About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, December 8, 2013

92] சரித்திரம் தொடர்கிறதே !.

2
ஸ்ரீராமஜயம்





நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார்த்தால், அதுதான் இல்லை.

செங்கிஸ்தான், தைமூர், கஜினி, மாலிக்காஃபூர் போலப் பலபேர் அவ்வப்போது தோன்றி, தேசங்களைச் சூறையாடி ஹதாஹதம் செய்திருக்கிறார்கள் என்று சரித்திரத்திலிருந்து தெரிகிறது. 

தெரிந்து கொண்டதால் மட்டும் இப்படிப்பட்ட வெளிப்போக்குகளை நிறுத்த முடிந்திருக்கிறதா என்ன?

இவர்கள் மாதிரியே ஒரு ஹிட்லரும், முஸோலினியும் வந்து மறுபடி ஹதாஹதம் செய்கிறார்கள்.

ஒருகையால் ஈஸ்வரனைப் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் லோக கார்யங்களைப்பண்ணு என்கிறார்கள், பெரியோர்கள்.


oooooOooooo

[ 1 ]

’பவார்’ என்ற காவலாளிக்கு
மஹான் அருளிய 
மகத்தான நிகழ்ச்சிகள்



ஸ்ரீ மஹா பெரியவா மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம். ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை. பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போது ஜமீன்தாரிடம் கேட்டார்: 


“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”



ஜமீன்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?



“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார். அன்றிலிருந்து அந்த வடநாட்டு இளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான்.



அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில். இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.



எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான், ஒவ்வொருவரிடமும் “சாப்பிட்டாயிற்றா?” என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியே வந்தார். பவார் முகாமின் காவலாளியாக வெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாதில்லையா?

“சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று சோகத்தோடு சைகை காட்டினான். 

மடத்து நிர்வாகியை அழைத்தார்.

“நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேளைக்கு சோறு போட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும் நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா? நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் பொட்டல் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். 

நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.

சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில் வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒரு சிறிய தூக்கு.

விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்திற்கு உணவு கொண்டு போவதாகவும், வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர். 

காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார் “இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக் கொடுக்க முடியுமா?” 

ஒரு ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.

“இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கை அங்கேயே வைத்துவிட்டு போய்விடுகிறார். 

தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது. புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல்.

தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.

அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.

பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம். மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து கவனித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. 

பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம் செய்தபிறகு, அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை. பவார் இதை மஹானிடம் சொன்னபோது…. 

“தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும் போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.

ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை. 

மனதில் தயங்கித் தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.

“பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா” என்று வாய் மொழியாக மஹான் சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. 

மஹானின் “மேனா” வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில் திறப்பதும் பவாரின் வேலைதான். அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில் ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.

விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விலக்கிப் பார்த்த பவார் அதிர்ச்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?” பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.

பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்கு அவர்களுடன் போகவில்லை” என்றான். 

சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார் தனக்குதானே கேள்வியை எழுப்பிகொண்டான், என்பது உண்மை.

இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது. 

இடம் கிடைக்காத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…

ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்க ஆரம்பித்துவிட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன் வரக்கூடாது என்று உத்தரவு.

ஒற்றையடிப்பாதை வழியாக மலையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத் தொடங்கினார். சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகை வாயில் தெரிந்தது. ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.

“உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு… “எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான் அவனைப் பார்த்து புன்னகை செய்தபின் குகைக்குள் நுழைந்தார்.

என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது. சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். 

“இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.

உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை. மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின. தன்னையே நம்பாதவனாக, வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.

வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். 

கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். 



[ Thanks to  Amritha Vahini 22.10.2013 ]

oooooOooooo

[ 2 ]

 எறும்புகளின் சரணாகதி"


பெரியவாளோட வலதுகாலில் எப்படியோ சின்னக் காயம் உண்டாகி லேசான ரத்தக் கசிவு இருந்தது. அதில் ஒரு சொட்டு ரத்தம் மாதுளைமுத்துப் போல் இருந்தது. பெரியவாளோ அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், சுற்றி இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். 



ஒரு எறும்பு வந்தது. அந்த காயத்தின் மேல் ஊர்ந்தது. உடனே சங்கேத பாஷை மூலம் செய்தி அனுப்பி, கொஞ்ச நேரத்தில் ஒரு படையே சொந்த பந்தங்களோடு பெரியவாளுடைய சரணத்தில் இருந்த ரத்தக் கசிவை சுவை பார்த்தன. 



"எறும்புகளை தட்டி விடுங்கோ பெரியவா" என்று சொல்ல முடியுமா? சுற்றி இருந்த சிஷ்யர்களுக்கோ ஒரே அவஸ்தை!



அப்போது பெரியவாளிடம் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு பேசக் கூடிய ஒரு பக்தர் வந்தார். உடனே அவரிடம் ரகசியமாக எறும்பைக் காட்டினார்கள் சிஷ்யர்கள். "பெரியவா கால்ல எறும்பு மொய்க்கறதே?" என்று பணிவோடு கூறினார் பக்தர். 



ஒரு செகண்ட் அருள் நிறைந்த பார்வை பார்த்தார் பெரியவா. 

"விபீஷணன் ராமசந்த்ரமூர்த்தியை சரணாகதி பண்ணினான்ன்னு படிக்கறோம். வாயால "சரணாகதி" ன்னு சொன்னான். ஆனா, ராமனோட பாதங்களை இறுகக் கட்டிக்கலை. அப்பிடியிருந்தும் ராமன் ரொம்ப இரக்கப்பட்டு, விபீஷணனுக்கு அடைக்கலம் குடுத்தான். 

"இப்போ இந்த ராமாயணம் எதுக்கு?" சிஷ்யர்களின் சந்தேகத்துக்கு விளக்கம் வந்தது. 

"இந்த எறும்புகளோ, என் காலையே கெட்டியாப் பிடிச்சிண்டிருக்கு! அதுகள் என்ன சொல்லறதுன்னு கேக்காம, ஒதறி விட்டா, அது ஞாயமா? சொல்லுங்கோ" ராமனை விட பலபடிகள் உயர்ந்து நின்றார் பெரியவா! 

"உடல் வேறு ஆன்மா வேறு" என்பதை கண்கூடாக சிஷ்யர்களுக்கு நிரூபித்தார்.

ரத்த சுவைக்காக அவை அவருடைய பாதங்களில் ஊர்ந்ததையே ஒரு வ்யாஜமாகக் கொண்டு, "சரணாகதி" என்று ஏற்றுக் கொண்ட கருணை பெரியவாளைத் தவிர யாருக்கு வரும்? 

நம் மேல் ஒரு எறும்பு ஊறினால் கூட, அடுத்த செகண்ட் அது உருத் தெரியாமல் நசுங்கி விடும். நமக்கும் நல்லறிவை தர பெரியவாளிடம் பிரார்த்தனை செய்வோம்.


[Thanks to Amritha Vahini 19.11.2013]




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.



இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

86 comments:


  1. இறைவன் எல்லா இடத்திலும் இருக்கின்றார் ..நாம் அற்ப மனிதர்கள் தான் அவரை அங்கே ! இங்கே என தேடி வருகின்றோம் ..நமக்கு என்ன தேவை என்பதையும் அறிந்த சர்வேஸ்வரன் ...!!!அருமையான பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா


    ReplyDelete
  2. அப்புறம் :))

    அன்புள்ள கோபு அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. Cherub Crafts December 8, 2013 at 1:37 AM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      //அன்புள்ள கோபு அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .//

      ஆஹா, வழக்கமாக வந்து போகும் சாதாரணமானவனின் மிகச்சாதாரணதொரு பிறந்த நாளை இப்படி ஊரறியச் செய்து விட்டீர்களே ! ;)

      போதாக்குறைக்குத் தனிப்பதிவு வேறு போட்டு அசத்தியுள்ளீர்கள்.

      எனினும் *எல்லாவற்றிற்கும்* மிக்க நன்றி, நிர்மலா.

      [*Special Sunday Prayer in Church*]

      அன்புடன் கோபு அண்ணா

      Delete
  3. அடடா பிறந்தநாளன்று போட்டிருக்கும் பதிவோ இது?? .. இறைவன் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார்ர்.. அதிராவிலும் இருப்பார்ர்.. ஆரு கண்டா?:))... இப்ப அதுவோ முக்கியம்..:))

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபு அண்ணன்:)) நாந்தான் 1ஸ்ட்டா:) அதுவும் அஞ்சுவுக்கு முன் சொன்னேனாக்கும் இங்கே:))

    ReplyDelete
    Replies
    1. asha bhosle athira December 8, 2013 at 2:34 AM

      //இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபு அண்ணன்:))//

      மிக்க நன்றி, அதிரா. ;))

      Delete
  4. நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
    என்பது எவ்வளவு உண்மை. நாம் இன்னும் கற்றுக்கொண்டே தான்
    இருக்கிறோம், நிகழ்வுகளும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கின்றன.
    அருமையாகச் சொன்னீர்கள் ஐயா..
    ===
    காவலாளிக்கு மகான் அருளியது ஆனந்தம்.
    ==
    நாம் அனுபவிப்பது துன்பமெனினும் அது
    வேறொருவருக்கு இன்பமாக இருந்தால் அதை
    ஏற்றுக்கொள்ளும் பக்குவம் .. இதனால் அவர் மகான்..

    ReplyDelete
  5. ஐயா...
    தங்களுக்கு இன்று பிறந்தநாளா...

    ஆன்மீக கருக்களை
    எம்முள் ஊற்றெடுக்கச் செய்யும்
    பதிவுகளை தினந்தோறும் தந்து
    எம்மையும் எம் மனத்தினையும்
    சுத்தமுறச் செய்யும்
    உங்களுக்கு என் மனமார்ந்த
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    பசுபதி கோமகனும்
    அவனுடல் ஏகிய உமையாளும்
    எந்நாளும் நன்னலமும்
    நல்வளமுடனும் நீவீர் வாழ்ந்திட
    அருளாசி பொழியட்டும்...

    ReplyDelete
    Replies
    1. மகேந்திரன் December 8, 2013 at 4:36 AM

      வாருங்கள் .... வணக்கம்.

      //ஐயா... தங்களுக்கு இன்று பிறந்தநாளா...

      ஆன்மீக கருக்களை எம்முள் ஊற்றெடுக்கச் செய்யும் பதிவுகளை தினந்தோறும் தந்து எம்மையும் எம் மனத்தினையும் சுத்தமுறச் செய்யும் உங்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

      பசுபதி கோமகனும் அவனுடல் ஏகிய உமையாளும்
      எந்நாளும் நன்னலமும் நல்வளமுடனும் நீவீர் வாழ்ந்திட
      அருளாசி பொழியட்டும்...//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  6. அன்பின் வை.கோ

    சரித்திரம் தொடர்கிறதே - பதிவு அருமையான பதிவு - அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

    சரித்திரம் படித்ததனால் ஏதேனும் படிப்பினை தெரிந்து கொள்கிறோமா என்றால் இல்லை - துயரங்கள் வராமல் காத்துக் கொள்கிறோமோ - இல்லவே இல்லை -

    //
    ஒருகையால் ஈஸ்வரனைப் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் லோக கார்யங்களைப்பண்ணு என்கிறார்கள், பெரியோர்கள்.
    //

    சிந்தனை நன்று வை,கோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. அன்பின் வை.கோ

    பவாருக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா அளித்த மகத்தான நிகழ்ச்சிகள் விளக்கப் பட்டது நன்று - உம்மாச்சித் தாத்தா உம்மாச்சித் தாத்தா தான் - நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. அன்பின் வை.கோ

    எறும்புகளீன் சரணாகதி -பதிவு அருமை

    இராம பிரானிடம் விபீஷணன் சரணாகதி அடைந்த விதத்தினைக் கூறீ அது போல எறும்புக் கூட்டத்தின சரணாகதி இது என ஏற்றுக் கொண்ட விதம் பெரியவாளின் குண நலன்களை விளக்குகிறது.

    நல்வாழ்த்துகள் - நட்புடன்சீனா

    ReplyDelete
  9. அன்பின் வை.கோ

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) December 8, 2013 at 5:46 AM

      அன்பின் திரு சீனா ஐயா அவர்களே,

      வாங்கோ, வணக்கம்.

      அன்பின் வை.கோ

      //இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      Delete
  10. மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஜெயக்குமார் December 8, 2013 at 5:49 AM

      வாருங்கள், வணக்கம்.

      //மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா//

      மிக்க நன்றி.

      Delete
  11. வணக்கம்
    ஐயா

    பதிவில் சிந்தனை ஊட்டம் கருத்துக்கள்... அருமை வாழ்த்துக்கள் ஐயா...தொடருகிறேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி December 8, 2013 at 8:51 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!//

      தங்களின் அன்பான வருகைக்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  13. ஒருகையால் ஈஸ்வரனைப் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் லோக கார்யங்களைப்பண்ணு என்கிறார்கள், பெரியோர்கள்.


    ஆதாரத்திற்கு தூணைப்பற்றிச் சுற்றிச்சுழலுவது போல , ஆதவனை மையமாக வைத்து கிரகங்கள் சுழலுவது போல , இதயத்தை மையமாக வைத்து இரத்தம் சுற்றி வருவதுபோல்
    ஈஸ்வரனை மையமாக வைத்து பற்றிக்கொண்டு
    உலக காரியங்களில் செயல்படுவது
    ஊக்கமாக திகழும் ..!

    ReplyDelete
  14. விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விலக்கிப் பார்த்த பவார் அதிர்ச்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.

    இஷ்ட தெய்வத்தின் கண் நிறைந்த இனிய காட்சி பெற்றவ்ர் புண்ணியம் செய்தவர் ..!

    ReplyDelete
  15. இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை. மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின. தன்னையே நம்பாதவனாக, வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்

    ஹனுமத்தரிசனம் நிறைவளித்தது ..!

    ReplyDelete
  16. இந்த எறும்புகளோ, என் காலையே கெட்டியாப் பிடிச்சிண்டிருக்கு! அதுகள் என்ன சொல்லறதுன்னு கேக்காம, ஒதறி விட்டா, அது ஞாயமா? சொல்லுங்கோ" ராமனை விட பலபடிகள் உயர்ந்து நின்றார் பெரியவா!

    விஸ்வரூப தரிசனமும் கிடைத்தது நம்க்கு ..!

    ReplyDelete
  17. “பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?” பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.//
    இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை. மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின. தன்னையே நம்பாதவனாக, வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.


    வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார்.
    //
    உடல் வேறு ஆன்மா வேறு" என்பதை கண்கூடாக சிஷ்யர்களுக்கு நிரூபித்தார்.
    ரத்த சுவைக்காக அவை அவருடைய பாதங்களில் ஊர்ந்ததையே ஒரு வ்யாஜமாகக் கொண்டு, "சரணாகதி" என்று ஏற்றுக் கொண்ட கருணை பெரியவாளைத் தவிர யாருக்கு வரும்?
    //

    நெகிழச்செய்த வரிகள்! தொடரட்டும் தங்களின் பதிவுகள்!
    மஹா பெரியவாளின் ஆசிகளுடன் வாழ்க பல்லாண்டு! நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. December 8, 2013 at 9:09 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மஹா பெரியவாளின் ஆசிகளுடன் வாழ்க பல்லாண்டு!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  18. மெய் சிலிர்க்கின்றது.. ஐயா!..

    ஜய ஜய சங்கர!..
    ஹர ஹர சங்கர!..

    ReplyDelete
  19. இன்று - தங்களின் பிறந்த நாள்?!..

    பல்லாண்டு பல்லாண்டு - வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜூ December 8, 2013 at 9:31 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்று - தங்களின் பிறந்த நாள்?!.. //

      அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள். ;)

      //பல்லாண்டு பல்லாண்டு - வாழ்க வளமுடன்!..//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  20. மனதை மிகவும் கவர்ந்த மகத்தான நிகழ்ச்சி, "உடல் வேறு ஆன்மா வேறு" - விளக்கம் பிரமாதம்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. பவாருக்கு பாலாஜியாகவும் தரிசனம் அவருக்காக உணவுஏற்பாடு செய்தகருணை பெரியவாளோடு தனியாகசென்று ஆஞ்ஜனேய தரிசனம் உண்மையில்பவார் அரிய புண்ணியம் செய்து இருக்கிறார் அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  22. எறும்பிற்குக் கொடுத்த கருணை -
    தூக்குச் சட்டியில் உணவு
    மகான் கருணையோ கருணை!.
    இனிய நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  23. இறைஅருள் பெற்ற குரு துணையிருக்க
    இவ்வுலகில் துன்பம் ஏது?
    எல்லாம் இன்பமே.
    அருமையான செய்திகளை உள்ளடக்கிய
    பதிவு.பாராட்டுகள்VGK

    ReplyDelete
  24. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நமஸ்காரங்கள்.
    பவார் என்ன புண்ணியம் பன்னிஇருக்க வேண்டும்?
    எப்போதும் நடமாடும் தெய்வத்துடன் இறுக்க கொடுத்த வைத்தவர்.
    அவரே ஸ்வாமிய காண்பித்து வைத்தது எவ்வளவு புண்ணியம்

    ReplyDelete
    Replies
    1. viji December 8, 2013 at 12:37 PM

      //நமஸ்காரங்கள்.//

      வாங்கோ விஜி, வணக்கம். ஆசீர்வாதங்கள்.

      //மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் //

      தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த அழகான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  25. ஆக்கமும் ஊக்கமும் அளித்திடும்
    அழகிய சிந்தனை தினம் தரும்
    நாம் போற்றிடும் மனமே வாழிய நீ
    புண்ணிய நற் பலன் பெற்றுலகில் ....

    சேற்றிலே மலர்ந்த செந்தாமரை போல்
    முகம் செழிப்புடன் என்றும் திகழ்ந்திடவே
    ஈற்றில் இறைவன் துணையிருப்பான்
    ஈடிலாப் புகழையும் தந்தருள்வான் ......

    வாட்டமோ சிறிதும் இல்லாமல்
    வலம் வர வேண்டும் எந்நாளும்
    நீ காட்டிடும் அன்பில் நாம் மகிழ
    வலைத் தளம் தந்த எம் இனிய நட்பே ...

    வாழிய வாழிய பல்லாண்டு
    வளம் பல பெற்று இங்கு நூறாண்டு
    நாளது இனித்திட எந்நாளும்
    நற்றுணையான பொருள் கைகூட .....

    ReplyDelete
    Replies
    1. அம்பாளடியாள் வலைத்தளம் December 8, 2013 at 1:03 PM

      வாங்கோ கவிதாயினி, வணக்கம்.

      //வாட்டமோ சிறிதும் இல்லாமல்
      வலம் வர வேண்டும் எந்நாளும்
      நீ காட்டிடும் அன்பில் நாம் மகிழ
      வலைத் தளம் தந்த எம் இனிய நட்பே ...

      வாழிய வாழிய பல்லாண்டு
      வளம் பல பெற்று இங்கு நூறாண்டு
      நாளது இனித்திட எந்நாளும்
      நற்றுணையான பொருள் கைகூட .....//

      ஆஹா, அற்புதமான கவிதை மழையில் என்னை நனைத்து, என் மனதையும் உடலையும் ஈரமாக்கி விட்டீர்கள்.

      நன்றி! நன்றி!! நன்றி !!!

      Delete
  26. ஒருகையால் ஈசுவரனைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் லோகக் காரியங்களைப் பண்ணணும்.அறிவு பூர்வமான உபதேசம்,
    பவாருக்கு, பாலாஜியாகவும், ஆஞ்ஜநேயராகவும் தரிசனம் தந்த
    வர். பவார் செய்த பாக்கியம் எவ்வளவு உயர்வானது.
    ரத்த வாஸனைக்கு கடிக்கும் எறும்புகளை,சரணாகதி தத்துவத்துடன் ஒப்பிட்டு, பொருமையுடன் உதராமலிருந்த பண்பு யாருக்கு வரும்?நிறைய சிந்திக்க வேண்டிய விஷயங்களடங்கிய பதிவு.
    உங்களுக்குப் பிறந்தநாள் நல் வாழ்துகளையும், அநேக கோடி ஆசீர்வாதங்களையும், அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi December 8, 2013 at 3:12 PM

      //உங்களுக்குப் பிறந்தநாள் நல் வாழ்த்துகளையும், அநேக கோடி ஆசீர்வாதங்களையும், அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//

      பிரியமுள்ள காமாக்ஷி மாமி, வாங்கோ !

      தங்களுக்கு என் அனந்தகோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அநேக கோடி ஆசீர்வாதங்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மாமி.

      அன்புடன் கோபு

      Delete
  27. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வைகோ சார் !

    மஹா பெரியவர் கடவுள் தான் என்பதை பவாருக்கு மிக அருமையாக தரிசனம் மூலம் புரிந்து விட்டது. என்னே பவார் செய்த புண்ணியம்!

    ReplyDelete
    Replies
    1. rajalakshmi paramasivam December 8, 2013 at 4:11 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பிறந்தநாள் வாழ்த்துக்கள் வைகோ சார் !//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  28. மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வை.கோ. சார். அற்புதமான பதிவு. குருவையே தெய்வமாகக் கண்ட பவார் செய்த புண்ணியம் மெய்சிலிர்க்கச் செய்கிறது. பகிர்விற்கு நன்றி சகோ.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
    Replies
    1. நித்திலம்-சிப்பிக்குள் முத்து December 8, 2013 at 5:03 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வை.கோ. சார். //

      தங்களின் அன்பான வருகைக்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  29. நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நெஞ்சம் நெகிழவைக்கின்றன. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

    தங்களுக்கு என் இனிய மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி December 8, 2013 at 5:39 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்களுக்கு என் இனிய மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் மனம் கனிந்த இனிய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  30. சொல்லி இருக்கும் நிகழ்வுகள் இரண்டுமே மனதைத் தொட்டன......

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ் December 8, 2013 at 7:04 PM

      வாங்கோ, வெங்கட் ஜி, வணக்கம்.

      //தங்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....//

      தங்களின் அன்பான வருகைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  31. நிகழ்வுகள் படிக்கப் படிக்க
    நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani S December 8, 2013 at 7:11 PM

      வாங்கோ, திரு. ரமணி, சார்; வணக்கம்.

      //இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் இனிய நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  32. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :) இன்றைய பதிவும் மிக அற்புதமாய்.. சொல்லி வைத்த மாதிரி..

    ReplyDelete
    Replies
    1. ரிஷபன் December 8, 2013 at 7:37 PM

      வாங்கோ என் அன்புக்குரிய திரு ரிஷபன் சார், வணக்கம்.

      //இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :) //

      தங்களின் அன்பான வருகைக்கும் இனிய நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  33. இரண்டு செய்திகளுமே அருமை...
    பெரியவரின் கருணையே கருணை...
    பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  34. பிறந்தநாள் வாழ்த்துக்களும் என் நமஸ்காரங்களும்.....

    பெரியவாளின் கருணையை வியந்து கொண்டேயிருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. middleclassmadhavi December 9, 2013 at 9:29 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பிறந்தநாள் வாழ்த்துக்களும் என் நமஸ்காரங்களும்.....//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அநேக ஆசீர்வாதங்கள். சகல செளபாக்யங்களுடனும் நீடூழி வாழ பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிறேன்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  35. அட?? நேற்று உங்கள் பிறந்த நாளா? முதல்லேயே வந்து பார்த்திருக்கணும். நீங்க அனுப்பின மெயில் பின்னாடி இருந்ததா, இன்னிக்குத் தான் பார்த்தேன்.

    தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லா நலனும் பெற்றுப் பூரண உடல் ஆரோக்கியத்துடன் வாழவும் வாழ்த்துகள்.

    அருமையான பகிர்வுக்கு நன்றி. பவார் குறித்துப் படித்திருந்தாலும் எறும்புகளின் சரணாகதி குறித்து இப்போது தான் படித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam December 9, 2013 at 2:27 PM

      வாங்கோ .... வணக்கம்.

      //அட?? நேற்று உங்கள் பிறந்த நாளா? //

      அப்படித்தான் சொல்கிறார்கள். எனக்கே மறந்து போச்சு.

      முதல் பின்னூட்டம் கொடுத்துள்ள என் அன்புச் சகோதரி நிர்மலா தான் நினைவூட்டினாள்.

      //முதல்லேயே வந்து பார்த்திருக்கணும். நீங்க அனுப்பின மெயில் பின்னாடி இருந்ததா, இன்னிக்குத் தான் பார்த்தேன். //

      அதனால் பரவாயில்லை. தினமும் நான்கு பதிவுகள் தரும் தங்களுக்கு இதற்கெல்லாம் நேரம் ஏது? ;)))))

      //தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லா நலனும் பெற்றுப் பூரண உடல் ஆரோக்கியத்துடன் வாழவும் வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் இனிய அழகான நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.








      Delete
  36. "உடல் வேறு ஆன்மா வேறு" - விளக்கம் பிரமாதம்

    Good article...

    ReplyDelete
  37. கோபு சார், மறதி பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். சில நேரங்களில் மறக்க வேண்டியவை நினைவிலும் நினைக்க வேண்டியவைகள் மறந்தும் போகின்றன. என் மக்கள் மறந்து விட்டது என்று சொன்னால் அதில் அதிக கவனமும் அக்கறையும் இருக்கவில்லை என்று கடிந்து கொள்வேன். இப்போது என்னை யார் கடிந்து கொள்வது. அண்மையில் உங்கள் பிறந்த நாள் பற்றி பின்னூட்டதில் எழுதி இருந்தது நினைவுக்கு வராமல் போய் விட்டது. ஒரு நாள் தாமதமானாலும் நீடூழி எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. G.M Balasubramaniam December 9, 2013 at 4:11 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //கோபு சார், மறதி பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்.//

      பார்த்தேன், படித்தேன், பின்னூட்டமும் கொடுத்திருந்தேன். மறக்காமல் நினைவில் உள்ளது. ;)

      //சில நேரங்களில் மறக்க வேண்டியவை நினைவிலும் நினைக்க வேண்டியவைகள் மறந்தும் போகின்றன.//

      வாஸ்தவம் தான். மறக்க வேண்டியவைகள், நமக்கு ஏற்படும் பாதிப்பினால் மறக்க முடியாமல் இருக்கின்றன. நினைக்க வேண்டியவை, நமக்கு அதில் ஆதாயம் ஏதும் இல்லாமல் இருக்கும்போது மறந்து போகின்றன என்பது என் சொந்த அபிப்ராயம்.

      // என் மக்கள் மறந்து விட்டது என்று சொன்னால் அதில் அதிக கவனமும் அக்கறையும் இருக்கவில்லை என்று கடிந்து கொள்வேன்.//

      நானும் அதுபோலத்தான், ஐயா.

      //இப்போது என்னை யார் கடிந்து கொள்வது?//

      தாங்கள் [மனதில் இளமையானாலும்] வயதில் மூத்தவர் என்பதால் உங்களை யாருமே கடிந்து கொள்ள முடியாது. கடிந்து கொள்ளவும் கூடாது.

      //அண்மையில் உங்கள் பிறந்த நாள் பற்றி பின்னூட்டதில் எழுதி இருந்தது நினைவுக்கு வராமல் போய் விட்டது. //

      அடடா, அதனால் பரவாயில்லை ஐயா. என் பிறந்த நாளை, சம்பந்தப்பட்ட நானே, சில சமயங்களில் மறந்து விடுவதும் உண்டு. இந்தமுறை என் அன்புச்சகோதரி நிர்மலா தான் [இந்தப்பதிவுக்கு முதன் முதலாகப் பின்னூட்டம் கொடுத்துள்ள Cherub Crafts என்னும் நிர்மலா] நினைவுப் ப-டு-த்-தி விட்டார்கள். அவர்கள் தளத்தில் ஓர் தனிப்பதிவும் வெளியிட்டு அமர்க்களப் படுத்தியுள்ளார்கள்.
      \
      //ஒரு நாள் தாமதமானாலும் நீடூழி எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டுகிறேன்.//

      அதுபோதும் ஐயா. தங்கள் ஆசிகள் ஒன்றே போதும் எனக்கு. மிக்க மகிழ்ச்சி ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      Delete
  38. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைய விரும்பாத பவார். அருமையான விளக்கம்.

    ReplyDelete
  39. நேற்று (08.12.2013) உங்கள் பிறந்தநாள் என்பது தெரியாமல் போய்விட்டதே! அதனால் என்ன? நல்லோருக்கு எல்லாநாளும் பிறந்தநாளே! எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

    VGK அவர்களின் இனிய பிறந்த நாளை கருத்துரைப் பெட்டியிலும், தனி பதிவாகவும் http://kaagidhapookal.blogspot.in/2013/12/blog-post.html வெளிப்படுத்திய சகோதரி ஏஞ்சலின் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ December 9, 2013 at 7:24 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //நேற்று (08.12.2013) உங்கள் பிறந்தநாள் என்பது தெரியாமல் போய்விட்டதே! அதனால் என்ன? நல்லோருக்கு எல்லாநாளும் பிறந்தநாளே! எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்! //

      அதனால் பரவாயில்லை ஐயா. எனக்கும் அது மறந்தேதான் போனது ஐயா. நம் அன்புச்சகோதரி ஏஞ்சலின் நிர்மலா தான் நினைவு படுத்தினாங்க ஐயா.

      மேலும் நாங்கள் தமிழ் கணக்குப்படி கார்த்திகை மாதம் புனர்பூச நக்ஷத்திர நாளை மட்டுமே என் பிறந்த நாள் என நினைத்து சில சிறப்புப்பிரார்த்தனைகள் செய்வது உண்டு. அதன்படி அது இந்த ஆண்டு 22.11.2013 அன்றே முடிந்து விட்டது, ஐயா.

      //VGK அவர்களின் இனிய பிறந்த நாளை கருத்துரைப் பெட்டியிலும், தனி பதிவாகவும் http://kaagidhapookal.blogspot.in/2013/12/blog-post.html வெளிப்படுத்திய சகோதரி ஏஞ்சலின் அவர்களுக்கு நன்றி!//

      ஆமாம் ஐயா, அஞ்சு என்றும், ஏஞ்சலின் என்றும் பிறராலும் நிர்மலா என்று என்னாலும் அழைக்கப்படும் அவர்களுக்கு என்மீது அளவு கடந்த பிரியமும் பாசமும் உள்ளது நான் செய்த பெரும் பாக்யம் ஐயா.

      எனக்காக, என் பிறந்த நாளுக்காக நேற்று அவர்களின் தேவாலயத்தில் ஸ்பெஷல் பிரார்த்தனைகளும் செய்துள்ளார்கள் ஐயா.

      பெரும்பாலும் இரவு நேரங்களில் கண்விழித்து கம்ப்யூட்டரில் இருக்கும் என்னை, என் உடல்நலத்தை உத்தேசித்து, உரிமையுடன் அவர்கள் கண்டிப்பதும் உண்டு, ஐயா. அவர்களின் அன்பு வேண்டுகோளுக்காக நானும், என் கணினியிலிருந்து உடனடியாக பிரியாவிடை பெறுவதும் உண்டுதான், ஐயா..

      என் மீது உண்மையிலேயே அக்கறையுள்ள தாங்கள், இந்த அஞ்சு, மற்றொரு மஞ்சு .... இன்னும் பட்டியலில் பலரும் உள்ளனர். எல்லோர் பெயரையும் எழுதினால் அதில் விட்டுப்போகும் ஒரு சிலரிடம் நான் மாட்டிக்கொள்ள நேரிடும். ;) அதனால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

      வலையுலகம் கொடுத்துள்ள நட்பென்னும் அனைத்துத் தங்கங்களுக்கும், வைரங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      அன்புடன் VGK

      Delete
  40. Nice Post.. thanks for sharing..

    ReplyDelete
  41. பவார் செய்த பாக்கியம் மிகப்பெரியது.
    தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். (அடுத்த வருட பிறந்தநாளைக்குள் சொல்லிவிட்டேன்!)

    ReplyDelete
    Replies
    1. Ranjani Narayanan December 10, 2013 at 5:38 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். (அடுத்த வருட பிறந்தநாளைக்குள் சொல்லிவிட்டேன்!)//

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான , வாழ்த்துகளுக்கும், அட்வான்ஸ் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  42. ஐயாவிற்கு வணக்கம்..
    ’பவார்’ என்ற காவலாளிக்கு
    மஹான் அருளிய
    மகத்தான நிகழ்வுகளைப் படிக்க படிக்க உள்ளம் நெகிழ்ந்து ஐயா. சிறப்பான தகவல்கள் அனைத்தும் மகான் பெரியவா அவர்கள் மீது பக்தியை மிகுவிக்கிறது. தங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் நன்றீங்க ஐயா.

    ReplyDelete
  43. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!!

    பவாரை பற்றி படிக்கும் போது நெகிழ்ச்சியா இருக்கு..பெரியவரின் கருணையே கருணைதான்..

    ReplyDelete
    Replies
    1. Menaga sathia December 11, 2013 at 9:53 PM

      வாங்கோ மேனகா, வணக்கம்.

      //தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!!//

      மிக்க நன்றி, மேனகா,

      Delete
  44. "ஒருகையால் ஈஸ்வரனைப் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் லோக கார்யங்களைப்பண்ணு என்கிறார்கள்,"


    இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. பவாருக்கு கிடைத்த அரிய பேறு....

    தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் சார்...

    ReplyDelete
    Replies
    1. ADHI VENKAT December 13, 2013 at 12:35 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் சார்...//

      மிக்க நன்றி.

      Delete
  46. தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.//
    நெகிழ வைத்த நிகழ்வு.
    மஹான் கருணை மிகுந்தவர்.
    உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    இறைவன் உங்களுக்கு எல்லா, வளமும், நலமும் தருவார்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு December 15, 2013 at 7:31 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
      இறைவன் உங்களுக்கு எல்லா, வளமும், நலமும் தருவார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் இனிமையான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
      வாழ்க வளமுடன்.

      Delete
  47. பிறந்த நாள் சிறப்பு இடுகை பரவசப்படுத்தியது! நன்றி! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  48. பசித்தவனுக்கு நான் ரொட்டியாகக் காட்சி தருவேன் என்று பகவான் சொன்னது நடக்கிறது.

    ReplyDelete
  49. அடுத்த பிறந்ததினமே நெருங்கிடுத்து இப்ப வாழ்த்து சொன்னா எப்படி இருக்கும்😀😀😀

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் August 23, 2015 at 6:08 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //அடுத்த பிறந்ததினமே நெருங்கிடுத்து. இப்ப வாழ்த்து சொன்னா எப்படி இருக்கும்������ //

      அதனால் பரவாயில்லை பூந்தளிர். பூமி எப்போதும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருவதுபோல நாட்கள் வெகு வேகமாகத்தான் ஓடி வருகின்றன.

      23.08.2014 என்பதும் எனக்கு ஓர் மறக்க முடியாத நாள்தான். அந்த நாள் முடிந்தும் இப்போது மிகச்சரியாக ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. மனக்கசப்புகள் சிலவற்றிற்கு தங்களின் இன்றைய வருகை ... அதுவும் மிக விஷேசமான ஆவணி ஞாயிற்றுக்கிழமையன்று .... என் மனதுக்கு மாமருந்தாக உள்ளது. மிக்க நன்றிம்மா.

      Delete
  50. // செங்கிஸ்தான், தைமூர், கஜினி, மாலிக்காஃபூர் போலப் பலபேர் அவ்வப்போது தோன்றி, தேசங்களைச் சூறையாடி ஹதாஹதம் செய்திருக்கிறார்கள் என்று சரித்திரத்திலிருந்து தெரிகிறது. //

    ம்ம்ம். ஔரங்காபாத் சென்றிருந்த போது அந்த குகைக் கோவில்களில் இவர்களின் அட்டகாசத்தைப் பார்க்க முடிந்தது. கை, கால் இல்லாத சிற்பங்கள், தும்பிக்கை இல்லாத யானை, இப்படி எவ்வளவோ? எப்படித்தான் இப்படிப்பட்ட படைப்புகளை உடைக்க மனம் வந்ததோ?

    ReplyDelete
  51. பவாருக்கு அருளிய விதம். அப்பப்பா. மெய் சிலிர்த்துப் போயிற்று.

    குகையில் மாருதியை தரிசிக்கும் பேறு பெற்ற பவார் ரொம்ப, ரொம்ப புண்ணியம் செய்தவர்.

    // "இந்த எறும்புகளோ, என் காலையே கெட்டியாப் பிடிச்சிண்டிருக்கு! அதுகள் என்ன சொல்லறதுன்னு கேக்காம, ஒதறி விட்டா, அது ஞாயமா? சொல்லுங்கோ" ராமனை விட பலபடிகள் உயர்ந்து நின்றார் பெரியவா! //

    சொல்ல ஒரு வார்த்தை இல்லை. நெக்குறுகிப் போனேன்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 21, 2015 at 4:16 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //குகையில் மாருதியை தரிசிக்கும் பேறு பெற்ற பவார் ரொம்ப, ரொம்ப புண்ணியம் செய்தவர்.// :)

      ** "இந்த எறும்புகளோ, என் காலையே கெட்டியாப் பிடிச்சிண்டிருக்கு! அதுகள் என்ன சொல்லறதுன்னு கேக்காம, ஒதறி விட்டா, அது ஞாயமா? சொல்லுங்கோ" ராமனை விட பலபடிகள் உயர்ந்து நின்றார் பெரியவா! **

      //சொல்ல ஒரு வார்த்தை இல்லை. நெக்குறுகிப் போனேன். //

      தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  52. இன்னக்கு உங்கட பொறந்த நாளோ. வாழ்த்துகள். ஆண்டவன்தா அல்லா எடத்திலயும் நிறஞ்சிருப்பாருங்குராங்க. நீங்க கூடதா எங்கட அல்லா மனசிலயும் நெறஞ்சிருக்கீக. உங்கள போட்டோ படத்திலயாவது காண ஏலுது அந்த ஆண்டவன காணவே ஏலலியே.

    ReplyDelete
  53. நான் இங்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்குள் அடுத்தடுத்த பிறந்த நாளே வந்தாச்சி. பவாருக்கு அருட் பார்வை கிடைத்து விட்டது. அதுமட்டுமா இந்த எறும்புகளுக்கும் கூடத்தான்.

    ReplyDelete
  54. மஹான்களுக்கு எல்லா உயிர்களும் ஒன்றுதான்.

    ReplyDelete
  55. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (24.10.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://www.facebook.com/groups/396189224217111/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  56. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ நேற்று (29.10.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=517448368757862

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete