என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 16 டிசம்பர், 2015

சாதனையாளர் விருது ... திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் [மணிராஜ்]

அன்புடையீர், 


அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்பில் 31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் ஓர் சுலபமான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, தங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.


அதற்கான இணைப்பு தங்கள் நினைவுக்காக இதோ:


மேற்படி போட்டியில் கலந்துகொண்டு
வெற்றிபெற, வரும் 31.12.2015 
நிறைவு நாள் ஆகும்.


இதில் மிகவும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோர் அனைவருக்கும் தலா ரூபாய் ஆயிரம் [Rs. 1000/-] வீதம் ரொக்கமாகப் பரிசளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். 

 சாதனையாளர் வலைத்தளம்: 
‘மணிராஜ்’
திருமதி.
 இராஜராஜேஸ்வரி 
அவர்கள்
இந்த என் போட்டி அறிவிப்புக்கு முன்பாகவே 
2011 ஜனவரி முதல் 2014 அக்டோபர் வரை 
46 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டிருந்த 
என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும் [ 684 ]
இவர்களின் மிகச்சிறப்பான பின்னூட்டங்கள்
ஏராளமாகவும் தாராளமாகவும் இடம் பெற்றிருந்தன.

பிறகு உடல்நலக்குறைவு காரணமாக 
என் பதிவுகள் பக்கம் இவர்கள் வருகை தராததால் 
 ஓர் மிகப்பெரிய வெறுமையை 
என்னால் நன்கு உணர முடிந்தது.

பிறகு சுமார் ஓராண்டுக்குப்பின்
17.10.2015 தொடங்கி 19.10.2015 க்குள்
மூன்றே மூன்று நாட்களில், 
2014 நவம்பர் முதல் 2015 மார்ச் வரையிலான
என் கடைசி ஐந்து மாத வெளியீடுகளில் மட்டும்
இவர்களால் பின்னூட்டம் இடாமல் விட்டுப்போயிருந்த 
66 பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இட்டு 
சாதனை புரிந்துள்ளார்கள்.  

போட்டிக்கான என் முதல் 750 பதிவுகள் மட்டுமன்றி, 
அதன் பிறகு நான் வெளியிட்டுள்ள 
அனைத்துப் பதிவுகளிலும்கூட 
இவர்களின் பின்னூட்டங்கள் 
இப்போது இடம் பெற்றுள்ளன 
என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. 

ஆரம்பம் முதல் இன்றுவரை 
என் அனைத்துப் பதிவுகளுக்கும்
வருகை தந்து மிகுந்த உற்சாகம் அளித்துள்ளவர்களில் 
இவர்களின் பங்கு மிக மிக அதிகமாகும். நாங்கள் இருவரும் பதிவுலகில் எழுத ஆரம்பித்தது
2011 ஜனவரி மாதம் மட்டுமே என்றாலும்

’நான் எப்போதுமே இவர்களின் 
வேகத்தில் சரிபாதி மட்டுமே’
என்பது இப்போதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 

இவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில்
வெளியிட்டுள்ள மொத்தப்பதிவுகளின் 
எண்ணிக்கை சுமார்: 1600 !
நான் அதில் சரிபாதி: 800 மட்டுமே :)
இவர்களுக்கான ரொக்கப் பரிசுத்தொகை 
 29.10.2015 அன்று என்னால் அளிக்கப்பட்டது.

 மனம் நிறைந்த 
பாராட்டுகள் +
அன்பான இனிய
நல்வாழ்த்துகள்!
நன்றியுடன்
வை. கோபாலகிருஷ்ணன் 
2014ம் ஆண்டு முழுவதும் என் வலைத்தளத்தினில் தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு நடைபெற்ற ’சிறுகதை விமர்சனப் போட்டி’களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்று, சிறப்பிடம் பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய பதிவுகளுக்கான இணைப்புகள்:

Highest Hat-Trick Winner 
[முதலிடம்]

ஜீவீ-வீஜீ விருது 

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருது 
[முதலிடம்]


போட்டி பற்றிய பல்வேறு அலசல்கள்

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுடன்
’போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி’

ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியல் 
(சிறப்பிடம்)மற்ற சாதனையாளர்கள் பற்றிய செய்திகள் 
இனியும் அவ்வப்போது தொடரும்.


வெற்றியாளர்கள் பற்றிய ஒட்டுமொத்தச் செய்திகள் 
இறுதியில் தனிப்பதிவாகவும் வெளியிடப்படும். 


என்றும் அன்புடன் தங்கள்
[ வை. கோபாலகிருஷ்ணன் ]

69 கருத்துகள்:

 1. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. எமது கருத்துரைகளுக்கு பரிசளித்து பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த நன்றிகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி December 16, 2015 at 8:08 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //எமது கருத்துரைகளுக்கு பரிசளித்து பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த நன்றிகள்...//

   இந்த ஏழை எளியோனின் ‘எத்கிஞ்சுது’ பரிசினையும், பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டு, இந்தப் பதிவினை சிறப்பித்துப் பெருமைப்படுத்தியுள்ள தங்களுக்கு நான்தான் என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   - நன்றியுடன் VGK

   நீக்கு
 3. மூன்றே நாட்களில் 66 பதிவுகளுக்குப் பின்னூட்டமா? கேட்கவே ஆச்சரியமாயிருக்கிறது. விமர்சனப்போட்டியில் மட்டுமின்றி பின்னூட்டப் போட்டியிலும் சாதனை படைத்த திரு ராஜி மேடம் அவர்களுக்குப் பாராட்டுக்கள்! தங்களுக்கும் என் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி December 16, 2015 at 8:26 PM

   //மூன்றே நாட்களில் 66 பதிவுகளுக்குப் பின்னூட்டமா? கேட்கவே ஆச்சரியமாயிருக்கிறது. விமர்சனப்போட்டியில் மட்டுமின்றி பின்னூட்டப் போட்டியிலும் சாதனை படைத்த திரு ராஜி மேடம் அவர்களுக்குப் பாராட்டுக்கள்! தங்களுக்கும் என் பாராட்டுக்கள்!//

   வாங்கோ மேடம், வணக்கம்.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 4. // பிறகு சுமார் ஓராண்டுக்குப்பின்
  17.10.2015 தொடங்கி 19.10.2015 க்குள் மூன்றே மூன்று நாட்களில், 2014 நவம்பர் முதல் 2015 மார்ச் வரையிலான
  என் கடைசி ஐந்து மாத வெளியீடுகளில் மட்டும்
  இவர்களால் பின்னூட்டம் இடாமல் விட்டுப்போயிருந்த
  66 பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இட்டு
  சாதனை புரிந்துள்ளார்கள். //

  இவங்கள்ளாம் போட்டிக்குன்னு ஸ்பெஷலா எதுவும் தயார் பண்றதே இல்ல. எப்பவும் எந்த போட்டிக்கும் த(தா)யார்ங்குற மாதிரிதான் இவங்களோட அணுகுமுறை இருக்கு.

  விமர்சனப்போட்டி விருது எல்லாத்தையும் வாங்கிட்டாங்க. விமர்சனப்போட்டி பரிசுகளையும் அள்ளிக் குவிச்சாங்க. ஏதோ இவுங்க விட்டு வச்ச மிச்ச மீதியத்தான் என்னப்போல ஆளுங்க ஒண்ணு ரெண்டு வாங்குனோம்னு நெனக்கிறேன்.

  வாத்யாரே நீங்களே இவங்களோட வேகத்துல பாதிதான்னாக்க நானெல்லாம் ஒரு ஓரமா நின்னு வேடிக்க பாக்கதான் லாயக்குன்னு நெனக்கிறேன்.

  மீண்டும் ஒரு சாதனை படைத்ததற்கு அன்பான வாழ்த்துகள் சகோதரி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI December 16, 2015 at 8:30 PM

   வாங்கோ வாத்யாரே, வணக்கம்.

   //இவங்கள்ளாம் போட்டிக்குன்னு ஸ்பெஷலா எதுவும் தயார் பண்றதே இல்ல. எப்பவும் எந்த போட்டிக்கும் த(தா)யார்ங்குற மாதிரிதான் இவங்களோட அணுகுமுறை இருக்கு.//

   த(தா)யார் .... மிகவும் ரஸித்தேன் :)

   //வாத்யாரே நீங்களே இவங்களோட வேகத்துல பாதிதான்னாக்க ..... //

   அவர்களுக்கு திடீரென்று நடுவில் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. {எனக்கோ எப்போதுமே உடல்நிலை சரியில்லாமலேயேதான் உள்ளது.}

   அதனால் இவர்களின் வேகத்தில் நான் பாதி என்றாவது இப்போது என்னால் இங்கு அடித்து ஆதாரபூர்வமாகச் சொல்லிக்கொள்ள முடிகிறது.

   நியாயமாகப் பார்த்தால் அவர்கள் ஸ்பீடுக்கு இந்நேரம், இந்த 5 ஆண்டுகளில் [5*365=1825 க்குக் குறையாமல்] 2000 பதிவுகளாவது கொடுத்திருந்திருப்பார்கள்.

   அதுபோல நடந்திருந்தால் நான் பாதி என்றுகூட சொல்லிக்கொள்ள முடியாமல் 40% என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருந்திருக்க முடியும்.

   தங்களின் அன்பான வருகைக்கும், வழக்கம்போல வேடிக்கையான பல கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 5. வணக்கம்
  ஐயா

  இராஜராஸ்வரி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. பதிவர்களுக்கு தொடர்ந்து போட்டியும் பரிசும் வழங்கி வரும் தங்களின் பணி போற்றுதலுக்குரியது. பரிசுப் பெற்ற ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், பரிசினை வழங்கிய தங்களுக்கும் வாழ்த்துகள்!
  தொடரட்டும் தங்கள் தொண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. S.P. Senthil Kumar December 16, 2015 at 8:41 PM

   //பதிவர்களுக்கு தொடர்ந்து போட்டியும் பரிசும் வழங்கி வரும் தங்களின் பணி போற்றுதலுக்குரியது. பரிசுப் பெற்ற Mrs. ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், பரிசினை வழங்கிய தங்களுக்கும் வாழ்த்துகள்!தொடரட்டும் தங்கள் தொண்டு.//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   நீக்கு
 7. சாதனையாய் பின்னூட்டங்க்கள் இட்டு வெற்றியாளராய் மின்னும் 'மணிராஜ்' ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நல்வாழ்த்துகள்!

  பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தும் தங்களுக்கும் நன்றிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்
   December 16, 2015 at 9:02 PM

   //சாதனையாய் பின்னூட்டங்கள் இட்டு வெற்றியாளராய் மின்னும் 'மணிராஜ்' Mrs. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நல்வாழ்த்துகள்!

   பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தும் தங்களுக்கும் நன்றிகள்!//

   வாங்கோ நண்பரே, வணக்கம்.

   தங்களின் தொடர் வருகைக்கும் சாதனையாளருக்கான நல்வாழ்த்துகளுக்கும் எனக்கான நன்றிகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 8. இடுகைகளில் மட்டுமல்லா பின்னூட்டத்திலும் சாதனை படைத்த ராஜிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இப்போட்டியைத் திறம்பட நடத்திப் பரிசளித்து வரும் எங்கள் அன்பிற்குரிய கோபால் சார் அவர்கட்கும் வந்தனங்களும் வாழ்த்துகளும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan December 16, 2015 at 9:08 PM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   //இடுகைகளில் மட்டுமல்லா பின்னூட்டத்திலும் சாதனை படைத்த ராஜிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம் :)

   //இப்போட்டியைத் திறம்பட நடத்திப் பரிசளித்து வரும் எங்கள் அன்பிற்குரிய கோபால் சார் அவர்கட்கும் வந்தனங்களும் வாழ்த்துகளும் :)//

   தங்களின் தொடர் வருகைக்கும், தேனினும் இனிய தெவிட்டாத கருத்துக்களுக்கும், வந்தன வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் கோபால்

   நீக்கு
 9. பதில்கள்
  1. Chitra December 16, 2015 at 10:25 PM

   வாங்கோ சித்ரா, வணக்கம்.

   //Congratulations!//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சித்ரா.

   அன்புடன் கோபு மாமா

   நீக்கு
 10. திருமதி. ராஜராஜேஸ்வரிக்கு இனிய வாழ்த்துக்கள்!
  திரும்பவும் ஒரு சாதனையாளருக்கு இனிய பரிசு தந்திருக்கும் உங்களின் நல்ல உள்ளத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mrs.Mano Saminathan December 16, 2015 at 11:42 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //திருமதி. ராஜராஜேஸ்வரிக்கு இனிய வாழ்த்துக்கள்!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //திரும்பவும் ஒரு சாதனையாளருக்கு இனிய பரிசு தந்திருக்கும் உங்களின் நல்ல உள்ளத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!//

   தங்களின் அன்பான வருகைக்கும், மனமார்ந்த பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 11. பரிசு பெற்றவருக்கும் பரிசு அளித்தவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழனி. கந்தசாமி December 17, 2015 at 3:32 AM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //பரிசு பெற்றவருக்கும் பரிசு அளித்தவருக்கும் பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

   தங்கள் ஊரில் காணாமல் போன என் புதையல் ஒன்றை
   தேடிக்கண்டு பிடிக்க, நான் மிகச்சரியான நேரத்தில்
   வகுத்துக்கொடுத்ததோர் அழகான திட்டமும், அதற்கான
   தங்களின் ஒத்துழைப்பும் மட்டுமே, இந்தப்பதிவினை இங்கு இன்று நான் சிறப்பித்து வெளியிடக் காரணமாக
   அமைந்துள்ளது.

   தங்களுக்கும், குறிப்பாகத் தங்களின்
   http://swamysmusings.blogspot.com/2015/10/blog-post_17.html இந்தப்பதிவுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள் சார்.

   பிரியமுள்ள VGK

   நீக்கு
 12. ஏற்கெனவே இராஜராஜேஸ்வரி மேடம் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இப்போது இந்தச் சாதனையிலும் இடம் பிடித்து விட்டார். வாழ்த்துகள் மேடம். நலமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். December 17, 2015 at 6:09 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //ஏற்கெனவே Mrs. இராஜராஜேஸ்வரி மேடம் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.//

   சாதனை மேல் சாதனை ... போதாதடா சாமி ! :)

   //இப்போது இந்தச் சாதனையிலும் இடம் பிடித்து விட்டார். வாழ்த்துகள் //

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   அன்புடன் VGK

   நீக்கு
  2. நலம் விசாரித்தமைக்கு
   நன்றிகள்..

   நலமுடன் இருக்கிறேன்..

   சிகிச்சைகள் என்னும்
   சித்ரவதைகள் தொடர்கின்றன..

   நீக்கு
 13. பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கட்கும், பரிசளித்து சிறப்பித்த தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வே.நடனசபாபதி December 17, 2015 at 7:36 AM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கட்கும், பரிசளித்து சிறப்பித்த தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், மனமார்ந்த பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

   நீக்கு
 14. ஆஹா! ராஜேஸ்வரி சகோதரிக்கு எங்கள் பாராட்டுகள்,வாழ்த்துகள்! எத்தனை சாதனைகள் தனது உடல்நலக்குறைவிற்கு இடையிலும்! பதிவிடுவதிலும்! எவ்வளவு ஆர்வம் பின்னூட்டம் இடுவதிலும் சரி, படைப்புகளை குறிப்பாக ஒவ்வொரு பண்டிகை, கோயில்கள் அதன் திருவிழாக்கள் பற்றி என்று பல தகவல்களைத் தருவதிலும்.

  இப்போது மீண்டும் உங்களிடமிருந்து அவர் பரிசு பெறுகின்றார் !! மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்! தங்களுக்கும் தான் சார். ஊக்குவித்த்து, மனதாரப் பாராட்டி பரிசு அளிப்பதற்குத் தங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள் சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu
   December 17, 2015 at 8:52 AM

   //ஆஹா! ராஜேஸ்வரி சகோதரிக்கு எங்கள் பாராட்டுகள்,வாழ்த்துகள்! எத்தனை சாதனைகள் தனது உடல்நலக்குறைவிற்கு இடையிலும்! பதிவிடுவதிலும்! எவ்வளவு ஆர்வம் பின்னூட்டம் இடுவதிலும் சரி, படைப்புகளை குறிப்பாக ஒவ்வொரு பண்டிகை, கோயில்கள் அதன் திருவிழாக்கள் பற்றி என்று பல தகவல்களைத் தருவதிலும்.

   இப்போது மீண்டும் உங்களிடமிருந்து அவர் பரிசு பெறுகின்றார் !! மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்! தங்களுக்கும் தான் சார். ஊக்குவித்த்து, மனதாரப் பாராட்டி பரிசு அளிப்பதற்குத் தங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள் சார்!//

   வாங்கோ வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

   நீக்கு
 15. பரிசுப்பெற்ற இராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Chokkan Subramanian December 17, 2015 at 9:48 AM

   //பரிசுப்பெற்ற Mrs. இ ரா ஜ ரா ஜே ஸ் வ ரி அம்மா அவர்களுக்கு பாராட்டுக்கள்.//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 16. சாதனையாளர் விருது பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  அவங்க பதிவு பக்கம் போயி 4, 5 பதிவுகள் படித்து ரசித்தேன். ஆன்மிக பதிவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இவங்க பதிவுகளில் கோவில் மட்டும் பற்றி எழுதாம ஏ... டு. இஸட் எல்லா விஷயங்களும் சொல்லி இருக்காங்க. கடவுளரின் புராண கதைகள் தல விருட்ஷம் தலபுராணம் என்று எல்லாவற்றையும் தெளிவாக சொல்லி வறாங்க. இதுபோல பதிவுகள் போட என்னமாதிரியான அர்ப்பணிப்பு ஆத்மார்த்தமான ஈடுபாடு விஷயங்கள் சேகரிக்க கடுமையான உழைப்பு எல்லாம் தேவைப்படும். குடும்பத் தலைவிகளுக்கு வீட்டில் பொறுப்புகள் அதிகமாக இருக்கும் குடும்ப பொறுப்புகளையும் கவனித்து இதுபோல அற்புதமான பதிவுகள் போட மிகுந்த திறமை இருக்கணும் அதுவும் 1500---- பதிவுகள் போட்டிருப்பது இமாலய சாதனைதான். மீண்டும் வாழ்த்துகள் அம்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாதனையாளர் விருது வென்ற திருமதி இராஜராஜீஸ்வரி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள். சக பதிவர்களுக்கு விருதுகள் ரொக்கப் பரிசுகள் அளித்து கௌரவித்து வரும் திரு கோபால்சார் அவர்களுக்கு பாராட்டுகள்.

   நீக்கு
  2. ஸ்ரத்தா, ஸபுரி... December 17, 2015 at 10:01 AM

   //சாதனையாளர் விருது பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள். //

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

   தங்கள் வலைப்பக்கம் அவர்கள் வருகை தந்து கருத்தளித்துள்ளதையும், அவர்கள் வலைப்பக்கம் தாங்கள் சென்று கருத்தளித்துள்ளதையும் கண்டு மகிழ்ந்தேன். தாங்கள் சொல்வதுபோல அவர்களின் சாதனை ஓர் இமாலய சாதனையே தான்.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. - VGK

   நீக்கு
  3. srini vasan December 17, 2015 at 12:11 PM

   வாங்கோ, வணக்கம்.

   //சாதனையாளர் விருது வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள். சக பதிவர்களுக்கு விருதுகள் ரொக்கப் பரிசுகள் அளித்து கௌரவித்து வரும் திரு கோபால்சார் அவர்களுக்கு பாராட்டுகள்.//

   தங்களின் தொடர் வருகைக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 17. திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்கலுக்கு என் வாழ்த்துக்கள்.
  பண முடிப்பாக அழித்துக் கொண்டிருக்கிறீர்களே. பாராட்டுக்கள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. rajalakshmi paramasivam December 17, 2015 at 5:43 PM

   //திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி மேடம்.

   //பண முடிப்பாக அழித்துக் கொண்டிருக்கிறீர்களே.//

   ’அழித்து’ என்ற சொல் ‘அவிழ்த்து’ அல்லது ’அளித்து’ என்று இருக்க வேண்டுமோ ?

   //பாராட்டுக்கள் கோபு சார்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகள் + பாராட்டுகள் அனைத்துக்கும் மிக்க நன்றி, மேடம்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 18. சாதனையாளர் விருது வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள். கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள். பின்னூட்டப்போட்டி, சிறுகதை விமரிசனப்போட்டி என்று எல்லா போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பரிசுகளையும் அள்ளிச்சென்றதற்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் December 17, 2015 at 5:44 PM

   வாங்கோ ‘பூங்கதவே .... தாழ் திறவாய்’ வணக்கம்.

   //சாதனையாளர் விருது வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள். கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள். பின்னூட்டப்போட்டி, சிறுகதை விமரிசனப்போட்டி என்று எல்லா போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பரிசுகளையும் அள்ளிச்சென்றதற்கும் வாழ்த்துகள்.//

   கும்முன்னு வாசனை அடிக்கும் பூந்தளிரின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 19. தகுதியானவருக்குத் தகுதியான விருது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை பித்தன் December 17, 2015 at 7:57 PM

   //தகுதியானவருக்குத் தகுதியான விருது//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி, சார்.

   நீக்கு
 20. திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  ’மலை முழுங்கி மகாதேவனுக்கு கதவு ஒரு அப்பளம்’ என்பது போல் சிறுகதைகளுக்கு சிறந்த விமர்சனங்கள் எழுதி பரிசு மூட்டையை அள்ளிக்கொண்டு போனவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா?

  அதுசரி அம்மாவுக்கு விருது, பிள்ளையின் படமா? அந்த அம்மாவை நான் பார்க்க வேண்டாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya December 17, 2015 at 8:11 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி, ஜெயா.

   //’மலை முழுங்கி மகாதேவனுக்கு கதவு ஒரு அப்பளம்’ என்பது போல் சிறுகதைகளுக்கு சிறந்த விமர்சனங்கள் எழுதி பரிசு மூட்டையை அள்ளிக்கொண்டு போனவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? //

   அதானே ! :)

   சபாஷ் ..... நன்னாவே நறுக்குன்னு சொல்லிட்டேள்
   ஜெயா !!

   //அதுசரி அம்மாவுக்கு விருது, பிள்ளையின் படமா? //

   ’மக்களைப்பெற்ற ம ஹ ரா ஜி’. அதுவும் இந்தக்
   கைக்குழந்தையின் மேல் அவர்களுக்கு தனியான ஓர்
   அலாதி பிரியமாகவும் இருக்கலாம்.

   “தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்று இவர்களே ஓர் சிறுகதை விமர்சனத்தில் எழுதி பரிசு பெற்றிருந்தார்கள்.

   மேலும் “தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை” என்றும் சொல்வார்களே, ஜெயா.

   அதனால் மகன் படங்களுடன் தாமரையை மலரச்செய்யுமாறு மட்டுமே எனக்கு உத்தரவு வந்துள்ளது.

   ’தங்கள் சித்தம் ... என் பாக்யம்’ என நான் அதற்குக் கட்டுப்பட்டு விட்டேன். நான் வேறு என்ன செய்ய?

   //அந்த அம்மாவை நான் பார்க்க வேண்டாமா?//

   நீங்க அவசியமாகப் போய்ப் பாருங்கோ, ஜெயா. எனக்கு ஒன்றும் இதில் ஆட்சேபணையே இல்லை. தேவைப்பட்டால் உங்களுக்கு இதில் ஓர் வழிகாட்டியாகவும் நான் இருந்து உதவுவேன்.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 21. சாதனையாளர் விருது வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள். பரிசு பாராட்டு பத்திரம் சூப்பராக வடிவமைத்து வழங்கியிருக்கும் கோபால் சாருக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் இஸ் வெல்....... December 18, 2015 at 9:59 AM

   ஆஹா, வாங்கோ, வணக்கம்.

   //சாதனையாளர் விருது வென்ற திருமதி. இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

   //பரிசு பாராட்டு பத்திரம் சூப்பராக வடிவமைத்து வழங்கியிருக்கும் கோபால் சாருக்கு பாராட்டுகள்.//

   ஏதோ மிகவும் அவசர அவசரமாக செய்துதர வேண்டிய சூழ்நிலையில் அன்று நான் இருந்தேன். இன்னும் சூப்பராகச் செய்திருக்கணும் என்று நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

   இதையே சூப்பரான வடிவமைப்பு என்று சொல்லி சூப்பராகப் பாராட்டியுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். ‘ஆல் இஸ் வெல்’ :)

   நீக்கு
 22. திருமதி இராஜராஜேஸ்வரிம்மாவங்களுக்கு வாழ்த்துகள்.. எங்கட குருஜி அவுகளுக்கு பாராட்டுகள். குருஜி ரண்டு நாளா நெட்டு சொதப்பிபோட்டுது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru December 18, 2015 at 5:30 PM

   வாங்கோ முருகு .... வணக்கம்மா.

   [முருகுவைக் காணும்மேன்னு இப்போத்தான் நினைத்தேன்.]

   நினைத்தேன் .... வந்தாய் .... நூறு வயது. :)

   //திருமதி இராஜராஜேஸ்வரிம்மாவங்களுக்கு வாழ்த்துகள்.. எங்கட குருஜி அவுகளுக்கு பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //குருஜி ரண்டு நாளா நெட்டு சொதப்பிபோட்டுது//

   அடடா, ரெண்டு நாட்கள் என்பது ரெண்டு வருஷம்போல நினைக்கவைத்து, ரொம்ப கஷ்டமாகி, தவியாய்த் தவிக்க வைத்து இருக்குமே. :) கேட்கவே என் மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளதும்மா.

   தாமதமானாலும் அன்பான தொடர் வருகைக்கும் பாராட்டுக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிம்மா, முருகு.

   அன்புடன் குருஜி

   நீக்கு
 23. இராஜராஜேஸ்வரி பெயர் எவ்வளவு மகிமை வாய்ந்ததோ அந்த அளவு ஆன்மீக விஷயங்களையும் எடுத்துச் சொல்வதில்க் கரைகண்டவர். எல்லா விஷயங்களும் முன்னணி. இப்பரிசும் அவரை அடைந்தது வரவேற்கத் தக்கது. அவருக்கு எனது பாராட்டுதல்கள். பார்த்துப்,பார்த்துப் பரிசு மழை அளிக்கும் உங்களுக்கும் இனிய பாராட்டுதல்கள். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமாட்சி December 18, 2015 at 6:36 PM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள். வணக்கம்.

   //இராஜராஜேஸ்வரி பெயர் எவ்வளவு மகிமை வாய்ந்ததோ அந்த அளவு ஆன்மீக விஷயங்களையும் எடுத்துச் சொல்வதில்க் கரைகண்டவர். எல்லா விஷயங்களும் முன்னணி. இப்பரிசும் அவரை அடைந்தது வரவேற்கத் தக்கது. அவருக்கு எனது பாராட்டுதல்கள்.//

   பொருத்தமாக மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

   //பார்த்துப்,பார்த்துப் பரிசு மழை அளிக்கும் உங்களுக்கும் இனிய பாராட்டுதல்கள். அன்புடன்//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 24. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! சாதனையாளர் வரிசையில் அடுத்து சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள். தொடர் பதிவாளராக இருந்தவர், உடல்நலம் காரணமாக இடையில் எழுதாமல் இருந்து, பின்னர் இறைவன் அருளால் மீண்டு வந்தவர், மீண்டும் எழுதத் தொடங்கி உள்ளார். அவரது ஊக்கத்திற்கு உரமூட்டும் வகையில் உங்களது பரிசு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. சகோதரிக்கு வாழ்த்துக்களும், உங்களுக்கு நன்றியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ December 19, 2015 at 9:45 AM

   //அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்!//

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //சாதனையாளர் வரிசையில் அடுத்து சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள். தொடர் பதிவாளராக இருந்தவர், உடல்நலம் காரணமாக இடையில் எழுதாமல் இருந்து, பின்னர் இறைவன் அருளால் மீண்டு வந்தவர், மீண்டும் எழுதத் தொடங்கி உள்ளார்.//

   இறைவன் அருளால் மீண்டும் அவர் மீண்டு வந்து மீண்டும் அவ்வப்போது கொஞ்சம் பதிவுகள் எழுதத்துவங்கியுள்ளதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே.

   //அவரது ஊக்கத்திற்கு உரமூட்டும் வகையில் உங்களது பரிசு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.//

   ஏதோ இதுபோல அவர்களுக்கு நான் ஓர் மிகச்சிறிய பரிசு அளிக்க எனக்கு ஓர் எதிர்பாராத பிராப்தம் அமைந்ததில் என் மனதுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியும் ஆறுதலுமாக உள்ளது. எல்லாம் தெய்வச்செயலால் மட்டுமே நடைபெறுகின்றன. நம் கையில் ஒன்றுமே இல்லை.

   //சகோதரிக்கு வாழ்த்துக்களும், உங்களுக்கு நன்றியும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான இனிய நல்ல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 25. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் December 19, 2015 at 8:36 PM

   //திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.//

   வாங்கோ வெங்கட்ஜி. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 26. உடல்நலம் தேறி மீண்டு வந்து சாதனை படைத்திருக்கும் ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam December 22, 2015 at 5:42 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //உடல்நலம் தேறி மீண்டு வந்து ....//

   மேலே நம் ஸ்ரீராமின் கேள்விக்கு அவர்கள் அளித்துள்ள பதிலைப்படித்தால் என் மனதுக்கு மிகவும் அதிகமான வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. :(

   //சாதனை படைத்திருக்கும் ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 27. ஆன்மிகப் பதிவுகளை அதிகமாக அளித்து அரிய விஷயங்களை அறியச் செய்த திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். ஆன்மிக மணம் கமழும் பல படைப்புகளை அவர் மேலும் அளிக்க இறையருள் துணைநிற்கும்! சாதனையாளர் விருது சான்றிதழ் அருமையாக உள்ளது! வடிவமைத்தவர் அசாதாரணமானவர் அல்லவா? அவருக்கும் நன்றிகள் பல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Seshadri e.s. December 25, 2015 at 8:35 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆன்மிகப் பதிவுகளை அதிகமாக அளித்து அரிய விஷயங்களை அறியச் செய்த திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //ஆன்மிக மணம் கமழும் பல படைப்புகளை அவர் மேலும் அளிக்க இறையருள் துணைநிற்கும்!//

   மிகவும் சந்தோஷம். ததாஸ்து :))

   //சாதனையாளர் விருது சான்றிதழ் அருமையாக உள்ளது! வடிவமைத்தவர் அசாதாரணமானவர் அல்லவா? அவருக்கும் நன்றிகள் பல!//

   என் மனதுக்கு முழுதிருப்தியில்லாமல், ஏதோவொரு மிகவும் அவசர நெருக்கடியில் அதனை வடிவமைத்துச் செய்ய நேர்ந்தது. அதுவே அருமையாக உள்ளதாகத் தாங்களாவது அருமையாகச் சொல்லியுள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.

   தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

   நீக்கு
 28. சாதனையாளர் விருது வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரணாகதி. December 25, 2015 at 3:55 PM

   வாங்கோ, வணக்கம்.

   //சாதனையாளர் விருது வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 29. விருது வென்ற திருமதி இராஜ ராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. siva siva December 26, 2015 at 11:12 AM

   சிவ சிவா ! வாங்கோ, வணக்கம்.

   //விருது வென்ற திருமதி இராஜ ராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 30. இராஜராஜேஸ்வரி மேடத்தின் பதிவுகளின் வேகம் எப்போதும் வியக்கவைப்பது. இப்போது பின்னூட்டங்களிலும் வேகம் காட்டி சாதனை புரிந்துள்ளது மேலும் வியப்பளிக்கிறது. போட்டியில் வெற்றிபெற்று பரிசுபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மேடம்.

  சிறப்பான பதிவுகளால் மட்டுமல்லாது, சாதனைப்போட்டிகளிலும் முத்திரை பதித்துள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி December 27, 2015 at 9:30 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இராஜராஜேஸ்வரி மேடத்தின் பதிவுகளின் வேகம் எப்போதும் வியக்கவைப்பது. இப்போது பின்னூட்டங்களிலும் வேகம் காட்டி சாதனை புரிந்துள்ளது மேலும் வியப்பளிக்கிறது. போட்டியில் வெற்றிபெற்று பரிசுபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மேடம்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், மேலும் மேலும் வியப்பளிக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //சிறப்பான பதிவுகளால் மட்டுமல்லாது, சாதனைப்போட்டிகளிலும் முத்திரை பதித்துள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார்.//

   :) முத்திரை பதித்துள்ள தங்களின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு மிகவும் சந்தோஷம் + நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 31. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shamaine bosco December 27, 2015 at 10:32 AM

   //திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்.//

   மிக்க நன்றி.

   நீக்கு