About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, April 3, 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 11 ’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  
19) சமூகப் பிரக்ஞை கொண்ட
ராஜம் கிருஷ்ணன்
[பக்கம் 113 முதல் 117 வரை]
பெண் எழுத்தாளர்களில் ராஜம் கிருஷ்ணனின் பங்கு தனித்தன்மையாக இருக்கிறது.  இவர் சரித்திர கதைகள் எழுதுவது போல சமூக நாவல்களுக்கும் கள ஆய்வு செய்வாராம்.   கதை நடக்கும் அந்தப் பகுதிகளுக்குப் போய் மக்களோடு  மக்களாக வாழ்ந்து எழுதியிருக்கிறார். அப்படி இவர் தூத்துக்குடி உப்பளங்கள் பற்றி  எழுதிய 'கரிப்பு மணிகள்' நாவலைப் பற்றியும், நீலகிரி படக இன மக்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டியுள்ள ‘குறிஞ்சித்தேன்’ பற்றியும் ஜீவி குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். 

தேசம் சுதந்திரமடைந்ததற்கு பின்னான காலத்து ஏமாற்றங்களை பதிவு செய்து இவர் எழுதியுள்ள ’வேருக்கு நீர்’; ‘பாதையில் படிந்த அடிகள்’; ‘அலைவாய்க்கரையில்’; ‘சேற்றில் மனிதர்கள்’; ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’  போன்ற பலவும் இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

கோவா விடுதலைப்போரின் கலனாய் அமைந்த ‘வளைக்கரம்’ அழகான படிமம் கொண்ட ஒன்று என்கிறார். சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையரைப்பற்றிய சூழலில் அமைந்த இவரது பிரமிப்பூட்டும் நாவல் ’முள்ளும் மலர்ந்தது’. இந்த நாவலுக்காக, சரணடைந்த கொள்ளையர்களை நேரில் சந்தித்திருக்கிறார், இந்த வீராங்கனை.

சாகித்ய அகாதமி உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ள இவரின் படைப்புகள் பற்றியும், கட்டுரைத் தொகுப்புகள் பற்றியும், இவரது ‘புதிய சிறகுகள்’ குறுநாவல் பற்றியும், இவரின் இதர படைப்புகள், வாழ்க்கை இலட்சியங்கள், காந்தீய சிந்தனைகள் பற்றியும் பல விஷயங்களை ஜீவி மிக விவரமாக எழுதியிருக்கிறார்.   
20) மன உணர்வுகளை மீட்டிய
ஆர். சூடாமணி
[பக்கம் 118 முதல் 121 வரை]


 


எழுத்தாளர் சூடாமணியின்  'ரயில்'  சிறுகதை பற்றி கண் முன் காண்பது போல விவரித்து ஜீவி எழுதியிருக்கிறார்.  'இணைப்பறவை' என்ற இன்னொரு கதையைப் பற்றிப் படிக்கும் பொழுது நெகிழ்ச்சியாக இருக்கிறது. ‘பூமாலை’ போன்ற சூடாமணியின் குறிப்பிட்டச் சிறப்பு வாய்ந்த எழுத்துக்களையெல்லாம் பற்றி தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார் ஜீவி. 

சூடாமணி அவர்களின் முதல் நாவல் ‘மனதுக்கு இனியவள்’. அதன்பிறகு தமிழ்நாட்டின் பிரபல பத்திரிகைகள் அனைத்திலும் இவரின் படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. ’துள்ளித்தெறிக்கும் படாடோபமில்லாத அமைதியான ஆனால் ஆழமான எழுத்துநடை இவருடையது; மனித மனத்தின் மெல்லிய உணர்வுகளை மயிலிறகாமல் வருடிக்காட்டுகிற மாதிரி’ என்று இவரின் எழுத்தினை சிலாகித்துச் சொல்லியுள்ளார் ஜீவி. 

சூடாமணி அவர்கள் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறாராம். ஆங்கிலத்தில் எழுதும் பொழுது  ராகவன் சூடாமணி என்று எழுதுவாராம். 
-oOo-

இவரின் ’பூமாலை’ சிறுகதையில் 
(ஜீவியின் நூல் மூலமாக)
எனக்குப்பிடித்தமான ஓர் இடம்:

இளம் வயதில் சித்தியின் கொடுமைக்கு ஆளான ஒரு பெண், வளர்ந்து மணமாகி நல்ல நிலைக்கு வந்த பின்பும், தன் சித்தியின் மேல் மாறாத வெறுப்பு கொண்டிருக்கிறாள். 

சித்திக்கு இருதயக்கோளாறு, வால்வு மாற்று சிகிச்சைக்காக பொருளாதார உதவிகோரி சித்தியின் மகனிடமிருந்து கடிதம் வருகிறது. மனப்போராட்டம் நடக்கிறது. 

ஏழு வயதில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை, தன் ஐம்பது வயதிலும் நினைவு வைத்துக்கொண்டு மருகுவது நியாயமில்லை என்கிறது அவளின் இன்னொரு மனது.  

வெறுப்பு, கசப்பு என்பதெல்லாம் மனதில் மண்டும் குப்பைக் கூளங்கள். அவற்றை ஒரே வீச்சில் பெருக்கித்தள்ளித் துப்புறவாக்கி, சுத்தமான இடத்தில் பூக்களை வை; மக்கிய நாற்றம் நீங்கி பூமணம் கமழும் பார்! என்கிற அவளின் நல்ல மனத்தின்  குரலுக்கு செவிசாய்த்து அதை அனுபவித்துப் பார்க்கிறாள் அவள்.

மன வியாகூலங்களைச் சுமந்துகொண்டு புழுங்குவதும் ஒரே மனம். அந்தப்புழுங்கலுக்குத் தீர்வு சொல்லி, புழுங்கலைத் தீர்த்துவைத்து, மகிழ வைப்பதும் அதே மனம்.  

மனதில் விருப்பு வெறுப்புக்களை, மனமே மனதுக்குச் சொல்கிற மாதிரி, தானே தனக்கு எழுதிக்கொள்ளும், கடிதப் பாணியில் இந்தக்கதையை வார்த்தெடுத்திருப்பார் சூடாமணி. 

அணையா விளக்கு 
ஆர். சூடாமணி


எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்கள் பற்றி 
நான் சமீபத்தில் அறிந்த சில தகவல்கள் - VGK

தமிழ்-- இலக்கியம்-- வாழ்க்கை என்ற முக்கோணத்தில் மட்டும் வாழ்ந்து, தன்னுடைய சொத்து முழுவதையும் ( சுமார் 11 கோடி ரூபாய் ) அனாதை பிள்ளைகளுக்கு எழுதி விட்டு சென்ற மறைந்த எழுத்தாளர் ஆர். சூடாமணி, இலக்கிய உலகிலும் சரி, சமுதாய வாழ்விலும் அணையா விளக்காக் திகழ்கின்றார்" என்று எழுதியுள்ளார் திரு. இரா. ஜெயானந்தன் அவர்கள். 

மேலும் அதிக விபரங்களுக்கு:இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:    


  
   வெளியீடு: 05.04.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

42 comments:

 1. அன்புடையீர், அனைவருக்கும் என் வணக்கங்கள்.

  03.04.2016 ஞாயிறு + 04.04.2016 திங்கள் ஆகிய ஓரிரு நாட்கள் மட்டும் நான் ’ஹனிமூன்’ [ :) ] செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், இந்தத்தொடரின் பகுதி-11 மட்டும், நான் சொல்லியிருந்த நேரத்திற்கு சற்று முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இதற்கிடையில் இந்த இருநாட்களில் தாங்கள் என் பதிவுகளுக்கு அனுப்பி வைக்கப்போகும் தங்களின் பின்னூட்டங்களை, நான் என் பின்னூட்டப்பகுதியில் வெளியிடுவதுகூட சற்றே தாமதமாகலாம்.

  நான் Honey Moon போகுமிடத்தில் ஒருவேளை Wi-Fi Net Connection எனக்கு சுலபமாகக் கிடைக்குமானால், தங்களின் கருத்துக்களை உடனுக்குடன் வெளியிடவும் நான் கட்டாயமாக முயற்சிப்பேன்.

  அதுபோல தங்களின் பின்னூட்டங்களுக்கு, நான் என் வழக்கமான பதில்களைத் தருவதும் சற்றே தாமதமானாலும் ஆகலாம். சற்றே தாமதமானாலும் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் என்னால் தனித்தனியே பதில் அளிக்கப்படும்.

  அனைவரும் இந்த சிறிய தாமதத்தை மட்டும், அன்புடன் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். - அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. பொறுத்துக்கொள்ள மாட்டோம். அது என்ன இந்த வயசில "ஹனிமூன்" ?

   Delete
  2. தாமதமானாலும் பரவாயில்லை நண்பரே
   வெற்றிகரமாக சென்று வாருங்கள்....

   Delete
  3. பழனி.கந்தசாமி April 3, 2016 at 3:31 AM

   //பொறுத்துக்கொள்ள மாட்டோம். அது என்ன இந்த வயசில "ஹனிமூன்" ?//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, நல்லதொரு கேள்வி!

   ஒரு ஆண், ஒரு பெண்ணுடன், ஜாலியாகவோ, ஜாலிக்காகவோ ... அதாவது பேரெழுச்சியுடன் குஜாலாகவோ அல்லது தன் தலைவிதியை நொந்து கொண்டோ ... தன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு, எங்காவது வெளியிடங்களுக்குப் போய்த்தங்கிவிட நேர்வதே, நான் சொல்லும் ’ஹனிமூன்’ ஆகும்.

   இந்த வாய்ப்பினை, அவரவர் தானே இஷ்டப்பட்டும் அமைத்துக்கொள்ளலாம். அல்லது பிறர் நிர்பந்தங்கள் மற்றும் சூழ்நிலை காரணமாக, அதுவாகவே எதிர்பாராத வகையில் அமைந்து, நிகழவும் வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

   இதற்கு வயதெல்லாம் ஒரு தடையே இல்லை.

   ஆண் பெண் ஒருவருக்கொருவர் வயதில் இடைவெளி இருப்பினும் ... மனதில் நெருக்கம் இருந்தால் ... அதுவே போதும் ‘ஹனிமூன்’ மிகச்சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும், எழுச்சிமிக்கதாகவும், இன்பமாகவும் அமைய. :)

   கிடைக்கும் வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனமாகும். :)

   இப்படி ஒரு கேள்வியைக்கேட்டு என்னை மிகவும் புலம்ப வைத்து விட்டீர்களே, ஐயா. :)

   அன்புடன் VGK

   Delete
 2. எழுத்தாளர்களின் அறிமுகம் அருமை நண்பரே
  உங்களின் இந்த அறிமுகங்களால்தான்
  எனக்குள் நூல்கள் படிக்க ஆர்வம் வந்தது....
  தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. Ajai Sunilkar Joseph April 3, 2016 at 4:09 AM

   //தாமதமானாலும் பரவாயில்லை நண்பரே
   வெற்றிகரமாக சென்று வாருங்கள்....//

   மிக்க நன்றி.

   Ajai Sunilkar Joseph April 3, 2016 at 4:13 AM

   //எழுத்தாளர்களின் அறிமுகம் அருமை நண்பரே
   உங்களின் இந்த அறிமுகங்களால்தான்
   எனக்குள் நூல்கள் படிக்க ஆர்வம் வந்தது....
   தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள் நண்பரே....//

   வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 3. ஆர். சூடாமணி தனது இறுதிக் காலத்தை மருத்துவமனையில் யாருமின்றி கழித்ததாய் நினைவு. ராஜம் கிருஷ்ணன் பற்றிய நினைவுகளும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். April 3, 2016 at 6:17 AM

   வாங்கோ, ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம், வணக்கம்.

   //ஆர். சூடாமணி தனது இறுதிக் காலத்தை மருத்துவமனையில் யாருமின்றி கழித்ததாய் நினைவு.//

   பாவம் ... சில பேர்களின் நிலைமை அதுபோல ஆகிவிடுகிறது. எவ்வளவுதான் பணமிருந்தாலும், தூய ஆத்மார்த்தமான அன்புள்ளங்கள் அருகில் இல்லாதுபோனால் மிகவும் கஷ்டமே.

   //ராஜம் கிருஷ்ணன் பற்றிய நினைவுகளும் அருமை.//

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம். - VGK

   Delete
 4. சூடாமணி! மகுடமணி கதையுலகில்!! அதுவும் அந்தக்காலத்துப் பெண் எழுத்தாளர்களில்...

  அடுத்த பகுதி எங்கள் ஏரியாவாக்கும்!!!!!

  அட!!! ஹனிமூன்!!! நீங்கள் இளமையானவர்! என்றும்!!!! எஞ்சாய் சார்! வாழ்த்துகள்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. Thulasidharan V Thillaiakathu April 3, 2016 at 7:45 AM

   வாங்கோ, வணக்கம்.

   //சூடாமணி! மகுடமணி கதையுலகில்!! அதுவும் அந்தக்காலத்துப் பெண் எழுத்தாளர்களில்...//

   மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம்.

   //அடுத்த பகுதி எங்கள் ஏரியாவாக்கும்!!!!! //

   அப்படியா, மிக்க மகிழ்ச்சி.

   //அட!!! ஹனிமூன்!!! நீங்கள் இளமையானவர்! என்றும்!!!! எஞ்சாய் சார்! வாழ்த்துகள்! - கீதா//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், இனிய கருத்துக்களுக்கும், இறுதியில் சொல்லியுள்ள வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK

   Delete
 5. திருமதி ராஜம் கிருஷ்ணன் கதைகள் படித்த நினைவில்லை.. அவரைப்பற்றிய செய்தியை கொஞ்ச நாட்கள் முன்பு ஒரு பத்திரிகையில் படித்தது நினைவில் இருக்கு. திறமையான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் இன்று முதிய வயதில் எந்த சொந்தமுமே இல்லாமல் முதியோர் இல்லத்தில் கஷ்ட்டப்படுவதாக போட்டிருந்தார்கள். சூடாமணி அவர்களைப் பற்றியும் பின்னூட்டத்தில் ஒருவர் சொல்லி இருந்தார் திறமை, புகழ், பணம் எதுவுமே வயதான முதியகாலத்தில் அவர்களுக்கு உதவவில்லையே. எப்படி இருக்கீங்கன்னு அன்பாக விசிரிக்க அன்பு உள்ளங்கள் இல்லாம எவ்வளவு தவிச்சு போயிருப்பாங்க... கொடுமை.......

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... April 3, 2016 at 10:45 AM

   வாங்கோ, வணக்கம்.

   //திருமதி ராஜம் கிருஷ்ணன் கதைகள் படித்த நினைவில்லை.. அவரைப்பற்றிய செய்தியை கொஞ்ச நாட்கள் முன்பு ஒரு பத்திரிகையில் படித்தது நினைவில் இருக்கு. திறமையான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் இன்று முதிய வயதில் எந்த சொந்தமுமே இல்லாமல் முதியோர் இல்லத்தில் கஷ்டப்படுவதாக போட்டிருந்தார்கள். சூடாமணி அவர்களைப் பற்றியும் பின்னூட்டத்தில் ஒருவர் சொல்லி இருந்தார் திறமை, புகழ், பணம் எதுவுமே வயதான முதியகாலத்தில் அவர்களுக்கு உதவவில்லையே. எப்படி இருக்கீங்கன்னு அன்பாக விசிரிக்க அன்பு உள்ளங்கள் இல்லாம எவ்வளவு தவிச்சு போயிருப்பாங்க... கொடுமை.......//

   மிகவும் கொடுமைதான். இந்தப்பிரபல எழுத்தாளர்கள் இருவர் வாழ்க்கையிலும் பல்வேறு சோதனைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

   -=-=-=-=-=-

   ராஜம் கிருஷ்ணன் அவர்களைப்பற்றிய சில கூடுதல் தகவல்கள்:-

   எங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறியில் 1925-இல் பிறந்தவர். இவர் கன்னிப்பெண்ணாக இருக்கும்போதே அப்போதைய வழக்கப்படி தன் 15-ம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டவர். இவர் முறையான பள்ளிப்படிப்பு அதிகம் படித்தவர் இல்லை. வாசிப்பிலும் எழுதுவதிலும் மிகவும் ஆசையுடன் இருந்தவர். இவரின் கணவர் திரு. கிருஷ்ணன் அவர்கள் ஓர் மின்பொறியாளர்.

   இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே, அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்கள் மட்டுமே.

   ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை.

   முதுமையில் வறுமையால் வாடிய இவர் சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.

   {இவரின் கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில், 2002 ஆம் ஆண்டில், அவர் இயற்கை எய்தி விட்டார்.}

   -=-=-=-=-=-

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 6. ஓ... ஹனிமூனா?????? இது பத்தி ஏற்கனவே ஒரு பின்னூட்டத்துல எனக்கு சொல்லி இருக்கீங்க....... இன்று இரண்டு பிரபல பெண் எழுத்தாளர் களை அறிமுகம் செய்திருக்கீங்க... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. April 3, 2016 at 11:09 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஓ... ஹனிமூனா?????? இது பத்தி ஏற்கனவே ஒரு பின்னூட்டத்துல எனக்கு சொல்லி இருக்கீங்க.......//

   ஆமாம். அது அடிக்கடி நாங்கள் சென்றுவரும் ரொட்டீன் ஹனிமூன்ஸ். இது ஸம்திங் ஸ்பெஷலாக்கும். :)

   //இன்று இரண்டு பிரபல பெண் எழுத்தாளர் களை அறிமுகம் செய்திருக்கீங்க... நன்றி...//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 7. இன்று பெண் பிரபல எழுத்தாளர்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. உங்க ஹனிமூன் ட்ரிப் எப்ப முடிந்து எப்ப உங்க ரிப்ளை கமெண்ட் வரும் என்று ஆர்வமுடன் காத்திருப்பு.....

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... April 3, 2016 at 11:18 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்று பெண் பிரபல எழுத்தாளர்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.//

   மிக்க மகிழ்ச்சி.

   //உங்க ஹனிமூன் ட்ரிப் எப்ப முடிந்து எப்ப உங்க ரிப்ளை கமெண்ட் வரும் என்று ஆர்வமுடன் காத்திருப்பு.....//

   ஆஹா, அடடா, என்னே ஒரு ஆர்வத்துடன் கூடிய காத்திருப்பு !!!!! மெய்சிலிர்க்க வைக்கிறீர்கள்.

   உங்களைப் போன்றோருக்காகவே, சீக்கரமாக என் ஹனிமூன் வேலைகளை, திருப்தியாக முடித்துக்கொண்டு பறந்து ஓடியாந்துட்டேன். :)

   அது இருக்கட்டும் ... இதற்கு முந்திய பதிவான பகுதி-10 இல் தங்களையும் தங்கள் நண்பர் Mr Srinivasan அவர்களையும் காணுமே .... ஏன்? என்ன ஆச்சு?

   எனினும் இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   Delete
 8. இன்று இரண்டு பிரபல பெண் எழுத்தாளர்களைத் தெரிந்து கொண்டோம். ஒரு சமயம் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி மேடம் ஒருவரை பேட்டி எடுக்க போயிருக்காங்க. இவர்களிடம் ஓ.... நீங்க பெண் எழுத்தாளரான்னு அவர் கேட்டாங்க. சிவசங்கரி மேடம் சிறிது கோபத்துடன் எழுத்தாளர்களை ஆண் பெண் என்று ஏன் தரம் பிரிக்கறீங்க. எழுத்துக்களைமட்டும் பாருங்க என்றார்களாம் கரெக்டு தானே......

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் April 3, 2016 at 11:31 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்று இரண்டு பிரபல பெண் எழுத்தாளர்களைத் தெரிந்து கொண்டோம்.//

   அப்படி தங்களுக்கு ஓர் ப்ராப்தமா ! மிக்க மகிழ்ச்சி.

   //ஒரு சமயம் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி மேடம் ஒருவரை பேட்டி எடுக்க போயிருக்காங்க. இவர்களிடம் ஓ.... நீங்க பெண் எழுத்தாளரான்னு அவர் கேட்டாங்க. சிவசங்கரி மேடம் சிறிது கோபத்துடன் எழுத்தாளர்களை ஆண் பெண் என்று ஏன் தரம் பிரிக்கறீங்க. எழுத்துக்களைமட்டும் பாருங்க என்றார்களாம். கரெக்டு தானே......//

   கரெக்டுதான். அதுபோல சொல்லக்கூடியவர்களும்தான்.

   நான் BHEL இல் பணியாற்றும்போது, 2005 or 2006 என்று ஞாபகம். ஒருநாள் அலுவலக நேரத்திலேயே ஒரு சிறிய விழா நிகழ்ச்சி (மீட்டிங் போல ஒரு 300 பேர்கள் மட்டும் அமரும் மிகப்பெரிய ஏ.ஸி. ஹாலில்) நடைபெற்றது. இலக்கிய சம்பந்தமான அந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சிவசங்கரி மேடம் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

   நானும், என்னுடன் அப்போது வேலைபார்த்துவந்த திரு. ரிஷபன் போன்ற ஒருசில BHEL எழுத்தாள நண்பர்களும் சென்றிருந்தோம்.

   எழுத்தாளர் சிவசங்கரி அவர்களை நேரில் சந்திக்கவும், அவர்களின் பேச்சை சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் கேட்கவும் எங்களுக்கு அன்று ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்தது.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 9. எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களுள் ராஜம் கிருஷ்ணனும் ஒருவர். அவருடைய பல கதைகளை வாசித்துள்ளேன். ஆர். சூடாமணி அவர்கள் பற்றி இப்போதுதான் அறிகிறேன். சொத்துகளை இழந்து வறுமையில் வாடி அநாதை இல்லத்தில் வாழ்ந்து இறந்துபோன ராஜம் கிருஷ்ணன் அவர்களும் கோடிக்கணக்கான சொத்துகளை அநாதை இல்லத்துக்கு எழுதிவைத்து இறந்த ஆர்.சூடாமணி அவர்களும் ஒரே பதிவில் அடையாளங்காட்டப்பட்டு... விசித்திரம்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி April 3, 2016 at 11:37 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களுள் ராஜம் கிருஷ்ணனும் ஒருவர். அவருடைய பல கதைகளை வாசித்துள்ளேன்.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //ஆர். சூடாமணி அவர்கள் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.//

   அப்படியா? நல்லது.

   //சொத்துகளை இழந்து வறுமையில் வாடி அநாதை இல்லத்தில் வாழ்ந்து இறந்துபோன ராஜம் கிருஷ்ணன் அவர்களும் கோடிக்கணக்கான சொத்துகளை அநாதை இல்லத்துக்கு எழுதிவைத்து இறந்த ஆர்.சூடாமணி அவர்களும் ஒரே பதிவில் அடையாளங்காட்டப்பட்டு... விசித்திரம்.//

   இருவரின் சொந்த வாழ்க்கைக் கதைகளையும் கேட்க மிகவும் விசித்திரமாகத்தான் உள்ளன.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், குறிப்பிட்டுச் சொல்லும், அதுவும் ஒப்பிட்டுச்சொல்லும், சில அரிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 10. ராஜம் கிருஷ்ணன் அவர்கள் கதைகள் படித்து இருக்கிறேன். அவர்களின் இறுதிகாலம் மிகவும் வேதனை.

  //மன வியாகூலங்களைச் சுமந்துகொண்டு புழுங்குவதும் ஒரே //மனம். அந்தப்புழுங்கலுக்குத் தீர்வு சொல்லி, புழுங்கலைத் தீர்த்துவைத்து, மகிழ வைப்பதும் அதே மனம். //
  சூடாமணி அவர்கள் சொல்வது அருமை.
  அவர்களின் நல்ல செயல் காலம் முழுவதும் பேசப்படும். வணக்கம் சொல்ல வேண்டும் நல்ல உள்ளத்துக்கு.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு April 4, 2016 at 3:30 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //ராஜம் கிருஷ்ணன் அவர்கள் கதைகள் படித்து இருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி மேடம்.

   //அவர்களின் இறுதிகாலம் மிகவும் வேதனை.//

   ஆமாம் மேடம். கேட்கவே மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.

   **மன வியாகூலங்களைச் சுமந்துகொண்டு புழுங்குவதும் ஒரே மனம். அந்தப்புழுங்கலுக்குத் தீர்வு சொல்லி, புழுங்கலைத் தீர்த்துவைத்து, மகிழ வைப்பதும் அதே மனம்.**

   //சூடாமணி அவர்கள் சொல்வது அருமை. //

   ஆம். அருமையாகச் சொல்லி விட்டீர்கள். மிகவும் சந்தோஷம் மேடம்.

   //அவர்களின் நல்ல செயல் காலம் முழுவதும் பேசப்படும். வணக்கம் சொல்ல வேண்டும் நல்ல உள்ளத்துக்கு.//

   நிச்சயமாக ... நல்ல உள்ளம் கொண்டிருந்த அவர் நம் எல்லோருடைய வணக்கத்துக்கும் உரியவர் மட்டுமே.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK

   Delete
 11. பெண்களை அதிக வாசகர்களாகச் செய்த
  பல பெண் எழுத்தாளர்களில் இவர்கள் இருவரும்
  முதன்மையானவர்கள் எனவே சொல்லலாம்
  அருமையான அறிமுகம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Ramani S April 5, 2016 at 6:32 AM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

   //பெண்களை அதிக வாசகர்களாகச் செய்த பல பெண் எழுத்தாளர்களில் இவர்கள் இருவரும் முதன்மையானவர்கள் எனவே சொல்லலாம். அருமையான அறிமுகம். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அருமையான அறிமுகம் என்ற வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   Delete
 12. ராஜம் கிருஷ்ணம் அவர்களின் நாவல் வாசித்து இருக்கிறேன்.
  சூடாமணி அவர்கள் எழுத்துக்களை வாசித்தது இல்லை. அருமையான இருபெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி.


  //வெறுப்பு, கசப்பு என்பதெல்லாம் மனதில் மண்டும் குப்பைக் கூளங்கள். அவற்றை ஒரே வீச்சில் பெருக்கித்தள்ளித் துப்புறவாக்கி, சுத்தமான இடத்தில் பூக்களை வை; மக்கிய நாற்றம் நீங்கி பூமணம் கமழும் பார்! என்கிற அவளின் நல்ல மனத்தின் குரலுக்கு செவிசாய்த்து அதை அனுபவித்துப் பார்க்கிறாள் அவள்.

  மன வியாகூலங்களைச் சுமந்துகொண்டு புழுங்குவதும் ஒரே மனம். அந்தப்புழுங்கலுக்குத் தீர்வு சொல்லி, புழுங்கலைத் தீர்த்துவைத்து, மகிழ வைப்பதும் அதே மனம். //

  மனத்தின் விசித்திரத்தை என்னமா...?! சொல்லி இருக்கிறார்கள்.அருமையாய் இருக்கிறது.

  அழகாய் எடுத்து கொடுத்து இருக்கிறீர்கள் ஐயா.

  தித்திப்பாய் ஹனிமூனை முடித்து, வந்து விட்டீர்களா...ஐயா...


  ReplyDelete
  Replies
  1. R.Umayal Gayathri April 5, 2016 at 8:31 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நாவல் வாசித்து இருக்கிறேன்.//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி. :)

   //சூடாமணி அவர்கள் எழுத்துக்களை வாசித்தது இல்லை. //

   சூடாமணியின் எழுத்துக்கள் மிகவும் ’சூ-டா-க’ இருக்கக்கூடும் என்ற பயத்தில், ஒருவேளை வாசிக்காமல் விட்டிருப்பீர்களோ என்னவோ. :) அதனால் பரவாயில்லை மேடம்.

   //அருமையான இருபெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி.//

   இன்னும் சில பிரபல பெண் எழுத்தாளர்களும், இந்தத்தொடரில் அவ்வப்போது வர இருக்கிறார்கள், மேடம்.

   **வெறுப்பு, கசப்பு என்பதெல்லாம் மனதில் மண்டும் குப்பைக் கூளங்கள். அவற்றை ஒரே வீச்சில் பெருக்கித்தள்ளித் துப்புறவாக்கி, சுத்தமான இடத்தில் பூக்களை வை; மக்கிய நாற்றம் நீங்கி பூமணம் கமழும் பார்! என்கிற அவளின் நல்ல மனத்தின் குரலுக்கு செவிசாய்த்து அதை அனுபவித்துப் பார்க்கிறாள் அவள்.

   மன வியாகூலங்களைச் சுமந்துகொண்டு புழுங்குவதும் ஒரே மனம். அந்தப்புழுங்கலுக்குத் தீர்வு சொல்லி, புழுங்கலைத் தீர்த்துவைத்து, மகிழ வைப்பதும் அதே மனம்.**

   //மனத்தின் விசித்திரத்தை என்னமா...?! சொல்லி இருக்கிறார்கள். அருமையாய் இருக்கிறது.//

   மனதின் பல்வேறு எண்ணங்களைக் கிளறி விட்டு, பின்பு மயிலிறகால் மென்மையாக அவற்றை வருடி ஒத்தடம் கொடுப்பவர்களாக உள்ளார்கள் சூடாமணி அவர்கள்.

   //அழகாய் எடுத்து கொடுத்து இருக்கிறீர்கள் ஐயா. //

   ஜீவி சார் தன் நூலில் அழகாய் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ள இதுபோன்ற பல செய்திகளில் சிலவற்றை மட்டுமே நான் இங்கு எடுத்துக் கொடுத்துள்ளேன்.

   இதில் எல்லாப்புகழும் நம் ஜீவி சார் அவர்களுக்கு மட்டுமே.

   //தித்திப்பாய் ஹனிமூனை முடித்து, வந்து விட்டீர்களா... ஐயா... //

   ஆம் .... மிகவும் தித்திப்பாய் திகட்டும் அளவுக்கு இனிமையோ இனிமையாய்த்தான் இருந்தது. ENJOYED VERY WELL :)

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGK

   Delete


 13. எழுத்தாளர் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இறந்த பிறகும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவ மனைக்கே தனது உடலை தானமாக அளித்தார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவரது படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.சாகித்ய அகாதமி விருது பெற்ற இவரது நாவல்களைப் படிக்கவேண்டும் என்ற ஆவலை இந்த தொடர் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு திரு ஜீவி அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள் பல!

  ஆனந்த விகடன் நடத்திய நாடகப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற ஆர்.சூடாமணி அவர்களின் ‘இருவர் கண்டனர்’ என்ற நாடகத்தை படித்திருக்கிறேன். மற்ற படைப்புகளைப் படித்ததில்லை. தன் சொத்து அனைத்தையும் சேவை நிறுவனங்களுக்கு சேர உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர் இவர் தான் என கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இவரைப்பற்றியும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு ஜீவி அவர்களுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்!

  பி.கு. இரண்டு நாட்களாக மின் தடை காரணமாக இணையத்தில் உலா வர இயலவில்லை. அதனால் இந்த பதிவுக்கு இன்று தான் பின்னூட்டம் இட முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி April 5, 2016 at 4:36 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்,

   //எழுத்தாளர் திருமதி. ராஜம் கிருஷ்ணன் அவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இறந்த பிறகும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவ மனைக்கே தனது உடலை தானமாக அளித்தார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.//

   சமீபத்தில் மட்டுமே இவற்றையெல்லாம் நான் விக்கி பீடியா மூலம் தெரிந்துகொள்ள நேர்ந்தது.

   //ஆனால் அவரது படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சாகித்ய அகாதமி விருது பெற்ற இவரது நாவல்களைப் படிக்கவேண்டும் என்ற ஆவலை இந்த தொடர் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு திரு ஜீவி அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள் பல! //

   மிக்க மகிழ்ச்சி, சார்.

   //ஆனந்த விகடன் நடத்திய நாடகப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற ஆர்.சூடாமணி அவர்களின் ‘இருவர் கண்டனர்’ என்ற நாடகத்தை படித்திருக்கிறேன்.//

   இதனைக்கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

   //மற்ற படைப்புகளைப் படித்ததில்லை. தன் சொத்து அனைத்தையும் சேவை நிறுவனங்களுக்கு சேர உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர் இவர் தான் என கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.//

   நானும் இதனை சமீபத்தில் ஓர் பதிவினில் படித்ததும் மிகவும் ஆச்சர்யப்பட்டுப்போனேன். அதிலும் பாருங்கோ ........ எழுத்துலகுக்கு மட்டுமே தன் சொத்துக்கள் பயன்படட்டும் என்று இல்லாமல், அநாதைக் குழந்தைகளுக்கு அளித்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது.

   அந்த அநாதைச் சிறுவர்/சிறுமிகளில் பலரும், நன்கு படித்து, பலதுறைகளில் முன்னுக்கு வரக்கூடும். சமுதாயத்திற்கு பல துறைகளிலும் மிகத்திறமையானவர்கள் கிடைக்கக்கூடும்.

   சூடாமணி அவர்களின் வியப்பளிக்கும் இந்த மிக உயர்ந்த உள்ளம் அனைவராலும் போற்றி வணக்கப்பட வேண்டியதுதான். ஏராளமாகப் பணம் இருந்தாலும், யாருக்கு இப்படியொரு மென்மையான + மேன்மையான உயர்ந்த மனம் இருக்க முடியும்?

   //இவரைப்பற்றியும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு ஜீவி அவர்களுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்! //

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

   //பி.கு. இரண்டு நாட்களாக மின் தடை காரணமாக இணையத்தில் உலா வர இயலவில்லை. அதனால் இந்த பதிவுக்கு இன்று தான் பின்னூட்டம் இட முடிந்தது. //

   அதனால் பரவாயில்லை சார். ஏதேனும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும் என நானும் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

   Delete
 14. சில வேலைகள் ......... லேட் வருகை..... எப்படியும் வந்து விடுவேன்......இன்றய பிரபலங்களுக்கு வாழ்த்துகள்..........

  ReplyDelete
  Replies
  1. srini vasan April 5, 2016 at 5:15 PM

   வாங்கோ, வணக்கம்.

   //சில வேலைகள் ......... லேட் வருகை..... எப்படியும் வந்து விடுவேன்......//

   அதனால் என்ன? பரவாயில்லை சார்.

   //இன்றய பிரபலங்களுக்கு வாழ்த்துகள்..........//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   Delete
 15. இருவரைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். ராஜம் கிருஷ்ணன் அந்தந்த பகுதிகளுக்கே சென்று களப்பணி செய்து நாவல் எழுதுபவர் என்றறிந்திருக்கிறேன். ஒரு பெண்ணாய் இருந்து கொண்டு மத்திய பிரதேசம் சென்று கொள்ளைக்கூட்டத்தைச் சந்தித்து விபரம் சேகரித்துக் கதை எழுதுவதற்கு மனதில் துணிவு வேண்டும். கணவரும் அவருக்கு உதவியாய் இருந்திருக்கிறார். சூடாமணி தம் சொத்து முழுவதையும் சேவைக்காக அர்ப்பணித்தது அறிந்து வியந்தேன். ராஜம் கிருஷ்ணனின் இறுதிக்காலம் சோகமயமானது தான். அவர் சொந்த வீட்டை உறவினர்களே வஞ்சித்து வாங்கிவிட்டு அவரை வெளியேற்றிவிட்டார்கள் என்று நாளிதழில் வாசித்ததாக நினைவு. இருவரின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். நாவல்களை இனி தான் வாசிக்க வேண்டும். இருவரைப் பற்றிய அறிமுகம் நன்று. தொடருங்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி April 5, 2016 at 8:23 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இருவரைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். ராஜம் கிருஷ்ணன் அந்தந்த பகுதிகளுக்கே சென்று களப்பணி செய்து நாவல் எழுதுபவர் என்றறிந்திருக்கிறேன். ஒரு பெண்ணாய் இருந்து கொண்டு மத்திய பிரதேசம் சென்று கொள்ளைக்கூட்டத்தைச் சந்தித்து விபரம் சேகரித்துக் கதை எழுதுவதற்கு மனதில் துணிவு வேண்டும். கணவரும் அவருக்கு உதவியாய் இருந்திருக்கிறார்.//

   ஆம். இதயெல்லாம் கேட்க மிகவும் வியப்பாகத்தான் உள்ளது.

   //சூடாமணி தம் சொத்து முழுவதையும் சேவைக்காக அர்ப்பணித்தது அறிந்து வியந்தேன். ராஜம் கிருஷ்ணனின் இறுதிக்காலம் சோகமயமானது தான். அவர் சொந்த வீட்டை உறவினர்களே வஞ்சித்து வாங்கிவிட்டு அவரை வெளியேற்றிவிட்டார்கள் என்று நாளிதழில் வாசித்ததாக நினைவு.//

   ஒருவர் தன் சொத்துக்களை இழந்து கடைசி காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இன்னொருவர் ஏராளமான சொத்துக்களுடன் இருந்தும், ஏதோவொரு சோகத்தில் ஆழ்ந்து, தன் அனைத்து சொத்துக்களையும் தான தர்மங்கள் செய்துள்ளார் என அறிய முடிகிறது. இதுதான் உலக யதார்த்தம் என நம்மால் கொஞ்சம் இந்தப்பிரபல எழுத்தாளர்களின் வாழ்க்கை மூலம் உணர முடிகிறது.

   //இருவரின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். நாவல்களை இனி தான் வாசிக்க வேண்டும்.//

   நல்லது. அதிகமான பிரபல எழுத்தாளர்களை வாசித்துள்ளவர் தாங்களாகவே இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

   //இருவரைப் பற்றிய அறிமுகம் நன்று. தொடருங்கள். தொடர்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்கள் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - நன்றியுடன் கோபு.

   Delete
 16. மேலே சொன்ன இருவரது படைப்புகளையும் நான் படிக்கும் வாய்ப்பு அமையவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ April 5, 2016 at 10:47 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //மேலே சொன்ன இருவரது படைப்புகளையும் நான் படிக்கும் வாய்ப்பு அமையவில்லை.//

   அதனால் பரவாயில்லை சார். அந்த வாய்ப்பு தங்களுக்கு விரைவில் அமையக்கூடும். தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, சார். - அன்புடன் VGK

   Delete
 17. இன்னக்கி மல்லிப்பூவு பந்து பாத்துகிட்டோன இன்னா தோனிச்சு வெளங்குதா குருஜி????( ஷை... ஆகுது)......எங்கட நிஹ்ஹாவுல பொண்ணு மாப்ளை முகத்துல பர்தாபோல மல்லிப்பூவு சரம் சரமா தொங்க வுட்டு போடுவாக..........

  ReplyDelete
  Replies
  1. mru April 7, 2016 at 11:12 AM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //இன்னக்கி மல்லிப்பூவு பந்து பாத்துகிட்டோன இன்னா தோனிச்சு வெளங்குதா குருஜி????//

   நல்லவே வெளங்குது முருகு :))))))

   //(ஷை... ஆகுது) ......//

   இந்த ஸ்டேஜில் நிஜமாகவே ஷை ஆகாவிட்டாலும், ஷை ஆவதுபோல நடிக்கவாவது வேண்டும்தானம்மா. எங்கட முருகுவுக்கு அதெல்லாம் சொல்லியாத் தரணும். நல்லாவே அது நடிக்கும். சமத்தோ சமத்துப் பொண்ணு. :)

   //எங்கட நிஹ்ஹாவுல பொண்ணு மாப்ளை முகத்துல பர்தாபோல மல்லிப்பூவு சரம் சரமா தொங்க வுட்டு போடுவாக..........//

   தெரியும் முருகு. என்னுடன் பணியாற்றிய ஒருசில 4-5 முஸ்லீம் நண்பர்களின் நிக்காஹ் களுக்கு மட்டும் நான் போய் வந்துள்ளேன். அங்கு பொண்ணு மாப்பிள்ளை முகங்களில் தொங்கும் மணக்கும் மல்லிகைச் சரங்களை நானும் பார்த்துள்ளேன்.

   நிக்காஹ் முடிந்ததும், அன்பளிப்பினைக் கொடுத்துவிட்டு, விருந்தெல்லாம் சாப்பிடாமல் ஒரே ஓட்டமாக ஓடியாந்துடுவேன். :)

   தங்களின் இந்த இன்பக்கனா விரைவில் பலிக்க என் மனம் நிறைந்த இனிய நல்லாசிகள். வாழ்த்துகள்.

   அன்புடன் குருஜி கோபு

   Delete
 18. பூப்பந்து படமே மணக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை April 8, 2016 at 12:00 PM

   //பூப்பந்து படமே மணக்கிறது.//

   PEN .... பெண் எழுத்தாளர்கள் அல்லவா. அதனால் பூப்பந்துகளை முதலில் காட்டி, சற்றே என்னால் இந்தப்பதிவு மணக்கச் செய்யப்பட்டுள்ளது.

   தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, சார். - VGK

   Delete
  2. தோணவேயில்லை.. nice touch!

   Delete
  3. அப்பாதுரை April 10, 2016 at 1:24 AM
   தோணவேயில்லை.. nice touch!//

   :) Thank you, Sir :)

   Delete
 19. ராஜம் கிருஷ்ணன், சூடாமணி இருவருமே மனதுக்கு இனிய எழுத்தாளர்கள். அநேகமாக அனைத்தும் படித்திருப்பேன். ராஜம் கிருஷ்ணன் கடைசிக்காலத்தில் மிகக் கஷ்டப்பட்டதை நினைத்தால் மனம் நொந்து போயிடும். :(

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam April 12, 2016 at 1:56 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //ராஜம் கிருஷ்ணன், சூடாமணி இருவருமே மனதுக்கு இனிய எழுத்தாளர்கள். அநேகமாக அனைத்தும் படித்திருப்பேன்.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம். நீங்கள் நிச்சயமாகப் படித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

   //ராஜம் கிருஷ்ணன் கடைசிக்காலத்தில் மிகக் கஷ்டப்பட்டதை நினைத்தால் மனம் நொந்து போயிடும். :(//

   ஆமாம் மேடம். கேட்கவே மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.:(

   தங்களின் அன்பான வருகைக்கு நன்றி, மேடம். VGK

   Delete