’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot. in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி
முதற்பதிப்பு: 2016
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979
அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225
ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் நம் ஜீவி.
இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.
31) பெண்ணியப் போராளி
அம்பை
[பக்கம் 188 முதல் 198 வரை]
அம்பை 'கண்ணன்' என்ற சிறுவர்கள் பத்திரிகையில் 'நந்திமலைச் சாரலிலே' என்று தொடர் எழுதத் தொடங்கியவராம். பின் 'கலைமகள்' பத்திரிகையில் ஆத்மார்த்தமான காதலைச் சொல்லும் 'அந்திமாலை' நாவலை எழுதி நாராயணசாமி ஐயர் விருது பெற்றிருக்கிறார். அம்பையின் பேசப்பட்ட கதையான ‘காட்டில் ஒரு மான்’; ‘சிறகுகள் முறியும்’; ‘ஒரு கட்டுக்கதை’ என்ற அர்த்தபூர்வமான கதைகள் பலவும் பற்றி ஜீவி குறிப்பிடுகிறார்.
அம்பையின் 'வெளிபாடு' கதையில் இரு பெண்களும் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையில் வித்தியாசமிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
இவரது 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' கதையும் விவாதத்திற்குள்ளாகிறது.
ஆணைச் சார்ந்து பெண், பெண்ணைச் சார்ந்து ஆண் என்பது அற்புத நிலை என்கிற தன் கருத்தையும் ஜீவி அம்பையின் கட்டுரையில் பதிகிறார்.
அம்பை பெண்ணியப் போராளி. அவரது ''அம்மா ஒரு கொலை செய்தாள்' கதையை எடுத்துக் கொண்டு விஸ்தாரமாக விவாதிக்கிறார் ஜீவி. அம்பையே இந்தக் கதையை மீண்டும் எழுதினால் மாற்றி எழுதுவார் என்கிறார். அது என்னவோ உண்மைதான் என நானும் சொல்வேன்.
‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்ற கதையை ஜீவி வாயிலாக விரிவாக அறியும்போதே என் மனதில் பல்வேறு தாக்கங்களை இது ஏற்படுத்தி விட்டது. முழுக் கதையையும் அம்பை அவர்களின் எழுத்துக்களில் படிக்கணும்போல என் மனசு துடிக்கிறது இப்போது. அந்த அளவுக்கு அழகாக அதன் முக்கியப்பகுதிகளைக் [கொலை செய்த அந்த அம்மாவின் சுமார் 13 வயதுப்பெண் தன் மனதில் நினைப்பவைகளை] கோடிட்டுக் காட்டியுள்ளார் ஜீவி.
-oOo-
நான் மிகவும் ரஸித்த வரிகள்:
’வார்த்தைகளைச் சொன்னவர்கள் மறந்துவிடலாம். ஆனால் கேட்டவர்கள் மறப்பதற்கில்லை; எதுவும் சொன்னவர்களுக்கு மறந்துவிடும். ஆனால் தன்னைக்குறித்துச் சொன்னதைக் கேட்டவர்களுக்கு அது மறக்கவே மறக்காது. கேட்டவர்களின் உணர்வு சொன்னவர்களைவிடக் கூர்மையானது என்று கொள்வதைப்போல, இந்த மாதிரிக் கதைகளை எழுதுபவர்கள்கூட, தாங்கள் எழுதிய எத்தனையோ கதைகளில் இதையும் ஒன்றாகக்கருதி மறந்துவிடலாம். ஆனால் வாசித்தவர்கள், வாசித்ததை மறப்பதற்கில்லை’
பொதுவான சில கருத்துக்கள்:
ஒரு பெண் குழந்தை ’பூப்பெய்தல்’ என்பது சாதாரணமாக 10 வயதிலிருந்து 16 வயதுக்குள் நடைபெறும் ஆரோக்யமான வரவேற்கப்பட வேண்டியதோர் இயற்கை நிகழ்வுதான்.
இதுபோன்ற எந்தக்குழந்தைக்கும், அதுசமயத்தில் நல்லது கெட்டதைப் பக்குவமாகவும், பாசத்துடன், அன்புடனும், உண்மையான அக்கறையுடனும், மனதில் பதியுமாறு சொல்லித்தர, பொதுவாக அந்தப் பெண் குழந்தையின் தாயைப்போன்ற, ஒரு நல்ல தோழியோ, குருவோ, வழிகாட்டியோ இருக்கவே முடியாது.
குறிப்பாக அந்தக்காலத்தில், தன் சொந்தத் தாயிடம் மட்டுமே, பல பெண் குழந்தைகள் தங்கள் மனதில் உள்ளதைப் பகிர்ந்துகொண்டு, தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெரி(ளி)ந்துகொள்வார்கள்.
ஏழையோ, பணக்காரரோ, வரிசையாகப் பல பெண்களைப்பெற்ற சம்சாரியோ, ஒரேயொரு பெண் குழந்தையை மட்டும் பெற்றவரோ, இதை அவரவர்கள் சக்திக்கு ஏற்ப அந்தக்குழந்தைக்கு புதுத்துணிகள் எடுத்துக்கொடுத்து, மாலைபோட்டு, பூக்களாலும் நகைகளாலும் பல்வேறு அலங்காரங்கள் செய்து ஓர் சடங்காகவே கொண்டாடி வந்துள்ளனர் .... குறிப்பாக அந்தக்காலத்தில்.
பெண் குழந்தைக்கு படிப்பு, அறிவு, புத்திசாலித்தனம், சம்பாதிக்கும் திறன் போன்ற இன்றைய மிக முக்கியக் காரணிகள் அன்று பின்னுக்குத்தள்ளப்பட்டு, பெண் குழந்தையின் நிறமும், அழகும், லக்ஷணமான தோற்றமும் மட்டுமே கல்யாண சந்தையில் அவளை சுலபமாக ஒருவன் ஏற்றுக்கொள்ள பயன்பட்டுள்ளன .... அந்தக்காலத்தில்.
மனித உள்ளத்தின் உணர்வுகளை எழுத்தில் வடிப்பது என்பது எல்லோராலும் செய்ய முடியுமா என்ன? இந்த ஜாலத்தினை செய்பவர்களே திறமையான எழுத்தாளர். அவர்களில் ஒருவரே 1944 இல் பிறந்துள்ள 'அம்பை' என்னும் திருமதி. C.S. லக்ஷ்மி என்ற எழுத்தாளர் அவர்கள்.
அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்ற இந்தக் கதையில் வரும் ஒருசில உரையாடல்களை சற்றே உற்று கவனியுங்கள்.
சூழ்நிலை (SITUATION):
அடிக்கடி வீட்டில் ‘ஸ்வாஹா” எனச்சொல்லியபடி அக்னியில் நெய்யினை ஊற்றி, ஹோமங்கள் நடைபெறும் மிகவும் ஆச்சாரமான குடும்பம்.
பணக்காரியாகவே இருப்பினும், நிறம் கம்மியான பெண்ணைப்பெற்ற ஒரு தாயின் தவிப்பு ஒருபுறம்.
தன் தாயிடமிருந்து அந்த மகள், அந்த க்ஷணத்தில் எதிர்பார்த்து ஏமாந்த ஓர் ஏக்கத்துடன் கூடிய சோகமான சம்பவம் மறுபுறம் ....
என உரையாடல்கள் படிக்கும்போதே என்னை மிகவும் கலங்கச் செய்தன.
அவற்றில் ஒருசில இதோ:
[அந்தப்பெண் பெரிய மனுஷியாவதற்காக முன்பாகவே ஒருநாள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுகிறாள் அம்மா. புடவையைத் தூக்கி சொருகியிருக்கிறாள். வெளுப்பாய் வழவழவென்று தொடை தெரிகிறது. அம்மா குனிந்து நிமிரும்போது அதில் பச்சை நரம்பு ஓடுகிறது]
“அம்மா, நீ மாத்திரம் ஏம்மா இவ்வளவு வெளுப்பு? நான் ஏம்மா கருப்பு?”
சிரிப்புடன் “போடி உன் அழகு யாருக்குடி வரும்?”
அப்போது அவளுக்குப் பதிமூன்று வயது இருக்கலாம். பாவாடைகள் குட்டையாகப் போக ஆரம்பித்து விட்டன. அம்மா எல்லாவற்றையும் நீளமாக்குகிறாள்.
“அம்மா! பருவம்ன்னா என்னம்மா?”
மெளனம். நீண்ட நேர மெளனம்.
அம்மா திடீரென்று சொல்கிறாள்
“நீ இப்படியே, இருடீம்மா... பாவாடையை அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு.”
மற்றொரு சூழ்நிலை (SITUATION):
அம்மா மட்டும் இரண்டு வாரங்களுக்கு வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தம் நேரிடுகிறது. தன் தங்கை பெண்ணுக்கு ‘பெண் பார்க்கும் படலம்’ நடக்க இருந்ததால் அவளின் அம்மா அங்கு செல்ல நேரிடுகிறது. அந்த அவள் போய் வந்த காரியமும் அல்ப காரணங்களால் (பெண்ணின் நிறத்தினால் மட்டுமே) வெற்றிகரமாக சுபமாக முடியவில்லை. அந்த மன வருத்தத்துடன், பட்டுப்புடவை + நகைகள் ஜொலிக்க டாக்ஸியில் வந்து இறங்குகிறாள். (அந்த காலத்திலேயே செல்வச்செழிப்புடன் இருந்தவர்கள்தான் என்பதை, படிக்கும் நாம் அறியவேண்டியே, இந்தக்காட்சி வர்ணனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.)
தன் அம்மா, வீட்டுக்குத் திரும்பி வருவதற்கு முன்பாகவே, இந்தப்பெண் குழந்தை பெரிய மனுஷியாகவே ஆகிவிட்டாள். அக்கம்பக்கத்திலிருந்த சில பெண்மணிகளிடமிருந்து ’இது லோகத்தில் இல்லாத புதிய சமாசாரம் ஒன்றுமில்லை’ என்பதுபோன்ற சிலவற்றை மட்டும் அந்த 3-4 நாட்களில், தெரிந்து கொள்கிறாள். இருப்பினும் தன் அம்மா வாயால் ’லோகத்தில் உள்ள சாதாரண சமாசாரமான’ இதனைப் பற்றி மேலும் கொஞ்சம் விபரமாகத் தெரிந்துகொள்ள, குழந்தையான அவள் நியாயமாக ஆசைப்படுகிறாள்.
லோகத்தில் இருக்கிற அந்த சாதாரண விஷயத்தை, அம்மாதான், அனுசரணையாக தன் செல்லத்திற்கு விளக்கி வழிகாட்டுவாள் என்று பெரிய நம்பிக்கையோடு, மொட்டென்று அம்மா முன் போய் அவள் நிற்கிறாள்.
அவளின் அருகாமையை உணர்ந்த அந்த நிமிஷமே, “உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்?... இது வேற. இனிமே ஒரு பாரம்....” சுளீரென்று கேள்வியாய் அம்மா வெடிக்கிறாள்.
’புரியலே. அம்மா சொன்னது திடுக்கிடுதலா இருக்கிறது. யாரைக் குற்றம் சாட்டுகிறாள், அம்மா?’
இதனால் மனதளவில் வாடி வதங்கிப்போன அந்த மொட்டு, தன் அம்மாவைப்பற்றி இதுவரை தன் மனதில் நினைத்திருந்த உயர்வான எண்ணங்களை சற்றே மாற்றிக்கொண்டு, இப்போது அந்த க்ஷணத்தில் நினைப்பவைகளாக அம்பை எழுதியுள்ளவற்றை, ஜீவி சாரின் நூலில் படித்துப்பார்ப்பதே மிகவும் நல்லது.
அக்னியே ஸ்..வா..ஹா.. ..... ’அசுத்தங்கள் மட்டும் எரிக்கப்படவில்லை. மொட்டுக்களும் மலர்களும் கூடக் கருகிப்போயின....’ என அம்பை தனது கதையை முடித்திருப்பார் போலிருக்கிறது..
எப்பேர்ப்பட்ட எழுத்துக்கள்!
எப்பேர்ப்பட்ட எழுத்தாளர்கள்!!
நிச்சயமாக நாம் தலை வணங்கத்தான் வேண்டும். - vgk
32) நெஞ்சில் நிறைந்த
பாலகுமாரன்
பாலகுமாரன்
[பக்கம் 199 முதல் 206 வரை]
பாலகுமாரன் எழுத்துக்களைப் பற்றி ஜீவி ஆத்மார்த்தமாக எழுதியிருக்கிறார்.
’கிருஷ்ண மந்திரம்’ ஆஸ்ரமம் அல்ல. ஆஸ்ரமம் போன்ற செயல்பாடுகள் கொண்டதாயினும் அதை ஒரு ‘ஓல்டு ஏஜ் ஹோம்’ என்றே நாம் சொல்ல வேண்டும் என ஆரம்பித்து அருமையாகச் சொல்லியுள்ளார், ஜீவி.
’கிருஷ்ண மந்திரம்’ ஆஸ்ரமம் அல்ல. ஆஸ்ரமம் போன்ற செயல்பாடுகள் கொண்டதாயினும் அதை ஒரு ‘ஓல்டு ஏஜ் ஹோம்’ என்றே நாம் சொல்ல வேண்டும் என ஆரம்பித்து அருமையாகச் சொல்லியுள்ளார், ஜீவி.
மருமகள் ஆடிய ஆட்டத்திற்கு உதாரணமாய் பாலகுமாரனின் 'நிழல் யுத்தம்' கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். 27 வாரங்கள் தொடராக கல்கியில் வெளிவந்ததாம். இந்தத் தொடரின் 27 அத்தியாயங்களும் காவியம் என்று புகழ்கிறார்.
இந்த ’நிழல்யுத்தம்’ நாவலை பாலகுமாரனின் இன்னொரு நாவலான ’இரண்டாவது சூரியன்' நாவலோடு உரசிப் பார்க்கிறார். முன்னது ஊருக்குத் தெரியாத டைவோர்ஸ்; பின்னது ஊருக்குத் தெரிந்த டைவோர்ஸ் என்று இரண்டு கதைகளின் போக்குகளையும் அலசுகிறார்.
ஜீவியைப் பொறுத்த மட்டில் பாலகுமாரனின் 'என்னுயிரும் நீயல்லவோ' தான் அவரின் மாஸ்டர் பீஸாம். ஏலக்காய் எஸ்டேட் பற்றி நிறைய தகவல்கள்; பாலகுமாரனின் இன்னொரு நாவலான விகடனில் வெளிவந்த 'அப்பம் வடை தயிர்சாதம்' பற்றியும் ஜீவி சிலாகித்து எழுதத் தவறவில்லை.
வெகுஜனப் பத்திரிகைகளில் இவர் எழுதியுள்ள ‘இரும்புக் குதிரைகள்’; ‘மெர்குரிப்பூக்கள்’; ’கரையோர முதலைகள்’; ‘பச்சை வயல் மனது’; ‘தாயுமானவன்’ போன்ற புதினங்கள் + ‘திருப்பந்துருத்தி’; ‘பலாமரம்’ போன்ற படைப்புகள் வாசகர்களின் மனதை மயக்கின என்கிறார், ஜீவி.
தான் படிக்கிற செய்திகளில் இருக்கும் நிறை குறைகளை எப்படியெல்லாம் ஜீவி ஆழ்ந்து அலசுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அவரது இந்த எழுத்தாளர்களைப் பற்றிய நூல் மிகவும் உதவியது என்று தான் சொல்ல வேண்டும்.
வெகுஜனப் பத்திரிகைகளில் இவர் எழுதியுள்ள ‘இரும்புக் குதிரைகள்’; ‘மெர்குரிப்பூக்கள்’; ’கரையோர முதலைகள்’; ‘பச்சை வயல் மனது’; ‘தாயுமானவன்’ போன்ற புதினங்கள் + ‘திருப்பந்துருத்தி’; ‘பலாமரம்’ போன்ற படைப்புகள் வாசகர்களின் மனதை மயக்கின என்கிறார், ஜீவி.
தான் படிக்கிற செய்திகளில் இருக்கும் நிறை குறைகளை எப்படியெல்லாம் ஜீவி ஆழ்ந்து அலசுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அவரது இந்த எழுத்தாளர்களைப் பற்றிய நூல் மிகவும் உதவியது என்று தான் சொல்ல வேண்டும்.
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.
என்றும் அன்புடன் தங்கள்,
(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்
இதன் அடுத்த பகுதியில்
இடம்பெறப்போகும்
கண் அறுவை சிகிச்சையினால் இதுவரை அதிகம் படிக்க முடியாதிருந்ததால் உங்களின் அத்தனை விமர்சனங்களையும் இன்று தான் படித்தேன். ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விமர்சனமும் மிக அருமை! திரு.ஜீவி அவர்களின் நூலை இத்தனை அழகாக, அதுவும் வேறொரு எழுத்தாளர் விமர்சனம் செய்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு அழகாக எழுதி வருகிறீர்கள்.
பதிலளிநீக்குஇன்றைய பதிவில் நீங்கள் ரசித்து எழுதியிருந்த வரிகளை நானும் ரசித்தேன். அம்பையின் எழுத்தை நான் நிறைய வாசித்திருக்கிறேன். திரு. பாலகுமாரனின் எழுத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நாவல்களையும் வாசித்திருக்கிறேன். அவற்றில் சில என் வீட்டு நூலகத்திலும் உள்ளன. அவரின் நாவல்களில் சில நிறைய விவாதங்களுக்குள்ளும் ஆளாகியிருக்கின்றன. ஆனாலும் எனக்குத் தெரிந்தவரை அவருக்கு ஏராளமான ரசிகைகள் இருக்கிறார்கள். மனதைத் தாக்கும் எழுத்து அவருடையது!!
மனோ சாமிநாதன் April 15, 2016 at 4:44 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//கண் அறுவை சிகிச்சையினால் இதுவரை அதிகம் படிக்க முடியாதிருந்ததால் உங்களின் அத்தனை விமர்சனங்களையும் இன்று தான் படித்தேன்.//
இந்தத்தொடரின் பகுதி-1க்கு மட்டும் வருகை தந்திருந்தீர்கள். ஒருவேளை கண் பிரச்சனையாக இருக்குமோ என நானும் எனக்குள் நினைத்துக்கொண்டேன். இன்று ஒரேயடியாக அனைத்துப் பகுதிகளையும் படித்து முடித்ததாகச் சொல்லியுள்ளது கேட்க வியப்பாக உள்ளது.
//ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விமர்சனமும் மிக அருமை! //
இதைத்தங்கள் மூலம் இன்று நான் கேட்பதில் தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி, மேடம்.
//திரு. ஜீவி அவர்களின் நூலை இத்தனை அழகாக, அதுவும் வேறொரு எழுத்தாளர் விமர்சனம் செய்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு அழகாக எழுதி வருகிறீர்கள்.//
திரு. ஜீவி சார் அவர்களின் பாண்டித்யம் + அவரின் நாகரீகமான எழுத்துத்திறமை + அவரின் வித்யாசமான ரசிப்புத்திறன் + அவர் பிறகுக்கு எழுதும் பின்னூட்டங்கள் ஆகியவற்றின் மேல் எனக்குள்ள மரியாதை + ஈடுபாடு நிமித்தமாக, என்னை அறியாமல் இந்தத்தொடரை எழுத வேண்டும் என்ற ஆவலை எனக்கு ஏற்படுத்தி விட்டது, என்பது முதல் காரணம். இரண்டாவதாக, இந்த நூல் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த + இப்போது வாழ்ந்துவரும் ஒருசில பிரபல எழுத்தாளர்களைப்பற்றி இருப்பதால், இன்றைய நம் எழுத்தாளர்களும் பதிவர்களும் அவசியமாக இவர்களைப் பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என நான் கருதியதாலும், இந்தத்தொடரினை நான் விருப்பத்துடன் வெளியிட்டுள்ளேன்.
தாங்கள் இதைப்பற்றி மிகவும் சிலாகித்துச் சொல்லியுள்ளது எனக்கு ஊக்கமும், உற்சாகமும், என் எழுத்துக்களில் மேலும் எனக்குத் தன்னம்பிக்கை தருவதாகவும் உள்ளது. நான் வலையுலகுக்கு எழுத வந்ததற்கே தாங்களும் ஓர் மிக முக்கியக் காரணம் என்பதால் என் மகிழ்ச்சி இப்போது இரட்டிப்பாக ஆகியுள்ளது.
//இன்றைய பதிவில் நீங்கள் ரசித்து எழுதியிருந்த வரிகளை நானும் ரசித்தேன். அம்பையின் எழுத்தை நான் நிறைய வாசித்திருக்கிறேன்.//
நான் முதன்முதலாக ஜீவி சார் அவர்களின் இந்த நூலின் மூலமாக மட்டுமே அம்பை அவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். அதனால் மிகவும் ஆச்சர்யமும் அடைந்தேன். மேலும் அவரைப்பற்றி நான் பல தகவல்களைத் வேறு வழிகளில் திரட்டிப்பார்த்தேன்.
1976இல் விஷ்ணு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்துள்ளது. வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கே‘ சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.
இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ். லட்சுமி ((Dr. C. S. Lakshmi) என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.
1962 முதல் தற்போது வரை எழுதிக்கொண்டே இருக்கிறார். அவருக்கு தற்போது வயது 72+ ஆகும்.
// திரு. பாலகுமாரனின் எழுத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நாவல்களையும் வாசித்திருக்கிறேன். அவற்றில் சில என் வீட்டு நூலகத்திலும் உள்ளன.//
இவற்றையெல்லாம் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
//அவரின் நாவல்களில் சில நிறைய விவாதங்களுக்குள்ளும் ஆளாகியிருக்கின்றன.//
ஓஹோ. அப்படியா ?
//ஆனாலும் எனக்குத் தெரிந்தவரை அவருக்கு ஏராளமான ரசிகைகள் இருக்கிறார்கள். மனதைத் தாக்கும் எழுத்து அவருடையது!!//
அப்படியா! மிகவும் நல்லது. மகளிர் அணியினர் ஏராளமாக இவரின் எழுத்துக்களுக்கு ரசிகைகளாக இருப்பது கேட்க மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாக உள்ளது.
மகளிர் சப்போர்ட் இருந்தாலே எதிலும் மகத்தான வெற்றிகளைப் பெறலாம் என்பது நானும் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். :)
நான் தங்கள் நாடான துபாய்க்கு 2004 இல் முதன் முறையாக வந்திருந்தபோது, என் மகன் வீட்டு நூலகத்தில் இருந்த இவர் எழுதிய ஓர் நாவலை முழுவதுமாகப் படிக்க நேர்ந்தது. அதன் பெயர் ‘உச்சித் திலகம்’ என்று ஞாபகம்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான இனிய கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
என்றும் அன்புடன் வை. கோபாலகிருஷ்ணன்
இன்றைக்கு அறிமுகமாயுள்ள எழுத்தாளர் அம்பை அவர்களின் படைப்புகளை இதுவரை வாசித்ததில்லை. அதனாலென்ன ‘அம்மா கொலை செய்தாள்’ என்ற கதையிலிருந்து தாங்கள் எடுத்துக்காட்டியுள்ள உரையாடல்கள் அவரின் கதையையே முழுமையாய் வாசித்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இங்கே யாருக்கு நான் நன்றி சொல்ல! அவரை அறிமுகப்படுத்தியுள்ள திரு ஜீ.வி அவர்களுக்கா அல்லது அந்த கதையின் சாராம்சத்தை சுவைபட தந்த தங்களுக்கா? இருவருக்குமே நன்றிகள் பல.
பதிலளிநீக்குநீங்கள் இரசித்த வரிகளான “இந்த மாதிரிக் கதைகளை எழுதுபவர்கள்கூட, தாங்கள் எழுதிய எத்தனையோ கதைகளில் இதையும் ஒன்றாகக்கருதி மறந்துவிடலாம். ஆனால் வாசித்தவர்கள், வாசித்ததை மறப்பதற்கில்லை’ என்பதைப் படித்தபோது அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல் இறுதியாண்டு படித்துக்கொண்டு இருக்கும்போது எங்கள் பேராசிரியர் முனைவர் அரங்கசாமி அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த பிரிவு உபசார விழாவில் மாணவர்கள் சார்பில் ‘ஆசிரியர்கள் மாணவர்களை மறக்கலாம். ஆனால் மாணவர்கள் ஆசிரியர்களை மறப்பதில்லை’ என்று நான் பேசியது நினைவுக்கு வருகிறது.
இரண்டாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திரு பாலகுமாரனுடைய ‘இரும்புக்குதிரைகள்’ படைப்பை படித்திருக்கிறேன். அவரின் எழுத்தின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை. ஆனால் அவர் பேராசிரியர் கல்கி அவர்களைப்பற்றி குறிப்பிட்ட கருத்தைப் படித்ததும் அவர் பேரில் இருந்த மதிப்பு குறைந்ததும் உண்மை.
வே.நடனசபாபதி April 15, 2016 at 5:05 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//இன்றைக்கு அறிமுகமாயுள்ள எழுத்தாளர் அம்பை அவர்களின் படைப்புகளை இதுவரை வாசித்ததில்லை. அதனாலென்ன ‘அம்மா கொலை செய்தாள்’ என்ற கதையிலிருந்து தாங்கள் எடுத்துக்காட்டியுள்ள உரையாடல்கள் அவரின் கதையையே முழுமையாய் வாசித்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது.//
மிக்க மகிழ்ச்சி சார். நம் ஜீவி சார் பல எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களின் பல்வேறு எழுத்துக்கள் பற்றியும் மிகவும் சிலாகித்து அவர் பாணியில் இந்த நூலில் சொல்லியிருக்கலாம்.
இருப்பினும் அவற்றில் ஒருசில குறிப்பிட்ட எழுத்தாளர்களின், ஒருசில குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் என்னை அதிகம் சிந்திக்க வைத்து வியப்பில் ஆழ்த்தின.
அதில் இந்த அம்பை அவர்களின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்ற கதையினில் வரும் உரையாடல்களும் ஒன்றாகும்.
அந்த உரையாடல்கள் மட்டுமன்றி, அதற்கு மேலும் ஒருசில விஷயங்களையும், படங்களையும் என் பாணியில் சேர்த்து, என் வலைத்தள வாசகர்களுக்காக சுவைபட இங்கு நான் பரிமாறியுள்ளேன்.
பசிக்குச் சோறு மட்டுமே போதும்தான், ஆனால் அது நாக்கின் வழியே உள்ளே போக, அதன் ருசிக்கு நெய், பருப்பு, காய்கறிகள், சாம்பார், ரஸம், அப்பளம், மோர், ஊறுகாய் என பலவும் வேண்டும். அவற்றையெல்லாம் நான் பார்த்துப்பார்த்து சேர்த்து அளித்துள்ளேன்.
//இங்கே யாருக்கு நான் நன்றி சொல்ல! அவரை அறிமுகப்படுத்தியுள்ள திரு ஜீ.வி அவர்களுக்கா அல்லது அந்த கதையின் சாராம்சத்தை சுவைபட தந்த தங்களுக்கா? இருவருக்குமே நன்றிகள் பல. //
நன்கு புரிந்து சுவைபடவே சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி, சார்.
//நீங்கள் இரசித்த வரிகளான “இந்த மாதிரிக் கதைகளை எழுதுபவர்கள்கூட, தாங்கள் எழுதிய எத்தனையோ கதைகளில் இதையும் ஒன்றாகக்கருதி மறந்துவிடலாம். ஆனால் வாசித்தவர்கள், வாசித்ததை மறப்பதற்கில்லை’ என்பதைப் படித்தபோது அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல் இறுதியாண்டு படித்துக்கொண்டு இருக்கும்போது எங்கள் பேராசிரியர் முனைவர் அரங்கசாமி அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த பிரிவு உபசார விழாவில் மாணவர்கள் சார்பில் ‘ஆசிரியர்கள் மாணவர்களை மறக்கலாம். ஆனால் மாணவர்கள் ஆசிரியர்களை மறப்பதில்லை’ என்று நான் பேசியது நினைவுக்கு வருகிறது. //
மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பேசியுள்ளீர்கள். ஆசிரியர்கள் ஆண்டுதோறும் பல மாணவர்களுக்குப் பாடம் போதிக்கிறார்கள். இதுபோல பணி ஓய்வு பெறும்வரை பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பாடம் போதித்திருப்பார்கள். மாணவர்கள் அனைவரையும் அவரால் எப்படி தன் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்? மாணவர்களால் அந்த ஆசிரியர்களை நிச்சயமாக நினைவில் வைத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு.
10000 to 15000 ஊழியர்களுடன் வேலை பார்த்துள்ள நான், BHEL இல் வகித்து வந்த பதவியினாலும், ஊழியர்கள் பலருக்கு மறுப்பேதும் சொல்லாமல் என்னால் முடிந்த அளவுக்கு நான் செய்துவந்த உதவிகளாலும், இன்றும் பலரின் நினைவலைகளில் நான் இருந்து வருகிறேன் என்பது அவர்களை ஆங்காங்கே தற்செயலாக இப்போதும் சந்திக்கும் போதும் என்னால் நன்கு உணரமுடிகிறது. ஆனால் என்னால் அவர்கள் அனைவரையும் பெயர் உள்பட நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை. அவர்களில் 90% பேர்களுக்கு என்னைத் தெரிகிறது. எனக்கு அவர்களில் ஒரு 10% மட்டுமே முழுவதுமாக அவர்களின் பெயர்களுடன் தெரிகிறது.
//இரண்டாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திரு பாலகுமாரனுடைய ‘இரும்புக்குதிரைகள்’ படைப்பை படித்திருக்கிறேன். அவரின் எழுத்தின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை.//
மிக்க மகிழ்ச்சி, சார்.
//ஆனால் அவர் பேராசிரியர் கல்கி அவர்களைப்பற்றி குறிப்பிட்ட கருத்தைப் படித்ததும் அவர் பேரில் இருந்த மதிப்பு குறைந்ததும் உண்மை. //
ஓஹோ ..... அப்படியா ..... நல்லது. இது எனக்கோர் புதிய செய்தியாக உள்ளது.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆத்மார்த்தமான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK
பாலகுமாரன் ஸார் கதைகளில் சில படிச்சிருக்கேன்....அம்பை அவர்கள் எழுத்து படித்ததில்லை...
பதிலளிநீக்குசிப்பிக்குள் முத்து. April 15, 2016 at 6:14 PM
நீக்குவாங்கோம்மா, வணக்கம்.
//பாலகுமாரன் ஸார் கதைகளில் சில படிச்சிருக்கேன்....//
மேலே ஒருவர் தன் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல ஆண் எழுத்தாளரான இருவருக்கு தாங்கள் உள்பட பெண் ரசிகைகள் அதிகம் இருக்கிறார்கள் எனத் தெரிகிறது. :)
//அம்பை அவர்கள் எழுத்து படித்ததில்லை...//
நானும் படித்தது இல்லை. இருப்பினும் ’அம்மா ஒரு கொலை செய்தாள்’ உரையாடல்கள் மூலம் இவரின் அந்த ஒரு கதையையாவது முழுவதுமாகப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் ஏற்பட்டுள்ளது.
தங்களின் அன்பு வருகைக்கும், முத்துப்போன்ற மிகச்சிறிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபூஜி :)
இன்றய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள். பாலகுமாரன் எழுத்துக்கள் ரொம்பவே படித்தமானது.. அபிராமி பட்டர்..... பற்றி... பெரிய நாவல் ஒன்று படித்தேன்.... இப்படியும் நடக்குமா என்று பலநேரங்களில் நினைக்க வேண்டி இருந்தது. இரும்பு குதிரை மெர்க்குரிப்பூக்கள் அவரின் ஆரம்பகால எழுத்துக்கள் தொடங்கி இப்போ ஆன்மிக சம்பந்தப்பட்ட கதைகள் வரை படிச்சிருக்கேன். இவர் எழுத்துக்களுக்கு எவ்வளவு பாராட்டு கிடைக்குமோ அவ்வளவு.... விமரிசனங்களும் கிடைக்கும்...அம்பை படித்ததில்லை.. பெயர் கேள்வி பட்டிருக்கேன்...
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... April 15, 2016 at 6:21 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.//
மிக்க மகிழ்ச்சி.
//பாலகுமாரன் எழுத்துக்கள் ரொம்பவே பி-டி-த்தமானது .. அபிராமி பட்டர்.. பற்றி... பெரிய நாவல் ஒன்று படித்தேன்.... இப்படியும் நடக்குமா என்று பலநேரங்களில் நினைக்க வேண்டி இருந்தது. இரும்பு குதிரை மெர்க்குரிப்பூக்கள் அவரின் ஆரம்பகால எழுத்துக்கள் தொடங்கி இப்போ ஆன்மிக சம்பந்தப்பட்ட கதைகள் வரை படிச்சிருக்கேன். இவர் எழுத்துக்களுக்கு எவ்வளவு பாராட்டு கிடைக்குமோ அவ்வளவு.... விமரிசனங்களும் கிடைக்கும்...//
ஆஹா, எதையும் அழகாகச் சொல்வதில் வல்லவர் தாங்கள்.
//அம்பை படித்ததில்லை.//
No ... No ... அவர் நிறையப்படித்தவராக்கும் :)
ஒருவேளை நீங்கள் அவர் எழுத்துக்களைப் படிக்க வாய்ப்பு இல்லாமல் / கிடைக்காமல் இருந்திருக்கலாம்.
//பெயர் கேள்வி பட்டிருக்கேன்...//
ஆஹா, அது போதும்.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆத்மார்த்தமான இனிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
தமிழோடு விளையாடு...... தமிழ் நம்ம கூட விளையாடுதா..... நாம தமிழ் கூட விளையாடுறோமா...... என் பின்னூட்டத்தில் ' அம்பை படித்ததில்லை" என்று சொல்லிவிட்டேன்...நீங்களும் அதை ஷார்ப்பாக கவனித்து நாசுக்காக ரிப்ளை கமெண்டில் சொல்லி இருந்தீங்க.. வெகுவாக ரசிக்க வைத்த பதில்.. நான்... அம்பை எழுத்துக்களை படித்ததில்லை என்று எழுதி இருக்க வேண்டும்.. ஒரு வார்த்தை விட்டுப்போனதால் அர்த்தமே எப்படி மாறி விட்டது.
நீக்குஸ்ரத்தா, ஸபுரி... April 16, 2016 at 6:00 PM
நீக்குவாங்கோ ......
//தமிழோடு விளையாடு...... தமிழ் நம்ம கூட விளையாடுதா..... நாம தமிழ் கூட விளையாடுறோமா...... என் பின்னூட்டத்தில் ' அம்பை படித்ததில்லை" என்று சொல்லிவிட்டேன்... நீங்களும் அதை ஷார்ப்பாக கவனித்து நாசுக்காக ரிப்ளை கமெண்டில் சொல்லி இருந்தீங்க.. வெகுவாக ரசிக்க வைத்த பதில்.. நான்... அம்பை எழுத்துக்களை படித்ததில்லை என்று எழுதி இருக்க வேண்டும்.. ஒரு வார்த்தை விட்டுப்போனதால் அர்த்தமே எப்படி மாறி விட்டது.//
தாங்கள் முதலில் எழுதியதை என்னாலும் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது. இருப்பினும் ஒரு ஜாலிக்காகவே ... நகைச்சுவைக்காக மட்டுமே, அவ்வாறு நான் எழுதியிருந்தேன். ஒரு வார்த்தை மட்டுமல்ல .... ஓர் எழுத்து விட்டுப்போனாலே .... அர்த்தம் மாறிவிடும்.
உதாரணமாக: ’விஷயம்’ என்பதில் ‘ய’ என்ற ஓர் எழுத்து விட்டுப்போனால் அது ’விஷம்’ ஆகிவிடும்.:)
அன்புடன் VGK
அறிமுகம் அருமை நண்பரே
பதிலளிநீக்குவாழ்த்துகள்....
தொடர்ந்து அறிமுகம் தாருங்கள் நண்பரே...
Ajai Sunilkar Joseph April 15, 2016 at 7:36 PM
நீக்கு//அறிமுகம் அருமை நண்பரே. வாழ்த்துகள்.... தொடர்ந்து அறிமுகம் தாருங்கள் நண்பரே...//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
STANDARD ஆக இதே COMMENT ஐ எழுதி எங்கோ சேமித்து வைத்துக்கொண்டு, அடிக்கடி அதையே திரும்பத் திரும்ப பயன்படுத்துபவராக இருக்கின்றீர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகின்றது. எனினும் OK.
தன்னை கவிஞர் என்று சொல்லிக்கொண்டு ஓர் மூன்று எழுத்துப்பதிவர் உண்டு. அவரும் தங்களைப் போலவேதான் எல்லோருடைய பதிவுக்கும் போய் மண்டை மண்டையாக 4-5 வரிகளில் STANDARD ஆக பின்னூட்டம் இடுவார். அவரைக் கொஞ்சம் நாட்களாகக் காணும். நிம்மதியாக உள்ளது.
சிலருக்கு இதுபோன்ற STANDARD பின்னூட்டங்கள் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். அதனால் கொஞ்சமாவது மாற்றி எழுத முயற்சி செய்யுங்கள் எனத் தங்களுக்கு நான் ஓர் உரிமை எடுத்துக்கொண்டு ஆலோசனை சொல்லிக்கொள்கிறேன்.
பெண் எழுத்தாளர்களில் ஜன ரஞ்சக
பதிலளிநீக்குஎழுத்தாளர்களைத் தாண்டி அனைவரின்
கவனத்தையும் கவர்ந்தவர் அம்பை அவர்கள்
வீட்டின் மூலையில் சமையலறைக் கதையின்
தோசைக் கணக்கு இன்னும் என்
மனதில் நீங்காது உள்ளது.
பாலகுமாரன் அவர்களின் இரும்புக்குதிரை
மற்றும் மெர்குரிப் பூக்கள் எனக்கு மிகவும்
பிடித்த நாவல்கள்
சுருங்கச் சொன்னால்
அம்பை அவர்களின் எழுத்தில்
எதையும் அறிவுப் பூர்வமாக
முற்போக்குச் சிந்தனையுடன்
அணுகும் போக்கு இருக்கும் எனில்
பாலகுமாரன் அவர்களின் எழுத்தில்
எதையும் உணர்வுப் பூர்வமாக
யதார்த்தமாக அணுகும் போக்கு
இருக்கும் என்பது எனது கருத்து
மனம் கவர்ந்த பகிர்வு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Ramani SApril 15, 2016 at 8:13 PM
நீக்குவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.
//பெண் எழுத்தாளர்களில் ஜன ரஞ்சக எழுத்தாளர்களைத் தாண்டி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் அம்பை அவர்கள்.//
இதைக் கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, சார்.
//வீட்டின் மூலையில் சமையலறைக் கதையின் தோசைக் கணக்கு இன்னும் என் மனதில் நீங்காது உள்ளது.//
ஆஹா, அது என்ன தோசைக்கணக்கோ ..... உடனே படிக்க வேண்டும் போல எனக்கும் ஆவலாக உள்ளது.
//பாலகுமாரன் அவர்களின் இரும்புக்குதிரை மற்றும் மெர்குரிப் பூக்கள் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள்//
மிகவும் சந்தோஷம் சார்.
//சுருங்கச் சொன்னால் அம்பை அவர்களின் எழுத்தில் எதையும் அறிவுப் பூர்வமாக முற்போக்குச் சிந்தனையுடன் அணுகும் போக்கு இருக்கும் எனில் பாலகுமாரன் அவர்களின் எழுத்தில் எதையும் உணர்வுப் பூர்வமாக யதார்த்தமாக அணுகும் போக்கு இருக்கும் என்பது எனது கருத்து.//
இருக்கலாம். தாங்கள் அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும், சிந்தித்துச் சிறப்பாகச் சொல்லும் எந்தக்கருத்தினிலும் நிச்சயமாக யதார்த்தமானதோர் உண்மை இருக்கக்கூடும் என்பது நான் அறிந்துள்ளதோர் இரகசியமாகும். :)
//மனம் கவர்ந்த பகிர்வு. பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், நல் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK
எழுத்தாளர் சிவசங்கரி எனக்கு அறிமுகமான அதே காலக்கட்டத்தில்தான் பாலகுமாரனும் எனக்கு அறிமுகமானார். விகடன்தான் அறிமுகப்படுத்தியது. 'தாயுமானவன்', 'கரையோர முதலைகள்' தொடரை தொடர்ந்து வாசித்து முடித்தேன். அதெல்லாம் ஒரு அற்புத அனுபவம்.
பதிலளிநீக்குஅம்பையை நான் கேள்விப்பட்டதோடு சரி. அவரது படைப்புகளை வாசித்ததில்லை. ஆணென்றே நினைத்திருந்தேன். தங்கள் பதிவின் மூலமே பெண்ணென்று அறிந்தேன்.
பல எழுத்தாளர்களைப்பற்றி அறியாத பல விவரங்களை தரும் அய்யா ஜீவி அவர்களுக்கும், திறம்பட பகிர்ந்தளிக்கும் தங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
S.P.SENTHIL KUMAR April 15, 2016 at 9:32 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//எழுத்தாளர் சிவசங்கரி எனக்கு அறிமுகமான அதே காலக்கட்டத்தில்தான் பாலகுமாரனும் எனக்கு அறிமுகமானார். விகடன்தான் அறிமுகப்படுத்தியது. 'தாயுமானவன்', 'கரையோர முதலைகள்' தொடரை தொடர்ந்து வாசித்து முடித்தேன். அதெல்லாம் ஒரு அற்புத அனுபவம். //
அற்புதமான வாசிப்பு அனுபவம் வாய்ந்த வெகு அழகான கருத்துக்களாகச் சொல்லியுள்ளீர்கள். ஸ்பெஷல் நன்றிகள்.
//அம்பையை நான் கேள்விப்பட்டதோடு சரி. அவரது படைப்புகளை வாசித்ததில்லை. ஆணென்றே நினைத்திருந்தேன். தங்கள் பதிவின் மூலமே பெண்ணென்று அறிந்தேன். //
பரவாயில்லை. எழுத்தாளர்களில் ஆண் என்ன, பெண் என்ன? எழுத்துக்கள் தரமானதாக + படிக்க சுவாரஸ்யமாக இருந்தால் சரியே.
1962 லிருந்து இன்று வரை தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளில் (ஆங்கிலப் பத்திரிகைகளிலும்கூட) மிகச்சிறப்பாக எழுதி வரும் 72 வயது ஆன பெண்மணி இவர். நான்கு மொழிகளில் நல்ல புலமை பெற்றவர்.
இவரும் ஓர் பத்திரிகை எழுத்தாளர் என்ற முறையில், பிரபல பத்திரிகை எழுத்தாளரான தாங்கள், இவரைத் தங்களின் உறவினர் என்றும் சொல்லிக்கொண்டு பெருமை கொள்ளலாம். இவரைப் பற்றிய மேலும் பல விபரங்களை சேகரித்து தாங்கள் தங்களின் பத்திரிகைகளில்கூட சிறப்பித்து எழுதலாம்.
//பல எழுத்தாளர்களைப்பற்றி அறியாத பல விவரங்களை தரும் ஐயா ஜீவி அவர்களுக்கும், திறம்பட பகிர்ந்தளிக்கும் தங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.//
மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான இனிய கருத்துப்பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK
அம்பை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அவரது எழுத்துகளைப் படித்ததில்லை.
பதிலளிநீக்குபாலகுமாரன் நிறையப் படித்திருக்கிறேன். என்னிடம் அவரது புத்தகக் கலெக்ஷன் இருக்கிறது. ஒரு காலத்தில் சம்பளம் வாங்கியதும் அவரது புத்தகம் ஒன்றை வாங்கி விடுவேன். இப்போது அப்படி எல்லாம் தோன்றுவது இல்லை. ஒரே மாதிரி எழுதுவது மட்டுமில்லை....
(வார்த்தைளைக் கவனமாக அமைக்க முயற்சித்திருக்கிறேன். சென்றமுறை 'விட்டல்ராவ் படித்ததில்லை' மாதிரி ஆகி விடக் கூடாது பாருங்கள்!!!!!!!)
ஸ்ரீராம். April 15, 2016 at 9:35 PM
நீக்குவாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.
//அம்பை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.//
தாங்களோ ஸ்ரீராமர். அம்பையும் வில்லையும் கையில் எப்போதும் வைத்திருக்கும் சாக்ஷாத் கோதண்ட ராமர். ’அம்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்’, என ஸ்ரீராம நவமியாகிய இன்றுபோய் என்னிடம் சொல்லுகிறீர்கள். இன்று நான் ஸ்ரீ கோதண்ட ராமர் படத்தை வைத்து, பூஜித்து ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஜபம் செய்தேன்.
// ஆனால் அவரது எழுத்துகளைப் படித்ததில்லை. //
ஓஹோ, தாங்கள் இந்த எழுத்தாளர் ’அம்பை’ பற்றியும் அவரின் எழுத்துக்களைப் படித்ததில்லை என்பதைப் பற்றியும் சொல்லியுள்ளீர்களா? நான் ஒரு சரியான ட்யூப் லைட். டக்குனுப் புரிந்துகொள்ளாமல் ஏதேதோ ஸ்ரீராமர் பயன்படுத்தும் அம்பு, வில்லு என நினைத்துவிட்டேன்.
//பாலகுமாரன் நிறையப் படித்திருக்கிறேன். என்னிடம் அவரது புத்தகக் கலெக்ஷன் இருக்கிறது. ஒரு காலத்தில் சம்பளம் வாங்கியதும் அவரது புத்தகம் ஒன்றை வாங்கி விடுவேன்.//
ஓஹோ, ஒரு காலத்தில் என்றால் ..... ஹல்வா + மல்லிகைப்பூ வாங்கிச்செல்ல ஆரம்பித்த காலத்திற்கு முன்பாக இருக்குமோ :)
//இப்போது அப்படி எல்லாம் தோன்றுவது இல்லை.//
வெரிகுட். ஹல்வா + மல்லிகைப்பூவையும்கூட நிறுத்திவிட்டு, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, கத்திரிக்காய், கருவேப்பிலை, கொத்துமல்லி, முருங்கைக்காய் என வாங்கிப் போகும்படியாகிவிட்டதோ இன்றைய நிலைமை :)
//ஒரே மாதிரி எழுதுவது மட்டுமில்லை....//
ஓஹோ, வேறு இன்னும் என்னவோ உள்ளதாக்கும்.
//(வார்த்தைளைக் கவனமாக அமைக்க முயற்சித்திருக்கிறேன். சென்றமுறை 'விட்டல்ராவ் படித்ததில்லை' மாதிரி ஆகி விடக் கூடாது பாருங்கள்!!!!!!!)//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அப்படியும் இன்று ‘அம்பை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று நீங்கள் சொன்னதை நான் வேறு விதமாகப் புரிந்துகொண்டுள்ளேன், பாருங்கோ, ஸ்ரீராம். :)
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம். - அன்புடன் VGK
///அம்பை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.////
நீக்குமறுபடியும் மாட்டிக்கிட்டேனா!
ஸ்ரீராம். April 16, 2016 at 6:58 AM
நீக்கு////அம்பை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.////
//மறுபடியும் மாட்டிக்கிட்டேனா!//
:))))) இல்லை ஸ்ரீராம். இது ஏதோ ராமபாணம் போல என்னிடமிருந்து அகஸ்மாத்தாக (மாற்றி யோசித்து) புறப்பட்டுள்ள வரிகள் மட்டுமே .... ஓர் ஜாலிக்காக :)))))
வணக்கம் ஐயா இவர்களில் திரு. பாலகுமாரன் அவர்களின் கதைகள் நான் நிறைய வாசித்து இருக்கிறேன் அவரின் எழுத்துகளில் கதையின் நகர்வைவிட வர்ணனைகள் அதிகமிருக்கும் ஒரு எறும்பு நம்மைக் கடந்து செல்வதைக்கூட அழகாக நகர்த்திக் கொண்டு போவார் இருப்பினும் அதை ரசிக்கலாம்
பதிலளிநீக்குஇன்னும் சொல்லப் போனால் அவருடைய எழுத்துக்களை புரிந்து கொள்ள சிறிது ஞானம் வேண்டும் தொடரட்டும் தங்களது பணி - கில்லர்ஜி
KILLERGEE Devakottai April 16, 2016 at 10:10 AM
நீக்கு//வணக்கம் ஐயா//
வாங்கோ, வணக்கம்.
//இவர்களில் திரு. பாலகுமாரன் அவர்களின் கதைகள் நான் நிறைய வாசித்து இருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி.
//அவரின் எழுத்துகளில் கதையின் நகர்வைவிட வர்ணனைகள் அதிகமிருக்கும் ஒரு எறும்பு நம்மைக் கடந்து செல்வதைக்கூட அழகாக நகர்த்திக் கொண்டு போவார். இருப்பினும் அதை ரசிக்கலாம்.//
தாங்கள் சொல்வது மிகச்சரியே என்பதை நானும் அவரின் ஒரேயொரு நாவலை மட்டும் படித்ததன் மூலம் அறிந்து கொண்டுள்ளேன். அதை நான் படிக்க நேர்ந்தது தாங்கள் இருக்கும் நாடான UAE யில் மட்டுமே. படித்த ஆண்டு: 2004. நாவல் பெயர்: உச்சித் திலகம்.
என் மகன் அன்று புதிதாக வாங்கி வந்து என்னிடம் படிக்கக்கொடுத்த புத்தகம் அது. அதிலும் தாங்கள் சொல்வது போல வர்ணனைகள் மிக அதிகமாகவே இருந்தது. இராமாயணத்தில் வரும் ஒருசில வானரக் கதாபாத்திரங்களைப் பற்றி மட்டும் புகழ்ந்து எழுதப்பட்டிருந்ததோர் புராண நாவல் அது.
//இன்னும் சொல்லப் போனால் அவருடைய எழுத்துக்களை புரிந்து கொள்ள சிறிது ஞானம் வேண்டும்.//
அது ஏதோ கொஞ்சம் எனக்கும் அன்று இருந்ததால், அதனைப் பொறுமையாகப் படித்து முடிக்க என்னால் முடிந்தது ..... அன்று.
பகல் நேரத்தில் மகன் அலுவலகத்திற்குக் காரில் புறப்பட்டுச் சென்றபின், பேரக்குழந்தைகளும் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றபின், வேறு வேலைகளும் எனக்கு அப்போது இல்லை. சாப்பிடுவதும் ஓய்வு எடுப்பதும் மட்டுமே எனக்கான வேலைகளாக இருந்தன. இரவு மகன் காரில் வீடு திரும்பிய பிறகே ஊரைச் சுற்றிப்பார்க்கக் கிளம்புவோம். அதனால் இந்த நாவலை முழுவதுமாக படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது .... அன்று. :)
// தொடரட்டும் தங்களது பணி - கில்லர்ஜி//
தங்களின் அன்பான வருகைக்கும், குறிப்பிட்டுச் சொல்லியுள்ள சில அரிய கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK
எல்லாரும் பின்னூட்டத்தில் சொல்லி இருப்பதையே நானும் சொல்கிறேன்.. பாலகுமாரன் கதைகள் நிறய படத்திருக்கேன்.. இன்னொருவர் கதைகள் படித்ததில்லை...
பதிலளிநீக்குப்ராப்தம் April 16, 2016 at 10:40 AM
நீக்குவாங்கோ 'ப்ராப்தம்', வணக்கம்மா. :)
//எல்லாரும் பின்னூட்டத்தில் சொல்லி இருப்பதையே நானும் சொல்கிறேன்..//
தாங்கள் பார்த்து எது சொன்னாலும் ஓக்கே :)
//பாலகுமாரன் கதைகள் நிறைய படித்திருக்கேன்..//
சந்தோஷம்.
//இன்னொருவர் கதைகள் படித்ததில்லை...//
நான் அவரைப்பற்றியும், அவரின் எழுத்துகள் பற்றியும், சில சாம்பிள்களாக இங்கு எழுதியுள்ளவற்றையாவது படிச்சீங்களா?????
தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள். - VGK
இன்றய அறிமுகங்களில் பாலகுமாரன் கதைகள் படித்திருக்கிறேன். மற்றவரைப்பற்றி இங்கு தெரிந்து கொள்ள முடிந்தது...
பதிலளிநீக்குஆல் இஸ் வெல்....... April 16, 2016 at 10:48 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இ-ன்-றை-ய அறிமுகங்களில் பாலகுமாரன் கதைகள் படித்திருக்கிறேன்.//
அச்சா !
//மற்றவரைப்பற்றி இங்கு தெரிந்து கொள்ள முடிந்தது...//
பஹூத் அச்சா !!
தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள். - VGK
இன்றய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குsrini vasan April 16, 2016 at 10:49 AM
நீக்கு//இ-ன்-றை-ய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. -VGK
அம்பை அவர்களை இப்போது தான் கேள்வி படுகிறேன்.
பதிலளிநீக்குபாலகுமாரன் அவர்களின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன்.
இரும்புக்குதிரைகள்,மெர்க்குரிப்பூக்கள் இவை இரண்டையும் ஒரே மூச்சாக படித்தது நினைவு வருகிறது.
கல்லூரி நாட்களில் இந்த 2 புத்தகங்களும் கைமாறி கைமாறி வலம் வந்தது எங்கள் நண்பர்களிடையே...
நன்றி ஐயா.
R.Umayal Gayathri April 16, 2016 at 11:36 AM
நீக்குவாங்கோ மேடம் வணக்கம். டாங்கர் சாப்பிட்டுவிட்டு தெம்பாக வந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். டாங்கர் வாசனை இங்கு பின்னூட்டத்தில்கூட அடிக்குது. :)
//அம்பை அவர்களை இப்போது தான் கேள்வி படுகிறேன்.//
சந்தோஷம்.
//பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன். இரும்புக்குதிரைகள்,மெர்க்குரிப்பூக்கள் இவை இரண்டையும் ஒரே மூச்சாக படித்தது நினைவு வருகிறது. கல்லூரி நாட்களில் இந்த 2 புத்தகங்களும் கைமாறி கைமாறி வலம் வந்தது எங்கள் நண்பர்களிடையே...நன்றி ஐயா.//
தங்களின் அன்பான வருகைக்கும், சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் மேடம். - அன்புடன் VGK
கல்லூரி நாட்களில் இந்த 2 புத்தகங்களும் கைமாறி கைமாறி வலம் வந்தது எங்கள் நண்பர்களிடையே...நன்றி ஐயா.//
நீக்குஇங்கு நண்பர்கள் என்று குறிப்பிட்டது என்னுடைய தோழிகளை....நான் படித்தது பெண்கள் கல்லூரியில்...வலைத்தளத்தில் நண்பர்கள் என இருபாலரையும் பொதுவாக அழைத்து எழுதும் பழக்கத்தில் இங்கேயும் அப்படி எழுதி இருக்கிறேன்.
இப்போது வந்து பார்க்கும் போது தான் தோன்றியது அதான்.....:).
R.Umayal Gayathri April 16, 2016 at 3:20 PM
நீக்குவாங்கோ மேடம் ..........
//கல்லூரி நாட்களில் இந்த 2 புத்தகங்களும் கைமாறி கைமாறி வலம் வந்தது எங்கள் நண்பர்களிடையே... நன்றி ஐயா.
இங்கு நண்பர்கள் என்று குறிப்பிட்டது என்னுடைய தோழிகளை.... நான் படித்தது பெண்கள் கல்லூரியில்... வலைத்தளத்தில் நண்பர்கள் என இருபாலரையும் பொதுவாக அழைத்து எழுதும் பழக்கத்தில் இங்கேயும் அப்படி எழுதி இருக்கிறேன்.//
அதனால் என்ன? ஏற்கனவே அனைவரும் இதனை மிகச்சரியாகவே புரிந்துகொண்டிருப்பார்கள், மேடம்.
//இப்போது வந்து பார்க்கும் போது தான் தோன்றியது அதான்.....:)//
மேலும் யாருக்கும் சந்தேகமே ஏதும் ஏற்படாதவாறு தெள்ளத் தெளிவாகப் புரிய வைத்துவிட்டீர்கள், இப்போது. சந்தோஷம். மிக்க நன்றி, மேடம். - vgk
நான் இந்த நூலுக்காங்க தயாரிப்பு வேலைகளைல் ஈடுபட்டிருந்த பொழுது ஊஞ்சல் ஞா.கலையரசி அவர்கள் என் பூவனம் தளத்தில் எழுத்தாளர் அம்பை பற்றி ஒரு என் சிறுகதை ஒன்றிற்க்கான ஒப்புமைக்காக பின்னூட்டம் இட்டிருந்தார்கள். உடனே இந்த நூலுக்கான எழுத்தாளர்கள் பட்டியலில் அம்பையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதன்படியே நினைப்பில் இருந்தது செயல் வடிவமும் கொண்டது.
பதிலளிநீக்குஜீவி April 16, 2016 at 1:46 PM
நீக்குவாங்கோ சார், நமஸ்காரங்கள்.
எழுத்தாளர் அம்பை அவர்களைப்பற்றி, கொஞ்சமாவது நாங்கள் அனைவரும் இன்று தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சியே.
இதற்கு ஓர் தூண்டுகோலாக அமைந்த நம் ஊஞ்சல் வலைப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்களின் பின்னூட்டத்திற்கும், அதன் அடிப்படையில் செயல் வடிவம் கொடுத்து, பட்டியலில் ’அம்பை’ அவர்களையும் சேர்த்துள்ள தங்களுக்கும், எங்கள் அனைவர் சார்பிலும் என் நன்றிகள், சார். அன்புடன் VGK
இரு பெரும் எழுத்தாளர்களைப் பற்றிய அருமையான விமர்சனம். அதிலும் அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள் மறக்கமுடியாத கதை.
பதிலளிநீக்குஎங்கள் பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப்பருவத்திலும் பாலகுமாரன் கதைகள்தான் காவியம் .
அருமையான பகிர்வுக்கு நன்றி விஜிகே சார் & ஜி வி சார்
அடுத்தும் எனக்குப் பிடித்தவர்கள் வரப்போவதால் ஆவலுடன் 17 ஆம் தேதியை எதிர்ப்பார்க்கிறேன் :)
Thenammai Lakshmanan April 16, 2016 at 4:20 PM
நீக்குவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.
//இரு பெரும் எழுத்தாளர்களைப் பற்றிய அருமையான விமர்சனம். அதிலும் அம்பையின் ’அம்மா ஒரு கொலை செய்தாள்’ மறக்கமுடியாத கதை.
எங்கள் பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப்பருவத்திலும் பாலகுமாரன் கதைகள்தான் காவியம்.
அருமையான பகிர்வுக்கு நன்றி விஜிகே சார் & ஜி வி சார்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
//அடுத்தும் எனக்குப் பிடித்தவர்கள் வரப்போவதால் ஆவலுடன் 17 ஆம் தேதியை எதிர்ப்பார்க்கிறேன் :)//
ஆஹா, அப்படியா ! இதைக்கேட்கவே சந்தோஷமாக உள்ளது. தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். - அன்புடன் VGK
என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில், அம்பை மிக முக்கியமானவர். முற்போக்கான கருத்து கொண்டவர். அவருடைய கதைகளில் என்னை மிகவும் பாதித்தது, அம்மா ஒரு கொலை செய்தாள் என்பது தான்.
பதிலளிநீக்குஅப்பா எப்போதும் அவளைக் கறுப்பி என்று தான் கூப்பிடுகிறார். ஆனால் அம்மாவோ அவள் கறுப்பு என்பதற்காக ஒரு நாளும் குறை சொன்னதில்லை. நீ ஏம்மா வெளுப்பு, நான் ஏம்மா கறுப்பு என்று கேட்கும் போதெல்லாம், போடி உன் அழகு யாருக்கு வரும் என்று உற்சாகமூட்டுபவள் அம்மா தான்.
அம்மா வெளியூருக்குச் சென்ற சமயம், இவள் பெரிய மனுஷியாகிவிடுகிறாள். அவள் வரவுக்காக ஏங்கித் தவிக்கிறாள். அம்மா வந்தவுடன் உனக்கு ஆகியிருக்கும் இதுவும் அழகு தான் என்று சொல்வாள் என்று ஆசையாக எதிர்பார்க்கிறாள்.
“பயமுறுத்திய முறுக்குப் பாட்டி, கல்யாணி எல்லோரையும் புன்னகையின் ஒரு தீப்பொறியில் அவள் ஒதுக்கித் தள்ளி விடுவாள். அம்மா வித்தியாசமானவள். அவள் நிற்கும் இடத்தில் வேண்டாதவை அழிந்து வெறும் அழகு மட்டுமே ஆட்சி செலுத்தும்.
அவளுக்கு எல்லாமே அழகு தான்.
ஏதோ மர்மமான ஒன்றை - இரவு படுத்துக் கொண்டதும் தொண்டையை அடைத்துக் கொள்ள வைக்கும் உணர்வை, என் உடம்பே எனக்கு மாறுதலாகப் படும் தவிப்பை - அம்மா விளக்கப் போகிறாள் மெல்ல என்று அவள் முகத்தையே பார்க்கிறேன். வாழைத்தண்டு போல் நீண்ட கரங்களால் அவள் என்னை அணைக்கப் போகிறாள். நான் அழப் போகிறேன் உரக்க. அம்மாவின் கூந்தலில் விரல்களைத் துளைத்துப் பெருத்த கேவல்களுடன் அழப் போகிறேன்.”
இப்படி நம்பிக்கையுடன் எதிர்பார்த்து அவள் முன் போய் நிற்க அம்மாவோ,
ஒனக்கு இந்த எழவுக்கு என்னடி அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம் என்று நெருப்பாக வார்த்தைகளைக் கொட்டுகிறாள்.
தங்கையின் மகள் கறுப்பு என்பதனால் மாப்பிள்ளை வீட்டார் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்ற எரிச்சலுடன் வீட்டுக்கு வரும் போது, நமக்கும் ஒரு கறுப்புப் பொண்ணு உண்டு என்று நினைவூட்டுகிறார் அப்பா.
அந்தச் சமயத்தில் இவள் போய் அம்மா முன் நிற்க, அம்மாவின் வாயிலிருந்து வெடித்துக் கிளம்பும் இச்சொற்களில், அந்த இளம் மொட்டானது கருகிப் போய்விடுகிறது.
தெரிந்தோ தெரியாமலோ அக்குழந்தையின் ஆன்மாவை,ஆசையை எதிர்பார்ப்பை, நம்பிக்கையை, உற்சாகத்தைக் கொலை செய்து விடுகிறாள் அம்மா.
எனவே அம்மா ஒரு கொலை செய்தாள் என்ற தலைப்பு மிக மிகப் பொருத்தமானது.
“அக்னியே ஸ்வாஆஆஹா... அசுத்தங்கள் மட்டும் எரிக்கப்படவில்லை. மொட்டுக்களும்
மலர்களும் கூட கருகிப் போயின.”
கறுப்பு என்றால் கேவலம், மட்டம் என்று அதுவரை தவறாக (திமிராகவும் கூட) நினைத்திருந்த நான், என்னைத் திருத்திக் கொண்டது, இக்கதையைப் படித்துத் தான். அந்தளவுக்கு இப்பெண் குழந்தையின் உணர்வுகள், என்னைக் கடுமையாகப் பாதித்தன.
என்னைப் போல் எத்தனை பேர் இக்கதையை வாசித்துத் தங்கள் தவறைத் திருத்திக் கொண்டார்களோ? வாசகரின் உள்ளத்தில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவது தானே, ஒரு கதாசிரியரின் குறிக்கோள்!
பாலகுமாரனின் இரும்புக்குதிரைகள் படித்திருக்கிறேன். சிறுகதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். ஆனால் ஏனோ அவர் எழுத்து என்னைக் கவராததால், தொடர்ந்து வாசிக்கவில்லை.
ஜீவி சாரின் புத்தகத்திலிருந்து அம்பையையும், பாலகுமாரனையும் அருமையாக அறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள் கோபு சார்!
ஞா. கலையரசி April 16, 2016 at 4:43 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில், அம்பை மிக முக்கியமானவர். முற்போக்கான கருத்து கொண்டவர். அவருடைய கதைகளில் என்னை மிகவும் பாதித்தது, ’அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்பது தான்.//
ஜீவி சாரின் நூலின் மூலம் மட்டுமே இவரையும் அறிந்துகொண்டு, இவரின் இந்தக் குறிப்பிட்ட கதையையும் மேலோட்டமாக அறிந்துகொள்ள முடிந்துள்ள எனக்கே, இது மிகப்பெரியதோர் பாதிப்பினையும் + தாக்கத்தினையும் என்னுள் ஏற்படுத்தியுள்ளது என்னும்போது, அம்பை அவர்கள் எழுதியுள்ள இந்தக்கதையை முழுமையாக, அம்பையின் எழுத்துக்களிலேயே வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ள தங்களையும் பாதித்துள்ளதில் வியப்பேதும் இல்லை தான்.
>>>>>
கோபு >>>>> திருமதி. ஞா. கலையரசி மேடம் (2)
நீக்கு//அப்பா எப்போதும் அவளைக் கறுப்பி என்று தான் கூப்பிடுகிறார். ஆனால் அம்மாவோ அவள் கறுப்பு என்பதற்காக ஒரு நாளும் குறை சொன்னதில்லை.//
//அம்மா வந்தவுடன் உனக்கு ஆகியிருக்கும் இதுவும் அழகு தான் என்று சொல்வாள் என்று ஆசையாக எதிர்பார்க்கிறாள். //
//“பயமுறுத்திய முறுக்குப் பாட்டி, கல்யாணி எல்லோரையும் புன்னகையின் ஒரு தீப்பொறியில் அவள் ஒதுக்கித் தள்ளி விடுவாள். அம்மா வித்தியாசமானவள். அவள் நிற்கும் இடத்தில் வேண்டாதவை அழிந்து வெறும் அழகு மட்டுமே ஆட்சி செலுத்தும். அவளுக்கு எல்லாமே அழகு தான்.//
//தங்கையின் மகள் கறுப்பு என்பதனால் மாப்பிள்ளை வீட்டார் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்ற எரிச்சலுடன் வீட்டுக்கு வரும் போது, நமக்கும் ஒரு கறுப்புப் பொண்ணு உண்டு என்று நினைவூட்டுகிறார் அப்பா. //
//அந்தச் சமயத்தில் இவள் போய் அம்மா முன் நிற்க, அம்மாவின் வாயிலிருந்து வெடித்துக் கிளம்பும் இச்சொற்களில், அந்த இளம் மொட்டானது கருகிப் போய்விடுகிறது. //
ஜீவி சார் நூலின் மூலமாக, இவற்றையெல்லாம் நானும் நன்கு உணர முடிந்திருப்பினும், ஒருசில காரணங்களால், என் இந்தப்பதிவினில் இதைப்பற்றி நான் விரிவாக விளக்கிக் கூறாமல், ஆங்காங்கே ஒருவித சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தி சுருக்கிக்கொண்டு விட்டேன்.
>>>>>
கோபு >>>>> திருமதி. ஞா. கலையரசி மேடம் (3)
நீக்கு//ஏதோ மர்மமான ஒன்றை - இரவு படுத்துக் கொண்டதும் தொண்டையை அடைத்துக் கொள்ள வைக்கும் உணர்வை, என் உடம்பே எனக்கு மாறுதலாகப் படும் தவிப்பை - அம்மா விளக்கப் போகிறாள் மெல்ல என்று அவள் முகத்தையே பார்க்கிறேன். வாழைத்தண்டு போல் நீண்ட கரங்களால் அவள் என்னை அணைக்கப் போகிறாள். நான் அழப் போகிறேன் உரக்க. அம்மாவின் கூந்தலில் விரல்களைத் துளைத்துப் பெருத்த கேவல்களுடன் அழப் போகிறேன்.” //
//தெரிந்தோ தெரியாமலோ அக்குழந்தையின் ஆன்மாவை, ஆசையை எதிர்பார்ப்பை, நம்பிக்கையை, உற்சாகத்தைக் கொலை செய்து விடுகிறாள் அம்மா. எனவே அம்மா ஒரு கொலை செய்தாள் என்ற தலைப்பு மிக மிகப் பொருத்தமானது. //
இவையெல்லாம் நான் எனக்குள் யூகித்ததுதான் என்றாலும், இவையெல்லாம், மூலக்கதையினை நேரிடையாகப் படித்துள்ள தங்களின் மூலம் மட்டுமே விளக்கமாகக் கேட்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மேடம்.
>>>>>
கோபு >>>>> திருமதி. ஞா. கலையரசி மேடம் (4)
நீக்கு//கறுப்பு என்றால் கேவலம், மட்டம் என்று அதுவரை தவறாக (திமிராகவும் கூட) நினைத்திருந்த நான், என்னைத் திருத்திக் கொண்டது, இக்கதையைப் படித்துத் தான். அந்தளவுக்கு இப்பெண் குழந்தையின் உணர்வுகள், என்னைக் கடுமையாகப் பாதித்தன.//
உலகில் எவ்வளவோ கோடிக்கணக்கான மனிதர்கள் இருப்பினும், ஒருவரைப்போல மற்றொருவர் இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. இருப்பினும் நாம் ஒருவரைப்பற்றி அடையாளம் சொல்ல ......
குட்டையாக இருப்பார், நெட்டையாக இருப்பார், சுமார் உயரத்தில் இருப்பார் .....
ஒல்லியாக இருப்பார், குண்டாக இருப்பார், நிதானமான பாடியுடன் இருப்பார் .....
கறுப்பாக இருப்பார், சிவப்பாக இருப்பார், மாநிறமாக இருப்பார் .....
முன்தலை வழுக்கையாக இருக்கும், பின் தலை வழுக்கையாக இருக்கும், சுத்தமாக வழுக்கையாக இருப்பார், அடர்த்தியான சுருள் முடியுடன் இருப்பார், விக் வைத்திருப்பார், நரை முடியில் டை அடித்திருப்பார் .......
என பிறருக்குப் புரிய வைக்கவேண்டி, பல்வேறு அங்க அடையாளங்கள் சொல்லித்தான் வருகிறோம்.
உருவமோ, நிறமோ, தோற்றமோ எப்படியிருப்பினும் அவர்களுக்குள்ளும் ஓர் ஏக்கமும், எதிர்பார்ப்பும், உணர்வுகளும், சராசரி ஆசைகளும், ஆசாபாசங்களும் இருக்கத்தான் செய்யும்.
அதுபோலத்தான் இந்த கறுப்பான சின்னக் குழந்தைக்கும் மனதில் ஓர் ஆசையும், தன் அம்மாவிடமிருந்து ஓர் நியாயமான எதிர்பார்ப்பும் இருந்துள்ளது.
தங்களுக்குள் இந்தக்கதை ஓர் பாதிப்பினை ஏற்படுத்தியதும், அதனால் ஏற்பட்ட தங்களின் மனமாற்றமும், தங்களைத் தாங்களே திருத்திக்கொண்டதும், அதை இங்கு பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளதும், மிகவும் பாராட்டத் தக்க செயல்கள் ஆகும்.
இதுவே இந்தக் கதாசிரியரின் மாபெரும் வெற்றி என நாம் சொல்லலாம்.
//என்னைப் போல் எத்தனை பேர் இக்கதையை வாசித்துத் தங்கள் தவறைத் திருத்திக் கொண்டார்களோ? வாசகரின் உள்ளத்தில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவது தானே, ஒரு கதாசிரியரின் குறிக்கோள்! //
நிச்சயமாக. நன்கு உணர்ந்து எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். ஸ்பெஷல் பாராட்டுகள்.
>>>>>
கோபு >>>>> திருமதி. ஞா. கலையரசி மேடம் (5)
நீக்கு//பாலகுமாரனின் இரும்புக்குதிரைகள் படித்திருக்கிறேன். சிறுகதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். ஆனால் ஏனோ அவர் எழுத்து என்னைக் கவராததால், தொடர்ந்து வாசிக்கவில்லை. //
நன்றாகவே இதனை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எல்லோருடைய எழுத்துக்களும் எல்லா வாசகர்களுக்கும் பிடித்துவிடும் என்று சொல்வதற்கு இல்லை.
ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு தனி டேஸ்ட் இருக்கக்கூடும்.
உதாரணமாக, ஜீவி சாரின் இந்த நூலினில் நான் இதுவரை எடுத்துக்கொண்டுள்ள முதல் 32 பிரபல எழுத்தாளர்களில், இந்த அம்பை அவர்களின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்ற கதை மட்டுமே என்னை மிகவும் கவர்ந்துள்ளது. என் மனதை மிகவும் பாதித்துள்ளது. என்னுடைய டேஸ்ட் அதுபோல அமைந்துள்ளது.
அதுவே உங்களுக்கும் பிடித்துள்ளது + உங்களையும் வெகுவாக பாதித்துள்ளது என்பது கேட்க எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.
>>>>>
கோபு >>>>> திருமதி. ஞா. கலையரசி மேடம் (6)
நீக்கு//ஜீவி சாரின் புத்தகத்திலிருந்து அம்பையையும், பாலகுமாரனையும் அருமையாக அறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள் கோபு சார்! //
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
தங்களின் அன்பான தொடர் வருகையும், தங்களின் மனதில் பட்டதை, உள்ளது உள்ளபடி விரிவாக எடுத்துக் கூறிவருவதும், இந்த என் தொடருக்கே மிகவும் ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக உள்ளது. தங்களுக்கு மீண்டும் என் அன்பு நன்றிகள், மேடம். - நன்றியுடன் கோபு.
ஜீ.வி சாரின் ஒரு கதையை அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற கதையுடன் ஒப்பிட்டு நான் எழுதிய பின்னூட்டத்தின் மூலம் இந்நூலில் அம்பையைச் சேர்க்க நினைவுபடுத்தியிருக்கிறேன் என்றறிய மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅதை இங்குப் பகிர்ந்திருக்கும் திரு ஜீவி சாருக்கு என் நன்றி!
ஞா. கலையரசி April 16, 2016 at 4:53 PM
நீக்கு//ஜீ.வி சாரின் ஒரு கதையை அம்பையின் ’வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற கதையுடன் ஒப்பிட்டு நான் எழுதிய பின்னூட்டத்தின் மூலம் இந்நூலில் அம்பையைச் சேர்க்க நினைவுபடுத்தியிருக்கிறேன் என்றறிய மகிழ்ச்சி.//
எனக்கும் இதில் மிக்க மகிழ்ச்சியே. தங்களின் இந்த செயலால் மட்டுமே, அவரும் அம்பை அவர்களை தன் பட்டியலில் சேர்த்துக்கொண்டு தன் நூலில் கொண்டுவந்து சிறப்பித்துள்ளார். அதனால் அம்பை அவர்களைப்பற்றியும், அவரின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்ற மிகச்சிறப்பானதோர் கதையினைப் பற்றியும் என்னாலும் அறிந்துகொள்ள முடிந்தது.
தங்களுக்கு மீண்டும் என் அன்பான நன்றிகள், மேடம்.
நன்றியுடன் கோபு
அம்பையின் எழுத்துகளை வாசித்ததில்லை. ஆனால் நீங்கள் கொடுத்திருக்கும் வரிகள் மிகவும் ரசிக்க வைத்தது மட்டுமல்லாமல் கண்டிப்பாக வாசித்திட வேண்டும் என்று தோன்றுகின்றது. அதுவும் பெண்ணீயம் சார்ந்த கருத்துகள் நிலவும் என்று தோன்றுவதால்...
பதிலளிநீக்குபாலகுமாரன் கதைகளை வாசித்ததுண்டு, தாயுமானவர் என்று சில தொடராக வந்தவை. ஆனால் ஏனோ இப்போது அந்த ஆர்வம் இல்லை...
பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.ஜிவி சாருக்கும் மிக்க நன்றி.
கீதா
Thulasidharan V Thillaiakathu April 16, 2016 at 8:03 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அம்பையின் எழுத்துகளை வாசித்ததில்லை. ஆனால் நீங்கள் கொடுத்திருக்கும் வரிகள் மிகவும் ரசிக்க வைத்தது மட்டுமல்லாமல் கண்டிப்பாக வாசித்திட வேண்டும் என்று தோன்றுகின்றது. அதுவும் பெண்ணீயம் சார்ந்த கருத்துகள் நிலவும் என்று தோன்றுவதால்...//
மிக்க மகிழ்ச்சி. :)
//பாலகுமாரன் கதைகளை வாசித்ததுண்டு, தாயுமானவர் என்று சில தொடராக வந்தவை. ஆனால் ஏனோ இப்போது அந்த ஆர்வம் இல்லை...//
புரிகிறது. நம் ஆர்வம் ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் ஒவ்வொரு மாதிரியாகத்தான் மாறிக்கொண்டே இருக்கக்கூடும். ஒரு காலக்கட்டத்தில் நாம் அந்தக்கால புதிய சினிமாக்களை மிகவும் ரசித்துப்பார்த்திருப்போம். அதே படத்தினை இன்று மீண்டும் பார்க்க நேர்ந்தால் அப்போது நமக்கு இருந்த ஓர் ஆர்வம் நிச்சயமாக இருக்காது.
//பகிர்வுக்கு மிக்க நன்றி சார். ஜிவி சாருக்கும் மிக்க நன்றி. - கீதா//
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
.
பதிலளிநீக்குபல புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவியது தங்களின் இந்த சுருக்கமான அலசல் தொடர்...!
.
அ. முஹம்மது நிஜாமுத்தீன்
நீக்குApril 16, 2016 at 10:37 PM
வாங்கோ நண்பரே, வணக்கம். நலம் தானே?
//பல புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவியது தங்களின் இந்த சுருக்கமான அலசல் தொடர்...!//
தங்களின் அபூர்வ வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, நண்பரே. - அன்புடன் VGK
அம்பையின் பல படைப்புகளை வாசித்துள்ளேன். பெண்மையின் நுட்பமான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் அவருடைய சிறுகதைகள் பலவும் என்னைப் பாதித்துள்ளன. அம்மா ஒரு கொலை செய்தாள் இன்னும் வாசிக்க வாய்ப்பு அமையவில்லை. ஆனால் இங்கு தாங்களும் கலையரசி அக்காவும் சுட்டிய வரிகளிலிருந்து அச்சிறுபெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. தாய்மைக்கும் நிறமுண்டு என்பதை சுட்டும் அருமையான கதை. பாலகுமாரனின் படைப்புகள் சிலவற்றை வாசித்திருந்தாலும் பெரிய அளவில் ஈர்ப்போ பாதிப்போ எழவில்லை.
பதிலளிநீக்குகீத மஞ்சரி April 17, 2016 at 12:58 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//அம்பையின் பல படைப்புகளை வாசித்துள்ளேன். பெண்மையின் நுட்பமான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் அவருடைய சிறுகதைகள் பலவும் என்னைப் பாதித்துள்ளன.//
மிக்க மகிழ்ச்சி, மேடம்.
//’அம்மா ஒரு கொலை செய்தாள்’ இன்னும் வாசிக்க வாய்ப்பு அமையவில்லை. ஆனால் இங்கு தாங்களும் கலையரசி அக்காவும் சுட்டிய வரிகளிலிருந்து அச்சிறுபெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. தாய்மைக்கும் நிறமுண்டு என்பதை சுட்டும் அருமையான கதை.//
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், நான் மிகவும் ரஸித்த வரிகளான ’தாய்மைக்கும் நிறமுண்டு’ உள்பட (இதே தலைப்பில் ஓர் சிறுகதை எழுதலாமோ என என்னை நினைக்க வைத்தது) அழகான பல கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
அம்பையின் எழுத்துக்களிலேயே ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதையை வாசித்துள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டம் மிகவும் ஆழமானதும், அசத்தலானதும், ஆச்சர்யமானதும் ஆகும். :)
//பாலகுமாரனின் படைப்புகள் சிலவற்றை வாசித்திருந்தாலும் பெரிய அளவில் ஈர்ப்போ பாதிப்போ எழவில்லை.//
சங்கல்பம் / விகல்பம் ஏதும் இல்லாமல் தங்கள் மனதுக்குத் தோன்றியதை மிகச்சரியாக பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சியே.
பிரியமுள்ள கோபு
Position as on 17.04.2016 - 2.00 PM
பதிலளிநீக்குஎன் இந்தத்தொடரின் முதல் பதினைந்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துச் சிறப்பித்துள்ள
திருமதிகள்:
01) ஞா. கலையரசி அவர்கள்
02) கோமதி அரசு அவர்கள்
03) கீதா சாம்பசிவம் அவர்கள்
04) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்
செல்விகள்:
05) ’சிப்பிக்குள் முத்து’ அவர்கள்
06) 'மின்னலு முருகு' மெஹ்ருன்னிஸா அவர்கள்
07) ’ப்ராப்தம்’ அவர்கள்
திருவாளர்கள்:
08) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்
09) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்
10) S. ரமணி அவர்கள்
11) வே. நடன சபாபதி அவர்கள்
12) ஸ்ரத்தா... ஸபுரி அவர்கள்
13) ஆல் இஸ் வெல் அவர்கள்
14) ஸ்ரீனிவாஸன் அவர்கள்
15) தி. தமிழ் இளங்கோ அவர்கள்
ஆகியோருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போன்ற புள்ளி விபரங்கள் நிறைவுப் பகுதி (பகுதி-20) முடிந்ததும் மீண்டும் அறிவிக்க நினைத்துள்ளேன்.
அன்புடன் VGK
oooooooooooooo
பகுதி-1 முதல் பகுதி-14 வரைக்கான அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து, பகுதி-15க்கு மட்டும் இதுவரை வருகை தராமல் ஒருவர் உள்ளார். அவர் தற்சமயம் முக்கியமான வேலைகளில் மூழ்கி இருப்பதால், கூடிய சீக்கரம் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
oooooooooooooo
//தாய்மைக்கும் நிறமுண்டு என்பதை சுட்டும் அருமையான கதை.//
பதிலளிநீக்குஅப்படியில்லை, கீதமஞ்சரி. இந்தக் கதை வேறு மாதிரியானது.
தான் பெற்ற பெண் வளர வளர பெருமிதமடைய வேண்டிய தாய்க்கு சமூகத்தின் சில அவலங்கள் அவளைக் கவலை கொள்ள வைக்கின்றன.
வறுமை, நிறம், அழகின்மை போன்ற சில காரணிகள் பல தாய்மார்களின் அந்தக் கவலைக்குக் காரணமாகின்றன.
கல்யாண சந்தையில் தன் பெண் விலை போகாமல் போய்விடப்போகிறாளோ என்கிற கவலை.
இந்தக் கதையில் வரும் தாய், தான் போய் வந்த வெளியூர் உறவுக்கார பெண் பார்க்கும் படலத்தில், பெண் கருப்பு என்ற காரணத்தினால் 'ரிஜக்ட்' ஆன வேதனையை தரிசிக்கிறாள்.
தன் பெண்ணும் கருப்பு என்கிற காரணத்தினால், தன் பெண்ணுக்கும் கற்ப்னையில் இதைப் பொறுத்திப் பார்த்து அவள் மனம் வேதனை அடைகிறது.
ஊருக்குத் திரும்பியவள் சொல்லி வைத்தாற் போல தன் பெண் பருவமடைந்த செய்தி கேள்விப் பட்டு சந்தோஷமடைய வேண்டியவள், மாறாக சமீபத்திய இந்த கறுப்பு தந்த வேதனையில், "இந்த எழவுக்கு என்னடீ அவசரம்?" என்று கரிப்பைக் கொட்டுகிறாள்.
அது ஒரு நிமிட சலனம். அவ்வளவு தான். அடுத்த வினாடியே அது சரியாகப் போகப் போகிறது. தாயின் அந்த எரிச்சலுக்குக் காரணம் சமூகத்தின் கோணல் மாணல்கள்.
ஆனால் அம்பையோ கதையை அந்தப் பெண் பார்வையில் பார்க்கிறாள். தன் அன்புத் தாயின் எதிர்பாராத அந்த சீறலைக் கேட்டவுடனேயே அந்தப் பெண்ணின் மனம் நொறுங்கிப் போவதாகக் காட்டி, அந்தத் தாயு ஒன்றும் தெரியாத அந்தப் பெண்ணின் மனதைக் கீறி ரணமாக்கி விட்டதாகக் கொண்டு, 'அம்மா ஒரு கொலை செய்தாள்' என்று கதையாக்கியிருக்கிறார்.
அம்பையின் இந்தப் பார்வையை என் இந்த நூலில் விமரிசனத்துற்கும் உள்ளாக்கியிருக்கிறேன்.
பெண்ணுக்கு மிக மிக நெருக்கமானவள் அவளின் தாய் தான்.
எல்லாத் தாய்மார்களும் தன் பெண்ணைத் தானாகவேப் பார்க்கிறார்கள் என்பது சிக்மண்ட் ப்ராய்டின் மன ஆராயுச்சிகள் சொல்லும் பாடம்.
இப்படியிருக்க அந்த அன்னையின் வேதனையில் வெளிப்பட்ட ஒற்றைச் சொல்லை பெரிசுபடுத்தி அம்மா ஒரு கொலை செய்தாள்' என்று கதையாக்கியிருக்கிறார் அம்பை.
பெண்ணியப் பதாகையைத் தூக்கிப் பிடிப்போருக்கு அந்த அம்மாவும் ஒரு பெண் தானே என்கிற பார்வை இல்லாமல் போனது வேதனையான ஒன்று.
அம்பையின் சீற்றம் இந்த சமூகத்தின் சீர்கேடுகளின் மேல் கொள்ள வேண்டியது.
அந்த அப்பாவி அம்மாவின் மேல் கொண்டது, கதையின் கருவை சரிவரக் கையாளாத குறைபாடே.
இந்தக் கதை அம்பையின் ஆரம்பக் கதைகளில் ஒன்று என்பதினால், அவரது பிற்கால வளர்க்சியைக் கணக்கில் கொண்டு, இப்பொழுது இதேக் கதையை அதே அம்பை எழுதினால் வேறு மாதிரி எழுதுவார் என்றும் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
அம்பை கருவைச் சரிவரக் கையாளவில்லை என்ற உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன் ஜீ.வி. சார்.
பதிலளிநீக்குநீங்களே சொல்லியிருப்பது போல், கதை பதிமூன்று வயதுடைய ஒரு பெண் குழந்தையின் கோணத்திலிருந்து சொல்லப்படுகின்றது. அம்மாவின் கோணத்திலிருந்து அல்ல.
அம்மாவின் சீற்றத்துக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அவை தம் பெண்ணின் நல்வாழ்வைப் பொறுத்த கவலைகள் தாம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனால் அவையெல்லாம் அந்தக் குழந்தைக்குத் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது; அதற்கு அவசியமுமில்லை. அக்குழந்தை வளர்ந்து ஆளாகும் போது, அம்மாவின் வார்த்தைகளில் இருந்த எரிச்சலுக்கும், கோபத்துக்கும் காரணம் கண்டிப்பாகத் தெரியவரும். கதையின் கரு அதுவல்ல.
ஒரு பெண் குழந்தை பருவமடையும் போது அவள் மனநிலையில் ஏற்படும் குழப்பம், தடுமாற்றம், அம்மாவிடம் அடைக்கலம் தேடும் பய உணர்வு ஆகியவற்றை அம்பை மிக அற்புதமாக இக்கதையில் வெளிப்படுத்தியிருக்கிறார், அவரும் இப்படிப்பட்ட கட்டத்தைத் தாண்டி வந்திருப்பதால்.
வீட்டில் யாராவது எப்போதும் நம்மை திட்டிக்கொண்டே இருந்தால், அதை நாம் சட்டையே செய்ய மாட்டோம். ஆனால் அதே சமயம் அதிகம் திட்டாதவர், நம் மீது மிகவும் பிரியமாக இருப்பவர், சாதாரணமாக ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும்; அது நம்மைப் பெரிதாகப் பாதிக்கும்.
அது போலவே இந்தக் குழப்பத்திலிருந்து அம்மா நம்மை விடுவிப்பாள்: எப்போதும் போல் அரவணைத்து ஆறுதல் சொல்வாள், என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் செல்பவளுக்கு, இனிமே நீ எனக்கொரு பாரம் என்று அம்மாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், தீயாகச் சுட்டுப் பொசுக்குகின்றன.
“அம்மாவின் உதடுகளும், நாசியும், நெற்றிக் குங்குமமும், மூக்குப் பொட்டும், கண்களும் ரத்த நிற ஜ்வாலையை உமிழ்வது போல் தோன்றுகிறது. அந்த நெருப்பில் அவள் மேல் போர்த்தியிருந்த தேவ ஸ்வரூபம் அவிழ்ந்து விழ நிர்வாணமான வெறும் மனித அம்மாவாய் அவள் படுகிறாள் அந்த ஈரமில்லாச் சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து முன்பு முளைவிட்டிருந்த அத்தனை அழகுகளையும் குருட்டுத் தனமாக ஹதம் செய்கிறது. தீராத பயங்கள் கரும் சித்திரங்களாய் நெஞ்சில் ஒட்டிக் கொள்கின்றன.”
தன் அம்மாவை ஜ்வாலையின் பிம்பமாக, அசுத்தங்களை எரித்துச் சுத்திகரிக்கும் நெருப்பாக, தேவ ஸ்வரூபமாக கதையின் துவக்கத்திலிருந்தே அடிக்கடி கற்பனை செய்வதாகக் காட்டுகிறார் எழுத்தாளர். கடைசியில் அவள் தேவ பிம்பம் மறைந்து வெறும் மனித அம்மாவாக அவள் கண்களுக்குக் காட்சி தருகிறாள்.
“அம்மாவைப் பற்றிய இத்தகைய உணர்வுகளை அம்மாவே ஊட்டினாளா, நானே நினைத்தேனா தெரியவில்லை.” என்று அக்குழந்தை நினைப்பதாக அம்பை சொல்கிறார்.
தன் அம்மாவைப் பற்றிய அக்குழந்தையின் யதார்த்தத்துக்கு ஒவ்வாத அதீத கற்பனை கூட, அவள் அளவுக்கதிகமாக மனம் நொறுங்கியதற்கு, தன்னைக் கொலை செய்ததாக நினைக்குமளவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இங்கு அம்பை சமூகச் சீர்கேடுகளுக்கு அம்மாவைக் குற்றம் சாட்டவில்லை. நமக்கு எவ்வளவு தான் பிரச்சினைகள் இருந்தாலும், நம் வெறுப்பையும் எரிச்சலையும் குழந்தைகளிடம் காட்டி, அவர்கள் மனதை நோகடிக்கக் கூடாது என்பதே இக்கதையிலிருந்து பெறக்கூடிய நீதியாக நான் கருதுகிறேன்.
நாவினால் சுட்ட வடு ஆறாதல்லவா?
இந்த விவாதத்தைப் பார்த்தால் அந்தக் கதையைப் படித்தே ஆக வேண்டும் போலுள்ளதே...
நீக்குஅந்தக் கதையைப் படிக்காமலேயே என் கருத்தைச் சொல்வது சரியில்லைதான். எனினும் ஜீவி ஸார் சொல்லி இருப்பது போல படைப்பாளி யாருடைய பார்வையிலிருந்து கதையைப் படைக்கிறார் என்பதைப் பொறுத்துதான் பெரும்பாலான வாசகர்கள் பார்வை அமைகிறது. பல வாசகர்கள் அதைத் தாண்டி வேறு விதமாக்கவும் யோசிக்கிறார்கள். அந்தச் செயலையும் சிலவேளை எழுத்தாளரே மறைமுகமாகத் தூண்டுகிறார். பெரும்பாலான சமயங்களில் படிக்கப்படும் அந்தப் படைப்பு வாசகனின் வாழ்வனுபவத்தோடு ஏதோ ஒரு வகையில் எங்கோ ஓரிடத்தில் ஒன்றுகிறது. எதையோ நினைவு படுத்துகிறது. அதை ஒட்டியும் வாசகனுக்கான பாதிப்பு நேர்கிறது.
நீக்குகமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு காட்சி. முதலாளியின் மகள் தன்னை விரும்புவதாக நினைத்து ஏமாந்த கதாநாயகன். அவன் உயரத்தில் மிகக் குறைந்தவன். நண்பர்களுக்கு மட்டுமே அவன் தோல்வி தெரியும். நிலை உணராத அவன் தாய் முதலாளியிடம் அவர் மகளின் காதல் குறித்து சமாதானம் செய்யும்போது "மாப்பிள்ளை என் மகன் போலக் குள்ளனாக இருந்தாலும் நீங்கள் மறுக்கலாம்" என்பது போலச் சொல்வதைக் கேட்கும் நாயகன் உடையும் இடமும், பின் தொடரும் காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன.
ஸ்ரீராம். April 17, 2016 at 6:05 PM
நீக்கு//இந்த விவாதத்தைப் பார்த்தால் அந்தக் கதையைப் படித்தே ஆக வேண்டும் போலுள்ளதே...//
எழுத்துலகில், அதுவும் இதுபோன்ற இரு பண்டிதர்கள் மத்தியில், சூடான சுவையான விவாதங்கள் நிகழ்வது மிகவும் ஆரோக்யமானதும், சுவாரஸ்யமானதுமாகவே இருக்கக்கூடும்.
’அம்பை’ அவர்கள் எழுதிய அந்த முழுக்கதையையும் நான் இப்போது படித்து முடித்துவிட்டேன். ராமபாணமான ‘அம்பை’ப் போல, அது என்னிடமிருந்து தங்களை நோக்கி வெகு வேகமாகப் புறப்படத் தொடங்கிவிட்டது. தாங்களும் படித்து மகிழுங்கள்.
‘ஸ்வாஹா’ என அக்னிக்கு நெய் ஊற்றுவதுபோல இந்த விவாதங்களுக்கு உங்கள் பங்குக்கு கொஞ்சம் நெய் ஊற்றி அக்னி அணையாமல் மேலும் கொழுந்து விட்டு எரியச்செய்து புண்ணியத்தைக் கட்டிக்கொள்ள உதவலாம். :)
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! :)
அன்புடன் VGK
அம்மா ஒரு கொலை செய்தாள் கதையை வாசிக்காவிடினும் இங்கு சுட்டப்பட்ட கருத்துகளைக் கொண்டு தாய்மைக்கும் நிறமுண்டு என்று குறிப்பிட்டேன். அது சரியல்லவென்று தாங்கள் சுட்டி அளித்த விளக்கத்துக்கு மிகவும் நன்றி ஜீவி சார். இன்று கோபு சாரின் தயவால் முழுக்கதையையும் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. இப்போது அந்த வார்த்தையை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனாலும் தங்கள் கருத்திலிருந்து சற்று மாறுபடத்தான் செய்கிறேன். இந்தக் கதை ஒரு பதிமூன்று வயதுப் பெண்ணின் மனநிலையிலிருந்து எழுதப்பட்டிருப்பதால் அந்த நேரத்தில் அச்சிறுமியின் மனப்பிரதிபலிப்பு அப்படித்தான் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. எழுதியவர் அம்பை என்பதால்தான் இவ்வளவு விமர்சனம் என்பதும் புரிகிறது. அந்தச்சிறுமியின் நிலையில் என்னையோ என் பெண்ணையோ இருத்திப் பார்த்தாலும் அந்த மனநிலை மாறவில்லை.
நீக்குஇப்பொழுது தான் பார்த்தேன்.
நீக்கு'அந்த'முழுக் கதையையும் படித்து விட்டு எழுதுவதான கருத்துக்கு நன்றி கீத மஞ்சரி.
அந்த பதிமூன்று வயது பெண்ணுக்கு, 'என்ன இது? எதனால் இது? என்ற குழப்பம் ஓரளவு முருக்குப் பாட்டியின கவனிப்பால் தீர்ந்திருக்கும் என்றாலும் அம்மா உதிர்த்த வார்த்தைகள் தீயாகச் சுட்டிருக்கும் என்று கொண்டாலும் பெற்ற அம்மாவின் அந்த வெடிப்புக்கும் அம்பையே தகுந்த காரணமும் சொல்லியிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
இருப்பினும் மனோதத்துவ ரீதியில் அந்த 13 வயது பெண்ணுக்கு அந்த திடீர் சீறல் 'தான் எந்த விதத்தில் இந்த எழவுக்குக் காரணம்?' என்று விடை தெரியாத கேள்வியாய் திகைக்க வைத்திருக்கலாம். மறுப்பதற்கில்லை.
ஆனால் இப்படி ஒவ்வொன்றுக்கும் பெற்றோர்கள் பார்த்து பார்த்து தங்கள் குழந்தைகளிடம் பேச வேண்டும் என்ற எதிர்ப்பார்பும் தீங்கானதே. வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியவர்களுக்கு இப்படித் தொட்டாற்சுருங்கியாய் இருக்கும் மனநிலையும் ஒரு மனரீதியான குறைபாடாகவே எதிர்காலத்தில் ஆகிப்போகும்.
அந்த நிகழ்வு நடக்காது நாள் தள்ளிப் போனாலும் அந்தத் தாயே நொந்து நூலாகிப் போவாள் என்பதையும் என் நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
ஆக, அந்த அப்பாவி அம்மாவை ரொம்பவும் காய்ச்ச வேண்டாம், ப்ளீஸ்..
எல்லாம் கதாசிரியர்கள் பண்ணுகிற வேலை. தாங்கள் எடுத்துக் கொள்ளும் விஷயத்தை எப்படிச் சொல்ல வேண்டும் என்ற கலையைக் கற்றவர்கள் அவர்கள்.
அதெல்லாம் போகட்டும்.. தன் பெண்ணுக்கு இஜ்த பெருமைமிகு நிகழ்வு நடைபெறும் பொழுது அந்தத் தாயின் மனநிலை எப்படியிருக்கும்?..
பெற்றெடுத்தத் தாய்களாலேயே உணர்வு பூர்வமாக உணரப்படும் உன்னத மன இயல் கேள்வி இது!..
இந்தக் கதையை அம்பை அவர்கள் எழுதுவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே நான் எழுதிய சிறுகதை ஒன்று பத்திரிகையில் வெளி வந்திருக்கிறது.. 'வான்மதி' என்ற அந்தப் பத்திரிகையும் அம்பை அந்தக் காலத்தில் வாழ்ந்த கோவையிலிருந்தே வெளிவந்திருப்பதும் ஆச்சரியம்!
விரைவில் தேடி எடுத்து அந்தக் கதையை என் பூவனம் தளத்தில் பிரசுரிக்கிறேன்.
தாய் ஸ்தானத்தில் படித்துக் கருத்துச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்..
குருஜி.... வரவேணாம்னுதா நெனச்சி பிட்டேன்.. படங்கள் அல்லா என்ன வா வா னு கூப்பிடுது... மேல ரோஸாபூவு பட்டர்ப்ளை சொலிக்குது.... பொறவால நெக்வஸு...... மூடி மூடி தொறக்குற ரோஸாபூவு அல்லாமே நல்லாகீது....
பதிலளிநீக்குmru April 17, 2016 at 7:16 PM
நீக்குவாங்கோ மின்னலு .... முருகு, வணக்கம்மா.
//குருஜி.... வரவேணாம்னுதா நெனச்சி பிட்டேன்.. //
அச்சச்சோ ... அப்படியெல்லாம் அந்த ரோஜா டீச்சர் போல நினைக்கவே கூடாது. வேண்டாம், அப்புறம் நான் அளுதுடுவேன் .....:)
//படங்கள் அல்லா என்ன வா வா னு கூப்பிடுது...//
முருகுவின் ரசனைக்காகவே காட்டப்பட்டுள்ள படங்களாக்கும், அவையெல்லாம். :))
//மேல ரோஸாபூவு பட்டர்ப்ளை சொலிக்குது.... பொறவால நெக்லஸு...... மூடி மூடி தொறக்குற ரோஸாபூவு அல்லாமே நல்லாகீது....//
முருகு, நீங்க மட்டும்தான் இதையெல்லாம் பற்றி, அழகா ரசித்துச் சொல்லியிருக்கீங்க. மொத்தத்தில் மிகவும் வெவரமான புத்திசாலிப் பொண்ணு நீங்க.:) வாழ்க !
அன்பான வருகைக்கும், சும்மா ஜோரா ஜொலிக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, முருகு. :)
பிரியமுள்ள குருஜி கோபு
நீண்ட பதிலுக்கு நன்றி, கலையரசி மேடம்.
பதிலளிநீக்குஉங்கள் பார்வையில் எல்லாம் சரியே. கருத்தை சரியாகக் கையாளவைல்லை என்று சொல்ல வந்தது கருத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்ற அர்த்தத்தில்.
அந்த அம்மா தன் பெண்ணின் மேல் வைத்திருந்த பாசமும் அன்பும் அந்த நாளே அவளைப் பக்கத்தில் அம்ர்ந்திக் கொண்டு பேச வைத்திருக்கும்..
தன் அம்மா சொல்வதை வேதவாக்காகக் கொள்ளும் அந்தப் பெண்ணும் அன்றே சகஜமான அம்மாவின் உரையாடலால் சரியாகியிருப்பாள். இதுவே யதார்த்தம்.
ஆனால் கதையை இப்படித் தான் எழுத வேண்டும் என்று தீர்மானம் பண்ணி விட்டு அதற்காக முன்னேற்பாடுடன் கூடிய அடித்தளமும் அமைத்து எழுதும் பொழுது நீங்கள் சொல்வது மாதிரி தான் எடுத்துக் கொள்ள தோன்றும்.
கதாசிர்யர் எழுதியிருக்கிற எடுத்துக் காட்டுகளைக் கோண்டு கதையை நியாயப்படுத்த முயற்சித்தால் இதில் ஒன்றும் தப்பில்லையே என்று தான் நினைக்கத் தோன்றும்.
வறுமையான குடும்பங்களில் அடுத்தடுத்துக் குழந்தையைப் பெற்ற அந்தக்கால வாயும் வயிறுமாக இருந்த தாய்மார்கள் கூட் "இது இல்லேன்னு இப்போ யார் அழுதா?" என்று அலுப்பில் சொல்லிக் கொண்டதுண்டு. குழந்தை பிறந்ததும் அந்த வெறுப்பும் அலுப்பும் போன இடம் தெரியாது. எத்தனை குழந்தைகள் இருந்தாலும் குடும்பக் கட்டுப்பாடு அமுலில் இல்லாத அந்தக் காலத்தில் குழந்தைகளின் பிறப்பை ஏற்றுக் கொள்ளவே செய்தார்கள்.
'இந்த இழவு இல்லேன்னு இப்போ யார் அழுதா?" என்ற ஒரே ஒரு சுடுசொல் அசந்தர்ப்பமாய் அந்த அம்மா வாயிலிருந்து வந்ததற்கு தன் பெண்ணின் மனசை ஹதம் பண்ணிவிட்டதாக அதீத கற்பனை கொள்ளுமாறு கதையை நடத்திச் சென்றிருக்க வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.
ஆண்களுக்கு பிடித்ததை அவர்கள் விரும்புவதை ஆதரிப்பதே ஒரு காலத்து வழக்கமாக இருந்தது. இந்த கருப்பு ஒதுக்கல், சிவப்புத் தோலின் ஆசை எல்லாம் அந்த அடிப்படையில் தீர்மானம் ஆனவை. அந்த அம்மாவின் குழப்பமும் அந்த ஆண் ஆதிக்க வலையில் சிக்கிக் கொண்டதினால் தான்.
அந்த பழக்கத்தில் தான் அந்தப் பெண்ணின் அப்பா கூட,
'எங்கேடி இந்த கருப்பு?" என்று விளிக்கிற மாதிரியில் தன் பெண்ணை அழைக்கிறார். 'கருப்பு' என்றே தன்னை அழைப்பதற்கு பழக்கப்பட்டுப் போன பெண்ணுக்கு விளக்கிச் சொல்லும் பொழுது 'கருப்பு' ஒன்றும் பிரச்னையாகிப் போயிருக்காது.
"நீ எப்படிம்மா இப்படி வெளுப்பா இருக்கே?" என்று பெண் கேட்கும் பொழுது, "கருப்பு--வெளுப்பில் என்னடி, இருக்கு?" என்று சொல்லின் சீராட்டலில் குழந்தையை வளர்த்திருக்க வேண்டும்.
பருவமடைந்த குழந்தையைக் கட்டிக் கொண்டு, " கருப்பா இருந்தா என்ன?.. இவளுக்கென்று ஒரு ராஜா பிறந்திருப்பான், பாருங்கோ" என்று தன் புருஷனிடம் அந்த அம்மா சொல்வதாக கதையைக் கொண்டு போயிருந்தால் இந்த கருப்பு விஷயம் பிரதானப்பட்டிருக்காது.
"நான் வெளுப்பு; நீங்கள் கருப்பு.. நமக்காகலையா?.. அந்த மாதிரி தான் நம் பெண்ணுக்கும் நடக்கும் பாருங்கோ.." என்று அவள் சொல்வதாக, அவள் கணவனின் நிறத்தைக் கருப்பாக்கி, கருப்பை சாதாரணமான விஷயமாக்கியிருக்க லாம் மட்டுமில்லை.. பெண்ணின் கருப்பு நிறத்திற்கு காரணம் கூடச் சொல்லியிருக்கலாம்.
இந்தக் குடும்பமும் பெண்ணின் கருப்பை பெரிதாக நினைத்துக் குழம்பாமல் கருப்புக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கும்.
அந்த கருப்பு விஷயத்தைப் பிரதானப்படுத்தாமல், பிரதானப்படுத்தியிருந்தாலும் அந்தக் கருப்பைப் பொருட்படுத்தாத ஒரு தீர்வு இந்தக் கதையில் முக்கியப் படுத்தியிருந்தால், அது கருப்பை வெறுத்த அந்தக்கால நிற ஒதுக்கலுக்கு எதிரான போர்க்கொடி உயர்த்திய அந்தஸ்த்தை இந்தக் கதை பெற்றிருக்கும்.
இன்றைய பெண்ணியக்கம் சாரந்த எண்ணம் கொண்டவராஉ அன்றைய அம்பை அவர்கள் இல்லாதிருந்திருக்கலாம். குறைந்தபட்சம், இந்த 'அம்மா ஒரு கொலைச் செய்தாள்' என்று கதையை எழுதும் பொழுது. அதனால் தான் கதை அப்படி அமைந்து விட்டது. இன்றைய அம்பையாய் இருந்தால் இந்தக் கதையையே வேறு மாதிரி எழுதுவார் என்று அதற்காகத் தான் சொன்னேன்.
கலைமகளில் தொடராக வந்து பரிசு பெற்ற தன் 'அந்திமாலை' கதையை நினைத்தால் எனக்கு சிரிப்பாகத் தான் வருகிறது என்று அம்பையே சொல்லுவார். அந்த அளவுக்கு அவரது பிற்கால வளர்ச்சி இருந்திருக்கிறது.
இந்தக் கதையே சிவசங்கரி எழுதியிருந்தால் நாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை. எழுதியிருப்பது அம்பை என்பதால் தான் நம் எதிர்பார்ப்பு கூடிப் போயிருக்கிறது.
தங்கள் வாதத்தை ரசித்தேன். பாராட்டுக்கள்.
வணக்கம் ஜீவி சார்!
நீக்குவிரிவான அலசலுடன் கூடிய விளக்கத்துக்கு என் முதல் நன்றி!
அந்தக் கருப்பு விஷயத்தைப் பிரதானப்படுத்தாமல், பிரதானப்படுத்தியிருந்தாலும், அந்தக் கருப்பைப் பொருட்படுத்தாத ஒரு தீர்வு, இந்தக் கதையில் முக்கியப்படுத்தியிருந்தால், அது கருப்பை வெறுத்த, வெறுக்கிற நிற ஒதுக்கலுக்கு எதிரான அந்தஸ்தை இது பெற்றிருக்கும் என்று தாங்கள் சொல்லியிருப்பது சரியே. அம்பை என்பதால் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது என்பதும் உண்மை தான்.
இக்காலத்தில் அம்பை இதை எழுதியிருப்பாரே யானால், என் திறமையை மதிக்காது, என் நிறத்தை மட்டுமே பார்க்கும் ஒருவனை நான் திருமணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்று அப்பெண் போர்க்கொடி உயர்த்தி நிராகரிப்பதாக எழுதியிருப்பாரோ என்னவோ?
என் கருத்துக்களையும் பொறுமையாகப் படித்து ரசித்துப் பாராட்டியமைக்கு மனமார்ந்த நன்றி ஜீவி சார்! என் கருத்தை வெளியிட்ட திரு கோபு சார் அவர்களுக்கும், என் நன்றி.
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் பாலகுமாரன் அவர்கள் அறிமுக எழுத்தாளர். எனவே அப்போது அவரது எழுத்துக்களை அதிகம் வாசித்தது இல்லை. அவர் ‘எழுத்துச் சித்தர்’ ஆன பிற்பாடுதான், கடந்த சில வருடங்களாக அவரது நூல்களை வாசித்து இருக்கிறேன். அதிலும் அவர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில், பழமார்நேரிக்காரர் என்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. காரணம் எனது அம்மாவின் ஊரும் இந்த (மேலத்) திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில்தான்.
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ April 17, 2016 at 9:03 PM
நீக்கு//அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.//
வாங்கோ சார், வணக்கம்.
//நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் பாலகுமாரன் அவர்கள் அறிமுக எழுத்தாளர். எனவே அப்போது அவரது எழுத்துக்களை அதிகம் வாசித்தது இல்லை.
ஓஹோ, அப்படியா!!!!!
//அவர் ‘எழுத்துச் சித்தர்’ ஆன பிற்பாடுதான், கடந்த சில வருடங்களாக அவரது நூல்களை வாசித்து இருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி, சார்.
//அதிலும் அவர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில், பழமார்நேரிக்காரர் என்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. காரணம் எனது அம்மாவின் ஊரும் இந்த (மேலத்) திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில்தான்.//
அடடா, நம்மூர் பக்கமாச்சே. கல்லணை தாண்டியதும் உடனே வந்துவிடுமே. திருக்காட்டுப்பள்ளிக்கு மிக அருகில்தான் பிரபல வரஹூர் பெருமாள் கோயிலும் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் உரியடி உத்ஸவம் உலகப் பிரஸித்தி பெற்றது ஆச்சே ! நான் வரஹூருக்கு (உங்கள் அம்மா ஊரான திருக்காட்டுப்பள்ளி வழியே) பலமுறை போய் வந்துள்ளேன்.
தங்களின் அன்பான வருகைக்கும் ஆச்சர்யமான செய்திகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK
அம்பையின் கதையை படிக்கவில்லை ஆனால் பின்னூட்டங்கள் மூலம் தாய் பேசியது தப்பு என்றும் சரிஎன்றும் கருத்து பரிமாற்றம் நடக்கிறது.
பதிலளிநீக்குகதைப்படி அந்தக்காலத்தில் பெண் அழகாய் இருக்கனும், நிறைய பணம் நகையோடு வரனும் என்ற காலகட்டம். பெண் குழந்தைகளை விளையாட விடாமல் பெரியமனுஷியாக லட்சணமாய் இரு என்று அதட்டும் காலம். அதனால் தான் மகள் கேள்விக்கு அம்மா இப்படி பதில் சொல்கிறார் பருவம் அடைந்தால் மகள் இன்பமாய் இருக்க முடியாது என்று நினைக்கிறாள். அம்மா சின்ன வயதில் பட்ட கஷ்டங்கள் மகளுக்கு வேண்டாம் என்று நினைக்கிறாள் போலும்.
//அம்மா! பருவம்ன்னா என்னம்மா?”
மெளனம். நீண்ட நேர மெளனம்.
அம்மா திடீரென்று சொல்கிறாள்
“நீ இப்படியே, இருடீம்மா... பாவாடையை அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு.”//
இக் கதை மகளின் சொல்வது போல் இருப்பதால் மகள் பார்வையும் கருத்தும் வேறு மாதிரி இருக்கிறது. தான் பருவம் அடைந்த விஷ்யத்தை பாரம் என்றும் அந்த விஷ்யம் கொண்டாடபடவில்லை என்றும் நினைக்கும் போது அந்த பிஞ்சு மனம் வேதனைப்படுகிறது என்று நினைக்கிறேன்.
கதையை முழுவதும் படித்து விட்டு மீண்டும் கருத்து சொல்கிறேன்.
பாலகுமரன் கதை நிறைய படித்து இருக்கிறேன். தாயுமானவன் கதையில் தன் மகள் பெரியவள் ஆனதை அவள் அம்மா இல்லாமல் தந்தையே தனக்கு தெரிந்த மாதிரி கொண்டாடுவது என்ற விஷயத்தை சொல்லி இருப்பார்.
மீண்டும் வருகிறேன்.
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் சார்.
கோமதி அரசு April 19, 2016 at 12:38 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//அம்பையின் கதையை படிக்கவில்லை. ஆனால் பின்னூட்டங்கள் மூலம் தாய் பேசியது தப்பு என்றும் சரிஎன்றும் கருத்து பரிமாற்றம் நடக்கிறது. .......//
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான பல கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
அம்பை அவர்கள் எழுதியுள்ள அந்த முழுக்கதையையும் தங்களுக்கு நான் இப்போது தனி மெயில் மூலம் அனுப்பியுள்ளேன். முடிந்தால் படித்துப்பாருங்கோ.
அன்புடன் VGK
வறுமை காரணமில்லை கோமதியம்மா. பெண்ணின் நிறம் கருப்பு என்பதினால் கருப்பை ஒதுக்கும் கல்யாண சந்தை வியாபாரத்தை நினைத்துக் கவலை கொள்ளும் தாய் மனம் படுகிற பாடு.
பதிலளிநீக்கு//அம்பை அவர்கள் எழுதியுள்ள அந்த முழுக்கதையையும் தங்களுக்கு நான் இப்போது தனி மெயில் மூலம் அனுப்பியுள்ளேன். முடிந்தால் படித்துப்பாருங்கோ.//
நல்ல காரியம் செய்தீர்கள், கோபு சார்.
//“அம்மா! பருவம்ன்னா என்னம்மா?”
பதிலளிநீக்குமெளனம். நீண்ட நேர மெளனம்.
அம்மா திடீரென்று சொல்கிறாள்
“நீ இப்படியே, இருடீம்மா... பாவாடையை அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு.”//
beautiful!
அப்பாதுரை April 23, 2016 at 10:13 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
**“அம்மா! பருவம்ன்னா என்னம்மா?”
மெளனம். நீண்ட நேர மெளனம்.
அம்மா திடீரென்று சொல்கிறாள்
“நீ இப்படியே, இருடீம்மா... பாவாடையை அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு.”**
//beautiful!//
தங்களின் அன்பான வருகைக்கும் Beautiful என்ற Beautiful கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். - VGK
பாலகுமாரன் ஒன்றிரண்டு சிறுகதைகள் படித்திருக்கிறேன். என்னவோ அவர் எழுத்து என்னை ஈர்க்கவில்லை. அவருடைய ஆரம்பகால புதுக்கவிதை வரிகள் சில இன்றும் நினைவிருக்கின்றன.
பதிலளிநீக்குஅப்பாதுரை April 23, 2016 at 10:14 PM
நீக்கு//பாலகுமாரன் ஒன்றிரண்டு சிறுகதைகள் படித்திருக்கிறேன். என்னவோ அவர் எழுத்து என்னை ஈர்க்கவில்லை.//
இருக்கலாம். ஒவ்வொருவர் டேஸ்ட் ஒவ்வொருவிதம். அதனாலும்கூட இருக்கலாம். அதனால் பரவாயில்லை, சார்.
//அவருடைய ஆரம்பகால புதுக்கவிதை வரிகள் சில இன்றும் நினைவிருக்கின்றன.//
அச்சா, பஹூத் அச்சா.
தங்கள் அன்பான வருகைக்கும், நேர்மையான + தெளிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK
அம்பை என்றாலே அந்திமாலை தான் முதலில் நினைவில் வரும். அவர் எழுத்துக்களைப் படித்துள்ளேன், பலவற்றில் கருத்து வேறுபாடு இருந்தாலும். :) பாலகுமாரனை ஒரு காலத்தில் அதிகம் படித்து வந்தாலும் பின்னால் ஓர் அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டு விட்டது! பெண்களைப் பற்றி எல்லாம் தெரிந்தாற்போல் காட்டிக்கொள்ளும் சுபாவத்தினாலோ! என்னனு தெரியலை! இப்போதெல்லாம் படிப்பதே இல்லை! :) பாலகுமாரனின் ஆரம்ப கட்ட நாவல்கள் தவிர்த்து மற்றவை படித்ததே இல்லை. படிக்கணும்னு ஆசையும் இல்லை! :)
பதிலளிநீக்குGeetha Sambasivam April 24, 2016 at 9:28 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//அம்பை என்றாலே அந்திமாலை தான் முதலில் நினைவில் வரும். அவர் எழுத்துக்களைப் படித்துள்ளேன், பலவற்றில் கருத்து வேறுபாடு இருந்தாலும். :)//
அச்சா !
//பாலகுமாரனை ஒரு காலத்தில் அதிகம் படித்து வந்தாலும் பின்னால் ஓர் அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டு விட்டது! பெண்களைப் பற்றி எல்லாம் தெரிந்தாற்போல் காட்டிக்கொள்ளும் சுபாவத்தினாலோ! என்னனு தெரியலை! இப்போதெல்லாம் படிப்பதே இல்லை! :) பாலகுமாரனின் ஆரம்ப கட்ட நாவல்கள் தவிர்த்து மற்றவை படித்ததே இல்லை. படிக்கணும்னு ஆசையும் இல்லை! :)//
பஹூத் அச்சா !!
தங்களின் அன்பான வருகைக்கும், மனம் திறந்த நேர்மையான கருத்துக்களுக்கும் என் நன்றிகள், மேடம். - VGK