என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 23 டிசம்பர், 2015

சாதனையாளர் விருது ... திரு. ஸ்ரீவத்ஸன் அவர்கள் [சரணாகதி]

அன்புடையீர், 


அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்பில் 31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் ஓர் சுலபமான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, தங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.


அதற்கான இணைப்பு தங்கள் நினைவுக்காக இதோ:


மேற்படி போட்டியில் கலந்துகொண்டு
வெற்றிபெற, வரும் 31.12.2015 
நிறைவு நாள் ஆகும்.


இதில் மிகவும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோர் அனைவருக்கும் தலா ரூபாய் ஆயிரம் [Rs. 1000/-] வீதம் ரொக்கமாகப் பரிசளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். 

 சாதனையாளர் 
திரு.
  ஸ்ரீவத்ஸன் 
அவர்கள்
வலைத்தளம்: 
 சரணாகதி   
 சாதனையாளர் விருது 
திரு.
 ஸ்ரீவத்ஸன்   
அவர்கள்
வலைத்தளம்: 
 சரணாகதி    
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்களின் 
http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html
உருக்கமான நேயர் கடிதத்தினைப் படித்ததன் விளைவாக
இவர் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள 
ஆரம்பித்த நாள் : 15.11.2015 மட்டுமே.
முற்றிலுமாக முடித்த நாள்: 08.12.2015


{ EXPRESS TRAIN SPEED }

போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்து
வெறும்  24 நாட்களுக்குள்ளாக 
தன்னிடமுள்ள அலைபேசி மூலமே 
முற்றிலும் இவர் பின்னூட்டங்களிட்டு முடித்து 
வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனையாகும்.


-oOo-

பொதுவாக இவர், பதிவினை அலசி ஆராய்ந்து 
மிகவும் விரிவாகவும், அழகாகவும் 
பின்னூட்டம் எழுதக்கூடியவர்.
போட்டிக்கான காலக்கெடு நெருங்கிவிட்டதால்
சற்றே அவசர அவசரமாகவும், மிகவும் சுருக்கமாகவும் 
பின்னூட்டங்கள் அளித்துள்ளார். :(


{ இவரை இந்தப் போட்டியில் கலந்துகொள்ள 
மிகவும் தூண்டுதலாக இருந்த 
‘முருகு’வின் உருக்கமான நேயர் கடிதத்திற்கு 
http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html
மீண்டும் என் நன்றிகள். - vgk }


 

இவருக்கான ரொக்கப் பரிசுத்தொகை
10.12.2015 அன்று என்னால் அளிக்கப்பட்டது
அன்புள்ள திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களே ! 

போட்டியில் வெற்றி பெற்றுள்ள
தங்களுக்கு என்
மனம் நிறைந்த 
பாராட்டுகள் + 
அன்பான இனிய
நல்வாழ்த்துகள்!

அன்புடன்
VGK

  


திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களின்
நேயர் கடிதம் 

கோபால் சார் அறிவித்திருந்த பின்னூட்டப்போட்டியில் கலந்து கொண்டு, அவரின் பிறந்த நாளான 08.12.2015 அன்று வெற்றிப்படியை தொட்டு விட்ட சந்தோஷத்தில் இந்த கடிதம் எழுதறேன்.


நானும் கொஞ்ச நாட்களாகத்தான் வலைப்பதிவு எழுதிண்டு இருக்கேன்.  நிறையலாம் எதுவும் எழுதலை. ரொம்ப கொஞ்சமாகத்தான் எழுதி இருக்கேன்.  நிறையபேர் பதிவு பக்கமும் நான் போனதில்ல. கோபால் சார் பதிவு பக்கம் போயிருக்கேன். சில பின்னூட்டங்களும் போட்டிருக்கேன். அதிக பழக்கம் இல்லை.


செல்வி. முருகு அவர்களின் நேயர் கடிதம் படித்ததும் எனக்கும் பின்னூட்டப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் வந்தது. அவங்களே 31 நாட்களுக்குள் ஜெயிச்சு காட்டி இருக்காங்க. நாமளும் கலந்துக்கலாமேன்னு தோணித்து. போட்டில நான் கலந்து கொள்ள காரணம் முருகு அவங்கதான். அவங்களுக்கு என் நன்றிகள்.


சாரிடம் என் விருப்பத்தை தெரியப்படுத்தினேன். ரொம்ப சந்தோஷமா வரவேற்றாங்க. மாசாமாசம் லிங்க் அனுப்பி உற்சாகப்படுத்தினாங்க.  ஏதாவது பதிவில் பின்னூட்டமிட நான் மறந்திருந்தால் நினைவு படுத்தி அந்த லிங்க்கும் தனியே அனுப்பினாங்க. ஒரு மாச பின்னூட்டம் கம்ப்ளீட் ஆனதும் உடனே கன்ஃப்ர்மேஷன் அனுப்பிடுவாங்க. அதில் பாராட்டா சில வார்த்தைகள் சொல்லி உற்சாகப்படுத்துவாங்க. போட்டி அறிவிச்சுட்டு அவங்க சும்மா இருப்பதில்லை, நம் கூடவே வந்து என்கரேஜ் பண்ணுவாங்க.


ஒவ்வொரு பதிவு படிச்சதும் அதன் வைப்ரேஷன் ரொம்ப நேரம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். நான் மட்டும் இந்த போட்டில கலந்துக்கலைனா எவ்வளவு  அருமையான வாய்ப்பை இழந்திருப்பேன். எவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. கற்றது கையளவு கல்லாதது கடலளவுன்னு சொல்வாங்க.  அது ரொம்ப கரெக்ட் தான். ஆனா சாருக்கு தெரியாத விஷயமே கிடையாதுதான்.  கதையென்று பார்த்தால் நவரசங்களிலும் எழுதி அசத்தி இருக்காங்க. எதைச்சொல்ல எதைச்சொல்லாம விட.


ஆன்மிக விஷயமா ... பயணக்கட்டுரையா ... சிறுகதையா ... சற்றே பெரிய சிறுகதையா எல்லாத்திலுமே பெர்ஃபெக்‌ஷன் இருக்கும். அவரின் ரிப்ளைப் பின்னூட்டம்  ஒவ்வொன்றுமே ஒரு கதை சொல்லும். அனைவருக்கும் விஸ்தாரமாக பின்னூட்டம் கொடுத்து அசத்தி விடுவார்கள்.


இது மட்டுமா வித்யாசமா யோசித்து போட்டிகள் வைத்து கைப் பணம் செலவு செய்து ரொக்கப் பரிசுகளும் கொடுத்து விருதுகள்  பரிசுகள் என்று  அள்ளி அள்ளி வழங்குகிறார்கள். இறைக்கிற கிணறு தான் ஊறும்னு சொல்வாங்க இல்லியா. இவர் கொடுப்பதைப்போல பல மடங்கு விருதுகளும் பரிசுகளும் பாராட்டுகளும் இவரைத்தேடி வருவது ஒன்றும் அதிசயமில்லையே !


சிறுகதை விமரிசனப்போட்டி பிரும்மாண்டம்.  ஒரு கதையை எழுதுபவர் அவர் கற்பனைக்கேற்றபடி எழுதி விடலாம். படிப்பவர்களும் படித்து ரசிக்கலாம்.  ஆனால் கதையைப்படித்து விமரிசனம் செய்ய ரொம்பவே மெனக்கிடணும். வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை படித்து, இந்த இடத்தில் இப்படி வந்திருக்கலாமோ,  இது இப்படி இருந்திருக்கக்கூடாதோன்னு மண்டையை குடைஞ்சு யோசிக்கணும்.


சாதாரண எழுத்தாளர்களை திறமையான எழுத்தாளர் ஆக்கும் முயற்சியாக இதை எடுத்துக்கொள்ளலாம். அதில் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுக்க, நடுவரையும் நியமித்துப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி காட்டி உள்ளார். வெற்றி பெற்றவர்களை மனம் திறந்து பாராட்டி முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் கொடுத்து எல்லாரையும் சந்தோஷப்படுத்தி அதில் அவர்களும் சந்தோஷப்பட்டுள்ளார்கள்.


இந்தப் பெருந்தன்மை தாராளம் யாருக்கு வரும்? எடுத்துக்கொண்ட பணியை சிறப்பாக நடத்தி முடிக்க கடின உழைப்பு ஈடுபாடு ஆர்வம் எல்லாமே சாரிடம் இருக்கு. பின்னூட்டப்போட்டியில் கலந்து கொண்டதை நான் ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் நினைக்கிறேன். வாய்ப்பு கொடுத்த கோபால் சாருக்கு நன்றிகள்.


விட்டால் இன்னும் சொல்லிக்கொண்டே போவேன். பாவம் படிக்கறவங்களை கஷ்டப்படுத்த வேணாமேன்னு இத்தோட நிப்பாட்டிக்கறேன்.


ஒரு சின்ன ஹெல்ப். இந்த பதிவு படிக்கும் யாருக்காவது வலைப்பதிவில் ஃபாலோவர் விட்ஜெட் எப்படி இணைப்பதுன்னு தெரிந்திருந்தால் கொஞ்சம் சொல்ல முடியுமா? அப்புறம் இந்த மொபைலில் நெட் யூஸ் பண்ணும்போது காப்பி,  பேஸ்ட், ஸேவ் ஆப்ஷன்லாம் எங்க இருக்குனு சொல்லமுடியுமா?  சாரோட பதிவு நிறைய பேரு படிக்க வருவாங்க .... அதனால்தான் இங்கு இதைக் கேட்டு எழுதியுள்ளேன்.

இப்படிக்கு
ஸ்ரீவத்ஸன் 
{வலைத்தளம்: சரணாகதி}
08.12.2015

[மனம் திறந்து நேயர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள் - vgk]

மற்ற சாதனையாளர்கள் பற்றிய செய்திகள் 
இனியும் அவ்வப்போது தொடரும்.


வெற்றியாளர்கள் பற்றிய ஒட்டுமொத்தச் செய்திகள் 
இறுதியில் தனிப்பதிவாகவும் வெளியிடப்படும். 

என்றும் அன்புடன் தங்கள் 
[வை. கோபாலகிருஷ்ணன்] 

84 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் ஸ்ரீவத்சன்.

  மொபைலில் காபி பண்ண வேண்டிய பகுதிகளை சில நொடிகள் தொட்டுக்கொண்டிருந்தால் காபி ஆப்ஷன் வரும். பதிவில் ஃபாலோயர் விட்ஜெட் வைக்க டிடியைக் கேட்கலாம். நீச்சல்காரன் பதிவுகளில் பாடமே எடுத்திருக்கிஆர். என்னிடம் லிங்க் இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். December 23, 2015 at 6:14 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

   //வாழ்த்துகள் ஸ்ரீவத்சன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   //மொபைலில் காபி பண்ண வேண்டிய பகுதிகளை சில நொடிகள் தொட்டுக்கொண்டிருந்தால் காபி ஆப்ஷன் வரும். பதிவில் ஃபாலோயர் விட்ஜெட் வைக்க டிடியைக் கேட்கலாம். நீச்சல்காரன் பதிவுகளில் பாடமே எடுத்திருக்கிஆர். என்னிடம் லிங்க் இல்லை!//

   இந்தியாவில் மும்பையில் வசித்தபோது இந்த என் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ள நம் இனிய நண்பர் திரு. ஸ்ரீவத்ஸன் அவர்கள், இப்போது இந்தியாவில் இல்லாமல் அயல்நாட்டில் புதிய வாழ்க்கை மேற்கொள்ளச் சென்றிருப்பதாகத் தகவல்.

   அங்கு அவர் போன இடத்தில், குடும்பத்துடன் செட்டில் ஆகி இதையெல்லாம் படித்துப்பார்த்து, நமக்கு பதில் அளிக்க மேலும் பலநாட்கள் ஆகலாம்.

   இது சும்மா தங்கள் தகவலுக்காக மட்டுமே.

   அன்புடன் VGK

   நீக்கு
  2. ஸ்ரீராம் சார் வாழ்த்துக்கு நன்றி காப்பி ஆப்ஷன் வருது வேர இடத்துல பேஸ்ட் ஆறதில்லை.. டி. டி. யாரு.

   நீக்கு
 2. முயற்சியைக் கொடுத்து வெற்றிக் கனியைப் பறித்துச் சென்ற ஸ்ரீவத்சன் அவர்களுக்கு பாராட்டுகள்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்
   December 23, 2015 at 7:25 AM

   வாங்கோ நண்பரே, வணக்கம்.

   //முயற்சியைக் கொடுத்து வெற்றிக் கனியைப் பறித்துச் சென்ற ஸ்ரீவத்சன் அவர்களுக்கு பாராட்டுகள்!!!//

   ஆஹா, அருமை. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   நீக்கு
 3. பின்னூட்டமிட்டு பரிசுபெற்ற ஸ்ரீ வத்சன் அவர்களின் கடிதமும் மிக நன்றாக இருந்தது. எனக்கும் போட்டியில் கலந்து கொள்ள ஆவல்தான் நேரமின்மையால் முடியவில்லை. பரிசுபெற்ற ஸ்ரீ வத்சன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. S.P. Senthil Kumar December 23, 2015 at 7:57 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பின்னூட்டமிட்டு பரிசுபெற்ற ஸ்ரீ வத்சன் அவர்களின் கடிதமும் மிக நன்றாக இருந்தது. எனக்கும் போட்டியில் கலந்து கொள்ள ஆவல்தான் நேரமின்மையால் முடியவில்லை. பரிசுபெற்ற ஸ்ரீ வத்சன் அவர்களுக்கு வாழ்த்துகள்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அவரின் கடிதத்தைப் பாராட்டிச் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும், அவரை வாழ்த்தியுள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
  2. வாழ்த்துக்கும் கடிதத்தை பாராட்டி இருப்பதற்கும் நன்றி சார்.

   நீக்கு
 4. ஒவ்வொரு பதிவு படிச்சதும் அதன் வைப்ரேஷன் ரொம்ப நேரம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்..//

  அருமையாக சொல்லி இருக்கிறார்..
  வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி December 23, 2015 at 8:27 AM

   வாங்கோ .. வணக்கம்.

   **ஒவ்வொரு பதிவு படிச்சதும் அதன் வைப்ரேஷன் ரொம்ப நேரம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்..**

   //அருமையாக சொல்லி இருக்கிறார்..//

   :) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம். :)

   //வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..//

   தங்களின் அன்பான வருகைக்கும், அவருக்கான வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.

   நீக்கு
  2. வாங்கம்மா உங்க வாழ்த்து பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி.

   நீக்கு
 5. ஸ்ரீவத்சன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  நான் இன்னொரு முறை கலந்து கொள்ளலாமா, வைகோ அவர்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழனி. கந்தசாமி December 23, 2015 at 8:49 AM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //ஸ்ரீவத்சன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார்.

   //நான் இன்னொரு முறை கலந்து கொள்ளலாமா, வைகோ அவர்களே!//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! தங்களின் இதுபோன்ற பேரெழுச்சியான கேள்வி என்னைப் புல்லரிக்க வைக்குது. இதுபோன்ற .. உங்களைப்போன்ற பேரெழுச்சிமட்டும் எனக்கு இருந்திருந்தால் திருச்சி மலைக்கோட்டையை அப்படியே பெயர்த்து எடுத்துக்கொண்டு கோவைக்கே வந்து நானும் அங்கு உங்களுடன் செட்டில் ஆகியிருப்பேன்.

   போட்டி நிறைவு அடைய இன்னும் முழுசா எட்டு நாட்கள் மட்டுமே உள்ளது சார். அதனால் நீங்க இதில் மீண்டும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் சார். பொறுமையாக என் பதிவுகளைப் படித்து மீண்டும் மீண்டும் எவ்வளவு பின்னூட்டங்கள் வேண்டுமானாலும் விரிவாக அளியுங்கள். வரவேற்கிறேன்.

   {பரிசு மட்டும் மீண்டும் கிடைக்க வாய்ப்பு இல்லை :)}

   அன்புடன் VGK

   நீக்கு
  2. வாழ்த்துக்கு நன்றி பழனி கந்தசாமி சார்

   நீக்கு
 6. சாதனையாளர் விருதும் பரிசும் பெற்ற சரணாகதி பதிவர் திரு ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு வாழ்த்துகள். வலைப்பதிவு பேரே ரசனையுடன் இருக்கு. ஓ... முருகு தான் காரணமா நீங்க போட்டியில் கலந்து கொள்வதற்கு. நேயர் கடிதத்தில் விஷயங்கள் அழகாக பகிர்ந்து கொண்டிருக்கீங்க. கோபால் சார் பதிவு பக்கம் வந்தாலே நிறைய திறமை சாலி பதிவர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.ஸாருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... December 23, 2015 at 9:49 AM

   வாங்கோ, வணக்கம்.

   //சாதனையாளர் விருதும் பரிசும் பெற்ற சரணாகதி பதிவர் திரு ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு வாழ்த்துகள். வலைப்பதிவு பேரே ரசனையுடன் இருக்கு. ஓ... முருகு தான் காரணமா நீங்க போட்டியில் கலந்து கொள்வதற்கு. நேயர் கடிதத்தில் விஷயங்கள் அழகாக பகிர்ந்து கொண்டிருக்கீங்க.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //கோபால் சார் பதிவு பக்கம் வந்தாலே நிறைய திறமை சாலி பதிவர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஸாருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், விரிவான கருத்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
  2. வாழ்த்துக்கு பெரிய பின்னூட்டத்துக்கு நன்றி .

   நீக்கு
 7. ஸ்ரீவத்சன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்த பட்டியல் இன்னும் தொடரும் போலிருக்கிறதே! V.G.K அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ December 23, 2015 at 10:56 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஸ்ரீவத்சன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

   //இந்த பட்டியல் இன்னும் தொடரும் போலிருக்கிறதே!//

   ஆம். போட்டியின் இறுதித்தேதியான 31.12.2015 வரை இந்தப் பட்டியல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

   //V.G.K அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   நீக்கு
  2. வாழ்த்துக்கு நன்றி தமிழ் இளங்கோ சார்.

   நீக்கு
 8. ஸ்ரீவத்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்களும் அவர் குறித்து அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா, தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mageswari balachandran December 23, 2015 at 11:03 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //ஸ்ரீவத்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்களும் அவர் குறித்து அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா, தொடருங்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமை என்ற அருமையான கருத்துக்கும், வெற்றியாளருக்கான தங்களின் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
  2. வாழ்த்துக்கு நன்றி மஹேஸ்வரி மேடம்

   நீக்கு
 9. 24 நாட்களுக்குள் பின்னூட்டமிட்டு பரிசுபெற்றிருக்கின்ற திரு ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்! பரிசு மழை பொழிகின்ற தங்களுக்கு பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வே.நடனசபாபதி December 23, 2015 at 11:33 AM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //24 நாட்களுக்குள் பின்னூட்டமிட்டு பரிசுபெற்றிருக்கின்ற திரு ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

   //பரிசு மழை பொழிகின்ற தங்களுக்கு பாராட்டுக்கள்!//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், மழையெனப் பொழிந்து வரும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   நீக்கு
  2. வாழ்த்துக்கு நன்றி நடனசபாபதி சார்

   நீக்கு
 10. திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கே. பி. ஜனா... December 23, 2015 at 11:40 AM

   வாங்கோ, வணக்கம்.

   //திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
  2. வாழ்த்துக்கு நன்றி ஜனா சார்.

   நீக்கு
 11. சாதனையாளர் விருது வென்ற திரு சரணாகதி ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு வாழ்த்துகள்.முருகு பொண்ணோட கடிதம் படித்து போட்டில கலந்து வெற்றியும் பெற்றிருக்காங்க. இவங்க கடிதத்திலும் நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டு இருக்காங்க. நான் மட்டும் எப்டி நேயர் கடிதம் எழுதாம இருந்தேன்னு இப்ப தோணுது. எல்லாம் கோபால் சார் கொடுத்து வரும் உற்சாகமும் தான் முக்கியமான காரணம். விருதுமட்டும் கொடுப்பதில் திருப்தி ஏற்படாமல் கை காசு செலவு பண்ணி ரொக்கப்பரிசுகளும் கொடுத்து மற்றவர்களை சந்தோஷப்படுத்தி அதில் அவரும் சந்தோஷப்படுகிறார் எத்தனை பேருக்கு இப்படி ஒரு தாராள மனசு வர்ம். இவ்வளவு கடுமையாக உழைப்பதில் இரவு தூக்கமே வருவதில்லை என்று அடிக்கடி சொல்கிறார். அதுக்கு காரணம் ( உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா)
  இந்தப்பாட்டு இவருக்காகவே பாடப்பட்டிருக்கும்போல. புராண காலத்தில் கர்ணனுக்காக பாடப்பட்டிருந்தாலும் இப்ப
  இந்த வாரி வழங்கும் கர்ண மஹாராஜாவுக்கும் பொருந்தும் விதமாக இருக்கே. சரி இனிமேலாவது நன்கு ரெஸ்ட் எடுத்து ஹெல்த் கேர் எடுத்துக்கொள்ளணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் December 23, 2015 at 11:52 AM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

   //சாதனையாளர் விருது வென்ற திரு சரணாகதி ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு வாழ்த்துகள். முருகு பொண்ணோட கடிதம் படித்து போட்டில கலந்து வெற்றியும் பெற்றிருக்காங்க. இவங்க கடிதத்திலும் நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டு இருக்காங்க.//

   ஆமாம்மா. அவருக்கான தங்களின் வாழ்த்துகளுக்கும், நம் முருகு(மின்னலு)வின் தூண்டுகோலுக்கும் மிக்க மகிழ்ச்சி + நன்றிம்மா.

   //நான் மட்டும் எப்டி நேயர் கடிதம் எழுதாம இருந்தேன்னு இப்ப தோணுது.//

   அதையும் நான் கேட்டுத்தான் வாங்கணுமோ! :) இந்தமுறை நான் யாரையுமே ‘நேயர் கடிதம்’ எழுதி அனுப்புங்கோ எனக் கேட்கவே இல்லை. அப்படியும் நம் முருகு (மின்னலு), அவர்களாகவே உருக்கமாக எழுதி அனுப்பியிருந்ததை மட்டும் வெளியிட்டேன். அதைப்பார்த்து இவரும் அவராகவே எழுதி அனுப்பியுள்ளார்.

   //எல்லாம் கோபால் சார் கொடுத்து வரும் உற்சாகமும் தான் முக்கியமான காரணம்.//

   உற்சாகத்திற்கே இப்போதெல்லாம் பெரும் உற்சாகம் தந்துகொண்டிருக்கும், உற்சாகப் பூந்தளிர் என்றும் வாழ்க வாழ்கவே. :)

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> பூந்தளிர் (2)

   //விருதுமட்டும் கொடுப்பதில் திருப்தி ஏற்படாமல் கை காசு செலவு பண்ணி ரொக்கப்பரிசுகளும் கொடுத்து மற்றவர்களை சந்தோஷப்படுத்தி அதில் அவரும் சந்தோஷப்படுகிறார். எத்தனை பேருக்கு இப்படி ஒரு தாராள மனசு வர்ம். இவ்வளவு கடுமையாக உழைப்பதில் இரவு தூக்கமே வருவதில்லை என்று அடிக்கடி சொல்கிறார். அதுக்கு காரணம் (உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா)//

   ஆஹா, சூப்பர் பாட்டு. சிவகாமியே நேரில் வந்து ராகத்துடன் இந்தப்பாட்டைப் பாடுவது போல கற்பனை செய்து எனக்குள் மகிழ்ந்துகொண்டேன்.

   //இந்தப்பாட்டு இவருக்காகவே பாடப்பட்டிருக்கும்போல. புராண காலத்தில் கர்ணனுக்காக பாடப்பட்டிருந்தாலும் இப்ப
   இந்த வாரி வழங்கும் கர்ண மஹாராஜாவுக்கும் பொருந்தும் விதமாக இருக்கே.//

   இதே கருத்தினை ஏற்கனவே உங்களைப்போன்றே என்னிடம் தனிப்பிரியமுள்ள வேறொருவர் தன் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

   ’பதிவுலகக் கர்ணன்’ என்று எனக்கு ஓர் பட்டமும் கொடுத்து மகிழ்ந்துள்ளார்கள்.

   அதற்கான இணைப்பு இதோ:

   http://gopu1949.blogspot.in/2014/11/part-4-of-4.html

   //சரி இனிமேலாவது நன்கு ரெஸ்ட் எடுத்து ஹெல்த் கேர் எடுத்துக்கொள்ளணும்//

   என் மேல் தங்களின் தனி அக்கறைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சிவகாமி.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
  3. வாங்க பூந்தளிர் மேடம் எவ்வளவு பெரிய பின்னூட்டம். சந்தோஷமா இருக்கு. நன்றி மேடம்

   நீக்கு
 12. ஹையோ..... எங்கட கடதாசி படிச்சு போட்டு போட்டில கலந்துகிடதா இவுக சொல்லினாக. கெலிச்சுபோட்டாகல்லா. வாழ்த்துகள் சார். இவுக கடதாசிகூட நல்லா இருக்குது.இவுகல்லார போலயும் எனிக்கு மட்டும் ஏன் நல்ல தமிளு எளுத ஏலமாட்டேகுது. ஆனாகூட எங்கட குருஜி என்னியும் சாதனயாளரா பாராட்டி போட்டாகல்லா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru December 23, 2015 at 12:53 PM

   வாம்மா, மின்னலு, நல்லா இருக்கீங்களா?

   //ஹையோ..... எங்கட கடதாசி படிச்சு போட்டு போட்டில கலந்துகிடதா இவுக சொல்லினாக. கெலிச்சுபோட்டாகல்லா. வாழ்த்துகள் சார்.//

   ஆமாம். மின்னலு, உங்க கடதாசியப் படிச்சுப் போட்டுதான் போட்டிலே இவுக கலந்துகிட்டாகளாம். கெலிச்சும் போட்டாக. உங்க வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

   //இவுக கடதாசிகூட நல்லா இருக்குது.//

   ஆமாம். நல்லாவே எழுதியிருக்காக !

   //இவுகல்லார போலயும் எனிக்கு மட்டும் ஏன் நல்ல தமிளு எளுத ஏலமாட்டேகுது.//

   அது உங்க ஸ்பெஷாலிடி. கொச்சைத்தமிழிலும் பேச்சு வழக்குத் தமிழிலும் எல்லோராலும் எழுதிகிட ஏலாதில்ல ! :)

   //ஆனாகூட எங்கட குருஜி என்னியும் சாதனயாளரா பாராட்டி போட்டாகல்லா.//

   கிளிகொஞ்சும் கொச்சைத்தமிழில், பேச்சு வழக்குத்தமிழில் எழுதியதாலேயே உங்களையும் சாதனையாளராக்கி பாராட்டி என்னால் மகிழ்ச்சியுடன் போட முடிந்தது.

   தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மின்னலு !

   அன்புடன் குருஜி

   நீக்கு
  2. வாம்மா முருகு. எப்படியோ என்ன போட்டில கலந்துகொள்ளவும் ஜெயிக்கவும் வச்சிட்டீங்க. நன்றியோ.நன்றி

   நீக்கு
 13. சாதனையாளர் விருது வென்ற திரு ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு வாழ்த்துகள். நேயர் கடிதம் ரொம்ப நல்லா இருக்கு. திரு கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் இஸ் வெல்....... December 23, 2015 at 2:06 PM

   வாங்கோ, வணக்கம்.

   //சாதனையாளர் விருது வென்ற திரு ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு வாழ்த்துகள். நேயர் கடிதம் ரொம்ப நல்லா இருக்கு. திரு கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள்.//

   தங்களின் தொடர் வருகைக்கும், வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
  2. வாங்க ஆல்இஸ்வெல். வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு
 14. சாதனையாளர் திரு சரணாகதி ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு வாழ்த்துகள். கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. srini vasan December 23, 2015 at 2:11 PM

   வாங்கோ, வணக்கம்.

   //சாதனையாளர் திரு சரணாகதி ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு வாழ்த்துகள். கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள்//

   தங்களின் தொடர் வருகைக்கும், வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
  2. வாங்க ஸ்ரீனிவாஸன் சார் வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு
 15. உண்மையாகவே சாதனை தான் படைத்துள்ளார். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam December 23, 2015 at 2:40 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //உண்மையாகவே சாதனை தான் படைத்துள்ளார். வாழ்த்துகள்.//

   தங்களின் தொடர் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் VGK

   நீக்கு
  2. வாங்க கீதா மேடம். வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு
 16. 801~ஆவது பதிவை வெற்றிகரமாக வெளியிட்ட திரு. வை கோ சார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
  (800~க்கு சொல்ல விடுபட்டதால் இப்பொழுது!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்
   December 23, 2015 at 6:19 PM

   வாங்கோ நண்பரே, வணக்கம்.

   //801~ஆவது பதிவை வெற்றிகரமாக வெளியிட்ட திரு. வை கோ சார் அவர்களுக்கு வாழ்த்துகள். (800~க்கு சொல்ல விடுபட்டதால் இப்பொழுது!)//

   ஆஹா, அருமை. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, நண்பரே !

   அன்புடன் VGK

   நீக்கு
 17. 801~ஆவது பதிவை வெற்றிகரமாக வெளியிட்ட திரு. வை கோ சார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
  (800~க்கு சொல்ல விடுபட்டதால் இப்பொழுது!)

  பதிலளிநீக்கு
 18. 24 நாட்களுக்குள் முடித்திருக்கிறார் என்றால் உண்மையிலேயே எக்ஸ்பிரஸ் ஸ்ரீவத்சன் தான். சாதனையாளருக்கும் அவரை ஊக்குவித்துப் பரிசு பெற வைத்த திரு கோபு சாருக்கும் பாராட்டுகக்ள்! நேரில் பேசுவது போல் அமைந்த கடிதமும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி December 23, 2015 at 8:36 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //24 நாட்களுக்குள் முடித்திருக்கிறார் என்றால் உண்மையிலேயே எக்ஸ்பிரஸ் ஸ்ரீவத்சன் தான். சாதனையாளருக்கும் அவரை ஊக்குவித்துப் பரிசு பெற வைத்த திரு கோபு சாருக்கும் பாராட்டுகக்ள்! நேரில் பேசுவது போல் அமைந்த கடிதமும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும், சாதனையாளர் ‘எக்ஸ்பிரஸ் ஸ்ரீவத்ஸனை’யும் அவரின் சாதனை + நேயர் கடிதம் இரண்டையும் வாழ்த்திப் பாராட்டியுள்ளதற்கும் + என்னையும் பாராட்டிச் சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
  2. வாங்க கலையரசி மேடம் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 19. //இது மட்டுமா வித்யாசமா யோசித்து போட்டிகள் வைத்து கைப் பணம் செலவு செய்து ரொக்கப் பரிசுகளும் கொடுத்து விருதுகள் பரிசுகள் என்று அள்ளி அள்ளி வழங்குகிறார்கள். இறைக்கிற கிணறு தான் ஊறும்னு சொல்வாங்க இல்லியா. இவர் கொடுப்பதைப்போல பல மடங்கு விருதுகளும் பரிசுகளும் பாராட்டுகளும் இவரைத்தேடி வருவது ஒன்றும் அதிசயமில்லையே !// முற்றிலும் உண்மைதான். பரிசுபெற்றமைக்கும், அழகான நேயர் கடிதத்திற்கும் வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI December 23, 2015 at 8:44 PM

   வாங்கோ வாத்யாரே, வணக்கம்.

   **இது மட்டுமா வித்யாசமா யோசித்து போட்டிகள் வைத்து கைப் பணம் செலவு செய்து ரொக்கப் பரிசுகளும் கொடுத்து விருதுகள் பரிசுகள் என்று அள்ளி அள்ளி வழங்குகிறார்கள். இறைக்கிற கிணறு தான் ஊறும்னு சொல்வாங்க இல்லியா. இவர் கொடுப்பதைப்போல பல மடங்கு விருதுகளும் பரிசுகளும் பாராட்டுகளும் இவரைத்தேடி வருவது ஒன்றும் அதிசயமில்லையே !**

   //முற்றிலும் உண்மைதான். பரிசுபெற்றமைக்கும், அழகான நேயர் கடிதத்திற்கும் வாழ்த்துகள்!!!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வாத்யாரே !

   அன்புடன் VGK

   நீக்கு
  2. வாங்க ரவிஜி. வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு
 20. congrats to Srivatsan & Gopal Sir. sorry no tamil font in my son's laptop :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan December 24, 2015 at 12:37 PM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   //congrats to Srivatsan & Gopal Sir.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //sorry no tamil font in my son's laptop :)//

   பதிவு வெளியிட்டு 37 மணி நேரங்கள் ஆகியும் இன்னும் தேன் மழை பொழியக் காணுமே என நான் நினைத்தபோதே .... எனக்கு சந்தேகம் வந்தது .... இதுபோல ஏதும் Font பிரச்சனை இருக்குமோ என்று. :)

   இப்போது அந்த சந்தேகமும் தீர்ந்தது. மிக்க நன்றி, மேடம்.

   அன்புடன் கோபால்

   நீக்கு
  2. வாங்க மேடம் வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு
 21. சார் வணக்கம். எனக்கும் சாதனையாளர் விருதெல்லாம் கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கீங்க.நன்றிகள். விவரமா பெரிய பின்னூட்டமிடதான் ஆசை.நேரம் தொறத்துது. வாழ்த்து சொன்னவங்களுக்கெல்லாம் ரிப்ளை பண்ணனும் இல்லையா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரணாகதி. December 24, 2015 at 5:55 PM

   //சார் வணக்கம்.//

   வாங்கோ, வணக்கம். நலம் தானே. உங்களை இங்கு இன்று கண்டதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.

   //எனக்கும் சாதனையாளர் விருதெல்லாம் கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கீங்க. நன்றிகள்.//

   உண்மையிலேயே சாதனை படைத்துள்ள தங்களைப் பெருமைப்படுத்த ஓர் நல் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. அதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.

   //விவரமா பெரிய பின்னூட்டமிடதான் ஆசை. நேரம் தொறத்துது.//

   உங்கள் நிலமை எனக்கு நன்கு புரிகிறது. அதனால் பரவாயில்லை.

   //வாழ்த்து சொன்னவங்களுக்கெல்லாம் ரிப்ளை பண்ணனும் இல்லையா.//

   பண்ணுங்கோ, பண்ணுங்கோ. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   நீக்கு
 22. தொடர்ந்து பரிசுகளை அள்ளித்தரும் வள்ளலுக்கு சல்யூட்!
  ஸ்ரீவத்ஸனுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 23. வாங்க சென்னை பித்தன் சார் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை பித்தன் December 24, 2015 at 7:56 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //தொடர்ந்து பரிசுகளை அள்ளித்தரும் வள்ளலுக்கு சல்யூட்! ஸ்ரீவத்ஸனுக்கு வாழ்த்துகள்//

   ஆஹா, அன்புடன் வருகை தந்து பின்னூட்டமளித்த வள்ளலாகிய தங்களுக்கும் என் ராயல் சல்யூட் சார் :) - VGK

   நீக்கு
 24. வெற்றிவாகை சூடிய சரணாகதி வலைத்தள பதிவர் திரு ஸ்ரீவத்ஸனுக்கு பாராட்டுகள்! மேலும் பல வெற்றிகள் உங்களை வந்தைய வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Seshadri e.s. December 25, 2015 at 8:46 AM

   வாங்கோ, வணக்கம்.

   //வெற்றிவாகை சூடிய சரணாகதி வலைத்தள பதிவர் திரு ஸ்ரீவத்ஸனுக்கு பாராட்டுகள்! மேலும் பல வெற்றிகள் உங்களை வ ந் த டை ய வாழ்த்துகள்!//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. - vgk

   நீக்கு
  2. வாங்க சேஷாத்ரி சார். வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு
 25. சாதனையாளர் சரணாகதி ஸ்ரீவத்ஸன் ஸார் அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. siva siva December 26, 2015 at 11:04 AM

   //சாதனையாளர் சரணாகதி ஸ்ரீவத்ஸன் ஸார் அவர்களுக்கு வாழ்த்துகள்//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

   நீக்கு
 26. புதிய பதிவரும் பின்னூட்டப்போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்தவருமான ஸ்ரீவத்சன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் உற்சாகப்படுத்தி வெற்றிபெற வைப்பதில் கோபு சாருக்கு நிகர் கோபு சார் மட்டுமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி December 27, 2015 at 9:38 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //புதிய பதிவரும் பின்னூட்டப்போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்தவருமான ஸ்ரீவத்சன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் உற்சாகப்படுத்தி வெற்றிபெற வைப்பதில் கோபு சாருக்கு நிகர் கோபு சார் மட்டுமே.//

   :)))))) சந்தோஷம், மேடம் :))))))

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 27. சாதஜஜயாளர் திரு ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 28. போன கமண்ட் ஸ்பெலிங்க் மிஸ்டேக் ஆயிடிச்சி. அதுதான் மீண்டும்வந்தேன். சாதனையாளருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shamaine bosco December 27, 2015 at 10:25 AM

   வாங்கோ, வணக்கம்.

   //போன கமண்ட் ஸ்பெலிங்க் மிஸ்டேக் ஆயிடிச்சி. அதுதான் மீண்டும்வந்தேன். சாதனையாளருக்கு வாழ்த்துகள்//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 29. ஸ்ரீவத்சன் அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள்! பரிசுகளை அள்ளி வழங்கும் வள்ளலாகிய தங்களுக்கும் வாழ்த்துகள் சார்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu
   December 28, 2015 at 1:00 AM

   //ஸ்ரீவத்சன் அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள்! பரிசுகளை அள்ளி வழங்கும் வள்ளலாகிய தங்களுக்கும் வாழ்த்துகள் சார்!!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். அன்புடன் VGK

   நீக்கு
 30. திருஸ்ரீவத்ஸன் அவர்களுக்குப் பாராட்டுகள். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமாட்சி December 28, 2015 at 7:05 PM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

   //திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்குப் பாராட்டுகள். அன்புடன்//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. அன்புடன் கோபு

   நீக்கு
 31. //ஒவ்வொரு பதிவு படிச்சதும் அதன் வைப்ரேஷன் ரொம்ப நேரம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்..//

  நல்லதொரு சாப்பாட்டுக்கு அப்புறம் நாக்கிலும், மனசிலும் அதன் சுவை நிக்குமே. அதே மாதிரிதான். கோபு அண்ணா எழுத்துக்கள். படித்ததோடு நிற்காமல் அதைப் பற்றி மனசை அசை போடவும் வைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya December 30, 2015 at 5:09 PM

   **ஒவ்வொரு பதிவு படிச்சதும் அதன் வைப்ரேஷன் ரொம்ப நேரம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்..**

   //நல்லதொரு சாப்பாட்டுக்கு அப்புறம் நாக்கிலும், மனசிலும் அதன் சுவை நிக்குமே. அதே மாதிரிதான். கோபு அண்ணா எழுத்துக்கள். படித்ததோடு நிற்காமல் அதைப் பற்றி மனசை அசை போடவும் வைக்கும்.//

   என்னவோ சொல்லுங்கோ ...... :)

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 32. //செல்வி. முருகு அவர்களின் நேயர் கடிதம் படித்ததும் எனக்கும் பின்னூட்டப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் வந்தது. அவங்களே 31 நாட்களுக்குள் ஜெயிச்சு காட்டி இருக்காங்க. நாமளும் கலந்துக்கலாமேன்னு தோணித்து. போட்டில நான் கலந்து கொள்ள காரணம் முருகு அவங்கதான். அவங்களுக்கு என் நன்றிகள்.//

  NOT ONLY 'BEHIND EVERY SUCCESSFUL MAN THERE IS A WOMAN'. 'BEHIND EVERY SUCCESS THERE IS A WOMAN.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya December 30, 2015 at 5:11 PM

   **செல்வி. முருகு அவர்களின் நேயர் கடிதம் படித்ததும் எனக்கும் பின்னூட்டப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் வந்தது. அவங்களே 31 நாட்களுக்குள் ஜெயிச்சு காட்டி இருக்காங்க. நாமளும் கலந்துக்கலாமேன்னு தோணித்து. போட்டில நான் கலந்து கொள்ள காரணம் முருகு அவங்கதான். அவங்களுக்கு என் நன்றிகள்.**

   NOT ONLY 'BEHIND EVERY SUCCESSFUL MAN THERE IS A WOMAN'. 'BEHIND EVERY SUCCESS THERE IS A WOMAN.

   SUPERB ! YOU ARE VERY CORRECT !!

   BEHIND MY SUCCESS, THERE IS 'JAYA' ALSO என்று நான் இனி சொல்லிக்கொள்ளலாமா, ஜெ? :)

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 33. ஸ்ரீவத்சன் என்கிற சரணாகதி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  சரணாகதி அடைந்தது கோபால கிருஷ்ணனின் வலைத்தளத்தில் அல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya December 30, 2015 at 5:12 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //ஸ்ரீவத்சன் என்கிற சரணாகதி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //சரணாகதி அடைந்தது கோபால கிருஷ்ணனின் வலைத்தளத்தில் அல்லவா?//

   அடேங்கப்பா ..... புத்திசாலி ..... சமத்தூஊஊஊ.
   ரஸித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி, ஜெ.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு