என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

சிந்தனைக்கு சில துளிகள்

அன்புடையீர்,

உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை எழுதாமல் தனியாக ஈ.மெயில் மூலம், வரும் 23.07.2011 சனிக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

மெயில் மூலம் பதில் அளித்துள்ள தகவல் மட்டும், அனுப்பிய தேதியுடன் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

E Mail Address:   valambal@gmail.com

சரியான விடைகளும்,  ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான விடையளித்தவர்கள் பெயர்களும்,  24.07.2011 ஞாயிறு அன்று வெளியிடுகிறேன்.

அன்புடன்
vgk


=====================================================================
1)

திருமணம் ஆன பெண் ஒருவள் கையில் ஏதோவொரு குழந்தையை வைத்துக்கொண்டு நிற்கிறாள்.

அவ்வழியே சென்ற வழிப்போக்கன் ஒருவன் அவளிடம் ”இந்தக்குழந்தை யார்?” என்று கேட்கிறான்.

அவனுக்கு நேரிடையாக பதில் சொல்ல விரும்பாத அவள் கீழ்க்கண்டவாறு பதில் அளிக்கிறாள்:

”இந்தக் குழந்தையின் தந்தை யாருக்கு மாமனாரோ அவரின் தந்தை எனக்கு மாமனார். ”

 அப்படியென்றால் அந்தப்பெண்ணுக்கு அந்த குழந்தை என்ன உறவு?

======================================================
2)

நாலோடு ஐந்தை சேர்த்தால் பத்து வரும். அது எப்படி?

======================================================
3)

வாங்கி வந்த ஒரு துண்டும் ஒரு கைக்குட்டையும் சேர்த்து ரூ. 110.
துண்டின் விலை கைக்குட்டையின் விலையைவிட ரூ. 100 அதிகம்.

துண்டின் விலை என்ன?
கைக்குட்டையின் விலை என்ன?

=======================================================

4)

”இட்டது பட்டானால் வாட்டென்ன?”
ஏதாவது புரிந்தால் கூறவும்.

==========================================================

5)

காலேஅரைக்கால் ரூபாய்க்கு நாலே அரைக்கால்
வாழைக்காய் என்றால் ஒரு முழு ரூபாய்க்கு
எத்தனை வாழைக்காய்கள் கிடைக்கும்?

[பின்னத்தில்
காலே அரைக்கால் = 3/8
நாலே அரைக்கால் = 4 and 1/8]

===========================================================

6)

100 பறவைகள் மரத்தில் இருந்தன.
வேடன் ஒருவன் ஒரே ஒரு பறவையை மட்டும்
துப்பாக்கியால் குறிவைத்து சுட்டு விட்டான்.

மீதி எவ்வளவு பறவைகள் அந்த மரத்தில் இருக்கும்?

=====================================================================

7)

சுத்தப்படுத்தப்பட்ட ஒரு தண்ணீர் தொட்டி காலியாக வரண்டு உள்ளது.

அதை நிரப்பும் குழாயை [A குழாய்] மட்டும் திறந்து விட்டால்
மிகச்சரியாக 6 மணி நேரத்தில் தொட்டி நிரம்பி விடும்.

அதன் பிறகும் குழாயை மூடாவிட்டால் தொட்டி நீர் வழிய ஆரம்பித்துவிடும்.

அதுபோல முழுவதும் நிரம்பியுள்ள தொட்டியை காலி செய்ய ஒரு குழாய் தனியாக உள்ளது [B குழாய்]. அது முழுவதும் நிரம்பிய அந்தத் தொட்டியைக்காலிசெய்ய 12 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும்.

ஒரு நாள் காலையில் சுத்தமாகக் காலியாக வரண்டு கிடந்த அந்தத் தொட்டியுடன் A மற்றும் B இரு குழாய்களும் ஒரே நேரத்தில் காலை மிகச்சரியாக ஏழேகால் மணிக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டன
என்றால், முழுத்தொட்டியும் எத்தனை மணிக்கு நிரம்பக்கூடும்?

====================================================================

8)

ஒரு சிறிய விழாவிற்குகு வந்திருந்த ஆண்களும், பெண்களும்,
குழந்தைகளும் சேர்த்து மொத்தம் நூறு நபர்கள்.

தயாரித்திருந்திருந்த இட்லிகளோ மொத்தம் நூறு மட்டுமே.

சமையல்காரரின் சமயோசித புத்தியாலும், அனைவருக்குமே இட்லி பரிமாறப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தாலும், ஒரு சிறிய ஐடியா செய்யப்பட்டது.

அதன்படி குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தலா அரை இட்லி வீதமும், பெண்களுக்கு தலா இரண்டு இட்லி வீதமும், ஆண்களுக்கு தலா மூன்று இட்லிகள் வீதமும் பரிமாறப்பட்டன.

விழாவுக்கு வந்திருந்த அனைவரும் [100 பேர்களும்] இட்லி சாப்பிட்டனர். தயாரித்திருந்த அனைத்து இட்லிகளும் [100 இட்லிகளும்] காலியாகி விட்டன.

அப்படியென்றால் விழாவுக்கு வந்திருந்த

ஆண்கள் எவ்வளவு பேர்?
பெண்கள் எவ்வளவு பேர்?
குழந்தைகள் எவ்வளவு பேர்?

======================================================================

9)

என் குழந்தைக்கு ஆங்கிலத்தில் 10  வார்த்தைகள் டிக்டேஷன்
கொடுத்தேன். 9 வார்த்தைகள் தவறேதும் இல்லாமல்
மிகச்சரியாகவே எழுதியிருந்தான்.

நடுவில் ஒரு வார்தைக்கு பதில் G T T T T என்று எழுதியிருந்தான்.
எனக்கு புரியாமல் அவனையே கூப்பிட்டு இது என்ன வார்த்தை
என்று கேட்டேன். அவன் கூறிய வார்த்தையைக்கேட்டதும்
எனக்கே சிரிப்பு வந்தது. நான் டிக்டேட் செய்த வார்த்தைக்கும்
அவன் எழுதியதற்கும் ஏதோ சம்பந்தம் உள்ளதாகவே தோன்றியது.

நான் டிக்டேட் செய்த அந்த வார்த்தை என்னவாக இருக்கும்?

================================================================

10)

ஒரு வரை படத்தின் தலை பகுதியில் வடக்கு பக்கம் என்று காட்ட " N " 
(N for North) என்று எழுதப்பட்டிருந்தது.

வரை படத்தின் நடுபாகத்தில், இடதுபுற ஓரமாக (Margin ஐ ஒட்டி) ஒரு MANGO வரைந்து காட்டப்பட்டிருந்தது.

வேறு எந்த குறிப்புகளும் இல்லை.

அந்த வரைபடம் எதை குறிக்கிறது?

=================================================================


அன்புடன்,
வை. கோபாலகிருஷ்ணன்
17.07.2011

37 கருத்துகள்:

 1. அறிவுக்கு தீனியா? பதில் தெரிஞ்சா மெயில் பண்றேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 2. சிந்தனைக்கு சில துளிகள்"//

  சிந்தனைக்கு விருந்து.

  பதிலளிநீக்கு
 3. முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் சார், பதில் தயாரானதும் அனுப்பிவிடுகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. பத்திரிகைகளில் வரும் இந்தமாதிரி கேள்விகளுக்கு பதில் பக்கத்தையும் அடுத்தடுத்து பார்க்கும் பழக்கம் உள்ளவன் நான்.! ஹி, ஹி, ஹி.

  பதிலளிநீக்கு
 5. 4 it அது but ஆனால் what என்ன

  6 அடி பட்ட பறவை மட்டும் இருக்கும்!

  9 originality

  மீதியை மத்தவங்க சொல்லட்டும்னு பெருந்தன்மையா விட்டுட்டேன்.

  பதிலளிநீக்கு
 6. யோசிக்க நேரமில்லாததால் இந்த விளையாட்டுக்கு நான் இப்போது வரவில்லை வைகோ சார்.

  பதிலளிநீக்கு
 7. ம்ம்ம்ம்.... கேள்விகள் எல்லாம் பலமா இருக்கு சார்.... யோசிச்சு பதில் அனுப்பறேன்... :)

  பதிலளிநீக்கு
 8. I had asked one or two questions in my blog too!!

  Will try to reply by email if time permits!

  பதிலளிநீக்கு
 9. நான் என்னை பெரிய அறிவாளின்னு நினச்சிருந்த்னே அவ்வ்வ்வ்வ் என்னை கவுத்துட்டீன்களே அய்யா ஹே ஹே ஹே ஹே.....!!!

  பதிலளிநீக்கு
 10. அடடா...இப்பத் தான் மூளையை ‘ஓவராலிங்’ கொடுத்திருக்கேன்..வர்ரத்துக்கு ஒரு ஆறு மாசம் ஆகும்...பரவாயில்லையா?

  பதிலளிநீக்கு
 11. எல்லா கேள்வியையும் சாய்ஸில் விட்டு விட வேண்டியதுதான்! அல்லது அடுத்த ஞாயிறு சொல்கிறேனே...!

  பதிலளிநீக்கு
 12. பதில்கள் அனுப்பியுள்ளேன். நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் எனக்குக் கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 13. யொசித்து பதில் அனுப்புறேன் ஐயா

  பதிலளிநீக்கு
 14. சார், அறிவுக்கு வேலை கொடுக்கிற சமாச்சாரம்; அதுனாலே நானு எஸ்கேப்பு! அப்பாலிக்கா, இத்தினி நாளா இங்கே வராம ’வழுவட்டை’யா இருந்ததுக்காக ஒரு 108 தோப்புக்கரணம் போட்டுக்கிறேன். 1, 2, 3, 4.......108! ஓ.கேவா? :-)

  பதிலளிநீக்கு
 15. கிருவானந்தவாரியார் சுவாமிகள் கூட்டத்திற்கு
  நான் அடிக்கடி போவேன்
  உபன்யாசத்தின் இடையில் தாக சாந்தி செய்து கொள்ளும் போது
  பகதர்களை கவனம் சிதறாது இருப்பதற்க்காக ஒரு சிறு
  விடுகதை சொல்லி கூட்டத்தை கட்டி போட்டு விடுவார்
  ஒரு சமயம் இப்படியோரு விடு கதை சொன்னார்
  " ஆட்டுக்கல் கடலில் மிதந்ததுநான் கண்ணால் பார்த்தேன்
  வாரியார் பொய் சொல்வேனா உண்மையாய் மிதந்தது "
  எனச் சொல்லி தாக சாந்தி செய்து கொள்ள ஆரம்பித்தார்
  எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பம் அது எப்படி மிதக்கும் என ஒருவரை
  ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்தோம்
  பின் அவர் தணிந்த குரலில்
  "அந்த ஆட்டுக்கல் அடியில் ஒரு படகு இருந்தது "
  எனச் சொல்லிப் பின் உபன்யாசத்தைத் தொடர்ந்தார்
  அதைப்போல உங்களுக்கு 23 ம் தேதிவரை
  முக்கியமான வேலை உள்ளதால் பதிவர்கள் தொந்தரவு வேண்டாம் என
  மிக அழகாக விடுகதை கொடுத்து விட்டீர்கள்
  23 வரை உங்கள் நினைவாகவே இருக்கவும் செய்துவிட்டீர்கள்
  நல்ல சுவாரஸ்யமான பதிவு

  பதிலளிநீக்கு
 16. வாரியார் சொன்னது படுசுவை Ramani!

  பதிலளிநீக்கு
 17. பதில் போட்டேன் சார்
  சரியான்னு கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க....

  பதிலளிநீக்கு
 18. 70 மார்க் கைவசம் இருக்கு - இன்னும் 2 நாள் - 30 மார்க்குக்கு வழி பண்ணனும் - பண்ணிடறேன்

  பதிலளிநீக்கு
 19. நேற்று 20.07.2011 புதன்கிழமை வரை, ஈ.மெயில் மூலம் பதில்கள் அனுப்பியுள்ளவர்கள் மொத்தம் 5 பேர்கள்:
  1) ஸ்ரீராம்
  2) கே.ஜி.கெளதமன்
  3) சாகம்பரி
  4) ரமாரவி
  5) Ramesh [ramesh @ global telelinks . com ]

  Just for the information of all concerned.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 20. என் வழக்கத்திற்கு மாறான, இந்தப் புதுமாதிரியான பதிவுக்கு, அன்புடன் வருகை புரிந்து, பல்வேறு கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியவர்களுக்கும், ஆர்வத்துடன் கேள்வி-பதில் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 21. இண்ட்லியில் எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. ஒரே ஒரு கணக்கு மட்டும் நான் முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன். காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் கத்தரிக்காய் என்றால் காசுக்கு எவ்வளவு கத்தரிக்காய். விடை 11.

  பதிலளிநீக்கு
 23. நான் ஒரு முழு சோம்பேறி. இந்த விளைட்டுக்கெல்லாம் வரல. மீ எஸ்கேப்பூஊஊஊ

  பதிலளிநீக்கு
 24. அடடா! இந்தப் பதிவெல்லாம் நீங்க போடும் போது எனக்கு வலைத்தளம்ன்னா என்னன்னே தெரியாதே?

  அது சரி, மறுபடியும் இந்த மாதிரி எங்க சிந்தனையை தூண்டி விட மாட்டேளா?

  பதிலளிநீக்கு
 25. நா வலைப்பதிவுக்கு புது முகமுஙகோ. யோசிக்க நேரம் எடுத்துகிடவா

  பதிலளிநீக்கு
 26. வாரியார் சுவாமிகள் உபன்யாசங்கள் எப்பவுமே ரசிக்கவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதாகத்தான் இருக்கும். சிந்தனை செய்மனமே. .

  பதிலளிநீக்கு
 27. சில கேள்விகள் பதில் தெரிந்தவை...மற்றவை-பொறுமையாக முயற்சிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 28. இந்த பதிவு படிச்சு தாண்டி போயிட்டேன். ஏற்கனவே நிறையபேரு பதில் சொல்லியிருப்பாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... January 1, 2017 at 5:58 PM

   //இந்த பதிவு படிச்சு தாண்டி போயிட்டேன். ஏற்கனவே நிறையபேரு பதில் சொல்லியிருப்பாங்க.//

   கரெக்ட். தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 29. 3 கேள்விக்கு விடை என்ன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Unknown August 27, 2019 at 1:58 PM
   3 கேள்விக்கு விடை என்ன //

   Please go through the following Link for answers:

   https://gopu1949.blogspot.com/2011/07/2_23.html

   நீக்கு