என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 5 ஜூன், 2017

’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-3 of 8

இந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு:


நூலாசிரியர் மோகன் ஜி அவர்கள்



4) ’பியார் கி புல் புல்’ 

மிகவும் அழகானதொரு மென்மையான காதல் கதை. எதிர்பார்ப்பைத் தூண்டும் நல்லதொரு விறுவிறுப்பான எழுத்து நடை. 

ஒரு சினிமாப்படம் எடுக்க பலரின் உழைப்புகள் தேவைப்படுகின்றன. ஆனால் ஒருசிலரின் உழைப்புகள் மட்டுமே வெளியுலகுக்குத் தெரிய வருகின்றன.  அதுபோல திரைக்குப் பின்னால் இருந்து, தன் கடும் உழைப்பினைத் தரும் ஓர் ஏழை வாலிபன் பற்றிய கதை இது. 

ஷூட்டிங்கான லொகேஷன் தேடிப் பிடிக்க மும்பைக்குச் செல்கிறான். லோ பட்ஜெட் படமாகையால், தங்குமிடம் சாப்பாடு போன்றவற்றிற்கான பணம் கூட போதுமானதாகக் கைவசம் இல்லை. 

இவனைப்போலவே அங்கு ஒரு ஹிந்திப்பட தயாரிப்பில் உள்ள, மிடில் க்ளாஸ் ஆசாமி மாட்டுகிறான். அவன் வீட்டில் மொட்டைமாடி எனச் சொல்லக்கூடிய இரயில் பெட்டியின் அப்பர் பர்த் போன்ற மரப்பலகை ஒன்றில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு இவன் படுக்க நேரிடுகிறது.  

அவனுக்கு ஒரு தாய். அவளுக்கு ஏதோ ஓரு பெரும் வியாதி. நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாள். 

ஹிந்திக்கார நண்பனுக்கு, அவன் வீட்டில்,  கல்யாண வயதில் ஓர் தங்கையும் இருக்கிறாள். 





மரணப்படுக்கையில் இருக்கும் அந்த வயதான ஹிந்திக்கார ஏழைத் தாயிடம், நம் கதையின் ஏழையான தமிழ் வாலிபன் ”உங்கள் பெண்ணை எனக்குப் பிடித்துள்ளது. அவளையே நான் திருமணம் செய்துகொள்வேன். கவலையே படாதீங்கோ” என ஹிந்தியிலேயே (”நமஸ்தே மா! மே ஆப்கி பேடி கோ சாதி கர்ணா சாத்தா ஹூங்!”) சும்மாவாவதுச் சொல்கிறான். 

உயிர் போக இருக்கும் அவளின் ஆத்ம திருப்திக்காக இப்படிச் சொல்லி நடிக்க வேண்டியதோர் சூழ்நிலை, அவனின் அந்தப் புது நண்பனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

இதைக்கேட்டதும் அந்தத்தாய் ”அச்சா பேட்டா, பஹூத் அச்சா” என்று சொல்லி துள்ளி எழுந்து உட்கார்ந்துகொள்வதும், பின்பு இதே மகிழ்ச்சியில் அவள் பிழைத்துவிடுவதும், வேறு வழியின்றி அவன் அந்தப் பெண்ணையே மணக்க நேர்வதும், கதையில் நகைச்சுவையாகவும் நல்லதொரு திருப்பமாகவும் அமைந்துள்ளது.




5) கல்யாணியைக் கடித்த கதை

மிகவும் விறுவிறுப்பான ஜோரான கதை. 

கன்னியாக் குழந்தையான கல்யாணியின், வழுவழுப்பான நடுத்தொடையில், வாய் வைத்து நன்கு ஆறுபற்கள் பதிய கடித்துவிட்டான் இந்தக்கதையில் வரும் ஒரு பொடியன்.   



அந்தக் கன்னியாக் குழந்தையின் தொடைப்பகுதி இதனால் கன்னியே போச்சுது. 

ஒரு பெண் குழந்தையைக் கண்டால் இப்படியுமா கடிக்கணும் என்ற ஒரு வெறி இருக்கும் .... அதுவும் ஒரு  பொடிப் பயலுக்கு?

பல்லாண்டுகளுக்குப் பின் அவளை, அவளின் கணவருடனும், எட்டு வயது பெண்ணுடனும், பஸ் பயணத்தில் சந்திக்க நேரிடுகிறது. 

தன் அருகே அமர நேர்ந்த அந்தக் குட்டிப் பெண்ணுடன் தனியே பேச்சுக் கொடுக்கும் போது, இவன் என்றோ ஒருநாள் தன் குழந்தைப் பருவத்தில் அவளின் அம்மாவின் தொடையில் கடித்த விஷயத்தை அந்தச் சின்னப்பெண் மூலமே கேட்க நேரிடுகிறது.

அவனுக்கும் ஆச்சர்யம் ..... படிக்கும் நமக்கும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

அப்புறம் என்னதான் ஆச்சு? 

நீங்களும் ஆவலுடன் இந்த நூலினில் படித்து மகிழலாம். :)

வெரி எக்ஸ்லெண்ட் ஜோவியல் ரைட்டிங் !


6) தத்த்தி

மிகவும் அருமையான சுவாரஸ்யமான கதை. சொல்லியுள்ள விதம் அழகு சொட்ட சொட்ட பக்திப்பிரவாகத்தையே நகைச்சுவையுடன் ஊட்டிவிடுவதாக உள்ளது. 

ஆஸ்திக மற்றும் நாஸ்திக மணம் சரி சமமாகக் கலந்து, காரசாரமான மூக்குப்பொடியை மூக்கினில், நகைச்சுவையுடன் தூவித்தூவி படிக்க பேரெழுச்சியைக் கொடுத்து உதவுகிறது.  

நிஜமோ பொய்யோ தத்த்தியின் கனவில் ஸ்வாமி வருதல், அதனை அந்த ஊரே அப்படியே நம்புதல், அதற்காகவே ஓர் மிகப்பெரிய கோயில் எழுப்புதல், நாஸ்திகர் ஒருவரின் டூ வீலரை எடுத்துக்கொண்டு ஸ்வாமி அவசர அவசரமாக எங்கோ புறப்படுதல்.  



அந்த நாஸ்திகரும்கூட, தனது மனைவியின் கடவுள் நம்பிக்கையால் ஆஸ்திகராக மாற வேண்டிய சூழ்நிலையும், தனது டூ வீலரையே அந்தக் கோயிலுக்குக் காணிக்கையாக இழக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுதல். ஸ்வாமி ஏறி அமர்ந்து பயணம் செய்த டூ வீலருக்கு, அந்தக் கோயிலிலேயே ஓர் தனி சந்நதி ஏற்படுத்தி அனைவரும் அதனை பக்தி சிரத்தையுடன் தொட்டுத்தொட்டுக் கும்பிடுதல் ..... என சுவாரஸ்யம் தொடர்ந்துகொண்டே போகிறது. 

சாதாரண ஆசாமியாக வெட்டி அரட்டைகள் அடித்து வந்த ’தத்த்தி’ திடீரென ’தத்திரிஷி ஸ்வாமிகள்’ ஆவது என கதை மிகவும் அமர்க்களமாக நகர்த்தப்பட்டுள்ளது. 

ப்ரேமானந்தா, நித்யானந்தா போல இவருக்கு  ’தத்தா நந்தா’ என பெயர் சூட்டியிருக்கலாமோ என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட மிளகு வடையில் ஒரு நான்கினை மட்டும், ஒரு தினத்தந்தி பேப்பர் துண்டில் படிக்கும் நமக்கும் அனுப்பி வைக்கக்கூடாதோ என ஒரு ஏக்கத்தை வரவழைத்த கதை இது. 



**பக்கம் 55-இன் முதல் வரியில் மூன்றாம் வார்த்தையும், பக்கம்-57 இல் கீழிருந்து ஐந்தாம் வரியில் உள்ள நான்காம் வார்த்தையும் படிக்க எனக்குக் கொஞ்சம் நெருடலாக இருந்தன. மிகவும் கொச்சையான அவற்றை மட்டும், நாகரீகம் கருதி தவிர்த்திருக்கலாமோ என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். 

மற்றபடி கதை A1 மட்டுமே. மிகவும் அநாயாஸமான எழுத்துக்கள்.

கதைகளைக் கஷ்டப்பட்டு எழுதி, அச்சில் அதனை ஒரு தொகுப்பு நூலாகப் பிரசுரித்து, வெளியிட்டுள்ள நூலாசிரியர் அவர்களுக்குத்தான், முட்டையிட்ட கோழிபோல  அதன் உண்மையான வலியும், எரிச்சலும் தெரியக்கூடும்.  நாம் குறை சொல்வது மிகவும் எளிது மட்டுமே.

எனவே நான் மேலே **குறையாகச் சொல்லியுள்ள இவற்றிற்காக நூலாசிரியர் அவர்கள் என்னை மன்னித்துக்கொள்வாராக !




மேலதிகாரிகளுக்கு மேலாண்மை வகுப்பு எடுப்பவர்
நூலாசிரியர் மோகன்ஜி (கையில் பந்துடன்)


தொடரும்




இந்தத்தொடரின் மேற்படி பகுதி இரண்டினில் 
முதல் பெண்மணியாக வருகை தந்து கருத்தளித்துள்ள 
அதிரா அவர்களின் விருப்பத்திற்கிணங்க 
வைர நெக்லஸ் பரிசளிக்கப்படுகின்றன.

பூசாருக்கு ஒன்று + அதிராவுக்கு இரண்டு 
ஆக மொத்தம் மூன்று நெக்லஸ்கள்




அன்பான இனிய 
நல்வாழ்த்துகள் அதிரா !





என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

77 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சித்ராம்மா! பலமுறை உங்கள் பின்னூட்டம் முதலாக வந்துவிடும். பதிவுலகின் சூப்பர்சானிக்!
      கோபு சார் என்ன பரிசு உங்களுக்குத் தரப் போகிறாரோ?!

      நீக்கு
    2. Chitra June 5, 2017 at 12:44 AM

      //அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்//

      அன்புள்ள சித்ரா, வாங்கோ ... வணக்கம். இன்றைய இந்தப்பதிவுக்கு தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      அன்புடன் கோபு மாமா

      நீக்கு
  2. //ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட மிளகு வடையில் ஒரு நான்கினை மட்டும், ஒரு தினத்தந்தி பேப்பர் துண்டில் படிக்கும் நமக்கும் அனுப்பி வைக்கக்கூடாதோ என ஒரு ஏக்கத்தை வரவழைத்த கதை இது.



    ஹாஹா எனக்கும் தான் :) உங்க விமர்சனம் படித்து இப்போ பசிக்குது :)

    அனைத்து விமரிசனங்களும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சலின்.! ஆஞ்சநேயருக்கு போடப்படும் வடைமாலை பிரசாதமாகத் தரும் போது, வாங்கிக்கொண்டு திரும்பவும் வரிசையிலே நிற்போம் பள்ளி நாட்களில்... மிளகு போட்ட மொறுமொறு வடை. எனக்கும் இப்போது பசிக்கிறது...

      நீக்கு
    2. என் நண்பி ஒருத்தி இருந்தார் வருஷா வருஷம்எக்ஸாம் பாஸானா இப்படி வடை மாலை சாத்துவாங்க அவங்கம்மா வேண்டுதல் :)
      எப்போ ரிசல்ட் வரும்னு காத்திருப்பேன் வடைக்காகவே ..

      நீக்கு
    3. Angelin June 5, 2017 at 1:03 AM

      வாங்கோ அஞ்சு, வணக்கம்.

      **ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட மிளகு வடையில் ஒரு நான்கினை மட்டும், ஒரு தினத்தந்தி பேப்பர் துண்டில் படிக்கும் நமக்கும் அனுப்பி வைக்கக்கூடாதோ என ஒரு ஏக்கத்தை வரவழைத்த கதை இது.**

      //ஹாஹா எனக்கும் தான் :) உங்க விமர்சனம் படித்து இப்போ பசிக்குது :) //

      சாதாரணமாகவே, ’வடை’ என்றாலே எல்லோருக்குமே நாக்கில் ஜலம் ஊறும்.

      அதுவும் மிளகாய்க்கு பதிலாக, மிளகு போட்டு, மடி ஆச்சாரமாக, பக்தி சிரத்தையுடன் செய்து, ஹனுமனுக்கு மாலையாகப் போட்டபின் தரும் பிரஸாத வடை என்றால் கேட்கவே வேண்டாம். அதில் ஒரு தனி ருசி இருக்கத்தான் இருக்கும். :)

      //அனைத்து விமரிசனங்களும் அருமை //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  3. சிலுசிலு - என சாரல் வீசும் வேளையில்,
    தஞ்சாவூர் டிகிரி காபி குடித்ததைப் போலொரு சந்தோஷம்..

    தங்களது அழகான விமர்சனங்கள் மேலும் மெருகூட்டுகின்றன.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகாக சொல்கிறீர்கள் சார்! கோபு சார் வமரிசனத்தைப் படித்துவிட்டு, எனக்கே என் கதைகள் பிடிக்கத் தொடங்கி விட்டது.!

      நீக்கு
    2. அன்பின் மோகன் ஜி.. அவர்களுக்கு வணக்கம்..

      இன்று காலை ஆறு மணியளவில் எனது தளத்திற்கு வருகை தருமாறு - தங்களை அழைப்பதில் மகிழ்வெய்துகின்றேன்..

      நீக்கு
    3. துரை செல்வராஜூ June 5, 2017 at 1:24 AM

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //சிலுசிலு - என சாரல் வீசும் வேளையில்,
      தஞ்சாவூர் டிகிரி காபி குடித்ததைப் போலொரு சந்தோஷம்..//

      மிக்க மகிழ்ச்சி.

      //தங்களது அழகான விமர்சனங்கள் மேலும் மெருகூட்டுகின்றன.. வாழ்க நலம்!..//

      தங்களின் அன்பான வருகைக்கும், மெருகூட்டிடும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், பிரதர்.

      நீக்கு
  4. ஆஆஆவ்வ்வ்வ்வ் மீ லாண்டட்ட்ட்ட்ட்... ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஉ டோண்ட் டச்சூஊஊஊஊஊஉ அது எல்லாமே எனக்காம்ம்ம்ம் கோபு அண்ணன் சொல்லிட்டார்ர்ர்.. ச்சோ டோண்ட் டச்சூஉ ஒன்லி லுக்கிங் ஓகே?:)..

    அயகான மூன்று நெக்லெஸ் களுக்கு மியாவும் நன்றி கோபு அண்ணன்... அடுத்து மூக்குத்தியா கடனில இருக்குதூ?:).. தோடு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @athiraav // தோடு?/// yes yes :) பாம்படம் தான் இன்னும் பாக்கியாம் :))

      நீக்கு
    2. asha bhosle athira June 5, 2017 at 1:34 AM

      //அயகான மூன்று நெக்லெஸ் களுக்கு மியாவும் நன்றி கோபு அண்ணன்...//

      மிகவும் சந்தோஷம்.

      //அடுத்து மூக்குத்தியா கடனில இருக்குதூ?:).. தோடு?//

      அதெல்லாம் நமக்குள் நிறையவே லாங் பெண்டிங் இருக்குதூஊஊ. ஒவ்வொன்றாய்க் கேளுங்கோ.

      நான் ஒரேயடியாகக் கொடுத்தால் பிறர் பொறாமை படக்கூடும் அல்லவா !

      நீக்கு
    3. Angelin June 5, 2017 at 3:39 AM

      @athiraav // தோடு?/// yes yes :)

      பாம்படம் தான் இன்னும் பாக்கியாம் :)) //

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அதையும் கொடுத்துட்டாப்போச்சு. நாம் இதுவிஷயத்தில் குறையேதும் வைக்கக்கூடாது. :)

      நீக்கு
  5. //இந்தத்தொடரின் மேற்படி பகுதி இரண்டினில்
    முதல் பெண்மணியாக வருகை தந்து கருத்தளித்துள்ள
    அதிரா அவர்களின் விருப்பத்திற்கிணங்க
    வைர நெக்லஸ் பரிசளிக்கப்படுகின்றன.///

    ஸ்ஸ்ஸ்ஸ் பாருங்கோ.. இதுக்குத்தான் மெதுவா பேசுங்கோ எனச் சொல்றது இப்போ பாருங்கோ 2 பெண் மணிகள்:) முந்திட்டினம் அதிராவை:)... ஆனாலும் இம்முறை 3 வதாகப் பின்னூட்டமிடும் சுவீட் 16 க்கே பரிசு என அறிவிச்சிடுங்கோ சொல்லிட்டேன்ன்:)..

    இருங்கோ இனித்தான் பொன் வீதியில் கால் வைக்கப்போறேன்ன்:)...

    நீங்க என் ரோசாவைப் பார்க்கல்லயோ?:).

    பதிலளிநீக்கு
  6. //பியார் கி புல் புல்’ //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது என்ன ஏதோ மதுபானம் ஃபுல் ஃபுல் ல்லா இருக்குது என்பதாகவெல்லோ நினைச்சிட்டேன்ன்:).

    இருந்தாலும் கதை பஹூத் அச்சாதான்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Copy cat :) //பஹூத் அச்சாதான்ன்:).//
      இது கோபு அண்ணா ட்ரேட் மார்க் வசனம்

      நீக்கு
    2. நோஓஒ இது ஸ்ரெபனி:).. அவரின் ரேட் மார்க் //சபாபதே.. அதிரபதே// ஆக்கும்:).

      ஹா ஹா ஹா இண்டைக்கு ஒவ்வொரு மணித்தியாlஅத்துக்கு ஒரு தடவை கொமெண்ட்ஸ் போட்டு, கோபு அண்ணனை நித்திரை கொள்ளாமல் பண்ணுவோம்ம் ஹா ஹா ஹா:).

      நீக்கு
    3. ஹாஹாஆ :) ஆகமொத்தம் எனக்கு வந்த கனவு பலிக்கப்போது :) அது
      நம்ம ரெண்டுபேரையும் உங்க ளோட அட்டகாசம் தாங்க முடியாம தூக்கி ஆத்தில போடறாங்க அதில் உங்க மேலேறி நான் தப்பிச்சிடறேன் :)

      நீக்கு
    4. Angelin June 5, 2017 at 2:11 AM

      Copy cat :) //பஹூத் அச்சாதான்ன்:).//

      //இது கோபு அண்ணா ட்ரேட் மார்க் வசனம்//

      கரெக்ட்டூஊஊஊ. இது என்னுடைய கொப்பி வலது
      [COPY RIGHT] மட்டுமே. :)

      நீக்கு
    5. asha bhosle athira June 5, 2017 at 1:39 AM

      **’பியார் கி புல் புல்’**

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது என்ன ஏதோ மதுபானம் ஃபுல் ஃபுல் ல்லா இருக்குது என்பதாகவெல்லோ நினைச்சிட்டேன்ன்:).//

      ஃபுல் மதுபானம் போன்ற தங்களின் இந்த கருத்துக்கள் எனக்கும் நல்ல ‘கிக்’கினை ஏற்படுத்தி விட்டது. :)

      ’பியார் கி புல் புல்’ என்றால் ‘பிரியமான பறவையே’
      அல்லது ’அன்புக்குரிய பறவையே’ அல்லது ‘காதல் குயிலே’ என்று அவரவர் விருப்பம் போல அர்த்தம் செய்துகொள்ளலாம்.

      கதை ஹிந்தி பேசிடும் மும்பையில் நடக்கும் நிகழ்ச்சிகளாக இருப்பதால் ‘பியார் கி புல் புல்’ என்று
      கதைக்குத் தலைப்புக்கொடுத்துள்ளார்.

      அவருடைய ’வானம்பாடி’யைப் போய் இப்படி ஃபுல், ஹாஃப், குவார்ட்டர் எனக் சரக்குகளுடன் ஒப்பிட்டுக் குறைத்து மதிப்பீடு செய்து விட்டீர்களே ! கர்ர்ர்ர்ர் :(

      ஹிந்திக்காரியான கதாநாயகியிடம் போய் ‘தமிழ் பாடும் குயிலே’ ன்னா சொல்லிக்கொஞ்ச முடியும்?

      நீக்கு
  7. //கல்யாணியைக் கடித்த கதை//
    கடித்தது பூஸாராக இருக்குமோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ச்:).. எனக்குப் பாருங்கோ ஊர் வம்பு பேசுவது புய்க்காதூஊஊஊ:)..

    ///இதனால் கன்னியே போச்சுது. ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது கன்னிப்போனதல்ல.. கண்டிப் போனதாக்கும்... ஒயுங்காத் தமிழ் எழுதத்தெரியேல்லை அதுக்குள் ரிவியூ எழுத வெளிக்கிட்டிட்டார்ர்.. ஒன்பேஏஏஏஏதூஊஊஊஊஊ பகுதியில:)... ஹையோ அஞ்சூஊஊஊஊ பீஸ்ஸ்ஸ்ஸ் சேவ் மீஈஈஈஈ:) நேக்கு என் வாய்தேன் எடிரி:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கன்னிபோவது என்றால் bruised .கர்ர்.எப்போதும் அவசரம் .அவசர குடுக்க premature baby cat

      நீக்கு
    2. கன்னிப்போதல் என்பது ஒரிஜினலா கன்றிப்போதல்.. பேச்சு வழக்கில் ஒட்டடை கம்பு ஓட்டர கம்பு ஆனா மாதிரினும் சொல்லலாம் ..
      ஸ்ஸ்ஸ் அப்ப்பா :) இந்த பூனைக்கு தமிழ் விளக்கப்படுத்தி எனக்கிருக்கிற கொஞ்சநஞ்ச தமிழும் மறந்திடும் போலிருக்கே :)

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இங்கிலீசில ஹிந்தியில எல்லாம் பாடம் படிப்பிக்கத் தொடங்கிட்டுது இந்த பிஸ்ஸ்ஸூ:).. அதைத்தான் “கண்டிப்போவது” எனச் சொன்னேன்... கன்னி எனில்... அது கன்னீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.. அதாவது சுவீட் 16 ஆகிப் பின் கன்னியாகி.. பின் பெண்ணாகி.. பின்பு அஞ்சுவைப்போல.. பாட்டியாவது:) .. ஹா ஹா ஹா:).

      //premature baby cat//
      வாணாம்ம்ம்ம்ம் என் வாயைக் கிளறினால்:) அண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வெளியே வந்திடும்.. ஹா ஹா ஹா:) பீ கெயார்ஃபுல்ல்ல்ல்(ஹையோ இது நேக்குச் சொன்னேன்:).

      நீக்கு
    4. ///கன்னிப்போதல் என்பது ஒரிஜினலா கன்றிப்போதல்..///
      ஆவ்வ்வ்வ் இப்போதான் பிஸ்ஸூ கரெக்ட்டா தூண்டில் மீனைக் கவ்வியிருக்கு.. கூகிள் டிக்‌ஷனறி எல்லாம் பார்த்து:)..

      இது கரீட்டூஊஊஊஊஊ.. கண்டியாவது ஓரளவு பொருந்தும்.. இதில் கன்னி எப்பூடிப் பொருந்தும்....

      கன்றிப் போதலுக்கு.. கன்னி எனச் சொல்லி.. மிக மென்மையான, அழகான, அன்பான, நட்பான, பண்பான, பாசமான பெண்குலத்தை:) அவமதிச்ச குற்றத்துக்காக கோபு அண்ணன் உடனடியாகப் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு அழைக்கப்படுகிறார்ர்.. அதிரா பொயிங்கிட்டேன்ன்.. நேக்கு தேவை நீதி நேர்மை எருமை...:)

      நீக்கு
    5. //நேக்கு தேவை நீதி நேர்மை எருமை//

      கோபு அண்ணா ப்ளீஸ் அந்த எமன் தி கிங் :) அவரோட வெஹிக்கிளை அதிராவுக்கு பரிசா கொடுங்க அந்த நெக்லஸை திரும்பி வாங்குங்க

      நீக்கு
    6. //கோபு அண்ணா ப்ளீஸ் அந்த எமன் தி கிங் :) அவரோட வெஹிக்கிளை அதிராவுக்கு பரிசா கொடுங்க அந்த நெக்லஸை திரும்பி வாங்குங்க///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா...

      நோஓஓ.. எமன் அங்கிள் பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. உங்களுக்கு என்ன பாசை புரியுமெனச் சொல்லுங்கோ அப்பாசையிலேயெ பேசுறேன்ன்ன்.. நேக்கு உங்கட வெகிக்கிள் வாணாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. பிச்சை வாணாம்ம்ம் நாயைப் பிடிச்சால் போதும் கதையாயிட்டுதே என் கதை.. வைரவா பீஸ்ஸ்ஸ்ஸ் வடை மாலை அதுவும் பச்சைக்கடலையில் சுட்டுச் சுட்டுப் போடுவேன்ன்ன்ன் சேவ் மீஈஈஈஈ:)

      https://media.giphy.com/media/9qMz9bTEwtaLu/giphy.gif

      நீக்கு
    7. Angelin June 5, 2017 at 3:27 AM

      //கோபு அண்ணா ப்ளீஸ் அந்த எமன் தி கிங் :) அவரோட வெஹிக்கிளை அதிராவுக்கு பரிசா கொடுங்க//

      பாம்படம் தவிர இது வேறா? ஒருத்தருக்கே எத்தனை எத்தனை பரிசு கொடுப்பது என்றே யோசிக்கிறேன். :)

      நீக்கு
  8. ///6) தத்த்தி//

    மோகன் ஜி, கமல் ஃபான் ஆக இருப்பாரோ?:).. ஹா ஹா ஹா..

    அனைத்தும் சுவாரஸ்யமாகவே இருக்கு, அதை நீங்க எழுதியவிதம் கதைகளை இன்னும் மெருகூட்டுது...

    ஆவ்வ்வ் அது வடை மாலையோ? நான் காப்புக்கள் என நினைச்சேன்ன்..

    வைரவருக்குத்தானே வடை மாலை.. ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலைதானே புய்க்கும்:)..

    சரி சரி மோகன் ஜி பந்தைத்தூக்குவது என்னைக் குறிபார்த்துத்தான் போல கிடக்கூஊஊஊஊஉ.. ஆஞ்சனேயா வெற்றிலை மாலை சாத்துவேன்ன் மீயைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Haaahaa இல்லை கூழ்ஹாஙகல்ல் தானே தூக்கி இருக்கார் நல்லா அந்த பவர் கண்ணாடி ய துடைத்து ப்பாருங்கள்

      நீக்கு
    2. ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு, மோகன் ஜி க்கு சிவாஜியை ப் பிடிக்கும் எனச் சொன்னதால , அப்பூடி முதல் மரியாதையில் ராதாக்காவுக்கு தூக்குவதைப்போல கூழாங்கல் தூக்கிறார் எனச் சொல்லப்பூடா சொல்லிட்டேன்ன்:) கர்ர்ர்ர்:).. பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்துப் பேசோணும் அதிராவைப்போல:)...ஹா ஹா ஹா.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:).

      நீக்கு
    3. asha bhosle athira June 5, 2017 at 3:10 AM

      //முதல் மரியாதையில் ராதாக்காவுக்கு தூக்குவதைப்போல கூழாங்கல் தூக்கிறார் எனச் சொல்லப்பூடா சொல்லிட்டேன்ன்:) கர்ர்ர்ர்:)..//

      முதல் மரியாதையில், வேஷ்டியை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு, அண்டர்வேர் தெரிய, கொஞ்சம் நடுத்தர வயசான சிவாஜி அந்த ஜாக்கெட் போடாத ராதாப்பொண்ணுக்காக தூக்கிக்காட்டுவது ......

      கூழாங்கல் அல்ல ..... மிகப்பெரிய பாறாங்கல் ஆகும்.

      கூழாங்கல் என்பது பெரும்பாலும் சின்ன சைஸாக ’பலாக்கொட்டை’ போலத்தான் இருக்கும்.

      இருப்பினும் கூழாங்கற்களிலும் சில ஒரு பெரிய உருளைக்கிழங்கு சைஸுக்கும் இருப்பது உண்டுதான்.

      நீக்கு
    4. அது பாறாங்கல்லும் இல்லை, கூழாங்கல்லும் இல்லை. இளவட்டக் கல் எனப்படும் கல்! அதைத் தான் ஜிவாஜி தூக்குவதாகக் காட்டுவார்கள். ஹிஹிஹி, உண்மையில் அது கல்லாக இருந்திருந்தால் ஜிவாஜி தூக்கி இருப்பாரா என்ன? :))))

      நீக்கு
    5. Geetha Sambasivam June 5, 2017 at 4:16 PM

      //அது பாறாங்கல்லும் இல்லை, கூழாங்கல்லும் இல்லை. இளவட்டக் கல் எனப்படும் கல்!//

      நீங்க சொன்ன இதுதான் மிகவும் கரெக்டூஊஊஊ.

      //அதைத் தான் ஜிவாஜி தூக்குவதாகக் காட்டுவார்கள். ஹிஹிஹி, உண்மையில் அது கல்லாக இருந்திருந்தால் ஜிவாஜி தூக்கி இருப்பாரா என்ன? :))))//

      சினிமா ஷூட்டிங் எல்லாமே வெறும் அல்டாப்தான் நம்ம ’அதிரடி அதிரா’ போலவே. மேக்-அப் போட்டு 61-ஐ .... 16 ஆக ’உல்டா புல்டா’ ஆக்கிவிடுவார்கள்.

      மிகப்பெரிய இளவட்டக் கல்லினைத் தூக்குவதுபோல காட்டுவார்கள். ஷூட்டிங் நடக்குமிடத்தில் போய்ப் பார்த்தால் அது வெறும் காலி அட்டைப்பெட்டியில், பெயிண்ட் அடித்து கல்போலச் செய்ததாக, வெயிட்டே இல்லாததாகத்தான் இருக்கும்.

      ஹைதராபாத் அருகேயுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்குள் ரூ. 1000 நுழைவுக்கட்டணம் செலுத்தி ஒருநாள் முழுவதும் ஷூட்டிங்கில் நடக்கும் அல்டாப்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு வந்தேன்.

      சண்டைக் காட்சிகள், ஓர் வீடு தீப்பிடித்து எரிதல், ஒருத்தி தனியே குதிரை ஓட்டிச்செல்ல, அவளை நூற்றுக் கணக்கானோர் துரத்திக்கொண்டு செல்லுதல், எல்லாமே ஒரே அல்டாப் அழகிரி வேலைகள் மட்டுமே. :)

      நீக்கு
    6. கீதாக்கா! இளவட்டக்கல்லை எங்கள் நடிகர் திலகம், சூரக்கோட்டை சிங்கம், சிம்மக் குரலோன், கலைக்குரிசில், செவாலியே சிவாஜி அவர்கள் இந்த இளவட்டக்கல்லை தன் சுண்டு விரலாலயே தூக்கிப் பந்தாடி இருப்பாராக்கும்....

      நீக்கு
    7. மோகன் ஜி! க்க்க்க்க்கும்! :P :P :P :P :P :P :P :P

      நீக்கு
  9. ஹா..ஹா.. டாஸ்மாக் சமாச்சாரம் இல்லை ஆதிரா! அர்த்தம் கோபுசார் சொல்லும் போது நானும்சேர்ந்து கைதட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. நாங்கல்லாம் சிவாஜியின் ரசிகமணிகள் ஆதிரா!
    ஆஞ்சநேயர் வெற்றிலைப் போடுமுன்னே ஏதும் சாப்பிட வேணாமா?
    அதற்குத் தான் முன்னே வெற்றிலை மாலை. அவருக்கு வெண்ணையும் பானகமும் பிடிக்கும்.
    நான் பந்தைத் தூக்குவது ஒரு மனோவியல் பயிற்சிக்காக.. உங்கள் மேல் எறிவேனா?!
    கோபு சாரிடம் நீங்கள் மேற்சொன்ன ஐட்டங்களை பரிசளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///கோபு சாரிடம் நீங்கள் மேற்சொன்ன ஐட்டங்களை பரிசளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!///

      நீங்க நல்ல கதாசிரியர் மட்டுமல்ல மிகவும் நல்லவர் மோகன் ஜி...:)..

      பாருங்கோ இந்த வசனத்தைப் பார்த்ததும் கோபு அண்ணன் ஓடிப்போய் தலையை மட்டும் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிட்டாராம்ம்ம்.. முழுசாப் பூர முடியேல்லை ஹா ஹா ஹா பூனை கண்ணை மூடினால் பூலோகமே இருண்டுபோச்சு எனும் நினைப்பாம் என அம்மம்மா அடிக்கடி சொல்லுவா:)..

      ///நான் பந்தைத் தூக்குவது ஒரு மனோவியல் பயிற்சிக்காக.. உங்கள் மேல் எறிவேனா?!//

      ஹா ஹா ஹா அப்பூடியா சங்கதி.. மீ அவசரப்பட்டுப் பயந்திட்டேன்ன்:).. இப்போ பாருங்கோ ...//premature baby cat/// எனச் சொல்லிக்கொண்டு ஒராள் ஹீல்ஸ் உடன் வருவா:) ஹா ஹா ஹா..

      நீக்கு
  11. விமர்சனத்தில் குறைகளும் அடங்கும். ஆதலால் நீங்கள் நூலாசிரியரிடம் மன்னிப்பு கேட்பது தேவையில்லையோ என்று தோன்றுகிறது. நூலாசிரியரும் பக்குவமானவரே. நண்பர்களின் கருத்துகளை (மாற்றுக் கருத்தாயினும்) ஏற்பவர் என்றே நான் கருதுகிறேன். மதிப்புரையின்போது இரண்டு பக்கங்களையும் பார்க்கவேண்டும் என்பதே என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் முனைவர் சார்! மன்னிப்பு கேட்பது முறையுமல்ல. அது கோபு சாரின் பெருந்தன்மையின் வெளிப்பாடு.

      நீக்கு
    2. Dr B Jambulingam, Assistant Registrar (Retd),
      Tamil UniversityJune 5, 2017 at 6:54 AM

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கங்கள்.

      //விமர்சனத்தில் குறைகளும் அடங்கும். ஆதலால் நீங்கள் நூலாசிரியரிடம் மன்னிப்பு கேட்பது தேவையில்லையோ என்று தோன்றுகிறது. நூலாசிரியரும் பக்குவமானவரே. நண்பர்களின் கருத்துகளை (மாற்றுக் கருத்தாயினும்) ஏற்பவர் என்றே நான் கருதுகிறேன். மதிப்புரையின்போது இரண்டு பக்கங்களையும் பார்க்கவேண்டும் என்பதே என் கருத்து.//

      தங்களின் அன்பான வருகைக்கும், தங்களின் தங்கமான கருத்தினை ஆணித்தரமாக இங்கு எடுத்துரைத்துள்ளதற்கும், மிகச்சரியான புரிதலுக்கும், அதனை யார் மனமும் புண்படாதவாறு நயம்பட எடுத்துச் சொல்லியுள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

      நீக்கு
  12. மோகன் ஜியின் கதைகள் அனைத்தும் வாவ் என்று சொல்ல வைக்குது. வாசிக்க வேண்டும்.

    தத்த்தி காமெடியும் கலந்து வரும் போல இருக்கே...ரஜனியின் படம் ஒன்றை நினைவுபடுத்தியது...

    ஆஞ்சுவின் மிளகு வடை ருசிப்பதைப் போல கதைகளும் ...உங்கள் விமர்சனமும்...

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளசி, கீதா மேடம்! புத்தகத்தைப் அவசியம் படியுங்கள்.உங்களுக்குப் பிடிக்கும்.

      நீக்கு
    2. Thulasidharan V Thillaiakathu
      June 5, 2017 at 7:54 AM [துளசி, கீதா]

      வாங்கோ, இருவருக்கும் வணக்கங்கள்.

      //மோகன் ஜியின் கதைகள் அனைத்தும் வாவ் என்று சொல்ல வைக்குது.// வெரி குட்.

      //வாசிக்க வேண்டும்.// சரி ... வாசியுங்கோ.

      //தத்த்தி காமெடியும் கலந்து வரும் போல இருக்கே ... ரஜனியின் படம் ஒன்றை நினைவுபடுத்தியது...//

      ஆமாம். எனக்கும் அதுவே நினைவுக்கு வந்தது.

      //ஆஞ்சுவின் மிளகு வடை ருசிப்பதைப் போல கதைகளும் ...உங்கள் விமர்சனமும்...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      நீக்கு
  13. முதல் கதை படித்து இருக்கிறேன் மோகன்ஜி தளத்தில்.
    கதையை ரசித்து படித்து குற்றம் குறைகளையும் சொல்லிய விதம் அருமை.
    படங்கள் , அதிராவின் பரிசு எல்லாம் அருமை.
    மோகன்ஜி தொடர்ந்து கதை எழுத தூண்டும் விமர்சனங்கள்.

    வாழ்த்துக்கள் இருவருக்கும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மேடம்! அட்சரலட்சம் பெறும் உங்கள் வார்த்தைகள்

      நீக்கு
    2. கோமதி அரசு June 5, 2017 at 9:19 AM

      வாங்கோ, வணக்கம்.

      //முதல் கதை படித்து இருக்கிறேன் மோகன்ஜி தளத்தில்.// வெரி குட்.

      //கதையை ரசித்து படித்து குற்றம் குறைகளையும் சொல்லிய விதம் அருமை.//

      சந்தோஷம்.

      //படங்கள், அதிராவின் பரிசு எல்லாம் அருமை.//

      படங்களின் வரும் காமெடி சீன்ஸ் போலவா?

      //மோகன்ஜி தொடர்ந்து கதை எழுத தூண்டும் விமர்சனங்கள். வாழ்த்துக்கள் இருவருக்கும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  14. உங்க விமரிசனத்தை ஆழ்ந்து படிக்கணும். பயணத்தில் இருக்கிறேன். பிறகு படித்து எழுதுகிறேன் கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் June 5, 2017 at 11:37 AM

      வாங்கோ ஸ்வாமீ .... வணக்கம்.

      //உங்க விமரிசனத்தை ஆழ்ந்து படிக்கணும்.//

      அடாடா .... எனது விமர்சனத்தைப்போய் ஆழ்ந்து படிக்கும் ஆவலில் உள்ள நீங்கள் ஆயிரத்தில் இல்லை..இல்லை.. லக்ஷத்தில் ஒருவர். !!!!!

      //பயணத்தில் இருக்கிறேன்.//

      ஆஹா, தங்களின் இந்தப் பயணம் மிகச்சிறப்பாகவும், வெற்றிகரமாகவும், சந்தோஷம் தருவதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையட்டும் என பிரார்த்த்தித்துக் கொள்கிறேன்.

      //பிறகு படித்து எழுதுகிறேன் கோபு சார்.//

      மிகவும் நல்லது. அப்படியே செய்யுங்கோ. நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியுள்ளதுபோல, எனக்கும் அடுத்த நான்கு-ஐந்து நாட்களுக்கு ஏராளமான வேலைகள் இங்கு உள்ளன. :)

      நீக்கு
  15. ஆமாம், நெ.த. சொல்லி இருக்கிறாப்போல் வைகோ சாரின் விமரிசனங்கள் ஒவ்வொன்றும் கதையின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. விமரிசனம் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam June 5, 2017 at 4:18 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஆமாம், நெ.த. சொல்லி இருக்கிறாப்போல்//

      நெ.த. எங்கே என்ன சொல்லியிருக்கிறாரோ? ஆண்டவனுக்கே வெளிச்சம். :)

      //வைகோ சாரின் விமரிசனங்கள் ஒவ்வொன்றும் கதையின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது.//

      அடடா, அப்படியா சொல்றேள்! எனினும் சந்தோஷம்.

      //விமரிசனம் அருமை!//

      ’வசிஷ்டர் வாயால் ப்ரும்மரிஷி’ :) மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், ’அருமை’ என்ற அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
    2. கீதா அக்கா! சரியாகச் சொன்னீர்கள். அருமையான விமரிசன பாணி கோபு சாருடையது.

      நீக்கு
  16. திரு மோகன்ஜி அவர்களின் ‘பொன் வீதி’ நூலின் திறனாய்வில் தாங்கள் திறனாய்வு செய்துள்ள மூன்று கதைகளுமே வித்தியாசமான கதைக்கருவை கொண்டவை. வழக்கம்போல் தங்கள் பாணியில் கதைகளை சுருங்கச் சொல்லி கதைகளை முழுதும் படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டுள்ளீர்கள்.

    ‘பியார் கி புல் புல்’ என்ற கதை பற்றி தந்திருக்கும் மதிப்புரையில் ‘மிகவும் அழகானதொரு மென்மையான காதல் கதையை நல்லதொரு விறுவிறுப்பான எழுத்து நடையில் கதாசிரியர் தந்திருக்கிறார்’ என்று கூறி இது காதல் கதை இரகத்தை சேர்ந்தது என்றாலும் இறுதியில் நகைச்சுவையான எதிர்பாரா முடிவைக்கொண்டது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.

    ‘கல்யாணியைக் கடித்த கதை’ பற்றிய மதிப்புரையில் ‘மிகவும் விறுவிறுப்பான ஜோரான கதை’. என்று ஆரம்பித்து ‘வெரி எக்ஸ்லெண்ட் ஜோவியல் ரைட்டிங்!’ என்று முடித்துள்ள தங்களின் முத்தாய்ப்பான கருத்து ஆவலுடன் இந்த நூலை படித்து மகிழலாம். என்ற தங்களின் பரிந்துரையை உறுதி செய்கிறது.

    ‘தத்த்தி’ என்ற சுவாரஸ்யமான கதையில் பக்திப்பிரவாகத்தையே நகைச்சுவையுடன் ஊட்டிவிடுவதாக சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது, நாத்திகன் என சொல்லிக்கொள்கிறவன் கடைசியில் காலத்தின் கட்டாயத்தால் ஆத்திகனாக மாறுவதையும், நம் மக்கள் அதீத பக்தியால் தற்கால கண்டுபிடிப்பான ஸ்கூட்டருக்கு க்கூட தனி சந்நிதி கட்டி வணங்குவார்கள் என்பதையும், வழக்கம்போல் ஆசாமிகள் ‘சாமி’களாக அவதாரம் எடுப்பதையும் நகைச்சுவையோடு திரு மோகன்ஜி அவர்கள் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள நெருடலான சொற்களை காரணமில்லாமல் கதாசிரியர் பயன்படுத்தியிருக்கமாட்டார் என நினைக்கிறேன். அதைப் படிக்காமல் கருத்து இயலவில்லை.

    அருமையாக மூன்று கதைகளுக்கும் மதிப்புரை தந்து படிக்கும் ஆவலை உண்டாக்கிய தங்களுக்கு பாராட்டுகள்!

    திரு மோகன்ஜி அவர்களுக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி June 5, 2017 at 5:10 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //திரு மோகன்ஜி அவர்களின் ‘பொன் வீதி’ நூலின் திறனாய்வில் தாங்கள் திறனாய்வு செய்துள்ள மூன்று கதைகளுமே வித்தியாசமான கதைக்கருவை கொண்டவை. வழக்கம்போல் தங்கள் பாணியில் கதைகளை சுருங்கச் சொல்லி கதைகளை முழுதும் படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டுள்ளீர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி, ஸார்.

      //‘பியார் கி புல் புல்’ என்ற கதை பற்றி தந்திருக்கும் மதிப்புரையில் ‘மிகவும் அழகானதொரு மென்மையான காதல் கதையை நல்லதொரு விறுவிறுப்பான எழுத்து நடையில் கதாசிரியர் தந்திருக்கிறார்’ என்று கூறி இது காதல் கதை இரகத்தை சேர்ந்தது என்றாலும் இறுதியில் நகைச்சுவையான எதிர்பாரா முடிவைக்கொண்டது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.//

      ஆமாம் ஸார். எதிர்பாராமல் கல்யாணம் ஆனபிறகு மட்டுமே, அவர்கள் காதலிக்க ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன் ..... என்னைப்போலவே :)

      //‘கல்யாணியைக் கடித்த கதை’ பற்றிய மதிப்புரையில் ‘மிகவும் விறுவிறுப்பான ஜோரான கதை’. என்று ஆரம்பித்து ‘வெரி எக்ஸ்லெண்ட் ஜோவியல் ரைட்டிங்!’ என்று முடித்துள்ள தங்களின் முத்தாய்ப்பான கருத்து ஆவலுடன் இந்த நூலை படித்து மகிழலாம். என்ற தங்களின் பரிந்துரையை உறுதி செய்கிறது. //

      ஆறு ஆண்டுகளுக்கு முன்பு (18.05.2011) இந்தக்கதைக்கு, அவரின் வலைத்தளத்தில் நான் எழுதியுள்ள பின்னூட்டம் இதோ:-

      -=-=-=-=-

      வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

      சார், இந்தக்கதையும், தலைப்பும், கடித்த இடமும் வெகு ஜோர். பிச்சு உதறி விட்டீர்கள். குழந்தைப்பருவத்தில் இதெல்லாம் அறியாமல் செய்யும் பிழைகள் தான் என்றாலும் அதை அப்படியே ஒரு அழகான கதையாக சற்றும் விறுவிறுப்பு குறையாமல் கடைசிவரை கொண்டு சென்றுள்ளது உங்களின் தனித்திறமையைக்காட்டுது.

      மனம் திறந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
      -=-=-=-=-

      //‘தத்த்தி’ என்ற சுவாரஸ்யமான கதையில் பக்திப்பிரவாகத்தையே நகைச்சுவையுடன் ஊட்டிவிடுவதாக சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது, நாத்திகன் என சொல்லிக்கொள்கிறவன் கடைசியில் காலத்தின் கட்டாயத்தால் ஆத்திகனாக மாறுவதையும், நம் மக்கள் அதீத பக்தியால் தற்கால கண்டுபிடிப்பான ஸ்கூட்டருக்கு க்கூட தனி சந்நிதி கட்டி வணங்குவார்கள் என்பதையும், வழக்கம்போல் ஆசாமிகள் ‘சாமி’களாக அவதாரம் எடுப்பதையும் நகைச்சுவையோடு திரு மோகன்ஜி அவர்கள் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். //

      ஆம். ஒவ்வொருக்கும் திடீர் திடீரென ஏற்படும் பக்திப் பிரவாகத்தையும், அதன் அடிப்படையில் அவரவர்கள் அடித்திடும் கூத்துக்களையும், நல்ல நகைச்சுவையுடன் எழுதியுள்ளார்.

      //நீங்கள் குறிப்பிட்டுள்ள நெருடலான சொற்களை காரணமில்லாமல் கதாசிரியர் பயன்படுத்தியிருக்கமாட்டார் என நினைக்கிறேன்.//

      அப்படியும்கூட இருக்கலாம்.

      //அதைப் படிக்காமல் கருத்துச் சொல்ல இயலவில்லை. //

      அதனால் பரவாயில்லை, ஸார்.

      //அருமையாக மூன்று கதைகளுக்கும் மதிப்புரை தந்து படிக்கும் ஆவலை உண்டாக்கிய தங்களுக்கு பாராட்டுகள்! திரு மோகன்ஜி அவர்களுக்கு பாராட்டுகள்! //

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆழமான வாசிப்பு அனுபவத்திற்கும், ஆத்மார்த்தமான நீண்ட கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. நடனசபாபதி சார்! உங்களின் செறிவான கருத்துகளுக்கு வைகோ சாருடன் நானும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

      நீக்கு
    3. வைகோ சார். உங்கள் விரிவான கருத்தையொட்டி நானும் கருத்திட்டிருந்தேனே? உங்கள் பதில் சுவாரஸ்யமானது.

      நீக்கு
  17. முதல் கதை படித்துள்ளது
    பசுமரத்து ஆனிபோல்
    நன்றாகப் பதிந்துள்ளது

    மற்ற இருகதைகளும் படிக்கவில்லை
    புத்தகம் வாங்கிப் படித்து விடுவேன்

    நிறைகளை மட்டும் சொல்லிப்போகாது
    நாசூக்காய் குறைகள் அதனையும்
    சொல்லிப்போனதை இரசித்தேன்

    அற்புதமான விமர்சனப் பதிவு

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S June 5, 2017 at 10:59 PM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //முதல் கதை படித்துள்ளது .. பசுமரத்து ஆணிபோல் நன்றாகப் பதிந்துள்ளது//

      வெரி குட்.

      //மற்ற இருகதைகளும் படிக்கவில்லை.//

      அதனால் பரவாயில்லை.

      //புத்தகம் வாங்கிப் படித்து விடுவேன்//

      மிக்க மகிழ்ச்சி. இதில் குறிப்பிட்டுள்ள மூன்று கதைகள் உள்பட பெரும்பாலும் எல்லாக்கதைகளும் அவருடைய வலைத்தளத்திலேயே உள்ளன .... புத்தகம் வாங்கிப் படிப்பது என்பது தங்கள் இஷ்டம்போல மட்டுமே.

      //நிறைகளை மட்டும் சொல்லிப்போகாது, நாசூக்காய் குறைகள் அதனையும் சொல்லிப்போனதை இரசித்தேன்.//

      நிறைகள் மட்டுமே நிறைய இருக்கும் போது சிறு குறைகளைப்போய் பெரிதாக இங்கு சொல்கிறோமே என எனக்கும் மனதுக்குக் கொஞ்சம் குறையாகவே இருந்தது. மேலும் எனக்குக் குறையாகப் பட்டது மற்ற நிறைய நபர்களுக்கு ஒருவேளை நிறையாகவும் தோன்றலாம்.

      //அற்புதமான விமர்சனப் பதிவு. வாழ்த்துக்களுடன்...//

      தங்களின் தொடர் வருகைக்கும், ஊக்கமளித்து உற்சாகம் கொடுக்கும் கருத்துக்களுக்கும், அற்புதமான விமர்சனப் பதிவு என்று சொல்லி வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. ரமணி சார்!
      தொடர்ந்து உங்கள் ரசனைமிக்க கருத்துகளைச் சொல்லி இந்த பதிவுகளுக்கு அழகு
      சேர்க்கிறீர்கள். நன்றிவஜி!

      நீக்கு
  18. நூலினை வாங்கிப்படிக்கும் ஆவலைத்தூண்டும் விமர்சனப்பகிவு ஐயா. மோகன் ஜீக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரம் June 6, 2017 at 3:04 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நூலினை வாங்கிப்படிக்கும் ஆவலைத்தூண்டும் விமர்சனப்பகிவு ஐயா. மோகன் ஜீக்கு வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான + அதிசயமான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      நீக்கு
    2. மிக்க நன்றி தனிமரம்! அவசியம் படியுங்கள்.

      நீக்கு
  19. ஒவ்வொரு கதையையும் உங்கள் பாணியில் நயம்பட விமர்சித்து எழுதுவதை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
    பொருத்தமாய்ப் படங்கள் கூடுதல் சுவாரசியம்.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் June 6, 2017 at 3:36 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார். தங்களின் அபூர்வ வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      //ஒவ்வொரு கதையையும் உங்கள் பாணியில் நயம்பட விமர்சித்து எழுதுவதை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.//

      ஆஹா, என் எழுத்துலக மானஸீக குருநாதரான தங்கள் வாயிலாக இதனைக்கேட்டதில் தன்யனானேன்.

      //பொருத்தமாய்ப் படங்கள் கூடுதல் சுவாரசியம். வாழ்த்துகள்//

      தங்களின் அன்பான + அபூர்வமான வருகைக்கும் சுவாரஸ்யமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      பிரியத்துடன்

      வீ.........ஜீ

      நீக்கு
    2. வாங்க ரிஷபன்ஜி ! உங்களின் தனிப்பட்ட அழகிய விமரிசனத்துக்கும், இங்கும் வாழ்த்தியதற்கும் நன்றி பாஸ்!

      நீக்கு
  20. 'புல்'ங்கிற வார்த்தய பாத்ததுமே கிரிகிரி ஆகி உள்ளாற எட்டிப் பாத்தா...அது கடசில 'pyar ki bull bull'...சரி ஓக்கே...f(b)ull f(b)ull-னாலும்,kick-தான்... ..நாலுவரிலயே கதயோட அவுட் லைனை சொல்றதுதான் வாத்யாரோட ஸ்டயில்!!! சினிமா காரனுக்கே a(u)nti climax-ஆ....ரைஐஐஐட்டு...மிச்சத்தையும் அப்பால பாத்துபோட்டு சொல்றனுங்கோ...!!! உங்கள் எம்.ஜி.ஆர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAVIJI RAVI June 9, 2017 at 3:44 PM

      வாங்கோ, சின்ன வாத்யாரே! வணக்கம்.

      //'புல்'ங்கிற வார்த்தய பாத்ததுமே கிரிகிரி ஆகி உள்ளாற எட்டிப் பாத்தா...அது கடசில 'pyar ki bull bull'...சரி ஓக்கே...f(b)ull f(b)ull-னாலும்,kick-தான்... ..//

      பாண்டிச்சேரியிலேயே உள்ள உங்களுக்குமா இப்படி இதனைப்படித்தது ’கிக்’ வரணும்? :)

      //நாலு வரிலயே கதயோட அவுட் லைனை சொல்றதுதான் வாத்யாரோட ஸ்டயில்!!!//

      இதுவே ஜாஸ்தியோ என எனக்கு நினைக்கத்தோன்றுகிறது. :)

      //சினிமா காரனுக்கே a(u)nti climax-ஆ....ரைஐஐஐட்டு...//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! வாத்யாரின் வார்த்தை விளையாட்டு - Anti / Aunty Climax வழக்கம்போல அற்புதமாக உள்ளது. :)

      //மிச்சத்தையும் அப்பால பாத்துபோட்டு சொல்றனுங்கோ...!!! உங்கள் எம்.ஜி.ஆர்.//

      சரீங்கோ..... வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். நிறைவேற்றுவீர்களா என்பது எனக்கு சந்தேகம் மட்டுமே.

      ஏதோ வருகைதந்து .... ஏதோ கொஞ்சமாவது கருத்துச் சொல்லியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி, ஸ்வாமீ.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. சின்ன எம்.ஜி.ஆருக்கு எனது வரவேற்பும் கூட.

      நீக்கு
  21. //ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட மிளகு வடையில் ஒரு நான்கினை மட்டும், ஒரு தினத்தந்தி பேப்பர் துண்டில் படிக்கும் நமக்கும் அனுப்பி வைக்கக்கூடாதோ என ஒரு ஏக்கத்தை வரவழைத்த கதை இது. //

    அதான இப்படி எழுதாம நம்பளால இருக்க முடியாதே.

    கதைகளும் அருமை

    அண்ணாவின் விமர்சங்கள் அருமையோ அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 12, 2017 at 8:04 PM

      **ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட மிளகு வடையில் ஒரு நான்கினை மட்டும், ஒரு தினத்தந்தி பேப்பர் துண்டில் படிக்கும் நமக்கும் அனுப்பி வைக்கக்கூடாதோ என ஒரு ஏக்கத்தை வரவழைத்த கதை இது.**

      அதான இப்படி எழுதாம நம்பளால இருக்க முடியாதே.

      கதைகளும் அருமை

      அண்ணாவின் விமர்சங்கள் அருமையோ அருமை.//

      வாங்கோ ஜெயா. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      நீக்கு
    2. கதைகளையும், விமரிசனத்தையும் ரசித்தமைக்கு நன்றி ஜெயந்தி ஜெயா மேடம்.

      நீக்கு
  22. முதல் கதை படித்ததில்லை.. மற்ற இரண்டும் வாசித்து அவரது தளத்திலேயே பின்னூட்டமிட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மிகவும் ரசித்து வாசித்த கதைகள். மோகன்ஜியின் சிறுகதைகள் எல்லாமே ஏதோவொரு வகையில் ஈர்த்து மனத்தில் வெகுகாலம் நினைவாடிக்கொண்டே இருக்கும். அழகான நிறைவான கதையறிமுகங்கள். நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி July 3, 2017 at 6:01 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //முதல் கதை படித்ததில்லை.. மற்ற இரண்டும் வாசித்து அவரது தளத்திலேயே பின்னூட்டமிட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மிகவும் ரசித்து வாசித்த கதைகள். மோகன்ஜியின் சிறுகதைகள் எல்லாமே ஏதோவொரு வகையில் ஈர்த்து மனத்தில் வெகுகாலம் நினைவாடிக்கொண்டே இருக்கும். அழகான நிறைவான கதையறிமுகங்கள். நன்றி கோபு சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  23. உங்கள் பாராட்டுகளைத் தக்க வைத்தும் கொள்ள நான் இன்னமும் அதிகம் எழுத வேண்டும் கீதா! நன்றிம்மா!

    பதிலளிநீக்கு