என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

சாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [மன அலைகள்]

அன்புடையீர், 


அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்பில் 31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் ஓர் சுலபமான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, தங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.


அதற்கான இணைப்பு தங்கள் நினைவுக்காக இதோ:


மேற்படி போட்டியில் கலந்துகொண்டு
வெற்றிபெற, வரும் 31.12.2015 
நிறைவு நாள் ஆகும்.


இதில் மிகவும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோர் அனைவருக்கும் தலா ரூபாய் ஆயிரம் [Rs. 1000/-] வீதம் ரொக்கமாகப் பரிசளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். 

 சாதனையாளர்  முனைவர் திரு. 
 பழனி கந்தசாமி ஐயா 
அவர்கள் 

வலைத்தளம்: 
மன அலைகள்
இவருக்கான ரொக்கப் பரிசுத்தொகை 
10.10.2015 அன்று என்னால் வழங்கப்பட்டது. தொடர்புள்ள பதிவுகள்

http://gopu1949.blogspot.in/2015/10/2015-via.html
பதிவர் சந்திப்பு-2015 சூடான சுவையான செய்திகள்
[புதுக்கோட்டை via மலைக்கோட்டை]


கரும்பு தின்னக் கூலி

இரு பிரபல வலைப்பதிவர்களின் சந்திப்பு

நானும் ஒரு பரிசு பெற்றேன்
 சாதனையாளர் விருது 
முனைவர் திரு.
 பழனி கந்தசாமி ஐயா   
அவர்கள்
வலைத்தளம்: 
மன அலைகள்
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

அன்புடன் 
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html } 

இவர் வயதில் மிகவும் மூத்த பதிவர். 80 வயதினைக்கடந்தவர். இருப்பினும் செயலிலும் எழுத்திலும் என்றும் தான் ஒரு இளைஞரே என்பதை நிரூபித்து, இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளவர். இவருடைய மனம் திறந்த வெளிப்படையான பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் அப்படியே நான் அடிக்கடி சொக்கிப்போவதுண்டு. 

எதையுமே சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் கொள்கை கொண்ட இவர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டதும், 11.04.2015 ஆரம்பித்து 02.09.2015 அன்றுடனான 145 நாட்களுக்குள்ளாகவே என் முதல் 750 பதிவுகளில், ஏற்கனவே பின்னூட்டமிடாமல் விட்டுப்போய் இருந்த அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு முடித்துள்ளதும் மிகவும் பாராட்டத்தக்க செயல்களாகும்.

இந்த என் 100% பின்னூட்டப்போட்டியில் இவரே முதல் நபராக வெற்றியினை எட்டிப்பிடித்தவர் என்பதும்,  நேரிலேயே வருகைதந்து பரிசுப்பணத்தை முதன்முதலாக என்னிடமிருந்து பெற்றுச்சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு


மனம் நிறைந்த 
பாராட்டுகள் +
அன்பான இனிய
நல்வாழ்த்துகள்!

பிரியமுள்ள கோபு

 
மற்ற சாதனையாளர்கள் பற்றிய செய்திகள் 
இனியும் அவ்வப்போது தொடரும்.


வெற்றியாளர்கள் பற்றிய ஒட்டுமொத்தச் செய்திகள் 
இறுதியில் தனிப்பதிவாகவும் வெளியிடப்படும். 

என்றும் அன்புடன் தங்கள்

[ வை. கோபாலகிருஷ்ணன் ]

82 கருத்துகள்:

 1. முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. சாதனைத் திலகம் முனைவர் பழனி கந்தசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!


  தங்களின் 101-ஆவது பதிவு வெளியானமைக்கு திரு. வை. கோ. அவர்களுக்கு வாழ்த்துகள்!
  (சென்ற 100-ஆவது வெளியீட்டில் மறந்தமையால் தற்போது...!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்
   December 13, 2015 at 10:28 PM

   //சாதனைத் திலகம் முனைவர் பழனி கந்தசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!//

   வாங்கோ நண்பரே, வணக்கம்.
   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   தங்களின் 101-ஆவது பதிவு வெளியானமைக்கு திரு. வை.கோ.அவர்களுக்கு வாழ்த்துகள்! (சென்ற 100-ஆவது வெளியீட்டில் மறந்தமையால் தற்போது...!)//

   100 ஐவிட 101 சிறப்பானதே ! :) அதைவிட 108 மேலும் சிறப்பானது. மீண்டும் மிக்க நன்றி, நண்பரே.

   அன்புடன் VGK

   நீக்கு
 3. சாதனையாளர் விருது பெற்ற இரண்டு ஐயாக்களுக்கும் விருதுகள் வழங்கி பதிவர்களை ஊக்குவிக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரிவை சே.குமார் December 13, 2015 at 10:35 PM

   வாங்கோ, வணக்கம்.

   //சாதனையாளர் விருது பெற்ற இரண்டு ஐயாக்களுக்கும் .... //

   இரண்டு ஐயா வா? ஒரு ஐயா மட்டும் தானே !

   //விருதுகள் வழங்கி பதிவர்களை ஊக்குவிக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   நீக்கு
 4. பழனிகந்தசாமி ஐயா அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள். தங்களுக்கும் சார்..இப்படி ஊக்குவிப்பதற்கு...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu
   December 13, 2015 at 10:58 PM

   //பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள். தங்களுக்கும் சார்..இப்படி ஊக்குவிப்பதற்கு...!!!//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 5. கந்தசாமி ஐயா அவர்கள் தான் எடுத்துக் கொண்ட காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற உறுதி உள்ளவர். அவருக்கு இந்தப் பரிசு மிக மிகப் பொருத்தமானது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu
   December 13, 2015 at 10:59 PM

   //கந்தசாமி ஐயா அவர்கள் தான் எடுத்துக் கொண்ட காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற உறுதி உள்ளவர்.//

   ஆம் இதைத்தாங்களும் இங்கு மிக உறுதியாகத்தான் சொல்லியுள்ளீர்கள். :)

   //அவருக்கு இந்தப் பரிசு மிக மிகப் பொருத்தமானது..//

   மிக மிகப் பொருத்தமான தங்களின் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 6. சாதிக்க வயது ஒரு தடையில்லை என்ற உண்மையை உணர்த்தி போட்டியில் முதல் நபராக வெற்றி பெற்றிருக்கும் திரு பழனி கந்தசாமி அவர்களுக்குப் பாராட்டுக்கள்! தொடர்ந்து ஏதாவது ஒரு போட்டி அறிவித்து சாதனை செய்ய ஊக்குவிக்கும் உங்களுக்கும் என் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி December 13, 2015 at 11:10 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //சாதிக்க வயது ஒரு தடையில்லை என்ற உண்மையை உணர்த்தி போட்டியில் முதல் நபராக வெற்றி பெற்றிருக்கும் திரு பழனி கந்தசாமி அவர்களுக்குப் பாராட்டுக்கள்! தொடர்ந்து ஏதாவது ஒரு போட்டி அறிவித்து சாதனை செய்ய ஊக்குவிக்கும் உங்களுக்கும் என் பாராட்டுக்கள்!//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், இருவரையும் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 7. ஆஹா, தன்யனானேன். "வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி" என்று சொல்வார்கள். அது போல பதிவுலக ஜாம்பவான் என்று புகழ் பெற்ற திரு. வைகோ அவர்கள் எனக்குப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்கள். அவருடைய அன்பிற்கு நான் என்றும் அடிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழனி. கந்தசாமி December 14, 2015 at 3:19 AM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //ஆஹா, தன்யனானேன். "வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி" என்று சொல்வார்கள். அது போல பதிவுலக ஜாம்பவான் என்று புகழ் பெற்ற திரு. வைகோ அவர்கள் எனக்குப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்கள். அவருடைய அன்பிற்கு நான் என்றும் அடிமை.//

   தங்களின் பேரெழுச்சிமிக்க + உற்சாகமான + பொறுமையான + கடின உழைப்புக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி சார் இது.

   இதெல்லாம் மற்றவர்கள் பார்வைக்கு ஏதோ மிகவும் சுலபமான சாதாரண விஷயம் போலத்தான் தோன்றும்.

   ஆனால் எல்லோராலும், எல்லா நேரங்களிலும் இதுபோன்றதோர் சாதனை செய்யவே இயலாது.

   தங்களின் முழுப்பூசணிக்காய் அளவு சாதனைக்கு முன்னால் இந்த என் பரிசெல்லாம் மிகவும் சுண்டைக்காய் அளவு மட்டுமே.

   மீண்டும் தங்களுக்கு என் பாராட்டுகள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சார்.

   பிரியமுள்ள VGK

   நீக்கு
 8. பழனி. கந்தசாமி ஸாருக்கும், அவர்தம் உழைப்புக்கும் அறிமுகமும் வேண்டுமோ? உற்சாகமே உருவான 80 வயது இளைஞர். அவர் பதிவில் இருக்கும் இலேசான (சுய) எள்ளல் கலந்த நகைச்சுவை எப்போதுமே எனக்குப் பிடிக்கும். வாழ்த்துகள் ஸார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். December 14, 2015 at 6:17 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //பழனி. கந்தசாமி ஸாருக்கும், அவர்தம் உழைப்புக்கும் அறிமுகமும் வேண்டுமோ? உற்சாகமே உருவான 80 வயது இளைஞர். அவர் பதிவில் இருக்கும் இலேசான (சுய) எள்ளல் கலந்த நகைச்சுவை எப்போதுமே எனக்குப் பிடிக்கும். வாழ்த்துகள் ஸார்.//

   மிகவும் அழகாகவே சொல்லியுள்ளீர்கள்.

   ஐயா அவர்கள் பேரெழுச்சி மிக்க இளைஞர் மட்டுமேதான் என்பது இதன் மூலம் மட்டுமல்லாமல், சென்ற ஆண்டு 2014 என் சிறுகதை விமர்சனப்போட்டிகள் அனைத்திலும் 40 out of 40 உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஜீவீ-வீஜீ விருது இவர் வாங்கியபோதே நிரூபிக்கப்பட்டு விட்டது. அதற்கான இணைப்பு இதோ:
   http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html

   இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே இங்கு கொடுத்துள்ளேன்.

   அன்புடன் VGK

   நீக்கு
 9. திரு.பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 10. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 11. சாதனையாளர் விருது பெற்ற திரு பழனி கந்த சாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள். திறமை சாலிகளைக்கண்டு பிடித்து விருதும் ரொக்கப்பரிசும் வாழ்த்துகளும் அளித்துவரும் திரு கோபால கிருஷ்ணன் சார் அவர்களுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... December 14, 2015 at 8:33 AM

   வாங்கோ, வணக்கம்,

   புதிமையானதோர் பெயர் :)
   புனிதமானதோர் ’ஓம்’ ப்ரோஃபைல் :))
   புதிய முதல் வருகை என் வலைத்தளத்திற்கு :)))

   //சாதனையாளர் விருது பெற்ற திரு பழனி கந்த சாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள். திறமை சாலிகளைக்கண்டு பிடித்து விருதும் ரொக்கப்பரிசும் வாழ்த்துகளும் அளித்துவரும் திரு கோபால கிருஷ்ணன் சார் அவர்களுக்கு பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   நீக்கு
 12. பரிசை வழங்கிய தங்களுக்கும் பரிசைப் பெற்ற பழனி கந்தசாமி அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  தொடர்ந்து ஏதாவது பரிசு வழங்கிக்கொண்டே இருப்பது தங்களின் தனிச் சிறப்பு. எனக்கும் கலந்து கொள்ள ஆர்வம்தான் நேரமின்மையால் முடியாமல் போகிறது.
  தாங்கள் அறிவிக்கும் ஏதாவது ஒரு போட்டியில் கலந்துகொண்டு நிச்சயம் பரிசுபெறுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. S.P. Senthil Kumar December 14, 2015 at 9:04 AM

   வாங்கோ வணக்கம்.

   //பரிசை வழங்கிய தங்களுக்கும் பரிசைப் பெற்ற பழனி கந்தசாமி அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து ஏதாவது பரிசு வழங்கிக்கொண்டே இருப்பது தங்களின் தனிச் சிறப்பு. எனக்கும் கலந்து கொள்ள ஆர்வம்தான் நேரமின்மையால் முடியாமல் போகிறது.
   தாங்கள் அறிவிக்கும் ஏதாவது ஒரு போட்டியில் கலந்துகொண்டு நிச்சயம் பரிசுபெறுவேன்.//

   பலரையும் அவரவர்களின் தனித்திறமையுடன் நன்றாக எப்படியாவது எழுத வைக்க வேண்டும் என்பதே சென்ற ஆண்டு நான் என் வலைத்தளத்தினில் நடத்திய 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகள் + இந்த ஆண்டு இப்போது நடத்தும் 100% பின்னூட்டமிடும் போட்டி ஆகியவற்றின் அடிப்படை நோக்கங்களாகும்.

   தாங்களோ ஏற்கனவே ஓர் மிகச்சிறந்த எழுத்தாளராக என் பார்வைக்குக் காட்சியளிக்கிறீர்கள். ஆர்வம் இருந்தும் நேரமின்மை என்பதை, நான் உங்கள் விஷயத்தில் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   நீக்கு
 13. சாதனையாளர் விருது பெற்ற திரு பழனி கந்தசாமி சார் அவர்களுக்கு வாழ்த்துகள். புதுசு புதுசா போட்டிகள் வைத்து விருதம் பரிசுகளும் வழங்கி வரும் கோபால் சாருக்கு பாராட்டுகள். சாதனைகள் புரிய வயது ஒரு தடையே இல்லை என்று ஆர்வமுடன் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கும் சாதனையாளருக்கு மறுபடியும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. srini vasan December 14, 2015 at 10:35 AM

   //சாதனையாளர் விருது பெற்ற திரு பழனி கந்தசாமி சார் அவர்களுக்கு வாழ்த்துகள். புதுசு புதுசா போட்டிகள் வைத்து விருதம் பரிசுகளும் வழங்கி வரும் கோபால் சாருக்கு பாராட்டுகள். சாதனைகள் புரிய வயது ஒரு தடையே இல்லை என்று ஆர்வமுடன் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கும் சாதனையாளருக்கு மறுபடியும் வாழ்த்துகள்.//

   வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கள், பாராட்டுகள், வாழ்த்துகள் அனைத்துக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   நீக்கு
 14. மனதிருந்தால் எவரும் பரிசு பெறமுடியும், பரிசு தரும் உள்ளங்களைத்தான் பாராட்டவேண்டும். பாகுபாடு இல்லாமல் அன்பு பாராட்டி அங்கீகாரிக்கும் தன்மை, அது தாய்மை போன்ற அரவணைத்துச் செல்லும் அன்பு உள்ளத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஆகவே பரிசுபெருபவரைவிட, பாராட்டி பரிசுதரும் உள்ளாம்தான் உயர்வான உள்ளம்... ஆகவே பாராட்டுக்கு உரியவர், நம் அனைவரிடமும் அன்பு'வை'த்திருக்கும் திரு "வை. கோபாலக்ருஷ்ணன்" அவர்களே...... அன்புடன் கோகி -ரேடியோமர்கோனி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Gopal Krishnan December 14, 2015 at 10:48 AM

   வாங்கோ சார். வணக்கம்.

   //மனதிருந்தால் எவரும் பரிசு பெறமுடியும், பரிசு தரும் உள்ளங்களைத்தான் பாராட்டவேண்டும். பாகுபாடு இல்லாமல் அன்பு பாராட்டி அங்கீகாரிக்கும் தன்மை, அது தாய்மை போன்ற அரவணைத்துச் செல்லும் அன்பு உள்ளத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஆகவே பரிசுபெருபவரைவிட, பாராட்டி பரிசுதரும் உள்ளாம்தான் உயர்வான உள்ளம்... ஆகவே பாராட்டுக்கு உரியவர், நம் அனைவரிடமும் அன்பு'வை'த்திருக்கும் திரு "வை. கோபாலக்ருஷ்ணன்" அவர்களே...... அன்புடன் கோகி -ரேடியோமர்கோனி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும், தங்கள் பெயர்கொண்ட என்னைப் சற்றே அதிகமாக புகழ்ந்து பாராட்டியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   மேலே திரு. பழனி கந்தசாமி ஐயா, ஸ்ரீராம் மற்றும் Mr. S.P. Senthil Kumar ஆகியோரின் பின்னூட்டங்களுக்கு நான் கொடுத்துள்ள பதில்களையும் தயவுசெய்து படித்துப்பாருங்கோ.

   {பரிசு என்பது போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொள்வோருக்கு, அவர்களின் கடின உழைப்புக்கு என்னால் தரப்படும் ஓர் மிகச்சிறிய அங்கீகாரம் மட்டுமே}

   அன்புடன் VGK

   நீக்கு
 15. சாதனையாளர் விருது வென்ற திரு பழனி கந்தசாமி சார் அவர்களுக்கு வாழ்த்துகள் விருது பரிசு வழங்கிய கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் இஸ் வெல்....... December 14, 2015 at 11:59 AM

   //சாதனையாளர் விருது வென்ற திரு பழனி கந்தசாமி சார் அவர்களுக்கு வாழ்த்துகள் விருது பரிசு வழங்கிய கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள்//

   வாங்கோ, வணக்கம்.

   ’ஆல் இஸ் வெல்’ ஆகிய தாங்கள் பறந்துவந்து கருத்தளிப்பது, ’ஆல் இஸ் வெல்’ என்ற தங்கள் பெயரைப்போலவே மன நிறைவாகத்தான் உள்ளது.

   வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   நீக்கு
 16. சாதனையாளர் விருது பெற்ற பழனி கந்தசாமி சார் அவர்களுக்கு. அடிக்கடி விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கும் வை.கோ. ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Chandragowry Sivapalan December 14, 2015 at 12:24 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   இப்போதுதான் இங்கு மழை நின்று, கடந்த இரண்டு நாட்களாக வெயில் அடித்து வருகிறது. தங்களின் அபூர்வ வருகை மிகவும் ஆச்சர்யமளிக்கிறது. மீண்டும் மழை வந்துவிடுமோ என நினைக்கத்தோன்றுகிறது. :)

   //சாதனையாளர் விருது பெற்ற பழனி கந்தசாமி சார் அவர்களுக்கு. அடிக்கடி விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கும் வை.கோ. ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான திடீர் வருகைக்கும், அழகான கருத்துகள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 17. சாதனையாளர் விருது வென்ற திரு பழனி கந்தசாமி சார் அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் December 14, 2015 at 1:10 PM

   எங்கேயோ ...... பார்த்த ...... ஞாபகம் ...... !

   ’பூந்தளிர்’ எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக உள்ளதே என நெடுநேரம் யோசித்தேன். :)

   ஆஹா, சமீபத்திய சாதனையாளர்களில் ஒருவரான நம் சிவகாமி அல்லவோ என பிறகு ஒருவழியாக ஞாபகம் வந்தது. :) எப்படி இருக்கீங்கோ. நலம் தானே ! :) WELCOME ! :)

   //சாதனையாளர் விருது வென்ற திரு பழனி கந்தசாமி சார் அவர்களுக்கு வாழ்த்துகள்//

   அச்சா, பஹூத் அச்சா ! மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
  2. கருஷ்ணர் என்று பெயர் வச்சாலே இந்த குசும்பு( குறும்பு) தனமும் கூடவே ஒட்டிக்குமோ
   போன பதிவுல சாதனையாளரா அறிமுகப்படுத்திட்டு இங்க எங்கேயோ கேட்ட குரல்னா சொல்றீங்க. நல்ல ஞாபக சக்திதான்

   நீக்கு
  3. பூந்தளிர் December 15, 2015 at 5:51 PM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா. நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

   //கிருஷ்ணர் என்று பெயர் வச்சாலே இந்த குசும்புத் (குறும்பு) தனமும் கூடவே ஒட்டிக்குமோ//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இருக்கலாம். இருக்கலாம்.

   ’கேட்டதும் கொடுப்பவனே .... கிருஷ்ணா கிருஷ்ணா .... கீதையின் நாயகனே .... கிருஷ்ணா கிருஷ்ணா’ ன்னு ஒரு பாட்டே இருக்கிறதே, சிவகாமி. :)

   //போன பதிவுல சாதனையாளரா அறிமுகப்படுத்திட்டு இங்க எங்கேயோ கேட்ட குரல்னா சொல்றீங்க. நல்ல ஞாபக சக்திதான்.//

   அதுக்குத்தான் அடிக்கடி என்னுடன் ஒரு டச்சிலேயே இருக்கணும்ன்னு சொல்றேன். Out of Sight .. Out of Mind ஆகிவிடும். ஜாக்கிரதை ! :))))))

   தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், என் குசும்பு/குறும்புகளை ரஸித்துச் சொன்னதற்கும் என் இனிய நன்றிகள். :)

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 18. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,
  சாதனை என்பது எங்கும் எப்போதும் முடியும் என்பதை ஐயா உண்மையாக்கியுள்ளார்.
  தங்கள் பகிர்வும் அருமை, தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mageswari balachandran December 14, 2015 at 2:13 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், சாதனை என்பது எங்கும் எப்போதும் முடியும் என்பதை ஐயா உண்மையாக்கியுள்ளார். தங்கள் பகிர்வும் அருமை, தொடருங்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 19. சாதனையாளர் விருது கெலிச்ச திரு பளனி கந்தசாமி ஐயா வங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru December 14, 2015 at 3:23 PM

   வாங்கோ முருகு, வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா? வெளிநாட்டுக்கு எங்கோ போய் இருப்பதாக யாரோ சொல்லிக் கேள்விப் பட்டேனே. உண்மையாம்மா.

   //சாதனையாளர் விருது கெலிச்ச திரு பளனி கந்தசாமி ஐயா வங்களுக்கு வாழ்த்துகள்.//

   கொச்சைத்தமிழில் உள்ள தங்களின் பின்னூட்டக்கருத்துகள் ஐயா அவர்களுக்குப் புரியுமோ புரியாதோ. எதற்கும் நான் அதனை அப்படியே கீழே மொழிபெயர்த்துக் கொடுத்து விடுகிறேன்.

   -=-=-=-=-

   சாதனையாளர் விருது வென்றுள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு முருகுவின் முறுகலான வாழ்த்துகள்.

   -=-=-=-=-

   தங்களின் அன்பான வருகைக்கும், கிளி கொஞ்சும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிம்மா முருகு.

   பிரியமுள்ள குருஜி

   நீக்கு
 20. சாதனையாளர் விருதை தங்களிடமிருந்த பெற்ற முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும் அதை வழங்கிய தங்களுக்கும் பாராட்டுக்கள்! விருதை அளிக்கவும் அதைப் பெறவும் தகுதி வேண்டும். அது உள்ள இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வே.நடனசபாபதி December 14, 2015 at 5:45 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //சாதனையாளர் விருதை தங்களிடமிருந்த பெற்ற முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும் அதை வழங்கிய தங்களுக்கும் பாராட்டுக்கள்! விருதை அளிக்கவும் அதைப் பெறவும் தகுதி வேண்டும். அது உள்ள இருவருக்கும் வாழ்த்துக்கள்! //

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 21. ஸார் மறநுதுட்டீங்களா. போன பதிவிலும் வந்து சற்றே பெரிதான கமண்ட் போட்டேனே. நீங்க கூட ரிப்ளை கமண்ட் டெரிசாகவே கொடுத்தீங்களே. உங்க பதிவு பக்கம் என் இரண்டாவது வருகை .  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... December 14, 2015 at 6:26 PM

   //ஸார் மறந்துட்டீங்களா. போன பதிவிலும் வந்து சற்றே பெரிதான கமண்ட் போட்டேனே. நீங்க கூட ரிப்ளை கமண்ட் டெரிசாகவே கொடுத்தீங்களே. உங்க பதிவு பக்கம் என் இரண்டாவது வருகை.//

   ஆமாம். ஆமாம். நீங்கள் சொல்வது சரியே. இப்போது மீண்டும் அங்கு போய் பார்த்தேன் / படித்தேன். மிக்க மகிழ்ச்சி. இப்போது என் மண்டையில் நன்கு பதிந்து விட்டது. இனி மறக்கவே மாட்டேன். நினைவூட்டலுக்கு மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   நீக்கு
 22. வணக்கம்
  ஐயா
  பழனி கந்தசாமி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்... சிறப்பாக நடத்தி முடித்த தங்களுக்கு பாராட்டுக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 23. எட்டு எட்டா மனுஷன் வாழ்வ பிரிச்சிக்கோ... எட்டு - பூஜ்ய (பூஜ்யத்திற்கு இங்கு மதிப்பில்லை) வயதினிலே வெற்றிக்கனியை முதல்வராய் முனைப்புடன் எட்டிப் பிடித்த முனைவர் உயர்திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், வணக்கங்களும் ஐயா!! இன்னும் சிலபலர் உங்கள் பாதையில் அடியொற்றி வரக்கூடும்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI December 14, 2015 at 9:13 PM

   வாங்கோ வாத்யாரே ! வணக்கம்.

   //எட்டு எட்டா மனுஷன் வாழ்வ பிரிச்சிக்கோ... எட்டு - பூஜ்ய (பூஜ்யத்திற்கு இங்கு மதிப்பில்லை) வயதினிலே வெற்றிக்கனியை முதல்வராய் முனைப்புடன் எட்டிப் பிடித்த முனைவர் உயர்திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், வணக்கங்களும் ஐயா!!//

   ஐயாவை வாழ்த்தி வணங்கியுள்ள தங்களுக்கு என் மகிழ்ச்சிகளும் நன்றிகளும்.

   //இன்னும் சிலபலர் உங்கள் பாதையில் அடியொற்றி வரக்கூடும்!!!//

   தலையாக ...... நீ இருந்தென்ன ......
   வாலாக ........ நான் வரவேண்டும் .......

   எனத் தாங்கள் ஏதோ உற்சாகமாகப் பாட்டுப்பாடி சொல்வதுபோல உள்ளது. :)

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 24. அடித்தல் திருத்தல் இல்லாத அழகான கையெழுத்தில் வாழ்த்துகளுடன், ஆயிரம் ரூபாய் விசிறியையும் கொடுத்து மகிழ்வித்த வாத்தியாருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்! ஆயிரத்தை அள்ளி வழங்கிய நீங்கள் "ஆயிரத்தில் ஒருவன்" என்பதில் சந்தேகமே இல்லை!!! ஆயிரம் ரூபாய் விசிறி வழங்கிய உங்களுக்கு நானும் ஓர் - விசிறி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI December 14, 2015 at 9:21 PM

   வாங்கோ, மீண்டும் வருகைக்கு மீண்டும் நன்றிகள்.

   //அடித்தல் திருத்தல் இல்லாத அழகான கையெழுத்தில் வாழ்த்துகளுடன், ஆயிரம் ரூபாய் விசிறியையும் கொடுத்து மகிழ்வித்த வாத்தியாருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்! ஆயிரத்தை அள்ளி வழங்கிய நீங்கள் "ஆயிரத்தில் ஒருவன்" என்பதில் சந்தேகமே இல்லை!!!//

   :) ஆஹா, ”ஆயிரத்தில் ஒருவன்” நம்ம வாத்யார் படமாச்சே ! :) மிகவும் சந்தோஷம் ... வாத்யாரே.

   //ஆயிரம் ரூபாய் விசிறி வழங்கிய உங்களுக்கு நானும் ஓர் - விசிறி!!!//

   சூப்பர் ... பஞ்ச் வரிகள். :)

   நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி.

   பிரியமுள்ள VGK

   நீக்கு
 25. முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 26. வாழ்த்துகள் கூறிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பரிசு வழங்கிய பதிவுலக ஜாம்பவானுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழனி. கந்தசாமி December 15, 2015 at 4:30 AM

   வாங்கோ சார், வணக்கம்.

   //வாழ்த்துகள் கூறிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பரிசு வழங்கிய பதிவுலக ஜாம்பவானுக்கும் நன்றி.//

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :) - VGK

   நீக்கு
 27. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கே. பி. ஜனா... December 15, 2015 at 6:23 AM
   //பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :) - VGK

   நீக்கு
 28. கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆயிரம் ரூபாயில் விசிறி அழகாக காட்சியளிக்கிறது. வாழ்த்துக்கள் கோபாலகிருஷ்ணன் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Chokkan Subramanian December 15, 2015 at 10:16 AM

   வாங்கோ சார், வணக்கம்.

   //கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆயிரம் ரூபாயில் விசிறி அழகாக காட்சியளிக்கிறது. வாழ்த்துக்கள் கோபாலகிருஷ்ணன் ஐயா.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ரசனைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 29. மூத்த பதிவர் திரு பழனி கந்தசாமி சார் அவர்கட்கு பாராட்டுகள். சிறப்புறப் போட்டி நடத்திப் பரிசளித்த எங்கள் மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய கோபால் சார் அவர்கட்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan December 15, 2015 at 10:50 AM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   //மூத்த பதிவர் திரு பழனி கந்தசாமி சார் அவர்கட்கு பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //சிறப்புறப் போட்டி நடத்திப் பரிசளித்த எங்கள் மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய கோபால் சார் அவர்கட்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் :)//

   :) தங்களின் அன்பான வருகைக்கும், உள்ளம் நிறைந்த தேனினும் இனிய அழகான வாழ்த்துகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஹனி மேடம் :)

   பிரியமுள்ள கோபால்

   நீக்கு
 30. மூத்த பதிவர் திரு.க்ந்தசாமி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!!
  சாதனையாளர் விருந்த‌ளித்த தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mrs.Mano Saminathan December 15, 2015 at 4:41 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //மூத்த பதிவர் திரு.கந்தசாமி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!! சாதனையாளர் விருந்த‌ளித்த தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!!//

   தங்களின் அன்பான வருகைக்கும், இனிய வாழ்த்துகள் + மனமார்ந்த பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGK

   நீக்கு
 31. அனைத்துப்பதிவுகளிலும் முதல் ஆளாய்க் கருத்துரைகளை வழங்கிப் போட்டியில் வென்று பரிசினைப் பெற்றுள்ள பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அவருடைய தளராத ஆர்வமும் விடாமுயற்சியும் வியப்பளிக்கின்றன. தங்களுடைய சாதனைகளின் பட்டியல் பிரமிக்கவைக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி December 15, 2015 at 5:53 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அனைத்துப்பதிவுகளிலும் முதல் ஆளாய்க் கருத்துரைகளை வழங்கிப் போட்டியில் வென்று பரிசினைப் பெற்றுள்ள பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அவருடைய தளராத ஆர்வமும் விடாமுயற்சியும் வியப்பளிக்கின்றன.//

   தளராத ஆர்வத்துடன் கூடிய விடாமுயற்சிகள் உள்ள வியப்பளிக்கும் விசித்திரமான மனிதர்தான் அவர். அவருக்கான தங்களின் பாராட்டுகளுக்கு என் நன்றிகள், மேடம்.

   //தங்களுடைய சாதனைகளின் பட்டியல் பிரமிக்கவைக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள் கோபு சார்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். சாதனைப்பட்டியல் மேலும் தொடர உள்ளன. அநேகமாக 16th, 19th, 22nd, 25th, 28th and 31st இரவு சுமார் 9 மணி அளவில் அவை ஒவ்வொன்றாக வெளியிடப்படும். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 32. முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு
  மனம் நிறைந்த பாராட்டுகள் இனியநல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி December 15, 2015 at 8:32 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு
   மனம் நிறைந்த பாராட்டுகள் இனிய நல்வாழ்த்துகள்!//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

   நீக்கு
 33. இளைஞர் திரு பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  நீங்கள் இருவரும் தீர்க்க ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் இருந்து இன்னும் வலை உலகில் பல சாதனைகள் புரிய வேண்டும் என்றி இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya December 17, 2015 at 8:06 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //இளைஞர் திரு பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

   மிகவும் சந்தோஷம், ஜெயா.

   //நீங்கள் இருவரும் தீர்க்க ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் இருந்து இன்னும் வலை உலகில் பல சாதனைகள் புரிய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.//

   ’வலை உலகில்’ என்ற இருவார்த்தைகளை மட்டும் என் விஷயத்தில் எடுத்துடுங்கோ. மற்றபடி ஓக்கே. தங்கள் வேண்டுதலுக்கு மிக்க நன்றி, ஜெ.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 34. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! முனைவர் பழனி கந்தசாமி அய்யாவின் வலைப்பதிவுகளை ரசித்துப் படிக்கும் வாசகர்களில் நாணும் ஒருவன். அவர் எந்த ஒரு காரியத்தையும் முனைப்புடன் செய்யும் ஆற்றல் கொண்டவர். எனவே அவருக்கு இந்த பரிசு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் என்று சொல்லிக் கொள்ளுகிறேன்.

  முதலிலேயே இந்த பதிவினைப் பார்த்து விட்டேன். அப்புறம்தான் உங்களிடம் பரிசுத்தொகை பெற்றவர்களுக்கான புதுமையான புதியதொடர் என்று அறிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ December 19, 2015 at 9:36 AM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! முனைவர் பழனி கந்தசாமி அய்யாவின் வலைப்பதிவுகளை ரசித்துப் படிக்கும் வாசகர்களில் நா னு ம் ஒருவன். அவர் எந்த ஒரு காரியத்தையும் முனைப்புடன் செய்யும் ஆற்றல் கொண்டவர். எனவே அவருக்கு இந்த பரிசு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் என்று சொல்லிக் கொள்ளுகிறேன்.//

   முனைவர் ஐயா அவர்களைப்பற்றி என்னைப்போலவே மிகத்துல்லியமாக, தாங்களும் எடைபோட்டு இங்கு சொல்லியுள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

   //முதலிலேயே இந்த பதிவினைப் பார்த்து விட்டேன். அப்புறம்தான் உங்களிடம் பரிசுத்தொகை பெற்றவர்களுக்கான புதுமையான புதியதொடர் என்று அறிந்து கொண்டேன்.//

   ஆமாம் சார். இந்தப்போட்டியில் கலந்துகொள்வதற்கான இறுதிநாள் (31.12.2015) நெருங்கி விட்டதாலும், போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற சாதனையாளர்கள் பட்டியல் சற்றே நீளமாக அமைந்துள்ளதாலும், இனியொருவர் புதிதாகப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறுவது என்பதற்கான வாய்ப்பு சுத்தமாக இருக்கப்போவது இல்லை என்பது என்னால் உணரப்பட்ட காரணத்தாலும், வெற்றியாளர்கள் ஒவ்வொருவரையும் சிறப்பித்து, என் வலைத்தளத்தில் 2-3 நாட்களுக்கு ஒருவர் வீதம் அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறேன்.

   இந்த வெற்றித் தொடரின் முதல் அறிவிப்பு 10/11.12.2015 நள்ளிரவில் http://gopu1949.blogspot.in/2015/12/3.html பூந்தளிர் வலைத்தளப்பதிவர் திருமதி. சிவகாமி அவர்களுடன் ஆரம்பித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தத்தொடர் வரும் 31.12.2015 வரை அவ்வப்போது தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கும்.

   நேரம் கிடைக்கும் போது இந்தத்தொடரின் அனைத்துப் பகுதிகளுக்கும் வருகை தாருங்கள் என தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   அதன்பிறகு 2016 இல் என் வலைத்தளத்திற்கு அநேகமாக நீண்ட விடுமுறை அளிக்கப்பட உள்ளது என்பதையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் !

   இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

   அன்புடன் VGK

   நீக்கு
  2. அன்புள்ள V.G.K அவர்களுக்கு, என்னதான் பிழை பார்த்து வலைப்பதிவில் வெளியிட்டாலும், Phonetic முறையில் டைப் செய்யும் போது நம்மையும் அறியாமல் தப்பு வந்து விடுகிறது. எனது பின்னூட்டத்தில் நானும் என்பது நாணும் என்று இடம் பெயர்ந்து விட்டது. சுட்டிக் காட்டையமைக்கு நன்றி. (தமிழில் எழுதும்போது இயல்பாகவே பிழை இல்லாமல் எழுதுவேன்)

   நீக்கு
  3. தி.தமிழ் இளங்கோ December 19, 2015 at 10:06 AM

   //அன்புள்ள V.G.K அவர்களுக்கு,//

   வாங்கோ சார், மீண்டும் வணக்கம்.

   //(தமிழில் எழுதும்போது இயல்பாகவே பிழை இல்லாமல் எழுதுவேன்)//

   இது எனக்கு மிகவும் நன்றாகவே தெரியுமே, சார். உங்களைப்போல எழுத்துப்பிழை இல்லாமல் வலைப்பதிவுகளில் எழுதுபவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியுமே. :)

   அதிக எழுத்துப்பிழைகள் ஏற்படும்போது தங்கள் பெயருக்கு முன் ‘கவிஞர்’ என சேர்த்துக்கொள்ளலாம். அப்படித்தான் பலரும் இன்று தங்களின் பெயருக்கு முன்பு போட்டுக்கொண்டு, வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து தமிழைக்கொலை செய்து வருகிறார்கள். இதுபற்றியெல்லாம் உங்களுக்கே நன்கு தெரிந்திருக்கும்.

   //என்னதான் பிழை பார்த்து வலைப்பதிவில் வெளியிட்டாலும், Phonetic முறையில் டைப் செய்யும் போது நம்மையும் அறியாமல் தப்பு வந்து விடுகிறது. எனது பின்னூட்டத்தில் நானும் என்பது நாணும் என்று இடம் பெயர்ந்து விட்டது. சுட்டிக் காட்டையமைக்கு நன்றி.//

   நம்மையறியாமல் அவசரத்தில் ஏற்படும் இதுபோன்ற அபூர்வ எழுத்துப்பிழைகளெல்லாம் மிகவும் சகஜம் சார். எனக்கும் அவ்வப்போது ஏற்படத்தான் செய்கிறது.

   மிக்க நன்றி, சார்.

   நீக்கு
 35. பரிசு பெற்ற மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Seshadri e.s.December 19, 2015 at 2:51 PM

   //பரிசு பெற்ற மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 36. சாதனை புரிந்த திரு பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும், தொடர்ந்து பரிசளித்து சாதனை புரியும் உங்களுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam December 22, 2015 at 5:40 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //சாதனை புரிந்த திரு பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும், தொடர்ந்து பரிசளித்து சாதனை புரியும் உங்களுக்கும் பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 37. திரு பழனி கந்தசாமி சார் விருது வென்றதற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரணாகதி. December 25, 2015 at 3:57 PM

   வாங்கோ, வணக்கம்.

   //திரு பழனி கந்தசாமி சார் விருது வென்றதற்கு வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - அன்புடன் VGK

   நீக்கு
 38. சாதனையாளர் வாருது வென்ற திரு பழனி கந்தசாமி சார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. siva siva December 26, 2015 at 11:13 AM

   //சாதனையாளர் வாருது வென்ற//

   சிவ சிவா ! ’சாதனையாளர் விருது வென்ற’ என்று இருந்தால் மேலும் நன்னாயிருக்குமே. :)

   //திரு பழனி கந்தசாமி சார் அவர்களுக்கு வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 39. திரு பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shamaine bosco December 27, 2015 at 10:34 AM

   //திரு.பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு