About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, July 2, 2011

மலரும் நினைவுகள் - பகுதி 2 [ அலுவலக நாட்கள் ]


மலரும் நினைவுகள்

அலுவலக நாட்கள்


24.02.2009 அன்று ACCOUNTS OFFICER (CASH), BHEL  என்ற பொறுப்பிலிருந்து 
பணி ஓய்வு பெற்ற போது எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள், 
மலரும் நினைவுகளாக:என் அலுவலக இருக்கையில் 24.02.2009 அன்று.

-o-o-o-o-o-


Send off Party arranged by Finance Department - BHEL - February 2009

-o-o-o-o-o-


BHEL எனக்கு வழங்கிய பரிசாகிய ஓர் நினைவுச்சின்னத்துடன்.

-o-o-o-o-o-


பணி ஓய்வுக்குப்பின் என்னை ஆறுதலாக வீட்டுக்கு 
அழைத்துச்செல்ல வந்திருந்த என் அருமைப்புதல்வர்கள்.
[ White shirt =  My Eldest Son     and     Blue shirt =  My Youngest Son ] 

[பின்புறம் நிற்பவர், என் சக ஊழியர் மட்டுமல்ல, 
என் அன்புக்குரிய பெரிய சம்பந்தியும் கூட]   

-o-o-o-o-o-நெருங்கிய நண்பர்கள் அளித்த பிரிவு உபசார விழாவில்.

-o-o-o-o-o-


பாராட்டிப்பேசிய பலரில், பெண்கள் அணி சார்பாக பேசுபவர். 

-o-o-o-o-o-SEND OFF GIVEN BY  Mr. T. ANANDAN,  GENERAL MANAGER / HRM,  BHEL, TIRUCHI   

-o-o-o-o-o-


GROUP PHOTO OF THE PERSONS RETIRING ON 24.02.2009 FROM BHEL, TIRUCHI

-o-o-o-o-o-Once for all coming out from my Office on 24.02.2009 evening 4.30 PM

-o-o-o-o-o-

பணிஓய்வு பெற்று வீட்டுக்கு வந்த என்னை ஆரத்தி சுற்றி வரவேற்கும் 
என் பெரிய அக்காவும், பெரிய சம்பந்தியம்மாளும்

-o-o-o-o-o-கைகொடுத்து வாழ்த்தும் சிவப்பு பைஜாமா என் பெரிய சம்பந்தியும் என்னுடன் சக ஊழியராகப்பணியாற்றிய அருமை நண்பருமான 
திரு. P.பாலசுப்ரமணியன் அவர்கள்

-o-o-o-o-o-


பணி ஓய்வு பெற்ற அன்று என் வீட்டின் அருகே உள்ள 
திருமண மண்டபம் ஒன்றில் நண்பர்களுக்கு விருந்தளித்தபோது 
வாழ்த்த வந்திருந்த நண்பர்களின் கண்களுக்கும் விருந்தளிக்க 
 என் படைப்புகள் வெளிவந்திருந்த 
ஒருசில புத்தகங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டன. 

o==============================================================================oசுபம்

49 comments:

 1. மனம் நிறைந்த மகிழ்ச்சிப் பக்ர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. இத்தனை வருட வாழ்க்கையில் உங்களுக்குத்தான் எத்தனை அனுபவங்கள்.அதனை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
  வாழ்க்கை பற்றிய உங்கள் பார்வையை உங்கள் அனுபவத்தோடு எங்களிடம் பகிர்ந்தால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
  உங்கள் கதையோடு , கட்டுரையும் எழுதுங்கள்

  ReplyDelete
 3. மலர்ந்து மணம் பரப்பும்
  அழகிய நாட்கள்-- சாதனைகளின் சிகரம்.

  ReplyDelete
 4. வாழ்க்கைப் படங்கள் அல்ல.அவை...
  வாழ்க்கைப் பாடங்கள்.

  ReplyDelete
 5. அடடா அருமையான மலரும் நினைவுகள் அய்யா...

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எங்களோடும் பகிர்ந்து கொண்டமைக்கு....

  ReplyDelete
 7. நல்லாய் இருக்கு புகைப்படங்கள் .அழகான குடும்பம் ..

  ReplyDelete
 8. பணி ஓய்வு பெறுவதை விழாவைக் கொண்டாடி வாழ்த்துக்களுடன் வருவது என்பது ரொம்பவும் கொடுப்பினையான விசயம் என்று என் தந்தை சொல்வார். அதுதான் நினைவிற்கு வருகிறது. பகிர்விற்கு நன்றி சார்.

  ReplyDelete
 9. மலரும் நினைவுகள்
  மீண்டும்
  புது மலராய்
  மலர்ந்தது
  அருமை ஐயா

  ReplyDelete
 10. அருமையான நினைவுகள்

  ReplyDelete
 11. உங்கள் மலரும் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

  ReplyDelete
 12. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..
  இனிய மணம் வீசும் மலர்கள்.

  ReplyDelete
 13. என்றும் நிறைந்திருக்கும் மலரும் நினைவுகள்.

  ReplyDelete
 14. நல்லதோர் மலரும் நினைவுகள். நிறைய வருடங்கள் இருந்த அலுவலகத்தில் இருந்து பணி ஓய்வு பெறும்போது கிடைக்கும் இந்த அனுபவம்…. காக்கப்பட வேண்டிய ஒரு தருணம்…. புகைப்படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 15. அன்பின் வை.கோ - பல ஆண்டுகள் பணியாற்றிய அலுவலகத்தில் இருந்து பணி நிறைவு செய்து - பிரிவுபசார விழாவில் கவுரவிக்கப்பட்டது - அத்தனைப் படங்களூம் அருமை. மலரும் நினைவுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து வாழ்த்தியருளிச் சிறப்பித்துள்ள அனைத்து தோழர்களுக்கும்/தோழிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   என்றும் அன்புடன் தங்கள்.
   vgk

   Delete
 16. அற்புதமான மலரும் நினைவுகள் ஐயா ..... மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு ஐயா உங்களுடைய புகைப்படங்கள் அனைத்தும் காக்கபடவேண்டியவை ஐயா .... இதை பகிர்ந்தமைக்கும் எனக்கு அனுப்பியதற்கும் மிக்க நன்றி..... இந்த சின்ன பிள்ளையின் வாழ்த்துக்கள் ஐயா ..... மலரும் நினைவுகள் அருமை அருமை.....

  ReplyDelete
 17. Thank you very much for your kind visit & valuable comments
  Mrs. VijiParthiban Madam. vgk

  ReplyDelete
 18. பணியில் இருந்து ஓய்வு பெறும்போது மனதில் சோகமும், பாரமும் இருப்பதெல்லாம் அந்தக்காலம்....

  ரிட்டையர் ஆனால் என்ன இன்னும் இளமையா இருக்கேன் பாருங்க என்று வலைப்பூவில் அசத்த ஆரம்பிச்சாச்சு.. வேலையில் இருக்கும்போது முழுமையா வலையில் பதிவுகள் இடமுடியாமல் இருந்த சிரமம் எல்லாம் போயே போச்...

  தோழமைகள், உடன் பணி புரிந்தோர்களை நினைத்தால் இப்பெல்லாம் மெயில், போன், எஸ் எம் எஸ் இப்படி இத்தனை வசதிகள் இருக்கும்போது கவலையின்றி தொடரலாம் நட்புகளை....

  அட எங்க அண்ணா முகத்தில் பாருங்க... முதல் படத்தில் தொடங்கி எல்லா படத்திலும் முகம் கொள்ளா குழந்தைச்சிரிப்பு தான்...

  வீட்டில் ஆரத்தி கரைத்து வரவேற்று விருந்து வைத்து சந்தோஷ வைபவமாக அசத்தி இருக்கீங்க அண்ணா....

  போட்டோக்கள் எல்லாமே நீங்கா நினைவுகளோடு மீண்டும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் அண்ணா....

  ReplyDelete
 19. அன்புச் சகோதரி மஞ்சு, வாங்கோ, வணக்கம்.

  ஒரு சின்ன சந்தேகம் .... அது என்ன .... உங்கள் லோகோவில் உள்ள படத்தினை அடிக்கடி மாற்றி விடுகிறீர்கள்!

  எப்படியோ ... மிக மிக இளமையாய்க் குழந்தையாய் [தங்களின் இன்றைய மனம் போலவே] ஆகிவிட்டீர்கள். சந்தோஷம். நாலு அல்லது ஐந்து வயதில் எடுக்கப்பட்ட தங்களின் புகைப்படமாக இருக்குமோ?

  அந்தப்படத்தில் உள்ள குழந்தை தலைநிறைய பூ வைத்துக்கொண்டு நல்ல அழகோ அழகாகத்தான் உள்ளது. பாராட்டுக்கள். ;)))))

  //வேலையில் இருக்கும்போது முழுமையா வலையில் பதிவுகள் இடமுடியாமல் இருந்த சிரமம் எல்லாம் போயே போச்...//

  நான் வேலையில் இருந்த வரை வலைப்பூ என்றால் என்னவென்றே அறியாமல் இருந்தவன் தான்.

  அதன் பிறகு சமீபத்தில் 2011 ஜனவரி முதல் 2011 டிஸம்பர் வரை வலைப்பூவைத் தவிர வேறு எதுவுமே அறியாமலும் இருந்தவன் தான்.

  இப்போது கொஞ்ச நாட்களாகத்தான் ஏதோ நான் எதிலும் பட்டும் படாமலும் இருந்து வருகிறேன்.

  2005 முதல் 2010 வரை, என் படைப்புகள் நிறைய, தமிழ் வார பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்தன. அதற்கு பின்னால் தான் அதாவது 2011 முதல் தான் நான் வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்தேன்.

  வலைப்பதிவில் நான் எழுத ஆரம்பித்ததே ஒரு மிகப்பெரிய கதை.

  சுருக்கமாகவும், நகைச்சுவையாகவும் என் 50 ஆவது பதிவில் அதைப்பற்றி எழுதியுள்ளேன்.

  தலைப்பு: ”ஐம்பதாவது பிரஸவம்”

  உப தலைப்புகள்:-
  [1] ”மை டியர் ப்ளாக்கி”
  [2] குட்டிக்குழந்தை “தாலி”

  இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html

  என் அன்புச் சகோதரி மஞ்சுவின் வருகைக்கும், மனம் திறந்த அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  பிரியமுள்ள
  VGK

  ReplyDelete
 20. அருமையான படங்கள்.பெரியக்காவின் முகம் தெரியவே இல்லையே:)

  ReplyDelete
  Replies
  1. ஸாதிகாOctober 2, 2012 7:30 PM
   அருமையான படங்கள்.பெரியக்காவின் முகம் தெரியவே இல்லையே:)//

   தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   என் பெரிய அக்காவின் படத்தினை [முழுவதும் முகம் தெரியும் போட்டோவை] தனியாக மின்னஞ்சல் இணைப்பாக அடுத்த ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கிறேன்.

   ஏற்கனவே அவர்களைப்பற்றிய ஏராளமான விபரங்கள் கேட்டிருந்திருந்தீர்கள். சொல்லியுள்ளேன். படம் மட்டும் தான் நான் அனுப்ப வேண்டும். அனுப்பி வைக்கிறேன்.

   அன்புடன்
   VGK

   Delete
 21. எல்லாமே அருமையா எழுதி படத்துடன் சொல்லியிருக்கிங்க. நல்ல பதிவு. ரிடையர்மெண்ட் என்றால் கொஞ்சம் சோகம். ஆனால் மீண்டும் தங்களை புதுபித்து இளம் புயல் போல் இருக்கிங்க. God Bless U.

  ReplyDelete
 22. Vijiskitchencreations November 2, 2012 7:37 AM
  //எல்லாமே அருமையா எழுதி படத்துடன் சொல்லியிருக்கிங்க. நல்ல பதிவு. ரிடையர்மெண்ட் என்றால் கொஞ்சம் சோகம். ஆனால் மீண்டும் தங்களை புதுபித்து இளம் புயல் போல் இருக்கிங்க. God Bless U.//

  தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.

  //ரிடையர்மெண்ட் என்றால் கொஞ்சம் சோகம்.//

  ஆம். ஆனால் நான் அதை சோகமாகவே நினைக்கவில்லை. எதிர்பார்ப்புடன் உற்சாகமாகவே ஏற்றுக்கொண்டேன்.

  என்னுடன் மிகுந்த பாசத்துடன் பழகிவந்த ஏராளமான நண்பர்களை இனி தினமும் அடிக்கடி நேரில் சந்திக்க முடியாதே என்ற சோகம் மட்டுமே இருந்தது எனக்கு.

  //ஆனால் மீண்டும் தங்களை புதுப்பித்து இளம் புயல் போல் இருக்கிங்க.//

  அதற்கு நம் வலைத்தளம் தான் மிகவும் உதவியாக இருந்தது. இருக்கிறது. இனியும் இருக்கும். ;)))))

  //God Bless U.//

  நன்றி, மிக்க நன்றி. கடவுள் அருள் தொடர்ந்து கிடைக்கட்டும்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 23. ஆபீஸில் பணி ஓய்வு பெற்ற படங்களும் மற்ற படங்களும் நன்றாக இருக்கிறது. நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம்னு ஒரு பாட்டு உண்டு இல்லியா அதற்குப்பொருத்தமாக உங்கள் குடும்பம் இருக்கிரது.

  ReplyDelete
 24. பூந்தளிர் January 15, 2013 at 5:47 AM
  ஆபீஸில் பணி ஓய்வு பெற்ற படங்களும் மற்ற படங்களும் நன்றாக இருக்கிறது. நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம்னு ஒரு பாட்டு உண்டு இல்லியா, அதற்குப் பொருத்தமாக உங்கள் குடும்பம் இருக்கிறது.//

  மிக்க நன்றி, Ms. பூந்தளிர் Madam.

  பிரியமுள்ள VGK

  ReplyDelete
 25. என்னைப் பொறுத்தவரை SUPERANNUATION RETIREMENT தான் ரொம்ப சிறந்தது. கடவுள் கொடுத்த வேலையை கடைசி வரை செய்து பணி முடித்து வருவது உண்மையில் ஒரு வரம்தான்.

  ஆரத்தி எடுக்கும் போட்டோவைப் பார்த்ததும், சமீபத்தில் என் சக தோழர் ஒருவர் VOLUNTARY RETIREMENT வாங்கிக் கொண்டு சென்றபோது அவர் வீட்டிற்குச் சென்று நானும் இன்னொரு தோழியும்தான் ஆரத்தி எடுத்தோம்.

  ஓய்வு என்பது அலுவலக வேலையிலிருந்து மட்டுமே. வீட்டில் அடுத்த இன்னிங்ஸ் ஆட நீங்கள் தயாராகி விட்டது தெரிகிறது.

  மேன்மேலும் எழுத்துலகில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. JAYANTHI RAMANI February 13, 2013 at 2:53 AM

  வாங்கோ வணக்கம்.

  //என்னைப் பொறுத்தவரை SUPERANNUATION RETIREMENT தான் ரொம்ப சிறந்தது. கடவுள் கொடுத்த வேலையை கடைசி வரை செய்து பணி முடித்து வருவது உண்மையில் ஒரு வரம்தான்.//

  ஆமாம். அது ஒரு வரமே தான்.

  முடிந்தவர்கள் கடைசிவரை தொடர்வதே நல்லது.

  ஒருசிலர் வேறு ஒருசில காரணங்களால் VRS இல் செல்வதும் நல்லது தான் என நியாயப்படுத்திக்கொள்ளவும் முடிகிறது..

  அவரவர்கள் உடல்நிலை + குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அவரவர்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது.

  பிறரிடம் இதுபற்றி ஆலோசனை ஏதும் கேட்கக்கூடாது.

  நாமும் யாருக்கும் இது விஷயத்தில் எந்த ஆலோசனைகளும் சொல்லக்கூடாது.

  என்னுடன் வேலை பார்த்த ஒருவருக்கு சரியாக 55 வயதானது.

  அப்போது எங்கள் அலுவலகத்தில் VRS Scheme கொண்டு வந்தார்கள்.

  [மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். பிறகு அந்த Scheme இருக்காது.]

  அவரை நான் வற்புருத்தி VRS வாங்கிக்கொண்டு போகச்சொன்னேன்.

  அவருக்கு இதில் இஷ்டம் இல்லை.

  இதனால் அவருக்கு என் மீது கொஞ்சம் கோபம் கூட உண்டு.

  என் ஆலோசனைப்படி அவர் VRS இல் சென்றது எவ்வளவு நல்லது என அவரின் மனைவி பிறகு உணர்ந்து கொண்டார்கள்.

  60 மாத முழுச்சம்பளம் + Leave Encashment + PF + Gratuity என அனைத்தையும் பெற்றுச்சென்ற அவர் இந்த உலகில் இருந்தது வெறும் 60 நாட்கள் மட்டுமே.

  என் சொல்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் 60 மாத முழுச்சம்பளத்தையும் மொத்தமாக இழந்திருக்கும் அவரின் குடும்பம்.


  >>>>>>>>

  ReplyDelete
  Replies
  1. கோபு >>>>>> திருமதி ஜெயந்தி [2]

   //ஆரத்தி எடுக்கும் போட்டோவைப் பார்த்ததும், சமீபத்தில் என் சக தோழர் ஒருவர் VOLUNTARY RETIREMENT வாங்கிக் கொண்டு சென்றபோது அவர் வீட்டிற்குச் சென்று நானும் இன்னொரு தோழியும்தான் ஆரத்தி எடுத்தோம்.//

   ஆஹா .... கேட்கவே சந்தோஷமாக உள்ளது. அவருக்கு ஜெயம் உண்டாகட்டும், ஜெயந்தி மாமி கையால் ஹாரத்தி சுற்றப்பட்டதால்.

   எனக்கு 24.02.2009 அன்று உங்களுடனெல்லாம் பழக்கம் இல்லாததால், அழைக்க முடியவில்லை.

   இருப்பினும் இங்கு வந்து இப்போது பின்னூட்டம் மூலம் ஹாரத்தி சுற்றி அந்த என் குறையைப்போக்கிட்டீங்க. ;) சந்தோஷம்.


   >>>>>>>>>

   Delete
  2. கோபு >>>>>> திருமதி ஜெயந்தி [3]

   //ஓய்வு என்பது அலுவலக வேலையிலிருந்து மட்டுமே. வீட்டில் அடுத்த இன்னிங்ஸ் ஆட நீங்கள் தயாராகி விட்டது தெரிகிறது.//

   ஆமாம் ... ஆமாம் ... எப்போதுமே கத்தியும் கையுமாகவே இருக்கிறேன், காய்கறிகளை வெட்டிக்கொண்டு. ;)))))

   //மேன்மேலும் எழுத்துலகில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.//

   ஆஹா தங்களின் ஜொலிக்கும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   தங்களில் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ooooooo

   Delete
 27. இரண்டாவது வாழ்க்கை ஆரம்பிக்கிறது. இதை இனிமையாகக் கழிப்பது அவரவர் கையில்தான் உள்ளது.

  ReplyDelete
 28. பணியிலேந்து ஓய்வுக்கு பொரவாலதா பதிவு எளுத வந்தீகளா.

  ReplyDelete
 29. போன பதிவில் குடும்ப படங்கள் இந்த பதிவில் அலுவலக படங்கள் பகிர்வுகள். அசத்தல்.

  ReplyDelete
 30. நல்ல பணி...பணி நிறைவிலும் மன நிறைவே...எஞ்சாய்...

  ReplyDelete
 31. மமலரும் நினைவுகள்-பணி ஓய்வு-படங்கள் அருமை!

  ReplyDelete
 32. இதுல எல்லா படங்களும் பாக்க முடிஞ்சுது... ரொம்ப நல்லா வந்திருக்கு..

  ReplyDelete
  Replies
  1. @ Happy

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 33. ஸார்...பணியில் இருந்த போதே பதிவு எழுத வந்து விட்டீங்களா.. இணைத்திருக்கும் படங்களே ஒவ்வொரு கதை சொல்லுது. பத்து வரிகளில் புரிய வைக்க முடியாத விஷயத்தையும் ஒரு புகைப் படம் புரிய வைத்து விடும் என்பது சரிதான்...

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... October 28, 2016 at 10:45 AM

   வாங்கோ வணக்கம்.

   //ஸார்... பணியில் இருந்த போதே பதிவு எழுத வந்து விட்டீங்களா..//

   எண்ணும் எழுத்துமான திறமைகளை கற்றதனாலேயே பணிக்குச் செல்ல ஏதுவானது. :)

   என் பணிகளே எழுதுவதும் டைப் அடிப்பதுமாகத்தான் அந்த நாட்களில் ஆரம்பித்தது. :)

   இளநிலை எழுத்தர் (LOWER DIVISION CLERK) என்றல்லவா சொல்லி பதவிக்கான ஆணையை எனக்கு ஆரம்பத்தில் அளித்திருந்தார்கள். (நான் இந்த BHEL பணியில் சேர்ந்த நாள்: 04.11.1970)

   என் கடின உழைப்பினால் பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்றதனால், எனக்கான பொறுப்புக்களும் மிகவும் அதிகமானது.

   2000 முதல் 2005 வரை DRAFT FOR APPROVAL போட்டு மேல் அதிகாரிகளுக்கு அனுப்புவதிலேயே, பல்வேறு பெரிய அதிகாரிகளின் ஸ்பெஷல் பாராட்டுக்களைப் பெற்றுள்ளவன், நான் என்பதை பெருமையோடு இங்கு குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

   அதன்பிறகு வேறு சில அதிகாரிகளுக்கு ஏதேனும் DRAFT போட வேண்டுமானாலும்கூட, என் உதவியை நாட ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவுக்கு ஊக்கமும் உற்சாகமும் எனக்கு (என் எழுத்துக்களுக்கு) அனைவராலும் அளிக்கப்பட்டு வந்தன.

   நான் போட்டு அனுப்பும் DRAFT இல், நடுவில் உள்ள இடைநிலை அதிகாரிகள் யாராலும் ஏதும் கையை வைக்கவோ, மாற்றங்கள் செய்யவோ, OBJECTIONS எழுதவோ இயலாதபடிக்கு இருக்கும் என் எழுத்துக்கள்.

   நான் போட்டு அனுப்பிடும் DRAFT அப்படியே ஒவ்வொரு அதிகாரியாகத் தாண்டி மேலே மேலே சென்று HOD or COMPETENT AUTHORITY யின் பார்வைக்கும் சென்று STRAIGHT ஆக APPROVAL ஆகிவிடுவது மட்டுமே வழக்கமாக இருந்து வந்தது. :)

   2005 முதல் 2010 வரை, ஆறு ஆண்டுகள் மட்டுமே, நான் தொடர்ச்சியாக, பல பிரபல தமிழ் வார / மாத இதழ்களில் எழுதி வந்துள்ளேன்.

   என் பணி ஓய்வுக்குப்பின், வலையுலகில் முதன் முதலாக நான் எழுத ஆரம்பித்துள்ள நாள்: 02.01.2011 மட்டுமே.

   //இணைத்திருக்கும் படங்களே ஒவ்வொரு கதை சொல்லுது. பத்து வரிகளில் புரிய வைக்க முடியாத விஷயத்தையும் ஒரு புகைப் படம் புரிய வைத்து விடும் என்பது சரிதான்...//

   மறுக்கவே முடியாத தங்களின் இந்தக் கூற்றுக்கும், அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 34. ஆரத்திப் படமும் அழகு :) வாழ்க வளமுடன் சார் :)

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan November 5, 2016 at 3:12 AM

   //ஆரத்திப் படமும் அழகு :) வாழ்க வளமுடன் சார் :)//

   வாங்கோ ஹனி மேடம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 35. Muthuswamy MN தங்களின் ஓவிய கலை தெரியும். இன்றுதான் தங்களின் கதை எழுதும் ஆற்றல் பற்றி அறிந்தேன். நமஸ்காரம்.

  - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour during 1965 to 1980 - Now he is at Mumbai)

  Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true

  ReplyDelete
 36. Hard work and rejoice of labour always pay the reward. Very glad to read your writings reg. "draft for approval " though late, I send my views, Raman. R

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ Mr. R. Raman Sir. தங்களின் வருகைக்கும், மகிழ்ச்சி கலந்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். அன்புடன் கோபு :)

   Delete
 37. மீண்டும் புகைப்படங்களைக்கண்டு இரசித்தேன் குறிப்பாக அலுவலக வாசலில் எடுத்த போட்டோ

  ReplyDelete
  Replies
  1. //Ramani S November 8, 2018 at 1:49 PM
   மீண்டும் புகைப்படங்களைக்கண்டு இரசித்தேன் குறிப்பாக அலுவலக வாசலில் எடுத்த போட்டோ//

   வாங்கோ Mr. S Ramani Sir. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete