என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

நேயர் கடிதம் - ரவிஜி ரவி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.]வாத்தியாருக்கு ஒரு மனம் திறந்த 
நேய(ர்) மடல்!!


 
மார்ச் மாத வாக்கில இப்புடி ஒரு போட்டி இருக்குன்னு வாத்தியாரு மெயில் அனுப்பியிருந்தாரு. படிச்ச சூட்டோட அத மறந்தே பொயிட்டேன்.

மப்புல மல்லாந்து கெடந்தவன் திடீர்னு அஞ்சாறு பேரு ஓடுறத பாத்துட்டு என்னா விஷயம் பாக்கலாம்னு எந்திரிச்சு ஓடுறது மாதிரி, போன மாசம் காத்தாட வாத்யாரோட வலைப்பக்கமா போனப்ப கொஞ்சம் பேரு ஓட்டமா ஓடி பின்னூட்டம் போட்டு முடிச்சுட்டாங்கன்னு தெரிஞ்சது. எல்லாம் எட்டாவது எண்ட் - ரவுண்டு ஓடுறப்ப நான் மொதல் ரவுண்டயே தொடலயே என்ன பண்ணாம்னு யோசிச்சு, வடிவேலு மாதிரி ‘சரி…போய்த்தான் பாப்போம்னு கெளம்புனேன். 

அங்கதான் மறுபடியும் வாத்யாரோட டச்ச பாத்தேன். ஒவ்வொரு இடுகைக்குமான இணைப்பினை மாதவாரியாகக் கொடுத்து, ஒவ்வொரு மாத பின்னூட்டம் முடிஞ்சதும் கவுன்ட், பெர்சென்டேஜோட  ஒரு அப்டேட் கொடுத்து, முடிச்சதும் கன்கிராஜுலேஷன்ஸ் மெஸேஜும் கொடுத்து… சரியான ஊக்குவிப்புத் திலகம்!!! இடைல மிஸ்ஸிங் இருந்தாக்க அதையும் உடனுக்குடன் சுட்டிக்காட்டி, ராத்திரி ஒரு மணிவரைக்கும் ஆன் – லைன்தான். இல்லாட்டி இந்த நத்தையையும்கூட  கெலிக்க வக்கமுடியுமா???கெளம்புன பின்னாலதான் தெரியுது அப்டி ஓடுலன்னாக்க என்னென்ன விஷயங்கள மிஸ் பண்ணியிருப்போம்னு!! கவிதைகள், வெரைட்டியான நான் படிக்காமல் விட்டுப்போன சிறுகதைகள், புகைப்படங்கள், துணுக்குகள் இத்யாதி இத்யாதி… மாடு கன்ன மேச்ச மாதிரியும் ஆச்சு, தம்பிக்கு பொண்ணு பாத்தமாதிரியும் ஆச்சுங்குறாப்புல – போட்டியுலயும் கலந்துகிட்டதால ஆயிரம்பொன்னோட அருமையான வாசிப்பு அனுபவமும் ஏகத்துக்கு கிடச்சது.

மொதல்ல சொல்லணும்னா ஜாதி, மத, இன, மொழி, நிற பாகுபாடுகளைக் கடந்த மகான் காஞ்சி மாமுனிவரைப்பத்தி 108 எபிசோட் படிக்க வச்சதுதான். சிலிர்க்கச் செய்த அனுபவம். பல நேரங்களில் நாமே நேரில் இருந்து காட்சிகளைப் பார்ப்பதுபோல காட்சிப்படுத்திய எழுத்துநடை.

அடுத்தது அழவைக்கும், சிரிக்கவைக்கும், சிந்திக்கவைக்கும், சமுதாய அவலங்களின்மேல் கோபம்கொள்ளச்செய்யும் சிறுகதைகள்ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்

அடுத்தது பயணக்கட்டுரைகள். எங்கிட்ட பாஸ்போர்ட்டே இதுவரைக்கும் இல்ல. ஆனா என்னை விசாவும் இல்லாம துபாய்க்கே கூட்டிகிட்டு போயிட்டுவந்த வாத்யாரை என்ன சொல்றது? புகைப்படம், புள்ளிவிவரம் எல்லாத்தையும் கலக்கி உன்னத பயண அனுபவத்தை அள்ளித்தந்த துபாய் பயணக் கட்டுரைகள்.

அவர் பெற்ற பரிசுகள், விருதுகள் பற்றிய குறிப்புகள் படிப்பவரை வெற்றியின் பாதையில் உந்தித் தள்ளும் என்றால் அது மிகையில்லை.  இது பத்தாதுன்னு பதிவர் சந்திப்பு குறித்த பதிவுகள். பகிர்ந்துகொண்ட மகிழ்ச்சிக்கணங்கள், புகைப்படங்கள். அதுலயும் அவங்க வாங்கிவந்த ஸ்வீட், கிஃப்ட் முதற்கொண்டு அவங்களோட சேர்ந்து எடுத்துகிட்ட புகைப்படங்கள் எல்லாத்தோடயும் ஒரு பாராட்டு.  வாத்யார இத்தனபேரு கொண்டாடுறாங்கன்னா அது ஒண்ணும் சும்மா இல்ல.

எதையும் பின்-பாயின்ட் பண்ணி ஊட்டமளிக்கும்கருத்துகளை ஒவ்வொரு வலைப்பூவுக்கும் வந்து வாரிவழங்கும் வாத்தியாரோட படைப்புகளுக்கு பின்னூட்டம் இடுவது எனக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்புதான். ஆயிரம் ரூபாய் பரிசு – கொஞ்சம் பெருசுதான். ஆனா வாத்யாரு சைஸைபோல மனசும் - பெருசுதான். அதெல்லாம் சரி நீ இன்னாடா வாத்த்யாருக்கு சின்னபுள்ளத்தனமா இப்புடி ஒரு ஸ்லாங்குல கடுதாசி எழுதுறயேன்னு கேக்குறீங்களா?வாத்யாருன்னாலே - சின்னபுள்ளைங்கள ரொம்ம்ம்பப் புடிக்கும்க. டேய் - நீயும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ன்னு அவர சொல்லவைக்கணும். அதான்ங்க இப்புடி.       

‘கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பைப்போல இந்த வை.’கோ’ப்பெருஞ்சோழனார்  – இந்த ‘பிசிர்’ அடிக்கும் ஆந்தையார் நட்பும். எப்புடீ? என்னா மெர்ஸலாயிட்டீங்களா? ‘ஆயிரத்தில் ஒருவன்’ - வாத்யார் வாரித்தந்த ஆயிரம் ரூபாய ஜாலியா செலவு பண்ணப்போறேன். அதனால வுடு ஜூட்டு. இத்தோட நான் அப்பீட்டு.  ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப தாங்க்ஸ் வாத்யாரே. அடுத்த போ(பொ)ட்டில பாப்போம். வர்ட்டா?!!!

என்றென்றும் அன்புடன்,
உங்கள் – எம்ஜிஆர்.ரவிஜி ரவி
oooooooooooooooooooooooooooooooo

தங்களின் தனிப் பாணியில் 
எழுதி அனுப்பியுள்ள
நகைச்சுவையான
நேயர் கடிதத்திற்கு
என் நன்றிகள்
வாத்யாரே !

அன்புடன் VGK

ooooooooooooooooooooooooooooooooமற்ற சாதனையாளர்கள் பற்றிய செய்திகள்
இனியும் அவ்வப்போது தொடரும்

வெற்றியாளர்கள் பற்றிய ஒட்டுமொத்தச் செய்திகள் 

இறுதியில் தனிப்பதிவாகவும் வெளியிடப்படும். 
என்றும் அன்புடன் தங்கள்(வை. கோபாலகிருஷ்ணன்)

60 கருத்துகள்:

 1. ரவிஜி ரவியின் கடிதம் அசத்தலாக இருந்தது. நேயர் கடிதங்களைப் படிக்கும்போது அருமையான ஒரு வாய்ப்பை இழந்துவிட்ட தவிப்புதான் என்னுள் தோன்றுகிறது. தொடர்ந்து பரிசு தந்து ஊக்குவிக்கும் தங்களுக்கு இந்த எளியோனின் வாழ்த்துகள்!
  நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
 2. ரவிஜி ரவி அவர்களின் கடிதம் அசத்தலாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. ரவிஜி ரவியின் அஞ்சலை இரசித்தேன்! எல்லோரும் சொல்ல(உங்களைபாராட்ட) நினைத்தை அவர் சொல்லிவிட்டார். அவ்வளவே!

  பதிலளிநீக்கு
 4. மனம் திறந்த நேய(ர்) மடல்!

  நேசத்துடன் அளித்த பாச மடலுக்கு பாராட்டுக்கள்..!!

  பதிலளிநீக்கு
 5. சுவையான எழுத்து பற்றி சுவாரசியமான கடிதம்..

  பதிலளிநீக்கு
 6. ரவிஜி அவர்களின் மனந்திறந்த கடிதம் அசத்தல். மறைந்துகிடக்கும் பலருடைய எழுத்துத்திறமையை வெளிப்படுத்த கோபு சாரின் போட்டிகள் உதவுகின்றன என்றால் மிகையில்லை. வெற்றிபெற்ற ஒவ்வொருவரின் உழைப்பின் பின்னணியிலும் கோபு சாரின் உந்துதல் இருப்பது நன்றாகப் புரிகிறது. இருவருக்கும் அன்பான வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. சாதனையாளருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. நிச்சயம் இது ஒரு சாதனை தான். உங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டுகள்! இவ்வளவு குறுகிய நேரத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க வைத்ததுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரி!!நீங்களும் வேற வேலையா பொயிட்டீங்கன்னு நினைக்கிறேன்! இல்லன்னா உங்கபேரும் இருந்திருக்கும்!!!

   நீக்கு
 9. வை. கோ. சாரைப் பற்றிப் பாராட்டி அஞ்சல் எழுதிய
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்குப் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 10. குருஜி கும்பிட்டுகிடுதேன் . ப்மாக்கரு ப்ராப்லம் சரி ஆகாடிச்சா. புது பதிவு போட்டுபிட்டீக.

  பதிலளிநீக்கு
 11. குருஜி ரண்டு நாளா யாருக்குமே ரிப்ளை பண்ணிகிடவேல்லா இன்னாச்சி குருஜி.

  பதிலளிநீக்கு
 12. யாருங்க குருஜி இந்த ரவிஜி. கலக்கலா நேயர் கடதாசில்லா எளுதிட்டாங்க.
  ஒங்கட மேல அல்லாரும் நெறய நெறயா அன்பு வச்சு போட்டாக குருஜி.

  பதிலளிநீக்கு
 13. 17--- நாளுக்குள்ளார போட்டிய முடிச்சு போட்டுபிட்டு தன்னிய நத்தைனு சொல்லினாக.

  பதிலளிநீக்கு
 14. அது இன்னாங்கோ மாயவரத்தான் எம் ஜி ஆர் னு வலைப்பூவுக்கு பேரு வச்சி போட்டாக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்கு விளக்கம் வாத்யாரோட பழைய பதிவ பாத்தீங்கன்னா தெரியும்!!!

   நீக்கு
 15. குருஜி ஒங்கள பாத்து எனிக்கு ஒரே பொறாமயாகீது. ஆம்புள புள்ளக பொட்ட புள்ளிகன்னுபிட்டு எம்பூட்டு ஃப்ரண்ட்ஸ் இருக்காக ஒங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 16. குருஜி நீங்க நம்மாளுன்னுபிட்டு யாரையாச்சிம் சொல்லினா எனிக்கு ஒரே காண்ட் ஆகுது.

  பதிலளிநீக்கு
 17. இவுகள வாத்யாருன்னு சூல்லினீக எந்த பள்ளியோடத்துல வாத்யாரா இருக்காக.

  பதிலளிநீக்கு
 18. இந்த பதிவு ரொம்ப ஜாலியாகீது வெரசால ப்ளாக்கு சரி பண்ணி போட்டுபிட்டு ரிப்ளை போட வந்துகிடுங்க.

  பதிலளிநீக்கு
 19. ப்ளாக் சரி பண்ணியிச்சா. புது பதிவு போட்டிருக்கீங்க.ரவிஜி அவர்களின் நேயர் கடிதம் ரொம்ப நல்லா எழுதி இருக்காங்க

  பதிலளிநீக்கு
 20. அம்மாடி மின்னலு ஒங்கட குருஜி ஒனக்கு நெறய செல்லம் கொடுத்துட்டாங்க. எவ்வளவு பின்னூட்டம் போட்டிருக்கே.
  ரவிஜி சாரப்பத்தி நல்லதா நாலு வார்த்த சொல்லலாம்னு பாத்தா ஒனக்குதான் பதில் சொல்ல நேரம் சரியா இருக்கும்போல இருக்கே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமுங்கோ நெறயகமண்டு தாபோட்டு பிட்டன் அதுக்கு இன்னா இப்ப. இது எங்கட குருஜியோட பக்கம். நானு ஒரு கமண்டும் போட்டுகிடுவன். பத்து கமண்டும் போட்டுகிடுவன். குருஜி யே கண்டுகிடாம இருக்காக. ஒங்களுக்கு இன்னா போச்சி. நீங்க கோடதா நெறய கமண்டு போட்டிருக்கீக. நா ஏதாச்சிம் சொல்லினவா. பொறவால இன்னா.

   நீக்கு
 21. ஒங்கட குருஜி பேருலயே கிருஷ்ணர் னு இருக்கு இல்லியா அதான் அவரைச்சுத்தி கோபிகைகள் கோபாலர்கள் கூட்டம் நெறயா இருக்கு. அதுக்கு நீ ஏன்மா பொறாம பட்டுக்கறே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒங்கட கிஷ்ணரு ராமரு பத்திலாம் எனிக்கு வெளங்கி கிட ஏலாது. எங்கட அல்லா மட்டிலும்தா வெளங்கிகிடும்

   நீக்கு
 22. நீயும் மொபைல்லதான் நெட் யூஸ் பண்றியா நான் தப்பாஎழுதுரது போலவே நீயும் தப்பா( ஸ்பெலிங்க மிஸ்டேக்) எழுதுறியே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ......... நானு தப்பு தப்பா டைப்பு பண்ணுத பகடி பண்ணி போட்டீகளோ.

   நீக்கு
 23. ஏம்மா அவங்க யார நம்மாளுன்னு சொன்னா நீ ஏன் காண்ட் ஆகணும். அவங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கள அவங்க நம்மாளுன்னு சொல்லாம வீற எப்படி சூல்ல முடியும். ( ஆமா, ஏம்மா முருகு நம்மாளுங்குது தப்பான வார்த்தையா. நீ ஏன் காண்ட் ஆகுறீ. பதில் சொல்லு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மாளுங்குது தப்பு வார்த்தியா இல்லியான்னு என்னியால சொல்லிகிட ஏலாது. காலேஜூ சோட்டுகாரிக ஊடால இது ஒரு கோடு வேர்டு அம்புட்டுதா சொல்லிகிட ஏலும்

   நீக்கு
 24. முருகு நாம ரெண்டுபேரும் சேந்து கும்மி கோலாட்டம் அடிச்சு பின்னூட்ட எண்ணிக்கய ஏத்தி போடுவோம்போல இருக்கு. ஹா ஹா இன்னமும் ஒங்கட குருஜி ரிப்ளை போட வரலியே இன்னம் ப்ளாக் சரி ஆகலைனு தோணறது.

  பதிலளிநீக்கு
 25. இது என்ன பதிவுன்னே புரியலியே. ரவிஜி அவர்களின் நேயர் கடிதத்தை ரசிச்ச அளவுக்கு இங்க நடந்துகிட்டிருக்குற குழாயடி சண்டையும்வெகு சுவாரசியமாக இருக்கே. தொடரட்டும் கும்மி கோலாட்டம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாவோட பாசத்த பங்குபோட்டுக்கறத பொறுக்க முடியாம ரெண்டு பொண்ணுங்களும் போடுற செல்ல-ஃபைட்தான் இதுன்னு நினைக்கிறேன்!

   நீக்கு
 26. நான் கோபால் சார் பதிவு பக்கம்தான் வந்திருக்கேனான்னு சந்தேகமா இருக்கே. அதிசயமா சாரோட ஒரு ரிப்ளை பின்னூட்டமும் இல்லையே .இருவர் பேச்சிலிருந்து சாருக்கு ப்ளாக் ல ஏதோ ப்ராப்ளம்னு புரிஞ்சுக்க முடிகிறது. ரவிஜி அவர்களின் நேயர் கடிதம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. கோபால் சார் சீக்கிரமா ரிப்ளை பண்ண வாங்க நீங்க இல்லாம பின்னுட்ட பகுதியே டல் அடிக்குது.

  பதிலளிநீக்கு
 27. ரவிஜி அவர்களின் நேயர் கடிதம் நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 28. தனக்கே உரிய நடையில் அமைந்த ரவிஜி ரவி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.] அவர்களின் கடிதம் நன்றாக இரசிக்கும்படி இருந்தது!

  பதிலளிநீக்கு
 29. ரவிஜி சும்மா வூடு கட்டி பூந்துருக்காரு,,,டாப் டக்கருப்பா நேயர் கடுதாசி!!! "சரியான ஊக்குவிப்புத் திலகம்!!" ஷோக்கா சொல்லிச்சீங்கப்பா...ஊக்குவிப்புத் திலகமேதான் வைகோ சார்...!!

  அருமை சார் அவர் கடிதம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாத்யார்னாலே சிலம்பம் ஊடுகட்டி அடுக்குமில்ல!!! அதான் காரணம்!!! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி நண்பரே!!

   நீக்கு
 30. சாதனையாளர் திரு ரவிஜி அவர்களுக்குப் பாராட்டுக்கள்! நேயர் கடிதத்தையும் ரசித்தேன். திரு கோபு சாருக்கு அவர் அளித்திருக்கும் ஊக்குவிப்புத் திலகம் என்ற பெயர் சாலப்பொருத்தம்!

  பதிலளிநீக்கு
 31. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள

  திருவாளர்கள்:

  எஸ்.பி. செந்தில்குமார் அவர்கள்
  ரவிஜி ரவி அவர்கள்
  பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
  வே. நடனசபாபதி அவர்கள்
  கே பி ஜனா அவர்கள்
  SHAMAINE BOSCO அவர்கள்
  அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்
  ஸ்ரீனிவாசன் அவர்கள்
  ஸ்ரத்தா, ஸபுரி அவர்கள்
  ஆல் இஸ் வெல் அவர்கள்
  ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்
  துளஸிதரன் V தில்லையக்காது அவர்கள்

  செல்வி. முருகு அவர்கள்

  திருமதிகள்:

  இராஜராஜேஸ்வரி அவர்கள்
  கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்
  கீதா சாம்பசிவம் அவர்கள்
  பூந்தளிர் அவர்கள்
  ஞா. கலையரசி அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்பினைப் பகிர்ந்துகொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு, செல்லமான கோபத்துடன் தங்களின் கருத்துக்களைப் பின்னூட்டமாகக் கொடுத்து, பின்னூட்டப் பகுதியையே கலகலப்பாக்கியுள்ள பூந்தளிர் + முருகு ஆகிய இரு க(பெ)ண்களுக்கும் என் கூடுதல் ஸ்பெஷல் நன்றிகள்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 32. வாத்தியாருக்கு (கோபு அண்ணா) ஏத்தா வாத்தியார் ரவிஜிக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  நாங்க (MYSELF) லேட்டாதான் வருவேன். ஆனா LATESTஆ வருவேன்.

  பதிலளிநீக்கு
 33. ஒரு கடுதாசி போட்டாலும் தம்பி ரவிஜி கடுதாசி TOPப்பா.

  பதிலளிநீக்கு
 34. //முருகு நாம ரெண்டுபேரும் சேந்து கும்மி கோலாட்டம் அடிச்சு பின்னூட்ட எண்ணிக்கய ஏத்தி போடுவோம்போல இருக்கு.//

  ஆத்தா, மகமாயி, சிவகாமி அப்டியே என் வூட்டாண்ட வந்து கொஞ்சம் பின்னூட்டம் போடு தாயி.

  பதிலளிநீக்கு
 35. //முருகு நாம ரெண்டுபேரும் சேந்து கும்மி கோலாட்டம் அடிச்சு பின்னூட்ட எண்ணிக்கய ஏத்தி போடுவோம்போல இருக்கு.//

  அம்மாடி மின்னலு முருகு. ஒனக்கும்தான் சொல்றேன். ஒரு எட்டு எங்காத்துக்கும் வந்துட்டுப் போடியம்மா.

  பதிலளிநீக்கு
 36. அன்புள்ள ஜெயா, வணக்கம்மா.

  இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான (LATE BUT LATEST ஆன) வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஜெ.

  பிரியமுள்ள கோபு அண்ணா

  பதிலளிநீக்கு
 37. இங்க உள்ள பின்னூட்டங்களைப்படித்ததும.... ( சிரிப்பாணி பொத்துகிச்சே);))))))))...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிப்பிக்குள் முத்து. March 29, 2016 at 2:10 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இங்க உள்ள பின்னூட்டங்களைப்படித்ததும.... ( சிரிப்பாணி பொத்துகிச்சே);))))))))...//

   உங்களுக்கும் சிரிப்பாணி பொத்துக்கிச்சா ! :))))))

   வெரிகுட். தங்களின் அன்பான வருகைக்கும், சிரிப்பாணி பொத்துக்கிட்டதாகச் சொல்லி, என்னையும் இப்போ என் சிரிப்பாணி பொத்துக்க வைத்துள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். அன்புடன் vgk

   நீக்கு