About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, December 18, 2013

97 ] தி யா க ம்.

2
ஸ்ரீராமஜயம்


ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிக கெளரவம் இருக்கும். 

கவரிமான் என்று உண்டு. அதன் கெளரவம் வாலில் தான் இருக்கிறது.மயில் என்றால் அதற்கு தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். 
யானை எதை ரட்சிக்கும்? 

தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். இந்தப்பிள்ளையார் என்கிற யானை என்ன பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பினில் ஒன்றையே ஒடித்து, அதனால் மஹா பாரதத்தையே எழுதிற்று. தன் அழகு, கெளரவம், கர்வம் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்றுதான் பெரிது என்பதை, இவ்விதம் இந்த யானை காட்டியது.

நியாயத்துக்காக, தர்மத்துக்காக, வித்தைக்காக, எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தன் தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது.

ஸ்வாமிக்கு கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை.

அவர் நினைத்தால், எதையுமே கருவியாக உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணமாகும்.

ஒரு சமயம் தன் தந்தத்தினாலேயே ஓர் அசுரனைக் கொன்றார்.

அப்போது அவருக்கு அது ஆயுதம். 

பாரதம் எழுதும்போது அதுவே அவருக்குப் பேனா.


oooooOooooo

[ 1 ]


கிறிஸ்துவும் 
சிவ - விஷ்ணுக்களும்


விஷ்ணுவுக்கான வைகுண்ட ஏகாதஸிக்கும், சிவனுக்குரிய திருவாதரைக்கும் நடுவிலே இன்றைக்கு கிறிஸ்துமஸ்*

*ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இந்த உரை நிகழ்த்தியது 1966-ல் வைகுண்ட ஏகாதஸியான டிஸம்பர் 23-க்கும், திருவாதரையான அம்மாத 27/28-க்கும் இடையிலுள்ள டிஸம்பர் 25-ந்தாம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் என்பதை வாசகர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறோம்.]

அது லோகம் பூராவிலும் ரொம்பப் பேர் மதாநுஷ்டான தினமாகவோ, அல்லது ‘ஹாலிடே’ உல்லாஸமாகவோ – ‘ஹோலிடே’யாகவோ, வெறும் ‘ஹாலிடே’யாகவோ – கொண்டாடும் நாளாக இருக்கிறது. 

இதன் காரண புருஷரையும் நம்மைச் சேர்ந்தவராக, அதிலும் தம்முடைய பேராலேயே நான் சொன்ன அந்த சிவ -விஷ்ணு அபேதத்தைக் காட்டுகிறவராக, சொல்லிக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது!

அவர் பெயர் என்ன? ஜீஸஸ் க்ரைஸ்ட்’ என்கிறோம். 

அது ஜெர்மானிக் என்றும் Teutonic என்றும் சொல்கிற பாஷா ‘க்ரூப்’பைச் சேர்ந்த ஜெர்மன் பாஷை, இங்கிலீஷ், டட்ச், இன்னும் ஸ்காண்டினேவியன் பாஷைகள் என்பதாக நார்வே, ஸ்வீடன், டென்மார்க் முதலான தேசங்களில் பேசப்படும் பாஷைகள் ஆகியவற்றில் அவருக்கு ஏற்பட்டிருக்கிற பெயர்தான். 

அவருக்கு மூலத்தில் ஹீப்ருக்களின் பாஷையில் என்ன பெயரோ அதுவே – ஸம்ஸ்க்ருத ‘ச்ராவணீ’ தமிழ் ‘ஆவணி’யாக உருமாறின மாதிரி – இந்த பாஷைகளில் ஜீஸஸ் என்று ஆகியிருக்கிறது.

அவர் இந்த பாஷைகள் வழங்குகிற ஐரோப்பாவைச் சேர்ந்தவரேயில்லை. 

நம்முடைய ஆசியாக் கண்டத்துக்காரர்தான் அவர். 

அவருடைய தாய்பாஷை அரமீயன் என்கிறது. 

அது ஹீப்ருக்களின் பாஷைகளான ஸெமிடிக் க்ரூப்பைச் சேர்ந்த ஒரு பாஷையே. 

அதிலே அவருக்கு வைத்த பெயர் ‘யீஷுவ (Yeshua) என்கிறதே! அந்த final ’வ’வை ‘அ’ மாதிரி பட்டும் படாமலும் சொல்ல வேண்டும். அதுதான் மற்ற ஐரோப்பிய பாஷைகளில் ‘ஜோஷுவா’ என்றும் ’ஜீஸஸ்’  என்றும் ஆயிற்று.

‘ய’கர வரிசை ‘ஜ’கர வரிசை ஆவது எல்லா இடத்திலேயும் உண்டு. 

வேதத்திலேயே மற்ற சாகைகளில் (கிளைப் பிரிவுகளில்) ‘ய’ என்று வருவது வடதேசத்தில் இப்போதும் அநுஷ்டானத்திலிருக்கிற சுக்லயஜுர் வேதத்தின் மாத்யந்தின சாகையில் ‘ஜ’ என்றுதான் வரும்…. யமுனாவை ஜமுனா என்கிறார்கள். யந்த்ரம் என்பதை ஜந்தர் என்கிறார்கள். தமிழிலே ஸம்ஸ்க்ருத ‘ஜ’வை ‘ய’ ஆக்குவது ஸஹஜம். வேடிக்கையாக இதற்கு ஒரு ‘கான்வெர்ஸ்’! ஸம்ஸ்க்ருதத்தில் ‘யாமம்’ என்றே இருப்பதை நாம் ‘ஜாமம்’ என்கிறோம்! 

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், ‘யீஷுவ’வின் ‘யீ’தான் ‘ஜீஸ’ஸில் ‘ஜீ’யாகியிருக்கிறது. அந்த ‘ஜீ’யை நாம் மறுபடி ‘ய’காரப்படுத்தி, ஆனால் கொஞ்சம் வித்யாஸமாக, ‘யேசு’ என்கிறோம்.

மூல ‘யீஷுஅ’ நம்முடைய ‘ஈச’ தான், அதாவது சிவ நாமாதான் என்று வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது.

அப்படிச் சொன்னால் நம்மவர்கள், அந்த மதஸ்தர்கள் இரண்டு பேரிலுமே யாராவது அபிப்ராய பேதமாகச் சொல்வார்களோ, என்னவோ? பேதம் வேண்டாம் என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்? ஆனபடியால் வைத்துக் கொள்ளலாமே என்றில்லாமல் வைத்துக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது என்று வேண்டுமானால் திருத்திக் கொள்கிறேன்!

‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’டில் ‘ஜீஸ’ஸை ‘ஈச’னாகச் சொல்லலாமோ என்று!

‘க்ரைஸ்ட்’டுக்கு வருகிறேன். அது முழுக்கவும் ஐரோப்பிய பாஷையாகவே ரூபமான (உருவான) வார்த்தைதான். நாம் பட்டாபிஷேகம் என்று விசேஷமாக அபிஷேகம் பண்ணுகிறோமோல்லியோ? மங்கள ஸ்நானம் என்று தலைக்குத் தைலம் வைத்து அப்படிப் பண்ணுகிறது. 

இதே மாதிரி எல்லா தேசங்களிலும் மத சாஸ்த்ரபூர்வமாகத் தைலம் தேய்ப்பதாக இருந்திருக்கிறது. அப்புறம் ஸ்நானம் பண்ணுவிக்கிறது இல்லை; தைலம் தேய்த்து மட்டும் நிறுத்தி விடுவது. கொஞ்சமாகப் பூசுவதால், அதுவே உள்ளே போய் விடும். அதற்கு ‘அனாயிண்ட்’ பண்ணுவதென்பது பெயர். 

ஈச்வரனே அந்த மாதிரிச் சில பேரை லோகோத்தாரணம் பண்ணுவதற்காக ‘அனாயிண்ட்’ பண்ணி, அதாவது பட்டாபிஷேகம் பண்ணி, ‘மெஸையா’ (Messiah) என்று அனுப்புவதாகச் சொல்வார்கள். 

ஹீப்ரு ‘மேஷியா’ இங்கிலீஷில் ‘மெஸையா’ ஆயிற்று. அதற்கே ஐரோப்பிய பாஷையான க்ரீக் (Greek)-ல் இருக்கிற பெயர் ‘க்ரைஸ் டோஸ்’ என்பது. அதன் அடியாகத்தான் இங்கிலீஷ் முதலான பாஷைகளில் ‘க்ரைஸ்ட்’ என்ற வார்த்தை ஏற்பட்டது. 

ஜீவ ஸமூஹ உத்தாரணத்துக்கென்றே ஈச்வரன் அனாயிண்ட் பண்ணி அனுப்பினவரே ஜீஸஸ் என்கிற நம்பிக்கையுள்ள மதஸ்தர்கள் அவரொருத்தரையே குறிப்பாக அப்படிச் சொல்வதாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘ஜீஸ’ஸுக்கு ‘ஈச’ ஸம்பந்தம் காட்டின மாதிரி இந்த ‘க்ரைஸ்டு’க்கு க்ருஷ்ண ஸம்பந்தம் காட்டினாலென்ன என்று தோன்றுகிறது!

க்ருஷ்ணனை நாம் கிஷ்டன், கிட்டன், கிருட்டிணன் என்றெல்லாம் சொல்கிறோமோ இல்லியோ? இந்த மாதிரி ‘க்ரிஸ்டன்’ என்றும்தான் சொல்லலாம். முடிவிலே சொல்லும் ‘அன்’ விகுதி தமிழில்தான் உண்டு. 

நாம் ‘ஈச்வரன்’ என்பது வடக்கத்திக்காரர்களுக்கு ‘ஈச்வர்’தான்; நம் சங்கரன், ராமன் எல்லாமே சங்கர், ராம் என்றிப்படித் தான்! வர வர இங்கேயும் அதுவே ஃபாஷனாகி வருகிறது… அது இருக்கட்டும்…. ‘அன்’ விகுதி போய்விட்டால் க்ரிஸ்டன் ஆன க்ருஷ்ணன் என்ன ஆவான்? ‘க்ரிஸ்ட்’ என்று தானே ஆவான்? 

‘சிவ’ ஸம்பந்தமானது ‘சைவம்’, ‘விஷ்ணு’ ஸம்பந்தமானது ‘வைஷ்ணவம்’ என்று ஆரம்ப இகாரம் ஐகாரமாகிற மாதிரி ‘க்ரிஸ்ட்’ ஸம்பந்தமானது ‘க்ரைஸ்ட்’ என்றே ஆகும்! அப்படித்தானே?

ஆகக்கூடி, ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’ = ‘ஈச க்ருஷ்ணன்’.
(நெடுநேரம் தாமும் சிரித்து உடனிருந்தோரையும் சிரிக்க வைத்து விட்டு ஸ்ரீசரணர் தொடர்கிறார்: ) 

இப்படியாகத்தானே சிவ-விஷ்ணு அபேதம் காட்டுகிற மாஸத்திலே அந்த இரண்டு பேருக்குமான திருநாள்களுக்கு மத்தியிலே வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரண புருஷர் தம்முடைய பெயரிலேயே ஈச்வரன் என்று சொல்லப்படும் சிவன், விஷ்ணுவின் பூர்ணாவதாரமான க்ருஷ்ணன் ஆகிய இரண்டு பேரின் பேர்களையும் பேதம் பார்க்காமல் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்ட மாதிரிக் காட்டுகிறார் என்று ஸமய ஸமரஸத்தை மேலும் கொஞ்சம் நீட்டிப் பார்க்கலாமோ என்று தோன்றிற்று. 

தோன்றினதைச் சொன்னேன்.

{ இது 1966ம் வருஷம் 
சிவனுக்குரிய திருவாதிரைக்கும்
பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதஸிக்கும்
இடையே வந்த  25.12.1966 கிறிஸ்துமஸ் தினத்தன்று 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஆற்றியுள்ள 
உரை என்பது குறிப்பிடத்தக்கது }

[Thanks to amirtha vahini 02/09/2013]


oooooOooooo

[ 2 ]

மஹான் பூஜை புனஸ்காரங்களை முடித்துக்கொண்டு வந்த பிறகு பக்தர்களுக்கு தரிசனம் தந்து அவர்களது குறைகளை கேட்டறிந்து பரிகாரம் சொல்வது அன்றாட நிகழ்ச்சி. அன்றைய தினம் பெரும் திரளான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் தாங்கள் முன்னதாக தரிசனம் பெற்றுவிட வேண்டும் என்கிற எண்ணம். ஆனால் நடைமுறையில் வரிசை மெதுவாக நகர்ந்து தானே ஆகவேண்டும் 


அன்று பாரதி காவலர் ராமமூர்த்தி தம்முடன் மலேசியக் கவிஞர் ஒருவரை மஹானின் தரிசனத்திற்காக அழைத்து வந்திருந்தார். அவர் பெயர் சூசை."இத்தனை பேருக்கும் தனித்தனியாக மஹானின் தரிசனம் கிடைக்குமா?" என்று சூசை தன் நண்பரிடம் மெதுவாகக் கேட்டார் ராமமூர்த்தி பதில் சொல்லும் முன் மஹானிடமிருந்து பதில் கிடைத்தது. 

ஒரு மடத்து ஊழியர் ராமமூர்த்தியிடம் வந்து 

"உங்களையும் உங்களுடன் வந்த கவிஞரையும் உள்ளே அழைத்து வரச் சொல்லி உத்தரவு” என்றார் இதைக்கேட்ட கவிஞர் சூசைக்கு வியப்பு. 

நாம் இங்கே கேள்வி கேட்க பதில் மஹானிடம் இருந்து அல்லவா வருகிறது?

உள்ளே நுழைந்ததும் பாரதிகாவலரிடம் மஹான் கேட்கிறார் 

"இவர்தான் சூசையா?"

தன் பெயரை மஹான் சொன்னதும் சூசைக்கு மெய்சிலிர்த்தது. தாம் சொல்லாமலேயே மஹான் தம்மை பெயர் சொல்லிக் கேட்கிறார் என்றால்?

மஹானின் பார்வை இருவர் மீதும் ஒளி வெள்ளமாய் பாய்ந்தது. இருவருக்கும் பேச நா எழவில்லை. 

இந்த மலேசியக் கவிஞர்  ஏற்கனவே  பாரதியின்  'பாஞ்சாலி சபத'த்தையும் 
'அபிராமி அந்தாதி'யையும் மலேசிய மொழியில் மொழி பெயர்த்து இருந்தார். 

இவை இரண்டும் ஏற்கனவே மஹானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு இருந்தன

கவிஞரைப் பார்த்தவுடன் "அபிராமி அந்தாதியை முதலில் உங்கள் பாஷையிலும் பிறகு தமிழிலும் சொல்லலாமே?" என்றார். 

மலேஷிய மொழியில் அந்தாதியை சொன்னார் கவிஞர். தமிழில் அதை கூற வந்தபோது அவருக்கு முதலடி மறந்து போயிற்று 

பிறகு , அடிஎடுத்துக் கொடுக்குமாறு, மஹானே, 

பாரதி காவலரை பணித்தார் . 

மலேசிய மொழியில் செய்திருந்த மொழிபெயர்ப்பை  பாராட்டிய மஹான்,
அதில் ஏழு சமஸ்க்ருத வார்த்தைகள் வருவதைச் சொல்லி, அவை எந்தெந்த வார்த்தைகள் என்று வரிசையாக அடிக்கினார். 

மஹானின் இந்த மொழிப் புலமையைக் கண்ட சூசை மிகவும் வியப்படைந்தார் 

அடுத்து மலேசிய நாட்டைப் பற்றி மஹான் கவிஞரிடம் பேசத் தொடங்கினார். 

அந்த நாட்டில் ஒரு இடத்தை குறிப்பிட்டு " அங்கே சிவன் கோவில் உண்டே?" என்று மஹான் சொல்ல சூசை, ”ஆமாம்” என்று மகிழ்ச்சி பொங்க ஆமோதித்தார். 

மலேசிய நாட்டின் பூகோள நிலவரம், அங்குள்ள பொருள் பொதிந்த மொழிகளிலேயே பவனி வந்தன. மலேசிய மொழியில் அபிராமி அந்தாதியை திருச்செவிமடுத்த மறுகணமே, மொழிப்பாங்கை உணர்ந்து கொண்ட மஹானின் திருப்பாதங்களில் அவர்கள் இருவரும் பணிந்து வணங்கினார்கள் 

மஹான் 'அபிராமி அந்தாதி' வரிகளிலேயே மலேசிய மொழியில் தாம் கேட்ட முதல் வரியை மொழிந்து, இருவருக்கும் ஆசி வழங்கினார்கள்Thanks to Amritha Vahini 16.12.2013

oooooOooooo

[ 3 ]

எட்டு வயதே ஆன 
பெண் குழந்தையொன்று 

’திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் - பாட்டுப்போட்டி’களில் கலந்துகொண்டு
முதல் பரிசினைத் தட்டி வந்தது. 

அதுவும் வெள்ளியினால் ஆன 
பரிசுப்பொருட்கள்.

 

 

பல்லாண்டுகளுக்குப் பிறகும் .... 
இன்றும் என்னிடம் பொக்கிஷமாக !

அந்தப் பரிசுப்பொருட்கள் மட்டுமல்ல ...
அந்தக்குழந்தையும் கூடவே ! ;)))))

யார் அந்தப்பெண் குழந்தை?


மேலும் விபரங்களுக்கு, 
கீழ்க்கண்ட 
இணைப்பினில் உள்ள என் பின்னூட்டங்களில் 
கடைசியாக உள்ள இரண்டையும் படித்துப்பாருங்கள் ;)

அன்புடன் VGK


oooooOoooooஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

78 comments:

 1. அன்பின் வை.கோ

  தியாகம் பதிவு அருமை.

  கவரிமானின் கவுரவம் வாலிலும், மயில் சர்வ ஜாக்கிரதையாக ரட்சிக்கும் தோகையும், வெள்ளை வெளேர் என்ற தந்தத்தை வைத்திருக்கும் யானையும், தன கொம்பினையே எழுத்தாணியாக்கி மகா பாரதம் எழுதிய யானையும், அசுரனைக் கொல்ல தந்தமாகவும் - பாரதம் எழுத எழுத்தானியாகவும் பயன் படுத்திய யானைமுகனும் அருமையான விளக்கங்கள்.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  சிவபெருமானும் பெருமாளூம் நடுவினில் இயேசு கிருத்துவும் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் உரை அருமை - பகிர்வினிற்கு நன்றி.
  ReplyDelete
 2. அன்பின் வை.கோ - யாரந்த பெண் குழந்தை - விபரங்கள் அனைத்தும் - அங்கு சென்று மறுமொழிகளைப் படித்து - அறிந்து - மகிழ்ந்தேன், எட்டு வயதுக் குழந்தையாய் இருக்கும்போதே வெள்ளியிலான பரிசுப் பொருட்களை அள்ளிச் சென்ற தங்கவளீன் மனைவிக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. cheena (சீனா) December 18, 2013 at 5:09 AM

   அன்பின் திரு சீனா ஐயா, வாங்கோ, வணக்கம்.

   //அன்பின் வை.கோ - யாரந்த பெண் குழந்தை - விபரங்கள் அனைத்தும் - அங்கு சென்று மறுமொழிகளைப் படித்து - அறிந்து - மகிழ்ந்தேன், எட்டு வயதுக் குழந்தையாய் இருக்கும்போதே வெள்ளியிலான பரிசுப் பொருட்களை அள்ளிச் சென்ற தங்கள் மனைவிக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   தங்கள் அன்பான வருகைக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், என் அன்புக்குரிய மேலிடம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டது என்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

   அன்புடன் VGK

   Delete
 3. great men think alike என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஒன்றாக காண்பதே காட்சி என்றால் அவ்வைப்பாட்டி .அதைபோல் அனைத்திலும் அவன் செயலைக் காண்பது ஞானிகளின் தன்மை
  அஞ்ஞானிகள் அறியாமையினால் பேதங்களை கற்பிக்கிறார்கள். .பெரியவாவின் நோக்கு நன்று
  அவர் நிலையில் நின்று பார்பவர்களுக்கு.
  இறைவன் படைப்பில் பெரும்பாலானவை பிறருக்கே வாழ்ந்து அனைத்தையும் தியாகம் செய்துவிடுகின்றன. கர்ப்பூரம் முழுவதுமாக கரைந்துவிடுகிறது. மரங்கள் தங்களிடம் உள்ள அனைத்தையும் வழங்கிவிடுகிறது. மனிதன் மட்டும்தான் சுயநலத்துடன் பேய் போல் அலைகின்றான்.சுரண்டிப் பிழைகின்றான்.
  நல்லதோர் பதிவு VGK

  ReplyDelete
 4. பெரியவாளின் உரை ஆச்சர்யமாக இருந்தது! சூசை அவர்களைப் பற்றி முன்பே படித்த ஞாபகம்! தங்களின் பதிவிலா என நினைவில்லை! அருமையான பதிவினைப் பகிர்ந்த தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்! பரிசு பெற்ற குழந்தைக்குப் பாராட்டுகள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. December 18, 2013 at 7:54 AM

   //பரிசு பெற்ற குழந்தைக்குப் பாராட்டுகள்! நன்றி!//

   இன்றும் குழந்தை உள்ளத்துடன் கூடியவளின் நன்றிகள். ;)

   Delete
 5. தாங்கள் காட்டிய சுட்டியின் வழி சென்று விவரங்கள் அறிந்தேன்! சிறுவயதிலேயே பாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடித்த தங்கள் துணைவியார் பற்றிக் குறிப்பிட்ட விதம் அருமை! இருவரும் பல்லாண்டு இன்பமுடன் வாழ இந்நன்னாளில் இறைவனை வேண்டுகிறேன்! நன்றி ஐயா!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. December 18, 2013 at 8:03 AM

   வாங்கோ, வணக்கம்.

   //தாங்கள் காட்டிய சுட்டியின் வழி சென்று விவரங்கள் அறிந்தேன்! சிறுவயதிலேயே பாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடித்த தங்கள் துணைவியார் பற்றிக் குறிப்பிட்ட விதம் அருமை! இருவரும் பல்லாண்டு இன்பமுடன் வாழ இந்நன்னாளில் இறைவனை வேண்டுகிறேன்! நன்றி ஐயா!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அருமையான கருத்துக்களுக்கும், வேண்டுதலுக்கும் எங்களின் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   Mrs. Gopalakrishnan & VGK

   Delete
 6. ஏசு- கிருஷ்ணன் மேய்ப்பர்கள் குறித்து முன்பே படித்திருந்தாலும் படிக்கப் படிக்க ஆனந்தமே!!
  உங்கள் பின்னூட்டத்தில் உங்கள் மனைவி பற்றி மகிழ்ந்து சொல்லியிருப்பது கண்டு மிக்க சந்தோஷம்!!

  ReplyDelete
  Replies
  1. middleclassmadhavi December 18, 2013 at 9:24 AM

   வாங்கோ MCM Madam, வாங்கோ, வணக்கம்.

   //உங்கள் பின்னூட்டத்தில் உங்கள் மனைவி பற்றி மகிழ்ந்து சொல்லியிருப்பது கண்டு மிக்க சந்தோஷம்!!//

   தங்களின் சந்தோஷத்தை நேரில் வந்து சொல்லியிருந்தால் மேலும் சந்தோஷமாகியிருக்குமே! [அவளைவிட எனக்கு ;)))))) ]

   எனினும் மிக்க நன்றி. அன்புடன் VGK

   Delete
 7. Beautiful and informative post.Thanks for sharing :)

  ReplyDelete
 8. ஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் உரை மிகவும் சிறப்பு...

  பின்னூட்டங்களை ஆவலுடன் வாசிக்க செல்கிறேன் ஐயா... நன்றி...

  ReplyDelete
 9. கவரிமான் என்று உண்டு. அதன் கெளரவம் வாலில் தான் இருக்கிறது.

  அதனால்தான் மயிர் நீப்பின் வாழாக்கவரிமான்
  என கௌரவப்படுத்தப்படுகிறது..!

  ReplyDelete
 10. யார் அந்தப்பெண் குழந்தை? ////

  இல்லத்திலும் , வாழ்விலும் ஒளிவிளக்கேற்றிய தேவதைக்கு நமஸ்காரங்கள்..!

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி December 18, 2013 at 11:05 AM

   வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ,
   வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ
   வணக்கம். வந்தனம்.

   *****யார் அந்தப்பெண் குழந்தை? *****

   //இல்லத்திலும், வாழ்விலும் ஒளிவிளக்கேற்றிய தேவதைக்கு நமஸ்காரங்கள்..!//

   அன்புடன் அம்பாளாக வருகை தந்து, ஒளிமயமான கருத்துக்கள் கூறி மகிழ்வித்துள்ளதற்கு சந்தோஷம். மனம் நிறைந்த இனிய அன்பு நல்லாசிகள்.

   பிரியமுள்ள Mrs. VGK + VGK

   Delete
 11. அவர்களின் பாடல்களையும் ,
  மற்ற பரிசுகளையும் பதிவேற்றலாமே...!

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி December 18, 2013 at 11:07 AM

   //அவர்களின் பாடல்களையும் ,
   மற்ற பரிசுகளையும் பதிவேற்றலாமே...!//

   அடடா, சும்மா இருங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

   தாங்கள் சொல்வது போலெல்லாம் செய்யலாம்தான். எனக்கும் ஆசை உண்டுதான்.

   [’ஆசையுண்டு தாசில் பண்ண .... ஆனால் அதிர்ஷ்டம் உண்டு என்னவோ மேய்க்க’ என்று ஓர் பழமொழி சொல்வார்களே .. அதே அதே]

   ஏற்கனவே நான் பதிவிடுகிறேன், பின்னூட்டமிடுகிறேன் என கம்ப்யூட்டரில் உட்கார்ந்தாலே போச்சு.

   ஏதோ வேறொரு சக்களத்தியுடன் தகாத உறவு வைத்துக் கொண்டுள்ளவனைப் போல என்னைப்பார்த்து ஒரு முறைப்பு, ஒரு சலிப்பு, சுட்டெறிப்பதுபோல ஒரு நெற்றிக்கண் திறப்பு.

   இவற்றுடன் கூடவே நானும் ஏதோ சமாளித்துக்கொண்டு இன்றுவரை பதிவிட்டுக்கொண்டும், பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டும் வந்து கொண்டிருக்கிறேன். இதுவும் இன்னும் எவ்வளவு நாட்கள் தொடருமோ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

   http://gopu1949.blogspot.in/2011/10/blog-post_18.html

   மொத்தத்தில் மித்ர சஷ்டாஷ்டகம்.

   எனினும் தங்களின் மிகச்சிறந்த ஆலோசனைகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள VGK

   Delete
 12. மலேசிய மொழியில் செய்திருந்த மொழிபெயர்ப்பை பாராட்டிய மஹான்,
  அதில் ஏழு சமஸ்க்ருத வார்த்தைகள் வருவதைச் சொல்லி, அவை எந்தெந்த வார்த்தைகள் என்று வரிசையாக அடிக்கினார்.

  மஹானின் இந்த மொழிப் புலமையைக் கண்ட சூசை மிகவும் வியப்படைந்தார்

  சாட்சாத் பரமேஸ்வரரை தரிசிப்பது போலிருக்கிறது..!

  ReplyDelete
 13. சிவ’ ஸம்பந்தமானது ‘சைவம்’, ‘விஷ்ணு’ ஸம்பந்தமானது ‘வைஷ்ணவம்’ என்று ஆரம்ப இகாரம் ஐகாரமாகிற மாதிரி ‘க்ரிஸ்ட்’ ஸம்பந்தமானது ‘க்ரைஸ்ட்’ என்றே ஆகும்! அப்படித்தானே?

  ஆகக்கூடி, ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’ = ‘ஈச க்ருஷ்ணன்’.

  ஆழ்ந்த பொருளுடன் அருமையான விரிவுரை ரசிக்கவைத்தது..
  புத்தரையும் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக புத்த ஜாதகக்கதைகள் கூறும்..!

  ReplyDelete
 14. //தன் அழகு, கெளரவம், கர்வம் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்றுதான் பெரிது ..//- உண்மைதான்! சிறப்பான மேற்கோள்..

  ReplyDelete
 15. லோகம் பூராவிலும் ரொம்பப் பேர் மதாநுஷ்டான தினமாகவோ, அல்லது ‘ஹாலிடே’ உல்லாஸமாகவோ – ‘ஹோலிடே’யாகவோ, வெறும் ‘ஹாலிடே’யாகவோ – கொண்டாடும் நாளாக இருக்கிறது.

  இதன் காரண புருஷரையும் நம்மைச் சேர்ந்தவராக, அதிலும் தம்முடைய பேராலேயே நான் சொன்ன அந்த சிவ -விஷ்ணு அபேதத்தைக் காட்டுகிறவராக, சொல்லிக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது!

  ஹாலிடே - ஹோலிடே ..!
  வண்ணமயமான ஹோலி கொண்டாட்டம்
  போன்ற வார்த்தைகள் அழகு..

  விடுமுறைநாளாக - புனித நாளாக -
  கலர்ஃபுல் ஆக தோற்றம் காட்டுகிறது..!

  ReplyDelete
 16. தன் அழகு, கெளரவம், கர்வம் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்றுதான் பெரிது என்பதை, இவ்விதம் இந்த யானை காட்டியது.

  கணபதியின் அருமையை சிறப்பாக விவரித்த
  பகிர்வுகளுக்குப் பாட்டுக்கள்..!

  ReplyDelete
 17. சிறு வயதில் உங்கள் மனைவி திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்து பரிசு பெற்றதை நினைவு கூர்ந்தது... மகிழ்ச்சியான விஷயம்!

  ReplyDelete
  Replies
  1. உஷா அன்பரசு December 18, 2013 at 11:24 AM

   வாங்கோ டீச்சர், வணக்கம் டீச்சர்.

   //சிறு வயதில் உங்கள் மனைவி திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்து பரிசு பெற்றதை நினைவு கூர்ந்தது... மகிழ்ச்சியான விஷயம்!//

   வருகைக்கும் மகிழ்ச்சிப்பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Mrs. Gopalakrishnan + VGK

   Delete
 18. பரிசு பெற்ற தங்கள் மனைவியாருக்கு வாழ்த்துக்கள் ஐயா .
  இன்றைய தியாகம் சார்ந்த பகிர்வு வெகு சிறப்பு .மிக்க நன்றி
  பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. அம்பாளடியாள் வலைத்தளம் December 18, 2013 at 3:11 PM

   வாங்கோ, வணக்கம். இந்தாங்கோ மேங்கோ ஜுஸ் ;) திருப்தியாகச் சாப்பிடுங்கோ.

   //பரிசு பெற்ற தங்கள் மனைவியாருக்கு வாழ்த்துக்கள் ஐயா//

   கவிதாயினியின் அன்பு வருகையும் வாழ்த்துகளும் மாங்கனிச் சாறாக இனிக்கிறது. மிக்க நன்றி. VGK + Mrs. VGK

   Delete
 19. எந்த விஷயத்திலும் புலமை இருந்தால் எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கலாம்.பகிர்வுக்கு நன்றி. பரிசு பெற்று பல ஆண்டுகள் ஆனபிறகும் உங்கள் துணைவியாருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. G.M Balasubramaniam December 18, 2013 at 3:59 PM

   வாங்கோ திரு. GMB ஐயா, வணக்கம் ஐயா.

   // பரிசு பெற்று பல ஆண்டுகள் ஆனபிறகும் உங்கள் துணைவியாருக்கு வாழ்த்துக்கள்//

   அதிகம் இல்லை - ஒரு ஐம்பது ஆண்டுகள் மட்டுமே ஐயா.

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.

   Mrs. VGK + VGK

   Delete
 20. மத ஒற்றுமைக்கு சிறந்தேடுத்டுக் காட்டு மகானின் அருளுரை.
  அவர் மலேஹிய கவிஞருக்கு ஆசி வழங்கியது என்று உங்கள் பதிவு சிறந்து விளங்குகிறது.
  எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக பரிசு பெற்ற உங்கள் மனைவிக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. rajalakshmi paramasivam December 18, 2013 at 4:24 PM

   வாங்கோ, வணக்கம்.

   //எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக//

   எத்தனையோ ஆண்டுகள் அல்ல - Just ஒரு ஐம்பதே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே ;)

   //பரிசு பெற்ற உங்கள் மனைவிக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் சார்.//

   மேலிடத்தின் கவனத்திற்கு தங்கள் வாழ்த்துகளை உடனடியாக சமர்ப்பித்து விட்டேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Mrs VGK + VGK

   Delete
 21. மதஒற்றுமையை காட்டும் மஹானின் அமுதமொழி அருமை.
  பரிசு பெற்ற உங்கள் மனைவிக்கு வாழ்த்துக்கள்.
  படங்கள் அழகு.
  பகிர்வுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு December 18, 2013 at 4:50 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பரிசு பெற்ற உங்கள் மனைவிக்கு வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Mrs VGK + VGK

   Delete
 22. நமக்கு பெருமை தரும் ஒன்றே கர்வத்திற்கும் காரணமாக இருக்கும் என்ற கருத்தை எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள் 'சமய ஒற்றுமை என்று அனைவரும் அறியவேண்டிய பயனுள்ள தகவல் அய்யா

  ReplyDelete
  Replies
  1. Mythily kasthuri rengan December 18, 2013 at 5:17 PM

   வாங்கோ, வணக்கம்.

   இந்த என் தொடருக்கு இன்று முதல் முதலாக வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி சந்தோஷம்

   //நமக்கு பெருமை தரும் ஒன்றே கர்வத்திற்கும் காரணமாக இருக்கும் என்ற கருத்தை எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள் 'சமய ஒற்றுமை என்று அனைவரும் அறியவேண்டிய பயனுள்ள தகவல் ஐயா//

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கு என் நன்றிகள்.

   புதுமுகமாக வருகை தந்துள்ள தங்களின் பெயர் இதே என் தொடரின் பகுதி 105/2/2 இல் 05.01.2014 அன்று சிறப்பாக அறிவிக்கப்படும். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   அன்புடன் VGK

   Delete
 23. உங்கள் மனைவிக்கு வாழ்த்துகள். கிறிஸ்துவும், கிருஷ்ணனும் படம் வெகு அழகு. அருமையான எளிமையான பகிர்வுக்கு நன்றி. விளக்கங்கள் அருமை. கவரிமா என்பது வேறே இந்த மான் விஷயம் வேறே எனப் படித்த நினைவு. இமயமலைப் பிராந்தியங்களில் இருக்கும் மாடைத் தான் கவரிமா எனச் சொல்வார்கள் என்று கேள்விப் பட்டிருக்கேன். :))))))

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam December 18, 2013 at 5:17 PM

   வாங்கோ, வணக்கம்.

   //உங்கள் மனைவிக்கு வாழ்த்துகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Mrs VGK + VGK

   Delete
 24. நல்விளக்கம்.

  துணைவியாருக்கு வாழ்த்துகள். வாழ்க நலமுடன்.

  ReplyDelete
  Replies
  1. மாதேவி December 18, 2013 at 5:57 PM

   வாங்கோ, வணக்கம்.

   //துணைவியாருக்கு வாழ்த்துகள். வாழ்க நலமுடன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Mrs VGK + VGK

   Delete
 25. பரிசு பெற்ற தங்கள் மனைவியாருக்கு வாழ்த்துக்கள் ஐயா .
  இன்றைய தியாகம் சார்ந்த பகிர்வு வெகு சிறப்பு
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. கரந்தை ஜெயக்குமார் December 18, 2013 at 8:36 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பரிசு பெற்ற தங்கள் மனைவியாருக்கு வாழ்த்துக்கள் ஐயா //
   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Mrs VGK + VGK
   .

   Delete
 26. நல்ல விதமாக சின்ன வயஸிலேயேபரிசுகள்பெற்ற உங்கள் மனைவிக்கு எனது வாழ்த்துகள். தனிப்பட எழுதியதாகச் சொல்லவும்.
  தியாகம் என்ற வார்த்தையே மஹாபெரியது. இன்றைய பதிவு
  மிகவும் விசேஷமாக இருக்கிறது.
  மஹாப் பெரியவருக்குத் தெரியாத மொழியே கிடையாது போலும். நன்றி. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. Kamatchi December 18, 2013 at 9:09 PM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

   //நல்ல விதமாக சின்ன வயஸிலேயே பரிசுகள் பெற்ற உங்கள் மனைவிக்கு எனது வாழ்த்துகள். தனிப்பட எழுதியதாகச் சொல்லவும்.//

   கூப்பிட்டுத் தனியாக படித்துக்காட்டி விட்டேன், மாமி. ;)

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நமஸ்காரங்களுடன் Mrs. VGK + VGK


   Delete
 27. ஜீசஸ் விளக்கம் ரொம்பவும் வியப்பாக இருந்தது. ஆஹா! அந்தச் சிறுமி வாலாம்பாள் மாமியா? எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Ranjani Narayanan December 18, 2013 at 9:33 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆஹா! அந்தச் சிறுமி வாலாம்பாள் மாமியா?//

   சாக்ஷாத் ! அதே அதே !!

   //எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.//

   சொல்லிட்டேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Mrs. VGK + VGK

   Delete
 28. //தன் அழகு, கெளரவம், கர்வம் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்றுதான் பெரிது என்பதை, இவ்விதம் இந்த யானை காட்டியது.//

  அருமை!!


  ReplyDelete
 29. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்ள்..!

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி December 19, 2013 at 9:04 AM

   வாங்கோ, வணக்கம்.

   //வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்ள்..!//

   ஆஹா, சந்தோஷம். ;)

   தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   Delete
 30. இஸ்லாமும் அப்ரஹமிய மதமே. அதில் மஹமதுக்கு முன்னர் வந்தவர்களையும்
  நபியாகவே அழைக்கின்றனர்.ஏசு கிறிஸ்துவும் இஸ்லாமியர்களுக்கு ஒரு நபியே!மோசஸ் மூசா நபி! ஜீசஸ் 'ஈசா' நபி!

  பெரியவர்களின் சமய ஒற்றுமை விளக்கத்திற்கு மேலும் அணி சேர்ப்பது இஸ்லாமியர்கள் ஏசுவை 'ஈசா'என்று அழைப்பது!

  ReplyDelete
  Replies
  1. kmr.krishnan December 19, 2013 at 4:09 PM

   வாங்கோ, வணக்கம்.

   இந்த என் தொடருக்கு இன்று முதல் முதலாக வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி சந்தோஷம்.

   //இஸ்லாமும் அப்ரஹமிய மதமே. அதில் மஹமதுக்கு முன்னர் வந்தவர்களையும் நபியாகவே அழைக்கின்றனர்.
   ஏசு கிறிஸ்துவும் இஸ்லாமியர்களுக்கு ஒரு நபியே!மோசஸ் மூசா நபி! ஜீசஸ் 'ஈசா' நபி!

   பெரியவர்களின் சமய ஒற்றுமை விளக்கத்திற்கு மேலும் அணி சேர்ப்பது இஸ்லாமியர்கள் ஏசுவை 'ஈசா'என்று அழைப்பது!//

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கு என் நன்றிகள்.

   புதுமுகமாக வருகை தந்துள்ள தங்களின் பெயர் இதே என் தொடரின் பகுதி 105/2/2 இல் 05.01.2014 அன்று சிறப்பாக அறிவிக்கப்படும். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   அன்புடன் VGK

   Delete
 31. சர்வசமய ஒற்றுமையை வலியுறுத்திய பதிவு இது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 32. கிருஸ்து பற்றி குறிப்பிட்டது மிக அருமை...

  மாமியை பற்றி படித்து மகிழ்ந்தேன்...

  ReplyDelete
  Replies
  1. ADHI VENKAT December 20, 2013 at 6:16 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மாமியை பற்றி படித்து மகிழ்ந்தேன்...//

   அப்படியா! மிகவும் சந்தோஷம் ;) நன்றிகள்.

   Delete
 33. யேசுவின் விளக்கம் அருமை...மாமியை பற்றி அறிந்து மகிழ்ந்தேன்,வாழ்த்துக்கள் மாமி!!

  ReplyDelete
  Replies
  1. Menaga sathia December 20, 2013 at 11:56 AM

   வாங்கோ மேனகா. வணக்கம்.

   //மாமியை பற்றி அறிந்து மகிழ்ந்தேன்,வாழ்த்துக்கள் மாமி!!//

   சந்தோஷம். மிக்க நன்றிகள்.

   Mrs. VGK

   Delete
 34. வணக்கம் சார்,

  தங்கள் மெயில் கண்டு வந்தேன்,97 வது பதிவு வந்துட்டாரே நான் வலைப்பூ பக்கம் வருவதே இல்லையே ,எப்படியாவது
  போய் படித்துவிடனும்னு வந்தேன்.

  சிவன் விஷ்ணு இயேசு இவர்களை ஒப்பிட்டு பல தகவல்கள் தந்துள்ளீர்கள்.
  வட மாநிலத்தில் ஸ்ரவன் மாதம் உள்ளது
  மாமி அப்பவே வெள்ளிப்பரிசுப்பொருட்கள் பெற்றுள்ளது சந்தோசமும்,வியப்பும் ஏற்படுத்தியது.
  பெரியவர் பற்றின பகிர்வும் வழக்கமான வியப்புதான்.
  .சின்ன எழுத்துக்கள் மிகவும் குட்டியா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. thirumathi bs sridhar December 20, 2013 at 8:09 PM

   வாங்கோ அன்புள்ள் ஆச்சி, வணக்கம் ஆச்சி, எப்படி இருக்கீங்கோ?

   வணக்கம் சார்,

   //தங்கள் மெயில் கண்டு வந்தேன்,97 வது பதிவு வந்துட்டாரே நான் வலைப்பூ பக்கம் வருவதே இல்லையே, எப்படியாவது போய் படித்துவிடனும்னு வந்தேன்.//

   மிகவும் சந்தோஷம் ஆச்சி. என் இந்தத்தொடருக்கு வருகை தந்தால் தங்களின் வேதனைகளுக்கும், மனக்குறைகளுக்கும், மன வருத்தங்களுக்கும் ஓர் மாமருந்தாக அது இருக்கக்கூடும் என்பதால் மட்டுமே தங்களை ஸ்பெஷலாக அழைத்திருந்தேன். தாங்கள் தட்டாமல் வந்துள்ளது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

   //மாமி அப்பவே வெள்ளிப்பரிசுப்பொருட்கள் பெற்றுள்ளது
   சந்தோசமும்,வியப்பும் ஏற்படுத்தியது.//

   அப்படியா, அவங்க குட்டியூண்டு பெண்ணாக இருந்தபோது, படு சுட்டியாக இருந்துள்ளார்கள் போலிருக்கு. ;)))))

   //.சின்ன எழுத்துக்கள் மிகவும் குட்டியா இருக்கு.//

   அதுபோன்ற குட்டியான எழுத்துக்களின் மீது கிரசரை - ஆரோவை வைத்து, கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள Control + PLUS Button களை ஒரே நேரத்தில் அழுத்துங்கோ. எழுத்துகள் பெரிதாக மாறிவிடும். மீண்டும் அதுபோலச் செய்யுங்கோ, மேலும் பெரிதாக மாறும். படிக்க சிரமம் இல்லாமல் தெளிவாக இருக்கும்.

   அதன் பிறகு, படித்த பிறகு Control + Minus Button களை ஒரே நேரத்தில் அழுத்தினால் சிறியதாக Normal Size க்கு வந்துவிடும்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   செளகர்யப்பட்ட போதெல்லாம் வாங்கோ ஆச்சி, இன்னும் 10 பதிவுகள் மட்டுமே உள்ளன, பகுதி 108 உடன் இந்தத்தொடர் 11.01.2014 அன்று முடிந்துவிடும்.

   அன்புடன் கோபு

   Delete
 35. அருமையான பகிர்வு. எம்மதமும் சம்மதம் :)

  ReplyDelete
 36. ஒற்றுமை வலியுறுத்தப் பட்டது மிக நன்று.
  தங்கள் மனைவிக்கு இனிய வாழ்த்து.
  பகிர்விற்கு நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. kovaikkavi December 22, 2013 at 12:02 PM

   //தங்கள் மனைவிக்கு இனிய வாழ்த்து.//

   சந்தோஷம். மிக்க நன்றிகள்.

   Delete
 37. ஜீஸஸ் கிரைஸ்ட் =ஈஸக்ருஷ்ணன் நல்ல ஆராய்ச்சி.சாதாரணமாகவே கிறித்தவதில் வேதம் ஆசீர்வாதம் ஜீவன் ஆகமம் போன்று பல வார்த்தைகளை பயன் படுத்துவதை ப்பார்த்தால் நமக்கும் தோன்றுகிறது .மொத்ததில் கடவுள் ஒன்றே .நல்ல பதிவு நன்றி

  ReplyDelete
 38. பெருமாளும் சிவபெருமானும் நடுவினில் இயேசு கிறிஸ்து. ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகளின் உரையினைப் பதிவிட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 39. சிவபெருமானும் பெருமாளும் !.. நடுவில் இயேசு நாதர்.
  ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகளின் உரையினைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!..

  ReplyDelete
 40. மஹா பெரியவாளின் மொழிப்புலமை மெய்சிலிர்க்க வைத்தது! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 41. ஸ்வாமிக்கு கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை.
  அவர் நினைத்தால், எதையுமே கருவியாக உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணமாகும்.
  ஒரு சமயம் தன் தந்தத்தினாலேயே ஓர் அசுரனைக் கொன்றார்.
  அப்போது அவருக்கு அது ஆயுதம்.
  பாரதம் எழுதும்போது அதுவே அவருக்குப் பேனா.

  aha aha
  குழந்த்தைகளுக்கு எடுத்து சொல்ல எவ்வளவு விஷயங்கள்

  மாமாவுக்கு மாமியும் சளைத்தவர் இல்லைபோல
  என் பாராட்டை தெரிவுங்கள்.

  ReplyDelete
 42. மஹான்களுக்கு எல்லா மதங்களும் ஒன்றே எனப் புரிகிறது.

  ReplyDelete
 43. மஹான்களுக்கு ஏது மதவித்யாசம் உங்க பெட்டர் ஹாஃபுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் August 23, 2015 at 6:37 PM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

   //உங்க பெட்டர் ஹாஃபுக்கு வாழ்த்துகள்//

   ஆஹா ..... மிகவும் சந்தோஷம்மா.

   பெட்டர் ஹாஃப் சார்பாக தங்களுக்கு என் நன்றிகள். :)

   குட்டிக்(கோபால)கிருஷ்ணன் மேலான அந்தப்பாடல் ஹிந்தியா ? மராட்டியான்னு தாங்கள் இன்னும் Confirm செய்து சொல்லவே இல்லையே ! :))))) http://gopu1949.blogspot.in/2013/10/62.html

   Delete
 44. // ஸ்வாமிக்கு கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை.

  அவர் நினைத்தால், எதையுமே கருவியாக உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணமாகும்.//

  கருவி எல்லாம் எதற்கு. மந்திரத்திலேயே மாங்காய் வரவழைப்பார் தொப்பையப்பர்.

  // இப்படியாகத்தானே சிவ-விஷ்ணு அபேதம் காட்டுகிற மாஸத்திலே அந்த இரண்டு பேருக்குமான திருநாள்களுக்கு மத்தியிலே வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரண புருஷர் தம்முடைய பெயரிலேயே ஈச்வரன் என்று சொல்லப்படும் சிவன், விஷ்ணுவின் பூர்ணாவதாரமான க்ருஷ்ணன் ஆகிய இரண்டு பேரின் பேர்களையும் பேதம் பார்க்காமல் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்ட மாதிரிக் காட்டுகிறார் என்று ஸமய ஸமரஸத்தை மேலும் கொஞ்சம் நீட்டிப் பார்க்கலாமோ என்று தோன்றிற்று. //

  இந்த கோணத்துல யாராவது யோசிச்சிருப்பாளா?

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 22, 2015 at 8:57 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //கருவி எல்லாம் எதற்கு. மந்திரத்திலேயே மாங்காய் வரவழைப்பார் தொப்பையப்பர். //

   :) கிண்டலா? சரி, சரி, பிள்ளையாரப்பாவைத் தான் சொல்லியுள்ளீர்கள் என நானும் நம்புகிறேன்.

   //இந்த கோணத்துல யாராவது யோசிச்சிருப்பாளா?//

   :) திருவாதரை >>> கிறிஸ்துமஸ் >>> வைகுண்ட ஏகாதஸி ஆகியவை அடுத்தடுத்து சமயத்தில் வரத்தான் செய்கிறது. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இந்தக்கோணத்தில் யோசித்திருப்பது ஆச்சர்யம்தான். அவர்கள் பூர்வாஸ்ரமத்தில் தன் 12 வயதுவரை படித்ததுகூட கிறிஸ்டியன் ஸ்கூல் என நினைக்கிறேன்.

   >>>>>

   Delete
 45. // அந்த நாட்டில் ஒரு இடத்தை குறிப்பிட்டு " அங்கே சிவன் கோவில் உண்டே?" என்று மஹான் சொல்ல சூசை, ”ஆமாம்” என்று மகிழ்ச்சி பொங்க ஆமோதித்தார். //

  மகா பெரியவர் அந்தக்கால கூகுளாண்டவருக்கும் மேலே.


  அந்தப் பெண் குழந்தை மன்னி தானே.


  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 22, 2015 at 9:09 PM

   **அந்த நாட்டில் ஒரு இடத்தை குறிப்பிட்டு " அங்கே சிவன் கோவில் உண்டே?" என்று மஹான் சொல்ல சூசை, ”ஆமாம்” என்று மகிழ்ச்சி பொங்க ஆமோதித்தார்.**

   //மகா பெரியவர் அந்தக்கால கூகுளாண்டவருக்கும் மேலே.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! கரெக்ட்தான். :)

   //அந்தப் பெண் குழந்தை மன்னி தானே.//

   :) அந்தக் குழந்தையைப்பற்றிய செய்திகள் மட்டும் மன்னியைப் பற்றியது. மேலும் விபரங்களுக்கு, கீழ்க்கண்ட http://jaghamani.blogspot.com/2013/12/blog-post_17.html#comment-form இணைப்பினில் உள்ள என் பின்னூட்டங்களில் கடைசியாக உள்ள இரண்டையும் படித்துப்பாருங்கோ :)

   நான் மேலே படத்தில் காட்டியுள்ள குழந்தை யாரோ .... Google Image இல் இருந்து நான் தேடி எடுத்துப்போட்டுள்ளேன்.

   ஒருவேளை மன்னி சிறுவயதில் இதுபோலவோ அல்லது இதைவிட இன்னும் அழகாகவோ இருந்திருப்பார்களோ என்னவோ ..... [ஆனால் இதில் எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை, ஜெ. :) ]

   Delete
 46. அந்த குட்டி பொட்டபுள்ள உங்கட பொஞ்சாதியா. சின்னபுள்ளலயே பரிசெல்லா வாங்க ஆரம்பிச்சுட்டாகளே. ஜயந்தி ஆண்டி சொல்லின போல அந்த கால கூகுளாண்டவருதா. ஹா ஹா.

  ReplyDelete
 47. மஹானுக்கு மொழிப்புலமை மட்டுமா அபாரமா இருக்கு ஞான திருஷ்டியிலேயே எல்லாத்தையும் தெரிஞ்சுண்டுவாளே.

  ReplyDelete
 48. ஸ்வாமிக்கு கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை.

  அவர் நினைத்தால், எதையுமே கருவியாக உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணமாகும்.// உண்மையில் மனிதர்கள் எல்லோரும் ஆண்டவனின் கருவிகளே!

  ReplyDelete
 49. 'நல்ல உபதேசம் - சிவ விஷ்ணு பேதமின்மை பற்றி.

  பரிசு யாருக்குக் கிடைத்தது என்றும் படித்துத் தெரிந்துகொண்டேன். அதை இன்னும் பத்திரமாக வைத்திருப்பதற்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் September 29, 2016 at 7:05 PM

   வாங்கோ, வணக்கம்.

   //'நல்ல உபதேசம் - சிவ விஷ்ணு பேதமின்மை பற்றி.//

   மகிழ்ச்சி !

   //பரிசு யாருக்குக் கிடைத்தது என்றும் படித்துத் தெரிந்துகொண்டேன். அதை இன்னும் பத்திரமாக வைத்திருப்பதற்குப் பாராட்டுகள்.//

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

   Delete