என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

சிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 2 ]சென்ற வாரக்கேள்விகளுக்கான சரியான விடைகள்:கேள்வி எண் : 1 க்கு பதில்:
அந்தக்குழந்தை அந்தப்பெண்ணின் சொந்த தம்பி அல்லது தங்கை தான்.

[அந்தக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் 6 முதல் 12  குழந்தைகள் கூட பிறப்பதுண்டு.. மூத்த குழந்தைக்கும் கடைசி குழந்தைக்கும் 20 வயது வித்தியாசம் கூட இருக்கும்.  மூத்த பெண் குழந்தை, தனக்கு கீழ் பிறக்கும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு நிற்பது சர்வ சாதாரண விஷயம். இந்தக்காலம் போல அடுத்தடுத்து பிறந்த ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்தில் பிறந்தவர்களால், இதற்கான விடையை கற்பனை செய்து பார்க்கவே கூட முடியாமல் இருக்கலாம்]

=========================================================

கேள்வி எண் : 2 க்கு பதில்:

4 தீக்குச்சிகளை இடது கையிலும், 5 தீக்குச்சிகளை வலது கையிலும் வைத்துக்கொள்ளவும்.

இடது கையில் உள்ளவற்றை வரிசையாக தரையில் 1   1   1   1 என்று நல்ல இடைவெளி கொடுத்து நிறுத்தி வைக்கவும்.

வலது கையில் உள்ள தீக்குச்சிகளில் ஒன்றை முதல் 1 க்கு மேல் படுக்க வைக்கவும். அந்த 1 இப்போது T ஆகிவிடும்.

அடுத்த 3 குச்சிகளை, அடுத்த இரண்டாவது 1 ஐ E ஆக்குவது போல வைத்து விடவும்.

மீதியுள்ள ஒரே தீக்குச்சியை 3 வது 1 இன் தலைப்பகுதியும், 4 வது 1 இன் அடிப்பகுதியும் தொடுமாறு இணைத்து விடவும். இப்போது 3 வது 1 மற்றும் 4 வது 1 இரண்டும் சேர்ந்து N என்ற ஆங்கில எழுத்தாகி விடும்.

நாலோடு ஐந்தை சேர்த்ததும் T E N வந்து விட்டதல்லவா!
TEN என்றால் பத்து தானே!!

=====================================================

கேள்வி எண் : 3 க்கு பதில்:

துண்டின் விலை ரூ. 105
கைக்குட்டை விலை ரூ 5
ஆக மொத்தம்: ரூ. 110
இரண்டுக்கும் வித்யாசம் 105 minus 5 = 100

=====================================================

கேள்வி எண் : 4 க்கு பதில்:

IT =  அது BUT= ஆனால் WHAT= என்ன ?

தமிழும் ஆங்கிலமும் கலந்து 
”இட்டது பட்டானால் வாட்டென்ன?”
என்று ஆகி நம்மை பாடாய்ப்படுத்தியுள்ளது.

====================================================

கேள்வி எண் : 5 க்கு விடை : 11 வாழைக்காய்கள்.

3/8     =    4 and 1/8  or   33/8
1        =     ?

1 divided by 3/8 = 1 into 8/3 or 8/3

1  divided by  3/8 into  33/8   =  8/3 into 33/8   =   11

==============================================

கேள்வி எண் : 6 க்கு பதில்:

குண்டடி பட்ட பறவையைத்தவிர மீதியெல்லாம்
குண்டு சப்தத்தில் பயந்து போய் பறந்து போய் இருக்கும்.

==============================================

கேள்வி எண் : 7 க்கு பதில்:

காலை 7.15 க்கு 2 குழாய்களும் திறந்துவிடப்பட்டுள்ளதால்
அன்று இரவு மிகச்சரியாக 7.15 க்கு தொட்டி நிரம்பிவிடும்.
காலை 7.15 மணி முதல் இரவு 7.15 மணி வரை12 மணி நேரம்
இரு குழாய்களும் தொடர்ந்து வேலை செய்வதால், A குழாய்
மூலம் நியாயமாக 2 தொட்டிகள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
B குழாய் மூலம் அதே 12 மணி நேரத்தில் ஒரு தொட்டி நீர்
அகற்றப்பட்டிருக்கும். எனவே மிகச்சரியாக இரவு 7.15 மணிக்கு 
மட்டும், தொட்டி நிரம்புவதைக்காண முடியும்.

==========================================================

கேள்வி எண் : 8 க்கு பதில்:

  2 ஆண்கள், ஒவ்வொருவருக்கும் 3 இட்லி வீதம் =     6
30 பெண்கள், ஒவ்வொருவருக்கும் 2 இட்லி வீதம் =   60 
68 குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் 1/2 இட்லி வீதம் = 34

2+30+68 = 100 பேர்கள்  
6+60+34 = 100 இட்லிகள்
---------------------------------------------------------------------------------------------------------
இதே கணக்குக்கு மற்றொரு விடை:

  5 ஆண்கள் + 25 பெண்கள் + 70 குழந்தைகள்
  5*3 = 15                  25*2= 50              70*1/2= 35

 5+25+70  =  100 பேர்கள்
15+50+35 =  100 இட்லிகள்

-----------------------------------------------------------------------------------------

இதே கணக்குக்கு மற்றொரு விடை:

  14 ஆண்கள் + 10 பெண்கள் + 76 குழந்தைகள்
  14*3 = 42                  10*2= 20              76*1/2= 38

 14+10+76  =  100 பேர்கள்
 42+20+38  =  100 இட்லிகள்

===========================================================


கேள்வி எண் : 9 க்கு பதில்:

ORIGINALITY  ஐத்தான் அவன் ஒரு ’ஜி’ +  நாலு ’டி’ என்று ஏதோ
புரிந்துகொண்டு G T T T T என்று எழுதி அசத்தியுள்ளான்.

========================================================== 

கேள்வி எண் : 10 க்கு பதில்:

வரை படத்தில் 
WESTERN SIDE MANGO 
வரையப்பட்டுள்ளதால்

அது வெஸ்ட் மாம்பலம் WEST MAMBALAM 
[சென்னையில் உள்ள பிரபலமான இடமான மேற்கு மாம்பலம்] 
ஆகத்தான் இருக்க வேண்டுமாம்.

==================================================

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

எல்லோருக்கும் பாஸ் மார்க்!

ஆர்வத்துடன் பங்குகொண்ட அனைவருக்கும் 
என் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

மதிப்பெண் விபரம்:
========================================
kggouthaman@gmail.com

திரு கே.ஜி. கெளதமன் அவர்கள் 
90%

சரியான விடைகள் 1 to 9

========================================
 sagampari@gmail.com

திருமதி சாகம்பரி அவர்கள்
80%

சரியான விடைகள்: 1 மற்றும் 3  to 9 

========================================
ramaravi65@gmail.com   [MADURAGAVI BLOG]

திருமதி ரமாரவி அவர்கள்
70%

சரியான விடைகள்: 2 to 7 மற்றும் 9

=============================================

ஸ்ரீராம். sri.esi89@gmail.com

திரு ஸ்ரீராம் அவர்கள்
50%

சரியான விடைகள்: 3, 4, 6, 8 மற்றும் 9

============================================ 

Ramesh ramesh@globaltelelinks.com

திரு ஜ.ரா.ரமேஷ் பாபு அவர்கள்
50%

சரியான விடைகள்: 3, 4, 5, 6 மற்றும் 9

=======================================================================மீண்டும் உங்கள் சிந்தனைக்கு


மேலும் ஒரே ஒரு கணக்கு மட்டும் இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முயற்சி செய்யுங்கள்.

உங்களிடம் கீழ்க்கண்டவாறு மொத்தம் ஆயிரம் ரூபாய் என்னால் தரப்படுகிறது என்று தயவுசெய்து கற்பனை செய்துகொள்ளுங்கள்.

ரூ. 100 x  7 = 700
ரூ.   10 x 25= 250
ரூ.     1 x 50 =  50
==============
Total: Rs. 1000-00
==============

பத்து பேப்பர் பைகளும், ஒரு எழுதக்கூடிய பேனாவும், ஒட்டுவதற்கு FEVI STICK பசையும் கூட என்னால் தரப்படுகிறது. 

நீங்கள் செய்யவேண்டியது அந்த பேப்பர் பைகள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு தொகையைப்போட்டு, உள்ளே போடப்பட்டுள்ள தொகையின் மொத்த மதிப்பை பேனாவால் பேப்பர் பையின் மேலே எழுதியபின், பேப்பர் பையின் வாயை நன்றாக பசைபோட்டு ஒட்டிவிடவேண்டும். 

உங்கள் கையில் நான் கொடுத்த ஆயிரம் ரூபாய்ப் பணத்தில், மீதிப்பணம் எதுவுமே இருக்கக்கூடாது. 

10 பைகளிலுமே ஏதாவது ஒரு தொகை நிரப்பப்பட்டு, அந்தத்தொகையின் மதிப்பு அந்தப்பையின் மேல் சரியாக எழுதப்பட்டிருக்க வேண்டும். 

பணம் போடப்படாமல் எந்த பேப்பர் பையுமே இருக்கக்கூடாது.

மிகச்சுலபம் தானே என்கிறீர்களா? இதுவரை மிகவும் சுலபம் தான்!

ஆனால் கீழே கொடுத்துள்ள ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் உள்ளதே! 

நான் உங்களிடம் ஒரு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை எந்தத்தொகை கேட்டாலும், நீங்கள் எனக்கு குறைந்த பக்ஷமாக ஒரு பேப்பர் பையோ, அதிக பக்ஷமாக பத்து பேப்பர் பைகளோ தான் தரவேண்டும். பைகளை நீங்கள் பிரிக்கக்கூடாது.  

நான் பிரித்து மொத்தமாக எண்ணிப்பார்த்தால், நான் உங்களிடம் கேட்ட தொகை, மிகச்சரியாக இருக்க வேண்டும். 

நான் உங்களிடம் 1, 9, 19, 303, 565, 699, 819, 991, 999, 1000 என்று எந்தத்தொகையும் கேட்கலாம்.  

நான் எந்தத்தொகை கேட்டாலும் பேப்பர்பைகளாக மட்டுமே தருவதற்கு தகுந்தபடி, தாங்கள் பேப்பர்பைகளில் பணத்தை, புத்திசாலித்தனமாக நிரப்பி வைத்திருக்க வேண்டும். 

முயன்று பாருங்கள். ஒரு வேளை தலைவலியாக இருந்தால் விட்டுவிடுங்கள்.

இதற்கான சரியான விடை எப்படியும் அடுத்த ஞாயிறு 30.07.2011 அன்று வெளியிடப்படும். அப்போது தெரிந்து கொள்ளலாம்.


[இந்தப் புதிருக்கு விடை தெரிந்தவர்கள் தயவுசெய்து அதை எனக்கு ஈ.மெயில் மூலம் தெரிவிக்கவும். பின்னூட்டத்தில் தெரிவிப்பதைத் தவிர்க்கவும். இதனால் ஆர்வமுள்ள மற்றவர்களும் சிந்திக்க ஓர் வாய்ப்பு தருவதாக அமையும். என் ஈ.மெயில் விலாசம்: valambal@gmail.com ] என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்.


32 கருத்துகள்:

 1. அடடா...போன பதிவை மிஸ் பண்ணிட்டனே...இதை முயற்சி செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. மொதல் புதிருக்கும் பதில் போட்டிருப்பேன். கௌதமன் பஸ்டு வரட்டுமேன்னு தான்.

  பதிலளிநீக்கு
 3. கணக்கிலே கொஞ்சம் வீக் சார்...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. முதல் ராங்க் கொடுத்ததற்கு நன்றி, வி ஜி கே சார்! எங்கள் ஸ்கூலிலிருந்து இன்னொருவரும் டாப் ஐந்துக்குள் வந்திருக்கின்றார் என்பது சந்தோஷமாக உள்ளது. மீண்டும் நன்றி!

  பதிலளிநீக்கு
 5. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  அருமையான சிந்தனையைத்தூண்டிய தங்கள் பகிர்வுகளுக்கு ப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. @அப்பாதுரை, கரெக்ட்.

  \\ஒன்பது பைலயும் ஒரு கணக்கு விகிதத்தோட போடணும்\\

  இரண்டின் அடுக்குகளில் போடவேண்டும் என்று சொல்ல வந்தீர்களோ?

  பதிலளிநீக்கு
 7. நல்ல தொடர் சார். கணக்கு என்பது வாழ்வில் மிக முக்கியம் இல்லையா? தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 8. அடுத்த ஞாயிறுவரைக்கும் நான் லீவு சொல்லிக்கிறேன் :-))))))

  அருமையான பயனுள்ள மூளைக்கு வேலைகொடுக்கக்கூடிய தொகுப்பு..பாராட்டுகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 9. போன பதிவில் எனக்கு ஒன்றுக்குத்தான்
  பதில் தெரியும்.என்வே வெற்றிகரமாக
  ஜகா வாங்கிவிட்டேன். இந்த முறையும்
  அப்படித்தான் ஆகும் போல் தெரிகிறது
  தங்கள் பதிவை சுவாரஸ்யமான பதிவாக
  மாற்றியமைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. வை.கோ சார்! உங்க கணக்குகளை எல்லாம் தடவித்தடவி போட்டுக் கொண்டிருந்தேனா? என் போராட்டம் பார்த்தபடி என் மனைவி வேகமாய் விடையளித்தாள்.

  போகிற போக்கில் "ஒண்ணுத்துக்கும் பிரயோசனமில்லை.. கவிதை எழுத்தத்தான் லாயக்கு".. என்றபடி போனவளை கேட்காதது போல் இருந்து விட்டேன்,

  பதிலளிநீக்கு
 11. எனக்கு கணக்குக்கும் நீண்ட தூரம் ஐயா )))

  பதிலளிநீக்கு
 12. நான் பள்ளியிலும், கல்லூரியிலும் எப்போதுமே கடைசி பெஞ்சுதான். இங்கும் அப்படியே ’ஆஜர் சார்,’ சொல்லிவிட்டு, கணக்கு நோட்டில் கார்ட்டூன் வரைந்து கொண்டிருக்கிறேன். (ஆசிரியரை அல்ல!). :-))))

  பதிலளிநீக்கு
 13. ஏதோ பாஸ் மார்க்காவது வந்ததே...நன்றி.

  பதிலளிநீக்கு
 14. அருமையான சிந்தனையைத்தூண்டிய தங்கள் பகிர்வுகளுக்கு ப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துக்கள்!

  நேரமின்மை காரணமாக வலைப்பூக்கள் பக்கம் அதிகம் வரமுடியவில்லை. இல்லையென்றால் நான் தான் முதல் மார்க் வாங்கியிருப்பேன்!! (எப்பூடி?!)

  பதிலளிநீக்கு
 16. எனக்கு 3 வது பரிசு.
  நன்றி வை.கோ. சார்.,

  பதிலளிநீக்கு
 17. கணித புதிர் போல இருக்கு, எனிவே நல்ல இருக்கு சார்!

  பதிலளிநீக்கு
 18. அடடா ...பழைய புதிர்களை படிக்காமல் விட்டு விட்டேனே.அதில எனக்கு 7 மார்க் கெடச்சிருக்குமே.
  -- இந்த புதிருக்காக மண்டைய சொரண்ட வச்சீட்டீங்களே...

  பதிலளிநீக்கு
 19. பரிசு பெற்றவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!
  சிறுகதை எழுதுவதற்கு சற்று ஓய்வு கொடுத்திருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 20. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

  இண்ட்லியில் எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 21. ஒரு ஜி நாலு டி. அருமையான கற்பனை.

  பதிலளிநீக்கு
 22. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களுடன் பை பை

  பதிலளிநீக்கு
 23. இனி இது போல் புதிர்கள் வராதா உங்களிடம் இருந்து.

  முடிந்தால் மீண்டும் புதிர் போடுங்களேன்.

  நானெல்லாம் அப்ப உங்க வலைத்தளத்துல வளைய வந்திருந்தா நூத்துக்கு நூறு வாங்கி இருப்பேன்.

  வடை போச்சே

  பதிலளிநீக்கு
 24. கமண்டு போட்டவங்கல்லாருமே நளுவிகிட்டாங்களே.

  பதிலளிநீக்கு
 25. யாரெல்லாம் கரெக்டா பதில் சொல்லி யிருந்தார்களோ அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 26. பார்க்க சுலபம்போல தோன்றினாலும் யோசிக்க வைக்கும் என்றே நினைக்கிறேன்...விடையைப்பார்க்காது முயற்சிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 27. ONE MORE CORRECT ANSWER FOR QUESTION NO. 8

  11 GENTS + 15 LADIES + 74 CHILDREN
  (11*3=33) (15*2=30) (74*0.5=37)

  11+15+74 = 100
  33+30+37 = 100

  - Miss: R.PAVITHRA from Dubai on 28.07.2016 Grand daughter of VGK.

  :) Heartiest Congratulations to my Dear Pavithra - vgk :)

  பதிலளிநீக்கு
 28. மூளைக்கும் வேலையா. சூப்பருங்கோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2017 at 1:11 PM

   //மூளைக்கும் வேலையா. சூப்பருங்கோ.//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு