About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, April 5, 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 12

’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி. 

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  
21) தனியாகத் தெரியும்
அசோகமித்ரன்
[பக்கம் 122 முதல் 130 வரை]ஐம்பதுகளில் எழுத ஆரம்பித்த அசோகமித்திரன் ஏழெட்டு நாவல்கள், குறுநாவல்கள், நிறைய சிறுகதைகள், கட்டுரைகள், ஆங்கிலத்தில் கட்டுரைகள் என்று நிரம்பவே எழுதியிருக்கிறார். அவரது முதல் படைப்பு: ’அன்பின் பரிசு’ என்ற ரேடியோ நாடகம். முதல் கதை ’ஒரு நாடகத்தின் முடிவு’ என்ற பெயரில் கலைமகளில் பிரசுரமானது. இவரின் ‘தண்ணீர்’ நாவல் கணையாழியில் தொடராக வந்தது என்றெல்லாம் அசோகமித்திரனின் படைப்புகளை விவரமாகக் கடை பரப்புகிறார் ஜீவி. 

’சுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை அசோகமித்திரனின் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. நதியின் பிரும்மாண்டத்தை அடக்கிக் காட்டுவதில் எப்போதும் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார். அவரால் விரிவின் முழுமையைச் சித்தரிக்க முடியாது. விரிவை நுண்மைக்குள் அடக்கித்தான் தர முடியும்’  என்று இலக்கியத்திலும் இலக்கிய விமர்சங்களிலும் ஆழ்ந்த புலமை கொண்ட ஜெயமோகன் சொல்லியிருப்பதாகச் சொல்லி அவர் சொன்ன விரிவை நுண்மைக்குள் அடக்கும் பாணியை விமரிசிக்கிறார் ஜீவி. 

அசோகமித்திரனின் ’அப்பாவின் சினேகிதர்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி 1996 ஆம் ஆண்டு விருது வழங்கியிருக்கிறது. இதுவரை நான்கு தொகுப்புகளாக அவரது சிறுகதைகள் வெளி வந்திருக்கின்றன. 

அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றியவராம். திரைப்படத் தொழிலாளர்கள் வாழ்க்கையை படம் பிடித்து இவர் எழுதிய 'கரைந்த நிழல்கள்' என்ற நாவலையும், 'ஒற்றன்' என்ற பயண இலக்கிய படைப்பு  பற்றியும், ’புலிக்கலைஞன்’ என்ற சிறுகதையைப் பற்றியும் மேலும் இவரின் பல்வேறு படைப்புகள் பலவற்றையும் ஜீவி குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். 

இவரது 'எலி' என்ற சிறுகதையைப் பற்றி ஸ்பெஷலாகக் குறிப்பிட்டு பிரமாதமாக எழுதியிருக்கிறார், ஜீவி.22) புளிய மரத்தின் கதை சொன்ன
சுந்தர ராமசாமி
[பக்கம் 131 முதல் 135 வரை]இவர் பசுவய்யா என்ற பெயரில் கவிதைகள் வேறு எழுதுவாராம்.   ஆரம்பத்திலேயே எழுத்தாளர்கள் பற்றிய அவரது கவிதை ஒன்றை ஜீவி எடுத்துப் போட்டிருக்கிறார். 

சு.ரா.வின் 'ஜே. ஜே. சில குறிப்புகள்' நாவல் பற்றி ஜீவி எழுதியிருக்கிறார்.  இவரது 'புளிய மரத்தின் கதை' பற்றி ஜீவி ரசனையுடன் எழுதியிருக்கிறார்.   கதையைப்  பற்றி படித்ததும் என்ன பிரமாதமான கதை என்று நினைத்துக் கொண்டேன். ஜரிகைச்சரடு மாதிரி நீளும் சு.ரா. அவர்களின் நகைச்சுவை இத்தனைக்கும் நடுவே இந்தப் புதினத்திற்கு பெருமை சேர்க்கிறது என்கிறார் ஜீவி. 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்'  கதையை ஜீவி நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்றே மூன்று நாவல்களுடன், ’மரியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’ என்ற சிறுகதைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார். அழைப்பு’, ’போதை’, ’பல்லக்குத் தூக்கிகள்’ போன்ற முப்பதுக்கும் உள்ளிட்ட சிறுகதைகளையும், நிறைய கட்டுரைகளையும், மொழியாக்கக் கவிதைகளையும் சுந்தர ராமசாமி தந்திருந்தாலும், பசுவய்யா என்னும் பெயரில் கவிதைகள் எழுதி பெரும் கவனம் பெற்றதை குறிப்பிட வேண்டும் என்கிறார், ஜீவி.

சில வருடங்களுக்கு முன் ‘தினமணி’ தீபாவளி மலர் ஒன்றில் சு.ரா.வின் ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ என்ற சிறுகதையைப் படித்தது பற்றி சிலாகித்துச்சொல்லியுள்ளார் ஜீவி.
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்


  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:     

 
  
   வெளியீடு: 07.04.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

63 comments:

 1. இரண்டு பெரிய எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம். பதிவர் கீதா சாம்பசிவம் அவர்களின் சித்தப்பாவான அசோகமித்திரன் அவர்களின் தொடர் ஒன்று இப்போதும் இந்து தமிழ்ப் பதிப்பில் வந்து கொண்டிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். April 5, 2016 at 3:39 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

   //இரண்டு பெரிய எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம்.//

   அப்படியா, மிக்க மகிழ்ச்சி.

   ’பெரிய’ என்றால் ????? கொட்டை கொட்டையாக பெரிய எழுத்துக்களில் எழுதுபவர்களா? எதையும் சுருக்கமாக எழுதத்தெரியாமல் பெரியதாக வளவளவென்று எழுதுபவர்களா? வயதில் பெரியவர்களா? எதைச் சொல்கிறீர்கள் என எனக்கே சரியாகப் புரியவில்லை. சரி அது போகட்டும்.

   //பதிவர் கீதா சாம்பசிவம் அவர்களின் சித்தப்பாவான அசோகமித்திரன் அவர்களின் தொடர் ஒன்று இப்போதும் இந்து தமிழ்ப் பதிப்பில் வந்து கொண்டிருக்கிறது.//

   ஆஹா .... இதில் புதிதாக இரண்டு செய்திகளை என்னால் அறிய முடிகிறது. சந்தோஷம்.

   முதலாவதாகச் சொன்னதில், இருவரின் எழுத்து நடைகளையும் இப்போ நான் கொஞ்சம், எனக்குள் ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டேன். அவர்களின் (சித்தப்பா + அண்ணன் மகள்) உறவுமுறை நன்கு உணர முடிவதாகவே உள்ளது. :)

   தங்களின் அன்பான வருகைக்கும், இனிய இந்தத் தகவல்களுக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்.-VGK

   Delete
  2. அண்ணன் மகள் அல்ல... அம்மாவின் தங்கையின் கணவர்.

   //கொட்டை கொட்டையாக பெரிய எழுத்துக்களில் எழுதுபவர்களா? எதையும் சுருக்கமாக எழுதத்தெரியாமல் பெரியதாக வளவளவென்று எழுதுபவர்களா?//

   ஹா... ஹா... ஹா... இது ஜீவி ஸாரின் லேட்டஸ்ட் பதிவின் பாதிப்பு!

   Delete
  3. சுந்தர ராமசாமி எல்லோராலும் கொண்டாடப்படும் எழுத்தாளர். ஏனோ என்னால் அவரது பாராட்டிச் சொல்லப்படும் 'ஜேகே சில குறிப்புகளை'ப் படிக்கவே ஓடவில்லை! நான் மண்டூகமாக இருக்கலாம்.

   Delete
  4. ஸ்ரீராம். April 5, 2016 at 8:06 PM

   வாங்கோ ......

   //அண்ணன் மகள் அல்ல... அம்மாவின் தங்கையின் கணவர்.//

   ஓஹோ, அதானே பார்த்தேன். :)

   எனினும் தங்களின் இந்தக்கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   **கொட்டை கொட்டையாக பெரிய எழுத்துக்களில் எழுதுபவர்களா? எதையும் சுருக்கமாக எழுதத்தெரியாமல் பெரியதாக வளவளவென்று எழுதுபவர்களா?**

   //ஹா... ஹா... ஹா... இது ஜீவி ஸாரின் லேட்டஸ்ட் பதிவின் பாதிப்பு!//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! என் பாதிப்பின் காரணத்தை மிகத்துல்லியமாக உணர்ந்து சொல்லி விட்டீர்கள். சபாஷ் ஸ்ரீராம் !

   எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறோம், பாருங்கோ. :)

   அன்புடன் VGK

   Delete
  5. ஸ்ரீராம். April 5, 2016 at 8:13 PM

   வாங்கோ ......

   //சுந்தர ராமசாமி எல்லோராலும் கொண்டாடப்படும் எழுத்தாளர்.//

   அப்படியா! மிகவும் சந்தோஷம்.

   //ஏனோ என்னால் அவரது பாராட்டிச் சொல்லப்படும் 'ஜேகே சில குறிப்புகளை'ப் படிக்கவே ஓடவில்லை! நான் மண்டூகமாக இருக்கலாம்.//

   எனக்கு இதிலும் சில சந்தேகங்கள் உள்ளன.

   தாங்கள் நிச்சயமாக மண்டூகமாகவே இருக்க முடியாது என்பது மட்டும் என்னால் நிச்சயமாக நினைக்கவும் உணரவும் முடிகிறது. அதனால் அதை நாம் இங்கு விட்டுவிடுவோம்.

   ‘படிக்கவே ஓடவில்லை’ என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே என் சந்தேகம்.

   புத்தகத்தைப் பிரித்து முதல் பக்கத்தைப் படித்ததும் மேற்கொண்டு படிக்க ஓடாமல் ஓடிவிடத் தோன்றுகிறதா?

   அல்லது

   அந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டவே ஓடாமல் பிற முக்கிய அன்றாட வேலைகளின் அழுத்தம் தாக்குகிறதா?

   Delete
  6. சில புத்தகங்களை எவ்வளவு படித்தாலும் அடுத்த பக்கத்துக்கு நகர்த்துவதற்கு ரொம்பக் கஷ்டப்பட வேண்டும். ஜேகே சிகு (எனக்கு) அந்த ரகம். சில புத்தகங்களை எடுப்பதும் தெரியாது, முடிப்பதும் தெரியாது! ஓடி இடும். இந்தப் புத்தகத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் படித்தேன்.. இல்லை, இல்லை படிக்க முயற்சித்தேன்!

   இப்போது கடந்த ஒரு மாதமாக கடுமையான பணிச்சுமை, குடும்பச் சோகங்கள்...

   Delete
  7. ஸ்ரீராம். April 5, 2016 at 8:37 PM

   வாங்கோ ......

   //சில புத்தகங்களை எவ்வளவு படித்தாலும் அடுத்த பக்கத்துக்கு நகர்த்துவதற்கு ரொம்பக் கஷ்டப்பட வேண்டும். ஜேஜே சிகு (எனக்கு) அந்த ரகம். சில புத்தகங்களை எடுப்பதும் தெரியாது, முடிப்பதும் தெரியாது! ஓடி விடும். இந்தப் புத்தகத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் படித்தேன்.. இல்லை, இல்லை படிக்க முயற்சித்தேன்!//

   தங்களின் நேர்மையான + மனம் திறந்த பதிலுக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   //இப்போது கடந்த ஒரு மாதமாக கடுமையான பணிச்சுமை, குடும்பச் சோகங்கள்...//

   பணிச்சுமையின் கடுமை குறையவும், குடும்ப சோகங்கள் நாளடைவில் (மனதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக) மறையவும் என் பிரார்த்தனைகள். - VGK

   Delete

 2. இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திரு அசோகமித்ரன் கணையாழியில் எழுதியிருக்கிறார் என என் அண்ணன் சொல்லக் கேட்டிருக்கிறேன். (என் அண்ணன் கணையாழியின் நீண்ட கால வாசகர்.) ஆனால் அவரது எழுத்தைப் படித்ததில்லை. அவரது படைப்புகளை இனிதான் படிக்கவேண்டும்.

  திரு சுந்தர ராமசாமி அவர்களின் புளிய மரத்தின் கதையை ‘சரஸ்வதி’ இதழில் வந்தபோது படித்து இரசித்திருக்கிறேன். இவரது படைப்பு அறிமுகமானது என் அண்ணன் மூலம் தான். (என் அண்ணன் ‘சரஸ்வதி’ இதழின் சந்தாதாரராக இருந்தார்.)

  இரு பெரும் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி April 5, 2016 at 4:48 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திரு. அசோகமித்ரன் கணையாழியில் எழுதியிருக்கிறார் என என் அண்ணன் சொல்லக் கேட்டிருக்கிறேன். (என் அண்ணன் கணையாழியின் நீண்ட கால வாசகர்.) ஆனால் அவரது எழுத்தைப் படித்ததில்லை. அவரது படைப்புகளை இனிதான் படிக்கவேண்டும்.//

   நல்லது சார். அதனால் பரவாயில்லை சார். வாய்ப்பு கிடைக்கும்போது படித்தால் போச்சு.

   //திரு சுந்தர ராமசாமி அவர்களின் புளிய மரத்தின் கதையை ‘சரஸ்வதி’ இதழில் வந்தபோது படித்து இரசித்திருக்கிறேன். இவரது படைப்பு அறிமுகமானது என் அண்ணன் மூலம் தான். (என் அண்ணன் ‘சரஸ்வதி’ இதழின் சந்தாதாரராக இருந்தார்.) //

   இதைக்கேட்கவே மிக்க மகிழ்ச்சி, சார்.

   //இரு பெரும் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!//

   தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK

   Delete
  2. தோழர் விஜயபாஸ்கரனின் 'சரஸ்வதி' இதழில் சு.ரா.வின் புளியமரத்தின் கதை நான்கு அத்தியாயங்களே வந்திருக்கின்றன. பத்திரிகை தளர்ச்சியுற பின்னால் தனியாக அந்தக் கதையை சு.ரா. எழுதி புத்தகமாக வெளிவந்தது.

   நண்பர் நடன சபாபதி அவர்கள் சரஸ்வதி பத்திரிகையை இங்கு நினைவு கூர்ந்தது அற்புதமான அவரது நினைவாற்றலை நமக்குச் சொல்கிறது. அந்தக் காலத்தில் 'தாமரை', 'சரஸ்வதி' பத்திரிகைகளின் சர்க்குலேஷனுக்காக அயராது பாடுபட்டவன் நான்.

   நடன சபாபதி அவர்களீன் தமையனாரின் பெயர் அறிய ஆவல். 'சரஸ்வதி' பத்திரிகைக்கு சந்தாதாரராக அவர் இருந்தார் என்பதே அவருக்கான பெருமை. அதுவே அவரின் இலக்கிய தாகத்தைச் சொல்கிறது.

   Delete
  3. வணக்கம் திரு ஜீ.வி அவர்களே! என் அண்ணின் பெயர் திரு வே,சபாநாயகம். அவரும் ஒரு எழுத்தாளர். எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் அவர்களின் இரசிகர் மற்றும் நண்பர். அவரால் தான் என்னால் 9 ஆவது படிக்கும்போதே (1957-58) தி. ஜானகிராமன், கல்கி, தேவன்,புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் அண்ணனும்
   நினைவுத்தடங்கள் என்ற பெயரில் ஒரு வலைப்பூவில் அவ்வப்போது எழுதி வருகிறார்.

   Delete
  4. அண்ணின்’ என்பதை அண்ணனின் என்று படிக்ககவும். தட்டச்சும்போது தவறு ஏற்பட்டுவிட்டது. மன்னிக்க.

   Delete
  5. ஆஹா... நினைவுத் தடங்கள், வே.ச.வா?.. தங்கள் தமையனாருக்கு என் வணக்கங்கள். என் நினைவுகளில் சந்தேகம் ஏற்படும் பொழுது அவரை 'refer' செய்து கொள்வதும் வழக்கம். அவரின் இளவல் நீங்கள் என்று அறிய மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி, ஐயா!

   Delete

  6. என் அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்களை உங்களுக்குத்தெரியும் என அறியும்போது மிக்க மகிழ்ச்சி.

   Delete
 3. கஸ்தூரி ரங்கன் அவர்களை
  ஆசிரியராகக் கொண்டு டெல்லியில் இருந்து
  வெளிவந்து கொண்டிருந்த காலத்திலிருந்து
  தொடர்ந்து கணையாழியின்
  வாசகராக இருந்த காரணத்தால்
  அசோகமித்திரன் அவர்களின் படைப்புகள்
  நிறையப் படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது

  சுந்தரராமசாமி அவர்களின்
  ஜே. ஜெ சில குறிப்புகளும்,
  புளியமரத்தின் கதையும் இன்றும் என்
  புத்தக அலமாரிப் பொக்கிசங்களாகவே
  பராமரித்து வருகிறேன்

  தமிழ் நாவலுலகின் ஜாம்பவான்கள் இருவரை
  ஒன்றாக சுருக்கமாக எனினும் அருமையாக
  அறிமுகம் செய்திருப்பது மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Ramani S April 5, 2016 at 6:23 PM

   வாங்கோ Mr RAMANI Sir, வணக்கம்.

   //கஸ்தூரி ரங்கன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு டெல்லியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த காலத்திலிருந்து தொடர்ந்து கணையாழியின் வாசகராக இருந்த காரணத்தால் அசோகமித்திரன் அவர்களின் படைப்புகள் நிறையப் படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.//

   அப்படியா! மிக்க மகிழ்ச்சி, சார்.

   //சுந்தரராமசாமி அவர்களின் ஜே. ஜே. சில குறிப்புகளும், புளியமரத்தின் கதையும் இன்றும் என் புத்தக அலமாரிப் பொக்கிசங்களாகவே பராமரித்து வருகிறேன்.//

   ஆஹா, இதைக்கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது, சார்.

   //தமிழ் நாவலுலகின் ஜாம்பவான்கள் இருவரை ஒன்றாக சுருக்கமாக எனினும் அருமையாக அறிமுகம் செய்திருப்பது மனம் கவர்ந்தது. பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK

   Delete
 4. அறிமுகம் அருமை நண்பரே
  தொடருங்கள் நண்பரே ...

  ReplyDelete
  Replies
  1. Ajai Sunilkar Joseph April 5, 2016 at 7:44 PM

   //அறிமுகம் அருமை நண்பரே, தொடருங்கள் நண்பரே ...//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 5. அசோகமித்திரன் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். இவர் கீதா சாம்பசிவம் அவர்களின் சித்தப்பா என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். சுந்தர ராமசாமி அவர்களின் புளியமரத்தின் கதையை ரசித்து வாசித்தேன். அது பற்றித் தனியாகவே ஒரு பதிவு என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன். இருவருமே தமிழிலக்கியத்தில் மிக முக்கிய பங்களிப்பு செய்தவர்கள். இருவரைப் பற்றியும் சுவையாக அறிமுகம் செய்திருப்பதற்குப் பாராட்டுக்கள். மிகவும் நன்றி கோபு சார்!

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி April 5, 2016 at 8:11 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அசோகமித்திரன் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். இவர் கீதா சாம்பசிவம் அவர்களின் சித்தப்பா என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன்.//

   சந்தோஷம். சமீபத்தில் கொஞ்சம் நாட்கள் முன்புதான் நம் ஜீவி சார் மூலம் நானும் இதனைத் தெரிந்துகொண்டேன். அதனையே நம் ஸ்ரீராமும் இங்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

   //சுந்தர ராமசாமி அவர்களின் புளியமரத்தின் கதையை ரசித்து வாசித்தேன். அது பற்றித் தனியாகவே ஒரு பதிவு என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.//

   அதைத்தான் தேடிப்பிடித்து இப்போது நான் வாசித்து மகிழ்ந்தேன். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   தங்கள் பாணியில் மிகப்பிரமாதமாகவே அதனை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். வல்லமையில் வெளிவந்துள்ளது கேட்க மேலும் மகிழ்ச்சியடைந்தேன்.

   இங்கு வருகை தரும் அனைவருமே அவசியம் வாசிக்க வேண்டியதோர் பதிவு தங்களுடையது. அதற்கான இணைப்பு:

   http://unjal.blogspot.com/2014/02/blog-post_13.html

   oooooooooooooooooo

   ரஸிக்கவும் சிந்திக்கவும் வைத்த வரிகள்:
   =========================================

   சொல்லப்போனால் புளியமரம் என்ன
   செய்தது?

   சும்மா நின்று கொண்டு தானே இருந்தது?

   மனிதனின் அலகிலா விளையாடல்களுக்கு மெளன
   சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது
   பங்கெடுத்துக்கொண்டதா?

   பட்டுக்கொண்டதா?

   மனித ஜாதிக்கு அது இழைத்த கொடுமை தான் என்ன?

   யாரைப் பார்த்துக் கை நீட்டிற்று?

   யாரை நோக்கிப் பல்லிளித்தது?

   யாருடனாவது சேர்ந்து கொண்டு, யாருக்கேனும்
   குழி பறித்ததா?

   oooooooooooooooooo

   //இருவருமே தமிழிலக்கியத்தில் மிக முக்கிய பங்களிப்பு செய்தவர்கள். இருவரைப் பற்றியும் சுவையாக அறிமுகம் செய்திருப்பதற்குப் பாராட்டுக்கள். மிகவும் நன்றி கோபு சார்!//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், சிறப்பான விரிவான பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் மேடம்.

   நன்றியுடன் கோபு

   Delete
  2. புளிய மரத்தின் கதை பற்றிய என் பதிவின் இணைப்பைத் தேடிப்பிடித்து வாசித்து அது பற்றி இங்குக் குறிப்பிட்டுள்ளமைக்கு மிகவும் நன்றி கோபு சார்! திரு துளசி& கீதா அவர்களின் பின்னூட்டப் பதிலிலும் என் பதிவு பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். மிகப் பிரமாதமான அறிமுகம் என்ற பாராட்டு கண்டு மகிழ்ந்தேன். மிகவும் நன்றி சார்!

   Delete
  3. ஞா. கலையரசி April 6, 2016 at 8:35 PM

   வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

   //புளிய மரத்தின் கதை பற்றிய என் பதிவின் இணைப்பைத் தேடிப்பிடித்து வாசித்து அது பற்றி இங்குக் குறிப்பிட்டுள்ளமைக்கு மிகவும் நன்றி கோபு சார்! திரு துளசி & கீதா அவர்களின் பின்னூட்டப் பதிலிலும் என் பதிவு பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். மிகப் பிரமாதமான அறிமுகம் என்ற பாராட்டு கண்டு மகிழ்ந்தேன். மிகவும் நன்றி சார்!//

   சிறுவயதில் நான் மற்ற நண்பர்களுடன் புளியங்காய் அடித்து சாப்பிட்டது உண்டு. அதன் மிதமான புளிப்பும் தித்திப்பும் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதே சுவையைத் தங்களின் ‘புளிய மரத்தின் கதை’ அறிமுகப் பதிவிலும் என்னால் நன்கு ரஸித்து ருஸித்து மகிழ முடிந்தது.

   இதை விட யாரால் அதனை இவ்வளவு அழகாகச் சிறப்பித்து எழுதிவிட முடியும் என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

   ’யாம் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகமும்’ என்ற நோக்கத்தில் மட்டுமே தங்கள் பதிவின் இணைப்பினை மற்றவர்களுக்கும் இங்கு தெரிவித்து ’பிரமாதமானதோர் அறிமுகம்’ என என் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டேன்.

   தங்களுக்கும் இதில் மகிழ்ச்சி எனக்கேட்க என் மகிழ்ச்சி மேலும் பலமடங்கு இப்போது அதிகரித்துவிட்டது. தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள், மேடம்.

   நன்றியுடன் கோபு

   Delete
 6. இந்த இருவரைப் பற்றியும் நிறைய அறிந்திருக்கிறேன். ஆனால், அவர்களின் எழுத்துக்களை அரிதாகவே வாசித்திருக்கிறேன். தங்களின் தொடர் பதிவு மீண்டும் அவர்களை வாசிக்க தூண்டுகிறது.
  நானும் தொடர முயற்சிக்கிறேன்.
  பகிர்வுக்கு நன்றி அய்யா!

  ReplyDelete
  Replies
  1. S.P.SENTHIL KUMAR April 5, 2016 at 8:24 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இந்த இருவரைப் பற்றியும் நிறைய அறிந்திருக்கிறேன். ஆனால், அவர்களின் எழுத்துக்களை அரிதாகவே வாசித்திருக்கிறேன். தங்களின் தொடர் பதிவு மீண்டும் அவர்களை வாசிக்க தூண்டுகிறது.
   நானும் தொடர முயற்சிக்கிறேன்.பகிர்வுக்கு நன்றி அய்யா!//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அரிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 7. அசோகமித்திரன் கதைகள் படித்து இருக்கிறேன். இவரது எழுத்துநடை என்பது, ஆறு நிறைய தண்ணீர் கரை ததும்ப அமைதியாக செல்வது போன்றது. சுந்தரராமசாமியின் ‘புளியமரம்’ புத்தக அலமாரியில் அப்படியே இருக்கிறது. எடுத்து படிக்க நேரம் இல்லை.

  மேடம் கீதா சாம்பசிவம் அவர்களின் சித்தப்பாதான் அசோகமித்திரன் என்ற மகிழ்ச்சியான தகவலைத் தந்த ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ April 5, 2016 at 11:00 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //அசோகமித்திரன் கதைகள் படித்து இருக்கிறேன். இவரது எழுத்துநடை என்பது, ஆறு நிறைய தண்ணீர் கரை ததும்ப அமைதியாக செல்வது போன்றது.//

   ஆஹா ! அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

   //சுந்தரராமசாமியின் ‘புளியமரம்’ புத்தக அலமாரியில் அப்படியே இருக்கிறது.//

   புளியமரமே கொள்ளும் அளவுக்கு அவ்வளவு பெரிய அலமாரி வைத்துள்ளீர்களா? :)

   //எடுத்து படிக்க நேரம் இல்லை.//

   ஓஹோ! நேரம் கிடைக்கும்போது மெதுவாகப் படியுங்கோ, சார்.

   //மேடம் கீதா சாம்பசிவம் அவர்களின் சித்தப்பாதான் அசோகமித்திரன் என்ற மகிழ்ச்சியான தகவலைத் தந்த ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.//

   தங்களுடன் சேர்த்து என் நன்றிகளும் ஸ்ரீராமுக்கு.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   Delete
  2. ஹா ஹா ஹா! புளிய மரம் அப்படியே இருக்கிறது என்பதற்கு, புளியமரமே கொள்ளும் அளவுக்கு அவ்வளவு பெரிய அலமாரி வைத்துள்ளீர்களா? :) என்ற கேள்வியைப் படித்து ரசித்துச் சிரித்தேன். நல்ல நகைச்சுவை!

   Delete
  3. ஞா. கலையரசி April 6, 2016 at 8:32 PM

   வாங்கோ......

   //ஹா ஹா ஹா! ’புளிய மரம்’ புத்தக அலமாரியில் அப்படியே இருக்கிறது என்பதற்கு, புளியமரமே கொள்ளும் அளவுக்கு அவ்வளவு பெரிய அலமாரி வைத்துள்ளீர்களா? :) என்ற கேள்வியைப் படித்து ரசித்துச் சிரித்தேன். நல்ல நகைச்சுவை! //

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். - கோபு :)

   Delete
 8. இருவரது அறிமுகங்களுக்கு மிக்க நன்றி சார். அசோகமித்திரன் சுரா அறிவோம். இனிதான் வாசிக்க வேண்டும்.

  கீதா: இதில் சுந்தரம் ராமசாமி அவர்கள் எங்கள் ஊர்....நாகர்கோவில்..அவர் கதைகள் புளியமரத்தின் கதை பற்றி ஆவி குறும்படத்தில் கூட சொல்லியிருப்பார் ஆனால் இன்னும் வாசிக்கவில்லை...

  அசோகமித்திரன் அவர்கள் கீதா சாம்பசிவத்தின் சித்தப்பா என்பது அறிந்தோம். மிக்க மகிழ்ச்சி.

  தொடர்கின்றோம்...

  ReplyDelete
  Replies
  1. Thulasidharan V Thillaiakathu April 6, 2016 at 5:12 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இருவரது அறிமுகங்களுக்கு மிக்க நன்றி சார். அசோகமித்திரன் சுரா அறிவோம். இனிதான் வாசிக்க வேண்டும்.//

   மகிழ்ச்சி. அப்படியா! மிகவும் நல்லது.

   //கீதா: இதில் சுந்தரம் ராமசாமி அவர்கள் எங்கள் ஊர்.... நாகர்கோவில்..//

   ஆஹா, வாங்கோ மேடம், வணக்கம். இதனைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் தங்கள் ஊர்க்காரர் என்பதில் தங்கள் ஊருக்கும் ஒரு தனிப்பெருமை. அந்த ஊர்க்காரரான தங்களுக்கும் ஓர் பெருமைதான். சந்தேகமே இல்லை.

   எனக்கும் உங்கள் நாகர்கோவிலுக்கும் கூட கொஞ்சம் சம்பந்தம் உண்டு. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ’மனம் மலர்ந்திட’ என்ற பெயரில் ஓர் சிற்றிதழ் அதாவது மாத இதழ், உங்கள் ஊரிலிருந்து வெளியாகி வந்தது. அதன் பின், ஒருசில நிர்வாகக் காரணங்களால் அதன் பெயர் மட்டும் ‘மனம் ஒளிர்ந்திட’ என மாற்றப்பட்டது. I.A.S. படித்த ஒருவர் அதன் ஆசிரியராக இருந்தார்.

   அதில் 2006 to 2008 இல் சுமார் 30 மாதங்களுக்கு மேல் நான் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தேன். பிரபல எழுத்தாளர்களும் பதிவர்களுமான திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களும், திரு. கே.பி.ஜனா அவர்களும்கூட அதில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு இருந்தார்கள்.

   மிகத்தரம் வாய்ந்த அந்த மாத இதழ் பிறகு ஏனோ தொடர்ந்து நடத்த இயலாமல் நின்று போனது.

   அதில் என் எழுத்துக்கள் இடம் பெற்றுள்ள இதழ்களை இதோ இந்த என் பதிவினில் கீழிருந்து மூன்றாவது படத்தில் காட்சிப்படுத்தியுள்ளேன். முடிந்தால் போய்ப் பாருங்கோ:

   http://gopu1949.blogspot.in/2011/07/2.html

   //அவர் கதைகள் புளியமரத்தின் கதை பற்றி ஆவி குறும்படத்தில் கூட சொல்லியிருப்பார் ஆனால் இன்னும் வாசிக்கவில்லை...//

   சந்தோஷம். வாய்ப்புக்கிடைக்கும்போது வாசியுங்கள். அந்தக்கதை பற்றி நம் ஊஞ்சல் வலைப்பதிவர் திருமதி. கலையரசி மேடம் அவர்களும் மிகவும் சிலாகித்து ஓர் தனிப்பதிவே மிக அழகாக எழுதியுள்ளார்கள். முடிந்தால் அதையும் போய் வாசித்துப்பாருங்கள். அதன் இணைப்பு மேலே ஓரிடத்தில் அவர்களுக்கான என் பதிலில் கொடுத்துள்ளேன்.

   //அசோகமித்திரன் அவர்கள் கீதா சாம்பசிவத்தின் சித்தப்பா என்பது அறிந்தோம். மிக்க மகிழ்ச்சி. தொடர்கின்றோம்...//

   மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK

   Delete
  2. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு சார். மனம் மலர்ந்திட என்றும் மனம் ஒளிர்ந்திட என்றும் மாற்றப்பட்டு வெளியான தரம் வாய்ந்த பத்திரிகை எங்கள் ஊரிலிருந்து என்பது..அதில் நீங்கள் எழுதியிருப்பது இன்னும் மகிழ்வாக இருக்கிறது. நிச்சயமாக வாசிக்கின்றேன். கலையரசி அவர்களின் பதிவையும் வாசிக்கின்றேன்....புளிய மரத்தின் கதை பற்றி...

   மிக்க நன்றி சார்..

   Delete
  3. Thulasidharan V Thillaiakathu
   April 9, 2016 at 11:31 PM

   வாங்கோ சார், வணக்கம்.

   //மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு சார். மனம் மலர்ந்திட என்றும் மனம் ஒளிர்ந்திட என்றும் மாற்றப்பட்டு வெளியான தரம் வாய்ந்த பத்திரிகை எங்கள் ஊரிலிருந்து என்பது.. அதில் நீங்கள் எழுதியிருப்பது இன்னும் மகிழ்வாக இருக்கிறது. நிச்சயமாக வாசிக்கின்றேன்.//

   இப்போது அந்தப்பத்திரிகை வெளிவருவதாகத் தெரியவில்லை. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பழைய பதிவுகள்கூட இப்போது கிடைக்குமோ என்னவோ அதுவும் தெரியவில்லை.

   //கலையரசி அவர்களின் பதிவையும் வாசிக்கின்றேன்.... புளிய மரத்தின் கதை பற்றி... மிக்க நன்றி சார்..//

   அதை அவசியமாகப் படியுங்கோ. நல்லா எழுதி இருக்காங்க.

   http://unjal.blogspot.com/2014/02/blog-post_13.html

   அன்புடன் VGK

   Delete
 9. அசோகமித்திரன்,சு.ரா அவர்களின் கதைகளை படித்த நினைவு...

  நல்ல அறிமுகங்கள் ஐயா

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. R.Umayal Gayathri April 6, 2016 at 8:37 AM

   //அசோகமித்திரன், சு.ரா அவர்களின் கதைகளை படித்த நினைவு... நல்ல அறிமுகங்கள் ஐயா. நன்றி.//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.-VGK

   Delete
 10. அசோகமித்திரன் அவர்களின் சிறுகதைகளை விகடன் என்று நினைக்கிறேன் படித்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் அவர் பழைய மெட்ராஸ் பற்றி எழுதிய நூல் இருந்தது. கொஞ்சம் படித்தேன். மீண்டும் தேடி படித்துச் சொல்கிறேன்.

  சுந்தரராமசாமி அவர்களின் புளியமரத்தின் கதை படித்து இருக்கிறேன்.


  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு April 6, 2016 at 9:53 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அசோகமித்திரன் அவர்களின் சிறுகதைகளை விகடன் என்று நினைக்கிறேன் படித்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் அவர் பழைய மெட்ராஸ் பற்றி எழுதிய நூல் இருந்தது. கொஞ்சம் படித்தேன். மீண்டும் தேடி படித்துச் சொல்கிறேன்.

   சுந்தரராமசாமி அவர்களின் புளியமரத்தின் கதை படித்து இருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி, மேடம். - VGK

   Delete
 11. இன்றும் பிரபல எழுத்தாளர்கள் இருவரை தெரிந்து கொண்டோம். பதிவில் தெரிந்து கொண்டதை விட பின்னூட்டங்களில் கூடுதலாக தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. இதுபோல பழய எழுத்தாளர்களைத் உங்கள் பதிவுகள் மூலமாக தெரிந்து கொள்ளும்போது இன்னும் இன்னும் நிறைய எழுத்தாளர்களைத்தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாகிறது. போதும் என்றே தோன்றுவதில்லை......

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... April 6, 2016 at 11:13 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றும் பிரபல எழுத்தாளர்கள் இருவரை தெரிந்து கொண்டோம்.//

   நல்லது. மிக்க மகிழ்ச்சி.

   //பதிவில் தெரிந்து கொண்டதை விட பின்னூட்டங்களில் கூடுதலாக தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.//

   இதுதான் என் வலைப்பதிவுகளின் தனி சுவாரஸ்யமே என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

   //இதுபோல பழைய எழுத்தாளர்களை உங்கள் பதிவுகள் மூலமாக தெரிந்து கொள்ளும்போது இன்னும் இன்னும் நிறைய எழுத்தாளர்களைத்தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாகிறது. போதும் என்றே தோன்றுவதில்லை...//

   ஆஹா, இதுபோல விசித்திரமான ஆர்வமுள்ளவர்களில் ஆயிரத்தில் ஒருவர் நீங்கள். :)

   தங்களின் அன்பான வருகைக்கும் ஆர்வத்துடன் கூடிய விசித்திரமான + ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 12. இன்றய பிரபல எழுத்தூளர்கள் திரு சுந்தர ராமசாமி, திரு அசோகமித்திரன் அவர்களை கேள்வி பட்டெருக்கிறேன். கதைகள் படித்ததில்லை. அவர்களுக்கு வாழ்த்துகள்.....

  ReplyDelete
  Replies
  1. srini vasan April 6, 2016 at 11:18 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றைய பிரபல எழுத்தூளர்கள் திரு சுந்தர ராமசாமி, திரு அசோகமித்திரன் அவர்களை கேள்வி பட்டிருக்கிறேன்.//

   கேள்விப்பட்டுள்ளதே மிகப்பெரிய விஷயம்தான்.

   //கதைகள் படித்ததில்லை.//

   அதனால் என்ன? பரவாயில்லை. எல்லோராலும் எல்லாவற்றையும் எப்படிப் படித்திருக்க முடியும்?

   //அவர்களுக்கு வாழ்த்துகள்.....//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   Delete
 13. நீங்கள் அறிமுகப் படுத்தி வரும் பிரபல எழுத்தாளர்களை பற்றியும் அவர்களின் எழுத்துக்களின் சில உதாரணங்களையும் படிக்கும் போதே கதையை முழுவதுமாக படிக்க தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... April 6, 2016 at 11:23 AM

   வாங்கோ, வணக்கம்.

   //நீங்கள் அறிமுகப் படுத்தி வரும் பிரபல எழுத்தாளர்களை பற்றியும் அவர்களின் எழுத்துக்களின் சில உதாரணங்களையும் படிக்கும் போதே கதையை முழுவதுமாக படிக்க தோன்றுகிறது.//

   அச்சா! பஹூத் அச்சா!! மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி - VGK

   Delete
 14. எவ்வளவு பிரபலமான சிறப்பான எழுத்தாளர்களை எல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது.... எனக்கெல்லாம் ரசிக்க மட்டுமே தெரிகிறது... எழுதும் அளவுக்கு எழுத்து திறமைலாம் கிடையாது...... அதனாலதானே பாட்டுகளா போட்டு........ நானும் வலைப்பதிவுல இருக்கேனு சமாளிச்சுகிட்டு இருக்கேன்.......

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. April 6, 2016 at 11:33 AM

   வாங்கோ, வணக்கம்.

   //எவ்வளவு பிரபலமான சிறப்பான எழுத்தாளர்களை எல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது.... //

   மிக்க மகிழ்ச்சி.

   //எனக்கெல்லாம் ரசிக்க மட்டுமே தெரிகிறது....//

   ஆஹா, ரசிக்கத் தெரிந்தவர்களே, மக்களாக (மனிதர்களாக) இருக்க முடியும். ரஸிக்கத்தெரியாதவர்களை மாக்கள் (விலங்குகள்) எனச் சொல்லுவார்கள்.

   //எழுதும் அளவுக்கு எழுத்து திறமையெல்லாம் கிடையாது......//

   யாருமே பிறந்தவுடனேயே எழுத ஆரம்பித்து விடுவது இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்திறமை ஒளிந்துகொண்டிருக்கும். அது என்னவென்று மிகச்சரியாகக் கண்டுபிடித்து, அதில் அவரவர்கள் அவரவர்களை ஈடுபடுத்திக்கொண்டு, அதில் A to Z அனைத்தையும், அறிந்து, தெரிந்து, மென்மேலும் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் சிறப்பிடம் பெறமுடியும்.

   பொதுவாக எழுத்தாளர்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவம் முதலில் இருக்க வேண்டும் எனச் சொல்லுவார்கள். நான் ஏனோ இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதே இல்லை.

   நான் யாரையும் வாசிக்காமலேயே, என் போக்கில் (சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற ரீதியில்) எழுத ஆரம்பித்துவிட்டவன் ... அதனால் தான் என்னால் அதிகமாக சோபிக்க முடியவில்லையோ என்னவோ. சரி அதுபோகட்டும்.

   //அதனாலதானே பாட்டுகளா போட்டு........ நானும் வலைப்பதிவுல இருக்கேனு சமாளிச்சுகிட்டு இருக்கேன்.......//

   அதனால் என்ன? சூப்பரான பாடல்களாகவே பதிவு செய்து வருகிறீர்கள். In fact பல்வேறு மொழிப் பாட்டுக்களை, நான் ரஸிக்க ஆரம்பித்துள்ளதே தங்களின் வலைப்பதிவுப்பக்கம் வந்த பிறகு மட்டுமே. அங்கு வந்தாலே என் மனம் அப்படியே இசையில் லயித்துப் போய் விடுகிறது.

   [இதை என் மனைவி கேட்டால் சிரிப்பாள் ... நம்பவே மாட்டாள். ஏனெனில் அவளுக்கு இசையில் நல்ல ஈடுபாடு உண்டு. அழகாக இனிமையாகப் பாடுவாள் என்று பிற பெண்கள் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன் :) http://gopu1949.blogspot.in/2013/10/62.html இந்த என் பதிவினில் கீழிருந்து மேலாக உள்ள ஐந்தாம் படத்தினைப்பாருங்கோ - தங்களுக்கே தெரியவரும்.]

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

   Delete
 15. படிப்பு அனுபவம் என்பது சொல்லிவராது. முழு அர்ப்பணிப்புடன் படிக்கும்போதுதான் அவங்க ஒரு கதைமூலமா என்ன சொல்ல வராங்கனு புரிஞ்சுக்க முடியும்..புதுசு புதுசா படிச்சு தெரிந்து கொள்ள ஆர்வமும் ஈடுபாடும் இருக்கணும்...இதுபோல போன தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துக்களில் வர்ணனைகள் மிக அதிகமா இருந்து பொறுமையை சோதிக்குது.....(ஸாரி).......

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் April 6, 2016 at 1:00 PM

   வாங்கோ, வணக்கம்.

   //படிப்பு அனுபவம் என்பது சொல்லிவராது. முழு அர்ப்பணிப்புடன் படிக்கும்போதுதான் அவங்க ஒரு கதைமூலமா என்ன சொல்ல வராங்கனு புரிஞ்சுக்க முடியும்...//

   தாங்கள் சொல்லியுள்ளது மிகவும் கரெக்ட்.

   //புதுசு புதுசா படிச்சு தெரிந்து கொள்ள ஆர்வமும் ஈடுபாடும் இருக்கணும்...//

   ஆர்வம் + ஈடுபாடு .... இதெல்லாம் எல்லோருக்கும் இருக்காது. இருந்துதான் ஆகணும் என்ற அவசியமும் ஏதும் இல்லை.

   இன்று இந்த அவசர உலகினில், பணம் சம்பாதிக்க வேண்டி, சம்பாதித்த பணத்தைக் காப்பாற்றவோ மேலும் பெருக்கிக்கொள்ளவோ வேண்டி, அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள் + ஆயிரம் கவலைகள் உள்ளன என்பதே ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மையாகும். விதிவிலக்காக, வேறு முக்கியமான வேலைகளே எதுவும் இல்லாத, பொழுதுபோகாமல் திண்டாடும் சில கிழம்-கட்டைகளும் இருக்கலாம். .

   //இதுபோல போன தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துக்களில் வர்ணனைகள் மிக அதிகமா இருந்து பொறுமையை சோதிக்குது.....(ஸாரி).......//

   ஸாரியெல்லாம் சொல்லவே வேண்டாம். நீங்கள் சொல்வது என்னாலும் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் பிரபல எழுத்தாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்போது உயிருடனே இல்லை. அவர்கள் வாழ்ந்த தலைமுறையே வேறு. அவர்கள் பார்த்த உலகமே வேறு. அவர்கள் பார்த்த பார்வைகளே வேறு. அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைகளே வேறு. அவர்களின் அனுபங்களே நம்மிலிருந்து முற்றிலும் வேறு பட்டவைகளாகும். இன்றைய இளம் தலைமுறையினரால் அவற்றைப் பொறுமையாக வாசிப்பதோ, புரிந்துகொள்வதோ, அவர்களின் எழுத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்வதோ நினைத்துப்பார்க்க முடியாத விஷயங்களாகும்.

   உதாரணமாகச் சொல்வதென்றால் ......

   இன்று 20 வயது ஆகியுள்ளவர் 20% மட்டுமே புரிந்து அவற்றை ரஸித்து மகிழ முடியும்.

   இன்று 40 வயது ஆகியுள்ளவர் 40% மட்டுமே புரிந்து அவற்றை ரஸித்து மகிழ முடியும்.

   இன்று 50 வயது ஆகியுள்ளவர் 50% மட்டுமே புரிந்து அவற்றை ரஸித்து மகிழ முடியும்.

   இன்று 60 வயது ஆகியுள்ளவர் 60% மட்டுமே புரிந்து அவற்றை ரஸித்து மகிழ முடியும்.

   இன்று 80 வயது ஆகியுள்ளவர் 80% மட்டுமே புரிந்து அவற்றை ரஸித்து மகிழ முடியும்.

   இன்று 90 வயது ஆகியுள்ளவர் 90% மட்டுமே புரிந்து அவற்றை ரஸித்து மகிழ முடியும்.

   இன்று 100 வயது ஆகியுள்ளவர் மட்டுமே 100% புரிந்து அவற்றை ரஸித்து மகிழ முடியும். அதுபோல ஒருவர் 100 வயதுக்கு மேற்பட்டு இப்போது இருப்பதோ, இருந்தாலும் அவரால் இவற்றைப் படிக்க முடிவதோ, படித்தாலும் அவர் மூளையில் இவைகள் பதிவாவதோ நிச்சயமாகச் சொல்ல முடியாத விஷயங்களாகும். :)

   இப்போது கலியுலகம் நடப்பதால், SMS, Whatsapp, Face Book என ஏதேதோ நடைமுறைக்கு வந்து, எதையும் மிகச் சுருக்கமாகச் சொல்லி விளங்க வைக்கவே முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் குறுஞ்செய்திகளைப் பார்க்கவோ படிக்கவோகூட நமக்கு, நேரமும் பொறுமையும் இல்லாமல் உள்ளது என்பதே உண்மை.

   இந்த என் பதிவுகளில் சொல்லப்பட்டு வரும் இவையெல்லாம் ஏதோ பழைய பஞ்சாங்கங்கள் என்றே பலராலும் இன்று நினைக்கத்தோன்றுவது மிகவும் இயற்கை + யதார்த்தம் மட்டுமே என்பதை நானும் நன்கு உணர்ந்துள்ளேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான மனம் திறந்த உண்மையான கருத்துக்களுக்கும், என்னைக் கொஞ்சம் இதுசம்பந்தமாக மனம் திறந்து பேச வைத்துள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

   Delete
 16. குருஜி நானும் வந்துபிட்டன்லா. இன்னக்கு என்னபோட்டோ படம் போட்டீகன்னு பாத்துகிட வந்தன். சூப்பராமீனுக நீச்சலடிதிகிட்டுசந்தோசமா ஓடுது. அது மீனுகளா? திமிங்கலமா??// டவுட்டூஊஊ எனிக்கு கோட இப்பூடிலா தண்ணிக்குள்ளார வுளுந்து நீச்சலடிக்கனும்போல கீது........

  ReplyDelete
  Replies
  1. mru April 7, 2016 at 11:08 AM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //குருஜி நானும் வந்துபிட்டன்லா.//

   ஆஹா, சந்தோஷம்மா.

   //இன்னக்கு என்ன போட்டோ படம் போட்டீகன்னு பாத்துகிட வந்தன்.//

   அதானே பார்த்தேன்.

   //சூப்பராமீனுக நீச்சலடிதிகிட்டுசந்தோசமா ஓடுது. அது மீனுகளா? திமிங்கலமா?? டவுட்டூஊஊ//

   மீன்களிலேயே பெரியதாக இருக்கும் போலிருக்கு. சுறா மீன்கள் என்பார்களே, அந்த வகையைச் சேர்ந்தனவாக இருக்குமோ என்னவோ? ஒரு சுத்தமான ISI முத்திரை குத்தின ஐயரைப்பார்த்து, அமாவாசையும் அதுவுமா இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், அவரால் எப்படி பதில் சொல்ல முடியும்? ஏதோ இந்த அசையும் படம் பார்க்க அழகா இருந்துச்சு. அதனால் நானும் போட்டுள்ளேன். ஏதோ படம் பார்த்தோமாம், ரசித்தோமாம் என்று போய்க்கிட்டே இருங்கோ முருகு.

   //எனிக்கு கோட இப்பூடிலா தண்ணிக்குள்ளார வுளுந்து நீச்சலடிக்கனும்போல கீது........//

   செய்யுங்கோ. நிக்காஹ் முடிந்து உங்கட ஆசாமியையும் கூடக்கூட்டிக்கொண்டுபோய் இருவருமாகச் சேர்ந்து நீச்சலடியுங்கோ. அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   அன்புடன் குருஜி கோபு

   Delete
 17. //அவரால் விரிவின் முழுமையைச் சித்தரிக்க முடியாது. விரிவை நுண்மைக்குள் அடக்கித்தான் தர முடியும்

  ஏற்க முடியவில்லை. தண்ணீர் படித்தவர்கள் அசோகமித்திரனின் விரிவுக்கும் அடக்கத்துக்குமான அனாயாசத் தாவல்களை உணரலாம்.

  என்னமோ தான் மட்டுமே உலக எழுத்தின் உச்சியென்ற எண்ணத்தில் ஜெயமோகன் போன்றோர் அளிக்கும் எழுத்தாள விமரிசனங்கள் சில நேரம் சிரிக்க வைக்கின்றன. எழுத்தை விமரிசித்துச் சொல்லட்டும்.. எழுத்தாளரால் இது முடியும் இது முடியாது என்று சொல்ல இவர் போன்றோருக்கு என்ன அருகதை இருக்கிறதோ தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை April 8, 2016 at 11:50 AM

   **அவரால் விரிவின் முழுமையைச் சித்தரிக்க முடியாது. விரிவை நுண்மைக்குள் அடக்கித்தான் தர முடியும்**

   //ஏற்க முடியவில்லை. தண்ணீர் படித்தவர்கள் அசோகமித்திரனின் விரிவுக்கும் அடக்கத்துக்குமான அனாயாசத் தாவல்களை உணரலாம்.

   என்னமோ தான் மட்டுமே உலக எழுத்தின் உச்சியென்ற எண்ணத்தில் ஜெயமோகன் போன்றோர் அளிக்கும் எழுத்தாள விமரிசனங்கள் சில நேரம் சிரிக்க வைக்கின்றன. எழுத்தை விமரிசித்துச் சொல்லட்டும்.. எழுத்தாளரால் இது முடியும் இது முடியாது என்று சொல்ல இவர் போன்றோருக்கு என்ன அருகதை இருக்கிறதோ தெரியவில்லை.//

   வாங்கோ சார், வணக்கம் சார். இப்போத்தான் தங்களைக் காணுமே என எனக்குள் நினைத்தேன்.

   பொதுவாக தாங்கள் வந்தால் மட்டுமே விவாதங்கள் சூடு பிடிக்கின்றன.

   தங்களின் அன்பான வருகைக்கும், அனல் பறக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   தங்களின் குறிப்பிட்ட கேள்விக்கான பதிலோ கருத்தோ சொல்ல எனக்கும் அருகதை இல்லை, சார்.

   அன்புடன் VGK

   Delete
 18. புளியமரம் படித்திருந்தாலும் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை April 8, 2016 at 11:58 AM

   //புளியமரம் படித்திருந்தாலும் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது.//

   சரி, சார். அதுவும் நல்லதுதான் சார். புளியமரத்தில் ஏறாமல் விட்டீர்களே :) - VGK

   Delete
 19. Position as on 08.04.2016 - 2.00 PM

  என் இந்தத்தொடரின் முதல் பத்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துச் சிறப்பித்துள்ள

  திருமதிகள்:

  01) ஞா. கலையரசி அவர்கள்
  02) கோமதி அரசு அவர்கள்
  03) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்

  செல்விகள்:

  04) ’சிப்பிக்குள் முத்து’ அவர்கள்
  05) 'மின்னலு முருகு' மெஹ்ருன்னிஸா அவர்கள்
  06) ’ப்ராப்தம்’ அவர்கள்

  திருவாளர்கள்:

  07) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்
  08) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்
  09) S. ரமணி அவர்கள்
  10) வே. நடன சபாபதி அவர்கள்
  11) ஸ்ரத்தா... ஸபுரி அவர்கள்
  12) ஆல் இஸ் வெல் அவர்கள்
  13) ஸ்ரீனிவாஸன் அவர்கள்
  14) தி. தமிழ் இளங்கோ அவர்கள்
  15) அப்பாதுரை அவர்கள்

  ஆகியோருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதே போன்ற புள்ளி விபரங்கள் முதல் 15 பகுதிகள் முடிந்ததும் மீண்டும் அறிவிக்க நினைத்துள்ளேன்.

  அன்புடன் VGK

  oooooooooooooo

  பகுதி-1 முதல் பகுதி-5 வரைக்கான சென்ற பட்டியலில் இடம்பெற்று, இந்தப்பட்டியலில் மாயமாய் மறைந்து காணாமல் போய் உள்ளவர் : திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் மட்டுமே. VGK - 08.04.2016 - 14.00 Hrs.

  ReplyDelete
 20. அசோகமித்திரனின் ஒற்றன், சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை ஆகிய இரண்டு நூல்களும் சென்றமுறை இந்தியா சென்றிருந்தபோது என் மாமனாரால் எனக்குப் பரிசாக வழங்கப்பட்டன. இப்பதிவை வாசித்ததும் மீண்டும் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன். அற்புதமான எழுத்தாளர்கள் இருவரின் பல படைப்புகளை வாசித்து அனுபவித்தவள் என்பதில் எனக்கும் சற்றுப் பெருமிதம். கலையரசி அக்காவின் ஒரு புளிய மரத்தின் கதை விமர்சனப்பதிவை இங்கும் சுட்டி, பலரும் அறியத் தந்திருக்கும் தங்களுக்கு மிகவும் நன்றி. ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் தங்கள் பதிவு வாயிலாய் வாசிக்க வாசிக்க.. ஜீவி சாரின் புத்தகத்தை விரைவிலேயே முழுவதுமாய் வாசிக்கும் ஆவல் பிறக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி April 9, 2016 at 6:11 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அசோகமித்திரனின் ஒற்றன், சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை ஆகிய இரண்டு நூல்களும் சென்றமுறை இந்தியா சென்றிருந்தபோது என் மாமனாரால் எனக்குப் பரிசாக வழங்கப்பட்டன. இப்பதிவை வாசித்ததும் மீண்டும் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன். அற்புதமான எழுத்தாளர்கள் இருவரின் பல படைப்புகளை வாசித்து அனுபவித்தவள் என்பதில் எனக்கும் சற்றுப் பெருமிதம்.//

   தங்கள் மாமனார் ஓர் மூத்த எழுத்தாளர். தங்கள் நம்பர் - 1 நாத்தனார் எதிலுமே நம்பர் -1 எழுத்தாளர் + பதிவர். அது தவிர இன்னொரு நாத்தனாரும் ஓர் எழுத்தாளர் + பதிவர் என்பதை சமீபத்தில் அறிந்து கொண்டேன். தங்கள் பாட்டியோ வார இதழ்களில் வரும் தொடர் கதைகளை சேகரித்து புத்தகமாக்கி தாங்கள் குழந்தையாய் இருக்கும் போதே படிக்கக்கொடுத்து உதவியுள்ளவர். இன்று தாங்களோ வலையுலகிலேயே ஓர் தலைசிறந்த எழுத்தாளர் + பதிவர் + மொழிபெயர்ப்பு நூல் ஆசிரியர் etc., etc.,

   நம் திருச்சியைச் சேர்ந்த தங்களைப்பற்றி இதையெல்லாம் கேட்க + நினைக்க எனக்கே மிகவும் பெருமிதமாக உள்ளபோது தங்களுக்கு இருக்காதா என்ன?

   வாசிப்பு + எழுதுவதில் ஆசையுள்ள தன் மருமகளுக்குப் பிடித்தமான பரிசாகத் தங்கள் மாமனார் கொடுத்துள்ளார்கள்.

   {அதுவும் ஒற்றன் ஒருவன் மூலம் வேரோடு ஒரு மிகப்பெரிய புளியமரத்தையே ...... :) }

   அவரையும் நாம் பாராட்டத்தான் வேண்டும். எத்தனை பேருக்கு இதுபோன்ற எழுத்தாளர்கள் குடும்பம் அமையக்கூடும்! தங்களுக்கு மட்டும் அமைந்துள்ளது மிகவும் வியப்பாக உள்ளது. இனிய நல்வாழ்த்துகள்.

   //கலையரசி அக்காவின் ஒரு புளிய மரத்தின் கதை விமர்சனப்பதிவை இங்கும் சுட்டி, பலரும் அறியத் தந்திருக்கும் தங்களுக்கு மிகவும் நன்றி.//

   ஜீவி சாரின் நூலில் உள்ள புளியமரத்தை விட இன்னும் மிகவும் ருசிமிக்க புளியங்காய்கள் ஏராளமாகவும் தாராளமாகவும் காய்த்துத் தொங்குகின்றன அந்த அவர்களின் குறிப்பிட்ட பதிவினில். அதனால் அதனையும் அனைவரும் அறியுமாறு சுட்டிக்காட்டியுள்ளேன்.

   //ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் தங்கள் பதிவு வாயிலாய் வாசிக்க வாசிக்க.. ஜீவி சாரின் புத்தகத்தை விரைவிலேயே முழுவதுமாய் வாசிக்கும் ஆவல் பிறக்கிறது.//

   மிகவும் நல்லது. தங்களின் ஆவல் விரைவில் பூர்த்தியாகும்.

   தங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான நல்ல பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   Delete
  2. “வாசிப்பு + எழுதுவதில் ஆசையுள்ள தன் மருமகளுக்குப் பிடித்தமான பரிசாகத் தங்கள் மாமனார் கொடுத்துள்ளார்கள்.”
   உண்மைதான் சார்! மாமனாரின் அறிவுச் சொத்தில் பங்குப் போட மிகவும் தகுதியான மருமகள் கீதாமதிவாணன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே!
   “{அதுவும் ஒற்றன் ஒருவன் மூலம் வேரோடு ஒரு மிகப்பெரிய புளியமரத்தையே ...... :) }”
   என்ற தங்கள் கமெண்டை மிகவும் ரசித்தேன்.
   எங்கள் குடும்பத்தை மிகவும் பாராட்டித் தாங்கள் சொல்லியிருக்கும் இந்த வார்த்தைகள் என்னை மகிழ்ச்சியடையச் செய்கின்றன.
   மிகவும் நன்றி கோபு சார்!

   Delete
  3. ஞா. கலையரசி April 12, 2016 at 8:38 PM

   //உண்மைதான் சார்! மாமனாரின் அறிவுச் சொத்தில் பங்குப் போட மிகவும் தகுதியான மருமகள் கீதாமதிவாணன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே!

   “{அதுவும் ஒற்றன் ஒருவன் மூலம் வேரோடு ஒரு மிகப்பெரிய புளியமரத்தையே ...... :) }”
   என்ற தங்கள் கமெண்டை மிகவும் ரசித்தேன்.

   எங்கள் குடும்பத்தை மிகவும் பாராட்டித் தாங்கள் சொல்லியிருக்கும் இந்த வார்த்தைகள் என்னை மகிழ்ச்சியடையச் செய்கின்றன.

   மிகவும் நன்றி கோபு சார்!//

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் - கோபு :)

   Delete
 21. சுந்தர ராமசாமியும் சரி, சித்தப்பாவும்(அசோகமித்திரன்) சரி எழுத்தாளர்களுக்கான எழுத்தாளர்கள் என்பார்கள். இதில் சித்தப்பாவின் எழுத்தைப் படித்துப் புரிந்து கொள்ளக் கஷ்டம் ஏதும் இருக்காது. சுந்தரராமசாமியைப் புரிந்து கொள்வது கடினமே! ஆகையால் நானும் அதிகம் சுந்தரராமசாமியைப் படித்ததில்லை! :) ஆனால் புளியமரத்தின் கதையைப் படித்திருக்கிறேன். வாசகர் வட்ட வெளியீடாக வந்த போதே! அறுபதுகளில் வெளிவந்த வாசகர் வட்ட வெளியீட்டுப் புத்தகங்கள் அனைத்துமே படித்திருக்கிறேன். எல்லாமே அருமையாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam April 12, 2016 at 2:02 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //சுந்தர ராமசாமியும் சரி, சித்தப்பாவும் (அசோகமித்திரன்) சரி எழுத்தாளர்களுக்கான எழுத்தாளர்கள் என்பார்கள். இதில் சித்தப்பாவின் எழுத்தைப் படித்துப் புரிந்து கொள்ளக் கஷ்டம் ஏதும் இருக்காது. சுந்தரராமசாமியைப் புரிந்து கொள்வது கடினமே! ஆகையால் நானும் அதிகம் சுந்தரராமசாமியைப் படித்ததில்லை! :) //

   ஓஹோ ! :)

   //ஆனால் புளியமரத்தின் கதையைப் படித்திருக்கிறேன். வாசகர் வட்ட வெளியீடாக வந்த போதே! அறுபதுகளில் வெளிவந்த வாசகர் வட்ட வெளியீட்டுப் புத்தகங்கள் அனைத்துமே படித்திருக்கிறேன். எல்லாமே அருமையாக இருக்கும்.//

   அதுபோதுமே ! அதுவும் ’புளியமரத்தின் கதை’ ஒன்றே போதுமே.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம். - VGK

   Delete
 22. ம்ம்ம்ம் யார் யாருக்கு நாத்தனார், யார் எழுத்தாளர் என்பதெல்லாம் புரியவில்லை. பின்னூட்டங்களை ஆரம்பத்திலிருந்து படிக்கணும். அதற்கு நேரம் இல்லை! :)

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam April 12, 2016 at 2:02 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ம்ம்ம்ம் யார் யாருக்கு நாத்தனார், யார் எழுத்தாளர் என்பதெல்லாம் புரியவில்லை. பின்னூட்டங்களை ஆரம்பத்திலிருந்து படிக்கணும். அதற்கு நேரம் இல்லை! :)//

   பரவாயில்லை மேடம். தங்களுக்கு நேரம் இல்லாததால், ஏதோ என்னால் உணரப்பட்டவரை, உறவுமுறைகள் சிலவற்றை இங்கு தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்:

   (1)

   பிரபல ’கீதமஞ்சரி’ வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் http://geethamanjari.blogspot.in/அவர்களுக்கு,

   பிரபல ’ஊஞ்சல்’ வலைப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி http://unjal.blogspot.com/ அவர்கள் நாத்தனார்.

   [அதாவது, ஊஞ்சலின் உடப்பிறந்தான் சம்சாரம் = கீதமஞ்சரி]

   -=-=-=-=-

   (2)

   பிரபல ‘இலக்கியச்சாரல்’ மூத்த வலைப்பதிவர் ஐயா சொ.ஞானசம்பந்தன் (வயது 90+) http://sgnanasambandan.blogspot.in/ அவர்கள், திருமதி. ஞா. கலையரசி அவர்களின் தகப்பனாரும், திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் மாமனாரும் ஆவார்.

   -=-=-=-=-

   (3)

   ‘அலைகள்’ வலைப்பதிவர் http://coumoudam.blogspot.in/ Ms. ஞா. குமுதா அவர்களும் திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்குத் தங்கையும், கீதமஞ்சரி அவர்களுக்கு இன்னொரு நாத்தனாரும் ஆவார்.

   -=-=-=-=-

   இதெல்லாம் தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   இப்போதாவது கொஞ்சம் புரிகிறதா?

   அன்புடன் VGK

   Delete