என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 29 மே, 2011

மூ க் கு த் தி [ பகுதி 5 of 7 ]



முன்கதை முடிந்த இடம்:

”அதோ அந்தப்பக்கம் போய் பேக்கிங் செக்‌ஷனில் பில்லைக்காட்டுங்கள், நகையைத்தருவார்கள்” என்றார். அங்கு பார்த்தால் அங்கேயும் ஒரே கூட்டமாக ஜனங்கள்.   


-------------------------------------

அந்தத்தரைத்தளத்தின் கிழக்குப்பகுதி முழுவதும் மோதிரங்கள் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.  மேற்குப்பகுதியில் கேஷ் கவுண்டர் ஒரு மூலையில், வாயிற்கதவின் அருகே அமைந்திருக்க, மற்றொரு மூலையில் பேக்கிங் + பார்ஸல் ஒப்படைத்தல் நடைபெற்று வந்தது.  

மோதிரம் பார்க்க வந்த ஒருவர் எழுந்திருக்க, அவர் அமர்ந்திருந்த ப்ளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றைத்தாவிப்பிடித்து, அதில் நான் அமர்ந்து கொண்டேன். 

சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டேன்.   பணம் கட்டிய இடத்தில் நெடுநேரம் நின்றதில் என் கால்கள் கடுத்தன. மீண்டும் பார்ஸல் வாங்கும் பகுதியில் நிற்க சற்று தெம்பு வேண்டுமே!

புளியங்கொட்டை கலர் சட்டைப்போட்ட பையன் மீண்டும் என்னிடம் வந்தான். 

“ஐயா, வந்த காரியம் முடிந்து விட்டதா? பணம் கட்டிப்பொருளை வாங்கி விட்டீர்களா?” அன்புடன் விசாரித்தான்.

“பணம் கட்டிவிட்டேன், தம்பி.  மூக்குத்தி தான் வாங்கணும். ஒரே கூட்டமாக உள்ளது. அதனால் சற்று நேரம் உட்கார்ந்து விட்டேன்” என்றேன்.

“மெதுவாகப்பார்த்து வாங்கி ஜாக்கிரதையாக வீட்டுக்கு எடுத்துட்டுப்போங்க, எங்கு பார்த்தாலும் கும்பலாகவும், திருட்டு பயமாகவும் உள்ளது” என்று கூறி விடை பெற்றுச்சென்றான். 

நம்ம கிராமத்துப் பக்கப்பையன், நல்ல பையன், நல்ல நேரத்தில் எச்சரித்து விட்டுபோகிறான் என்று நினைத்துக்கொண்டே, பொருட்கள் பார்ஸல் வாங்கும் பகுதியில் போய் நின்று கொண்டேன்.

கூட்டம் குறைவதாகவே தெரியவில்லை. ஒருவர் பின் ஒருவராக க்யூ முறையில் ஒழுங்காக வாங்கிச் செல்வதாகவும் தெரியவில்லை.

மேலும்மேலும் பில்லுக்கான பணம் கட்டிவிட்டு வருபவர்கள் கூட்டமும் சேர்ந்து கொண்டே இருக்கிறது.  

நகையைப்பேக் செய்து கொடுக்கும் முன்பு, மீண்டும் ஒருமுறை தராசுத்தட்டில் வைத்து நிறுத்து, பில்லுடன் சரிபார்த்து, அதற்கான சிறிய பெரிய நகைப்பெட்டிகளில் போட்டு, கிஃப்ட் ஐட்டமாக பில்லில் உள்ள தொகைக்குத்தகுந்தபடி, பலவிதமான ஜிப் பைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், ஹேண்ட் பேக், சூட்கேஸ் முதலியன தரப்பட்டு வந்தன.

90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய ஒருவர், தனக்கு சூட்கேஸ் வேண்டும் என்று மன்றாடிக்கொண்டிருந்தார். 

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைகள் வாங்கினால் தான் சூட்கேஸ் தருவோம் என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். 

300 ரூபாய் மதிப்புள்ள அந்த சூட்கேஸை எப்படியும் கிஃப்ட் பொருளாகப் பெற்றுவிடத்துடித்த அந்த ஆசாமி, ஏற்கனவே 90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய பின்னும், மேலும் 10000 ரூபாய்க்கு நகைகள் வாங்க ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என தன்னிடமிருந்த எல்லாவற்றையும் குடைந்து ஏதேதோ கணக்குப்போட்டுக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவே எனக்கு பரிதாபமாக இருந்தது. 

கிஃப்ட் பொருட்களை இது வேண்டும் அது வேண்டும் என்று மாற்றி மாற்றி கேட்பவர்களால் மேலும் தாமதம் ஆகிக்கொண்டிருந்தது அந்தப்பகுதியின் வேலைகள். 

ஒருவழியாக பெரியவர், வயசானவர் என்ற தகுதியினால் ஒரு சிலர் இரக்கப்பட்டு,  எனக்கு முன்னுரிமை அளித்து,என் மூக்குத்தியை நான் பெற்றுக்கொள்ள என்னை முன்னே அனுப்பினர். 

எனக்கான நகைப்பெட்டியை, ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையில் போட்டு, அதனுடன் ஜிப் வைத்த ஒரு சிறிய மணிபர்ஸ் போல ஏதோவொன்று போட்டு, பில், கியாரண்டி கார்டு, வேறு ஏதோ மாதாந்தர நகை சேமிப்புத்திட்டம் பற்றிய வழவழப்பான விளம்பரத்தாள் முதலியன போடப்பட்டு, என் பெயரைச்சொல்லி அழைத்து, ஒரு வழியாக என்னிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். 

அதில் போடப்பட்டுள்ள அடசல் பேப்பர்களுடன் முக்கியமான அந்த சிறிய நகைப்பெட்டி உள்ளதா, அதற்குள் முக்கியமாக அந்த மூக்குத்தியும் உள்ளதா என ஒருமுறை சரிபார்த்துவிட்டு, அனைத்தையும் என் மஞ்சள் பைக்குள் திணித்துக்கொண்டு பத்திரமாகக் கடையைவிட்டு வெளியே வந்தேன். 

வயிறு பசிப்பதுபோல இருந்தது. காலையில் நீராகாரம் மட்டும் குடித்துவிட்டு கிராமத்திலிருந்து, வீட்டைவிட்டுப்புறப்பட்டது.  

மதியம் இப்போது பன்னிரெண்டரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. எதிர்புறம் இருந்த ஓட்டலுக்குப்போய் ஒரு ஓரமாக அமர்ந்து, வயிற்றுக்கு சாப்பிட ஏதோ ஆர்டர் கொடுத்தேன். நல்லவேளையாக ஓட்டலில் இப்போது கும்பல் அதிகமில்லை.


தொடரும்



அன்புள்ள நண்பர்களே !

ஓர் வேண்டுகோள்

நேற்று 28/5/11 சனிக்கிழமை மதியம் முதல் என்னுடைய Comment Box Open ஆகாமல் உள்ளது; அதனால் பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை என்று பலரும் ஈ.மெயில் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

என்னாலும் பின்னூட்டம் கொடுத்துள்ளவர்களுக்கு பதில் கொடுக்கவோ, நன்றி தெரிவிக்கவோ முடியாத நிலை தான் உள்ளது.

இந்தப்பிரச்சனைக்கு தீர்வு ஏதும் உண்டா? இது விஷயமாக நான் மேலும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு ஆலோசனை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என் e-mail ID   :     valambal@gmail.com 

அன்புடன் தங்கள்,
வை.கோபாலகிருஷ்ணன்

42 கருத்துகள்:

  1. எனக்கும்தான் கமெண்ட் பாக்ஸ் ஒப்பன் ஆகவில்லை. ஆனால் இன்று காலை சரியாகிவிட்டது. தங்கள் கதையை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. 300 ரூபாய் மதிப்புள்ள அந்த சூட்கேஸை எப்படியும் கிஃப்ட் பொருளாகப் பெற்றுவிடத்துடித்த ஆசாமி,//

    பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. “மெதுவாகப்பார்த்து வாங்கி ஜாக்கிரதையாக வீட்டுக்கு எடுத்துட்டுப்போங்க, எங்கு பார்த்தாலும் கும்பலாகவும், திருட்டு பயமாகவும் உள்ளது” என்று கூறி விடை பெற்றுச்சென்றான்.//
    Touching words. Thanks for that boy.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கமெண்ட் பாக்ஸ் ஓக்கே.கடையிலிருந்து பத்திரமாக மூக்குத்தி ஓட்டல் வரை வந்தாயிற்று. அப்புறம்..?

    பதிலளிநீக்கு
  5. நேற்றைக்கு கமெண்ட்ஸ் போட பலமுறை சுற்றி வந்தேன் மூக்குத்தி கிடைக்கவே இல்லை ஹி ஹி...

    பதிலளிநீக்கு
  6. புளியங்கொட்டை சட்டை போட்ட பையன் சொன்னது சரிதான்....

    பதிலளிநீக்கு
  7. மூக்குத்தியை பத்திரமா வீடு கொண்டு சேத்துருங்க...

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா29 மே, 2011 அன்று PM 3:15

    ////90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய பின்னும், மேலும் 10000 ரூபாய்க்கு நகைகள் வாங்க ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என தன்னிடமிருந்த எல்லாவற்றையும் குடைந்து ஏதேதோ கணக்குப்போட்டுக்கொண்டிருந்தார்.// ரொம்பவே புத்திசாலியாய் இருப்பார் போல ;-)

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா29 மே, 2011 அன்று PM 3:16

    நகைக்கடை ,புடவை கடை என்பவற்றுக்கு போய் வர்ற அனுபவமே தனி தான் ஐயா

    பதிலளிநீக்கு
  10. கமெண்ட் பாக்ஸ் தேடினபோது கிடைக்கலை; இப்போ போட இருந்த கமெண்ட் கிடைக்கலை!!

    மூக்குத்தி பத்திரமா போய்ச் சேருமான்னு வெய்ட்டிங்! வோட்டட் ஆல்சோ!

    பதிலளிநீக்கு
  11. மூக்குத்தி மூக்கை அடையும் நேரம் வரை த்ரில்தான்..

    பதிலளிநீக்கு
  12. கமெண்ட் பாக்ஸ் காணாமல் போன மாதிரி மூக்குத்தி காணாமல் போகாதிருக்கட்டும்!!

    பதிலளிநீக்கு
  13. //மூக்குத்தி மூக்கை அடையும் நேரம் வரை த்ரில்தான்..//

    எனக்கும் அதே தான் தோன்றுகிறது.. ஹோட்டலில் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு வீடு செல்ல வேண்டும். ம்…அடுத்த பகுதியில் தெரிந்து கொள்கிறேன்….

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப சஸ்பென்ஸாக கொண்டு செல்கிறீர்கள்..அருமை..

    பதிலளிநீக்கு
  15. கதையின் போக்கு எங்கு செல்கிறது? சோகத்திலா..சந்தோசத்திலா?... சூப்பர் சார்.
    http://zenguna.blogspot.com

    பதிலளிநீக்கு
  16. கண்ணெதிரே நடப்பவற்றை கதையாக தெளிவாகவும் அழகாகவும் எழுதியிருக்கும் பாங்கு மனதைத் தொடுகிறது! ஹோட்டலில் சாப்பிடும்போது தான் மூக்குத்தியைத் தொலைக்கப் போகிறீர்களா? அல்லது ஏற்கனவே மூக்குத்தியைத் தொலைத்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  17. பொறுமையாய் முன்கதையையும் படித்து விட்டு பிறகு வருகிறேன் சார்

    பதிலளிநீக்கு
  18. இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பல கருத்துக்களை அழகாகக் கூறி, என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பான உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இன்ட்லியிலும், தமிழ்மணத்திலும் ஆதரவாக வாக்குகள் அளித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

    இதன் அடுத்த பகுதி நாளை திங்கட்கிழமை 30.05.2011 அன்று வெளியிடப்படும்.

    தொடர்ந்து வாருங்கள்!
    ஆ த ர வு தாருங்கள்!!

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  19. உங்கள் கமென்ட் பாக்ஸ் இப்போது வேல் செய்கிறது. இது அநேகமாக சர்வர் பிராப்ளமாக இருக்கும் இரண்டொரு நாளில் சரியாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  20. // DrPKandaswamyPhD said...
    உங்கள் கமென்ட் பாக்ஸ் இப்போது வேல் செய்கிறது. இது அநேகமாக சர்வர் பிராப்ளமாக இருக்கும் இரண்டொரு நாளில் சரியாகிவிடும்.//

    யெஸ் சார்.

    நண்பர் திரு எல்.கே. அவர்கள், Dash Board -- settings -- comments -- select full page option -- save செய்யச்சொல்லி சொன்னார்கள். அதன்படி செய்தேன். அப்போதே சரியாகி விட்டது.

    தங்களுக்கும் மிக்க நன்றி, சார்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  21. 300 ரூபாய் மதிப்புள்ள அந்த சூட்கேஸை எப்படியும் கிஃப்ட் பொருளாகப் பெற்றுவிடத்துடித்த அந்த ஆசாமி, ஏற்கனவே 90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய பின்னும், மேலும் 10000 ரூபாய்க்கு நகைகள் வாங்க ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என தன்னிடமிருந்த எல்லாவற்றையும் குடைந்து ஏதேதோ கணக்குப்போட்டுக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவே எனக்கு பரிதாபமாக இருந்தது.

    இது மாதிரியான பேர் வழிகள் நிறைய உண்டு, ஆயினும் நீங்கள் உங்களின் சக மனிதர்களை எத்தனை தூரம் கூர்மையாய் நோக்குகிறீர்கள் எனபது நிருபணமாகிறது
    நல்ல தொடர்
    தொடர வேண்டிய தொடர்
    நன்றி ஐயா
    நாட்களின் அளவை குறைத்ததற்கு

    பதிலளிநீக்கு
  22. A.R.ராஜகோபாலன் said...
    //300 ரூபாய் மதிப்புள்ள அந்த சூட்கேஸை எப்படியும் கிஃப்ட் பொருளாகப் பெற்றுவிடத்துடித்த அந்த ஆசாமி, ஏற்கனவே 90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய பின்னும், மேலும் 10000 ரூபாய்க்கு நகைகள் வாங்க ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என தன்னிடமிருந்த எல்லாவற்றையும் குடைந்து ஏதேதோ கணக்குப்போட்டுக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவே எனக்கு பரிதாபமாக இருந்தது.

    இது மாதிரியான பேர் வழிகள் நிறைய உண்டு, ஆயினும் நீங்கள் உங்களின் சக மனிதர்களை எத்தனை தூரம் கூர்மையாய் நோக்குகிறீர்கள் எனபது நிருபணமாகிறது.

    நல்ல தொடர்
    தொடர வேண்டிய தொடர்
    நன்றி ஐயா
    நாட்களின் அளவை குறைத்ததற்கு//

    தங்களின் பின்னூட்டத்திலும், தங்களின் ஆழ்ந்த வாசித்தலும் கூர்மையான அறிவுமிக்க கருத்துக்களும், பளிச்சிடுகின்றன.

    நன்றி, நன்றி, நன்றி.

    பதிலளிநீக்கு
  23. மூக்குத்தி கையில் கிடைத்துவிட்டது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, அது உங்கள் கையில் கிடைத்து விட்டதா?

      உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் தான்.

      உடனே அதை மூக்கில் அணிந்து கொள்ளுங்கள்.

      பிறர் உங்களையும், அந்தப்புது மூக்குத்தியையும் பார்த்து, அவரவர் மூக்கில் விரலை வைத்து ஆச்சர்யப்படட்டும். ;)))))

      அன்புடன்
      vgk

      நீக்கு
  24. //300 ரூபாய் மதிப்புள்ள அந்த சூட்கேஸை எப்படியும் கிஃப்ட் பொருளாகப் பெற்றுவிடத்துடித்த அந்த ஆசாமி, ஏற்கனவே 90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய பின்னும், மேலும் 10000 ரூபாய்க்கு நகைகள் வாங்க ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என தன்னிடமிருந்த எல்லாவற்றையும் குடைந்து ஏதேதோ கணக்குப்போட்டுக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவே எனக்கு பரிதாபமாக இருந்தது //
    சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை இழுப்பது போல் அந்த ஆளை பிடிக்கிறார்கள். நம்ம கதாநாயகனுக்கு இந்த மாதிரி தொந்தரவு இல்லாமல் படைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகையும், கதையினை நன்கு ஆழமாக ஊன்றி வாசித்து, அழகாக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளதும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      //சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை இழுப்பது போல் அந்த ஆளை பிடிக்கிறார்கள். நம்ம கதாநாயகனுக்கு இந்த மாதிரி தொந்தரவு இல்லாமல் படைத்து விட்டீர்கள்.// ;)))))

      அன்புடன்
      vgk

      நீக்கு
  25. 300 ரூபாய் கிஃப்ட் சூட்கேசுக்காக 10000 ரூபா செலவழிப்போரை என்ன எனச் சொல்வது?:).. அந்த புளியங்கொட்டைக்கலர் சேர்ட் காரரை நினைக்கத்தான் வயிற்ரைக்கலக்குதெனக்கு:).. பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  26. athira October 22, 2012 1:36 PM
    300 ரூபாய் கிஃப்ட் சூட்கேசுக்காக 10000 ரூபா செலவழிப்போரை என்ன எனச் சொல்வது?:).. அந்த புளியங்கொட்டைக்கலர் சேர்ட் காரரை நினைக்கத்தான் வயிற்ரைக்கலக்குதெனக்கு:).. பார்ப்போம்...//

    அதிராவின் அன்பான வருகைக்கும், ஊன்றிப்படித்து கூறும் அழகான கருத்துக்களுக்கும், அடியேனின் மனமார்ந்த அன்பு நன்றிகள்.

    *ஊசிக்குறிப்பு*

    {இருப்பினும் பின்னூட்டம் இடுவதில் ஏதோ ஒரு அவசரம் தெரிகிறது. வழக்கப்படி ஜாலியான வரிகள் ஏதும் இல்லை.

    உடம்பு ஏதோ சரியாக இல்லை என்றும் ஆளுக்கு ஒரு பழம் கொண்டாந்து தாங்க என்றும், அதற்காக தங்கள் வீட்டு குளிர் சாதனப்பெட்டிகளை சுத்தமாக துடைத்து ரெடியாக வைத்திருப்பதாகவும் நேற்றைய [21.10.2012] தங்களின் பதிவினில் பார்த்தேன், படித்தேன், ரஸித்தேன், சிரித்தேன்.}

    பிரியமுள்ள
    கோபு அண்ணா


    [*ஊசிக்குறிப்பு* = பின் குறிப்பு >>>>
    இந்த விளக்கம் மற்றவர்களுக்காக் மட்டும்.
    அதிராவுக்கு அல்ல]

    பதிலளிநீக்கு
  27. Getting small gifts for the jewel purchase or clothes purchase is a very big thing back home. We are all very silly, we all want to grab it because some thing is offered free to us. When we can buy some thing expensive for Rs.10000 we can surely afford to buy 300 rs suitcase by ourselves, but it is human tendency not to give up on those small gifts... intresting...

    பதிலளிநீக்கு
  28. Priya Anandakumar August 22, 2013 at 8:19 AM

    வாங்கோ வணக்கம்.

    //Getting small gifts for the jewel purchase or clothes purchase is a very big thing back home. We are all very silly, we all want to grab it because some thing is offered free to us. When we can buy some thing expensive for Rs.10000 we can surely afford to buy 300 rs suitcase by ourselves, but it is human tendency not to give up on those small gifts... intresting...//

    கதையை ஆழ்ந்து படித்து விட்டு, கருத்துக்களை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    இந்தக்கதையில் 90000 ரூபாய்க்கு நகை வாங்கிய ஒருவன் மேலும் 10000 க்கு நகைகள் வாங்கினால் தான் [அதாவது ஒரு லக்ஷம் ரூபாய்க்கு நகைகள் வாங்கினால் தான்] தனக்கு சூட் கேஸ் ஃப்ரீயாகக் கிடைக்கும், என்ற அல்ப ஆசையில், அந்த 10000 பணத்தைப் புரட்டத்தான் மிகவும் தடுமாறுகிறான் என்பது தான் வேடிக்கை.

    தாங்கள் சொல்வது போல இது மனிதனுக்கு இலவசப்பொருட்கள் மேல் மிகவும் சகஜமாக ஏற்படும் விசித்திரமானதோர் ஆசைதான்.

    தங்களின் அன்பு வருகை +அருமையான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  29. வாங்கும் நகையை விட, கூட இலவசமாகத் தரும் பொருள்தான் பலருக்கு முக்கியமாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  30. கமெண்ட் போட்டிருக்கறவா எல்லாரையுமே அடுத்து என்ன நடகுக போகுதுன்னு எதிர் பார்க்க வச்சுட்டீங்களே.

    பதிலளிநீக்கு
  31. //300 ரூபாய் மதிப்புள்ள அந்த சூட்கேஸை எப்படியும் கிஃப்ட் பொருளாகப் பெற்றுவிடத்துடித்த ஆசாமி,//

    அல்பம்.

    இந்த இலவசம் எல்லாம் நம்ப ஊர்ல மட்டும் தானா, இல்ல வெளி நாடுகளிலும் உண்டா? தெரிஞ்சுக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசை. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 2, 2015 at 10:49 PM

      **300 ரூபாய் மதிப்புள்ள அந்த சூட்கேஸை எப்படியும் கிஃப்ட் பொருளாகப் பெற்றுவிடத்துடித்த ஆசாமி,**

      // அல்பம். // :)

      //இந்த இலவசம் எல்லாம் நம்ப ஊர்ல மட்டும் தானா, இல்ல வெளி நாடுகளிலும் உண்டா? தெரிஞ்சுக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசை. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.//

      துபாயில் சில ஷாப்பிங் மால்களில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என எப்போதாவது ஆஃபர் கொடுக்கிறார்கள். நான் 2004 இல் ஒரு ஜெண்ட்ஸ் வாட்ச் வாங்கினபோது, அதனுடன் ஜோடியாக ஒரு லேடீஸ் வாட்ச் எனக்கு இலவசமாகத் தந்தார்கள். ஒன்றுக்கு மட்டுமே பணம் வாங்கிக்கொண்டார்கள். மற்ற நாடுகளில் எப்படியோ, எனக்குத் தெரியவில்லை.

      நீக்கு
  32. ஆமாதா இலவச பொருளுக்கு காக்காவா பற்க்குராங்கதா. ஹோட்டலுல் சாப்புடெயிலெ பைய பத்திரமா மடியிலே வச்சுகிடனும் என்ன வெள்ங்கிச்சா

    பதிலளிநீக்கு
  33. முந்தய பதிவுக்கு நான் போட்ட பின்னூட்டம் போகலனு காடுறது. ஸோ.. அதை யே இங்க போடறேன். இந்த இலவசம் பத்தி படிக்கும்போது என் தண்பர் சொன்ன ஒரு விஷயம் நினைவில் வந்தது. நண்பர், அவர் மனைவி, அவர்களின் இரு மகள்கள் ஒரு திருமணத்திற்கு சென்றார்கள். திருமணம் திருப்பதியில் இருந்தது. மண்டபத்தில் இவர்களைப் பார்த்தவர்கள் எல்லாரும் சிரித்துக்கொண்டே ஏன்யா கல்யாண வீட்டுக்கு இப்படியா மொழு மொழுன்னு மொட்டையோட வருவீங்கன்னு கேட்டிருக்கா. இவரோ கூலாக என்ன செய்ய நேத்து அந்த ஏழுமலையானை தரிசிக்க போனோம் கோவில் வாசலில் ஒரு போர்டு வச்சிருந்தாங்க. ஒரு மொட்டை போட்டா மூணு மொட்டை இலவசம் என்று. ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தின புண்ணியம் . அதுவும் மூணு மொட்டை இலவசமாக. என்றார். இலவசமா எது கிடைத்தாலும் யோசிக்கவே தோணாது போல.

    பதிலளிநீக்கு
  34. கிராமத்துலேருந்து கார்ப்பரேட் நகைக்கடை வரை...காட்சிகள் கச்சிதம்...எதயோ அல்லது யாரயோ எதிர்பார்க்க வக்குதே...

    பதிலளிநீக்கு
  35. //300 ரூபாய் மதிப்புள்ள அந்த சூட்கேஸை எப்படியும் கிஃப்ட் பொருளாகப் பெற்றுவிடத்துடித்த அந்த ஆசாமி, ஏற்கனவே 90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய பின்னும், மேலும் 10000 ரூபாய்க்கு நகைகள் வாங்க ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என தன்னிடமிருந்த எல்லாவற்றையும் குடைந்து ஏதேதோ கணக்குப்போட்டுக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவே எனக்கு பரிதாபமாக இருந்தது. //
    சின்னமீனைப் போட்டு பெரிய மீன் என்பது இதுதானோ?

    பதிலளிநீக்கு
  36. நிறய பணம் செலவு செய்து நகை வாங்கறவா கூட ஏன் இப்படி கிஃப்ட் ஐட்டமுக்கு பறக்கறாங்களோ. எங்க பக்கத்துல ஒரு சொலவட சொல்வாங்க.. சும்மா கிடைச்சா கழுத விஷ்டையகூட கைநிறய வாங்கிடுவாங்கனு அதான் நெனப்புல வந்திச்சி. புளியங்கொட்டை அந்த பெரியவரையே குறிவச்சு இலவச ஆலோசனைலாம் சொல்றத பாத்தா டவுட்டாதான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  37. வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    :) தாங்கள் கூறியுள்ள சொலவடை மிகப்பொருத்தம் தான். நானும் கேள்விப்பட்டுள்ளேன். :)

    பதிலளிநீக்கு