைப்பு.. என் பங்கு ஒரு அணிலைப் போல.. 'எழுதுங்க ஸார்னு' சொன்னது மட்டுமே..உங்கள் திறமைக்கு இன்னும் அதிக உயரம் எட்டியிருக்க வேண்டும்.. என் மனக் குறை அதுதான். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு தீர்க்காயுசும் திடகாத்திரமும் தந்து.. உங்களை எழுத வைத்து.. எங்களை மகிழ்விக்க வேணுமாய் என் பிரார்த்தனை எப்போதும் !

  ReplyDelete
 8. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்றைய பதிவு முழுவதையும் இப்போதுதான் படித்தேன்.

  உங்களுடைய ” பணி ஓய்வு பிரிவு உபசார விழா” மற்றும்
  ” சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா “ ஆகியவற்றின் படங்களை பார்த்தவுடன், அப்போதே உங்கள் அறிமுகம் எனக்கு கிடைத்து இருந்தால் நானும் கலந்து கொண்டிருப்பேனே என்ற ஏக்கம்தான் உண்டானது.

  உங்களை இந்த வலையுலகம் பக்கம் திருப்பிய எழுத்தாளர் ரிஷபன் அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

  // நான் இன்று ஒரு எழுத்தாளன் என்றும், பதிவர் என்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்ள, தூண்டுகோலாக இருந்து, ஊக்கமும் உற்சாகமும் அளித்து என்னை இயங்கச்செய்த பெருமைக்குரியவர் திரு. ரிஷபன் அவர்களே என்பதை மிகவும் நன்றியுடன் இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன்! //

  உங்கள் மானசீக குரு ரிஷபன் பற்றிய உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஜொலிக்கின்றன. அவரை நான் நேரில் சந்தித்தது இல்லை. அவருடைய புகைப்படத்தை ஒருமுறை விகடனில் பார்த்து இருக்கிறேன். அவருடைய வலைப்பக்கம் அடிக்கடி சென்று அவருடைய கவிதைகளை ரசித்து இருக்கிறேன்.


  ”மூன்றாம் சுழி” அப்பாத்துரை கட்டுரைகளை படித்து இருக்கிறேன். இன்றுதான் அவருடைய புகைப்படத்தை உங்கள் பதிவினில் பார்க்கிறேன்.

  இங்கு என்னைப் பற்றியும், உங்களுடனான எனது பதிவுகள் பற்றியும் இங்கு குறிப்பிட்டதற்கும் மிக்க நன்றி. ( எனக்கே, இவ்வளவு பதிவுகள் உங்களைப் பற்றி நான் எழுதி எழுதியிருக்கிறேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது)

  சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களை திருச்சியில் ஒருமுறை சந்தித்து இருக்கிறேன். அவருடைய மனைவியும், மகளும் சிறந்த வலைப் பதிவர்கள் என்பது வலையுலக மகிழ்ச்சியாகும்.

  இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட அன்புள்ள V.G.K அவர்களுக்கு மீண்டும் நன்றி.

  ReplyDelete
 9. பணி ஓய்வு விழாவில் எடுத்த படங்கள் அனைத்தும் அருமை.

  ரிஷபன் சார் மிகவும் எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர் .... இவரைப் போன்றும், தங்களைப் போன்றும் நல்ல மனது படைத்தவர்கள் எங்களுக்கு நட்பாக வாய்க்கப் பெற்றது மிகப் பெரும் பாக்கியம் தான்...

  அப்பாதுரை அவர்கள் எங்கள் இல்லத்துக்கு வந்ததால் சந்தித்திருக்கிறேன்.

  தமிழ் இளங்கோ ஐயாவைத் தான் இதுவரை சந்தித்ததில்லை.

  ஒவ்வொருவரையும் அவர் சந்தித்த நாட்களுடன் நினைவில் வைத்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது.

  எங்களை குடும்ப சகிதமாக படங்களுடன் பகிர்ந்து நெகிழ வைத்து விட்டீர்கள் சார். மிக்க நன்றி.

  ReplyDelete
 10. திரு தமிழ் இளங்கோ அவர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிட்டவில்லை. மற்றவர்களைச் சந்தித்திருக்கிறேன். உங்கள் பணி ஓய்வுப் படங்களும், சஷ்டி அப்தபூர்த்திப் படங்களும் சிறப்பாக வந்துள்ளன. எல்லாப் படங்களையும் ஓர் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாக்கிறீர்கள் என்பதும் புரிகிறது. வாழ்த்துகள். ரிஷபன் அவர்களை ஒரே ஒரு முறை தான் சந்தித்தேன். :))

  ReplyDelete
 11. அனைவரும் வலைஉலகில் அறிந்தவர்களே. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. வலை உலக நட்பை சிறப்பிக்கும் பதிவு! படங்கள் அழகு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. நட்புக்கு ஓர் இலக்கணமாகத் திகழும் தங்களின் பதிவுலக நண்பர்களைப் பற்றிய செய்திகளும், புகைப் படங்களும் அருமை...

  ReplyDelete
 14. பணி ஓய்வுப் புகைப்படங்களில் நிம்மதியும் லேசான சோகமும் தெரிகிறது. வலையுலகுக்கு உங்களை விட்டுத்தந்த பணி ஓய்வுக்கு நன்றி சொல்வோம். :)

  வெங்கட் சகோவின் குடும்ப புகைப்படம் அருமை.

  ரிஷபன் சாரைத்தான் பார்த்ததேயில்லை

  அப்பாதுரை சார், இளங்கோ சார் குறித்த பகிர்வுகள் அருமை.

  நட்பையும் உறவுகளையும் ஒரு சேர சிறப்பிக்கும் உங்களுக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப் சார்.

  ReplyDelete
 15. எல்லாப் புகைப்படங்களும், இனிமையான நினைவுகளின் பொக்கிஷம். ஒவ்வொரு புகைப்படத்தைப் பார்க்கும்போதும் ஒவ்வொரு நினைவு வரும், இல்லையா? அருமை கோபு ஸார்!

  ReplyDelete
 16. உங்கள் பதிவுகளைப் படித்ததே எல்லோரையும் எனக்கும் தெரியும் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. கிடைத்ததில் திருப்தியுடனிரு என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். இம்மாதிரி ஸந்திப்புகள் அருமையானது. பாராட்டுகள். அன்புடன்

  ReplyDelete
 17. பல பதிவர்களின் படங்களை முதல்முதலாகப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 18. எவ்வளவு சுகமான அசைபோடல்... பதிவுலக நட்புகளோடும் அலுவலக நட்புகளோடும் பகிர்ந்த அழகான தருணங்களை இன்னும் அழகாய் மிக நேர்த்தியாய் வடிவமைத்து நாங்களும் ரசித்து மகிழ இங்கே பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார். தங்கள் நட்பின் வட்டம் நாளுக்கு நாள் விரிந்துகொண்டே போவதன் பின்னாலிருக்கும் தங்கள் கடின உழைப்பும் செய்திறன் நேர்த்தியும் வியக்கவைக்கிறது. பாராட்டுகள் சார்.

  ReplyDelete
 19. விழாக்கள் கலைகட்டிவிட்டது இங்கு...தங்களை வலைத்தளத்திற்கு ஊக்கப்படுத்திய ரிஷபன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. நல்ல பதிவர் + நல்ல நண்பர் அதுவும் உற்சாகமான நண்பரை தந்த அவர்களுக்கு...மீண்டும் ஒரு முறை நன்றி. தங்களின் சிறுகதைகள் மேலும் வரவேண்டும் ஐயா....நன்றி.

  ReplyDelete
 20. எல்லா பதிவர்களின் வலைத் தளத்திற்குச் சென்று பின்னூட்டம் எப்படித்தான் இடுகிறீர்களோ தெரியவில்லை. ஒன்றிரண்டு தளங்களுக்குச் செல்வதற்கே நேரம் இல்லை.

  இன்னும் நிலுவையில் உள்ள என் பயணக் கட்டுரைகள்

  வேலூர்
  திருவண்ணாமலை
  கனாத்தூர்
  ராமேஸ்வரம்
  சிம்லா இன்னும்பல.

  ஆனால் எல்லாவற்றையும் புள்ளி விவரங்களுடன் எழுதி எங்களை வியக்கத்தான் வைக்கிறீர்கள். ஏதோ உங்கள் காத்து என் பக்கமும் அடிச்சா நன்னா இருக்கும்.

  ரிஷபன் சாரைப் பத்தி நீங்கள் நிறைய இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

  நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா தளங்களுக்கும் செல்ல வேண்டும் என்று ஆசை இருக்கு. ‘ஆசை இருக்கு தாசில் பண்ண - அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்ய்க்க’ங்கற மாதிரி இருக்கு.

  உங்க அளவுக்கு இல்லாட்டாலும் உங்களில் ஒரு 10% இருந்தாலும் நான் வலை உலகில் கொடி கட்டிப் பறப்பேன்.

  வாழ்த்துக்களுடனும்,
  வணக்கங்களுடனும்
  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
 21. ஆஹா.... அருமையான சந்திப்புகள்.....

  ஒவ்வொரு சந்திப்பிலும் அசத்தும் உங்களை சந்திப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

  நாம் சந்தித்ததையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.

  இடைவிடாத பணி காரணமாக பல பதிவுகள் படிக்க முடிவதில்லை. ஒவ்வொன்றாக இப்போது தான் படித்து வருகிறேன். அதனால் தான் தாமதம்! :(

  ReplyDelete
 22. அஹா ராஜி ராதா சாரைப் பார்த்தேன் அருமை அருமை. கோபால் சார்.

  மிகுந்த அக்கறையோடு தாங்கள் எனக்காக சொல்லியமைக்கு நன்றி.

  பொதுவாக பத்ரிக்கைகளில் வாசகர் கடிதம் என்றால் ஏதோ அவர்களே போட்டுக்கொள்வார்கள் என்று சிலர் கிண்டலடிக்கக் கேட்டிருக்கிறேன். எனக்கு வந்த கடிதங்களை பெருமையுடன் போட ஆவல் இருந்தாலும் சிறிது கூச்சத்தோடே சேர்த்து வைத்துப் போட்டேன்.

  ஆனால் அதில் விமர்சனம் அனுப்பிய ஒருவர் எழுத்தாளர் அதிலும் பெருமதிப்பிற்குரிய உங்கள் நண்பர் என்று அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

  நன்றி உங்களுக்கும் அவருக்கும். என்னுடைய நன்றியைத் தெரிவித்துவிடுங்கள் :)

  ReplyDelete
 23. Thenammai Lakshmanan April 23, 2015 at 3:16 PM

  வாங்கோ, வணக்கம்.

  //ஆஹா ராஜி ராதா சாரைப் பார்த்தேன் அருமை அருமை. கோபால் சார். மிகுந்த அக்கறையோடு தாங்கள் எனக்காக சொல்லியமைக்கு நன்றி.//

  மிக்க மகிழ்ச்சி.

  //பொதுவாக பத்ரிக்கைகளில் வாசகர் கடிதம் என்றால் ஏதோ அவர்களே போட்டுக்கொள்வார்கள் என்று சிலர் கிண்டலடிக்கக் கேட்டிருக்கிறேன். //

  நானும் இதனை பிறர் சொல்லி உணர்ந்திருக்கிறேன். :(

  //எனக்கு வந்த கடிதங்களை பெருமையுடன் போட ஆவல் இருந்தாலும் சிறிது கூச்சத்தோடே சேர்த்து வைத்துப் போட்டேன்.//

  நீங்களோ நானோ, நமக்கு நாமே வாசகர் கடிதம் எழுதிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லாதவர்கள் ஆச்சே ! :) அதனால் இதில் கூச்சமே நமக்கு வேண்டாம்.

  என்னிடமும் வாசகர் கடிதங்கள் [பத்திரிகைகளில் வெளிவந்தவை + தபாலில் நேரிடையாக எனக்கு வந்தவை] நிறையவே உள்ளன. நான் என் சிறுகதைத் தொகுப்பு நூல்களை பிறருக்கு அன்பளிப்பாகக்கொடுக்கும் போதே, அவர்கள் அனைவருக்கும், என் சுயவிலாசமிட்ட, போஸ்ட் கார்ட்களையும் அதில் இணைத்தே கொடுத்திருந்தேன். அதனால் அதில் ஒரு 10 to 20% ஆசாமிகள் மட்டும், கதைகளை இரசித்துப்படித்து விட்டு, FEEDBACK கொடுத்து, அந்த போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பியிருந்தார்கள். அவற்றையெல்லாம் பொக்கிஷமாக என்னிடம் சேர்த்து வைத்துள்ளேன்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. VGK >>>>> HONEY MADAM [2]

   அவ்வாறு எனக்குக் கிடைத்துள்ள பொக்கிஷமான நெகிழ்ச்சிமிக்க கடிதங்களில் ஒன்றினை மட்டும் இதோ இந்தப்பதிவின் இறுதியில் காட்டியுள்ளேன்:

   http://gopu1949.blogspot.in/2013/03/3.html

   அவசியம் பாருங்கோ. பிரமித்துப்போவீர்கள் :)

   >>>>>

   Delete
  2. VGK >>>>> HONEY MADAM [3]

   //ஆனால் அதில் விமர்சனம் அனுப்பிய ஒருவர் எழுத்தாளர் அதிலும் பெருமதிப்பிற்குரிய உங்கள் நண்பர் என்று அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.//

   ஆம் .... அவருடன் எனக்கு 5 ஆண்டுகளுக்கும் மேல் பழக்கம் உண்டு. சற்றே கரகரப்பான தொண்டையுடன் மிகவும் கணீரென்று ஆணித்தரமாக தன் கருத்துக்களை எடுத்துக்கூறி அழகாகப் பேசுவார். அவருக்கு வெங்கலக்குரல். அவருக்கு மைக்கே தேவையில்லை.:)

   //நன்றி உங்களுக்கும் அவருக்கும். என்னுடைய நன்றியைத் தெரிவித்துவிடுங்கள் :)//

   கடைசியாக 5 வருடங்களுக்கு முன்பு மட்டுமே நாங்கள் இருவரும் நேரில் சந்தித்தோம். அதன்பிறகு நான் இருமுறை என் கைபேசிகளை மாற்றிவிட்டதால், அவருடைய ஃபோன் நம்பரும் என்னிடம் தற்சமய்ம் கைவசம் இல்லை.

   அவரை மீண்டும் தொடர்புகொள்ள நேர்ந்தால் தங்கள் பதிவின் இணைப்பையும் http://honeylaksh.blogspot.in/2015/04/blog-post_23.html#more அவருக்குக் கொடுத்து நன்றி சொல்லி விடுகிறேன்.

   அன்புடன் VGK

   Delete
 24. பல பதிவர்களை படங்களின் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்ததில சந்தோஷமா இருக்கு.

  ReplyDelete
 25. பொக்கிஷமான நினைவலைகளின் அருமையான புகைப்படத் தொகுப்புகள் ..நிறைவான பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:14 AM

   //பொக்கிஷமான நினைவலைகளின் அருமையான புகைப்படத் தொகுப்புகள் ..நிறைவான பாராட்டுக்கள்..//

   வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

   இந்த என் பதிவுக்குப் பொக்கிஷமான தங்களின் இருமுறை வருகைக்கும் அன்பான பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
   .

   Delete
 26. சந்தித்த வேளை தித்திக்கும் இனிமை சேர்க்கும் பதிவர்களின் அறிமுகம்.. அருமை..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:24 AM

   //சந்தித்த வேளை தித்திக்கும் இனிமை சேர்க்கும் பதிவர்களின் அறிமுகம்.. அருமை..//

   ’இனிமை + அருமை’ எனச் சொல்லியுள்ள தங்களின் தித்திக்கும் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
 27. சந்திச்சவங்க அல்லாரோட படமும் போட்டீக அல்லாரும் டைனிங் டேபிலுல இன்னா பலவாரம் சாப்புட்டீக அத சொல்லலியே. ஒரு சாப்பாட்டு பிசாசு ஒங்கட பதிவெல்லாம் படிச்சிகிடுதுன்னுபிட்டு தெரியும்ல.

  ReplyDelete
 28. வலைப்பதிவுலகத்தில் உங்களுக்குத் தெரியாதவர் என்று யாருமே இருக்க முடியாது உங்களைத் தெரியாதவர்களும் யாருமே இருக்கமுடியாது.

  ReplyDelete
 29. நீங்கள் விரும்பும் கரகரா மொறுமொறு நொறுவல்களைபோல அசைபோல நல்ல பதிவு.

  ReplyDelete
 30. மலரும் நினைவுகளாய் மலர்ந்த பதிவு மணம் வீசுகிறது!தொடர்கிறேன்!

  ReplyDelete
 31. மீண்டும் ஒருமுறை இந்த பதிவினைப் படித்துப் பார்த்தேன். மலரும் நினைவுகளால் மகிழ்ந்தேன். எனது வலைத்தளம் வந்து பின்னூட்டத்தில் இந்த பதிவின் சுட்டியைத் தந்து, வாய்ப்பளித்த அய்யாவுக்கு நன்றி. நீங்கள் சுட்டிக் காட்டிய இன்னொரு பதிவை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ February 2, 2017 at 5:34 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார். தங்களின் மீண்டும் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

   //மீண்டும் ஒருமுறை இந்த பதிவினைப் படித்துப் பார்த்தேன். மலரும் நினைவுகளால் மகிழ்ந்தேன். எனது வலைத்தளம் வந்து பின்னூட்டத்தில் இந்த பதிவின் சுட்டியைத் தந்து, வாய்ப்பளித்த அய்யாவுக்கு நன்றி. நீங்கள் சுட்டிக் காட்டிய இன்னொரு பதிவை இனிமேல்தான் படிக்க வேண்டும்.//

   ஆமாம் ஸார். ஏற்கனவே 10.02.2015 அன்று தாங்கள் இந்தப்பதிவுக்கு வருகை தந்து மிக அழகாகவும், ஆத்மார்த்தமாகவும், விரிவாகவும் பின்னூட்டமிட்டு சிறப்பித்துள்ளீர்கள், ஸார்.

   பழைய பதிவுகளையும் பின்னூட்டங்களையும் மீண்டும் படிக்கும்போது மிகவும் ஆனந்தமாகத்தான் உள்ளது.

   மிக்க நன்றி, ஸார்.

   Delete