என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 4 டிசம்பர், 2015

திருச்சி மலைக்கோட்டை மஹா கும்பாபிஷேகம்

06.12.2015 ஞாயிறு 
திருச்சி மலைக்கோட்டை
உச்சியில் அமர்ந்துள்ள
உச்சிப்பிள்ளையார் + 
கீழே அமர்ந்துள்ள மாணிக்க விநாயகர் + 
குன்றின் இடையே அமர்ந்துள்ள 
அருள்மிகு மட்டுவர் குழலம்மை அம்மனுடன் 
அருள்மிகு தாயுமானவர் கோயில்களில்
மஹா கும்பாபிஷேகம் 
மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.


கடந்த ஒரு வாரமாகவே இரவினில் வண்ண வண்ண
மின் விளக்குகளால் ஜொலித்து வரும் மலைக்கோட்டை

 என் குடியிருப்புப் பகுதி வாசலிலிருந்து
03.12.2015 பகலில் எடுக்கப்பட்ட 
உச்சிப்பிள்ளையார் மற்றும் 
தாயுமானவர் கோயில் தோற்றங்கள் .
(மேலும் கீழுமாக) 

முன்னதாக 30.11.2015 கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன, மறுநாள் 01.12.2015 காலையில் கோபூஜை, கஜபூஜை ஆகியவையும், இரவு பிடிமண் பிடித்தல் (மிருசங்கிரகணம்), பிரதான சிவாச்சாரியாருக்கு காப்புக்கட்டுதல் (ரக்ஷா பந்தனம்) ஆகியவை நடந்தன.  


தாயுமானவர் சன்னதி கருவறை விமான தங்கக்கலசம் 
புதுப்பொலிவு பெற்று ஜொலிக்கிறது.
பின்னால் தெரிவது உச்சிப்பிள்ளையார் சன்னதி.


02.12.2015 காலை காவிரி நதியிலிருந்து புனித நீர் சேகரித்து
யானைமீது வைத்து, ஊர்வலம் மற்றும் கிரிவலமாக
கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.


02.12.2015 இரவு சிவாகம முறைப்படி எட்டுக்கால யாகசாலை பூஜைகளில் முதல்கால பூஜை துவங்கியுள்ளது. 03.12.2015 காலை முதல் 05.12.2015 இரவு வரை மீதி ஏழுகால பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

06.12.2015 அதிகாலை 4 மணியளவில் 8ம் கால யாகசாலை பூஜை துவங்கி 7 மணியளவில் மஹா பூர்ணாஹூதி நடக்க உள்ளது. 

தொடர்ந்து 06.12.2015 காலை எட்டு மணியளவில், மாணிக்க விநாயகர், தாயுமானவர் ஸ்வாமி, மட்டுவர் குழலம்மை, உச்சிப்பிள்ளையார் சன்னதி விமானங்களுக்கும், பரிவார மூர்த்திகள் விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

யாகசாலை மற்றும் மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை, கஞ்சனூர் திரு. நீலகண்ட சிவாச்சாரியார் அவர்கள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் மற்றும் கோயில் அர்ச்சக சிவாச்சாரியார்கள் நடத்த உள்ளனர்.

-oOo-

மஹா கும்பாபிஷேக ஏற்பாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் குழுக்களில் உள்ளவர்கள்:

அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையரும், மலைக்கோட்டை கோயில் தக்காருமான திருமதி. கல்யாணி அவர்கள்.

தருமையாதீனம் குருமகாசந்நிதானம் சண்முகதேசிக ஞானசம்பந்த ஸ்வாமிகள் அவர்கள்.

கோயில் நிர்வாக அதிகாரியும் உதவி ஆணையருமான திரு. சுரேஷ் அவர்கள்.

மலைக்கோட்டை மவுன மடம் கட்டளை விசாரணை குமாரசாமித் தம்பிரான் அவர்கள்.

கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் 

-oOo-

தென்கைலாயம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதும், சைவத் திருத்தலங்களில் முக்கியமானதுமான திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி கோயில் ஓர் மலைக்கோயிலாகும். 274 அடி உயரத்துடன் இயற்கையிலேயே மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள இந்த மலைக்குன்றில் முதலாவதாக மட்டுவர் குழலம்மை (ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள்) சன்னதியும்,  இரண்டாவதாக தாயுமானவர் (ஸ்ரீ கல்யாண மாத்ரு பூதேஸ்வரர்) சன்னதியும், மூன்றாவதாக உச்சிப்பிள்ளையார் சன்னதியும் பழங்காலக் கட்டடக்கலையுடன் கட்டப்பட்டுள்ளன. இந்த சன்னதிகளை அடைய 417 படிகள் உள்ளன.

தொடர்புள்ள, மிகச்சிறிய ஆனால்
மிகவும் சுவாரஸ்யமான பழைய பதிவு

காது கொடுத்துக் ..... கேட்டேன் ..... 
ஆஹா, குவா குவா ... சத்தம் ....
ANOTHER VIEW TAKEN JUST NOW - 04.12.2015 - 9.30 PM - VGK


நன்றி: திருச்சி தினமலர் 05.12.2015


oooooooooooooooooooooooooooooooooooooo

இன்று 06.12.2015 ஞாயிறு 
மஹா கும்பாபிஷேகத்தன்று 
இணைத்துள்ள புதிய படங்கள்


(1) தொலைகாட்சி நேரடி ஒலிபரப்புகளிலிருந்து

(2) தினமலர் செய்தித்தாளிலிருந்து

(3) எங்கள் குடியிருப்பு வளாக மொட்டை மாடியிலிருந்து
இன்று 6.12.2015 ஞாயிறு காலையில் 
என்னால் எடுக்கப்பட்ட ஒருசில படங்கள்

ROCKFORT TEMPLE ON 06.12.2015 - 8 AM

ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி
கோயிலின் இருபுற கோபுரங்களும்,
கருவறை விமானங்களும். 
{Main Guard Gate Church is also covered}
  
ROCKFORT TEMPLE ON 06.12.2015 - 8.15 AM

{ Some other couple - neighbours - in our open terrace } 


இன்று 07.12.2015 வெளியிடப்பட்டுள்ள
தினமலர் படம் ... இதோ
என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]


   

41 கருத்துகள்:

 1. ஆஹா, உங்கள் வீட்டு ஜன்னலிருந்தே கும்பாபிஷேக வைபவங்களைக் கண்டு கொள்ள முடியுமே! அவ்வளவு படிகள் ஏறிப் போகவேண்டாம். கொடுத்து வச்ச மகானுபாவன், கோயில் வைபவங்களை அவ்வப்போது பதிவிடுங்கள். நாங்கள் உங்கள் மூலமாக உச்சிப்பிள்ளையார் அருளைப் பெற்றுக் கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
 2. வீட்டிலிருந்தபடியே கும்பாபிஷேகம் பார்க்க வசதி.... நிகழ்வுகளைப் புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.... படங்கள் வழியேனும் நாங்களும் பார்க்க முடியும்....

  பதிலளிநீக்கு
 3. மஹா கும்பாபிஷேகம் பற்றிய சிறப்பு தகவல்களுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 4. கந்தசாமி சார் சொன்னத வழிமொழிகிறேன் கோபால் சார் !

  கொடுத்து வைத்தவர் தாங்கள் வீட்டிலிருந்தே கும்பாபிஷேகத்தைக் கண்டு களிக்கலாம். தாயுமானவரைத் தரிசிக்க ஒரு முறை வந்துள்ளோம். எங்களுக்காகவும் சேர்த்து தரிசனம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள். :)

  பதிலளிநீக்கு
 5. படங்களும் பதிவும் கண்களையும் மனதையும் சந்தோஷப்படுத்துகிறது. உங்க வீட்டு ஜன்னல் வழியாக எல்லா உற்சவங்களையும் கண்ணுகளிக்கும் பெரும் புண்ணியசாலி நீங்க. அந்த புண்ணியம் எங்களையும் சேர வைக்கிறீங்க. நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் போதாது.

  பதிலளிநீக்கு
 6. Pillaiyar kankalai kotti kotti paarkiraar!! superb! Live telecast irukkumannu therila. ungal virivaana pathivai ethirnokkugiren.

  பதிலளிநீக்கு
 7. காலேல 11--மணிக்கு வந்து ஒருகமெண்ட் போட்டேன். என்னோட கமண்ட மட்டும் தூக்கிண்டு போக காககா குருவிலாம் ரெடியா காத்திண்டு இருக்கு. அப்ப நெட்ஒர்க் எரர் வந்தது. விடுவேனா மீண்டும் வந்துவிட்டேன். அடாது மழை பெய்தாலும்மமமமமமமம
  வெள்ளிக்கிழமையும் அதுவுமா திருச்சி மலைக்கோட்டை கும்பாபிஷேக தரிசனம். கிடைத்தது. உங்க தயவால. படங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. எல்லா படங்களுமே உங்க குடியிருப்பு பகுதிலேந்து எடுத்ததா. நீங்க கோவிலுக்குள்ள போயி உற்சவத்தில் கலந்துக்கலயா. காஹிரிலேந்து தண்ணீரை யானைமேல் வைத்து கொண்டு வருவதில் இருந்து அழகா சொல்லியிருக்கேள். எங்களுக்கும் கொஞ்சம் புண்ணியம் கடைத்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் December 4, 2015 at 3:10 PM

   வாங்கோ, சிவகாமி, வணக்கம்மா.

   //காலேல 11--மணிக்கு வந்து ஒருகமெண்ட் போட்டேன். என்னோட கமண்ட மட்டும் தூக்கிண்டு போக காக்கா குருவிலாம் ரெடியா காத்திண்டு இருக்கு.//

   உங்களுடையது என்றால் அது ஒரு தனி ஸ்பெஷல் டேஸ்ட் ஆச்சே. அதனால் என்னைப்போலவே என்னுடன் போட்டிபோட்டுக்கொண்டு காக்கா, குருவிகளும் அதை டேஸ்ட் செய்ய வந்திடுதோ என்னவோ :)

   //அப்ப நெட்ஒர்க் எரர் வந்தது. விடுவேனா மீண்டும் வந்துவிட்டேன். அடாது மழை பெய்தாலும்ம்ம்ம்ம்ம்ம்//

   மிகவும் சந்தோஷம்மா.உங்க காட்டுல இப்போ மழை பெய்யுதாக்கும். :)

   //வெள்ளிக்கிழமையும் அதுவுமா திருச்சி மலைக்கோட்டை கும்பாபிஷேக தரிசனம். கிடைத்தது. உங்க தயவால. படங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.//

   மிக்க மகிழ்ச்சிம்மா. நேரில் புறப்பட்டு வாங்கோ. நேரிலேயே உச்சிக்குப்போய் உச்சிகுளிர பார்க்கலாம். :)

   //எல்லா படங்களுமே உங்க குடியிருப்பு பகுதிலேந்து எடுத்ததா.//

   ஆமாம்மா. இதில் பல படங்கள் எங்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து எடுத்தது மட்டுமே. நேரில் போனால்கூட அந்தக்கூட்டத்தில் இப்படியெல்லாம் எடுக்கவே முடியாமல் போகும்.

   //நீங்க கோவிலுக்குள்ள போயி உற்சவத்தில் கலந்துக்கலயா.//

   அதெல்லாம் நான் நிறுத்தி பல நாட்கள் ஆச்சு. எனக்கு கும்பல் கூட்டம் என்றால் ஏனோ இப்போதெல்லாம் பிடிப்பது இல்லை. சிறுவயதில் பலமுறை நேரில் சென்று வந்துள்ளேன்.

   //காவிரிலேந்து தண்ணீரை யானைமேல் வைத்து கொண்டு வருவதில் இருந்து அழகா சொல்லியிருக்கேள். எங்களுக்கும் கொஞ்சம் புண்ணியம் கடைத்தது. நன்றி.//

   மிகவும் சந்தோஷம்மா. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிம்மா. தாமதமான என் பதிலுக்கு மன்னிச்சுக்கோங்கோம்மா. வரவர இதற்கெல்லாம் என்னால் முடியலேம்மா :)

   பிரியத்துடன் கோபு

   நீக்கு
  2. ரிப்ளை (பெரிய) பின்னூட்டத்திற்கு நன்றி

   நீக்கு
  3. பூந்தளிர் December 22, 2015 at 6:11 PM

   //ரிப்ளை (பெரிய) பின்னூட்டத்திற்கு நன்றி//

   கேட்டதும் கொடுப்பவனே ....

   (கோபால) கிருஷ்ணா ..... கிருஷ்ணா ! :)

   நீக்கு
 8. //வீட்டிலிருந்தபடியே கும்பாபிஷேகம் பார்க்க வசதி.... நிகழ்வுகளைப் புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.... படங்கள் வழியேனும் நாங்களும் பார்க்க முடியும்....//

  வெங்கட் சொன்னது போல் பகிர்ந்து கொள்ளுங்கள் நாங்களும் கண்டு களிக்கிறோம்.

  கும்பாபிஷேகத்திற்கு முன் உள்ள நிகழவுகள் பற்றிய செய்திகள், படம் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
 9. கும்பாபிஷேக நிகழ்வுகள் சிறப்பு பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 10. நம்ப ஊர் திருச்சியை சிலாகித்து எப்போதும் எழுதும் மூத்த வலைப்பதிவர் நீங்கள்தான். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமிகள் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுகளை எழுத ஆரம்பித்தமைக்கு நன்றி. படங்கள் யாவும் சூப்பர். உங்கள் பதிவினில் மலைக்கோட்டையைப் பார்க்கும்தோறும் அந்நாளைய திருச்சி டவுன் வாழ்க்கை நினைவுக்குள் வந்து நிழலாடின. இரவுநேர அலங்கார விளக்குகள் காட்சியை செங்குத்தாக (Vertical) எடுத்தது போலவே கிடைசாண் (Horizontal) ஆகவும் ஒரு படம் எடுத்து போடவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ December 4, 2015 at 8:22 PM

   //இரவுநேர அலங்கார விளக்குகள் காட்சியை செங்குத்தாக (Vertical) எடுத்தது போலவே கிடைசாண் (Horizontal) ஆகவும் ஒரு படம் எடுத்து போடவும்.//

   இப்போது சற்று நேரம் முன்பு (9.30 PM) எடுக்கப்பட்ட படம் இந்தப்பதிவினில் புதிதாக கடைசியில் சேர்க்கப்பட்டுள்ளது. - vgk

   நீக்கு
  2. அன்புடையீர், வணக்கம்.

   இன்று காலை (05.12.2015) திருச்சி தினமலர் நாளிதழின் சிட்டி நியூஸ் பகுதியில் வெளியாகியுள்ள ஓர் படம் புதிதாக இந்தப்பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

   இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

   அன்புடன் VGK

   நீக்கு
 11. வணக்கம்
  ஐயா
  தங்களின் பதிவை படித்த போது இறை தரிசனம் கிடைத்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 12. ஆஹா...கொடுத்து வைத்தவன்...இங்கேருந்தே என் பள்ளிப்பருவ நாட்களை நினைவு கூரும் கோயில் பதிவுகளை காண வாய்த்ததே. கோயிலுக்கு இவ்வளவு அருகில் வீடென்றால் கொடுத்து வைத்தவர் நீங்கள்

  பதிலளிநீக்கு
 13. கும்பாபிஷேக தகவல்கள் அருமை அய்யா!

  பதிலளிநீக்கு
 14. திருச்சி மலைக்கோட்டை மகா கும்பாபிஷேகம் பற்றிய தகவல்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிதாக இணைக்கப்பட்ட படங்களையும் பார்த்து இரசித்தேன்!

   நீக்கு
 15. அன்புடையீர்,

  அனைவருக்கும் வணக்கம்.

  இன்று 06.12.2015 ஞாயிறு காலை 8 மணிக்கு மேல் திருச்சி மலைக்கோட்டை கோயில் மஹா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

  மேலும் சில புதிய படங்கள் இந்தப்பதிவினில் இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 16. இன்று நடந்த கும்பாபிசேக படங்களோடு மீண்டும் உங்கள் பதிவினைப் படித்தேன். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 17. புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் படங்களும் பார்த்து ரசிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
 18. மனம் மகிழும் தகவல்கள்... படங்கள்.... நன்றி.

  பதிலளிநீக்கு
 19. இன்று 07.12.2015 திருச்சி தினமலரில் வெளியிடப்பட்டுள்ள படம், இப்போது இந்தப்பதிவின் இறுதியில், புதிதாக என்னால் இணைக்கப்பட்டுள்ளது. இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 20. சென்னை மிதந்தது.

  நேற்று மாலை தொலைபேசித் தொடர்பு, இரவு மின்சாரம், இப்பொழுது வலையுலகம் கிடைக்கப்பெற்றன. தொலைக்காட்சி பாக்கி.

  நேற்றைய மஹா கும்பாபிஷேக தரிசனத்தை இன்று பார்க்க கிடைத்த பேறு பெற்றேன். தங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி December 7, 2015 at 1:50 PM

   வாங்கோ ஸார், நமஸ்காரங்கள். வணக்கம்.

   //சென்னை மிதந்தது. //

   அனைத்து விஷயங்களும் அவ்வப்போது செய்திகள் மூலம் கேள்விப்பட்டேன். மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது. இதுவரை நம் வாழ்நாளில் பார்க்காத அளவு இப்படிக் கொட்டித்தீர்த்து விட்டதே இந்த வருட மழை.

   நல்லார் ஒருவர் உளரே .......... என்று ஏதோ படித்த ஞாபகம்.

   சென்னையில் நிறைய நல்லவர்கள் இருக்கக்கூடும்
   போலிருக்கு.

   //நேற்று மாலை தொலைபேசித் தொடர்பு, இரவு மின்சாரம், இப்பொழுது வலையுலகம் கிடைக்கப்பெற்றன. தொலைக்காட்சி பாக்கி.//

   கடந்த நான்கு நாட்களாகவே அங்குள்ள என் உறவினர்கள் மற்றும் சில பதிவுலக நண்பர்களை என்னாலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள இயலாமல் போய் விட்டது. :(

   இங்கும் திருச்சியில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது நச-நசன்னு மழை பெய்துகொண்டே தான் இருந்தது. சென்னை மற்றும் கடலூர் போலெல்லாம் நல்லவேளையாக பாதிப்புகள் ஏதும் அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

   //நேற்றைய மஹா கும்பாபிஷேக தரிசனத்தை இன்று
   பார்க்க கிடைத்த பேறு பெற்றேன். தங்களுக்கு நன்றி.//

   நேற்று காலை 9 மணி வரை திருச்சியில் மேகம் மூட்டமாகத்தான் இருண்டுகொண்டு இருந்தது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் லேஸாக தூரல் மட்டும் போட்டது. பிறகு வானம் தெளிந்து விட்டது.

   இன்றுதான் கொஞ்சம் வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. :)

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப்
   பகிர்வுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + நன்றி, ஸார்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 21. சிறப்பான தொகுப்பு காட்சிகள் ஊடாக நானும் தரிசனம் கண்டேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 22. வை. கோ சார்! கண்ணுக்கு படங்களாலேயே கும்பாபிஷேகம் நடத்தி விட்டீர்கள். இந்தக்கோவில் நம் பொக்கிஷம்...

  பதிலளிநீக்கு
 23. கும்பாபிஷேக படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன . மிகவும் நன்றி. ஆறு வருடம் முன்பு வந்து மலையேறி இருக்கிறேன். இன்னொரு முறை வரணும்! ரொம்ப அதிர்ஷ்டசாலி நீங்கள், வீட்டில் இருந்தபடியே கோபுர தரிசனம் கிடைக்கிறது!

  பதிலளிநீக்கு
 24. படங்கள் கண்ணுக்கும் மனசுக்கும் - நிறைவு.

  பதிலளிநீக்கு
 25. படிக்கும் காலத்தில் நித்தமும் தரிசித்த உச்சிப்பிள்ளையார் கோவிலை இன்று தங்கள் தயவால் மீண்டும் ரசித்தேன். படங்களும் தகவல்களும் பிரமாதம். நன்றி கோபு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி December 14, 2015 at 10:20 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //படிக்கும் காலத்தில் நித்தமும் தரிசித்த உச்சிப்பிள்ளையார் கோவிலை இன்று தங்கள் தயவால் மீண்டும் ரசித்தேன். படங்களும் தகவல்களும் பிரமாதம். நன்றி கோபு சார்.//

   இன்று கிருத்திகா ஸோமவாரம் [கார்த்திகை மாத திங்கட்கிழமை] என்ற சிவபெருமானுக்கான உகந்த மிகவிசேஷ நாளில் தங்களுக்கு திருச்சி பிரபல மலைக்கோட்டை சிவபெருமானாகிய ஸ்ரீ தாயுமானவரையும், அவரின் தொந்திப் பிள்ளையான உச்சிப்பிள்ளையாரையும் சேர்ந்து தரிஸிக்கப் பிராப்தம் அமைந்துள்ளதை நினைக்க எனக்கும் மகிழ்ச்சியே. :)

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 26. ஆஹா, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு,,,,,
  இருமுறை நானும் சென்றுள்ளேன்.

  படங்கள் அருமை, பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mageswari balachandran December 16, 2015 at 11:26 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //ஆஹா, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு,,,,, இருமுறை நானும் சென்றுள்ளேன்.படங்கள் அருமை, பகிர்வுக்கு நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், ’அருமை’ என்ற அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 27. கொடுத்த வைத்த புண்ணியவானே, கொஞ்சம் அப்படியே காலை நீட்டுங்கள், அப்படியே தொட்டு ஒத்திக்கறேன்.

  தினமும் ஜன்னல் வழியே பிள்ளையாருக்கு 'HAI, GOOD MORNING' சொல்லும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும். ‘

  ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.

  இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.

  கோபு தரிசனத்துக்கே இப்படீன்னா, அந்த கோபுரம் இருக்கற மலையோட தரிசனமே கிடைக்கறதுன்னா........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya December 17, 2015 at 7:33 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா. சென்னை மழை, வெள்ளத்துக்குப்பிறகு உங்களைக் காணோமேன்னு மிகவும் கவலைப்பட்டு உச்சிப்பிள்ளையாரிடம் அழுது கொண்டே இருந்தேனாக்கும். நல்லவேளையா தனுர் மாஸப்பிறப்பான இன்று நெய் மணம் கமழும் சர்க்கரை+வெண் பொங்கலோடு வந்துட்டீங்கோ. மிக்க மகிழ்ச்சி.

   //கொடுத்த வைத்த புண்ணியவானே, கொஞ்சம் அப்படியே காலை நீட்டுங்கள், அப்படியே தொட்டு ஒத்திக்கறேன்.//

   அடடா, காலை வாரிடத்தானோன்னு நினைச்சு மிகவும் பயந்துட்டேன்.

   //தினமும் ஜன்னல் வழியே பிள்ளையாருக்கு 'HAI, GOOD MORNING' சொல்லும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும். //

   :) அது சரி !

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மலை போன்ற நீண்ட விளக்கங்களுக்கும் மிக்க நன்றி. நீங்க என்னைத்தான் மலை என்று சொல்றீங்கோ என எனக்கும் புரிகிறது. நான் என்ன செய்ய? ஜெயா போல உடம்பை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ளணும்ன்னுதான் மிகவும் ஆசையாக உள்ளது. ஆசை இருக்கு தாஸில் பண்ண ..... ஆனால் அதிர்ஷ்டம் [அதிரஸம் அல்ல] இருக்கு ...... :)

   நீக்கு
 28. கோபுர தரிசனத்துக்கு கோபு தரிசனம்ன்னு போட்டுட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya December 17, 2015 at 7:33 PM

   //கோபுர தரிசனத்துக்கு கோபு தரிசனம்ன்னு போட்டுட்டேன்.//

   அதனால் பரவாயில்லை ஜெயா. நீங்க பார்த்து எப்படிப்போட்டாலும் ஓக்கே.

   நீங்க ’கோபு’ரம் என்பதில் ’ரம்’மை எடுத்துட்டு கோபு தரிசனம்ன்னு போட்டுள்ளது எனக்கு ரம் குடித்தது போல ஓர் கிக்கை ஏற்படுத்தி விட்டதாக்கும். நன்றி ஜெயா. :)

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 29. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள

  திருவாளர்கள்:

  பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
  வெங்கட் நாகராஜ் அவர்கள்
  திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
  சரணாகதி ’ஸ்ரீவத்ஸன்’ அவர்கள்
  தி. தமிழ் இளங்கோ அவர்கள்
  ரவிஜி ரவி அவர்கள்
  எஸ்.பி. செந்தில்குமார் அவர்கள்
  வே. நடனசபாபதி அவர்கள்
  கே பி ஜனா அவர்கள்
  ஜீவி ஐயா அவர்கள்
  தனிமரம் அவர்கள்
  மோகன்ஜி அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  என்றும் அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 30. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள

  திருமதிகள்:

  தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
  மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்
  பூந்தளிர் அவர்கள்
  கோமதி அரசு அவர்கள்
  இராஜராஜேஸ்வரி அவர்கள்
  சந்தியா அவர்கள்
  கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்
  மஹேஸ்வரி பாலச்சந்திரன் அவர்கள்
  ஜெயந்தி ஜெயா அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  என்றும் அன்புடன் VGK

  பதிலளிநீக்கு