About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, April 17, 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 18

’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன்  ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் நம் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  
33) நினைவு நதியில் 
வண்ணதாசன்
[பக்கம் 207 முதல் 213 வரை]வண்ணதாசனின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். அதனால் தான் கவிதைகள் எழுதும் போது கல்யாண்ஜி ஆகிறார்.

கதைகள் எழுதும் போது வண்ணதாசன்.   இவரது சகோதரர் பெயர் வல்லிதாசனாம். அதனால் இவர் வண்ணதாசன் ஆகியிருக்கிறாராம்.

வண்ணதாசனின் நினைவுகளில் படிந்துள்ள ஞாபகப் படிமங்கள் தான் அவரது கதைகள் என்று ஜீவி சொல்கிறார்.  அந்த ஞாபகப் படிமங்கள் எப்படி கதைகளாக உருக்கொள்கின்றன என்று விவரமாக எடுத்துரைக்கிறார் ஜீவி.

வண்ணதாசனின் 'ரதவீதி' கதையை ஜீவி லேசாகக் கோடி காட்டும் பொழுதே மொத்தக் கதையும் புரிந்து விடுகிறது. அவரது 'பாம்பின் கால்' கதை பிரமாதமாய் இருக்கும் என்று தெரிகிறது.  முதல் போணிக்காக இரண்டு கடைக்காரர்கள் காத்திருந்து காத்திருந்து யாரும் வராமல் அந்த இரண்டு கடைக்காரர்களுமே ஒருவொருக்கொருவர் முதல் போணியைப் பண்ணிக் கொள்ளும் கதை.  ஒரு வியாபாரம் என்று வந்தால் எவ்வளவு இருக்கின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஆனந்த விகடனில் வண்ணதாசன் எழுதிய 'அகம்-புறம்' தொடர் மற்றும் மற்ற பத்திரிகைகளில் அவர் எழுதியது என்று வண்ணதாசனைப் பற்றி ஜீவி எழுதியிருப்பது எல்லாம் வாசிக்க வாசிக்க திருப்தியாக இருக்கிறது.

இவர் எழுதிய இதர கதை படைப்புகளான ‘சின்னு முதல் சின்னு வரை’, ‘தனுமை’, ‘கடைசியாய்த் தெரிந்தவர்’, ‘கிருஷ்ணன் வைத்த வீடு’, ‘உப்பு கரிக்கிற சிறகு’;  இவரின் முதல் கதைத்தொகுப்பு நூலான ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’; முதல் கவிதைத் தொகுப்பான ‘புலரி’ அதன்பிறகு வெளியிடப்பட்ட ‘தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்’ போன்ற பலவற்றை சிலாகித்துச் சொல்லியுள்ளார் ஜீவி. 

மறந்து விடாமல் கட்டுரையின் கடைசியில் போனசாக கல்யாண்ஜியின் கவிதை ஒன்றையும் தந்திருக்கிறார். அதான் ஜீவி. 

மேலும் வண்ணதாசன் பற்றி எழுதியுள்ள பக்கங்கள் மூலம், நம் ஜீவி சாரே, அந்தக்காலத்தில் இரண்டு சிற்றிதழ்கள் நடத்தியிருந்தார்கள் என்பதும் தெரிய வருகிறது.

34) கொஞ்சு தமிழ்
நாஞ்சில் நாடன் 
[பக்கம் 214 முதல் 222 வரை]
நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் 'காலக்கணக்கு' என்ற ஒரு பாம்புக் கதையை நேர்த்தியாய் ஜீவி விவரிப்பதே சரசரவென்று பாம்பு ஊர்வது போல இருக்கிறது!

அதே மாதிரி,  'சாலப்பரிந்து'  என்ற கதையையும், 'வந்தான், வருவான், வாராநின்றான்' என்ற கதையையும் கதைகளின் சுருக்கத்தைச் சொல்லி நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ஜீவி எழுதியிருப்பதைப் படிக்கும் பொழுதே மூலக்கதையைப் படித்த திருப்தி ஏற்படுகிறது.

நாஞ்சில் நாடனின் 'எட்டு  திக்கும் மதயானை' என்னும் நாவலை எடுத்துக்  கொண்டு அலசுகிறார். 'தலைகீழ் விகிதங்களை' தொட்டுச் செல்கிறார். 'மிதவை', 'சதுரங்கக் குதிரை' 'என்பிலதனை வெயில் காயும்' என்று மற்ற நாஞ்சில் நாடனின் நாவல்களைப் பற்றியும் சொல்லிச் செல்கிறார்.   இவை எல்லாவற்றையும் விஞ்சியதாகச் சொல்லி நாஞ்சில் நாடனின் 'விரதம்' கதையை ஓகோ என்று புகழ்கிறார்.

நாஞ்சில் நாடனின் கும்பமுனி கேரக்டரைப் பற்றியும் ஜீவி சொல்ல மறக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.-oOo-


2010ம் ஆண்டு இவரின் ’சூடிய பூ சூடற்க’ என்ற நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டபோது,  இவரின் அலைபேசி எண்ணை [9443057024] செய்தித்தாள் மூலம் அறிந்து, குறுஞ்செய்தியாக (SMS) வாழ்த்து அனுப்பியிருந்தேன். அடுத்த ஐந்தாவது நிமிடமே கோவை செளரிப் பாளையத்திலிருந்து என்னைத் தொடர்புகொண்டு என்னுடன் பேசி நன்றி கூறினார். அவ்வளவு பெரிய எழுத்தாளர் என்னுடன் சிறிது நேரம் பேசியது, எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், பெருமையாகவும், பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. - vgk

இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்


  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:     
  

  
   வெளியீடு: 19.04.2016 பிற்பகல் 3 மணிக்கு.
காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

55 comments:

 1. வண்ணதாசன், நாஞ்சில் நாடன் இருவரையுமே படித்ததில்லை என்பதை சற்றே வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். April 17, 2016 at 3:10 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //வண்ணதாசன், நாஞ்சில் நாடன் இருவரையுமே படித்ததில்லை என்பதை சற்றே வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//

   இதில் நாம் வருத்தப்பட என்ன இருக்கிறது?

   நாம் இவற்றைப் படிக்கவில்லையே என அந்தப்படைப்பாளிகள் வேண்டுமானால், ஒருவேளை வருத்தப்படலாம். அதில் ஓர் நியாயமும் உண்டு.

   எல்லோருடைய படைப்புகளையும் வாங்கி நாம் படிக்க நினைத்தால் இந்த நம் ஒரு ஜென்மாவே நமக்குப் போதாது. அதனால் வருத்தப்படாதீங்கோ, ஸ்ரீராம்.

   ஏதோ நம் ஜீவி சார் மூலம் இவர்களைப்பற்றி எத்கிஞ்சுது அறிய முடிந்துள்ளதே, அதுவே போதும் இந்த நம் ஜென்மாவுக்கு :)

   நேற்று மாலை முதல் இப்போது வரை இண்டர்நெட் WiFi Connection என் கட்டில் வரை கிடைக்காமல் பாடாய்ப் படுத்தி விட்டதில் எனக்கு ஒரே வருத்தம்.

   இரவு முழுவதும் நான் வழக்கம்போல் கண் விழித்திருந்தும் பிரயோசனம் இல்லாமல் போய் விட்டது.

   அதனால் உங்களுக்கெல்லாம் பதில் அளிக்க இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு பதிவுகள் நான் சொன்னபடி சொன்ன நேரத்தில் வெளியிட வேண்டியும் உள்ளது. வெயிலோ மிகக் கடுமையாக உள்ளது. ஏ.ஸி. ரூமாகவே இருப்பினும், எப்போதும் அதை ‘ON' செய்தே வைத்திருப்பினும் எனக்கு வியர்த்துக் கொட்டுகிறது. கதவைத்திறந்தால் அனல் காற்று அடிக்கிறது. இன்னும் என்னென்ன நடக்குமோ? ஒரே கவலையாகத்தான் உள்ளது.

   தங்களின் அன்பு வருகைக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம். - அன்புடன் VGK

   Delete
 2. வண்ணதாசன் கவிதைகள் படித்து இருக்கிறேன்.
  சித்திரை வருடப்பிறப்பு அன்று
  எட்டு திக்கும் மதயானை' படம் வைத்தார்கள் தொலைகாட்சியில் நாஞ்சில் நாடன் அவர்கள் கதைதானா அது?

  நாஞ்சில் நாடன் அவர்கள் கதைகள் படித்து இருக்கிறேன்.
  மண்ணின் மணம் அதில் இருக்கும்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு April 17, 2016 at 3:53 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //வண்ணதாசன் கவிதைகள் படித்து இருக்கிறேன்.//

   வெரி குட். :)

   //சித்திரை வருடப்பிறப்பு அன்று ’எட்டு திக்கும் மதயானை' படம் வைத்தார்கள் தொலைகாட்சியில். நாஞ்சில் நாடன் அவர்கள் கதைதானா அது?

   நான் தொலைகாட்சி பார்க்கவில்லை. ஒருவேளை அப்படியும்கூட இருக்கலாம்.

   //நாஞ்சில் நாடன் அவர்கள் கதைகள் படித்து இருக்கிறேன். மண்ணின் மணம் அதில் இருக்கும்.
   பகிர்வுக்கு நன்றி.//

   சந்தோஷம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கூடுதல் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGK

   Delete
 3. திரு. வண்ணதாசன், திரு. நாஞ்சில் நாடன் இருவருமே எனக்கு புதிய விடயம் அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா - கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. KILLERGEE Devakottai April 17, 2016 at 4:46 PM

   வாங்கோ, வணக்கம்.

   //திரு. வண்ணதாசன், திரு. நாஞ்சில் நாடன் இருவருமே எனக்கு புதிய விடயம் அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா - கில்லர்ஜி//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   Delete
 4. இன்று அடையாளங்காட்டப்பட்டுள்ள படைப்பாளிகள் இருவருமே இருவேறு களங்களால் மனம் ஆள்பவர்கள். இவர்கள் இருவருடைய பல படைப்புகளையும் வாசித்து அனுபவித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்வும் பெருமையுமாக உள்ளது. சுக துக்கங்களால் நிரம்பிய வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்கக் கற்றுத்தருபவர் வண்ணதாசன். இன்றைய என் பதிவிலும் அவரைக் குறிப்பிட்டுள்ளேன். நாஞ்சில் நாடனின் இடலாக்குடி ராசா மிகவும் மனம் தொட்ட கதை.. சமீபத்தில் ஒரு திரைப்படத்திலும் அக்காட்சியை பயன்படுத்தியிருந்தார்கள். அருமையான எழுத்தாளுமைகளின் அறிமுகங்களுக்கு நன்றி கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி April 17, 2016 at 4:54 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இன்று அடையாளங்காட்டப்பட்டுள்ள படைப்பாளிகள் இருவருமே இருவேறு களங்களால் மனம் ஆள்பவர்கள். இவர்கள் இருவருடைய பல படைப்புகளையும் வாசித்து அனுபவித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்வும் பெருமையுமாக உள்ளது.//

   இதைத்தங்கள் மூலம் இங்கு நான் கேட்கவே, எனக்கும் மிகவும் பெருமையாகத்தான் உள்ளது.

   //சுக துக்கங்களால் நிரம்பிய வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்கக் கற்றுத்தருபவர் வண்ணதாசன். இன்றைய என் பதிவிலும் அவரைக் குறிப்பிட்டுள்ளேன்.//

   ஆஹா, அருமை. பார்த்தேன். படித்தேன். ரஸித்தேன், மகிழ்ந்தேன்.

   அந்தத் தங்களின் பதிவின் இணைப்பினையும் இங்கு கீழேயும் கொடுத்துள்ளேன், மற்றவர்களுக்கும் தெரியட்டும் என்று. :)

   //நாஞ்சில் நாடனின் ’இடலாக்குடி ராசா’ மிகவும் மனம் தொட்ட கதை.. சமீபத்தில் ஒரு திரைப்படத்திலும் அக்காட்சியை பயன்படுத்தியிருந்தார்கள்.//

   அப்படியா? மிக்க மகிழ்ச்சி மேடம். இருப்பினும் எனக்கு அதுபற்றி ஏதும் தெரியவில்லை.

   //அருமையான எழுத்தாளுமைகளின் அறிமுகங்களுக்கு நன்றி கோபு சார்.//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், இனிய பல கருத்துப்பகிர்வுகளால் என் இந்தத் தொடரையே ஜொலிக்கச் செய்துகொண்டிருப்பதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   Delete
  2. என் பதிவின் இணைப்பையும் இங்கு குறிப்பிட்டு பலரும் அறியத்தந்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி கோபு சார்.

   Delete
  3. கீத மஞ்சரி April 18, 2016 at 6:04 PM

   //என் பதிவின் இணைப்பையும் இங்கு குறிப்பிட்டு பலரும் அறியத்தந்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி கோபு சார்.//

   உண்மையில் நான்தான் தங்களுக்கு என் நன்றிகளைச் சொல்ல வேண்டும். மற்றவை மெயிலில் :)))))

   பிரியமுள்ள கோபு

   Delete
 5. கலைமாமணி திரு வண்ணதாசன் தான் கல்யாண்ஜி என்பதை இன்றுதான் தான் அறிந்துகொண்டேன். இவரது படைப்புகளை படித்ததில்லை. ஆனால் இவரது கவிதைகளில் சிலவற்றை படித்திருக்கிறேன்.

  சாகித்ய அகாதமி விருது பெற்ற திரு நாஞ்சில் நாடன் அவர்களின் படைப்புகளையும் இதுவரை படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. திரு ஜீவி அவர்கள் செய்துள்ள அறிமுகத்திற்கு நன்றி.

  பள்ளியில் படிக்கும்போது எனது அண்ணனின் நூலகத்திலிருந்து பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளை படித்த நான், பணிச்சுமை காரணமாக குறிப்பிட்ட காலங்களில் இது போன்று புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை படிக்காமல் போனது எனது துரதிருஷ்டமே. இனி ஒவ்வொன்றாய் படிக்கவேண்டும்.

  இந்த எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கும் திரு ஜீவி அவர்களுக்கும் அவர் செய்த அறிமுகத்தை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்த உங்களுக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி April 17, 2016 at 4:59 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //கலைமாமணி திரு. வண்ணதாசன் தான் கல்யாண்ஜி என்பதை இன்றுதான் தான் அறிந்துகொண்டேன். இவரது படைப்புகளை படித்ததில்லை. ஆனால் இவரது கவிதைகளில் சிலவற்றை படித்திருக்கிறேன். //

   மிக்க மகிழ்ச்சி, சார்.

   //சாகித்ய அகாதமி விருது பெற்ற திரு நாஞ்சில் நாடன் அவர்களின் படைப்புகளையும் இதுவரை படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. திரு ஜீவி அவர்கள் செய்துள்ள அறிமுகத்திற்கு நன்றி. //

   அப்படியா ! ....... மிகவும் சந்தோஷம், சார்.

   //பள்ளியில் படிக்கும்போது எனது அண்ணனின் நூலகத்திலிருந்து பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளை படித்த நான், பணிச்சுமை காரணமாக குறிப்பிட்ட காலங்களில் இது போன்று புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை படிக்காமல் போனது எனது துரதிருஷ்டமே. இனி ஒவ்வொன்றாய் படிக்கவேண்டும். //

   இருப்பினும் என்னைப்போல் அல்லாமல் ஏற்கனவே எவ்வளவோ பிரபலங்களைப்பற்றி படிக்க வாய்ப்பு கிட்டியுள்ள தாங்கள் ஓர் அதிர்ஷ்டசாலி மட்டுமே. இப்போதும் தங்களுக்குள்ள வாசிப்பு ஆர்வம் என்னை மேலும் மிகவும் வியக்க வைக்கிறது.

   //இந்த எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கும் திரு ஜீவி அவர்களுக்கும் அவர் செய்த அறிமுகத்தை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்த உங்களுக்கும் நன்றி! //

   இதிகாசமான ஸ்ரீமத் இராமாயணத்தில், இலங்கைக்குப் பாலம்கட்டுவதில், ஸ்ரீராமருக்கு ஓர் மிகச்சிறிய அணில் உதவியது போன்றது மட்டுமே, என்னுடைய இந்த மிகச்சிறிய 20 பகுதிகள் கொண்ட, நூல் அறிமுகத் தொடராகும்.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான பல கருத்துப்பகிர்வுகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

   Delete
  2. //இதிகாசமான ஸ்ரீமத் இராமாயணத்தில், இலங்கைக்குப் பாலம்கட்டுவதில், ஸ்ரீராமருக்கு ஓர் மிகச்சிறிய அணில் உதவியது போன்றது மட்டுமே..//

   அன்புள்ளம் கொண்டது அன்பர் கோபு சாருக்குத் தான் எவ்வளவு அடக்கம் பாருங்கள!!

   என் மீது கொண்ட அன்பில் அவர் என்னை உயர்த்திச் சொல்வதை இந்த நூலுக்கான உயர்வு என்று கொள்கிறேன்.

   இதுவரை தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி நிறையப் பேர் நிறைய எழுதியிருக்கிறார்கள். வாஸ்தவம் தான்.

   பெரும்பான்மையான அப்படியான எழுத்துக்கள் எளிமையாக வாசகர்களைக் கவரும் விதத்தில் அமைந்திருந்திராதது ஒரு குறையே. குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை உச்சாணிக் கொம்பில் வைத்தோ இல்லை அதல பாதாளத்திற்கு தாழ்த்தியோ தனி நபர் விருப்பு வெறுப்பில் அழுந்திப் போன எழுத்துக் குவியல்களே காணக்கிடைக்கின்றன.

   ஆனால் 37 தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய இந்த நூலோ எழுத்தாளர்களின் எழுத்தை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் எழுதுகிறவனின் கோணத்தில் அலசிய நூல். இது தான் இந்த நூலின் ஆகச்சிறந்த தகுதி.

   மிகச் சிறந்த எழுத்தாளுகையைக் கொண்டவர்களின் படைப்புகளூனூடே பயணித்து அவர்கள் எழுத்தின் ஆன்மாவை தரிச்சித்த நூல். எந்த எண்ணத்தில் எந்தக் கருத்து எப்படி அவர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கலாம் என்பதனை நுணுகி நுணுக்கமாக ஆராய்ந்து வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டவை.

   இந்த நூலோடு சம்பந்தப்பட்ட வாழும் எழுத்தாளர்கள் தங்களுக்கான கட்டுரைகளைப் படிக்கும் பொழுதே நம் எழுத்தைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாக எழுதியிருக்கும் இவர் யார் என்று யோசிக்க வைக்கிற நூல். சுருக்கமாகச் சொன்னால் அவர்களை அவர்களுக்கேக் காட்டிய நூல் இது.

   இந்த மாதிரியான எளிமையாகச் சொல்லும் விதத்தில் தமிழில் நிறைய விமரிசன நூல்கல் வர வேண்டும் என்கிற ஆர்வத்தில் அதற்கான பாதை போட்ட முதல் நூல்.

   இந்த நூலுக்கான பெருமைகள் அல்ல இவை. மாறாக இந்த நூலுக்கான தகுதிகள் இவை என்று கொள்ள வேண்டுகிறேன்.

   இந்த நூலை வாசிக்கும் ஆர்வம் இருந்தும் நூல் தங்களுக்குக் கிடைப்பதில் ஏதாவது நடைமுறை சிக்கல்கள் இருப்பின் எனது கீழ்க்கண்ட மெயில் ஐடிக்கு தங்கள் முகவரியுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். பதிப்பகத்தார் மூலமாக அனுப்பி வைக்க ஆவன செய்கிறேன்.

   தொடர்புக்கு:

   jeeveeji@gmail.com

   அன்புடன்,
   ஜீவி

   Delete
 6. Replies
  1. பழனி.கந்தசாமி April 17, 2016 at 6:18 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //படித்தேன்.//

   ஆஹா, தங்களின் அபூர்வ வருகைக்கும் ‘படித்தேன்’ என்ற ரத்தின சுருக்கமானதோர் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். :)

   அன்புடன் VGK

   Delete
 7. இன்று அறிமுகமாகி இருப்பவர்களை படித்ததில்லை. தெரியாத எழுத்தாளர்களை உங்கள் பதிவு மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.....நன்றிகள்...ஸார்....

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் April 17, 2016 at 6:36 PM

   வாங்கோ ’ப்ராப்தம்’, வணக்கம்மா. நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா? உங்களின் எழுத்துக்களைப் பார்க்கும் ப்ராப்தம் கிடைக்கும் போதெல்லாம் எனக்குள் ஓர் தனி சந்தோஷம் ஏற்பட்டு வருகிறது. :)

   //இன்று அறிமுகமாகி இருப்பவர்களை படித்ததில்லை.//

   அதனால் பரவாயில்லை. நானும் அவர்களின் எழுத்துக்கள் எதையும் படித்தது இல்லை. நானும் நீங்களும் இது விஷயத்தில் ஒரே கட்சிதான். :)

   //தெரியாத எழுத்தாளர்களை உங்கள் பதிவு மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.....நன்றிகள்...ஸார்....//

   ஆஹா, தங்களின் தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா. பிரியமுள்ள கோபு

   Delete
 8. இன்றய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்... இருவரையுமே தெரியலியே...

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. April 17, 2016 at 6:46 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்...//

   முத்தான + சத்தான வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

   //இருவரையுமே தெரியலியே...//

   அப்படியா? அதனால் என்ன? எனக்கும்தான் இருவரையுமே தெரியலே :)

   நாம் இருவருமே, மஹா விவரமான, மஹா புத்திசாலியான, நம் முருகுப் பெண்ணிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால் போச்சு. :)

   முருகுப்பொண்ணு ஒருத்தியால் மட்டுமே, நமக்குப் புரியாத தெரியாத விஷயங்களை நன்கு விளக்க ஏலும் !

   தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றிம்மா.

   பிரியமுள்ள கோபு

   Delete
 9. திரு வண்ணதாசன்...திரு நாஞ்சில் நாடன் அவர்கள் இருவரையும் ஜி.வி. ஸார் சொல்லியிருப்பதை தங்களின் பதிவு மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது. கற்றது கையளவு என்று சொல்வார்களே... ரொம்பவே சரியான வார்த்தைதான்.. எவ்வளவு பேரைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்று தோன்றுகிறது.. தங்களின் பதிவு மூலமாக இன்னும்...இன்னும்... பலரையும் தெரிந்து கொள்ள நல்ல அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கு.. நன்றிகள்....

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... April 17, 2016 at 6:55 PM

   வாங்கோ, வணக்கம்.

   //திரு. வண்ணதாசன்... திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் இருவரையும் பற்றி ஜீ.வி. ஸார் சொல்லியிருப்பதை தங்களின் பதிவு மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது.//

   மிக்க மகிழ்ச்சி.

   //கற்றது கையளவு என்று சொல்வார்களே... ரொம்பவே சரியான வார்த்தைதான்.. எவ்வளவு பேரைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்று தோன்றுகிறது..//

   அதனால் பரவாயில்லை. நாம் இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் முழுமையாகத் தெரிந்துகொண்டாலே இப்போதைக்குப் போதுமானது. :)

   //தங்களின் பதிவு மூலமாக இன்னும்...இன்னும்... பலரையும் தெரிந்து கொள்ள நல்ல அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கு.. நன்றிகள்....//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்களின் தொடர் வருகையும், சற்றே மாறுதலான கருத்துக்களும் எனக்கு அவ்வப்போது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி. -VGK

   Delete
 10. இருவரையுமே தெரிந்திருக்கவில்லை..... உங்களின் பதிவுகள் மூலமாக பலரையும் தெரிந்து கொள்ள முடிகிறது. ..... நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... April 17, 2016 at 7:08 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இருவரையுமே தெரிந்திருக்கவில்லை.....//

   அச்சா ! :)

   நாம் இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் முழுமையாகத் தெரிந்துகொண்டாலே இப்போதைக்குப் போதுமானது. :)

   //உங்களின் பதிவுகள் மூலமாக பலரையும் தெரிந்து கொள்ள முடிகிறது. ..... நன்றிகள்...//

   பஹூத் அச்சா !!

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   Delete
 11. இன்று அறிமுகம் செய்திருப்பவர்கள் எனக்கு புதியவர்கள்....

  ReplyDelete
  Replies
  1. srini vasan April 17, 2016 at 7:10 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்று அறிமுகம் செய்திருப்பவர்கள் எனக்கு புதியவர்கள்....//

   உங்களுக்கு மட்டும்தானா? எனக்கும்தான். :)

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கு என் நன்றிகள். - VGK

   Delete
 12. மேல அஞ்சு பட்டர்புள்ள இருக்குதுல்லா. ஏன் பறக்கல????????.......

  ReplyDelete
  Replies
  1. mru April 17, 2016 at 7:18 PM

   வாங்கோ, முருகு, வணக்கம்மா. நல்லா இருக்கீகளா? அம்மி, அண்ணன், அண்ணி, உங்கட ‘அ-வ-ர்’ எல்லோரும் நலமா?

   //மேல அஞ்சு பட்டர்புள்ள இருக்குதுல்லா. ஏன் பறக்கல????????.......//

   நல்லதொரு அருமையான கேள்வி.

   அவை பறந்து போய் விட்டால் முருகு, முன்னா, நம் பேரன்புக்குரிய ரோஜா டீச்சர் போன்றவர்கள் வந்தால் பார்க்க முடியாமல் போய் விடுமே, தங்களின் அழகை ரஸிக்க முடியாமல் போய்விடுமே என்பதால் மட்டுமே அவை பறக்காமல் இருக்கோ என்னவோ !

   எதற்கும் இதுபற்றி நம் டீச்சரிடம் கேட்டுக்கொள்ளுங்கோ. ஏன் நம்ம டீச்சரையே இப்போதெல்லாம் நம்மால் இங்கு பார்க்க முடியவில்லை? :(

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு.

   அன்புடன் குருஜி

   Delete
 13. வண்ணதாசன் தான் கல்யாண்ஜி என்பதை ஜீவி சாரின் நூலைப் படித்துத் தான் தெரிந்து கொண்டேன். இவருடைய படைப்புகள் எதையும் நான் படித்ததில்லை. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் வாசித்திருக்கிறேன். அது சொல்ல மறந்த கதை என்ற திரைப்படமாகவும் வந்தது. கிராமிய மணம் கமழும் நாஞ்சில் நாடனின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பிய ஐந்தாவது நிமிடத்தில் உங்களுடன் பேசினார் என்றறிந்து வியப்பேற்பட்டது. இருவரையும் நன்கு அறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள் கோபு சார்!

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி April 17, 2016 at 7:44 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //வண்ணதாசன் தான் கல்யாண்ஜி என்பதை ஜீவி சாரின் நூலைப் படித்துத் தான் தெரிந்து கொண்டேன். இவருடைய படைப்புகள் எதையும் நான் படித்ததில்லை.//

   ஓஹோ ! :)

   //நாஞ்சில் நாடனின் ’தலைகீழ் விகிதங்கள்’ வாசித்திருக்கிறேன். அது ’சொல்ல மறந்த கதை’ என்ற திரைப்படமாகவும் வந்தது.//

   அப்படியா? மிக்க மகிழ்ச்சி.

   //கிராமிய மணம் கமழும் நாஞ்சில் நாடனின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது.//

   சந்தோஷம்.

   //அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பிய ஐந்தாவது நிமிடத்தில் உங்களுடன் பேசினார் என்றறிந்து வியப்பேற்பட்டது. //

   எனக்கும் அன்று ஒரே வியப்பாகத்தான் இருந்தது, மேடம்.

   இருப்பினும் நான் அவருடன் சற்றே விரிவாகப் பேச முடியாத நிலையில் நான் அன்று இருந்த சூழ்நிலை அமைந்துவிட்டது.

   திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறப்பு அழைப்பிதழ் எனக்குக் கிடைத்திருந்ததால், நான் அப்போது ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தேன்.

   அந்த சிறப்பு நிகழ்ச்சி திருச்சியில் புதிதாகவும், மிகச்சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த புத்தம் புதிய ‘கலைஞர் அறிவாலயத்தில்’ நடைபெற்றது.

   அப்போதைய தமிழக மாண்புமிகு அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களும், திரு. சுபவீர பாண்டியன் போன்ற பல VIPs களும் மேடையில் ஏறி அமர்ந்து கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்த சிறப்பானதோர் கூட்டம் அது.

   அதில் மேடைக்கு அருகே முதல் ஒருசில வரிசைக்குள் நான் அமர்ந்திருக்கும் போது திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் எதிர்பாராத அழைப்பு எனக்குக் கிடைத்தது.

   என்னால் அந்தக்கூட்டத்திலிருந்து உடனடியாக வெளியே வரவும் முடியாமல், அவருடன் உரக்கப் பேசவும் முடியாமல், இணைப்பினைத் துண்டிக்கவும் மனசு இல்லாமல் தவித்திடும் ஓர் சூழ்நிலையில் நான் அன்று அப்போது இருந்தேன்.

   பிறகும் ஒரு குறுஞ்செய்தி மூலம் அவருக்கு என் அப்போதைய தர்ம சங்கடமான நிலைமையை விளக்கிச் சொல்லிவிட்டேன். அவரும் அதனைப் புரிந்துகொண்டு OK சொல்லிவிட்டார்.

   //இருவரையும் நன்கு அறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள் கோபு சார்!//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அற்புதமான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - நன்றியுடன் கோபு.

   Delete
 14. இருவரையும் கேள்விப்பட்டு இருக்கிறேன்....ஆனா...படித்ததில்லை....அறிமுகத்திற்கு நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. R.Umayal Gayathri April 17, 2016 at 7:46 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இருவரையும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.... ஆனா... படித்ததில்லை.... அறிமுகத்திற்கு நன்றி ஐயா.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். - VGK

   Delete
 15. iruvarumey miga sirantha eluthalargal. neengkal kurippittavatril palavatraip padithirukiren.

  good share VGK sir and GV sir.

  ennavo NHM writer download aagala. thirumba system ai restart seyanumpola.

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan April 17, 2016 at 7:51 PM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   //iruvarumey miga sirantha eluthalargal. neengkal kurippittavatril palavatraip padithirukiren. இருவரும் மிகச்சிறந்த எழுத்தாளர்கள். நீங்கள் குறிப்பிட்டவற்றில் பலவற்றைப் படித்திருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //good share VGK sir and GV sir. நல்ல பகிர்வு வீஜீ சார் + ஜீவீ சார்.//

   சந்தோஷம்.

   //ennavo NHM writer download aagala. thirumba system ai restart seyanumpola. என்னவோ என்.ஹெச்.எம். ரைட்டர் டவுன்லோடு ஆகலை. திரும்ப சிஸ்டமை ரீ-ஸ்டார்ட்ட் செய்யணும் போல//

   சரி.... சரி செய்யுங்கோ, அதை. :)

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம். அன்புடன் VGK

   Delete
 16. இரு பெரும் எழுத்தாளர்கள் பற்றிய சுவையான தகவல்கள் அறிந்து மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் April 17, 2016 at 8:29 PM

   வாங்கோ அருமை நண்பரே, வணக்கம்.

   //இரு பெரும் எழுத்தாளர்கள் பற்றிய சுவையான தகவல்கள் அறிந்து மிக்க மகிழ்ச்சி!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

   அன்புடன் VGK

   Delete
 17. http://geethamanjari.blogspot.in/2016/04/1.html என்னைக் கவர்ந்த பதிவுகள் - 1 (தொடர் பதிவு) என்ற தலைப்பினில் இன்று வெளியிடப்பட்டுள்ள தனது பதிவினில், கீத மஞ்சரி வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் கூறியுள்ள சிறப்புச் செய்திகள்:-
  oooooooooo

  நாம் எளிதில் கடந்துபோகும் ஒரு எளிய விஷயத்தைக்கூட அழகியலாக்கும் அல்லது மனத்தை நெகிழ்விக்கும் எழுத்துக்கு உரிய எழுத்தாளுமை வண்ணதாசன் அவர்கள். கல்யாண்ஜி என்றும் அறியப்படும் இவரது எழுத்துகளை வாசிப்பது ஒரு வரம் என்பேன். சமவெளி என்ற இவரது தளத்தில் அவ்வப்போதுதான் எழுதுகிறார். http://vannathaasan.blogspot.in/

  ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக இவரது படைப்புகளை வாசிக்க முடிகிறது. இயற்கையின் படைப்புகள் ஒவ்வொன்றையும் நேசிக்கும் அவற்றோடு உரையாடும் அதியற்புத நேசமனம் இவருடையது. அந்த நேசமனம் இவரது படைப்பின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுவது அழகு. உதாரணமாக இதோ சில ...

  http://vannathaasan.blogspot.in/2016/02/blog-post.html
  அரவிந்தம்

  http://vannathaasan.blogspot.in/2015/02/blog-post.html
  மீண்டும் இறகுகள்

  oooooooooo

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே. - VGK

  ReplyDelete
 18. இருவரின் படைப்புகளையும் ஓரளவே வாசித்திருக்கிறேன். இப்போது வாசிப்பிற்கான நேரமும் கிடைப்பதில்லை. அதனால் என் வீட்டிலே பல நூல்கள் இன்னும் படிக்கப்படாமல் பத்திரமாக இருக்கின்றன. விரைவில் நேரம் ஒதுக்கி அனைத்தையும் படிக்க வேண்டும் என்று சித்திரை முதல் நாளில் தீர்மானம் எடுத்திருக்கிறேன். இந்த ஆர்வத்தை தூண்டியது தங்களின் இந்த தொடர் பதிவுதான். அதற்காக தங்களுக்கு சிறப்பான நன்றிகள் அய்யா!

  ReplyDelete
  Replies
  1. S.P.SENTHIL KUMAR April 17, 2016 at 9:22 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இருவரின் படைப்புகளையும் ஓரளவே வாசித்திருக்கிறேன். இப்போது வாசிப்பிற்கான நேரமும் கிடைப்பதில்லை. அதனால் என் வீட்டிலே பல நூல்கள் இன்னும் படிக்கப்படாமல் பத்திரமாக இருக்கின்றன. விரைவில் நேரம் ஒதுக்கி அனைத்தையும் படிக்க வேண்டும் என்று சித்திரை முதல் நாளில் தீர்மானம் எடுத்திருக்கிறேன்.//

   ஆஹா, புத்தாண்டில் எடுத்துள்ள தங்களின் இந்தத் தீர்மானம் மிக அருமை. தங்கள் முயற்சிகள் வெற்றி அடையட்டும். வாழ்த்துகள்.

   //இந்த ஆர்வத்தை தூண்டியது தங்களின் இந்த தொடர் பதிவுதான். அதற்காக தங்களுக்கு சிறப்பான நன்றிகள் ஐயா!//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி நண்பரே. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

   Delete
 19. வண்னதாசனின் சில படைப்புக்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். இதுவரை நாஞ்சில் நாடனின் எழுத்தை வாசித்ததில்லை. விரைவில் வாங்கிப் ப‌டிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. மனோ சாமிநாதன் April 17, 2016 at 9:37 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //வண்ணதாசனின் சில படைப்புக்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். இதுவரை நாஞ்சில் நாடனின் எழுத்தை வாசித்ததில்லை. விரைவில் வாங்கிப் ப‌டிக்க வேண்டும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். - அன்புடன் VGK

   Delete
 20. இருவரையும் அறிவோம் என்றாலும் வாசித்ததில்லை. பல நூல்கள் வீட்டில் கிடப்பில் உள்ளன. இன்று கூட தோழி கீதா மதிவாணன் அவர்கள் வண்ணதாசனை தனது பதிவில் மனம் கவர்ந்த பதிவர்கள் பட்டியலில் சொல்லியிருந்தார். மிகவும் சிலாகித்துச் சொல்லியிருந்தார். வாசிக்க வேண்டும்.
  சிறப்பான அறிமுகத்திற்கு மிக்க நன்றி சார். அவர்களது நூல்களையும் குறித்துக் கொண்டோம்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. Thulasidharan V Thillaiakathu
   April 18, 2016 at 12:50 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இருவரையும் அறிவோம் என்றாலும் வாசித்ததில்லை. பல நூல்கள் வீட்டில் கிடப்பில் உள்ளன.//

   :) ஆஹா, மிகவும் கரெக்ட். நூல்கள் உள்பட பல பொருட்கள் வீட்டில் கிடப்பில்தான் போடப்பட்டு உள்ளன. சமயத்தில் இவற்றையெல்லாம் என்ன செய்வது என்றே புரியாமல் முழிக்கத்தான் வேண்டியுள்ளது. :)

   //இன்று கூட தோழி கீதா மதிவாணன் அவர்கள் வண்ணதாசனை தனது பதிவில் மனம் கவர்ந்த பதிவர்கள் பட்டியலில் சொல்லியிருந்தார். மிகவும் சிலாகித்துச் சொல்லியிருந்தார்.//

   ஆமாம். நானும் அதனை அவர்கள் பதிவினில் வாசித்து மகிழ்ந்தேன். அதன் இணைப்பைக்கூட இங்கு மேலே நான் மற்றவர்களுக்காகக் குறிப்பிட்டுள்ளேன்.

   வண்ணதாசன் பற்றி என் பதிவினில் வெளியிடும் அன்றே, அவர்கள் பதிவிலும் அவரைப்பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகப்பெரிய ஆச்சர்யமாகத்தான் உள்ளது. This is just a co-incident only. :)

   // வாசிக்க வேண்டும். //

   மிக்க மகிழ்ச்சி. :)

   //சிறப்பான அறிமுகத்திற்கு மிக்க நன்றி சார். அவர்களது நூல்களையும் குறித்துக் கொண்டோம்.. கீதா//

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK

   Delete
 21. அறிமுகம் தொடரட்டும் நண்பரே
  வாழ்த்துகள் ....

  ReplyDelete
  Replies
  1. Ajai Sunilkar Joseph April 18, 2016 at 9:12 AM

   //அறிமுகம் தொடரட்டும் நண்பரே, வாழ்த்துகள் ....//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.-VGK

   Delete
 22. மிகச் சிறாந்த எழுத்தாளர்கள் என
  அறியப்பட்ட இந்த இருவரின் படைப்புகளையும்
  ஏனோ இன்றுவரை படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை
  அவசியம் வாங்கிப் படித்து விடுவேன்

  முதலில் ஜீவி அவர்களின் நூலை வாங்கிப் படித்து விட்டுப்
  பின் ஒவ்வொன்றாகத் தொடரலாம் என உள்ளேன்

  மதுரையில் கிடைக்குமிடம் தெரிவித்தால்
  உதவியாய் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, ரமணி சார்.
   நூலின் விற்பனை பதிப்பகத்தார் சம்பந்தப்பட்டதாய் இருக்கிறது. அதனால் அவர்களிடம் விசாரித்து மதுரையில் எங்கு கிடைக்கும் என்று தங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
   மதுரையில் கிடைக்காது எனினும் கூரியரில் தங்களுக்கு அனுப்ப வழி பண்ணுகிறேன்.
   கீழ்க்கண்டது எனது மெயில் ஐடி:
   jeeveeji@gmail.com
   உங்கள் மதுரை முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும். தகுந்த ஏற்பாடுகளைச் செய்கிறேன்.
   அன்புடன்,
   ஜீவி

   Delete
  2. Ramani S April 18, 2016 at 5:05 PM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

   //மிகச் சிறந்த எழுத்தாளர்கள் என அறியப்பட்ட இந்த இருவரின் படைப்புகளையும் ஏனோ இன்றுவரை படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவசியம் வாங்கிப் படித்து விடுவேன். முதலில் ஜீவி அவர்களின் நூலை வாங்கிப் படித்து விட்டுப் பின் ஒவ்வொன்றாகத் தொடரலாம் என உள்ளேன்.//

   மிக்க மகிழ்ச்சி, சார். அப்படியும்கூடச் செய்யலாம்.

   //மதுரையில் கிடைக்குமிடம் தெரிவித்தால் உதவியாய் இருக்கும்//

   இதற்கான பதிலை நம் ஜீவி சார் அவர்களே மேலே எழுதியுள்ளார்கள். அவருக்கும் என் நன்றிகள்.

   தங்களின் தொடர் வருகைக்கு, என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ரமணி சார். அன்புடன் VGK

   Delete
 23. வண்ணதாசன், நாஞ்சில் நாடன் படைப்புகளை படிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. நாஞ்சில் நாடன் பேட்டிகளை அவ்வப்போது படித்து இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ April 20, 2016 at 1:37 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //வண்ணதாசன், நாஞ்சில் நாடன் படைப்புகளை படிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. நாஞ்சில் நாடன் பேட்டிகளை அவ்வப்போது படித்து இருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி சார். தங்களின் அன்பான தொடர் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

   தாங்கள் இனியும் வருகை தர வேண்டிய + கருத்தளிக்க வேண்டிய பகுதி ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது. அதுவே நாளை என்னால் வெளியிடப்பட இருக்கும் பகுதி-20 (இந்த என் தொடரின் நிறைவுப்பகுதி) ஆகும்.

   இது ஓர் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் VGK

   Delete
 24. வண்ணதாசன் அறியேன்.
  நாஞ்சில் நாடனின் தமிழ்ப் பிடிப்பு சில நேரம் பிரமிக்க வைக்கிறது. பொதுவாக நாஞ்சில் நாடன், எஸ்.ரா அப்புறம் அந்த கடல் சினிமா கதாரிசியர்.. எல்லாரும் என்னவோ இவர்களை நம்பியே தமிழ் இலக்கியம் இருப்பது போல patronozingஆக எழுதும் போது எரிச்சல் வருகிறது. patronozingக்கு தமிழ் தெரியவில்லை என்ற இயலாமையில் அவமானமும் வருகிறது. தலைஎழுத்து?

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை April 23, 2016 at 10:11 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //வண்ணதாசன் அறியேன்.//

   நானும் அறியேன். :)

   //நாஞ்சில் நாடனின் தமிழ்ப் பிடிப்பு சில நேரம் பிரமிக்க வைக்கிறது.//

   அப்படியா? சந்தோஷம் !

   //பொதுவாக நாஞ்சில் நாடன், எஸ்.ரா அப்புறம் அந்த கடல் சினிமா கதாரிசியர்.. எல்லாரும் என்னவோ இவர்களை நம்பியே தமிழ் இலக்கியம் இருப்பது போல patronozingஆக எழுதும் போது எரிச்சல் வருகிறது.//

   அடடா .... எரிச்சல் ஏற்பட்டால் மஹா கஷ்டமாச்சே!

   //patronozingக்கு தமிழ் தெரியவில்லை என்ற இயலாமையில் அவமானமும் வருகிறது. தலைஎழுத்து?//

   PATRON என்றால் தமிழில் புரவலர் என்று பிறர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.

   PATRONOZING என்று ஒரு வார்த்தையே ஒருவேளை இருக்காதோ என்னவோ. வேறு யாராவது வந்து இதுபற்றி ஏதேனும் சொல்கிறார்களா எனப் பார்ப்போம்.

   இதையெல்லாம் போய் ஒரு அவமானமாக நினைக்கவே நினைக்காதீங்கோ.

   //தலைஎழுத்து?// .... யாருக்கு? :)

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK

   Delete
  2. அப்பாதுரை April 23, 2016 at 10:11 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //வண்ணதாசன் அறியேன்.//

   நானும் அறியேன். :)

   //நாஞ்சில் நாடனின் தமிழ்ப் பிடிப்பு சில நேரம் பிரமிக்க வைக்கிறது.//

   அப்படியா? சந்தோஷம் !

   //பொதுவாக நாஞ்சில் நாடன், எஸ்.ரா அப்புறம் அந்த கடல் சினிமா கதாரிசியர்.. எல்லாரும் என்னவோ இவர்களை நம்பியே தமிழ் இலக்கியம் இருப்பது போல patronozingஆக எழுதும் போது எரிச்சல் வருகிறது.//

   அடடா .... எரிச்சல் ஏற்பட்டால் மஹா கஷ்டமாச்சே!

   //patronozingக்கு தமிழ் தெரியவில்லை என்ற இயலாமையில் அவமானமும் வருகிறது. தலைஎழுத்து?//

   PATRON என்றால் தமிழில் புரவலர் என்று பிறர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.

   PATRONOZING என்று ஒரு வார்த்தையே ஒருவேளை இருக்காதோ என்னவோ. வேறு யாராவது வந்து இதுபற்றி ஏதேனும் சொல்கிறார்களா எனப் பார்ப்போம்.

   இதையெல்லாம் போய் ஒரு அவமானமாக நினைக்கவே நினைக்காதீங்கோ.

   //தலைஎழுத்து?// .... யாருக்கு? :)

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK

   Delete
 25. இருவரையும் ரசித்திருக்கிறேன். நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் புத்தகம் என்னிடம் இருந்தது. யாரோ வாங்கிட்டுப் போய்த் திருப்பிக் கொடுக்கலை! :) திருநெல்வேலி ஜில்லாவில் பிரபலமான பெண் சித்தர் ஆவுடையக்காளைக் குறித்து நாஞ்சில் நாடன் மூலமாகவே அறிந்தேன். :)

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam April 24, 2016 at 9:31 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இருவரையும் ரசித்திருக்கிறேன்.//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் புத்தகம் என்னிடம் இருந்தது. யாரோ வாங்கிட்டுப் போய்த் திருப்பிக் கொடுக்கலை! :)//

   அவர்கள் தலைகீழாக நின்று கெஞ்சிக் கூத்தாடியிருந்தாலும், அந்தத் ’தலைகீழ் விகிதங்கள்’ புத்தகத்தைத் தாங்கள் இரவல் தந்திருக்கவே கூடாது.

   அந்த ‘யாரோ’ சத்தியமாக நான் இல்லை மேடம். ஏனெனில் நான் புத்தகங்களைப் படிக்க இப்போதெல்லாம் யாரிடமும் இரவல் வாங்குவதே இல்லை.

   படித்துவிட்டு எப்படியும் அதுபற்றி நூல் விமர்சனம் செய்வேன் என்ற நம்பிக்கையில் அவர்களாகவே (நூல் ஆசிரியர்களே) அன்பளிப்பாக அனுப்பி வைத்து விடுகிறார்கள். அதுபோலவே ஒரு டஜனுக்கும் மேல் என்னிடம் குவிந்துள்ளன. அவற்றில் எதையும் பிரிக்கவே நேரம் இல்லை எனக்கு.

   //திருநெல்வேலி ஜில்லாவில் பிரபலமான பெண் சித்தர் ஆவுடையக்காளைக் குறித்து நாஞ்சில் நாடன் மூலமாகவே அறிந்தேன். :)//

   அப்படியா, சந்தோஷம்.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் நன்றிகள், மேடம். - VGK

   Delete
 26. திரு. வண்ணதாசன் அவர்களின் ’ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பு நூல் இந்த 2016-ம் ஆண்டுக்கான சாஹித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளது என்ற செய்தி 21.12.2016 வெளியிடப்பட்டுள்ளது.

  Ref:

  http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2016.pdf

  ReplyDelete