About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, September 20, 2014

VGK-34 / 03 / 03 - THIRD PRIZE WINNER - பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் ! 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு : VGK-34  


 ’ பஜ்ஜீன்னா .... 


 பஜ்ஜி தான் !’  இணைப்பு:

   

 


     தமிழ்ச் சிறுகதை உலகின் திருப்புமுனையாக இருந்த சிறுகதைச் சக்ரவர்த்தி புதுமைப்பித்தனின் சிறுகதையைத் தான் படிக்கிறோமோ என்று திகைக்க வைக்கும் ஆரம்பம்.   அந்த ராட்சஸ பம்ப் ஸ்டெளவ் பற்ற வைத்து பரபரவென்று எரிகையில் அந்த ஓசையை உணருகிற மாதிரியேவான எழுத்து. எண்ணெய்க் கொப்பரையின் ஃபர்னஸ் அனல் நம் மேலேயே அடிக்கிற மாதிரி இருக்கிறது. பார்வை லென்ஸ் ஒன்றையும் விட்டு வைக்காமல் பார்த்து ரசித்து உள்வாங்கியது எழுத்தாய் வெளிப்பட்டிருக்கிறது.  தவம் கிடந்தாலும் எல்லோராலும் இந்த அளவுக்கு நேரேட் பண்ண முடியாது என்பது வாஸ்தவம் தான்.

 
     -- ஜீவி 


      மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  
நடுவர் திரு. ஜீவி


நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :ஐந்து


இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 

  


மற்றவர்களுக்கு: 


    


 

முத்தான மூன்றாம் பரிசினை 

வென்றுள்ள விமர்சனம்:


சிறிய மூலதனத்துடன், சிறந்த முறையில் உழைத்து, தள்ளுவண்டிக் கடைமூலம்  நாள்தோறும் பொருளீட்டி தம் வாழ்நாளைக் கடத்துபவர்கள் பலர். உழைப்பின் உயர்வை உணர்ந்தவர்கள் அவர்கள். கதைக்களம் கதைக்கரு எந்த வடிவிலும் கற்பனைத்திறனும், கருத்துச் செறிவும் உள்ளவர்களுக்கு ஊற்றுக்கண்ணாய் விளங்கும் என்பதற்கு பஜ்ஜீன்னா பஜ்ஜீதான் கதை ஒரு உதாரணம்.


மகாபாரதத்தில் எத்தனையோ பாத்திரங்கள், கணக்கிலடங்காக் கிளைக்கதைகள் வாயிலாக உணர்த்தப்படும் வாழ்வியல் தத்துவங்கள், குர்ரானின் போதனைகள், பைபிள் உணர்த்தும் வாழ்வியல் தத்துவங்கள், புத்தரின் போதனைகள், மகாவீரரின் போதனைகள் இவையாவும் விளக்கும் தத்துவங்களை சிறு கதாபாத்திரமே உணர்த்துகையில் வாவ்! வாழ்க்கைத் தத்துவம் உணர சிறு பொறியாய், சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது விளங்குகிறது.


பஜ்ஜிக்கடை அமைந்த இடம், சுற்றுச்சூழல் மாசடைந்த சூழலில் இருப்பினும், தரத்தின் உயர்வால் ஏழை முதல் பணக்காரர் வரை எல்லோர் மனங்களிலும் இடம்பிடித்ததாகக் காட்டுவது அருமை. பஜ்ஜி தயாரிப்பை ஒரு சிறு தொழிற்சாலைக்கு ஒப்பிடு செய்து, வேலைகளை சரியான நபர்களுக்கு ஒப்படத்தல் போன்று, பஜ்ஜி தயாரிப்பவரும், விற்பவரும் பங்கிட்டுக்
கொண்டு பணியாற்றும் பாங்கை விவரித்த விதம் அருமை. சிறு தொழில் செய்பவர்களுக்கு உண்டாகும் சிரமங்கள், அவர்களின் தொழிலைப் பாதிக்கும் அம்சங்கள் என அனைத்தும் அழகாக அலசப்பட்டுள்ளன. காவல் துறை விரட்டும்போது மாமூல் வாழ்க்கை பாதிப்பு என்பது அருமையான சொல்லாடல்.


ந்த உலகில் அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியாய் வாழ வழிகள் பல உண்டு. அதில் நாம் தேர்ந்தெடுப்பதில் தான் தவறு செய்கிறோம். ஆசிரியர் சொன்னது போல தவணையில் கிடைத்தால் யானையைக் கூட இரண்டாய் வாங்கிக் கொள்ளும் காலம் இது. கவர்ச்சியான விளம்பரங்கள், குறைந்த முன்பணம் செலுத்தினாலே பொருட்கள் கிடைக்கும் என்பதால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டு வாங்கிச் சேர்த்து, வட்டியுடன் கடன் வளர துன்பம் நேர்கையில் தன்னை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குக் கூட செல்பவர்கள் உண்டு.


வரவு எட்டணா பாடல் காட்சி நினைவுக்கு வரும். ஆனால் நம் கதையில் முக்கிய பாத்திரமான பஜ்ஜிக்கடை பெரியவர்  போதும் என்ற மனத்துடன், உழைத்துப் பிழைத்து, ஓரளவு பொருள் சேர்த்து, தேவைகள் நிறைவேறிய நிலையிலும் சேவையாக இத்தொழிலைத் தொடர்வது" செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்" என்பதை வலியுறுத்தும் விதத்தில் அமைகிறது. அந்த நிலையில் அவர் "உனக்கும் கீழே உள்ளவர் கோடி" எனும் தத்துவத்தைப் பின்பற்றி அவர்களின் முன்னேற்றம் குறித்த சிந்தனையுடன் செயல்படும் விதம் அருமையோ அருமை! ஆசையே துன்பத்திற்குக் காரணம்!

கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்

அதுதான் உனக்கு எஜமானன்

வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு

வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு எனும் பாடல் வரிகள் அவருக்கு எத்தனை பொருத்தமாக அமைகிறது!


அமைதியான சூழலில், குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து பணிபுரியும் தனக்குக் கிடைக்கும் ஊதியம் அதிகமோ என தம்மை பஜ்ஜிக்கடை நடத்துபவர்களின் உழைப்போடு ஒப்பிட்டு, பஜ்ஜிக்கடை பெரியவர்பால் இரக்கம் கொண்டு, அவருக்கு உதவ முன்வந்த மேலாளருக்கு அந்தப் பெரியவரோ தன்னை விட கீழ்த்தட்டில் போராடும் மக்களில் தேவைப்படுவோர்க்கு அந்த உதவியைச் செய்வது புண்ணியமாகும் என உரைக்கும் இடத்தில் கருணை உள்ளம் கொண்டதில், தம்மைவிட எளியவரிடம் இரக்கம் காட்டும் பண்பில் ஒருவரை ஒருவர் விஞ்சி நிற்கின்றனர்.


பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு-   இந்தத் தத்துவத்தை, பல இலட்சங்களைப் பங்குச் சந்தை முதலீட்டில் தொலைத்த   மேலாளர் நன்றாக உணரும் வகையில் உரைப்பதாக அமைத்தது சிறப்பு.


ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை 
போகாறு அகலாக் கடை.(குறள் 478)


இந்தக் குறளின் தத்துவத்திற்கேற்ப வாழ முற்பட்டால், வாழ்க்கை மிகவும் இனிமையாய் இருக்கும் என்பதை உணர்த்திய இக்கதை மிகச் சிறந்ததொரு படைப்பு.


மொத்தத்தில் பஜ்ஜீன்னா.. பஜ்ஜிதான் கதை வாழ்வியல் தத்துவங்களை தன்னுள் அடக்கி  தரத்துடன், நறு மணத்துடன் நம்மையெல்லாம் ஈர்க்கிறது.


உழைக்க முற்பட்டு, உரிய வழியைத் தேர்ந்தெடுத்து, ஈடுபாட்டுடன் பொருளீட்டி இன்பமாய் வாழ அறிவுறுத்தும் ஆசியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! நன்றி!
 இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 

 

முனைவர் திருமதி. 


இரா. எழிலி 

அவர்கள்

[வலைத்தளம்: ஏதும் இல்லை]

மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
     


 
மிகக்கடினமான இந்த வேலையை 

சிரத்தையுடன் பரிசீலனை செய்து 

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள  

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.

இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள 


மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர  


இடைவெளிகளில் 

வெளியிடப்பட உள்ளன.


காணத்தவறாதீர்கள் !  இந்த VGK-34 போட்டிக்கு வந்திருந்த விமர்சனங்கள் பற்றி 

நடுவர் திரு. ஜீவி அவர்களின் பொதுவான சில கருத்துக்கள் 

23.09.2014 செவ்வாய்க்கிழமையன்று

தனிப்பதிவின் மூலம் வெளியிடப்படும்.
காணத்தவறாதீர்கள் !

    


அனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு  சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:

VGK-36  


  ’எலி’ஸபத் டவர்ஸ்  
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
வரும் வியாழக்கிழமை 


25.09.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

25 comments:

 1. இந்த உலகில் அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியாய் வாழ வழிகள் பல உண்டு. அதில் நாம் தேர்ந்தெடுப்பதில் தான் தவறு செய்கிறோம்.//

  உண்மை.
  அழகான விமர்சனம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. ஜீவி சார் சரியாக சொல்லி இருக்கிறார்கள். தன் பார்வையில் படும் கதாபாத்திரங்களை அழகாய் சித்தரிக்கிறார் வை.கோ சார். வாழ்த்துக்கள். இருவருக்கும்.

  ReplyDelete
 3. பரிசு வென்ற முனைவர் திருமதி. இரா. எழிலி அவர்களுக்கு
  இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 4. பார்வை லென்ஸ் ஒன்றையும் விட்டு வைக்காமல் பார்த்து ரசித்து உள்வாங்கியது எழுத்தாய் வெளிப்பட்டிருக்கிறது. தவம் கிடந்தாலும் எல்லோராலும் இந்த அளவுக்கு நேரேட் பண்ண முடியாது என்பது வாஸ்தவம் தான்./

  பொருள் பொதிந்த ஆழ்ந்த வரிகள்..!

  ReplyDelete
 5. முனைவர் திருமதி எழிலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  நடுவர் சொன்னது போல் கண்களால் தெருவை ஸ்கேன் செய்திருக்கிறார் கோபு சார். மறுக்க முடியாது.

  ReplyDelete
 6. காட்சிகளைக் கண்முன் நிறுத்துவதில் கதாசிரியர் கைதேர்ந்தவர்தான். நடுவரின் கருத்து 100% உண்மை. கதாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. September 20, 2014 at 5:40 PM


   //காட்சிகளைக் கண்முன் நிறுத்துவதில் கதாசிரியர் கைதேர்ந்தவர்தான். நடுவரின் கருத்து 100% உண்மை. கதாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! நன்றி!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

   Delete
 7. என்னுடைய விமர்சனம் மூன்றாம் பரிசுக்குத் தெரிவாகி இருப்பது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு வைகோ ஐயா அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! வாழ்த்தும் அன்பு நெஞ்சகளுக்கும் என் நன்றி!

  ReplyDelete
 8. என்னுடைய விமர்சனம் மூன்றாம் பரிசுக்குத் தெரிவாகி இருப்பது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு வைகோ ஐயா அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! வாழ்த்தும் அன்பு நெஞ்சகளுக்கும் என் நன்றி!

  ReplyDelete
 9. நடுவர் குறிப்பிடுவதுபோல் காட்சிகளை உள்வாங்கி கதையில் வெளிப்படுத்துவது கதாசிரியருக்கு கைவந்த கலைதான்!

  ReplyDelete
 10. நடுவர் அவர்களின் பாராட்டுகளுக்கு ஏற்றபடி கதையை எழுதி இருக்கும் வைகோ சாருக்கும் பாராட்டுகள். சிறிய விஷயத்தையும் கூர்ந்து கவனித்து அதைக் கதையில் தேவையான இடத்தில் அழகாக நுழைத்து அதற்கும் ஒரு முக்கியத்துவம் கொடுக்கும் வைகோ சாரின் திறமை அளப்பரியது.

  ReplyDelete
 11. மூன்றாம் பரிசை வென்ற திருமதி எழிலி அவர்களின் விமரிசனமே இவ்வளவு அருமையாக இருக்கையில் இரண்டாம் பரிசு, முதல் பரிசுக்காரர்களின் விமரிசனங்களைக் குறித்துக் கேள்வியே இல்லை. திருமதி எழிலிக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 12. மூன்றாம் பரிசு பெற்ற திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  ReplyDelete
 13. அழகிய விமர்சனம். பரிசு பெற்றிருக்கும் முனைவர் ஏழிலி அவர்களுக்கு இனிய பாராட்டுக்கள்! அன்பு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 14. மூன்றாம் பரிசுக்குரிய அருமையான விமர்சனமெழுதிய முனைவர் எழிலி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து பரிசுகள் பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. கீதாம்மா உங்கள் இரண்டாவது பின்னூட்டம் மிகச் சரியானது. மூன்று பரிசுகளையும் வரிசை படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். விமரிசனத்திற்காக அவரவர் எடுத்துக் கொண்ட
  செய்திகளை கணக்கில் எடுத்துக் கொண்டு நிரல்படுத்தி இறுதி முடிவுக்கு வந்தேன்.

  ReplyDelete
 16. வென்றோருக்கு வாழ்த்துக்கள்...
  Vetha.Langathilakam

  ReplyDelete
 17. திருமதி எழிலிக்குப் பாராட்டுகள். அன்புடன்

  ReplyDelete
 18. முனைவர் எழிலி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  ReplyDelete
 19. வென்றவர்களுக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. திருமதி எழிலிக்கு வாழ்த்துக்கள்.

  நடுவர் உங்கள் எழுத்தைப் பற்றி அருமையாகச் சொல்லி இருக்கிறார்.

  அருமையான எழுத்தைப் பற்றி அருமையாகத் தானே சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 21. வெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. திருமதி எழிலிக்கு வாழ்த்துகள். சிறப்பான விமரிசனம். நல்லா இருக்கு.

  ReplyDelete
 23. வெற்றி பெற்ற திருமதி. எழிலி அவர்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete