’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot. in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி
முதற்பதிப்பு: 2016
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979
அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225
ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.
இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.
27) ’சாயாவனம்’ படைத்த
சா. கந்தசாமி
[பக்கம் 164 முதல் 173 வரை]
காடுகள்போய் நாடெல்லாம் கான்கிரீட் காடாகி இருக்கின்றன. இதைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கும் இவரின் ‘சாயாவனம்’ தமிழ் நாவல் உலகில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நூல் மட்டுமல்ல, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வை யாரும் பேசாத அந்தக்காலத்திலேயே பேசி வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ள முதல் நூலாக இருக்கும் என்கிறார், ஜீவி. ’சாயாவனம்’ பற்றி மிகவும் விரிவாக புகழ்ந்து பேசியுள்ளார்.
'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்பது ஒரு கதையின் பெயர். 'கசடதபற' என்று 1960 ஆண்டு ஒரு இதழ் தமிழகத்திலே வெளிவந்திருக்கிறது. அந்தப் பத்திரிகையில் இந்தக் கதை வந்திருக்கிறது. தாத்தா--பேரன் உறவை வித்தியாசமான கோணத்தில் சொல்லும் கதை. படிக்கப் படிக்க திகட்டாது. சா. கந்தசாமியின் இந்தக் கதையை எடுத்துக் கொண்டு ஜீவி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
அதே மாதிரி 'தாத்தா--அப்பா சண்டையை தனது சிறுவயதில் பார்க்கும் பேரனின் திகைப்பை விவரிக்கும் 'ஏரிக்கரையில்' என்ற சா. கந்தசாமி அவர்களின் நாவலை ஜீவி நமக்கு அழகாக அறிமுகப்படுத்துகிறார்.
‘அவன் ஆனது’ என்றதோர் கதை சா. கந்தசாமியின் மாஸ்டர் பீஸ் என்று வர்ணிக்கிறார். இவரின் ‘எழுத்தோவியங்கள்’ என்ற நூல், ‘அந்திமழை’ என்ற கட்டுரை நூல் ஆகியவற்றைப் புகழ்ந்து சொல்கிறார். அதிலும் இலக்கியச் சண்டைகளைப் பற்றி பேசும் ’எதிர்முனை’ என்ற கட்டுரையையும், ‘வாழும் கலைஞன்’ என்ற கட்டுரையையும் பற்றி மிகவும் விரிவாகச் சொல்லுகிறார்.
சா. கந்தசாமியின் ‘சாயாவனம்’ ; ‘விசாரணைக் கமிஷன்’ ஆகிய இரண்டுமே சாகித்ய அகாதமி விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டவைகளாகும் என்கிறார். ‘தொலைந்து போனவர்கள்’; ’சூரிய வம்சம்’ போன்றவை உள்பட பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளாராம். சிற்பக்கலையும் ஓவியக்கலையிலும் ஈடுபாடு கொண்டவராம்.
‘மலையூர்’; ’காவல்’ போன்ற பல நல்ல சிறுகதைகளையும் எழுதியுள்ளதாகச் சொல்கிறார்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் எழுத்தாளர் சா. கந்தசாமியின் பன்முக ஆற்றலை ஜீவி இந்த நூலில் அழகாகச் சிறைப்படுத்திக் காட்டியிருக்கிறார்.
28) ராமசேஷன் ஆன
ஆதவன்
ஆதவன்
[பக்கம் 174 முதல் 179 வரை]
எழுத்தாளர் ஆதவனின் மனோலயங்களைத் தோண்டி எடுத்துச் சொல்கிற மாதிரி ஆதவனைப் பற்றிய கட்டுரை அமைந்திருக்கிறது.
'என் பெயர் ராமசேஷன்' என்னும் நாவல் பற்றி ஜீவி எழுதியிருப்பதே மனோதத்துவ நிகழ்வுகளை விவரிக்கிற மாதிரி இருக்கிறது. ஆதவனின் இயற்பெயர் சுந்தரமாம். சுந்தரம் எழுதுவதாக ஆதவன் ஆகி இந்தக் கதைக்காக ராமசேஷனாகி இருக்கிறார் என்று ஜீவி ரசித்துச் சொல்கிறார்.
இவர் எழுதிய நாடகம் ஒன்றுக்கு ‘புழுதியில் வீணை’ என்று பெயர் வைத்துள்ளார். இவர் எழுத்துக்கள் அழகுபூர்வமாக என்றில்லாமல், அறிவுபூர்வமாக இருப்பது ஓர் தனிச்சிறப்பு என்கிறார் ஜீவி. இவரின் இன்னொரு மிகச்சிறப்பான நாவல் ‘காகித மலர்கள்’ தீபம் இதழில் தொடராக வெளிவந்தது, என்கிறார்.
’முதலில் இரவு வரும்’ என்கிற இவரது சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதமி, விருது வழங்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார், ஜீவி.
இவர் எழுதிய நாடகம் ஒன்றுக்கு ‘புழுதியில் வீணை’ என்று பெயர் வைத்துள்ளார். இவர் எழுத்துக்கள் அழகுபூர்வமாக என்றில்லாமல், அறிவுபூர்வமாக இருப்பது ஓர் தனிச்சிறப்பு என்கிறார் ஜீவி. இவரின் இன்னொரு மிகச்சிறப்பான நாவல் ‘காகித மலர்கள்’ தீபம் இதழில் தொடராக வெளிவந்தது, என்கிறார்.
’முதலில் இரவு வரும்’ என்கிற இவரது சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதமி, விருது வழங்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார், ஜீவி.
திருநெல்வேலி மாவட்ட கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவராம் ஆதவன். தரிசனத்திற்காக சிருங்கேரி பயணப்பட்டவர், துங்கா நதியில் குளிக்கையில் பெரியதோர் நீர்ச் சுழலில் சிக்கி... என்று ஆதவனின் மறைவை வார்த்தைகளில் சொல்ல முடியாமல் ஜீவி தடுமாறுகிறார். ஆதவனின் மேல் ஜீவி கொண்டிருக்கும் அன்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.
என்றும் அன்புடன் தங்கள்,
(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்
இதன் அடுத்த பகுதியில்
இடம்பெறப்போகும்
இவ்விரண்டு எழுத்தாளர்களும் புதியவர்கள் எனக்கு. அறிமுகத்திற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குR.Umayal Gayathri April 11, 2016 at 3:52 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
அடிக்கும் வெயிலில் உங்களின் அவரைக்காய் வற்றல் இந்நேரம் நன்றாகக் காய்ந்திருக்குமே!
இந்தத்தொடருக்கும் முதல் வருகை, இந்தப்பகுதிக்கும் முதல் வருகை ..... மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.:)
//இவ்விரண்டு எழுத்தாளர்களும் புதியவர்கள் எனக்கு. //
எனக்கும்தான். :) அதனால் என்ன?
//அறிமுகத்திற்கு நன்றி ஐயா.//
அறிமுகம் கிடக்கட்டும் .... இன்று நரி முகத்தில் நான் முழித்துள்ளேன் .... தங்களின் அபூர்வ வருகையால் .... மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். - அன்புடன் VGK
வணக்கம் அய்யா.நலமாக உள்ளீர்களா?.ஜீவி நூல் பற்றிய அறிமுகம் நான் படித்த நூல்களை நினைவூட்டுவதாக..கந்தசாமியின் சாயாவனம் படித்து விட்டு நீண்ட நாட்கள் அதிலேயே மூழ்கி இருந்தேன்..தொடர்ந்து என் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவதற்கு என் மனம் நிறைந்த நன்றி அய்யா..
பதிலளிநீக்குGeetha M April 11, 2016 at 3:56 PM
நீக்கு//வணக்கம் ஐயா. நலமாக உள்ளீர்களா?.//
வாங்கோ மேடம், வணக்கம். நான் நலமே. தங்களின் கனிவான விஜாரிப்புகளுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
//ஜீவி நூல் பற்றிய அறிமுகம் நான் படித்த நூல்களை நினைவூட்டுவதாக.. கந்தசாமியின் சாயாவனம் படித்து விட்டு நீண்ட நாட்கள் அதிலேயே மூழ்கி இருந்தேன்..//
தங்கள் வாயிலாக இதனைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
//தொடர்ந்து என் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவதற்கு என் மனம் நிறைந்த நன்றி ஐயா..//
ஏதேனும் ஓர் பதிவினைப் படிக்க எனக்கு வாய்ப்பும் கிடைத்து, அந்தப் பதிவும் என் மனதுக்குப் பிடித்துப் போய்விட்டால், பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவதை, இதுவரை என் கடமையாகவும், வழக்கமாகவும் வைத்துக்கொண்டு வந்துள்ளேன்.
உங்கள் விஷயத்தில் தொடர்ச்சியாக அது போல நான் செய்வதாகச் சொல்லியுள்ளீர்கள். ஒருவேளை அப்படியும் இருக்கக்கூடும்.
தொடர்ச்சியாக படிக்க வாய்ப்பும் எனக்குக் கிடைத்து, அவை எனக்கு பிடித்தும் போய் இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.
மொத்தத்தில் சுருக்கமாகச் சொல்வதென்றால் தாங்கள் தரமான படைப்புகளாக மட்டுமே தரும் பதிவராக இருப்பீர்கள் என்று தெரியவருகிறது. :) அதற்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
இருப்பினும் இப்போதெல்லாம் நான் இவ்வாறு சென்று படித்துவரும் பதிவர்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு மட்டுமே. எல்லா வலைப்பதிவுகள் பக்கமும், எப்போதும் தொடர்ச்சியாகச் சென்று படித்து கருத்தளிக்க நேரம் இருப்பது இல்லை. அதற்கெல்லாம் எனக்குப் பொறுமையும் இல்லை. உடல்நிலையும் ஒத்துழைப்பது இல்லை.
தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK
சா. கந்தசாமி, ஆதவன் கதைகள் படித்திருக்கிறேன். அதிலும் ஆதவன் வித்யாசமாக எழுதக்கூடியவர். 100 சிறந்த சிறுகதைகளில் இவரது கதையும் இடம்பெற்றுள்ளது.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு விஜிகே சார். வாழ்த்துகள் ஜிவி சார் :)
Thenammai Lakshmanan April 11, 2016 at 4:00 PM
நீக்குவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.
//சா. கந்தசாமி, ஆதவன் கதைகள் படித்திருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி, மேடம்.
//அதிலும் ஆதவன் வித்யாசமாக எழுதக்கூடியவர்.//
பெயரிலேயே தெரிகிறதே. தன் வித்யாசமான எழுத்துக்களால் சுட்டெரித்து விடுவார் என்று :)
//100 சிறந்த சிறுகதைகளில் இவரது கதையும் இடம்பெற்றுள்ளது.//
ஆஹா, தங்கள் மூலம் இதனைக்கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
//அருமையான பகிர்வு விஜிகே சார். வாழ்த்துகள் ஜிவி சார் :) //
தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், தேன் சிந்திடும் இனிய கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஹனி மேடம்.
அன்புடன் கோபால்
நான் இந்த இருவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. பெயர்மட்டும் கேள்விப்பட்டதுண்டு. சா.கந்தசாமியின் சில படைப்புகள் வாசித்த நினைவிருக்கிறது. ஆதவன் எனக்குப் புதியவர். பல அபூர்வ எழுத்தாளர்களையும் அவர்களின் அரியப் படிப்புகளையும் நாங்கள் அறிந்துகொள்ள தந்த அய்யா ஜி.வி. அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றிகள் பல!
பதிலளிநீக்குS.P.SENTHIL KUMAR April 11, 2016 at 4:44 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//நான் இந்த இருவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.//
நானும் தான். ஜீவி சாரின் இந்த நூல் மூலம் மட்டுமே 37 எழுத்தாளர்களில், எனக்கு ஏற்கனவே சுத்தமாகத் தெரியாத/கேள்விப்படாத சுமார் 27 எழுத்தாளர்களைப் பற்றி கொஞ்சமேனும் அறிந்துள்ளேன்.
//பெயர்மட்டும் கேள்விப்பட்டதுண்டு.//
ஓஹோ. நல்லது.
//சா.கந்தசாமியின் சில படைப்புகள் வாசித்த நினைவிருக்கிறது. ஆதவன் எனக்குப் புதியவர்.//
வெரி குட். அதனால் பரவாயில்லை சார்.
//பல அபூர்வ எழுத்தாளர்களையும் அவர்களின் அரியப் படிப்புகளையும் நாங்கள் அறிந்துகொள்ள தந்த ஐயா ஜீ.வி. அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றிகள் பல!//
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். VGK
சா .கந்தாசாமி அவர்களை பற்றி ஜீவி சார் பதிவில் படித்து இருக்கிறேன். மரங்கள் வெட்டப்படும் படம் மனதை வருந்த வைக்கிறது.
பதிலளிநீக்குஆதவன் அவர்கள் மறைவு வருந்த வைக்கிறது.
நல்ல எழுத்தாளர்களை பற்றி படித்து தெரிந்து கொள்வதற்கு உதவும் ஜீவி சாருக்கும், அதை அழகாய் தொகுத்து வழங்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்.
கோமதி அரசு April 11, 2016 at 5:06 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//சா .கந்தாசாமி அவர்களை பற்றி ஜீவி சார் பதிவில் படித்து இருக்கிறேன்.//
அப்படியா? மிக்க மகிழ்ச்சி மேடம்.
//மரங்கள் வெட்டப்படும் படம் மனதை வருந்த வைக்கிறது.//
ஆமாம் மேடம். மிகவும் வருந்தத்தான் வைக்கிறது. ’சாயா வனம்’ பற்றி அவர் அன்றே விழிப்புணர்வுடன் எழுதியிருந்தாலும்கூட, இன்றும் ஆங்காங்கே மரங்கள் பல்வேறு காரணங்களால் வெட்டப்பட்டு ‘சாயும் வனமாக’த்தானே மாறி வருகின்றன.
அதனால் சாயா வனமாகப் பூத்துக்குலுங்கும் மரக்கூட்டங்களுடன், சிந்திக்கவும் வருந்தவும் வைக்கும் இந்த ஒரு படத்தினையும் சேர்த்து தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளேன்.
//ஆதவன் அவர்கள் மறைவு வருந்த வைக்கிறது.//
ஆமாம் மேடம். மிடில் வயதிலேயே, அகால மரணம் அடைந்துள்ளது வருந்தத்தான் வைக்கிறது.
//நல்ல எழுத்தாளர்களை பற்றி படித்து தெரிந்து கொள்வதற்கு உதவும் ஜீவி சாருக்கும், அதை அழகாய் தொகுத்து வழங்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், உணர்ச்சிபூர்வமான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
இந்தத்தொடரின் பகுதி-13 மற்றும் பகுதி-14 ஆகிய இரண்டும் தங்களிடம் மட்டும், திருமதி. கோமதி அரசு அவர்கள், அரசு செய்ய இதுவரை வரவில்லையே என ஏங்கித் தவிப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.
”பொறு, நம் ஜீவி சாருக்காக வேண்டியாவது நிச்சயமாக வருவார்கள்” எனச்சொல்லி அவைகளை நான் சமாதானப்படுத்தி வைத்துள்ளேன். :)
அன்புடன் VGK
பதிலளிநீக்குஇன்றைக்கு அறிமுகமாயுள்ள சாகித்திய அகாதமி விருது பெற்ற திரு சா.கந்தசாமி அவர்கள் காவிரிக்கரையோரம் உள்ள ஊரை (என் மனைவியின் ஊரான மயிலாடுதுறையை ) சேர்ந்தவர் என்பதை அறிவேன். ஆனால் இவரது கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிட்டவில்லை.திரு ஜீவி அவர்கள் செய்த அறிமுகத்தை தாங்கள் விவரித்த விதம் இவரது படைப்புகளை படிக்கத் தூண்டுகிறது.
திரு ஆதவன் அவர்கள் பற்றி இன்றுதான் அறிகிறேன். இவரும் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் என்பதும் இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பதும் நான் அறியாத தகவல்கள். இவரது படைப்புகளையும் படிக்கவேண்டும்.
சுவாமி தரிசனம் செய்ய சிருங்கேரி சென்றபோது துங்கா நதியின் சுழலில் சிக்கி இளம் வயதிலேயே இயற்கை அடைந்தார் என்பது சோகமான செய்தி.
(துங்கா நதி மிக ஆழம் கொண்டது என்பதை நான் சிருங்கேரி சென்றபோதும் ஹம்பி சென்றபோதும் கேள்விப்பட்டிருக்கிறேன்)
இந்த பதிவின் மூலம் நான் அறிந்திராத தமிழ் எழுத்தாளார்களை அறிந்துகொள்ள உதவிய தங்களுக்கும் திரு ஜீவி அவர்களுக்கும் நன்றிகள் பல.
வே.நடனசபாபதி April 11, 2016 at 5:42 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//இன்றைக்கு அறிமுகமாயுள்ள சாகித்திய அகாதமி விருது பெற்ற திரு சா.கந்தசாமி அவர்கள் காவிரிக்கரையோரம் உள்ள ஊரை (என் மனைவியின் ஊரான மயிலாடுதுறையை ) சேர்ந்தவர் என்பதை அறிவேன்.//
ஆஹா, அருமையான செய்தியாகச் சொல்லியுள்ளீர்கள். எழுத்துலகப் பிரபலங்கள் பிறந்த ஊர்களிலேயே தாங்களும் தங்கள் துணைவியாரும் பிறந்திருப்பது கேட்க மிகவும் வியப்பாகத்தான் உள்ளது. இதுபோன்ற ஆச்சர்யமான உத்தமத் தம்பதியினருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள். வாழ்த்துகள்.
//ஆனால் இவரது கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிட்டவில்லை. திரு ஜீவி அவர்கள் செய்த அறிமுகத்தை தாங்கள் விவரித்த விதம் இவரது படைப்புகளை படிக்கத் தூண்டுகிறது. //
தாங்கள் நினைத்தால் எதையும் எப்போதும் மிகச்சுலபமாகப் படித்துவிடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளீர்கள். என்னுடைய மிகச்சிறிய விவரிப்பும், தம்மாத்தூண்டு தூண்டுதலும் தங்களுக்கு மேலும் கொஞ்சம் ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ளது கேட்க மிக்க மகிழ்ச்சி, சார்.
//திரு ஆதவன் அவர்கள் பற்றி இன்றுதான் அறிகிறேன். இவரும் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் என்பதும் இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பதும் நான் அறியாத தகவல்கள். இவரது படைப்புகளையும் படிக்கவேண்டும். //
மிகவும் சந்தோஷம், சார்.
//சுவாமி தரிசனம் செய்ய சிருங்கேரி சென்றபோது துங்கா நதியின் சுழலில் சிக்கி இளம் வயதிலேயே இயற்கை அடைந்தார் என்பது சோகமான செய்தி. //
ஆமாம் சார், மிகவும் சோகமான செய்தியாகத்தான் உள்ளது.
//(துங்கா நதி மிக ஆழம் கொண்டது என்பதை நான் சிருங்கேரி சென்றபோதும் ஹம்பி சென்றபோதும் கேள்விப்பட்டிருக்கிறேன்) //
இனிமேல் அங்கு செல்பவர்களாவது, தூங்கா நதியாக செயல்பட்டுக்கொண்டு அனைவரையும் கபளீகரம் செய்துவரும், இந்தத் துங்கா நதியிடம் சற்றே கவனமாக இருக்க தங்களின் இந்த எச்சரிக்கை உதவக்கூடும்.
//இந்த பதிவின் மூலம் நான் அறிந்திராத தமிழ் எழுத்தாளார்களை அறிந்துகொள்ள உதவிய தங்களுக்கும் திரு ஜீவி அவர்களுக்கும் நன்றிகள் பல. //
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK
வெறும் அறிமுகம், பின்னூட்டப் பதில் என்று விட்டு விடாமல் பதிவுகளுக்கேற்ப படங்கள் போட்டும் அசத்துகிறீர்கள். சாயாவனம் நாவலுக்கேற்ப சாயும் வனங்கள் புகைப்படம் போட்டு கண்முன்னாடியே அந்த வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள். மிகச் சரியாக இதே உணர்வுடன் கோமதியம்மாவும் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். உன்னிப்பான பார்வைக்கு இருவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குஜீவி April 11, 2016 at 6:20 PM
நீக்குவாங்கோ ஸார், என் அன்பு நமஸ்காரங்கள் + வணக்கம் ஸார்.
//வெறும் அறிமுகம், பின்னூட்டப் பதில் என்று விட்டு விடாமல் பதிவுகளுக்கேற்ப படங்கள் போட்டும் அசத்துகிறீர்கள்.//
பொதுவாக படங்கள் போடுவது என்பது, பதிவினை மெருகூட்டி கவர்ச்சியளிக்க மட்டுமே என்றாலும் சிலப்படத்தேர்வுகள் இதுபோல மிகப்பொருத்தமாக அமைந்துவிடுவதும் உண்டு.
நாம் நம்மை அழைத்துள்ள ஒரு விழாவுக்குச் செல்கிறோம். வாசலில் வரவேற்பாளராக, 4-5 இளம் வயதுப் பெண்கள், அழகாக ஆடை, ஆபரணங்கள் அணிந்து, முகம் முழுவதும் புன்னகை தவழ, சந்தனம், சர்க்கரை, கல்கண்டு, புஷ்பம் முதலியவற்றை நீட்டி ’வாங்கோ .... வாங்கோ’ என வாய் நிறையச் சொல்லி, நம் தலையில் மணமுள்ள பன்னீரை நிறையத் தெளித்து வரவேற்று மகிழ்வித்தால்தானே, உள்ளே நுழையும் நமக்கும் ஓர் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? அதுபோலத்தான் இதுவும்.
படமில்லாப் பதிவுகளை ஓர் வறண்ட பாலைவனம் போல மட்டுமே என்னால் நினைக்க முடிகிறது.
//சாயாவனம் நாவலுக்கேற்ப சாயும் வனங்கள் புகைப்படம் போட்டு கண்முன்னாடியே அந்த வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.//
நாம் நூறு வரிகளில் எழுதிப்புரிய வைக்கும் விஷயங்களை ஒரேயொரு படம் புரிய வைத்துவிடும். அதுவும் அசையும் (Animation) படம் என்றால் நமது ஆயிரம் வரி எழுத்துக்களுக்கு அது சமமாகும்.
கார்ட்டூன்களின் தாத்பர்யமும் இதுவே தான். ஆனாலும் இவற்றையெல்லாம் ரஸித்து மகிழ ஓர் தனித்திறமை வேண்டும். அது எல்லோருக்கும் இருக்கும் எனச் சொல்ல இயலாதுதான்.
//மிகச் சரியாக இதே உணர்வுடன் கோமதியம்மாவும் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.//
அவர்களின் கணவர் திரு. அரசு அவர்கள் ஓர் மிகச்சிறந்த ஓவியர் அல்லவா ! அவரின் உணர்வு இவர்களுக்கும் ஓரளவாவது ஒட்டிக்கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.
//உன்னிப்பான பார்வைக்கு இருவருக்கும் நன்றி.//
எங்களின் உன்னிப்பான பார்வையை உன்னிப்பாக கவனித்துச் சொல்லியுள்ள தங்களுக்கு என் (எங்கள்) மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
பிரியமுள்ள கோபு
நான் இந்தப் பெயர்களை கேள்விப்பட்டு இருக்கிறேன் பகிர்வுக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குKILLERGEE Devakottai April 11, 2016 at 7:10 PM
நீக்கு//நான் இந்தப் பெயர்களை கேள்விப்பட்டு இருக்கிறேன் பகிர்வுக்கு நன்றி ஐயா//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
எப்படியோ படிக்காது
பதிலளிநீக்குவிட்டுப்போன எழுத்தாளர்களில்
சா.கந்தசாமியும் ஒருவர்
குறிப்பாக சாயாவனம் குறித்த
விமர்சனங்களைப். படித்துள்ளேன்
இந்த நாவலை அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும்
ஆதவன் அவர்களின் என் பெயர் ராமசேஷன்
தொடராக கணையாழியில் வந்த நினைவு இருக்கிறது
கதை குறித்து மிகக் குறிப்பாகச் சொல்லும்படி
நினைவில் ஏதும் இல்லாதது முழுக் கதையாகப்
படிக்காததால் இருக்கலாமோ எனத் தோன்றுகிறது
எத்தனை காலமானாலும் முழுமையாகப்
படித்த புத்தகங்கள் நினைவில் இருக்க
தொடராகப் படித்தவைகள் நினைவில் மிகச் சரியாக
இல்லாமல் போவது எனக்கு மட்டும்தானா ?
Ramani S April 11, 2016 at 10:21 PM
நீக்குவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.
//எப்படியோ படிக்காது விட்டுப்போன எழுத்தாளர்களில் சா.கந்தசாமியும் ஒருவர். குறிப்பாக சாயாவனம் குறித்த விமர்சனங்களைப். படித்துள்ளேன். இந்த நாவலை அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும்.//
சாயாவனம் குறித்த விமர்சனங்களைத் தாங்கள் படித்துள்ளது கேட்க மிக்க மகிழ்ச்சி சார்.
//ஆதவன் அவர்களின் ’என் பெயர் ராமசேஷன்’ தொடராக கணையாழியில் வந்த நினைவு இருக்கிறது. கதை குறித்து மிகக் குறிப்பாகச் சொல்லும்படி நினைவில் ஏதும் இல்லாதது முழுக் கதையாகப் படிக்காததால் இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.//
இருக்கலாம் சார். ஆனால் இந்தக்கதையையும், இதை இவர் எழுதியுள்ள பாணியையும், அவரின் பதின்ம வயது உணர்வுகளையும் பற்றி, நம் ஜீவி சார் மிக விரிவாக சுமார் மூன்றரைப்பக்கங்களுக்குக் குறிப்பிட்டு சிலாகித்துச் சொல்லியுள்ளார், இந்த அவரின் நூலில்.
//எத்தனை காலமானாலும் முழுமையாகப் படித்த புத்தகங்கள் நினைவில் இருக்க தொடராகப் படித்தவைகள் நினைவில் மிகச் சரியாக இல்லாமல் போவது எனக்கு மட்டும்தானா ?//
இது தங்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் ஏற்பட்டுள்ள அனுபவமாக இருக்கலாம் என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.
தொடர் கதைகள் என்றால் அவை டி.வி. தொடர் நாடகங்கள் போல வருடக்கணக்காக இழுத்துக்கொண்டே போகலாம்.
இதனால் ஆரம்பத்தில் முதல் வாரத்தில் நாம் படித்தவைகள், தொடர் முடிவதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நம் நினைவுகளை விட்டு அகலவும் வாய்ப்புகள் உண்டு.
நம் கையில் உள்ள முழுமையான நாவல்கள் ஒரே புத்தக வடிவில் என்றால், நாம் அவற்றை ஓரளவு தொடர்ச்சியாக படித்து முடித்து விடுவதால், அவை நம் மனதில் ஆழமாகத் பதிந்துவிடக்கூடும் என நினைக்கத்தோன்றுகிறது.
எது எப்படியிருப்பினும், சிறுகதைகளில் உள்ளதோர் சுவாரஸ்யம் + மனத்திருப்தி, ஜவ்வு மிட்டாய் போன்ற தொடர்கதைகளில் இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK
அருமையான அறிமுகம்
பதிலளிநீக்குதொடர்ந்து அறிமுகம்
செய்யுங்கள் நண்பரே....
தொடர்கின்றோம்....
Ajai Sunilkar Joseph April 12, 2016 at 7:00 AM
நீக்கு//அருமையான அறிமுகம். தொடர்ந்து அறிமுகம்
செய்யுங்கள் நண்பரே.... தொடர்கின்றோம்....//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
இன்று அறிமுகம் செய்திருக்கும் இருவருமே எனக்கு புதியவர்கள். பொறுத்தமான படங்கள் சேர்ப்பது கூடுதல் சிறப்பு. .... படங்கள் பற்றி பேச ஒரு ஸ்பெஷலிஸ்ட் வருவாங்க.......
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... April 12, 2016 at 9:48 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இன்று அறிமுகம் செய்திருக்கும் இருவருமே எனக்கு புதியவர்கள்.//
எனக்கும்தான். அதனால் என்ன?
//பொ ரு த் த மா ன படங்கள் சேர்ப்பது கூடுதல் சிறப்பு. ....//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)
//படங்கள் பற்றி பேச ஒரு ஸ்பெஷலிஸ்ட் வருவாங்க......//
ஸ்பெஷலிஸ்ட் வரட்டும். அவர்களின் வருகை நல்வரவாகட்டும்.
ஒருவேளை ஸ்பெஷலிஸ்ட் Fees எக்கச்சக்கமாகக் கேட்பார்களோ, என்ற கவலையும் உள்ளது. பார்ப்போம்.
அன்புடன் VGK
இன்று அறிமுகம் செய்திருப்பவர்களை இங்கு உங்கள் பதிவின் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது... நன்றி..
பதிலளிநீக்குsrini vasan April 12, 2016 at 12:20 PM
நீக்கு//இன்று அறிமுகம் செய்திருப்பவர்களை இங்கு உங்கள் பதிவின் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது... நன்றி..//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
சாயாவனமும் வாசகர் வட்டம் வெளியீடாக வந்த புத்தகங்களுள் ஒன்று. படித்திருக்கிறேன். மனம் கனத்துப் போகும்! ஆதவன் அவர்களின் பல சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். இளம் வயதிலேயே அவர் இறக்க நேர்ந்தது ஓர் துரதிர்ஷ்டமே. நேஷனல் புக் ட்ரஸ்டில் வேலை பார்த்ததாக நினைவு. அவரையும் நேரில் பார்த்திருக்கேன். :)
பதிலளிநீக்குGeetha Sambasivam April 12, 2016 at 2:14 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//சாயாவனமும் வாசகர் வட்டம் வெளியீடாக வந்த புத்தகங்களுள் ஒன்று. படித்திருக்கிறேன். மனம் கனத்துப் போகும்!//
அப்படியா? மிக்க மகிழ்ச்சி மேடம்.
//ஆதவன் அவர்களின் பல சிறுகதைகளையும் படித்திருக்கிறேன்.//
சந்தோஷம் மேடம்.
//இளம் வயதிலேயே அவர் இறக்க நேர்ந்தது ஓர் துரதிர்ஷ்டமே.//
ஆமாம். கேட்கவே வருத்தமாகத்தான் உள்ளது.
//நேஷனல் புக் ட்ரஸ்டில் வேலை பார்த்ததாக நினைவு. அவரையும் நேரில் பார்த்திருக்கேன். :)//
அடடா, அப்படியா. இதைக்கேட்க மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுக்குத் தெரியாதவர்களே இல்லை என நினைக்கிறேன்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK
புது வெளியீடு ஒண்ணையும் காணோம். அநேகமாக எல்லாவற்றையும் படிச்சிருக்கேன் போல! இன்னிக்குக் கோட்டா ஓவர்!
பதிலளிநீக்குGeetha Sambasivam April 12, 2016 at 2:15 PM
நீக்குவாங்கோ ......
//புது வெளியீடு ஒண்ணையும் காணோம். அநேகமாக எல்லாவற்றையும் படிச்சிருக்கேன் போல! இன்னிக்குக் கோட்டா ஓவர்!//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. புதிய பதிவு நாளை மதியம் 3 மணி சுமாருக்கு மட்டுமே வெளியாக உள்ளது. இது ஜஸ்ட் உங்கள் தகவலுக்காக மட்டுமே :) - VGK
சாயாவனம் எனக்கு மிகவும் பிடித்த நாவல்.
பதிலளிநீக்குஇந்நாவலின் முன்னுரையில் எழுத்தாளர் பாவண்ணன் சொல்லியிருப்பதில் முக்கிய வரிகளை அப்படியே இங்குக் கொடுத்திருக்கிறேன்:
"அழிவின் சித்திரத்தைத் துல்லியமான நிறங்களுடன் தீட்டிக் காட்டும் தமிழ்ப்படைப்பு ‘சாயாவனம்’.
மரங்களோடு பின்னிப் பிணைந்து வேர்கள் எங்கிருக்கின்றன எனக் கண்டறிய இயலாவண்ணம், அடர்ந்து வளர்ந்து செழித்திருக்கும் பலவகையான கொடிகளை அறுத்தல், தேனடையைக் கலைத்தல் என நாவலில் இடம் பெறும் ஒவ்வொரு காட்சியும் தன்னளவில் குறியீட்டுத் தன்மை கொண்டதாகவே உள்ளது.
இப்படி ஒரு தோப்பை அங்குல அங்குலமாக அழிக்கும் காட்சிகளை ஒரு படைப்பாளி தொகுத்து எழுத வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியை முன் வைத்து யோசிக்கும் போது, அதன் படிம எல்லைகளை நாம் பல நிலைகளில் விரிவாக்கிக் கொள்ள முடியும்.
சாயாவனம் ஒரு தோப்பு அல்ல, நம் நாடு, நம் மண் எனக் குறியீடாகப் பார்க்கும் போது, இந்த அழிவின் வலியை நம்மால் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். “
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாத அக்காலத்திலேயே இயற்கைக்கு எதிராக மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்துக் கதை எழுதிய சா.கந்தசாமி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஆதவன் கதைகளைப் படித்ததில்லை.
கதைக்கேற்ற மரம் வெட்டப்படும் படம் வெகு பொருத்தம்!
அருமையான அறிமுகங்கள்! தொடருங்கள் சார்!
ஞா. கலையரசி April 12, 2016 at 8:26 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//சாயாவனம் எனக்கு மிகவும் பிடித்த நாவல். //
மிக்க மகிழ்ச்சி, மேடம். :)
//இந்நாவலின் முன்னுரையில் எழுத்தாளர் பாவண்ணன் சொல்லியிருப்பதில் முக்கிய வரிகளை அப்படியே இங்கு கொடுத்திருக்கிறேன்:
ooooo
"அழிவின் சித்திரத்தைத் துல்லியமான நிறங்களுடன் தீட்டிக் காட்டும் தமிழ்ப்படைப்பு ‘சாயாவனம்’.
மரங்களோடு பின்னிப் பிணைந்து வேர்கள் எங்கிருக்கின்றன எனக் கண்டறிய இயலாவண்ணம், அடர்ந்து வளர்ந்து செழித்திருக்கும் பலவகையான கொடிகளை அறுத்தல், தேனடையைக் கலைத்தல் என நாவலில் இடம் பெறும் ஒவ்வொரு காட்சியும் தன்னளவில் குறியீட்டுத் தன்மை கொண்டதாகவே உள்ளது.
இப்படி ஒரு தோப்பை அங்குல அங்குலமாக அழிக்கும் காட்சிகளை ஒரு படைப்பாளி தொகுத்து எழுத வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியை முன் வைத்து யோசிக்கும் போது, அதன் படிம எல்லைகளை நாம் பல நிலைகளில் விரிவாக்கிக் கொள்ள முடியும்.
சாயாவனம் ஒரு தோப்பு அல்ல, நம் நாடு, நம் மண் எனக் குறியீடாகப் பார்க்கும் போது, இந்த அழிவின் வலியை நம்மால் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.”
ooooo //
எழுத்தாளர் பாவண்ணன் அவர்களின் முன்னுரை மிகவும் அழகாக உள்ளது. அதைத்தாங்கள் இங்கு எங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளது அதைவிட அழகாக உள்ளது. என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.
//சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாத அக்காலத்திலேயே இயற்கைக்கு எதிராக மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்துக் கதை எழுதிய சா.கந்தசாமி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.//
சா. கந்தசாமி அவர்களைப் பாராட்டி மிகச்சரியாகவும், மிகச்சிறப்பாகவும் சொல்லியுள்ளீர்கள், மேடம். மிக்க மகிழ்ச்சியே.
//ஆதவன் கதைகளைப் படித்ததில்லை.//
அப்படியா? பரவாயில்லை மேடம்.
//கதைக்கேற்ற மரம் வெட்டப்படும் படம் வெகு பொருத்தம்! அருமையான அறிமுகங்கள்! தொடருங்கள் சார்! //
தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான இனிய நற்கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - நன்றியுடன் கோபு
இந்த இரண்டு எழுத்தாளர்களும் எனக்கு அறிமுகம் இல்லை. கந்தசாமியின் ‘சாயாவனம்’ பற்றிய நூல் விமர்சனங்களை பத்திரிகைகளில் படித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ April 12, 2016 at 10:19 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//இந்த இரண்டு எழுத்தாளர்களும் எனக்கு அறிமுகம் இல்லை.//
எனக்கும்தான் சார், அதனால் பரவாயில்லை சார். :)
//கந்தசாமியின் ‘சாயாவனம்’ பற்றிய நூல் விமர்சனங்களை பத்திரிகைகளில் படித்து இருக்கிறேன்.//
:) வெரி குட், சார்.
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். அன்புடன் VGK
இருவரைப் பற்றியும் சிறிது அறிவேன். கந்தசாமி அவர்களின் சாயாவனம் பற்றிய விமர்சனம் வாசித்து கதையை வாசிக்க நினைத்து இனிதான்....பிற கதைகள் வாசித்ததில்லை. அதுபோலவே ஆதவன் கேள்விப்பட்டிருந்தாலும் வாசித்ததில்லை. இப்படி பல நீங்கள் இங்கு சொல்லி அறிமுகப்படுத்துவது எங்களுக்கு உபயோகமாக இருக்கிறது சார். ஜீவி அவர்களின் நூலையும் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கிறது...
பதிலளிநீக்குகீதா
Thulasidharan V Thillaiakathu April 13, 2016 at 8:30 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இருவரைப் பற்றியும் சிறிது அறிவேன். கந்தசாமி அவர்களின் சாயாவனம் பற்றிய விமர்சனம் வாசித்து கதையை வாசிக்க நினைத்து இனிதான்....பிற கதைகள் வாசித்ததில்லை. அதுபோலவே ஆதவன் கேள்விப்பட்டிருந்தாலும் வாசித்ததில்லை. இப்படி பல நீங்கள் இங்கு சொல்லி அறிமுகப்படுத்துவது எங்களுக்கு உபயோகமாக இருக்கிறது சார். ஜீவி அவர்களின் நூலையும் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கிறது... கீதா//
மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், சிறப்பான சில கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK
சாயாவனம் கதைக்கேற்ற அந்த அசையும் படங்கள் அருமை சார்
பதிலளிநீக்குகீதா
Thulasidharan V Thillaiakathu April 13, 2016 at 8:33 AM
நீக்கு//சாயாவனம் கதைக்கேற்ற அந்த அசையும் படங்கள் அருமை சார் - கீதா//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK
இன்றய அறிமுங்ள் பற்றி ஜி.வி. ஸார் சிறப்பாக சொல்லி இருப்பதை. நீங்கள் சிறப்பாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்....
பதிலளிநீக்குஆல் இஸ் வெல்....... April 13, 2016 at 10:13 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இன்றைய அறிமுகங்கள் பற்றி ஜீ.வி. ஸார் சிறப்பாக சொல்லி இருப்பதை. நீங்கள் சிறப்பாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்....//
தங்களின் சிறப்பான வருகைக்கும், சிறப்பான கருத்துக்களுக்கும் என் சிறப்பான நன்றிகள். - VGK
இன்று அறிமுகம் செய்திருக்கும் பிரபைல எழுத்தாளர்களை தெரிந்திருக்க வில்லை.. பின்னூட்டங்களின் மூலமாக ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது... நன்றி...
பதிலளிநீக்குப்ராப்தம் April 13, 2016 at 10:19 AM
நீக்குவாங்கோ .... வணக்கம்மா :)
//இன்று அறிமுகம் செய்திருக்கும் பி-ர-ப-ல எழுத்தாளர்களை தெரிந்திருக்க வில்லை..//
அதனால் பரவாயில்லை. உங்களுக்கும் எனக்கும் அதற்கு ’ப்ராப்தம்’ இல்லை. :)
//பின்னூட்டங்களின் மூலமாக ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது... நன்றி...//
அது போதும். அதுவே நமக்கு எதேஷ்டம். :)
தங்களின் அன்பு வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
இன்றும் இந்த எழுத்தாளர்களை தெரியலியே.. இணைத்திருக்கும் படம் ரொம்ப நல்லா இருக்கு. படம் பற்றி இன்னும் ஏதாவது சொன்னா. கட்டைய கையில எடுத்துகிட்டு வந்துடுவாங்க........
பதிலளிநீக்குசிப்பிக்குள் முத்து. April 13, 2016 at 10:25 AM
நீக்குவாங்கோ, வணக்கம்மா.
//இன்றும் இந்த எழுத்தாளர்களை தெரியலியே..//
அதனால் பரவாயில்லை. என்னைப்போலவே தாங்களும் + என் கட்சியே நீங்களும், என்பது கேட்க சற்றே எனக்கு ஆறுதலாக உள்ளது. :)
//இணைத்திருக்கும் படம் ரொம்ப நல்லா இருக்கு.//
மிகவும் சந்தோஷம்மா.
//படம் பற்றி இன்னும் ஏதாவது சொன்னா. கட்டைய கையில எடுத்துகிட்டு வந்துடுவாங்க........//
ஹையோஓஓஓஓ ... என்னுடைய வாடிக்கையாளர்கள் (பின்னூட்ட கஸ்டமர்ஸ்) எல்லோரையும் அந்த மின்னலு முருகுப் பொண்ணு இப்படி பயமுறுத்தி வெச்சுருக்கே ... நான் என்ன செய்வேன் ... ஆண்டவா! அதுக்கு நல்ல புத்தியக்கொடுப்பா ......
தங்களின் அன்பு வருகைக்கும் அழகுக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
பிரியத்துடன் VGK
குருஜி ஒரு வெசயம் மட்டும் வெளங்கி கிடவே ஏலலே.... அல்லாரும் ஏன் என்னியே சீண்டி பகடி பண்ணுறாக.. முன்னாவும் அதுல சேர்ந்து பிட்டா... எம் மொவர கட்டயில... இந்த பொண்ணு ஒரு " டுபுக்கி" னு எளுதி வச்சிருக்குதோ... அளுவாச்சியா வருதுல்லா.... இனிமேக்கொண்டு ஆரு கிட்டாலயும் ஏதும் பேசிக்கிட போவுதுல்ல.. ஒரு மூலேல கம் னு குந்தி கிட்டு கெடக்க போறேன்...... ஆமா..... சொல்லி போட்டேன்லாஆஆஆ
நீக்குmru April 16, 2016 at 10:27 AM
நீக்குவாங்கோ, முருகு, வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா? உங்கட ஆளுகிட்டே இருந்து அடிக்கடி ஃபோன் வருதா? அவர் சொல்லும் ஜோக்ஸ் கேட்டு உங்களுக்கு சிரிப்பாணி பொத்துகிடுதா? சொல்லக்கூடிய ஜோக்ஸ் ஆக இருந்தால் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லலாமில்லே. எங்களுக்கும் சிரிப்பாணி பொத்துக்கொள்ளுமே! :) சரி, அது போகட்டும். பிறகு தனியே நமக்குள் பேசிக்கொள்வோம்.
//குருஜி ஒரு வெசயம் மட்டும் வெளங்கி கிடவே ஏலலே.... //
உங்களுக்காவது ஒரு விஷயம் மட்டும் வெளங்கி கிடவே ஏலலே. ஆனால் எனக்கு நீங்க சொல்லும் பலவிஷயங்கள் வெளங்கி கிடவே ஏலலே. :)
//அல்லாரும் ஏன் என்னியே சீண்டி பகடி பண்ணுறாக.. முன்னாவும் அதுல சேர்ந்து பிட்டா...//
சேச்சே, ‘முன்னா’ உங்களைப்போலவே மிகவும் நல்ல பொண்ணு. உங்களைவிட 2-3 வயது மட்டுமே பெரியவள். அவள் உங்கட அக்கா போலவாக்கும். உங்களிடம் அவளுக்கு மிகவும் பிரியம் அதிகம். என்னிடம் அவ்வப்போது இதனைச் சொல்லிக்கொள்ளும். கல்யாணப்பொண்ணை அக்கா பகடி பண்ணி சீண்டாமல் வேறு யாரு பண்ணுவாங்க, முருகு.
//எம் மொவர கட்டயில... இந்த பொண்ணு ஒரு " டுபுக்கி" னு எளுதி வச்சிருக்குதோ...//
”டுபுக்கி” .... அப்படின்னா என்ன முருகு. புதுசு புதுசா ஏதேனும் வார்த்தைகளைப் போட்டு என்னைக் குழப்புறீங்களே, முருகு.
//அளுவாச்சியா வருதுல்லா....//
அச்சச்சோ ! கல்யாணப்பொண்ணுக்கு அளுவாச்சியே வரக்கூடாது, முருகு. எப்போதும் ஒரே ஜாலியா சந்தோஷமா கலகலன்னு இருக்கணும்.
உங்களுக்கு அளுவாச்சி வந்தாக்க எனக்கும், எங்கட டீச்சரம்மாவுக்கும், எங்கட முன்னாவுக்கும் அளுவாச்சி வந்திடும். அதனால் அளுவாதீங்கோ முருகு. சிரியுங்கோ.
//இனிமேக்கொண்டு ஆரு கிட்டாலயும் ஏதும் பேசிக்கிட போவுதுல்ல.. ஒரு மூலேல கம் னு குந்தி கிட்டு கெடக்க போறேன்...... ஆமா..... சொல்லி போட்டேன்லாஆஆஆ//
ஆமாம், ஒரு மூலையிலே கம்முனு குந்திக்கிட்டு, எங்கள் மூவரின் டிஸ்டர்பன்ஸ் ஏதும் இல்லாம உங்கட ஆளுகூட மட்டும் விடிய விடிய பேசிக்கிட்டே இருப்பீங்களாக்கும். அப்படின்னா ஓக்கே..... எங்களுக்கும் இதில் ஒரே சந்தோஷம் மட்டுமே. :)))))
இப்போ மூஞ்சீலே வெட்கத்தைப்பாரு ! இங்கு வந்து பிரதிபலிக்குது. :)
அன்புடன் குருஜி கோபு
குருஜி.... அந்த மரங்க எம்பூட்டு அளகா காத்துல டான்ஸ் ஆடிகிட்டு சந்தோசமா இருந்திச்சி.. அது பொறுக்குதில்லியோ???? அநியாயமா வெட்டி சாச்சு போடுடாகளே....
பதிலளிநீக்குmru April 13, 2016 at 10:47 AM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//குருஜி.... அந்த மரங்க எம்பூட்டு அளகா காத்துல டான்ஸ் ஆடிகிட்டு சந்தோசமா இருந்திச்சி..//
ஆமாம் முருகு. அந்த முதல் படம் உங்களை மாதிரியே இன்னமும்கூட சந்தோஷமா பூத்துக்குலுங்கத்தான் செய்கிறது, முருகு.
//அது பொறுக்குதில்லியோ???? அநியாயமா வெட்டி சாச்சு போடுடாகளே....//
அது வேறு மரம் .... இது வேறு மரம் .... முருகு.
எதுவாக இருப்பினும் தழைத்து வளர்ந்ததொரு மிகப்பெரிய மரத்தை வெட்டி சாய்ப்பதைப் பார்க்க மனதுக்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. என்ன செய்வது முருகு?
ஆங்காங்கே இதுபோல, பல இடங்களில் பல காரணங்களுக்காக, இந்த மரம் வெட்டும் வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் உள்ளன, முருகு.
தங்களின் அன்பான வருகைக்கு மிகவும் நன்றி, முருகு.
மேலே நம் ’சிப்பிக்குள் முத்து’ என்னவோ சொல்லியுள்ளது. படிச்சீங்களா, முருகு? :)
அன்புடன் குருஜி கோபு
கோபூஜி...... முருகு ஏற்கனவே எல்லார் மேலவும் கோவப்படறா.. நீங்க இவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் உங்களையும் விட்டு வைக்கல... நீங்க என் பேர ஏன் போட்டுட் கொடுக்கறீங்க.. கோபூஜி....... ஒய்...திஸ்... கொலவெறி.... கொலவெறி...... கோபூஜி......
நீக்குசிப்பிக்குள் முத்து. April 15, 2016 at 6:11 PM
நீக்குவாங்கோம்மா, வணக்கம்மா.
//கோபூஜி...... முருகு ஏற்கனவே எல்லார் மேலவும் கோவப்படறா.. நீங்க இவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் உங்களையும் விட்டு வைக்கல...//
அந்த முருகு பாவம். கைவிரல் சூப்பிக்கொண்டு இருக்கும் ஓர் பச்சக்குழந்தை மாதிரி. கோபம் வந்தால் கையிலுள்ள எதையும் பிறர் மீது வீசி எறிந்து விடும்.
மற்றபடி நல்ல பொண்ணு. :)
//நீங்க என் பேர ஏன் போட்டுட் கொடுக்கறீங்க.. கோபூஜி....... ஒய்...திஸ்... கொலவெறி.... கொலவெறி...... கோபூஜி......//
:) அதுக்கு குருஜி உங்களுக்கு கோபூஜி யா ? அந்த டீச்சர் அம்மா வேறு, எனக்கு ஏதோவொரு புதுப் பெயரு வைத்து என்னை இனி அழைக்கப்போவதாக உங்களிடம் சொல்லியிருக்காங்க.
இனிமேல் என் சொந்தப்பெயரே எனக்கு சுத்தமாக மறந்து போயிடும் போலிருக்கு.
முருகுவைக்கண்டு பயப்படாதீங்கோ. இன்னும் கொஞ்சம் நாளில் நம் எல்லோரையுமே சுத்தமா மறந்துவிட்டு, ஜாலியா அவள் ஹப்பியுடன் வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிவிடுவாள். :)
அதுவரை (அவள் கையில் ஓர் மழலை தவழும் வரை) அவளின் மழலையை நாமும் ரஸிப்போம். ஓக்கேயா ? :)
பிரியமுள்ள கோபூஜி
ஒரே நாள் பயணமாக (ஒரு வகையில் ஒன்றரை நாள் பயணமாக) மதுரை சென்று வந்ததில் இந்த பதிவை விட்டு விட்டேன் போல!
பதிலளிநீக்குஎன் பெயர் ராமசேஷன் எப்போதோ படித்தது. ஒரு வகையில் சற்றே முதிர்ந்த வாசகர்களுக்கான படைப்பு அது. இவர் படைப்பில் இது மட்டும்தான் படித்திருக்கிறேன். அவர் முடிவை பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறேன். சோகம்தான்.
சா. கந்தசாமி படித்ததே இல்லை.
உன்னிப்பான பார்வையில் பதியப்பட்ட படத்தையும், உன்னிப்பாகப் பார்க்கப்பட்டு வெளியான பின்னூட்டத்தையும், அதை உன்னிப்பாகக் கவனித்து ஜீவி ஸார் வெளியிட்ட பின்னூட்டத்தையும் நானும் உன்னிப்பாகப் பார்த்தேன்...(அந்தப் பின்னூட்டங்களைப் படித்த பிறகுதான்!! ஹிஹிஹி.
ஸ்ரீராம். April 13, 2016 at 5:31 PM
நீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.
//ஒரே நாள் பயணமாக (ஒரு வகையில் ஒன்றரை நாள் பயணமாக) மதுரை சென்று வந்ததில் இந்த பதிவை விட்டு விட்டேன் போல!//
அடடா, அப்படியா? பாவம் நீங்கள். நான் இதுபோல சென்னை-மதுரை-சென்னை பயணம் மேற்கொள்வதாக இருந்தால், (அனாவஸ்யமாகப் பயணம் மேற்கொள்ளவே விரும்பமாட்டேன் என்பது ஒருபுறம் தனியாக இருக்கட்டும்) புறப்படும் முன்னால் ஒருவாரம் திரும்ப வந்த பின்னால் ஒருவாரம் குறைந்த பக்ஷமாக ஓய்வு எடுத்துக்கொள்வேன். வேறு எந்த ஒரு வேலையும் .... பதிவுகளைத் திரும்பப்பார்ப்பது உள்பட .... மேற்கொள்ளவே மாட்டேன். கையில் முட்டிவலி முழங்கால் வலிக்கு ஆயிண்மெண்ட் தடவிக்கொண்டு சிவனே என உட்கார்ந்து விடுவேன். :)
//என் பெயர் ராமசேஷன் எப்போதோ படித்தது. ஒரு வகையில் சற்றே முதிர்ந்த வாசகர்களுக்கான படைப்பு அது.//
முதிர்ந்த என்றால்? .... ஓஹோ ! புரிந்துவிட்டது !! :)
//இவர் படைப்பில் இது மட்டும்தான் படித்திருக்கிறேன்.//
நீங்களும் ஓர் முதிர்ந்த வாசகர்தான் எனத் தெரிந்து கொண்டேன். மிகவும் சந்தோஷம். :))
//அவர் முடிவை பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறேன். சோகம்தான்.//
:( ஆமாம், ஸ்ரீராம். மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது :(
//சா. கந்தசாமி படித்ததே இல்லை.//
ஆஹா, அதனால் பரவாயில்லை. வம்பே இல்லை. :)
//உன்னிப்பான பார்வையில் பதியப்பட்ட படத்தையும், உன்னிப்பாகப் பார்க்கப்பட்டு வெளியான பின்னூட்டத்தையும், அதை உன்னிப்பாகக் கவனித்து ஜீவி ஸார் வெளியிட்ட பின்னூட்டத்தையும் நானும் உன்னிப்பாகப் பார்த்தேன்...(அந்தப் பின்னூட்டங்களைப் படித்த பிறகுதான்!! ஹிஹிஹி.)
தங்களின் இந்த உன்னிப்பான பார்வைக்கு மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம்.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் உன்னிப்பான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம். - VGK
இன்றய அறிமுகங்களில் சிவசங்கரி மேடம் கதைகள் படிச்சிருக்கேன்.. இன்னொருவர் பற்றி இன்று இங்கு தெரிந்து கொள்ள முடிந்தது.....
பதிலளிநீக்குsrini vasan April 15, 2016 at 10:21 AM
நீக்கு//இன்றய அறிமுகங்களில் சிவசங்கரி மேடம் கதைகள் படிச்சிருக்கேன்.. இன்னொருவர் பற்றி இன்று இங்கு தெரிந்து கொள்ள முடிந்தது.....//
As this Comment pertains to Part-16, it is reproduced once again at Part-16 by me. This is just for your information, please. - vgk
. சா.கந்தசாமியின் சில கதைகளை வாசித்துள்ளேன். தக்கையின் மீது நான்கு கண்கள் வாசித்து வியந்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு\\சா. கந்தசாமியின் இந்தக் கதையை எடுத்துக் கொண்டு ஜீவி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.\\ ஜீவி சாரின் பார்வையில் அக்கதை குறித்து அறிய ஆவல் பெருகுகிறது.
சாயாவனம் குறித்து பலரும் சிலாகித்திருந்தாலும் இன்னும் அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.. ஆனால் சென்னையில் இருந்தபோது சாலை விரிவாக்கம் காரணமாக ஒரு பெரிய மரத்தை வேரோடு வெட்டிவீழ்த்தியதைப் பார்த்து நாளெல்லாம் அழுதிருக்கிறேன். இங்கு பதிவிலும் அப்படியான படத்தைப் பார்த்து அந்நாள் நினைவு வந்து நெகிழ்த்துகிறது.
ஆதவனின் படைப்புகளுள் முதலில் இரவு வரும் மட்டும் வாசித்திருக்கிறேன். மனத்துள் பெரும்பாதிப்பை உண்டாக்கிய சிறுகதை. மற்றப் படைப்புகளையும் வாசிக்க ஆவல். அவரது எதிர்பாராமரணம் பெருந்துயரம்
கீத மஞ்சரி April 17, 2016 at 12:38 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//சா.கந்தசாமியின் சில கதைகளை வாசித்துள்ளேன். ’தக்கையின் மீது நான்கு கண்கள்’ வாசித்து வியந்திருக்கிறேன்.//
அதைவிட எனக்கு மேலும் ஓர் வியப்பு இப்போது தங்களின் இந்தப்பின்னூட்டத்தினால்.
எழுத்துபிழையின்றி எழுதும் ஒரே எழுத்தாளர் இந்த வலையுலகில் எனக்குத் தெரிந்து தாங்கள் ஒருவர் மட்டுமே. :)
அதனால் நான், இப்போது அந்தத் ’தக்கையின் மேல் என் நான்கு கண்கள்’ ஐயும் நன்கு ஆழமாக பதித்து வியப்புடன் என்னை நானே திருத்திக்கொள்ள முடிந்தது. மிக்க மகிழ்ச்சி + என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம். :)
\\சா. கந்தசாமியின் இந்தக் கதையை எடுத்துக் கொண்டு ஜீவி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.\\
//ஜீவி சாரின் பார்வையில் அக்கதை குறித்து அறிய ஆவல் பெருகுகிறது. //
ஆஹா, தங்களின் இந்த ஆவல் விரைவில் நிறைவேறக்கூடும். ’ஒற்றன்’ உதவியுடன் ’புளியமரத்தையே’ வேரோடு ஆஸ்திரேலியாவுக்குக் கடத்திப்போன உங்களுக்கு இது ஒரு கஷ்டமாகவே இருக்க முடியாது. :)
//சாயாவனம் குறித்து பலரும் சிலாகித்திருந்தாலும் இன்னும் அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை..//
விரைவில் அந்த வாய்ப்பு தங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.
//ஆனால் சென்னையில் இருந்தபோது சாலை விரிவாக்கம் காரணமாக ஒரு பெரிய மரத்தை வேரோடு வெட்டிவீழ்த்தியதைப் பார்த்து நாளெல்லாம் அழுதிருக்கிறேன். இங்கு பதிவிலும் அப்படியான படத்தைப் பார்த்து அந்நாள் நினைவு வந்து நெகிழ்த்துகிறது.//
அதே போல நான் BHEL Township Quarters இல் குடியிருந்த போது, (1981-2000) Type-2 வீடுகளுக்கெல்லாம் முன்புறம் உபரியாக ஒரு அறை கட்டிக்கொடுப்பதாகச் சொல்லி, A2/304 என்ற என் வீட்டு வாசலில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த இரண்டு பக்க வேப்ப மரங்களையும் வெட்டி சாய்த்து விட்டனர். அதைக்கண்டு நான் நடுநடுங்கிப்போய் ஒரு வாரத்திற்கு மேல் அழுதேன்.
அது நிர்வாகத்தின் கொள்கை முடிவு என்பதால் யாராலும் அன்று அதனைத் தடுக்க முடியவில்லை.
ஆனால் மிக நல்ல திறமைகள் மிக்க நிர்வாகமான BHEL இன்றும் பல ஆயிரக்கணக்கான மரங்களை வளர்த்து, அவற்றை தனி துறைமூலம் மிக நன்கு பராமரித்து தனது (TOWNSHIP + FACTORY AREA) ஊரகத்தையும், தொழிற்சாலைப் பகுதியையும் குளுகுளுவென மிகவும் பசுமையாகத்தான் வைத்துள்ளது என்பதில் எங்களுக்கெல்லாம் ஒரு தனிப்பெருமையாக உள்ளது.
//ஆதவனின் படைப்புகளுள் ’முதலில் இரவு வரும்’ மட்டும் வாசித்திருக்கிறேன்.//
இதனைக் கேட்க சந்தோஷமாக உள்ளது.
//மனத்துள் பெரும்பாதிப்பை உண்டாக்கிய சிறுகதை.//
அப்படியா !!!!!
//மற்றப் படைப்புகளையும் வாசிக்க ஆவல்.//
மிக்க மகிழ்ச்சி :)
//அவரது எதிர்பாராமரணம் பெருந்துயரம்//
ஆமாம், மேடம். :(
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும், குறிப்பாக அந்த ‘தக்கைக்கும்’ என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
பிரியமுள்ள கோபு
Position as on 17.04.2016 - 2.00 PM
பதிலளிநீக்குஎன் இந்தத்தொடரின் முதல் பதினைந்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துச் சிறப்பித்துள்ள
திருமதிகள்:
01) ஞா. கலையரசி அவர்கள்
02) கோமதி அரசு அவர்கள்
03) கீதா சாம்பசிவம் அவர்கள்
04) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்
செல்விகள்:
05) ’சிப்பிக்குள் முத்து’ அவர்கள்
06) 'மின்னலு முருகு' மெஹ்ருன்னிஸா அவர்கள்
07) ’ப்ராப்தம்’ அவர்கள்
திருவாளர்கள்:
08) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்
09) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்
10) S. ரமணி அவர்கள்
11) வே. நடன சபாபதி அவர்கள்
12) ஸ்ரத்தா... ஸபுரி அவர்கள்
13) ஆல் இஸ் வெல் அவர்கள்
14) ஸ்ரீனிவாஸன் அவர்கள்
15) தி. தமிழ் இளங்கோ அவர்கள்
ஆகியோருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போன்ற புள்ளி விபரங்கள் நிறைவுப் பகுதி (பகுதி-20) முடிந்ததும் மீண்டும் அறிவிக்க நினைத்துள்ளேன்.
அன்புடன் VGK
oooooooooooooo
பகுதி-1 முதல் பகுதி-14 வரைக்கான அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து, பகுதி-15க்கு மட்டும் இதுவரை வருகை தராமல் ஒருவர் உள்ளார். அவர் தற்சமயம் முக்கியமான வேலைகளில் மூழ்கி இருப்பதால், கூடிய சீக்கரம் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
oooooooooooooo
இரண்டுமே எனக்கு அறிமுகப் பெயர்கள்.
பதிலளிநீக்குஹிஹி.. உங்க பின்னூட்ட கடைசி வரிகள் ஒரே மர்மமா இருக்குதே?
அப்பாதுரை April 23, 2016 at 10:20 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//இரண்டுமே எனக்கு அறிமுகப் பெயர்கள்.//
எனக்கும்தான். :)
//ஹிஹி.. உங்க பின்னூட்ட கடைசி வரிகள் ஒரே மர்மமா இருக்குதே?//
அந்த மர்ம மனிதர் இன்று இப்போது வந்துவிட்டார். அவர் யார் என்ற மர்மம் நாளை என் லேடஸ்ட் பதிவினில் அறிவிக்கப்படும். :)
தங்களின் அன்பான தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். - அன்புடன் VGK