என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 19 டிசம்பர், 2015

சாதனையாளர் விருது ...... திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள் ...... மனம் {மணம்} வீசும்

அன்புடையீர், 


அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.





’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்பில் 31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் ஓர் சுலபமான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, தங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.


அதற்கான இணைப்பு தங்கள் நினைவுக்காக இதோ:


மேற்படி போட்டியில் கலந்துகொண்டு
வெற்றிபெற, வரும் 31.12.2015 
நிறைவு நாள் ஆகும்.


இதில் மிகவும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோர் அனைவருக்கும் தலா ரூபாய் ஆயிரம் [Rs. 1000/-] வீதம் ரொக்கமாகப் பரிசளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். 

 சாதனையாளர் 

திருமதி. 
 ஜெயந்தி ரமணி 
அவர்கள் 

வலைத்தளங்கள்: 
மனம் (மணம்) வீசும்
மணம் (மனம்) வீசும்
ஆன்மீக மணம் வீசும் 



 சாதனையாளர் விருது 

திருமதி.

 ஜெயந்தி ரமணி   

அவர்கள்
வலைத்தளங்கள்:
(1) மனம் (மணம்) வீசும் (2) மணம் (மனம்) வீசும் (3) ஆன்மீக மணம் வீசும் 

VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 

முதல் 750 பதிவுகளுக்கும்

  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 

Rs. 1,000 /-

[ரூபாய் ஆயிரம்]

ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !

அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

பிரியமுள்ள 
 கோபு அண்ணா
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }


இவருக்கான ரொக்கப் பரிசுத்தொகை 
03.11.2015 அன்று என்னால் அளிக்கப்பட்டது. 


பரிசுப்பணத்தை தன் கைப்பைக்குள் 
பத்திரப்படுத்திக்கொண்டிருக்கும் ஜெயா


  




16.04.2015 இல் ஆரம்பித்து 31.10.2015 க்குள் (199 நாட்களில்) விட்டுப்போன அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இட்டு முடித்துள்ளார்கள்.

பொதுவாக என்னுடைய ஒவ்வொரு பதிவினையும் முழுவதுமாக, மிகவும் ரஸித்து ருசித்துப் படித்து, தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுகளையும் கலந்து, பொறுமையாகவும், அருமையாகவும், விரிவாகவும், விஸ்தாரமாகவும், வித்யாசமாகவும் பின்னூட்டமிட்டுள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டிக்கான என் முதல் 750 பதிவுகள் மட்டுமன்றி, அதன் பிறகு நான் வெளியிட்டுள்ள அனைத்துப்பதிவுகளிலும்கூட இவர்களின் பின்னூட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

பரிசுபெற்ற மகிழ்ச்சியில் 
ஜொலிக்கும் தோற்றத்தில் நம்  ’ஜெயா’

 

மனம் நிறைந்த 
பாராட்டுகள்  + 
அன்பான இனிய 
நல்வாழ்த்துகள்!

 பிரியமுள்ள
கோபு அண்ணா 


தொடர்புள்ள பதிவுகள்

பிறந்த வீட்டு சீதனம் .... பகுதி-1



மற்ற சாதனையாளர்கள் பற்றிய செய்திகள் 
இனியும் அவ்வப்போது தொடரும்.


வெற்றியாளர்கள் பற்றிய ஒட்டுமொத்தச் செய்திகள் 
இறுதியில் தனிப்பதிவாகவும் வெளியிடப்படும். 


என்றும் அன்புடன் தங்கள்

[ வை. கோபாலகிருஷ்ணன் ]

66 கருத்துகள்:

  1. அஹா தோழி ஜெயந்தி ரமணி அவர்கட்கு மனமார்ந்த வாழ்த்துகள். சிறப்புறப் பரிசளித்துவரும் உங்களுக்கும் சிறப்பு வாழ்த்துகள் கோபால் சார் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தேனம்மா. உங்கள் வாழ்த்துக்களும் தேன் போல் இனிக்கிறது.

      நீக்கு
  2. திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்!

    வை. கோ. சாருக்கு சிறப்பு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  3. திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கும் திரு கோபு அவர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரம் தாழ்ந்த நன்றி திரு பழனி கந்தசாமி ஐயா. உங்கள் வாழ்த்து எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல்.
      மூத்தோர் வாழ்த்துக்கு ஈடு ஏது?

      நீக்கு
  4. சகோதரிக்கு எங்கள் வாழ்த்துகள். உங்களுக்கு எங்கள் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராமா. தம்பி ஆயிட்டேள் அதான் ஸ்ரீராமான்னு சொன்னேன். புண்ணியத்துக்குப் புண்ணியமும் கூட உங்க பேரச் சொன்னா.

      நீக்கு
  5. பரிசினை வென்ற திருமதி ஜெயந்தி ரமணி அவர்கட்கு மனமார்ந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. ஆனா உங்களோட எல்லாம் ஒப்பிட்டா நானெல்லாம் ஒண்ணுமே இல்லை.

      பரிசா வாங்கின ஜோடி ஆயிற்றே நீங்களும் உங்கள் துணைவியும்.

      நீக்கு
  6. பரிசு வென்ற தோழிக்கு
    இனிய வாழ்த்துகள்...பாராட்டுக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார்ந்த நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி.

      அம்மாவும், பிள்ளையுமா கோபு அண்ணாவோட சிறுகதை விமர்சனப் போட்டியில கலக்கோ கலக்குன்னு கலக்கிட்டேள்.

      நான் கொஞ்சம் ஓரமா நின்னுக்கறேன். முன்னணியில் நிறைய விமர்சக வித்தர்களுக்கு இடம் விட்டு.

      நீக்கு
  7. சகோதரி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுகள். தங்களுக்கும்தான் சார்! பின்னே இப்படிப் பரிசு மழையாகக் கொட்டி ஊக்கமது கைவிடேல் போல எல்லோரையும் ஊக்கப்படுத்தும் தங்களுக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி துளசிதரன் அவர்களே. கோபு அண்ணாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

      நீக்கு

  8. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! சாதனையாளர் வரிசையில் இன்றைக்கு வந்து இருப்பவர் சகோதரி ஜெயந்தி ரமணி அவர்கள். இவரைப் பற்றிய அறிமுகம் உங்கள் வலைத்தளம் மூலமாகவே எனக்கு அமைந்தது. (இவர் மட்டுமல்ல, பல புதிய பதிவர்கள் அறிமுகமும் இப்படியேதான்). அவருக்கு எனது உளம் நிறைந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்கால்வாசி வலைப்பதிவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகவானது கோபு அண்ணாவால் தான் இருக்கும். வலைப்பதிவர்களை இணைக்கும் பாலம் அவர்.

      நீக்கு
  9. இன்டைக்கு வெரசால வந்துபிட்டனே. நம்ம ஆண்டிலா. வாழ்த்துகள் ஜெயந்தி ஆண்டி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வா பெண்ணே வா. நானும் உங்க வலைத்தளத்தில பின்னூட்டம் கொடுத்திருக்கேன். பார்த்தீங்களா? சின்னப் பிள்ளைகள் வாழ்த்து ரொம்பவே மகிழ்ச்சியை கொடுக்கும் பெண்ணே.

      நீக்கு
    2. mru December 19, 2015 at 9:53 AM

      வாங்கோ முருகு, வணக்கம்.

      //இன்டைக்கு வெரசால வந்துபிட்டனே. நம்ம ஆண்டிலா. வாழ்த்துகள் ஜெயந்தி ஆண்டி//

      எங்கட முருகுவின் அன்பான வருகைக்கும், எங்கட கோடீஸ்வரி ஜெயா அம்மாவை வாழ்த்தி சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் குருஜி

      நீக்கு
  10. சாதனையாளர்விருது வென்ற திருமதி ஜயந்தி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்
    கோபால் சாருக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சிவகாமி (பெயர் சரிதானே. வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றியோ நன்றி.

      நீக்கு
  11. திருமதி ஜெயந்திரமணி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள. வலைப்பதிவு ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ALL IS WELL. LET IT BE ALWAYS WELL.

      வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அன்பு சினேகிதி ஜெய‌ந்தி ரமணிக்கும் இனிய வாழ்த்துக்கள்! தொடர்ந்து சாதனையாளர் விருதுகள் வழங்கிக்கொண்டிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த இனிய பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திருமதி மனோ அவர்களே. (இவரும் எப்பொழுதும் அழகிய புன்னகைக்கு சொந்தக்காரி).

      நீக்கு
  13. சாதனையாளர் பட்டியலில் சேர்ந்து பரிசுபெறும் திருமதி ஜெயந்தி ரமணிக்கு பாராட்டுதல்களும்,வாழ்த்துகளும்.மனம்,மணம்,ஆன்மீகம் என யாவும் அதிகமாக வீசட்டும். திரு கோபு அண்ணாவும் இம்மாதிரி அனேகப் பரிசுகளை யாவருக்கும் அளித்துக் கொண்டே இருக்கட்டும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி காமாட்சி அம்மா.

      கோபு அண்ணா நன்னா படியுங்கோ, காமாட்சி அம்மா என்ன சொல்லி இருக்காங்கன்னு. இன்னும் நிறைய போட்டி வெச்சு நிறைய பரிசு கொடுத்துண்டே இருங்கோ.

      நீக்கு
  14. சாதனையாளர் விருது வென்ற திருமதி ஜெயந்தி அவர்களுக்கு வாழ்த்துகள். கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள்.


    பதிலளிநீக்கு
  15. சாதனையாளர் திருமதி ஜெயந்தி ரமணி அவரக்ட்கு வாழ்த்துக்கள்! அவரை சாதனை நிகழ்த்த ஊக்குவித்து பரிசளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்!

    பி.கு. இந்த போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டோமே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. பரிசுக்காக அல்ல. அந்த போட்டியின் விதிகள் காரணமாக தங்களது பதிவுகள் அனைத்தையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமே என்பதால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நடன சபாபதி அவர்களே.

      இன்னும் 11 நாட்கள் இருக்கின்றன. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். முயன்றுதான் பாருங்களேன்.

      நீக்கு
    2. வே.நடனசபாபதி December 19, 2015 at 6:21 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //சாதனையாளர் திருமதி ஜெயந்தி ரமணி அவரக்ட்கு வாழ்த்துக்கள்! அவரை சாதனை நிகழ்த்த ஊக்குவித்து பரிசளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்! //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      //பி.கு. இந்த போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டோமே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.//

      ஆஹா, தங்களைப்போன்று ஆத்மார்த்தமாகப் பதிவுகளை முழுவதுமாகப் படித்து, மிக அழகாகக் கருத்துக்கள் கூறிடும், பலர் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. இருப்பினும் இது சாதாரணதோர் வேலை இல்லையே சார். மிகவும் பொறுமையை சோதிக்கும் வேலை ஆச்சே. பழைய பஞ்சாங்கங்களை தூசி தட்டிப் படிக்க எல்லோராலும் முடியாதே. :)

      //பரிசுக்காக அல்ல.//

      புரிகிறது. இருப்பினும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டுள்ளவர்கள் யாருமே பரிசுக்காகக் கலந்துகொண்டதாக நானும் நினைக்கவில்லை. என் மீது அவர்களுக்கு உள்ள தனிப்பட்ட அன்பினாலும், இதில் கலந்துகொண்டால் நமக்கும் பெருமையாக இருக்குமே என்ற ஓர் சின்ன ஆசையினாலும் மட்டுமே கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள் என்பதே உண்மை.

      //அந்த போட்டியின் விதிகள் காரணமாக தங்களது பதிவுகள் அனைத்தையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமே என்பதால்.//

      தங்களைப்போன்ற அதே ஆதங்கங்களுடன் கீழே ஒருவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டுள்ளார், பாருங்கோ (ஸ்ரத்தா, ஸபுரி...). அவருக்கு நான் சற்றே விரிவாக பதில் அளித்துள்ளேன். அதையும் படித்துப்பாருங்கோ, ப்ளீஸ்.

      தங்களின் தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
  16. கோபு அண்ணா
    இதெல்லாம் ஒரு சாதனைன்னு சொல்லிக்க கொஞ்சம் வெட்கமாகவே இருக்கு.

    எல்லாரும் ஏதோ உணர்த்தினான்னு எலி தன் வாலை உணர்த்தித்தாம். அந்த நிலைதான் எனக்கும். அவங்கவங்க சிறுகதை விமர்சனப் போட்டியில தூள் கிளப்பி இருக்கற போது .........ம் இதை எப்படி சாதனைன்னு சொல்லிக்கறது.

    என்னென்னமோ சாதிச்ச நீங்களே “சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்” அப்படீன்னு சொல்லிக்கும்போது நான் என்ன சொல்ல.

    இருந்தாலும் இந்த மோதிரக்கையால கிடைச்ச குட்டு வலிக்கவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya December 19, 2015 at 8:03 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //கோபு அண்ணா, இதெல்லாம் ஒரு சாதனைன்னு சொல்லிக்க கொஞ்சம் வெட்கமாகவே இருக்கு. //

      தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் வடிவு (C K சரஸ்வதி), சவடால் வைத்தி (நாகேஷ்) இடம் சொல்வதுபோல இது உள்ளது. :)

      இந்த வயதில், அதுவும் நமக்குள் எதற்கு வெட்கமோ?

      என்னைப்பொறுத்தவரை நிச்சயமாக இது ஓர் மிகப்பெரிய சாதனைதான் ஜெயா.

      எல்லோராலும் முடியாததை தாங்கள் சாதித்துக் காட்டியுள்ளீர்கள். அதனால் இதில் ஒன்றும் வெட்கமே பட வேண்டாம். 750 பதிவுகளையும் பொறுமையாகப்படித்து, அருமையாக அதுவும் எனக்குப்பிடித்தமான நகைச்சுவை கலந்து பின்னூட்டமிடுவது என்பது என்ன சாதாரண வேலையா? சாதனை மட்டுமே ! :) மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

      //எல்லாரும் ஏதோ உணர்த்தினான்னு எலி தன் வாலை
      உணர்த்தித்தாம். அந்த நிலைதான் எனக்கும். அவங்கவங்க சிறுகதை விமர்சனப் போட்டியில தூள் கிளப்பி இருக்கற போது .........ம் இதை எப்படி சாதனைன்னு சொல்லிக்கறது.//

      அப்படியெல்லாம் ஒருபோதும் தாழ்வாக நினைக்காதீங்கோ ஜெ.

      விமர்சனப்போட்டியில் கலந்துகொண்டு பரிசும் பெற்ற சிலரே கடைசிவரை ‘நேயர் கடிதம்’ ஏதும் எழுதி அனுப்பாதபோது, அந்தப் போட்டிகளில் அதிகமாகக் கலந்துகொள்ளாத / கலந்து கொள்ளும் சூழ்நிலையில் இல்லாத தாங்கள் எழுதி அனுப்பியிருந்த நேயர் கடிதம் மட்டுமே, என்னாலும், பிறராலும், ஏன் .... நம் மதிப்புகுரிய நடுவர் அவர்களாலும் மிகவும் பாராட்டப்பட்டது. இதுவே ஜெயாவின் தனித்திறமையாக நான் நினைத்து மகிழ்கிறேன்.

      REF LINK: http://gopu1949.blogspot.in/2014/10/9.html

      //என்னென்னமோ சாதிச்ச நீங்களே “சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்” அப்படீன்னு சொல்லிக்கும்போது நான் என்ன சொல்ல.//

      ”என் அன்புக்குரிய பாசமுள்ள கோபு அண்ணாவின் பிரியத்தினை சம்பாதித்துவிட்ட அதிர்ஷ்டக்கார தங்கச்சியாக்கும் நான்” என்று சொல்லிக்கோங்கோ, ஜெயா.

      //இருந்தாலும் இந்த மோதிரக்கையால கிடைச்ச குட்டு வலிக்கவே இல்லை.//

      உங்களுக்கு வலிக்கவே இல்லை, சரி. ஆனால் என் மோதிரம் இப்போது என் கை விரலில் காணோம். அங்கு உங்க தலையில், முடியில் சிக்கி இருக்கிறதா எனப்பார்த்து, பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். :)

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
    2. அன்புள்ள ஜெயா,

      இங்கு இந்தப்பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டங்கள் கொடுத்துள்ளவர்களுக்கு தாங்களே பதில் அளிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      இருப்பினும் அதை அரைகுறையாக (திருப்பதி வேலையாகப்) பாதியில் நிறுத்திவிட்டு, கொட்டாவி விட்டுக்கொண்டே நேற்று இரவு 10.15க்குத் தூங்கப்போய்ட்டீங்கோ.

      மற்றவர்களுக்கும் நீங்களே பதில் போட்டுவிட்டு, என் வேலையைக்கொஞ்சம் குறைத்தால் எனக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே .... ஜெயா. செய்வீர்களா?

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
    3. ஏன் .... நம் மதிப்புகுரிய நடுவர் அவர்களாலும்
      என்பதை
      ஏன் .... நம் மதிப்பிற்குரிய நடுவர் அவர்களாலும் என மாற்றிப்படிக்கவும். vgk

      நீக்கு
  17. திருமதி.ஜெயந்தி ரமணி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  18. திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  19. விருது பெற்றவருக்கு வாழ்த்துகள்
    விருது வழங்கியவருக்குப் பாராட்டுகள்

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  20. சாதனையாளர் திருமதி ஜெயந்தி அவர்களுக்கு வாழ்த்துகள் சக பதிவர்களை பாராட்டி விருது பரிசுகள் அளித்து பெருமைப்படுத்தி வரும் கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  21. சார் ஒரு டவுட். பின்னூட்ட்ப்போட்டில கலந்துகொண்டு ஜெயித்தவர்களுக்கு இப்ப விருது ப்ரிசு கொடுத்து வறீங்க
    இல்லியா.போட்டில கலந்துக்காம உங்க எல்லாபதிவுகளும்
    படிச்சு பின்னூட்டம் போட நினைக்கிறேன். ஆரம்பத்திலிருந்து
    படிக்க ஆசை. அப்படி பின்னூட்டம் போட்லாமா?
    நான் உங்க பக்கம் ரொம்ப லேட்டா வந்திருக்கேன். அதுதான் போட்டி பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள முடியல. ஆனா எல்லா பதிவும் படிக்க ஆசை. இதில் உங்களுக்கு ஏதாவது அப்ஜெக்‌ஷன் இருக்குமா? ப்லீஸ் ரிப்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... December 20, 2015 at 6:04 PM

      வாங்கோ, வணக்கம்.

      //சார் ஒரு டவுட். பின்னூட்டப்போட்டியில் கலந்துகொண்டு ஜெயித்தவர்களுக்கு இப்ப விருது பரிசு கொடுத்து வறீங்க இல்லியா.போட்டில கலந்துக்காம உங்க எல்லாபதிவுகளும் படிச்சு பின்னூட்டம் போட நினைக்கிறேன். //

      மிகவும் சந்தோஷம். என் பதிவுகளைப் பொறுமையாகப்
      படிப்பதற்கும், அதிலுள்ள விஷயங்களையும், குறிப்பாக
      நகைச்சுவைக் கருத்துக்களையும், ரஸித்துப் படித்துப் புரிந்துகொள்வதற்கும், அவ்வாறு ரஸித்துப் படித்துப் புரிந்துகொண்டதை, சுவைபட பின்னூட்டமாக விரிவாக எழுதி எனக்கு அனுப்புவதற்கு, வாசகர்களுக்கு ஓர் கொடுப்பினை வேண்டும் என மிகவும் கர்வத்துடன் நினைக்கக்கூடியவன் நான்.

      //ஆரம்பத்திலிருந்து படிக்க ஆசை. அப்படி பின்னூட்டம்
      போடலாமா?//

      தாராளமாகச் செய்யலாம். அதைத்தானே நானும்
      இந்த என் போட்டிகளின் மூலம் எதிர்பார்க்கிறேன்.

      சென்ற வருடம் 2014 இல் நான் என் வலைத்தளத்தில் நடத்திய சிறுகதை விமர்சனப்போட்டி + இந்த ஆண்டு 2015 இல் நான் நடத்திக்கொண்டிருக்கும் 100% பின்னூட்டமிடும் போட்டி ஆகியவற்றின் அடிப்படை
      நோக்கங்கள் :

      1) தமிழ் மணத்திலோ இதர திரட்டிகளிலோ வோட் அளிக்கத் தேவையே இல்லாமல் என் படைப்புகளை நிறைய வாசகர்கள் ரஸித்துப் படிக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களை (குறை + நிறைகளை) எனக்கு விமர்சனம் வாயிலாகவோ அல்லது பின்னூட்டங்கள் மூலமோ விரிவாகவும் விளக்கமாகவும் தெரிவிக்க வேண்டும்.

      2) இதனால் பதிவர்கள் பலரின் எழுத்துத் திறமைகளை வெளிக்கொணர்ந்து பிற பதிவர்கள் அனைவரும் அந்தத்தனித்திறமையை அறியுமாறு செய்ய வேண்டும்.

      3) பதிவுகளை முழுவதும் படிக்காமலேயே, மேம்போக்காக நுனிப்புல் மேய்ந்துவிட்டு, டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் கொடுத்து கருத்தளிப்பவர்களை என் வலைப்பக்கம் வரவிடாமல் தடுக்க வேண்டும் ...... முதலியன.

      //நான் உங்க பக்கம் ரொம்ப லேட்டா வந்திருக்கேன். அதுதான் போட்டி பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள முடியல. //

      அதனால் பரவாயில்லை. போட்டி, அதற்கான கெடு தேதி, பரிசுத்தொகை என்பதெல்லாம் சும்மா அனைவருக்கும் எழுத்தினில் ஓர் ஆர்வத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்த ஓர் தூண்டுகோல் மட்டுமே.

      பரிசு என்பது Just only a Token of Appreciation for their efforts.

      //ஆனா எல்லா பதிவும் படிக்க ஆசை. இதில் உங்களுக்கு ஏதாவது அப்ஜெக்‌ஷன் இருக்குமா? ப்லீஸ் ரிப்லை.//

      இதில் எனக்கு எந்தவிதமான அப்ஜெக்‌ஷனும் கிடையாது. அன்புடன் தங்களை வரவேற்று, ஆதரித்து மகிழ்வேன்.

      இதுவரை என் பதிவுகள் சுமார் 800 வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒரு 100 பதிவுகள் வரை வெவ்வேறு காரணங்களால் மீள் பதிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மீதி 700 இல் ஒரு 200 பதிவுகள் வரை ஆன்மிகம் சம்பந்தமாக இருக்கும். மீதி 500 பதிவுகளில் எல்லாமே கலந்து கட்டியாக ... சிறுகதைகள், கவிதைகள், குடும்பம், என் அனுபவம், சாதனைகள், பயணங்கள், போட்டிகள், போட்டியில் பரிசு பெற்றவர்கள், இனிய சந்திப்புகள் என எல்லாமே கலந்து படிக்க மிகவும் ஜாலியாகவே இருக்கும்.

      01.01.2016 க்குப்பிறகு என் வலைத்தளத்தினில் அநேகமாக புதுப்பதிவுகள் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. நீண்ட இடைவெளி கொடுத்து நான் ஓய்வெடுக்க நினைத்துள்ளேன்.

      அதனால் தாங்கள் தினமும் கொஞ்சம் கொஞ்சமாகவும், தொடர்ச்சியாகவும் பின்னூட்டங்கள் கொடுத்து வந்தால் அவற்றைப் பொறுமையுடன் நான் வாசித்து மகிழ்வேன். முடிந்தால் அவ்வப்போது நான் தங்களுக்கு பதிலும் அளிப்பேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், வாசிப்பு ஆர்வத்திற்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      தங்களுக்கு என் அன்பான நல்வாழ்த்துகள்.

      அன்புடன் VGK
      valambal@gmail.com

      நீக்கு
    2. கோபு அண்ணா, பாருங்க உங்க எழுத்து எல்லாரையும் நல்லா இஸ்க்குது. ஸ்ரத்தா, ஸபுரி, எல்லா பதிவுகளையும் படிச்சு, ரசிச்சு பின்னூட்டம் கொடுங்க. கரும்பு தின்னக் கூலியா? வாங்க, வாங்க

      நீக்கு
    3. Jayanthi Jaya December 20, 2015 at 8:15 PM

      //கோபு அண்ணா, பாருங்க உங்க எழுத்து எல்லாரையும் நல்லா இஸ்க்குது. //

      அது என்ன ‘இஸ்க்குது’? மெட்ராஸ் பாஷையா ? :)

      ’பணமா பாசமா’ படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடும் எலந்தப்பயம் (இலந்தைப்பழம்) பாட்டுத்தான் எனக்கு இப்போ என் ஞாபகத்திற்கு வருது :)

      ’இதுதான் ஊரையெல்லாம் இஸ்க்கு .... இஸ்க்கு .... இஸ்க்குன்னு .... இஸ்க்குது’ ன்னு பாடல் வரிகள் அதில் வரும். நான் அந்தக்காலத்தில் ஒரு பத்து தடவைகளுக்கு மேல் பார்த்த படம் அது. :)))))

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  22. கோபால் சார் விவரமான தெளிவான ரிப்ளைக்கு நன்றி. எனக்கு நன்றாக எழத வராது. ஆனா நல்ல ரசனை உண்டு ரசிக்கமட்டுமே தெரியும். ரசிகர்களுக்கு போட்டி வைப்பது பரிசு கொடுப்பது எல்லாமே ஒரு என்கரேஜ் மெண்ட்தான். படிக்கற ஆர்வம் நெறையபேருக்கு வர இப்படி செய்வது நல்ல வாய்ப்புதான். இந்த டி. வி. கம்ப்யூட்டர்லாம் வந்த பிறகு ஜனங்களுக்கு படிக்கும் ஆர்வம் குறைந்து விட்டதாக சிலரின் கருத்து. படிக்கும் ஆர்வமுள்ள பலரோ சிலரோ இன்னமும் இருக்கத்தான் செய்யறாங்க. நல்ல விஷயங்கள் யாரு சொல்லி இருந்தாலும் தேடிப்போயி படிக்க காத்துகிட்டுதான் இருக்காங்க. நீங்க சொல்லி இருக்கும் விஷயங்கள் எனக்கு நன்கு பயன்படும். 2011--வருஷம் முதல் பதிவு போட்டிருக்கீங்க இல்லையா ஒவ்வொரு பதிவா தேடிபார்த்து படிக்க போகிறேன்.தகவல் பகிர்ந்தமைக்கை நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... December 21, 2015 at 1:27 PM

      வாங்கோ, வணக்கம்.

      //கோபால் சார் விவரமான தெளிவான ரிப்ளைக்கு நன்றி. எனக்கு நன்றாக எழத வராது. ஆனா நல்ல ரசனை உண்டு ரசிக்கமட்டுமே தெரியும்.//

      நீங்கள் இப்போது எழுதுவதே மிகவும் நன்றாகத்தான் உள்ளது. இதுபோதும். ரசனை உள்ளவர்களால் தான் எதையுமே ரஸிக்கவும் ருசிக்கவும் முடியும்.

      //நீங்க சொல்லி இருக்கும் விஷயங்கள் எனக்கு நன்கு பயன்படும். 2011--வருஷம் முதல் பதிவு போட்டிருக்கீங்க இல்லையா .. ஒவ்வொரு பதிவா தேடிபார்த்து படிக்க போகிறேன்.//

      தேடிப்பிடிக்க ஒருவேளை கஷ்டமாக இருந்தால் மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும். ஒவ்வொரு மாதத்திற்கான இணைப்புகளும் மிகச்சுலபமாக அனுப்பி வைக்க என்னால் இயலும்.

      My Mail ID: valambal@gmail.com

      வருகைக்கும், புரிதலுக்கும், விரிவான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் இனிய நன்றிகள். - VGK

      நீக்கு
  23. //’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்பில் 31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் ஓர் சுலபமான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, தங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்//

    சுலபமா இருந்ததாலேதானே எனக்கெல்லாம் பரிசு கிடைச்சது. இல்லேன்னா ............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya December 22, 2015 at 10:06 AM

      **’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்பில் 31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் ஓர் சுலபமான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, தங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்**

      //சுலபமா இருந்ததாலேதானே எனக்கெல்லாம் பரிசு கிடைச்சது. இல்லேன்னா ............//

      இல்லேன்னா ..... என் அன்புக்குரிய ஜெயாவுக்கு பரிசு கொடுக்கும் அரிய பெரியதோர் வாய்ப்பை நான் இழந்திருப்பேன்.

      நீக்கு
  24. //பரிசுப்பணத்தை தன் கைப்பைக்குள்
    பத்திரப்படுத்திக்கொண்டிருக்கும் ஜெயா//

    பணம் இருக்கற FOLDER ஐ இன்னும் பிரிக்கவே இல்லை. அப்படியே பத்திரப்படுத்தி வெச்சுட்டேன்.

    என் பையன் இதை அப்படியே வெச்சுடு. பல வருஷங்கள் கழித்து என் குழந்தைகள் பார்த்து மகிழ்வார்கள். என்று சொல்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya December 22, 2015 at 10:08 AM

      **பரிசுப்பணத்தை தன் கைப்பைக்குள்
      பத்திரப்படுத்திக்கொண்டிருக்கும் ஜெயா**

      //பணம் இருக்கற FOLDER ஐ இன்னும் பிரிக்கவே இல்லை. அப்படியே பத்திரப்படுத்தி வெச்சுட்டேன்.//

      அடடா, அந்த ப்ளாஸ்டிக் ஃபோல்டரிலிருந்து அதைப் பிரித்து எடுத்து விடுங்கோ ஜெயா. இல்லாவிட்டால் நாளடைவில் அந்த ரூபாய் நோட்டுக்கள் ப்ளாஸ்டிக் ஃபோல்டரிலேயே சப்பென்று ஒட்டிக்கொண்டு பிரித்து எடுக்கும்போது கிழிந்துவிடும். இதுபோல வெகுகாலம் பத்திரப்படுத்திய என்னுடைய முக்கியமானதொரு பிரோமோஷன் ஆர்டர் அதுபோல ஒட்டிக்கொண்டு கிழிந்தே போய்விட்டது. எனக்கு அழுகையே வந்துவிட்டது.

      மேலும் ரூபாயின் மதிப்பும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வரக்கூடும். அதனால் அந்தப்பணத்தை எடுத்து இப்போதே செலவழித்து விடுங்கோ, ஜெயா.

      //என் பையன் இதை அப்படியே வெச்சுடு. பல வருஷங்கள் கழித்து என் குழந்தைகள் பார்த்து மகிழ்வார்கள் என்று சொல்கிறான்.//

      அதுதான் போட்டோ படம் எடுத்து, பதிவினில் ஏற்றி விட்டீர்களே! பிற்காலத்தில் அதைப் பேரக்குழந்தைகளுக்கு காட்டினால் போச்சு. :)

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  25. ஏற்கெனவே திருமதி ஜெயந்தி அவர்களின் பதிவில் படித்த நினைவு! அல்லது அது வேறு, இது வேறா? தெரியலை! என்றாலும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam December 22, 2015 at 5:44 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஏற்கெனவே திருமதி ஜெயந்தி அவர்களின் பதிவில் படித்த நினைவு! அல்லது அது வேறு, இது வேறா? தெரியலை!//

      அது வேறு இது வேறு தான். ஆனால் இரண்டுமே ஒன்று தான். :)

      முன்கூட்டியே பரிசுத்தொகை மின்னல் வேகத்தில் அவர்கள் கைக்குக் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் முந்திரிக்கொட்டையாக முந்திக்கொண்டு பதிவு வெளியிட்டு கொண்டாள் நம் ஜெயா. அதற்கான இணைப்பு இதோ:

      http://manammanamveesum.blogspot.in/2015/11/1.html

      போட்டியில் கலந்துகொள்வதற்கான இறுதித்தேதி நெருங்கிவிட்டதால், போட்டியில் கலந்துகொண்டு வெற்றியை எட்டியுள்ளவர்களை நான் இப்போதுதான் ஒவ்வொருவராக என் பதிவினில் அதிகாரபூர்வமாக அறிவித்துக்கொண்டு வருகிறேன்.

      அதனால் இது வேறு அது வேறு என்றோ, இரண்டுமே ஒன்றுதான் என்றோ தாங்கள் தங்கள் செளகர்யப்படி நினைத்துக்கொள்ளலாம். இந்த மிகச்சுலபமான போட்டியில் தாங்கள் கலந்துகொள்ளாததில் எனக்குக் கொஞ்சம் வருத்தமே. :)

      //என்றாலும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  26. ஜெயந்திரமணி மேடம் சாதனையாளர் விருது வென்றதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  27. திருமதி ஜெயந்திரமணி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. அழகான பின்னூட்டங்களாலும் மனந்திறந்த கருத்துகளாலும் வசீகரிக்கும் ஜெயந்தி மேடம் இப்பின்னூட்டப் போட்டியினை நிறைவுசெய்து பரிசினை வென்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. ஜெயந்தி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  30. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள

    திருமதிகள்:

    தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
    ஜெயந்தி ஜெயா அவர்கள்
    இராஜராஜேஸ்வரி அவர்கள்
    பூந்தளிர் அவர்கள்
    மனோ சுவாமிநாதன் அவர்கள்
    காமாக்ஷி மாமி அவர்கள்
    கீதா சாம்பசிவம் அவர்கள்
    கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்றும் அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  31. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள

    திருவாளர்கள்:

    அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
    கே பி ஜனா அவர்கள்
    பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்
    ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்
    துளஸிதரன் V தில்லையக்காது அவர்கள்
    தி. தமிழ் இளங்கோ அவர்கள்
    ஆல் இஸ் வெல் அவர்கள்
    S. ரமணி அவர்கள்
    ஸ்ரீனிவாசன் அவர்கள்
    வே. நடனசபாபதி அவர்கள்
    எஸ்.பி. செந்தில்குமார் அவர்கள்
    ஸ்ரத்தா, ஸபுரி அவர்கள்
    சரணாகதி ’ஸ்ரீவத்ஸன்’ அவர்கள்
    சிவ சிவா அவர்கள்
    Shamaine bosco அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்றும் அன்புடன் VGK

    பதிலளிநீக்கு