About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, December 22, 2013

99 ] அன்னதான மஹிமை - 2 of 3

2
ஸ்ரீராமஜயம்அன்னதான சிறப்புக்கு 
மஹாபெரியவா சொன்ன 
உண்மைக்கதை. 

முன்கதைச் சுருக்கம்

http://gopu1949.blogspot.in/2013/12/98-1-of-3.html

பல வருடங்களுக்கு முன்பு காஞ்சி மஹாஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக்கிழமை. தரிஸனத்திற்கு ஏகக்கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். 

ஒரு நடுத்தர வயது தம்பதி, ஆசார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கைகூப்பி நின்றனர். 

அவர்களைக்கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், “அடேடே ..... யாரு .... பாலூர் கோபாலனா! ஒரு வருஷத்துக்கு முன்னால் வந்திருந்தே! அப்போ என்னவோ கஷ்டத்தையெல்லாம்  சொல்லிண்டு வந்தயே ..... இப்போ செளக்யமா இருக்கேயோல்லியோ ! என்று சிரித்துக்கொண்டே வினவினார்.

உடனே அந்த பாலூர் கோபாலன், “பரம செளக்யமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ண படியே நித்யம் மத்யான வேளைல ஒரு ’அதிதி’க்கு [எதிர்பாராத விருந்தாளின்னு சொல்லலாம்] சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வறது பெரியவா! வயல்கள்ல விளைச்சல் நன்னா ஆறது ...... முன்ன மாதிரி பசுமாடுகள் மரிச்சுப்போறதில்லே! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம், இப்போல்லாம் கையிலே தங்கறது. 

எல்லாம் நீங்க அனுக்ரஹம் செய்து சொன்ன அதிதி போஜன மஹிமைதான் பெரியவா .... தினமும் செஞ்சிண்டுருக்கேன். வேற ஒண்ணுமே இல்லை” என்று கண்களில் நீர் மல்கக் கூறினார். அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர்.

உடனே ஆச்சார்யாள், “ பேஷ் ... பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாகறதுங்கறதப் புரிஞ்சிண்டா  சரிதான் ..... அது சரி, இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் கிளம்பி இங்கே வந்துட்டேளே ... அங்க பாலூர்லே யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா?” என்று கவலையுடன் விசாரித்தார்.

உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு ”அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணிவெச்சுட்டுத்தான் பெரியவா வந்திருக்கோம்.  ஒரு நா கூட அதிதி போஜனம் விட்டுப்போகாது” என்றாள்.

இதைக்கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம ஸந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கிறதுலே  ஒரு வைராக்யம் வேணும். அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”


- குதூகுலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்ரஹ வார்த்தைகளைக் கேட்டு மகிழ, க்யூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர். அனைவரையும் கீழே அமரச்சொல்லி ஜாடை காட்டினார், ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.


ஒரு பக்தர் ஸ்வாமிகளைப்பார்த்துக் கேட்டார், ”அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மஹிமை இருக்கா ஸ்வாமீ?”


உடனே ஸ்வாமிகள், “ஆமாமாம்! மோட்சத்துக்கே அழைச்சுண்டு போகக்கூடிய மஹாப் புண்ய தர்மம் அது. ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணியிருக்கு! அத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள்ட்ட கேட்டாத்தான் சொல்லுவா. அப்பேர்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!” என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.

ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டு, பெளவ்யமாக, “என் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாள் .... நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்றோம் ... இந்த அதிதி போஜன மஹிமையைப்பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா ..... நாங்கள்ளாம் நன்னா புரிஞ்சிக்கிறாப்போல கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும்” என்றார். 


அவரை அமரச்சொன்னார் ஸ்வாமிகள். பக்தரும் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பரப்பிரும்மம் பேச ஆரம்பித்தது. 


”ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தெட்டு [1938-39] .... முப்பத்தொன்பதாம் வருஷம்ன்னு ஞாபகம்.ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்திலே [கும்பகோணம்] நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. 


அப்போ நடந்த ஒரு சம்பவத்தத்தான் இப்போ நா சொல்லப்போறேன். அத நீங்கள்ளாம் ஸ்ரத்தையாக் கேட்டுட்டாளே, இதுலே இருக்கற மஹிமை நன்னாப் புரியும்!  சொல்றேன் ... கேளுங்கோ ... சற்று நிறுத்திவிட்டு, தொடர்ந்தார் ஸ்வாமிகள்.


கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்ட கரையிலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்ன்னு பலசரக்கு வியாபாரி ஒருவர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு ..... அவரோட தர்மபதினி பேர் சிவகாமி ஆச்சி. அவா காரைக்குடி பக்கத்துல பள்ளத்தூரைச் சேர்ந்தவா. அந்த தம்பதிக்குக் கொழந்த குட்டி கெடயாது.  


கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேந்து நம்பகமான ஓர் செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டுருந்தா. தொடரும்

பகுதி - 2 of 3

குமரேசன் செட்டியாருக்கு அப்போது ஐம்பது ... ஐம்பத்தைந்து வயசு இருக்கலாம். அந்த ஆச்சிக்கு ஐம்பதுக்குள்ள இருக்கும். சதாசர்வ காலமும் அவா ரெண்டுபேரோட வாய்லேர்ந்தும் “சிவ...சிவ” ..... ”சிவ...சிவ” ங்கற நாமஸ்மரணம் தான் வந்துகொண்டிருக்கும். வேற பேச்சே கிடையாது. 

செட்டியார் வீட்ல ஒரு ஒத்தைமாட்டு வண்டி உண்டு. அதுல ஆச்சியை ஒட்கார வெச்சுண்டு செட்டியாரே ஓட்டிண்டு போவார்! நித்தியம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் காவேரி ஸ்நானம் பண்ண வருவா. ஸ்நானத்தை முடிச்சிண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்கரம் பண்ணிப்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா. 

அப்டி ஒரு அந்நோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாளப்பத்தி இதையெல்லாம் தூக்கியடிக்கக்கூடிய ஒரு சம்பவம் சொல்லப்போறேன் பாருங்கோ. - சொல்லிவிட்டு கொஞ்சநாழி சஸ்பென்ஸாக மெளனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள்.

சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப்போகிறாரோ என ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத்தொடங்கினார். 

“பல வருஷங்களா அந்த தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா? அதிதிகளுக்கு உபசாரம் பண்றது! ஆச்சர்யப்படதீங்கோ! பிரதி தினமும் மத்யானம் எத்தனை சிவனடியார்கள் அதிதியா வந்தாலும், அவாளுக்கெல்லாம் முகம் கோணாம, வீட்டுக்கூடத்துல ஒக்காத்திவெச்சு, போஜனம் பண்ணி வெப்பா. 

சிவனடியார்களை வாசல் திண்ணையில் ஒக்கார வெச்சு, ரெண்டு பேருமா சேந்து கால் அலம்பிவிட்டு, வஸ்த்ரத்தால் தொடச்சு விட்டு, சந்தனம் குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சிண்டு போய் ஒக்காத்துவா.

அவர் கிருஹத்திலே சமையல்காரர் ஒத்தரையும் வெச்சுக்கல! எத்தன அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையால சமச்சுப்போடுவா. 

அதுலயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவாள்ட்டயே கேட்டுண்டு போய், வாங்கிண்டுவந்து பண்ணிப்போடுவா! அப்டி ஓர் ஒஸந்த மனஸு! 

இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்டித்தெரியும்ன்னு யோசிக்கிறேளா? ... அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமய்யர்ங்கறவர், குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர்தான் சாகவாசமா இருக்கறச்சே இதையெல்லாம் வந்து சொல்லுவார்! இப்போ புரிஞ்சுதா?”

சற்று நிறுத்தித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவே இல்லை. மஹா ஸ்வாமிகளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது.

”ஒரு நாள் நல்லமழை  பேஞ்சிண்டிருந்தது. உச்சிவேளை. வாசலில் வந்து பார்த்தார் குமரேசன் செட்டியார். ஒரு அதிதியக்கூட காணும். 

கொடயப்புடிச்சிண்டு மஹாமஹக் கொளத்துப் படிகள்ல எறங்கிப்பார்த்தார். அங்க ஒரு சின்ன மண்டபத்ல சிவனடியார் ஒத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதியெல்லாம் பூசிண்டு ஒக்கார்ந்திருந்தார்.  

அவர பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலருக்கு.  தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். 

கால அலம்பிவிட்டுக் கூடத்துக்கு அவர அழைச்சுண்டு வந்து ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்த தம்பதி. 

செட்டியாரின் தர்மபத்னி, அந்த  சிவனடியார் கிட்டப்போய், “ஸ்வாமிக்கு என்ன காய்கறி பிடிக்கும் ..... சொல்லுங்கோ. கடைக்குப்போய் வாங்கிண்டு வந்து சமச்சுப் போட்டுடறேன்” என்று கேட்டா.

சிவனடியாருக்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப்பக்கம் போய்ப்பார்த்தார்.  கொல்லையிலே நிறைய முளைக்கிரை மொளச்சிருக்கிறதைப் பார்த்தார். உள்ள வந்தார். அந்த அம்மாவக் கூப்ட்டு,   ”தனக்கு ... வேற ஒண்ணும் வாண்டாம். மொளக்கீரக் கூட்டும், கீரத்தண்டு சாம்பாரும் பண்ணாப்போறும்”ன்னார்.  

கைலே ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப்போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆகிண்டே போச்சு. சிவனடியாருக்கோ நல்ல பசி. கீரய நாமும் போய் சேர்ந்து பறிச்சா, சீக்ரமா வேலை முடியுமேங்கற எண்ணத்ல, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு, கீர பறிக்கப்போனார் சிவனடியார். 

இவா ரெண்டுபேரும் கீர பறிக்கறதை கொல்லைப்புற வாசல்படியிலே நின்று கவனித்துக்கொண்டிருந்தாள் அந்த ஆச்சி. பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரத்தட்டை உள்ளே கொண்டுவந்து வெச்சா! 

உடனே அந்த அம்மா என்ன பண்ணினா தெரியுமா? ரெண்டு தட்டுக்கீரையையும் தனித்தனியா அலம்பினா.   ரெண்டு அடுப்பத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரயப்போட்டு அடுப்பிலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. 

அதப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு ஒரே ஆச்சர்யம்! “என்னடா இது .... ரெண்டும் ஒரே மொளக்கீர தானே! ஒரே பாத்ரத்லே போட்டு சமைக்காம, இப்படித் தனித்தனியா அடுப்பு மூட்டி, இந்த அம்மா பண்றாளேன்னு” கொழம்பிப்போனார்.

சித்தநாழி கழிச்சு, கீர வாணலி ரெண்டையும் கீழே இறக்கி வெச்ச அந்த அம்மா, சிவனடியார் பறித்து வந்தக்கீரய மட்டும், தனியா எடுத்துண்டு போய் பூஜை அறையிலே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. 

இதப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்குப் பெருமை பிடிபடல்லே!

அவர் என்ன நினைச்சுட்டார் தெரியுமா? ’நாம் ஒரு பெரிய சிவபக்தன் ... சந்யாசி. அதனால் நாம பற்ச்ச கீரையைத்தான் சிவபெருமான் ஏத்துப்பார்ன்னு இந்த அம்மா புரிஞ்சிண்டு, நிவேதனம் பண்றா’ன்னு தீர்மானிச்சுட்டார். 

இருந்தாலும் போஜனம் பண்ணின பிறகு, இந்த நிவேதனம் விஷயமாக அந்த அம்மாக்கிட்டேயே கேட்டுடணும் எனவும் தீர்மானம் பண்ணிட்டார். 

இங்கு சற்று நிறுத்தி, எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார். 

தொடரும்

oooooOooooo

[ 2 ] 

ராமநாதா !
ஸ்ரீகிருஷ்ணனைவிட 
நீ பரம பாக்யசாலி...டா!

[இந்த அனுக்ரஹ அமுதமழைத் தொடரினை
 வெளியிடுவதற்கு முன்பே மிகவும் சுவையானதோர்
 MIRACLE  சம்பவத்தை வெளியிட்டிருந்தேன்.
அதைப் படிக்கத் தவறியவர்களுக்காக
 மீண்டும் இங்கே இதில் கொடுத்துள்ளேன்.]

பல வருடங்களுக்கு முன்பு, கரூரைப் பூர்வீகமாகக் கொண்ட ராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்தார். 

[கனபாடிகள் = ரிக் அல்லது யஜுர்வேதம் + சாஸ்திரங்களை நன்கு முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்களுக்கு, அவர்களின் பெயர்களுக்குப்பின் கொடுக்கப்படும் ஒரு [TITLE] மரியாதைச்சொல். 

அதுபோல ஸாமவேதம் முறைப்படி கற்றுத் தேர்ந்தவர்களை அவர்களின் பெயருக்குப்பின் ‘சிரெளதிகள்’ என்ற [TITLE] மரியாதைச்சொல் சேர்த்து அழைப்பதுண்டு]

ராமநாத கனபாடிகள் அவர்களின் மனைவி பெயர் தர்மாம்பாள். அவர்களுக்கு ஒரே மகள். அவள் பெயர் காமாக்ஷி.

ராமநாத கனபாடிகள் அவர்கள், வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும், வைதீகத்தை தன் வயிற்றுப் பிழைப்புக்காகக் கொள்ளவில்லை.  

உபன்யாஸம் பண்ணுவதில் கெட்டிக்காரர். அதில் அவர்களாகப் பார்த்து அளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்வார். 

ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகளிடம் மிகுந்த விஸ்வாசமும் பக்தியும் உள்ள குடும்பம்.

இருபத்திரண்டு வயதான அவர்களின் மகள் காமாக்ஷிக்குத் திடீரென ஒரு மாதத்தில் திருமணம் என்று நிச்சயம் ஆனது. மணமகன் ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர்.


தர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள், “பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுத்து .....கையிலே எவ்வளவு பணம் சேர்த்து வெச்சிண்டிருக்கேள்?” 


கனபாடிகள் பவ்யமாக, “தர்மு, ஒனக்குத் தெரியாதா என்ன? இதுவரைக்கும் அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கேன்.  சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே” என்று சொல்ல, தர்மாம்பாளுக்கு கோபம் வந்து விட்டது.

“அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப்பண்ண முடியும்? நகைநட்டு, சீர்செனத்தி, பொடவை, துணிமணி வாங்கி, சாப்பாடு போட்டு,  எப்படிக் கல்யாணத்தை நடத்த முடியும்? இன்னும் பதினையாயிரம் ரூவா கண்டிப்பா வேணும். ஏற்பாடு பண்ணுங்கோ!” இது தர்மாம்பாள். 


இடிந்து போய் நின்றார், ராமாநாத கனபாடிகள்.

உடனே தர்மாம்பாள், “ஒரு வழி இருக்கு. சொல்றேன். கேளுங்கோ! கல்யாணப் பத்திரிகையைக் கையிலே எடுத்துக்குங்கோ; கொஞ்சம் பழங்களை வாங்கிண்டு நேரா காஞ்சிபுரம் போங்கோ. அங்கே ஸ்ரீ மடத்துக்குப்போய், ஒரு தட்டிலே பழங்களை வெச்சு கல்யாணப் பத்திரிகையையும் வெச்சு, மஹா பெரியவாளை நமஸ்காரம் பண்ணி விஷயத்தைச் சொல்லுங்கோ; பதினைந்தாயிரம் பண ஒத்தாசை கேளுங்கோ ... ஒங்களுக்கு ‘இல்லே’ன்னு சொல்லமாட்டா பெரியவா” என்றாள் நம்பிக்கையுடன்.   

அவ்வளவு தான் ..... ராமநாத கனபாடிகளுக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்து விட்டது. 

“என்ன சொன்னே .... என்ன சொன்னே ... பெரியவாளைப்பார்த்துப் பணம் கேக்கறதாவது .... என்ன வார்த்த பேசறே நீ ...” என்று கனபாடிகள் முடிப்பதற்குள் ..... 


”ஏன்? என்ன தப்பு? பெரியவா நமக்கெல்லாம் குரு தானே? குருவிடம் போய் யாசகம் கேட்டால் என்ன தப்பு?” என்று கேட்டாள், தர்மாம்பாள்.


“என்ன பேசறே தர்மு? அவர் ஜகத்குரு. குருவிடம் நாம ’ஞான’த்தைத்தான் யாசிக்கலாமே தவிர, ’தான’த்தை [பணத்தை] யாசிக்கப்படாது” என்று சொல்லிப்பார்த்தார் கனபாடிகள்.  


ஆனால் பயனில்லை. அவர் பேச்சு ஏதும் எடுபடவில்லை.

அடுத்தநாள் ’மடிசஞ்சி’யில் [மடிசஞ்சி = ஆச்சாரத்துக்கான வஸ்திரங்கள் வைக்கும் கம்பளிப்பை] தன் துணிமணிகள் சகிதம் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டு விட்டார், கனபாடிகள்.


ஸ்ரீமடத்தில் அன்று மஹா பெரியவாளைத் தரிஸனம் பண்ண ஏகக்கூட்டம்.  ஒரு மூங்கில் தட்டில் பழம், பத்திரிகையோடு வரிசையில் நின்று கொண்டிருந்தார், ராமநாத கனபாடிகள். நின்றிருந்த அனைவரின் கைகளிலும் பழத்துடன் கூடிய மூங்கில் தட்டுகள்.


பெரியவா அமர்ந்திருந்த இடத்தைக் கனபாடிகள் அடைந்ததும் அவர் கையிலிருந்த பழத்தட்டை ஒருவர் வலுக்கட்டாயமாக வாங்கி, பத்தோடு பதினொன்றாகத் தள்ளி வைத்துவிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கனபாடிகள், “ஐயா ... ஐயா ... அந்தத்தட்டிலே என் பெண்ணின் கல்யாணப் பத்திரிகைகள் வெச்சிருக்கேன். பெரியவாளிடம் சமர்ப்பிச்சு ஆசீர்வாதம் வாங்கணும். அதை இப்படிக்கொடுங்கோ” என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் அது யார் காதிலும் விழவில்லை.


அதற்குள் மஹா ஸ்வாமிகள், கனபாடிகளைப் பார்த்து விட்டார்கள். ஸ்வாமிகள் பரம சந்தோஷத்துடன், “அடடே! நம்ம கரூர் ராமநாத கனபாடிகளா? வரணும் ... வரணும். ஸ்ரீரங்கத்தில் எல்லோரும் செளக்யமா? க்ஷேமமா? உபன்யாசமெல்லாம் நன்னா போயிண்டிருக்கா?” என்று விசாரித்துக்கொண்டே போனார். 

”எல்லாம் பெரியவா அனுக்கிரஹத்திலே நன்னா நடக்கிறது” என்று சொல்லியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணி எழுந்தார். 


உடனே ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே “ஆத்திலே .... பேரு என்ன ... ம்... தர்மாம்பாள்தானே? செளக்யமா? ஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள்; அவரோட அப்பா சுப்ரமணிய கனபாடிகள் ... என்ன நான் சொல்ற பேரெல்லாம் சரி தானே? என்று கேட்டு முடிப்பதற்குள், ராமநாத கனபாடிகள்,  ”எல்லாமே சரி தான் பெரியவா, என் ஆம்படையா [மனைவி] தர்முதான் பெரியவாளைப் பார்த்துட்டு வரச்சொன்னா...” என்று குழறினார். 


“அப்போ ... நீயா வரல்லே?” இது பெரியவா. 


“அப்படி இல்லே பெரியவா. பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சிருக்கு.  தர்மு தான் பெரியவாளை தரிஸனம் பண்ணிட்டு .... பத்திரிகைகளை சமர்பிச்சுட்டு .....  என்று கனபாடிகள் முடிப்பதற்குள், “ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச்சொல்லியிருப்பா”  என்று பூர்த்தி செய்து விட்டார், ஸ்வாமிகள். 


பதினையாயிரம் ரூபாய் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் குழம்பினார் கனபாடிகள். 


இந்நிலையில் பெரியவா, “உனக்கு ஒரு அஸைன்மெண்ட் வெச்சிருக்கேன்; நடத்திக்கொடுப்பியா?” என்று கேட்டார். 

”அஸைன்மெண்டுன்னா ..... பெரியவா?” இது கனபாடிகள்.


“செய்து முடிக்க வேண்டிய ஒரு விஷயம்னு அர்த்தம். எனக்காக நீ பண்ணுவியா?” 


பெரியவா திடீரென்று இப்படிக்கேட்டவுடன், வந்த விஷயத்தை விட்டுவிட்டார் கனபாடிகள். குதூகலத்தோடு, “சொல்லுங்கோ பெரியவா, காத்துண்டிருக்கேன்” என்றார்.


உடனே பெரியவா, “ஒனக்கு வேற என்ன அஸைன்மெண்ட் கொடுக்கப்போறேன்? உபன்யாஸம் பண்றது தான். 


திருநெல்வேலி கடைய நல்லூர் பக்கத்திலே ஒரு அக்ரஹாரம். ரொம்ப மோசமான நிலையில் இருக்காம். பசு மாடெல்லாம் ஊர்ல காரணமில்லாம செத்துப் போய்டறதாம்.  

கேரள நம்பூத்ரிகிட்டே ப்ரஸ்னம் பார்த்ததுல, பெருமாள் கோயில்ல ’பாகவத உபன்யாஸம்’ பண்ணச் சொன்னாளாம். 

ரெண்டு நாள் முன்னாடி அந்த ஊர் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் இங்கே வந்தார். 

விஷயத்தைச்சொல்லிட்டு, ”நீங்கதான் ஸ்வாமி, பாகவத உபன்யாஸம் பண்ண ஒருத்தரை அனுப்பி வைத்து உபகாரம் பண்ணனும்” ன்னு பொறுப்பை என் தலையிலே கட்டிட்டுப் போய்ட்டார். 

நீ எனக்காக அங்கே போய் அதைப் பூர்த்தி பண்ணிட்டு வரணும். மற்ற விபரமெல்லாம் மடத்து மேனேஜருக்குத் தெரியும்.  கேட்டுக்கோ. சிலவுக்கு மடத்துல பணம் வாங்கிக்கோ. இன்னிக்கு ராத்திரியே விழுப்புரத்தில் ரயில் ஏறிடு. 

சம்பாவணை [வெகுமானம்] அவா பார்த்துப் பண்ணுவா. போ.. போ.. போய் சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு பக்தரிடம் பேச ஆரம்பித்து விட்டார் ஸ்வாமிகள்.

அன்றிரவு விழுப்புரத்தில் ரயிலேறிய கனபாடிகள் அடுத்த நாள் மத்யானம் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கினார். பெருமாள் கோயில் பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து கனபாடிகளை அழைத்துச் சென்றார்.

ஊருக்குச் சற்று தொலைவில் இருந்தது அந்த வரதராஜப் பெருமாள் கோயில்.  கோயில் பட்டர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார் கனபாடிகள். 

ஊர் அக்ரஹாரத்திலிருந்து ஓர் ஈ காக்காக்கூட கனபாடிகளை வந்து பார்க்கவில்லை. ‘உபன்யாஸத்தின் போது எல்லோரும் வருவா’ என அவரே தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டார்.

மாலைவேளை. வரதராஜப்பெருமாள் சந்நதி முன் அமர்ந்து பாகவத உபன்யாஸத்தைக் காஞ்சி பரமாச்சார்யாளை மனதில் நினைத்துக்கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள். எதிரே எதிரே ஸ்ரீ வரதராஜப்பெருமாள், பெருமாள் கோயில் பட்டர், கோயில் மெய்க்காவல்காரர் ... இவ்வளவு பேர்தான்.


உபன்யாஸம் முடிந்ததும், ”ஏன் ஊரைச் சேர்ந்த ஒத்தருமே வரல்லே?” என்று பட்டரிடம் கவலையோடு கேட்டார் கனபாடிகள்.

அதற்கு பட்டர், “ஒரு வாரமா இந்த ஊர் ரெண்டு பட்டுக்கிடக்குது! 


இந்தக்கோயிலுக்கு யார் தர்மகர்த்தாவாக வருவது என்பதிலே ரெண்டு பங்காளிகளுக்குள்ளே சண்டை. 

அதை முடிவு கட்டிண்டுதான் “கோயிலுக்குள்ளே நுழைவோம்”ன்னு சொல்லிட்டா. 

உபன்யாஸத்திற்கு நீங்க வந்திருக்கிற சமயத்துல ஊர் இப்படி ஆயிருக்கேன்னு ரொம்ப வருத்தப்படறேன்” என்று கனபாடிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கினார் பட்டர்.

பட்டரும், மெய்க்காவலரும். பெருமாளும் மாத்திரம் கேட்க பாகவத உபன்யாஸத்தை ஏழாவது நாள் பூர்த்தி பண்ணினார், ராமநாத கனபாடிகள். 


பட்டாச்சாரியார் பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணி பிரஸாதத்தட்டில் பழங்களுடன் முப்பது ரூபாயை வைத்தார். மெய்க்காவல்காரர் தன் மடியிலிருந்து கொஞ்சம் சில்லரையை எடுத்து அந்தத்தட்டில் போட்டார். 


பட்டர்ஸ்வாமிகள் ஒரு மந்திரத்தைச்சொல்லி, சம்பாவணைத் தட்டை கனபாடிகளிடம் அளித்து, “ஏதோ இந்த சந்தர்ப்பம் இதுபோல ஆயிடுத்து. மன்னிக்கணும். 


ரொம்ப நன்னா ஏழு நாளும் பாகவதக்கதை சொன்னேள். 

எந்தனைரூவா வேணும்னாலும் சம்பாவணை பண்ணலாம். 

பொறுத்துக்கணும். டிக்கெட் வாங்கி ரயில் ஏத்தி விட்டுடறேன்” என கண்களில் நீர்மல்க உருகினார்.

திருநெல்வேலி ஜங்ஷனில் பட்டரும், மெய்க்காவலருமாக வந்து ரயிலில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர். விழுப்புரத்துக்கு ரயிலேறி, காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார், கனபாடிகள்.


அன்றும் மடத்தில் பரமாச்சார்யாளை தரிஸிக்க ஏகக்கூட்டம். அனைவரும் நகரும்வரைக் காத்திருந்தார் கனபாடிகள்.


“வா ராமநாதா! உபன்யாஸம் முடிச்சுட்டு இப்பதான் வரயா? 

பேஷ் ... பேஷ். உபன்யாஸத்துக்கு நல்ல கூட்டமோ? சுத்துவட்டாரமே திரண்டு வந்ததோ?” என்று உற்சாகமாகக் கேட்டார், ஸ்வாமிகள்.

கனபாடிகளின் கண்களில் நீர் முட்டியது. 


தழுதழுக்கும் குரலில் பெரியவாளிடம், “இல்லே பெரியவா. அப்படி எல்லாம் கூட்டம் வரல்லே. அந்த ஊர்லே ரெண்டு கோஷ்டிக்குள்ளே ஏதோ பிரச்சனையாம், பெரியவா. அதனாலே கோயில் பக்கம் ஏழு நாளும் யாருமே வரல்லே” என்று ஆதங்கப்பட்டார் கனபாடிகள்.

”சரி... பின்னே எத்தனை பேர்தான் கதையைக் கேக்க வந்தா?”


“ரெண்டே .. ரெண்டு பேர் தான் பெரியவா. அதுதான் வருத்தமா இருக்கு” இது கனபாடிகள்.


உடனே பெரியவா, “இதுக்காகக் கண் கலங்கப்படாது. யார் அந்த ரெண்டு பாக்யசாலிகள்? சொல்லேன், கேட்போம்” என்றார்.  


”வெளி மனுஷா யாரும் இல்லே பெரியவா. ஒண்ணு, அந்தக்கோயில் பட்டர். இன்னொன்ணு அந்தக்கோயில் மெய்க்காவலர்” என்று சொல்லி முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடி இடியென்று வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.


”ராமநாதா, நீ பெரிய பாக்யசாலிடா! 


தேரிலே ஒக்காந்து கிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன் ஒருத்தன் தான் கேட்டான். 

ஒனக்குப்பாரு .... ரெண்டு பேர்வழிகள் கேட்டிருக்கா! 

கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி” என்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கும் சிரிப்பு வந்து விட்டது.
“அப்படின்னா பெரிய சம்பாவணை கெடச்சிருக்க வாய்ப்பில்லை ... என்ன?” என்றார் பெரியவா.

”அந்த பட்டர் ஒரு முப்பது ரூவாயும், மெய்க்காவலர் ஒரு ரெண்டேகால் ரூவாயும் சேர்த்து, மொத்தம் முப்பத்திரெண்டே கால் ரூவா கெடச்சது பெரியவா” கனபாடிகள் தெரிவித்தார்.


“ராமநாதா, நான் சொன்னதுக்காக நீ அங்கே போயிட்டு வந்தே. 


உன்னோட வேதப்புலமைக்கு நெறயப் பண்ணனும். 

இந்த சந்தர்ப்பம் இப்படி ஆயிருக்கு” என்று கூறி, காரியஸ்தரைக் கூப்பிட்டார் ஸ்வாமிகள். 

அவரிடம், கனபாடிகளுக்குச் சால்வை போர்த்தி ஆயிரம் ரூபாயை பழத்தட்டில் வைத்துக்கொடுக்கச் சொன்னார்.

“இதை சந்தோஷமா ஏத்துண்டு பொறப்படு, நீயும் ஒன் குடும்பமும்  பரம செளக்யமா இருப்பேள்” என்று உத்தரவும் கொடுத்து விட்டார், ஸ்வாமிகள்.


கண்களில் நீர் மல்க பெரியவாளை நமஸ்கரித்து எழுந்த கனபாடிகளுக்கு, தான் ஸ்வாமிகளைப்பார்க்க எதற்காக வந்தோம் என்ற விஷயம் அப்போது தான் ஞாபகத்துக்கு வந்தது.


“பெரியவாகிட்டே ஒரு பிரார்த்தனை ... பெண் கல்யாணம் நல்லபடி நடக்கணும்..... ‘அதுக்கு .... அதுக்கு ....” என்று அவர் தயங்கவும், “என்னுடைய ஆசீர்வாதம் பூர்ணமாக உண்டு. விவாஹத்தை சந்திர மெளலீஸ்வரர் ஜாம்ஜாம்ன்னு நடத்தி வைப்பார். ஜாக்கிரதையா ஊருக்குப் போய்ட்டு வா” என்று விடை கொடுத்தார், பரமாச்சாரியாள். 


ரூபாய் பதினையாயிரம் இல்லாமல் வெறுங்கையோடு வீட்டுவாசலை அடையும் தனக்கு, மனைவியின் வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வாசற்படியை மிதித்தார் ராமநாத கனபாடிகள்.


”இருங்கோ.... இருங்கோ .... வந்துட்டேன் ....” உள்ளே இருந்து மனைவி தர்மாம்பாளின் சந்தோஷக்குரல்.


வாசலுக்கு வந்து, கனபாடிகள் கால் அலம்ப சொம்பில் தண்ணீர் கொடுத்தாள். ஹாரத்தி எடுத்து உள்ளே அழைத்துப்போனாள். 


காஃபி கொடுத்து ராஜ உபசாரம் பண்ணிவிட்டு, “இங்கே பூஜை ரூமுக்கு வந்து பாருங்கோ” என்று கனபாடிகளை அழைத்துப்போனாள்.

பூஜை அறைக்குச் சென்றார் கனபாடிகள். அங்கே ஸ்வாமிக்கு முன்பாக ஒரு பெரிய மூங்கில் தட்டில், பழ வகைகளுடன் புடவை, வேஷ்டி, இரண்டு திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், புஷ்பம் இவற்றுடன் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றும் இருந்தது.  


”தர்மு.... இதெல்லாம்.....” என்று அவர் முடிப்பதற்குள், 


“காஞ்சிபுரத்துலேந்து பெரியவா கொடுத்துட்டு வரச்சொன்னதா” இன்னிக்குக் கார்த்தால மடத்தை சேர்ந்தவா இருவர் கொண்டு வந்து வெச்சுட்டுப்போறா. ”எதுக்கு?” ன்னு நானும் கேட்டேன். 

“ஒங்காத்துப்பொண்ணு கல்யாணத்துக்காகத்தான் பெரியவா சேர்ப்பிச்சுட்டு வரச்சொன்னா”ன்னு சொன்னார்கள்” என்று முடித்தாள் அவர் மனைவி.


கனபாடிகளின் கண்களில் இப்போதும் நீர் வடிந்தது. 


”பெரியவாளுடைய கருணையே கருணை. நான் வாயத்திறந்து ஒண்ணுமே கேட்கலே. அப்படி இருந்தும் அந்தத் தெய்வம் இதையெல்லாம் அனுப்பியிருக்கு பாரு” என்று நா தழுதழுக்க ”அந்தக் கட்டிலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோ” என்று கேட்டார்.

”நான் எண்ணிப்பார்க்கலே” என்றாள் அவர் மனைவி.கீழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள்.மிகச்சரியாக பதினைந்தாயிரம் ரூபாய்!

அந்ததீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து ”ஹோ”வெனக் கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.


oooooOoooooஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

54 comments:

 1. உருக வைக்கும் பதிவு!!. பகிர்வு!!.. சிவாய நமவென்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் இல்லை.. அதிதி போஜன மகிமையும் அளவில்லா பெருங்கருணை, தம் பக்தர் பால் கொண்ட ஸ்ரீமஹாபெரியவரின் மகிமையும் படித்து மெய்சிலிர்த்தேன். மிக்க நன்றி!!

  ReplyDelete
 2. அன்ன தானம் பற்றிய கருத்துகளும், கனபாடிகளுக்கு அவர் செய்த அருளும் படித்து இன்புற்றேன். தொடரட்டும் அருள் மொழிகள்.

  ReplyDelete
 3. மறுபடியும் சஸ்பென்சோடு தொடருமா?!!

  //அவர் ஜகத்குரு. குருவிடம் நாம ’ஞான’த்தைத்தான் யாசிக்கலாமே தவிர, ’தான’த்தை [பணத்தை] யாசிக்கப்படாது”// அருமையான வரிகள்!! எனக்கென்னமோ குசேலர் கதை ஞாபகம் வருது!!

  ReplyDelete
 4. நல்ல பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. எல்லாம் நீங்க அனுக்ரஹம் செய்து சொன்ன அதிதி போஜன மஹிமைதான் பெரியவா .... தினமும் செஞ்சிண்டுருக்கேன். வேற ஒண்ணுமே இல்லை”

  அதிதி பூஜை பற்றிய ஆத்மார்த்தமான பகிர்வுகள்..!

  ReplyDelete
 6. அந்தக் கட்டிலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோ” என்று கேட்டார்.

  ”நான் எண்ணிப்பார்க்கலே” என்றாள் அவர் மனைவி.//

  எண்ணிப்பார்க்கமுடியாத கருணையை வர்ஷித்த அனுக்ரகம்...!

  ReplyDelete
 7. தேரிலே ஒக்காந்து கிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன் ஒருத்தன் தான் கேட்டான்.

  ஒனக்குப்பாரு .... ரெண்டு பேர்வழிகள் கேட்டிருக்கா!

  பரம பாக்கியம் தான் ..

  சில பிரவசனங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் ..

  சிலவற்றில் காற்று வாங்கும் ..
  பரிதாபப்பட்டு உட்கார்ந்து கேட்டு வருவதுண்டு,,,!

  ReplyDelete
 8. அவர் என்ன நினைச்சுட்டார் தெரியுமா? ’நாம் ஒரு பெரிய சிவபக்தன் ... சந்யாசி. அதனால் நாம பற்ச்ச கீரையைத்தான் சிவபெருமான் ஏத்துப்பார்ன்னு இந்த அம்மா புரிஞ்சிண்டு, நிவேதனம் பண்றா’ன்னு தீர்மானிச்சுட்டார்.

  அதிக தற்பெருமை ..! தகர்ந்து போகாமலிருந்தால் சரிதான்..

  ReplyDelete
 9. தொடரும் என்று போட்டு ஆவலைத் தூண்டியுள்ளீர்கள்.
  அதிதி அன்னதான மகிமை நன்று நன்று.
  இறையாசி நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 10. குருவுடைய கிருபாகடாக்ஷம் எண்ணின ரூபாய் 15000 மாக இருந்தது. பூர்வஜென்ம புண்ணியம். அன்புடன்

  ReplyDelete
 11. காலத்தில் செய்த உதவி ஞாலத்தைவிடப் பெரியது என்று பெரியவருக்குத் தெரியாதா என்ன.? பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. கஸ்ரப்பட்டு இந்த முழு நீளத் தொடரை வாசித்துக்கொண்டே
  வந்த எமக்கு ஆவலைத் தூண்டி விட்டு அந்த மாங்கனிச்
  சாற்றை எங்கே வைத்தீர்கள் ஐயா ?..:) வாழ்த்துக்கள் மேலும்
  சிறப்பாகத் தொடரட்டும் இப் பகிர்வும் .

  ReplyDelete
 13. அந்தக்கீரையில் எந்தக்கீரை உயர்வானது. படிக்க ஆவல். அன்புடன்

  ReplyDelete
 14. போஜனம் பண்ணின பிறகு, இந்த நிவேதனம் விஷயமாக அந்த அம்மாக்கிட்டேயே கேட்டுடணும் எனவும் தீர்மானம் பண்ணிட்டார். //

  சிவனடியார் நினைத்த மாதிரி இருக்காது வேறு காரணம் இருக்கும் அப்படித்தானே?
  அறிய ஆவல்.

  ”பெரியவாளுடைய கருணையே கருணை. நான் வாயத்திறந்து ஒண்ணுமே கேட்கலே. அப்படி இருந்தும் அந்தத் தெய்வம் இதையெல்லாம் அனுப்பியிருக்கு பாரு” என்று நா தழுதழுக்க ”அந்தக் கட்டிலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோ” என்று கேட்டார்.//

  கருணையில் தாய் காமாட்சி அல்லவா!
  அருமையான பகிர்வு. நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. ராமநாத கனபாடிகளின் கதை ஏற்கனவே வந்தது. செட்டியாரின் கதை சஸ்பென்சுடன் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. Ranjani Narayanan December 22, 2013 at 7:25 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ராமநாத கனபாடிகளின் கதை ஏற்கனவே வந்தது. //

   ஆமாம். ஏற்கனவே இந்த மெகா தொடருக்கு முன்பாக இது என்னால் வெளியிட்டது தான். நானே அதற்கான பழைய இணைப்பையும் மேலேயே கொடுத்துள்ளேனே !

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா சம்பந்தமான அருள்மழையாக 108 பகுதிகள் வெளியிட்டு வருவதால், இந்த 108 பகுதிகளில் இவைகளும் எங்காவது இடம் பெற வேண்டும் என்று விரும்பியே மீண்டும் வெளியிட்டுள்ளேன்.

   இதுபோல மொத்தம் 3 சம்பவங்கள் மட்டும் முறையே தொடரின் பகுதி-98, 99 + 100 ஆகியவற்றில் இடம்பெறும்.

   //செட்டியாரின் கதை சஸ்பென்சுடன் நன்றாக இருக்கிறது.//

   சந்தோஷம். வருகைக்கு நன்றிகள்.

   Delete
 16. ரஞ்சனிபோல் தான் நானும் நினைக்கிறேன். கனபாடிகள் கதை படித்த மாதிரியே இருக்கிறது.
  செட்டியார் கதையை சரியான இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே!

  ReplyDelete
  Replies
  1. rajalakshmi paramasivam December 22, 2013 at 11:17 PM

   வாங்கோ வணக்கம்.

   //ரஞ்சனிபோல் தான் நானும் நினைக்கிறேன். கனபாடிகள் கதை படித்த மாதிரியே இருக்கிறது.//

   ஆமாம் இது ஏற்கனவே வெளியிட்ட சம்பவமே தான். நானே அதன் இணைப்புகூட கொடுத்திருக்கிறேனே! ஏன் மீண்டும் இப்போது வெளியிட்டுள்ளேன் என்பதற்கான காரணத்தை இதற்கு முன்புள்ள பதிவுக்குத் தாங்கள் கொடுத்துள்ள பின்னூட்டத்திற்கு நான் பதிலாக அளித்துள்ளேன்.

   //செட்டியார் கதையை சரியான இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே!//

   செட்டியார் கதை அடுத்த பாகத்தில் நிறைவடைய உள்ளது.

   வருகைக்கு நன்றிகள்.

   Delete
 17. கனபாடிகளின் கதையும்
  மகாப்பெரியவரின் கருணையும் படிக்க
  மனம் மிகப் புளங்காகிதம் கொண்டது
  அன்னதானத்தின் மகிமையை தொடர்ந்து அறிய
  மிக்க ஆவலோக உள்ளோம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 18. அதிதி போஜனத்தை பற்றி சிறப்பான கதை... சஸ்பென்சாக விட்டு விட்டீர்கள்...

  பெரியவாளின் கருணையை புரிந்து கொள்ள அடுத்த கதை....

  ReplyDelete
 19. பதினையாயிரம் ரூபாய் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் குழம்பினார் கனபாடிகள். //

  குசேலர் கேட்டா கண்ணபெருமான் செல்வம் கொடுத்தார்..?!!
  கேட்காமலே அருளும் தெய்வங்கள்...அல்லவா..
  சிறப்பான பதிவுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete

 20. செட்டியார் கதை மிகவும் சுவாரசியமாக உள்ளது. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.-

  ReplyDelete
 21. தானத்தில் சிறந்தது அன்னதானம் கர்ணன் எல்லாதானமும் செய்திருந்தும் அன்னதானம் செய்யவிட்டுவிட்டான் சொர்கத்தில் பசியால் வருந்தி அவனுக்கு தன் ஆள்காட்டிவிரலை வாயில் வைத்துக்கொண்டால் பசி அடங்கும் என்றார்களாம் எனென்றால் பூலோகத்தில் ஒருவருக்கு அன்னதானம் நடக்கும் இடத்திற்கு சுட்டிக்காண்பித்ததால் .கதையே என்றாலும் அன்னதானத்தின் மகிமையை காட்டவே.மஹாபெரியவாளும் எவ்வளோவோ அருளியிருக்கிறார்கள்.நல்லபதிவு நன்றி

  ReplyDelete
  Replies
  1. Sundaresan Gangadharan December 23, 2013 at 2:52 PM

   அன்புள்ள சுந்தர், வாப்பா, வணக்கம்.

   //தானத்தில் சிறந்தது அன்னதானம் கர்ணன் எல்லாதானமும் செய்திருந்தும் அன்னதானம் செய்யவிட்டுவிட்டான் சொர்கத்தில் பசியால் வருந்தி அவனுக்கு தன் ஆள்காட்டிவிரலை வாயில் வைத்துக்கொண்டால் பசி அடங்கும் என்றார்களாம் எனென்றால் பூலோகத்தில் ஒருவருக்கு அன்னதானம் நடக்கும் இடத்திற்கு சுட்டிக்காண்பித்ததால்.//

   மிக அருமையானதோர் உதாரணக்கதையை இங்கு நீ சுட்டிக்காட்டியுள்ளது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி, சுந்தர்.

   Delete
 22. அன்னதானத்தின் பெருமைகளையும் அதன் மகிமைகளையும் நிஜ வாழ்க்கையில் அதை செய்த ,செய்துகொண்டிருக்கின்ற மனிதர்களை அறிமுகப்படுத்தி விளக்கிய பெரியவரின் லீலைகள்
  அற்புதம்
  கேளாமலே அவரை சரணடைபவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த லீலையும் அற்புதம்
  சிவனடியாரின் கதைதான் suspense
  we have to wait
  நல்லதோர் பதிவு. பாராட்டுக்கள் VGK

  ReplyDelete
 23. தொடரும்.. என முக்கியமான கட்டத்தில் நிறுத்தி எங்கள் ஆவலைத் தூண்டுகிறீர் ஐயா! பகிர்விற்கு நன்றி! கனபாடிகள் நிகழ்வை முன்பே தங்கள் வலைப்பூவில் படித்துள்ளேன்! நன்றி!

  ReplyDelete
 24. அன்பின் வை.கோ

  அன்னதான மகிமை - பதிவு அருமை - அதுவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா 1938ல நடந்த நிகழ்வினை நினைவில் நிறுத்தி - அனைவருக்கும் உண்மைக் கதையினை விவரித்த விதம் அவருக்கே உரித்தான ஒன்று.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 25. அன்பின் வை.கோ

  சிவனடியாரும் செட்டியாரும் தனித்தனியே கீரை பறித்து வந்தாலும் - அவை இரண்டினையும் தனித்தனியே சமைத்துப் பரிமாறிய ஆச்சி.

  //
  நாம் ஒரு பெரிய சிவபக்தன் ... சந்யாசி. அதனால் நாம பற்ச்ச கீரையைத்தான் சிவபெருமான் ஏத்துப்பார்ன்னு இந்த அம்மா புரிஞ்சிண்டு, நிவேதனம் பண்றா’ன்னு தீர்மானிச்சுட்டார்.
  //

  மகாப் பெரியவா கதை சொல்லும் விதமே தனி - அருமை அருமை - தொடர்கிற அடுத்த பதிவினிற்கும் செல்கிறேன்.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 26. அன்பின் வை.கோ

  ராமநாதா - கிருஷ்ணனை விட நீ பாக்கியசாலிடா - பதிவு நன்று - படித்து மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 27. அன்பின் வை.கோ

  ராமநாதா ! - ஸ்ரீகிருஷ்ணனைவிட - நீ பரம பாக்யசாலி...டா! - பதிவு அருமை . படித்து மகிழ்ந்தேன்.

  // கனபாடிகள் = ரிக் அல்லது யஜுர்வேதம் + சாஸ்திரங்களை நன்கு முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்களுக்கு, அவர்களின் பெயர்களுக்குப்பின் கொடுக்கப்படும் ஒரு [TITLE] மரியாதைச்சொல். //

  தகவலுக்கு நன்றி.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 28. அன்பின் வை.கோ

  மகள் திருமணத்திற்கு கையிலிருக்கும் 5000 போதுமென்ற நினைப்பில் இருந்த கனபாடிகளுக்கு குறைந்த பட்சம் இன்னும் 15000 மாவது வேண்டுமெனக் கூறிய தர்மபத்தினி தர்மாம்பாள் கோபமாகக் கூறியது கேட்டு கனபாடிகள் இடிந்து போய் விட்டார்.

  துணைவியின் ஆலோசனைப் படி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளைக் கண்டு 15000 ரூபாயினைப் பற்றி எப்படி பேசுவதென கலங்கி நிற்கையில் - பெரியவா அவருக்கே உரிய சிந்தனையுடன் - திருநெல்வேலியில் ஒரு அக்ரஹாரத்தில் பாகவத உபன்யாசம் செய்யக் கூறீனார். சம்பாவனை தருவார்கள் என ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்

  கனபாடிகளும் அங்கு சென்று - உபன்யாசம் பண்ண - ஏழு நாட்களும் சில காரணங்களீனால் - பெருமாள், பட்டர், மற்றும் மெய்க்காவலர் மட்டுமே உபன்யாசம் கேட்டு மகிழ்ந்தவர்கள்.

  உபன்யாசம் முடிந்து 30 ரூபாய் சம்பாவனையுடன் காஞ்சி வந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளைச் சந்தித்தார்.

  பெரியவாளிடம் - உபன்யாசத்தைக் கேட்க இருவர் மட்டுமே இருந்தனர் என வருத்தத் துடன் கூறியதும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா அவருக்கே உரிய வகையில் ....

  //”ராமநாதா, நீ பெரிய பாக்யசாலிடா!

  தேரிலே ஒக்காந்து கிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன் ஒருத்தன் தான் கேட்டான்.

  ஒனக்குப்பாரு .... ரெண்டு பேர்வழிகள் கேட்டிருக்கா! //

  கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி” என்று சொன்னவுடன் கனபாடிகளுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் கருணையினால் மடத்தில் கொடுத்த 1000த்தினை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த கனபாடிகளுக்கு - அங்கு மடத்தில் இருந்து 15000த்துடன் மற்ற மங்கலப் பொருட்களும் வந்திருந்தது ஆச்சர்யத்தைத் தநதது.

  பெரியவாளை நம்பியவர்கள் கை விடப் ப்ட மாட்டார்கள்

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 29. பின் தொடர்வதற்காக இம்மறுமொழி

  ReplyDelete
 30. Thanks for sharing..Very Nice..

  ReplyDelete
 31. இந்த பகுதியை படித்ததும் எனக்கு குசேலர் தன் வறுமையை
  கிருஷ்ண பரமாத்மாவிடம் சொல்லி உதவி கேட்க சங்கோஜப்பட்டுகொண்டு வீட்டுக்கு வந்து கிருஷ்ணா பரமாத்மாவின் அருளால் வீடு சுபிக்ஷமாக இருந்ததை கண்ட கதைதான் நினைவுக்கு வருகிறது.
  நன்றி.

  ReplyDelete
 32. மிக மிக சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்!!! பகிர்வுக்கு மிக்க நன்றி!!!

  ReplyDelete
 33. அன்னதான சிறப்புக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகள் சொன்ன - உண்மை சம்பவம் - மனம் நெகிழ்ந்தது.
  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 34. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!
  // ராமநாதா ! ஸ்ரீகிருஷ்ணனைவிட நீ பரம பாக்யசாலி...டா! // என்ற தலைப்பில் வரும் சம்பவத்தை, ஏற்கனவே உங்கள் பதிவினில் படித்து இருக்கிறேன். மீண்டும் பகிர்ந்ததற்கு நன்றி!

  ReplyDelete
 35. தொடர்கிறேன்......

  ReplyDelete
 36. Aha....Aha.....
  padikka padikka arvam thundukirathu, meleum melum paddika..

  ReplyDelete
 37. யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுப்பதுதான் கடவுள்.

  ReplyDelete
 38. அன்னதான மகிமை இன்னும் பாக்கி இருக்கே அடுத்த பதிவில் தொடருமா.. சிவனடியார் பறித்த கீரையில் தான் என்கற விஷயம் சேர்ந்துடுதே.

  ReplyDelete
 39. அன்னதான மகிமை இன்னும் பாக்கி இருக்கே அடுத்த பதிவில் தொடருமா.. சிவனடியார் பறித்த கீரையில் தான் என்கற விஷயம் சேர்ந்துடுதே.

  ReplyDelete
 40. // இங்கு சற்று நிறுத்தி, எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார். //

  தானத்தில் சிறந்தது அன்ன தானம். அந்த அன்னதான மகிமைக்கும் இப்படி ஒரு தொடரும் போட்டுட்டேளே. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாத மாதிரி ஆயிடுத்தே. அடுத்த பகுதிக்குப் போகறதுக்குள்ள மனம் பதை, பதைக்கிறதே.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 23, 2015 at 10:12 AM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   **இங்கு சற்று நிறுத்தி, எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்.**

   //தானத்தில் சிறந்தது அன்ன தானம். அந்த அன்னதான மகிமைக்கும் இப்படி ஒரு தொடரும் போட்டுட்டேளே. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாத மாதிரி ஆயிடுத்தே. அடுத்த பகுதிக்குப் போகறதுக்குள்ள மனம் பதை, பதைக்கிறதே.//

   தங்களின் அன்பான வருகைக்கும் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 41. // அவர் என்ன நினைச்சுட்டார் தெரியுமா? ’நாம் ஒரு பெரிய சிவபக்தன் ... சந்யாசி. அதனால் நாம பற்ச்ச கீரையைத்தான் சிவபெருமான் ஏத்துப்பார்ன்னு இந்த அம்மா புரிஞ்சிண்டு, நிவேதனம் பண்றா’ன்னு தீர்மானிச்சுட்டார். //

  இங்கும் கர்வ பங்கமோ?

  //ரூபாய் பதினையாயிரம் இல்லாமல் வெறுங்கையோடு வீட்டுவாசலை அடையும் தனக்கு, மனைவியின் வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வாசற்படியை மிதித்தார் ராமநாத கனபாடிகள்.//

  கண்ணனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய குசேலர்தான் ஞாபகத்திற்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 24, 2015 at 3:57 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம். நேற்று திடீரென காணாமல் போய், இன்று மீண்டும் தாங்கள் திரும்பியுள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நேற்று பேத்தி லயா பிறந்த நாள் அல்லவா! அதனால் பிஸியாகி இருந்திருப்பீர்கள். OK . குழந்தைக்கு நான் அனுப்பியிருந்த வாழ்த்துச்செய்தி மின்னஞ்சல் கிடைத்ததா? அவளிடம் அதைக் காட்டினீர்களா ? :)

   தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 42. அன்ன தானம்னாக்க வாரவுகளுக்கு சாப்பாடு போடுரதா. நல்ல வெசயம்தான.

  ReplyDelete
 43. பகவான் கீதோபதேசம் செய்யும்போது கேட்பதற்கு அர்ஜுனன் மட்டும்தான் இருந்தான் உனக்கு ரெண்டுபேர் இருந்திருக்காளே. என்ன நகைச்சுவை. பக்தனின் தேவை அறிந்து வீடுதேடி போய் பணமும் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்காளே.

  ReplyDelete
 44. அன்னதான மஹிமை தொடர் சஸ்பென்ஸுடன் இருக்கிறது...what next???

  ReplyDelete
 45. ராமனாத கனபாடிகளுக்கு வந்து தன்னிடத்தில் பணத்தை எண்ணிப் ப்ரார்த்தித்துக்கொண்டதற்காக மட்டும் அனுக்ரகம் பண்ணினதுபோல் தெரியவில்லை.

  "காஞ்சி பரமாச்சார்யாளை மனதில் நினைத்துக்கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள். எதிரே எதிரே ஸ்ரீ வரதராஜப்பெருமாள், பெருமாள் கோயில் பட்டர், கோயில் மெய்க்காவல்காரர் ... இவ்வளவு பேர்தான்."

  குருவின் ஆணையைச் சிரமேற்கொண்டு கனபாடிகள் கடைய'நல்லூர் அருகில் உள்ள கோவிலில், 2 பேரே இருந்தபோதிலும் பாகவத உபன்யாசம் செய்தாரே.. அந்த பக்தி விசுவாசமல்லவா அவருக்குக் குருவின் பெருங்கருணை கிடைக்கக் காரணமாயிருந்தது.

  இதைப் படிக்கும்போது ஒன்று ஞாபகம் வருகிறது. எல்லோரும் கோவிலுக்குப் போய் பகவானைப் ப்ரார்த்தித்துக்கொண்டேன்.. இது நடக்கலை அது நடக்கலை என்று எண்ணிக்கொள்கிறார்கள். பகவான் எல்லோருக்கும் அள்ளி அள்ளி வழங்குகிறான். ஆனால் சில பக்தர்களிடம்தான் ஓட்டை இல்லாத பாத்திரம் இருக்கிறது. அவர்களிடத்தில்தான் அவன் கருணையோடு தருவது தங்குகிறது. ப்ராப்தமும், உண்மையான பக்தி விசுவாசமும் இருந்தால், இவ்வுலகில் கிடைக்காதது என்ன?

  "கனபாடிகள் = ரிக் அல்லது யஜுர்வேதம்..." - இதைப் போன்று ஆங்காங்கே புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்துள்ளீர்கள். அது மூலப்பிரதியில் இருந்ததா என்று தெரியவில்லை. இதனைத் தாங்கள்தான் சேர்த்திருந்தீர்கள் என்றால், எல்லோருக்கும் புரியவேண்டும் என்ற அந்தச் சிந்தனையை மிகவும் பாராட்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் September 29, 2016 at 6:10 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ராமனாத கனபாடிகளுக்கு வந்து தன்னிடத்தில் பணத்தை எண்ணிப் ப்ரார்த்தித்துக்கொண்டதற்காக மட்டும் அனுக்ரகம் பண்ணினதுபோல் தெரியவில்லை.

   "காஞ்சி பரமாச்சார்யாளை மனதில் நினைத்துக்கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள். எதிரே எதிரே ஸ்ரீ வரதராஜப்பெருமாள், பெருமாள் கோயில் பட்டர், கோயில் மெய்க்காவல்காரர் ... இவ்வளவு பேர்தான்."

   குருவின் ஆணையைச் சிரமேற்கொண்டு கனபாடிகள் கடைய'நல்லூர் அருகில் உள்ள கோவிலில், 2 பேரே இருந்தபோதிலும் பாகவத உபன்யாசம் செய்தாரே.. அந்த பக்தி விசுவாசமல்லவா அவருக்குக் குருவின் பெருங்கருணை கிடைக்கக் காரணமாயிருந்தது. //

   ஆஹா, இதனை வெகு அழகாக ரஸித்துச் சொல்லியுள்ளீர்கள்.

   //இதைப் படிக்கும்போது ஒன்று ஞாபகம் வருகிறது. எல்லோரும் கோவிலுக்குப் போய் பகவானைப் ப்ரார்த்தித்துக்கொண்டேன்.. இது நடக்கலை அது நடக்கலை என்று எண்ணிக்கொள்கிறார்கள். பகவான் எல்லோருக்கும் அள்ளி அள்ளி வழங்குகிறான். ஆனால் சில பக்தர்களிடம்தான் ஓட்டை இல்லாத பாத்திரம் இருக்கிறது. அவர்களிடத்தில்தான் அவன் கருணையோடு தருவது தங்குகிறது. ப்ராப்தமும், உண்மையான பக்தி விசுவாசமும் இருந்தால், இவ்வுலகில் கிடைக்காதது என்ன?//

   ’ஓட்டைப் பாத்திரம்’ என்பது பற்றியே இந்தத் தொடரின் ஒரு பகுதியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அருள் வாக்கால் சொல்லப்படும், மிகவும் த்ரில்லிங்கான பகுதி ஒன்று உள்ளது. அதனைப் படிக்க நேருபவர்கள் மட்டுமே பாக்யசாலியாவார்கள்.

   உண்மையான பக்தி சிரத்தையும் நம்பிக்கையும் வைத்துள்ளவர்களுக்கு, அவரவர்களுக்கு வேண்டியது எல்லாமே அபரிமிதமாகவே அக்ஷயபாத்திரமாகவே கிடைக்கும்.

   //"கனபாடிகள் = ரிக் அல்லது யஜுர்வேதம்..." - இதைப் போன்று ஆங்காங்கே புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்துள்ளீர்கள். அது மூலப்பிரதியில் இருந்ததா என்று தெரியவில்லை. இதனைத் தாங்கள்தான் சேர்த்திருந்தீர்கள் என்றால், எல்லோருக்கும் புரியவேண்டும் என்ற அந்தச் சிந்தனையை மிகவும் பாராட்டுகிறேன்.//

   அவையெல்லாம் அடியேனால் ஆங்காங்கே சேர்க்கப்பட்டவை மட்டுமே. இதனைப் படிக்கும் எல்லோருக்கும் எல்லாமே புரிந்திருக்கும் எனச் சொல்ல முடியாது அல்லவா. அதனால் மட்டுமே, அவற்றை இங்கு சேர்த்துள்ளேன். தங்களின் பாராட்டுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   Delete