About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, April 19, 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 19
’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன்  ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லியுள்ள 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து வருகிறோம். 

இதுவரை  இந்த இன்றையப் பதிவுடன் 36 பிரபல எழுத்தாளர்களையும் நாம் பார்த்து முடித்து விட்டோம். 

இதன் அடுத்த பகுதியுடன் இந்தத்தொடர் இனிதே நிறைவடைய உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
35) எண்ண ஓவியன் 
வண்ணநிலவன்
[பக்கம் 223 முதல் 237 வரை]


எழுத்தாளர் வண்ணநிலவன்  கதைகளை எடுத்துக் கொண்டு பிரமாதப்படுத்துகிறார் ஜீவி. 

அவரது ‘எஸ்தர்’ கதையை எடுத்துக்கொண்டு இத்தனை நாளும் எல்லோரும் நினைத்துச் சொன்ன மாதிரி இல்லாமல், எஸ்தர் கதையில் வரும் பாட்டியின் இறப்பிற்கான காரணத்தைப் புதுமாதிரியாகச் சொல்கிறார். இதிலிருந்தே ஜீவி இந்தக்கதையை எவ்வளவு ஆழ்ந்து படித்திருக்கிறார் என்று தெரிகிறது.


'பாம்பும் பிடாரனும்'  என்னும் வண்ணநிலவனின் கதையை ஜீவி விவரிக்கும் அழகே தனிதான்.

வண்ணநிலவனின் 'கெட்டாலும் மேன்மக்கள்' கதை ஜீவியின் எழுத்து லாவகத்தில் மனதை விட்டு  அகல மறுக்கிறது.   சுப்பையா, அவன் முதலாளி அரிகிருஷ்ணனின் மனைவி சந்திரா-- இரண்டு பேருமே மறக்கமுடியாத பாத்திரப் படைப்புகள். வண்ணநிலவனின் எழுத்துக்களில் ஜீவி நோக்கில் இந்த பாத்திரப் படைப்புகள் வார்ப்பு பெறும் பொழுது வாசிக்கையிலேயே மனம் நெகிழ்ந்து போகிறது..

எல்லாரும் வண்ணநிலவனின் 'எஸ்தர்' கதை தான் அவர் மாஸ்டர் பீஸ் என்கிறார்கள் என்றால் ஜீவிக்கு வண்ணநிலவனின் 'கெட்டாலும் மேன்மக்கள்'  கதை தான் அவரது மாஸ்டர் பீஸாம்! 

வண்ணநிலவனின்  'கடற்புரம்' நாவலை எடுத்துக் கொண்டு ஜீவி அலசுகிறார். பொன்னியின் செல்வனில் வரும் ஓடக்காரப் பெண்மணி பூங்குழலியின் 'அலைகடலும் ஓய்திருக்க..’ பாடலை ’கடற்புரம்’ நாவலில் வரும் 'வெள்ளியும் மறைஞ்சு போச்சே..' பாடலுடன் ஒப்புமை படுத்தி நம் நெஞ்சை கனக்கச் செய்கிறார்.

'ரெயினீஸ் ஐயர் தெரு',  'கம்பா நதி''   என்று வாசிக்க வாசிக்க வண்ணநிலவனை மறக்கவே முடியவில்லை. எப்படிப்பட்ட எழுத்தாளர் என்று மலைக்கிறோம்.

வண்ணநிலவனின் ஒரு கவிதையும் கடைசியில் வருகிறது. அவர் சொல்கிற மாதிரி 'எதையேனும் சார்ந்திருக்கத் தான் வேண்டும்' என்று தோன்றுகிறது.   

இவர் எழுதியுள்ள மற்ற படைப்புகளான ‘மழை’; ‘துன்பக்கேணி’; ‘அந்திக்கருக்கல்’; ‘சரஸ்வதி’; ’காவல்’ என்ற நாவல்; இவரின் முதல் கதையான ‘மண்ணின் மலர்கள்’ போன்ற அனைத்தையும் பற்றி ஜீவி ஆங்காங்கே குறிப்பிட்டுப் புகழ்ந்து பேசியுள்ளார்.  

வண்ணநிலவனுக்கு ‘துக்ளக்’ ஆசிரியர் ’சோ’ அவர்களால் வைக்கப்பட்டுள்ள பெயர்: துர்வாசர். துர்வாசர் என்ற பெயரில் துக்ளக் பத்திரிகையில் எழுதுவதும் இவரே என்பது ஜீவி நமக்குக் கொடுக்கும் கூடுதல் தகவலாகும். 

36) கலா நேசர் 
கலாப்ரியா
[பக்கம் 238 முதல் 248 வரை]
கலாப்ரியா அடிப்படையில் கவிஞர்.  இருப்பினும் கட்டுரை வரிசையில் அவர் எழுதிய 'நினைவின் தாழ்வாரங்கள்' என்னும் சுயசரிதை போன்ற நூலையும், அதன் தொடர்ச்சியான 'உருள் பெருந்தேர்' என்ற நூலையும்  ஜீவி எடுத்துக் கொள்கிறார். 

கலாப்ரியாவின் நினைவோடையில் தங்கியிருப்பதில் சினிமா சம்பந்தப்பட்டவை பெரும் பகுதியை ஆக்கிரமித்து விடுகிறது. இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்தவர் .... இந்தி சினிமாக்களை, நடிகர்களை, நடிகர் நடித்த காட்சிகளைத் தவறாமல் நினைவு வைத்திருப்பதை ஜீவி சுட்டிக் காட்டி அதற்காகவே ஒரு காரணமும் கற்பித்துச் சொல்கிறார்.  

‘பெண்கள் பகுதி கவுண்டரில் பாக்கியத்தக்கா உதவியுடன் டிக்கெட் வாங்கி படம் பார்த்த’ கலாப்ரியாவின் அனுபவங்கள் வேடிக்கையானவை; ரசிக்கத் தகுந்தவை. இந்த அனுபவங்களின் தொடர்ச்சியாய் வரும் ’பாக்கியத்தக்கா’ மறக்க முடியாதவர். தென்காசி பஸ்ஸின் டயரில் அடிபடுகிற மாதிரி பாய்ந்து காசை எடுத்த விஜயரெங்கனும் மறக்க முடியாதவர்.  

திருநெல்வேலி நகரின்  சினிமாத் தியேட்டர்கள், ஓட்டல்கள் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.   எஸ்.எஸ்.ஆரின் 'முத்து மண்டபம்' என்கிற திரைப்படத்தின் விசேஷ நினைவு வேடிக்கையாய் இருக்கிறது.  

சுய விமர்சனத்துடன் தனது வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதுவோருக்கு துணிச்சல் வேண்டும். அது கலாப்ரியாவுக்கு இருக்கிறது.-oOo-

கலாப்ரியா எழுதியுள்ள இந்தச் சின்னக் 
கவிதையைப் படித்துப்பாருங்கள்:

அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)

தொடரும்  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் பிரபல எழுத்தாளர்:-       

  
   வெளியீடு: 21.04.2016 பிற்பகல் 3 மணிக்கு.
காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

49 comments:

 1. இன்று இடம்பெற்ற இருவர் கதைகளும் படித்த நினைவு இல்லை.
  படங்கள் நன்றாக இருக்கிறது.

  படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது ஜீவி சாரின் நூல்.
  உங்களின் விமர்சனம், அதற்கு வரும் பின்னூட்டங்கள், அதற்கு உங்களின் மறுமொழி, ஜீவி சாரின் பதிலகள் மூலம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.
  மீண்டும் உங்களுக்கு என் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு April 19, 2016 at 3:12 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இன்று இடம்பெற்ற இருவர் கதைகளும் படித்த நினைவு இல்லை.//

   அதனால் பரவாயில்லை மேடம்.

   //படங்கள் நன்றாக இருக்கிறது.//

   சந்தோஷம்.

   //படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது ஜீவி சாரின் நூல்.
   உங்களின் விமர்சனம், அதற்கு வரும் பின்னூட்டங்கள், அதற்கு உங்களின் மறுமொழி, ஜீவி சாரின் பதில்கள் மூலம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.//

   அப்படியா!!!!! மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //மீண்டும் உங்களுக்கு என் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துப்பகிர்வுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGK

   Delete
 2. சுவாரஸ்யமான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். April 19, 2016 at 3:27 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //சுவாரஸ்யமான பகிர்வு.//

   ’சுவாரஸ்யமான பகிர்வு’ என்று இரண்டே வார்த்தைகளில் சுருக்கோ சுருக்கெனச் சுருக்கிச் சுருக்கமாகச் சொல்லியுள்ளது ஏனோ, சுவாரஸ்யமாக இல்லையோ, என நினைக்க வைக்கிறது என்னை :)

   இருப்பினும் தங்களின் அன்பான தொடர் வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.

   அன்புடன் VGK

   Delete
 3. இருவரின் எழுத்துக்களையும் வாசித்ததில்லை ஐயா.

  //எனக்கதன் கூடும் தெரியும்
  குஞ்சும் தெரியும்
  இருந்தும்
  எனக்கதன்
  பாஷை புரியவில்லை.//

  மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை...ஐயா

  ReplyDelete
  Replies
  1. R.Umayal Gayathri April 19, 2016 at 4:03 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இருவரின் எழுத்துக்களையும் வாசித்ததில்லை ஐயா.//

   அதனால் பரவாயில்லை, மேடம்.

   **எனக்கதன் கூடும் தெரியும், குஞ்சும் தெரியும், இருந்தும் எனக்கதன் பாஷை புரியவில்லை.**

   //மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை...ஐயா//

   சந்தோஷம். நானும் ரஸித்ததால் மட்டுமே அவற்றை இந்த என் பதிவினிலும் கொண்டு வந்துள்ளேன். :)

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGK

   Delete

 4. இன்றைக்கு அறிமுகமாயுள்ள எழுத்தாளர்கள் திரு வண்ண நிலவன் மற்றும் திரு கலாப்ரியா ஆகிய இருவர் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அவர்களுடைய படைப்புகளை இதுவரை படித்ததில்லை. திரு ஜீவி அவர்கள் சொல்லியிருப்பதை தாங்கள் சுவைக்கூட்டித் தந்திருப்பது அவர்களது படைப்புகளைப் படிக்கத் தூண்டுகிறது.

  ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.’ என்பது போல் தாங்கள் தந்துள்ள கலாப்ரியா அவர்களின் கவிதை அவரது மற்ற கவிதைகள் எப்படியிருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

  இருவரையும் அறிமுகப்படுத்திய திரு ஜீவி அவர்ளுக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி April 19, 2016 at 4:21 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //இன்றைக்கு அறிமுகமாயுள்ள எழுத்தாளர்கள் திரு வண்ண நிலவன் மற்றும் திரு கலாப்ரியா ஆகிய இருவர் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்களுடைய படைப்புகளை இதுவரை படித்ததில்லை. திரு ஜீவி அவர்கள் சொல்லியிருப்பதை தாங்கள் சுவைக்கூட்டித் தந்திருப்பது அவர்களது படைப்புகளைப் படிக்கத் தூண்டுகிறது. //

   நான் சுவைக்கூட்டி அறிமுகப் பதிவு தந்திருப்பதாகவும், அதுவே தங்களை நம் ஜீவி சாரின் நூலினை வாங்கிப் ’படிக்கத் தூண்டுகிறது’ என்பதாகத் தாங்கள் சொல்வதையே என் இந்தத் தொடரின் வெற்றியாக நினைத்து மகிழ்கிறேன். தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், சார்.

   //‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.’ என்பது போல் தாங்கள் தந்துள்ள கலாப்ரியா அவர்களின் கவிதை அவரது மற்ற கவிதைகள் எப்படியிருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறது.//

   மிக்க மகிழ்ச்சி, சார். நம் ஜீவி சாரும் தன் நூலினில் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் இந்த ஒரு கவிதையை மட்டுமே நமக்கு அளித்துள்ளார்கள்.

   //இருவரையும் அறிமுகப்படுத்திய திரு ஜீவி அவர்ளுக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள்! //

   மிகவும் சந்தோஷம், சார். தங்களின் தொடர் வருகைக்கும், தொய்வில்லாத இனிய பல அரிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

   Delete
 5. எனக்கு இருவருமே தெரியாதவர்கள் தொடரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. KILLERGEE Devakottai April 19, 2016 at 5:40 PM

   //எனக்கு இருவருமே தெரியாதவர்கள் தொடரட்டும்...//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   Delete
 6. அறிமுகங்கள் அறிமுகானதால்
  நிறைய படிக்க தூண்டல் மனதில்
  தொடர்ந்து அறி முகம் செய்யுங்கள்
  என்றாவது எங்களுக்கு உதவும்...

  ReplyDelete
  Replies
  1. Ajai Sunilkar Joseph April 19, 2016 at 9:29 PM

   //அறிமுகங்கள் அறிமுகமானதால் நிறைய படிக்க தூண்டல் மனதில். தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்
   என்றாவது எங்களுக்கு உதவும்...//

   வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   Delete
 7. கெட்டாலும் மேன்மக்கள் கதையை ஜீவி சார் புத்தகம் மூலம் தான் அறிந்து கொண்டேன். மிகவும் அருமையான முடிவுடன் கூடிய கதை. கலாப்பிரியா அருமையான கவிதையை பொருத்தமான படத்துடன் வெளியிட்டது சிறப்பு. கலாப்பிரியாவின் சுயசரிதையைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது உங்கள் சுவையான விமர்சனம். அடுத்த பதிவுடன் முடிகிறது என்றறிய வியப்பு. நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைப் பலரிடம் ஏற்படுத்திய தொடர்! பாராட்டுக்கள் சார்!

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி April 19, 2016 at 11:06 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //கெட்டாலும் மேன்மக்கள் கதையை ஜீவி சார் புத்தகம் மூலம் தான் அறிந்து கொண்டேன். மிகவும் அருமையான முடிவுடன் கூடிய கதை.//

   அப்படியா மேடம். மிக்க மகிழ்ச்சி.

   //கலாப்பிரியா அருமையான கவிதையை பொருத்தமான படத்துடன் வெளியிட்டது சிறப்பு.//

   மிகவும் சந்தோஷம் மேடம்.

   //கலாப்பிரியாவின் சுயசரிதையைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது உங்கள் சுவையான விமர்சனம்.//

   அடடா, சுவையான விமர்சனம் என மிகச்சுவையாகச் சொல்லிவிட்டீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது :)

   //அடுத்த பதிவுடன் முடிகிறது என்றறிய வியப்பு.//

   தொடங்கிய எதுவும் ஒருநாள் நிறைவடையத்தானே வேண்டும். நல்லபடியாக அந்த நிறைவுப்பகுதியும் சொன்னபடி 21.04.2016 என்னால் வெளியிட முடிந்தால் எனக்கும் ஓர் மிகப்பெரிய நிம்மதியே.

   //நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைப் பலரிடம் ஏற்படுத்திய தொடர்! பாராட்டுக்கள் சார்!//

   சந்தோஷம் மேடம். தங்களைப்போன்ற குறிப்பிட்ட ஒருசிலரின் தொடர் வருகையே இந்த என் தொடரை மேலும் ஜொலிக்கச்செய்துள்ளது என்பதை நானும் நன்கு அறிவேன்.

   தங்களின் பாராட்டுகளுக்கும், தொடர் வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். நன்றியுடன் கோபு.

   Delete
 8. இன்று அறிமுகமாகி இருக்கும் இருவரையுமே.. இதுவரை..தெரிந்திருக்கவில்லை. ஜி.வி. ஸாரின் ரசனைகள் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் உங்கள் பதிவு மூலமாக தெரிந்து கொளுவதில் மிகவும் சந்தோஷமாக இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... April 20, 2016 at 9:39 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்று அறிமுகமாகி இருக்கும் இருவரையுமே.. இதுவரை..தெரிந்திருக்கவில்லை. ஜீ.வி. ஸாரின் ரசனைகள் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் உங்கள் பதிவு மூலமாக தெரிந்து கொள்வதில் மிகவும் சந்தோஷமாக இருக்கு...//

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   Delete
 9. வண்ணநிலவன் சிறுகதைத் தொகுப்பு என் கணவரால் சென்றவருடம் எனக்குப் பரிசளிக்கப்பட்டது. அதுதான் முதன்முறையாக அவருடைய எழுத்தின் அறிமுகம் எனக்கு. ஆனால் விரைவிலேயே மனம் ஈர்த்துவிட்டார். கலாப்ரியா அவர்களின் எழுத்து அவ்வளவாகப் பரிச்சயமில்லை.. இப்போதுதான் அறிமுகமாகிவிட்டதே.. இனி வாசிப்பேன். இவ்வளவு நாட்களாக ஒரு பெருந்தேரை ஒற்றையாளாக இழுத்துக்கொண்டு போவதுபோல் அவ்வளவு அழகாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பாளிகளைப் பற்றிய அறிமுகத்தைப் பலரும் அறியத் தந்த தங்களுக்கு மிகவும் நன்றி.. இப்படியொரு அருமையான ஆவண நூலை வழங்கிய ஜீவி சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி April 20, 2016 at 9:48 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //வண்ணநிலவன் சிறுகதைத் தொகுப்பு என் கணவரால் சென்றவருடம் எனக்குப் பரிசளிக்கப்பட்டது.//

   கொடுத்து வைத்த மஹராஜி ..... நீங்கள். :)

   //அதுதான் முதன்முறையாக அவருடைய எழுத்தின் அறிமுகம் எனக்கு.//

   அப்படியா! சந்தோஷம்.

   //ஆனால் விரைவிலேயே மனம் ஈர்த்துவிட்டார்.//

   மிக்க மகிழ்ச்சி. விரைவிலேயே மனம் ஈர்த்து விட்டவர், அந்த சிறுகதைத் தொகுப்பினைத் தங்களுக்குப் பரிசளித்தவரும் தானே. :)

   //கலாப்ரியா அவர்களின் எழுத்து அவ்வளவாகப் பரிச்சயமில்லை.. இப்போதுதான் அறிமுகமாகிவிட்டதே.. இனி வாசிப்பேன்.//

   OK ... Madam.

   //இவ்வளவு நாட்களாக ஒரு பெருந்தேரை ஒற்றையாளாக இழுத்துக்கொண்டு போவதுபோல் அவ்வளவு அழகாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பாளிகளைப் பற்றிய அறிமுகத்தைப் பலரும் அறியத் தந்த தங்களுக்கு மிகவும் நன்றி..//

   இப்போது ஒரு அரை மணி நேரம் முன்புதான், (20.04.2016 - 9 to 9.30 AM) நம்ம ஊரான திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் தேர்கள் என் வீட்டு வாசல் வழியாக ஓங்கி உயர்ந்து பிரும்மாண்டமாக நகர்ந்து சென்றன. கண்டு களித்தேன்.

   தாங்களும் என் இந்தத்தொடரினை பெருந்தேருடன் ஒப்பிட்டுச்சொல்லியுள்ளது என்னை அப்படியே மெய் சிலிர்க்க வைத்து விட்டது. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

   பதிவுகள் இடுவதும் தேரினை நகர்த்திச்செல்வது போலவே கஷ்டமான வேலையாகத்தான் என்னாலும் இப்போதெல்லாம் உணர முடிகிறது. என் உடலிலோ மனத்திலோ முன்பு போல உற்சாகம் ஏதும் இல்லை.

   // இப்படியொரு அருமையான ஆவண நூலை வழங்கிய ஜீவி சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகழகான தேர்கள் போன்ற பிரும்மாண்டமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். பிரியமுள்ள கோபு

   Delete
  2. கீத மஞ்சரி விமரிசன வித்தகர் மட்டுமில்லை. தேர்ந்த எழுத்து ரசிகரும் கூட.

   இந்தப் பகுதியை வாசித்து வரும் போதே கலாப்ரியாவின் 'உருள் பெருந் தேர்' நூல் தலைப்பு அவர் நினைவின் தாழ்வாரங்களில் பதிந்து போய் விட்டது.. அதுவே பின்னூட்டத்திலும் தேர் வர உந்து சக்தியாக செயல்பட்டிருக்கிறது. தேர்ந்த வாசிப்பு பழக்கம் கொண்டவர்களால், வாசித்த வித்தியாசமான சொற்டொடர்களை லேசில் மறக்க முடியாது என்பதற்கும் இதுவே எடுத்துக்காட்டு.

   'நினைவின் தாழ்வாரங்கள்' நூலின் இரண்டாவது பகுதி போலவே அமைந்திருக்கிறது 'உருள் பெருந் தேர்'. கலாப்ரியாவின் இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டிருப்பதும் சந்தியா பதிப்பகம் தான். தமிழகம் வரும் பொழுது எல்லாவற்றையும் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்.

   Delete
  3. நுட்பமாகக் கவனித்துக் கருத்திட்டமைக்கு நன்றி ஜீவி சார். தாங்கள் குறிப்பிட்டது போல sub conscious mind-ல் அவ்வார்த்தை பதிவாகியுள்ளது போலும். என்னையறியாமலேயே அதை இங்கு உபயோகப்படுத்தியுள்ளேன். இந்தியா வரும்போது வாங்கிச்செல்ல ஒரு பட்டியலே வைத்திருக்கிறேன். இப்போது கூடுதலாய் இன்னும் சில.. தங்கள் நூல் வாயிலாய்... மிக்க நன்றி ஜீவி சார்.

   Delete
 10. இருவரையுமே தெரியல...... பின்னூட்டங்கள் மூலமாக ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.... நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... April 20, 2016 at 10:05 AM

   //இருவரையுமே தெரியல...... பின்னூட்டங்கள் மூலமாக ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.... நன்றிகள்...//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   Delete
 11. கோபூஜி...... இன்னக்கி ரெண்டு பேரயும் இங்க தான் தெரிஞ்சிக் கிட்டேன்... பின்னூட்டங்கள் எல்லாமும் படிச்சு கொஞ்சம் தெரிஞ்சிகிட்டேன்... அழகான படங்களைப்பத்தி எழுத கைதுறு துறு பண்ணுது......... அப்புறம் யாரு பிரம்படி வாங்குறது............

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. April 20, 2016 at 10:24 AM

   வாங்கோ ’சிப்-முத் முன்னா’, வணக்கம்.

   //கோபூஜி...... இன்னக்கி ரெண்டு பேரயும் இங்க தான் தெரிஞ்சிக் கிட்டேன்... பின்னூட்டங்கள் எல்லாமும் படிச்சு கொஞ்சம் தெரிஞ்சிகிட்டேன்...//

   மிகவும் சந்தோஷம்மா.

   //அழகான படங்களைப்பத்தி எழுத கைதுறு துறு பண்ணுது.........//

   அடடா, துறு-துறு பண்ணும் தங்களின் பொற்கரங்களால் எழுதியிருக்கலாமேம்மா :(

   //அப்புறம் யாரு பிரம்படி வாங்குறது............//

   அதுவும் நியாயம்தான். வரும் ஜூலை 3ம் தேதிவரை நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவேதான், முன்னெச்சரிக்கையுடன்தான் இருக்க வேண்டும். :)

   தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்வூட்டிடும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். பிரியமுள்ள கோபு

   Delete
 12. ஜீவி அவர்களின் கனமான பணிக்கு நித்திலம் வைத்தாற்போல் உங்கள் பணி மேலோங்கி நிற்கிறது. இறுதியில் எறும்புக் கூட்டங்களின் வரிசையானது ஜீவி அவர்களின் நூலை நாடிச் செல்லும் வாசகர் கூட்டங்களை அடையாளப்படுத்துகிறது. மிக்கநன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. Chandragowry Sivapalan April 20, 2016 at 11:24 AM

   வாங்கோ மேடம், வணக்கம். நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா? நாம் சந்தித்து பலநாட்கள் ஆகிவிட்டன. வெகு விரைவில் தங்கள் பக்கம் வரணும் என நானே எனக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்குள் தாங்களே இங்கு வருகை தந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி. :)

   //ஜீவி அவர்களின் கனமான பணிக்கு நித்திலம் வைத்தாற்போல் உங்கள் பணி மேலோங்கி நிற்கிறது.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //இறுதியில் எறும்புக் கூட்டங்களின் வரிசையானது ஜீவி அவர்களின் நூலை நாடிச் செல்லும் வாசகர் கூட்டங்களை அடையாளப்படுத்துகிறது.//

   ஆஹா, தங்களின் இந்தக்கற்பனை வெகு அருமை. என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

   //மிக்க நன்றி சார்//

   தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGK

   Delete
 13. வண்ணநிலவன், கலாப்ரியா இருவரைப் பற்றிய ஜீவியின் விமர்சனம், அவர்களது படைப்புக்களை படிக்கத் தூண்டுகிறது. குறிப்பாக ‘எஸ்தர்’ பாட்டியின் கதையினைப் படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ April 20, 2016 at 2:15 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //வண்ணநிலவன், கலாப்ரியா இருவரைப் பற்றிய ஜீவியின் விமர்சனம், அவர்களது படைப்புக்களை படிக்கத் தூண்டுகிறது. குறிப்பாக ‘எஸ்தர்’ பாட்டியின் கதையினைப் படிக்க வேண்டும்.//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி சார். படியுங்கோ, படியுங்கோ. :)

   தங்களின் தொடர் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

   தாங்கள் இனியும் வருகை தர வேண்டிய + கருத்தளிக்க வேண்டிய பகுதி ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது. அதுவே நாளை என்னால் வெளியிடப்பட இருக்கும் பகுதி-20 (இந்த என் தொடரின் நிறைவுப்பகுதி) ஆகும்.

   இது ஓர் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் VGK

   Delete
  2. எஸ்தர் சித்தியே. பாட்டி வேறே.

   வண்ணநிலவனின் 'எஸ்தர்' கதை இணையத்தில் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.

   Delete
 14. கலாப்ரியா அவர்களை மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவரை கவிஞர் என்றே நினைத்தேன். அவர் உரைநடையும் எழுதியிருக்கிறார் என்பது தெரியாத செய்தி. வண்ணநிலவன் படைப்புகள் மிக அரிதாகவே வாசித்திருக்கிறேன்.
  பத்திரிகையில் சேர்ந்தபின் கதை படிப்பதையே விட்டுவிட்டேன். தகவல்கள் தேடுவதற்காகவே அது சம்பந்தமான புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். அப்படியே கதைமீதான வாசிப்பும் குறைந்து போனது. மீண்டும் கதை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியமைக்கு நன்றிகள் பல அய்யா!

  ReplyDelete
  Replies
  1. S.P.SENTHIL KUMAR April 20, 2016 at 3:47 PM

   வாங்கோ, வணக்கம்.

   //கலாப்ரியா அவர்களை மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.//

   ஆஹா, இதனைக்கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

   //அவரை கவிஞர் என்றே நினைத்தேன். அவர் உரைநடையும் எழுதியிருக்கிறார் என்பது தெரியாத செய்தி. வண்ணநிலவன் படைப்புகள் மிக அரிதாகவே வாசித்திருக்கிறேன்.//

   ஓஹோ, நல்லது.

   //பத்திரிகையில் சேர்ந்தபின் கதை படிப்பதையே விட்டுவிட்டேன். தகவல்கள் தேடுவதற்காகவே அது சம்பந்தமான புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். அப்படியே கதைமீதான வாசிப்பும் குறைந்து போனது. //

   புரிகிறது. வாஸ்தவம்தான். நேரம் இருக்காதுதான்.

   //மீண்டும் கதை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியமைக்கு நன்றிகள் பல ஐயா!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

   Delete
  2. நாவல், கதைத் தொகுப்பு என்றாலே இன்றைய பதிப்பகத்தார் இருகரம் கூப்பி, "வேண்டாம், ஐயா!" என்று மறுக்கிறார்கள்.

   அதனால் தான் கதைகள் எழுதியவர்களைப் பற்றி கட்டுரைகள் எழுதினால் என்ன என்று யோசனை போயிற்று. அந்த யோசனையின் விளைவே இந்த நூல். அதுவும் கதை போல சுவாரஸ்யமாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம். பெயருக்கு தான் கட்டுரைகளே தவிர கதை எழுதியவர்களின் கதையையும் அவர்கள் எழுதிய கதைகளையும் பற்றிச் சொல்லும் நூல் தான் இது.

   மீண்டும் கதை வாசிக்கும் ஆர்வம் தூண்டப்பட்ட்தாக நீங்கள் எழுதியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. எதை எழுதினாலும் கதை வாசிக்கும் ஆர்வத் தீயைத் தான் நம்மால் வளர்க்க முடியும்
   என்று தெரிந்து கொண்டேன்.

   மிக்க நன்றி, செந்தில் குமார் சார்.

   Delete
 15. பதிவு... பின்னூட்டங்கள் எல்லாம் நிதானமா படிச்சுட்டு வரதுக்குள்ள இவ்வளவு லேட் ஆயிடிச்சே...பதிவை விட பின்னூட்ட விஷயங்கள் சுவாரசியமாக இருக்கு. (இப்படி சொல்வது ஒருவேளை தப்போ????)

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் April 20, 2016 at 5:55 PM

   வாங்கோ சாரூஊஊஊ, வணக்கம்மா.

   //பதிவு... பின்னூட்டங்கள் எல்லாம் நிதானமா படிச்சுட்டு வரதுக்குள்ள இவ்வளவு லேட் ஆயிடிச்சே...//

   அதனால் பரவாயில்லை. லேட் ஆக வந்தாலும் லேடஸ்ட் ஆக மிகவும் சூப்பராகவே (Up-dated ஆகவே) வந்துள்ளீர்கள்.

   //பதிவை விட பின்னூட்ட விஷயங்கள் சுவாரசியமாக இருக்கு.//

   அப்படியாம்மா ! மிக்க மகிழ்ச்சிம்மா :)

   //(இப்படி சொல்வது ஒருவேளை தப்போ????)//

   இதில் தப்பேதும் கிடையாதும்மா.

   பதிவினில் என்ன இருக்கு .... வெங்காயம். பின்னூட்ட விஷயங்களில்தான் எல்லாமே (என் வெற்றியே) அடங்கி இருக்குதுன்னு எல்லோருமே சொல்லுவாங்க. நிறைய பேர்கள் சொல்லி ஏற்கனவே நான் கேட்டாச்சு. நீங்க புதுசா இங்கு வந்து முதன் முதலில் இதனை இங்கு சொல்லியிருக்கீங்களே தவிர, இதெல்லாம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்.

   தங்களின் அன்பான வருகைக்கும், இனிப்பான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூஊஊ. - பிரியமுள்ள கோபு

   Delete
 16. இன்றய பிரபலங்க ளை தெரியல.....

  ReplyDelete
  Replies
  1. srini vasan April 20, 2016 at 6:00 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றய பிரபலங்க ளை தெரியல.....//

   இன்றைய பிரபலங்கள் பிரபலங்களாகவே தங்களுக்குத் தெரியவில்லையா? அல்லது இன்றைய பிரபலங்கள் பற்றி ஏதும் தங்களுக்கு இதுவரை தெரியவில்லையா?

   இரண்டுமே ஒன்றுதான், உங்களுக்கும் எனக்கும். அதனால் பரவாயில்லை.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் - VGK

   Delete
 17. மிக மிக அருமையான எழுத்தாளர்களை,
  தமிழ் இலக்கிய ஆர்வம் உள்ளவர்களுக்கு
  ஒரு வழிகாட்டியாக ஜீவி அவர்களின் இந்த நூல்
  அமைந்தது சிறப்பு எனில் அதை மிக மிக
  நேர்த்தியாக பகிர்ந்த வை. கோ அவர்களின்
  இந்தத் தொடர் பதிவுகள் மிக மிக அருமை

  நான் இந்தப் பதிவின் மூலமும் அதன் தொடர்ச்சியாய்
  ஜீ.வி அவர்களின் நூலின் மூலமும் விடுபட்டுப் போன
  சிறந்த எழுத்தாளர்களை அவர்களின்
  மிகச் சிறந்த படைப்பின் மூலம் தொடர்ந்து
  அவர்களது படைப்பைத் தொடர
  இந்தப் பதிவுகள் மிக மிக உதவியாக இருக்கிறது

  மிகச் சிறந்த இலக்கியச் சேவையினைச் செய்த
  ஜி.வி அவர்களுக்கும்
  அதை அற்புதமாக மிக மிக நேர்த்தியாக
  அறிமுகம் செய்த வை. கோ அவர்களுக்கும்
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. Ramani S April 20, 2016 at 6:03 PM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

   //மிக மிக அருமையான எழுத்தாளர்களை, தமிழ் இலக்கிய ஆர்வம் உள்ளவர்களுக்கு, ஒரு வழிகாட்டியாக ஜீவி அவர்களின் இந்த நூல் அமைந்தது சிறப்பு எனில், அதை மிக மிக நேர்த்தியாக பகிர்ந்த வை. கோ அவர்களின் இந்தத் தொடர் பதிவுகள் மிக மிக அருமை

   நான் இந்தப் பதிவின் மூலமும், அதன் தொடர்ச்சியாய் ஜீ.வி அவர்களின் நூலின் மூலமும், விடுபட்டுப் போன சிறந்த எழுத்தாளர்களை, அவர்களின் மிகச் சிறந்த படைப்பின் மூலம் தொடர்ந்து அவர்களது படைப்பைத் தொடர இந்தப் பதிவுகள் மிக மிக உதவியாக இருக்கிறது

   மிகச் சிறந்த இலக்கியச் சேவையினைச் செய்த ஜி.வி அவர்களுக்கும் அதை அற்புதமாக மிக மிக நேர்த்தியாக அறிமுகம் செய்த வை. கோ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அவ்வப்போது எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் விதமாக, ஒவ்வொரு பகுதியினிலும் தாங்கள் தந்துவரும் மிக அருமையான, மிக நீண்ட, ஆத்மார்த்தமான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   நாளையுடன் இந்த என் தொடர் நிறைவடைய உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். - அன்புடன் VGK

   Delete
  2. மனம் நெகிழ்ந்த தங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி, ரமணி சார்!

   Delete
 18. வண்ணநிலவன் கேள்விப்பட்டதுண்டு. துர்வாசர் என்று துக்ளக்கில் எழுதியதையும் வாசித்ததுண்டு...மற்றவற்றையும் இங்கு வாசிக்கின்றோம்..

  கலாபிரியா அறிந்ததில்லை. இப்போது தெரிந்து கொண்டுவிட்டோம்...பல அறியாதவர்களைத் தெரிந்துகொண்டுவிட்டோம்.

  இறுதியில் எஸ்ரா. நல்ல பரிச்சயம். அவரது தளம் வாசிக்கின்றோம்...சரி மீதி அவரைப் பற்றிய உங்கள் பதிவில்..
  மிக்க நன்றி சார்..தொடர்ந்து இத்தனை பேரையும் அறிமுகப் படுத்தி ஜீவி சார் அவர்களின் நூலிற்கு அறிமுகம் + விமர்சனமுமாக....அருமை..

  ReplyDelete
  Replies
  1. Thulasidharan V Thillaiakathu
   April 20, 2016 at 10:13 PM

   //வண்ணநிலவன் கேள்விப்பட்டதுண்டு. துர்வாசர் என்று துக்ளக்கில் எழுதியதையும் வாசித்ததுண்டு...//

   அவரை வண்ணநிலவனாக எனக்கும் தெரியாது. ஒரு காலத்தில் நான் தொடர்ந்து ’துக்ளக்’ வாசித்து வந்ததனால் எனக்கும் ‘துர்வாசர்’ என்பவரை மட்டுமே தெரியும். அவர்தான் இவர் என்பது இப்போது ஜீவி சார் நூல் மூலமே எனக்கும் தெரிய வந்தது.

   //மற்றவற்றையும் இங்கு வாசிக்கின்றோம்..// சரி.

   //கலாபிரியா அறிந்ததில்லை. இப்போது தெரிந்து கொண்டுவிட்டோம்...பல அறியாதவர்களைத் தெரிந்துகொண்டுவிட்டோம். //

   ஆம். தாங்கள் சொல்வது மிகவும் சரியே. எனக்கும் அதுபோலவேதான் ... இதில் பலரையும் ஏற்கனவே தெரியாது. இப்போது இந்த நூலின் மூலமாகக் கொஞ்சம் அறிந்து கொள்ள முடிந்துள்ளது.

   //இறுதியில் எஸ்ரா. நல்ல பரிச்சயம். அவரது தளம் வாசிக்கின்றோம்...சரி மீதி அவரைப் பற்றிய உங்கள் பதிவில்..//

   நாளை பகல் வேளையில் எனக்குக்கொஞ்சம் வெளி வேலைகள் இருப்பதால், திரு. எஸ்.ரா. அவர்களைப்பற்றிய பதிவு (அதாவது இந்தத்தொடரின் நிறைவுப்பகுதி) நாளை பொழுது விடிந்ததும் வெளியிடப்பட்டுவிடும்.

   //மிக்க நன்றி சார்..தொடர்ந்து இத்தனை பேரையும் அறிமுகப் படுத்தி ஜீவி சார் அவர்களின் நூலிற்கு அறிமுகம் + விமர்சனமுமாக....அருமை..//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

   Delete
 19. குருஜி மொதக போட்டோவுல இருக்க குருவில்லா..... அது என்னிய போல தீனி பண்டாரமா இருந்துகிடும்போல... தேடி தேடி இன்னாமோ துன்னுதே....... நா கோட ரெண்டு மணி நேரத்துக்கு ஒருக்கா எதியாவது வாயில போட்டு அரைச்சிகிட்டே கெடப்பேனாக்கும்.... எங்கட அம்மி கூவிகிட்டே கெடக்கும்... நா கண்டுகிடவே மாட்டேன்லா.... எனிக்கு பசியே பொறுத்துக்க ஏலாது...குருஜி..... அடுத்த படம் மைனாவா... குருவியா சொலிசொலிக்குது.செடியும் எலையும்...பூவும்கோட சொலிக்குது.... கீளாற ஒரு படத்துல குஞ்சுக்கு சோறூட்டுற பறவை அளகோ அளகு.....அம்புட்டுதேன்......

  ReplyDelete
  Replies
  1. mru April 22, 2016 at 10:21 AM

   வாங்கோ மின்னலு முருகு, வணக்கம்மா தாயே.

   //குருஜி மொதக போட்டோவுல இருக்க குருவில்லா..... அது என்னிய போல தீனி பண்டாரமா இருந்துகிடும்போல... தேடி தேடி இன்னாமோ துன்னுதே....... நா கோட ரெண்டு மணி நேரத்துக்கு ஒருக்கா எதியாவது வாயில போட்டு அரைச்சிகிட்டே கெடப்பேனாக்கும்.... எங்கட அம்மி கூவிகிட்டே கெடக்கும்... நா கண்டுகிடவே மாட்டேன்லா.... எனிக்கு பசியே பொறுத்துக்க ஏலாது...குருஜி.....//

   இந்த வயதில் நல்லா சாப்பிட்டு கொழு கொழுன்னுதான் இருக்கணும் முருகு. அப்போதுதான் ......... :)

   முதலில் கூழாங்கற்களின் மீது காட்டியுள்ள ஒற்றைக்குருவி இப்போது உள்ள விபரம் தெரியாத முருகுப்பொண்ணு.

   //அடுத்த படம் மைனாவா... குருவியா சொலிசொலிக்குது. செடியும் எலையும்... பூவும்கோட சொலிக்குது.... //

   அடுத்தபடத்தில் மின்னிடும் ஒரு ஜோடிப்பறவைகள், நம் மின்னலு முருகுவும் அவளின் ஹப்பியும் வரும் 03.07.2016 அன்று சேர்ந்து காட்சியளிக்கப்போகும் இனிய காட்சியாகும். :)))))

   அதன்பிறகு அந்த ஜோடி, ஜாலியாக வெளிநாட்டுக்குப் பறந்துபோய், தங்களின் கூட்டுக்குள் புகுந்து தனிமையில் குஜாலாகப்போகின்றன. :)

   //கீளாற ஒரு படத்துல குஞ்சுக்கு சோறூட்டுற பறவை அளகோ அளகு.....அம்புட்டுதேன்......//

   கீளாற அது குஞ்சுக்கு சோறூட்டலை. பூவிலிருந்து தேனினை உறிஞ்சி எடுக்குது.

   பூவிலிருந்து தேனினை உறிஞ்சி எடுப்பது என்றால் என்ன என்பதெல்லாம் உங்களுக்கு வரும் ஜூலை மாதம்தான் விளங்கிட ஏலும். :) அம்புட்டுதேன்.

   என் அட்வான்ஸ் நல் வாழ்த்துகள், மின்னலு முருகு.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கு மிக்க நன்றி, மின்னலு முருகு. - பிரியமுள்ள குருஜி.

   Delete
 20. வண்ணநிலவன் சமீபத்தில் படிக்கத் தொடங்கினேன். ஈர்க்கிறது.
  துர்வாசர் இவர்தானா? துக்ளக்கில் எழுதுகிறாரா? (அமா.. எவன்.. ஹிஹி.. யார் துக்ளக் படிக்கிறாங்க இப்பல்லாம்?)

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை April 23, 2016 at 10:06 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //வண்ணநிலவன் சமீபத்தில் படிக்கத் தொடங்கினேன். ஈர்க்கிறது.//

   ஆஹா ... சந்தோஷம்.

   //துர்வாசர் இவர்தானா? துக்ளக்கில் எழுதுகிறாரா?//

   அப்படீன்னு நம் ஜீவி சார், தனது நூலில் சொல்கிறார்.

   //(அமா.. எவன்.. ஹிஹி.. யார் துக்ளக் படிக்கிறாங்க இப்பல்லாம்?)//

   இதுபற்றி எனக்கும் சரிவரத் தெரியவில்லை. நான் இப்போதெல்லாம் ‘துக்ளக்’ படிப்பது இல்லை. - VGK

   Delete
 21. கவிதை சுத்தமா புரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை April 23, 2016 at 10:06 PM

   //கவிதை சுத்தமா புரியவில்லை.//

   என்ன சார் நீங்கள் ....

   கவிதைக்கும் எனக்கும், (இப்போதெல்லாம் மட்டும்) காத தூரமாக இருப்பினும், எனக்கே புரிவது போல சுலபமாக இருக்கிறது இந்தக்கவிதை.

   அப்படி இருக்கும் போது என் பார்வையில் மஹா அறிவாளியாகியத் தோன்றும் நீங்கள் ’சுத்தமா புரியவில்லை’ என்று ஏன் சொல்கிறீர்கள் என்று எனக்கும் சுத்தமா புரியவில்லை. :)

   எனினும் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

   Delete
 22. வண்ணநிலவனை விட துர்வாசரை மிகவும் பிடிக்கும். கலாப்ரியாவை அவ்வளவாக வாசித்ததில்லை. :)

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam April 24, 2016 at 9:32 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //வண்ணநிலவனை விட துர்வாசரை மிகவும் பிடிக்கும். கலாப்ரியாவை அவ்வளவாக வாசித்ததில்லை. :)//

   ஓக்கே. வெரி குட். தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, மேடம். - VGK

   Delete