’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot. in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி
முதற்பதிப்பு: 2016
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979
அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225
ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.
இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.
25) தமிழுக்குப் பெருமை சேர்த்த
ஜெயகாந்தன்
[பக்கம் 147 முதல் 153 வரை]
ஜெயகாந்தன் தமிழ் எழுத்துலகில் ஒரு துருவ நட்சத்திரம். இதற்கு முன்னால் இவர் போல் எழுதியவர் இல்லை. இவருக்குப் பின்னாலும் இவர் போல் இதுகாறும் எழுதியவர் இல்லை என்று தமிழ் எழுத்துலகில் பெயர் பெற்றவர். ‘மறக்கமுடியாத தமிழ் எழுத்துலகம்’ என்னும் இந்த நூலின் தலைப்புக்கு மிகவும் பொருத்தமாக மறக்க முடியாத எழுத்தாளராய் திகழ்ந்தவர் அவர்.
‘போர்வை’ ; ‘சுய தரிசனம்’; ‘நிக்கி’; ‘நீ இன்னா சார் சொல்றே’; ‘இருளைத்தேடி’; ‘ஒரு பகல் நேர பாஸஞ்சரில்’; ‘இறந்த காலங்கள்’; ‘முன் நிலவும் பின் பனியும்’; ’குரு பீடம்’; ‘அக்னி ப்ரவேசம்’ அதன் தொடர்ச்சிகளான ‘கங்கை எங்கே போகிறாள்’; ‘சுந்தரகாண்டம்’ போன்ற மிகச்சிறப்பான கதைகள்; இவரின் குறுநாவல்களான ’உன்னைப்போல் ஒருவன்’ ; யாருக்காக அழுதான்’; ‘பிரளயம்’; ‘விழுதுகள்’; ‘கருணையினால் அல்ல’ ‘கோகிலா என்ன செய்து விட்டாள்’ போன்ற பலவற்றையும் பற்றி இந்த நூலில் ஜீவி விரிவாகப் பேசியுள்ளார்கள்.
ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு: ‘ஒரு பிடிச்சோறு’
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’; ’ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’; ‘பாரிசுக்குப்போ’; ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற புதினங்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்கிறார் ஜீவி.
பத்திரிகையாளர்கள் இவரின் படைப்புகளைக் கேட்டு, இவரைத்தேடி படையெடுத்து வந்ததும், இவர் அவர்களிடம் விதித்த ஆச்சர்யமான நிபந்தனைகளைப்பற்றியும் ஜீவி அழகாகச் சொல்லியுள்ளது, இந்த நூலில் என்னை மிகவும் கவர்ந்த விஷயங்களாகும்.
ஜெயகாந்தனுக்கு விருது அளித்து ’ஞானபீடம்’ தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டது என்று எழுத்துலகமே வாழ்த்தியது என்று எழுதியுள்ளார் ஜீவி.
பள்ளிப் படிப்பு படிக்காத ஜெயகாந்தனின் பத்திரிகை உலக பொற்காலம் பற்றி ஜீவி நிறைய விவரிக்கிறார். அவரது சுயதரிசனம் சிறுகதை பற்றி ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எழுதியிருக்கிறார். ஜெ.கே.யின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' தொடர்கதை, 'கோகிலா என்ன செய்து விட்டாள்?' குறுநாவல் பற்றி ஆழமாக விவாதித்திருக்கிறார். மொத்தத்தில் ஜெயகாந்தன் பற்றி நிறைய தகவல்கள் இந்த நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
26) இதோ நிஜ சுஜாதா
[பக்கம் 154 முதல் 163 வரை]
எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய கட்டுரைக்கு ‘இதோ நிஜ சுஜாதா’ என்று ஜீவி தலைப்பு கொடுத்திருக்கிறார். இதோ ’நிஜ சுஜாதா’ என்றால் ’பொய் சுஜாதா’ என்று ஒருத்தர் இருக்கிறாரா என்று எண்ண வேண்டாம். உண்மையான சுஜாதா இதோ இருக்கிறார் பாருங்கள் என்று சுஜாதாவின் எழுத்துத் திறமையை ஜீவி புட்டுப்புட்டு வைக்கிறார். இதுவரை நாம் வாசித்திருந்த சுஜாதாவை மறக்கும்படி ஒரு புது சுஜாதாவே உருக்கொண்ட மாதிரி இருக்கிறது. இந்த நூலில் சுஜாதாவைப் பற்றிய ஜீவியின் கட்டுரை ஒரு நட்சத்திரம் போல ஜொலிக்கிறது.
உண்மையில் ‘நைலான் கயிறு’தான் சுஜாதாவின் ஓபனிங் என்று சொல்லவேண்டும் என்கிறார். ‘ஜன்னல் மலர்’ ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ ‘இருள் வரும் நேரம்’ ‘கம்ப்யூட்டர் கிராமம்’ ’பிரிவோம் சந்திப்போம்’ ’குருபிரசாத்தின் கடைசிதினம்’ ’ஏறக்குறைய சொர்க்கம்’ ‘காகிதச் சங்கலிகள்’ ‘ஜீனோ’ ‘மீண்டும் ஜீனோ’ ‘என் இனிய இயந்திரா’ ‘மத்யமர்’ ‘ஒரு கல்யாண ஏற்பாடு’ ‘தேடாதே’ ‘வண்ணத்துப்பூச்சி வேட்டை’ என மிகப்பெரிய பட்டியலாக இவரின் படைப்புகளைப் பற்றி மிகவும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார், ஜீவி.
’அடுத்த நூற்றாண்டு’ என்ற தலைப்பிலும் ‘சிலுக்கான் சில்லுப் புரட்சி’ என்ற தலைப்பிலும் சுஜாதா எழுதியுள்ள அறிவியல் கட்டுரைகளைப்பற்றி அலசி எடுத்திருக்கிறார், ஜீவி. கல்கியில் வெளிவந்த சுஜாதாவின் ‘இருள் வரும் நேரம்’ என்கிற கதையை எடுத்துக் கொண்டு ஜீவி விவரிப்பது மனசை விட்டு அகலாது. சுருக்கமாகச் சொல்லப்போனால் சுஜாதா எழுத்தைப் படித்தவர்கள் எல்லாம் தவறாது சுஜாதாவைப்பற்றி ஜீவி எழுதியிருப்பதையும் வாசிக்கத் தவறக்கூடாது என்று சொல்லும் விதத்தில் சுஜாதாவைப் பற்றி ஜீவி பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
ஜீவிக்கும் சுஜாதாவை மிகவும் பிடிக்கும் போலிருக்கு. அதனால்தான் சுஜாதாவைப் பற்றி இவ்வளவு அருமையாக அவரால் இப்படி எழுத முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய கட்டுரைக்கு ‘இதோ நிஜ சுஜாதா’ என்று ஜீவி தலைப்பு கொடுத்திருக்கிறார். இதோ ’நிஜ சுஜாதா’ என்றால் ’பொய் சுஜாதா’ என்று ஒருத்தர் இருக்கிறாரா என்று எண்ண வேண்டாம். உண்மையான சுஜாதா இதோ இருக்கிறார் பாருங்கள் என்று சுஜாதாவின் எழுத்துத் திறமையை ஜீவி புட்டுப்புட்டு வைக்கிறார். இதுவரை நாம் வாசித்திருந்த சுஜாதாவை மறக்கும்படி ஒரு புது சுஜாதாவே உருக்கொண்ட மாதிரி இருக்கிறது. இந்த நூலில் சுஜாதாவைப் பற்றிய ஜீவியின் கட்டுரை ஒரு நட்சத்திரம் போல ஜொலிக்கிறது.
உண்மையில் ‘நைலான் கயிறு’தான் சுஜாதாவின் ஓபனிங் என்று சொல்லவேண்டும் என்கிறார். ‘ஜன்னல் மலர்’ ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ ‘இருள் வரும் நேரம்’ ‘கம்ப்யூட்டர் கிராமம்’ ’பிரிவோம் சந்திப்போம்’ ’குருபிரசாத்தின் கடைசிதினம்’ ’ஏறக்குறைய சொர்க்கம்’ ‘காகிதச் சங்கலிகள்’ ‘ஜீனோ’ ‘மீண்டும் ஜீனோ’ ‘என் இனிய இயந்திரா’ ‘மத்யமர்’ ‘ஒரு கல்யாண ஏற்பாடு’ ‘தேடாதே’ ‘வண்ணத்துப்பூச்சி வேட்டை’ என மிகப்பெரிய பட்டியலாக இவரின் படைப்புகளைப் பற்றி மிகவும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார், ஜீவி.
’அடுத்த நூற்றாண்டு’ என்ற தலைப்பிலும் ‘சிலுக்கான் சில்லுப் புரட்சி’ என்ற தலைப்பிலும் சுஜாதா எழுதியுள்ள அறிவியல் கட்டுரைகளைப்பற்றி அலசி எடுத்திருக்கிறார், ஜீவி. கல்கியில் வெளிவந்த சுஜாதாவின் ‘இருள் வரும் நேரம்’ என்கிற கதையை எடுத்துக் கொண்டு ஜீவி விவரிப்பது மனசை விட்டு அகலாது. சுருக்கமாகச் சொல்லப்போனால் சுஜாதா எழுத்தைப் படித்தவர்கள் எல்லாம் தவறாது சுஜாதாவைப்பற்றி ஜீவி எழுதியிருப்பதையும் வாசிக்கத் தவறக்கூடாது என்று சொல்லும் விதத்தில் சுஜாதாவைப் பற்றி ஜீவி பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
ஜீவிக்கும் சுஜாதாவை மிகவும் பிடிக்கும் போலிருக்கு. அதனால்தான் சுஜாதாவைப் பற்றி இவ்வளவு அருமையாக அவரால் இப்படி எழுத முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.
என்றும் அன்புடன் தங்கள்,
(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்
இதன் அடுத்த பகுதியில்
இடம்பெறப்போகும்
ஜெயகாந்தன் நிறையப் படித்திருக்கிறேன். ரொம்பப் பிடித்தது 'கோகிலா என்ன செய்து விட்டாள்?', அக்கினிப்ப்ரவேசம் -சில நேரங்களில் சில மனிதர்கள் -
பதிலளிநீக்குஅவரின் முன்னுரைகளை மட்டும் தொகுத்து ஒரு புத்தகம் வந்துள்ளது. வாங்க வேண்டும். என்று ஆசைதான். இருப்பதையே படித்துக் கிழிக்கவில்லை... கொஞ்ச நாள் போகட்டும்!
சுஜாதா - ஜெனோ என்று சொல்வதை விட ஜீனோ என்று சொல்லலாம். மத்யமா அல்ல, 'மத்யமர்' முன்னர் 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள், அப்புறம் அவரின் 'கற்றதும் பெற்றதும்' தொடரும் பிரபலம்.
ஸ்ரீராம். April 9, 2016 at 3:23 PM
நீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.
//ஜெயகாந்தன் நிறையப் படித்திருக்கிறேன். ரொம்பப் பிடித்தது 'கோகிலா என்ன செய்து விட்டாள்?', அக்கினிப்ப்ரவேசம் -சில நேரங்களில் சில மனிதர்கள்-//
மிக்க மகிழ்ச்சி ஸ்ரீராம்.
//அவரின் முன்னுரைகளை மட்டும் தொகுத்து ஒரு புத்தகம் வந்துள்ளது.//
அப்படியா? சந்தோஷம், ஸ்ரீராம்.
//வாங்க வேண்டும். என்று ஆசைதான். இருப்பதையே படித்துக் கிழிக்கவில்லை... கொஞ்ச நாள் போகட்டும்!//
சரி, அப்படியே ஆகட்டும். ததாஸ்து.
//சுஜாதா - ஜெனோ என்று சொல்வதை விட ஜீனோ என்று சொல்லலாம்.//
நானும் சுஜாதாவின் இந்த ஜெனோ/ஜீனோக் கதைகளைப் படித்துள்ளேன். ஜீனோ என்பதே சரியாக இருக்கும் என்று எனக்குள்ளும் ஓர் சந்தேகம் முதலில் ஏற்பட்டது. இருப்பினும் நம் தலைவர் ஜீவி அவர்கள் ’ஜெனோ’ ‘மீண்டும் ஜெனோ’ என்று இருமுறை தன் நூலில் குறிப்பிட்டிருந்தார். (பக்கம்: 159 வரி எண்: 6) அதனால் அதுதான் சரியாக இருக்குமோ என நினைத்துக்கொண்டேன்.
இப்போது மீண்டும் இதற்கான சாஸ்திரப் பிரமாணங்களைத் தேடிப் பார்த்துவிட்டேன். தாங்கள் சொல்லியுள்ள ’ஜீனோ’ என்பதுதான் சரி என்ற பிரமாணம் என்னிடம் கைவசம் இப்போது உள்ளதால், நான் அதனை இப்போது துணிந்து மாற்றி விட்டேன்.
//மத்யமா அல்ல, 'மத்யமர்'//
இது என் தவறுதான். ஸாரி. இப்போது திருத்தி விட்டேன். சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்.
//முன்னர்'கணையாழியின் கடைசிப் பக்கங்கள், அப்புறம் அவரின் 'கற்றதும் பெற்றதும்' தொடரும் பிரபலம்.//
அப்படியா! மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம்.
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், கண்ணுக்குத்தெரியாத சில எழுத்துப்பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள உதவியமைக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.
அன்புடன் VGK
நல்லவேளை, செனோ என்று அச்சாகாமல் போயிற்றே!..
நீக்குஆனந்த விகடனில் முத்திரை
பதிலளிநீக்குகதைகள் மூலம் இவர் எழுத்தில்
ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய நான்
பின் இவர் எழுத்து எதுவானாலும்
படித்துவிடுவது என வைராக்கியம் கொண்டு
நிறையப் படித்திருக்கிறேன்
இவருடைய கதைகளை விடவும்
கதைக்கான முன்னுரை மிகவும்
சிறப்பாக இருக்கும்
கதைகள் மட்டுமல்லாது, கட்டுரை
(குறிப்பாக ஒரு இலக்கியவாதியின்
அரசியல் அனுபவங்கள் )
மேடைப் பேச்சில் இவருடைய பாணி
அலாதியானது
(என்னுடைய கல்லூரி நாட்களில்
மதுரையில் கல்லூரிகளில் முத்தமிழ்
விழா மிகச் சிறப்பாக இருக்கும்
அந்த எந்தக் கல்லூரியானாலும்
இயலுக்கு ஜெயகாந்தன் அவர்களைத்தான்
அழைப்பார்கள். )
கதை சொல்லும் பாணியில் சர்குலர்
காம்போசிசன் என்கிற ஒரு முறை உண்டு
(மணல் கயிறு திரைப்படத்தில் எல்லா பாடும்
பட்டும் முடிவில் விசு அவர்கள் மீண்டும்
கோவிலில் மாப்பிள்ளை பார்க்கத் தயாராவாரே )
அதற்கு மிகச் சரியான உதாரணம் எனில்
இன்றுவரை யுகசந்தியை மீறி ஒரு கதையில்லை
என்பதே இன்றுவரை என் கருத்து
கங்கா கதாப்பாத்திரம் மட்டுமல்ல
இந்தக் கௌரிப்பாட்டியின் கதாப்பாத்திரமும்
என்றும் மறக்க முடியாதவை
Ramani S April 9, 2016 at 3:47 PM
நீக்குவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.
//ஆனந்த விகடனில் முத்திரை கதைகள் மூலம் இவர் எழுத்தில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய நான் பின் இவர் எழுத்து எதுவானாலும் படித்துவிடுவது என வைராக்கியம் கொண்டு நிறையப் படித்திருக்கிறேன்.//
ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துக்கள் மீது தங்களின் ஈடுபாட்டுடன் கூடிய வாசிப்புதான், இப்படியொரு வைராக்யத்தை தங்களுக்குள் வளர்த்துள்ளது. இதைக் கேட்கவே மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது.
//இவருடைய கதைகளை விடவும் கதைக்கான முன்னுரை மிகவும் சிறப்பாக இருக்கும்.//
என்னைப்போலவே தாங்களும், கதைத்தொகுப்புக்களின் முன்னுரையிலிருந்து ஆரம்பித்துப் படிப்பவராக இருப்பது கேட்க மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
//கதைகள் மட்டுமல்லாது, கட்டுரை (குறிப்பாக ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்) மேடைப் பேச்சில் இவருடைய பாணி அலாதியானது.//
நானும் இதுபோல, இவரைப்பற்றி நிறைய சிறப்பான விஷயங்கள் பல நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டுள்ளேன். :)
(என்னுடைய கல்லூரி நாட்களில் மதுரையில் கல்லூரிகளில் முத்தமிழ் விழா மிகச் சிறப்பாக இருக்கும். அந்த எந்தக் கல்லூரியானாலும் இயலுக்கு ஜெயகாந்தன் அவர்களைத்தான் அழைப்பார்கள். )
{இயலுக்கு இயல்பாகவே மிகவும் பொருத்தமானவர்தான் அழைக்கப்பட்டுள்ளார்கள். மகிழ்ச்சியே.}
//கதை சொல்லும் பாணியில் சர்குலர் காம்போசிசன் என்கிற ஒரு முறை உண்டு.//
ஆஹா, அருமை. நல்லதொரு முறைதான். ஓரளவு இதனை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் கொஞ்சம் தாங்களே இதுபற்றி விளக்கினால் மற்றவர்களும் நன்கு அறிந்துகொள்ள முடியுமே, சார்.
(மணல் கயிறு திரைப்படத்தில் எல்லா பாடும் பட்டும் முடிவில் விசு அவர்கள் மீண்டும் கோவிலில் மாப்பிள்ளை பார்க்கத் தயாராவாரே )
நான் பலமுறை பார்த்து மிகவும் ரஸித்த விசு படம் ஆச்சே இது. இஞ்ச்-பை-இஞ்ச் ஆக அந்தக்கதை என் நினைவுகளில் உள்ளது. தாங்கள் சொல்லும் கடைசி சீன் சூப்பரோ சூப்பர்தான். விசு எடுத்த படத்தில் எதுதான் சூப்பராக இருக்காது. :) அனைத்துமே சூப்பர்தான்.
//அதற்கு மிகச் சரியான உதாரணம் எனில் இன்றுவரை யுகசந்தியை மீறி ஒரு கதையில்லை என்பதே இன்றுவரை என் கருத்து. கங்கா கதாப்பாத்திரம் மட்டுமல்ல இந்தக் கௌரிப்பாட்டியின் கதாப்பாத்திரமும் என்றும் மறக்க முடியாதவை.//
மிக்க மகிழ்ச்சி சார். எனக்கும் தாங்கள் சொல்லும் இந்தக்கதையை மட்டுமாவது படிக்கணும் போல இப்போது மிகவும் ஆசையாக உள்ளது.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான விளக்கமான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK
நூல்கள் படிக்க ஆர்வம் தூண்டும்
பதிலளிநீக்குஅருமையான அறிமுகங்கள்....
அருமை நண்பரே ....
தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்....
தொடர்கிறோம்....
Ajai Sunilkar Joseph April 9, 2016 at 4:15 PM
நீக்கு//நூல்கள் படிக்க ஆர்வம் தூண்டும் அருமையான அறிமுகங்கள்.... அருமை நண்பரே .... தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்.... தொடர்கிறோம்....//
வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
நான் இதுவரை வாசித்துள்ள படைப்புகளிலேயே அதிகமான படைப்புகள் ஜெயகாந்தனின் படைப்புகளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருகாலத்தில் மிகுந்த வெறியுடன் அவரது படைப்புகளைத் தேடித்தேடி வாசித்திருந்தேன். அவரை என் ஆதர்ச எழுத்தாளராக்கிக்கொண்டேன். இப்போதும் அவருடைய படைப்புகளின் மீது தீராத மோகம் எனக்குண்டு. சுஜாதாவின் விஞ்ஞான அடிப்படையிலான கதைகளில் அதிகம் ஈர்ப்புண்டு. குமுதத்தில் வந்த ரத்தம் ஒரே நிறம் கதையை என் பால்யகாலங்களில் மாய்ந்து மாய்ந்து வாசித்த காலமும் உண்டு.
பதிலளிநீக்குகீத மஞ்சரி April 9, 2016 at 6:20 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//நான் இதுவரை வாசித்துள்ள படைப்புகளிலேயே அதிகமான படைப்புகள் ஜெயகாந்தனின் படைப்புகளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருகாலத்தில் மிகுந்த வெறியுடன் அவரது படைப்புகளைத் தேடித்தேடி வாசித்திருந்தேன். அவரை என் ஆதர்ச எழுத்தாளராக்கிக்கொண்டேன். இப்போதும் அவருடைய படைப்புகளின் மீது தீராத மோகம் எனக்குண்டு.//
ஓஹோ, அதனால் தான் தாங்கள் இன்று என் மனதுக்கு மிகவும் பிடித்த மிகச்சிறந்த எழுத்தாளராகவும், தலைசிறந்த பதிவராகவும், விமர்சன வித்தகியாகவும், பின்னூட்டத் திலகமாகவும், ’என்றாவது ஒரு நாள்’ என்ற மிகச்சிறப்பான மொழியாக்க நூலின் ஆசிரியராகவும், இன்னும் பல்வேறு வெளியில் காட்டிக்கொள்ளாத திறமைசாலியாகவும் திகழ்கின்றீர்கள் ! :)))))
தாங்கள் சொல்லியுள்ள இவற்றைக் கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :)
//சுஜாதாவின் விஞ்ஞான அடிப்படையிலான கதைகளில் அதிகம் ஈர்ப்புண்டு.//
எனக்கும் தாங்கள் சொல்லும் இவற்றிலெல்லாம் மிகுந்த ஈடுபாடும் ஈர்ப்பும் உண்டு.
//குமுதத்தில் வந்த ’ரத்தம் ஒரே நிறம்’ கதையை என் பால்யகாலங்களில் மாய்ந்து மாய்ந்து வாசித்த காலமும் உண்டு.//
அதே போல ‘கொலையுதிர் காலம்’ என்ற இவரின் தொடரை நான் என் பால்ய நாட்களில் வார இதழ் ஒன்றில் மாய்ந்து மாய்ந்து வாசித்து மகிழ்ந்தது உண்டு.
தங்களின் அன்பான வருகைக்கும், திவ்யமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
பிரியமுள்ள கோபு
சுஜாதா அவர்களையும் கணையாழியின்
பதிலளிநீக்குகடைசிப் பக்கங்களில் இருந்து
படிக்கத் துவங்கியதுதான்
பாயாசத்தில் முந்திரி போல
கதையின் இடையில் சட்டென
வசன கவிதையின் இறுக்கத்தில் வந்து விழும்
வார்த்தைகளும், சுருக்கமாக எனினும்
சட்டென ஈட்டியாய்ப் பாயும் சில வர்ணனைகளும்
அவரது தனித்துவம்
கதை சொல்லிப் போகும் விதம் மட்டுமல்லாது
கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்கும் விதம்
அற்புதமாக இருக்கும்
சுருங்கச் சொன்னால் சராசரி வாசகன்
அறிந்திராத அறிந்திருக்கவேண்டியவைகளை
அறிமுகம் செய்கிற வகையில்
( கரையெல்லாம் செண்பகப் பூவில்
நாட்டுப்புறப் பாடல் ,ஜீனோ மற்றும்
மீண்டும் ஜினோவில் தற்கால விஞ்ஞான
வளர்ச்சி ) இருக்கும்
மால்குடி டேசுக்கு எந்த வகையிலும்
குறைந்ததில்லை ஸ்ரீரங்கத்துக் கதைகள்
என அறுதியிட்டுச் சொல்லலாம்
மத்திமர் கதைகள் அற்புதமானப் படைப்பு
என்றால் மிகையில்லை
அதைப் போல நாடக அரங்கிற்கு அவர் அளித்த
வித்தியாசமான, புதுமையான நாடகங்கள்
இன்னும் நிறையச் சொல்லலாம்
ஆயினும் அது பின்னூட்ட எல்லையை
மீறியதாக இருக்கும் என்பதால் மனக்குறையுடன்
முடிக்கவேண்டியதாக இருக்கிறது
Ramani S April 9, 2016 at 6:26 PM
நீக்குவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.
//சுஜாதா அவர்களையும் கணையாழியின் கடைசிப் பக்கங்களில் இருந்து படிக்கத் துவங்கியதுதான்.//
சந்தோஷம் சார்.
//பாயாசத்தில் முந்திரி போல கதையின் இடையில் சட்டென வசன கவிதையின் இறுக்கத்தில் வந்து விழும் வார்த்தைகளும், சுருக்கமாக எனினும் சட்டென ஈட்டியாய்ப் பாயும் சில வர்ணனைகளும் அவரது தனித்துவம்.//
மிகவும் அழகாகவும் சரியாகவும் ருசியாகவும் சொல்லியுள்ளீர்கள். நானும் இதனை அவரின் சில கதைகளில் பார்த்து வியந்தது உண்டு. பாயஸத்தில் மிதக்கவிடும் நெய்யில் வறுத்த முந்திரிகளே தான். :)
//கதை சொல்லிப் போகும் விதம் மட்டுமல்லாது, கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்கும் விதம் அற்புதமாக இருக்கும்//
:) அற்புதமான கருத்துக்கள் :)
//சுருங்கச் சொன்னால் சராசரி வாசகன், அறிந்திராத அறிந்திருக்க வேண்டியவைகளை அறிமுகம் செய்கிற வகையில் ( கரையெல்லாம் செண்பகப் பூவில் நாட்டுப்புறப் பாடல், ஜீனோ மற்றும் மீண்டும் ஜீனோவில் தற்கால விஞ்ஞான வளர்ச்சி ) இருக்கும்//
இன்றைக்கு ‘சிப்’ என்று சொல்லக்கூடிய மிகச்சிறிய சில்லுக்குள் அனைத்தையும் அடக்கியுள்ள விஞ்ஞானத்தை அவர் அன்றே உணர்ந்து சொல்லியுள்ளாரே!!!!!.
அவர் பணியாற்றிய துறையும் அதுபோல அமைந்து விட்டது எழுத்தாளராகிய அவருக்கு ஓர் மாபெரும் ப்ளஸ் பாயிண்ட் ஆகவும் அமைந்துவிட்டது.
//மால்குடி டேசுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை ஸ்ரீரங்கத்துக் கதைகள் என அறுதியிட்டுச் சொல்லலாம்.//
அவரின் 14 சிறுகதைகள் அடங்கிய ’ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பினைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். நானும் அதனை முழுவதுமாக வாசித்துள்ளதால், தங்களின் இந்த ஒப்பீட்டினை நன்கு உணர்ந்து ரசித்து சிரித்து மகிழ முடிகிறது. தாங்கள் சொல்லியுள்ளது மிகச்சரியே.:)
//மத்திமர் கதைகள் அற்புதமானப் படைப்பு என்றால் மிகையில்லை.//
இவற்றை நான் படித்தது இல்லை. இருப்பினும் இந்தத்தலைப்பு மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த (மிடில் கிளாஸ்) எனக்குப் பிடித்துள்ளது.
//அதைப்போல நாடக அரங்கிற்கு அவர் அளித்த வித்தியாசமான, புதுமையான நாடகங்கள்.//
ஆஹா, அப்படியா ! திரைப்படத்துறை உள்பட எதையுமே பாக்கி வைக்கவில்லை போலிருக்கு இவர்.
//இன்னும் நிறையச் சொல்லலாம்; ஆயினும் அது பின்னூட்ட எல்லையை மீறியதாக இருக்கும் என்பதால் மனக்குறையுடன் முடிக்கவேண்டியதாக இருக்கிறது.//
பரவாயில்லை சார். தாங்கள் முத்து முத்தாக இங்கு கூறியுள்ளவைகளே மிகச்சுருக்கமாகவும், பால் பாயஸம் போன்ற மிக அதிக சுவையாகவும் உள்ளன.
தங்களின் அன்பான வருகைக்கும், முத்தான + சத்தான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK
.
பதிலளிநீக்குஇன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இருவருக்குமே அறிமுகம் தேவையில்லை. தமிழில் ஞானபீடம் விருதை பெற்ற இரண்டாவது எழுத்தாளரான திரு ஜெயகாந்தனின் படைப்புகள் முத்திரைக் கதைகளாக ஆண்ட விகடனின் வருவதற்கு முன்பே அவரது சிறுகதைகளை சரஸ்வதி இதழில் படித்திருக்கிறேன். என் அண்ணனின் ஆதர்ச எழுத்தாளர் இவர் என்பதால் இவரது அநேக படைப்புக்கள் என் அண்ணனிடம் இருந்ததால் என்னால் இவரது எழுத்துக்களை வாசிக்க முடிந்தது. எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. இவர் தனது கருத்தை வெளிப்படையாக சொல்வதில் துணிச்சல்காரர். ஒருதடவை எங்கள் மாவட்டத்தை பற்றி சொல்லும்போது Mentally educationally economically backward district என்று சொல்லி பலருடைய எதிர்ப்பையும் சம்பாதித்தவர். இவரது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’; ‘பாரிசுக்குப்போ’; ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகிய படைப்புக்களை படித்திருக்கிறேன்.
இளைஞர்களை அவர்களுக்கு பிடித்த வழியில் எழுதி ஈர்த்தவர் திரு சுஜாதா அவர்கள். எழுத்தில் புதுமையையும் இளமையையும் புகுத்தியவர் இவர் தான் என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது. இயற்பியல் விஞ்ஞானியாகவும் பொறியாளராகவும் இருந்ததால் அவரது கதையில் அறிவியலையும் பொறியியலையும் கலந்து சுவாரஸ்யத்தை கூட்டியிருப்பார். 20 ஆண்டுகளுக்கு முன்பே கணினி பற்றியும் அது உபயோகப்படுத்தப்பட்டால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றி அறிவியல் கதைகள் /நாவல்கள் மூலம் சொல்லியிருப்பார். அவரது படைப்புகளில் குறைந்தது 60 விழுக்காடு படைப்புகளை படித்திருப்பேன்.
கல்கியில் வந்த ‘மத்யமர் கதைகள்’ மறக்கமுடியாதவை. அவரது கதாபாத்திரங்களான லாயர் கணேஷ் மற்றும் அவரது உதவியாளர் வசந்த் ஆகியோரை மறக்கமுடியுமா?
இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்திய திரு ஜீ.வி அவர்களுக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள்!
வே.நடனசபாபதி April 9, 2016 at 6:37 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்
.
//இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இருவருக்குமே அறிமுகம் தேவையில்லை. //
நிச்சயமாக ...... அறிமுகம் தேவையே இல்லைதான். அந்த அளவுக்கு மிகவும் பிரபலமானவர்களே :)
//தமிழில் ஞானபீடம் விருதை பெற்ற இரண்டாவது எழுத்தாளரான திரு ஜெயகாந்தனின் படைப்புகள் முத்திரைக் கதைகளாக ஆண்ட விகடனின் வருவதற்கு முன்பே அவரது சிறுகதைகளை சரஸ்வதி இதழில் படித்திருக்கிறேன். என் அண்ணனின் ஆதர்ச எழுத்தாளர் இவர் என்பதால் இவரது அநேக படைப்புக்கள் என் அண்ணனிடம் இருந்ததால் என்னால் இவரது எழுத்துக்களை வாசிக்க முடிந்தது. எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.//
மிகவும் அருமையான அழகாகச் சொல்லியுள்ளீர்கள். கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
//இவர் தனது கருத்தை வெளிப்படையாக சொல்வதில் துணிச்சல்காரர். ஒருதடவை எங்கள் மாவட்டத்தை பற்றி சொல்லும்போது Mentally educationally economically backward district என்று சொல்லி பலருடைய எதிர்ப்பையும் சம்பாதித்தவர்.//
’யதார்த்தவாதி வெகு ஜன விரோதி’ என்று சொல்வார்கள். இதுபோல அவர் வெளிப்படையாக துணிச்சலுடன் தன் கருத்தினைச் சொன்னது, மாவட்டத்தில் உள்ளோருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்தான். புரிந்துகொள்ள முடிகிறது.
//இவரது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’; ‘பாரிசுக்குப்போ’; ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகிய படைப்புக்களை படித்திருக்கிறேன். //
மிக்க மகிழ்ச்சி, சார்.
//இளைஞர்களை அவர்களுக்கு பிடித்த வழியில் எழுதி ஈர்த்தவர் திரு சுஜாதா அவர்கள். எழுத்தில் புதுமையையும் இளமையையும் புகுத்தியவர் இவர் தான் என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது.//
ஆமாம் சார். தாங்கள் சொல்வது மிகவும் சரியே.
//இயற்பியல் விஞ்ஞானியாகவும் பொறியாளராகவும் இருந்ததால் அவரது கதையில் அறிவியலையும் பொறியியலையும் கலந்து சுவாரஸ்யத்தை கூட்டியிருப்பார். 20 ஆண்டுகளுக்கு முன்பே கணினி பற்றியும் அது உபயோகப்படுத்தப்பட்டால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றி அறிவியல் கதைகள்/நாவல்கள் மூலம் சொல்லியிருப்பார்.//
யெஸ் சார் .... கரெக்ட் சார். அவரின் படிப்பு + பதவி + பணியிடம் ஆகியவை எழுத்தாளரான அவருக்கு ஓர் கூடுதல் சாதகமான விஷயமாக அமைந்து விட்டன. அவற்றை மிகச்சரியாக தனது எழுத்துக்களில் பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
//அவரது படைப்புகளில் குறைந்தது 60 விழுக்காடு படைப்புகளை படித்திருப்பேன். //
இந்த ஜீவி சாரின் நூலில் உள்ள 37 பிரபல எழுத்தாளர்களில் நான் சுஜாதாவின் கதைகள் மட்டும்தான் படித்துள்ளேன். அதுவும் அவர் எழுதியுள்ளவற்றில் ஜஸ்ட் ஒரு 10% மட்டுமே படித்துள்ளேன். மற்றவர்கள் கதைகள் எதையும் இதுவரை நான் படித்ததே இல்லை. :(
//கல்கியில் வந்த ‘மத்யமர் கதைகள்’ மறக்கமுடியாதவை. அவரது கதாபாத்திரங்களான லாயர் கணேஷ் மற்றும் அவரது உதவியாளர் வசந்த் ஆகியோரை மறக்கமுடியுமா?//
கணேஷ் + வசந்த் மறக்க முடியாத கதாபாத்திரங்களே. :)
//இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்திய திரு ஜீ.வி அவர்களுக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள்! //
தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான + மிகச் சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைய இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK
இருவரது படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். ஜெயகாந்தனின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது சில நேரங்களில் சில மனிதர்கள். அதில் வரும் கங்கா கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. சுஜாதாவின் அறிவியல் கதைகள் தமிழுக்குப் புதுசு. கற்றதும் பெற்றதும் போன்ற கட்டுரைகளையும் விரும்பி வாசிப்பேன். இருவருமே மிக முக்கிய ஆளுமைகள். இருவரைப் பற்றியும் நூலாசிரியர் சிலாகித்து விவரித்திருப்பதை அழகாக எடுத்துக்காட்டியிருக்கும் கோபு சாருக்கு பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஞா. கலையரசி April 9, 2016 at 7:06 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்..
//இருவரது படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். ஜெயகாந்தனின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது ’சில நேரங்களில் சில மனிதர்கள்’. அதில் வரும் கங்கா கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது.//
மிக்க மகிழ்ச்சி, மேடம். தங்களால் மறக்கவே முடியாத அந்தக் கதாபாத்திரம் கங்காவுக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகள்.
//சுஜாதாவின் அறிவியல் கதைகள் தமிழுக்குப் புதுசு. கற்றதும் பெற்றதும் போன்ற கட்டுரைகளையும் விரும்பி வாசிப்பேன். இருவருமே மிக முக்கிய ஆளுமைகள். //
மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி, மேடம்.
//இருவரைப் பற்றியும் நூலாசிரியர் சிலாகித்து விவரித்திருப்பதை அழகாக எடுத்துக்காட்டியிருக்கும் கோபு சாருக்கு பாராட்டுக்கள்!//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - நன்றியுடன் கோபு.
பல சுவாரஸ்யமான தகவல்கள்...
பதிலளிநீக்குநன்றி! நன்றி!! நன்றி!!!
அ. முஹம்மது நிஜாமுத்தீன் April 9, 2016 at 8:38 PM
நீக்கு//பல சுவாரஸ்யமான தகவல்கள்... நன்றி! நன்றி!! நன்றி!!!//
வாங்கோ நண்பரே, நலமா?
தங்களின் அபூர்வ + சுவாரஸ்யமான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
- அன்புடன் VGK
எனக்கு வாசிப்பின் மீது பிடித்தம் ஏற்படுவதற்கு காரணமே இந்த இரு ஜாம்பவான்கள்தான். பள்ளியில் படிக்கும்போதே இவர்கள் எழுத்துக்கு அடிமை. மீண்டும் அவர்களை தங்கள் மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குS.P.SENTHIL KUMAR April 9, 2016 at 8:39 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//எனக்கு வாசிப்பின் மீது பிடித்தம் ஏற்படுவதற்கு காரணமே இந்த இரு ஜாம்பவான்கள்தான். பள்ளியில் படிக்கும்போதே இவர்கள் எழுத்துக்கு அடிமை.//
மிக்க மகிழ்ச்சி. தாங்களும் வெகு விரைவில் எழுத்துலகில் ஓர் மிகப்பெரிய ஜாம்பவான் ஆக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. பிறகு வாசகர்களாகிய நாங்கள் அனைவரும் தங்களுக்கு அடிமையானாலும் ஆச்சர்யம் ஏதும் இல்லை. அதற்கான என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
//மீண்டும் அவர்களை தங்கள் மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!//
தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, நண்பரே. அன்புடன் VGK
இரு மிகப் பெரிய ஆளுமைகள்!! அவர்களைப் பற்றி மீண்டும் இங்கு உங்கள் விவரணம் ஜீவி சாரின் விவரணம் நிச்சயமாக இதற்காக அவரது புத்தகம் வாசித்தே ஆக வேண்டும்!!!
பதிலளிநீக்குகீதா: சுஜாதா எழுத்தைப் படித்தவர்கள் எல்லாம் தவறாது சுஜாதாவைப்பற்றி ஜீவி எழுதியிருப்பதையும் வாசிக்கத் தவறக்கூடாது என்று சொல்லும் விதத்தில் சுஜாதாவைப் பற்றி ஜீவி பிரமாதப்படுத்தியிருக்கிறார்.//
நிச்சயமாக சார். என் மனதைக் கவர்ந்த எழுத்தாளர் என்றால் இவர்தான் முதலில் நிற்பார். நான் வாசிக்க ஆரம்பித்ததே இவரது எழுத்தால்தான் என்றால் மிகையல்ல சார். அடுத்து ஜெயகாந்தன். மனதைக் கவர்ந்தவர்...இருவரைப் பற்றியும்மீண்டும் இங்கு வாசித்தோம்...இன்னும் நான் தொடர்ந்து கொண்டிருப்பவர் சுஜாதா...
Thulasidharan V Thillaiakathu
நீக்குApril 9, 2016 at 11:20 PM
வாங்கோ, வணக்கம்.
//இரு மிகப் பெரிய ஆளுமைகள்!! அவர்களைப் பற்றி மீண்டும் இங்கு உங்கள் விவரணம் ஜீவி சாரின் விவரணம் நிச்சயமாக இதற்காக அவரது புத்தகம் வாசித்தே ஆக வேண்டும்!!!//
மிகவும் சந்தோஷம், சார். :)
கீதா:
வாங்கோ மேடம், வணக்கம்.
**சுஜாதா எழுத்தைப் படித்தவர்கள் எல்லாம் தவறாது சுஜாதாவைப்பற்றி ஜீவி எழுதியிருப்பதையும் வாசிக்கத் தவறக்கூடாது என்று சொல்லும் விதத்தில் சுஜாதாவைப் பற்றி ஜீவி பிரமாதப்படுத்தியிருக்கிறார்.**
//நிச்சயமாக சார். என் மனதைக் கவர்ந்த எழுத்தாளர் என்றால் இவர்தான் முதலில் நிற்பார். நான் வாசிக்க ஆரம்பித்ததே இவரது எழுத்தால்தான் என்றால் மிகையல்ல சார். அடுத்து ஜெயகாந்தன். மனதைக் கவர்ந்தவர்... இருவரைப் பற்றியும் மீண்டும் இங்கு வாசித்தோம்... இன்னும் நான் தொடர்ந்து கொண்டிருப்பவர் சுஜாதா...//
இந்த மாபெரும் எழுத்தாளர்கள் இருவரின் எழுத்துக்களும், இங்கு வருகை தந்துள்ள அனைவருக்குமே பிடித்துள்ளது என்பது அவர்களின் பின்னூட்டங்கள் வாயிலாக நன்கு புலப்படுகிறது.
தங்களின் அன்பான வருகைக்கும், மனம் திறந்து சொல்லியுள்ள ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK
தமிழில் நிறைய படித்தது சுஜாதா என்றாலும், ஜெயகாந்தன் இல்லாத தமிழ் சிறுகதையுலகை நினைத்துப் பார்ப்பது கடினம்.
பதிலளிநீக்குஅப்பாதுரை April 10, 2016 at 1:18 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//தமிழில் நிறைய படித்தது சுஜாதா என்றாலும், ஜெயகாந்தன் இல்லாத தமிழ் சிறுகதையுலகை நினைத்துப் பார்ப்பது கடினம்.//
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - vgk
இன்றய பிரபலங்களின் கதைகளை நிறையவே படித்திருக்கிறேன். ஜெகாந்தன் தன் கருத்துக்களை கதைகளில் ஆணித்தரமாக சொல்லி இருப்பார். யாருக்கும் பயப்படவே மாட்டார். அக்னி பிரவேசம் சின்ன உதாரணம். நடிகை நாடகம் பார்க்கிறாள்....இப்படி எல்லா கதைகளிலுமே அவரின் துணிச்சலான தைரியமான எழுத்துகளை பார்க்க முடியும்...சுஜாதா ஸார் பற்றி........ என்ன சொல்ல தெரியல. ஆல் இன் ஆல் ஸப்ஜெக்டிலும் திறமையான எழுத்தை வெளிப்படுத்தி படிக்கிறவங்களை கட்டிப்போட்டு விடுவார். ஹைக்கூ கவிதைகளிலும் ஏ..ஏ..ஏ...ஜோக் எழுதுவதிலும் அவருடன் யாராலயுமே போட்டி போட்டு ஜெயிக்க முடியாது. சிறப்பான அறிமுகங்கள்......
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி...April 10, 2016 at 10:28 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இன்றைய பிரபலங்களின் கதைகளை நிறையவே படித்திருக்கிறேன். ஜெயகாந்தன் தன் கருத்துக்களை கதைகளில் ஆணித்தரமாக சொல்லி இருப்பார். யாருக்கும் பயப்படவே மாட்டார். அக்னி பிரவேசம் சின்ன உதாரணம். நடிகை நாடகம் பார்க்கிறாள்.... இப்படி எல்லா கதைகளிலுமே அவரின் துணிச்சலான தைரியமான எழுத்துகளை பார்க்க முடியும்...//
துணிச்சலான தைரியமான கருத்துக்களை ஆணித்தரமாகச் சொல்லி அசத்தியுள்ளீர்கள். :)
//சுஜாதா ஸார் பற்றி........ என்ன சொல்ல தெரியல. ஆல் இன் ஆல் ஸப்ஜெக்டிலும் திறமையான எழுத்தை வெளிப்படுத்தி படிக்கிறவங்களை கட்டிப்போட்டு விடுவார். //
அசத்தலான பின்னூட்டங்களால் தாங்களும் என்னை தங்கள் அன்பினால் கட்டிப்போட்டு விட்டீர்கள். :)
//ஹைக்கூ கவிதைகளிலும் ஏ..ஏ..ஏ...ஜோக் எழுதுவதிலும் அவருடன் யாராலயுமே போட்டி போட்டு ஜெயிக்க முடியாது. //
ஹைய்ய்ய்யோ, அப்படியா? சின்னப்பையனான எனக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியவில்லை.
‘நான் ஒரு முட்டாளுங்க ... நல்லாப்படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க ... நான் ஒரு முட்டாளுங்க’ என்ற பாடல்தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
//சிறப்பான அறிமுகங்கள்......//
தங்களின் அன்பான வருகைக்கும், சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
இன்றய அறிமுகங்கள் இருவரையுமே பலருக்கும் தெரிந்திருப்பதை பின்னூட்டங்கள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. ஆமா.... நானும் இருவரின் கதைகளையும் படிச்சிருக்கேன்.........
பதிலளிநீக்குப்ராப்தம் April 10, 2016 at 10:30 AM
நீக்குவாங்கோ, வணக்கம்மா. நலம் தானே? :)
//இன்றைய அறிமுகங்கள் இருவரையுமே பலருக்கும் தெரிந்திருப்பதை பின்னூட்டங்கள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.//
ஆம் ... என்னாலும் இதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது. சந்தோஷம்.
//ஆமா.... நானும் இருவரின் கதைகளையும் படிச்சிருக்கேன்.........//
வெரி குட்.
ஜெயகாந்தன் அவர்களின் எந்தக்கதையையுமே நான் இதுவரை படிக்கவில்லை என்பதை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். :(
அதிலும் அவரின் ஒரு கதையின் தலைப்பான ‘நீ இன்னா சார் சொல்றே’ என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.
அதே தலைப்பினில் என் மனதில், இப்போது என்னால், பலகதைகளைக் கற்பனையில் கொண்டுவர முடிகிறது
அந்த அவரின் ஒரு தலைப்பினிலேயே நாம் எவ்வளவு விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது!
தங்களுக்கும் இதுபோல ஏதாவது புதிதாகப் புரிந்திருக்கக்கூடும் என நான் நம்புகிறேன் ! :)
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
ஜெயகாந்தன் சுஜாதா இருவரின் கதைகளும் நிறைய படித்து பசு மாடு அசை போடுவது போல அசை போட்டு ரசிச்சிருக்கேன். இன்றய அறிமுகங்கள் இருவரையுமே தெரிந்திருப்பதில்தனி மகிழ்ச்சி......
பதிலளிநீக்குsrini vasan April 10, 2016 at 10:36 AM
நீக்கு//ஜெயகாந்தன் சுஜாதா இருவரின் கதைகளும் நிறைய படித்து பசு மாடு அசை போடுவது போல அசை போட்டு ரசிச்சிருக்கேன்.//
"வைக்கோலை மாடு மறந்தாலும் மறக்கலாம், வை.கோ.வின் எழுத்துக்களை வலையுலகம் மறக்குமா?"
என என் பழைய நண்பர் ஒருவர் தமாஷாக முன்னொரு காலத்தில் எனக்கு பின்னூட்டமிட்டிருந்தார். அது ஏனோ இப்போ என் நினைவுக்கு வந்தது. :)
தாங்கள் இந்த இருவரின் படைப்புக்களையும் அசை போட்டுப்படித்துள்ளதாகச் சொல்வதில் மகிழ்ச்சியே. எதையுமே நுனிப்புல் மேயக்கூடாது. படிக்க ஆரம்பித்துவிட்டால் நன்கு அசைபோட்டே படிக்க வேண்டும் என்பதே என் பாலிஸியும் ஆகும்.
//இன்றைய அறிமுகங்கள் இருவரையுமே தெரிந்திருப்பதில் தனி மகிழ்ச்சி......//
மிக்க மகிழ்ச்சி. அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி - VGK
ஜெயகாந்தன்.... சுஜாதா எழுத்துக்களை படித்து ரசித்த அனுபவம் உண்டு.பின்னூட்டத்திலும் பலரின் கருத்துகளும் சுவாரசியமாக சொல்லி இருக்காங்க.....
பதிலளிநீக்குஆல் இஸ் வெல்....... April 10, 2016 at 5:32 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஜெயகாந்தன்.... சுஜாதா எழுத்துக்களை படித்து ரசித்த அனுபவம் உண்டு. பின்னூட்டத்திலும் பலரின் கருத்துகளும் சுவாரசியமாக சொல்லி இருக்காங்க.....//
மிக்க மகிழ்ச்சி. அன்பான வருகைக்கு மிக்க நன்றி. VGK
இவங்க இருவரில் சுஜாதா கதை படிச்சிருக்கேன். ஜெயகாந்தன் படித்ததில்ல....
பதிலளிநீக்குசிப்பிக்குள் முத்து. April 10, 2016 at 5:41 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இவங்க இருவரில் சுஜாதா கதை படிச்சிருக்கேன். ஜெயகாந்தன் படித்ததில்ல....//
ஹைய்ய்ய்ய்யா .... அப்போ நீங்களும் நானும் ஒன்றே தான். கவலையே படாதீங்கோ. அன்பான வருகைக்கும் முத்தான .... சிப்பிக்குள் முத்தான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்மா. VGK
ஜெயகாந்தன் நூல்கள் அதிகம் வாசித்து இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் சமயம் மதுரை அமேரிக்கன் கல்லூரியில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடாகி இருந்தது. அதில் எங்கள் கல்லூரியில் இருந்தும் சென்று கலந்து கொண்டோம். அவரை அப்போது தான் நேரில் பார்த்தேன்.
பதிலளிநீக்குசுஜாதா அவர்களின் கதைகளையும் விரும்பி படித்து இருக்கிறேன்.
பழைய நினைவுகள்...அழகு அல்லவா....நன்றி உங்களுக்கு ஐயா:)...
R.Umayal Gayathri April 11, 2016 at 9:16 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//ஜெயகாந்தன் நூல்கள் அதிகம் வாசித்து இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் சமயம் மதுரை அமேரிக்கன் கல்லூரியில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடாகி இருந்தது. அதில் எங்கள் கல்லூரியில் இருந்தும் சென்று கலந்து கொண்டோம். அவரை அப்போது தான் நேரில் பார்த்தேன்.//
ஆஹா, இதைக்கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
//சுஜாதா அவர்களின் கதைகளையும் விரும்பி படித்து இருக்கிறேன்.//
சந்தோஷம். :)
//பழைய நினைவுகள்...அழகு அல்லவா....நன்றி உங்களுக்கு ஐயா:)...//
தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், இனிமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். VGK
குருஜி.... மேலே இருக்குர கலர் கலர் வளவி அல்லா ஒண்ணுக்குள்ளார போயி போயி வாரது நல்லா இருக்குது..... ஆமா நீங்க எந்த பதிவு போட்டுகிட்டாலும் நெறய பேருக வந்து பெரிசு பெரிசா கமண்டு போடுறாகளே.... அது எப்பூடி....நீங்க அவுகள விட பெரிய ரிப்ளை வேர போடுறீங்க.. ஏதுமே வெளங்கி கிட ஏலலியே.... எங்கட அம்மி சொல்லுதாப்ல நா மக்கு தானோ........
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... April 11, 2016 at 10:20 AM
நீக்குவாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.
//குருஜி.... மேலே இருக்குர கலர் கலர் வளவி அல்லா ஒண்ணுக்குள்ளார போயி போயி வாரது நல்லா இருக்குது..... ஆமா நீங்க எந்த பதிவு போட்டுகிட்டாலும் நெறய பேருக வந்து பெரிசு பெரிசா கமண்டு போடுறாகளே.... அது எப்பூடி....நீங்க அவுகள விட பெரிய ரிப்ளை வேர போடுறீங்க.. ஏதுமே வெளங்கி கிட ஏலலியே.... எங்கட அம்மி சொல்லுதாப்ல நா மக்கு தானோ........//
ஆஹா, அந்த மின்னலு முருகுப்பொண்ணு இங்கு வந்தால் என்னென்ன சொல்லும் எனக் கற்பனை செய்து எழுதியுள்ளது அழகோ அழகு ! பாராட்டுகள்.
இதைப்பார்த்துவிட்டு அந்த மின்னலு முருகு கையில் கட்டையைத் தூக்கிக்கிட்டு வராமல் இருக்கணும்.
அவளைத்தவிர, என்னை ’குருஜி’ என்று யார் அழைத்தாலும், கையில் கட்டையுடன் வந்துடுவா.
இனி உங்களுக்கு ஆச்சு, அவளுக்கு ஆச்சு. நான் இப்போது எஸ்கேப் ......
அன்புடன் VGK
இதாரது...... எங்கடா குருஜி கிட்டால என்னிய போல எளுதிபோடவே ரவுஸூ பண்ணி போடுதுன்னுபிட்டு. இதெல்லாம் நல்லாலே. சொல்லி போட்டேன். பேர பாரு ஸ்ரத்தா ஸபுரின்னுபிட்டு வெளங்காதா பேர வச்சிகிட்டு என்னியபோல காபி பண்ணுறீகளோ???? குருஜி ஆராக்கும் இவுரு.. எங்கிட்டாலலா மோதகோடாதுன்னுபிட்டு சொல்லி வைச்சு போடுக... நா ரொம்ப கோவ காரி.. என்னிய உசுப்பி வுட்டுகிட வாணாம். கையில கட்டயோடதா நின்னுகிட்டு கெடக்கேன்.. ஒடனே வந்து பிட்டு மாய்ப்பு கேட்டு போடோணும்லா இல்லேனா நடக்குதே வேர.....
பதிலளிநீக்குmru April 11, 2016 at 5:50 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//இதாரது...... எங்கடா குருஜி கிட்டால என்னிய போல எளுதிபோடவே ரவுஸூ பண்ணி போடுதுன்னுபிட்டு. இதெல்லாம் நல்லாலே. சொல்லி போட்டேன்.//
அடாடா, கோச்சுக்காதீங்க முருகு. நீங்க ஒருவேளை உங்க நிக்காஹ் வேலைகளில் பிஸியாக இருப்பதால், உங்களுக்கு பதிலாக அவரைவிட்டு, உங்களைப்போலவே பின்னூட்டமிடச் சொல்லி இருக்கீங்களோன்னு முதலில் நானும் நினைச்சுப்போட்டேன்.
//பேர பாரு ஸ்ரத்தா ஸபுரின்னுபிட்டு வெளங்காதா பேர வச்சிகிட்டு என்னியபோல காபி பண்ணுறீகளோ????//
ஒருவேளை இது ஏதேனும் அழகான வடமொழிப்பெயராக இருக்குமோன்னு இவ்வளவு நாளாக நினைச்சுக் கிட்டு இருந்தேன் நான். நீங்க ஒரேயடியா இப்படிச் சொல்லிட்டீங்களே, முருகு. எதற்கும் வடக்கே வாழும் நம் டீச்சரம்மாவிடம் இதுபற்றி நாம் பிறகு கேட்டுக்கொள்வோம்.
//குருஜி ஆராக்கும் இவுரு..//
எனக்கு இவரைத்தெரியாதே முருகு. அடிக்கடி என் பதிவுகள் பக்கம் வருகிறார். இருப்பினும் ஆணா பெண்ணா என்றுகூட என்னால் இன்னும் யூகிக்க முடியவில்லை. இருப்பினும் நான் இவரை ஆண்கள் லிஸ்டில் தான் என்னிடம் வைத்துக்கொண்டுள்ளேன்.
//எங்கிட்டாலலா மோதகோடாதுன்னுபிட்டு சொல்லி வைச்சு போடுக... நா ரொம்ப கோவ காரி.. என்னிய உசுப்பி வுட்டுகிட வாணாம். கையில கட்டயோடதா நின்னுகிட்டு கெடக்கேன்.. ஒடனே வந்து பிட்டு மாய்ப்பு கேட்டு போடோணும்லா இல்லேனா நடக்குதே வேர.....//
அச்சச்சோ ..... கையிலுள்ள கட்டையைத் தூக்கிப்போட்டுட்டு, இதையெல்லாம் ஜாலியா எடுத்துக்கிட்டு, ஜாலியா இருங்கோ முருகு. கோபமெல்லாம் வேண்டாம்.
-oOo-
அமெரிக்க ஆய்வுப் பத்திரிகையொன்றில் கோபத்தைப்பற்றி சொல்லியிருப்பதைக் கீழே கொடுத்துள்ளேன். படிச்சுப் பாருங்கோ. பயன்படும்:
ஒரு மனிதனுக்கு வரக்கூடிய நோய்களில், பெரும்பாலான நோய்கள், அவனுக்கு ஏற்படும் கோபத்தால் மட்டுமே வருகின்றன என்கிறார்கள் டாக்டர்கள்.
கோபத்துடன் இருப்பது என்பது நீங்கள் விஷத்தைச் சாப்பிட்டுவிட்டு, மற்றவன் இறக்க வேண்டும் என்று ஆசைப்படுவது போன்றது.
சிலருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வந்துவிடும். கடுமையான வார்த்தைகள் வந்து விழும். இவர்களின் கோபம் இவர்களைச்சுற்றி, கண்ணுக்குத் தெரியாத வேலி ஒன்றை அமைத்து விடுகிறது. இந்த வேலியைத் தாண்டிக்கொண்டு யாரும் இவர்களை நெருங்குவது இல்லை. இதனால் இழப்பு மற்றவர்களுக்கு இல்லை. கோபப்படுபவர்களுக்கு மட்டுமே தான்.
கோபம் இரண்டு விதமாக வருகிறது:
(1) அடுத்தவர்களின் நடவடிக்கை நமக்குத் திருப்தி இல்லாத போது.
(2) நம்முடைய நடவடிக்கை அடுத்தவர்களுக்கு திருப்தி தராதபோது.
கோபம் என்பது தவிர்க்க முடியாதது. இயல்பானது என்றும் சொல்வார்கள். ஆனால் நாம் பிறந்த போது கோபம் நம்மிடம் இல்லை. கோபத்தை நம் பெற்றோர்களும் நமக்குக் கற்றுக் கொடுத்தது இல்லை. பிறகு கோபம் நம்மிடம் எப்படி வந்தது?
’ஒருவர் இப்படி நடந்துகொண்டால்தான் நான் சந்தோஷப்படுவேன்; அவர் வேறு மாதிரியாக நடந்துகொண்டால் நான் கோபப்படுவேன்’ என்று அடுத்தவரின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த நாம் யார்?
கோபப்படுவது என்பது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்பதை யார் புரிந்துகொள்கிறார்களோ அவருக்குக் கோபமே வராது.
-oOo-
எனினும் தங்களின் கோபமான வருகைக்கும், மிகக் கோபமான கருத்துக்களுக்கும், தங்கள் கோபத்தை தணிக்க வேண்டி நான் மேலே சொல்லியுள்ள கருத்துக்களை வெளியிட உதவியதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், முருகு.
இதைப்படித்ததும் உங்களுக்கு சிரிப்பாணி பொத்துக்கிச்சா இல்லையா என்பதை அறிய விரும்பும் உங்களின் பிரியமுள்ள குருஜி கோபு :)
வந்துட்டாஙய்யா வந்துட்டாங்க........ அம்மாடி முருகம்மா....... பெரிய மனசு பண்ணி மாப்பு கொடுத்து போடுங்க .. தாயி... இனிமேக் கொண்டு உங்க வழிக்கே வரமாட்டேன்........ ஏதுக்காக ஒங்கள போல எழுதினேன்னு தெரியமா.. தெரியாதுல்ல???? இப்ப தெரிஞ்சுகிடுங்க.... நாங்க எவ்வளவு பேரு மெண்டு போட்டாலும் அது எல்லானாலயும் படிச்சு பிரிஞ்சுக்க சுலபமான தமிழ்ல இருக்கும்...... விஷயங்களில் மட்டுமே வித்தியாசம் இருக்கும்... ஆனா நீங்க பதிவுக்கே சம்பந்தமில்லாம.. உங்க கொச்சைத் தமிழில் போடும் கமெண்டுகள் அசத்தலாக இருக்கும்... சுலப தமிழ்ல யாரு வேணாலும் எழுத முடியும்.. கொச்சைத் தமிக்ஷ்ல உங்களால மட்டும் தான் இவ்வளவு சுவாரசியமா எழுத முடியுது. உங்க எழுத்தை கோபால் ஸார் ( நீங்க தா குருஜின்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லி போட்டீகளே?).....எந்த அளவுக்கு ரசிக்கறாங்களோ அதபோல எனக்கும் ரசிக்க பிடிக்கும்... நான் மேல போட்ட நாலு வரி மோண்டு டைப் பண்ண எனக்கு அரை மணி நேரத்துக்கு மேல ஆயிடிச்சு.. ஆனா நீங்க அனாயாசம நேயர் கடிதாசி கமெண்டு னு அசத்துறீங்க. அதான் உங்கள போல எழுத ட்ரை பண்ணினேன்... ஆனாகூட உங்க டச் வரல... ஸோ..... யூ ஆர்... க்ரேட்...
நீக்குஓ....கே.....ஓ.....கே....... மாப்பு கேட்டு போட்டீக... இனிமேக்கொண்டு என்னிய சீண்டி விட கோடாது... குருஜி என்னிய கோவப்படக்கோடாதுன்னு சொல்லி போட்டாக. குருஜி இன்னா சொல்லிகினாலும் கேட்டு போடுவன்லா...... செய்யற அக்குறும்பெல்லா செய்து போட்டு ஏதுக்காக பெரிய ஐஸூ பொட்டிய தல மேல வச்சீக???????. போனா போவுதுன்னு விட்டு போட்டேன். பொளச்சி போங்க.........
நீக்குஆமா ஸார் நீங்க எந்த விஷயத்தை எழுத எடுத்துக்கொண்டாலும் கற்பனையில் எவ்வளவு விரிவாக மனதில் ஓட விட்டு ரசிக்கும்படி சுவாரசியமாக எழுதி வறீங்க. எனக்கும் கற்பனைகுதிரையை ஓட விட ஆசை வந்தது.இங்கு எத்தனையோ பேர்கள் விதமாக விதமான எழுத்து திறமைகளை பின்னூட்டத்தில் காட்டியிருக்காங்க.. இந்த முருகு மின்னலோட நேயர் கடிதம் படித்ததில் இருந்தே அவங்களைப்போல ஒரு பின்னூட்டமாவது போடணும்னு நினைத்தேன்... அதுதான்.. இந்த பதிவுக்கு அவங்க பின்னூட்டம் போட்டா எப்படி எழுதி இருப்பாங்கனு ரொம்ப யோசிச்சு ஒரு ஜாலிக்காக அவங்கள போல எழுத ட்ரை பண்ணினேன்... நீங்க ஈசியா எடுத்துகிட்டீங்க. அவங்க கோவப்படுவாங்களோன்னு பயம்மாஆஆஆஆ இருக்கே... ஏதானும் தப்பு பண்ணிட்டேனோ.. இன்னும் அவங்க இதைப் பார்க்கல போல இருக்கு... நான் ஒரு ஆர்வத்தில் அவங்களைப்போல எழுதினது தப்போனு தோணுது இப்ப என்ன பண்ண????????.... ஏதாவது வழி சொல்லுங்க ஸார்... ஒரே டென்ஷனா இருக்கு...
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... April 11, 2016 at 6:05 PM
நீக்குவாங்கோ .......
//ஆமா ஸார் நீங்க எந்த விஷயத்தை எழுத எடுத்துக்கொண்டாலும் கற்பனையில் எவ்வளவு விரிவாக மனதில் ஓட விட்டு ரசிக்கும்படி சுவாரசியமாக எழுதி வறீங்க. எனக்கும் கற்பனைகுதிரையை ஓட விட ஆசை வந்தது. //
அப்படியா, மிக்க மகிழ்ச்சி.
//இங்கு எத்தனையோ பேர்கள் விதமாக விதமான எழுத்து திறமைகளை பின்னூட்டத்தில் காட்டியிருக்காங்க.. இந்த முருகு மின்னலோட நேயர் கடிதம் படித்ததில் இருந்தே அவங்களைப்போல ஒரு பின்னூட்டமாவது போடணும்னு நினைத்தேன்... அதுதான்.. இந்த பதிவுக்கு அவங்க பின்னூட்டம் போட்டா எப்படி எழுதி இருப்பாங்கனு ரொம்ப யோசிச்சு ஒரு ஜாலிக்காக அவங்கள போல எழுத ட்ரை பண்ணினேன்...//
ஒருவரை மாதிரி அப்படியே தத்ரூபமாகப் பேசி நடித்து மிமிக்ரி செய்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல தாங்களும் தங்கள் பின்னூட்டத்தில் முருகு போலவே மிமிக்ரி செய்து எழுதியுள்ளீர்கள். அது எனக்கு மிகவும் பிடித்தமாகத்தான் உள்ளது. பாராட்டுகள்.
//நீங்க ஈசியா எடுத்துகிட்டீங்க. அவங்க கோவப்படுவாங்களோன்னு பயம்மாஆஆஆஆ இருக்கே... ஏதானும் தப்பு பண்ணிட்டேனோ.. இன்னும் அவங்க இதைப் பார்க்கல போல இருக்கு... நான் ஒரு ஆர்வத்தில் அவங்களைப்போல எழுதினது தப்போனு தோணுது இப்ப என்ன பண்ண????????.... ஏதாவது வழி சொல்லுங்க ஸார்... ஒரே டென்ஷனா இருக்கு...//
கோபப்பட வேண்டாம்; இதை ஈஸியா ஜாலியா ஸ்போர்டிவ் ஆக எடுத்துக்கோங்கோன்னு முருகுவை நானும் மேலே என் பதிலில் கேட்டுக்கொண்டுள்ளேன். முருகு மிகவும் நல்ல பொண்ணு. கோபம் உள்ள அவளிடம் நல்ல குணமும் நிச்சயமாக இருக்கும். பார்ப்போம். - VGK
குருஜி...... ஒங்கட மேல கோவம்........ அந்த ஆளுதா என்னிய போல எளுதி அடாவடி பண்ணிப் போட்டாக.. அவுக மண்டயில ஒரக்குறாப்ல நாலு வார்த்த திட்டி போட்டிருகோணும் நீங்க... அத வுட்டு போட்டு பாராட்டுறீங்க... இது இன்னா நாயம்????????
நீக்குmru April 13, 2016 at 10:56 AM
நீக்கு//குருஜி...... ஒங்கட மேல கோவம்........ அந்த ஆளுதா என்னிய போல எளுதி அடாவடி பண்ணிப் போட்டாக.. அவுக மண்டயில ஒரக்குறாப்ல நாலு வார்த்த திட்டி போட்டிருகோணும் நீங்க... அத வுட்டு போட்டு பாராட்டுறீங்க... இது இன்னா நாயம்????????//
மேலே நான் இவ்வளவு தூரம் எடுத்துச்சொல்லியும் மீண்டும் கோபமா? அட, ஆண்டவா .... !
எங்களையே கோபத்தில் இந்தப்பாடு படுத்துறீங்களே .. அவங்க (புரிஞ்சுதா?) முருகுவிடம் மாட்டிக்கிட்டு என்னபாடு படப்போகிறாரோ?
கடவுளே ! கடவுளே !! [அண்ணாமலைப் படத்து பால்கார ரஜினி ஸ்டைலில் இதைப் படிக்கவும் :)]
அன்புடன் குருஜி
ஜெயகாந்தன் நூல்கள் எல்லாம் நிறைய படித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குவிகடனில் முத்திரை கதையாக வந்தவை, தொடர் கதையாக வந்தவை எல்லாம் படித்து இருக்கிறேன்.
நாங்கள் மதுரையில் இருந்த போது (சிறுவயதில்) எங்கள் வீட்டுக்கு அருகில் திரு .ஜெயகாந்தன் அவர்களின் நண்பர் இருந்தார் அப்போது அவர் வீட்டுக்கு வந்து இருந்தார், நாங்கள் போய் பார்த்து பேசி இருக்கிறோம்.(அப்பா, அக்கா, அண்ணன்)
சுஜாதா கதைகள் எல்லாம் படித்து இருக்கிறேன் சில கதைகள் பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன்.
‘ஜீனோ’ ‘மீண்டும் ஜீனோ’ வீட்டில் இருக்கிறது.
சுஜாதா விஞ்ஞான கட்டுரைகள், கிரைம் நாவல் எல்லாமே பிடிக்கும் அருமையான எழுத்தாளர். சினிமாவிற்கு வசனங்களும் எழுதி இருக்கிறார்.
இருவரையும் பற்றி நிறைய விஷயங்கள் பகிர்ந்து இருப்பதை படிக்க ஆசையாக இருக்கிறது மீண்டும் நேரம் கிடைக்கும் போது வந்து பின்னீட்டங்களை படிக்கிறேன்.
கோமதி அரசு April 12, 2016 at 7:04 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//ஜெயகாந்தன் நூல்கள் எல்லாம் நிறைய படித்து இருக்கிறேன். விகடனில் முத்திரை கதையாக வந்தவை, தொடர் கதையாக வந்தவை எல்லாம் படித்து இருக்கிறேன். நாங்கள் மதுரையில் இருந்த போது (சிறுவயதில்) எங்கள் வீட்டுக்கு அருகில் திரு. ஜெயகாந்தன் அவர்களின் நண்பர் இருந்தார் அப்போது அவர் வீட்டுக்கு வந்து இருந்தார், நாங்கள் போய் பார்த்து பேசி இருக்கிறோம்.(அப்பா, அக்கா, அண்ணன்)//
ஆஹா ! இவற்றையெல்லாம் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. :)
//சுஜாதா கதைகள் எல்லாம் படித்து இருக்கிறேன் சில கதைகள் பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன்.
‘ஜீனோ’ ‘மீண்டும் ஜீனோ’ வீட்டில் இருக்கிறது.
சுஜாதா விஞ்ஞான கட்டுரைகள், கிரைம் நாவல் எல்லாமே பிடிக்கும் அருமையான எழுத்தாளர். சினிமாவிற்கு வசனங்களும் எழுதி இருக்கிறார்.//
ஆமாம். மிக்க மகிழ்ச்சி, மேடம்.
//இருவரையும் பற்றி நிறைய விஷயங்கள் பகிர்ந்து இருப்பதை படிக்க ஆசையாக இருக்கிறது.//
அருமை. நல்லது.
//மீண்டும் நேரம் கிடைக்கும் போது வந்து பின்னூட்டங்களை படிக்கிறேன்.//
அதுதான் தங்களின் ஸ்பெஷாலிடியே. :) மிகவும் சந்தோஷம் மேடம்.
தங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK
ஜெயகாந்தனுக்கு ஈடு இணை இல்லை. ஆழ்வார்ப்பேட்டை ராமசாமி நாயக்கன் தெரு வீட்டின் மாடியில் தினம் தினம் அவரும் அவர் நண்பர்களும் இலக்கியக் கூட்டம் நடத்துவார்கள். அதைத் தள்ளி இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறேன். சித்தப்பாவின் வீட்டில் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். நா.பார்த்தசாரதியைப் பல முறை பார்த்திருக்கிறேன். சுஜாதாவின் எழுத்தைக் குறித்துச் சொல்லவே வேண்டாம். அவரை ரசிக்காதவர்கள் இருந்தால் தான் ஆச்சரியம். இன்று பலரும் அவரின் அடிச்சுவட்டை ஒட்டியே எழுதுகின்றனர். பலரும் அவரின் சீடர்கள் என்றும் சொல்லிக் கொள்கின்றனர். எனக்குப் பிடித்தது சுஜாதாவின் கற்றதும், பெற்றதும். இது நின்றதும் ஆனந்தவிகடன் வாங்குவதையும் நிறுத்தி விட்டேன். :)
பதிலளிநீக்குGeetha Sambasivam April 12, 2016 at 2:11 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//ஜெயகாந்தனுக்கு ஈடு இணை இல்லை. ஆழ்வார்ப்பேட்டை ராமசாமி நாயக்கன் தெரு வீட்டின் மாடியில் தினம் தினம் அவரும் அவர் நண்பர்களும் இலக்கியக் கூட்டம் நடத்துவார்கள். அதைத் தள்ளி இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறேன். சித்தப்பாவின் வீட்டில் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். நா.பார்த்தசாரதியைப் பல முறை பார்த்திருக்கிறேன்.//
ஆஹா, இதையெல்லாம் கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.
//சுஜாதாவின் எழுத்தைக் குறித்துச் சொல்லவே வேண்டாம். அவரை ரசிக்காதவர்கள் இருந்தால் தான் ஆச்சரியம். இன்று பலரும் அவரின் அடிச்சுவட்டை ஒட்டியே எழுதுகின்றனர். பலரும் அவரின் சீடர்கள் என்றும் சொல்லிக் கொள்கின்றனர்.//
பிரபலங்களுக்கு தாங்கள் சிஷ்யகோடிகள் என்று பலரும் சொல்லிக்கொள்வதில் ஒரு தனிப்பெருமை கொள்வார்கள்தான். :)
//எனக்குப் பிடித்தது சுஜாதாவின் கற்றதும், பெற்றதும். இது நின்றதும் ஆனந்தவிகடன் வாங்குவதையும் நிறுத்தி விட்டேன். :)//
நல்ல முடிவு. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சில பத்திரிகைகளால் சில எழுத்தாளர்களுக்குப் பெருமை. சில எழுத்தாளர்களால் மட்டுமே சில பத்திரிகைகளுக்குப் பெருமை, எனப் புரிந்துகொள்ள முடிகிறது.
தங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK
ஜெயகாந்தனுக்கு ஈடு இணையில்லை - நிஜமாவா?
நீக்குஈடு இணையில்லை என்கிற பட்டம் புதுமைப் பித்தனுக்கு பொருந்தும்னு என் கருத்து.
நீக்குஇது அவரவர் படிப்பின் ரசனைக்கேற்ப மாறலாம் அப்பாதுரை! குறைந்த அளவு படிப்பே கிடைக்கப்பெற்ற ஜெயகாந்தனின் சிந்தனைகள் ஆழமானவை! முதிர்ச்சியானவை! அந்த அளவுக்கு நான் புதுமைப்பித்தனைப் படித்ததில்லை. ஜெயகாந்தன் குறித்த என் கருத்து என்னுடைய சொந்தக் கருத்தே! மற்றவர்க்கு மாறுபடலாம். :)
நீக்குஎழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சுஜாதா பற்றிய எழுத்தாளர் ஜீவியின் கருத்துக்களை குறிப்பிட்டமைக்கு நன்றி. இந்த இரண்டு எழுத்தாளார்களது சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்று நான் மூழ்கிய நேரம் எனது வாலிபப் பருவம். எப்படி ரசித்து இருப்பேன் என்பதனை சொல்லவும் வேண்டுமோ?
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ April 12, 2016 at 10:15 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சுஜாதா பற்றிய எழுத்தாளர் ஜீவியின் கருத்துக்களை குறிப்பிட்டமைக்கு நன்றி. இந்த இரண்டு எழுத்தாளார்களது சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்று நான் மூழ்கிய நேரம் எனது வாலிபப் பருவம். எப்படி ரசித்து இருப்பேன் என்பதனை சொல்லவும் வேண்டுமோ? //
தாங்கள் சொல்லவே வேண்டாம். என்னால் இதனை மிகவும் நன்கு உணரமுடிகிறது.
தங்களின் அன்பான வருகைக்கும் சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK
பல வருடங்கள் உருண்டோடி என் அருமை நண்பர் திரு.வை.கோ. சாரின் இந்தப் பதிவு
பதிலளிநீக்குஇன்று என் வாசிப்புக்கு கிடைத்தது அபூர்வம்.