About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, April 13, 2016

’துர்முகி’ தமிழ் புத்தாண்டு பலன்களுடன் .. ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 16’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி அவர்கள்.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  29) வித்தியாசமான 
விட்டல் ராவ் 
[பக்கம் 180 முதல் 184 வரை]எழுத்தாளர் விட்டல் ராவ் தொலைபேசி இலாகாவில் பணியாற்றியவராம்.


 

நமது ஜீவியும் அதே இலாகாவில். கேட்க வேண்டுமா?.. இரண்டு பேருக்கும் பொதுவான அம்சம் என்று அந்த இலாகாவில் நடந்த ஒரு பொது வேலை நிறுத்தத்தைப் பற்றி விட்டல ராவ் நாவல் எழுதியிருந்ததை சிலாகித்துச் சொல்கிறார் ஜீவி.

விட்டல் ராவின் 'நதிமூலம்' நாவல் மூன்று தலைமுறை பற்றியது. அந்தந்த காலத்து வாழ்க்கை, நடைபெற்ற சமூக, சரித்திர நிகழ்வுகள், நாவலில் எவ்வளவு அழகாக இடம் பெறுகின்றன என்று ஜீவி சொல்லும் பொழுது விட்டல்ராவின் எழுத்து மகிமை நமக்குத் தெரிகிறது.

இவரின் ‘போக்கிடம்’ என்ற புதினமும், ‘இன்னொரு தாஜ்மஹால்’ என்ற நாவலும், ’பேர் கொண்டான்’ என்ற சிறுகதையும், ‘வண்ண முகங்கள்’ என்ற நாடகமும், ‘ஓவியக்கலை உலகில்’; ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’ என்ற புத்தகங்களும் ஜீவியால் மிகவும் சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளன.    

’விட்டல் ராவ் கதைகள்’ என்ற தொகுப்பினைத்தவிர, பிறரின் கதைகளில் இவருக்குப் பிடித்தமானவற்றையெல்லாம் தொகுத்து ’இந்த நூற்றாண்டின் சிறுகதைகள்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளாராம். இரு தடவைகள் இலக்கிய சிந்தனை விருதும், கணையாழி + தினமணிகதிர் பரிசுகளும் பெற்றுள்ளாராம். 

’தமிழக கோட்டைகள்’ பற்றி விட்டல்ராவ் ஆவணப்படுத்தியிருக்கும் விஷயங்களை ஜீவியின் எழுத்துக்களில் படிக்கும் பொழுது நம்மால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

30) ’ஒரு மனிதனின் கதை’ 
சிவசங்கரி 
[பக்கம் 185 முதல் 187 வரை]
 


குடிப்பழக்கத்தின் தீமைகளைச் சுட்டிக்காட்டி சிவசங்கரி எழுதியிருந்த ‘ஒரு மனிதனின் கதை’ நாவல் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இது சிவசங்கரிக்கு எழுத்துலகில் பெயர் சம்பாதித்துத் தந்த நாவல் என்றும், பிறகு அதுவே தொலைகாட்சித் தொடராகவும் வெளியானது என்கிறார் ஜீவி.  

சிவசங்கரியின் ’நெருஞ்சி முள்’; ’மெல்ல மெல்ல’; ‘கப்பல் பறவை’; 'கருணைக்கொலை'; 'மலையின் அடுத்த பக்கம்'; திரிவேணி சங்கமம்; ’பாலங்கள்’; ‘நான் நானாக’; ‘தவம்’; ’நப்பாசை’; ’அவள்’; ‘அப்பா’ போன்ற நாவல்களை ஜீவி எடுத்துக் காட்டுகிறார். 

பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகிய ‘47 நாட்கள்’ சிவசங்கரியின் மறக்க முடியாத கதை. இவரது படைப்பான ‘ஒரு சிங்கம் முயலாகிறது’; ‘அவன், அவள், அது’ ஆகியவையும் திரைப்படமாகியது என்கிறார் ஜீவி. 

முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களையும், எராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள சிவசங்கரி இலக்கிய சிந்தனை விருதும், அவிஸ்திகா என்னும் கலைக்கான விருதும் பெற்றவர்.

இரண்டு பாரதப்பிரதமர்களையும், அன்னை தெரஸாவையும் பேட்டிகண்டு இவர் எழுதியுள்ள தொடர்கட்டுரைகள் பற்றியும் ஜீவி, அடிக்கோடிட்டு சிறப்பித்துச் சொல்லியுள்ளார். 

சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகளையும் எழுதியவர் சிவசங்கரி. அவரது 'சின்ன நூற்கண்டா நம்மை சிறைப்படுத்துவது' என்ற தற்சார்பு கட்டுரைகள் பற்றியும், இவர் நிறுவியுள்ள அக்னி (Awakened Groups for National Integration) என்னும் அமைப்பையும் ஜீவி தவறாமல் குறிப்பிடுகிறார். 

இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்


  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:     


  
   வெளியீடு: 15.04.2016 பிற்பகல் 3 மணிக்கு.
காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 


அனைவருக்கும் என் இனிய 
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

14.04.2016 வியாழக்கிழமை 
பிறக்கும் தமிழ் புத்தாண்டின் பெயர்: 
துர்(ன்)முகி

”துர்முகி” என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. “துர்முகி” என்றிருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு உள்ளது ! 

ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சுமம் அடங்கியுள்ளது. துர்முகி புத்தாண்டின் பெயரில்தான் அப்படி என்ன சூட்சுமம் உள்ளது என்பதைப் பார்ப்போம். 

”துர்முக” என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி தமிழ்ப்புத்தாண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. இந்த ஆண்டின் ராஜா: சுக்கிரன். 

இந்த ஆண்டு ராஜா சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கமும், அதிகாரமும் பெறுவது, கல்விக்கு அதிபதியான புதன் பகவான். இந்த ஆண்டுக்கான மந்திரி, ஸேனாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதி (PRIME MINISTER, COMMANDER-IN-CHIEF, LORD OF PULSES AND LORD OF CLOUDS) ஆகிய அனைத்துமே புதன் பகவானாகும். 

புதனின் அதிதேவதை ஸ்ரீ ஹயக்கீரீவர். ஞானம், கல்வி, அறிவாற்றல், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றை அளிப்பவர் இவர்தான்.  

இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஸ்ரீ ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்ட இருப்பதால், ஸ்ரீ ஹயக்ரீவ பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டுக்கு “துர்முகி” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.  

அதாவது பரி (குதிரை) முகத்தைக் கொண்டுள்ள ஸ்ரீ ஹயக்ரீவரின் அனுக்கிரஹத்தை அள்ளித்தரப் போகும் ஆண்டாகத் திகழப் போவதை ’துர்முகி’ என்ற பெயர் சூட்சுமமாக எடுத்துக்காட்டுகிறது.துர்முகி வருஷ கந்தாய பலன்கள் 
[ஒவ்வொருவர் நக்ஷத்திரத்திற்கும் தனித்தனியே]

{பாம்பு பஞ்சாங்கம் என்று அழைக்கப்படும், 
அசல் 28 ஆம் நம்பர் வாக்கிய பஞ்சாங்கத்தில் 
10 ஆம் பக்கத்தில் கீழ்க்கண்ட விஷயங்கள் அச்சிடப்பட்டுள்ளன}

அஸ்வினி 7-1-1                  மகம் 2-1-3                  மூலம் 5-1-0
பரணி 2-2-4                          பூரம் 5-2-1                   பூராடம் 0-2-3
கார்த்திகை 5-0-2               உத்திரம் 0-0-4            உத்ராடம் 3-0-1
ரோஹினி 0-1-0                  ஹஸ்தம் 3-1-2         திருவோணம் 6-1-4 
மிருகசீர்ஷம் 3-2-3            சித்திரை 6-2-0           அவிட்டம் 1-2-2
திருவாதரை 6-0-1             ஸ்வாதி 1-0-3            சதயம் 4-0-0
புனர்பூசம் 1-1-4                  விசாகம் 4-1-1           பூரட்டாதி 7-1-3
பூசம் 4-2-2                            அனுஷம் 7-2-4         உத்ரட்டாதி 2-2-1
ஆயில்யம் 7-0-0                 கேட்டை 2-0-2          ரேவதி 5-0-4

முதல் 0 க்கு, முதல் 4 மாதங்களுக்கு வியாதியும்
இரண்டாவது 0 க்கு, அடுத்த 4 மாதங்கள் வரை பயமும்
மூன்றாவது 0 க்கு, கடைசி 4 மாதங்கள் கடனும் ஏற்படுமாம்.

ஒற்றைப்படை இலக்கமாயின் தன லாபமாம்.

இரட்டைப்படை இலக்கமாயின் 
லாப நஷ்டங்கள் / வரவு செலவுகள் சமமாக இருக்குமாம்.

மூன்றிலும் பூஜ்யமாகின் நிஷ்பலனாம்.

மூன்றிலும் பூஜ்யம் இல்லாமல் இருப்பது நன்மையாம்.

இதிலிருந்து தெரியவருவது :-

அஸ்வினி + பூரட்டாதி ஆகிய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தப் புதிய 
“துர்முகி” ஆண்டில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்!

பரணி, மிருகசீர்ஷம், புனர்பூசம், பூசம், மகம், பூரம், ஹஸ்தம், விசாகம், அனுஷம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகிய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களும் அதிர்ஷ்டசாலிகளே!! 

[மற்ற நக்ஷத்திரக்காரர்களுக்கு ஏதாவது ஒரு நாலு மாதமாவது கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம் எனத்தெரிகிறது. பிறகு அதுவே அவர்களுக்கு பழகிவிடலாம். அல்லது அதன் பிறகு சுகம் ஏற்படலாம். அதனால் யாரும் எதற்கும் கவலையே பட வேண்டாம்.]

oooooooOooooooo


என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)

60 comments:

 1. நிறைய அரிய விடயங்கள் அறிந்தேன் நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. KILLERGEE Devakottai April 13, 2016 at 4:48 PM
   நிறைய அரிய விடயங்கள் அறிந்தேன் நன்றி ஐயா.//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 2. விட்டல் ராவ் படித்ததில்லை.

  சிவசங்கரி படித்திருக்கிறேன். குறிப்பாய் ஒரு மனிதனின் கதை. மேலும் சில சிறுகதைகள். இவருடைய ஒரு முத்திரை வார்த்தை 'ஒரு தினுசாய்' இவர் படைப்பைப் படித்தீர்களானால் எங்காவது இரு முறையாவது இந்த வார்த்தை வந்து விடும். இவர் வளர்த்த நாய் பற்றிய ஒரு சம்பவம் உருக்கமாக இருக்கும்.

  தஞ்சையில் நாங்கள் குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரரின் மருமகள் அவர் என்பதால் ஓரிருமுறை நேரில் பார்த்துப் பேசியிருக்கிறேன்.

  உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். April 13, 2016 at 4:55 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

   //விட்டல் ராவ் படித்ததில்லை.//

   இதை என்னால் கொஞ்சம்கூட நம்ப முடியவில்லை, ஸ்ரீராம்.

   அவர் படிக்காமல் எப்படி தொலைபேசித்துறையில் (BSNL) நம் ஜீவி சாருடன் சேர்ந்து வேலை செய்திருக்க முடியும்? :))))

   //சிவசங்கரி படித்திருக்கிறேன். குறிப்பாய் ஒரு மனிதனின் கதை. மேலும் சில சிறுகதைகள்.//

   மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம்.

   //இவருடைய ஒரு முத்திரை வார்த்தை 'ஒரு தினுசாய்' இவர் படைப்பைப் படித்தீர்களானால் எங்காவது இரு முறையாவது இந்த வார்த்தை வந்து விடும்.//

   ஒருவேளை ஒரு தினுசானவராக இருப்பாரோ? நானும் ’ஒரு தினுசாய்’ இவருடைய கதைகளை இதுவரைப் படிக்காமலேயே ஓட்டிவிட்டேன். :)

   //இவர் வளர்த்த நாய் பற்றிய ஒரு சம்பவம் உருக்கமாக இருக்கும்.//

   எனக்கென்னவோ நாய்களையும், நாய்களைக் கொஞ்சிக்கொண்டு வளர்ப்பவர்களையும் (பூனை போன்ற இதர பெட் அனிமல்ஸ்கூட) பிடிப்பது இல்லை.

   இதன் பின்னனியில், எனக்கு மிகச்சிறு வயதில் ஏற்பட்ட (நாய் என்னைத் துரத்திய) ஓர் அனுபவமும், பிறகு இப்போது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் என் தூரத்து உறவினரும், என் சம வயது நண்பருமான ஒருவருக்கு நாய்க்கடியினால் ஏற்பட்ட அகால மரணமும் அடங்கியுள்ளது.

   அதனால் என்னதான் இவர் வளர்த்த நாய் பற்றிய ஒரு சம்பவம் உருக்கமாக இருந்தாலும் நான் அதைப் படிப்பதாக இல்லை.

   //தஞ்சையில் நாங்கள் குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரரின் மருமகள் அவர் என்பதால் ஓரிருமுறை நேரில் பார்த்துப் பேசியிருக்கிறேன்.//

   நானும் ஒரேயொரு முறை நேரில் பார்த்துள்ளேன். ஆனால் நான் அவர்களுடன் பேசியது இல்லை. அவர்களின் பேச்சினை மட்டும் கேட்டுள்ளேன்.

   அதாவது, நான் BHEL இல் பணியாற்றும்போது, 2005 or 2006 என்று ஞாபகம். ஒருநாள் அலுவலக நேரத்திலேயே ஒரு சிறிய விழா நிகழ்ச்சி (மீட்டிங் போல ஒரு 300 பேர்கள் அமரும் மிகப்பெரிய ஏ.ஸி. கான்பரன்ஸ் ஹாலில்) நடைபெற்றது. இலக்கிய சம்பந்தமான அந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சிவசங்கரி மேடம் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

   நானும், என்னுடன் கூடவே சேர்ந்து அப்போது வேலை பார்த்துவந்த நம் திரு. ரிஷபன் சார் போன்ற ஒருசில BHEL எழுத்தாள நண்பர்களும் சென்றிருந்தோம்.

   எழுத்தாளர் சிவசங்கரி அவர்களை நேரில் சந்திக்கவும், அவர்களின் பேச்சை சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் கேட்கவும் எங்களுக்கு அன்று ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்தது.

   //உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

   மிக்க நன்றி, ஸ்ரீராம். - அன்புடன் VGK

   Delete
  2. விட்டல் ராவ் படித்ததில்லை.//

   இதை என்னால் கொஞ்சம்கூட நம்ப முடியவில்லை, ஸ்ரீராம்.

   அவர் படிக்காமல் எப்படி தொலைபேசித்துறையில் (BSNL) நம் ஜீவி சாருடன் சேர்ந்து வேலை செய்திருக்க முடியும்? :))))//

   ஹா.... ஹா.... ஹா.... ஸார்! படுத்தாதீங்க.... சிரிச்சு மாளலை!

   Delete
  3. ஸ்ரீராம். April 14, 2016 at 11:44 AM

   //ஹா.... ஹா.... ஹா.... ஸார்! படுத்தாதீங்க.... சிரிச்சு மாளலை!//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
   சிரித்து வாழவேண்டும். :)))))))))))))))))

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   Delete
 3. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

  காலையில தான் துர்முகி என்றால் என்ன அர்த்தம்...அப்படின்னு நினைத்தேன். கோமுகி மாதிரி நல்ல தாகத்தான் இருக்கும் அப்படின்னும் நினைத்துக் கொண்டு விட்டு விட்டேன்.

  நீங்க அழகாக விளக்கம் கொடுத்து அசத்திட்டீங்க. நன்றிகள் பல.

  விட்டல் ராவின் எழுத்துக்களை வாசித்தது இல்லை.

  சிவசங்கரியின் நாவல்,சிறுகதைகளை வாசித்து இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. R.Umayal Gayathri April 13, 2016 at 5:35 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.//

   மிக்க நன்றி, மேடம்.

   //காலையில தான் துர்முகி என்றால் என்ன அர்த்தம்... அப்படின்னு நினைத்தேன். கோமுகி மாதிரி நல்ல தாகத்தான் இருக்கும் அப்படின்னும் நினைத்துக் கொண்டு விட்டு விட்டேன்.

   நீங்க அழகாக விளக்கம் கொடுத்து அசத்திட்டீங்க. நன்றிகள் பல.//

   காலை முதல் மதியம் வரை எனக்கு பல இதர வேலைகள் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அந்தப் புத்தாண்டு பற்றியத் தகவல்களை நான் மிகவும் தாமதமாகத் திரட்டி (3 to 4 PM Only) இந்தப்பதிவினில் சேர்த்து வெளியிட விரும்பியதால், இந்தப்பதிவினை வெளியிடுவதில் ஷெட்யூல்டு டயத்துக்கு மேல் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது.

   //விட்டல் ராவின் எழுத்துக்களை வாசித்தது இல்லை.//

   நல்லது. நானும் அவரின் எழுத்துக்களை வாசித்தது இல்லை.

   //சிவசங்கரியின் நாவல்,சிறுகதைகளை வாசித்து இருக்கிறேன்.//

   வெரி குட்.

   தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, மேடம். - VGK

   Delete

 4. இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திரு விட்டல் ராவ் அவர்கள் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இவரது படைப்புகளை இனிதான் படிக்கவேண்டும்.

  திருமதி சிவசங்கரி அவர்களின் ‘நண்டு’ படைப்பை படித்திருக்கிறேன். இதுவே பின்னர் இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது 'சின்ன நூற்கண்டா நம்மை சிறைப்படுத்துவது' என்ற படைப்பையும் படித்திருக்கிறேன். எனக்குப் பீத்த்ட எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இருவரையும் அறிமுகப்படுத்திய திரு ஜீவி அவர்களுக்கும், தங்களுக்கும் நன்றி!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  புத்தாண்டு பலன்களை சொன்னதற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி April 13, 2016 at 5:36 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திரு.விட்டல் ராவ் அவர்கள் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இவரது படைப்புகளை இனிதான் படிக்கவேண்டும். //

   அப்படியா, சரி .... சார்.

   //திருமதி சிவசங்கரி அவர்களின் ‘நண்டு’ படைப்பை படித்திருக்கிறேன். இதுவே பின்னர் இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது.//

   ஓஹோ, அப்படியா, நல்லது.

   //'சின்ன நூற்கண்டா நம்மை சிறைப்படுத்துவது' என்ற படைப்பையும் படித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.//

   மிக்க மகிழ்ச்சி, சார்.

   //இருவரையும் அறிமுகப்படுத்திய திரு ஜீவி அவர்களுக்கும், தங்களுக்கும் நன்றி!

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!//

   மிகவும் சந்தோஷம். நன்றி, சார்.

   //புத்தாண்டு பலன்களை சொன்னதற்கு நன்றி!//

   அவையெல்லாம் எங்கெங்கோ நான் திரட்டித் தொகுத்துள்ள செய்திகள் சார். என் சொந்தச் சரக்கும் இல்லை. எனக்கு இதிலெல்லாம் முழுவதுமாக நம்பிக்கையும் இல்லை. ஒரேயடியாக ஒட்டுமொத்தமாக நம்பிக்கையில்லாமலும் இல்லை. ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் மட்டுமே நான். ஏதோ ஓரளவு என்னதான் சொல்லியுள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் மட்டும், மற்றவர்களைப்போல எனக்கும் கொஞ்சம் உண்டு.

   தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான பல செய்திகள் + கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   Delete
 5. எனக்குப் பிடித்த என படிக்கவும்.தட்டச்சும்போது தவறு ஏற்பட்டுவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி April 13, 2016 at 6:33 PM
   எனக்குப் பிடித்த என படிக்கவும். தட்டச்சும்போது தவறு ஏற்பட்டுவிட்டது.//

   OK Sir .... Understood. - vgk

   Delete
 6. விட்டல்ராவ் அவர்களின் கதைகளைப் படித்துள்ளேன்
  ஆனால் மிகச் சரியாக சொல்லும்படியாக
  நினைவில் இல்லாது போனது வருத்தமாய் உள்ளது

  பெண் எழுத்தாளர்களில் நான் படிக்கத் துவங்கியது
  லெட்சுமி,அனுத்தமா, ஜோதிர் லதா கிரிஜா எனத் தொடர்ந்தாலும்
  பிரச்சனைகளை மையப்படுத்தி மிகச் சிறப்பாக எழுதிப் போகும்
  எழுத்தாளர் என்கிற வகையில் சிவசங்கரி அவர்களின்
  படைப்புகள் ரொம்பப் பிடிக்கும்

  பள்ளி ,கல்லூரிகளில் எங்கள் இயக்கத்தின் சார்பாக
  நடத்தப்படும் போட்டிகளுக்குப் பரிசு கூடுமானவரையில்
  புத்தகங்களாகத்தான் இருக்கும்

  அந்தப் பட்டியலில் சிவ சங்கரி அவர்களின்
  சின்ன நூற்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது
  என்கிற நூல் அவசியம் இருக்கும்

  அற்புதமான எழுத்தாளர்களை மிக மிக
  நேர்த்தியாக அறிமுகம் செய்துள்ளதை
  சாம்பிள் காட்டி நிச்சயம் படிக்க வேண்டும்
  என்கிற உணர்வினை அனைவருக்கும் ஏற்படுத்திப் போகும்
  இந்தத் தொடர் மிகவும் பயனுள்ள தொடர்

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Ramani S April 13, 2016 at 7:00 PM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

   //விட்டல்ராவ் அவர்களின் கதைகளைப் படித்துள்ளேன். ஆனால் மிகச் சரியாக சொல்லும்படியாக நினைவில் இல்லாது போனது வருத்தமாய் உள்ளது.//

   நிறைய படிக்கும்போது இதெல்லாம் மிகவும் சகஜம்தான் சார். இதற்காக வருத்தப்பட ஒன்றும் இல்லை. ஒருவேளை, அவரின் படைப்புக்கள் மிகச் சரியாக நினைவுகூர்ந்து சொல்லும்படியாக, தங்களின் மனதில் பதியாமலும் இருந்திருக்கலாம்.

   //பெண் எழுத்தாளர்களில் நான் படிக்கத் துவங்கியது லெட்சுமி, அனுத்தமா, ஜோதிர் லதா கிரிஜா எனத் தொடர்ந்தாலும் பிரச்சனைகளை மையப்படுத்தி மிகச் சிறப்பாக எழுதிப் போகும் எழுத்தாளர் என்கிற வகையில் சிவசங்கரி அவர்களின் படைப்புகள் ரொம்பப் பிடிக்கும்.//

   மிகவும் சந்தோஷம், சார்.

   //பள்ளி ,கல்லூரிகளில் எங்கள் இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் போட்டிகளுக்குப் பரிசு கூடுமானவரையில் புத்தகங்களாகத்தான் இருக்கும். அந்தப் பட்டியலில் சிவ சங்கரி அவர்களின் ’சின்ன நூற்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது’ என்கிற நூல் அவசியம் இருக்கும்.//

   ஆஹா, மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள், சார். போட்டிகளுக்குப் பரிசாக புத்தகங்களாக அளிப்பதால்தான், புத்தகங்கள் பலரையும் சென்றடைகின்றன. அதே சமயம் புத்தக வியாபாரம் பெருகவும் இது ஒருவிதத்தில் உதவுகிறது. இரட்டிப்புப் பயனாக அமைகிறது.

   //அற்புதமான எழுத்தாளர்களை மிக மிக நேர்த்தியாக அறிமுகம் செய்துள்ளதை சாம்பிள் காட்டி நிச்சயம் படிக்க வேண்டும் என்கிற உணர்வினை அனைவருக்கும் ஏற்படுத்திப் போகும் இந்தத் தொடர் மிகவும் பயனுள்ள தொடர். பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அருமையான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

   Delete
 7. பள்ளிப் பருவத்தில் விகடனில் வந்த 'ஒரு மனிதனின் கதை' தொடரை வாரம் தவறாமல் காத்திருந்து படித்திருக்கிறேன். பின் அவற்றை தொகுத்து பைண்ட் செய்து மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன். அதேபோல் 'சின்ன நூற்கண்டா நம்மை சிறைப்படுத்துவது' என்ற தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளையும் விரும்பி படித்திருக்கிறேன். விட்டல் ராவ் எனக்கு அறிமுகம் இல்லை. தங்கள் பதிவின் மூலமே அறிந்துகொண்டேன்.
  பகிர்வுக்கு நன்றி அய்யா!

  ReplyDelete
  Replies
  1. S.P.SENTHIL KUMAR April 13, 2016 at 7:33 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பள்ளிப் பருவத்தில் விகடனில் வந்த 'ஒரு மனிதனின் கதை' தொடரை வாரம் தவறாமல் காத்திருந்து படித்திருக்கிறேன். பின் அவற்றை தொகுத்து பைண்ட் செய்து மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன். அதேபோல் 'சின்ன நூற்கண்டா நம்மை சிறைப்படுத்துவது' என்ற தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளையும் விரும்பி படித்திருக்கிறேன்.//

   ஆஹா, இவற்றையெல்லாம் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. அந்த இளம் வயதிலேயே தங்களின் வாசிப்பு ஆர்வத்தினை அறிய முடிகிறது.

   //விட்டல் ராவ் எனக்கு அறிமுகம் இல்லை. தங்கள் பதிவின் மூலமே அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி ஐயா!//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

   Delete
 8. அருமையான அறிமுகம்
  தொடருங்கள் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. Ajai Sunilkar Joseph April 13, 2016 at 11:06 PM

   //அருமையான அறிமுகம். தொடருங்கள் நண்பரே....//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   Delete
 9. அன்புசால் V.G.K அவர்களுக்கு வணக்கம்! எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ’துர்முக’ என்பதன் விளக்கம் தொடங்கி சுக்கிரன் பற்றிய தகவலுக்கு நன்றி. எனது தாத்தாவின் (அம்மாவின் அப்பா) பெயர் சுக்கிரன். தாத்தா நல்லதே செய்வார்.


  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ April 14, 2016 at 7:21 AM

   //அன்புசால் V.G.K அவர்களுக்கு வணக்கம்! எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!//

   வாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள், சார்.

   //’துர்முக’ என்பதன் விளக்கம் தொடங்கி சுக்கிரன் பற்றிய தகவலுக்கு நன்றி. எனது தாத்தாவின் (அம்மாவின் அப்பா) பெயர் சுக்கிரன். தாத்தா நல்லதே செய்வார்.//

   ஆஹா, அருமையான பெயர். கண்டிப்பாக அவர் நல்லதேதான் செய்வார்.

   அதிர்ஷ்டசாலியாக இருப்பவர்களைப் பார்த்து அவருக்கு என்ன .... சுக்கிரதசை அடிக்கிறது என்றுகூட சிலர் சொல்வார்களே. :)

   தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, சார்.

   அன்புடன் VGK

   Delete
 10. மதிப்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு,
  அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜூ April 14, 2016 at 9:01 AM

   வாங்கோ பிரதர், வணக்கம்.

   //மதிப்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு,
   அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. தங்களுக்கும் என் அன்பு நல்வாழ்த்துகள்.

   Delete
 11. கோபு சாருக்கு இனிய தமிழ் புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. G.M Balasubramaniam April 14, 2016 at 3:29 PM

   //கோபு சாருக்கு இனிய தமிழ் புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்//

   வாங்கோ சார், நமஸ்காரங்கள் + வணக்கம் சார்.

   தங்களின் அன்பான வருகைக்கும் இனிய தமிழ் புத்தாண்டு தின நல் வாழ்த்துகளுக்கும் நன்றி, சார்.

   அன்புடன் கோபு

   Delete
 12. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  புத்தாண்டு பலன்கள்

  மற்ற நக்ஷத்திரக்காரர்களுக்கு ஏதாவது ஒரு நாலு மாதமாவது கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம் எனத்தெரிகிறது. பிறகு அதுவே அவர்களுக்கு பழகிவிடலாம். அல்லது அதன் பிறகு சுகம் ஏற்படலாம். அதனால் யாரும் எதற்கும் கவலையே பட வேண்டாம்.]//

  இன்பமும்,துன்பமும் மாறி மாறி வருவது இயல்புதானே! நீங்கள் சொல்வது போல் பழகி விடும்.


  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு April 14, 2016 at 4:03 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

   :) மிக்க மகிழ்ச்சி + நன்றி.

   **புத்தாண்டு பலன்கள்:-
   =========================
   மற்ற நக்ஷத்திரக்காரர்களுக்கு ஏதாவது ஒரு நாலு மாதமாவது கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம் எனத்தெரிகிறது. பிறகு அதுவே அவர்களுக்கு பழகிவிடலாம். அல்லது அதன் பிறகு சுகம் ஏற்படலாம். அதனால் யாரும் எதற்கும் கவலையே பட வேண்டாம்.]**

   //இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவது இயல்புதானே! நீங்கள் சொல்வது போல் பழகி விடும்.//

   இயல்பான தங்களின் கருத்துக்கள் போல, எல்லாமே இதற்குள் நமக்கு நன்கு பழகிப்போய்தான் இருக்கும்.

   இருப்பினும், இனி என்ன புதிதாக இன்பமோ துன்பமோ ஏற்பட்டுவிடப் போகிறது எனவும், நம்மால் பேசாமல், சும்மா இருக்க முடிவது இல்லை.

   இவற்றையெல்லாம் ஏதோ ஜோஸ்யம் கேட்பதுபோல கேட்டுக்கொண்டு, நினைத்துக்கொண்டு, உடனே மறந்துவிட வேண்டும்.

   கடைசியாக எல்லாம் அவன் செயல் ... நம்மால் எதையும் மாற்றிவிட முடியாது ... நடப்பதுதான் நடக்கும் ... என நம் மனதை நாமே ஆறுதல் படுத்திக்கொள்ளத்தான் வேண்டியதுதான். :)

   VGK

   Delete
 13. திரு .விட்டல்ராவ் கதைகள் படித்தது இல்லை. ஜீவி சார் மூலம் தெரிந்து கொண்டேன். திருமதி . சிவசங்கரி அவர்களின் கதைகள் எல்லாம் படித்து இருக்கிறேன். சில கதைகள் பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன். இவரின் கட்டுரைகள், பேட்டிகள் எல்லாம் படித்து இருக்கிறேன்.நல்ல எழுத்தாளர்.
  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு April 14, 2016 at 4:06 PM

   வாங்கோ .....

   //திரு .விட்டல்ராவ் கதைகள் படித்தது இல்லை. ஜீவி சார் மூலம் தெரிந்து கொண்டேன். திருமதி . சிவசங்கரி அவர்களின் கதைகள் எல்லாம் படித்து இருக்கிறேன். சில கதைகள் பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன். இவரின் கட்டுரைகள், பேட்டிகள் எல்லாம் படித்து இருக்கிறேன். நல்ல எழுத்தாளர்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், சிறப்பான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். VGK

   Delete
 14. சிவசங்கரி அவர்களின் கதைகளைப் படித்திருக்கிறேன். விட்டல்ராவ் கதைகளைப் படித்ததில்லை. புத்தக அறிமுகத்துடன் புத்தாண்டு பலன்களையும் சொல்லி விட்டீர்கள். துர்முகி என்றால் என்ன அர்த்தம் என்றும் தெரிந்து கொண்டேன். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்!

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி April 14, 2016 at 4:08 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //சிவசங்கரி அவர்களின் கதைகளைப் படித்திருக்கிறேன்.//

   மிகவும் சந்தோஷம்.

   //விட்டல்ராவ் கதைகளைப் படித்ததில்லை.//

   விட்டல் ராவ் கதைகளை நம்மில் பலரும் படிக்காதது, விட்டகுறை தொட்டகுறைபோல் ஆகிவிட்டதோ என்னவோ! :)

   //புத்தக அறிமுகத்துடன் புத்தாண்டு பலன்களையும் சொல்லி விட்டீர்கள். துர்முகி என்றால் என்ன அர்த்தம் என்றும் தெரிந்து கொண்டேன்.//

   ஏதேதோ செய்திகளை எங்கிருந்தெல்லாமோ அவசர அவசரமாக, நேற்று 3 PM to 4 PM, சேகரித்து ஒருங்கிணைத்துக் கொடுத்துள்ளேன்.

   9th APRIL 2012 அன்று ‘நந்தன’ வருஷப்பிறப்பினை பொறுமையாக, சற்றே விபரமாக, விளக்கமாக, தனிப் பதிவாகக் கொடுத்திருந்தேன். அதில் நான் கடைசியாகச் சொல்லியிருந்த ’சென்னை நந்தனத்திற்கு இன்று வயது அறுபது’ என்ற செய்தி பெரும்பாலும் அனைவரையும் மிகவும் கவர்வதாக இருந்தது.

   http://gopu1949.blogspot.in/2012/04/blog-post_09.html

   //உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - நன்றியுடன் கோபு.

   Delete
 15. தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. Saratha J April 14, 2016 at 6:07 PM

   //தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்.//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி

   Delete
 16. கோபு சாருக்கும் இந்த 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' நூல் அறிமுகப் பதிவுகளுக்கு தவறாமல் வந்து தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு வரும் அன்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  தொடர்ந்து இந்த நூலுக்கான எல்லாப் பின்னூட்டங்களையும் தவறாது நான் படித்து வருகிறேன். இந்த வாசிப்பு, இந்த எழுத்தாளர்களின் நூல்களை வாசித்தவர்களின், வாசிக்காதவர்களில் கலந்தபட்ட எண்ணங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவான தளமாக அமைந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 1900-த்தில் பிறந்த ந.பிச்சமூர்தியிலிருந்து 1956-ல் ஜனித்த எஸ்.ரா.வரை அவர்களின் வயது மூப்பு அடிப்படையில் இந்த நூல் தொகுக்கப்பட்டிருப்பதால், அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை என்று சொல்வார்களே, அதை அனுபவத்தில் உணருகிற மாதிரி ஒரு தலைமுறை தாண்டி இந்தக் காலத்திற்கு நெருங்குவதின் உணர்வு, இந்தப் பகுதியில் பதியப்படும் பின்னூட்டங்களின் வாயிலாக உணர முடிகிறது. வாசகர்களின் எண்ணங்கள் அற்புதமான மனப் பதிவுகளாக இந்த பதிவுகளில் பதியப்பட்டிருக்கிறது.

  இதற்கு முன்பு கோபு சார் நாற்பது சிறுகதைகளுக்கான சிறுகதை விமரிசனப் போட்டி ஒன்றை நடத்தி பரிசுகளை வழங்கி வலையுலகில் யாரும் செய்திராத ஒரு தடம் பதித்தாரே அந்த வரலாற்று நிகழ்வு போல தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய இந்த நூலுக்கான இந்தத் தொடர் பதிவுகளும் வலையுலகில் இதுவரை யாரும் நினைத்துக் கூடப் பார்த்திராத ஒரு நிகழ்வு தான். தொடர்ந்து இப்படியான சாதனைகளை வலையுலகில் செய்து வரும் கோபு சாரின் அரும் பணிகளை நினைத்தாலே பெருமிதமாக இருக்கிறது.

  தான் எழுதிய ஒரு நூலுக்கு இப்படியான ஒரு அறிமுகமும் வாசக ஆதரவும் கிடைப்பது ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்தற்கரிய அனுபவம். இந்த அனுபவம் எனது அடுத்த நூலை அமைப்பதற்கு பெரிதும் உதவுகிற சக்தியாய் இருக்கும்.

  இந்த கிடைத்தற்கரிய அனுபவத்தை சாத்தியமாக்கிய கோபு சாருக்கும், இந்த தொடர் பதிவுகளை வாசித்துப் பின்னூட்டமிடும் அன்பர்களுக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி.
  அன்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  நன்றி, நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. ஜீவி April 14, 2016 at 10:17 PM

   வாங்கோ ஸார், தங்களுக்கு என் தமிழ்ப் புத்தாண்டு நமஸ்காரங்களும் வணக்கங்களும்.

   தங்களின் மிக நீண்ண்ண்ண்ண்ட பின்னூட்டம் ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக உள்ளது. மிக்க நன்றி, ஸார்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 17. இன்றய அறிமுகங்களில் சிவசங்கரி மேடம் கேள்வி பட்டிருக்கேன். படித்ததில்ல.. இன்னொருவரைப்பற்றி தெரியல......47-- நாட்கள் சினிமா பத்தி ஃபரெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க.....

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. April 15, 2016 at 9:37 AM

   வாங்கோம்மா, வணக்கம்மா.

   //இன்றைய அறிமுகங்களில் சிவசங்கரி மேடம் கேள்வி பட்டிருக்கேன்.//

   சந்தோஷம். :)

   //படித்ததில்ல..//

   பரவாயில்லை.

   //இன்னொருவரைப்பற்றி தெரியல......//

   அதனால் பரவாயில்லை. நம் எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

   //47-- நாட்கள் சினிமா பத்தி ஃபரெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க.....//

   அப்படியா! மிக்க மகிழ்ச்சி.

   தங்களின் அன்பான வருகைக்கும், மு-த்-தா-ன, சத்தான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 18. சிவசங்கரி மேடம் நாவல்கள் படத்திருக்கேன்... சின்ன நூற் கண்டா .......... பலமுறை படித்து ரஸித்த புக்.. பின்னூட்டத்தில் ஜி. வி. ஸார் அழகாக கருத்து சொல்லி இருக்காங்க......

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் April 15, 2016 at 9:55 AM

   வாங்கோம்மா, வணக்கம்மா, செளக்யமா சந்தோஷமா நல்லா இருக்கீங்களா?

   //சிவசங்கரி மேடம் நாவல்கள் ப-டி-த்திருக்கேன்... //

   மிகவும் சந்தோஷம்மா.

   //சின்ன நூற் கண்டா .......... பலமுறை படித்து ரஸித்த புக்..//

   அது ‘சின்ன நூற்கண்டாக’ இருந்ததனால் பலமுறை அதைப் பிரித்துப் படித்து, திரும்ப நூற்கண்டைச் சுற்றி வைத்திருப்பீர்களோ என நினைக்கத் தோன்றுகிறது :)

   //பின்னூட்டத்தில் ஜி. வி. ஸார் அழகாக கருத்து சொல்லி இருக்காங்க......//

   மிக்க மகிழ்ச்சிம்மா.

   தங்களின் அன்பு வருகைக்கும், அழகுக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 19. பின்னூட்டத்தில் ஜி.வி. ஸாரின கருத்துகள் ரொம்ப நல்லா சொல்லி இருக்காங்க.. சிவசங்கரி மேடம் கதைகள் படித்திருக்கேன். இன்னொருவரை தெரிந்திருக்கவில்லை....

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... April 15, 2016 at 10:14 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பின்னூட்டத்தில் ஜீ.வி. ஸாரின் கருத்துகள் ரொம்ப நல்லா சொல்லி இருக்காங்க..//

   அச்சா, பஹூத் அச்சா !

   //சிவசங்கரி மேடம் கதைகள் படித்திருக்கேன். இன்னொருவரை தெரிந்திருக்கவில்லை....//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 20. அனேக மாக சிவசங்கரி மேடம் கதைகள் கட்டுரைகள் எல்லாமே படித்து ரசித்த அனுபவம் இருக்கு.. இன்னொருவரை படித்ததில்ல. ஜி.வி. ஸாரின் பின்னூட்ட கருத்துகள் ரொம்ப நல்லா இருக்கு.. அது போல நீங்க ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் ரிப்ளை பின்னூட்டங்களும் சுவாரசியமாக இருக்கு......

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... April 15, 2016 at 10:25 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அனேகமாக சிவசங்கரி மேடம் கதைகள் கட்டுரைகள் எல்லாமே படித்து ரசித்த அனுபவம் இருக்கு.. //

   அப்படியா, வெரி குட்.

   //இன்னொருவரை படித்ததில்ல.//

   அதனால் பரவாயில்லை, விடுங்கோ.

   //ஜீ.வி. ஸாரின் பின்னூட்ட கருத்துகள் ரொம்ப நல்லா இருக்கு..//

   அப்படியா ! அவர் எப்போதுமே தன் கருத்துக்கள் எதையுமே பொறுமையாகவும், மிக அருமையாகவும் எழுதக்கூடியவர்தான். ஆனால் நம்மில் மிகச்சிலரால் மட்டுமே அவற்றை நன்கு புரிந்து ரஸிக்க முடியும்.

   //அது போல நீங்க ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் ரிப்ளை பின்னூட்டங்களும் சுவாரசியமாக இருக்கு....//

   அடடா, இங்கு திருச்சியில் கொளுத்தும் அதிகபக்ஷ 105-106 டிகிரி மிகக்கடுமையான வெயிலுக்கு, தாங்கள் சொல்லும் இது கொஞ்சம் ஜில்லுன்னு இருக்குது. :)

   தங்களின் அன்பு வருகைக்கும், ஜோரான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 21. குருஜி.. இன்னக்கி போட்டோ படம் தூள் கெளப்புது கலரு கலரா பூவூக.. பச்ச பசேலுனு பார்க்கு. வாரீகளா அங்கிட்டு போயி சூரல் நாக்காலில குந்திகிட்டு அலப்பர பண்ணிபோடலாம்...

  ReplyDelete
  Replies
  1. mru April 15, 2016 at 10:32 AM

   வாங்கோ தாயீ, வணக்கம்.

   //குருஜி.. இன்னக்கி போட்டோ படம் தூள் கெளப்புது கலரு கலரா பூவூக.. பச்ச பசேலுனு பார்க்கு.//

   தங்களின் இந்த ஸ்பெஷல் ரசனைக்கு என் பாராட்டுகள், முருகு.

   //வாரீகளா அங்கிட்டு போயி சூரல் நாக்காலில குந்திகிட்டு அலப்பர பண்ணிபோடலாம்...//

   ’அலப்பர பண்ணிபோடலாம்’ ன்னா என்ன முருகு? எனக்கு ஒன்னும் வெளங்கலையே முருகு.

   சூரல் நாற்காலி பற்றி நீங்க நல்லா விளங்கிக்கிட்டீங்க.

   இந்த ’அலப்பர பண்றது’ பற்றி எனக்கு விளக்கிச்சொல்லுங்கோ, முருகு. அதுபற்றி முழுவதும் தெரிந்துகொண்டால் தானே என்னால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல ஏலும். :)

   நானாக ஏதேனும் தப்பா புரிஞ்சிக்கிட்டு, பதில் தருவது ஆழம் தெரியாமல் ஆற்றில் இறங்கின கதையாகி விடுமே முருகு.

   நம் டீச்சர் அம்மா இங்கு வந்து விளக்குவாங்கன்னு பார்த்தா, அவங்களையும் காணவே காணோம். ஒரே கவலையாக்கீதூஊஊஊஊ. என்னவோ போங்கோ, முருகு.

   தங்களின் அன்பான வருகைக்கும், அலப்பரயான (எனக்குப் புரியாத) கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், முருகு.

   பிரியமுள்ள குருஜி கோபு

   Delete
  2. குருஜி மொதகவே சொல்லிகின மறந்து போட்டேன்.. அந்த ரெண்டு செவப்பு டெலிபோனுகளும் டான்ஸ் போட்டி சூப்பரா நடத்துதுங்கோ...

   Delete
  3. mru April 16, 2016 at 10:18 AM

   //குருஜி மொதகவே சொல்லிகின மறந்து போட்டேன்.. அந்த ரெண்டு செவப்பு டெலிபோனுகளும் டான்ஸ் போட்டி சூப்பரா நடத்துதுங்கோ...//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதை இப்போதுதான் கவனித்தேன், மின்னலு முருகு. மிக்க மகிழ்ச்சி :)

   Delete
 22. The Comments of Mr. Srinivasan Sir to this particular post is wrongly routed and recorded at the previous post - Part-15. Hence it is reproduced here. - VGK

  -=-=-=-=-
  srini vasan has left a new comment on the post "ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 16":

  இன்றய அறிமுகங்களில் சிவசங்கரி மேடம் கதைகள் படிச்சிருக்கேன்.. இன்னொருவர் பற்றி இன்று இங்கு தெரிந்து கொள்ள முடிந்தது.....
  -=-=-=-=-

  ReplyDelete
  Replies
  1. @ srini vasan

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   Delete
 23. அடடா..... மிஸ்டேக் ஆயிடிச்சா.... வெரி ஸாரி ஸார்......

  ReplyDelete
  Replies
  1. srini vasan April 16, 2016 at 10:30 AM

   //அடடா..... மிஸ்டேக் ஆயிடிச்சா.... வெரி ஸாரி ஸார்......//

   அதனால் பரவாயில்லை. இதெல்லாம் எல்லோருக்குமே மிகவும் சகஜமாக எற்படக்கூடியது மட்டுமே. - VGK

   Delete
 24. இவ்வளவு பெருமைகள் உடைய விட்டல்ராவ் அவர்களைப் பற்றி இதுவரையில் அறிந்துகொள்ளாமல் இருந்ததற்காக வருந்துகிறேன். ஜீவி சாரின் நூல் வாயிலாகவும் தங்களுடைய விரிவான நூலறிமுகம் வாயிலாகவம் அறிய முடிந்ததற்காக இருவருக்கும் அன்பான நன்றி. சிவசங்கரியின் பல படைப்புகளை வாசித்த அனுபவம் உண்டு. சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது என்ன தன்னம்பிக்கைத் தொடர் ஜூனியர் விகடனில் வந்ததென்று நினைக்கிறேன். தவறாமல் வாசித்திருக்கிறேன்.

  துர்முகி வருடம் குறித்தப் பகிர்வுக்கு மிக்க நன்றி. துர் என்றாலே கெட்ட என்று பொருள் இருப்பது தெரியும். ஆனால் துர்முக என்றால் குதிரை என்று இப்போதுதான் அறிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி April 17, 2016 at 12:47 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இவ்வளவு பெருமைகள் உடைய விட்டல்ராவ் அவர்களைப் பற்றி இதுவரையில் அறிந்துகொள்ளாமல் இருந்ததற்காக வருந்துகிறேன்.//

   விட்டல் ராவ் தங்களாலும் படிக்காமல்
   விட்டுப்போன ராவ் (எழுத்தாளர்) ஆகியுள்ளார் போலிருக்கிறது. :)

   //ஜீவி சாரின் நூல் வாயிலாகவும் தங்களுடைய விரிவான நூலறிமுகம் வாயிலாகவம் அறிய முடிந்ததற்காக இருவருக்கும் அன்பான நன்றி.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //சிவசங்கரியின் பல படைப்புகளை வாசித்த அனுபவம் உண்டு. ’சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது’ என்ற தன்னம்பிக்கைத் தொடர் ஜூனியர் விகடனில் வந்ததென்று நினைக்கிறேன். தவறாமல் வாசித்திருக்கிறேன். //

   மிகவும் சந்தோஷம்.

   //துர்முகி வருடம் குறித்தப் பகிர்வுக்கு மிக்க நன்றி.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //’துர்’ என்றாலே ’கெட்ட’ என்று பொருள் இருப்பது தெரியும்.//

   தாங்கள் சொல்வது மிகவும் சரியே. ஓர் சின்ன உதாரணம்: துர்நாற்றம் :)

   //ஆனால் துர்முக என்றால் குதிரை என்று இப்போதுதான் அறிந்துகொண்டேன்.//

   குதிரை வேகத்தில் (Horse Power) அறிந்துகொண்டுள்ளீர்கள். :)

   //மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் கோபு சார்.//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 25. இந்தப் பதிவை வாசித்துக் கருத்தும் இட்டோம்...காக்கா உஷ் ஆகிவிட்டது போலும்....ஹஹ சரி

  விட்டல் ராவ் அவர்களைப் பற்றித் தெரியவில்லை இப்போதுதான் அறிகின்றோம்.

  சிவசங்கரி அவர்களின் கதைகளைத் தொடராக வந்த போது வாசித்திருக்கின்றோம். அதே போன்று அவரது கட்டுரை , ஜூனியர் விகடன் என்று நினைக்கின்றோம், சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது - இதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு...அதுவும் வாசித்திருக்கின்றோம்.

  அருமையான எழுத்தாளர்களின் அறிமுகம்....மிக்க நன்றி சார் பகிர்விற்கு

  ReplyDelete
  Replies
  1. Thulasidharan V Thillaiakathu
   April 20, 2016 at 9:34 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இந்தப் பதிவை வாசித்துக் கருத்தும் இட்டோம்... காக்கா உஷ் ஆகிவிட்டது போலும்....ஹஹ சரி//

   இருக்கலாம். இருக்கலாம். எவ்வளவு வெயில் அடித்தாலும் இப்போதெல்லாம் அதிகமாக யாரும் வடாம் பிழிந்து தங்கள் உடம்பை வருத்திக்கொள்வது இல்லை. அதனால் காக்கைகள் நாம் அனுப்பும் கருத்துக்களையே பிழிந்த வடாமாக நினைத்துத் தூக்கிச் சென்று விடுகின்றன.

   //விட்டல் ராவ் அவர்களைப் பற்றித் தெரியவில்லை இப்போதுதான் அறிகின்றோம்.//

   சீனப்ப நாயக்கர் என்ற வைர வியாபாரியை விட்டலன் என்ற பண்டரீபுரம் பகவான் ஸ்ரீ பாண்டுரங்கன் தடுத்தாட்கொண்டாராம். அதன் பிறகு சீனப்ப நாயக்கர் புரந்தரதாஸர் ஆனார். அனைத்து க்ஷேத்ரங்களுக்கும் ஆசேது ஹிமாசலம் பயணம் செய்து, ஐந்து லக்ஷம் கிருதிகள் இயற்றி, எல்லா பெருமாள் கோயில்களிலும் மங்களா சாசனம் செய்தாராம். அதுபோல தாங்கள் இப்போது இந்தப்பதிவின் மூலம், விட்டலன் அருளால் விட்டல் ராவைப் பற்றி அறிந்து கொண்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

   //சிவசங்கரி அவர்களின் கதைகளைத் தொடராக வந்த போது வாசித்திருக்கின்றோம். அதே போன்று அவரது கட்டுரை , ஜூனியர் விகடன் என்று நினைக்கின்றோம், சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது - இதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு...அதுவும் வாசித்திருக்கின்றோம்.//

   வெரி குட். மிக்க மகிழ்ச்சி.

   //அருமையான எழுத்தாளர்களின் அறிமுகம்....மிக்க நன்றி சார் பகிர்விற்கு//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

   Delete
 26. ராசி பலனைக் காணோமே?

  விட்டல் ராவை விட்டால் படிப்பேன்.

  சிவசங்கரி எழுதிய ஒரு நாவல் - எதோ ஒண்ணு, சட்னு நினைவுக்கு வரலே - எதோ ஒரு நாவல்ல நல்லா எழுதியிருப்பாரு.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை April 23, 2016 at 10:18 PM

   வாங்கோ சார், வணக்கம்.

   //ராசி பலனைக் காணோமே?//

   ஆஹ்ஹாஹ்ஹா! ஏனோ விடுபட்டுப்போய் உள்ளது. :)

   //விட்டல் ராவை விட்டால் படிப்பேன்.//

   :) ஓஹோ ! அவரை என்னால் விடமுடியாது. ஏனெனில் அவர் என்னிடம் இல்லை. அவர் யார் என்றே எனக்குத்தெரியாது.

   //சிவசங்கரி எழுதிய ஒரு நாவல் - எதோ ஒண்ணு, சட்னு நினைவுக்கு வரலே - எதோ ஒரு நாவல்ல நல்லா எழுதியிருப்பாரு.//

   :) இதனை என்னால் நன்கு ரசிக்க முடிந்தது :)

   தங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK

   Delete
 27. தினமணி கதிர் சாவியை ஆசிரியராய்க் கொண்டு வெளிவந்தபோது அதில் விட்டல்ராவ் எழுதியவற்றைப் படித்த நினைவு இருக்கு. சிவசங்கரியை அநேகமாய்ப் படித்திருந்தாலும் என்னமோ தெரியாது; அதிகம் கவரவில்லை. இவரும் இந்துமதியும் மாற்றி மாற்றி எழுதிய ஒரு நாவல் குமுதம்/விகடன் (?) எதிலேனு நினைவில்லை வந்தது! மற்றபடி இவரின் நாவல்களில் பாலங்கள் தவிர மற்றவை மனதில் நிற்கவில்லை. :)

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam April 24, 2016 at 9:22 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //தினமணி கதிர் சாவியை ஆசிரியராய்க் கொண்டு வெளிவந்தபோது அதில் விட்டல்ராவ் எழுதியவற்றைப் படித்த நினைவு இருக்கு. சிவசங்கரியை அநேகமாய்ப் படித்திருந்தாலும் என்னமோ தெரியாது; அதிகம் கவரவில்லை. இவரும் இந்துமதியும் மாற்றி மாற்றி எழுதிய ஒரு நாவல் குமுதம்/விகடன் (?) எதிலேனு நினைவில்லை வந்தது! மற்றபடி இவரின் நாவல்களில் பாலங்கள் தவிர மற்றவை மனதில் நிற்கவில்லை. :)//

   மனதில் நிற்காத சமாசாரங்களையும்கூட மனம் திறந்து தாங்கள் இங்கு சொல்லியுள்ளது, வெகு அழகு.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கு மிக்க நன்றி, மேடம். - VGK

   Delete
 28. "மற்ற நக்ஷத்திரக்காரர்களுக்கு ஏதாவது ஒரு நாலு மாதமாவது கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம் எனத்தெரிகிறது. பிறகு அதுவே அவர்களுக்கு பழகிவிடலாம்" - 'நகைச்சுவையாய் எழுதுவதே ஒரு கலை. முழுமையான நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால்தான் இப்படி பாயசத்தில் முந்திரிப் பருப்பைத் தெளிப்பதுபோல, ஆங்காங்கே (எந்த சப்ஜெக்டா இருந்தாலும்) நகைச்சுவையைத் தெளிக்கமுடியும். மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் October 4, 2016 at 1:40 PM

   வாங்கோ, வணக்கம்.

   //**”மற்ற நக்ஷத்திரக்காரர்களுக்கு ஏதாவது ஒரு நாலு மாதமாவது கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம் எனத்தெரிகிறது. பிறகு அதுவே அவர்களுக்கு பழகிவிடலாம்"** - 'நகைச்சுவையாய் எழுதுவதே ஒரு கலை. முழுமையான நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால்தான் இப்படி பாயசத்தில் முந்திரிப் பருப்பைத் தெளிப்பதுபோல, ஆங்காங்கே (எந்த சப்ஜெக்டா இருந்தாலும்) நகைச்சுவையைத் தெளிக்கமுடியும். மிகவும் ரசித்தேன்.//

   ஆஹா, பாயசத்தில் முந்திரிப் பருப்பைப் போட்டுள்ளதுபோல, தங்களின் இந்த பின்னூட்டத்தை நானும் மிகவும் ரஸித்தேன். ருசித்தேன்.

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete